புதிய பதிவுகள்2

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்

4 weeks ago
நண்பருடன்(இலங்கை) தொலைபேசியில் உரையாடினேன். நான்:- என்னப்பா அனுராவுடன் செல்பி எடுக்க போட்டியாமே? நண்பர்:-ஒம் ஓம் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அடிபட்டு செல்பி எடுக்கினம். நான்:-சனம் செல்பி எடுக்க அனுரா காணிகளை எடுக்க போகிறாரே நண்பர்:- இப்ப சனம் அனரா வந்து தோளில் கையைப் போட்டவுடன் காணி போனாலும் பரவாயில்லை எப்படியும் செல்பி எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு

4 weeks ago
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட்’ (Liberty Bar and Restaurant) குழுமம் நிதி நெருக்கடியால் நிர்வாகிகளிடம் (Administrators) ஒப்படைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வருகை குறைவு, அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இம்முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மூடப்பட்டவற்றில் மின்னார், எடின்பர்க், ரீடிங், ஸ்டீவனேஜ் மற்றும் காவென்ட்ரி உள்ளிட்ட 16 நகரங்களில் உள்ள கிளைகள் இதில் அடங்கும். Tag Words: #TGIFridaysUK #RestaurantClosures #UKHighStreet #HospitalityNews #JobLosses #Administration #RetailCrisis #UKNews2026 https://globaltamilnews.net/2026/226780/

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்

4 weeks ago
யாழ்பாண தமிழ் வெகுசனங்களிடம் எங்கள் தெய்வம் அநுரகுமார திசாநாயக்க சாதரணமாக வீதியில் நடந்து போகின்றதே என்று வாக்கிங் போவதை சொல்லி பெருமைபடுகின்ற மாற்றம் தான் வந்திருக்கின்றது அய்யா

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

4 weeks ago
என்ன வாத்தியார் திருப்பதிக்கே லட்டா? போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம். ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

4 weeks ago
சரி பிழைக்கு அப்பால்…. புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்…. தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை. கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள். சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள். பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும். இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂. ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

4 weeks ago
எந்த ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாத கூற்று. தம்பரின் கருத்து அப்படியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து நேட்டோவின் அங்கம். அதை சீனா தொட்டால் அமேரிக்கா உட்பட முழு நேட்டோவையும் தொட்டதுக்கு சமன். அப்படியும் சீனா கிரீன்லாந்த்தை தொடுமாயின் - அது அமெரிக்காவிடம் இருந்தாலும் தொடும். தம்பர் முதல் டேர்மில் நேட்டோவை உடைக்க பார்த்தார். நேட்டோ தலைவர்கள் சரி நாமும் 3% ஜிடிபியை பாதுகாப்புக்கு செலவழிக்கிறோம் என்றதும் - அவரால் அதை சாட்டி நேட்டோவை உடைக்க முடியவில்லை. இப்போ கிரீன்லாந்தை ஆக்கிரமித்து அதன் மூலம் நேட்டோவை உடைக்க முயல்கிறார். பாதுகாப்பு கனிம வளம் டிரம்பின் குடும்பத்துக்கு பணம் இவை எவையும் அல்ல கிரீன்லாந்தை கேட்க காரணம். ஒரே காரணம் நேட்டோவில் இருந்தும் பயனில்லை எனும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி, அதன் மூலம் நேட்டோவை உடைப்பது மட்டுமே. கனடாவை மாநிலம் ஆக்குவோம் என்ற கதையும் இந்த நோக்கிலேயே. இதன் பின்னால் இருப்பது முழுக்க, முழுக்க புட்டின் தம்பருக்கு கொடுத்துள்ள ஏவல். இதுவரை ரஸ்யா எதிர்ப்பு, உக்ரேன் பாதுகாப்பு என இருந்த நேட்டோ, ஈயூ நாடுகளை - கிரீன்லாந்தின் பாதுகாப்பு, நேட்டோவின் எதிர்காலம் என யோசிக்க வைத்துள்ளார் புட்டின், தம்பர் வாயிலாக. கார்னி ஒரு படி மேலே போய் சீனாவை கட்டியணைத்தே விட்டார்.

கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்

4 weeks ago
அடிடா புடிடா எண்டு போன ஜேர்மன் வீரர்கள்.....போன அதே வேகத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கினமாம்... அமெரிக்கா இல்லை என்றால் ஜேர்மனிக்கு முதுகெலும்பு இல்லாத பீலிங் எப்பவும் இருக்கும்.

“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

4 weeks ago
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வெனிசுலாவின் ஆட்சி முறையை எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்தவர்களில் ஐரோப்பியர்களும் அடங்குவர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தல டொனால்ட் ரம்ப் அவர்கள்.

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

4 weeks ago
அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்..... இன்று. அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம். https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

4 weeks ago
அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா? நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

4 weeks ago
கோஷன் அராலியிலும் பொன்னாலையிலும் நடக்கும் வேலைகளின் அடுத்த கட்டம் என்பதைக் கூறினேன் அராலியில் குழி வெட்டப்பட்டுள்ளது அதைக் கட்டி முடிக்க வேண்டும் பொன்னாலையில் பிளாற் மட்டுமே போட்டப்பட்டுள்ளது . கொமட் பொருத்த வேண்டும் ......அவர்கள் பிடித்துச் செல்வதற்காக வெள்ளிரும்பு குழாய்கள் இணைக்க வேண்டும்...... இதைத்தான் அடுத்த கட்டம் என்று நான் கூறியது

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

4 weeks ago
அமெரிக்க இராஜாங்கத்தின் உள் மனதிற்குள் இருந்த திட்டங்களை டொனால்ட் ரம்ப் அவர்கள் வெளியே கொண்டு வருகின்றார் என நான் நினைகின்றேன். பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சி என்பது அமெரிக்காவின் சர்வதேச அதிகாரத்திற்கு பெரிய இடையூறாக இருக்கின்றது. உதாரணத்திற்கு எண்ணை உற்பத்தி நாடுகளின் ஈரோ நாணய நாட்டங்கள். பிரச்சனைகள் எங்கேயோ இருக்க..... தேவையில்லாத இடங்களில் நின்று சண்டை பிடிக்கும் நிகழ்வுகள் இன்று நேற்றல்ல. அன்று தொடக்கம் நடக்கும் நிகழ்வுதான்.... இதை எம்மவர்களின் குடும்ப சண்டைகளிலும் நன்கு அவதானிக்கலாம். நிற்க.... அமெரிக்க ஆதிக்கத்தையும் ரஷ்ய ஆதிக்கத்தையும் மாறி மாறி கடிந்து கொள்பவர்கள்.....கறையான் போல் உலகையே அரித்துக்கொண்டுவரும் சீன ஆதிக்கத்தை கண்டு கொள்வதில்லை. சொல்ல வருவது சீனாவின் பட்டுச்சாலை திட்டம். இன்றைய காலத்தில் சீனாவின் பொருளாதார ஆதிக்க விளைவுகளை உலகின் சகல நாடுகளும் அனுபவிக்கின்றன.சீனாவின் ஒரு சில மூலப்பொருட்கள் இல்லையெனின் ஐரோப்பாவின் பல தொழிற்சாலைகள் முடங்கு நிலைக்கு வருவது நல்ல உதாரணம். கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதை எதிர்த்தால் நாளை சீனா வந்து கையகப்படுத்தும். அதை யாரிடமும் எங்கேயும் எதிர்ப்புகளை காட்ட முடியாது.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

4 weeks ago
இன்னும் ஒரு மலசல கூடத்தை கட்டும் காசு இருப்பில் உள்ளதா? குறைந்த பட்சம் ஒவ்வொரு கூடத்துக்கான காசை சேர்த்த பின் ஆரம்பிப்போமா? இல்லாட்டில் வேலை அரைகுறையில் நிற்க வேண்டி வரலாம் - அல்லது ஏலவே பங்களித்தோர் மீள அளிக்க வேண்டி வரும், ஏராளன், ஏனையோரும் கருத்தை பகிரவும்.

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

4 weeks ago
அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, ஜோசவ் பரராஜசிங்கத்தின் நினைவு கூரல் கூட்டத்திற்கு அரியநேந்திரனை அழைத்தமைக்காக நீங்களும் சுமந்திரனால் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக கூறுகிறார்களே, அதெப்படி? முதலில் உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது, பின்தான் காரணம் தேடிக் கண்டுபிடிப்பதா? அரசியல் அறிவு, ஒழுக்கம் இல்லாதவர்களின் செயற்பாடு இப்படித்தான் இருக்கும். கட்சிக்காகவே மக்கள் என்பது இவர்களின் முட்டாள்த்தனமான வாதம். கட்சி உறுப்பினர் யாவரும் சேர்ந்து, சுமந்திரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சி கூடுவோமென போராடுங்கள், இல்லையேல் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறுங்கள். எப்படியிருந்தாலும் சுமந்திரன் உங்கள் எல்லோரையும் வெளியேற்றி வீட்டைப்பூட்டி திறப்பை எடுப்பார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பதே கேள்வி. அவருக்கு இந்தப்பணியை பூர்த்தி செய்யச்சொல்லி அமர்த்தியவர்கள் இப்போ அரசியலில் கேள்விக்குறியாக உள்ளார்கள். இப்போ அறிவற்ற சுமந்திரனின் நிலைதான் தொங்குபொறி!

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

4 weeks ago
அது மட்டும் அல்ல. நேட்டோவுக்கு சமாந்தரமாக அமரிக்கா-டென்மார்க் பாதுகாப்பு உடன்படிக்கை இப்பவே அமெரிக்கா கிரீன்லாந்தில் என்ன வேணும் எண்டாலும் செய்யும் உரிமையை கொடுக்கிறது. பனிப்போர் காலத்தில் 17 தளங்களை அமெரிக்கா கிரீன்லாந்தில் வைத்திருத்து பின்னர் தேவை இல்லை என மூடியது. எனவே இராணுவ நலனுக்கு கிரீன்லாந்தை எடுக்க எந்த அவசியமும் இல்லை. இது தனியொருவரினால் மடைமாற்ற கூடிய விடயம் என நான் நினைக்க இல்லை. தம்பரை போல அல்லாமல், சிறுவயது முதல் வலதுசாரியாக இருக்கும் மலோனி, அமெரிக்காவின் சின்னதம்பி பிரிட்டன் என அனைவரும் ஒன்றாக எதிர்க்கும் அளவுக்கு ஐரோப்பாவிக்கு இது பாரிய விடயம்.

கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.

4 weeks ago
ரஸ்யாவினால் அமெரிக்காவிற்கு கிறீன்லாந்து ஊடாக இத்தனை வருடங்கள் வரை எந்த ஆபத்தும் இருக்கவில்லை அல்லது இருப்பதாக எந்த அறிக்கையை ஒன்று கூட வரவில்லை ட்ரம்பின் வியாபாரத்திற்காக அந்த இடம் இன்று தேவைப்படுகின்றது

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

4 weeks ago
அடுத்த கட்டத்திற்கான செயற்பாடுகளை தொடர்வது நல்லது என நினைக்கின்றேன் தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை அடுத்த கட்ட வேலைகளுக்குப் பாவிக்கலாம் தானே

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

4 weeks ago
எனக்கொரு சந்தேகம். ஒரு அமைப்பிலோ அல்லது கட்சியிலோ பதில் பொறுப்பில் இருக்கும் ஒருவரோ அல்லது பதில் பொறுப்பில் உள்ளவரின் கீழ் உள்ள பிரதிநிதிகளின் ஆதரவுடனோ அந்த அமைப்பின் அல்லது கட்சியின் அதி முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? இது பொதுவானதொரு கேள்வி . தமிழரசுக் கட்சி யாப்பு என்ன சொல்கின்றது என்பது தெரியவில்லை . அந்த யாப்பின் பிரகாரம் கட்சி இப்போது செயற்பட்டாலும் நாட்டு சட்டங்களுக்கு அந்த யாப்பு அமைவானதாக இருக்கின்றதா? இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை அரியநேந்திரன் கட்சியில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பை வழக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் அளிக்குமா ?
Checked
Mon, 02/16/2026 - 06:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed