Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது உடலின் முக்கிய பாகங்களில் ஒன்றான கிட்னி. அறிந்ததும் அறியாததும்: 20 கேள்விகளும் பதிலும்

"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.

சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான்.

சிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்:

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்னை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.

தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

உணவு முறைகள் என்ன?

எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.

இல்லாவிட்டால்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.

அப்புறம்...

இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.

இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.

கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை (கோப்பு படம்) நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?

முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

சா.இலாகுபாரதி

நம் தோழி, ஜூன் 2011

http://www.seithy.com

0 Comments

Recommended Comments

There are no comments to display.

Guest
Add a comment...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.