1 month 3 weeks ago
சுனாமி ஆழிப்பேரலை நினைவுகூரல் இன்று நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு Published By: Vishnu 26 Dec, 2025 | 01:15 AM (இராஜதுரை ஹஷான்) சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன. 2005 முதல், டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக, தித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'தேசிய பாதுகாப்பு தினத்தை' முன்னிட்டு, சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தீவு முழுவதும் காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். எனவே, தேசிய பாதுகாப்பு தினமான 2025 டிசம்பர் 26 ஆம் தேதி காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை, தீவு முழுவதும் சுனாமி பேரழிவு மற்றும் பல்வேறு பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துமாறும், அன்றைய தினம் நடைபெறும் முக்கிய நினைவு விழா மற்றும் மாவட்ட செயலகங்களால் நடத்தப்படும். https://www.virakesari.lk/article/234423
1 month 3 weeks ago
ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனாமி காரணமாக மெரீனா கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. 'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும். சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,26 டிசம்பர் 2004, தாய்லாந்தில் சுனாமி அலைகள் கரையை நோக்கி வருவதைக் கண்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,MCT / Contributor படக்குறிப்பு,சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி பட மூலாதாரம்,PRAKASH SINGH / Stringer படக்குறிப்பு,2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்த அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத் பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி பட மூலாதாரம்,U.S. Navy / Handout படக்குறிப்பு,இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பட மூலாதாரம்,STR / Stringer படக்குறிப்பு,தங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனீசிய கிராம மக்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண்டு தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrjwlv2n4wo
1 month 3 weeks ago
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன் 26 Dec, 2025 | 10:41 AM தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது. ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என்றார். https://www.virakesari.lk/article/234447
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். "வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும். "எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும் சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா" இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன். இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....
1 month 3 weeks ago
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்."
1 month 3 weeks ago
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "திருமலை பகலினில் ஓரழகு இரவினி லேயிது பேரழகு அலைதரும் நீரழகு - இது தமிழரின் விடுதலைத் தலைநகரு!"
1 month 3 weeks ago
ஆஞ்செல்கை அ சங்கடம் மன்னார் வளைகுடா
1 month 3 weeks ago
கட்டுத்தோணி ஈழத்தீவு
1 month 3 weeks ago
பிளாவு திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.
1 month 3 weeks ago
பிளாவு இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.
1 month 3 weeks ago
பிளாவு சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.
1 month 3 weeks ago
பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர். .
1 month 3 weeks ago
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட வள்ளம் ஒன்று
1 month 3 weeks ago
வகை பெயர் தெரியவில்லை சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.
1 month 3 weeks ago
வீர வணக்கங்கள்.
1 month 3 weeks ago
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் இவை அனைத்தும் தமிழராலும் சிங்களவராலும் பாவிக்கப்பட்டன. மேலிருந்து கீழாக: பட்டை சங்கடம்/ ஆஞ்செல்கை வள்ளம் பிளாவு
1 month 3 weeks ago
கள்ளத்தோணி கோடியக்கரை, தமிழ்நாடு 1900<
1 month 3 weeks ago
சோழமண்டல கடற்கரையில் ஓடிய தமிழரின் குள்ளத்தோணி/ யாத்திரை தோணி: இதற்கும் தூம்புக்கட்டை (outrigger) உண்டு. எனினும் இதனது மிகை கட்டமைப்பு (super structure) கோடியக்கரையிலிருந்து உருவோடிய (sailed) கள்ளத்தோணியின் (படத்திற்கு அடுத்த மறுமொழிப்பெட்டியைக் காண்க) கட்டமைப்பை ஒத்து வருகிறது. எனினும் இவையிரண்டும் ஒன்றல்ல என்பது இரண்டினது கலவோடு (hull), முற்பாய், மற்றும் சுக்கான் ஆகியவற்றை நோக்குவதன் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தமிழரின் இக்கலத்தின் படிமம் லெப். கொ. சோமசிறி தேவேந்திர அவர்கட்கு கிடைக்கப்பெறாமையால் தான் அவர் இது முற்றிலும் ஈழத்தீவில் மட்டுமே பாவிக்கப்பட்ட கடற்கலம் என்ற முடிவிற்கு வந்தாரா என்பது தெரியவில்லை. சிங்களவரின் யாத்ர ஒருவா: தமிழரின் மிகை கட்டமைப்பிற்கும் சிங்களவரின் மிகை கட்டமைப்பிற்கும் வேறுபாடுகள் தெளிவாக தெரிகிறது; சிங்களவரின் மூடும் கட்டமைப்பு ஏறத்தாழ முற்றாக மூடியுள்ளது. தமிழரினது 75 வீதமே மூடியுள்ளதோடு, சிங்களவரின் மிகை கட்டமைப்பின் மேற்புறத்திலுள்ள வீடு போன்ற கூறு தமிழரின் கலத்தில் காணப்படவில்லை. கீழுள்ள படிமமானது சிங்களவர் மற்றும் தமிழருக்குப் பொதுவான இக்கடற்கலத்தின் விரிவான விளக்கமாகும். படிமப்புரவு: Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843
1 month 3 weeks ago
குள்ளத்தோணி/ மகா ஒருவா, யாத்ர ஒருவா கற்பிட்டி, புத்தளம் இதை தமிழில் யாத்திரை தோணி என்றும் அழைப்பர் (Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell). விடையம் என்னவெனில் ஒருவாக்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் லெப். கொம். சோமசிறி தேவேந்திர - இத்தோணியானது கற்பிட்டியில் நிற்பதால் - இதனை சிங்களவரின் கடற்கலம் என்று தனது ஆராச்சியில் குறித்துள்ளார். இதனது தெளிவான படிமம் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இது போன்ற கடற்கலங்கள் சோழமண்டல கடற்கரையிலும் ஓடியுள்ளதாக சேர்ப்பன்(Admiral) பாரிஸ் அவர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதோடு தமிழருக்கும் சிங்களவருக்கும் இக்கடற்கலங்கள் பொதுவானவை என்றதோடு இவை தொடர்பான விரிவான ஓவியம் ஒன்றையும் தந்துள்ளார் (Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843) அடுத்த மறுமொழிப் பெட்டியைக் காண்க. படிமப்புரவு: Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number
Checked
Sun, 02/22/2026 - 16:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed