புதிய பதிவுகள்2

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

1 month 1 week ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை 10 Jan, 2026 | 04:51 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். செலான் வங்கியின் பிரதான செயல்பாட்டு அதிகாரி ரணில் திசாநாயக்க மற்றும் பிரதான நிதி அதிகாரி ஷானுக ஜயரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/235693

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!

1 month 1 week ago
தம்பி உம்மள பாலிமேர்ண்ட் அனுப்பினது தமிழ் மக்களின் உரிமையை பேச. ஹரினிக்கு வால் பிடிக்க இல்லை. ராஜபக்சகள் தோற்கடிப்பதே முதல் இலக்காம், என் பி பி இல்லையாம்? ஏன் என் பி பி எங்களு எல்லாம் தந்துட்டினமோ? இவர் ஒரு மறைமுக அனுரகாவடி என நினைக்கிறேன். இலங்கைக்குள் சமஸ்டியே வேண்டாம் இரு தேசம் என அழுங்கு பிடியா நிண்டு அத்தனை ராஜதந்தரிகளையும் புறக்கணித்த தம்பி, இப்ப ஒரு மூண்டு மாசமா, இலங்கை சம்பந்தபட்ட அரசியலை முன்னெடுக்கிறார்? இந்த நிலைப்பாடு மாற்றத்துகு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஏன் இந்த மாற்றம்? குடுமி ஏதும் அனுர கையில் மாட்டி கொண்டதோ?

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்

1 month 1 week ago
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 Jan, 2026 | 05:55 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (10) இடம்பெற்றது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. https://www.virakesari.lk/article/235700

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

1 month 1 week ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கியினால் நிதி நன்கொடை 10 Jan, 2026 | 04:32 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கி 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் மஹீல் கூரகம, வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி இந்திக துஷார அசுரமான்ன மற்றும் ஏ.டபிள்யூ. பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235690

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்!

1 month 1 week ago
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்! 10 Jan, 2026 | 02:37 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் வெள்ளிக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர். இந்த நிலைக்கு தீர்வாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். ஆஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட கிளினிக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி வெள்ளிக்கிழமை (09) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். அஸாத் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்ஷன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.எம்.ஆஸாத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/235680

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

1 month 1 week ago
நாடு முழுவதும் அதிரடி வேட்டை: ஒரே நாளில் 861 பேர் கைது; பெருமளவு போதைப்பொருட்கள் மீட்பு! Published By: Digital Desk 1 10 Jan, 2026 | 12:29 PM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 813 கிராம் ஹெரோயின், 459 கிராம் ஐஸ், 01 கிராம் கொக்கெய்ன், 02 கிலோகிராம் 548 கிராம் கஞ்சா, 6,238 கஞ்சா செடிகள், 35 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 110 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 682 போதை மாத்திரைகள், 751 கிராம் 630 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 01 கிலோகிராம் 235 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 861 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 876 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235671

கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்.

1 month 1 week ago
அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது Jan 9, 2026 - 11:25 AM கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 30 ஆம் திகதி வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக குறித்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாகம் சந்தைக்கு அருகில், மற்றும் வேறு இரண்டு இடங்களில் 'கந்தரோடை விகாரை' என திசை காட்டும் பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது. அத்தோடு சுன்னாகம் சந்தைக்கு அருகில் 'கந்தரோடை விகாரை' என பெயர் பலகை நாட்டப்பட்டிருந்த இடத்தில் தற்போது, சுன்னாகம் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும் எனவும் அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmk6gp7gx03ppo29nrozm8p06

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா

1 month 1 week ago
சிறீலங்காவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகார கும்பலின் தலைவனோடு (ராஜபக்ச குடும்பத்தின் அடியாள்) இணைந்து அட்டூழியங்களை செய்த இந்த நபரை சிறையில் அடைத்தமைக்காக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . ஆனால் பாரிய குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகவே அநுரகுமார அரசும் தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம். இதே குற்றத்தை வேறு ஒரு சாதாரண தமிழ் பொதுமகன் செய்திருந்தால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தது 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து என்னவெல்லாம் செய்து விசாரணை செய்திருப்பார்கள். Kunalan Karunagaran is with தமிழ் அரசுக் கட்சி தீவகம்

இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்! - புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

1 month 1 week ago
இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்! - புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Jan 10, 2026 - 03:37 PM நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார். "இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில் சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட "இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030" எனும் அறிக்கை அண்மையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. இலங்கையின் நெருக்கடிக்குப் பின்னரான மீட்சிக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மற்றும் வறுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் கொள்கைக் கட்டமைப்பை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது. இந்நிகழ்வில் மேலதிக கருத்துக்களைத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் திருமதி இவெட் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்: "எமது நாட்டில் அத்தகையதொரு உறுதியான நிலையை உருவாக்க எம்மால் இதுவரை முடியவில்லை. எனவே, அரசாங்கம் தலையிட்டு தனியார்த் துறையையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். தற்போது நாம் ஆங்காங்கே சில விடயங்களைச் செய்கிறோம். அதனாலும் பல நல்ல விடயங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்து, எம்மால் நன்கு நிர்வகிக்கக்கூடியதாகவும், பின்த் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமைத்துக்கொண்டால், இதனை விடச் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். அரசாங்கத் தரப்பில் அந்தச் செயல்திட்டத்திற்கு இரண்டு குழுக்களை அல்லது ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது போன்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைத்துள்ளோம்." https://adaderanatamil.lk/news/cmk855hb903r6o29n9yzzk7g0

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா

1 month 1 week ago
அப்போ, எதிர்க்கட்சிகள் கூவுவதுபோல் இது அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை விசாரித்து பிணை வழங்கியிருக்கிறது. பிணை மட்டுந்தான் விடுதலையல்ல. அரசியல் செய்வார்கள், சவால் விடுவார்கள், கொலை, கொள்ளை, எல்லா குற்றங்களும் செய்வார்கள், கைது, விசாரணை என்று வந்துவிட்டால்; இல்லாத நோயெல்லாம் வந்து வைத்தியசாலையில் படுத்து விடுவார்கள். அவசரசிகிச்சை, சத்திரசிகிச்சை என்று சிபாரிசு வேற. பிணையில் வந்தவுடன் மீண்டும் விறுவிறுப்பான அரசியலை, விட்ட இடத்திலிருந்து தொடருவார்கள். இவருக்காக வாதாடிய சட்டத்தரணி சாலிய பிரீஸ் சொல்லி இவரை பிணை எடுத்த விடயம், முன்பு சிறையில் தாக்கியதால் இவருக்கு ஞாபக மறதி, ஒழுங்காக காதுகேக்காது, பார்வைக்கோளாறு, நீரிழிழிவு இன்னும் பல்வேறு நோய்கள் இருப்பதாக அடுக்கி, இவரால் திருப்பி கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளால் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, அதற்குரிய எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை, சிறையில் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது, அதனாலேயே அரசாங்கம் அவருக்கு மெய்ப்பாதுகாவலர்களை அளித்திருக்கிறது என்று சொல்லி பிணை பெற்று கொடுத்துள்ளார். சொன்னவர் ஒரு வைத்தியரல்ல, இவருக்காக ஆஜரான சட்டத்தரணி. இவரோ தனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்சித்திரவதைப்படிருக்கிறார்கள்,அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்கள், பல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி இறந்திருக்கிறார்கள், அரசியல்வாதிகளால் பலவகை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுனர்களும் நீதிபதிகளும் குரலெழுப்பியதுமில்லை, இரக்கம் காட்டியதுமில்லை, பிணை வழங்கியதுமில்லை. எதிலும் பாரபட்ஷம். இவரது சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலக தலைவனிடம் கைமாறியிருக்கிறது. மிகுதிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தவறியிருக்கிறார். அதுக்கு என்ன நடந்தது என மறந்துவிட்டாராம். அதை தான் அவரது வக்கீலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ஞாபக மறதியாம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்படும்வரை அவர் அரசியல் செய்திருக்கிறார், அன்று எதை சொன்னேனோ அதையே இன்றுவரை சொல்லி வருகிறேன் என்று வேறு அடிக்கடி ஞாபகமூட்டுகிறார். அன்று சொன்னது எதுவென இன்றுவரை ஞாபகமிருக்கிறது, தொடர்ந்தும் தடையின்றி அரசியல் செய்வேன் என்கிறார், இத்தனை வியாதிகள் உள்ளவரால் எப்படி அரசியல் செய்ய முடியும்? அதைவிட இராணுவ புலனாய்வாளரால் இவருக்கு வழங்கப்படாத முப்பத்தொன்பது துப்பாக்கிகளை திரும்ப கையளித்துள்ளாராம். அவை எங்கிருந்து இவருக்கு கிடைத்தன? யாரை கொலை செய்து இவற்றை அபகரித்தார்? புலிகளையா? இராணுவத்தினரையா? விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்!

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 1 week ago
தனிய உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை அண்ணை. எல்லோரும் சேர்ந்து உதவிகள் செய்வார்கள் என நம்புகிறேன். தொடக்கத்தில் எவ்வாறு பணிகளை தொடங்குவது என்ற நிலையில் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். மிக்க நன்றி அண்ணா. இதில் உள்ள யாழ் யாழிணையம், யாழ்ப்பாணம், யாழ் இசைக் கருவி மூன்றையும் குறித்தாலும் எம்மையெல்லாம் ஒன்றிணைக்கும் யாழிணையத்தை கௌரவப்படுத்தவே இணைத்தேன். இது தவறாக இருப்பின் நிர்வாகிகள் தெரியப்படுத்தினால் நீக்கி விடலாம். @மோகன், @நிழலி, @இணையவன் அண்ணாக்கள், உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள். Whatsapp Business Appல் வெளிநாட்டில் இருந்து யாராவது குழுவை ஆரம்பித்து நாற்சந்தியில் குழு இணைப்பை பகிர்ந்தால் விரும்பிய உறவுகள் இணைந்து கொள்வார்கள். பயனாளிகளின் தனியுரிமையையும், உறவுகளின் தனியுரிமையும் பாதுகாக்கும் பொருட்டு குழு இருந்தால் தகவல்கள்(படங்கள், குறுங்காணொளிகள்) பகிர்வது இலகுவாக இருக்கும்.

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா

1 month 1 week ago
தீவூப்பகுதியில் காணாமல் போன ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் அவலக் குரல்களும் இவரது அரசியல் பற்றி சொல்லும் என்று நினைக்கிறேன்.

வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு!

1 month 1 week ago
வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு! Published By: Digital Desk 1 10 Jan, 2026 | 03:43 PM டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. சவுதி பிரதிநிதிகள் குழுவில் சிரேஷ்ட நிபுணர் முஹமட் அல்-மசூத், சிரேஷ்ட கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சின் செயலாளர் கபில பெரேராவும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை, டித்வா புயலின் தாக்கம் மற்றும் பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சவுதி அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது. சவுதி மேம்பாட்டு நிதியம் ஏற்கனவே இலங்கை முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக இதன்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக, டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் குறிப்பாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் சவுதி பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. திட்ட செயல்படுத்தல் மற்றும் காலக்கெடு குறித்த மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235669

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா

1 month 1 week ago
இன்னும் போட்டுத் தள்ள வேண்டிய தமிழர்கள் நிறைய உள்ளார்கள் என... ஓட்டுக் குழுத் தலைவன் "டக்கி" சொல்கிறார் போலுள்ளது. இவர் அரசுடன் ஒட்டி உறவாடிய சமயம்... 20 ஆயுதங்களுக்கு மேல் அன்பளிப்பாக பெற்றுள்ளார். அதில் ஒன்றுதான்... சிங்கள பாதாளக் குழுவினருக்கு இவரால், கொடுக்கப் பட்டுள்ளது. மிகுதிக்கு அலுவல் பார்க்கப் போகுது... டக்கி.
Checked
Mon, 02/23/2026 - 16:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed