3 months 2 weeks ago
கூட்டில போய் Pic upload எழுதுங்கோ இந்த இணையம் வரும் , உங்கட கைபேடியில் இருக்கும் படமோ அல்லது கொம்பியூட்டரில் இருக்கும் படத்தை தெரிவு செய்துவிட்டு Direct link கொப்பி பண்ணி யாழில் இணைத்தால் படம் தெரியும் புலவர் அண்ணா , முயற்ச்சி செய்து பாருங்கோ சரி வரும்👍...................
3 months 2 weeks ago
27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596
3 months 2 weeks ago
சிறந்த முன்னுதாரணமான செயல் ஐயா. எனக்குள்ளும் இந்த ஆசை இருக்கிறது, இறந்தபின் எனது உடல் கற்றலுக்கு பயன்படுமா என மருத்துவர்களிடம் அறிந்தபின் உயிலை எழுதுவம்.
3 months 2 weeks ago
இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதிக்கக் கூடாது - உதுமாலெப்பை Mp இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது - சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை லங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வருமானங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அமைதியான சுற்றுலாத்துறை பிரதேசங்களில் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது. அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனத்தை அகற்றி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை அமைச்சு ஈடுபட வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். Jaffna Muslimஇஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதி...
3 months 2 weeks ago
கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் June 27, 2025 8:59 am முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொலை வழக்குகள் தொடர்பாக பல குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து கொலை சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலையும் அடங்கும் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் பல சிறப்புக் குழுக்கள் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபர்கள் முகாம்களை நடத்தி வந்த இடங்கள் கண்காணிக்கப்பட்டு, பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் பிரிவின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://oruvan.com/murder-charges-cid-investigations-begin-against-pillayan/
3 months 2 weeks ago
இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு June 27, 2025 இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார். இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார். தற்போதைய அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார். நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன் (Rory Mungoven), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன் (Elaine Chan), ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி (Laila Nazarali), அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் (Azam Bakeer Markar), மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி (Anthony Headley)ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/un-high-commissioner-for-human-rights-expresses-support-for-sri-lankas-efforts/
3 months 2 weeks ago
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம் 27 JUN, 2025 | 10:42 AM (எம்.நியூட்டன்) எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து நெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் நீதியுடன் நியாயமாக நடக்க வேண்டும் அவர்கள் இடுகின்ற தலைப்புகள் சொந்த வாழ்க்கையில் ஒருவரின் கௌரவத்தையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்பதால் நியாயமாக தலைப்பிட்டு செய்தியை வெளியிடுங்கள். எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் இது பொதுவானது. செம்மணி அணையா விளக்கு போராட்டம் தொடர்பில் இளைஞர்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் முதன் முதலில் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களை பங்கேற்க அழைத்தது நான். அதன் அடிப்படையில் போராட்டத்திலும் பங்கேற்றோம். அதன்போது வேலன் சுவாமி விமர்சித்தார். அதில் என்னை பேச அழைத்தார்கள். நான் திருப்பி ஏதாவது பேசி இருந்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் குழம்பிவிடும் என்பதால் அதனை நான் செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக தீப்பந்த போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்துக்கு சென்றபோது அஞ்சலி செலுத்தி மக்களோடு மக்களாக நாங்கள் நின்று இருந்தோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக நாங்கள் வெளியேறினோம். நான் வெளியேறி வீதியில் சென்று வாகனத்தில் ஏற முற்பட்டபோது சில குரல்கள் எனக்கு எதிராக எழுந்தது. அதனை நான் அசட்டை செய்யவில்லை. பின்னால் சில பேர் சத்தமிட்டனர். அந்த காணொளியை நான் அவதானித்த பொழுது என்னை குறி வைத்து திட்டமிட்டு பேசியதை அவதானிக்க முடிந்தது. எமது கட்சிக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி இருந்தோம். அந்த பழைய குழப்பங்களையே அவர்கள் பேசியிருக்கிறார்கள். காணொளியை பார்த்தால் தெரியும். நான் சலனம் இல்லாமல் நடந்து சென்றேன். நான் ஓடவில்லை. தமிழ் அரசுக் கட்சித் தலைவர் விரட்டியடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. என்னை யாரும் விரட்டியடிக்கவில்லை. அகற்றப்பட்டார் என்ற செய்தி வந்தது. நான் அகற்றப்படவில்லை. எதுவுமே இல்லை. ஏன் இவ்வாறு செய்தியை போட்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையை எழுத வேண்டும். எனது பாட்டில் நான் வெளியேறி சென்றேன். இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு நடந்தால் பரவாயில்லை. நாங்கள் இருந்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. நல்ல ஒரு விடயமொன்றிற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அங்கு பங்கேற்று இருந்தோம். உள்ளூராட்சி தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசுக் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. அந்த கடமையை செய்வதற்காக நாம் போய் இருந்தோம். வீதியில் சென்றால் நாய்கள் குலைப்பது வழமை. நான் அவ்வாறு சென்றேன் அவ்வாறே அதுவும் நடந்தது. அது பரவாயில்லை. ஏற்பாட்டாளர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மக்கள் இதனை கண்டிக்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது. காணாமல் போன விடயம் தொடர்பாக நான் பல விடயங்களை செய்திருக்கிறேன். அதை நான் ஒன்றும் சொன்னதில்லை. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விடயங்களை நான் கையாண்டு இருக்கிறேன். கிரிசாந்தியின் கொலை நடந்த சமயத்தில் ரஜிணி என்ற பெண் பிள்ளையை ராணுவம் கொலை செய்து மலக்குளியில் போட்ட விடயத்தை மிகவும் கடுமையான ராணுவ தளபதி என்று சொல்லக்கூடிய ஜானக பெரேராவோடு முரண்பட்டு நின்று சடலத்தை மலக்குழியில் இருந்து எடுத்து இரண்டு ராணுவத்தினரை சேவை இடைநிறுத்தம் செய்து வைத்தேன். தயவுசெய்து அந்த காலத்தில் பத்திரிகைகளை பார்த்தால் தெரியும். அவ்வாறு பல விடயங்களை செய்து இருக்கிறேன் இதனை பிதற்றிக் கொண்டு நான் திரிவதில்லை. அந்த இடத்தில் நிற்பதற்கு எனக்கும் கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குழுவாக வந்து அந்த இடத்தில் புனித தன்மையும் புனித நோக்கத்தை சிதைக்கிற காழ்ப்புணர்ச்சியான செயல் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு ஒரு பங்கு உண்டு. இவர்கள் இவ்வாறு அசிங்கமாக அவமானமாக செயல்பட்டால் இனிமேல் இவ்வாறான போராட்டங்களில் மக்களை பங்கு வைக்காமல் வைப்பதற்கான நோக்கம் உண்டா என்ற சந்தேகம் உண்டு. எனக்கும் பொதுச்செயலாளருக்கும் கட்சிக்கும் அவர்களுடன் முரண்பாடு உண்டு. அதை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/218597
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
செம்மணி போராட்டத்திற்குள் புகுந்த விசமிகள் General27 June 2025 செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே சிலர் குழப்பங்களை விளைவித்திருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானது எனவும் அதனை திட்டமிட்டு குழப்புவதற்காக கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/408516/foreigners-who-entered-the-chemmani-struggle#google_vignette
3 months 2 weeks ago
செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு! செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இதன்போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவைகள் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளன. அதேவேளை அகழ்வு பணிகளை 45 நாட்கள் முன்னெடுக்க நிதியினை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , அதற்கான நிதி எதிர்வரும் திங்கட்கிழமையே கிடைக்கப்பெறும் எனவும் , 45 நாட்கள் அகழ்வு பணிகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437316
3 months 2 weeks ago
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ முருகானந்தன் தவம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார் தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழரசு கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கட்சிகளின் தாய் கட்சி என போற்றப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் ஆட்சியை, மேயர், பிரதி மேயர், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை தாங்களே கைப்பற்ற வேண்டுமென்ற அதிகார ஆசையினால் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் புறக்கணித்து,அவர்களின் சில நிபந்தனைகளை நிராகரித்து விட்டு பேரினவாதிகளினதும் துரோகிகளினதும் ஆதரவோடு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றது. பேரினவாதக் கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கன் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழினத் துரோகி என இவர்களினாலேயே குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றே வடக்கின் சபைகளைக் கைப்பற்றி தமிழரசுக் கட்சி கட்சி மிகப்பெரும் காட்டிக்கொடுப்பையும் துரோகத் தனத்தையும் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழினத்திற்கும் செய்துள்ளது. வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியமைக்க நாம் ஆதரவளிப்போம். அதேவேளை, இரண்டாவது இடத்தில் நாம் இருந்தால் எமக்குப் பிரதி மேயர், அல்லது பிரதி தவிசாளர் பதவி தரவேண்டும் என்ற நிபந்தனையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்திருந்தது. அத்துடன், ஒரு சில சபைகளில் தமக்கு பிரதி தவிசாளர் பதவி வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் (சங்கு) கோரியிருந்தது. ஆனால், யாழ். மாநகரசபையை ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் எந்தவொரு ஆதரவுமின்றி, முழுமையாகக் கைப்பற்றத் தமிழரசு திட்டமிட்டது. அதனால் அவர்களை நிராகரித்து விட்டு ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழரசு சரணாகதி அடைந்தது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றினுடனும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு ஆதரவு கோரியது. யாழ். மாநகரசபையில் மொத்தமாக 45 ஆசனங்கள் உள்ளன. இந்நிலையில், 2025 மே 6இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 1,0370, வாக்குகள் பெற்று 13, ஆசனங்களையும் தமிழ்த் தேசிய பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 9,124 வாக்குகள் பெற்று, 12, ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி, 7,702, வாக்குகள் பெற்று 10 ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, 3,567 வாக்குகள் பெற்று 4, ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, 3,076, வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி, 587 வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி, 464, வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்கும் கட்சி 23 ஆசனங்களை பெறவேண்டும். தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக நிறுத்திய மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளைப் பெற்று யாழ். மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஈ.பி.டி.பியின் 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 1 ஆசனம், ஐக்கிய தேசியக் கட்சியின் 1 ஆசனம் என்பவற்றை பெற்றே 19 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 23 ஆசனங்கள் தேவையென்பதனால், யாழ். மாநகரசபையில் சிறுபான்மை ஆதரவுடனேயே தமிழரசு ஆட்சியமைத்துள்ளது. அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிறுத்திய மேயர் வேட்பாளர் -தமிழ் மக்கள் பேரவை-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது. தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மேயர் பதவியைப் பெற கஜேந்திரகுமார் விரும்பியிருந்தால் தேசிய மக்கள் சக்தியின் 10 ஆசனங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களைப் பெற்று 26 ஆசனங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால், அவர் தமிழ்த் தேசியக் கொள்கைக்காக அதனைச் செய்யவில்லை. ஆனால், ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க மறுத்திருந்தால் தமிழரசு நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவைக் கோரியிருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதிரிகளே தவிர, பேரினவாதக் கட்சிகளோ துரோகிக் கட்சிகளோ எதிரிகள் கிடையாது. தமிழரசின் தலைமைகள் எப்போதும் பேரினவாத கட்சிகளின் தலைவர்கள், எஜமானர்களின் விசுவாசிகளாக, அடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். அதன் இறுதி உதாரணமாக, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகத் தமிழ் தேசியக் கட்சிகள் அரியநேத்திரனை நிறுத்தியபோது, அவரை தோற்கடிக்க முழு மூச்சாக இந்த தலைவர்கள் சிலர் செயற்பட்டதுடன், அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாதெனவும் கூறியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே பகிரங்கமாகவே ஆதரித்திருந்தார்கள். இவ்வாறாக யாழ். மாநகரசபையை எதிரிகளோடும் துரோகிகளோடும் சேர்ந்து கைப்பற்றிய தமிழரசு இங்கு தமக்குப் போட்டியாக வேட்பாளரை நிறுத்திய தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சாவகச்சேரி நகரசபையிலும் ஆட்சியைக் கைப்பற்ற சகுனித்தனமாக அக்கட்சியின் இரு வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பெற்று வாக்களிப்பில் பங்கேற்க விடாது செய்து அதிகாரத்தைக் கைப்பற்றச் சதி செய்தது. சாவகச்சேரி நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் பெற்றிருந்தன. வாக்குகள் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2,959 வாக்குகளையும் தமிழரசுத் தரப்பு 2,594 வாக்குகளையும் பெற்றன. இதன்படியே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகித்தது. இச்சபையில், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (சங்கு) இரு ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன. இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் கொள்கை ரீதியில் ஒப்பந்தம் செய்து ஓரணியாகி தமது ஆசனங்களின் எண்ணிக்கையை 8 ஆக அதிகரித்தது. இதேவேளை, தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியிடம் ஆட்சியைக் கைப்பற்ற ஆதரவைக் கோரியிருந்தது. இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம் 8 ஆசனங்களும் தமிழரசு, ஈ.பி.டி.பி. வசம் 7 ஆசனங்களும் இருந்தன. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது. தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தால் முன்னிலை வகித்த நிலையில்தான் இவர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்ற அதிகார ஆசை மற்றும் பழிவாங்கும் வெறியில் அவசர அவசரமாக 11ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் வழக்குப் போடப்பட்டது. 13ஆம் திகதி மாலை சபை கூடவிருந்த நிலையில், அன்று காலை அந்த உறுப்பினருக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்தது.தமிழரசு - ஈ.பி.டி.பி தரப்புக்கும் ஆசனங்கள் 7ஆக இருந்தன. இதற்கிடையில் ஏற்கனவே, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பின் மற்றொரு பெண் உறுப்பினரை சபைக்குப் போகக்கூடாது என்று தமிழரசின் எடுபிடிகள் தொலைபேசி மூலம் பலதடவைகள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் உண்டு. அவரையும் சபைக்கு வரவிடாமல் தடுத்து தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்பு 7:6 என்ற ஆசனங்கள் அடிப்படையில் சபையைக் கைப்பற்றுவதே சதித் திட்டமாகவிருந்தது. ஆனாலும், அந்த பெண் உறுப்பினர் சபைக்கு வந்து விட்டார். இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை -தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கும் தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்புக்குமிடையில் தவிசாளர் - உப தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இரு தரப்புகளும் தலா 7 வாக்குகளைப் பெற்று சமனிலை பெற்றன. இதனால் திருவுளச்சீட்டு (குலுக்கல் முறை) முறை மூலம் இரு பதவிகளுக்கும் தெரிவு இடம்பெற்றது. இரு தடவைகளும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வெற்றி கிடைத்தது. இதற்கமைய தமிழரசின் சதியை, சகுனித்தனத்தை அதிர்ஷ்டத்தின் மூலம் முறியடித்து சாவகச்சேரி நகர சபையைத் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடு-அனுரவோடு-வீடு-வீணையோடு/91-359994
3 months 2 weeks ago
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்! பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437333
3 months 2 weeks ago
குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்! கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் தூதரகம் கூறியுள்ளது. எனவே, விண்ணப்பதார் ஒருவரின் முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக பிரசவம் என்று நம்பினால், சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. https://www.samakalam.com/குழந்தை-பெற்றுக்கொள்ளும/
3 months 2 weeks ago
இவர்கள் கூட்டமாக செல்ல எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களிடம் உள்ளது. இவர்கள்... தமது இருப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தால்.... தையிட்டி விகாரைக்குப் போய், தமது எதிர்ப்பை பதிவு செய்யச் சொல்லுங்கள்.
3 months 2 weeks ago
கெஹெலிய வழக்கின் சாட்சியாளராக ரணில், டக்ளஸ் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்! adminJune 26, 2025 தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 350 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, ரொஷான் ரணசிங்க ஆகியோர் அடங்குவர். மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவும் சாட்சிகளாக உள்ளனர். அரசு தரப்பு இவ்வழக்கு தொடர்பாக சுமார் 300 வழக்குப் பொருட்களைச் சமர்ப்பித்துள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரணைக்கு நியமிக்குமாறு சட்டமா அதிபர் முன்னர் தலைமை நீதிபதியிடம் கோரியிருந்தார். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன, அமலி ரணவீர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி நியமித்துள்ளார். சட்டமா அதிபர் அந்த நீதிபதிகள் அமர்வு முன் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பித்துள்ளார். மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டோப்சிமேப் எனப்படும் மருந்து அல்லாத பொருட்களின் 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கியதன் ஊடாக அரச நிதியில் 1.444 பில்லியன் ரூபாயை மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்தப் பணத்தை குற்றவியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் 13 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்திரகுப்தாவுக்கு விளக்கமறியல். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த பின்னர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா கைது செய்யப்பட்டார் https://globaltamilnews.net/2025/217386/
3 months 2 weeks ago
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா? adminJune 26, 2025 யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது. அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் போது சமீபத்திய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறுகிறார். அரசுப் பணியில் இருந்து முதலில் பதவி விலகாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாக ஹேரத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதியரசர்களான மாயாதுன்னே கொரியா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர். அவர் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் அமர அல்லது வாக்களிக்க தகுதியற்றவர். அரசியலமைப்பின் 66(இ) பிரிவின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினரின் இருக்கை காலியாகிவிட்டதாக வாதிட்டார். நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை பாராளுமன்ற உறுப்பினர் செயல்படுவதைத் தடுக்க இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அரசு தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன , எம்.பி. ராமநாதன் இன்னும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். அரசியலமைப்பின் பிரகாரம், பொது அதிகாரிகள் மீதான ஒழுங்கு அதிகாரம் பொது சேவை ஆணையத்திடம் உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மீது மேற்பார்வை செய்யும் அதிகாரம் பொது சேவை ஆணையம் உள்ளது. இது ஒரு தெளிவான மோதலுக்கு வழிவகுக்கிறதுஇ ஏனெனில் இடைநீக்கத்திற்கு உள்ளான எம்.பி. ராமநாதன் இப்போது தனது சொந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைப்பின் மேற்பார்வையில் உள்ளார். எம்.பி. ராமநாதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்புகளுக்காக 2025 ஜூலை 2, வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரருக்காக வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், ஷெனல் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சார்பாக சேனானி தயாரத்ன, நிஷாதி விக்ரமசிங்க ஆகியோர் ஆஜரானார்கள். https://globaltamilnews.net/2025/217393/
3 months 2 weeks ago
நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு! போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்இ ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதோடு அவர் இ நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி சிறப்பு நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437321
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
தமிழீழ விடுதலைப் போராட்ட போராளி ஒருவர் இதன் பெயர் "செவ்வந்தி" என்றும் இது தமிழீழ தயாரிப்பு என்றும் கூறினார். ஆனால் இதையொத்த இதே மாதிரியான ஒன்று இயூகோசுலாவியாவில் தயாரிக்கப்படுகிறது. அதன் பெயர் ரி.எம்.ஆர்.பி.- 6. எனவே இதை யாரேனும் உறுதிப்படுத்திக்கொள்ளவும். இது என்னால் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஆகும்.
3 months 2 weeks ago
போராட்டக்காரர்கள், இளங்குமரனை மட்டும் துரத்தவில்லை. அரசியல், அரசியல்வாதிகள் வேண்டாம் என்று அனைவரையுமே விரட்டினார்கள். காரணம், அவர்கள் செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்து களைத்ததினாலேயே வேறு வழியின்றி தாமாக போராட வெளிக்கிட்டனர். அதுவரை வேடிக்கை பார்த்தவர்கள், காணாமல் இருந்தவர்கள், இன்று மனித உரிமையாளர் வருகிறார் என்றவுடன் தம்மை பிரபல்யப்படுத்தி மக்களின் போராட்டத்தை திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது. இதில பழிவாங்கப்போறாராம். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் இவர். முதலில் மக்களுக்கு என்ன விமோசனம் பெற்றுக்கொடுத்தார்? அதை முதலில் செய்யுங்கள், மக்கள் உங்களை அழைப்பார்கள்.
Checked
Sun, 10/12/2025 - 15:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed