ஊர்ப்புதினம்

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது!

2 months 1 week ago
யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது! யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸ் அதிரடிப்  படையினர்  கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப்  படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இன்று அதிகாலை குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்ட  மாடுகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1376466

திடீர் விபத்துக்களால் வருடாந்தம் 10,000 பேர் பலி

2 months 1 week ago
accident.jpg

திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், உணவு விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298141

பாதுகாப்புத்துறைசார் விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் தமக்கு இல்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு

2 months 1 week ago

Published By: VISHNU

04 APR, 2024 | 02:58 AM
image
 

(நா.தனுஜா)

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற விசேட சட்டம் அவசியமா எனவும் தாம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இருப்பினும் தாம் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல என்பதால், அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு அப்பாற்பட்டு தம்மால் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது.

 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் கடந்த ஆண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனிய, ஆணையாளர்களான பேராசிரியர் ரி.தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்ஸானா ஹனீஃபா, கலாநிதி ஜெஹான் டினுக் குணதிலக, நிமல்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.

அதற்கமைய நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை, கடமைகள் மற்றும் அதிகாரங்கள், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் என்பன தொடர்பில் தவிசாளர் தெஹிதெனிய தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் மீறல் பற்றி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், பொலிஸ் நிலையம் உள்ளடங்கலாக தடுப்புக்காவல் நிலையங்களுக்குச்சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல், விசேட தேவையுடையோர் மற்றும் பால்புதுமையின சமூகம் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துத்தரப்பினரதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி செயற்படல்,

நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் சீரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றல் போன்றவற்றில் தாம் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி தாம் கடந்த ஆண்டு ஆணைக்குழுவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது உரியவாறான விசாரணைகள் மூலம் தீர்வு காணப்படாத பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகள் நிலுவையில் இருந்ததாகவும், கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல், ஊழியர் பற்றாக்குறை என்பன அதற்குக் காரணமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தாம் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்போது சுமார் 12,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததாகவும், அவற்றில் சுமார் 9000 முறைப்பாடுகள் தம்மால் முடிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி கடந்தகாலங்களில் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மிகமுக்கிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகக் காணப்பட்டதாகவும், குறிப்பாக 2023 இல் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு தொடர்பில் 24 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், இவற்றை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் பொலிஸாருக்குரிய வழிகாட்டல்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 அதேபோன்று அண்மையகாலங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' செயற்திட்டத்தினால் பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி 44 முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதனையடுத்து சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளல், பெண்களை இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லல், அவ்வாறு அழைத்துச்செல்லும்போது பெண் பொலிஸ் அதிகாரிகள் உடனில்லாதிருத்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராய்ந்து, உரிய வழிகாட்டல்களை பொலிஸாருக்கு வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் ஆணைக்குழுவில் கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் பிரிவுக்குப் பொறுப்பாக செயற்படும் ஆணையாளர் தனராஜ் கருத்து வெளியிடுகையில், பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலும், ஆசிரியர் கற்பித்தல் செயற்திட்டத்திலும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், விசேட தேவையுடையோருக்கு அவசியமான பயற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

அதேவேளை பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் பற்றி ஆணையாளர் பர்ஸானா ஹனீஃபாவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆணையாளர் ஜெஹான் குணதிலகவும் தெளிவுபடுத்தினர்.

இதன்போது நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதெல்லையைக் குறைக்கும் வகையில் தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச்சட்ட மசோதா என்பன தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டு, பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெஹான் குணதிலக சுட்டிக்காட்டினார். 

அதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில், இவ்வாறானதொரு பிரத்யேக சட்டம் நாட்டுக்கு அவசியமா எனக் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெஹான் குணதிலக கூறியதாவது:

'நாம் நாட்டின் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல. எனவே இவ்வாறானதொரு சட்டம் அவசியமா? இல்லையா? என்பது பற்றி எம்மால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது. மாறாக இச்சட்டப்பிரயோகத்தினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அதுசார்ந்த ஆலோசனைகளையே எம்மால் வழங்கமுடியும். இருப்பினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென விசேட சட்டம் அவசியமா எனவும் நாம் ஏற்கனவே வினவியிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

 https://www.virakesari.lk/article/180373

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனுடன் இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு!

2 months 1 week ago

Published By: VISHNU

04 APR, 2024 | 03:23 AM
image

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று புதன்கிழமை (3) மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது.

FB_IMG_1712154357087.jpg

இச் சந்திப்பில் வட மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழலை மையமாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றியும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கல்விக்காக மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதில் யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத் தூதுவர் தலைமை அதிகாரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/180375

வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!

2 months 1 week ago

வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!

 

(மாதவன்)

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மதிப்புக்குரிய விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டனர்.

பின்னர் கல்லூரி மண்டபத்தில் இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையினை மெளலவி ஏ.ம்.அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

இதன்போது, மரம் நடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் றஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டனர். (ஏ)

வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!! (newuthayan.com)

---------------------------------------------------------

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

மாதவன்

சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் எற்பாட்டில் புனித ரம்ழானின் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றது.

இதில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய்முரளி கலந்து சிறப்பித்தார்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

பின்னர் மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்த்தப்பட்டது.

யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் தலைவர் மெலளவி பி.எ.ஏஸ். சுபியான் ஆகியோர்களுக்கிடையிலான நட்பு ரீதியான பரிமாற்றங்கள் பகிரப்பட்டன.

இதில் இஸ்லாமியர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இப்தார் நோன்பினை கடைப்பிடித்தனர்.(க)

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு (newuthayan.com)

யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!!

2 months 1 week ago

யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!!

(இனிய பாரதி)

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக வலையமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை  விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.

இவர்கள் இன்று புனித பத்திரிசியார் பாடசாலைக்கு அருகில்  வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு  பிரிவினர் இருவரை  கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்  ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம்  செய்யும் போது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்ய முயற்சித்த போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)

யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!! (newuthayan.com)

பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம்

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

03 APR, 2024 | 02:22 PM
image
 

2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளதாக டைம் அவுட் என்ற சுற்றுலா வழிகாட்டி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தற்போது பெண்கள் தனியான செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக  1997க்குப் பிறகு பிறந்த பெண்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சாகசம் , கலாச்சாரத்தை அனுபவித்தல் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களைத் தேடும் அதிகமான பெண்களுக்கு  எங்கு செல்ல வேண்டும்,  எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது கேள்விகளாக உள்ளது.

பல நாடுகள் பாதுகாப்பாகவும் தனியாகவும் பெண்கள் பயணிக்க  இடமளிக்கின்றன. அதாவது,  நன்கு நிறுவப்பட்ட  பேக் பேக்கர் வழிகள், நட்புடைய உள்ளூர்வாசிகள், சமூக தொடர்பு மற்றும் அமைதியான தனிமை ஆகிய  இரண்டிற்குமான வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த இலக்குகளை அடைவதற்கு பெண்கள் தனியாக சுற்றுலா செய்வதற்கு  சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது.

"இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படும் இலங்கை தெற்காசிய கலாச்சாரத்தின் சுவையை வழங்கும் அதேவேளையில் அதன் தனித்துவமான அழகை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, தனியாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் மற்றும் நிர்வகிக்கக்கூடிய அளவு ஆகியவற்றுடன், தனி சாகசங்களை மேற்கொள்ளும் பெண்களுக்கு சிறந்த தொடக்க புள்ளியாக இலங்கை வழங்குகிறது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமிக்க தளங்களில்  புராதன இடங்கள் ஏராளமாக இருப்பது இலங்கைக்கு பெண்கள்  தனியாக சுற்றுலா வருவதற்கு  சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.  பிரமிக்க வைக்கும் சிகிரியா குன்று முதல் அற்புதமான தம்புள்ளையின் குகைக் கோயில்கள் வரையான நாட்டின் வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை  ஆய்வு செய்யவும் மற்றும் கண்டுபிடிப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

அத்தோடு, அறுகம் குடா, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள், சர்ஃபிங் செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள், ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குகிறது.

டைம் அவுட் குழு உலகளாவிய முன்னணி விருந்தோம்பல் வணிக  ஊடகமாகும். இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது. டைம் அவுட் ஊடகம் பல டிஜிட்டல் மற்றும் இயற்பியல் சேனல்கள் இணையதளங்கள், மொபைல், சமூக ஊடகங்கள், வீடியோக்கள் மற்றும் நேரலை நிகழ்வுகனை தன்னகத்தே கொண்டுள்ளது.

டைம் அவுட் உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.  333 நகரங்கள் மற்றும் 59 நாடுகளில் காணப்படும்  சிறந்த உணவு, பானங்கள், கலாச்சாரம், கலை, இசை, நாடகம், பயணம் மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்ட உயர்தர உள்ளடக்கத்தை தருகின்றது.

டைம் அவுட் குழு ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் விருந்தோம்பல் வணிகமாகும், இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது.

பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம் | Virakesari.lk

தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன்

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 7

03 APR, 2024 | 12:52 PM
image
 

(நா.தனுஜா)

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

 எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராவார். எனவே பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச்செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூறமுடியும்? ஆனால் அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார்.

தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச்சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.

ஆனால் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

 இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கமே இயங்குகின்றது.

தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர்.

இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசியலமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவுசெய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர்.

 இவ்வாறானதொரு பின்னிணயில் வட, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ்மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அத்தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிகநீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிகமுக்கியமானதாகும். 

தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன் | Virakesari.lk

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2 months 1 week ago

Published By: VISHNU

03 APR, 2024 | 05:40 PM
image
 

 

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதாகி  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை ஜூன் 26 ஆம் திகதி வரை நீக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விரிவுரைகளை நடத்தவுள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோட்டை நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.  

ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டாலும் கைது செய்யப்படுவார் எனத் தெரிந்தும்  கடந்த முறை இலங்கை வந்ததாகவும், விரிவுரைகளை முடித்துக்கொண்டு அவ்வாறே இலங்கை திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை  தற்காலிகமாக நீக்கம்! | Virakesari.lk

யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

2 months 2 weeks ago

யாழ். சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனியார் துறையினருக்கு குத்தகை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

jaffna international airport lease nimal siripala

அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தளை விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை, நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

https://tamilwin.com/article/jaffna-international-airport-lease-nimal-siripala-1712112912?itm_source=parsely-api

முப்படையினருக்கு அரசு விதித்துள்ள காலக்கெடு

2 months 2 weeks ago

விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலத்தை அமைச்சு அறிவித்துள்ளது.

பொது மன்னிப்புக் காலம்

அதன்படி, சேவையை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் பொது மன்னிப்புக் காலத்திற்குள் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

முப்படையினருக்கு அரசு விதித்துள்ள காலக்கெடு | Government Deadline For Srilanka Tri Forces

இந்த காலத்தின் போது, சேவையை விட்டு வெளியேறிய முப்படைகளின் உறுப்பினர்கள் மீண்டும் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேற முடியும்.

ஒருவர் இராணுவத்திற்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அந்த பணமும் இங்கு வசூலிக்கப்படுகிறது.

https://tamilwin.com/article/government-deadline-for-srilanka-tri-forces-1712141350

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை - பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை

2 months 2 weeks ago

யாழ். மாவட்டத்தில் (Jaffna District) போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்

அத்துடன், நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் (Police) களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து ஒழுக்க மீறல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தின் (Jaffna District) போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை - பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை | Traffic Rules Strictly Monitored In Jaffna

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், திறன்பேசிகள் மற்றும் அலைபேசிகளைக் கதைத்தபடி சாரத்தியத்தில் ஈடுபடுகின்றவர்கள், பாதசாரிகள் கடவைகள் இருக்கத்தக்கதாக அதற்கு அருகாக வீதியைக் கடக்கின்றவர்கள், வீதிகளில் வாகனங்களின் பயணப்பாதையில் எச்சில், வெற்றிலை என்பனவற்றைத் துப்புகின்றவர்கள்.

போக்குவரத்து ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது இன்றுமுதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் 

அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகாகவும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றுமுதல் பலப்படுத்தப்படுகின்றன.

 

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை - பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை | Traffic Rules Strictly Monitored In Jaffna

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த வருடமும் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் சீரானதும் ஆரோக்கியமானதுமான போக்குவரத்தை மேற்கொண்டு, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://tamilwin.com/article/traffic-rules-strictly-monitored-in-jaffna-1712120057?itm_source=parsely-api

குடும்ப வன்முறைகளைத் தீர்ப்பதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் - கீதா குமாரசிங்க

2 months 2 weeks ago

Published By: VISHNU   03 APR, 2024 | 09:55 AM

image

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.  

இங்கும் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

"பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு 04.03.2024 அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்ததோடு,  03.07.2024 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதோடு, தேசிய மகளிர் ஆணைக்குழு அமைப்பதற்கான நியதிகளும் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.  

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் 20.03.2024 பாராளுமன்றத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலை நடத்தியிருந்தது. ஜனாதிபதி அலுவலகம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.  

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஒரு வாரத்திற்குள் அந்த அவதானிப்புகளை பரிசீலிக்க இலங்கையின் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.  அதில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, நடைமுறையிலிருக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு, வர்தமானியில் அறிவிப்பதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது." என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180286

முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்

2 months 2 weeks ago
news-7-300x200.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு அமைய 1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சாந்தன், ரொபர்ட் பயஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும் இலங்கையரான சாந்தன் தமது தாயுடன் வாழ்வதற்காக தம்மை இலங்கைக்கு அனுப்புமாறு கோரியிருந்தார். இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.

இவ்வாறான பின்னணியில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தாங்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியிருந்தது.

அவர்களில் முருகன் தாம் லண்டனில் உள்ள தமது மகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இலங்கைக்கு மாத்திரம் செல்வதற்கான கடவுச் சீட்டையே அவர்களுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளதாக அவர்களது சார்பில் வழக்குகளில் முன்னிலையான புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னையில் இருந்து அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/297923

சிங்கப்பூர் சரக்கு கப்பல் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

2 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   03 APR, 2024 | 08:56 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அபாயகரமான பொருட்கள் அடங்கிய சிங்கப்பூர் சரக்கு கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஷரித்த ஹேரத் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பல் தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பலில்  பாரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுவது உண்மை. இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரணை நடத்தி வருகிறது.

அதேபோன்று குறித்த கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அனுமதி பெறவில்லை. அதனால் இதுதொடர்பாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைமுகத்துக்கும் சுங்கத்துக்கும் அறிவித்திருக்கிறோம். இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளானதால்தான் இந்த கப்பலில் இருந்த அபாயகர பொருட்கள் தொடர்பில்  தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்தது.

அதனால் இதுதொடர்பக முறையாக விசாரணை நடத்தி,அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/180291

பொருளாதாரம் உறுதியாக இருந்தாலும் இலங்கையில் வறுமைநிலை உயர்வாகவே காணப்படுகின்றது - உலக வங்கி

2 months 2 weeks ago

Published By: PRIYATHARSHAN   02 APR, 2024 | 06:08 PM

image

வீ.பிரியதர்சன் 

இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இது இரு விதமான உபாயமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் முதலாவதாக  பேரினப் பொருளியல் உறுதித் தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்ற மறுசீரமைப்புக்களை  பேணுதல். இரண்டாவது, தனியார் முதலீடுகளை தூண்டக்கூடிய மற்றும் முலீட்டு உள் வருகையை தூண்டக்கூடிய மறுசீரமைப்புக்களை துரிதப்படுத்தல், இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரான்சிஸ்கா ஓன்சார்ஜ் கூறுகையில், 

இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் புதிய அரசிறைகொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும் சுமார் 5 தசாப்த காலப்பகுதியில் முதன்முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.2 வீதமான வளர்ச்சியை காணும் என எதிர்வுகூறப்பட்டது. உறுதியாக நிகழ்வதற்கான அறிகுறிகளைக் காட்டியது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் இது ஏற்பட்டது. இருப்பினும், உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழில் சந்தை அக்கறைகள், ஆகிய பிரச்சினைகளை நாடு முகங்கொடுத்து வருவதாக உலக வங்கியின் அண்மைய அரையாண்டு அறிக்கை இற்றைப்படுத்தல் தெரிவிக்கின்றது.

இருப்பினும் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் நகர் பிரதேசங்களில் இது காணப்பட்டது.

நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டதனால் இந்த பிரச்சினை அதிகமானது. அதிக விலையேற்றம், வருமான இழப்புக்கள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும்  சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது.

பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புக்கள் மற்றும் சிறிய நடைமுறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீத மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது.

எவ்வாறாயினும் அதிக கடன்சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 வரை வறுமை விகிதங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால வாய்ப்புகள் மறுசீரமைப்புக்களை மாற்றுதல், நிதித் துறை பாதிப்புறும் தன்மைகள், நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கத்தை தாங்கிக்கொள்ளல் ஆகியன காணப்படும் தொடர்ச்சியான பேரண்ட அரசிறை நிதி ஸ்திரத்தன்மை, பாரியளவிலான தனியார் துறை முதலீடுகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடர்கள் தொடர்பில் செயற்படல் ஆகியவற்றின் மூலம் மீண்டெழும் பொருளாதாரத்தை பேணுவதற்கு உறுதியான மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தல்கள் அடிப்படையானது என அறிக்கை வலியுறுத்துகின்றது. 

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது தென் ஆசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் தோழமை ஆவணமாகும். இது உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையாகும். இவ்வறிக்கை தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புக்கள் ஆகியவற்றை ஆராய்கின்றது.

அத்தோடு நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிப்பில் மீண்டெழலுக்கான தொழில்கள் என்பதில் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தென் ஆசியா காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 6.0 வீத வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஏற்பட்ட காத்திரமான வளர்ச்சி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அறவீடுகள் பிரதான காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உறுதியான எதிர்கால வாய்ப்புக்கள் ஏமாற்றக்கூடியவைகள் என அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சியானது தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கு முன்னரான நிலையில் காணப்படுகின்றது. அரச செலவுகளிலேயே தங்கியுள்ளன.

அதேவேளை தென்னாசிய நாடுகளில் தனியார் முதலீட்டு வளர்ச்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. மற்றும் துரிதமாக அதிகரித்துவரும் வேலைசெய்யக்கூடிய வயதுடைய மக்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்கள் இப்பிராந்தியங்களில் உருவாக்கப்படவில்லை.

உறுதியான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது. 

உலக வங்கியினால் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீண்டெழுதலுக்கான பாலம் என்ற தலைப்பின் கீழ் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (2) வன் கோல்பேஸில் அமைந்துள்ள உலக வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

world.png

https://www.virakesari.lk/article/180270

சமையல் எரிவாயு உருளைகள் விலையில் திருத்தம்!

2 months 2 weeks ago
“லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம்!”

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (1) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297782

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வந்த இளைஞர் கைது!

2 months 2 weeks ago
arrest-1-750x375.webp தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வந்த இளைஞர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார்.

இதன்போதே அவர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில், கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞனிடம் வவுனியா, வெடுக்குநாரிமலை ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376138

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம்

2 months 2 weeks ago
spacer.png புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம்.

புங்குடுதீவு மாணவியை பாலியல் துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்த மரணதண்டனைக் குற்றவாளி ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் என்ற 37 வயதுடைய குற்றவாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண தண்டனை கைதியான குறித்த கைதி கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,
சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நிமோனியா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 7 பேருக்கு எதிரான குற்றங்கள் நிருபிக்கப்பட்டத்தை அடுத்து ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

அதனை தொடர்ந்து குற்றவாளிகள் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை குறித்த குற்றவாளி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1376158

எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது.

2 months 2 weeks ago
KAL-3-750x375.jpg எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் இன்று (02) நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் எரிபொருள் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் உணவகங்கள், வெதுப்பகங்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மட்டும் எலி எச்சங்கள் காணப்பட்ட உணவு பண்டங்கள் கைப்பற்றப்பட்டது.

20240402_120004-600x338.jpg

20240402_122604-371x600.jpg

KAL-2-600x343.jpg

KAL-1-600x377.jpg

https://athavannews.com/2024/1376177

Checked
Mon, 06/17/2024 - 13:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr