6 days ago
சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2026/1462376
6 days ago
அமெரிக்காவின் பதிய தந்திரம் எதிரியின் ஆயதத்தை செயலிழக்கச் செய்வது. பின்னர் தாக்குவது. இது தான் வெனிசூலாவில் நடந்ததாக சொல்கிறார்கள். நாங்களும் நம்பலாமா என்று குழப்பத்தில் உள்ளோம்.
6 days ago
நான்கு பெண்களுடன்... உல்லாசமாக இருந்த, அந்த 17 வயது மாணவனின் படங்கள்... அவனது நண்பன் மூலமே, சமூக வலைத்தளங்களில் பரவியதாக சொல்லப் படுகின்றது. அந்த நான்கு பெண்களில் மூவர் பாடசாலை ஆசிரியர்கள், மற்றவர்... வேறு ஒரு மாணவனின் தாயாராம். 😵 மேலுள்ள படத்தில்... யார் அந்த, தாய் என்று தெரியவில்லை.
6 days ago
புலிகளை ஒழித்ததும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவோம் என்று உலகநாடுகள் தன்னிடம் சொன்னதாக ஐயா சம்பந்தன் சொன்னாரே?
6 days ago
அனுரவுக்கு தெரியாமல்.... சில இரண்டாம் கட்ட தாதாக்கள், ஊரில் பதுங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.
6 days ago
இப்பொது இதை மேற்கு, us, இஸ்ரேல் செய்தது. ஆட்சி கவிழாவிட்டாலும், ஆட்சியில், அதிகார பீடத்தில் எவர்,எது, எப்போது, எங்கே எந்த அதிரகாரத்தை பாவிக்கிறார்கள், எவரை தொடர்பு கொள்கிறார்கள் போன்றதை அறியவாதத்திற்கு உளவில் இதை சொல்வது மரத்தை குலுக்கி (பார்ப்பது) என்று (shaking the tree) அதாவது எதிரி தரப்பில் இலைமறை காயாக இருப்பவர்களை , அப்படியான விடயங்களை அவர்களாகவே அல்லார்க்கு அவைகளாகவே வெளிப்பட்டு அல்லது வெளிக்கொணர்ந்து அறிவததற்க்கு இரானுக்குக்ம் இது தெரியாதது அல்ல. eu இபோது கொண்டுவனஹ அரசியல் தடையில் 2-3 பேருக்கு குறிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது அனால்ம் இதில் குறிப்பாக, பின்பு அமெரிக்கா செய்யப்போகும் தாக்குதலில் ஒவொருவராக குறிவைப்பதற்கு
6 days 1 hour ago
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. அவர் தான் தமிழரசுக் கட்சியின் முதுகெலும்பு. அந்தளவுக்கு தன்னை பலமாக்கிக் கொண்டார். முதலமைச்சராக வரும்போது நம்புவீர்கள்.
6 days 1 hour ago
கோடாலிகள்…. காம்புகள் இன்றித் தனியாக ஒரு மரத்தையேனும் வெட்டி வீழ்த்தப் பயன்படுவதில்லை.
6 days 1 hour ago
உண்மையில் இந்த விமான நிலையத்தை யார் வைத்pருக்கிறார்கள்.இந்தியா அல்லது இலங்கை.
6 days 1 hour ago
சுவியர், குமாரசாமி அண்ணைக்கு.. கொழும்பில் நிறைய, நிழல் உலக தாதாக்களை தெரியும். ஆதலால்... அவர் அடி வாங்க சந்தர்ப்பமே இல்லை. 😂
6 days 2 hours ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
6 days 2 hours ago
என்ன இது சின்ன பிள்ளைதனமான கேள்வி. இதில் விபரிக்க என்ன இருக்கு. பதில் பச்சை குழந்தைக்கும் தெரியுமே? ஒரு மண்ணையும் கிழிக்கவில்லை. அனுரவும் அதே போல் ஒரு இனவாதிதான். ஜேவிபி யும் அதேதான். பைத்தியர் அருச்சுனாவை நம்பியதை கூட புதிய முயற்சி என சொல்லிவிடலாம் (இப்போதும் பைத்தியத்தை ஆதரிப்பதை ஏற்க முடியாது). ஆனால் அனுரா மாற்றம் தருவார் என தாமும் நம்பி ஏனையோரையும் நம்ப வைப்போர்.. பேவிளாத்தியள்தான். சங்கி ஆனந்தத்தோடு சேர்ந்து தமிழ் கிறிஸ்தவரை குறிவைத்து இன்னுமொரு உட்பகையை கிளப்ப வேண்டும் என்கிறீர்களா?
6 days 2 hours ago
இல்லை. Aus, Can, US, NZ, Singapore, Korea பாஸ்போர்ட்டுகளை யூகே e gates இல் பாவிக்கலாம். அதேபோல் யூகே பாஸ்போர்ட்டயும். முன்னர் ஈயூ பாஸ்போர்ட்டையிம் பாவிக்கலாம். இப்போ இல்லை. விரைவில் மீள வரும்.
6 days 2 hours ago
அப்ப பக்தைகளின் வாழ்க்கை?😂
6 days 2 hours ago
வணக்கம் வாத்தியார் .......! பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…ம்ம்ம்…. பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆ…. பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல .......! --- ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்---
6 days 2 hours ago
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் . .......! 😍
6 days 4 hours ago
அப்படியே செய்யலாம் அண்ணை. முதலில் நாங்கள் ஏனையோர் கொண்டு வரும் கொடையாளிகளின் பணத்தில் வேலைகளை மெல்ல, மெல்ல செய்ய ஆரம்பிப்போம். தொடர்சியாக நீங்கள் வேலையிட பளு குறைந்த பின் உங்கள் ஆட்களை சேர்க்கலாம். அவசரப்பட்டு செய்ய எந்த அவசியமும் இல்லை.
6 days 4 hours ago
எனவே… அவர் தான் எமது ஜனாதிபதி.
6 days 4 hours ago
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது" , பொல்லை குடுத்து அடி வாங்குவது " இரண்டில் ஒன்று நடக்கப் போகுது .....! 😗
6 days 4 hours ago
K. V. Balan · Suivre pdStoosenr7787tui0 àitH112hhrgg211i ggf55f0e2:h9,1fh725787mm · மருத்துவமனையில் இறுதி மூச்சி வாங்கும் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..." "அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?" "இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?" "நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.." " ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'" "சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி" "அது எப்படி?' "நான் சேர்த்தது 9ஐ......." 😳" (இது யாருக்காவது "என்னைப்போல" கடந்த காலத்தை நினைவூட்டினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல).......! 😃
Checked
Thu, 02/05/2026 - 13:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed