புதிய பதிவுகள்2

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

2 weeks 5 days ago
முன்பும் ஒரு நீலக்கல், 600 கோடி ரூபாய் பெறுமதி என்று, சுவிற்சலாந்துக்கு, கொண்டு போய் விற்கப் போனால், அதை சாதாரண கல் என்று, திருப்பி அனுப்பி விட்டார்கள். விசேட விமானத்தில் அதை கொண்டு போன காசும் நட்டமாகி. இப்போ... அந்தக் கல்லில் யார், துணி துவைக்கின்றார்களோ... 😂

வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

2 weeks 5 days ago
காணியா? செல்பியா? செல்பி முக்கியம் குமாரூ.

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!

2 weeks 5 days ago
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது அமெரிக்கா Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 02:59 PM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா இன்று வியாழக்கிழமை (ஜன 22) உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது. இது உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே, ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து தாம் விலகப்போவதாக அறிவித்தார். அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை வழங்காமல் விலகுவது சட்ட மீறல் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நிதி வழங்கலை நிறுத்துவதாக அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா வெளியேறுவதால் உலக சுகாதார ஸ்தாபனம் தனது முகாமைத்துவக் குழுவைப் பாதியாகக் குறைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கால்வாசி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது. "அமெரிக்கா தனது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இணைய வேண்டும். இந்த வெளியேற்றம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு" என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை பணிப்பாளர் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா விரைவில் மீண்டும் அமைப்பில் இணையும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், ஆனால் உலகிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அவசியமானது எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். புதிய நோய்த்தொற்றுகளைக் கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் உலகம் சார்ந்துள்ள கூட்டுமுயற்சிகளை இந்த விலகல் பலவீனப்படுத்தும் என பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236709

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

2 weeks 5 days ago
என்ன கோப்பாலு இப்புடி கவுத்து புட்டீங்க? அடே இந்த கல்லுக்கு எத்தனை பூச்சியம் வரப் போகுது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். 00 இப்படியா முடியணும்.

முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு

2 weeks 5 days ago
22 Jan, 2026 | 03:53 PM பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலய பகுதியில் அமைந்துள்ள புனிதமான இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் முறிகண்டி ஆலய பொது நிதியின் பங்களிப்புடன் புது குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 80 இலட்சம் ரூபா நிதி செலவழிக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் புது குடியிருப்பு பிரதேச சபையின் கவனயீனத்தால் அங்கு முறையான கழிவறை பராமரிக்கப்படாமல் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு ஆலயத்தில் வசிப்பவர்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் புது குடியிருப்பு பிரதேச செயலகமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் . பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை குறிப்பாக அதற்கான ஒரு சுத்திகரிப்பாளர் நியமித்து அதற்கான சுகாதாரங்களுக்குரிய வளங்களை கொடுத்து சுத்திகரிப்பு செய்வது பயணிகளுக்கும் சிறப்பு அதேசமயம் இது சம்பந்தமாக ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தொலைபேசி மூலம் இது பற்றி முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார். அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ரஜீவன் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். எனவே புது குடியிருப்பு பிரதேச செயலகம் இதற்கான நடவடிக்கையை மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது முறிகண்டி ஆலய நிர்வாகத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பது சிறப்பு எனவும் பாபு சர்மா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு | Virakesari.lk

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

2 weeks 5 days ago
கொப்பிகடைக்குள் புத்தர் சிலையை வைத்து புத்த மடாலயம் ஆக்குவதை போல் வெறும் கல்லை ரெத்தின கல்லாக்கி பார்த்து இருக்கினம் புத்த மதவெறியால் கடைசியில் nauru தீவு மக்களை விட உலகில் மோசமான பஞ்ச பராரிகளாக மாற போகினம் சிங்களவர்கள் .

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!

2 weeks 5 days ago
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா! அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும். மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஸ்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தையும் இது மீறுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க சட்டத்தின் கீழ், ஒரு வருட அறிவிப்பு கொடுத்து வெளியேறுவதற்கு முன் அனைத்து நிலுவையில் உள்ள கட்டணங்களையும் செலுத்த வேண்டும். WHO தகவல்களைக் கட்டுப்படுத்த, நிர்வகிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளத் தவறியதால் டிரில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு அமெரிக்க அரசாங்க நிதி, ஆதரவு அல்லது வளங்களையும் WHOக்கு மாற்றுவதை இடைநிறுத்த ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகவும் வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகுவது அமெரிக்காவிற்கு ஒரு இழப்பு, மேலும் இது உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு இழப்பு என்று WHO கூறியுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கட்டணங்களை அமெரிக்கா இன்னும் செலுத்தவில்லை என்றும் WHO கூறியது. அமெரிக்கா வெளியேறுவது மற்றும் அந்த விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பெப்ரவரியில் WHO-வின் நிர்வாகக் குழுவில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2026/1460992

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 5 days ago
அதே சீனா ஒரு துருவமாவது தவிர்க்க முடியாது. செத்த கிளியின் ஆட்டம் தம்பர் இருக்கும் மட்டும்தான். பிறகு இத்துபோன அனுகுண்டை வைத்து நானும் ரவுடிதான் என காமெடி மட்டுமே பண்ணலாம். ஐரோப்பா தனி வழியே பயணிக்க, ஈயூ ஆர்மியை உருவாக்க காலம் கனிந்து விட்டது. ஜேர்மனி ஆயுதமயப்பட்டால் -ஈயுவும் ஒரு தன்னிறைவுள்ள இராணு சக்தியாகிவிடும்.

வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

2 weeks 5 days ago
அநுரகுமார திசாநாயக்கவை தரிசித்ததில் அவருடன் செல்பி எடுத்த மகிழ்ச்சியில் யாழ்பாண தமிழர்கள் திளைத்து கொண்டிருக்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

2 weeks 5 days ago
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. இலங்கையில் சிங்கள இனம் தமிழினத்தைச் சுற்றியுள்ளது. சுற்றுமுன் அடித்து விரட்ட சுள்ளித்தடி தேடவேண்டும், அது இன்று உலகெங்கும் பரந்திருக்கும் தமிழரிடம் இருக்கிறது. இந்தத் தமிழர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதனைத்தான் தலைவனும் உணர்ந்து பொறுப்பை அங்கு கொடுத்து உணர்த்தினார்.

வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி

2 weeks 5 days ago
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி SONY DSC வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கிவுல்ஓயா திட்டத்தால் பூர்விகமாக வாழும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீதான எமது மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகச் செய்யும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கோடீஸ்வரன் எம்.பி இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் கிவுல்ஒயா திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டில் மகாவலி எல் வலயம் என்று சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இந்த பிரதேசத்திற்கு மகாவலி நீரை கொண்டுவர முடியாது என்பதனால் ‘என்பிசி கெனல்’ ஊடாக மகாவலியை கொண்டு வருவதாகக் கூறி 2 இலட்சம் ஹெக்டேயர் நிலங்களை அபகரித்து அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். இப்போது அங்கு மக்கள் தொகை அதிகரித்து நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நீர்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 2011ஆம் ஆண்டில் இந்த கிவுல்ஓயா திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் 27,000 மில்லியன் ரூபாவை செலவிட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்படுகின்றது. இதன்படி புதிதாக வயல் நிலங்களை உருவாக்கவும் இதன்போது இன்னும் மக்களை குடியேற்றவும் திட்டமிடப்படுகின்றது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இது எமது பிரதேசத்திற்கு பாதிப்பாக அமையும். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேசத்திற்குள் இது வருகின்றது. இதற்காக 2021ஆம் ஆண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு மேலதிமாக 13,000 ஏக்கர் நிலத்தை வனபாதுகாப்பு திணைக்களம் இதற்காக வழங்குகின்றது. ஆனால் எமது மக்களின் பூர்விக நிலங்களை பயன்படுத்த வனபாதுகாப்பு திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் வவுனியா மற்றும் முல்லைதீவில் பூர்விகமாக வாழும் மக்களுக்கு நீரில்லை. இதனை கவனிக்க எவருமில்லை. கடந்த அரசாங்கத்தை போன்று சிறுபான்மையினவரின் வாழ்வுரிமையை பறிக்க நீங்களும் முயற்சிக்கின்றீர்களா? பாரிய நீர்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவதும், பெரும்பான்மை மக்கள் அங்கு குடியேற்றப்படுவதையும் தொடர விரும்புகின்றீர்களா? இனவாதம், மதவாதம் அற்ற அரசாங்கத்தை கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் வீணடிக்கப் போகின்றீர்களா? என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://akkinikkunchu.com/?p=356989

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

2 weeks 5 days ago
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு படிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையிலான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, அந்தப் பாறையை பரிசோதிப்பதற்காக நேற்று இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர். பின்னர் அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதனடிப்படையிலேயே அது தொடர்பான அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460938

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி

2 weeks 5 days ago
காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி 22 Jan, 2026 | 12:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களில், மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று மாத கால போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் புதன்கிழமை இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய காசாவின் நெட்சரிம் (Netzarim) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாமை படம்பிடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பாலஸ்தீனிய ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்லப்பட்ட செய்தியாளர்கள் பொதுமக்களின் துயரங்களை ஆவணப்படுத்தும் மனிதாபிமான ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், இரண்டு 13 வயது சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு புரைஜ் (Bureij) அகதிகள் முகாமின் எல்லையில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுவன், அவனது தந்தை மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிழக்கு நகரமான பானி சுஹைலா (Bani Suheila) பகுதியில் சமையலுக்குத் தேவையான விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, 13 வயதான மொட்செம் அல்-ஷராபி என்ற சிறுவன் இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிறுவனின் உடலைப் பார்த்து அவனது தந்தை கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் முகமது சலா காஷ்டா, அப்துல் ரவூப் ஷாத் மற்றும் அனஸ் க்னீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அப்துல் ரவூப் ஷாத், ‘ஏஜென்ஸி பிரான்ஸ்-பிரஸ்’ (AFP) செய்தி நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், எரிக்கப்பட்ட வாகனத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்த காணொளிகள் இணையத்தில் பரவின. ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம் எகிப்திய நிவாரணக் குழுவினுடையது என்றும், அது குறித்த தகவல்கள் முன்னரே இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில், மத்திய காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய ட்ரோன் ஒன்றை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டதன் பின்னரே துல்லியமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பின் தகவலின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை காசாவில் குறைந்தது 29 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2023 அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 220 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காசாவில் மட்டும் 466 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236686

நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு

2 weeks 5 days ago
நுவரெலியாவில் வெப்பநிலை 3.5° செல்சியஸாக பதிவு! நுவரெலியாவில் இன்றைய (22) தினம் குறைந்த அளவிலான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதன்படி அங்கு வெப்ப நிலை 3.5° செல்சியஸ் ஆக பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய கண்காணிப்பு மையங்களிலிருந்து இன்று அதிகாலை சேகரிக்கப்பட்ட வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில் இந்த அளவீடு பதிவாகியுள்ளது. மேலும் இது அண்மைய காலங்களில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். பண்டாரவளையில் 11.5°செல்சியஸ், பதுளையில் 15.1°செல்சியஸ் மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°செல்சியஸ் என மற்ற குறைந்தபட்ச வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன. இன்று காலை அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3°செல்சியஸ் ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°செல்சியஸ் ஆகவும், கொழும்பில் 22.1°செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavannews.com/2026/1460963
Checked
Wed, 02/11/2026 - 02:34
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed