1 month 3 weeks ago
பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம் 30 Dec, 2025 | 02:19 PM வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. வடக்கில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம். என்றனர். https://www.virakesari.lk/article/234747
1 month 3 weeks ago
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார். பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார். கழக மட்டத்தில் அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் றாகமை விளையாட்டுக் கழகம் ஆகிவற்றை பிரதிநிதித்துவப்படுத்தினார். விபத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விளையாடிய கடைசி போட்டியில் (2018 டிசம்பர் 14) முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலைக்குரிய முடிவை குறிக்கிறது. முன்னாள் சக அணி வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் அவருக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளது. அக்ஷு பெர்னாண்டோவை அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது குணம் மற்றும் சிறந்த மனப்பான்மைக்காக கிரிக்கெட் சமூகம் என்றென்றும் நினைவுகூறும் என்பது உறுதி. அவரது ஆத்துமம் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. https://www.virakesari.lk/article/234742
1 month 3 weeks ago
அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் Dec 30, 2025 - 03:20 PM இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த மாற்றுக் காணிகளையோ அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. இது பாரதூரமான விடயம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்பை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரில் மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மாவட்டம், ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நான் இவ்வாறு பயணம் செய்யும் வேளைகளில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பேசிய சந்தர்ப்பங்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்ககளை நிறுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் அறிவித்த செய்திகளை நடைமுறையில் காண முடியாதுள்ளதை தெரிந்து கொண்டேன். அரசாங்கம் இவற்றை ஊடகங்கள் மூலம் பொறுப்புடனே விளம்பரப்படுத்தியது. தொழில்முனைவோர், தொழிலதிபர்களுக்கு, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு, விவசாய சமூகத்தினருக்குப் பெற்றுத் தருவோம் என்ற இழப்பீடுகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த போகத்தில் விவசாயம் சரியாக செய்யப்படாவிட்டால், உணவு நெருக்கடியும் ஏற்படும். எனவே அனைவர் குறித்தும் சிந்தித்து, இந்த விடயத்தை பரந்த கண்ணோட்டத்தில் நோக்கி, அறிவித்த நிவாரணங்களை உரிய தரப்புக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வாக்குறுதியளித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்காவிட்டால், மக்கள் சார்பாக நாம் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்வோம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வாக்குறுதியளித்த விடயங்கள், ஏனைய சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் ஊடாக வாக்குறுதியளித்த, அறிவிப்புச் செய்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரை, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும். இந்த உரிமைகள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாகும், ஆகையால் மக்கள் இவற்றைப் பெறும் வரை எதிர்க்கட்சி போராடும். இந்த நிவாரணம், சுயதொழில் செய்பவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படுவது போல, இந்த நிவாரணத் தொகைகளை குறைக்கக் கூடாது. அரசாங்கம் பொய் சொல்லாமல் இதனைச் செய்ய வேண்டும். இந்த நிவாரணங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவ்வாறே, எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjsephjz03amo29nh9e6dysp
1 month 3 weeks ago
காலிதா ஜியா: 'கூச்ச சுபாவமுள்ள' ஒரு இல்லத்தரசி ராணுவத்தையே எதிர்த்து நின்று பெரும் தலைவரான கதை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியா வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக இருந்தார். 1991 முதல் 1996 வரையிலும் 2001 முதல் 2006 வரையிலும் ஆட்சி செய்தார். 30 டிசம்பர் 2025, 08:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான காலிதா ஜியா, தனது 80 வயதில் காலமானார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான், 1977-ல் அதிபராகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், தனது இரண்டு மகன்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு "கூச்ச சுபாவமுள்ள இல்லத்தரசி" என்று காலிதா ஜியா விவரிக்கப்பட்டார். ஆனால், 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கணவரின் வங்கதேச தேசியவாதக் கட்சியை (BNP) வழிநடத்தினார். முதலில் 1990-களிலும் பின்னர் 2000-களின் தொடக்கத்திலும் என இரண்டு முறை பிரதமராக அவர் பொறுப்பேற்றார். வங்கதேச அரசியலின் கடுமையான சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பல ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். 2024-ல் போராட்டத்தின் விளைவாக அவரது நீண்டகால அரசியல் எதிரியான ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, காலிதா ஜியா மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேச அதிபர் ஜியாவுர் ரஹ்மான், 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன். பேகம் காலிதா ஜியா 1945-ல் மேற்கு வங்கத்தில் பிறந்தார். ஒரு தேயிலை வியாபாரியின் மகளான இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இப்போது வங்கதேசமாக இருக்கும் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். காலிதா ஜியா, தனது 15-வது வயதில், அப்போதைய இளம் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை மணந்தார். 1971-ல், மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியில் இணைந்த ரஹ்மான், வங்கதேசத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். 1977-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ரஹ்மான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார். அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களையும் அவர் மீண்டும் அனுமதித்தார். பின்னர் மக்கள் வாக்களிப்பின் மூலம் அதிபராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். அவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவப் புரட்சிகளை எதிர்கொண்டு, அவற்றை மிகக் கடுமையாகக் கையாண்டார். அப்போது ராணுவ வீரர்கள் பெருமளவில் தூக்கிலிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் 1981-ல், சிட்டகாங்கில் ராணுவ அதிகாரிகளின் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1987ஆம் ஆண்டு அரசு எதிர்ப்பு போராட்டங்களின் போது, காவல்துறையால் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார். அதுவரை, காலிதா ஜியா பொது வாழ்வில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் அவர் பிஎன்பி (BNP) கட்சியில் உறுப்பினராகி, அதன் துணைத் தலைவராக உயர்ந்தார். 1982-ல் வங்கதேசத்தில் ஒன்பது ஆண்டுகால ராணுவ சர்வாதிகார ஆட்சி தொடங்கியபோது, ஜியா ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். ராணுவம் அவ்வப்போது தேர்தல்களை நடத்தினாலும், அவை தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்ட தேர்தல்களாகவே இருந்தன. அந்தத் தேர்தல்களில் பங்கேற்க தனது கட்சியினரை காலிதா ஜியா அனுமதிக்கவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், காலிதா ஜியா தொடர்ந்து மாபெரும் பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தார். இது இறுதியாக ராணுவத்தை அடிபணியச் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 பிப்ரவரியில் வங்கதேச தலைநகரமான டாக்காவில் தேர்தல் பிரசாரம் செய்யும் காலிதா ஜியா 1991-ல், ராணுவ ஆட்சிக்குப் பிந்தைய தேர்தலில் காலிதா ஜியாவும் அவரது பிஎன்பி (BNP) கட்சியும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தன. பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார். முந்தைய அதிபர் முறையிலிருந்த பெரும்பாலான அதிகாரங்களைப் பெற்ற அவர், வங்கதேசத்தின் முதல் பெண் தலைவராகவும், ஒரு இஸ்லாமிய நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண்மணியாகவும் ஆனார். வங்கதேசக் குழந்தைகள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்று வந்த நிலையில், அவர் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமானதாகவும் மாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியிடம் அவர் தோல்வியடைந்தார். 2001-ஆம் ஆண்டு தேர்தலில் காலிதா ஜியா சில இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வசப்படுத்தினார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில், பெண் எம்.பி.க்களுக்காக சட்டமன்றத்தில் 45 இடங்களை ஒதுக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 70% பெண்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்த அந்த நாட்டில், இளம்பெண்களுக்கு கல்வி வழங்க அவர் பாடுபட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 தேர்தலில் காலிதா ஜியாவின் தேர்தல் பிரசாரப் போஸ்டர். அக்டோபர் 2006-ல், திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காலிதா ஜியா பதவியில் இருந்து விலகினார். ஆனால் அப்போது வெடித்த கலவரங்களால் ராணுவம் தலையிட்டது. தேர்தல் தள்ளிப்போனது. இடைக்கால அரசாங்கம் பெரும்பாலான அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்ததுடன் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது அனைத்துக் கட்சியினரையும் பாதித்தது. ஓராண்டுக்குப் பிறகு, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாகவே, வங்கதேசத்தின் முதல் அதிபரின் மகளும், காலிதா ஜியாவின் அரசியல் போட்டியாளருமான அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இருபது ஆண்டுகளாக மாறிமாறி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்த இவ்விரு பெண்களும் திடீரென நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1995 ஆம் ஆண்டு, தனது முதல் பிரதமர் பதவிக் காலத்தில் காலிதா ஜியா. காலிதா ஜியா மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2008-ல் அவர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ராணுவத்தின் ஆதரவுடன் நடந்த தேர்தலில் அவர் பங்கேற்றார். அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தார். 2011-ல், ஊழல் தடுப்பு ஆணையம் ஜியா மீது ஒரு வழக்கைப் பதிவு செய்தது. மறைந்த கணவரின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக நிலம் வாங்க, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டார். 2014-ல், அவாமி லீக் கட்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் என்று கூறி, காலிதா ஜியா ஆதரவாளர்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணித்தனர். அந்தத் தேர்தலின் போது, பிஎன்பி (BNP) ஆதரவாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர் மற்றும் நாடாளுமன்றத்தின் பாதி இடங்களுக்குப் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு, தேர்தல் புறக்கணிப்பு நடந்ததன் ஆண்டு நிறைவில் ஜியா புதிய தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தினார். அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தவும் அவர் திட்டமிட்டார். இதற்கு எதிர்வினையாக, தலைநகர் டாக்காவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி அவரை வெளியேற முடியாமல் பாதுகாப்புப் படைகள் தடுத்தன. டாக்காவில் அனைத்துப் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அப்போது, அரசாங்கம் மக்களிடமிருந்து "துண்டிக்கப்பட்டுவிட்டது" என்றும், அதன் நடவடிக்கைகளால் "முழு நாட்டையும் சிறைபிடித்துள்ளது" என்றும் காலிதா ஜியா விமர்சித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2015 ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்றும் காலிதா ஜியா. ஜியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடர்பானவை. 2003-ல் சரக்கு முனையங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்க அவரது இளைய மகன் அராபத் ரஹ்மான் கோகோ அவரை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. அவர் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட ஓர் அனாதை இல்ல அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 2,52,000 டாலர் பணத்தை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2018-ல் காலிதா ஜியாவிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டாக்காவின் பழைய மற்றும் தற்போது பயன்பாட்டில் இல்லாத மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே கைதி அவர் தான். இந்தத் தண்டனையின் காரணமாக அவர் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2018 ஆம் ஆண்டு டாக்காவில் ஆயிரக்கணக்கான பி.என்.பி. ஆதரவாளர்கள், ஜியாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார். ஓராண்டுக்குப் பிறகு, 73 வயதான காலிதா ஜியாவுக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறுதியில், உடல்நிலை காரணங்களுக்காக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். 2024-ஆம் ஆண்டில், மக்களின் பெரும் அதிருப்தி அலையால் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. அரசுப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது, கடுமையான அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற இடைக்கால அரசாங்கம், காலிதா ஜியாவை விடுவிக்கவும், முடக்கப்பட்ட அவரது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும் உத்தரவிட்டது. இந்த நேரத்தில், அவர் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான தொடர்ச்சியான பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஜனவரி 2025-ல், ஜியா வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e0ey3ykz9o
1 month 3 weeks ago
இவர் மாற்றி மாற்றி பேசுவார், தான் சொன்னதை சொல்லேலை என்பார், சொல்லாததை சொன்னது என்பார். அன்று தகாத சொற்பிரயோகங்களை பாவித்து பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் இவர், என்னோடு யாராவது தகராறு செய்தால் மண்டையில் ஓட்டை போட்டுவிடுவேன் என்று இவரே பகிரங்கமாக சொன்னார், அண்மையில் கூட தேரர் ஒருவர் அனுராவைப்பற்றி ஏதோ தன்னிடம் கூறியதாக சொன்னார், பின் அந்த தேரரிடம் மன்னிப்பும் கேட்டார், தேரர் சொல்லாததை சொன்னதாக தான் கூறியதற்காக. இவருக்கு ஏதோ மனக்குழப்பம் என்று நினைக்கிறன், அல்லது எதிலும் நிலைத்து நிதானித்து கவனம்செலுத்தி செயற்படமுடியாத ஒரு நோயாக இருக்கலாம்.
1 month 3 weeks ago
பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்! Dec 30, 2025 - 02:55 PM - 0 நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை வாங்கியேள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி வாங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், இலத்திரனியல் உபகரணங்கள் பாதிப்புக்கான 50,000 ரூபா இழப்பீட்டிற்கு பதிவு செய்கின்றீர்களா? என பிரதேச செயலரிடம் அருச்சுனா கேள்வி எழுப்பினார். அந்த விண்ணப்ப படிவம் இருப்பதாகவும், அதனை வழங்கவில்லை எனவும் பிரதேச செயலர் கூறினார். அந்த படிவங்களை வழங்கி மக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள். தெற்கில் பலர் இந்த கொடுப்பனவுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணத்தினை பெறுகின்றனர். நானும் பழைய ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி 50,000 ரூபாவை எடுத்தேன். நீங்களும் அவ்வாறு பொய்யாவது கூறி அந்த பணத்தை எடுங்கள். 300 வீடுகளுக்கு பாதிப்பு என்று கூறி எனக்கு மக்கள் அழைப்பு மேற்கொண்டு கூறினார்கள். காணொளி, படங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக அந்த கொடுப்பனவுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள் என அருச்சுனா கூறினார். இன்போது கருத்து தெரிவித்த சமூகமட்ட அமைப்பு ஒன்றின் பிரதிநிதி, குறித்த பதிவுகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விளக்கத்தை பிரதேச செயலகம் வழங்கவில்லை. கிராம சேவகர்கள் வீடுகளை வந்து பார்க்கவில்லை என தெரிவித்தார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjsdtkh603ako29ntw8e818a
1 month 3 weeks ago
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு Dec 30, 2025 - 11:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjs6zdv803a4o29n4syz1a8r
1 month 3 weeks ago
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா? 29 Dec, 2025 | 12:40 PM 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி இணையத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி - நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம்- சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி - என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்முறையாக நேரடியாக தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு களம் காணும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக மக்கள் அலை உருவாகி இருக்கிறது என தேர்தல் வியூக நிபுணர்கள் தொடர்ந்து தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களுடைய தேர்தல் சின்னமாக விசில் / மோதிரம் ஆகியவற்றை பரிசீலிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதால்.. சேலத்தில் விரைவில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தலைவர் விஜய் இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே திரையில் விஜய் தோன்றினால்.. ரசிகர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தற்போது விசில் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்படுவதால்.. அதனையும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து விஜயை- தமிழக வெற்றி கழகத்தை- ஆட்சி கட்டிலில் அமர செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234659
1 month 3 weeks ago
இருந்தாலும், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், இவர் என்ன சொல்ல வருகிறார் இப்போ? குற்றவாளிகளை சிறையிற்தானே அடைப்பார்கள். அப்போ ஐந்து நட்ச்சத்திர விடுதியில் தங்க வைக்கவேண்டுமோ? தமிழ் அரசியற்கைதிகள் சிறைச்சாலையில் தாக்கப்பட்ட போதுகூட இவர் அதைப்பற்றி ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லையே? இருந்தாலும் ராகவனையும் விசாரிக்க வேண்டும், அவர் வெளியுலகில் இருந்தபோது ஆபத்து இருந்ததென்றால் சிறையில் யாரால் அவருக்கு ஆபத்து, ஏன் ஆபத்து என்பதை இவர் தெளிவு படுத்தவேண்டும். சிறைச்சாலையில் அவருக்கு பாதுகாப்பு இல்லையாம். அதற்கு யார் காரணம்? ஏன் அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார் என்பதையும் இந்த ராகவன் விளக்க வேண்டும்.
1 month 3 weeks ago
தேர்தலில் போட்டியிடுவார்கள், அமைச்சுப்பதவி வகிப்பார்கள், ஊடக சந்திப்பு நடத்துவார்கள், மருத்துவமனைப்பக்கமே போயிருக்க மாட்டார்கள். ஆனால் பாருங்கோ.... கைது, விசாரணை என்றவுடன் சொல்லி வைத்த மாதிரி இந்த அரசியல் வியாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அதெப்படி வியாதி உள்ளவர்களால் அரசியல் செய்ய முடிகிறது?
1 month 3 weeks ago
https://www.facebook.com/reel/1567565054
1 month 3 weeks ago
கோட்டு ஓவியங்கள் வரைபவர்களில் என்னை அதிகமாகக் கவர்ந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் ராமு அவர்கள். அவரது ஓவியங்கள் அநேகமாக குமுதம் இதழில் வெளியாகியிருந்தன. இதே நேரத்தில், கல்கி இதழில் சிறுவர் கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் ரமணி என்பவர் வரைந்துவந்தார்.ரமணியின் ஓவியங்கள், ராமு அவர்களின் ஓவியங்களைப் போலவே நிறைந்த கறுப்பு நிறங்களால் இல்லாமல், தனி கோடுகளில் எளிமையாக, நேர்த்தியாக அமைந்திருந்தன. ரமணி அவர்களின் ஓவியங்களில், அவரது ஒற்றைக் கோடு மூலம் அழகிய படங்களை வரைந்து மக்களை கவரும் திறமை, ஈழத்து ஓவியர் சுப்பிரமணியம் அவர்களிடமும் இருந்தது. எழுபதுகளில், (சுப்பி)ரமணி(யம்) ஓவியங்களை சிறுவர் பாடப் புத்தகங்களில் பார்த்தேன். அந்த ஓவியங்களை கண்டு வியந்து, “இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமணி என்ற ஓவியரா?” என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அதே சமயம், அவரது ஓவியத்தில் ஒன்றான, மகிழ்ச்சியுடன் ஓடிவரும் சிறுமியின் படத்தை பார்த்தபோது, அதை பின்பற்றி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பியின் முகப்பிற்காக நான் வரைந்திருந்தேன். அந்த படத்தை பார்த்ததும், மார்க் மாஸ்ரர் அவர்கள் “இது ரமணியின் ஓவியமாக இருக்கிறது” என்று கூறினார். அப்பொழுதுதான் ரமணி அவர்களும் மார்க் மாஸ்ரரின் ஒரு மாணவன் என்பதை, நான் அறிந்து கொண்டேன். ஓவியர் ரமணியை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது படைப்புகளின் மேல் என் ரசனை எப்போதும் இருக்கின்றது. ஈழத்து தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தில் அவர் மிக முக்கியமான இடம் வகிக்கிறார். இவரது ஓவியங்களில் எப்போதும் நிறைவான அழகு, நுணுக்கம் செறிந்திருக்கும். ஓவியர் ரமணி அவர்களுக்கு எனது இதயபூர்வ அஞ்சலிகள்.
1 month 3 weeks ago
ஈழத்து கலைஞர்களும், சமூக சேவையாளர்களது படங்கள்
1 month 3 weeks ago
மாற்றம் ஒன்றே மாறாதது. அமெரிக்காவின் ஏற்றம் இறங்கத் தொடங்கியுள்ளது. 🤔
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு! யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா, யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன். ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை. கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர். அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர். எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர். கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை. மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால். பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள். வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக நான் கைது செய்யப்பட்டேன். தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள். கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும் எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது. ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா… யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால் பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன். நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன். சட்டம் அமல்படுத்தப்படவில்லை என.. அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார். ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்… வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது, எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1457659
1 month 3 weeks ago
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது! யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1457695
1 month 3 weeks ago
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707
1 month 3 weeks ago
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்! இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார். இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கவனிக்கப்படாதவர்களுக்கும், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும், தடைகளைத் தாண்டி ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்து படித்த பேராசிரியர் கனகராஜா, இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி வாழ்க்கை மூன்று தசாப்தங்களாக நீடிக்கிறது, 2019 இல் லெய்செஸ்டரில் துணைவேந்தராக வருவதற்கு முன்பு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மூத்த பதவிகளையும் வகித்துள்ளார். https://athavannews.com/2025/1457746
1 month 3 weeks ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல் நலகுறைபாடு காரணமாக தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த ‘மாகந்துரே மதூஷிடம்’ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த துப்பாக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராணுவத்தினரால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்தது குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். மேலும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டிருந்தது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை டக்ளஸ் தேவானந்தா கடந்த 28 ஆம் திகதி கம்பஹா மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 2026 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் தற்போது உடல்நல குறைபாடு காரணமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1457743
Checked
Mon, 02/23/2026 - 10:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed