புதிய பதிவுகள்2

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
அரசியல் தந்திரம், இராணுவ தந்திரம், இராஜ தந்திரம், இது, வியாபார தந்திரம். எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள். இவர்கள் கொள்வனவு செய்த விலையைவிட இரண்டு மூன்று மடங்கு லாபம் வைத்துதான் விற்பனை செய்கிறார்கள். முடிவுதிகதியை நெருங்கும்போது, மலிவு விலையில் கொடுக்கும்போது நுகர்வோரும் பலனடைவர், வியாபாரியும் நட்டமடையார். தாங்கள் கொள்ளை லாபம் அடைய வேண்டுமென்பதற்காக வியாபார தர்மத்தையே இழந்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்/ இழக்கிறார்கள்

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
யாழ்களத்தில் எழுத்தில் இல்லாத ஒரு விதி இருக்கிறது எங்கள் கருத்துக்களை நாங்கள் எழுத முடியாது ......... இவர் என்ன எழுதுவார் என்று மூன்றாம் நபர் எழுதுவார்.

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
"புரின் சர்வாதிகாரி" என்று சொல்லும் அதே ஆட்கள் தான் - குறைந்த பட்சம் இந்தக் களத்திலாவது- "ட்ரம்ப் ஒரு மெலிதான (lite) சர்வாதிகாரி" என்றாவது எழுதுகிறார்கள். கறுப்பின மக்கள் மேல் நடத்தப் பட்ட, நடத்தப் படும் அடக்கு முறையையும் அவர்கள் தான் இங்கே கண்டித்திருக்கிறார்கள். பெண்கள் - ஓம், பெண்கள்😉 - மேல் நடத்தபடும் அடக்கு முறைகள், மாற்றுப் பாலினர் மேல் நடத்தபடும் அடக்கு முறைகள் இவையெல்லாவற்றையும் இங்கே கண்டிக்கிறார்கள். உங்கள் "காய்ச்சல் இல்லாத கண்ணுக்கு" இவற்றுள் எதையாவது "புரின் புரியன்மார்" இங்கே பேசியதாக தெரிந்திருந்தால் ஒரு தடவை சுட்டிக் காட்டுங்கள்! புலிகள் மீது இருந்த குறைகளை சொல்வோரால் புலிகளின் பெயர் நாறியதை விட, அந்தப் பிழைகளுக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் "மண் லாறி" களால் தான் அவர்கள் பெயர் இங்கே மிகவும் நாறியிருக்கிறதென நினைக்கிறேன்.

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
அப்பப்போ புலிக்காய்ச்சலால் நலிந்து மெலிந்து போகிறார்வர்கள் .... தத்துவம் சொல்லி தருகிறார்கள் ......... நோர்வேயில் குளிர் என்று உண்மையை சொல்வது என்றால் அவர்கள் ஆப்பிரிக்க போய்தான் சொல்ல வேண்டுமாம். சிரித்து சாகவேண்டும் என்பது எங்கள் விதியோ என்னமோ ?

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
தெரியும்...புது டெக்னிக்...அவசரதேவைக்கு பாகிஸ்கடைக்கு பால் வாங்கப்போனேன் ..அங்கு 2 வீத பால் பக்கட்டுக்கள்... காலாவதி திகதியுடன் கிடந்தன ..கவுண்டரில் நின்ற நானாவிடம் கேட்டேன்...இவை திகதி முடியுது ..வேறு தரமுடியுமா என்று....அவர் சிரித்தபடி சொன்னார் ...இதை கொண்டுபோய் பிறீசரில் போட்டுவிட்டு ஒருமாதம் வரையும் பாவிக்கலாம் என்று....நானும் சிரித்தபடியே ..போனால் போகுதென்று ..4 வீத சிவப்பு பக்கட்டை எடுத்துக் கொண்டு ...வந்துவிட்டேன்.... வீட்டில் அந்த சிவப்புப்பை முடியுமட்டும் வாங்கின பேச்சு ... ரீங்காரம் செய்யுது

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
28 அம்ச சமாதான திட்டம் என்பது ரஷ்யாவினாலேயே தயாரிக்கப்பட்டது. அதை அவர்கள் அமெரிக்காவிடம் கொடுத்தார்கள். அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால் மார்க் ரூபியோவும், அதிபரின் குடியரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கூட இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை நியாயம் அற்றது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தத் திட்டம் உக்ரேன் முற்று முழுதாக ரஷ்யாவிடம் சரண் அடையும் நிலை என்றே அமெரிக்க பிரநிதிகளால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மார்க் ரூபியோவின் தலைமையில் 28 அம்ச திட்டம் 19 அம்ச திட்டமாக மாற்றப்பட்டது. இதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இங்கு எவருமே அவர்களின் இலக்கை அடையாமல் போரை நிறுத்தி சமாதானத்துக்கு தயாராக இல்லை என்பதே உண்மை. நான்கு தரப்பிற்கும் வெவ்வேறான இலக்குகள் உள்ளன என்றே தெரிகின்றது: அமெரிக்கா - வழமை போலவே அமெரிக்காவிற்கு கிடைக்கப் போகும் குறுகிய மற்றும் நீண்ட கால பொருளாதார நலன்களே அமெரிக்காவின் பிரதான இலக்கு. அரசியல் பலம் மற்றும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தல் என்பன அடுத்த இலக்குகள். அதிபர் ட்ரம்ப் வந்த பின் அவரினதும், அவரைச் சார்ந்தவர்களினதும் (அவரது கட்சியினர் அல்ல) நலன்களும், அவர்கள் அடையப் போகும் பயன்களும் இன்னொரு இலக்காகி உள்ளது. இந்தச் சண்டையில் நோபல் பரிசு பெறுவது என்பது கூட ஒரு இலக்கு என்பது முகம் சுளிக்க வைக்கும் நிஜம். ரஷ்யா - அதிபர் புடின் ஒரு பலமான ரஷ்யாவை, சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்ததைப் போல, உருவாக்க நினைக்கின்றார். ரஷ்யாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள், இரசாயன ஆயதங்கள் போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால், இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் அருகில் கூட வரமுடியாத நிலையிலேயே ரஷ்யா உள்ளது. உக்ரேனுடன் சண்டை போடுவதற்கே ரஷ்யாவிற்கு வட கொரியாவின் பத்தாயிரம் வீரர்கள் களத்தில் தேவைப்படுகின்றார்கள். அதை விட வேலை வாய்ப்புகள் என்று சொல்லி அழைத்து வரப்பட்ட இலங்கை இளைஞர்கள் கூட கட்டாயமாக களத்துக்கு ரஷ்யாவால் அனுப்பப்படுகின்றார்கள். நேற்று தென் ஆபிரிக்காவில் இதே விடயத்தில், ரஷ்யாவின் போருக்கு ஆட்களை சேர்த்த குற்றத்திற்காக, சில பிரபலமான தென் ஆபிரிக்கர்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அதிபர் புடினின் நோக்கம் ஒன்றே. அது சமாதானம் அல்ல. அவருடைய நோக்கம் முழு உக்ரேனையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே. ஐரோப்பா: யாராவது சண்டை பிடித்துக் கொள்ளட்டும், யாராவது அவர்களின் வளங்களை செலவழித்துக் கொள்ளட்டும், நாங்கள் அப்படியே இருந்து விடுவோம் என்று நினைக்கின்றார்கள். அத்துடன் ரஷ்யாவின் மீதும், அதிபர் புடினின் மீதும் பயமும் இருக்கின்றது. பலம் என்பதை விட, அதிபர் புடினின் மூர்க்கத்தனமே அவர்களை யோசிக்க வைக்கின்றது. அதிபர் புடினின் சாத்தான் - 2 நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை இந்த வாரமும் வெற்றியளிக்கவில்லை. அதிபர் புடின் இதை தொடரப் போவதாகவே சொல்லியிருக்கின்றார். ஐரோப்பாவும், அமெரிக்காவும் இப்படியான ரஷ்யாவின் நடவடிக்கைகளை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எதிர்க்கவே போகின்றார்கள். உக்ரேன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம். உக்ரேன்: உக்ரேனியர்கள் தங்கள் இறைமைக்காகவே போராடுகின்றார்கள். உலகில் மிகப் பெரிய நாடுகளின் அருகில் அமைந்திருக்கும் சிறிய நாடுகளுக்கு தெரிவுகள் மிகக் குறைவு. உக்ரேனுக்கும் அதுவே நிலை. அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஆதரவளிக்கா விட்டால், உக்ரேன் இன்றே முடிந்தது. ஒரு தேசிய இனமே இந்த உலகில் இருந்து மெதுமெதுவாக மறைந்துபோகும். நீங்கள் கல்விச் சமூகம் என்று சொன்னதை நான் என்னை நோக்கியதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பொதுவாக படித்து பட்டம் பெற்றவர்களையே நீங்கள் சொல்லுகின்றீர்கள் என்று நினைத்துவிட்டேன். துறைசார் நிபுணர்களை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பட்டங்கள் பெறுபவர்கள் எல்லோரும் கல்விச் சமூகமாக ஆவதில்லை.................. போகும் வழியில் கிடைத்த பட்டங்களாக எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமூகமாக மாறாமல், தங்கள் வழியிலேயே வாழ்ந்து முடிப்பவர்களும் பலர் இருக்கின்றார்கள்......................

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
ஜேர்மன் நண்பரைப் போலவே உங்களுக்கும் விளக்கக் குறைவு போல தெரிகிறது: 1. சிங்களத் தலைவர்களின் இனவாதம், சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் - இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உயிர் பிழைக்க ஒரு ஈழவர் ரஷ்யா ஊடாகப் பயணித்து அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2. சில வருடங்களில் அமெரிக்காவில் அவர் தானே விரும்பி பிரஜையாக வந்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 3. அமெரிக்காவின் பிரஜையாக வந்த பின்னர், ரஷ்யாவைப் பார்த்து "எவ்வளவு அருமையான தலைமை அங்கே இருக்கிறது, எவ்வளவு அருமையான உள்ளூர்க் கொள்கைகள் இருக்கின்றன!" என்று விதந்துரைக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இதைக் காணும் ஒருவர், "அப்ப ஏன் அவர் ரஷ்யாவிலேயே தங்கவில்லை? அல்லது அங்கே போய்ப் பிரஜையாக முயலவில்லை?" எனக் கேட்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது தானே? இந்தக் கேள்வி ஏன் சிலருக்குக் கோபமூட்டுகிறது எனில், அவர்களுடைய "நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைக் கண்டு கொள்ளாதே!" 😎 என்ற போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டி விடுவதால் தான்!

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
கொழும்பில போய் படித்தவர்கள் கொழும்பில் போய் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஈழத்தில் இனப்படுகொலை ஒன்றே நடக்க்கவில்லை விமானங்களில் அவர்கள் பூக்களை தூவினார்கள் என்றுதான் எழுதவேண்டுமோ என்னமோ ?

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
தயாரித்த உணவுப் பொருட்களை எந்தக் காலத்திலும் காலாவதியாகி விட்டது என்று தூக்கி எறிய மாட்டார்கள். ஏதோ ஒரு விதத்தில், மறு சுழற்சியாக வாடிக்கையாளர் தலையிலேயே கட்டி விடுவார்கள் என்று நினைக்கின்றேன். "புது மொந்தையில் பழைய கள்ளு" 😂

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
முந்தியெல்லாம் காலாவதி திகதியெல்லாம் பாத்து தான் சாப்பிட்டனீங்களோ எண்டு கேட்டால் என்ன செய்யிறது? சட்டத்துக்கு பயப்பிடுற ஜேர்மனியிலை கூட உள்ள சுத்துமாத்துக்கள் சொல்லி வேலையில்லை. 😄

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
இன்னும் நாலுவருசம் ஐரோப்பிய யூனியன் பல்லை கடிச்சுக்கொண்டு இருக்கப்போயினம் போல கிடக்கு. ரம்ப் அடுத்த தேர்தலில் ஆட்சியை விட்டு போனால் எல்லாம் சுபம் எண்டு நினைக்கினம் போல...அதுக்கிடையிலை ரம்பர் உக்ரேனை ஒரு வழி பண்ணீட்டுத்தான் போவார் எண்டு நினைக்கிறன்.அடுத்தது புட்டின். புட்டின் போனாலும் இல்லை மண்டையை போட்டாலும் புட்டினை விட பெரிய ரஷ்ய விசுவாசிதான் ஆட்சிக்கு வருவார் என பலர் ஊகம் தெரிவிக்கின்றார்கள். எனக்கு இப்ப உக்ரேனையும் செலென்ஸ்கியையும் நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருகுது.😋😂🤣😎

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
பாகிஸ்தான்காரருக்கு... லேபிள் மாத்துற "ரெக்னிக்" தெரியாது போலை இருக்கு. 😂 அவங்களை... தமிழ் கடைக்காரரிடம் "ட்ரெய்னிங்" எடுக்க விட வேணும். 🤣

ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

3 months 2 weeks ago
இந்தளவுக்கு ஒரு முட்டாள் இலங்கை யின் எதிர் கட்சித் தலைவராக என்றும் இருந்ததில்லை. எதையாவது உளறிக் கொட்டி அதை மக்கள் நம்பி தன்னை சனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என நினைக்கின்றார். அப்பன் பெயரை கெடுக்க வந்த பிள்ளை.

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
இந்த விடயத்தில் எம் தமிழ் கடைக்காரர்களை யாரும் விஞ்ச முடியாது. காலாவதியான திகதி இருக்கும் label மேல் புது திகதி கொண்ட இன்னொரு label லை ஒட்டி சக தமிழருக்கே விற்று விடுவார்கள்.

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
பாகிஸ்தானியர்கள்... தம் நாட்டிலேயே, காலாவாதியான உணவுகளைத்தான் எப்போதும் சாப்பிடுவார்கள் போலுள்ளது. மகனுடன் வேலை செய்யும் ஒரு பாகிஸ்தான்காரன், தனது நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வரும் போது, அங்கிருந்து கொண்டு வந்த "கரம் மசாலா" பக்கற் ஒன்றை கொடுத்துள்ளான். மகனும் அதனை பெரிய புளுகத்துடன் கொண்டு வந்து, எமக்கு காட்ட, நாம் முன் எச்சரிக்கையுடன் அதன் திகதியை பார்க்க... அது, காலாவதியாகி இரண்டு வருடம் கடந்து இருந்தது. 😂 இத்தனைக்கும்... அந்தப் பாகிஸ்தான்காரன் பொறுப்புள்ள பதவியில் இருப்பவன். அப்படி இருந்தும்.... ஒரு பொருளை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, தரமானதாக கொடுக்க வேண்டும் என்ற அறிவு, இல்லாமல் போய் விட்டது.

படுபட்சி நாவல்: விசாரணை

3 months 2 weeks ago
இது வேறு பிரச்சினையல்லவா? இதற்கான ஆதாரங்கள் ந.செ சொல்வது போல அவரிடம் இருந்தால் அதை முன்வைத்துத் தான் பேச வேண்டும். தற்போதைக்கு ந.செ விடம் இருக்கும் "ஆதாரம்" கீழிருக்கும் வரிகளில்👇: இது ந.செ வின் அபிப்பிராயம் அல்லவா? இதை வைத்துக் கொண்டு முகநூலில் விவாதம் செய்யலாம். வேறெதுவும் செய்ய இயலாது. தற்கால இலக்கிய வாதிகளுக்கு (அல்லது அப்படியாகத் தம்மை அழைத்துக் கொள்வோருக்கு) காலை எழும்பியதும் "முகநூலில் என்ன விவாதிப்பது?" என்பது தான் யோசனை போல இருக்கிறது😂.

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம் - இந்த தற்குறித் தலைவர்களை எதிர்ப்போர் இலங்கையில் வாழாமல் அமெரிக்கா, ஐரோப்பா என்று வந்தது புரிந்து கொள்ளக் கூடியது தானே? புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம், இவர்களையெல்லாம் முன்னுதாரணத் தலைவர்களாகப் புகழும் ஒருவர் ஏன் அந்தந்த உதாரணத் தலைவர்களின் கீழிருக்கும் நாடுகளிலோ அல்லது ராஜபக்சக்களின் இலங்கையிலோ போய் வாழ முனையவில்லை என்பது நியாயமான கேள்வி தானே? இந்த வேறு பாடு புரியாமலா இவ்வளவு நாளும் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
அந்த எழுத்து வடிவ வாக்குறுதியை இங்கே இணைத்தால் நாம் புரிந்து கொள்ளலாமே மருதர்? "மேற்கில் தணிக்கை செய்து விட்டதால்" நம் போன்றவர்களுக்கு அது தெரியாமல் போயிருக்க கூடுமல்லவா😎?

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

3 months 2 weeks ago
கடந்த வருடம் காலவதியான அரிசியைத் தான் குடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் கப்பலில் பொருட்கள் அனுப்ப பட இருக்கிறது என்று செயதிகளில் கேட்க முடிகிறது. கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டது என்றால். அவசர நிலையில் எப்படி இலங்கையின் இலச்சினை பைகளில் பொறிக்கப்பட்டது.?
Checked
Sat, 03/21/2026 - 01:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed