-
படுபட்சி நாவல்: விசாரணை
நன்றி நியாயம். நீண்ட காலமாக Ghostwriting என்பதற்கு நல்ல தமிழ் என்னவென்று தேடிக் களைத்துவிட்டேன். இப்போது நீங்கள் அருளிய குதிரையோடுதல் என்பதுதான் Ghostwriting க்கு மிகப்போருத்தமான தமிழ்.
-
படுபட்சி நாவல்: விசாரணை
ரமணன் சந்திரசேகரமூர்த்தியின் முகநூல் இணைப்பு இது. இங்கு அந்த யூரியூப் பேட்டி உள்ளது https://www.facebook.com/share/16q2ocmNgt/
-
படுபட்சி நாவல்: விசாரணை
டியர் Justin, ரமணன் சந்திரசேகரமுர்த்தி உடனான யூரியூப் பேட்டியில் டிலுக்சன் தான் சோபாசக்தியின் தீபனை படித்திருப்பதாகச் சொல்கிறார்😀😁😃. தீபன் நாவலா திரைப்படமா என்பது கூட டிலுக்சனுக்கு தெரியாது. ஓண்ணாம் நம்பர் இலக்கியத் தற்குறி டிலுக்சன் என்பதற்கு இதைவிட வேறு நல்ல ஆதாரம் தரமுடியாது. தீபன் என்று சோபாசக்தி எழுதிய நூல் எதுவுமில்லை. தீபன் திரைப்படம் மட்டுமல்ல. அதன் திரைக்கதையைக்கூட எழுதியது சோபாசக்தி அல்ல. இலக்கியத்தரமான நாவல்கள் சிறுகதைகள் எதையுமே படித்தவர் அல்ல டிலுக்சன். அதுமட்டுமல்ல இன்றுவரையும் ஒரு சிறுகதையையும் எழுதியவரல்ல. அந்த டிலுக்சனா இன்று பலர் சிறப்பான நாவல் என்று போற்றுகிற படுபட்சியை எழுதினார்? நிச்சயமாக இல்லை. இதை முற்றிலும் எழுதிக்கொடுத்தது சோபாசக்தியே. இது எடிற்றிங் அல்ல. Ghostwriting. யாருமே வெற்றிடத்திலிருந்து பயிற்சியின்றி திடீரென்று ஒரு நல்ல நாவலை எழுதமுடியாது. மூன்று வயதில் உமாதேவியாரிடம் ஞானப்பால் குடித்த ஆசாமியா இந்த கணபதிப்பிள்ளை மோகன் டிலுக்சன்? இப்படி Ghostwriting பிரதிகளை தங்கள் பிரதிகளாகக் காட்டியவர்களால் ஒருபோதுமே நல்ல படைப்புக்களை எழுத முடியாது.. எஸ்.பொன்னுத்துரையே டானியலுக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் Ghostwriting செய்து கொடுத்திருக்கிறார். அதை எஸ்.பொ வெளிப்படையாக பின்னாட்களில் சொல்லியிருக்கிறார். ஜீவாவை விட நேர்மையான டானியல் இதனை வ. அ .இராசரத்தினமிடம் தனது பரிசுபெற்ற கதையொன்றை எஸ். பொ எழுதித்தந்தார்(Ghostwriting)என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். பின்னாட்களில் ஆ.சி.கந்தராஜாவின் பாவனை பேசலன்றி தொகுதியிலுள்ள இரண்டு சிறப்பான சிறுகதைகளும் எஸ்.பொன்னுத்துரையால் கந்தராஜாவுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டவை. இந்த Ghostwritten/Ghostwriting கதைகளை விட வேறு நல்ல கதைகளை இவர்களால் எழுத முடியவில்லை. பின்வருவது முகநூலில் நவரட்ணம் கிரிதரன் போட்ட பதிவு. (இந்தக்கதையை உண்மையிலேயே டிலுக்சன் தான் எழுதினாரா என்ற வலுவான கேள்வியையே கிரிதரனும் கேட்டுவருகிறார்)👇 "அடுத்தது அடுத்த நாவலையாவது பிரபல எழுத்தாளர் ஒருவரைக் கொண்டு திருத்தாமல், வலைப்பதிவொன்றில் தொடராக எழுதட்டும், அதன் மூலம் அவரது எழுத்தாற்றலை அறிய முடியும். உண்மையில் எழுதும் ஆற்றல் உள்ளவரா என்பதும் அதன் மூலம் நிரூபிக்கப்பட முடியும். இதுவரையில் அவர் புனைகதைகளை எழுதியிருக்கின்றாரா? நீங்கள் எவராவது வாசித்திருக்கின்றீர்களா?" - ந.கிரிதரன் படுபட்சி டிலுக்சனுக்கு பிறந்தது அல்ல. கள்ளப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மட்டும் கள்ள விதானையான கருப்பு நீலகண்டன் டிலுக்சனே தந்தை என்று போட்டுள்ளார். DNA பரிசோதனை செய்தால் படுபட்சி சோபாசக்திக்கே பிறந்தது என்ற உண்மை உடனே தெரியவரும்.
-
படுபட்சி நாவல்: விசாரணை
டியர் Justin, Autofiction வரைவிலக்கணப்படி நீங்கள் சொல்வது சரி. ஆனால் இந்நாவல் சம்பந்தமாக இரண்டு பாரிய குற்றச்சாட்டுக்கள் உண்டு. 1. இந்நாவலை உண்மையில் எழுதியவர் டிலுக்சன் அல்ல. இதை எழுதிக்கொடுத்தவர் சோபாசக்தி. அதாவது Ghostwriting. 2. நாவல் வெளிவந்தபின் இது உண்மையில் நடந்த கதை எனவும் தான் கைது செய்யப்பட்டேன் எனவும் டிலுக்சன் பேட்டிகளில் அடித்துவிடும் அண்டப்புழுகுகள். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் டிலுக்சனின் தந்தை தியேட்டர் மோகன் (கணபதிப்பிள்ளை மோகன்) பிள்ளையானின் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். உண்மையில் டிலுக்சன் கைது செய்யப்பட வாய்ப்புமில்லை. கைது செய்யப்படவும் இல்லை. நட்சத்திரனின் முகநூல் பதிவு பின்வருவது👇 இப்போது சோபாசக்தியின் எழுத்து மோசடிகள் சம்மந்தமாக ஒரு விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. Elanko DSe, Katsura Bourassa Athanas Jesurasa Suhan Kanagasabai P A Jayakaran Arullingam Shaseevan Ganeshananthan Navaratnam Giritharan முதலிய பலர் இவ்விவாதச் சமரில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இச்சமர் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இது அடுத்த கட்டத்திற்கு போவதற்கு இங்கு விவாதிக்க வேண்டிய சில சில அடிப்படையான விடயங்களை தெளிவு படுத்த வேண்டும். முக்கியமான பிரச்சனை விவாதிகளில் ஒரு புனைவு/புனைவு சாரா எழுத்து உருவாக்க வழிமுறையில் எழுதிய ஆசிரியருக்கப்பால் இருக்கின்ற இரண்டு முக்கியமான உருவாக்க பொறிமுறை பற்றிய தெளிவின்மையே. அந்த வழிமுறைகளாவன 1. Manuscript Editing (எழுத்தாளர் ஒருவர் எழுதிய பிரதியை செம்மைப்படுத்துவது) 2. Ghost Writing (எழுதத் தெரியாத ஒருவருடைய கதையை வாய்மொழியாகக் கேட்டு எழுதிக் கொடுப்பது, மொக்கையாக மிக ஆரம்பகட்ட எழுத்தில் இருப்பதை தேவைக்கேற்ப முற்றிலும் புதிதாகப் படைத்துக் கொடுப்பது, எழுதவே தெரியாத ஒருவருக்கு எழுதத் தெரிந்த ஒருவர் திருட்டுத் தனமாக எழுதிக்கொடுத்து அதனை எழுதத்தெரியாதவரின் படைப்பாக சந்தைப்படுத்துவது - Plagiarism) இப்போது நடக்கின்ற விவாதம் இன்னமும் " எடிற்றிங்" என்கிற குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரையோட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமான Ghostwriting நோக்கி நகரவேயில்லை. இது மிகமுக்கியமானது. பின்வரும் இரண்டு காரணங்களுக்காக 1. சோபாசக்தியின் மோசடி என்பது அவரே மிகக்கெட்டித்தனமாக தான் 4 புத்தகங்களை எடிற் பண்ணிக்கொடுத்ததாக ஒப்புக்கொண்டிருக்கும் போதும் உண்மையில் அவர் செய்தது எடிற்றிங் (Manuscript Editing அல்ல). அவர் செய்திருப்பது Ghostwriting. இது மோசடி. எடிற்றிங் செய்வது மோசடியல்ல. இதில் தேவாவின் மொழிபெயர்ப்பு நூலான குழந்தைப் போராளி எடிற்றிங்குக்குள் வரலாம். மற்ற 3 நூல்களான அகாலம், தனுஜா, படுபட்சி ஆகியவை அப்பட்டமான திருட்டுப் பிரதிகள்.Ghostwriting. 2. தமிழில் இன்னமும் Ghostwriting க்கு முறையான பதம் இல்லை. இதனால் இந்த கருத்தாக்கத்தை முழுமையாக இவ்விதாதத்தில் கலந்து கொள்பவர்கள் துறைபோகக் கற்றுத் தெளியவில்லை. ஆனால் இதனை தமிழில் முதல்முறையாக சோபாசக்தி தொடக்கி வைக்கவில்லை. எஸ் பொன்னுத்துரையே டானியலுக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் Ghostwriting செய்து கொடுத்திருக்கிறார். அதை எஸ்.பொ வெளிப்படையாக பின்னாட்களில் சொல்லியிருக்கிறார். ஜீவாவை விட நேர்மையான டானியல் இதனை வ. அ .இராசரத்தினமிடம் தனது பரிசுபெற்ற கதையொன்றை எஸ்.போ எழுதித்தந்தார்(Ghostwriting)என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இது சம்பந்தமாக நான் பலவருடங்களாக எழுதி வருகிறேன். பின்வருவது சோபாசக்தியின் இச்சா நூலுக்கு நான் 2021 பெய்ரவரியில் அகழில் எழுதிய முன்னுரையில் வரும் பகுதிகள். "சயந்தனின் ‘ஆதிரை’ பூர்வாங்கப்பிரதி முதலில் தமிழினி பதிப்பக அதிபரால் படிக்கப்பட்டு அவர் சொன்ன ஆலோசனைகளின் அடிப்படையில் திருத்தங்களும் மேலதிக அதிகாரங்களும் இணைக்கப்பட்டன. தமிழ்கவியின் ஊழிக்கால நாவலும் பலரது ஆலோசனைகளுக்கேற்ப திருத்தப்பட்டே வந்தது. ஜெயமோகனது விஷ்ணுபுரத்தை ஜெயமோகன் எழுத்தாளர் சுஜாதாவிடம் கொடுத்து எடிற் பண்ணமுடியுமா என்று கேட்டிருந்தார். சுஜாதா அதற்கு “முடியும். அதனை நீங்களேதான் எடிற்பண்ணவேண்டும்” என்று சொல்லியிருந்தாராம். அசேதன முறையில் எழுதப்படும் பல நாவல்கள் சிறப்பாக வராமைக்கு காரணம் அதனை எழுதுபவர்கள் படைப்பாற்றலில் பின்தங்கி இருப்பதுதான். முதல்முறையாக ஒரு நாவல் எழுதுபவர்கள் தமது பிரதியை மற்றவர்களிடம் படிக்ககொடுத்து manuscript editing செய்வது வேறு. அது தேவையானது. ஆனால் ஏற்கெனவே எழுத்தாளர் என்று பெயர்பெற்றவர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு தாமோ வேறொருவரோ Manuscript editing செய்வது வேறு. தமிழில் தொழில்சார் (Professional) Manuscript editing இல்லை. Manuscript Editing என்பதே ஒரு விரிவான துறை. இலக்கணத்தையும் தரிப்புக்களையும் பந்தி பிரிப்புக்களையும் செய்வது ஒன்று. விரிவாக கதை, கதைப்பின்னல், பாத்திரங்கள் என்பவற்றையே மாற்று விரிவாக்கி மெருகூட்டி செய்வது வேறு. இந்த இரண்டாவது முறையில் குறித்த எழுத்தாளரைவிட manuscript editor திறமையாக இருந்து இறுதியாக வருகிற பிரதியே ஒரு ரகசிய Ghost Writer எழுதிய இலக்கிய திருட்ட்டாக வர வாய்ப்பு இருக்கிறது" பின்னிணைப்பாக AI சொல்கிற எடிற்றிங், Ghostwriting வித்தியாசங்களை இணைக்கிறேன். இந்த விவாதம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 📘 Manuscript Editing What it is: Improving an existing manuscript that the author has already written. Focuses on: Grammar, punctuation, and spelling Clarity and flow Structure and organization Tone consistency Strengthening arguments or storytelling Fixing awkward phrasing or redundancies Sometimes includes light rewriting, but the core content is the author’s Levels of editing: 1. Proofreading – Surface-level corrections 2. Copyediting – Style, readability, accuracy 3. Line editing – Sentence-level craft and voice 4. Developmental editing – Big-picture structure and content Who does the heavy lifting: You (the author) wrote the content; the editor improves it. --- ✍️ Ghostwriting What it is: A writer creates the content for you, based on your ideas, notes, interviews, or outlines. Focuses on: Turning concepts or interviews into full manuscripts Building the narrative, style, and structure from the ground up Writing in your voice so it sounds like you Researching, outlining, drafting, and revising the entire work Often includes developmental shaping of the book Who does the heavy lifting: The ghostwriter writes the content; you provide direction and approval.
-
படுபட்சி நாவல்: விசாரணை
கிரிதரன் பதிவு 'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி... எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு: "படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது. .. இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால் அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே....தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல், யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது. ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்...யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான் உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காதுஅலட்டும் அரைகுறை 'அறிவுஜீவி'களுக்கு) சொல்லிவிடுகின்றேன். .. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த, அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும் என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு." கதாசிரியரின் நாவலின் நம்பகத்தன்மையை எல்லாம் சுட்டிக்காட்டும் இளங்கோவுக்கு ஏன் நாவலே கட்டமைக்கப்பட்ட கற்பனை என்ற எண்ணம் தோன்றவில்லை? மிகவும் நியாயமாக உருவாகியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் இக்கேள்வி அவரிடத்தில் எழவில்லை. நூலைச் சரியாக விமர்சனரீதியில் அணுகியிருக்கும் இளங்கோவுக்கு ஏன் இச்சந்தேகம் எழவில்லையென்பது ஆச்சரியமானதுதான். கதாசிரியர் தனக்கு இழைக்கப்பட்டதாகக்குறிப்பிட்ட எந்தவொரு சம்பவம் பற்றியும் நான் ஊடகச் செய்திகள் எவற்றிம் வாசித்ததாக நினைவில்லை. அப்படி வந்திருந்தால் அறியத்தாருங்கள். என் கருத்தை மாற்றிக்கொள்கின்றேன். உண்மையில் இக்கதையே தமிழ் மக்களின் துயரைப் பாவித்து , தமிழகத்து இலக்கிய வியாபாரிகளின் நலன்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட விற்பனைப் பண்டமென்றால் அது மிகவும் பாரதூரமானது. கண்டிக்கப்பட வேண்டியது. தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றில் பொய்யைப் புகுத்துமொரு செயலாகவே அது கருதப்படும். அது உண்மையான துயர்மிகு வரலாற்றின் நேர்மையைக் களங்கப்படுத்துமொரு செயலாகவே அமையும். இளங்கோவின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் எழுப்பியிருக்கும் முக்கிய கேள்விகள் -உண்மையில் இந்நூலில் குறிப்பிட்ட , நூலாசிரியருக்கு இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா? அவர் அவற்றுக்காக ஒருபோதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லையா? அப்படி எடுத்திருந்தால் அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டா? இவற்றுக்கான பதில்கள் தெரியாமல் இந்நூலைச் சரியாக அணுக முடியாது. இனிமேல் இளங்கோவின் நூல் பற்றிய முக்கிய் விமர்சனக் குறிப்புகளை வாசியுங்கள். அவை வருமாறு: 1. இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது. "காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143). நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும். 2. டிலுக்ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்>> இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ, அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை. அது என்னவெனில்.. டிலுக்ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின் கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை ஆட்டோபிக்ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும். அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம் நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம். 3. இது ஒரு ஆட்டோபிக்ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றாய் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம். ஆனால் நாவல் முன்னட்டையில் விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்ஸன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமைகோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம். 4. மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது. Facebook Profileஇல் பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல், Jan 2011- Jan 2014 இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3]. அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில் 2011-2014 வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்? திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது. 5. டிலுக்ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன். ஆனால் இப்போது டிலுக்ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க் நூலில் காலம் மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது. அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது, கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்ஸனிடம் என்ன பதில் இருக்கும்? இளங்கோவின் முகநூற் பதிவை முழுமையாக வாசிக்க - https://www.facebook.com/elanko.dse/posts/pfbid024jMs7sRK7f5Dq9NnASSkQXveZJHt5gEnnLzb3sQKb42z5LD7C7UL6P14w3qzwTxal [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
-
படுபட்சி நாவல்: விசாரணை
டியர் நன்னிச் சோழன் தவறான ஆதாரங்களுடன் தவறான தருக்கங்களுடன் உருட்டியுள்ளீர்கள். 1. என். குணரத்தினம் அமெரிக்க Pazhmany Pl2 ஐ பாகங்களை அசெம்பிள் பண்ணி இலங்கையில் விமானம் உருவாக்கவில்லை. இது முற்றிலும் வேறான Pazmany Pl-2 இன் variant. விமான என்ஜின் மற்றும் Body க்கு பயன்படுத்திய உலோகங்கள்(Material) முற்றிலும் வேறானவை. இலங்கையைப் போலவே வியட்னாம், தாய்லாந்து, இந்தோனேஷியா முதலிய நாடுகள் Pazmany pl 2 variants களை உருவாக்கியுள்ளன. இதனை ஒறிஜினல் Pazmany pl-1 ஐக் கண்டுபிடித்தவரே தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவை அசெம்பிள் பண்ணியதோ கொப்பியடித்ததோ அல்ல என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆதாரம் http://pazmany.com/wp/?cat=15&fbclid=IwT01FWAOY0HZleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR5DY1v1sPp-JQxJkrE7_CvHimCTjDN9pcUUEhat4AlJYbHjzAIEil4L096cHA_aem_la0zF24jjWpSObYNQ2fx3A பின்வருவது AI சொன்ன விபரங்கள். AI இல் நீங்கள் சரியான கேள்விகளைக் கேட்டால் அது விபரங்களை நம்பகரமான மூலங்களுடன் உங்கள் முன் வைக்கும். The Sri Lankan Air Force (SLAF) version of the Pazmany PL-2, built by the Aircraft Engineering Wing in 1979, differs from Ladislao Pazmany's original design mainly in engine choice and local fabrication adaptations. Key Differences The original PL-2 design specifies engines like the Lycoming O-235 (115 hp), while the SLAF variant used a Continental O-200 (100 hp), the same as in the Cessna 150, due to availability. SLAF construction leveraged locally sourced 20- and 22-gauge sheet metal from captured insurgent supplies, emphasizing in-house fabrication of fiberglass cowlings, control cables, spars, and undercarriage components. Construction and UsePazmany's version features simplified metal (2024-T3 aluminum) and fiberglass construction for homebuilders, with a focus on aerobatic stress (+6g limit) and precise aerodynamics refined over 7,000 hours. The SLAF PL-2, test-flown at China Bay in front of President J.R. Jayewardene, prioritized engineering expertise gain over operational use, serving in air shows rather than combat. இதே போலவே பிலிப் விஜேயவர்த்தனவும் அசெம்பிள் பண்ணவும் இல்லை. கொப்பியடிக்கவும் இல்லை. இதோ ஆதாரம் https://groundviews.org/2011/09/28/ray-wijewardene-an-extraordinary-thinker-and-tinkerer/?utm_source=chatgpt.com பிலிப் விஜயவர்த்தனவும் இலங்கை வான்படை Wing commander N. குணரத்தினம் சொந்தமாக உருவாக்கிய விமானங்களை விட 25 ஆண்டுகளுக்குப் பிறகு புலிகள் தான் விமானங்களை அசெம்பிள் பண்ணினார்கள். அவர்களால் கொப்பியடிக்கக் கூட முடியவில்லை. புலிகள் பிற்காலத்தில் அசெம்பிள் பண்ணுவதற்கு முதல் 1987 காலப்பகுதியில் யாழ் கல்லுண்டாய் வெளியில் சொந்தமாய் உருவாக்கிய ஒரு விமானத்தை பறக்கவைக்க முயன்றது யாழ் பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. இதனை பிரபாகரனே மேற்பார்வை செய்த வீடியோ ஒன்றும் வெளிவந்தது. அது பறக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள். The Liberation Tigers of Tamil Eelam (LTTE) used a small fleet of light aircraft, including Czech-built Zlin Z-143s, Robinson R-44 helicopters, microlight gliders, and unmanned aerial vehicles. These aircraft were mainly smuggled in parts and then assembled locally by the LTTE in their controlled territories. They also had rudimentary aircraft repair and construction facilities, indicating efforts to build, maintain, and operate their own air inventory.Specifically, the LTTE acquired aircraft such as Zlin Z-143 trainer/acrobatic planes, which they modified to carry bombs, and microlight aircraft reportedly linked to Australian contacts. The LTTE Air Tigers had a reinforced airstrip where some of these aircraft were assembled and operated from. They reportedly smuggled in several unassembled Czech Zlin Z-43 light aircraft during 2006-2007 and assembled them for combat operations. Two partially burnt aircraft under construction were found by Sri Lankan forces in 2009 at a fortified LTTE construction site, including a light fixed-wing craft and a UAV.Thus, the LTTE's fleet was largely made up of light aircraft that were assembled locally from smuggled parts and maintained in an operational capacity, rather than fully manufactured from scratch
-
படுபட்சி நாவல்: விசாரணை
கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally manufactured aircraft is the result of years of hard work in designing, manufacturing and test flying. Pazmany PL2 aircraft project was started in year 1977 and the aircraft made its maiden test flight on 11th April 1980. This twin seater aircraft has taken part in many a fly-past since entering the Sri Lanka Air Force service. Pazmany PL2 aircraft was built by the Aircraft Engineering Wing of the Sri Lanka Air Force, under the personal supervision of Wing Commander N. Gunarathnam. This was the first instance in the history that an aircraft has been completely built in Sri Lanka. இதற்கு முதல் பரீட்சார்த்தமாக பறந்த விமானங்களை உருவாக்கியவர் பிலிப் றே விஜயவர்த்தன இவரது விமானங்கள் பறந்திருந்தாலும் சிவில்/ இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் குணரத்தினத்தின் விமானம் வான் படையால் பயன்படுத்தப்பட்டதால் இவரே இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். உண்மை வரலாறு இப்படி இருக்க இப்போது சோபாசக்தி முற்றிலும் தன் ஆக்கத்தை எழுதிக்கொடுத்த படுபட்சி என்கிற திருட்டு இலக்கியப்பிரதி மூலம். “ நாவலாசிரியர்” அவதாரம் எடுத்துள்ள டிலுக்சன் மோகன் அடித்து விட்டுள்ள அண்டப்புழுகுகள், ஆகாசப்புழுகுகளை ஒவ்வொன்றாக ஆதாரங்கள், தரவுகள், தருக்கங்களுடன் அம்பலப்படுத்துகிறோம். ரமணன் சந்திரசேகரமூர்த்திக்கு வெடிப்புழுகன் டிலுக்சன் வழங்கிய யூரியுப் பேட்டிதான் அண்மையது. அதில் ரத்மலானையில் தான் Aeronautical Engineering படித்து முடித்தேன் என்று சொல்லியுள்ளார். முன்னதாக Jaffna Monitor க்கு வழங்கிய பேட்டியில் தான் Ratmalana Aeronautical Engineering College ல் படித்ததாகச் சொல்லியுள்ளார். அப்படி ஒரு Engineering கொலீஜே இலங்கையிலில்லை. இலங்கையில் இன்று வரைமும் Aeronautical Engineering ல் BSe பட்டம் பெற இரண்டே இரண்டு இடங்களே உண்டு. 1. Kotelawela Defence University (KDU) 2. மொரட்டுவப் பல்கலைக்கழகம். இந்த இரண்டு இடங்களிலும் இவர் படித்திருக்க வாய்ப்பே இல்லை. இவர் அப்படிச் சொல்லவும் இல்லை. இவரின் LinkedIn பக்கத்தில் Skyline Aviation Sri Lanka வில் படித்ததாகவும் ஒரு Associate Degree பெற்றதாகவும் பதிவு உள்ளது. அங்கு டிப்ளோமா பட்டங்களே உண்டு. BSc இல்லை. ஆனால் தனது இணையத்தில் தனக்கு ஒரு BSc( Aeronautical Engineering) உண்டு என்னு அண்டப்புபுழுகை அவிட்டுவிட்டுள்ளார். இனிமேல் தான் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் வகையான டிலுக்சனின் அண்டப்புழுகு கொமடிகளுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம். சிரிக்க தயாராகிக் படிக்க வாருங்கள். காமெடி 1. ஈழயுத்தம் முடிந்தபின் தான் Ratmalana Aeronautical Engineering College ல்( அப்படி எதுவுமே ஈழத்தில் இல்லை) படித்துக்கொண்டிருக்கும்போது தான் விமானம் செய்யும் யோசனையை சொன்னதால் நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடித்து விசாரித்தாங்களாம். பிறகு இரண்டாம் விசாரணை Air Force வைத்ததாம். தான் இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னபோது இலங்கையின் முதல் விமானத்தை இராவணற் தான் உருவாக்கியதாக Air Force சொன்னதாம். பிறகு மூன்றாம் விசாரணையை Air Force Wing Commander செய்தாராம். அவர் தன் ஆசையைக் கேட்டபின் இலங்கையின் முதல் விமானத்தை புலிகள் செய்து விட்டார்கள் என்று சொன்னாராம். உண்மையிலேயே இலங்கை வான்படை தளபதிகளோ உத்தியோகத்தர்களோ விசாரணை செய்திருந்தால் இந்த காமெடிகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இலங்கையின் முதல் விமானத்தை யார் உருவாக்கியது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அவர்களுடைய மியூசியங்களில் தமிழ் Wing Commander குணரத்தினம் உருவாக்கிய Pazmany PL‑2 light aircraft ஐ மட்டுமல்ல பிலிப் றே விஜயவர்த்தன உருவாக்கிய பல விமானங்களை மட்டுமல்ல அதற்கு முதல் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்ட பறந்த , பறக்க எத்தனித்த பல நூறு விமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஆக இவை டிலுக்சனதும் ஆட்டிலறியை தோளில் வைத்து அடித்ததாக கதை எழுதிய சோபாசக்தியினதும் அண்டப்புழுகுகள். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம். Archive
நெடுமாறன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited