Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95971

About this blog

கனடா போக்குவரத்து தகவல்

Entries in this blog

எம்மிடம் போனில் (தொலைபேசி) கேட்ககூடாத கேள்விகள்

அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது. வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதி

வயது ஒரு தடை இல்லை

எமது மாணவர் ஒருவர் அண்மையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொண்டார். இதில் விசேசம் என்ன என்றால் அவருக்கு தற்போது வயது எண்பத்து ஆறு 86. முறையான வழிகாட்டல், பயிற்சியுடன், உங்களுக்கு ஆர்வமும் காணப்பட்டால் வாகன அனுமதி பத்திரம் பெறுவதற்கு வயது ஒரு தடையாக அமையாது. வீதி பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் வீடியோவில் அவர் தனது நன்றியை தெரிவிக்கிறார். தகவல்: போக்குவரத்து http://www.cardriving.ca

வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய வேண்டுமா?

வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா? இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது. இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை? ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்த

கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது?

கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது? (வட அமெரிக்கா) ---------------------------------------- பதற்றம் அடையாதீர்கள். ---------------------------------------- 1. வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள்: Emergency Signalஐ போடுங்கள். விரைவாகவும், பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் பழுதடைந்த வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள். இயலுமானவரை நேர்மட்டமான பாதையில் நிறுத்துங்கள். நீங்கள் இடதுபக்கமாக வாகனத்தை நகர்த்தவேண்டி ஏற்பட்டால் மற்றைய வாகனங்கள் உங்கள் வாகனத்து

தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுபவரா நீங்கள்?

தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது மதுபோதையில் வாகனம் ஓடுவது போல் அதிகளவு ஆபத்தானது. போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனம் ஓடினால் மதுபோதையில் வாகனம் ஓடும்போது உள்ளதுபோல வீதி விபத்தில் நீங்கள் சிக்குவதற்கு அதிகளவு சாத்தியம் உள்ளது. நீண்ட பயணங்களின் போது வாகனம் ஓடும் முன்னர் போதியளவு தூக்கம் கிடைக்காது என நீங்கள் கருதினால் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு பயண வழிமுறைகளை கையாளுங்கள். குறுகிய தூர பயணங்களாயினும் போதியளவு தூக்கம் கிடைக்கவில்லையாயின் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு போக்குவரத்து முறைகளை பயன்ப

Toronto இல் உள்ள பாதசாரிகள் பயன்படுத்துவதற்கு மிக ஆபத்தான சந்திகள்

Toronto மாநகரில் பாதசாரிகள் பயன்படுத்துவதற்கு மிக ஆபத்தான சந்திகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? Toroonto இல் ஏறத்தாள 1,337 சந்திகள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றையும் தினமும் ஏறக்குறைய 500 பாதசாரிகள் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகின்றது. கடந்த பத்து வருடங்களில் பாதசாரிகள் சம்மந்தப்பட்ட விபத்துக்களின் புள்ளிவிபர தகவல் அடிப்படையில் Toronto மாநகரில் மோசமான பத்து சந்திகள்: Markham Road & Tuxedo Court Albion Road & Finch Ave. W. Milliken Blvd. & Finch Ave. E. Neilson

நாட்டு புற சாலைகளில் (Country Roads) வண்டி ஓடும்போது கவனிக்க வேண்டிய சில விசயங்கள்

பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்: அமைப்பு- 1-இங்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம் பொதுவாக 80கிலோமீற்றர்/மணி. 2-இவை கரடுமுரடாக அழுத்தம் இல்லாமல் காணப்படும் (unpaved roads). 3-ஏறுகின்ற குன்று பாதைகளாகவோ இறங்குகின்ற பள்ள பாதைகளாகவோ காணப்படலாம். 4-சேற்று, சகதி நிறைந்த பாதையாக காணப்படலாம் (Muddy). 5-சரளைக்கற்களால் ஏற்படுத்தப்பட்ட மட்டமற்ற பாதையாக காணப்படும் (Gravel). 6-மிகவும் ஒடுங்கிய பாதையாக காணப்படலாம். 7-பொதுவாக நடுவில் பிரிக்கப்படாத ஒழுங்கைகளாகவும், இருவழி பாதையாகவும் அமைய

எங்கள் மாணவர்களினால் முடியும் என்றால் உங்களினாலும் முடியும்!

சரியான வழிகாட்டுதல், முறையான போதியளவு பயிற்சி, தன்னம்பிக்கை இவை உங்களிடம் காணப்பட்டால் எமது மாணவர்கள் போல் உங்களினாலும் முதல் தடவையிலேயே சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வீதி பரீட்சையில் சித்தி அடைய முடியும். தகவல்: போக்குவரத்து Htttp://CarDriving.CA

எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்? எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது?

ஒழுங்கை மாற்றம் போக்குவரத்து நிலவரம், சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படுகின்றது. வாகனம் ஓடும்போது ஒழுங்கை மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டி ஏற்படலாம் அல்லது 20 நிமிடம் அளவிற்கு கூட அது தேவைப்படாதும் போகலாம். வலது பக்கமாக உள்ள ஒழுங்கையில் இயலுமான வரை ஓடவேண்டும் என்பதே பொதுவான போக்குவரத்து விதியாகும் (வட அமெரிக்கா). எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்? 1-உங்கள் பார்வை முன்னால் செல்கின்ற பெரிய வாகனங்கள் மூலம் (பார ஊர்தி, பேருந்து) தடைப்படுமாயின் 2-உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் காரணம் இல்ல

ஹைவேயில் நுழைவது எப்படி?

1-ஹைவேயை நோக்கிய வளைவினுள் நுழையும் போது வளைவுக்குரிய அதன் வேகத்தை பார்த்து ஓடுங்கள். 2-ஆர்முடுகும் ஒழுங்கையின் (acceleration lane) நீளத்தை (length of the lane) கவனியுங்கள். 3-நுழைய வேண்டிய ஒழுங்கையினுள் போதுமான அளவு இடைவெளியை (adequate gap) பாருங்கள். 4-எந்த இடைவெளியினுள் (இரண்டு வாகனங்களுக்கு இடையிலான) நீங்கள் நுழைய போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள். 5-நேரே பாருங்கள், கண்ணாடியை பாருங்கள், நுழையும் பக்கத்திற்குரிய சிக்னலை போடுங்கள், blind spotஐ பாருங்கள், குறிப்பிட்ட இடைவெளியினுள் பா

மின்னணு உறுதி கட்டுப்பாடு (Electronic stability control - ESC) உள்ள வாகனங்களை பாவியுங்கள்

மின்னணு உறுதி கட்டுப்பாடு (Electronic stability control) என்பது நீங்கள் வாகனம் ஓடும்போது இந்த பொறிமுறை பாவனையில் இருக்குமாயின் ஸ்ரியரிங்க் மூலம் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் வாகனம் உங்களின் கட்டுபாட்டினுள் வருவதற்கு ஏற்ற முறையில் தானாகவே உங்கள் வாகனத்தின் நான்கு சில்லுகளினதும் பிரேக்குகள் தனித்தனியாக தேவையான அளவு பிடிக்கப்படும். அத்துடன் தேவைக்கு தகுந்த படி எஞ்சினின் சக்தியும் கட்டுப்படுத்தப்படும். சுருக்கமாக இது... 1-வாகனம் வழுக்கி (skids) செல்லும் போது அதை கட்டுப்ப

வாகனம் ஓடும்போது சாரதி கைதொலைபேசியை பாவித்தல் சட்டவிரோதமானது

வீடியோ: Toronto Police சாரதி வாகனத்தை ஓடும்போது கைதொலைபேசியை பாவித்தல் சட்டவிரோதமானது. அபராதம் : $125, மூன்று வருடங்கள் குற்றச்செயல் பதிவில் இருக்கும், காப்புறுதி நிறுவனத்தினரும் இது பற்றி அறியலாம். விதிவிலக்கு: 1-கைதொலைபேசி Hands Free (புளூதூத், ஹெட்போன்) என்றால் பாவிக்கலாம். 2-911 ஐ அழைப்பதற்கு சாரதி வாகனம் ஓடும்போது கைதொலைபேசியை பாவிக்கலாம் 3-வீதி ஓரமாக (ஹைவே அல்லாத தெருக்கள் மட்டும்) வாகனத்தை நிறுத்திவிட்டு கைதொலைபேசியை பாவிக்கலாம். கைதொலைபேசி பானையால் ஏற்படும் விபத்த

Highway Traffic Act (HTA) என்றால் என்ன? (ONTARIO)

1-இது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து சம்மந்தமான யாப்பு அமைப்பு ஆகும். 2-இதில் ஒன்றாரியோவில் மாகாண ரீதியாக எல்லா வகையான தெருக்களிலும் ஓடப்படும் எல்லா வகையான வாகனங்களின் பாவனையும் உள்ளடக்கப்படுகின்றது: கார், trucks, motorcycle, off-road vehicles, farm equipment, construction equipment, பேருந்து, motor home vehicles, and non-motorized bikes. 3-வாகனங்களை பதிவு செய்தல்/ சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல், போக்குவரத்து குற்றச் செயல்களை வகைப்படுத்துதல், நிர்வாக நடைம

வாகனசாரதியின் தவறு பதினொரு பேரின் உயிரை நேற்று முன்தினம் Ontarioஇல் குடித்தது.

1-முழுமையான நிறுத்தம் செய்யவேண்டிய இடத்தில் (Stop Sign) வாகனத்தை முழுமையாக நிறுத்தம் செய்யவில்லை. 2-மற்றைய வாகனத்திற்கு முன்னுரிமை Right-of-Way கொடுக்கவில்லை. 3-சற்று பெரிய அளவிலான வாகனம் (15பேரை காவிச்செல்லக்கூடிய van) ஓடுவதற்கு கனடாவில் முறையாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று இருக்கவில்லை. விளைவு? பதினொரு பேர் நேற்று முன்தினம் தென்மேற்கு Ontarioஇல் பரிதாபகரமாக மரணம் அடைந்தார்கள். மூவர் படுகாயம் அடைந்துள்ளார்கள். மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள

வீதி பரீட்சை பற்றிய சில உதவி குறிப்புக்கள்

வாகனம் ஓடுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் பெறும் போது வீதி பரீட்சையில் சித்தி பெறுவது பலருக்கு மிகுந்த சிரமமாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விசயமாகவும் காணப்படுகின்றது. பலர் நான்கு, ஐந்து, எட்டு தடவைகளுக்கு மேல் பரீட்சையில் தோற்றியும் சித்தி பெற முடியாது சிரமப்படுகின்றனர். இது சம்மந்தமாக சில உதவி குறிப்புக்களை இங்கு தருகின்றோம். 1-வீதி பரீட்சையில் ஒரு போதும் அதிர்ஸ்டத்தின் அடிப்படையில் அல்லது முறைகேடுகள் செய்து சித்தி பெற நினைக்காதீர்கள். வாகனம் ஓடுவது என்பது உங்கள் அனுபவம்,ஆற்றல், தி

வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்

பதற்றம் அடையாதீர்கள்: 1-காயப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள். 2-விபத்தில் எவராவது காயம் அடைந்தால் அல்லது வாகனத்திற்கு அதிக சேதம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு (மாநகரசபை/மாகாண) அறிவியுங்கள். 3-ஒருவருக்கும் காயம் ஏதும் ஏற்படாவிட்டால், வாகனமும் ஓடக்கூடிய நிலையில் காணப்பட்டால் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்தாது வாகனத்தை அவதானத்துடன் வீதி ஓரமாக நகர்த்துங்கள். 4-விபத்திற்கான காரணம் மதுபோதை/போதைப்பொருள்/குற்றச் செயல் என சந்தேகம் கொண்டால் உடனடியாக காவல்துறைக்கு அறிவியுங்கள். விபரத

வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்

வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் : 1-பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கடவையை ( pedestrians cross ) பாவியுங்கள். 2-பாதசாரிகளுக்கான சிக்னலை ( Pedestrian signals ) பாவியுங்கள். நீங்கள் கடப்பதற்கான சிக்னல் தோன்றுவதற்கு அதில் உள்ள பொத்தானை ( pedestrian push buttons ) அழுத்துங்கள். 3-நீங்கள் வீதியை குறுக்காக கடக்கும் போது மற்றைய ஒழுங்கையின் ஊடாக இடது, வலது புறமாக திரும்புகின்ற வாகனங்கள் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த வாகனத்தின் சாரதிகள் நீங்கள் வ

சந்தியில் இடது புறமாக திரும்புதல் (Making Left Turn)

சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள்: 1-இடது பக்கதிற்கு என தனியாக Light சிக்னல் காணப்பட்டால் நீங்கள் அந்த பிரத்தியேக சிக்னலில் பச்சை நிறம் அல்லது பச்சை அம்புக்குறி தோன்றும் போது மட்டுமே இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். நேராக செல்வதற்கான Light சிக்னலில் பச்சை நிறம் காட்டினால் அதேசமயம் இடது புறத்திற்கான பிரத்தியேக சிக்னலில் சிவப்பு நிறம் காட்டினால், எதிர் புறமாக வாகனங்கள் வராவிட்டாலும் நீங்கள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்டால

சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)

பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வழி சுருக்கமாக: 1-மற்றைய வாகனத்திற்கு மிக அருகாக உங்கள் வாகனத்தை சமாந்தரமாக கொண்டு வந்த பின்னர் உங்கள் வாகனத்தின் முன் சில்லுகளை நேராக்குங்கள். 2-உங்கள் வலப்பக்கமாக பாருங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக பார்க்க வேண்டும்). ரிவர்ஸ் கியருக்கு மாற்றிவிட்டு மெதுவாக உங்கள் வாகனத்தின் முன் சில்லுகள் மற்றைய வாகனத்தின் பின் சில்லுகளுக்கு சமாந்தரமாக வரும் வரை ரிவர்ஸ் செய்யுங்கள். 3-இப்போது steering ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.