புதிய பதிவுகள்2

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... ஒரு வித்தியாசம் பிள்ளையான் செயலில் இறங்கினார் ...மற்றவர்கள் கருத்துக்களை எழுதினார்கள் ... மகிந்தா குழுவினர்,மற்றும் அண்மையில் ரில்வின் சில்வா சொன்னதும் இதே கருத்து ...தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை ...அதுவும் ஒர் பகுதியினரின் கையில் பொருளாதாரம் சென்றுள்ளது மேட்டுக்குடியினரின் கையில்

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

3 months 2 weeks ago
அது வசியின் தமையனின் கொம்பனி . வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

3 months 2 weeks ago
இவ்வளவு தானா???? இல்லையே,......நானும் இந்த திருமண சங்கத்தில். பதிவு செய்யலாம் என்று இருந்தேன் நீங்கள் என்னை பற்றி இப்படி எழுதி எல்லாவற்றையும் கெடுத்து விட்டீர்கள் 😀

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

3 months 2 weeks ago
புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு தாயக மக்களின் நிலையை பலமடங்கு உயர்த்தியிருக்கு ...இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ...இன்றும் டோழர் அனுரா புலம் பெயர் தமிழர்களிடம் கையெந்துகின்றார் நாட்டை முன்னேற்ற வாருங்கள் என்று... இன்று தமிழர்கள் வெளிநாடுகளில் வசதிவாய்ப்புக்களுடன் இருப்பதற்க்கும் சிங்களவர்கள் தான் காராணம் .🤣...ஆனால் அதற்காக நம் இனம் இழந்ததும் அதிகம் ..என்பதை மறக்க முடியாது ...🥲 கொடுத்த விலை அதிகம் ...சொத்துக்கள் உயிர் இழப்புக்கள் அதிகம் நீங்கள் கூறுவது உங்கள் நிலைப்பாட்டில் சரியாக இருக்கலாம் ..யுத்தம் நிறுத்தப்பட்டது நல்லது ... தமிழ் தேசியம் ஒர் பயங்கரவாத செயலோ,அல்லது தனி நாட்டு கோரிக்கையோ அல்ல.. சலுகை அரசியலில் மக்கள் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்று ...இதே மக்கள் 10 வருடங்களின் பின்பு வேறு வித அரசியலை நோக்கி நகர்வார்கள் ...ஆனால் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைக்க வேண்டும்

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

3 months 2 weeks ago
வணக்கம் கந்தையர்! ஒரு வயதுக்கு பிறகு 10 வயது வித்தியாசம் கூட பெரிய வித்தியாசமாக தெரியாது.இப்போது சிறு வயதில் ஒரு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடையில் பெரிய வித்தியாசமாக தெரியும். அதே நபர்கள் 70ம் 80மாக இருக்கும் போது பெரிய வித்தியாசம் தெரியாது. நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பழையதுகளை வைச்சு கழுத்தறுப்பவர் போல் தெரிகின்றது. 😂

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
GMT நேரப்படி நாளை திங்கள் 21 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் செம்பாட்டான் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இது பம்பலுக்கு செய்திருக்கிறார். நண்பர்கள் குசும்பு. அடுத்த நொடி சிரேயாஸிற்ற நடந்து போய் சிரிச்சுக் கதைத்தார். நந்தனின் நர்த்தனம் தொடர்கிறது. இனி அவர் ஆட்சிதான். புலவரும், எங்கிருந்தோ வந்தான் எனக்காக யார் என்றான். இரண்டாம் இடத்தை நான் பெறவே என்ன தவம் செய்தனை. அவருக்கு இப்ப தலைகால் புரியாதே.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் எவரும் நிலைத்து ஆடாததாலும், பின்னைய ஓவர்களில் எதிரணியின் இறுக்கமான பந்து வீச்சாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான தேவ்தத் படிக்கலின் 61 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலியின் ஆட்டத்தாலும் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் விரைவில் பவிலியனுக்குத் திரும்ப 17 வயதில் முதலாவது ஐபிஎல் போட்டியில் நுழைந்த ஆயுஷ் மாத்ரே மின்னல் வேகத்தில் 32 ஓட்டங்களை எடுத்தார். வேகமாக அடித்தாடி அரைச் சதங்கள் பெற்ற ரவீந்திரா ஜடேஜாவினதும், ஷிவம் டுபேயின் ஆட்டங்களால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடன் 15.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களையே எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தக்கவைத்துள்ளார். இறுதி இடத்தில் இருந்த @goshan_che மூன்று பேரைக் கீழே தள்ளி முன்னுக்கு வந்துவிட்டார். கடைசிப் படியில் நிற்க பலர் முண்டியடிக்கின்றனர்!
Checked
Fri, 08/08/2025 - 09:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed