புதிய பதிவுகள்2

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

3 weeks 5 days ago
ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது! கடந்த ஜனவரி 16 அன்று கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்தனர். நேற்று (19) மற்றும் அதற்கு முந்தைய நாள் (18) ஆகிய இரு தினங்களிலும், ஜிந்துபிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் கடலோர பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதற்காக 04 கிராம் 800 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் மேலும் மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என்பதுடன் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது ஒரு சந்தேக நபரை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் மீதமுள்ளவர்களை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்துறையினரும், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460655

நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்!

3 weeks 5 days ago
நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! 20 January 2026 கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில், "எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது அமெரிக்காவின் நலனுக்கு எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் சுயாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்,கிரீன்லாந்தின் நுக் (Nuuk) நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிரீன்லாந்தை விற்க சம்மதிக்காவிட்டால், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது ஜூன் மாதம் முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "2026-இல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பொருட்களையும் வணிகத்தையும் பரிமாறிக்கொள்ளலாமே தவிர, மக்களை வியாபாரம் செய்ய முடியாது" என்று டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள வியாழக்கிழமை அன்று அவசர உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போருக்குப் பதிலடியாக 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, யுக்ரைன் போர் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக ஏற்கனவே நேட்டோ (NATO) அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் நிலப்பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா பலவந்தமாக உரிமை கோருவது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/441611/denmark-not-awarding-nobel-prize-trump-is-eager-to-take-over-greenland-as-revenge

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

3 weeks 5 days ago
நீங்களும், சுத்துமாத்து சுமந்திரனும் காட்டுற "சோ" வை விட, இது பரவாயில்லை. போய்... நித்திரை குளிசையை போட்டுட்டு, குப்புற படுங்கோ.

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

3 weeks 5 days ago
ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்! செய்திகள் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது ஆளும் கட்சி அல்ல எனவும் அது எதிர்க்கட்சியே எனவும் கூறியதுடன், அரசாங்கம் கூறுவதற்கமைய அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkm7z2jt0464o29ny1pimdpv

அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!

3 weeks 5 days ago
அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்! தனது அலுவலகத்தில் பெண்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து காவல் துறை தலைமை பணிப்பாளர் (DGP) அந்தஸ்துள்ள மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கர்நாடக அரசு இன்று (20) பதவி நீக்கம் செய்தது. இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் டிஜிபி ராமச்சந்திர ராவ் ஆவார். பொது அலுவலகத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் நடத்தை குறித்து அதிகரித்து வரும் சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகத்தை எட்டியதும், அவர் திங்களன்று சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற்றார். ஒரு நாள் கழித்து, அதாவது இன்று மாநில நிர்வாகம் மூத்த காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. சர்ச்சைக்கு மத்தியில், இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க ராமச்சந்திர ராவ் இந்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தார். எனினும், அந்த சந்திப்பு அவரது இடைநீக்கத்தைத் தடுக்க முடியவில்லை. https://athavannews.com/2026/1460632

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

3 weeks 5 days ago
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – adminJanuary 20, 2026 தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர். “எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது, அந்த நிகழ்வுகள் JVP மற்றும் NPP யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாகப் பார்க்க முடியாது,” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தன்னை ஒரு மாகாண சபை அவைத்தலைவராக அழைப்பதுமில்லை, அறிவிப்பதுமில்லை எனவும், மக்கள் வாக்குப் பெற்று வந்த பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்கைகளை வழங்கிய போதிலும், வடக்கில் ஒருமித்த பயணம் சாத்தியமில்லை எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார். மேலும் “வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்,” என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார். தமது பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திலும், சர்வதேச ரீதியாகவும், ஊடகங்களுக்கும் செல்வோம் எனவும் அவா் எச்சரித்தார். https://globaltamilnews.net/2026/226891/

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

3 weeks 5 days ago
⚖️ செம்மணி புதைகுழியின் நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு adminJanuary 20, 2026 யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, அந்த இடத்தின் தற்போதைய நில அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதைகுழி அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே இருந்த வீதியை, நல்லூர் பிரதேச சபையினர் அண்மையில் செப்பனிட்டுள்ளனர். இது அகழ்வுப் பணிகளுக்கும் சாட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவடையும் வரை இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளோ அல்லது கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் சட்டத்தரணிகள் கடுமையாக வலியுறுத்தினர். சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நீதிமன்ற அனுமதியின்றி நிலத்தோற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம், புதைகுழியில் மறைந்துள்ள உண்மைகளும் சாட்சியங்களும் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/226891/

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர

3 weeks 5 days ago
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது. திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/236460

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

3 weeks 5 days ago
அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது Published By: Vishnu 19 Jan, 2026 | 11:35 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும். இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.) எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார். விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார். 102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/236471

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks 5 days ago
ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது 19 Jan, 2026 | 06:00 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது. ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும். இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது. பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது. அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது. https://www.virakesari.lk/article/236459

ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு; 02 பேர் உயிரிழப்பு

3 weeks 5 days ago
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ; 02 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Jan, 2026 | 11:44 AM ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைகளில் இருந்து திடீரென சரிந்த பனிக் கட்டிகளில் சிக்கி இரண்டு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனி வீடுகளின் வாசல்களை மறைத்ததால், மக்கள் சுரங்கங்கள் தோண்டி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் இரண்டாவது மாடி வரை பனி மூடியுள்ளது. பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வீதிகளைச் சீரமைக்க மேலதிக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். போக்குவரத்து முடங்கியதால் கடைகளில் பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது வீதிகள் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 21 ஆம் திகதிக்குள் முக்கிய வீதிகளை முழுமையாகச் சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர் காற்று வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236502

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

3 weeks 5 days ago
இது வெஸ்ட்பாங்க் இஸ்ரேல் பகுதி உடன்பாடு போன்ற ஒன்றிற்கு வரலாம் (வெஸ்ர்பாங்க் பலஸ்தீனம் ஆனாலும் நிர்வாக அலகால் இணைக்கப்பட்ட).

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

3 weeks 5 days ago
கிறீன்லாந்தினை சில நிபந்தனைகளுடன் ஐரோப்பா விட்டுக்கொடுக்கும் என நம்புகிறேன்.

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

3 weeks 5 days ago
நேட்டோ நிச்சயமாக உடையாது என நம்புகிறேன். 2025 வெளியான அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கை மூலம் தன்னிச்சையான ஐரோப்பாவினை விரும்புவதனை அமெரிக்கா தெளிவான கொள்கையாக கொண்டுள்ளது, அதற்கு காரணம், அமெரிக்காவினால் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு இனிமேலும் பணம் செலவழிக்க முடியாத நிலை, அத்துடன் ஐரோப்பா அமெரிக்க எதிரி எனும் வாதத்திலும் எனக்கு உடன்பாடில்லை, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா தவிர்க்க முடியாத தெரிவு. இருதரப்பும் இராணுவ ரீதியான ஒத்துழைப்பு தொடரும் நிலையே காணப்படுகிறது. இரஸ்சியாவும் சீனாவும் அமெரிக்க தரப்பு எதிர்த்தரப்பிலேயே பேணவிரும்புகிறது, சீனாவினை தனது போட்டியாளர் நிலையில் அமெரிக்கா பார்க்கிறது, இரஸ்சியாவினை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இரையாக பாவிக்கின்றது ஆனாலும் தனது எரிசக்திக்கு போட்டியாக இரஸ்சியாவை தொடர்ந்தும் பார்க்கின்றது. இந்த கிறீன்ட்லான்ட் விவகாரத்தில் இருதரப்பும் நிகழ்வுகளும் ஒரு நாடகமாகவே கருதுகிறேன். இரஸ்சியா மிகப்பெரிய இராணுவ சக்தியில்லை என்ற புரிதல் இரஸ்சியாவிற்கும் இருக்கும் என கருதுகிறேன், ஆனால் ஐரோப்பாவிற்கு ஆபத்து எனும் கதை பேணப்படுவதன் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பு. அண்மையில் பிரான்ஸ் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தது 2/3 பங்கு உளவுத்தகவல்களை தற்போது உக்கிரேனுக்கு தாமே வழங்குவதாக என்பது ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றினது ஆற்றல் பற்றிய புரிதலுக்கு இலகுவாக இருக்கும். https://www.facebook.com/DefenseChannel/videos/macron-says-france-now-provides-majority-of-intelligence-support-to-ukraine/1872783746685712/ https://kyivindependent.com/france-replaces-us-as-main-intelligence-provider-to-kyiv-macron-says/

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

3 weeks 5 days ago
இது பல நெடுங்காலமாக நடக்கும் ஐரோப்பிய மேலாண்மைக்கான போட்டிதான். The Great Game என ஒரு காலத்தில் ரஸ்யாவும், பிரிட்டனும் இதை மத்திய ஆசியா வரை விரித்தன. ஆனால் ஐரோப்பாவை பொறுத்தவரை எப்போதும் ரஸ்யா, பிரிட்டன், பிரான்ஸ். ஜேர்மனி என்பன சமவலு நாடுகளே. இப்போதும் இதில் மாற்றமில்லை. சோவியத் காலத்தில் கூட வோர்சோ கூட்டு, நேட்டோவுக்கு இணையாகவே இருந்தது. நேட்டோவில் அமெரிக்கா இருப்பதால், சோவியத் உடைந்ததால் இந்த சமநிலை 1991 இன் பின் குழம்பி இருந்தது. அதை மீள பெறுவதே புட்டினின் வாழ்நாள் இலட்சியம். இதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக பயம் இல்லை. பிரிட்டனும், பிரான்சும் அணு ஆயுத நாடுகள். ஜேர்மனி அதே நிலைக்கு வர ஐந்து வருடம் போதும். இத்தாலி கூட மோசமில்லை. இவர்களோடு ஏலவே ரஸ்யாவுக்கு மரண பயத்தை காட்டிய பின்லாந்து, உக்ரேன் போன்ற நாடுகளும் சேர்ந்தால். ரஸ்யா வாலாட்ட முடியாது. ஆனால் - ரஸ்யா அருகே இருக்கும், போலந்து, பால்டிக் நாடுகள் பாடு சிக்கல்தான். இதனால்தான் இவை கிரீன்லாந்து விடயத்தில் அடக்கி வாசிக்கிறன. நேட்டோ உடைந்தால், இந்த நாடுகள் மீளவும் ரஸ்யா வட்டத்துள் வலுக்கட்டாயமாக இழுக்கப்படும். ஐரோப்பா மீள மேற்கு, கிழக்கு என பிரியும். 35+ வருடம் அதன் கிழக்கு எல்லை நாடுகளை தவிர வேறு எங்கும், யுத்தத்தை காணாத, பல சிறிய இனவழி தேசிய நாடுகளில் ஜனநாயகம் துளிர்விட்ட காலம் முடிவுக்கு வரும். இதைத்தான் ரஸ்யா விரும்புகிறது. காரணம்? முன்பு ஷார் மன்னரின், பின் கம்யூனிஸ்டுகளின், இப்போ புட்டின் மாபியாவின் ரஸ்யாவுக்குள்ளான அதிகாரத்தை தக்க வைக்க, ரஸ்யாவுக்கு வெளியே ஆக்கிரமிப்பை செய்வது அவசியமாகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.

3 weeks 5 days ago
இலங்கை நிலவரம் பற்றியதுதான் செய்தி, இலங்கையில் மருத்துவராக வருவதற்கு சாதாரண சித்தி போதுமா? இது தெரிஞ்சிருந்தா நானும் எப்பவோ டாக்டர் சுங்கப்பா ஆகியிருக்கலாம்.

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

3 weeks 5 days ago
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் முறுகல் போக்கைத் தொடர்ந்தால் நிலமை மிகவும் மோசமாகும்.ஐரோப்பியநாடுகள் பொருளாதார வலிமை மிக்க நாடுகள்.அமெரிக்ககண்டத்தில் அமெரிக்க கனடா தவிர பெரிய பொருளாதாரம் மிக்க நாடுகள் இல்லை. ஐரோப்பிய நாடுகள் உக்கிரைன் விடயத்தில் ரஸ்யாவை எதிர்த்தாலும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.இந்தியா சீனா போன்ற நாடுகளும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.அமெரிக்கா வரிகளை விதித்தால் இந்த வரத்தகம் மேலும் கூடும்.அனைத்து நாடுகளுக்கும் சகட்டுமேனிக்கு வரிவிதித்தால் அமெரிக்க வர்த்தகத்தைப்புறக்கணித்து நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு வழிகளில் அதனை அடைய முயற்சிக்கும்.அமெரிக்கா தனித்து விடப்படும். இந்த நிலமை தொடர்ந்தால்என்னதான்அமெரிக்கா வலிமையான நாடாக இருந்தாலும் தனித்து விடப்படும்.அப்போது அதன்நிலை மோசமாகும். அனால் அப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு உடன்பாட்டு வந்து விடுவார்கள். ட்ரம்புக்கு இன்னும் 3 ஆண்டுகள்தான் இருக்கின்றன.

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

3 weeks 5 days ago
அமெரிக்க பாதுகாப்பு செலவீடு நேட்டோவிற்கான செலவு 65% மொத்த அமெரிக்க பாதுகாப்பு செலவினை 1 ரில்லியன் என எடுத்துக்கொண்டால் 650 பில்லியன். 2024 இல் அமெரிக்க ஆயுத ஏற்றுமதி பெறுமதி வெறும் 318.7 பில்லியன் அதில் வரும் தேறிய இலாபம் மிக சொற்பமானது, அமெரிக்க ஆயுத இறக்குமதியில் பெரும்பான்மை ஐரோப்பா என கூறப்படுகிறது. கிழே உள்ள இணைப்பில் அதன் விபரம் உள்ளது. Ed Nash's Military MattersEurope Without America? What’s the Costs? - Defense News...Recent issues have raised the possibility of the United States pulling out of Europe. If that happens, what's at stake and what's the costs?அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளது, அது தன்னை தக்க வைக்க எடுக்கும் முயற்சிகளின் சிதறும் விளைவுகள் தற்போதய நிகழ்வுகள் என கருதுகிறேன்.
Checked
Sun, 02/15/2026 - 18:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed