புதிய பதிவுகள்2

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

1 month ago
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! 16 Jan, 2026 | 03:30 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட பலர் இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை தந்து கஸ்ஸப தேரரை சந்தித்து சுகம் விசாரித்து சென்றனர். இன்று காலை 10.00 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 1 மணி நேரத்திற்கு மேலாக கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! | Virakesari.lk

முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது

1 month ago
உரிமையாளரின் அனுமதி இன்றி பொருட்களுக்கு இலவச விளம்பரம் பண்ண கூடாது. Any propaganda is good propaganda.

வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி

1 month ago
16 Jan, 2026 | 04:20 PM இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 20 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தலா 300,000 ரூபாவுக்கான காசோலைகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வழங்கிவைத்தனர். வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக, பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “யுத்தத்தினால் பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. நீண்டகாலம் சென்ற போதும் அந்த வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் அநேகமானோர் யுத்த சமயத்திலும் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தத்தின் பின்னரும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நீண்டகாலமாக தமக்கென வீடோ, இடமோ இன்றி அவர்கள் வாழ்வது நியாயமல்ல. எமது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களினதும் வீட்டுப் பிரச்சினையை நாம் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள்.ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது. அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது. ஏனென்றால் அவை மக்களுக்கு எதிரான முரண்பாடுகளை உருவாக்கும் அரசாங்கங்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசாங்கங்களாகவே அவை இருந்தன. ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் பொதுமக்களின் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தேர்தல் சமயங்களில் மக்களின் மனங்களில் குறிப்பாக வடபகுதி மக்களிடையே எம்மைப்பற்றி குழப்பமும் தெளிவின்மையும் இருந்திருக்கும். எம்மை ஆட்சிபீடமேற்ற வாக்களித்தாலும் சந்தேகத்துடன் தான் வாக்களித்திருக்கலாம். எமது அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கு சற்று கூடுதல் காலம் சென்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்கவேண்டும். அரசாங்கமென்ற வகையில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வீடற்றவர்களுக்கு வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். வரலாற்றில் அதிக தொகையை அதற்காக ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு சிறந்த வருமான வழியை அமைக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்துறை, தெங்குப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்துறை மற்றும் சிறிய கைத்தொழிற்துறைகள் என்பன இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்த அனைத்துக் கைத்தொழிற்துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை, இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது அதற்காக பாடுபடும் அரசாங்கம். அது மட்டும் எமக்கு போதுமானதல்ல. நீண்டகாலமாக எமது வாழ்வில் பெரும்பகுதியை யுத்தத்துடனே கழித்தோம். மோதல்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். குரோதத்துடன் வாழ்ந்தோம். தமிழ் மக்கள் குறித்து சிங்கள இனவாதக் குழுக்கள் சந்தேகமாக பார்த்தன. சிங்கள மக்கள் குறித்து தமிழ் இனவாதக் குழுக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கின. நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்தன. அந்த மோதலினால் எவருக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த மோதலினால் எஞ்சியது எதுவும் இல்லை. வீடுகளை இழந்த குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் முழுமையான வீழ்ச்சி என்பவை தான் கிடைத்தன. உற்றார் உறவினர்களை இழக்க நேரிட்டது. வடக்கு, தெற்கு இரண்டிலும் உள்ளோர் இந்த அழிவினால் பாதிக்கப்பட்டனர். இந்த முழு அழிவின் பின்னாலும் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்காக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களை தூண்டிவிட்டார்கள். இவ்வாறான இனவாத அரசியல்தான் முன்னர் காணப்பட்டது. இன்றும் ஆங்காங்கே அந்த நிலைமை இருக்கிறது. தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை காரணம் காட்டி இந்த இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள். மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ தெற்கிலோ கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை. அதேபோன்று , சிறப்பான பொருளாதா நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.அதற்கான பணிகளை இந்த வருடத்திற்குள் துரிதமாக நிறைவு செய்ய உள்ளோம். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும். யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது. யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர். அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவுசெய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதேபோன்று சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கிறது.யாழ் மாவட்டம் மிகவும் ரம்யமான கடற்கரையைக் கொண்டுள்ளது. மக்களை கவரக்கூடிய பல பிரதேசங்கள் உள்ளன. இருந்தாலும் இன்னும் பலமான சுற்றுலாத்துறை கிடையாது. பலாலி விமான நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம். மிக விரைவில் காங்கேசன்துறை துறைமுக பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிக முன்னேற்றகரமான சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த தொழில்கள் அவசியம். சிறந்த பொருளாதாரம் அவசியமானது. மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இங்குள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், தமது வாழ்நாளில் முதன் முறையாக ஜனாதிபதி, அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருக்கும் என கருதுகிறேன். சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஒதுக்க வேண்டும். எமது சந்ததி யுத்தம் செய்துகொண்டது. எமது சந்ததி மோதிக் கொண்டது. எமது பிள்ளைகளின் சந்ததிக்கு மோதலற்ற நாட்டை, யுத்தமில்லாத நாட்டை ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். துணிச்சலான செயற்பாட்டை இந்த பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் மேற்கொண்டார்கள். நேரில் கண்டிறாத எம்மை, கேள்விப்படாத எம்மை நம்பி இணைந்திருக்கிறீர்கள். நாம் ஆட்சியமைக்க நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் மீறாமல் மென்மேலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும் அரசாங்கம் மற்றும் மேம்படுத்தும் தலைவர்களாக நாமிருப்போம்.நீங்கள் எம்மை விட்டும் ஒதுங்கிச் செல்லாதது போன்றே நாமும் உங்களை விட்டும் விலக மாட்டோம். நாம் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவரும் சகோததரத்துவத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க: “தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இன்று வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக உதவி வழங்கப்படுகிறது. நாட்டில் இரண்டு வீட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் அண்மைய சூறாவளி பேரழிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் மற்றும் இன்று தொடங்கப்படும் தேசிய வீட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும். இந்த தேசிய வீட்டுதிட்டம் ஐந்து அமைச்சுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் 31,218 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளடங்கும். அதற்காக, ஒரு வீட்டிற்கு 20 இலட்சம் ரூபா வீதம் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் “யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் பத்தொன்பதாயிரம் குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றன. இவற்றில், இந்த ஆண்டு 2,500 பேருக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், வீட்டுத் திட்டங்களுக்குப் பெறப்பட்ட தொகை, வீடு நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஜனாதிபதி உதவித் தொகையை பத்து இலட்சத்தில் இருந்து பதினைந்து இலட்சமாகவும், பின்னர் இருபது இலட்சமாகவும் அதிகரித்துள்ளார். இதனால் மக்கள் நீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கூடிய வீட்டை நிர்மாணிக்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளார். வீட்டுத் திட்டங்கள் மட்டுமல்ல, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க சேவைகளை மக்கள் எளிதாகப் பெறக்கூடிய சூழலையும், அரச ஊழியர்கள் எளிதாகச் சேவை செய்யக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி கருதுகிறார். ஆண்டுதோறும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான வடக்கு மக்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் அது இன்னும் வலுவான பிணைப்பாக மாறும் என்று நம்புகிறேன்” என்று இளங்குமரன் தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுதுலால் நிகழ்வில் அனைவரையும் வரவேற்று தனது கருத்துக்களை தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், ஜி.ஜி. பொன்னம்பலம், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோருடன் வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி | Virakesari.lk

மது அருந்துவதால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பு!

1 month ago
Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 04:46 PM நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மது அருந்துவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். அவர்களில், 34.8 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அதேநேரம் 0.5 சதவீதத்திற்கும் மிகக் குறைவான அளவில் பெண்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, நாட்டின் மொத்த மதுபான பயன்பாடு சுமார் 10 சதவீதமாகும். எமது நாட்டில் ஒட்டுமொத்த மது பயன்பாட்டைப் பார்த்தால், அது மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அன்மைய காலகட்டத்தில், குறிப்பிடத்தக்க போக்கு சட்டவிரோத மது பயன்பாட்டின் கூர்மையான அதிகரிப்பு ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, சுமார் 10சதவீத மது பயன்பாடு சட்டவிரோதமானது. சட்டவிரோத மதுவால் 5-6 பேர் உயிரிப்புகள் பவிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இன்று, வியாழக்கிகிழமை மது தினமும் சுமார் 50 பேரைக் கொல்வதாவவும். அவர் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துவதால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பு! | Virakesari.lk

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு

1 month ago
16 Jan, 2026 | 04:57 PM வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) வழிபாடுகளில் ஈடுபட்டார். நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, விகாராதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு | Virakesari.lk

மட்டக்களப்பில் 4 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தை!

1 month ago
16 Jan, 2026 | 05:08 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார். இந்த நிலையில் தந்தை அவரது 4 வயது 8 மாதம் கொண்ட மகளிடம் மீது பாலியல் சேட்டை விடுத்துள்ளதாக மகள், தாயாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து தாயார் பொலிஸ் நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (15) முறைப்பாடு செய்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 29ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பில் 4 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தை! | Virakesari.lk

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுத்துள்ள பாரிய திட்டம்!

1 month ago
Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 04:23 PM 2026 கொழும்பு நவம் மகா பெரஹெராவிற்கான சர்வதேச விளம்பரத் திட்டத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கொழும்பு கங்காராம விகாரை இணைந்து ஆரம்பிக்கவுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் மத மற்றும் கலாச்சார விழாவான கொழும்பு நவம் மகா பெரஹெரா சர்வதேச கலாச்சார விழாவாகவும், கொழும்பு நகரத்தை சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாகவும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A320neo விமானம், இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தையும் பெரஹெராவின் சிறப்பையும் வெளிப்படுத்தும் ஒரு தூதராக செயற்படும். அலங்கரிக்கப்பட்ட இந்த விமானத்தின் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் சர்வதேச இணைப்புகள் முழுவதும் நவம் மகா பெரஹெராவின் புகழ், மகிமை மற்றும் கலாச்சார அடையாளத்தை கொண்டு செல்லும் எனவும், இந்த முயற்சி நவம் மகா பெரஹெராவை ஒரு புனிதமான பௌத்த ஊர்வலமாக மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாகவும் நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்காராம விகாரையால் ஏற்பாடு செய்யப்படும் நவம் மகா பெரஹெரா, அதன் வரலாற்று முக்கியத்துவம், மத மற்றும் கலாச்சார மகத்துவத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் நிறுவன கட்டமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஆதரவை வழங்கியுள்ளது. ஏர்பஸ் A320neo விமானம், நகரத்திலிருந்து நகரத்திற்கு, கலாச்சாரத்திலிருந்து கலாச்சாரத்திற்குப் பறந்து, கங்காராம விகாரை மற்றும் நவம் மகா பெரஹெராவின் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதாகவும், இதன் மூலம் இலங்கையின் நீண்டகால கலாச்சார விழுமியங்களை உலகிற்குக் கொண்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது இலங்கையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதோடு, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமையின் இடமாக நாட்டின் பிம்பத்தை வலுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுத்துள்ள பாரிய திட்டம்! | Virakesari.lk

மது அருந்தியதற்காக பணம் அறவிட்ட மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய கும்பல் ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு

1 month ago
16 Jan, 2026 | 06:38 PM மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திய கும்பலிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரின் தலையில் மதுபான போத்தலினால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (16) பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி கொண்ட மதுபானசாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த கும்பல் சென்று மதுபானம் அருந்தியுள்ளது. பின்னர், அருந்திய பானத்துக்கான பணத்தை, அதன் முகாமையாளர் கேட்டதற்கு, அந்த நபர்கள் முகாமையாளரின் அறைக்குள் சென்று, முகாமையாளரின் தலையை மதுபான போத்தலைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த ஒருவரை இன்று கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். மது அருந்தியதற்காக பணம் அறவிட்ட மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய கும்பல் ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு | Virakesari.lk

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

1 month ago
Nitesh Samuel not out 77 101 163 0 0 76.23 கந்தப்பு இவர் அடித்த ஓட்டம்களில் 4 6 ஒன்றும் இல்லையே? ஆளுக்கு முட்டைக்கோப்பி கொடுக்க வேண்டும்.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

1 month ago
ஈழவம்சாவளி தமிழன் நித்தீஸ் சாமுவேல் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவின் முதலாவது போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 101 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஒட்டங்களை பெற்றார்

பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது!

1 month ago
பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கு, தன்னிச்சையான நீதி என்ற பெயரில் ஒரு குழு முன்னெடுத்த வன்முறையையும் அதன் கோரமான முடிவையும் சுட்டிக்காட்டுகிறது. இச்சம்பவம் ஒரு தவறான புரிதலால் உருவான திட்டமிடப்பட்ட கொலை வழக்காக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460141

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month ago
கடலில் மூழ்கும் நிலையில் இலங்கையில் தமிழர்கள். (தமிழ் பேசுபவர்கள் அல்ல). சிறு துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month ago
மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏

“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

1 month ago
பாவம் மரியா கிடைச்சதை பிச்சை பொட்டிட்டு வெளிய வந்து செய்தியார்களை சந்தித்து அதை பிச்சை போட்டதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க வெள்ளை மாளிகைக்குள் நடந்த பத்திரையாளர் சந்திப்பில் மரியாயாவை மரியாதை குறைவாக சொன்னதை பார்க்க ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வந்தது “ பார்த்திரம் அறிந்து பிச்சை போடு”

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month ago
ஆழ்ந்த இரங்கல்😥 மோகன் அண்ணாவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இந்த கடினமான நேரத்தில் கடவுள் ஆற்றலும் துணையும் தந்து தாங்கட்டும்

கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]

1 month ago
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02 மதுவில் கொஞ்சம் பலவீனமாக இருந்த அவன், கண்மணியைச் சரியாகக் கவனிக்கவில்லை. என்றாலும் எதோ தானோ என்று குடும்பவாழ்வு ஓடியது. ஒருநாள், உண்மை பெரும் சத்தத்துடன் வரவில்லை. அது சுலபமாக வந்தது. அவனுடைய பூட்டப்படாத கைப்பேசி அவள் கைகளில் சிக்கியது. அடிக்கடி தோன்றும் ஒரு பெயர். வேறொரு பெண். வேறொரு வாழ்க்கை. அதில் அவனின் இரட்டை வாழ்வு (Double Life) வெளிச்சத்துக்கு வந்தது. கண்மணி அழவில்லை. கெஞ்சவில்லை. ஒரு முடிவு மட்டும் அவளுக்கு வந்தது. இது தவறு அல்ல. இது திட்டமிட்ட புறக்கணிப்பு. அது துரோகம் மட்டும் அல்ல — கண்மணிக்கு அவள் வாழ்ந்த திருமணம் ஒரு பொய்யென்று உறுதி செய்த தருணம். அவள் துரோகத்தையும் அதனால் மனவேதனையையும் அடைந்தாள். அவளது இளமைக் கனவு சுக்குநூறாகியது. அதிர்ச்சி அடைந்தாள், திருமண வாழ்வை வெறுத்தாள். ஆனால், அவள் கோபப்படவில்லை. அவள் கத்தவில்லை. அவள் விழித்தாள். “பொறுத்துக்கொள்” என்று சொன்ன உலகை அவள் இனி கேட்கவில்லை. “பெண்ணாக இருந்தால் சகிக்க வேண்டும்” என்ற பொய்யை அவள் உடைத்தாள். விவாகரத்து வழக்கறிஞர் மென்மையாகப் பேசினார். “குழந்தைக்காக மீண்டும் யோசியுங்கள்.” நீதிபதி நடுநிலையாகக் கேட்டார். ஆனால் கேள்விகளில் சமூக தீர்ப்பு மறைந்திருந்தது. உறவினர்கள் சொன்னார்கள்: “பெண் பொறுத்துக் கொள்ள வேண்டும்.” கண்மணி ஒருமுறை மட்டும் சொன்னாள்: “நான் திருமணத்திலிருந்து தப்பவில்லை. பொய்யிலிருந்து வெளியேறுகிறேன்.” விவாகரத்து கிடைத்தது. வெளியில் யாரும் வாழ்த்தவில்லை. பெண்கள் பெற்ற சுதந்திரம் பொதுவாகக் கொண்டாடப்படுவதில்லை. உண்மையில் விவாகரத்து கண்மணிக்குத் தோல்வி அல்ல— அது மூச்சை மீண்டும் பெறும் தருணம். கண்மணி ஒரு கணவனை விட்டு வரவில்லை; அவள் தன்னைச் சிதைத்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாள். எனக்கு மீண்டும் காதல் அல்லது திருமணம் வேண்டாம். இந்த வகையான வலியிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள தனிமைதான் ஒரே வழி என்று, தன் பெற்றோரிடம் பிறந்த கைக் குழந்தையுடன் திரும்பினாள். அவளுக்கு உழைப்பு இருந்தது. அந்த உழைப்பு அவளும் மகளும் வாழப் போதுமாக இருந்தது. கண்மணியின் கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை. வீடும் அதே வாசனை. ஆனால் பார்வைகள், எதிர்பார்ப்புக்கள் மாறின. பெருமைக்கு பதிலாக பரிதாபம் வந்தது. பாசத்திற்குப் பதிலாக அறிவுரை வந்தது. [Pity replaced pride. Advice replaced affection.] அவளுடைய அம்மா அண்டை வீட்டாரைப் பற்றி கவலைப்பட்டார். அவளுடைய தந்தை எதிர்காலப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டார். கண்மணி ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டாள் - தன் மகள் ஒருபோதும் உயிர்வாழ்வதை காதலோடு, அன்போடு குழப்பக்கூடாது [her daughter should never confuse survival with love.]. இரவில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அவள் கிசுகிசுத்தாள்: நீ என்னிடமிருந்து மௌனத்தைக் கற்றுக்கொள்ள மாட்டாய் [You will not learn silence from me]. அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் தீர்ப்பளித்தனர். சிலர் அமைதியாக சரிப்பண்ணி அவனுடன் மீண்டும் இருக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு உறவினர் மெதுவாக, “குழந்தைக்காக, நீங்கள் சரிப்பண்ணி வாழ்ந்து இருக்க வேண்டும்” என்றார். ஆனால், கண்மணி அமைதியாக, “என் குழந்தைக்காக, நான் சரிசெய்ய மாட்டேன்” ஏன் எனறால், அப்படியான தந்தையிடம் எந்த நல்ல பழக்கவழக்கங்களையோ, பாசத்தையோ குழந்தை காணாது, வெறுப்பைத் தவிர என்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1997 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02] / எனது அறிவார்ந்த தேடல்: 1413 https://www.facebook.com/groups/978753388866632/posts/33310717181910167/?

“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

1 month ago
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்! 16 Jan, 2026 | 12:48 PM வெனிசுவெலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது நன்றியினையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (15) வெள்ளை மாளிகைக்கு சென்று ட்ரம்பை சந்தித்த வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கினார். தனது நாட்டின் சுதந்திரத்துக்கான ட்ரம்பின் தனித்துவமான அர்ப்பணிப்புக்கு, தான் அளிக்கும் கௌரவம் என்று கூறிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “மரியா கொரினா மச்சாடோ, பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!” என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த நோபல் பரிசுக்காக உலகில் இடம்பெறும் போர்களையெல்லாம் நிறுத்தியதாக ட்ரம்ப் வெற்றி முழக்கமிட்டதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவித்திருந்தன. எனினும், 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெறாத காரணத்தினாலும் அந்தப் பரிசை மரியா பெற்றதனாலும் தனது அதிருப்தியை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர், வெனிசுவெலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், ட்ரம்பின் ஆலோசனைப்படி அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ட்ரம்பின் செயலுக்காக, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், ஒருவர் பெற்ற நோபல் பரிசை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என நோபல் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நேற்று மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை, வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தபோது அவருக்கு வழங்கியுள்ளார். Virakesari.lk“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ;...“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை!

1 month ago
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை! 16 Jan, 2026 | 11:57 AM எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் (Julie Kozack) அறிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் சேதவிபரங்களை இந்தக் குழு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களையும் அவர்கள் நடத்துவார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236159
Checked
Sun, 02/22/2026 - 16:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed