கடைசிப் பக்கத்தில்
முடியாது தொடரும் கதைப்புத்தகம்
வாழ்க்கை...
மற்றவர்கள் சிபாரிசில்
கிடைக்கும்
உயர்வான வேலையை விட
உன் திறமைக்குக்
கிடைக்கும் கூலிவேலை
மேன்மையானது...
அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும்
எப்போதும் அனுசரித்து
வாழ்வது வாழ்க்கையே இல்லை....
தோல்விக்குத் தோள் கொடுங்கள்
வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள்
விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள்
புகழுரையை கேட்காமல் கடந்திடுங்கள்
இதுதான் வாழ்க்கையென
வாழ்ந்திடுங்கள்...
சரவிபி ரோசிசந்திரா