புதிய பதிவுகள்2

திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி

1 month 3 weeks ago
இணைப்புக்கு நன்றி. எம்மவர்களே .இன்னும் முழுமையாக விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. வீழ்ந்ததால் எம்மவர்களது நக்கல் நளினம் முதல் தூற்றல் என்று தொடர்கையில் சர்வதேசம் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிரல்ல. (சர்வதேசம் விளங்கிக்கொண்டு விளங்காததுபோல் நடிக்கிறார்கள் என்பது வேறுகதை) நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary

1 month 3 weeks ago
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would appreciate hearing your thoughts and comments on this work in English. ✍️ Research and Analysis: Nane Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary

1 month 3 weeks ago
Ammunition and equipment carried on the Wave Rider class vessels Boxes of ammunition include ammunition for GPMG, .50 BMG, and cannons. These were kept in the lower deck of the boat. Left to Right, top row: Salt biscuit packet, Water bottles, JRC JMA-2343, 2 walkie-talkies, 2 military communication headset, GARMIN 152 (so a GA 29 External Antennae was also used), ICOM AT-140 HF Automatic Antenna Tuner | Left to Right, bottom row: Cobra 29 LTD Classic 40 Channel Custom CB Radio W/MICROPHONE, ICOM IC-M700PRO24 C Marine SSB Radio Left to Right, notably: Ammunition boxes, one T-56 rifle with 4 mags and a assualt vest, torches. Top to Bottom: Tamil Tigers indigenous produced bullet -resistant vests and helmets. This is a life jacket.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

1 month 3 weeks ago
அது ஈழம் புரச்சி மக்கள் ஜனநாயகம் என்ற பெயர்களில் பல இயக்கங்கள் அதனால் தான் இந்த குழப்பம் தமிழர்களை மண்டையில் போட்டு கொலை செய்தவர் சுரேஸ்பிரேமச்சந்திரன்

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

1 month 3 weeks ago
அந்த வாழை மரங்களும் முறியாமல் நிக்குதோ என்று கேட்டுச் சொல்லவும்

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

1 month 3 weeks ago
ஏதாவது அவசரகால முன் ஆயத்தங்கள் செய்துள்ளீர்களா? அமெரிக்காவில் வாழும் கள உறவுகள் கவனமாக இருங்கள், உங்களிடையே ஒரு தொடர்பினை பேணினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன் நிலமை மோசமாகாது என நம்புகிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
நன்றி புலவர், கிருபன் இது விளையாட்டு திரிதான் ஆனால் போட்டி விதிகள் பின்பற்றுவது போட்டியினை இலகுவாக நடாத்த உதவும், இந்த போட்டி இல்லாவிட்டால் என்ன அடுத்த போட்டியில் கலந்து கொள்ளலாம்தானே.

"மூன்று கவிதைகள் / 16"

1 month 3 weeks ago
"மூன்று கவிதைகள் / 16" 'புகைப்படக் கவிதை' அருகம் விரிகுடா எம்மை அழைத்தது அருகில் பேத்தி சறுக்கி விளையாடுகிறாள்! பருவக் காற்று முகத்தைத் தடவுது புருவம் உயர்த்தி அழகை அனுபவிக்கிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... 'காவலாய் நிற்கும் மரங்கள்' காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே காற்றாய் மறைந்து போனது ஏனோ? காடுகள் அழித்து நகரம் வந்ததோ கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ? கோலம் மாறும் மனித சமூகம் ஆல மரத்தின் நிழல் அறியாதோ? உலகம் தேடும் வானிலை மாற்றம் நலமாக இனி எமக்கு அமையாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................... பேருந்துப் பயணங்களில்' பேருந்துப் பயணங்களில் பார்த்த முகம் அருகில் இருக்கையில் கண்ட சொர்க்கம் புருவம் உயர்த்தி மலர்ந்த புன்முறுவல் பருவம் கொட்டிய பெண்மை வனப்பு திருடுதே இதயத்தை! தேடுதே அவளை!! மஞ்சள் சேலையில் பயணத்தில் கண்டவள் வஞ்சகம் இல்லா நட்புத் தந்தவள் நெஞ்சம் குளிர அன்பாய்ப் பேசியவள் கொஞ்சும் பார்வையால் மனதைக் கிளறியவள் தஞ்சம் தருவாளா? வாழ்வு கொடுப்பாளா?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1958 ["மூன்று கவிதைகள் / 16" https://www.facebook.com/groups/978753388866632/posts/33022090424106179/?

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

1 month 3 weeks ago
2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை. நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை குளிர்காலப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடுமையான இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் 4.3 அங்குலம் (11 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரகால நிலை ஜனவரி, 2022க்குப் பிறகு இதுவே அதிகபட்சமான பனிப்பொழிவு என அந்நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் 7.5 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. புயலுக்கு முன்னதாக, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்திந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சுமார் 1500இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். Tamilwin2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை -...நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அ...இப்போது நியூயோர்க்கில் நிற்கிறேன். 8 அங்குல பனிப்பொழிவு என்றார்கள். எமது இடத்தில் 5" அடித்துள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
கிருபன், இன்னொரு தவறு நடந்துவிட்டது, கூகிள் படிவத்தில் இருந்த x, y தெரிவுகள் அதில் இருந்ததனை அப்படியே முதலில் பதிந்திருந்தேன் (கேள்வி 53 முதல்), அதனை திருத்த முயன்ற வேளை எனது சொந்த தெரிவினை போட்டு விட்டேன் (அதாவது முன்னர் இருந்த நிலையில் சில மாற்றங்கள்), அதனால் நான் போட்டியின் விதியினை மீறியுள்ளதால் என்னை போட்டியில் இருந்து நீக்கி விடுங்கள், ஆனாலும் இந்த திரியில் ஆர்வமாக கலந்து கொள்வேன்.

திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி

1 month 3 weeks ago
“சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார். அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார். தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார். எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள். அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார். எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும் அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம் எங்களுக்கு எதிராக போராடிய இவரால் எப்படி திலீபனுக்கு பூ வைக்க முடிகிறது என்று அதற்கு அவர் சொன்ன பதில் அவர் கூலிக்காக வந்த படியால் எமது தியாகம் பற்றி அறியாதவராக இருந்தார். எங்களிடம் வந்த பிறகு தான் எமது போராட்டத்துக்கு தனது பங்கும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். அவர் மட்டுமல்ல அவரது நாயும் எங்களுடன் தான் இருக்கிறது. இவர் பூ வைக்க மறந்தாலும் அவரின் நாய் பூ கொண்டு வந்து வைத்து விட்டுப் போகும். என்றார். எதிரியால் கூட விளங்கிக் கொண்ட எமது போராட்டத்தை சர்வதேசம் இன்றும் விளங்காமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.” நினைவுபகிர்வு – துன்னாலை செல்வம்

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 3 weeks ago
தமிழர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை, சிங்களவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற கடும் இனவாதியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாவின் குரலுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே அரசியலில் விதைக்கப்பட்ட நச்சு விதைகள்.

1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்

1 month 3 weeks ago
1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான், வாசு, அஜித்(பாம்பன்), பரன், றொபோட்(வெள்ளை) ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார். அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது(zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது.தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும். (இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்) அ.சேரா

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
மன்னிக்கவும் தவறு திருத்தப்பட்டுள்ளது, எனது சோம்பல்தனம் கேள்வியினை கூட சரியாக வாசிக்கவில்லை ஏதோ போட்டியில் கலந்தால் போது எனும் மனநிலையில் கூகிள் படிவத்தில் சேமிக்கப்பட்ட உதாரணத்தினை தெரிவு செய்திருந்தேன், தற்போது திருத்தப்பட்டுள்ளது என கருதுகிறேன், சிரமத்திற்கு மன்னிக்கவும். நீங்களும் x,y என தெரிவு செய்துள்ளீர்கள் என கருதுகிறேன் மேலே கிருபன் கேள்வி 53 தொடங்கும் போட்டிகளுக்கு நாடுகளை குறிப்பிட்டால் வசதியாகவிருக்கும் என கூறியுள்ளார் , போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு

1 month 3 weeks ago
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது. காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 28 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும்,பெண் போராளிகள் 23 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும் இருத்தல் முக்கியமானது. போராளிகள் தமக்கிடையே காதல் ஏற்படுமாயின் அது பற்றிய விபரத்தினை எழுத்து மூலம் துறைப் பொறுப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். துறைப்பொறுப்பாளர் அதனை ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். திருமண ஏற்பாட்டுக் குழு கூடிய அதைப்பற்றி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த பின் அந்த விபரத்தை தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கும். தேசியத்தலைவர் அவர்களது அங்கீகாரம் கிடைத்தபின் ஆண்,பெண் போராளிகளின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண சம்மதத்தோடு திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்யும். திருமண நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான உறவினர்கள், அத்தோடு துறை சார்ந்த போராளிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக அந்த திருமணம் இடம்பெறும். விடுதலைப்புலிகளால் நடாத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் தாலி அணிதலும் முக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தங்கத்திலான தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருக்கும். வழமையாக திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையிலேயே இந்தத் திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.சில மூத்த தளபதிகளின் திருமணங்களில் தேசியத் தலைவரும் திருமதி மதிவதனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். சில போராளிகளின் காதல் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன். நிதர்சனம் பகுதியில் கடமை புரிந்த தவா,எழில் ஆகியோர் களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. தவா அவர்கள் இவ்விடயத்தை திருமண ஏற்பாட்டுக் குழுவுக்கு அறியத் தந்தார். குழுவில் அங்கம் வகித்த புதுவை இரத்தினதுரையும் நானும்(தேவர் அண்ணா) தவா,எழில் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினோம். அப்போது எழிலனின் பெற்றோர் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அவரது மாமியார் மானிப்பாயில் இருப்பதாக எழில் தெரிவித்தார். புதுவை அவர்களும் நானும் சென்று மாமியாரைச் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறி அவர் மூலம் பெற்றோருக்கும் அறியத்தரப்பட்டு தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியோடு அந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றது. இதே விதமாக இன்னும் சில போராளிகளின் திருமணங்களும் நாம் போராளிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களோடு கலந்து பேசி அனைவரினதும் பூரண சம்மதங்களுடன் இடம்பெற்றிருக்கின்றன. புலிப்போராளிகளது திருமணங்களுக்கு தமிழீழ திருமண பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் சபையினர் முன்பாக ஆணும் பெண்ணும் உறுதிமொழிகளைக் கூறி கையொப்பங்கள் இடப்பட்டு சாட்சிகளின் ஒப்பங்களோடு அவை அங்கீகரிக்கப்பட்டன. இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் குடும்ப பராமரிப்பு இறுக்கமான நிதியை மாதாமாதம் இயக்கத்தின் நிதிப் பிரிவு வழங்கி வந்தடையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். --> தேவர் அண்ணா
Checked
Mon, 02/23/2026 - 01:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed