Blogs

 

காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன?
ஒரு ஞானியிடம், அவரது சீடன் ஓரு கேள்வியைக் கேட்டான். அதாவது ‘காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்ற கேள்வியை உதிர்த்தான். இதற்குப் பதில் அளித்த ஞானி, ‘ நீ ரோஜா தோட்டத்துக்கு போ. அங்கு உனக்கு பிடித்த உயரமான ரோஜாச் செடி ஒன்றை பிடுங்கி வா. ஆனால் ஒரு நிபந்தனை., எந்தக்காரணத்தை கொண்டும் நீ போன வழியில் திரும்பி வரக்கூடாது’ என்றார். உடனே அந்த சீடன் அங்கிருந்து புறப்பட்டு ரோஜா தோட்டத்துக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி கேட்டார், ‘எங்கே உயரமான ரோஜா செடி?’. அதற்கு சீடன் , ‘குருவே, நான் தோட்டத்தில் கால் வைத்ததும் உயரமான ஒரு ரோஜா செடி என்னை கவர்ந்தது. ஆனால், அதை விட உயரமான ரோஜா செடி கிடைக்கும் என்று கருதி, தொடர்ந்து நடந்தேன். ஆனால் அதன் பின் அங்கிருந்தவை அனைத்தும் குட்டையான ரோஜா செடிகள் தான். போன வழியில் திரும்பி வரக்கூடாது என்று நீங்கள் நிபந்தனை கூறி இருப்பதால், முதலில் பார்த்த உயரமான ரோஜா செடியை பறித்துக்கொண்டு வர முடியாமல், வெறுங்கையுடன் வந்து விட்டேன்’ என்றார். இதனை கேட்ட ஞானி, ‘அதோ அந்த சூரிய காந்தி தோட்டத்துக்கு சென்று, ஒரு நல்ல, அழகான சூரியகாந்தி செடியை பிடுங்கி வா., ஆனால் ஒரு நிபந்தனை., ஒரு செடியை பிடுங்கிய பின், வேறு ஒரு செடியை பிடுங்க கூடாது’ என்றார். சிறிது நேரம் கழித்து, ஒரு சூரிய காந்தி செடியுடன், சீடன் வந்து சேர்ந்தான். அப்போது, ஞானி கேட்டார்,- ‘இதுதான், அந்த தோட்டத்திலேயே அழகான செடியா?’என்று. உடனே அந்த சீடன், ‘இதை விட அழகான செடிகள் எல்லாம் இருந்தன. ஆனால் இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்று கருதினேன். உங்கள் நிபந்தனை படி, ஒரு செடியை பிடுங்கிய பின், வேறொரு செடியை பிடுங்கக்கூடாது அல்லவா? எனவே, முதலில் அழகாக தோன்றிய ஒரு சூரிய காந்தி செடியை பிடுங்கிக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்’ என்றான்.
அப்போது தான் ஞானி சொன்னார்: ‘இது தான் திருமணம். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்கு சென்று வெறுங்கையாக திரும்பினாயே,, அதுதான் காதல். இப்போது புரிகிறதா காதலுக்கும், திருமணத்துக்கும் உள்ள வித்தியாசம் ? சீடன்: ஆம் புரிகிறது., புரிகிறது, என்று தலையாட்டினான். படித்ததில் பிடித்தது

கறுப்பி

கறுப்பி

 

சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்ப

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html

vivasaayi

vivasaayi

 

கொழும்பு காலி கடற்கறையில் குப்பை சேகரிக்கும் அமெரிக்க தூதுவர்

சர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட விழிப்பு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் கொழும்பு, காலி முகத்திடலில் கோல்பேஸ் சுற்றுவட்டம் முதல் பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரையிலான பகுதியில் காணப்பட்ட குப்பைகளை சேகரிப்பதை படங்களில் காணலா http://www.vivasaayi.com/2013/04/blog-post_1071.html

vivasaayi

vivasaayi

 

தனி ஈழம் கோரி தமிழக மாணவர்கள் மே 19ல் பிரமாண்ட பேரணி

தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில் , 1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும். அதற்காக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட அளவில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி சேலம் போஸ் மைதானம் வரை பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைப்பெறும். இதில் சேலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவர்களும் கலந்துக் கொள்ளுவார்கள். தொழிலாளர் பெருமக்களும், மீனவ அமைப்புகளும் பெருமளவு கலந்துக் கொள்ளுவார்கள். நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பில்லை. அதை முன்னிட்டு தமிழகம் முழுக்க நான்கு கட்ட பிரசார பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைப்பெறக் கூடாது என்கிற பிரசாரத்தையும், ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடவும், இலங்கை அகதிகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கவும் போராட்டம் நடைப்பெறும். ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மீனவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மே 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இறுதியாக மே 19ஆம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெறும். இத்தோடு எங்கள் போராட்டம் நின்று விடாது. தொடர் போராட்டமாகவே இருக்கும் என்றார்கள். http://www.vivasaayi.com/2013/04/19_20.html

vivasaayi

vivasaayi

 

பலிக்கடவாக கருணா ?

இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார். ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக்கொண்ட பாலச்சந்திரன் சரண் அடைந்திருக்கவில்லையென தெரிவித்த அப்படை அதிகாரி நிராயுதபாணியாக அகப்பட்டுக்கொண்டதாகவே தெரிவித்தார்.எனினும் பாலச்சந்திரன் படுகொலைக்கான ஆலோசனையினை கருணாவே வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட அவ்வதிகாரி அப்போது பெரும்பாலும் கோத்தா அனைத்திற்கும் கருணாவின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் தவிர்த்து ஏனையவர்கள் வேறு பிரிவு படை அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவித்த குறித்த படை அதிகாரி அவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் பற்றி கூறமுடியாதிருப்பதாகவும் கூறினார். எனினும் சரணடைந்தவர்களுள் பலர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் ஊடாக படையினரால் கூட்டிச்செல்லப்பட்டு தேவையான தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாக இருப்பினும் சரண் அடைந்தவர்களது நிலையினை அறிந்தவர்களுள் கருணாவும் ஒருத்தரென சுட்டிக்காட்டிய அவர் மகிந்த கும்பல் ஓரு வேளை போர்குற்றவாளிகளென அறிவிக்கப்படுமிடத்து அவர்களது பலியாடாக கருணாவே நிச்சயமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_692.html

vivasaayi

vivasaayi

 

இலங்கையில் மீண்டும் போர் மூளும் அமெரிக்கா

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையில் ஏற்படுத்தாமை போன்ற காரணிகளினால் மீளவும் முரண்பாடுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கை மிகவும் கடினமானது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கையானது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த முக்கிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரம் மிகவும் அவசியமானது எனவும், ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையான அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_9.html

vivasaayi

vivasaayi

 

இந்தியாவுக்கு ஆப்பு வைக்க இலங்கை தயார் இந்தியாவும் தமிழர்களை அழித்ததுதான்

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை அரசம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பகமான - சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும் முயற்சியே இது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முன்னாயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், சொத்து இழப்புகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. http://www.vivasaayi.com/2013/04/blog-post_4374.html

vivasaayi

vivasaayi

 

சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்!

சிந்தனை ஆற்றலை அதிகரிக்க பயன்படும் ஒரு அற்புத மென்பொருள்! மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக்கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும்போது முன்னைய தகவல்கள் அழிவடைதல் இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும் வசதியினை Anki எனப்படும் அப்பிளிக்கேஷன் தருகின்றது. இம்மென்பொருளானது Arabic, Chinese, English, French, Japanese, Spanish போன்ற மொழிகளில் அமைந்த ஞாபகமூட்டல், மற்றும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளதுடன் Windows, Mac, Ubuntu போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறும் வெளியிடப்பட்டுள்ளன.

கறுப்பி

கறுப்பி

 

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி... [Monday, 2013-02-11 21:54:06] எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம். step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும். (வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்). அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net/ என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும். step 2. அங்கு, எந்த 'format' இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை 'CLICK' செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும். http://seithy.com/br...&language=tamil

கறுப்பி

கறுப்பி

 

கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி?

கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி? [Monday, 2013-02-04 15:58:28] கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள். Check Disk செய்யும் முறை: 1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும். 2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் 'Check Now' என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும். 3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம். 4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும். உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும். 5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும். 6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது. Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள். http://seithy.com/br...&language=tamil

கறுப்பி

கறுப்பி

 

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.

மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்... நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்... உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்... பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம் தன்கையே தனக்குதவி எனும் இனம் பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி? காலங்காலமாக வாழ்ந்த மண்ணில், எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு, இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம். எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா? இல்லையே.... உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;. இப்போது நாளாந்தம் எம்மண்ணில், துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை, ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும் பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல், துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர, அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி, நாளாந்தச் சாவுகளையும், கைகால் இழப்புகளையும், மனநலம் குன்றுவதையும்.... உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள். அப்படியாயின், எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா? அனைத்துலகமே! போதும்.. உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள் ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும். எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான், எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள். அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை. உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள். மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள். எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம். சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா. ஐயோ..!! நாற்காலி மனிதர்களே! நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும் எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது. எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை. நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கென்றால் தெரியும் அதன் வேதனை. உலகே! ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும் உன் போக்கு மாறும் காலம் வரும். எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும். எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும். வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம். சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும். இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின் கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள் முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும். யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ... வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.
 

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.

கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர். காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய். நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும். மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும். ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது. வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது. என்ன இருக்கிறது? எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம். உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது. அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை. அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர். உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால் உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய். கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது. மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு. புலத்திற்குள் பொருந்திக் கொள். புலன் தெளிவுறு. உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு. கால எழுதியிடம் புதுக் கணக்கை திற. ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு. ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன் பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான். அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது. அழிவுற்றுப் போகாது. பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன். அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை உன்னை இனி நானே பாடுவேன். என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும் கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன். விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி, மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன். புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின் கூர் உனை பொசுக்கும். பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன். அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை உன்னை இனி நானே பாடுவேன்.
 

இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி, கூப்பிடு தொலைவில்த்தானே... எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது. ஆற்ற ஒரு நாதியின்றி, - எம்மினத்தின் அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி, அம்மா!.......உன் கையணைக்கும் தூரத்திலல்லவா... எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது. வாதைகள் பல சுமந்து, கந்தகக் காலனின் குடியிருப்பில், குடி சுருங்கி, கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற, இடிதாங்கி, இடிதாங்கி.... அடிதாங்கும் நிலை கூட... இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன? உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா? இல்லாவிடின் வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா? கட்டாய வலி வந்து, கால் அகட்டிக் கிடக்கையிலே ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை... எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே.... எப்படித் தனிக்க விட்டாய்? ஏதிலியாய் தவிக்கவிட்டாய்? சாவின் விளிம்பினிலே, கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே, ஆவி துடித்தெழுந்து... தாவி அணைக்கும் தாய்மடி நீதானே! வாரியணைத்து எம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ் வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே! தாயே!...... குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய் தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய் அம்மா! இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! பாராமுகம் வேண்டாம். வா!... பக்கத்துணையாய் இரு! வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம். எம் புவியின் பேற்று மருத்துவச்சியாய் நீயே பிள்ளைக் கொடி அறு!
 

நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்

பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்? கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே! வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே! இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா? குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா? உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள் நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள். சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே! சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே! வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும், இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும், கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும், எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே! வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார். நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள் எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர். எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்? எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்? கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா? எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்? ஈழத் தமிழினமே! உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய் மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க! எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும். பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும். விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம் அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா? குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன? பொங்கு தமிழ் குலமே! சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்? முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும் பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்? அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம் நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ? எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே! கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக.
 

நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியத

என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து, தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை, சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம் உலக சக்தியவள் பெருந்தாயை, நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும் மாவீரத் தோழர்களை, பத்திரமாய் தொழுது, எந்தன் தமிழுக்கு நிமிர்வு தந்த தானைத் தலைவன் வழியதைச் சிரமேற்று, உயிர்ப்பின் வலி உரைக்க, எனை வனைந்த என்குருவிற்குத் தலைவணங்கி, தாயின் மணிவயிற்று பசியென்னும் தீயணைக்க சிறங்கை பொருள் கொடுக்கும் செந்தமிழ உறவுகளே! சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இது புதுவரவு. கல்லி எடுக்கவும், களைகள் பிடுங்கவும், நன்னீர் பாய்ச்சி, நற்பயிர் வளர்க்கவும் களத்து மேடு தேடிக் கால்கள் வந்துள்ளன. கார் சூழ்ந்த பொழுதிடையே கவிவிளக்கு ஏற்றியுள்ளோம். ஒளி காட்டும் திசை நல்ல வழிகாட்டும் உணர்ந்திடுக. ஏர் பூட்டி வந்துள்ளோம். விடுதலைத் தேரிழுக்க ஊர்கூட்ட வந்துள்ளோம். கார்காற்றில் தீ மூட்ட கவி நெருப்பேந்தி, இக்களத்து மேட்டிடையே.. கண்ணீர் வைரங்களில் கனல் ஏற்றி வந்துள்ளோம். ஆர் ஆற்றுவார் எங்கள் ஆழ்மனதின் தீப்பிழம்பை? நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியதைக் தழுவிக் குழைந்தாலும், அணையாது அணையாது எரிகிறது என் தாய்மூச்சு. எந்தையும் தாயும் கூடிய எம்மண்ணிலே எத்தர்கள் நுழைந்தது எப்படி? கந்தகம் தினம் தினம் காற்றிலே பூத்து காலனை அழைத்தது எப்படி? வந்தேறு குடியென்று வந்தவன் விரட்டிட வேர் நொந்து போனது எப்படி? அந்தரித்து அந்தரித்து அவலத்தைச் சுமந்து அகிலத்தில் பரந்தது எப்படி? வந்தரை ஏற்று விருந்தோம்பி நின்றதில் வந்தது தந்தது வேதனை. எந்தையர் விரட்டியே எம்நிலம் பிடித்திட திணித்தனர் இனவாதத் தீதினை. சிங்களத்தரசுகள் செந்தமிழ் தீய்த்ததில் கந்தகம் விழுந்தது எம் கைகளில். நின்றாடும் துணிவின்றி நம் வட்டம் சிறுத்ததனால் அந்தரித்துலகினில் தலைவதாய் வாழ்வணை. முடிந்ததா நம்மால்.... வேர் பிடுங்கி எங்களை வேற்றுநிலம் நட்ட பின்பும்.. ஊர் நினைப்புதானே உள்ளுக்குள் எரிகிறது. அன்னை திருமேனி அந்தரிக்க அந்தரிக்க கண்ணை அயரவிட எண்ணங்கள் மறுக்கிறதே... போர் மூசும் பெருங்காற்றில் ஊர்கிழித்து விழுகிறதாம் ஒரு மூச்சில் நாற்பது செல்கள். கார் கிழித்து வான் வெளியில் கரணங்கள் போட்டு, வண்டி பருத்தவரும், வாய் முகப்பு நீண்டவரும் குந்தி எழும்பினாலே... ஆழக் கிணறு வெட்டும் வேலை மிச்சமாம். நச்சரவம் ஒருபுறம், நாசத்திரவம் மறுபுறம்... எத்தனை நாள் தாங்குவர் எம் உறவுகள்? காட்டு வெளிகளிலே காஞ்சோண்டி செடியிடையே, நாயுருவி முத்தமிடும் நாணற்புதரிடையே, பாறிச் சரியுதடா பாசத் தோள்கள். ஈரவயிற்றுள்ளே கோரப்பசி விழிதிறக்க, பித்தச் சுனையிடையே எரிமலைகள் குமுறுதடா. சேறெடுத்த மண்ணிடையே பாய் விரிக்க முடியுமா? தோள் சாயும் இடந்தானே படுக்கையாய் கிடக்கிறது. ஈரவிழிகளெல்லாம் இலக்கேந்திக் கிடக்கின்றன. ஓரவிழி கசிய.... தூரத்து வெளிகளிலே துயர் துடைக்கும் உறவுண்டு எனும் பாரிய நினைவோடு உயிர் வலிக்க நிமிர்கின்றன. ஓரவிழி கசிகிறதா? ஈரக்குலை அசைய உள்ளிழுக்கும் மூச்சில் ஆழத்து அகம் விரித்து அழுகை எழுகிறதா? உறவுக் கொடியெல்லாம் ஓடிவந்து அணைப்போமென்று ஊர் போகும் காற்றிடையே உறுதி மொழி சொல்லிவிட பாவி மனம் கிடந்து பாடாய் படுகிறது. வாருங்கள்..... ஆவி துடிக்கும் இக்கவி கேட்டு தாவி உறவெல்லாம் நாமுள்ளோம், நாமுள்ளோம் என்றுரைத்தால் போதும். எம்மினம்.... போரின் அனலிடையே வேகாது. விதியென்று சாகாது. எண்திக்கு உறவுகளும் வேர் மடிக்கு நீர் பாய்ச்சும் எனும் வீச்சில் மூசியெழும். தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை உடைத்து உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிரும். படலைக்குள் நின்றாடும் யுத்தச் சாத்தானைப் பந்தாடிக் காலிடையே பிழியும். ஊர் போகும் காற்றிடையே..... 'நாமுள்ளோம் அஞ்சற்க.. நாமுள்ளோம் அஞ்சற்க' எனும் உறுதி மொழி சொல்ல... உரத்து கூறுக. நாமுள்ளோம் அஞ்சற்க..... நாமுள்ளோம் அஞ்சற்க.
 

தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய் பதிக்கும் பொறியாய், பாரிய மல

உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன. தொடரும் போரும், கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும், பொருத்தமில்லாச் சமன்பாடுகளும் எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன. எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன. குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒரு இனவாதத்தின் படர்கை எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது. முற்றுப் பெறாத கால நீட்சியில் எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது. வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம் உசுப்ப உசுப்ப உக்கிரமாகிறது விடுதலை மூச்சு. ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு வியாபிக்க விடுதலைச் சுடரில் சுதந்திர வாசனையை எம்வாசல் நோக்கி அள்ளிவருகிறது காற்று. அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயத்தை உணர்ந்தாலே அடங்காச்சினம் அவதாரம் எடுக்கும் வெறுமையும் விரக்தியும் வைரம் பாயப் பாய மரணத்தை மீறி எழும் எம்வாழ்வு. நிமிர்ந்த பரம்பரை நிலை குலைவதில்லையென எழுகைப் பாட்டெழுதும் ஓர்மக் கோல்கள் அடிக்கின்ற காற்றிற்கெல்லாம் அள்ளுண்டு போகாது. துருவப் பனிக்காட்டில் அனல்பற்றி எரிகிறது. உருளும் உலகிருப்பில் ஊர்மூச்சு எழுகிறது. சத்திய வேள்விகள் சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்பதில்லை நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறது மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறது தமிழா உனக்கு என்ன விதி? தணிந்தது போதும். தணல் மூட்டு இனி. கந்தகம் குதறும் கார்காலப் பொழுது இது காரணம் பலகூறி கண்வளர்தல் ஆகாது வீட்டோடு மாப்பிள்ளை என்று கூற்றுவன் ஆனபின்னால் வேதாந்தம் பேசுதல் விக்கினத்தைத் தீர்க்காது. வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோகாதே. வீணே வெளிப் புலத்தில் விலகி நின்று வாடாதே. ஊர் உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும் உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிவோம் வருக. தாயகம் தன்னை நெஞ்சிலே தாங்கினால் சாதரும் நஞ்சிலும் அமுதமே சுரக்கும். விழுதுகள் பலம் எது விடைதரும் காலம். அழுததும், தொழுததும், அலைந்ததும் போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம். உழு களம் நிமிர்கையில் உலகதை ஏற்கும் நிலை தர முனைவதே நிகழ்காலப்பணியது. இயல்பாய் எழுவாய் புயலாய்ச் சுழல்வாய் தமிழா. இதுவே முடிவாய் முயல்வாய் எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க புலரும் பொழுதினில் உளக்கனல் ஏந்து. தடைகளை உடைத்திட உலகினை உலுக்கு. எழும் பெரும் புயலென மிளிர் தமிழ்மகவே! தமிழ் நிலம் விரிகையில் தழுவும் கரமே! வலுமிகக் கொண்ட வடிவம் கொள்க. தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய் பதிக்கும் பொறியாய், பாரிய மலையாய் எதுக்கும் துணிவாய் என்பதாய் எழுக.
 

அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்?

பழம் பெரும் மொழி எனச் செருக்கு 'மட்டும்' கொள்வார் சிலர் பழசு தானே எனப் பழித்துச் செல்வார் இன்னும் சிலர் மொழியின் அழகும், வளமும் உணர்ந்து அழியாமல் காத்திடவே அயராது உழைப்பார் எவர்? பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின் 'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன்? அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்? - மென் மேலும் அழகுபடுத்தி ரசிக்க வேண்டிய அழகன்றோ தமிழ்!
 

எம்மிடம் போனில் (தொலைபேசி) கேட்ககூடாத கேள்விகள்

அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது. வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதியின் கைகளிலேயே தங்கி இருக்கிறது. சாரதி பயிற்சி நெறியை பெற்று கொள்வது தொடர்பாய் எமது நிறுவனத்திற்கு தினமும் ஏராளம் தொலைபேசி அழைப்புக்கள் வரும். அதில் பெருன்பான்மையின "விலை விசாரிப்பதாய்" அமையும். சாரதி பயிற்சி நெறி என்பது சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ எவ்வளவு என்று கேட்டு வாங்கி கூடையில் போடுகிற கொடுக்கல் வாங்கல் போன்றது அல்ல என்று பலருக்கும் தெரிவது இல்லை. சாரதி பயிற்சி நெறி வாகனம் ஓடுபவர்களினதும், பாதசாரிகள், தெருவை பாவிக்கிற அனைவரினதும் உடல், உயிர், வாழ்க்கை, எதிர்காலம் சம்மந்தப்பட்டது. இங்கு போனில் (தொலைபேசி) எம்மிடம் கேட்கக்கூடாத அல்லது தவிர்க்கப்படவேண்டிய சில வினாக்களை தருகிறோம். "கேட்ககூடாததன்" என்பதன் அர்த்தம் என்ன என்றால் தவறான அணுகு முறையை குறிக்கிறது. கேள்வி 01: நான் எவ்வளவு காலத்தில் லைசன்ஸ் எடுக்கலாம்? குறிப்பிட்ட ஒரு மாணவனை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடுவதை மதிப்பீடு செய்யாதவரை ஒருவரது ஆற்றலை போன் ஊடாக எதிர்வு கூற முடியாது. சிலர் உடனடியாக விடயங்களை பிடித்து கற்று கொள்வார்கள், சிலர் அதிகளவு பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னரே வாகனத்தை முறையாக ஓடும் நிலைக்கு முன்னேறுவார்கள். சிலருக்கு வாகனம் ஓட தெரிந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து அதற்கேற்ப வாகனம் ஓடுவதற்கு தெரியாமல் இருக்கும். வீதி பரீட்சையில் உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்று பரீட்சிப்பது இல்லை. பரீட்சை விதி முறைகளுக்கு அமைய போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்றே பரீட்சிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு திறமையான சாரதியாக காணப்பட்டாலும், எத்தனை வருடங்கள் அனுபவம் இருந்தாலும் வீதி பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் வாகனத்தை சரியாக ஓடி காண்பிக்க தெரியாவிட்டால் உங்களால் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொள்ள முடியாது, சோதனையில் தோல்வியே கிடைக்கும். எவ்வளவு காலத்தில் ஒருவர் லைசன்ஸ் எடுக்கலாம் என்பது அவரவர் தனி தன்மைகளுக்கு ஏற்ப வேறுபடும். தொடரும்............. தகவல்: போக்குவரத்து http://CarDriving.CA
 

வயது ஒரு தடை இல்லை

எமது மாணவர் ஒருவர் அண்மையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொண்டார். இதில் விசேசம் என்ன என்றால் அவருக்கு தற்போது வயது எண்பத்து ஆறு 86. முறையான வழிகாட்டல், பயிற்சியுடன், உங்களுக்கு ஆர்வமும் காணப்பட்டால் வாகன அனுமதி பத்திரம் பெறுவதற்கு வயது ஒரு தடையாக அமையாது. வீதி பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் வீடியோவில் அவர் தனது நன்றியை தெரிவிக்கிறார். தகவல்: போக்குவரத்து http://www.cardriving.ca
 

வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய வேண்டுமா?

வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா? இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது. இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை? ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்தம் செய்யப்படும் போது விபத்தின் அல்லது உடனடி நிறுத்தத்தின் தாக்கம் காரணமாக (Impact) வாகனத்தின் உட்பகுதியுடன் உங்கள் உடல் விரைவாக சென்று எதிர்பாராமல் மோதல் அடைவதை இருக்கை பட்டி தடுக்கிறது. உதாரணமாக, ஓடும் வாகனத்தில் திடீரென விரைவாக பிரேக் பிடிக்கப்படும் போது பின் இருக்கையில் உள்ள நீங்கள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி உதறி எறியப்படக்கூடும். இதன்போது உங்கள் தலை, கை, நெஞ்சுப்பகுதி போன்றவை அடிபட்டு காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணிந்தால் அது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் உட்பகுதிகளுடன் மோதுவதை தடுக்கிறது. இவ்வாறே, இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் போது உங்கள் தலை மிக வேகமாக வாகனத்தின் யன்னல் கண்ணாடியுடன் அடிபட்டு மோசமான காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் பகுதிகளுடன் முட்டி மோதுவது தடுக்கப்படுகிறது. அதிகளவு விபத்துக்களில் வாகனத்தின் கதவு திறபடுகிறது. நீங்கள் இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் தாக்கம் காரணமாக தானாக திறபடும் கதவூடாக நீங்கள் தெருவில் தூக்கி எறியப்பட்டு மோசமான காயங்கள் ஏற்படலாம். பல வீதி விபத்துக்களில் பயணிகள் வாகனத்தின் கதவூடாக வீதியில் தூக்கி வீசப்பட்டு உடல் உருண்டு பலத்த காயங்களினால் உடனடியாகவே மரணம் அடைவதை அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது இருக்கை பட்டி வாகனத்தின் கதவு விபத்தின்போது திறபட்டாலும் நீங்கள் வெளியே உதறி எறியப்படாதவாறு உங்கள் உடலை இருக்கிப்பிடித்து உங்களை காப்பாற்றுகிறது. இருக்கை பட்டி அணிவது காவல்துறையை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, ஆனால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதை நினைவில் வையுங்கள். சரியான முறையில் இருக்கை பட்டி அணிவது உங்கள் உயிரை காப்பாற்றும். நீங்கள் எவ்வளவோ திறமைசாலியான சாரதியாக காணப்படலாம். ஆனால், விபத்திலிருந்து திறமைசாலிகளும் 100% தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்களை நம்பி வாகனத்தில் ஏறுகின்ற பயணிகளின் வாழ்க்கை சோம்பேறித்தனம் காரணமாக அல்லது உதாசீனம் காரணமாக இருக்கை பட்டி அணியாமல் விபத்தில் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்காதீர்கள். ஓடும் வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டியை முறையாக அணிந்துள்ளதை உறுதி செய்யுங்கள். கீழுள்ள வீடியோக்களை பாருங்கள். இருக்கை பட்டி அணியும் போதும் இருக்கை பட்டி அணியாதபோதும் விபத்து ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காண்பிக்கின்றன: ஆக்கம்: போக்குவரத்து http://www.CarDriving.CA