புதிய பதிவுகள்2

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

1 week 5 days ago
WTCC (உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு) முன்னர் சுவிசில் ஆவணமோசடி, கடன் பெற்றுக்கொடுத்தது போன்ற வழக்கின் பின்னர் திவாலாகியது. கடந்த வருடத்திலிருந்து மீண்டும் அதே பெயருடன் புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. அந்த நிர்வாகத்தில் அண்ணனும் ஒருவர். இண்டையத்தளத்தில் வெளிப்படையாகவே உள்ள பதிவு தான். WTCCஇன் வளர்ப்பே போலி துவாரகா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அரசியல் என்னவென்று எனக்கு புரியவில்லை. இவரை எப்படி சுவிஸ் அரசாங்கமும், பத்திரிகைகளும் இது பற்றி கேள்வி எழுப்பாமல் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை.

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

1 week 5 days ago
சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy

நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம்

1 week 5 days ago
26 Jan, 2026 | 06:11 PM நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகர சபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், “Pick Me” நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சுற்றுலாப்பயணிகளும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம். மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர். அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

1 week 5 days ago
சீன வாகனங்களும் ஐரோப்பிய சந்தையைப் பிடித்து விட்டதாக சொல்கிறார்களே? கனடாவுக்கும் வந்து இறங்கப் போகுது. எல்லை தாண்ட ரம் விடுவாரா தெரியவில்லை.

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு

1 week 5 days ago
Deadly cold settles in: At least 11 people have died in the coldest temperatures of the winter. Over 250 million people are under cold alerts for frigid temps that will linger for days, raising fears for those without shelter or power. • Crippling blow: More than 800,000 customers are still without power after damaging ice knocked it out. Here’s what to do if you’re without power. • No travel, no school: Sunday was the worst day for flight cancellations since the pandemic. Over 19,000 flights have been canceled during this storm. Schools in major cities have canceled classes or moved to remote learning for Monday. • Over a foot of snow: A staggering 31 inches of snow fell during the storm and 17 states have seen snow pile up a foot or higher. See all our maps and charts of the storm here. https://www.cnn.com/weather/live-news/winter-storm-forecast-snow-ice-01-25-26-climate

யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்

1 week 5 days ago
தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தினை இழந்தால், அது தமிழர்களிற்கு மேலும் நெருக்கடியாகிவிடும், ஆனால் தமிழ்க்கட்சிகள் சிறு சிறு கட்சியாக சிதறுண்டிருந்தால் பலமான ஒரு பிரதிநிதித்துவத்தினை எட்ட முடியாது, சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாகக்கூடாது, அது மிகவும் ஆபத்தானது, தமிழர்களும், முஸ்லீம்களும் தமது உரிமைகளை பெறுவதற்கு தமக்குள் ஒருமித்த பெரும் சக்தியாக இருத்தல் வேண்டும் (தமிழர்களுக்கு தமிழ்தேசிய கூட்டணி, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் போல). புலிகள் இருந்த காலத்தில் தமிழ் தேசியம் ஒரு சாத்தியமான விடயமாக இருந்தது, ஆனால் தற்போது வட கிழக்கு இணைப்பினையே ஒரு பிரிவினை வாதமாக பார்க்கிறார்கள், 13 இனை இந்திய தலையீட்டின் பகுதியாக பார்க்கிறார்கள். தற்போதய ஒற்றை ஆட்சி இலங்கைக்குள் அரசு விரும்பியதை செய்யும் நிலையில் உள்ளது. இவற்றை மீறி ஒரு அதிகார பரவலாக்கமே சாத்தியமா என தெரியவில்லை. தற்போதுள்ள இலங்கை அரசியல் சட்டத்தில் 1காணி, சட்டம், நிதி போன்ற அதிகாரமற்ற நிலையே காணப்படுகிறது. இந்த விடயங்களை அடைவதே எட்டாக்கொம்பாக உள்ளது, கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை என்பது நினைத்தே பார்க்க முடியவில்லை.

ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.

1 week 5 days ago
பெரிய மீனுள்ள சமுத்திரத்தில் சின்ன மீனும் இருக்கின்றது அது போலத்தான்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 5 days ago
தற்போதைய தரவரிசையில் உகண்டா 21 ஆம் இடத்தில் இருக்கிறது. முதல் 20 இடங்களில் 19 அணிகள் இம்முறை உலக கிண்ண போட்டி விளையாடவுள்ளது. மற்றைய அணி வங்காளதேசம்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 5 days ago
பாகிஸ்தான் விளையாடவிட்டால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கொழும்பில் நடைபெறவுள்ள ஆரம்ப சுற்று போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக விளையாடும் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெறுமா அல்லது (இந்தியாவுக்கு சார்பான?) ஐசிசி போட்டியை இந்தியாவில் நடாத்துமா?

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

1 week 5 days ago
பராசக்தி படம் ஹிந்தி திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எடுக்கபட்டதால் அதை பயன்படுத்த பாஜக நினைத்து இவர்களை பொங்கல் கொண்டாட அழைத்திருக்கலாம். மிரட்டியும் அழைத்திருக்கலாம். ஆனால் அநுரகுமார திசாநாயக்கவுடன் பொங்கல் கொண்டாடி செல்பி எடுக்க முண்டி அடித்தவர்களை விட அவர்கள் மேல்

யாழில் இந்திய குடியரசு தினம்!

1 week 5 days ago
யாழில் இந்திய குடியரசு தினம்! இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. https://athavannews.com/2026/1461533

பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!

1 week 5 days ago
பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2026/1461553

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

1 week 5 days ago
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா! இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார். இந்த முக்கியமான நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை நீண்டிருக்கும் கர்தவ்ய பாதை, விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகால பாரம்பரியம், நாட்டின் முன்னோடியில்லாத வளர்ச்சி முன்னேற்றம், வலுவான இராணுவ வலிமை, துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பு குடிமக்களின் தீவிர பங்கேற்பு ஆகியவற்றின் அசாதாரண கலவையைக் கொண்டிருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு வருகை தருவதோடு இது தொடங்கும்அங்கு அவர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். அதன் பிறகு, பிரதமர் மற்றும் பிற பிரமுகர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்ய பாதையில் உள்ள மரியாதை மேடைக்குச் செல்வார்கள். https://athavannews.com/2026/1461463

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

1 week 5 days ago
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid ! பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலையை தவிர்க்கலாம் என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், கூட்டம் அதிகமான இடங்களை தவிர்த்தல் (சமூக இடைவெளி) போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் வைத்தியசாலைகள் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. Athavan Newsபிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிற

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

1 week 5 days ago
கருத்தாளர்களுக்கு கருத்துகளால் பதில் கூற முடியாது எப்போதும் இனவாத வக்கிரத்தை கொட்டும் கேவலமான மனிதர்கள் பாடமெடுக்கும் நிலையில் நான் இல்லை. அரசியல் அறிவில் பூச்சியமான, வெறும் தனிமனித தாக்குதல் தான் அரசியல் என்று புரிந்து வைத்திருக்கும் யாழ்கள காமடிபீஸுக்கும் சேர்தது தான் கூறுகிறேன். 😂
Checked
Sat, 02/07/2026 - 23:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed