புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
CSK's Dhoni: 'Important to get the right combination for next year' தல இப்பவே அதுத்தவருஷத்தை பற்றி கதைக்க தொடங்கீட்டுது! அப்ப சென்னைக்கு அடுத்தவருசமும் சனி விட்ட மாதிரி இல்லை!!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
உங்கட சங்கதியே வேற. இப்பிடிச் செய்தால் நாம என்ன பண்ண. எனக்கு இரண்டும் புஷ்வானம். இரண்டுபேரும் வீட்டில சாப்பிடாம போற போற இடமெல்லாம் தின்டுகொண்டு. இவங்கள எப்பிடி நம்பி ஒரு விளையாட்ட விளையாடுறது. இது அடுத்த கட்ட வேலை. போட்டுப் பிளந்து விட்டுக்கிருக்கு. சென்னையின் கதி அதோ கதிதான். அடுத்த அடுத்த வருசம் பார்ப்பம். சென்னையைத் தெரிவுசெய்த எல்லாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

3 months 2 weeks ago
வசி அண்ணனுக்கு ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்! (அண்ணனுக்கு புரிந்திருக்கும்)😂 மற்றும்படி என்னுடைய பழைய பல்லவியைத்தான் பாடவேண்டிக்கிடக்கு! வீணை என்றால் அதனை மீட்டவேண்டும்! குழல் என்றால் அதனை ஊதவேண்டும்! உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும்!😎

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
கடைசியில் இந்த கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதியின் தமிழ் தேசியம் என்பது பொலிடோல் குடிச்சிட்டு பாடையில் போ படு என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் - நாமல்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:29 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ராஜபக்ஷவினரை பேசி திரிவதால் ட்ரம்ப் வரியினை அகற்றப்போவதில்லை அதனை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு வேலைத்திட்டமொன்றுடனான நோக்குடன் செல்லவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷத சில்வா மற்றும் டீ.வீ.ஷானக்க ஆகியோர்களால் ஆலோசனை அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றினை வழங்கியுள்ளனர். அதையாவது எடுத்துக்கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் கடிதமொன்றினை அனுப்பி தபால் மூலம் பதில் ஒன்று வரும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தால் எமது நாட்டுக்கு இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகும். அரசாங்கம் தெளிவாக இதனை விட பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சியை அமைத்தனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மீண்டும் பொய் கூறிக்கொண்டே அவர்கள் ஆட்சியை நகர்த்திக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் இன்று அது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறுகின்றார் அவர்களுக்கு அதிகாரம் வராமல் வேறு தரப்பினருக்கு அதிகாரம் செல்லும் சபைகளுக்கு நிதி வழங்க மாட்டோம் என்று, 2018 ஆம் ஆண்டு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் தான் பொதுஜன பெரமுன வெற்றி ஈட்டியது. அன்று நாங்கள் நாட்டுக்கு வேலைசெய்து காட்டினோம் என்ற விடயத்தினை கூற விரும்புகிறேன். எமது கட்சி நாட்டுக்கு வேலை செய்த கட்சி ஆகையால் இந்த நாட்டு மக்கள் எமக்கு மீண்டும் அதிகாரத்தினை வழங்குவார்கள் என்று நம்பிக்கை எமக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212453

நம்ம பரிமளம்

3 months 2 weeks ago
இன்றுதான் பார்த்தேன் சிறீ..🤔 தகவலுக்கு நன்றி🙏 பரிமளம் அவதாரங்கள் எல்லோர் வீட்டிலும் அப்பப்போ உண்டு. 🤗சிலவற்றை வெளியே சொல்ல ஏலாது..😔🤣

வோசிங்டனில் ஐந்து இலட்சம் பேர் - அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள்

3 months 2 weeks ago
மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள் 20 APR, 2025 | 09:58 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். எல்சல்வடோருக்கு அமெரிக்க அரசாங்கம் தவறாக நாடு கடத்திய கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை திருப்பிஅழைக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவில் அரசாங்கவேலைகளை குறைப்பதற்கான, ஏனைய நலன்புரி சேவைகளிற்கான நிதியை குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து தமது விரக்தியை ஆர்ப்பாட்டக்காரர்கள், வெளியிட்டுள்ளனர். கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை டிரம்ப் நிர்வாகம் தவறுதலாக எல்சல்வடோரிற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள ஒருவர் அவரை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவருவதற்காக எல்சல்வடோர் மீது டிரம்பினால் அழுத்தங்களை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பல ஆர்ப்பாட்டக்காராகள் மன்னர்கள் தேவையில்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் சுலோக அட்டைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வாசகம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவில் புரட்சி ஆரம்பித்த 250 வருடத்தின் ஆரம்பத்தை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு இது மிகவும் ஆபத்தான தருணம் என தோமஸ்பாஸ்போர்ட் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் தோற்றம் பற்றியும் நாம் சிலவேளை சுதந்திரத்திற்காக போரிடவேண்டியிருக்கும் என்பது குறித்தும் அடுத்த தலைமுறை அறிந்திருக்கவேண்டும் என அவர் பொஸ்டனில் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50501 என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, அதாவது 50 ஆர்ப்பாட்டங்கள் 50 மாநிலங்கள் ஒரே நோக்கம் என்பதே இதன் அர்த்தம். https://www.virakesari.lk/article/212414

யாழில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலை!

3 months 2 weeks ago
Published By: VISHNU 20 APR, 2025 | 09:20 PM யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற இளைஞனே மூதாட்டியை தாக்கி படுகொலை செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் 20ஆம் திகதி காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அந்நிலையில் இரு மூதாட்டிகளும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்கள் என நினைத்து , இளைஞன் வீட்டினுள் களவுக்கு சென்றுள்ளார். அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞன் களவில் ஈடுபடுவதனை அவதானித்ததை அடுத்து இளைஞன் பொல்லினால் மூதாட்டியை தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். அந்நிலையில், தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தடயவியல் பொலிஸார் அயல் வீட்டு இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/212481

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!

3 months 2 weeks ago
தன் வாழ்நாள் முழுவதும் விடுதலைப்புலிகளை எதிர்த்தும் விமர்சித்தும் எழுதியவர்.. புலி எதிர்ப்பையே தமது பிரதான இலக்கிய எழுத்தின் மூலமாக எடுத்து எழுதியவர்.. அவர் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் மனிதராக மிக நல்லவர்.. பழக அன்பானவர்.. முக நூலில் ஓரிரு தடவை உரையாடி இருக்கிறேன்... கண்ணீர் அஞ்சலிகள்..

காங்கேசன்துறையில் வடமாகாண வலய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் திறப்பு!

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 20 APR, 2025 | 09:17 PM பொலிஸ் திணைக்களத்தின் நிருவாக கட்டமைப்பினை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் வடமாகாண வலய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் அலுவலகமானது, வியாழக்கிழமை (17) பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரியவினால் திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தர்மபால உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212476

துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?வருத்தம் தெரிவித்தாரா? மல்லை சத்யா? பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், ஆ.நந்தகுமார் பதவி, பிபிசி தமிழ் 20 ஏப்ரல் 2025, 13:34 GMT சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில் ‘கழக முதன்மை செயலாளர்' என துரை வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ நேற்று அறிவித்திருந்த நிலையில், அவரது பதவி விலகலை மதிமுக தலைமை இன்று ஏற்க மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீர்மான அறிக்கை இருந்தது. ‘நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் 'ஒருவர்' மத்தியில் பணியாற்றிட இயலாது’ என தனது ராஜினாமா அறிக்கையில் பெயரை குறிப்பிட விரும்பாமல் குற்றஞ்சாட்டியிருந்தார் துரை வைகோ. அந்த 'ஒருவர்' மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என்பது இன்று வைகோ மேடையில் பேசியதன் மூலம் உறுதியானது. இன்று நடந்த கூட்டத்தில் அதே மல்லை சத்யா உடன் மேடையை பகிர்ந்துகொண்டார் துரை வைகோ. துரை வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக மெளனம் காத்துவந்த மல்லை சத்யா, இன்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சமூக ஊடக பதிவுகள் மற்றும் திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக திர்மானம் போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் குறித்து பல அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் நேற்று (ஏப்ரல் 19) வைகோவிடம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் எந்த பக்கமும் சாயாததுபோல இருந்தது வைகோவின் பதில்கள். ஒரு கட்டத்தில் கட்சியில் பிரச்னையே இல்லை என்ற தொனியில் அவரது பதில்கள் இருந்தன. ஆனால், ”மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை” என இன்று காலை கூட துரை வைகோ கூறியதன் மூலம் இந்த விவகாரம் இன்னும் புகைந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற தோற்றத்தை கொடுத்தது. 'இணைந்த கைகள்' இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்தான அறிவியல் ஆய்வில் கிடைத்த தகவல்கள்18 ஏப்ரல் 2025 மேலாதிக்கத்தை காட்ட தனது காலணிக்கு மரியாதை செய்ய சொன்ன ஒளரங்கசீப், அவமதித்த மதுரை மன்னர் - என்ன நடந்தது?19 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக துரை வைகோ கூறினார் இதற்கிடையே திடீர் திருப்பமாக,''துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டுப் பேசி கட்டித் தழுவினர். இணைந்து பணியற்றுவோம் என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளனர்'' என இன்றைய நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார். ''துரை வைகோவும், மல்லை சத்யாவும் இன்று மனம் விட்டுப் பேசினார்கள். தங்கள் உணர்ச்சிகளையும் ஆவேசத்தின் வடியிலாக வந்த வார்த்தைகளையும் இருவரும் நாகரிகமாக கையாண்டனர்,'' எனவும் வைகோ கூறினார். அடுத்து பேசிய துரை வைகோ, மல்லை சத்யா தனது செயல்களுக்கு வருத்தம் கோரியதால் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற உள்ளதாக கூறினார். பின்னர் பேசிய மல்லை சத்யாவும் இதே பாணியிலான கருத்தை கூறி இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். குறிப்பாக, மல்லை சத்யா வருத்தம் கோரினார் என செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறினாரே தவிர, வைகோ அப்படி கூறவில்லை. மல்லை சத்யா, துரை வைகோவுக்கு உறுதிமொழி கொடுத்தார் என்ற பதத்தையே அவர் பயன்படுத்தினார். இந்தநிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மல்லை சத்யா,''சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டேன். இதனை ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என அறிவித்துள்ளார்'' என கூறியுள்ளார் பட மூலாதாரம்,MDMK மதிமுகவில் நடக்கும் இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்: ''மதிமுகவிற்கு ஏற்கனவே அடிப்படை கட்டமைப்பு பல மாவட்டங்களில் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் இதுபோன்ற குழப்பம் கட்சியை மேலும் சுணக்கம் அடையவைக்கும்'' என்கிறார். இன்று காலை தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிய துரை வைகோ, கூட்டம் முடிந்த பிறகு பதவி விலகலை பின்வாங்குவதாக கூறுவது அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை கட்டுவதாக கூறுகிறார். ''கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் துரை வைகோ என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று. உயர் பதவிக்கு வர விரும்புபவர் கட்சியின் பிரச்னை என்றால் அதை தற்போதைய பொதுச்செயலாளர் வைகோவிடம் சொல்லி தீர்த்திருக்க வேண்டும். ஆனால், பொதுவெளியில் ராஜினாமாவை அறிவிப்பது பதவிக்கு அழகல்ல, என்கிறார் பிரியன். வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரது மகன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். '' கிட்டதட்ட அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது. அதனால், இரண்டு மூன்று தசாப்தமாக கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அதுதான் தற்போது மதிமுகவிலும் வந்துள்ளது'' என்கிறார் பிரியன். இந்த மோதலுக்கு மத்தியில், வைகோ மல்லை சத்யாவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மல்லை சத்யா அமைதி காத்து தனது அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2ewp2z2lkko
Checked
Fri, 08/08/2025 - 09:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed