3 months 2 weeks ago
2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர், தலைமை இல்லை. இங்கே மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் 2009 அல்லது அதற்கு முற்பட்டதா? அல்லது குடு அடிக்கும்/விற்கும் கோஷ்டி விடுதலை புலிகள் அமைப்பு என கூறப்படுகின்றதா?
3 months 2 weeks ago
கார்திகா சாதி என்னவாம்? இல்லை ஏன் கேக்கிறன் எண்டா… குகேஷ் தெலுங்கன், கார்த்திகா தமிழச்சி என அரசியல் செய்ய வசதியாய் இருக்கும்… அதுக்குத்தான் 😂
3 months 2 weeks ago
பேரன் ஆரினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
3 months 2 weeks ago
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி! கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சவுதி அரேபிய பயணியைத் தடுக்க முயற்சிக்கும் பதட்டமான சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிந்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால் குறித்த சவுதி நாட்டவர், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதன் விளைவாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2025/1451471
3 months 2 weeks ago
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது! குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. இலங்கையில் மூன்று சந்தேக நபர்கள் மீதும் தற்போது பல குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451489
3 months 2 weeks ago
💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்றும் உன்னுடன் நிற்பாரே ஈழத்தின் கரையிலிருந்து இங்கிலாந்தின் வானம்வரை தாத்தாவின் மங்கா வாழ்த்துக்கள் ஒலிக்குமே! அம்மம்மா வானத்தில் இருந்து ஆசீர்வதிக்க அவளின் கருணை உள்ளம் ஒளிகொடுக்க விண்மீன்கள் அவளின் முகத்தைக் காட்டிட ஆரினின் தொட்டிலை ஆசீர்வதித்து ஆட்டுவாளே! ஆரினே பேரனே வலிமையாக கனிவாக வளர்ந்து மனதில் அன்பையும் நம்பிக்கையையும் பதித்திடு உன்னை உருவாக்கிய ஒவ்வொரு குடும்ப வேரிலும் அன்பு உணர்வு நிறைந்த கதைகள் அடங்குமே! வெல்வின் தோட்டத்தில் [Welwyn Garden] மலர்ந்த மழலையே நேசிப்பவருக்கு இன்ப மகிழ்ச்சி கொடுப்பவனே மூன்று காலமும் அன்பும் நம்பிக்கையும் பொங்க காலம் பிணைத்த பிணைப்பு நீதானோ! உங்கள் வாழ்வின் புதுப்பாடல் ஆரம்பிக்க ஆரின் குட்டியே மெழுகுவர்த்தியை ஊதுங்கள் காலடித் தடங்கள் அமைதியும் மகிழ்ச்சியும் அடைய சொர்க்கத்தின் புன்னகை முகத்தில் ஒளிரட்டுமே! தாத்தா 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்', அத்தியடி, யாழ்ப்பாணம். 💙 ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32083417654640132/?
3 months 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 38 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 38 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சத்தின் ஆசிரியர் புத்தருக்கும் அவருடைய கொள்கைக்கும் வஞ்சகம் செய்தாரா?' 1-27 'இந்த மன்னன் அசோகனுக்கு, இலங்கை தீபத்தை [புத்த சமயத்துக்கு] மாற்றுவதற்கு, ஒரு கற்றறிந்த புத்திசாலி மகன் மகிந்த இருந்தார். ' [27. This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Laṅkādīpa.”] என்று மட்டும் கூறுகிறது. மகிந்த, ஆண் மக்களையும், சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா) பெண் மக்களையும், புனிதப் பதவியான துறவியாக, ஒருவரை உயர்த்தும் சடங்கு செய்வதற்கு நியமித்ததாக கூறப்பட்டாலும், சங்கமித்தா இந்த முன்னைய அத்தியாயத்தில் குறிப்பிடப்படாததால், கதையில் ஒரு பின் சிந்தனையாக, சங்கமித்தாவை இணைத்திருக்க வேண்டும்? அத்தியாயம் 1 புத்தரின் பயங்கரவாத தந்திரங்களைப் பற்றியது. புத்தர் 1-21, இல் 'இயக்கர்கள், பிசாசுகள் [அரக்கன்கள்] மற்றும் அவருத்தகர்களின் [சில குறிப்பிட்ட இயக்கர்களை 'அவருத்தக்க' என்று புத்த சமயத்தில் அழைக்கப்படுகிறது] படைகளை விரட்டியடித்து, நான் தீவில் அமைதியை நிலைநாட்டி, அதை மனிதர்களால் வாழ வைப்பேன்' [21. Having driven out the hosts of Yakkhas, the Pisācas and Avaruddhakas, [a certain Yakkha named Avaruddhaka] I will establish peace in the island and cause it to be inhabited by men.] என்று கூறுகிறார். அதாவது உண்மையில் இலங்கையின் பூர்விகமாக்களை பயமுறுத்தி துரத்துகிறார். மிகவும் வேதனையான பகுதி என்னவென்றால், புத்தர் நிர்வாணம் அல்லது ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இந்த கொடுமையை, தீபவம்சத்தின் படி செய்கிறார். அப்படி என்றால், அது என்ன வகையான ஞானத்தை உண்மையில் அவர் பெற்றார்? இங்கு புத்தர் மிக மோசமான நிலையில் வர்ணிக்கப் படுகிறது. எனவே, அத்தியாயம் 1, இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. அத்தியாயம் 2, இரண்டு நாக அரசர்களுக்கிடையேயான உட்பூசல்களை நிறுத்துவதற்காக புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாம் தரம் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. சிம்மாசனத்திற்காக, நாக இனத்தைச் சேர்ந்த மாமாவுக்கும் அவரது மருமகனுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்த வந்த புத்தர், அதை மறந்து, [2- 36 முதல் 37 வரை] அவர் தனக்காக அந்த அரியணையைப் பெறுவதில் கதை முடிகிறது. இது புத்தருக்கு எப்படிப்பட்ட அவமானம்! ஆனால், உண்மையான புத்தர், உண்மையைத் தேடுவதற்காக தனது சொந்த சிம்மாசனத்தையும், தனது இளம் மனைவியையும், பிறந்த குழந்தை ராகுலனையும் துறந்தார். சமகால அரசர் பிம்பிசாரர், தனது அரசை புத்தருக்கு வழங்கினார், ஆனால் புத்தர் அதை ஏற்க மறுத்தார். அப்படியான உண்மை புத்தரின் புனித உருவத்தை, நாகர்களின் சிம்மாசனத்தை ஏற்றுக்கொள்வதாக இலங்கை நூல்களில் சித்தரிப்பதன் மூலம், அவரை உண்மையில் இழிவுபடுத்தியது என்பதே உண்மை!. என்றாலும் இன்று இலங்கையில் இந்த புத்தரின் பெயரில் தமிழரின் காணிகள் பறிக்கப் படுவதையும், தமிழர்களை அங்கிருந்து அகற்றுவதையும் பௌத்த சிங்கள பலவந்த குடியேற்றங்களை நிறைவேற்றுவதில் இலங்கையின் அரசும் நீதியும் மௌனம் சாதிப்பதும் , இலங்கை பண்டைய நூல்களின் நோக்கத்தை இன்று புரிய வைக்கிறது! அதாவது, இந்தக் கதையை இயற்றிய வஞ்சகத் துறவிகள், புத்தர் ஆயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வந்து, நாகர்களின் [அதிகமாக தமிழ் மொழியுடனும் பண்பாட்டுடனும் ஒன்றியவர்கள்] அரியணையைப் பிடித்ததாக, மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஏன் விரும்பினர் என்பது இன்று எனக்குப் புலப்படுகிறது! இந்த இரண்டு வருகைகளிலும் புத்தர் தனது செய்தியை, தனது கொள்கையை இலங்கையில் தெரிவிக்க அமைதியான எந்த வழிகளையும் கடைப்பிடிக்கவில்லை. புத்தரும் அவருடைய கொள்கைகளும் தீபவம்சத்தின் ஆசிரியரால் துரோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது கவலை தரும் ஒரு விடயம்.! எவ்வாறாயினும், ஞானம் பெற்ற புத்தருக்கு அடிபணிவதற்கு, நாகர்கள் பயமுறுத்தப்பட்ட போதிலும், நாகர்கள் ஒரு குழுவாக தப்பிப்பிழைத்ததை இந்த அத்தியாயம் வெறுப்புடன் மற்றும் மனக்கசப்புடன் ஏற்றுக்கொள்கிறது. Part: 38 / Appendix – Dipavamsa / 'Is the author of the Dipavamsa, betrayed the Buddha and his tenets?' 1-27 reads ‘This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Lankadipa’. Mahinda Thera allegedly ordained the male population and sanghamitta ordained the female population. sanghamitta must have been an afterthought in the narration as she is not mentioned in this chapter. The chapter1 is about the alleged terror tactics of the Buddha. The Buddha thinks, 1-21 reads, ‘Having driven out the hosts of Yakkhas, Pisacas, and Avaruddhakas, I will establish peace in the island and cause it to be inhabited by men’. The agonizing part is that, it is alleged, that the Buddha did these just nine months after attaining the Buddhahood (nirvana - the enlightenment). What kind of enlightenment was that! The Buddha is betrayed to the worst degree. Chapter 1 is, therefore, not about any human historical events that took place in Lanka. Chapter 2 is about Buddha’s uninvited visit to Lanka five years after the attainment of the Buddhahood to stop the infighting between two serpent kings, 2 – 3. Second time too the Buddha resorted to the same tactics of terrorizing the combatants in Lanka. The Buddha who came to stop the internecine war between an uncle and his nephew over a throne ended in getting the throne for himself, 2- 36 to 37. What a shame on the Buddha! The real Buddha renounced his own throne, his young wife, and the just born infant son Rahula in search of truth. The contemporary king Bimbisara offered the Buddha his kingdom which the Buddha refused. It is a wanton debasement of the holy image of the Buddha by portraying him as accepting the throne of Nagas. The devious monks who concocted this story wanted others to believe that the Buddha came flying more than thousand miles to take the throne of Nagas! Nowhere in these two visits had Buddha adopted peaceful means to convey his message in Lanka. The Buddha and his tenets are betrayed by the author of the Dipavamsa! This chapter, however, grudgingly accept that Nagas survived as a group, though terrorized into submission by the enlightened Buddha. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 39 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 38 https://www.facebook.com/groups/978753388866632/posts/32090689990579565/?
3 months 2 weeks ago
(படத்திலிருப்பது Lady with Lamp செவிலியர் சேவையின் அன்னையான Florence Nightingale அம்மையார். அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் அவரது சேவைக்கால ஆடை. நைட்டிங்கேல் புனிதமான செவிலியர் சேவையின் அஸ்திவாரமாக இருந்தவர் இருப்பவர். அவரையும் அவரது சேவையின் தொடக்கப்புள்ளியையும் நினைவு கூறுதலின் ஒரு வடிவம்தான் தலைக்கவசமும் நீண்ட வெள்ளை ஏப்ரனும். ஆரம்பத்தில் அவர் அணிந்த அதே வடிவில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டாலும் கால இட சூழலுக்கேற்ப பொருத்தமான பல பரிமானங்களை எடுத்திருக்கிறது, அவரின் நினைவு கூறலுக்கான அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல். தவிர்த்து நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறப்படவேண்டியது மகத்தான தாதியர் சேவையில்தானே தவிர அவரது ஆடையொழுங்கில் மாத்திரம் அல்ல. எப்பொழுது அந்த சேவைக்கு இனம் மதம் என்ற கறை பூசப்படுகிறதோ அப்பொழுதே அது தன் புனிதத்தன்மையை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. தாதியம் என்ற சேவை ஆடைகளுக்கு அப்பாற்பட்டது என்ற சிறிய தெளிவே இந்தச் சிக்கலுக்கு மிக இலகுவான பதிலாக இருந்தும் அத்தனை இலகுவாக அதையெல்லாம் எமது நாட்டின் சூழலில் எதிர்பார்த்து விட முடியாது என்பதே வெள்ளிடை மலையும் யதார்த்தமும்.) Voir la traduction
3 months 2 weeks ago
Prakasam P Palani · நம் நிலாவில் எடுக்கப்பட்ட உண்மை புகைப்படம். 1969-ல் நாசா அனுப்பிய அப்பலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கியபோது விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் பதித்த கால் தடம் தான் இது. புகைப்படத்தை நல்லா பாருங்க. கால் தடத்தின் ஆழத்தை பார்க்கும்போது ஆல்ட்ரின் ரொம்ப குண்டாக இருந்த மாதிரி தெரியுது தானே...? ஆனா, அது இல்ல. நிலாவில் தரையிறங்கியபோது பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ தான். 'என்னாது...வெறும் 27 கிலோவா...'? ஆமா. ஆனா, அவர் பூமியில் இருந்தபோது அவரோட எடை 80 கிலோ. அவர் போட்டுக்கொண்ட விண்வெளி உடைகள்+உபகரணங்களின் எடை 80 கிலோ. ஆக மொத்தம் 160 கிலோ. இது பூமியில் இருந்தபோது இருந்த எடை. அவர் நிலாவுக்கு போனதும் மொத்த எடையும் 27 கிலோவுக்கு மாறிவிட்டது. காரணம் நிலாவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசை தான். நீங்க இங்க பூமியில் 60 கிலோ எடை இருந்து, அப்படியே நிலாவுக்கு போனால் அங்கே உங்க எடை வெறும் 10 கிலோ தான் இருக்கும். இப்ப ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கங்க. இங்க பூமியில் நீங்க 60 கிலோ எடையுடன் இருந்தால், அது உங்களுடைய உடலின் எடை கிடையாது. உங்களை இந்த பூமி எப்போதும் இழுத்து பிடித்துக் கொண்டுருக்கும் விசை தான் அந்த எடைக்கான காரணம். அப்ப, உங்க உடலில் இருப்பது என்ன...? அதுக்கு பேர் தான் mass. அதாவது நிறை. இந்த நிறை பூமி, நிலா, மார்ஸ் என எந்த இடத்திலும் மாறாது. ஆக, நிலாவில் பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ, ஆனா நிறை அதே 160 கிலோ தான். சரி இவ்வளவு குறைவான எடையிலும் கால் தடம் ரொம்ப ஆழமா இருக்கே...? ஏன்னா, நம் பூமி மண் போல் நிலாவில் இருக்காது. கிட்டத்தட்ட சிமெண்ட் மாதிரி பவுடராக தான் இருக்கும். இதனால் தான் கால் தடம் மிக ஆழமாகவே விழுந்திருக்கு. இந்த படத்தை பார்த்து நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா... "நிலாவில் நீர், காற்று, உயிரினங்கள் என எதுவுமே இல்லை என்பதால், இந்த கால் தடம் எப்போதும் அழியாமல் அப்படியே இருக்கும்" என இந்த போட்டோவில் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஆனால், அது தவறு. நிலாவில் நீர், காற்று எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்னொரு விஷயம் அங்க தினமும் நடந்துக்கிட்டு இருக்கே..!! இங்க பூமியில் தினமும் சிறிய அளவிலான எரிகற்கள்(Micrometeorites) விழுந்துக்கிட்டு தான் இருக்கு. இதனால் பூமியின் எடையும் கூடிக்கிட்டு தான் இருக்கு. இதே மாதிரி தான் நிலாவிலும் சிறிய அளவிலான எரிகற்கள் தினமும் விழுந்துக்கிட்டே இருக்கு. இங்க பூமியில் வளிமண்டலம் இருப்பதால் வரும் எரிகல் சில நேரம் உராய்ந்து ஆவியாகிவிடும், அல்லது சிறிய சிறிய பீஸ்கள் மிஞ்சி போய் கீழே விழும். ஆனால், நிலாவில் வளிமண்டலம் இல்லை என்பதால் உராய்வு எதுவும் ஏற்படாமல் அப்படியே விழும். ஆக, அங்கேயும் பிரச்சனை இருக்கு. இப்ப இந்த மாதிரி சிறிய சிறிய பீஸ்கள் இந்த கால் தடம் மீது விழத்தானே செய்யும்...? அப்போ, கால் தடம் அழிந்து விடுமே...? இந்த புகைப்படம் எடுத்து 56 வருஷம் ஆகிட்டதால, அது இன்னும் அழியாம இருக்குமா...? அட்லீஸ்ட், shape கூட மாறியிருக்கலாம் என்பதே உண்மை!!! Voir la traduction
3 months 2 weeks ago
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது. பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1451511
3 months 2 weeks ago
நல்ல தொடக்கம் தென் ஆபிரிக்கா ஆனால் 10ரன்ஸ்சுக்கும் 3விக்கேட்...............................
3 months 2 weeks ago
❣எங்கே எனது கவிதை ❣ · (1887–1895ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.......!
3 months 2 weeks ago
Sathiya Kumaran · டியர் மந்தனா இந்த மாதிரி Consistent பேட்டிங் எல்லாம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் உங்களை தவிர வேற யார்க்கிட்டயும் நான் பாரத்ததே இல்லை! இனிமேல் இன்னொரு வீராங்கனையிடம் பார்க்க போகிறானே என்பதும் தெரியவில்லை! பெண்கள் கிரிக்கெட்டில் உலகின் டாப் அணிகளில் இரண்டு அணிகளோடு அரைசதம், இன்னொரு அணியோடு சதம் என்று உலககோப்பையில் அடிக்கிறதெல்லாம் உண்மையாலுமே வேற லெவல் 🔥" நம்பர் 1 பேட்டர்ன்னு சும்மாவா? அதற்கு உண்டான தரம் வெளிப்படுமே! அந்த வெளிப்பாடு தான் மந்தனாவின் பேட்டிங்! நாங்க ஆவலுடன் எதிர்பார்த்த அந்த 18 ஆம் நம்பர் ஜெர்ஸி ஏமாற்றினாலும், அதற்கும் சேர்த்து வைத்து இந்த 18 ஆம் ஜெர்ஸி நான் இருக்கேன்னு வட்டியும் முதலுமாக பேட்டிங்கில் காட்டி இருக்கிறீர்கள் 👏" பெண்கள் கிரிக்கெட்டில் பல வீராங்கனைகள் வருவார்கள் ஆடுவார்கள் செல்வார்கள்! ஆனா மந்தனா அப்படி கிடையாது! பின்னாளில் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது ஸ்மிரிதி மந்தனாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும் 💯" இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியின் அரசனாக அவர் இருக்கும் போது பெண்கள் கிரிக்கெட்டில் அரசியாக நான் இருக்கிறேன் என்று நிரூபித்து உள்ளீர்கள் ! ஒருநாள் போட்டிகளில் மந்தனாவின் 14-வது சதம் இதுவாகும்! இந்த உலகக்கோப்பையில் ஒரு வீராங்கனையின் முதல் சதமாகும்! ஒட்டுமொத்த ஒருநாள் உலககோப்பையில் அவர் அடிக்கும் மூணாவது சதம் இதுவாகும்!! அதுமட்டுமின்றி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார்! முதல் இடத்தில் ஆஸி வீராங்கனை 15 சதங்களுடன் மெக் லானிங் உள்ளார்! Queen of Indian Womens Cricket 🏏" #smiritimandhana #TeamIndia #INDIANWOMENSCRICKETTEAM #INDWvsNZW #womensworldcup2025 #cricketlovers Voir la traduction
3 months 2 weeks ago
என்ன. ஒரு. அழகான. விளக்கம். நீங்கள். ரணிலுக்கு. உதவியளாராக. இருக்க. பூரண தகுதியுண்டு. இலங்கையில். இராணுவத்தை. தாண்டி. எதுவும். செய்ய. முடியாது. இது. தான். போராட்டம். பெற்று. தந்த. தீர்வு. ஆகும் இந்த. சைக்கிள். ஒட்டத்தை. இராணுவம். நல்ல முறையில். பயன்படுத்தி. இலவசமாக. விளம்பரம். பெற்றுவிட்டது. சர்வதேசத்தில். நம்ம. ஆள்கள். பயன்படுத்தவில்லை.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
இனம் என்பது இசைந்தே இணைவது… தடி கொண்டு தட்டி வைக்க… கையிர் கொண்டு கட்டி வைக்க… அது பட்டியில் கட்டும் வகை அல்ல… தடி எடுத்தால்… தண்டலும் இல்லை… பொங்கலும் இல்லை… பானையும் இல்லை. -வரலாற்றின் பாடம்-
3 months 2 weeks ago
அது வேறொன்றுமில்லை ......அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையாய் இருக்கிறார்கள் ........!
3 months 2 weeks ago
சூரன் ஏன் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்களை சந்திக்கவில்லை? சிங்கள ராணுவத்தை சந்தித்தார்? துரோகி பட்டம் ரெடி
3 months 2 weeks ago
மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன் ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது. உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள், சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அறிஞர்கள். அதிலிருந்து பலர் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோதும் அதன் பின்னர் அதில் உள்ள குறைகளின் காரணமாக இன்னும் சிலரால் வெவ்வேறு காலங்களில் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இறுதியில் 1908 ஆம் ஆண்டு வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஜேர்மன் மொழிபெயர்ப்பு பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பே இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியாக உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியும் கூட. 1877 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சிங்களத்தில் வெளிவந்தது. 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார். ஆனால் டேர்னரின் பிரதி எவ்வாறு பொதுவில் எற்றுக்கொள்ளப்படவில்லையோ அதுபோலவே அதை ஆதாரமாகக் கொண்ட இவர்களின் பிரதியும் பொதுவில் சிங்கள வரலாற்று அறிஞர்களால் மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் மிகச் சமீபத்தில் எனது தேடல்களில் போது புதுத் தகவல் ஒன்றை சமீபத்தில் கொண்டுபிடிக்க முடிந்தது. அதாவது முதன்முதலில் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டது இலங்கையிலோ இலங்கை மொழியிலோ இல்லை. தாய்லாந்தில் சியாமிஸ் மொழியிலேயே மொழிபெயர்க்கபட்டிருக்கிறது என்கிற தகவல் தான் அது. அதை தனியான கட்டுரையாக பின்னர் தருகிறேன். இந்த வரிசையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன என்பது தான் இக்கட்டுரையின் அடிபட்டை நோக்கம். மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைத் தவிர வேறெந்தத் தொகுதியும் தமிழில் மிகச் சமீபகாலம் வரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து வெவ்வேறு நபர்களால் கொணரப்பட்டிருக்கிற போதும் அவை எதுவும் முழுமையானவை அல்ல. அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ, அல்லது சொந்த விளக்கவுரையாகவோ, புதினக் கதைகளாகவோ அமைந்துள்ளவை. தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். அவ்வாறு இதுவரை தமிழில் வெளிவந்த நூல்களை இனி பார்க்கலாம். மகாவம்சம் – சங்கரன் – 1962 இன்று நம்மிடையே தமிழில் காணக்கிடைக்கிற முதல் பிரதி 1962 ஆம் ஆண்டு “மகாவம்சம்” இலங்கைத் தீவின் புராதன வரலாறு என்கிற தலைப்பில் சங்கரன் வெளிக்கொணர்ந்த நூல் பிரதியே. சென்னையில், மல்லிகை வெளியீடாக 410 பக்கங்களில் இது வெளிவந்திருக்கிறது. இப்பிரதியில் மகாவம்சத்தின் மொத்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் சுருக்கிய விபரங்கள் இதில் அந்தந்த தன இலக்கங்களின் பிரகாரம் வெளியாகியுள்ளதைக் காணலாம். தனக்கு பாளி மொழி தெரியாது என்றும், இலங்கை சர்க்காரால் அதிகாரபூர்வ நூலாக வெளியிடப்பட்ட வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பிரதியிலிருந்தே தமிழ்படுத்தியுள்ளேன் என்று சங்கரன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஈழத்தின் கதை – கே.வி.எஸ்.வாஸ் – 1959 1956 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பௌத்தம் மீழெழுச்சி கொண்ட காலத்தில் மீண்டும் மகாவம்சக் கதையாடல் களத்துக்கு வந்த காலம். அதே காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆனந்தவிகடனில் கே.எஸ்.வாஸ். ஈழத்தின் கதை என்கிற தலைப்பில் தொடராக ஒரு புதினத்தை எழுதிவந்தார். மகாவம்சம், ராஜாவலிய போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு அது எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்ட போதும் அது மகாவம்ச சாரத்தை அடியொற்றி ஜனரஞ்சகப்படுத்தி எழுதப்பட்ட புதினக்கதை என்று கூறிவிடலாம். 1959இல் இது 260 பக்கங்களில் நவலட்சுமி புத்தகசாலையின் வெளியீடாக வெளிவந்தது. முதலாவது அத்தியாயத்தின் தலைப்பே “சிங்கன் பிறந்தான்” என்று தொடங்கும். அதேவேளை கல்கி கிர்ஷ்ணமூர்த்தி எழுதிய அணிந்துரையின் அடியில் அது 1950 இல் எழுதப்பட்டதாக காணபடுகிறது. இந்நூல் அதன் பின்னர் பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் – கலாநிதி க.குணராசா – 2003 செங்கை ஆழியான் என்கிற பெயரில் ஏராளமான நூல்களை எழுதிய எழுத்தாளர் க.குணராசா அவரது சொந்த பதிப்பகமான கமலா பதிப்பகத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்த 150 பக்கங்களைக் கொண்ட நூல் இது. அந்த நூல் மகாவம்சத்தின் உள்ளடக்கங்களை சுருக்கமாக தன்நுணர்தலின் அடிப்படையில் சுவாரசியமாக தர முயற்சிக்கப்பட்ட நூல் எனலாம். புனைகதைத் துறையிலும் அவருக்கிருந்த அனுபவத்தாலும் ஆளுமையாலும் மகாவம்சத்தையும் சுருங்க சுவாரசியமாக தர முற்பட்டிருக்கிறார். அந்நூலின் ஆரம்பத்திலேயே அவர் தந்திருக்கிற உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அது மகாவம்சத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட நூல் இல்லை என்பது இன்னும் ஊர்ஜிதமாகும். பதிப்புரையிலேயே ஒப்புக்கொண்டதுபோல போல அது “இலங்கை சரித்திரம் குறித்து சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறும் நூல்”. இதைவிட அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூளவம்சத்தையும் தமிழில் தந்திருக்கிறார். அவரின் “சூளவம்சம்” 2008 ஆம் ஆண்டு வெளியானது கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. ஆங்கில சிறிய எழுத்துக்களில் மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. கி.பி 362 இலிருந்து 1815 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. குணராசா இதையும் தன்முனைப்பில் மிகச் சுருக்கிய அறிமுகத்தையே செய்திருக்கிறார். ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்கவுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. சூளவம்சம் என்கிற பேரை அதை முதன் முதலில் தொகுத்த கைகர் வைத்த பெயரேயோழிய அப்படியொன்று இருந்ததில்லை. மகாவம்சத்தை அவர் தொகுத்து முடித்த பின்னர், எஞ்சிய காலத்தை பின் வந்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த பிக்குமார்களால் எழுதிமுடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஒன்றாக்கிய பொது அவர் வைத்த பெயரே சூளவம்சம். இந்தப் பிரதியை தவிர மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியானது வேறெவரும் வெளிக்கொணர்ந்ததில்லை. மகாவம்சம் – உதயணன் – 200? உதயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஜனரஞ்சக வரலாற்று புனைகதை எழுத்தாளர் எனலாம். அவ்வாறு ஏராளமான ஏராளமான அவர் எழுதியிருக்கிறார். மகாவம்சத்தில் உள்ள கதைகளையும் அவர் தன்னார்வத்தில் சுவைபட புதினக் கதையாக எழுதிருக்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளாக கிடைக்கின்றன. முதலாவது தொகுதி 438 பக்கங்களிளும் இரண்டாவது தொகுதி 402 பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 90 அத்தியாயங்களாக வெளியிட்டிருக்கிற போதும் மூல மகாவம்சத்தின் அத்தியாயங்களுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவர் மூல மகாவம்சத்தின் உள்ளடக்கத்தையும் முழுமையாக புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு அந்நூலின் முன்னுரையில் “வட பாரதத்தினனான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மண்ணுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர்” என்கிறார். ஆனால் மகாவம்சத்தின்படி விஜயன் மணமுடித்த பாண்டிய இளவரசிக்கு எந்த வாரிசுகளும் பிறக்கவில்லை என்கிறது. இப்படியான அடிப்படையான தகவல்களில் அவர் தவறிழைத்திருக்கிறார் என்பதை அவரின் முன்னுரை விளக்கத்தில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதைத்தவிர அவர் மகாவம்சத்தின் கதைகளில் இருந்து துட்டகைமுனுவின் தாயாரை கதாநாயகியாகக் கொண்டு “விகாரமகாதேவி” என்கிற 1028 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலையும் 2015ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் “சிங்களத்துப் புயல்” எனும் 200 பக்க நாவலொன்றையும் 2012 இல் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் ஒரு தடவை இலங்கை அரசனின் படையெடுப்பில் பாண்டிய நாடு கைப்பற்றப்பட்டதாக பதிவுண்டு. 1166 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வோடு ஒட்டிய தகவல்களைக் கொண்டு அவர் ஒரு புனைகதையை ஆக்கியிருக்கிறார். இக்காலப்பகுதியானது மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூலவம்சமே பதிவு செய்திருக்கிறது. அதேவேளை தனது முன்னுரையில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரின் நூல்களில் இருந்த தகவல்கள் இந்நூலுக்குப் பயன்பட்டதாக குறிப்பிடுகிறார் அவர். மகாவம்சம் – ஆர்.பி.சாரதி – 2007 ஆர்.பி.சாரதி பல நூல்களை மொழிபெயர்த்தவர். கொடோவே பலரின் வாழ்க்கை சரிதங்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளர். அவர் 2007 ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூலே இந்த “மகாவம்சம்”. ஆனால் இந்த நூலும் மகாவம்சத்தை சுருக்கமாக 238 பக்கங்களில் விளக்கமுயன்ற ஒரு சாராம்ச நூலே. மூல நூலின் அதே 37 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் இந்த சாராம்ச சுருக்க நூலில் செய்யுள் இலக்கங்கள் எதுவுமின்றி நிறைவடைந்துவிடுகின்றன. மகாவம்சம் : ஸ்ரீலங்கா வரலாறு – சாந்திபிரியா – 2008 இந்த நூலை எழுதியவரின் உண்மைப் பெயர் ஜெயராமன். ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியர். பவந்த பெரேரா என்கிற ஒரு சிங்கள நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த நூலை எழுதி முடித்ததாக அந்நூலில் குறிப்பிடுகிறார். மூல மகாவ்மசத்தின் அதே 37 தொகுதிகளைக் கொண்ட 344 பக்க நூலாக இது காணப்படுகிறது. நூல் வடிவில் அமைந்திருந்தாலும் ஒரு மின்னூல் (ebk) வடிவித்திலேயே இது கிடைத்திருக்கிறது. அச்சில் பதிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணவில்லை. எவ்வாறாயினும் இதுவும் ஏனையவற்றைப் போல மிக சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு பிரதியாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அதன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது இயந்திர மொழிபெயர்ப்பின் வாடை தெரிகிறது. பல சிங்கள கலைச்சொற்களை கூகிள் மொழிபெயர்ப்புகளின் போது தருகிற பிழைகளை அப்படியே காணமுடிகிறது. விகாராக்கள், தடுசேனா (Dhatusena), தூபவம்சா (Thupavamsa), ததுவம்சா, (Dhatuvamsa), வில்ஹம் கீஜர் (Wilheml Geiger), யக்கா இனத்தினர் போன்ற சொற்களை உதாரணத்துக்குக் குர்பஈடலாம். மகாவம்சம்- சிங்களர் கதை – எஸ்.பொ, 2009 ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. சிங்கள ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் எவருக்கும் புரியும். அந்த ஐந்து தமிழ் பிரதிகளில் ஓரளவு தேறிய பிரதி என்றால் அது எஸ்.பொ. அவர்களின் “சிங்களர் கதை” என்கிற பிரதி எனலாம். அதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால் குறைந்தபட்சம் மகாவம்ச மூலப்பிரதியிலுள்ள செய்யுள்களின் அதே இலக்கத்தொடர்களுடன் அது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதே. அதேவேளை அவரின் சொந்த அரசியல் நம்பிக்கைகளை அதில் புகுத்தியிருப்பது அதன் பாதகங்களில் ஒன்று. அதன்படி மகாவம்சத்தின் மீது வினையாற்றுபவர்கள் ஈற்றில் எஸ்.பொவுக்குத் தான் வினையாற்ற நேரிடும். மூல மகாவம்சத்தின் மீது வினையாற்றுவதற்கான வாய்ப்பு அற்றுப் போய் விடுகிறது. மேலும் மூல மகாவம்ச பிரதியுடன் பார்த்தால் இதுவும் சாரம்சப்படுத்தப்பட்ட பிரதியே. இதுவரை எந்தப் பிரதியும் பாளி, சிங்களம், ஆங்கிலம் என எந்த மொழியிலிருந்தும் தமிழ் மொழிக்கு முழுமையான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்ததில்லை. மேற்படி பிரதிகளும் கூட கைகரின் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டவை. ஈற்றில் தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. இதைவிட தமிழில் வெளிவந்த மகாவம்சத்தோடு தொடர்புடைய சில நூல்களையும் இங்கே குறிப்பிட முடியும். “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத் தன்மை”, வில்ஹெம் கைகரின் மகாவம்சத்தின் முன்னுரை விரிவான ஒன்று. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அதனை மொழிபெயர்த்து 2002இல் வெளியிட்டார். “எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்” என்கிற நூலை கலாநிதி ஜேம்ஸ் டீ இரத்தினம் ஆற்றிய உரையொன்றை எ.ஜே.கனகரட்னா தமிழில் மொழிபெயர்த்து 1981 இல் ஒரு நூலை வெளிக்கொணர்ந்தார். மகாவம்சத்தில் கூறப்படுகிற எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதியாக மாற்றுகிற மோசடியை எதிர்த்து ஆதாரங்களுடன் தர்க்கிக்கிற முக்கிய நூல். “கமுனுவின் காதலி” என்கிற ஒரு நாவலை மு கனகராசன் எழுதி 1970 இல் வெளியிட்டார். மகாவம்சத்தில் துட்டகைமுனு பிரதான கதாநாயகன். பிரதான வில்லனாக எல்லாளனை சித்திரித்திருப்பார்கள். வயதான எல்லாளனுடன் போர்புரிந்து துட்டகைமுனு வென்றாதாக அது கூறுகிறது. அந்த எல்லாளனின் மகளை துட்டகைமுனு காதலித்ததாக ஒரு வாய்மொழி வரலாறு உண்டு. அதையே கனகராசன் ஒரு நாடகமாக எழுதி அதை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளைத் தவிர அடுத்த மூன்று பாகங்கள் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை. என்.சரவணனின் - 6வது தொகுதி முதற்தடவை உள்ளதை உள்ளபடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது என்.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்ட 6வது “மகாவம்சம்” தொகுதியாகும். 1978-2010 காலப்பகுதியைக் கொண்டிருக்கிற இந்த மொழிபெயர்ப்பானது மகாவம்ச வரலாற்றில் உள்ளது உள்ளபடி எந்தவித மேலதிக உட்புகுத்துகையின்றி அப்படியே கொண்டுவரப்பட்ட முதல் மகாவம்சப் பிரதி எனலாம். அதுபோல வரலாற்றில் மூலமொழியில் எழுதப்பட்ட பிரதியிலிருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட முதல் தொகுதியும் இதுவேயாகும். கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகாவம்சக் குழுவினால் 2012 ஆம் ஆண்டு இறுதி பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழன் பத்திரிகையில் தொடராக கடந்த ஆண்டு வெளியானது. பின்னர் குமரன் பதிப்பகம் சென்ற ஆண்டு மொத்தம் 700 பக்கங்களில் பெரிய நூலாக வெளியிட்டது. இதற்கு முன்னர் தமிழில் கொணரப்பட்ட மேற்படி மகாவம்சத்தின் முதலாவது தொகுதியின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியிலான வில்ஹெம் கைகரின் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழியாக அரசியலமைப்பு ரீதியில் அதிகாரபூர்வமாகக் கொண்ட அரசு; இலங்கையின் வரலாற்று நூலை தமிழில் இதுவரை வெளியிட்டதில்லை என்பதை கவனிக்குக. தற்போது கலாசார திணைக்களம் தொடங்கியிருக்கும் மொழிபெயர்ப்பு முயற்சியும் முதலாவது தொகுதியைத் தான் செய்யத் தொடங்கியிருக்கிறது. அது முடியவே இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். அதன் பின்னர் அடுத்து ஐந்து தொகுதிகளும் எமது வாழ்நாளுக்குள் வெளிவருமோ என்னவோ. மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொன்றும் விரிவாக ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியவை. இங்கே அதற்கான அறிமுகத்தை மட்டுமே செய்திருக்கிறேன். நன்றி - தினகரன் - சாளரம் - 12.10.2025 https://www.namathumalayagam.com/2025/10/TamilMahawamsa.html
Checked
Wed, 02/18/2026 - 00:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed