சின்னச் சின்ன ஆசை
--------------------------------------
அவளைப் பார்த்துவிட ஆசை...
அதை அவள் பார்த்து விடாது இருக்க ஆசை.
அவள் கன்னத்தைக் கிள்ளிவிட ஆசை..
அதனால் என் இதயம் கிள்ளுப்படாது இருக்க ஆசை..
அவளைப் பின் தொடர்ந்து விட ஆசை
அதனால் பிரளயம் வந்துவிடாது இருக்க ஆசை
அவளை அணைத்து விட ஆசை
அதனால் அவள் அப்பனும் அண்ணனும் என்னைக் கொன்றுவிடாதிருக்க ஆசை
காதல் என்பது என்ன?
---------------------------------------
"மனிதனைக் கடவுளாகவும் மிருகமாகவும் அலைய வைப்பது.......மனதைத் தூண்டுவதால்
மகளிரை தேவதையாகவும் திருட்டுக்கூட்டமாகவும் காட்டி நிற்பது....மனதைத் திருடுவதால்
உலகின் ஒளியாகவும் இருளாகவும் இருப்பது.......இதயத்தை இயக்குவதாலும் இறுக்குவதாலும்
மொத்தத்தில் அது இல்லாமல் நாமில்லை....நாமில்லாமலும் அது இல்லை....இறப்பும் பிறப்பும் போல..."
Important Information
By using this site, you agree to our Terms of Use.