3 months 2 weeks ago
தமிழ் சிறி, இவர் அமெரிக்க அதிபராக வரவேண்டும் என்று மிகவும் விரும்பியர்களில் நீங்களும் ஒருவர் என நினைவு. ஆனால் இப்ப ஏன் இந்த திடீர் மாற்றம்?
3 months 2 weeks ago
பாகிஸ்தான் சில தினங்களுக்கு முன் ட்ரம்பைப் புகழ்ந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்பின் பாகிஸ்தான் அணுகுண்டினைச் சுமந்து நீண்டதூரம் செல்லக் கூடிய ஏவுகணையை உருவாக்குவது பற்றி அமெரிக்காவ்லிருந்து கண்டனம் எழுந்தவுடன் பாகிஸ்தான் ட்ரம்பைத் திட்ட ஆரம்பித்துள்ளது.
3 months 2 weeks ago
தகவலுக்கு நன்றி கோசான். இதைப்பற்றி @தனிக்காட்டு ராஜா இன்னும் விபரமாக தெரிந்திருக்கலாம்.
3 months 2 weeks ago
உலகம் எங்கே போகிறது? நோபல் பரிசுக்கே, அல்லது இதுவரை அந்த பரிசை பெற்றவர்களுக்கே அவமானம். அமெரிக்காவின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் தானாம். அது அணு ஆயுதம் தயாரிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதனால பாகிஸ்தான் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து கோபத்தை, தாக்குதல் இலக்கை திசை திருப்ப பார்க்கிறதா?
3 months 2 weeks ago
இவர்களின் விசுவாசத்தால் சிங்களம் இதுவரை பிழைத்துக்கொண்டது, ஆனாலும் இவர்களை தமக்காக பாவிக்குமே ஒழிய வேறேதுமில்லை. கிழக்கின் விடிவெள்ளிகளின் இன்றைய நிலையை பி பார்த்தால் புரியும்.
3 months 2 weeks ago
அந்த காலகட்டத்தில், இரவிரவாக செம்மணி மயானத்திற்குள் கனரக வாகனங்கள் வந்து சென்றதாகவும், பெரிய நெருப்பு வெளிச்சம் தெரிந்ததாகவும் சுற்றாடலிலிருந்த மக்கள் தெரிவித்திருந்தனர். அங்கு புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் வலுவாக இருந்தது அப்போ. அந்த புதை குழி பலர் முன்னனிலையில் தோண்டப்பட்டபோது அங்கே எலிகள், இன்னும் பிராணிகளின் எச்சங்கள் காணப்பட்டதாக கூறப்பட்டது. அப்படியெனில் அந்த எச்சங்கள் அங்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? அவை யாரால் கொண்டுவரப்பட்டது எனும் கேள்வியை யாரும் கேட்க முன்வரவில்லை. நம்ம அரசியற்றுதலைவர்களும் அதை மறந்து, மறைத்து சிங்களத்துக்கு காவடி தூக்கி வெள்ளை அடித்தனர். இப்போ அங்கே போக வேண்டுமென்று அடம்பிடிக்கின்றனர். இத்தனையும் தெரிந்த மனித ஐ. நா. மனித உரிமையாளருக்கு இவர்களின் தில்லாலங்கடி வேலை தெரியாமலா இருந்திருக்கும்? வர வர நம்ம அரசியற் தலைவர்களெல்லோரும் நகைக்சுவை பேச்சாளராகின்றனர்.
3 months 2 weeks ago
நிசாங்கா தொடர்ந்து நல்லா விளையாடுகிறார்................மூன்று வகை கிரிக்கேட்டிலும் , ஜபிஎல்ல ஏதாவது ஒரு அணி இவரை வேண்டலாம்.............................
3 months 2 weeks ago
அது அறுகம் பே அல்ல, அறுகம் குடா. இது கிழக்கில் உள்ள இனவாத முஸ்லிம்களால் கிளப்பி விடப்ப்ட்ட புரளி. நான் நேரில் போய் பார்த்துள்ளேன். அப்படி அங்கே பெரிய எடுப்பில் எதுவும் இல்லை. அங்கே இருக்கும் முஸ்லிம்களும் சந்தோசமாக அவர்களுக்கு வியாபாரம் செய்து வாழ்கிறார்கள். வழமையாக இலங்கையில் ரஸ்யர்கள், உக்ரேனியர் இருப்பதை விட இந்த யூதர் அளவு குறைவே. இதை விட பல மடங்கு இஸ்லாமியர்கள், பாகிஸ்தானிகள், போரா முஸ்லிம்கள், பாய்கள் என இலங்கை வெளிநாட்டு முஸ்லிம்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் அதை எதையும் அடிப்படைவாத முஸ்லிம்கள் கதைக்க மாட்டார்கள். சும்மா ஒரு கொஞ்சம் யூதர் இலங்கையில் சட்டபடி வீசா எடுத்து வாழ்ந்தால், தமக்கென ஒரு பிரார்தனை குடிலை கட்டினால் - தாம் தூம் என குதிப்பார்கள். இலங்கையர் யூதரை வெளியேற்ற போராட தேவை வர பல நூறு வருடங்கள் முன்பே அது ஒரு இஸ்லாமிய நாடாகி விடும். இதுதான் உண்மை.
3 months 2 weeks ago
முக்கிய அறிவிப்பு யாழ்களத்தில் இளகிய மனம் படைத்தோர், கர்பிணிகள், சதி கோட்பாளர்கள், சிறுவர் பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி எழுதியோர், நேரடி/மறைமுக ஆணாதிக்கவாதிகள், நியாயம் பிளப்பதாக சொல்லி கொள்ளும் இஸ்லாமிய சகோதரர், மற்றும் பொதுவாகவே மேற்கோ-போபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ் கண்ட காணொளியை காணும் முன் வைத்திய ஆலோசனை எடுக்கவும். எவ்வாறு தெஹ்ரானில் பெண்கள் சுததிரமாய் உள்ளார்களோ அதேபோல் இலங்கையிலும் தமிழர்கள் மிக சுதந்திரமாக இருந்தனர், புலிகள்தான் தேவையில்லமால் போராடி, மக்களை இம்சித்தனர் என்பதை காட்டும் வீடியோ இது. இலங்கை இராணுவம் எவ்வளவு பத்திரமாக மனிதாபிமான நடவடிக்கை எடுத்து, புலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியது என இந்த வீடியோ சொல்கிறது 🤣.
3 months 2 weeks ago
அங்கே நிச்சயமாக தனிமனித சுதந்திரம் இல்லைத்தான். ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு தரமும் சும்மா ஜாலிக்காக ஈரானிய இளையோர் உயிரை கொடுத்து போராடவில்லை. அவர்கள் எம்மை போல அல்ல, தம் நாட்டில் இருந்து போரடுகிறார்கள். முன்னர் தப்பி வந்த பல ஈரானியர்களுடன், பெண்களுடன் நலன்புரி வேலைகள் செய்துள்ளேன். ஈரான் எப்படி பட்ட ஆணாதிக்கமே சட்டமாகி போன நாடு என்பதை அவர்களிடம் இருந்து நேரடியாக கேட்டும் உள்ளேன். சர்வாதிகாரத்திலும் படிநிலைகள் உண்டு. சதாம், கடாபி, கிம் போன்றோர் அரசியல் எதிரிகளை மட்டுமே ஒடுக்குவர். பெண்கள் விடயத்தில் மிகமோசமான சர்வாதிகாரிகள் என்றால் அது ஆப்கான், ஈரான், சவுதிதான். இதற்கும் இப்போதைய மோதலுக்கும் அதிக சம்பந்தமில்லைத்தான்.
3 months 2 weeks ago
செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை காணாமல் போனவர்களும் செம்மணியும் Jun 26, 2025 - 12:57 0 355 "அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா " சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான். புதைக்கப்பட்ட இடம் செம்மணி! இதை சொன்னது வேறு யாருமல்ல சோமரத்ன ! சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி . 1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுகிறது. அந்தக் காலத்தில் குறுகிய காலப்பகுதியில் யாழ்பாணத்தில் அண்ணளவாக 600 பேர் காணாமல் போகிறார்கள். அப்போது அரியாலையில் இருந்த இராணுவ முகாமில் கடமையில் இருந்தவர்தான் சோமரத்ன. செம்மணியில் உள்ள இராணுவ காவலரணில் சோமரத்ன தலைமையில் இருந்த குழு கிருசாந்தியை ரேப் பண்ணி கொலை செய்தது உறுதியான போது சோமரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கின் போது சோமரத்ன , தான் கிருசாந்தியை கொலை செய்யவில்லை , மேலதிகாரிகள் கொலை செய்த பின் உடலை புதைத்தது மட்டுமே நான் என்கிறார் சோமரத்ன. அத்தோடு மட்டும் நிறுத்தவில்லை சோமரத்ன ! என்னால் மேலதிகாரிகள் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொலை செய்து புதைத்த இடத்தை செம்மணியில் அடையாளம் காட்ட முடியும் என்று நீதிமன்றில் நீதிபதிகள் முன்பே சொல்கிறார். 1997 - 1998 காலம். சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த காலம். சோமரத்ன இப்படி ஒரு பெரிய குண்டை நீதிமன்றின் முன் தூக்கி போட்டது ஜுலை 1998 ஆனாலும் அது பெரிய அதிர்வலைகளை நீதிமன்றில் ஏற்படுத்தவில்லை. மாறாக அப்போது இலங்கை அரசுக்கு கடும் சிக்கலை உருவாக்கி இருந்த கிருசாந்தி கொலைவழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்குவதிலேயே எல்லோரும் குறியாக இருந்தார்கள். சோமரத்ன சொன்ன 600 பேர் புதைக்கப்பட்ட செம்மணி அமைதியாக உறங்கிய படி இருந்தது. சோமரத்னவிடம் வாக்குமூலம் பெறவேண்டும் செம்மணியில் அகழ்வு நடக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பலமான அழுத்தம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஒரு வருடகாலம் ஓடியது. அந்தக்காலம் பகுதியில் விசாரணைக்காக மூன்று நீதிபதிகள் வெவ்வேறு காலங்களில் நியமிக்கப்பட்டார்கள். மூன்று நீதிபதிகளும் அச்சுறுத்தல் என்று அந்த விசாரணையை மேற்கொள்வதில் இருந்து விலகி விட்டார்கள். கடைசியாக மன்னாரில் வேலை செய்த ஒரு நீதிபதி வழக்கை பொறுப்பெடுத்தார் யாழ்ப்பாண நீதிமன்றம் கூடியது. சோமரத்ன கொழும்பு சிறையில் இருந்து யாழ்பாணம் அழைத்து வரப்பட்டார். கொழும்பில் இருந்து 40 ஊடகவியலாளர்களும் விசேட விமானம் மூலம் யாழை அடைந்தனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஜுன் மாதம் 1999 சோமரத்ன நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகிறார் . அங்கே சோமரத்ன ஒரு மணிநேர வாக்குமூலத்தை நீதிபதி முன் சொல்கிறார். சோமரத்ன சொன்ன வாக்குமூலம் முழுவதுமாக கீழே, " நான் அரியாலையில் உள்ள முகாமில் வேலை செய்துகொண்டு இருந்தேன். அப்போது எனது கடமை ஊரில் உள்ள ஆட்களின் விபரத்தையும் அட்ரசையும பதிவு செய்வதும் , முகாமுக்கு கொண்டு வரப்படும் தமிழர்களின் விபரங்களை பதிவு செய்வதுமாகும். ஒருநாள் கப்டன் லலித் ஹேவாவும், அதிகாரி விஜயவர்த்தனவும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர் லிஸ்டை தந்து அவர்களின் வீட்டை கண்டுபிடிக்க உதவி கேட்டனர். எனக்குப் பழக்கமான இடம் என்பதால் வீடுகளை காட்டினேன். அங்கே ஒரு படையணி சென்று பல இளைஞர்களை பிடித்து வந்தது. அந்த இளைஞர்கள் ஒரு முகமூடி போட்ட ஆட்காட்டி முன் நிறுத்தப்பட்டு புலிகளா என்று கேட்கப்பட்டனர். ஆட்காட்டி புலி என்று சொன்ன இளைஞர்கள் கிட்டத்தட்ட 50 பேரை மேஜர் வீரக்கொடியும், குணசேகரவும் வேறாக முகாமுக்கு அழைத்துப் போனார்கள். சிலரை பாடசாலை ஒன்றில் அடைத்து வைத்தார்கள் . இதற்கான கட்டளையை கொடுத்தது இராணுவ அதிகாரிகளான லலித் ஹேவா , விஜேவர்த்தன மற்றும் துடுகல. ஒரு நாள் செல்வரத்னம் என்ற கல்வித்திணைக்கள அதிகாரியை காணவில்லை என அவருடைய மனைவி தேடி வந்தாள். அப்போது செல்வரத்னம் எங்கே எனக்குத் தெரியாது. பிறகு சித்ரவதை செய்யும் இடத்துக்கு சென்றபோது சித்திரவதைக்கு உள்ளாகிக்கொண்டிருந்த 25 பேரில் ஒருவராக செல்வரத்னம் இருந்தார். செல்வரத்னத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தனர். செல்வரத்னம் தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்னை விடுங்கள் என்று கெஞ்சினார். அவரை விடச் சொல்லி லலித் ஹேவாவிடம் சொன்னேன். ஆனால் அடுத்தநாள் செல்வரத்னம் உட்பட 10 பேரின் பிணத்தைக் தான் கண்டேன். அடுத்த நாள் உதயகுமார் என்ற நபரை பிடித்து வந்தனர். அவரது குடும்பம் அவரைத் தேடிவந்து கெஞ்சியது. அவரை விடச் சொல்லி மேலதிகாரி விஜேவர்த்தனவிடம் சொன்னேன். ஆனால் உதயகுமார் அன்றிரவு வேறு முகாமுக்கு மாற்றப்பட்டார். அவரை விடச் சொல்லி மேலிடத்தில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனாலும் உதயகுமார் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு விடுவிக்க பட முடியாத நிலையில் இருந்ததால் அன்றிரவு கொலை செய்யப்பட்டார். அங்கே சித்ரவதை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களைக் கூட என்னால் அடையாளம் காட்ட முடியும். ஒருநாள் கப்டன் லலித் ஹேவா ஒரு மண்வெட்டி எடுத்து வரச் சொன்னார். நான் மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நின்றாள். பக்கத்தில் அவள் கணவன். அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான். மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தார். பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைத்தோம். என்னால் செம்மணியில் உடல்கள் புதைக்கப்பட்ட 10 இடங்களைக் காட்ட முடியும். என்னோடு கிருசாந்தி வழக்கத்தில் தண்டனை பெற்றவர்களால் மேலும் ஆறு இடங்களைக் காட்ட முடியும் . ஒரு கராஜில் வேலை செய்த இரு இளைஞர்களை கொலை செய்தது புதைத்தது தெரியும் அந்த இடத்தையும் என்னால் காட்ட முடியும். கிருசாந்தியை நான் கொலை செய்யவில்லை. மேலதிகாரிகள் கொலை செய்தபின் உடலை புதைத்தது மட்டுமே நான். இராணுவத்துக்கு எதிராக நான் இந்த கருத்துக்களை சொல்லக்கூடாது என்று எனக்கும், என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். இலங்கை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காது விட்டால் நான் சர்வதேச நீதிமன்றுக்கு செல்வேன்." இதுவே யாழ் நீதிவான் நீதிமன்றில் சோமரத்ன கூறிய முழுமையான வாக்கு மூலம். வாக்கு மூலம் முடிந்ததும் சோமரத்ன செம்மணி க்கு அழைத்நுச்செல்லப்படார். அங்கே அவர் மனித பீதைகுழிகளை அடையாளம் காட்டினார். அன்று நேரமாகி விட்டதால் புதைகுழிகளை தோண்டுவது அடுத்த நாளுக்குப் பிற்போடப்பட்டது. 17 June 1999 நான்கு மணிநேரம் தோண்டிய பின் முதலாவது உடலின் பாகங்கள் கிடைத்தது. முழங்கால் பகுதி எழும்பும் அதைச்சுற்றி இருந்த ட்ரவுசரின் பகுதியும் முதலாவதாக கிடைத்தது. அன்று பின்னேரம் இரண்டு முழுமையான எழும்புக்கூடுகள் கிடைத்தன. படம் : செம்மணி அகழ்வு 1999 இரண்டு எழும்புக்கூடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இரண்டு எழும்பு கூடுகளுக்கும் இடையே தண்டவாளங்களுக்கிடையே இருக்கும தடி இருந்தது. ஒரு எழும்புக்கூட்டின்.கை பின்னால் கட்டப்படு இருந்தது. மற்ற எழும்பு கூட்டின். கண்கள் கட்டப்பட்ட துணி காணப்பட்டது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண அடுத்தநாள் யாழ் பொலிஸ் நிலையத்தில் 300 பேர் கூடினார்கள். அந்த இரு எழும்புக்கூடுகளும் சுப்பையா ரவி கராஜில் வேலை செய்த ராசையா சதீஸ்குமார் மகேந்திரன் பாபு என்ற இளைஞர்கள் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அரியாலை முகாமில் 19/8/1996 அன்று கைது செய்யப்பட்டவர்கள். உடலை கராஜ் உரியையாளரும், கொலையான வரின் மனைவியும் அடையாளம் காட்டினார்கள். அதன்பிறகு செம்மணி புதைகுழி தோண்டப்படுவதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியது . எதையையோ மூடிமறைக்க அரசு முனைந்தாதா? படம் : செம்மணி புதைகுழிகள் இருந்த இடத்திற்கான வரைபடம் 1999 அதன்பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் அங்கே புதைகுழிகள் தோண்டப்பட்டு மெத்தனமாக 6 புதைகுழி தோண்டப்பட்டது. ஒவ்வொரு புதைகுழியிலும் 1 தொடக்கம் ஆறு உடல்களுகான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 15 உடல்களில் பத்து உடல்களின் எச்சங்கள் கண்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதை உறுதி செய்தது. அதன்பின் அரசாங்கம் சோமரத்ன சொன்னபடி மேலதிக புதைகுழிகள் அங்கே இல்லை என்று அறிவித்து புதைகுழி தோண்டுவதை நிறுத்தியது. படம் : செம்மணி தோண்டப்பட ஆயத்தம் 1999 சோமரத்ன 20 இராணுவ அதிகாரிகளை இந்த படுகொலைகளுக்கு காரணமாக சொல்லியிருந்த போதும் 2000 ஆம் ஆண்டு வெறுமனே 7 பேர் மீது மட்டும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது . பிறகு ஏழு பேருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டு CID சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக அறிவித்தது. இந்த தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு நீதிமன்றம் 2006 அறிவித்தது. 2007 யில் கிருசாந்தி விடயத்தை பேசுபொருளாக்கி அரசுக்கு அழுத்தம் ஏற்பட காரணமாக இருந்த S.T. ஞானநாதன் என்பவர் அரியாலை இராணுவ முகாமுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனாலும் அதற்கு பிறகு அந்த வழக்குக்கு என்ன நடந்தது என்று தகவலை அறிய முடியவில்லை. சோமரத்ன சொன்னது போல் அங்கே புதைகுழிகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் மூடி மறைத்தது. அப்படியே கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு கடந்தபின் , 13 பிப்ரவர் 2025 அரியாலை சிந்தபதி மயானத்திற்கான கட்டுமான வேலைக்காக தோண்டியபோது மனித உடல்களின் எச்சங்கள் தென்பட்டது. விடயம் நீதி மன்றுக்கு போக நீதிமன்றம் அதை மனித புதைகுழி என அடையாளப்படுத்தி அதை சட்ட ரீதியாக தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. இதுவரை 19 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் மூன்று ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என சந்தேகிக்கப்படுகிறது. இப்போதைய கேள்வி : சோமரத்ன வெளிக்காட்டிய 20 பேரும் யார்? 2000 ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட ஏழு இரானுவத்தினரூக்கு எதிரான வழக்குக்கு என்ன நடந்தது ? இத்தனை காலமாக இது பற்றி எந்த தமிழ்தலைவராவது கேள்வி எழுப்பி உள்ளனரா ? https://tjsnews.online/Chemmani-mass-grave?fbclid=IwQ0xDSwLJ-otleHRuA2FlbQIxMQABHjwnZ5lJNOZl9EZ_-iiOYfK7CuyCb-Vc8lMPw3RxJcJMfamZql8mMD9V1gBe_aem_lhyvrtVjQaUBxYQnBn1h_g
3 months 2 weeks ago
மேற்கு, அமெரிக்கா உலகை சுரண்டுகிறது என தர்மவான் போல எழுதுவது. ஆனால் தனி வாழ்வில், அதே கம்பனிகளில் முதலிட்டு, அல்லது வேலைக்கு போய் பணம் பார்ப்பது. ஊருக்குத்தான் உபதேசம் கிளியே, உனக்கல்ல 🤣 # சோறு முக்கியம் பிகிலு🤣
3 months 2 weeks ago
அமைச்சரே... போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையையோ, அதற்கான ஆதாரங்கள் திரட்டுவதையோ அனுமதிக்க மாட்டோம். இனப் படுகொலை என்ற என்ற பதம் பிரயோகிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை, இதையெல்லாம் சொன்ன அதே அரசாங்கத்தில் இருந்துகொண்டு... அமைச்சர் செம்மணிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு, நான் சென்றால் அது சிறப்பு என்றும் சொல்கிறார். யாழ்ப்பாணம்.com
3 months 2 weeks ago
இரண்டாவது டெஸ்ட் மைச்சை இலங்கை அணி வெல்ல போகுது...............................
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும் சும்மா....கலக்கு கலக்கி விட்டார்.. மெக்ரான் ....... தங்கள் நாட்டுக்கான....சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 👌👌👌 இஸ்லாத்திற்கு புதிய சட்டங்க ளை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ...... புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்.. புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் ..... அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்...... 1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்....., இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது...... 2.மத அரசியல் நடத்த இஸ்லாத் திற்கு அனுமதி கிடையாது....., அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியா து. மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை......, குடியுரிமை ரத்து .. மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப் படுவார்கள்...... 3.எல்லா இஸ்லாமிய குழந்தை களும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்......,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து.... பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்......வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது...... ஹோம்கிளாஸ்...... ,மதரசாக்களில் படிக்க அனுமதி இல்லை.... .. மீறும் பெற்றோர்களுக்கு 5 ஆண்டு சிறை,..... குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்....... 4.மதரசாவுக்கு அனுமதி கிடையாது...... இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும்..... மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி.....,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,...... பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்......மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை....,குடியுரிமை ரத்து.... மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்...... பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது..... இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல....., நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்..... பிரான்ஸ் அதிபர் மெக்ரான்..... உலகிலேயே இந்தியா என்ற இளிச்சவாய் நாடு தான் மதச் சார்பின்மை பேசி பெரும்பான் மை மக்களை அழிக்கும் அரசியல்வாதிகள் உள்ள ஒரே நாடு....என்ற உண்மை அனைவருக்கும் உரைக்கும்படி செய்ய வேண்டும்.... Radhakrishnan Radha
3 months 2 weeks ago
ஏன், மக்கள் செம்மணிக்கு வந்த ஜேவிபி ( திசைகாட்டி ) இனவாத கும்பலின் எடுபிடிகளை துரத்தி கலைச்சவை என்பதற்கும், அந்த சப்பாத்துகள் அநாதையாக்கப்பட்டதற்கும்... இந்த அமைச்சரின் கருத்துக்கும் தொடர்புண்டு என விளங்கினால்... நீயும், தமிழன் ♥ Kunalan Karunagaran
3 months 2 weeks ago
அப்படி நடக்க வாய்பில்லை அண்ணா அடுத்த மாதம் இங்லாந்தில் அடிக்கடி மழை வரும் , ஒரு மைச்சாவது சம நிலையில் முடியக் கூடும் , இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்ல முடியாது....................... அவர் தனது மருமோன் தலமைக்கு ஊக்கம் கொடுக்க சொல்லி இருப்பார் அண்ணா..............................
3 months 2 weeks ago
நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு! அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, நேட்டோ நாடுகளின் இராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதன்போது, உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437239
3 months 2 weeks ago
அற்ப விளம்பரங்களுக்கு சுமந்திரன் ஆசைப் பட்டு செய்த செயல்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே திரும்பியது கடந்த கால வரலாறு. ஆனாலும் திருந்திய மாதிரி தெரியவில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று முன்னோர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை.
Checked
Sun, 10/12/2025 - 12:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed