புதிய பதிவுகள்2

வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

3 months 2 weeks ago
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிப்புறங்களில் வேலையின்போது அதிகளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீதிகளை மறித்துபோராட்டதின் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க; அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு - எம்.ஏ.சுமந்திரன்

3 months 2 weeks ago
21 Apr, 2025 | 06:27 PM வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கௌ்ளப்பட்டது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது கட்டளைக்கு 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி வழக்காடியிருந்தார். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அவரது சமர்ப்பணத்தின்போது குறித்த வழக்கானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருகைதந்தபோது அதற்கு எதிராகப் போராட்டம் நடாத்தியதாக வழக்கு பொலிஸாரினால் ஏறாவூர் நீதிமன்றில் 36பேருக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் முறையான ஆதாரங்கள் வழங்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மீண்டும் அதே தகவலுடன் பொலிஸாரினால் புதிய வழக்கு 30பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள்,போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இணைக்கப்பட்டுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் நீதிபதி அவர்கள் இடமாற்றத்தினால் சென்ற நிலையில் அவரின் கட்டளையொன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் குற்றப்பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு நடாத்தப்படுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் மக்கள் போக்குவரத்தைத் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. முன்பின் முரணான இரண்டு நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இரண்டாவது கட்டளை முதலாவது கட்டளை இருப்பதை மறந்து சட்டத்தின் முதலாவது கட்டளை கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த இரண்டாவது கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இதேநீதிமன்றம் இதனை மாற்றமுடியும். வழக்கினை தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை போராட்டக்காரர்கள் மறித்தார்கள் என்பது ஒரு சிறுவிடயம் இந்த நாட்டில் நடக்கின்ற விடயம். சட்டம் சிறுசிறு விடயங்களை கவனத்தில்கொள்ளாது. சிறிய விடயத்திற்கு வழக்கினை தாக்கல் செய்து அனைவரது நேரத்தினையும் வீணடித்து எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் நேரத்தினையும் வீணடித்து இந்த வழக்கினை தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இந்த வழக்கு தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை மறித்து போராட்டம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு விநோதமான குற்றச்சாட்டு. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க இங்கு வரும்போதுதான் அப்படி செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தது தலைநகரில் பல இடங்களில் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியதானால்தான். எனவே புதிய புதிய சிந்தனையில் விநோதமான வழக்குகளை தாக்கல்செய்து நீதிமன்ற நேரத்தினை வீணாக்கக்கூடாது என்ற சமர்ப்பணத்தினை முன்வைத்தார். சமர்ப்பணங்களைச் செவிமடுத்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி கட்டளைக்காக வழக்கினை ஒத்திவைத்தார். வீதிகளை மறித்துபோராட்டதின் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க; அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk

சிறையில் இருக்கும் எனது தாயாரை விடுவியுங்கள்! - உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

3 months 2 weeks ago
21 Apr, 2025 | 05:00 PM அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும், அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தித் தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் தனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நான்கு சகோதரர்களான நாங்கள் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார், குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார். அதனால் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சிறையில் இருக்கும் எனது தாயாரை விடுவியுங்கள்! - உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk

சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்- மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

3 months 2 weeks ago
21 Apr, 2025 | 03:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், பொதுமக்களிற்கு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வழக்குகளை கண்காணிப்பதற்கு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளையும் அடையாளம் காண வேண்டும், உண்மையை மக்களிற்கு தெரிவிக்க வேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். 2019ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதியிடப்பட்ட விசாரணைகைள மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும், முக்கிய சாட்சியான ஆசாத் மௌலானா தெரிவித்த விடயங்கள் உட்பட சனல் 4 இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதித்திட்டத்திற்கு காரணமான துணை இராணுவ குழு கட்டமைப்புகளை செயல் இழக்கச்செய்வதற்காக புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை ஆள்வதை விட மக்களிற்கு சேவையாற்றுவதை உறுதி செய்யும் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்- மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் | Virakesari.lk

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

3 months 2 weeks ago
21 Apr, 2025 | 12:27 PM முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திங்கட்கிழமை (21) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ''அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளிலும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று அண்மையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் | Virakesari.lk

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
விரிவான கட்டுரைக்கு நன்றி ரஞ்சித். பிள்ளையான் மிக மோசமான மனிதகுல எதிரி என்பதுடன் இவன் போன்ற படுகொலையாளர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கே அழிவுகளை கொண்டு வரக்கூடிய சமூக துரோகிகள். இவ்வாறான பேர்வழிகளை ஜனநாயகத்தின் பேரால் தம் தலைவர்களாக தேர்ந்தெடுக்கும் அவலமான செயற்பாடுகளை செய்தவர்கள்/ செய்கின்றவர்கள் கிழக்கு வாழ் தமிழர்கள் மட்டுமல்ல. வடப்குதி தமிழர்களும் தான். இந்திய இராணுவத்துடன் தோளோடு தோள் நின்று, பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞ, இளைஞிகளை படுகொலை செய்தும், பல தமிழ் பெண்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றும், தமிழர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றும் அடாவடித்தனங்கள் புரிந்த அமைப்பின் தலைவர்களாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், 2009 வரைக்கும் துணை இராணுவக் குழுவாக இயங்கிய ஈபிடிபியின் தலைவர் டக்கிளஸையும் தேர்தல்களில் வெல்ல வைத்த / வைக்கின்றவர்களாக வட பகுதித் தமிழர்களும் உள்ளனர். ஒரு முறை சரிநிகர் பத்திரிகை சுரேஸ் பிரேமச்சந்திரனை செய்தி அல்லது பேட்டி ஒன்றுக்காக 90 களில் தொடர்பு கொள்ள, கொழும்பில் உள்ள காரியாலயத்துக்கு தொலைபேசியில் அழைக்கும் போது, அங்கிருந்தவர்கள் சுரேஸ் மட்டக்களப்புக்கு சென்று விட்டார் என்றும், அங்கு அவரை தொடர்பு கொள்ள ஒரு தொலைபே இலக்கத்தை தந்தனர். அந்த இலக்கம், ராசிக் குழுவின் முகாமினது தொலைபேசி இலக்கம். அதாவது சுரேஸ் மட்டக்களப்புக்கு செல்லும் போதெல்லாம், ராசிக் குழுவின் முகாமில் தான் தங்குகின்றவர். இப்படியானவர்களைத் தான் வடக்கு கிழக்கு தமிழர்கள் தேர்தல்களில் வெல்லவைக்க முயல்கின்றனர்.

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 2 weeks ago
பூமியில் பிரான்சிஸ் கடைசியாக சந்தித்த பிரபலம் "சாத்தானின் தூதுவர்" ! இந்த நல்ல ஆன்மாவுக்கு இப்படியொரு பிரியாவிடை! AP NewsVance meets Pope Francis on Easter Sunday after tangle ov...U.S. Vice President JD Vance has met briefly with Pope Francis on Easter Sunday as the pontiff recovers from pneumonia.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
உண்மைதான். Cricinfo தளத்தில, போட்டிகள் நடக்கும் போது, வெற்றி சதவிகிதம் போடுவினம். நான் ஒருநாளும் 100% என்று ஒரு அணிக்கும் பாரத்ததில்லை. கணித ரீதியாகவோ புள்ளி விபர ரீதியாகவோ 100% என்று ஒன்றையும் சொல்ல முடியாது. முடிந்த முடிவு என்ற ஒன்று இல்லவே இல்லை. அதுக்காக, சென்னைக்கு ..... 😉 ஓ அப்பிடி வேற நடக்கிறதா. உதைபந்து கழகங்களுக்கிடையே வீரர்களை மாற்றுவார்கள். அப்படி ஏதேன் செயல்பாடு இங்கே இல்லையா. ஜபில் championleagueஅ தழுவித்தானே வடிவமைக்கப் பட்டது. சென்னைக்கு அப்படி நடந்திருக்கலாம். நடக்கலாம். எனக்கென்றால், தங்கக்குடம் இருக்கும் வரையும், பெரிய மாற்றம் வரும் என்று தெரியவில்லை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அடுத்த இரண்டு ஏலமும்( 2026,2027 )மினி ஏலம்தான், முற்று முழுதாக அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தீபக் கோடா உட்பட சில இந்திய வீரர்களும், 2,3 வெளிநாடு வீரர்களும் நீக்கப்படுவார்கள். 2022 இல் நடைபெற்ற மெகா ஏலத்தில் பிறகு நடைபெற்ற போட்டியில் சென்னை விளையாடிய 14 போட்டியில் 4 மட்டும் வென்று 9 ம் இடம் பிடித்தது. அடுத்து வந்த மினி ஏலத்தில் ஒரு சில மாற்றங்களுடன் சென்னை அணி 2023 இல் முதலிடத்தை பிடித்தது

அரசியல் கட்சிகள் இரண்டு வகை. அவை...

3 months 2 weeks ago
Saravanan Selvaraj 2B)1 - கூட்டணி கட்சியிடம் நிதியை பெற்று கொண்டு கட்சியை நடத்துவது, கூட்டணி கட்சி கொடுக்கும் இடத்தை மறுக்காமல் ஏற்பது - அதைவிட கொடுமை கூட்டணி தலைமை செல்லும் இடத்தில் எல்லாம் சகட்டுமேனிக்கு பாய்வது, ஏன், எதற்க்கு, என்ற கேள்வியே கேட்க தெரியாத கட்சிகள். என்னை பொறுத்தவரை அவர்கள் அந்த கூட்டணி தலைமையின் தொழிற்சங்க அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது பெரும்பான்மை அல்லது சிறுபான்மை பிரிவாக இருந்து விட்டு போகலாம். எந்த மக்கள் பிரச்சனைக்கும் கூட்டணி தலைமை கோவித்து கொள்ளும் என்று குரல் கொடுக்காமல் இருக்கும் அந்த அடிமை தனத்திற்கு எதற்க்கு மக்களை ஏமாற்றி ஒரு கட்சி நடத்த வேண்டும். கட்சி தலைவன் என்ற முறையில் தனக்கான அதிகார போதை ஒன்றை தவிர வேறெதுவும் எனக்கு தெரியவில்லை. Pushpabarathy Srinivasan இதுல 2Cம் உண்டு. அதாவது தேர்தல் நேரத்துல ரெண்டு பக்கமும் துண்டு போட்டு வைக்கும். பெட்டி எந்தப் பக்கம் பலமோ, அந்த பக்கம் ஜம்ப்🤣🤣 Gokul Kannamani தேர்தல் நேரத்தில் திமுக அதிமுக இரு கட்சிகளில் இருந்தும் நேருக்கு நேர் வாடா ஒத்தைக்கு ஒத்த வாடா ஆம்பளையா இருந்தா வாடா மோதிப் பார்க்கலாம் நாங்கள் யார் தெரியுமா? எங்கள் கட்சி எப்படிப்பட்ட கட்சி தெரியுமா என்று வீர வசனம் பேசி மக்களை ஏமாற்றுவது தான் நடக்கின்றது. ஆனால் கோடி கோடியாய் கொள்ளை அடித்த ஊழல் வழக்குகள் எதுவும் இல்லாமல் இரு கட்சிகளிலும் சமரசம் செய்து கொள்கின்றனர். மு.அருள்செல்வன் ஆனால் பத்திரிக்கையாளர்களில் ஒரே வகைதான்... ஆண்ட, ஆளும் கட்சிகளை விட்டுவிட்டு மற்ற கட்சிகளையே எப்போதும் நொட்டம் சொல்லும் வகை. Elumalai Krishnan அப்படியே இந்த பிரஸ் மீட் முடிந்தவுடன் கவர் கொடுப்பாங்களாமே , அதையும் A, B என்று தரவரிசை பிரிக்கலாமே? Gokul Kannamani திமுகவும் அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு பிற கட்சிகளை ஆட்சிக்கு வராமல் பல ஆயிரம் கோடி பணத்தை ஒவ்வொரு இந்நாள் முன்னாள் அமைச்சர்களும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளனர் குறைந்தபட்சம் கூட்டணி ஆட்சி என்பதற்குக் கூட இவர்களுக்கு கசக்கின்றது காலகாலத்திற்கும் இவர்களே மாறி மாறி கொள்ளை அடிக்க வேண்டும். ஆனால் இருவரும் எதிர்ப்பது போல் நடிப்பார்கள். Kalaiselvan Siddharth Abimanyu ஆட்சியை பிடித்த கட்சி எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமே அடித்துக்கொண்டு அடுத்த தேர்தலில் நிறை பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆசை காட்டி ஓட்டு போட பணமும் கொடுத்து தங்கள் இருப்பை தக்க வைக்கும்.அதே நேரத்தில் தமிழக அரசின் கடன் சுமையை மள மளவென அதிகரித்து வைக்கும். இதையே தான் அந்த போட்டியில் முண்ணனி வகிக்கும் இரண்டு கட்சியின் நிலைப்பாடும் . Gokul Kannamani அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவின் மீது ஊழல் சம்பந்தமாக எந்த அமைச்சரும் சிறை செல்லவில்லை அதேபோல் திமுக ஆட்சியிலும் அதிமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குக்காக யாரும் சிறை செல்லவில்லை. Saravanan Selvaraj இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய திருத்தம் உடனடி தேவை... எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடவே அனுமதிக்க கூடாது. கட்சி என்று ஒன்றை பதிவு செய்துவிட்டால், அவர்கள் தனித்தே நிற்க வேண்டும் --- வாக்கு வங்கியை நிருபிக்க தவறினால் கட்சி என்ற அங்கீகாரம் ரத்து, மாறாக அவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்பட முடியும். இது போன்ற மாற்றங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயம்!!! Mohan Ramachandran கட்சி ஆதரவாளர்கள் நிலைதான் பரிதாபத்திற்குறியது ! தேவையில்லாமல் கம்பு சுத்துவது. வாங்கி கட்டிக் கொள்வது. அதுவும் தூய சென்னைத் தமிழில்.

அரசியல் கட்சிகள் இரண்டு வகை. அவை...

3 months 2 weeks ago
அரசியல் கட்சிகள் இரண்டு வகை. ஒன்று ஆட்சியை பிடிப்பது மட்டுமே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு எப்போதுமே அசுரத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை. இரண்டாவது வகை, கொஞ்சம் செல்வாக்கோடு செயல்பட்டுக் கொண்டு கூட்டணி மூலம் ஏதாவது கிடைத்தாலே போதும் என்று காலம் தள்ளுபவை. இந்த இரண்டாவது வகை கட்சிகளிலேயே (A), (B) என உட்பிரிவு கொண்டவையும் உண்டு.. (2A) எப்படியாவது,ஏதாவது சில வகைகளில் சொந்தமாக நிதியைத் திரட்டி அதில் செயல்படும் கட்சி (2B) பெரிய கட்சிகளால் முதலீடு செய்யப்பட்டு நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஸ்லீப்பர் கட்சி. சொந்தமாக நிதி திரட்டி செயல்படும் 2A கட்சிகளில் 2A(1) என ஒன்று உண்டு. 2A(1 "கூட்டணியில் கடைசி வரை உங்களோடு இருப்போம். நீங்களாக பார்த்து ஏதாவது செய்யுங்கள்" என்று சாசனமே எழுதி கொடுத்துவிட்டு எப்போதுமே சரண்டர் மோடில் இருப்பவை. 2A(2) தேர்தலில் மட்டும் கூட்டணியில் இருந்து விட்டு முடிந்ததும் வெளியே வந்து கம்பு சுற்றி விட்டு மீண்டும் தேர்தல் நேரத்தில் அதிக இடங்களை கேட்டு பேரம் பேசும் சாமர்த்திய கட்சி. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இது போன்ற கட்சிகளைத் தாண்டி லெட்டர்பேடு கட்சி என்பது தனி வகை. நமக்கு தெரிஞ்சி இவ்ளோதான்.. அசெம்ப்ளி எலக்சன் வரைக்கும் இவங்க கிட்ட தான் மாட்டிக்கிட்டு பலரும் படாதபாடு படப் போறீங்க. Ezhumalai Venkatesan

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
கந்தப்பு இன்னுமா சென்னையை நம்புறீங்க? அடக்கிற அலுவலை கதையுங்கப்பு. கோசான் மேலவரத் தொடங்கி விட்டார். ஒரேயடியா மேல வாறாரோ தெரியாது. ஜ மீன் முதல்வர்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
பிரித்தி ஜிந்தாவுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் சுவியாரே, வணக்கம். உங்கள் படங்கள் சொல்லும் கதை. ஓ..... 😁 நீங்கள் எப்பிடித்தான் கணக்குப் போட்டாலும்.... வாய்ப்பில்லை இம்முறை. அடுத்த ஏலம் எப்போ.

உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா

3 months 2 weeks ago
உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா. உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் ஹுபே மாகாணம், சுனான் கவுண்டியில் கொண்டுவரப்பட்டுள்ள 10G இணைய சேவை மூலம் 2 மணிநேரப் படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், 9,834 எம்பிபிஎஸ் File ஐ 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10G இணைய சேவையானது அதிநவீன 50G பேசிவ் ஆப்டிகல் நெட்வொர்க் (Passive Optical Network) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, கட்டாரின் அர்-ரயான் மீடியன் நகரத்தில் 618.53 எம்பிபிஎஸ் (6.8ஜி) வேகத்தில் பதிவிறக்கம் செய்வதே அதிகபட்ச வேகமாக இருந்தது. மேலும், அபிதாபில் கடந்த மாதம் 355 எம்பிபிஎஸ் வேக Broadband ஐ அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில், சீனாவில் மற்ற மாகாணங்களிலும் விரைவில் 10G இணைய சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429035
Checked
Fri, 08/08/2025 - 12:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed