எங்கள் மண்

தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரளும் எழுக தமிழ் பேரணி!

2 days 17 hours ago
%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF.jpg தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரளும் எழுக தமிழ் பேரணி!

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும்  எழுக தமிழ் பேரணி யாழில் இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களை அணித்திரட்டும் இந்த பேரணி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இரண்டு பேரணிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றன.

இந்த பேரணிகள் யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையவுள்ளன. அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது.

எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களை ஏற்றி வருவதற்காக 35 இற்கும் அதிகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்  மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய எழுகத் தமிழ் பேரணிக்கு 60இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த பேரணிக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு, தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் வடக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் ஏனைய அரச பணிகளும் இன்றைய தினம் வழமைப் போன்று இடம்பெறும் என ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழ்-மக்கள்-ஓரிடத்தில்/

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்களின் எதிர்பார்ப்பும்

1 week ago
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக
விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள்படத்தின் காப்புரிமை SENA VIDANAGAMA

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர்.

இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காக பெரும் கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களின் நிலை தற்போது எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களில் சிலரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.

இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்தபோது, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதற்கு முன்னதாக, புலிகள் இயக்கத்தின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் எனப்படுகிற விநாயக மூர்த்தி முரளிதரன், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்தபோது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கணிசமான உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி, தமது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டனர். அவ்வாறானவர்களும் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமது வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றனர்.

13 வயதில் போராடத் துவங்கிய விஜயலட்சுமி

துரைராஜா விஜயலட்சுமி - அவ்வாறான முன்னாள் பெண் புலி உறுப்பினர்களில் ஒருவர். அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த விஜயலட்சுமி 1981ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளை. விஜயலட்சுமியின் சிறிய வயதில், அவரின் அப்பா இறந்துவிட்டார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக அம்மா வெளிநாடு சென்றார். ஒரு கட்டத்தில் நிராதரவான நிலை ஏற்பட்டமை காரணமாக 1994ஆம் ஆண்டு, தனது 13ஆவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்து கொண்டார்.

விஜயலட்சுமியை சில தினங்களுக்கு முன்னர் அவரின் வீட்டில் சந்தித்தேன். ஓடு மற்றும் தகரம் ஆகியவற்றால் கூரையாக வேய்ந்த பழைய வீடு ஒன்றில் அவர் வாழ்ந்து வருகிறார். அந்த வீட்டுக்கு அருகிலேயே கோழிக் கூண்டுபோல் ஒரு சின்னக் குடிசையொன்றும் உள்ளது. அது பற்றிக் கேட்டபோது; " ஓடு வீடு மிகவும் பழையது. அதன் கூரை பழுதடைந்து விட்டது. பெரும் காற்று வீசும்போது, வீட்டுக் கூரை உடைந்து விழுந்து விடும் எனும் பயத்தில், குடிசைக்குள் வந்து விடுவோம்" என்று, வறட்டுப் புன்னகை கலந்த பதிலுடன், அவர் பேசத் தொடங்கினார்.

விஜயலட்சுமி Image caption முன்னாள் பெண் போராளி விஜயலட்சுமி

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த தனக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டதாகக் கூறும் விஜயலட்சுமி, அந்த இயக்கத்தின் காலால் படையில் ஐந்து ஆண்டுகளும், கடற்படையில் மூன்று ஆண்டுகளும் இருந்துள்ளார்.

மாங்குளம் ராணுவ முகாம் மீது புலிகள் நடத்திய தாக்குதல்தான், தான் கலந்து கொண்ட முதலாவது சண்டை என்கிறார்.

"கடற்புலிகள் அணியிலிருந்தபோது, ஒரு நாள் படகொன்றில் 34 போராளிகள் ரோந்தில் ஈடுபட்டிருந்தோம், அப்போது எம்மீது இலங்கைக் கடற்படையினரும் விமானப் படையினரும் கடும் தாக்குதலை மேற்கொண்டார்கள். படகிலிருந்த பலர் காயப்பட்டு இறந்தனர். ஒரு கட்டத்தில் நாங்கள் பயணித்த படகும் கவிழ்ந்தது. நான் நீந்திக் கரை சேர்ந்தேன். என்னைத் தவிர ஏனைய 33 பேரும் அந்தத் தாக்குதலில் பலியாகி விட்டார்கள்" என்று தப்பிப் பிழைத்த அனுபவத்தை பிபிசி உடன் விஜயலட்சுமி பகிர்ந்து கொண்டார்.

புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா அம்மான் அந்த இயக்கத்திலிருந்து பிரிந்த பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலையினை அடுத்து, 2003ஆம் ஆண்டு அந்த இயக்கத்திலிருந்து விலகி தனது ஊருக்கு விஜயலட்சுமி திரும்பினார். அப்போது அவரின் அம்மாவும் ஊரிலேயே இருந்தார்.

"இயக்கத்திலிருந்து விலகி வந்த 6 மாதத்திலேயே எனக்குத் திருமணம் நடந்தது" என்று கூறும் அவருக்கு இப்போது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களில் மூத்த பெண்ணுக்கு 16 வயதாகிறது.

விஜயலட்சுமியின் இல்லம் Image caption விஜயலட்சுமியின் இல்லம்

மிக நீண்ட காலமாக தனது மகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வருவதாகவும் விஜயலட்சுமி கூறினார். அவரை நான் சந்திக்கச் சென்றிருந்த தருணத்திலும், அந்த மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவரின் ஏனைய பிள்ளைகள் இருவரும் ஆண்கள்.

விஜயலட்சுமியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி. "எங்கள் வருமானம் சாப்பாட்டுக்கே போதாமல் உள்ளது" என்று விஜயலட்சுமி கவலைப்பட்டார்.

"எனது வாழ்வாதாரத்துக்கென இதுவரை எந்தவொரு தரப்பும், எந்தவித உதவிகளையும் செய்யவில்லை" என்று கூறும் அந்தப் பெண்ணின் வீட்டில், காணுமிடமெல்லாம் வறுமையின் அடையாளங்கள் தெரிகிறது.

ஒரு சிறிய வீடு, வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான போதிய வருமானம் - அதற்கான வழி. இவைதான் விஜயலட்சுமியின் இப்போதைய எதிர்பார்ப்புகளாக உள்ளன.

’முன்னர் இருந்த மரியாதை இப்போது இல்லை’

அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் நாம் சந்தித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மற்றொரு முன்னாள் பெண் உறுப்பினர் கனகசுந்தரம் சரோஜினி.

"எனக்கு இப்போது 43 வயது. 1997ஆம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்தேன். எனக்கு முன்னதாகவே இயக்கத்தில் என்னுடைய தம்பி இணைந்து கொண்டார்," என்று கூறிய சரோஜினியிடம், "புலிகள் இயக்கத்தில் ஏன் இணைந்து கொண்டீர்கள்" என்று கேட்டேன்.

அந்த கேள்விக்கு சரோஜினி பதிலளிக்கவில்லை. மௌனமாக இருந்தார். அவரின் கண்கள் கலங்கின, திடீரென ஏற்பட்ட அழுகையை உதடுகளை இறுக்கியவாறு அடக்கிக் கொண்டார். ஆனாலும், கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"இந்த அழுகைக்குப் பின்னால், சொல்ல முடியாத காரணங்கள் ஏதாவது இருக்கிறதா"? எனக் கேட்டேன்.

சரோஜினி மீண்டும் பேசத் தொடங்கினார்.

கனகசுந்தரம் சரோஜினி Image caption கனகசுந்தரம் சரோஜினி

தனது தங்கையொருவர் மிகவும் சுயநலத்துடன் சரோஜியின் எதிர்காலம் பற்றிய எவ்வித அக்கறைகளுமின்றி ஒரு தடவை நடந்து கொண்டமை, சரோஜினிக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வஞ்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் அவர் புலிகள் இயக்கத்தில் போய் சேர்ந்து கொண்டதாகக் கூறினார்.

"நான் எழுதியிருந்த ஓ.எல். (சாதாரண தரம்) பரீட்சையின் பெறுபேறு வெளியாகியிருந்த சமயத்தில்தான் இயக்கத்தில் சேர்ந்து கொண்டேன்".

"புலிகளின் அலுவலகம் ஒன்றுக்குச் சென்று, நான் இயக்கத்தில் சேர வேண்டும் என்கிற விருப்பத்தைக் கூறினேன். என்னுடன் இன்னும் பல பெண் பிள்ளைகளும் இருந்தனர். எல்லோரையும் சேர்த்து, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவை பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்குதான் 3 மாதங்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டேன். ஆனாலும், என்னை சண்டையிட அவர்கள் களத்துக்கு அனுப்பவில்லை. எனக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கினார்கள், தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்புக் கற்றுக் கொடுத்தார்கள், தாதியொருவருக்குத் தேவையான மருத்துவப் பயிற்சிகளை வழங்கினார்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை".

"சண்டைக் களத்தில் காயப்படும் போராளிகளுக்கு ஆரம்ப கட்ட சிகிக்சையளிப்பதே எனக்குரிய கடமையாக இருந்தது" என்று கூறிய சரோஜினி, ஒரு தடவை, ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் காயப்பட்ட விஜயலட்சுமிக்கும் தான் சிகிச்சையளித்ததாகத் தெரிவித்தார்.

இவ்வாறு செயற்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான கள மருத்துவப் பொறுப்பாளராக தான் நியமிக்கப்பட்டதாக சரோஜினி கூறினார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு புலிகளின் அனுமதியுடன் இயக்கத்திலிருந்து விலகி, குடும்பத்துடன் சரோஜினி சேர்ந்து கொண்டார்.

புலிகள் இயக்கத்தில் பிராந்திய முக்கியஸ்தராக இருந்த தனது தம்பி, கஞ்சிகுடியாறு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கருணா தரப்பினரே அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போது சரோஜினிக்கு 13 வயதில் மகளொருவர் இருக்கிறார். இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த பின்னர், 2005ம் ஆண்டு சரோஜினி திருமணம் செய்து கொண்டார்.

கணவர் கூலி வேலை செய்வதால் கிடைக்கும் வருமானத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் குடும்பத்தை நடத்தி வருவதாக அவர் கூறுகின்றார்.

"ஆண்களுக்கு நிகராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயற்பட்ட உங்களின் இப்போதைய வாழ்கை எப்படியிருக்கிறது" என்று சரோஜினியிடம் கேட்டேன்.

"இயக்கத்தில் இருந்த போது கிடைத்த மரியாதை இப்போதைய வாழ்க்கையில் இல்லை" என்றார்.

குட்டிமணி மாஸ்டர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தில் ஒரு பயிற்சியாளராக இருந்தவர் நாகமணி கிருஷ்ணபிள்ளை. குட்டிமணி என்று புலிகள் இயக்கத்தில் அழைக்கப்பட்டார். இவர் ஆயுதப் பயிற்சி வழங்கும் ஒருவராக இருந்ததால், இவரை 'குட்டிமணி மாஸ்டர்' என்றுதான், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் இப்போதும் அழைக்கின்றனர்.

இறுதி யுத்தம் வரை களத்தில் நின்று சண்டையிட்டவர் குட்டிமணி. யுத்தம் முடிவுக்கு வந்தபோது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். பல வருடங்கள் இவர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த குட்டிமணி, தற்போது தனது உறவினர் ஒருவரின் சிறிய கடையொன்றில் பணிபுரிகின்றார்.

புனர்வாழ்வு பெற்றுத் திரும்பிய பின்னர் திருமணம் செய்து கொண்ட குட்டிமணிக்கு 3 வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது.

குட்டிமணி மாஸ்டர் Image caption குட்டிமணி மாஸ்டர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்ளை ஒருங்கிணைத்து, அவர்களின் நலன்கள் தொடர்பிலும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் குட்டிமணி முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அவரிடம் பேசினேன்.

"புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் புனர்வாழ்வு பெற்றோர், புனர்வாழ்வு பெறாதோர் என்று இரண்டு வகையினர் உள்ளனர்.

"எவ்வாறாயினும் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சுமார் 350 பேர் உள்ளனர். இவர்களில் சுமார் 100 பேர் பெண் பேராளிகள்"

"புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு சிலருக்கு அரசு உதவிகள் கிடைத்துள்ளன. ஆனால், இறுதி யுத்தத்துக்கு முன்னர் இயக்கத்திலிருந்து விலகிய நிலையில் புனர்வாழ்வு பெறாதோருக்கு, எந்தவித உதவிகளும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை" என்கிறார் குட்டிமணி.

களத்தில் நின்று போர்களை எதிர்கொண்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் மிக அதிகமானோர், தமது அன்றாட உணவுக்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே, தினமும் வேறொரு வகையான போரினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அவர்களுடன் பேசியபோது புரிந்து கொள்ள முடிந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49659285

ஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 28 ஆண்டுகள்

1 week 6 days ago

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது.

என்ன நடந்தது?

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

“ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது[3]) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.”

மூடப்பட்ட அகதிமுகாம்

முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.

நீதி தராத அரச விசாரணை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஆண்டுதோறும் நினைவு நாள்

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 28 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://globaltamilnews.net/2019/94301/

யாழ்ப்பாணக் கள்ளும், சீவல் தொழிலாளியும், வடையும்

1 week 6 days ago

பயணங்கள்  மேற்கொள்வதில் வல்லவர்களான  Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

 

ச‌க‌ தோழ‌ன் , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை த‌ன‌து உட‌ம்பில் ப‌ச்சை குத்தி இருக்கிறார்

2 weeks 6 days ago

20190829-174049.png
 

புலிக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு போதும் பூனை ஆகாது , 
த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை த‌ன‌து கையில் , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை த‌ன‌து நெஞ்சில் ப‌ச்சை குத்தி இருக்கும் தோழ‌ன் ,

 

 

மாவீர‌ன் வீர‌ப்ப‌ன் எங்கள் குல‌சாமி

4 weeks ago

maxresdefault-1.jpg

maxresdefault.jpg
baby elephant called

வீர‌ப்ப‌ன் பெய‌ரை கேட்டாலே வீர‌ம் தானாக‌ வ‌ரும்🤜💪🤛/

ஆயிர‌ம் பொய்க‌ளை சொல்லி
வீர‌ப்ப‌ன் ஒரு கொள்ளை கார‌ன் என்று பொய் புர‌ளிக‌ளை அதிக‌ம்
எழுதினார்க‌ள் வீர‌ப்ப‌னை ப‌ற்றி 🤔😉/

அறியா வ‌ய‌தில் வீர‌ப்பனை ப‌ற்றி த‌வ‌றாக‌ புரிந்து கொண்டேன் / ஜெய‌ல‌லிதா ம‌ற்றும் க‌ருணாநிதியோடு ஒப்பிடும் போது , வீர‌ப்ப‌ன் அவ‌ர்க‌ளை விட‌ நூறு ம‌ட‌ங்கு நல்ல‌வ‌ர் 👏 , க‌ட்டிண‌ பெண்டாட்டியை த‌விர‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌து இல்லை 👏 /

பிள்ளைக‌ளுக்கு கோடி கோடியாய் சொத்து சேர்த்த‌தும் இல்லை 👏/

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் மேல் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா உண்மையான‌ பேர் அன்பும் பாச‌மும் வைச்சு இருந்த‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர் வீர‌ப்ப‌ன் 👏 /

ராஜீவ் காந்தியின் கிறுக்கு த‌ன‌த்தை துனிவோடு சொன்ன‌ மாவீர‌ன் எங்க‌ள் வீர‌ப்ப‌ன் 💪 /

க‌ட‌வுள் மேல் அதிக‌ ப‌ற்று கொண்ட‌வ‌ர் வீர‌ப்ப‌ன் 🙏🙏🙏🙏🙏/

த‌மிழ் பெண்க‌ளை த‌ப்பான‌ முறையில் தொட்ட‌ காவ‌ல்துறையை ஈன‌ இர‌க்க‌ம் இன்றி சுட்டு கொன்று த‌மிழ் கலாச்சார‌த்தை ந‌ல் வ‌ழியில் கொண்டு சென்ற‌ வீர‌ப்ப‌ன் 👏/

த‌ர்ம‌புரி காட்டு பிர‌தேச‌ ம‌க்க‌ள் தூக்கி கொண்டாடும் மாவீர‌ன் வீர‌ப்ப‌ன் 👏/

2009ம் ஆண்டு எம் இன‌ம் ஈழ‌த்தில் அழியும் போது , வீர‌ப்ப‌ன் உயிரோடு இருந்து இருந்தா ஒரு க‌ச‌ட் மூல‌ம் 2009ம் ஆண்டு இன‌ அழிப்பை த‌டுத்து நிறுத்தி இருப்பார் எங்க‌ள் மாவீர‌ன் வீர‌ப்ப‌ன் 👏😓/

வாழ்க‌ வீர‌ப்ப‌ன் புக‌ழ் 
என்றும் எங்க‌ள் ம‌ன‌தில் வீர‌ப்ப‌ன் 🙏

ப‌திவு பைய‌ன்26 😘😍😘

மாவீர‌ரின் புகை ப‌ட‌த்தை பார்த்து க‌ண்ணீர் விடும் தாய் ஆறுத‌ல் சொல்லுவார் யாரோ

4 weeks 1 day ago

20190820-214135.png

போராட்ட‌ க‌ள‌த்தில் போராளிக‌ள் ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் சிங்க‌ள‌வ‌னை எதிர்த்து போராடி ம‌டிந்து போனார்க‌ள் பிற‌ந்த‌ ம‌ண்ணில் / 

பிள்ளையை இழ‌ந்த‌ தாய் பிள்ளையின் ப‌ட‌த்தை பார்த்து அழும் போது , என் ம‌ன‌மும் சேர்ந்து க‌ல‌ங்குது ,எம்  போராட்ட‌த்தை நேசித்த‌ அனைத்து உற‌வுக‌ளின் ம‌ன‌மும் க‌ல‌ங்கும் இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தா 😓😓/

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் சாவ‌ம் இந்தியா என்ர‌ நாட்டை சும்மா விடாது 😠  /

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

1 month ago
Senjolai-4-720x450.jpg இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.

யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.

இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..

http://athavannews.com/இளம்-மொட்டுக்கள்-சருகாகி/

தமிழ் மக்­களின் உரிமைக்குர­லாக செயற்­பட்ட குமார் பொன்­னம்­பலம்!

1 month ago

அண்ணல் குமார் பொன்­னம்­பலம் என்னும் உரிமைக்­குரல் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­ப­டாமல் வாழ்ந்­தி­ருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவ­ருக்கு 81 வய­தாகும்.

Maamanithar-Kumaar-Ponnampalam-Aiyaa-8-660x330.jpg

அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் சார்பில் நீதி­மன்­றங்­களில் வாதா­டினார். எவ்­வி­டத்­திலும், தமிழ் மக்­க­ளுக்குச் சார்­பான கருத்­துக்­களைத் துணி­வாக வெளி­யிட்டு வந்தார். இதனால்,  இதன் உச்சக் கட்­ட­மாக இன­வா­தி­களால் குமார் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­களை இடித்து வலி­யு­றுத்­தி­யவர் அவர். திம்­புக்­கோட்­பா­டு­களையே  தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­க­ளாக  கொண்­டி­ருந்தார். எந்த  ஒரு  சிங்­கள தலை­மையும்  வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்­வீக நிலத்­தையும் பிறப்­பு­ரி­மை­யான  சுய­நிர்­ணய  உரி­மை­யையும் ஏற்று கொள்­வார்­க­ளானால் அர­சியல் தீர்­வைத்­தர வல்­ல­வர்­க­ளாவர் அன்றேல் இல்லை  என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்­தது. ஒன்றுபட்ட இலங்­கைக்­குள்­ளான சக வாழ்வு சாத்­தி­யப்­ப­டு­மென நம்­பினார். அதுவே அவர் அடிப்­படை அபி­லா­சை­களை என்று வலி­யு­றுத்த கார­ண­மா­னது.

இதனை ஊர்­ஜிதம் செய்யும் வகையில்  பார்ப்போம் ஆனால் இந்­திய ஈடு­பாடு குறித்த அவ­ரது நிலைப்­பா­டா­னது திரு­மதி பண்­டா­ர­நா­யக்க மற்றும் இட­து­சாரிக் கம்­யூ­னிஸ்ட்­டுகள் என்­போரின் நிலைப்­பா­டு­க­ளுக்கு நெருங்­கி­ய­தாக நகர்ந்­தது. அபி­லா­சை­களை அடி­யொற்­றிய DPA Manifesto எனும்­ அ­ர­சியல் உடன்­பாடு ஊடாக 1988 ஜனா­தி­பதித் தேர்­தலில் திரு­ம­தி­ ஸ்ரீ­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை ஆத­ரிப்­ப­தற்­காக வடக்கின் இட­து­சாரிக் கம்­யூ­னிஸ்ட்கள் ஏனைய முற்­போக்குச் சக்­தி­க­ளுடன் இணைந்­த­போது குமார் பெறு­ம­தி­மிக்க பங்­க­ளிப்பை ஆற்­றினார். அது திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கவுட­னான நட்­பு­ற­விற்குக் கார­ண­மா­யிற்று. சம்­பிக்க ரண­வக்கவும் பல்­க­லை­க்க­ழக மாணவர் அமைப்பின் சார்­பாக இதில் கையொப்­ப­மிட்­டி­ருந்தார். அவ­ரி­டம் ­நேர்­மை­யி­ருந்­ததால் அர­சியல் நேர்­மையும் இருந்­தது.

கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் ஆற்­றிய பங்­க­ளிப்பை நினை­வூட்­டு­வது சில­ருக்குப் பிடிக்­காது. அவ­ரது கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் காட்­டிய மன வலி­மை­யா­னது அதீ­த­மா­னது. எம் தலைவர்  குமாரின் அர­சியல் நிலைப்­பா­டா­னது ஏறு­மா­றா­ன­தா­கவோ சந்­தர்ப்­ப­வாத போக்­கு­டை­ய­தா­கவோ இருக்­க­வில்லை. ஆனால் கொள்­கை­ நி­லை­யைத்­த­மிழர் தம் அபி­லா­சை­களை வலி­யு­றுத்­து­வ­தா­கவே இருந்­தது. அவ­ரது முயற்சிகள் நம்­பிக்­கையின் தோல்­வி­யா­னது. குமாரின் மனப்­பாங்­கில் ­மாற்றம் ஏற்­பட வழி­கோ­லிற்று.

அவ­ரி­ட­மி­ருந்து நான்  இன்றும் கைக்­கொள்ளும் ஒரு பண்பு, கருத்து வேற்­று­மைகள் வேறு, மனித அன்­பும் ­ம­னித பண்பும்  வேறு. இறு­திக்­காலம் வரை அனைத்து இயக்­கங்­க­ளையும் வர­வேற்று தனது இல்­லத்தில் விருந்­தோம்பி ஒன்­று­ப­டுத்தி பொது கருத்­திற்­காக சந்­திப்­புக்­களை ஏற்­ப­டுத்­தினார். இதன் விளை­வு­தான் ­அ­வரின்  பின்­னாளில் பத்து பதி­னொரு கட்­சி­களின் கூட்­ட­மைப்­பாக நாம் ஒன்­று­பட்டு செயற்­பட, போராட்டம் நடத்த வழி­வ­குத்­தது.

அதே­வேளை தமிழ் மக்­களின் அபி­லா­சை­க­ளுக்குச் சார்­பாக நின்ற ஒரே­யொரு உண்­மை­யான சக்­தி­யாக விடு­தலைப்புலிகள் என அவ­ருக்குத் தென்­பட்­டது. அவர் இரத்­தத்­தையும் துன்­பி­ய­லையும் பார்க்­க­மு­டி­யா­தவர். இந்­நி­லைப்­பாட்­டிற்கு ஒரு தமிழ்த் தேசி­ய­வாதி என்ற கோணத்­தி­லி­ருந்து குரல் கொடுத்தார்.

பிரச்­சி­னைக்கு நீதி­யா­னதும் நிலை­யா­ன­து­மான ஒரு தீர்வைக் காண்­பது தொடர்பில் உள்­ளொன்றும் புற­மொன்­று­மாக விளங்கும் குறு­கிய எண்ணங்கொண்ட நாட்டுப் பற்­றை­ வ­லி­யு­றுத்தும் சக்­தி­களும் தேசிய அர­சியல் கட்­சி­களும் தான் சுய­நிர்­ணய கோரிக்­கைக்குப் பாரிய அளவில் பாத­க­மேற்­ப­டுத்­தி­ய­தாக கூறுவார்.

குமார் வாழ்ந்த காலம் மிக­மிக கடி­ன­மான கால­மாகும். இது­வரை ஆயுதம் ஏந்­தாத எந்­த­வொரு தமிழ் அர­சியல் வாதி­யை­விட  அதிக பிரச்­ச­ினைக்கு தனது எதிர் நீச்­சலை, ஆபத்தை ஏற்­றுக்­கொண்ட அவர், அவ­ரது எந்­த­வொரு பாரா­ளு­மன்ற அர­சியல் எதி­ரி­யை­வி­டவும் நேர்­மை­யாக அதி­க­மாகச் சாதித்தார்.

சில்­லறை அர­சியல் வாதி­க­ளைப்­போ­லன்றி பாரிய சர்­வ­தேச உற­வு­க­ளையும்,இவரை அவர்கள் நாட­வேண்­டிய தேவை­யையும்  முற்­றிலும் தமி­ழி­னத்­திற்­கா­கவே ஏற்­ப­டுத்தி செயற்­பட்டார் என்­பதை அவரின் மறை­வின்­பின்­னான ஐ.நா. உள்­ளிட்ட சர்­வ­தே­சத்­தா­ரது பதி­வுகள், இரங்­கல்கள், பாராட்­டு­களும்  துயர்­ப­கிர்வுப் பதி­வு­களும் எடுத்துக்காட்­டி­ன.

இலங்கை வாழ் தமிழ் சமூ­கத்­தின்­அ­ர­சியல் நலன்­களில்  அவ­ருக்­கி­ருந்த அர்ப்பணிப்பு  முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது.அரசியல் சதுரங்கத்தில்  தாக்கத்தையும்  விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அவருடைய அரசியலுடன் பாரிய ஈடுபாட்டுடன் செயற்பட்டு இக்கட்டான நேரத்தில் அவருயிர் பறிக்கப்பட்டவுடன் அவர் தம் அரசியல் வழி தொடர பொதுச்செயலாளர் பணியை அன்று ஏற்றவன் இன்றும் என்றும் என் அரசியற் தலைவனாக கொண்டவன் எனும் வகையில் இன்றைய அவரது பிறந்த நாளில்  இப்பதிவு காலத்தின் தேவை என உணர்கின்றேன்.

கலாநிதி நல்லையா குமரகுருபரன் 

(தலைவர் தமிழ் தேசிய பணிக்குழு)

https://eelamurasu.com.au/?p=20865&fbclid=IwAR0dmEQDA7ap6D1N0-sL2gRhXVqrDKuQuCanvgg9CuJFRmlNShA0Std88TE

ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ அண்ணா

1 month ago

வண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே 

புல‌ம் பெய‌ர் நாட்டில் என‌க்கு தெரிந்த‌ அண்ணா 
2009ம் ஆண்டு இறுதி க‌ட்ட‌ போரில் பாதிக்க‌ ப‌ட்ட‌ 10 குடும்ப‌த்துக்கு ( மாத‌ம் ஒரு குடும்ப‌த்துக்கு 10000 ஆயிர‌ம் ரூபாய் ப‌டி ப‌த்து குடும்ப‌த்துக்கு த‌ன் சொந்த‌ ப‌ண‌த்தில் உத‌வி செய்திட்டு இருக்கிறார் /
10 குடும்ப‌த்துக்கும் இல‌ங்கை காசுக்கு மாச‌ம் ஒரு ல‌ச்ச‌ம் ப‌டி /

அண்ணாவை 2000ம் ஆண்டில் இருந்து என‌க்கு தெரியும் , அண்ணாவின் ம‌னைவி டாக்ட‌ர் ,
அண்ணாவுக்கு மூன்று வீடுக‌ள் இருக்கு , அதில் இர‌ண்டு வீட்டை வாட‌கைக்கு விட்டு இருக்கிறார் /
அவ‌ரின் ம‌னைவியில் வ‌ருமான‌ம் மாச‌ம் 4500 இயுரோ 😘👏/

த‌ங்க‌ளின் சொந்த‌ காசில் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ 10 குடும்ப‌த்துக்கு உத‌வின‌ம் 👏/

இப்ப‌டியும் ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌
ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணால் காண்ப‌து அரிது 🙏🙏🙏 /

சின்ன‌னில் என் மேல் காட்டின‌ அதே அன்பு பாச‌மும் இப்ப‌வும் காட்டுவார் 😍

அவ‌ருக்கும் எங்க‌ள் நாட்டில் காசு சேர்க்கும் ஆட்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , ஏன் என்றால் அவ‌ர்க‌ள் இட‌த்தில் நேர்மை இல்லை , மாவீர‌ நாளுக்கு காசு சேர்க்க‌ வ‌ந்தா 100இயுரோவை குடுத்து அனுப்பி விடுவ‌ர் 😉/


வீட்டுக்கை வாங்கோ இருங்கோ என்று கூட‌ சொல்ல‌ மாட்டார் காசு சேர்க்க‌ வார‌ ஆட்க‌ளுக்கு 😉/

நான் அவ‌ரின் த‌ம்பி என்ர‌ முறையில் எல்லாத்தையும் ம‌ன‌ம் விட்டு சொல்லுவார் 👏

த‌லைவ‌ர் ம‌ற்றும் மாவீர‌ர்க‌ள் மேல் உள்ள‌ ப‌ற்றால் தான் மாவீர‌ நாள் செய்ய‌ காசை குடுக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி உவையை விட்டு த‌ள்ளி நிப்ப‌து ந‌ல்ல‌ம் என்பார் 👏/

அண்ணாவின் உள் கோவ‌த்தை
என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது / 2009ம் ஆண்டு எவ‌ள‌வு காசை பொய் சொல்லி ஆட்டைய‌ போட்ட‌வை / அப்ப‌ நாங்க‌ள் சின்ன‌ பிள்ளைக‌ள் / நானும் என‌து வ‌ய‌து இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் இன்னொரு மாமாவும் சேர்ந்து இல‌ங்கை காசுக்கு 30 ல‌ச்ச‌ம் ரூபாய் குடுத்தோம் 😄/
காசு குடுத்து ஒரு மாத‌ கால‌த்துக்கை ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌து என்று போராளிக‌ள் அறிவிச்சிட்டின‌ம் 😓/

புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்த்த‌வேண்ட‌ பிராட்டு த‌ன‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வெளியில் வ‌ர‌ ஆர‌ம்பிசிட்டு அந்த‌ நாட்க‌ளில் 😠 /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு நான் 
மாவீர‌ர் நாளுக்கு கூட‌ போன‌து இல்லை , போன‌ உந்த‌ பிராடுக‌ளை பார்த்தா அதிக‌  கோவ‌ம் என்ர‌ ப‌டியால் 😠 /

( இறுதி போரில் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு புல‌ம் பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் இன்னும் ந‌ல்ல‌ உத‌விக‌ளை செய்து இருப்பின‌ம் ,

போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌ பிராடுக‌ள் செய்த‌ வேலையால் , ம‌க்க‌ள் குழ‌ம்பி போய் உள்ள‌ன‌ர் 😓/

ஊருக்கு போனால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு தானே நேரா போய் உத‌வுறேன் என்று என‌து ம‌ச்சான் சொன்னான் , அவ‌ன் பெரிய‌ உண‌வ‌க‌ம் வைச்சு இருக்கிறான் , அவ‌னுக்கும் உந்த‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்ப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠/

( மாவீர‌ர் சிந்தின‌ வேர்வையில் இர‌த்த‌தில் காசை ஒரு போதும் கொள்ளை அடிக்க‌ கூடாது , அந்த‌ பாவ‌ம்  அவ‌ர்க‌ளை  சும்மா விடாது 😠 )

நான் எழுதின‌தில் ஏதாவ‌து குறை இருந்தா சுட்டி காட்ட‌வும் /

ப‌திவு பைய‌ன் 26 🙏

சுதுமலை பிரகடன நாள் இன்று!

1 month 2 weeks ago

சுதுமலை பிரகடன நாள் இன்று!

67434466_2522227591174885_82619472197126
“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கானதீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”

- வே. பிரபாகரன்

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

1 month 2 weeks ago
வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

Aug 02, 2019

 
 

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை நடத்தியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் நடத்தினர்.72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடுயின்றி 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன

.13882312_155572854873682_4021262686146229333_n

வல்வை நூலகம் தீயிடப்பட்டிருந்தது. பல ஆயிரக்கணக்கான நூல்கள், தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன. 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்

 

.download

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES யின் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES யின் 17.08.89 இதழில் இந்த செய்தி வெளிவந்தது

.67553722_2174695792640622_1725553126062161920_n-300x222

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.13934596_155572874873680_5065849071357984479_n

அன்று இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால், அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் பல ஓடிவிட்டன. இன்றும் அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் அந்த மக்களின் மனங்களில் நிலைத்து நிக்கின்றன.இன்று வல்வைப் படுகொலையின் 30 வது ஆண்டு நிகழ்வு வல்வெட்டித்துறையில் நினைவு கூரப்படுகின்றது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/வல்வெட்டித்துறை-படுகொலை/

 

யாழ்ப்பாணம் கோட்டை/Jaffna fort /jaffna/selfy with lanka /srilanka

1 month 2 weeks ago

வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் இருந்து கிருத்தி

செல்பி வோல்கிங்க் என்ற யூ டியூப் சனலை எமது பிரதேசங்களில் உள்ள வரலாற்று அடையாளங்கள்,சுற்றுலாத்தலங்கள்,கோவில்கள் என அனைத்தையும் காணொளி பதிவாக வெளியிடுவதற்காக ஆரம்பித்திருக்கின்றேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

நன்றிகள்

யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.

 

த‌லைவ‌ரின் ம‌னைவி சிறு பிள்ளையாய் இருந்த‌ போது பெற்றோர்க‌ளுட‌ன் எடுத்த‌ அரிய‌ புகைப் ப‌ட‌ம்

1 month 2 weeks ago

த‌லைவ‌ரின் ம‌ணைவி (அம்மா ம‌திவ‌த‌னி ) அவாவின் பெற்றோர்க‌ளுட‌னும் ம‌ற்றும் அவாவின் த‌ம்பியுட‌னும் சிறு பிள்ளையாய் இருந்த‌  போது எடுத்த‌ ப‌ட‌ம் / 

இந்திய‌ன் ஆமியுட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது வீர‌ச்சாவு அட‌ந்த‌ த‌ன‌து த‌ம்பியின் பெய‌ரை தான் த‌ன‌க்கு பிற‌ந்த‌ க‌ட‌சி ம‌க‌னுக்கும்  வைச்ச‌வா ( பால‌ச்ச‌ந்திர‌ன் என்று 🙏😓 )

20190729-000140.png

கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

1 month 3 weeks ago
கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.
July 22, 2019
wwew-696x319.jpg

தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில்  ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே  அகதிகளாக வாழ வைத்த கொடுமையும் அவ்வாண்டில் நடைபெற்றன . சுமார் 3,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 

1983 கலவரத்த்திற்கு முன்னதாக. சிறுபான்மை இன மக்களுக்கு நடந்த துயரத்தையும் நாம் ஆழமாக பார்க்க வேண்டும்.

1915 இல் – முஸ்லிம் மக்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல். 

1949 இல் -மலையக  தமிழ் மக்களின் குடியுரிமை மறுப்பு.

1956 இல் -தனி சிங்கள சட்டம். 

1958 இல்- தமிழ் பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். 

1977 இல் -நடைபெற்ற வன்முறைகள். 

1981இல் -யாழ் நூலக எரிப்பு. 

இவ்வாறு ஏற்கனவே நடந்த இன வன்முறைகளினாலும், ஒடுக்குமுறைகளாலும், பாதிக்கப்பட்ட அனுபவத்தை சந்தித்து தமிழ் பேசும் மக்கள் தமக்கான பலமான அரசியல் தளமொன்றை நிர்மாணிக்கத்தொடங்கினார்கள்,ஆனால் ஏற்கனவே தமிழர்களுக்கான பிரதிநிதிகளான தமிழ் தலைமைகளால் இவ்வாறான அடக்குமுறையை எதிர்ப்பதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்க்கோ அல்லது பலமான மக்கள் சக்திகளை திரட்டுவதற்கும்,  ஒருங்கிணைப்பதற்கும் அவர்களால் முடியவில்லை. அவர்களிடம் பலவீனமான அரசியல் மட்டுமே இருந்தது. 

அதன்பின் அக்கால கட்டத்தில்  சிறுசிறு ஆயுத இயக்கங்கள் உருவாகின, அவ்வியக்கங்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் வருவதுண்டு, ஆனால் அந்த இயக்கங்கள் உருவாகுவதற்கு காரணம், கொடிய அடக்குமுறைகளை எதிர்க்கவும், தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவுமே அவ் இயக்கங்கள் உருவாகின. அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான அமைப்பாகஉருவாக்குவதற்கு போராடி வந்தார்கள். ஆரம்பத்தில் சாதாரண சிங்கள மக்களை தாக்குவதற்கோ அல்லது  அவர்களது வாழ்க்கை இடையூறு விளைவிப்பதற்கு அவர்களுக்கு உடன்பாடு இல்லை .இவ்வாறு மக்களுக்காக போராடியவர்களை இலங்கை அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது.யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம் இவ்வாறான நடைமுறையைத்தான் மேற்கொண்டு வருகின்றது என்பதை நாம் கண்கூட காணமுடிகின்றது.1983 இல் ஆட்சியிலிருந்த ஜே. ஆர் ஜெயவர்த்தனவுக்கும், தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவும் அரசியல்ரீதியாக ஒரு வித்தியாசமுமில்லை, ஒரே முதலாளித்துவ கையாட்களாகவே உள்ளார்கள்.  தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வையோ அல்லது   மாற்று தீர்வு ஒன்றினை முன்மொழிவதற்கு உரிய ஏற்பாடுகளோ  அவர்களிடம் இல்லை. அதை நன்றாக இக்கால கட்டத்தில் வடகிழக்கில் நடைபெறும் போராட்டங்களில் நாம் அவதானிக்க முடிகிறது.

images.jpg

பொதுவாக சிறு எண்ணிக்கையிலான பெளத்த இனவாதிகள் 1950களிலிருந்து தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள்மீது தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். இந்த   இனவாத குழுக்களுக்கு அரசு பின்னணியில் ஆதரவு கொடுப்பது காலகாலமாக நடைபெறுகிறது. 1983 இல் நள்ளிரவில் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்திற்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர்க்கும் நடைபெற்ற மோதலில்  13 ராணுவர்கள் உயிரிழந்தார்கள். மோதலை தொடர்ந்து மறுநாள் தென் இலங்கை பத்திரிகையில் இவ்வாறு செய்தி பிரசுரிக்கபடுகிறது “13 சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்”. மற்றும் பெளத்த இனவாதக் குழுக்கள் இனவாத தீயை நாட்டில் பல பாகங்களில் பற்ற வைக்கிறார்கள். சிங்களவர்களை தமிழர்கள் கொன்றுவிட்டார்கள், தமிழர்கள் திட்டமிட்டு சிங்களவர்கள்  அனைவரையும் அழிக்கப் போகிறார்கள்.என்று பொய்பிரச்சாரத்தை முதலில் தெற்கில் ஏற்படுத்தினார்கள். அதன்பின் கண்டி மற்றும் தமிழர்கள் வாழும் பல பிரதேசங்களுக்கு இனவாத பிரச்சாரம் பரப்பப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கமானது தனது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு இவ்வாறான ஒரு சூழலை ஏற்கனவே திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தது. அந்த கனவு ஜுலையில் பலித்தது. அதன் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இறந்த இராணுத்தினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுவாக இறந்த இராணுத்தினர்களை அவர்களது சொந்த பிரதேசத்தில் அடக்கம் செய்வார்கள், அவசரஅவசரமாக உத்தரவு பிறப்பித்தற்கு  காரணம் பொதுமக்களிடமிருந்து ஆவேசத்தை தூண்டுவதற்காவே. 

24ஜீலை  இலங்கை தெற்கு நகரத்தில்  ராணுவ அடக்கம் செய்வதற்கு அணிதிரட்டபட்டனர், ஆனால் இறந்த இராணுவ சடலங்கள் வருவதற்கு தாமதமாகின. 

இனவாதிகளும் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்தார்கள், கூட்டத்தில் காத்திருந்த சிங்கள மக்களுக்கு பொய்பிரச்சாரத்தை பரப்பினார்கள், விடுதலை புலிகள் “அனைத்து சிங்கள மக்களையும் கொல்ல போகிறார்கள்” என வதந்திகளை கிளப்பினார்கள். 1983 ஜீலை கலவரம் வெடித்தது.இனவாத கும்பல்கள் கையில் கிடைத்த உபகரணங்கள், கத்தி, கம்புகள், பெற்றோல், எண்ணைக்கலன்கள், என்பனவற்றை பாவித்து தமிழர்களுடைய வர்த்தகநிலையங்கள், வீடுகள், வாகனங்கள் என அடித்து நொருக்கி தீயிட்டு கொளுத்தினார்கள், தமிழர்களுடைய சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்தனர், பார்க்கும் இடங்கள் எங்கும் அடிதடியாக இருந்தது, பெண்களை பாலியல் ரீதியாக தாக்கினார்கள், நாடே பதட்டத்தில் காணப்பட்டன. தமிழர்கள் தமது சொந்த பணத்தில் வியாபாரம் மற்றும் வாழ்க்கை நடத்தியவர்களை அடித்து விரட்டினார்கள், பல உயிர்சேதங்கள் ஏற்பட்டன. அகதி முகாமுக்குள் குடிபெயர்ந்த மக்களை கூட விட்டு வைக்கவில்லை, தேடி தேடி தாக்கினார்கள். 

தொடர்ந்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தன அதை பற்றி கவலை படவில்லை, “சண்டை என்றால் சண்டை” “சமாதானம் என்றால் சமாதானம்” என்ற பிடிவாதமாக இருந்தார், அம்மக்களின் வாக்குகளை பெற்று பதவியில் இருந்து கொண்டு படுமோசமானஅரசியல் பேசினார் அவர், இப்போதும் இலங்கையில்  இவ்வாறான சக்திகள் உள்ளன என்பதை 2009 யுத்தமுடிவில் பார்த்திருந்தோம். 

1983 யூலை  தொடர்தினங்களாக கலவரம் தொடர்வதால்  பொருளாதார சிக்கல் வந்துவிடும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த  பொலிசாரும், இராணுவமும் முன்வரவில்லை வேடிக்கை பார்த்தனர், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரியோகம் நடத்தவில்லை, அதற்கான காரணங்களும் உண்டு, அவ்வாறு நடைபெற்றால் சிங்கள மக்களின் ஆதரவு  முக்கியம் மற்றும் அரசு சரிந்துவிடும் என்ற எண்ணங்களும் இருந்தன. அது மட்டுமல்ல ராணுவத்தினரது மிக கொடூரமாக வட பகுதியில் பழிக்குப்பழி என்று 50க்கும் மேற்பட்ட அப்பாவி போதுமக்களைளை கண்மூடித்தனமாக கொன்றார்கள்.

July-1983.jpg

ஜீலை கலவரம் நடந்து கொணடிருக்கும்போது தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் அநேகமானவர்கள் உள்ளனர். அவர்களுடைய உயிரைக் கூடப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். தற்போது தமிழ்த்தேசியவாதிகள் தாம்தான் என பறைசாற்றிக்கொள்பவர்கள் இவ்வாறான  சகோதரத்துடன் பழகும் சிங்கள மக்கள் பற்றிய தவறான பதிவுகளையும் பிரச்சாரத்தயும் நிறுத்தபடவேண்டும்.ஜுலை கலவரத்தில் நடைபெற்ற மற்றுமொரு இனவாத தாக்குதல்  வெலிக்கடைச்சிறைச்சாலையில்இடம்பெற்றிருந்தன, 1983 ஜூலை 25-27 ஆம் திகதிகளில் இலங்கை அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் சித்திரவதைகள், கொலைகள். என தொடர்ச்சியாக அதிகரித்தன. அத்தாக்குதலில் முதல் நாளில் 35 தமிழ் அரசியல்  கைதிகள் கொல்லப்பட்டனர், மிகமோசமான படு கொலைகள் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தன. என்பதையும் உறுதியாக கூறமுடியும். இனவாத கும்பல்கள் சிறையில் இருக்கும் சக சிங்கள கைதிகளுக்கு திட்டமிட்டு இனவாத மூளைச்சலவை செய்தனர். தமது வெறியை தமிழ் கைதிகள் மேல் காட்டினர்.உடனடியாக கட்டைகள், கத்திகள், இரும்புக்கம்பிகள் என்பவற்றை கொண்டு தமிழரசியல் கைதிகளை தாக்கினார்கள், நிர்வாணபடுத்தினார்கள், சித்திரவதைப்படுத்தினார்கள், கொன்றுகுவித்தார்கள். இவ்வாறான வன்முறைகளை ஏன் அதிகாரிகளால் தடுக்கமுடியவில்லை?நீதி துறையின் கட்டுபாட்டில் எவ்வாறு இவ்வாறான  அநீதிகள் நடந்தன. இவர்களுக்கு தாக்க கூடிய அதிகாரம் யார் கொடுத்தது, தாக்க கூடிய பொருட்கள் முக்கியமாக சிறைச்சாலையில் எவ்வாறு கிடைத்தது, இது திட்டமிட்டபடு  கொலைகள் என தயங்காமல் கூறலாம்.எஞ்சியிருந்த தமிழரசியல் கைதிகளையும் கொல்வதற்கு மறுநாள் தயாராகினர்கள், அச்சத்துடன் இருந்தார்கள் அக்கைதிகள்,  அவர்கள் தற்பாதுகாப்பிற்காக கையில் கிடைத் சாப்பாட்டுதட்டு போர்வை கள் என்பன வைத்திருந்தார்கள். 

இனவாதிகள் இரண்டு நாட்களின் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்தினர்கள். இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இனவாதிகளால் தாக்கி , மொத்தமாக 53 கைதிகள் சிறைச்சாலையில் மட்டும் கொல்லப்பட்டனர். . ஒருவாரத்தில்தமிழர்களது இரத்தங்கள்  சிந்தவைத்து குளிர்காய்ந்தஇனவாதிகள்.  இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டை கொடுக்கவில்லை, இன்றுவரை சர்வதேச விசாரணைகூட நடக்கவில்லை. 

மீண்டும் ஓரு ஜுலை கலவரத்தை உருவாக்கும் பேரினவாத மற்றும் துவேச வாதிகளை நாம் இனங்கணுபோம், அச்சக்திகளைஎதிர்த்து தோழமையுடன் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை வெல்வதற்கு நாம் ஐக்கியப்படுவோம்.

 

http://ethir.org/black-july1983/

 

யாழில் கட்டிமுடிக்கப்பட்ட கலாச்சார மண்டபத்துக்குக்கான பெயர் தேவை.

2 months ago

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைந்துள்ள கலாச்சார (கலாச்சாரம் என்பது சம்ஸ்கிரதம் என்பதாக எனது கருத்து) மண்டபத்துக்குப் பெயர் வைப்பதுதொடர்பில் அம்மண்டபத்தை வடிவமைத்தவரால் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் எனப் பெயர்வைப்பதில் அவ்வளவு உடன்பாடாகக்தெரியவில்லை. 

சிலவேளை எனது இக்கருத்திடுகையை பலவிதமான நிறங்கள் கொண்டு பார்க்கப்படலாம் ஆனால் கட்டிய மண்டபத்தை இடிக்கமுடியாதுதானே தவிர பத்தோடு பதிணொன்றாகப் பெயர் வைத்துவிட்டு எதிர்காலத்தில் அதை மாற்றுவதற்க்கு முக்கேனப்படவேண்டும் ஆகவேதான் அம்மண்டபத்தை வடிவமைத்தவர் தனக்குத் தெரிந்த புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் சரியான பெயர் ஒன்றைக்கூறும்படி. 

யாழ் களத்தில் உறவுகள் உங்களால் முடிந்தால் கருத்துக்களைக்கூறவும் குறிப்பாக கவிஞர் கெயா அண்ணர் இதைக்கவனிக்கவும் சமஸ்கிரதம் கலக்காத பெயரை வைப்பதற்கு முயல்வோம்.

மேலதிக செய்தியாக 

இம்மண்டபத்தை வடிவமைத்தவர் சுற்றுச்சூழலில் பனைமரங்களை நட்டு உண்டாக்கவெண்டும் என வரைபடத்தில் கூறியிருந்தார் ஆனால் இந்திய துணைத்தூதுவர்கள் இல்லை அசோகா மரத்தை வைத்து உண்டாக்கவேண்டும் என கண்டிப்புக்காக்ட்டியதாகவும் இறுதியில் பனைமரமே முடிவானதாகவும் கூறியிருந்தார் இது ஒரு சிறு உதாரணமே ஆனால் நிறைய விடையங்களில் க்டாநாட்டில் அடையாளப்படுத்தக்கூடிய கட்டிட வரைபடத்தின் பல பகுதிகளை மாற்றம் செய்ய மல்லுக்கட்டி கூடிய அளவு அவர்களுடன் போராடி இறுதியில் கட்டிடத்தை முடிவுக்குக்க்கொண்டுவந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதை வாசிக்கும்போது எனது முகம் பச்சை நிறமாகவும் நீல நிறமாகவும் காவி நிறமாகவும் உங்களுக்குத் தென்படலாம் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. முடிந்தால் உங்களது கருத்தைக்கூறி நல்ல ஒரு பெயரையும் தெரிவுசெய்யுங்கள்.

இதுபற்றித்தொலைபேசியவர் அதாவது அந்தக்கட்டிடக்கலைஞருடன் தொடர்பிலிருப்பவர் இன்று அல்லது நாளை கொடுத்தால் நல்லது எனக்கூறினார்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதலால் வீழ்ச்சி பெற்ற சுற்றுலாத்துறை - அரசின் நடவடிக்கைகள் என்னென்ன

2 months 1 week ago
  •  
     
சுற்றுலாத்தளமான காலி - உனவட்டுன கடற்கரை

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.

கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை

2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர்.

அத்துடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறு சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்து வந்த இலங்கை தற்போது மீண்டும் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்தது.

காலி - உனவட்டுன கடற்கரை

உலக நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்த பின்னணியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த பலர், தமது பயணங்களை ரத்து செய்திருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் பூஜ்ஜயம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டிருந்தது.

இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பல நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ள போதிலும், அவதானத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துள்ள நிலையில், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியாகவே இன்றும் காணப்படுகின்றது.

குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் ஒரு இடமான இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி - உனவட்டுன பகுதிக்கு நாம் சென்றிருந்தோம்.

சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அது தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுலா தளம்

இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதாக காலி - உனவட்டுன பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

"ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதலின் பின்னர் உனவட்டுன பகுதியில் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய நாட்களில் இந்த பகுதிக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள். ஆனால் இன்று எந்தவொரு சுற்றுலா பயணியையும் காண முடியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு இடையில் அச்ச நிலைமை தொடர்வதே இதற்கான காரணமாக இருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது. இது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும். நிலைமை வழமைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்" என்றார் அவர்.

காலி - உனவட்டுன கடற்கரை

உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மாத்திரமே நம்பி தங்களின் வாழ்வாதாரம் இருப்பதாக அங்குள்ளவர்கள் பிபிசி தமிழிடம் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையயை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளார்.

இலங்கைக்கு சேவையை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான கட்டண குறைப்பை குறைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்குதலும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48921586

புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! தீபச்செல்வன்…

2 months 1 week ago
 
July 9, 2019

Navali.png?zoom=1.1024999499320984&resiz

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.

இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள்.

இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபத்து நான்கு வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.

உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.

இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலைசெய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.

உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.

இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் – தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.

நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை.

போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள். அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.

சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.

போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2019/126172/

Checked
Wed, 09/18/2019 - 20:20
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed