புதிய பதிவுகள்2

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 1 week ago
தகவலுக்கு நன்றி ஏராளன் இந்தத் தொகை நிதியைக் கொண்டு நாங்கள் முன்கூட்டியே எடுத்த முடிவின்படி அராலியிலும் பொன்னாலையிலும் வேலைகளை ஆரம்பிக்கலாம் அல்லவா இந்த உதவி அவர்களுக்கு மிகவும் வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் அனுப்பிவைத்த உறவிற்கு கோடி நன்றிகள்

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 1 week ago
சாத்தான் அவர்களே! இப்படியெல்லாம் தலைவர்களை விமர்ச்சிக்கக் கூடாது!!. அதுவும் கருனாநிதியோடு ஒப்பிடக்கூடாது. பாவம் விமல்.😩 கருனாநிதிக்கு தலைமாட்டில் ஒன்று, கால்மாட்டில் ஒன்று.🥰

கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்

1 month 1 week ago
கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை, மதுபான விற்பனை குறைந்து வருவதும் மற்றுமொரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. முன்பு மதுபான விற்பனை உணவகங்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டி தந்ததால் செலவுகளை ஈடுகட்ட முடியுமாக இருந்தது. ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் வீண் செலவுகளை தவிர்ப்பதற்காகவும் மக்கள் இப்போது குறைவாகவே மதுபானம் அருந்துகின்றனர். இதனால், உணவகங்கள் ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்கின்றன. இந்நிலையில், உள்ளூர் சமூகங்களுக்கு தனித்துவமான உணவுகளை வழங்கும் சிறு உணவகங்கள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெருந்தொகையான உணவகங்கள் மூடப்படவுள்ளதால், பலர் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகளவான தமிழர்கள் உணவகங்களில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கனடாவில்-தமிழர்கள்-வேலைவாய்ப்பை-இழக்கும்-அபாயம்/50-371011

🌾 திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

1 month 1 week ago
🌾 திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம் adminJanuary 14, 2026 தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், வியாபார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் வைப்பதற்குத் தேவையான விதவிதமான அளவுகளில் மண்பானைகள் மற்றும் அடுப்புகள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பொங்கல் பண்டிகையின் அடையாளமான கரும்புகள் மற்றும் மஞ்சள், இஞ்சிக் கொத்துக்கள் சந்தையின் ஓரங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விற்பனையாகின்றன. வீடுகளை அலங்கரிக்கத் தேவையான மாவிலை, தோரணங்கள் மற்றும் கதம்பப் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் வகையில் விற்பனை நடைபெறுகிறது. பொங்கல் படையலுக்கான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து காணப்பட்டாலும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். https://globaltamilnews.net/2026/226481/

தைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில் ஜனாதிபதி அறிவிப்பாரா?

1 month 1 week ago
தைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில் ஜனாதிபதி அறிவிப்பாரா? adminJanuary 14, 2026 தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகள் தொடர்பில் சாதகமான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்புடன், வடக்கு மாகாணம் முழுவதும் காணி உரிமையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். “மக்களின் காணிகள் மக்களுக்கே” என ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், அந்த வார்த்தைகள் நடைமுறையில் எப்போது பிரதிபலிக்கும் என்ற கேள்வியே இன்றைய யாழின் மையப் பிரச்சினையாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டி துறை தெற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றன. இக்காணிகளில் பெரும்பாலானவை பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், பற்றைக்காடுகளாகவே காட்சியளிக்கின்றன. பயன்பாடற்ற இக்காணிகளை விடுவிப்பதில் பாதுகாப்புத் தரப்பினருக்கு தடைகள் இல்லை எனத் தெரிந்தும், அவை தொடர்ச்சியாக கையகப்படுத்தி வைக்கப்படுவது காணி உரிமையாளர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. பலாலி கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் காணியும் இதேபோன்று எந்தவிதமான பயன்பாடும் இன்றி பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டு உள்ளது. அதேவேளை, வசாவிளான் சந்திக்கு அருகிலுள்ள மானம்பிராய் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்களை விடுவிக்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை இன்னமும் உரிமையாளர்களுக்கும் பக்தர்களுக்கும் கையளிக்கப்படவில்லை என்பது அரசின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. குரும்பசிட்டி, கட்டுவான் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தனியார் காணிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றில் இராணுவ விவசாய பண்ணைகள் நடாத்தப்படுவது, “பாதுகாப்பு” என்ற சொல்லின் உண்மையான பொருளை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதேபோன்று தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக 16 பேரின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதாக ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் கூறிவந்த போதிலும், நடைமுறை ரீதியான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. அண்மையில் தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், விகாராதிபதி உள்ளிட்ட தரப்பினரை அழைத்த அதிகாரிகள், காணி உரிமையாளர்களை அழைக்காதமை, ஒரு தலைப்பட்டசமான தீர்மானங்களை நோக்கிய அரசின் அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. விகாரைக்காக கைப்பற்றப்பட்ட காணியில் முதல் கட்டமாக இரண்டு ஏக்கரை விடுவிக்க இணக்கம் எட்டப்பட்டதாக முன்னர் வெளியான செய்திகளும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இவ்வாறான நிலைமைகளுக்கிடையில், பலாலி வீதி காலை முதல் மாலை வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே திறந்து விடப்பட்டிருப்பதும், வல்லை–அராலி வீதி இன்னமும் மூடப்பட்டிருப்பதும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும், குறிப்பாக வடமராட்சி மக்களின் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கான அணுகலையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வீதிகள் முழுமையாகவும், 24 மணி நேரமும் கட்டுப்பாடுகள் இன்றி திறந்து விடப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கடந்த காலங்களில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காணி விடுவிப்பு தொடர்பான சாதகமான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், எந்தவிதமான அறிவிப்புகளும் இன்றி அவர் திரும்பிச் செல்வதே வழமையாகியுள்ளது. இந்நிலையில், இம்முறை தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, வடக்கு மக்களின் நீண்டநாள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதே அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையே, எழுவை தீவில் கடற்படையினருக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்க, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை, காணி விடுவிப்புக்கான நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் ஜனாதிபதி வெளியிடவுள்ள அறிவிப்புகளே, “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற வாக்கியம் உண்மையா, அல்லது வெறும் அரசியல் முழக்கமா என்பதை தீர்மானிக்கும் தருணமாக அமையவுள்ளது. Global Tamil Newsதைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில்...தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள…

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 1 week ago
இலங்கையில்தான் வேறெங்கு போக முடியும்.🤣 பொதுவாக போட்டிகளினிடையே பயணம் பாதகமானது, அந்த வகையில் பங்களாதேசமும் பாகிஸ்தானுக்கும் சாதகம் எதிரணிகளுக்கேதிராக இருக்கும்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 1 week ago
புலிகள் இருந்த போது அரசியல் ரீதியான ஏக பிரநிதிகள், இராணுவ பாதுகாப்பு, பேரம் பேசும் ஆற்றல், புலம் பெயர்ந்தோரை ஒரு குடையின் கீழ் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு என ஒரு மைய அதிகாரபுள்ளி ஒரே திசையில் பயணிக்கும் நிலை இருந்தது. அது ஒரு பலமான நிலையாக காணப்பட்டது, புலிகளுக்கு பின்னர் புலம்பெயர் தரப்பு ஒரு கோணத்தில் பயணிக்க (அங்கும் பல திசையில் பயணிக்கின்ற நிலையே காணப்படுகிறது) இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் அரசியல் பிரதிநித்துவம் நிலையில் இருந்து பல கட்சிகளாக பிரிந்து பலவீனமான நிலையில் உள்ளார்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் கூட அனைவரும் ஒன்றாக வாருங்கள் என அரசியல் பாலபாடம் போதிக்கும் நிலையில் இலங்கையில் அரசியல் நிலை உள்ளது, பேரம் பேசும் ஆற்றல் எனும் பேச்சிற்கே தற்போது இடமில்லை என்றாகிவிட்டது. இயற்கை நியதியான வெறுமையே எம்மை பொறுத்தவரை பொறுமையாக காத்திருக்கிறது. இந்த நிலை யாரால் உருவாக்கப்பட்டது என ஒரு தரப்பினை மட்டுமே கைகாட்டும் நிலை உள்ளது, இலங்கை நேரடியாக போரில் இருந்தாலும் பிராந்திய வல்லரசான இந்தியா ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை வழங்கியது, அமெரிக்கா ஆயுத, உளவு, பயிற்சி, ஆலோசனைகளுடன் தார்மீக ஆதரவினை வழங்கியது, காசாவில் மக்கள் படுகொலைகளை கண்துடைப்பு கண்டிப்பினை கூறியவாறே போரை முடிக்க ஆதரவுகளை வெளிநாடுகள் வழங்கியது. இந்த அழிவிற்கு காரணமானவர்களிடம் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் இன்னமும் புலம்பெயர்ந்தோர் இயங்குகின்றனர். 100 வருடங்கள் போராடிய குர்திஸ்களுக்கு நியாயம் கிடைத்ததிற்கான காரணம் அவர்கள் நலனை அதிகாரங்களின் நலனிற்கு ஏற்ப மாறியமை ஆனால் பலஸ்தீனியர்களுக்கு வெறும் அனுதாபம் கிடைத்தது. இந்த அழிவிற்கு காரணமான இலங்கை மற்றும் மேற்குடன் இணைந்த் பயணிக்க தயாராகவே உள்ள நிலை காணப்படுகிறது, இலங்கையில் இன்னமும் இனவாதத்திற்கு முகம் கொடுக்கும் நிலையில் கூட இலங்கையுடன் இணைந்து பயணிக்கின்ற நிலை காணப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதன் மூலம் எமக்கான நலனை பெறமுடியுமாயின் ஏன் அதனை தவிர்க்க வேண்டும்? தற்போதய நிலையில் இந்தியாதான் எமது பேரம் பேசும் வாய்ப்பு, மேற்கு அதனுடனான மேலதிக பலம். இந்தியாவினை கடந்து ஒரு தீர்வு எட்டப்பட முடியாத ஒன்று புலிகள் கூட உணர்ந்த நிலையே காணப்பட்டது என கருதுகிறேன். தார்மீக உண்மை ஒரு நீதியினை கொடுக்காது என்பதற்கு அண்மைய மற்றய உதாரணம் பலஸ்தீனம், பலஸ்தீனத்தினை அனைவரும் அங்கீகரிக்க போட்டி போட்டாலும் அவர்களை துடைத்தழிப்பதற்கு எதிராக எந்த காத்திரமான முயற்சியினை எந்த நாடும் எடுக்கவில்லை, தமிழர்களுக்கி இழைக்கப்பட்ட அநிதீகளுக்கு நீதி முக்கியமா? அல்லது அதிகார முக்கியமா? இரண்டும் முக்கியம், ஆனால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகளை யாரிடம் கோருகிறோம்? வெளியே கண்டனத்தினை தெரிவித்துக்கொண்டு அதே நேரம் அழிப்பிற்கு உதவிய தரப்பிடமிருந்தே! அவ்வாறாயின் அந்த நீதி கிடைப்பதற்கான சாத்திய கூறு எவ்வாறிருக்கும்? அதற்காக முயற்சிக்க கூடாது என கூறவில்லை, ஆனால் இலங்கையி அடக்குமுறைக்குள் இன்னமும் இருக்கும் மக்களுக்கு ஒரு சாதகமான சூழலினை தோற்றுவிப்பதற்கு இடையூறாக எமது செயற்பாடு தற்செயலாக கூட ஏற்பட்டுவிடக்கூடாது.

அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்

1 month 1 week ago
உங்கப்பரும், சித்தப்பருமா இந்தச் சட்டத்தைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தேக்க என்ன கோமாவிலா இவர் இருந்தவர். உங்கடை கையாளான சவீந்திர சில்வா தையிட்டியிலை விகாரை கட்டேக்கை, குருந்தூர்மலை... கிண்ணியா... சிவபுரமென உங்களாட்சிக்காலத்தில் அடாவடிகள் செய்து இனஅழிப்பையும் இனவெறுப்பையும் அதியுச்சமாகச் செய்தபோது எங்கே போனது எங்கபோனது அந்த சட்டம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்

1 month 1 week ago
லால்காந்த ICCPR சட்டத்தை மீறியுள்ளார்; நாமல் குற்றச்சாட்டு Jan 13, 2026 - 10:12 PM விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரரை அண்மையில் 'காட்டுமிராண்டி' என விளித்து அவமதித்துள்ளதாகவும், இவ்வாறு பௌத்த மதத் தலைவரொருவரை அவமதிப்பதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார். ICCPR சட்டத்தில், "யாரும் போரைப் பரப்புவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், லால்காந்த இதில் மதத் துவேஷத்தைப் பரப்பியிருப்பது புலப்படுவதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், பௌத்த தலைவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் மதத் துவேஷத்தைப் பரப்புவது தொடர்பில் இச்சட்டத்தின் கீழ் லால்காந்தவுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை என்ன என்று தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார். சாதாரண பிரஜை ஒருவரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு சட்டத்தை மீறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், லால்காந்த மதத் துவேஷத்தைப் பரப்பியது மற்றும் மகா சங்கத்தினரை அவமதித்தது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்நாட்டு வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் இம்முறையில் மகா சங்கத்தினரை அவமதித்தது இல்லை என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkctlctj03w5o29nitxivp24

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 1 week ago
3) முன்னோடிக்கான மூன்றாவது நன்கொடை ரூபா 319,122.00 சதம் 14/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 14/01/2026 வங்கி மீதி ரூபா 430,445.67 சதம் ஆகும். 250 ரூபா Swift கட்டணம் எடுத்துள்ளார்கள். மூன்றாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் வறுமை/ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை சுகாதார வசதி கிடைக்கட்டும். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026. ஒற்றுமையே பலம்.

அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது.

1 month 1 week ago
அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ள நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் வாயிலில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி வைத்துவிட்டு தீயைப்பற்ற வைத்தகாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1459863

யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது!

1 month 1 week ago
யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது! யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், இளம் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1459867

கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!

1 month 1 week ago
தெரியும், ஒரு தொழில் கூட மிச்சமில்லை, எல்லாமே அவர்கள்தான். தனியார் தொழிற்சாலை, அதில் எப்படி திருட முடிந்தது என்பதே எனது கேள்வி. அதுவும் ஒரு வருடத்தில் ஐம்பது மில்லியன், எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தார்கள்? அரசாங்க நிறுவனத்தில் அரச ஊழியர், அரசியல்வாதிகள் செய்வதுதான் இதுவரைக்கால வழமை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 1 week ago
பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களுக்கும் இந்தியா விசா மறுத்துள்ளது. அமெரிக்க வீரர் அலி கானுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அலி இப்பொழுது கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பங்காளதேசமும் உறுதியாக உள்ளது போல்தான் உள்ளது. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை.

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 1 week ago
20 பேருடன் தொடங்கிய உண்ணாவிரதம், அடுத்த நாள் 7 பேருடன் முடித்து வைக்கப் பட்டது. இன்னும் ஒரு நாள் இருந்திருந்தால் எல்லோரும் நைசாக கழண்டு போயிருப்பார்கள். 😂
Checked
Mon, 02/23/2026 - 01:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed