புதிய பதிவுகள்2

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

2 months 1 week ago
கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு Published By: Vishnu 03 Dec, 2025 | 05:51 PM சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன. கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/232362

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 1 week ago
புதிதாக ஏதும் சொல்வீர்கள் என்று பார்த்தால் அதே பழைய கதை தான்: "இன்ரர்னெற்றில் இருந்து அமெரிக்கர்கள் அகற்றி விட்டார்கள் ( ரஷ்யாவிற்கு இன்ரர்னெற்றைத் தொடவே வசதியில்லை, இன்னும் ரின் பால் பேணியில் நூல் கட்டிய போன் தான்! எனவே ரஷ்யாவால் மீள ஏற்ற முடியாது ஆவணங்களை😂!) "இந்தி தெரியாது போடா!" என்பவனுக்கு உண்மையிலேயே இந்தி தெரியாமலும் இருக்கலாம்!

வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

2 months 1 week ago
அவருடைய தரப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார் ரவீந்திரன்................ ஒரு வக்கீல் போல ஒரு தரப்பிற்காக வாதாடியிருக்கின்றார். சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். அந்தச் சொற்கள் இந்தக் கட்டுரையை ஒரு 'சமூக ஊடக அலட்டல்' என்ற அளவிற்கு தரமிறக்கி விடக்கூடும். குறிப்பிடப்பட்டிருக்கும் சில வருடங்களும் தப்பானவை என்றே தெரிகின்றது, உதாரணம்: அமெரிக்க உளவுத்துறையினால் அமெரிக்க - சீன யுத்தம் தொடங்கும் வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு.............................

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 months 1 week ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை Dec 4, 2025 - 06:15 PM ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டிற்காக தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும், தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmirfi8vo02dzo29n31trnb01

இலங்கை: மண்சரிவில் புதைந்த சடலங்களை உறவினர்களே தேடி எடுக்கும் அவலம் - பிபிசி தமிழ் நேரில் கண்டவை

2 months 1 week ago
படக்குறிப்பு,தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என சாந்தகுமார் கூறுகிறார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன பலரது சடலங்கள் இன்றும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் நிலையில், அவற்றை மீட்க முடியாத சூழலை உறவினர்கள் எதிர்கொண்டுள்ளனர். அப்படி மண்சரிவு ஏற்பட்ட பதுளை பகுதியில் என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி தமிழ் களத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி சென்றது. அங்கு பிபிசி நேரில் கண்டவை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பதுளை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பதிவான பகுதிகளுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற தினம் வரை மீட்புக் குழுவினர் செல்லவில்லை என்பதை அறிந்தோம். குறைந்தபட்சம் மண் அகழும் இயந்திரங்கள்கூட அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர். மண்சரிவு ஏற்பட்டு மண்ணில் பலர் புதைந்த பல இடங்களில், தமது உறவினர்களின் சடலங்களை உறவினர்கள், நண்பர்கள், பொது மக்களே தோண்டி எடுத்தனர். இது தவிர்த்து, மண்ணில் புதையுண்ட மக்களின் சடலங்களைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் உதவியோ, மீட்புக் குழுக்களின் உதவியோ அல்லது அரசாங்கத்தின் வேறு உதவிகளோ கிடைக்கவில்லை என்று பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். உறவினர்களை தோண்டி எடுக்கும் பரகல்ல மக்கள் நாவலபிட்டி நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை கிராமமே பரகல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பஷ்தூன் மக்கள் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தபோது நடந்தது என்ன? திருப்பரங்குன்றம்: 'மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்' - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு 'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி? யானைப் படையை ஒட்டகங்கள் மூலம் தந்திரமாக சிதறடித்து டெல்லியை வென்ற 'தைமூர்' End of அதிகம் படிக்கப்பட்டது பரகல்ல பகுதியில் பெரும்பாலும் தேயிலை தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்தவர்களில் பரகல்ல மேற்பிரிவில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் லயின் அறை தொகுதி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த அந்த லயின் அறைகள் மீது கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாரிய கற்களுடன் கூடிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் இன்றும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பரகல்ல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்ட மக்களை மீட்பதற்கு தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடும் மழையையும் பொருட்படுத்தாத, அதே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தங்களைத் தாங்களே தோண்டியெடுக்கும் முடிவை எடுத்துள்ளனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து தமது உறவுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு தேடிய தருணத்தில் பலரது சடலங்களை அவர்களால் மீட்டெடுக்க முடிந்தது. பின்னர், மீட்கப்பட்ட சடலங்கள் அந்தப் பிரதேசத்திலேயே மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு கோரிக்கை பரகல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பிபிசி குழு டிசம்பர் 3ஆம் தேதி சென்றிருந்தது. லயின் அறைகள் மீது பாரிய கற்கள் வீழ்ந்த காட்சிகளை நாங்கள் பதிவு செய்தபோது, அங்கிருந்த கற்களுக்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பாரிய கற்கள் காணப்படுகின்றமையினால், கற்களைத் தம்மால் உடைக்க முடியாதுள்ளது என்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இந்தக் கற்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் மண் அகழும் இயந்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரதேச மக்கள், "மண் அகழும் இயந்திரங்கள் கிடைக்குமாக இருந்தால் கற்களுக்குக் கீழுள்ள சடலங்களைத் தோண்டி எடுத்து, முறைப்படி அடக்கம் செய்ய முடியும்" என்று குறிப்பிடுகின்றனர் பிபிசி குழு அடையாளம் கண்ட சடலங்கள் பரகல்ல பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில், பிபிசி தமிழ் செய்தியாளர்களின் கால்களுக்குக் கீழே ரத்தம் கசிந்திருப்பதை அவதானித்திருந்தனர். அந்த இடத்தில் சற்று மண்ணை அப்புறப்படுத்திய தருணத்தில், அந்த இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமொன்று மண்ணுக்குள் புதையுண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதையடுத்து, பிரதேச மக்களுக்கும், போலீசாருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். பிரதேச மக்கள் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், யுவதியின் கால்களுக்கு அருகில் குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்ற தருணத்தில், மற்றுமொரு பெண்ணின் சடலமும் அந்த இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டிருந்தது. இவ்வாறு குறித்த இடத்திலிருந்து மூன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைக்கப்பட்டன. பின்னர் அரச அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பிரதேசத்தில் குழியொன்று தோண்டப்பட்டு, முறைப்படி அடக்கம் செய்ய பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். மக்கள் கூறுவது என்ன? தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தகுமார், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். ''அரசாங்கத்தில் சடலங்களை எடுக்க யாரும் இன்றும் எந்த உதவிகளையும் செய்யவில்லை. மேலே சாலை இருக்கின்றது. எங்களுக்கு இப்போது பெக்கோ (மண் அகழும் இயந்திரம்) ஒன்று தேவைப்படுகின்றது. பெக்கோ ஒன்று கொடுத்தார்கள் என்றால், மண்ணுக்கு அடியிலுள்ள ஆட்களை மீட்டெடுக்கலாம். நிதி, சாப்பாடு கிடைக்கின்றது. ஆனால், இதற்கு அரசாங்கம் சார்பில் பொறுப்பானவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் முக்கியமாக கேட்பது பெக்கோ இயந்திரம் ஒன்று மாத்திரமே...'' என சாந்தகுமார் தெரிவித்தார். அயல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பரகல்ல பகுதி மக்களுடன் இணைந்து சடலங்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படக்குறிப்பு,மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் சுதா அவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அயல் பிரதேச இளைஞரான சுதாவும், பிபிசி தமிழிடம் பெக்கோ உதவியோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் பக்கத்து ஊரு. எங்களுடைய ஊரில் ஒரு பிரிவுதான் இது. இது நடந்து 7 நாட்கள் இருக்கும். அரசாங்கத்தால் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார். மேலும், "முதல் நாளே எங்களுக்குச் சொல்லியிருந்தால், எங்களுடைய பசங்களை (இளைஞர்கள்) வைத்து நாங்களே தோண்டி எடுத்திருப்போம். மூன்று நாட்கள் கழித்துதான் எங்களுக்குச் சொன்னார்கள். எங்களுடைய பசங்கள் வந்துதான் ஐந்து சடலங்கள் போலத் தோண்டி எடுத்தோம்" என்றார். பெக்கோ இயந்திரமோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனக் கூறிய சுதா, "அரசாங்கம் முடிவு ஒன்றை எடுத்து, இந்த இடத்தைச் சுத்திகரித்து தந்தால், நல்லதொரு உதவியாக இருக்கும். சடலங்களை நாங்களே தோண்டி எடுக்கின்றோம். போலீசாரிடமிருந்து எந்த உதவியும் இல்லை. நாங்களே குழியை வெட்டிப் புதைக்கின்ற நிலைமைதான் வந்திருக்கின்றது. இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாது'' எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5q49pw0jzo

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

2 months 1 week ago
காட்சி 2 (அமிர்தம் அம்மன் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.) அமிர்தம்: அம்மாளாச்சி, நான் சின்னனாக இருந்தபோது சின்னப்பிள்ளைகளை ஒருவரும் மதிக்கவில்லை. எனக்கு வயசானப் பிறகு வயசு போனவர்களை ஒருவரும் மதிக்கினம் இல்ல. பூமி சுத்துது, நான் மட்டும் ஆணி அடிச்சு வைச்ச மாதிரி அப்பிடியே நிற்கிறன். ஆயிரம் கண்ணில ஒரு கண்ணை திறந்து என்னைப் பார் தாயே.................... (அமிர்தம் கண்ணை மூடி, முணுமுணுத்து கும்பிடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கும்போது அவரின் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.) அமிர்தம்: (ஆச்சரியமாக) ம்ம்ம்….திடீரென்று வந்து பக்கத்தில நிற்கிறீங்கள், புதுசா வேற இருக்கிறீங்கள், ஆனா பழகின மாதிரியும் இருக்குது….......... எங்கயிருந்து வாறீங்கள்? பாரதம்: (கோயில் உள்ளே கையை காட்டி) அங்கேயிருந்து தான் நான் வருகிறேன். அமிர்தம்: யார் நீங்கள் ஐயரோட வீட்டுக்காரியே.............. ஐயரின் ஒரு ஆளை எனக்கு தெரியும்.......... ஐயருக்கு இன்னுமொரு வீடு இருக்கிற சங்கதி எனக்கு தெரியாது............ அதுவும் சரிதான், இதெல்லாம் என்ன சொல்லிச் செய்யிற விசயமே..................... (பாரதம் சிரிக்கிறார்). பாரதம்: நான் ஐயரோட வீட்டுக்காரியில்ல........... ஐயனோட வீட்டுக்காரி. (அமிர்தம் எதுவும் புரியாமல் முழிக்கிறார்). அமிர்தம்: எந்த ஐயன்…. பாரதம்: அண்டசராசரத்தையும் படைத்து, படைத்ததெல்லாவற்றையும் அழித்து, அழித்ததை எரித்து, எரித்ததை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு திரியும் அந்த ஐயனோட வீட்டுக்காரி நான். அமிர்தம்: இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டு, கையில ஒரு வரத்தை கொடுத்துவிடாதே அம்மா................ பாரதம்: எல்லா மானிடருமே முதலில் எங்களிடம் கேட்பது வரம்தான்........... உனக்கு ஏன் வேண்டாம் என்கிறாய், அமிர்தம்? அமிர்தம்: கடவுளிடம் வரம் வாங்கி, இதுவரை இந்த பூமியில நல்லா வாழ்ந்த ஒரு மனிதனும் கிடையாது. கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் பின்னால் பிடுங்கி விடுவீர்கள். இருந்தததையும் இழந்து, ஓடி ஒழிந்து, அழிந்தவர்தான் எல்லோரும். பாரதம்: நன்றாகவே பேசுகிறாய் அமிர்தம். ஆனால் நான் இப்போது வரம் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் சில நாட்கள் உன்னோடு தங்கியிருக்க வந்துள்ளேன். அங்கு எனக்கு நிம்மதியே இல்லை. அமிர்தம்: அது எப்படியம்மா முடியும்? கடவுள் என்று தெரிந்தாலே உன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களே. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையே அறைக்குள் வைத்து படம் எடுத்து, அல்லோலகல்லோலம் செய்தார்கள். முதலில், நீங்கள் யாருடைய கடவுள் என்கிற பிரச்சனையிலயே உலகம் அழிந்துவிடும்................. பாரதம்: நீ நான் கடவுள் என்று எவரிடமும் சொல்லாதே. நான் சாதாரண மானிடர் போல இருந்துவிட்டு போகிறேன். அமிர்தம்: அது சரி தாயே............. நீங்கள் இங்கு வரவேண்டிய அளவிற்கு அங்கு என்ன பிரச்சனை? பாரதம்: ஒன்றா, இரண்டா சொல்லுவதற்கு........... சின்னவனுக்கும் பெரியவனுக்கும் சண்டை................ ஒரு மாம்பழத்திற்காக கோவணத்தோட ஓடித் திரிகிறான் சின்னவன். இவர் என்னவென்றால், தலையில் கூட ஒருத்தியை வைத்திருக்கிறார். நீங்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், மிக ஒற்றுமையாகவும், நாங்கள் படைத்த எல்லா உயிர்களிலும் மிகச்சிறப்பாக வாழ்கிறீர்கள். அதுவும் தான் எப்படியென்று பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன். (இருவரும் நடக்கிறார்கள்) அமிர்தம்: மனிதர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல தெரிகிறது......... சரிதான், இருநதுதான் சில நாட்கள் பார்த்து விட்டு போங்கள். அதுசரி உங்களை யாரென்று நான் மற்றவர்களிடம் சொல்லுவது? பாரதம்: உன் பெரியம்மாவின் மகள் என்று சொல்லு. பெயர் கூட பாரதம் என்று சொல்லிவிடு. அமிர்தம்: ம்ம்ம்… துருவித் துருவி கேட்பார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று எக்காரணத்தைகொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் சித்துவிளையாட்டுக்கள் எதுவும் இங்கு காட்டக்கூடாது. பாரதம்: நானே சித்துவேலைகளினால் மனம் நொந்துபோய் இங்கு வந்துள்ளேன். எதுவுமே நடக்காது, நீ பயப்படத் தேவையில்லை. அமிர்தம்: என்னுடைய குடும்பத்தைப் பற்றீத் சொல்லத் தேவையில்லைம், எல்லாமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாரதம்: சில விசயங்கள் எனக்கு புரியவில்லை. உனக்கு நல்ல பெயர் அமிர்தவல்லி, உன்னுடைய மகளுக்கும் பார்வதி என்றுஎன்னுடைய பெயர்தான், உன் மகளின் மகளுக்கு மட்டும் லக்க்ஷனா என்று…. அமிர்தம்: இதுதான் மனிதனின் சின்ன சின்ன சித்துவேலைகள். என் மருமகனுக்கு நடிகை சுலக்க்ஷனாவை நல்லா பிடிக்கும், ஆனால் அப்படியே வைக்கமுடியாது, பார்வதி கொப்பரத்தில ஏறி, கொடி பிடித்துவிடுவாள். அதுதான் இப்படி ஒரு சின்ன மாற்றம். எல்லா இடமும் ஒரே கதைதான், அங்கே தலையில வைத்திருந்தால் இங்கே தலைக்குள்ள வைத்திருப்பார்கள். உரிக்க உரிக்க தோல் கழட்டும் வெங்காயம் போன்றவர்கள் மனிதர்கள்.......... கண்ணில கண்ணீர் மட்டும் தான் மிஞ்சும்............... (தொடரும்........................)

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

2 months 1 week ago
ஜமெய்கா மெலிசா புயல்; சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி 02 Dec, 2025 | 02:11 PM ஜமெய்காவில் தாக்கிய மெலிசா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதிகபட்சம் 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. CAF-லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, கரீபியன் அபிவிருத்தி வங்கி மற்றும் இடையாசிரியன் அபிவிருத்தி வங்கி ஆகியன இந்த நிதியுதவியில் பங்குபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. புதிய நிதியுதவியில் அதிகபட்சம் 3.6 பில்லியன் டொலர் அரசு நிதியுதவியும் CAF, அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஒவ்வொன்றும் 1 பில்லியன் டொலர் அளவில் பங்களித்துள்ளனர். ஜமெய்காவில் கடந்த 170 ஆண்டுகளில் பின்னர் தாக்கிய புயலில் சுமார் 50 இலட்சத்திற்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜமெய்காவின் எதிர்கால அனர்த்தங்களுக்கு எதிரான சக்தியை வலுப்படுத்தும் வகையில் இந்த நிதிவுதவிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232233

அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது ஜப்பான்

2 months 1 week ago
Published By: Digital Desk 3 04 Dec, 2025 | 04:46 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது. நேற்று (03) நாட்டிற்கு வந்தடைந்த இந்த நிவாரண உதவி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் JICA இலங்கை தலைமை பிரதிநிதி Kenji KURONUMA ஆகியோரால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் அவர்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான பல்வேறு அத்தியாவசிய மனிதாபிமான பொருட்கள் இதில் அடங்குவதோடு, 200 கூடாரங்கள், 1,200 போர்வைகள், 1,200 மெத்தைகள், 20 Plastic Sheets (Tarpaulin), 200 சிறிய நீர் கொள்கலன்கள் (ஜெரி கேன்கள்) மற்றும் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இதில் அடங்குகின்றன. இந்தப் பொருட்கள் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. https://www.virakesari.lk/article/232455

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2 months 1 week ago
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்! நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பிலோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர். வாய்க்கால் தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியாது. அதன் போது முதலில் இந்த வாய்க்கால் தொடர்பில் கோப்பாய் பிரதேச சபைக்கு எதுவும் தெரியாது. அதாவது வெட்டினதும் தெரியாது , மூடினதும் தெரியாது. இது பிரதேச சபைகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதனை தெளிவு படுத்துவதாக தெரிவித்தார். வாய்க்காலை மூடிய தரப்பு அதன் பின்னர் வாய்க்காலை தாம் தான் மூடியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். தமது பகுதிக்குள் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் நிற்கிற நிலையில், புதிதாக ஒரு பகுதி வெள்ள நீரை மேலும் எமது பகுதிக்கு அனுப்புவதனை ஏற்க முடியாது. அதனாலயே மூடினோம். எந்த வெள்ளநீர் எமது பிரதேசத்தால் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி நீரேந்து பிரதேசம் வரையில் ஒழுங்கான வடிகால் அமைப்பை செய்து. அதனூடாக வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதனை விடுத்து தாழ் நிலங்களில் வசிக்கும் எமது காணிகளுக்குள் வெள்ளநீரை மடைமாற்றி விட கூடாது என தெரிவித்தனர். மூன்று வருடங்களாக தான் வெள்ளம் அதேநேரம் , வெள்ள வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது , கடந்த மூன்று வருடங்களாக தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். யாழ்ப்பாணத்தையே உலுக்கிய நிஷா புயலின் போது கூட எங்கள் வளவுக்குள் வெள்ளம் நிற்கவில்லை. தற்போது வெள்ளம் நிற்க காரணம் பருத்தித்துறை வீதி புனரமைப்பின் போது இந்த பிரதேசத்தில் இருந்த நான்கு மதகுகள் முற்றாக மூடி விட்டார்கள். தற்போது தற்காலிக வாய்க்கால் வெட்டிய இடத்தில் கூட வடிகால் வாய்க்கால் இருந்தது. வீதி அகலிக்கும் போது , மூடி விட்டார்கள். அதுமட்டும் இன்றி , தற்காலிக வாய்க்காலை அமைத்து வெள்ளநீரை விட்ட மதகு புனரமைப்பின் போது மதகுக்கு அருகால் , மண் போட பட்டு தற்காலிக வீதியை அமைத்திருந்தனர். மதகு கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் , அந்த மண் பாதையை அகற்றாமல் சென்று இருந்தனர். அதனை அடுத்து அதற்கு அருகில் உள்ள தனியார் , அப்பகுதியை சுவீகரித்து மதிலையும் கட்டி விட்டார். அதனால் வீதியால் வழிந்தோடி வந்த நீர் தனியாரின் மதிலினாலும் , மதகு கட்டுவதற்காக போடப்பட்ட மண் மேட்டினாலும் நீர் ஓடாது எமது பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனாலயே இம்முறை மதகு வரையில் சுமார் 30 மீட்டர் தூரம் வாய்க்கால் போன்று , மண்ணை வெட்டி விட்டோம். என தெரிவித்தனர். வீதி புனரமைப்பின் போது மதகுகள் பாலங்களை மூடி விட்டார்கள் அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவிக்கையில் , குறித்த வீதியில் காணப்பட்ட மதகுகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்ப்பில் நாம் RDA யிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் தமக்கு வீதிக்கு மாத்திரமே நிதி கிடைப்பதாகவும் , மதகுகள் பாலத்திற்கு வேறாக ஒதுக்கப்படும். இந்த இடத்தில் ஒரு மதகுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர். எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக நீரேந்து பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் நீர் , செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் தேங்கும். தற்போது அப்பகுதி மத்திய அரசின் அனுமதிகளுடன் மண் போட்டு நிரப்பபட்டு வருகிறது. மத்திய அரசு காலம் காலமாக அபிவிருத்தி எனும் பெயரில் நீரேந்து பிரதேசங்களையே நிரவி கட்டடங்களை கட்டி வருகிறது. அவற்றினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் , மாகாண சபை , உள்ளூராட்சி தேர்தலைகளை தாமதப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட இந்த வெள்ள நீர் எமது பகுதியால் வெளியேறுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி பகுதியில் இருந்து வடிகால் அமைப்பினை செய்து உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கையால் இன்னொரு தரப்பு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள கூடாது. அந்தவகையில் நேற்றைய தினம் இந்த இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் வருகை தந்து , பார்த்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும் , அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதால் , உடனடியாக மத்திய அரசிடம் இருந்து நிதியினை பெற்று இப்பகுதியில் எந்த தரப்பு மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய வடிகால் அமைப்புக்களை மேற்கொண்டு உரிய முறையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1455174

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 1 week ago
மோடி சார்.... விகாரை கட்டுவதற்கு, ஒரு கப்பல் செங்கலும் தந்து உதவும் படி வேண்டுகின்றோம். இப்படிக்கு, ஆமத்துறு. 😂

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 1 week ago
ஒரு நீண்ட அலசல் பா.ரவீந்திரனால் எழுதப்பட்டுள்ளது. (என்னைப் போன்ற) லிபரல் எலீற்ஸுக்கு ஏற்றுக்கொள்ள கடினமான ஒன்று!

மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க வடகீழ் பருவமழை முடியும் வரை காத்திருக்க வேண்டும் – நீர்ப்பாசனப் பணிப்பாளர்

2 months 1 week ago
Published By: Digital Desk 1 04 Dec, 2025 | 02:47 PM சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த 30ஆம் திகதி உடைப்பெடுத்தது மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும். அதேநேரம், சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232424

வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு

2 months 1 week ago
வெள்ளம் வரும் போதெல்லாம் அனுமதி பெறாத அனைத்தும் இடிக்கப்படும் என்பது வழமையாகிவிட்டது. கோத்தாவின் காலத்தில் கோப்பாய் பிரதேசசபை பணத்துக்காகவே வேலை செய்துள்ளனர்.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 1 week ago
இந்திய அனர்த்த நிவாரணங்களை ஏற்றிய 8வது விமானமும் நாட்டுக்கு Dec 4, 2025 - 04:38 PM இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும். இப்பாலம் உட்பட இந்திய விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொகையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இப்பாலம் இந்திய இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளால் இணைந்து நுவரெலியா பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக படகுகள், சீனி மற்றும் மின்பிறப்பாக்கிகள் தொகையொன்றும் இந்திய உதவிகளில் அடங்குகின்றன. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் குழுவொன்று மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமூகமளித்திருந்தனர். https://adaderanatamil.lk/news/cmirc18lw02dso29nrp1xqzoa

சூப்பர் மூன் என்றால் என்ன? அதை எப்போது, எங்கே காணலாம்?

2 months 1 week ago
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன் கட்டுரை தகவல் த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா "சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே. ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். அந்த நேரத்தில், முழு நிலவின் விட்டம் சராசரி முழு நிலாவைவிட கிட்டத்தட்ட 7 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசம் 16 சதவிகிதம் கூடுதலாகவும் இருக்கும். இதுவே "சூப்பர் முழு நிலா". எங்கே, எப்போது காணலாம்? டிசம்பர் 4ஆம் தேதி மாலை நிலவு உதயமாகும் நேரத்தில், கிழக்கு நோக்கி மறைப்பு ஏதுமில்லாத இடமாகத் தேர்வு செய்து, கிழக்கு முகமாகப் பார்த்தல் சூப்பர் மூன் தென்படும். 'உண்மையான' முழு நிலா நிலை, அதாவது 'வானவியல் பார்வையில் முழு நிலா நிலை' (astronomical full Moon) டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு (இந்திய நேரம்) நிகழும். ஆனால் நிலா உதயத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக இருக்கும்போது பார்ப்பதே, சூப்பர் முழு நிலாவைக் காணச் சிறந்த நேரம். அடிவானில் முழு நிலா பெரிதாகக் காட்சி தரும்; இதை "நிலா மாயை" (moon illusion) என்பார்கள். ஏன் இப்படியான பார்வைத் தோற்றம் நிகழ்கிறது என்பது இன்னமும் புதிராகத்தான் உள்ளது. சூப்பர் மூன் என்றால் என்ன? "சூப்பர் மூன்" என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் 'அண்மை நிலை'யில் (Perigee) ஏற்படும் ஒரு முழு நிலாவாகும். நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை சரிவட்டமானது அல்ல, அதுவொரு நீள்வட்டப் பாதை. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பஷ்தூன் மக்கள் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தபோது நடந்தது என்ன? 'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி? யானைப் படையை ஒட்டகங்கள் மூலம் தந்திரமாக சிதறடித்து டெல்லியை வென்ற 'தைமூர்' திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் எழுந்த சர்ச்சை - தற்போதைய நிலவரம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது இதன் விளைவாக, நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் வரையிலான தூரம், அண்மை நிலையில் (Perigee) 3,63,396 கிலோமீட்டர் முதல் தொலைவு நிலையில் (apogee) 4,05,504 கிலோமீட்டர் வரை அலைவுறும். இந்திய வானியலில், நிலாவின் சுற்றுப்பாதையில் அதன் மிக அருகிலுள்ள புள்ளியான 'அண்மை நிலை' (perigee) 'சீக்கிரோச்சம்' என்றும், மிகத் தொலைவிலுள்ள புள்ளியான 'தொலைவு நிலை' (apogee) 'மந்தோச்சம்' என்றும் அழைக்கப்படுகிறது. முழு நிலா கட்டத்தில், நிலவு பூமிக்கு மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (சீக்கிரோச்சம்) இருக்கும்போது "சூப்பர் மூன்" ஏற்படுகிறது. இதேபோல, அமாவாசை நிலவு ஏற்படும்போது நிலவு அண்மை நிலையில் இருந்தாலும், அதுவும் 'சூப்பர் மூன்'தான். ஆனால் அப்போது நிலாவின் வட்டுத் தோற்றம் காணப்படாது. எனவே, அது பற்றி இங்கு விவாதிக்கப் போவதில்லை. சுருக்கமாக, அதன் அண்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழு நிலாவையே 'சூப்பர் மூன்' என்று குறிப்பிடுகிறோம். அது ஏன் 'சூப்பர்' மூன்? நமக்கு அருகிலுள்ள பொருள்கள், தொலைவில் உள்ளவற்றைவிட இயற்கையாகவே பெரிதாகத் தோன்றுகின்றன. இதன் விளைவாக, நிலவு அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும்போது அதன் தோற்ற அளவு மாறுபடுகிறது. அது மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (perigee) பெரிதாகவும், தொலைவு நிலையில் (apogee) சிறிதாகவும் இருக்கும். இதேபோல், ஒளிரும் ஒரு பொருள் அருகில் இருக்கும்போது பிரகாசமாகத் தோன்றி, அதுவே தொலைவாகச் செல்லும்போது மங்குகிறது. இதன் விளைவாக, பூமிக்கு மிக அருகே அண்மை நிலையில் இருக்கும் ஒரு சூப்பர் மூன், தொலைவு நிலையில் இருக்கும் முழு நிலாவைவிட விட்டத்தில் 14 சதவிகிதம் வரை பெரிதாகவும், 30 சதவிகிதம் வரை பிரகாசமாகவும் இருக்கும். முழு நிலா என்றால் என்ன? முழு நிலா என்பது நிலவு பூமியில் இருந்து காணும்போது நிலாவின் வட்டம் முழுமையாக ஒளிர்வதாகத் தோன்றும் பிறைக்கட்டமாகும். இது பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் வரும்போது ஏற்படுகிறது. இந்த வரிசையமைப்பின் காரணமாக, சூரிய ஒளி நிலவுடைய முகத்தின் மீது முழுமையாகப் படர்ந்து முழு முகத்தையும் ஒளிர வைக்கிறது, அதை வானில் ஒரு பிரகாசமான, வட்ட வட்டு போல தோன்றச் செய்கிறது. பொதுவாக, முழு நிலா சூரிய அஸ்தமனத்தில் உதயமாகி, அடுத்த சூரிய உதயத்தின்போது மறைகிறது. நாம் இந்த இரவு முழுவதையும் 'முழு நிலா' என்றே சொல்கிறோம். இருப்பினும், வானியலாளர்கள் நிலவு சூரியனுக்கு சரியாக 180 டிகிரி எதிர்த் திசையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கணத்தையே 'வானவியல் பார்வையில் முழு நிலா' என்று கருதுகிறார்கள். நிலவும் பூமியும் அவற்றின் சுற்றுப்பாதைகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால், சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரிசையாக ஒரு கணம் மட்டுமே நிலை கொள்ளும்; பின்னர் அவை நகர்ந்து விடும். எனவே, மெய்யான 'முழு நிலா' நிகழ்வு ஒரு கணமே நீடிக்கும். எடுத்துக்காட்டாக, டிசம்பர் 4 அன்று 23:15 UTC (டிசம்பர் 5, 2025, காலை 04:45 இந்திய நேரம்), இந்த மூன்று வான்பொருட்களும் வரிசையாக அமைந்து 'வானவியல் முழுநிலா நிலை' (astronomical full Moon) ஏற்படும். பட மூலாதாரம்,Getty Images சூப்பர் மூன் எப்போது நிகழ்கிறது? வானவியல் முழு நிலாவை போலவே, நிலாவும் அதன் அண்மை நிலையில் (perigee) ஒரு கணமே இருக்கும். எனவே, முழு நிலா, அண்மை நிலை (perigee) ஆகிய இரு நிகழ்வுகளும் ஒருபோதும் சரியாக ஒரே நேரத்தில் நடக்காது. 21ஆம் நூற்றாண்டில், ஒரு முழு நிலா ஒருபோதும் சரியாக அண்மை நிலையுடன் (perigee) ஒத்துப்போவதில்லை. முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) 21ஆம் நூற்றாண்டில் நவம்பர் 26, 2034 அன்று காலை 04:02 மணிக்கு (இந்திய நேரம்) மிக நெருக்கமாக நிகழ்கிறது. அப்போது நிலவு வெறும் 356,448 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். நவம்பர் 26 அன்று காலை 03:36 மணிக்கு முழு நிலா நிகழ்ந்த சுமார் 26 நிமிடங்களுக்குப் பிறகே அண்மை நிலை நிகழும். இதேபோல, முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) மிக நெருக்கமாக நிகழ்ந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டு நவம்பர் 14, 2016. அப்போது இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான நேர இடைவெளி 2 மணிநேரம் 29 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தது. கிட்டத்தட்ட வானவியல் முழுநிலா நிலையும், நிலவு அண்மை நிலையை அடைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததாகக் கூறலாம். இருப்பினும், நடைமுறையில், "90 சதவிகித விதி" பயன்படுத்தப்படுகிறது. அதாவது, முழு நிலா கட்டம், நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (perigee) 90%-க்குள் இருக்கும்போது நிகழுமானால், பூமியில் இருந்து பார்க்கும்போது முழு நிலவின் அளவு (பார்வைக்கோணம்) கணிசமாகக் கூடும். இதைத்தான் சூப்பர் மூன் என்கிறார்கள். மேலும் இந்தக் கட்டத்தில் பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் 3,67,607 கிலோமீட்டருக்கு குறைவாக இருக்கும். பட மூலாதாரம்,Costfoto/NurPhoto via Getty Images வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வானவியல் முழு நிலா நிகழ்வுக்கு முன்னும் பின்னும் 24 மணிநேரத்திற்குள் நிலவு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தால், அது 'சூப்பர் மூன்' என்று வகைப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆண்டின் முதல் வானவியல் முழு நிலா, ஜனவரி 14 அன்று காலை 03:58 மணிக்கு நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,78,038 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நிலவு அதன் அண்மை நிலைப் புள்ளியை (perigee) ஜனவரி 8 அன்று காலை 05:06 மணிக்கு அடைந்தது, இது முழு நிலாவுக்கு சுமார் 142 மணிநேரம் 52 நிமிடங்களுக்கு முன்னதாகும். எனவே, அது ஒரு சூப்பர் மூன் அல்ல. இதற்கு மாறாக, நவம்பர் 5 அன்று மாலையில், 18:50 மணிக்கு முழு நிலா நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,56,852 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது மற்றும் நவம்பர் 6 அன்று காலை 04:00 மணிக்கு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தது. இது முழு நிலா நிகழ்வுக்கு சுமார் 9 மணிநேரம் 10 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. எனவே, இதுவே ஒரு சூப்பர் மூன். சூப்பர் மூன்கள் தொடர்ச்சியாகவே வரும் ஒவ்வோர் ஆண்டும், மூன்று அல்லது நான்கு சூப்பர் மூன்கள் அடுத்தடுத்து நிகழும். நிலவின் இரண்டு இயக்கங்கள் சூப்பர் மூனின் கால அலவைத் தீர்மானிக்கின்றன. ஒரு முழு நிலவு நிலையில் இருந்து மறுபடியும் முழுநிலவு நிலையை அடைய சுமார் 29.5306 நாட்கள் ஆகும். இருப்பினும், பூமியைச் சுற்றி அண்மை நிலையில் இருந்து மறுபடி அதே அண்மை நிலைக்கு (perigee to perigee) வந்து சேர சுமார் 27.5545 நாட்கள் ஆகும். இந்த இரண்டு சுற்றுகளும் ஒத்துப்போகும்போது சூப்பர் மூன் ஏற்படுகிறது. இந்த இரண்டு காலங்களுக்கு இடையிலான சிறிய வித்தியாசம் காரணமாகத்தான் ஆண்டுதோறும் வெவ்வேறு மாதங்களில் சூப்பர் மூன்கள் உருவாகின்றன. இந்த ஆண்டில் (2025) அக்டோபர் 7, நவம்பர் 5, டிசம்பர் 4 ஆகிய அடுத்தடுத்த முழுநிலவுகள் சூப்பர் மூன்கள். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 3, 2026 முழுநிலவும் சூப்பர் மூன் தான். அடுத்த ஆண்டில்(2026), நவம்பர் 24, டிசம்பர் 24 ஆகிய இரண்டும் சூப்பர் மூன். 2027ஆம் ஆண்டில், சூப்பர் மூன் ஜனவரி 22, பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் நிகழும். பட மூலாதாரம்,Getty Images வானியல் கருத்தல்ல "சூப்பர் மூன்" என்ற கருத்து கிரகணம் போன்ற மெய்யான வானியல் நிகழ்வல்ல. எனினும் கடந்த சில ஆண்டுகளில் பொது மக்களிடையே கணிசமான உற்சாகத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு டெல் ஹோரோஸ்கோப் (Dell Horoscope) இதழில் அமெரிக்க ஜோதிடர் ரிச்சர்ட் நோலே (Richard Nolle) எழுதிய கட்டுரையைத் தொடர்ந்தே சூப்பர் மூன் என்ற கருத்து பிரபலமானது. அதில், "புது நிலா அல்லது முழு நிலா, நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (90 சதவிகிதத்திற்குள்) இருக்கும்போது நிகழ்வது சூப்பர் மூன்" என்று நோலே வரையறை செய்தார். ஏன் இந்த அளவுகோல் என்பதற்கு எந்தவித விளக்கத்தையும் அவர் தரவில்லை. எனவே இது வெறும் கருத்து மட்டுமே. சூப்பர் மூனின் இயக்க முறைக்குப் பின்னாலுள்ள நிலவின் இயக்கம் குறித்துப் பண்டைய காலம் தொட்டே அறிந்திருந்தனர். 29.5 நாட்களுக்குப் பிறகு முழு நிலா மறுபடி மறுபடி வரும் சுழற்சியை எளிதாக அறிந்த பண்டைய மக்கள் மேலும் கூர்ந்து நிலவின் இயக்கத்தைக் கவனித்தபோது வேறொரு விசித்திரமான இயக்கத்தையும் கண்டார்கள். அதாவது, விண்மீன்களின் பின்னணியில் நிலவின் தினசரி இயக்கம் சீராக அமையவில்லை. சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் இயங்கியது. இன்று நிலவின் இந்த விசித்திர இயக்கத்திற்குப் பின்னாலுள்ள விதியை நாம் அறிவோம். கெப்லர் மூன்றாவது விதியின்படி நீள்வட்டப் பாதையில் செல்லும்போது நிலவு போன்ற வான்பொருள் அண்மைப் புள்ளிக்கு அருகே வேகமாகச் செல்லும்; தொலைவுப் புள்ளிக்கு அருகே மெதுவாகச் சுற்றும். அதாவது அது பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மை நிலையில் (perigee) இருக்கும்போது சராசரியைவிட வேகமாகவும், பூமியில் இருந்து மிகத் தொலைவிலுள்ள தொலைவு நிலையில் (apogee) இருக்கும்போது வழக்கத்தைவிட மெதுவாகவும் நகரும். வானியலாளர்கள் வேகத்தில் உள்ள இந்த வித்தியாசத்தை 'பிறழ்வு' (anomaly) என்று குறிப்பிடுகிறார்கள். நிலவு அண்மை நிலையில் இருந்து தொடங்கி மீண்டும் அண்மை நிலையை அடைந்து ஒரு சுழற்சியை முடிப்பதற்கு எடுக்கும் காலத்தை 'நிலவின் பிறழ் மாதம்' (anomalistic month) என்பார்கள். பண்டைய பாபிலோனிய வானியலாளர்கள் முதல் இந்திய வானியலாளர்கள் வரை பலரும் நிலவின் வேகத்திலுள்ள இந்த மாறுபாட்டை (பிறழ்வை, anomaly) அறிந்திருந்தனர். இந்திய சித்தாந்த வானியலில், நிலவின் மெதுவான இயக்கம் 'மந்தம்' என்றும், வேகமான இயக்கம் 'சீக்கிரம்' என்றும் அழைக்கப்பட்டது. வாஸிஷ்ட சித்தாந்தம் பிறழ் மாதத்திற்கு (anomalistic month) இரண்டு வெவ்வேறு கால அளவுகளைப் பதிவு செய்கிறது. முதலாவது சற்று எளிமையானது: 248/9 நாட்கள், அல்லது சுமார் 27.5556 நாட்கள். இதை மெய் அளவோடு ஒப்பிட்டால் வெறும் சுமார் 0.00104 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது. மற்றொரு பகுதியில், பிறழ் மாத காலம் 3031/110 நாட்கள் என்ற மிகத் துல்லியமான மதிப்பீட்டைத் தருகிறது. இது சுமார் 27.5545 நாட்களுக்குச் சமம். அதாவது மெய் அளவிலிருந்து வெறும் 0.00000579 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது. அவ்வளவு துல்லியமாக உற்றுநோக்கி நிலவின் இயக்கத்தைப் பண்டைய வானவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydzv34p70o

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து

2 months 1 week ago
குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி Published By: Digital Desk 3 04 Dec, 2025 | 01:57 PM அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானை, இல்லத்திற்கு இன்று (04) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232425

பயிர் சேதங்கள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

2 months 1 week ago
பயிர் சேதங்கள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் Dec 4, 2025 - 03:35 PM 'டித்வா' புயலின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய, 1918 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் விவசாயிகள் பயிர் சேதங்கள் குறித்து மிக இலகுவாக அறிவிக்க முடியும். 'டித்வா' புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அதற்கமைய, குறித்த பயிர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் எதிர்பார்ப்புடன் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தற்போது பயிர் சேதங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே, நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகளில் 20 மாவட்டங்களில் சுமார் 75% ஆனவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmir9spc702dmo29nq0d91b91

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து

2 months 1 week ago
குரூப் கப்டன் நிர்மாலின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் அஞ்சலி Dec 4, 2025 - 03:03 PM வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவப் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இன்று (04) முற்பகல் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பூதவுடல் மீதான இறுதிச் சடங்குகள் தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmir8ncpf02djo29nwe97ead8

வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

2 months 1 week ago
வரைபடங்களும் மனிதர்களும் ! sudumanalDecember 1, 2025 உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல் image: washington times மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை. போர் எப்போ தோடங்கியது? உக்ரைன்- ரசியா போர் 2022 பெப்ரவரியில் தொடங்கியதல்ல. உண்மையில் 2014 இல் தொடங்கியது அது. 2010 இல் உக்ரைன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யனுகோவிச் (Yanukovych) இன் ஆட்சியை 2014 இல் “மைடான் புரட்சி” என்ற பெயரில் சதி மூலம் அமெரிக்கா கவிழ்த்தது. ரசியாவுடன் நல்ல உறவுநிலையில் இருந்த அவரை இடம்பெயர்த்துவிட்டு, மேற்குலகு சார்பான பொரொசெங்கோவை (Petro Poroshenko) ஆட்சிக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. (இந்த சதிப்புரட்சி பற்றிய இரகசிய தொலைபேசி உரையாடல் பின்னர் கசிந்து பொதுவெளிக்கு வந்தது). எச்சரிக்கை அடைந்த ரசியா உடடினடியாகவே செயற்பட்டு மூன்று நாட்களுக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பெரும்பான்மை ரசிய மொழி பேசுபவர்களையும் கொண்ட கிரைமியா (Crimea) பகுதியை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் முக்கிய கடற்படைத்தளம் அங்குதான் இருந்தது. இது நேட்டோவிடம் பறிபோனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரே காரணத்துக்காக ரசியா அதை கைப்பற்றியது. எழுந்துள்ள நிலைமைகளையும் நேட்டோவின் தலையீடுகளையும் பார்க்கும்போது இனி ஒருபோதும் ரசியா அதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது. பொரசெங்கோவின் ஆட்சியில் ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட டொன்பாஸ் இன் 4 மாகாணங்களிலும் ரசிய மொழி தடைசெய்யப்பட்டது. AVOZ என்ற நாசிசப் படைப் பிரிவு உக்ரைன் இராணுவத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டது. இவர்கள் டொன்பாஸ் க்கு அனுப்பிவைக்கப் பட்டார்கள். இவர்கள் 2014 இலிருந்து தொடக்கி வைத்த படுகொலை 14000 ரசிய மொழி பேசும் டொன்பாஸ் மக்களை கொன்றொழித்தது. துப்பாக்கியை விடவும் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே பலர். உக்ரைன் அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த இயக்கங்களான டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு (DPR), லுகான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) இனை ரசியா ஆதரித்தது. ஆயுத உதவி வழங்கியது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலகாரணம் 2008 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் ‘புக்காரெஸ்ற்’ (ருமேனியா) இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜ் புஷ் இன் அமெரிக்காவானது உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் நேட்டோவில் இணைக்க தீர்மானம் கொண்டுவந்தது. இதை அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கலும் (Angela Merkel, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலாஸ் சார்க்கோசியும் (Nicolas Zarkozy) எதிர்த்தார்கள். அங்கலா மேர்க்கல் தெளிவாக ஒன்றை முன்வைத்தார். “நேட்டோ விஸ்தரிப்பை உக்ரைனூடாக ரசிய எல்லைவரை கொண்டு போவதை புட்டின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நிச்சயமாக அது போரில் போய் முடியும் ஆபத்தைக் கொண்டது” என்றார். அதன்படி 2022 இல் நடந்திருக்கிறது. சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த கோர்ப்பச்சேவ் இன் (கிளாஸ்நோஸ்ற், பெரஸ்றொய்க்கா) கொள்கைகள் 1989 இல் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு, 1990 இல் கிழக்கு-மேற்கு ஜேர்மனி இணைக்கப்படுவதற்கும், கிழக்கு ஜேர்மனியில் இருந்த சோவியத் படைகள் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் 1990 பெப்ரவரியில் மொஸ்கோவில் வைத்து கோர்ப்பச்சேவ் க்கு நேட்டோ சார்பில் அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் பேர்க்கர் ((James Baker) வழங்கிய முக்கிய வாக்குறுதி “நேட்டோ படையானது ஜேர்மனியிலிருந்து ஓர் அங்குலம் கூட கிழக்கு நோக்கி நகராது” என்பதே. 1955 இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உருவாக்கிய Warsaw Packt இன் கீழ் இருந்த இராணுப் பிரிவும் 1991 இல் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உதிர்ந்து போனது. அப்போதே நேட்டோவுக்கான தேவையும் இல்லாமல் போனது. இருந்தபோதும் நேட்டோ கலைக்கப்படவில்லை. ஆனால் நேட்டோ விஸ்தரிப்பு குறித்த வாக்குறுதிகளை நேட்டோ கடைப்பிடிக்காமல் ஏமாற்றியது. சோவியத் இலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துக் கொண்டது. பின்னாளில் நேட்டோ விஸ்தரிப்புகள் குறித்து கொர்பச்சேவ் ஜேர்மனியில் பேசும்போது “எம்மை ஏமாற்றிவிட்டீர்கள்” என விமர்சித்துப் பேசினார். 2000 ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான புட்டின் இந்த நேட்டோ விரிவாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். பின்னர் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதானது நேட்டோ தனது எல்லை வரை வர வழிசமைக்கும் எனவும், அது தமது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் எனவும் பலமுறை சொல்லியுமிருந்தார். “அது சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக அமையும், ரசியா பார்த்துக் கொண்டு இருக்காது” என எச்சரித்தார். இந்த எல்லா எதிர்ப்பையும் எச்சரிக்கைகளையும் மீறி ஜேர்மன் எல்லையிலிருந்து ரசிய எல்லைவரை நேட்டோவை படிப்படியாக நகர்த்தி வந்துவிட்டு, ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது எவளவு கோமாளித்தனமானது. அத்தோடு ரசியாவும் ஐரோப்பாதான் என்பதை மறந்து பேசுவது இன்னொரு கோமாளித்தனம் அல்லது வஞ்சகத்தனமானது. இவ்வாறாக அமெரிக்கா தனது பரிவாரமான (32) நேட்டோ நாடுகளுடன் செயற்பட்டு உக்ரைனை போர்க்களமாக்கியதுதான் வரலாறு. இப்போ “அது நான் தொடங்கிய போர் அல்ல. பைடன் தொடங்கிய போர்” என ட்றம்ப் சொல்கிறார். “இது எமது போர் அல்ல, உங்கள் போர்” என ஐரோப்பாவுக்குச் சொல்கிறார். உக்ரைன் ரசிய போர் மோசமான நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இலகுவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை போல் தோற்றமளித்ததற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என்பவற்றின் தலையீடாக இருந்தது. உண்மையில் இந்தப் போர் ரசியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நிழற்போர் என்பதே பொருத்தமானது. அதன் களம் உக்ரைன். பலியாடுகள் உக்ரைன் மக்களும் இராணுமும். நேட்டோ/ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு நேட்டோ தனது விஸ்தரிப்புவாதத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ரசியாவை -இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்- பலவீனமாக்குவது அவர்களின் மைய நோக்கமாக இருக்கிறது. 2.1) அதற்கான கதையாடல்களை (narratives) உருவாக்கினார்கள். உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு எனவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ரசியா அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் கட்டமைத்தார்கள். 2.2) ரசியாவுக்கு எதிராக 27000 க்கு மேற்பட்ட பொருளாதாரத் தடையை விதித்தார்கள். 2.3) 300 பில்லியன் வரையான ரசிய நிறுவனங்களின் நிதியை தமது வங்கிகளில் முடக்கினார்கள். அதாவது உறைநிலை ஆக்கினார்கள். 2.4) ஐரோப்பாவுக்கு ‘Nord Stream-2’ கடலடி குழாய் மூலமாக ரசியா எரிவாயுவை ஏற்றுமதி செய்து பொருளீட்டியது. அந்தக் குழாயை அநாமதேயமாக உடைத்தார்கள். அல்லது உக்ரைன் உதவியுடன் உடைத்தார்கள். 2.5) ரசியாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெயை வாங்கும் சீனா, இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனாலும் திரைமறைவில் இன்னமும் 40 வீதமான எரிவாயு ஐரோப்பாவுக்குள் வந்து சேர்கிறது என்பது ஒரு முரண்நகை. அத்தோடு இந்தியாவிடமிருந்து (ரசிய) எண்ணெயை வாங்கினார்கள். இந்த வர்த்தகத்தின் மூலம் சீனாவும் இந்தியாவும் ரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு முதலிடுவதாக குற்றம் சுமத்திப் பார்த்தார்கள். ட்றம்ப் உம் அதே பாட்டைப் பாடினார். (அவர்களது அழுத்தத்தை இந்த இரு நாடுகளும் புறந்தள்ளின) இந்தப் போரில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தமது நோக்கம் சார்ந்து உக்ரைனை பலிக்கடாவாக்கினார்கள். போருக்காக பில்லியன் கணக்கிலான நிதியையும், ஆயுதங்களையும் கடனாக வழங்கினார்கள். அத்தோடு இராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் மக்களும் இராணுவமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். 4. இவளவு அழிவுக்குப் பின்னரும், ட்றம்ப் பின்வாங்கிய பின்னரும், ஐரோப்பா இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படுகிறது. மேற்கு ஐரோப்பா அதுவும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. 4.1) காலனிய மனக் கட்டமைப்பு (colonial mindset) அவர்களின் காலனிய மனக் கட்டமைப்பானது ரசியாவிடம் தமது நிழற்போர் தோற்றுவிடக் கூடாது என்ற பதட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது அவர்கள் கணித்ததுக்கு மாறாக ரசியாவை விட அவர்களையே அதிகம் தாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறபோதும் கூட, அந்த காலனிய மனக் கட்டமைப்பானது அவர்களை பின்வாங்கச் செய்ய இலகுவில் விடுவதாக இல்லை. 4.2) போர்ப் பொருளாதாரம் இந் நாடுகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இன்னொரு வகையில் ‘போர்ப் பொருளாதாரம்’ பெரும் பக்கபலமாக இருக்கிறது. ‘உக்ரைன் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு’ என வசனம் பேசும் அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களையோ நிதியையோ அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. கடனாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எதிர்காலத்தில் உக்ரைன் செலுத்தியாக வேண்டும். அத்தோடு பொருளாதாரத் தடையால் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள ரசிய சொத்துகளும் அதன் வட்டியும் அவர்களின் இப்போதைய பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கபலமாக உள்ளது. ஐரோப்பிய பெரு நிதிநிறுவனமான Euroclear வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட 194 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ரசிய சொத்துகள் 2025ம் ஆண்டின் அரைப் பகுதியில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்களை வட்டியாக பொரித்துள்ளது. 2024 இல் இதே அரையாண்டு காலத்தில் 3.4 பில்லியன் யூரோக்களை பொரித்துள்ளது. 4.3) தத்தமது நாடுகளில் இயன்றளவு தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் முயற்சி இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய மக்களிடம் முழுமையாக -தத்தமது நாடுகளில்- மேற்கு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் அம்பலப்பட்டுப் போயின. நெத்தன்யாகுவுக்கு எதிராக மட்டுமன்றி, தமது தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடியதால் தலைவர்கள் அரசியல் செல்வாக்கு இழந்து போயிருக்கிறார்கள். அத்தோடு தோற்றுப் போகிற உக்ரைன் போருக்கு பில்லியன் கணக்கான நிதியை இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் வரி அதிகரிப்பும் மக்களின் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்திருக்கின்றன. அதனால் மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும், அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. போர் தோல்வியில் முடிந்தால் அவர்கள் தேர்தல்களில் தூக்கி எறியப்படுவர். அதிகார சுகிப்பை இழந்து போய்விடுவர். இந்த அதிகாரத்தை தக்கவைக்க அவர்களுக்கு உக்ரைன் போர் இப்போ சமாதானத்தில் முடியக் கூடாது. 4.4) அவமானம் ரசியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் மண்ணையும் மக்களையும் பலிகொடுத்து இந்தப் போருக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்த அந்த நோக்கமும் இதுவரை நிறைவேறவில்லை. அது ஒரு சமநிலையில்கூட முடியாமல் தோல்வியை நோக்கி சரிவது மிகப் பெரும் அவமானமாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் இருக்கிறது. அவர்கள் கையாளும் வழிமுறை ஐரோப்பிய மக்களை போர் அச்சமான சூழல் ஒன்றுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது நோக்கங்களை சாதிக்க முயல்கிறார்கள். ரசியாவால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், உக்ரைன் தோல்வியுற்றால் ரசியா அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கும் எனவும், புட்டினின் இலக்கு பழைய சோவியத் ஒன்றிய கட்டமைப்பை நோக்கிய ஆக்கிரமிப்புத்தான் எனவும் கதையாடல்களை உருவாக்கி மக்களுக்கு தீத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள். டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவ கேந்திர நிலையங்களின் மீது மர்ம ட்றோன்கள் பறந்து உளவு பார்ப்பதாக சொல்லி அச்சமூட்டினர். ட்றோன்களை ஏன் சுடவில்லை என நிருபர்கள் கேட்டதற்கு அதைச் சுட்டால் அதன் உதிரிப் பாகங்கள் மக்களின் தலைகளில் வீழ்ந்துவிடலாம் என்ற காரணத்தை கோமாளித்தனமாக முன்வைத்தனர். தமது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் இவ்வாறாகவா அணுகுவார்கள். இலங்கையில் கோட்டபாய அரசாங்க காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ என்ற மர்ம கதாபாத்திரத்தை உருவாக்கி, தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருந்ததை இந்த மர்ம ட்ரோன்கள் ஞாபகப்படுத்துகின்றன. அத்தோடு பாதுகாப்புக்கு என அதிகளவு நிதியை இந்த நாடுகள் தமது வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதே வேலையைச் செய்கின்றது. நேட்டோ தனது உறுப்பு நாடுகள் தத்தமது GDP இலிருந்து ஒதுக்கும் நிதியை இரண்டு வீதத்திலிருந்து ஐந்து வீதமாக அதிகரிக்கக் கோருகின்றது. பிரான்சின் மக்ரோனும், பிரித்தானியாவின் ஸ்ரார்மரும் தத்தமது நாடுகளில் இராணுவ உசுப்பேத்தல்களை வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். போர்ப் பதட்ட உளவியலை மக்களிடம் உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் உக்ரைன்-ரசியா இடையில் நிரந்தரமான சமாதானத்தை முயற்சிக்க அமெரிக்கா விரும்புகிறது. அப்படித்தான் சொல்கிறது. அதன் பேரில் பிரச்சினைகளை தமது ஏகாதிபத்திய அதிகார நிலையில் நின்று அணுகி, நாடுகளை மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து டீல் பண்ணும் வேலையை ட்றம் செய்துவருகிறார். அவருக்கு நேட்டோவின் மானப் பிரச்சினை முக்கியமல்ல. அவர் அமெரிக்கா சார்ந்த பொருளாதார நலனின் அடிப்படையிலும், தூர நோக்கான அரசியல் இராஜதந்திரத்தின் அடிப்படையிலும் இச் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார். மற்றபடி அவர் ஒரு சமாதான விரும்பியல்ல. சமாதான நடிகன். “நாங்கள் உக்ரைனுக்கு மேலும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுப்பதோடு இன்னுமாய் பொருளாதாரத் தடைகளையும் செயற்படுத்தினால் வெற்றி எமது கைகளில் தவழும் என ஒரு ஜனரஞ்சகமான கற்பனை நிலவுகிறது. தோல்வியடைந்த இராஜதந்திரிகளாலோ கனவுலகில் வாழும் அரசியல்வாதிகளாலோ சமாதானம் உருவாகாது. யதார்த்த உலகிலுள்ள ஆளுமையானவர்களால் இதை ஏற்படுத்த முடியும்” என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறுகிறார். போர்களையே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் சார்பாக சமாதானம் பற்றிய இந்த தத்துவத்தை பேச வான்ஸ் க்கு என்ன அறம் இருக்கிறதோ தெரியவில்லை. இருந்திட்டுப் போகட்டும். இந்த சமாதான ஒப்பந்தத்தின் பிரசவம் புட்டினும் ட்றம்ப் உம் அலாஸ்காவில் சந்தித்த பரபரப்புக் காட்சியின் முன்னரேயே இரு நாட்டு ஆலோசகர்களும் இரகசியமாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அச் சந்திப்பின் போது புட்டின் தனது தரப்பில் உத்தியோக பூர்வமாக திரைமறைவில் கையளித்த நிபந்தனைகள்தான் ட்றம்ப் இப்போது கொணர்ந்த சமாதான ஒப்பந்தத்தின் அடிக்கல் என அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது. அது இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டது என்பதை விடவும், அதன் அம்சங்கள் சாத்தியப்பாடற்றவை என ஓரத்தில் வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது. அலாஸ்கா பேச்சுவார்த்தையின் பின் ட்றம் புட்டின் கோருவது சாத்தியமில்லாத விடயங்கள் என பேசியதும், புட்டின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளாகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நடந்தது. அதுக்கும் மேலாக ஹங்கேரியில் அந் நாட்டின் தலைவர் விக்ரர் ஓர்பான் அனுசரணையில் நடக்க ஒப்புக்கோண்ட புட்டின்-ட்றம்ப் பேச்சுவார்த்தையை திடீரென ட்றம் இரத்துச் செய்தார். “புட்டினோடு சாத்தியமில்லாதவைகளைப் பேசி பயனில்லை” என்ற காரணத்தையும் முன்வைத்தார். அலாஸ்கா சந்திப்பின் பின்னும் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ ரீதியில் இராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது. பைடன்கூட வழங்க மறுத்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான ‘ரோமாஹவ்க்’ (Tomahawk) இனை உக்ரைனுக்கு தருவதாக ட்றம்ப் ஒப்புக்கொண்டார். (பின் மறுத்தார் என்பது வேறு விடயம்). இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. புட்டினின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என ட்றம் எடுத்த முடிவைத்தான் என்பதை மதிப்பிட முடிகிறது. அப்படியாயின் ஏன் அதை திரும்ப எடுத்தார்கள்? உக்ரைன் தோல்வி அலாஸ்கா சந்திப்பின் பின் ரசியாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. துரிதமான நில ஆக்கிரமிப்பும், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஏனைய நகரங்கள் மீதான பெரும் ஏவுகணை மற்றும் ட்றோன் தாக்குதலும், முன்னரங்குகளில் உக்ரைன் இராணுவத்தின் பெருந்தொகை மரணங்களும் சரணடைவுகளும் எல்லாமுமாக தவிர்க்க முடியாமல் புட்டினின் நிபந்தனைகளை பரிசீலிக்க வைத்திருக்கிறது. புட்டின் ஏவிய கொடுந் தாக்குதல்களின் நோக்கமும் இவ்வாறான ஓர் அழுத்தத்தை ட்றம்ப்பிற்குக் கொடுக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம். உக்ரைனை களமாக வைத்து ஆடிய நேட்டோவின் நிழற்போர் தோல்வியில் முடியப் போகிறது என்பதை ட்றம்ப் கணித்துமிருக்கலாம். அதை அவர் செலன்ஸ்கியிடம் ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் வைத்து உக்ரைனுக்கு காட்டமாக தெளிவுபடுத்தியிருந்தார். “விளையாட உன்னிடம் கார்ட்ஸ் ஏதும் இல்லை” என திரும்பத் திரும்ப கூறி செலன்ஸ்கியை அவமானப்படுத்தினார். மூன்றாம் உலகப் போரில் கொண்டுபோய் நிறுத்தப் போகிறாய் என வேறு செலன்ஸ்கியை சொற்களால் தாக்கினார். அது நடந்து பல மாதங்களாகி விட்டது. இப்போ இது தமது போரல்ல. ஐரோப்பாவின் போர். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது. அது தற்காலிகமாகவும் இருக்கலாம். காலம்தான் இந்த சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டும். 2. ட்றம்ப் இன் பொருளாதார நோக்கம் உக்ரைனுக்கு தாம் ஆயுதம் இனி வழங்க மாட்டோம். வேண்டுமானால் ஐரோப்பா (இன்னொரு வார்த்தையில் சொன்னால், அமெரிக்கா தவிர்ந்த நேட்டோ) தம்மிடம் அதை வாங்கி உக்ரைனுக்கு வழங்கலாம் என ட்றம் சொன்னார். அது நடக்கவும் செய்தது. குறிப்பாக ஜேர்மனி பெருமளவு நிதியை அதற்காகச் செலவிட்டு வாங்கி உக்ரைனுக்குக் கொடுத்தது. அமெரிக்கா இலாபமடைந்தது. இன்னொரு வழியாலும் அமெரிக்கா வந்தது. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது GDP இல் 5 வீதத்தை ஒதுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததன் மூலம் இந்தப் பணத்தை தமதாக்க முயற்சித்தார். அதாவது ஐரோப்பாவையும்விட பல மடங்கு உற்பத்தித் திறன் கொண்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்ததுமான தமது இராணுவ தளபாடங்களை நேட்டோவுக்கு விற்று காசு பார்க்க ட்றம்ப் திட்டமிட்டார். அது வெற்றிபெறவும் செய்கிறது. இப்போ சமாதான ஒப்பந்தத்திலும் பொருளாதார நோக்கம் பல தளங்களில் வெளிப்படுகிறது. அதில் பின்வரும் நான்கை சுட்ட முடியும் 3.1) ரசியா மீதான பொருளாதாரத் தடையை முன்வைத்து ரசியாவின் சொத்துக்களை ஐரோப்பா முடக்கியது. ரசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து மட்டுமல்ல, பணமும் ஐரோப்பிய வங்கிகளில் உறைநிலையில் வைக்கப்பட்டது. பெல்ஜியத்தின் வங்கியில் பெருமளவு உறைநிலை நிதி உள்ளது. இதில் 140 பில்லியனை எடுத்து கடனாக உக்ரைன் அரசாங்கம் தன்னை நிர்வகிக்க இரண்டு ஆண்டு காலத்துக்கான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. அந்தப் பிரேரணையை பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்றக்கொள்ளவில்லை. இந்த இழுபறிக்குள்ளால் ட்றம் இன் சமாதான ஒப்பந்தமானது “உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசியாவின் நிதியில் 100 பில்லியன் டொலரை உக்ரைன் அபிவிருத்தி நிதி க்கு ஒதுக்க வேண்டும்” என்ற ஓர் அம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பணத்தை வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்பம், தரவு வங்கி நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உக்ரைன் முதலிடும் எனவும், அத்தோடு மறுகட்டுமானம், அபிவிருத்தி, எரிவாயு கட்டுமான நவீனமயமாக்கல் என்பவற்றிலும் முதலிடும் எனவும், இவை எல்லாவற்றையும் அமெரிக்காதான் தலைமை ஏற்று செய்யும் எனவும், வரும் இலாபத்தில் 50 வீதம் அமெரிக்காவுக்கானது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசியாவின் உறைநிலைப் பணத்தை கையாள நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திலறைந்தது போல இது இருக்கிறது. 3.2) யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் Euroclear என்ற பெருநிதி நிறுவன சந்தை போன்றவற்றில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் மீதிச் சொத்து அல்லது பணத்தை (300 பில்லியன் வரை வரலாம் என சொல்லப்படுகிறது.) விடுவித்து, அதை வைத்து அமெரிக்கா-ரசியா கூட்டாக முதலீட்டில் ஈடுபடுவது எனவும், அதன் மூலம் இரு நாடுகளுக்குமான நெருக்கம் உண்டாகும் எனவும், அது எதிர்காலத்தில் முரண்பாடுகள் வீரியமாகாமல் தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி எரிசக்தி, இயற்கை வளம், கட்டுமானம், அண்டாட்டிக் (Antatic) இலுள்ள அரியவகை கனிம வள அகழ்வு என்பவற்றில் ரசியாவும் அமெரிக்காவும் கூட்டாக ஈடுபடும் என்பதெல்லாம் ட்றம்ப் இன் சமாதான ஒப்பந்த சூழ்ச்சித் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. ரசியா இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை. 3.3) உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும் எனவும் அதற்கான நஷ்ட ஈட்டை உக்ரைன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.4) G7 இல் மீண்டும் இணைய ரசியாவுக்கு அழைப்பு விடுகிறது ஒப்பந்தம். அதன் மூலம் (ரசியா உட்பட்ட) பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதாப் போட்டியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் G7 உடன் ரசியாவின் பொருளாதாரத்தை இணைக்கும் இன்னொரு சூழ்ச்சி ட்றம்ப் இன் ஒப்பந்தத்தில் உள்ளது. ட்றம்ப் இன் தூர நோக்கு அரசியல் சீனாவுடனான எதிர்காலப் போர்!. இன்றைய உலக ஒழுங்கு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கிலிருந்து பல் துருவ உலக ஒழுங்கை நோக்கி முட்டிமோதல்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிற காலம். இரண்டாம் உலகப் போர் வரை முதல் உலக சாம்ராஜ்யமாக திகழ்ந் பிரித்தானியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்த போதும், ஒற்றைத் துருவ நிலையை முழுமையாகப் பேண முடியவில்லை. சோவியத் யூனியன் இன்னொரு வல்லரசாக அமெரிக்காவுக்கு சகல தளங்களிலும் சவாலாக திகழ்ந்தது. இரு துருவ நிலை என அதை சொல்ல முடியும். ஆனால் 1991 இல் சோவியத் உடைவின் பின் அமெரிக்கா ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை முழுமையாக நிறுவியது. உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட இராணுத் தளங்களை 80 க்கு மேற்பட்ட நாடுகளில் அது வைத்திருக்கிறது. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா என்ற 5 நாடுகளை முதன்மையாகக் கொண்டு எழுந்த பிரிக்ஸ் இன் எழுச்சி அமெரிக்காவுக்கும் G7 பணக்கார நாடுகளுக்கும் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு சீனா, ரசியா, இந்தியா என்பவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன காலனிய மனக் கட்டமைப்புக் கொண்ட மேற்குலகுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்று. ரசியா மீதான இவர்களின் அணுகுமுறையில் இந்த மனக் கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. முன்னைய சோவியத் போல, அல்லது அதையும்விட சிறப்பாக கடந்த 30 வருடங்களில் சீனா சகல தளங்களிலும் அமெரிக்காவுக்கு சவாலாக எழுந்துள்ளது. எனவே தனது அதிகார நிலையை மேல்நிலையில் வைத்திருக்கும் வேட்கையானது எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா (நேட்டோவின் துணையுடன்) போர் தொடுக்க வேண்டிய புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தலாம். அது ஏறத்தாழ 2007 இல் நிகழலாம் என சிஐஏ கணித்திருக்கிறது. அதற்கான இன்னொரு உக்ரைனாக தாய்வானை அது குறிவைத்துள்ளது. முன்னர் அமெரிக்காவானது சோவியத் யூனியனை எதிர்கொள்ள சீனாவுடன் நட்புறவு பேணி, சீனாவை தூர இருக்க வைக்க மேற்கொண்ட உத்திபோல, சீனாவுடன் போர் ஒன்று உருவாகும் பட்சத்தில், ரசியாவை சீனாவிடமிருந்து தூரப்படுத்த அல்லது தலையிடாமலிருக்க வைக்க வேண்டிய தூர நோக்கு ஒன்று ட்றம்ப் இடம் இருக்கிறது. இதை ட்றம்ப் க்கும் புட்டினுக்குமான நட்பு என சொல்வது ஓர் அரசியல் பார்வையே அல்ல. அரசியல் காய் நகர்த்தல் என்பதே பொருத்தமானது. எல்லா நாடுகளும் தத்தமது நலனை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதை சாதிக்க இராஜதந்திர அணுகுமுறைகளை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடுகின்றன. அவர்களின் முகத்துக்கும் பிடரிக்கும் இடையிலான மொழி ஒன்றாக இருப்பதில்லை. அது அறமற்ற மொழியின் பாற்பட்டது. ட்றம்பின் இந்த அரசியல் சதுரங்கத்தை புட்டின் நன்கு புரிந்தவர் என்பதால், ஆடுகளத்தில் ட்றம்பை வைத்து தனது இலக்கை அடைய அவரும் தன் பங்குக்கு காய் நகர்த்துகிறார். அரசியல் சதுரங்கம் மேற்கூறிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார். நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும். இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது. ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. 2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது. ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!. இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார். இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும். தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது. பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும். தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆக, அமெரிக்கா இன்று பின்வாங்குகிற நிலையில் கூட, ஐரோப்பா பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நலன் அடிப்படையில் என்பதைவிட ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நலன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ட்றம்பின் 28 அம்ச சமாதான ஒப்பந்தம் உக்ரைனின் இறைமையைப் பாதிக்கிறது என கூறி, ஐரோப்பா இந்த 28 அம்சங்களையும் பிரித்து மேய்ந்து, 19 அம்ச ஒப்பந்தமாக உருமாற்றி ட்றம் இடம் கையளித்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை அவை பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனால் சமாதானம் வர இவர்கள் இலகுவில் விடப்போவதில்லை. குறிப்பாக மக்ரோன், ஸ்ராமர், மேர்ற்ஸ் போன்ற போர்வெறியர்கள் சமாதானத்துக்கு எதிராகவே நிற்கின்றனர். அமெரிக்காவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட 32 நாடுகளின் கூட்டணியாக விரிவாக்கம் அடைந்திருக்கும் நேட்டோவுடன் நேரடியாக ரசியா தனியாக போர் புரிவது என்பது முடியவே முடியாத காரியம். நேட்டோவிலுள்ள ஒரு நாட்டைத் தாக்கினால் அது நேட்டோ உறுப்பு நாடுகள் எல்லோரையும் தாக்கியதாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நேட்டோவின் 5வது சரத்து ஆகும். இந்தவகை பாதுகாப்பு உத்தரவாதம், பெருமளவு கூட்டு இராணுவ எண்ணிக்கை, அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுத உற்பத்திகள், நிதி திரட்சி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என பேசுவதை நம்ப மக்கள் கேணையர்களாக இருக்க வேண்டும். ஐரோப்பாவை புட்டின் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக அடிக்கடி உச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ரசிய ஆக்கிரமிப்பு’ கதையாடலை பலமுறை மறுத்த புட்டின், ஐரோப்பிய தலைவர்கள் மாயையில் வாழ்கின்றனர் என்றார். சென்ற வாரம் அவர் பேசுகிறபோது ரசியா ஒருபோதும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என எழுத்தில் தரக்கூட தான் தயார் என அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. யதார்த்தம் உக்ரைன் வரலாற்றாசிரியரான Marta Havryshko அவர்கள் கூறுகிறபோது, “இலட்சக்கணக்கான உக்ரைன் இராணுவ வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் அவர்களின் விருப்பின்றி பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு முன்னரங்குகளில் விடப்பட்டவர்கள். அவர்களின் குடும்பங்கள் நடுவீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். ரசியாவின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்லும்போது நாளை உயிருடன் இருப்போமா என்ற ஏக்கம் அவர்களை உயிரோடு கொன்று போடுகிறது. உளவியல் சிதைவுகள் அவர்களை தாக்குகிறது. இளஞ் சமுதாயம் நாட்டைவிட்டு களவாக தப்பியோடி பெருமளவில் புலம்பெயர்ந்திருக்கிறது. தமது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார். ரசியாவின் ஆக்கிரமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் “உக்ரைன் அரசாங்கம் ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் ஆனது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். போர் வேண்டும் என்பவர்கள் தாமே போய் முன்னரங்கில் நிற்கட்டும்” என்கிறார். அவர் இறுதியாக ஒன்றைச் சொல்கிறார், “இங்கு வரைபடங்கள் அல்ல முக்கியம், மனிதர்கள்தான் முக்கியம். அவர்கள் ஏங்குவது தமது உயிருக்காக, அமைதியான வாழ்வுக்காக” என்கிறார். உண்மைதான். நாட்டுப் பற்று என்பது எளிய மக்களின் தியாகத்தைத்தான் வேண்டுகிறது. அதற்கான கதையாடல்களையும் போரையும் உருவாக்குபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வசதியைப் பெருக்கி வாழுகிறார்கள். அது உக்ரைனாக இருந்தாலென்ன ரசியாவாக இருந்தாலென்ன, அமெரிக்கா ஐரோப்பாவாக இருந்தாலென்ன! ட்றம்பின் அமெரிக்கா என்பதும் புட்டினின் ரசியா என்பதும் நிரந்தரமல்ல. அது எதிர்காலத்திலும் தத்தமது நலனுக்கேற்ப ஆடுகளங்களில் நிற்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசியலில் நிரந்தரமான நண்பருமில்லை பகைவருமில்லை என்பது இதைத்தான். கண்முன்னே இதற்கான உதாரணங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோலவே, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் வரைவுசெய்யும் எல்லைதான் ஐரோப்பா அல்ல என்பதும், பூகோள ரீதியில் ரசியாவும் ஓர் ஐரோப்பிய நாடுதான் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பகை என்பது இலகுவில் தீர்க்க முடியாதளவுக்கு வரலாற்று ரீதியிலானது என்பதும் அவற்றின் மனக் கட்டமைப்பு ஒன்றல்ல என்பதும், அவை புறந்தள்ள முடியாதளவு இடைவெளியைக் கொண்டது என்பதும் சிந்தனை கொள்ளத் தக்கது. சீனாவை நோக்கி ரசியாவை தள்ளியது மேற்குலகின் அல்லது நாட்டோவின் அணுகுமுறை மட்டுமல்ல, இந்த மனக் கட்டமைப்பு வேறுபாடும்தான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை பைடனைப் போலன்றி ட்றம்ப் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் ஐரோப்பாவின் காலனிய மனக் கட்டமைப்பு சமாதானத்துக்கு குறுக்காக வாள் வீசி நிற்கிறது. அதைத் தாண்டி சமாதானம் முகிழ்ப்பது இலகுவானதல்ல என்பது ட்றம்ப் க்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா தள்ளி நிற்கிறபோதும், ஐரோப்பாவுடன் இழுபடுகிற செலன்ஸ்கியின் பதவியை கைமாற்றியாவது தனது நோக்கத்தை சாதிக்க ட்றம்ப் தயங்க மாட்டார். அதற்கு ஒத்திசைவாக, செலன்ஸ்கி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளின் மில்லியன் கணக்கான பண மோசடியும் ஊழலும் பூதமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. “வரும் ஆனால் வராது, வராது ஆனால் வரும்” என்ற நிலையில் சமாதானம் உக்ரைனின் வாசற்படியில் குந்தியிருக்கிறது!. ravindran.pa 01122025 Thanks: https://marumoli.com/வரைபடங்களும்-மனிதர்களும/ https://sudumanal.com/2025/12/01/வரைபடங்களும்-மனிதர்களும/#more-7502

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 1 week ago
நாட்டிற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் இந்தியா Dec 4, 2025 - 01:49 PM டித்வா புயல் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சாகர்பந்து நடவடிக்கை மூலம் இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது. அதற்கமைய, மேலும் நிவாரண உதவிகளுடன் C17 விமானம் நேற்று (3) இரவு இலங்கையை வந்தடைந்தது. குறித்த விமானத்தின் ஊடாக பெய்லி பாலம் ஒன்றும் 500 நீர் சுத்திகரிப்பு சாதனங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. டித்வா புயலினால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு இடையிலான வீதி இணைப்புகளை மீளமைக்க இந்த பாலம் உதவும் என குறிப்பிடப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmir60u1g02dgo29nk6cz6p89
Checked
Sun, 02/15/2026 - 18:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed