வணக்கம் உறவுகளே,
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
சிவநேசன் சுந்தரம்