Jump to content

Search the Community

Showing results for tags 'கடற்புலி'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் பற்றித் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள். நானெழுதிய வேவ் ரைடர் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம் "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)….. வணக்கம் தோழர்களே.. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களே பற்றியே... நீங்கள் எல்லோரும் இதற்கு முதலில் என்னால் ஏற்கனவே எழுதப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட தரைப் கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் பற்றி வாசிக்கவில்லையெனில் அவற்றை வாசித்து விடுங்கள்.. கொழுவிகள்: கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எல்லாம் மிகச் சொற்பமானவையே. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களைப் பற்றிய தகவல் எனக்கு பெரும்பாலும் கிடக்கவில்லை. அவற்றின் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளன.. கிடைத்த தகவல் எல்லாம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். ஒருசிலது மொழியாக்கம் செய்யப்பட்டவையாகும். இயன்றளவு முயன்றும் திரட்டியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள். சரி, வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்…….. கூடுதல் தகவல்கள்: https://yarl.com/forum3/topic/258290-புலிகளின்-உள்நாட்டு-உற்பத்தி-சேணேவிகள்artillery-மற்றும்-உந்துகணைகள்-ஆவணம்/ நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டம் அது. புலிகளிடம் ஏராளமான ஆய்த மானுறுத்தம்(manufacture) தொழிற்சாலைகளும் உலகளாவிய நாடுகளிடம் இருந்து ஆய்தங்களை கொள்வனவு செய்து படித்தறிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்த காலம். ஏற்கனவே 80 களின் இறுதியில் புலிகள் பசீலன் ஏன்னும் ஓர் ஆய்தத்தையும் விளைவித்திருந்தனர். எனவே தாயகத்திலையே பெரும்பாலான கருவிகளை விளைவிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கினர். 4ஆம் கட்ட போரில் புலிகளின் பெரும்பாலான கப்பல்கள் ஆய்தங்களை தரையிறக்குவதற்கு முன்னரே கடலில் வைத்து அழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன் தமிழீழக் கடல் எல்லை மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் நடமாடக்கூடிய உலகளாவிய கடற்பரப்பில் வைத்தே ஐநா விதிமுறைகளுக்கு எதிராக இந்திய அமெரிக்க வல்லரசுகளின் உதவியுடன் புலிகளின் பல கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஆய்த வெடிபொருள் பற்றாக்குறையைப் போக்க புலிகள் உள்நாட்டு ஆய்த மானுறுத்தத்தைப் பெருக்கினர். அதற்காக சிங்களம் தமிழரை அழிக்க வீசிய குண்டை சிங்களத்திற்கே வீச முடிவெடுத்தனர் புலிகள். மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் என்னும் தொடர் கட்டுரையிலிருந்து… ' வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர், மிக் வானூர்திகள் நாளும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும். சுமார் இரண்டு கிபீர் வானூர்திகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் 250 கிலோ நிறையுடைய 8 குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் 500 கிலோ நிறையுடைய 4 குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சாத்தியம் இருந்தது . அதன் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தோ அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவதுண்டு. இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய இடங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பிரிவினர் வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துவந்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள். சுமார் 500 கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பல இலக்கம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிஅகணைகளாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்களாகவும் உருவாக்கப்படும். எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது. இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் அணியமாக்கப்பட்டது கைகுண்டுகள்தான். ' கைக்குண்டுகளோடு புலிகள் மேலும் பல வகைவகையான விதம்விதமான ஆய்தங்களையும் விளைவித்திருந்தனர். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். மின்சார வெடியுடை 🔥(Electric Suicide vest)🔥 20 ஆம் நுற்றாண்டில் தமிழரின் புதுப்புனைவு(invention) இந்த உலகிலே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் வெடியுடையினை புதுப்புனைந்தவர்கள் விடுதலைப் புலிகளே.. அவர்கள் இதனை தங்கள் விடுதலைப் போராட்டத்திற்காத்தான் மானுறுத்தியிருந்தார்கள்(manufacture). அவர்களிடம் இருந்துதான் உலகம் இதனைக் கற்றுகொண்டது. ஆனால் உலகின் ஏனைய இயக்கங்கள் இதனை அழிவிக்குப் பயன்படுத்தின! இது புலிகளின் தவறல்ல. அவற்றினை புதுப்புனைந்ததோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வகைகளை விளைவித்து(produce) தங்களின் ஆட்சிக்காலத்தில் முடிசூடா மன்னர்களாய்த் திகழ்ந்தவர்களும் விடுதலைப் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் விளைவித்த இந்த ஆய்ததிற்கு அவர்கள் சூட்டிய பெயர் 'Charger - சாச்சர்' என்பதாகும். இதைக் கொண்ட உடையின் பெயர் 'வெடியுடை ' என்பதாகும். இவற்றை 'ரங்கன் ஜக்கட்' என்றும் அழைப்பர் (ஏன் என்பதற்கான விளக்கம் 'ரங்கன் தடைவெடி' பகுதியில் உண்டு). மேலும், இதை 'கிளைமோர்' என்றும் வடிவத்தின் அடிப்படையில் விளிப்பதுண்டு. இதைப் புதுப் புனைந்தவர் கேணல் குயிலன் எ ராஜு ஆவார். சரி, இனி இவ்வெடியுடையின் பல்வேறு வடிவங்களைக் காண்போம்: முதலில், புலிகளின் வெடியுடையினை உடலில் எங்கெலாம் அணியலாம்? பெண்கள்: மார்பகம் இடை மரும பகுதி ஆண்கள்: நெஞ்சு இடை இவற்றில் இரு வகையுண்டு.. இலக்கினை அழிப்பதற்காக காவிச்செல்லும் சார்ச்சர் கொண்ட வெடியுடை. அடுத்து தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர். இது சதுர வடிவில் இருக்கும். ஆதாரம்: 'என் மகள் ஒரு பயங்கரவாதி(My daughter is a terrorist)' 'தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர்' கரும்புலிகள்/அதிரடிப்படைஞர் எதிரியின் படைத்தாவளத்தை தாக்க செல்லும்போது இதை 2 விதமாய் இயக்கி வெடிக்க வைப்பர். மாந்தனால் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நொடிகளில்(இடத்திற்கு ஏற்றாற்போல் நேரம் வேறுபடும்) வெடிக்குமாறு செய்யப்பட்டவை. அவை இயக்கப்பட்டதும் (இழுத்துவிடப்பட்டதும்), நேரக்கணிப்பி குறித்த நொடிகளுக்கு பின்னோக்கி ஓடும்; அப்போது அதன் எண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். '00' வந்ததும் ஒரு நீல நிற ஒளி ஒன்று இந்த சாச்சர் இழுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும். மறுகணமே வெடித்துவிடும். 'கருவேங்கை உடலில் நீல நிற ஒளியோடு '00' என்று தெரிவதை நோக்குக | படம்: எல்லாளன் திரைபப்டத்திலிருந்து' 'கரும்புலியின் நெஞ்சில் நேரக் கணிப்பியை காணவும்' ஓடி வெடிக்கும் சமநேரத்தில் அதை உடனடியாக வெடிக்க வைப்பதற்காக(இது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரி வந்தால் என்ன செய்ய?) மற்றொரு கட்டுப்படுத்தியும் இருக்கும். அது கையால் இயக்குவது. அண்ணளவாக ஒரு சாண் உயரத்தில் உருளை வடிவினதாக இருக்கும். அது சாச்சரோடு கம்பி மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் ஒரு ஆளி(switch) போன்ற 'அழுத்தி' இருக்கும். அது 'சொட்டுக்கோல்' போன்ற வடிவத்தில் இருக்கும். அதை பெருவிரலால்தான் அழுத்துவார்கள் - நான்கு விரலாள் அந்த உருளையை பற்றியபடி பெருவிரலால் அழுத்தியை அழுத்துவார்கள். அழுத்தினால் நேரம் முடியும் முன்னே சாச்சர் வெடித்துவிடும். இவர்களும் காற்றோடு கலந்துவிடுவர்! 'இதுதான் நான் மேற்கூறிய அழுத்தி' பல்வேறு வகையான வெடியுடைகள்: இந்தப் பெண் கை பிடித்திருக்கும் பகிதியில் தான் இவ்வெடியுடைக்கான விசைவில் உள்ளது. அதை பிடித்து இழுத்தால் டமார்!🌟 கரும்புலிகளின் பல்வேறு வகையான வெடியுடைகள்: 'படிமப்புரவு: Where global solutions are shaped for you' மேற்கண்ட படிமத்திற்கான விளக்கம்: இதிலந்த கறுப்பு, சிவப்பு நிறங்களில்(ஒவ்வொரு வெடியுடையிலும் இரு பக்கவோரங்களிலும் இருப்பவை) தெரியும் 'இழுவி' இனைப் பிடித்து இழுத்தால் போதும். எதிரியின் பக்கத்தினை நோக்கி கட்டப்பட்டிருக்கும் வெடிமருந்து கொண்ட பொதி வெடித்து விடும். எதிரியின் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில்(புறப்பக்கம்) வருபவர்களுகு சிறியளவு பாதிப்பே ஏற்படும். 'படிமப்புரவு: indi samarajiiva - http://flickr.com' இந்த வெடியுடையானது ஒருவரின் இடையினைச் சுற்றிக் கட்டும் வகையில் விளைவிக்கப்பட்டிருந்தது. அதாவது 360 பாகையிலும் சிதறல்களை தெறிக்கவிடக் கூடியது. இது போன்ற வெடியுடைகள் அரிதானகவே பயன்படுத்தப்படுபவை :- 'இந்த நீல நிற பெட்டிதான் வெடிமருந்து கொண்ட பொதி.' பெண்களுக்கான 'pantie வெடியுடை:- தலைச்சீராவில் பொருத்தப்பட்டுள்ள விசைவில்: மாற்றியமைக்கபட்ட தாக்குதல் துமுக்கிகள் (modified assault rifles) 1) மாற்றியமைக்கபட்ட T-56 தாக்குதல் துமுக்கி: 2)மாற்றியமைக்கபட்ட பெயர் தெரியாத தாக்குதல் துமுக்கி: இதைப் பார்ப்பதற்கு Sterling L2A3 போன்று உள்ளது செம்மைப்படுத்தப்பட்ட துமுக்கி (Improvised Rifle) 1) செண்பகம் குறிசூட்டு துமுக்கி (Senpakam sniper rifle) அன்றைய காலக்கட்டங்களில்(2006s) விடுதலை புலிகளிடம் குறிசூட்டு துமுக்கிகள் (sniper rifles) பெருமளவில் இருக்கவில்லை . இதனால் அந்த தேவையை ஈடுசெய்ய AK-47 துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான குறிசூட்டு துமுக்கிகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் AK-47 துமுக்கிகள் விடுதலை புலிகளால் வடிவமைக்கபட்டன. இந்த AK-47 இற்கு விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர். இதற்கான சன்னங்களாக கூட சாதாரண AK-47 இல் பயன்படுத்தப்படும் சன்னங்கள் இல்லாமல் கவசதுளைப்பி (Armour piercing) சன்னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிடங்கு(butt) கூட விடுதலைப்புலிகளால் உள்நாட்டில்தான் விளைவிக்கப்பட்டது - திராகுனோவு குறிசூட்டு துமுக்கியின் தோற்றத்தில். செண்பகம் குறிசூட்டு துமுக்கி: செண்பகத்தின் அண்மையாக்கப்பட்ட(zoom in) நடுப்பகுதி: 'கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் முன்னேறிவரும் சிறீலங்காப் படைகளை நோக்கி செண்பகம் குறிசூட்டு துமுக்கியால் குறிவைக்கும் செண்பகம் குறிசூட்டுப் பிரிவு புலிவீரன் ஒருவன்' உள்நாட்டு பொருண்ம எதிர்ப்பு குறிசூட்டுத் துமுக்கி (Indigenous Anti material sniper rifle) 1) இது வகை 85 சுடுகலனின் சுடுகுழலை தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது கவசத்துளைப்பி சன்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. 2) இதுவும் ஒரு விதமான 12.7 மிமீ சுடுகலனின் சுடுகுழலையே தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ கவசத்துளைப்பி சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்(RL) - 1 (ஆதாரம்) இனந்தெரியா உள்நாட்டு விளைவிப்பு சுடுகலன் (Unidentified indegenously produced gun) 1) இதன் சுடுகுழல் மிகவும் நீட்டாக உள்ளது. அதன் மேல் தொலைநோக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிடங்கில் ஒரு மிதிவண்டி பெடல் உள்ளது. இதன் செயற்பாடு விளக்கமாக சிங்களப் படையினர் கூறுவது, அந்த மிதிவண்டி பெடலை காலால் அமுகினால் சுடும் என்று. இது நம்பும் படியாக இல்லையென்பதாலும் சரியான படிமம் கிடைக்காதபடியாலும் என்னால் சரியான விளக்கத்தை அடையமுடியவில்லை. துமுக்கி எறிகுண்டு (rifle grenade) 1) அருள்-89 துமுக்கி எறிகுண்டு (AruL -89 rifle grenade) வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை: 100g உருவாக்கப்பட்ட ஆண்டு: 1987 விருத்து 1 நெடுக்கம் : 100 மீ அருள் என்ற பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு: 1988 மேம்படுத்தப்பட்ட ஆண்டு: 1989 விருத்து 2 தாக்கமான சூட்டு நெடுக்கம்: 150 மீ பெரும சூட்டு நெடுக்கம்: 300 மீ உண்டாக்கியவர்: கப்டன் அருள் மாஸ்டர் இது T-56, T-81 ஆகிய துமுக்கிகளில் பயன்படுத்தத்தக்கது. இக்குண்டானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இருந்த அருள் என்ற பெயருடன் '89' (மேம்படுத்தப்பட்ட ஆண்டு) என்ற எண்ணும் சேர்க்கப்பட்டு 'அருள் 89' என்று பெயர் சூட்டப்பட்டது. அருள்-89 விதம்-I அருள்-89 விதம்-II அருள்-89 விதம்-III அருள்-89 விதம்-IV கைக்குண்டு (hand grenade) 1) குணா கைக்குண்டு (Kuna hand grenade) இது 1990 களின் இடைப்பகுதியில் பெருமளவில் புலிகளால் பயன்படுத்தப்படது. இது பயன்படுத்தப்பட்ட மீன் டின், பால் டின்னில் செய்யப்பட்டது ஆகும். 2) தமிழன் கைக்குண்டு (thamizan hand grenade) புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) வெடிமருந்து: TNT வெடிமருந்து நிறை: 50–100g நிறம்: பச்சை & நீலம் இது தமிழரைக் கொன்று குவித்த சிங்களத்தை அழிக்க அதே தமிழினத்தின் பெயரால் சூட்டப்பெற்றது ஆகும். மற்றைய கைக்குண்டுகளைப்போல இழுவூசி(clip) பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் யுத்தகளத்தில் சிலசமயம் தானாகவே ஊசிகள் இழுபட்டு குண்டு தவறுதலாக வெடிக்கும் ஆபத்து இருந்தது அதனை தவிர்க்கவே இவ்வாறு விளைவிக்கப்பட்டது. தமிழன் கைக்குண்டில் முன்பகுதியில் இருக்கும் மூடி போன்ற அமைப்பை கைகளால் அழுத்தமாக அடித்துவிட்டு (குத்திவிட்டு) எறிந்தால் போதும் ; வெடித்து சிதறும். Can Charge - கான் சார்ச் தமிழில் கலன் வெடிகுண்டு எனலாம். இது விடுதலைப் புலிகளின் உள்நாட்டு மானுறுத்தம்(manufacture) ஆகும். இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் 'Can Charge' என்பதாகும். இதை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படைஞர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இது குளிர்பான கலனின் தோற்றத்தில் இருக்கும். இதை எப்படி இயக்குவது என்று கீழே படங்களில் காட்டியிருக்கிறேன். 'கொச்சரையர்(கப்டன்) கருவேந்தன் வேடமேற்று நடித்த போராளியொருவர் Hanger-இன் உள்ளே 'கான் சார்ச்'-ஐ இயக்குகிறார் | படம்: எல்லாளன் திரைப்படத்திலிருந்து' இதன் மூடியைத் திறந்து விட்டு அந்த சிவப்பு நிற 'விசை' அழுத்தினால் மஞ்சள் நிற ஒளி எரிவதோடு 'நீக்' என்றொரு ஒலி வரும். அதன் பொருள் வெடிகுண்டு எழிவு(on) ஆகிவிட்டதென்று! பின்னர் இதை தூக்கி எறிந்தால் 10 நொடிகளுக்குள் வெடித்து விடும். (ஈரத்தீ, எல்லாளன் போன்ற படங்களில் கரும்புலிகள் இவற்றைப் பயன்படுதுவதை காணலாம்) உள்நாட்டு முச்சுடுகலன் (indigenous triple gun) இது ஒரு விதமான மூன்று T-56 வகை துமுக்கிகளை(rifle) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சப்பானியர்களின் T-96 25mm முச்சுடுகலன் போன்று உள்ளது. இவை ஒரே நேரத்தில் மூன்று சுடுகுழல்கள் வழியாக சன்னங்களை துப்பும். 1) முன்பக்கம்: பின்பக்கம்: 'இந்த ஆண் கையை பிடித்து அழுத்தும் இடத்தில்தான் இதற்கான விசைவில் உள்ளது. அவ்வாறு அழுத்தினால் இது சன்னத்தை வெளியேற்றும் (சுடும்)' 2. சமர்க்களத்தில் சன்னக்கூடு (mag) பொருத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட போது… உள்நாட்டு 30 மி.மீ சுடுகலன் (indigenous 30 mm gun) இந்த சுடுகலங்களை விடுதலைப்புலிகளின் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுடுகலானாகும்.. இது (அறியப்படா) மிமீ கலீபர் சன்னங்களை எறியங்களாக(projectile) கொண்டது. இதற்கான காவுவண்டிகளையும் புலிகள் உள்நாட்டிலேயே அணியமாக்கியுள்ளனர்.. இவை மூன்றையும் சீராக பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை இடர்களை தொடர்ந்து விளைவித்து வந்தது. அதனால் இவை பின்னர் பயன்பட்டில் இருந்து நீக்கப்பட்டது. புலிக்குட்டி சுடுகலன் விதம்-I (Pulikkutti gun Mk-I) இதுதான் முதலில் மானுறுத்தப்பட்டது(manufacture).. இது கொடுத்த சிக்கல் என்னவெனில் அதிக சூடாகி இயங்குபொறி தடைப்பட்டது. எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி அடுத்த சுடுகலன் உருவாக்கப்பட்டது. பக்கவாட்டுத் தோற்றம்: 'இதுதான் இதற்கான சன்னக்கூட்டினை வைக்கும் பெட்டி' 2) புலிக்குட்டி சுடுகலன் விதம்-II (Pulikkutti gun Mk - II) இதுதான் இரண்டாவதாக் மானுறுத்தப்பட்டது.. இதற்குச் சிக்கல் வந்தது சன்னங்களை தாணிக்கும்(load) உருவத்தில். எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி மூன்றாவது முறையாக ஒரு சுடுகலன் உருவாக்கப்பட்டது. 3) புலிக்குட்டி சுடுகலன் விதம்- III (Pulikkutti gun Mk-III) இதுதான் மூன்றாவதாக மானுறுத்தப்பட்டது. இது மேற்கண்ட இரண்டு சிக்கல்களையும் சரி செய்து வெற்றி கண்டாலும் குறிசூட்டைத் தருவதில் வழுவானது. மேலும் இறுதிப் போரும் மிகவும் நெருங்கிவிட்டதால் இதன் மானுறுத்திகளும் மேம்படுத்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டது... அத்துடன் போரும் முடிந்து த.வி.பு உம் ஆயுத மௌனிப்பினைச் செய்தனர். ஏவரி(torpedo) புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே வடிவமைத்துள்ளனர். உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இவ்வகையான ஏவரிகளை விளைவித்துள்ளனர் என்பது பெரும் வியப்பான விடையமாகும். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் ஏவரிகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மானுறுத்தும் ஏவரிகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவரியை ஏவி அதன் பாதையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, தொலையியக்கி (remote control) மூலம் இயக்கக்கூடிய ஏவரிகளை புலிகள் துல்லியமாக விளைவித்து வைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு நடவடிக்கை ஒன்றின் மூலம் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, ஏவரியைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுனது. 2009 ஆம் ஆண்டு புலிகள் அழியும் வரை உலகிலே இவ்வகையான பாரிய வலிமையான ஏவரிகளை உடைய ஒரே இயக்கம், புலிகள் மட்டுமே . அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான சுடுகல சன்னங்களைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற பாரிய ஆய்தங்களை மிக இலகுவாக மானுறுத்தக் கற்றுக்கொண்டனர் மலைப்பான குறிப்பிடத்தக்க விடையமாகும். இது சிங்கள தேசத்திற்கு வெட்கக்கேடான ஒரு செய்தியாகும். ஏவரி நீளம் : 26' அகலம் : 5.7' செலுத்தி நீளம் : 28' அகலம் : 5.10' செலுத்தி வகை: 533mm தூம்பு(tube) ஏவரி வகை: T-53 / T-56 செலுத்தி(launcher):→ இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும். செலுத்தியின் மேற்பக்கம்: செலுத்தியின் உட்புறம்: செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி: ஏவரிகள் (torpedo):→ புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன. 1) பின்பகுதி: 2) பின்பகுதி: மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead): செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்: 'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை' 'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்' 4) இது என்னவென்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மனித வலிமை(power) மூலம் இயங்கும் ஒரு ஏவரி போல உள்ளது. 1) என்னவென்று தெரியவில்லை... இது கடலில் மிதந்து வெடிக்கும் வகையில் அணியமாக்கப்பட்டுள்ளது(ready). இதன் இயக்கத்தைப் பற்றிய புலனங்கள் ஏதும் இல்லை. கண்ணிவெடி (Mine): இவையெல்லம் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்! கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கப்டன் கொலின்ஸ் அவர்களின் நினைவாக விடுதலைப் புலிகளால் சூட்டப்பட்டது ஆகும். இது 24.71992 இற்கு முன்னரே விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. 2) 3) 4) Limpet கடற் கண்ணிவெடி 5) நங்கூரமிடப்பட்ட தாக்க கடற் கண்ணிவெடி ( moored impact sea mine) கயிறு கட்டியுள்ள பக்கமே நங்கூரம் கட்டுப்பட்டிருக்கும். எதிர்ப்பக்கம் மேற்பரப்பில் மிதக்கும் . 6) மிதக்கும் தாக்க கடற் கண்ணிவெடி ( floating impact sea mine) 7)இது ஒரு வகையான கடற் கண்ணிவெடி இதன் பின்பகுதி: ஆளெதிர்ப்பு கண்ணிவெடி(anti-personal mine) : புலிகளின் இந்த மிதிவெடிகளில் எதிரி நோக்கி வெடிக்க வேண்டிய பகுதியில் எதிரியின் பக்கம் என்றும் வெடிக்க வைப்பவர் பக்கம் 'கொல்பவன் வெல்வான்' என்று மதிவெடியின் மேற்பகுதியிலும் 'தயாரிப்பு தமிழீழம்' என்று கீழ்ப்பகுதியிலும் எழுதப்பட்டிருக்கும். ஆளெதிர்ப்பு வெடிப்பு கண்ணிவெடி/ மிதிவெடி (anti-personal blast mine) 1) ஜொனி 95 (johny 95) புதுப்புனையபட்ட ஆண்டு: ஜூன் 1988 , இந்தியப் படைகளுக்கு எதிராக புதுப்புனைந்தவர்: மேதகு வே.பிரபாகரன் மொத்த நிறை : 250g வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை : 30 g 'தாட்டும் போது இருக்கும் நிலை' 'வெடிக்கும் போது இருக்கும் நிலை' 'முன்பக்கத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' இந்த ஓட்டைக்குள்தான் 2x 1.5V மின்கலங்கள் வைக்கப்படும். ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம்: நீ ஒரு முட்டாள் . ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம், இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். இது அண்ணளவாக 8 cm நீளமும், 7 cm அகலமும் 5.5 - 6 cm உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். செய்முறை: துருவி இணையத்தளத்தில் இருந்து…. 'பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது. அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும். மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். இதைச் சரி செய்ய மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.' 2) ஜொனி 99 (Johny 99) / ரங்கன் 99 (Rangkan 99) புதுப்புனையபட்ட ஆண்டு: 1999 வெடிமருந்து : 150g TNT உயரம்: 9cm அமுக்க நிறை (pressure weight): 6kg கொளுத்து அமைப்பு: விற்சுருள் மூலம் இயக்கப்பட்டு பந்துமூலம் கட்டுப்படுத்தப்படுகிறது (spring operated ball controled). இது பாக்கிஸ்தானிய P4 MK-1 மிதிவெடியைப் படி-எடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கையாள முயற்சிக்கும்போது வெடிக்க ஒரு ஊசல்(pendulum) உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் மானுறுத்தப்படுகிறது(manufactured).. இது பொதுவாக பிரவுன் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அடிப்பக்கமும் மேற்பக்கமும் தெரிகிறது: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்களில் ஒன்று. இப்பாகத்தைக் கழற்ற முயன்றால் இது வெடித்து அந்த மணிகள் உங்களைக் கொன்று விடும். 3) தாட்சாயினி மிதிவெடி (Thaatchaayini APM) இதற்குள் உலோகச்சன்னங்கள் மிகவும் குறைவு. இதன் தாக்கத்தால் எதிரியின் கால்களை சேதமடையும் உயிர்போகும் வாய்ப்பு குறைவு. 4) வான்நிலா மிதிவெடி (Vaannilaa APM) கோராவில் நான் சந்தித்த ஒரு தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர் இதன் பெயர் வான்நிலா என்று கூறினார். ஆனால் சிங்கள அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு இதன் பெயர் கோமது என்று கூறியுள்ளது. எது சரியென நானறியேன், அறியவும் இயலவில்லை. 5) தமிழன் மிதிவெடி (Thamizhan APM) புதுப்புனைந்தவர்: கேணல் சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) இதைத் தவிர வேறு படிமங்கள்(images) என்னிடம் இல்லை! 'படிமப்புரவு: எதிரி இணையம்' 6)டப்பி மிதிவெடி (Dappi APM) இது வெளிநாட்டில் உள்ள வகை-72 மிதிவெடிகளை போன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இதை டப்பி மைன்ஸ் என்றும் அழைப்பர். வகை - 1:- திசைசார் துணுக்க கண்ணிவெடி( directional fragmentation mine) அமுக்கவெடி (claymore) 1) செந்தூரன் 96 (senthuran 96) தாக்கும் ஆரை: 80 பாகை மொத்த நிறை : 10kg வெடிமருந்து : c4 இதுவே புலிகளால் விளைவிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் அமுக்கவெடி. புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட அமுக்கவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான அமுக்கவெடிகளை பலபெயர்களில் புலிகள் விளைவித்துப் பயன்படுத்தினர். 2) பகலவன் (Pakalavan) மொத்த நிறை : 2.5 kg விடுதலைப்புலிகளின் கப்டன் முகிலன் நீண்டதூர விசேட வேவு அணியினர் காவிச் சென்று தாக்குதல் நடத்துவது. இதில் இரண்டுவகையும் உள்ளது. அதாவது, தொலையியக்கி மூலம் இயக்குவது; மின்கம்பி மூலம் இயக்குவது. இதற்கான தொலையியக்கிகள்: 3)இராகவன் (Irakavan) உயரம் : 100cm விட்டம் : 75cm மொத்த நிறை : 54kg தாக்கும் ஆரை: 360 பாகை வெடிமருந்து நிறை : 44kg (TNT) ஒரு வளையத்தின் நிறை : 6kg (மொத்தமாக 7 வளையங்கள் உண்டு) வெடிக்கவைக்கும் முறை : கட்டளைக் கம்பி (command wire)/ தொலையியக்கி (remote control) இது ஆடியிழையால்(Fiber glass) ஆனது ஆகும். இவ்வமுக்கவெடி ஐம்பதாயிரம் சிதறு துண்டுகளைக் கொண்டது. இது வழமையான அமுக்கவெடிகள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு மானுறுத்தப்பட்டது ஆகும். இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று! 4)பெயர் அறியா அமுக்கவெடி (Name unknown claymore) மொத்த நிறை: 25kg 5)தோழநம்பி 2000 (Thozanampi 2000) மொத்த நிறை: 15kg தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விளைவிக்கப்பட்ட அமுக்கவெடி. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும். (100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது . 6) பவான் (ஐயா) - 99 (Pavaan (Aiyaa) - 99 ) மொத்த நிறை: 15.5 kg இது கப்டன் பவான் அ ஐயா என்னும் போராளியின் நினைவாக பெயர் சூட்டப்பெற்ற ஊர்தி தகர்ப்பு வெடிமருந்து ஆகும். 'இடது பக்கம் இருப்பதுவே இதுவாகும்' மின்சார துள்ளல் கண்ணிவெடி(Electronic Tilt Mine) 1)இளவழுதி (Ilavazuthi) மொத்த நிறை : 5kg தமிழீழ மானுறுத்தமான இது மின்சார துள்ளல் கண்ணிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ETM மதிவெடி என அழைக்கப்படுகிறது. 'மேயர்(Major) இளவழுதி' என்பவர் மன்னாரில் வீரச்சாவடைந்த வேவுத்தாக்குதலணி மாவீரன். அவரது நினைவாக உருவாக்கப்பட்டது இதில் இரு விதம் இருந்தது: இளவழுதி 1 (ETM 01) இளவழுதி 2 (ETM 02) இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. இது அம்மா 200 ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது. 'ஜொனி 99 மிதிவெடியின் வெடித்தலை ஆரம்பித்து வைக்கும் detonator' உகளும் துணுக்க கண்ணிவெடி (Bounding fragmentation mines) 1) கீர்த்தன் (Keerththan) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். 1)சலாகை அமுக்கவெடி (Salakai) காவலரண்களை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. காவலரணின் வடிவமைப்பு, எதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றிற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(anti tank mine) 1) அம்மா 200 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ammaa 200 anti-tank mine) மொத்த நிறை: 11 +/- 2.2 வெடிமருந்து : TNT(45%), RDX(55%) உயரம்: 13 cm அம்மா 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவசவூர்தி எதிர்ப்பு மதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மதிவெடி என்பதால் கவசவூர்திகள் மாத்திரம் இன்றி ஊர்தியோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும். இது லெப்.கேணல் அம்மா (அன்பு) என்னும் போராளியின் நினைவாக சூட்டப்பெற்றது ஆகும். அம்மா 200 இன் பக்கவாட்டுத் தோற்றம்: . இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். இதன் மூடியுடனான படிமத்தினை நான் ஒரு வழியாக இணையத்தளத்தில் தேடி கண்டுபிடித்து விட்டேன். கீழே இருக்கும் படிமத்தில் இரண்டாவதுதான் இதன் மூடி போட்டது ஆகும். மூன்றாவது மூடி போடாதது. முதலாவது(பச்சை) உள்ளூர் விளைவிப்புத்தான், ஆனால் என்னவென்று தெரியவில்லை. 2) பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 23 anti tank mine) லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடி இதுவாகும். இதுவே அம்மான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். 3)பொன்னம்மான் 100 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 100 anti tank mine). 4) சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Sangkiliyan anti tank mine). 5) தாரகை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Thaarakai anti tank mine). சிறியவகை ஊர்திகளுக்கான மதிவெடி. 6) சிறுத்தை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(Siruththai anti tank mine) சிறுத்தை என்று அழைக்கப்பட்ட இது கனவகை ஊர்திகளை அழிக்க பயன்படுத்திய மதிவெடி ஆகும். நீள வடிவமானது. 7)பெயர் தெரியவில்லை! 8)செந்தூரன் 2000 (Senthuuran 2000) ஒருமுனை கொண்ட ஊர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி... பார்ப்பதற்கு அம்மானின் வடிவம் கொண்டதாக இருக்கும். 9) இரண்டு அன்பு 2000 கண்ணிவெடிகளை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பது போன்ற வடிவம் உடையதாக உள்ளது. இதில் "கரும்புலி" என்ற பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் வகைப் பெயர் தெரியவில்லை. தடைவெடி ('Bangalore torpedo 'like torpedos) புலிகளால் உள்ளூரில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தடைவெடிகள். இவை காவலரண் பாதுகாப்பு வேலிகளை தகர்த்து படையணி உள்நுழைய வழிசெய்யும். மின்கலங்கள் பொருத்தப்பட்டு ஆளிகளை (switch) முடுக்கிவிட்டு வெடிக்க வைக்கப்படும் வகைகள், தொலைதூர கட்டுப்படுத்திகள் மூலம் மின்கம்பி இணைப்புக்களால் வெடிக்க வைக்கப்படும் வகைகள் என்று களமுனையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். தென்னவன் தடைவெடி (Thennavan torpedo) 2. தென்னவன் சப்பட்டை தடைவெடி (Thennavan sappattai torpedo) 3)குருவி தடைவெடி (Kuruvi torpedo) இதில் அதிக உலோக சன்னங்கள் இருக்கும், சுருள்வடிவ சிறிய கம்பிகளால்(barbed wires) ஆன பாதுகாப்பு வேலிகளை தகர்க்க பயன்படுத்தப்பட்டது. 4) மாயவன் தடைவெடி (Maayavan torpedo) சமாதனத்தின் பின்னர் 2006.08 மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இராணுவம் தமது காவலரண்களை இரும்பு கம்பிகள் L வடிவ இரும்பு சட்டங்கள் மற்றும் சீமெந்து கொண்டு அமைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. அதனை வேவு புலிகள் கண்டறிந்து சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அவற்றை தகர்ப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்படவை இந்த வகையான தடைவெடிகள். 5)சாந்தகுமாரி தடைவெடி (Saanthakumaari torpedo) விடுதலைப்புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாக உருவாக்கப்பட்டது.. இது அதிக உலோகச்சன்னங்களை கொண்டிருக்காது பதிலாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. எரியக்கூடிய பொருட்களால் (காய்ந்த மரங்கள், பலகைகள், கடின இறப்பர் தகடுகள்) ஆனது. காவலரண்கள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 6) ரங்கன் தடைவெடி (Rangkan torpedo) ரங்கன் என்று மிதிவெடிகள் உருவாக்கப்படவில்லை. ரங்கன் தடைவெடிஆரம்பத்தில் இருந்தது பின்பு அது பயன்பாட்டில் இல்லை. 1995ல்கரும்புலி தாக்குதலின் போது இராணுவ முகாமின் பாதுகாப்பு தடையை உடைக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தன்னையே தடைவெடியாக்கி வெடித்து தடையுடைத்த மேஜர் ரங்கன் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன்பின்பு கரும்புலிகளுக்கான தற்காப்பு அங்கிகளுக்கு ரங்கன் ஜக்கட் என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எனக்குப் பெயர் தெரியாத கண்ணிவெடிகள்: இவற்றைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் யாருக்கேனும் தெரிந்தால் தந்துதவி எம் வரலாற்றை எழுத உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்! முன்பகுதி: பின்பகுதி: 2)நீள் உருள்கலன் வடிவத்தில் இருப்பது 3) & 4) 5) 6) காந்தக் குண்டு (magnet bomb) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதற்கு சூடப்பட்ட பெயர் எனக்குத் தெரியாது. செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம் (Improvised Explosive Device) 1) பந்து வடிவ செ.வெ.வ. (ball shaped IED ) இதற்குப் புலிகள் வைத்த பெயர் தெரியவில்லை! 2) உருள்கலன் செ.வெ.வ. (barrel IED) வெடிமருந்து: TNT 3) 4) 5) 6) 7) 8 ) 9)கைப்பெட்டி வெடிபொருள்(suitcase explosive) 10)152மி.மீ தெறோச்சி எறிகணை செ.வெ.வ. (152 mm artillery shell IED) 11) அநுராதபுரத்தில் வானூர்திகளை தகர்க்க கரும்புலிகள் கொண்டு சென்ற செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம். வெடிக்க வைக்கப் பயன்படும் தொழில்நுட்பம்: இது பற்றி மேலும் அறிய: https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf சூழ்ச்சிப் பொறி (booby traps) 1) இது கைப்பற்றப்பட்டபோது தரையில் இருந்து ஒரு ஆளின் நெஞ்சளவு உயரதில் ஒரு மரத்தோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைப்பகுதியில் தான் இழுவூசி உள்ளது. அதில் கொழுவப்பட்டிருந்த மெல்லிய கம்பியானது அருகில் உள்ள ஓர் மரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. (நன்றாக் உத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி நிற இழுவூசி தெரியும்) 2) 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறி (81 mm mortar booby trap) 'பெருந்தொகையான 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறிகள்' 'ஆயத்தநிலையில் உள்ள சூழ்ச்சிப் பொறி' 3) HG-84 கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (HG-84 hand grenade booby trap) 4) குணா குண்டு சூழ்ச்சிப்பொறி (Kunaa hand grenade booby trap) புதர்கள் மற்றும் புல்லுகள் நிறைந்த வெளிப்பிரதேசங்களில் நகரும் இராணுவத்தினரை தடுக்க பயன்படும் பொறிவெடி. எல்லாப்பக்கமும் சிதறும் வகையில் ஈயம், சிறு இரும்பு துண்டுகள், துவிச்சக்கரவண்டிகளின் சங்கரங்களின் சுழல்பொறி உராய்வுநீக்கி உருண்டைகள் (சைக்கிள் போல்ஸ் என்று ஊர் பேச்சுவழக்கில் சொல்லுவோம்) போன்றவற்றையும்TNT வெடிமருந்து, ஆரம்பவெடிப்பி (ரிக்னேட்டர்) ஆகியனவோடு செய்யும் ஒரு பொறிவெடி. உருமறைக்கப்பட்ட நூல்கள் கம்பிகளை தாண்டும் போது இழுவிசை உந்தப்பட்டு வெடிக்கும். 5) கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (unknown hand grenade booby trap) 6) பன்றிக்கை - ஒரு வகையான சூழ்ச்சிப்பொறி. இது கறள் பிடித்த இரும்பால் ஆனது. இது தாக்கினால் சிங்களவன் உடனடியாகச் சாகாவிட்டாலும் பின்னாளில் ஏற்பாக்கி துன்பப்பட்டு இறப்பான். 7)பண்டிச்சக்கை - இது இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களை அவர்களை விரட்டி அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். தமது விளைவிப்பில் உருவாப கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தால் நிரப்பி தகரி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி தகரியாக விளங்கிய T - 72 வகை தகரிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் T- 72 வகை தகரி 10 அடி துரத்திற்கு கூட தூக்கி வீசப்பட்ட்டது குறிப்பிடத் தக்கது. சரி, கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு துணுக்குச்செய்தி ஒன்றினைக் கூறிச்செல்ல விரும்புகிறேன். புலிகள் தங்களின் ஆய்தங்களுக்கு அவற்றிற்குரிய பெயர்களை பயன்படுத்துவதை விட தாங்களாகவே ஒரு குறியீட்டுப் பெயரினைச் சூட்டிப் பயன்படுத்துவது வழக்கம்.. இது அந்த ஆய்தங்களைக் குறிக்கும் சங்கீத சொல்லாக இருந்தது. அவ்வாறு புலிகளால் எந்தெந்த ஆய்தங்களுக்கு என்னென்ன பெயர்கள் வழங்கப்பட்டன என்பதைப் பற்றி இங்கு கூறி கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன்.. (இவை பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையே) வில்லுகள் - படைக்கலங்கள்(Munition) தம்பிமுத்து - தரை-வான் ஏவுகணை-14 (SAM-14) அஞ்சிஞ்சி - 120mm கணையெக்கி (mortar) சாரை - ZPU-1 பூமா - 14.5mm ZPU-2 ஆலை - 14.5mm ZPU-4 அப்பாச்சி - ??? டொங்கான் - கைகுண்டு செலுத்தி (GL) மொங்கான் - பல்குழல் உந்துகணை செலுத்தி (MBRL) பப்பாகிலோ - என்னவென்று தெரியவில்லை கிபிர் - தரைக்கரும்புலியின் ஊர்தி ஆட்டுக்குட்டி - தகரி(Tank) (ஜெயசிக்குறு சண்டை நிகழ்படக் காட்சியொன்றில் கண்டுள்ளேன் ) 97 - M16 ஒலிகன் - Oerlikon 20mm Cannon வாழைப்பொத்திகள் - RPG உந்துகணை XR2 - RPG 29 நாயகன் - M141 BDM 17 - FGM 172 Javelin & FGM 172B சிறப்பு நன்றி: முன்னாள் விடுதலைப் போராட்ட வீரன் உசாத்துணை dossier on ltte weapons - pdf மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…! - தொடர் கட்டுரை மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013 The story of Thambimuththus (SAMs) (The story of Thambimuththus (SAMs)) (https://www.army.lk/news/troops-led-unearth-two-more-ltte-torpedoes-0) (தென்னாசியாவே பார்த்து நடுங்கிய விடுதலை புலிகளின் நீர்மூழ்கி ஏவுகணை!!) https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf இந்திய இராணுவத்தை தடுத்து நிறுத்திய ஜொனி - துருவி Type 53 torpedo - Wikipedia Shershen-class torpedo boat - Wikipedia Torpedo tube - Wikipedia கிளைமோர் - தமிழ் விக்கிப்பீடியா ரங்கன் 99 - தமிழ் விக்கிப்பீடியா அம்மான் 2000 - தமிழ் விக்கிப்பீடியா SLAF Recoveries in the Pudukuduirippu area yarl Tamileela seithikal. No . 40_0- August 1990 படிமப்புரவு * dossier on ltte weapons - pdf ruupabahini * https://www.cartagenasummit.org/fileadmin/APMBC-RC2/regional-conference/Bangkok_WS/Bangkok-ClearingMine-2April2009-SriLanka-SL.pdf கரிகாலன் garikaalan) Banner | National Mine Action Center, Sri Lanka) * Mapio.net (Mapio.net) * http://youtube.com/watch?v=2kKYXvVBG_Y * YouTube (YouTube) * CAT-UXO - Rangan 99 landmine (CAT-UXO - Rangan 99 landmine) * Asiri (Asiri (@AsiriFernandoLK) | Twitter) * Weapons, Ammo, Diesel & other LTTE Warlike Items Found * https://www.apminebanconvention.org/fileadmin/APMBC/clearing-mined-areas/2018-SriLanka-InitialArt7Report.pdf * Ceylon Today (Sri Lanka: Anti-personnel mine found ) * kumaran satha (kumaran satha) WordPress.com: Create a Free Website or Blog * LiveJournal (Простая тамильская баба.) * http://Flickr.com (http://Flickr.com) * Latest Sri Lankan News Updates (http://lankadailynews.com/) * Sri Lanka Army (Sri Lanka Army) * The Hindu Images * CAT-UXO * Sri Lankan Security Forces (Sri Lankan Security Forces) தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் * https://alt.army.lk/slsr/11slsr_2 (Sri Lanka Sinha Regiment) * https://steemit.com/photography/ (https://steemit.com/photography/) Troops Led to Unearth Two more LTTE Torpedoes * stuartddaniel (stuartddaniel) * Experiments with weapons- Part I (http://www.srilankaguardian.org/2008/04/experiments-with-weapons-part-i.html) * IBC Tamil * Jaffna News 15kg bomb found buried in Ukkulan Kulam Vavuniya. - Srilanka News | DSRmedias.com * Vanakkam London Emerging Out Of The Shadows Does recovery of arms from former LTTE cadres indicate revival of Tamil insurgency in Sri Lanka? Landmines, unexploded ordnance a barrier to return SLAF Trikonamadu recovers cache of weapons in Pudukuduirippu Alibaba தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  3. லெப். கேணல் கதிர்வாணன் கடற்புலிகளின் சேரன் ஈரூடக படையணி தளபதி’ லெப். கேணல் கதிர்வாணன். 2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் (தீவக கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர்) அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன். தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான். அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான். இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப். கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான். இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான். அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான். அத்தோடு தென்தமிழீழ விநியோக நடவடிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான். அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான். தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத் தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான். தரைத் தாக்குதலுக்கேற்ற மாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு, எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான். அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான். கடற்புலிகளின் தரைத் தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத் தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத்தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான். சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத் தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன். 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். நினைவுகளுடன் கடற்புலி போராளிகள். https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-kathirvanan/
  4. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் கரும்புலிகள் பற்றிப் பாடப்பட்ட போரிலக்கியப் பாடலொன்றின் வரிகளின் நடுவிலுள்ள கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலையும் சிங்களக் கடற்படையின் கலமொன்று முதன்முதலில் சேதமானதையும் குறித்த வரிகளாகும். கடற்புலிகளால் 1990 ஆம் ஆண்டு தொட்டு சிங்களக் கடற்படையின் பல்வேறு கடற்கலங்கள் கைப்பற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் வந்தன என்பது பலரும் அறிந்த ஒன்று. இத்திரட்டான ஆவணத்தில் தமிழீழ விடுதலைக்காக நடந்த ஈழப்போரின் காலத்தில் தமிழீழக் கடற்பரப்பிலும் சிறிலங்காக் கடற்பரப்பிலும் சிங்களக் கடற்படையுடன் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் மிண்டிய போது பகைவர் தரப்பில் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட மற்றும் அவர்களிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள் பற்றியும் மோதல்களின் நிகழ்வு விரிப்பும் அதனால் இரு அடிபாட்டுக் கன்னைகளின் ஆளணியினரில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன், தமிழர் தரப்புத் தகவல்களாக. இவ்வாவணத்தில் 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாள் வரை, அதாவது “கடற்புறா” அணி “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்” என்ற பெயரோடு தமிழீழக் கடற்படையாகப் பரிணாமம் பெற்றது வரை (கடற்புலிகள் மகளிர் பிரிவு 1992.03.01 அன்று தோற்றம் பெற்றது), கடலில் நடைபெற்ற சமர்கள் எல்லாம் கடற்புறா என்ற பெயரின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன. 'கடற்புலிகள்' என்ற பிடாரச்சொல்லானது 1986 நவம்பரிற்கு முன்னரே பாவனையிலிருந்தது குறிப்பிடத்தக்கது (நவம்பர், குரல் 11, விடுதலைப்புலிகள் இதழ்).. சிறிலங்காவின் வான்படையிடமிருந்த மூன்று அவ்ரோ வழங்கல் வானூர்திகளில் இரண்டு 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் யாழில் வன்வளைப்பிற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்துறைக்கு வான்வழி வழங்கல் செய்யும் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த அடியால் யாழிற்கு வான்வழி வழங்கல் இனிமேல் நடைபெறாது என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவ்வான்வழி வழங்கல் பாதை நிறுத்தப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் வழங்கல் பாதையானது கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடலில் மக்களின் பயன்பாட்டிற்கும் இடருதவிப் பொருட்களைக் கொணர்வதற்குமென யாழ் மாவட்ட அரச அதிபரால் அமர்த்தப்பட்ட கப்பல்கள் எல்லாம் படையினரால் கையகப்படுத்தப்பட்டு அவற்றில் இடருதவிப்பொருட்கள் என்ற பெயரில் படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் யாழிற்கு கொணர்ப்படுவது வாடிக்கையானது (உதயன்: 24/10/1995). ஆகையால் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான லோரன்ஸ் திலகர் அவர்கள், சிறிலங்கா படைத்துறையின் வழங்கல் பாதையை சிறிலங்காவின் நிலப்பரப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் புலிகள் குறிவைப்பார்கள் என்று பறைந்தார் (தமிழ்நெற்: Tigers target sea bridge, 11/07/1997). மேலும், "தமிழ் ஆட்புல கடற்பரப்பில் - வெளிநாட்டிற்குச் சொந்தமான அல்லது மறுவளமானது - சிறிலங்கா படைத்துறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் மிண்டும் எந்தவொரு கடற்கலமும் முறையான படைத்துறை இலக்குகளாக கருதப்படும் என புலிகள் ஏற்கனவே எழுதருகையிட்டுள்ளனர்." என்றார். எனவே யாழிற்கான கடல்வழி வழங்கலை அறவே துண்டிப்பதற்காக 1997 ஜூலை 15 அன்று விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முறையான படைய இலக்குகளாகக் கருதப்படும் என்று அறிவித்ததோடு “மக்களுக்கான உணவு மற்றும் தேவைகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு போர்த் தளவாடங்களை சிறிலங்கா படைத்துறை அனுப்புகிறது” - உதயன்: 17/07/1997 என்றும் குற்றம் சாட்டினர். எவ்வாறெயினும் 1996 ஆம் ஆண்டு முதலே புலிகள் வழங்கல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் சிங்கள அரசால் மூடப்பட்ட ஏ9 வீதி வழியே முன்னர் யாழிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் பின்னர் கடல் வழியாக எடுத்துச் செல்லப்படுமென்று - 12 ஆயிரம் தொன் உணவுப்பொருட்களாம் - சிறிலாங்கா அரசு பரப்புரை செய்தது. இவ்வீதி மூடப்பட்டதற்கான காரணமாக சிங்கள அரசு கூறிய சாட்டுகளில் ஒன்று புலிகளின் யாழ் மீதான (விடுவிப்புப்) படையெடுப்பு தொடங்கியதால் - ஓகஸ்ட் 11ம் திகதி - என்பதாகும். ஆனால் அது தொடங்கிய கையோடு அதையே சாட்டாக வைத்து மூடிவிட்டு படையெடுப்பு கைவிடப்பட்ட பின்னரும் - ஓகஸ்ட் 19ம் திகதி மட்டில் - மூடல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்வழியே உணவுப்பொருட்களும் மக்களின் கடல் போக்குவரவும் என்ற போர்வையின் கீழ் சில பொதுமக்களோடு கப்பல்களில் சிங்களப் படைகளுக்கான படைக்கலன்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் படையினரே திருமலையிலிருந்து யாழிற்கும் யாழிலிருந்து திருமலைக்குமென மெய்யில் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று பொதுமக்கள் வழங்கிய நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர் (உதயன்: 21/02/2007) என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 1996 அம் ஆண்டு முதல் உண்மைக்குப் புறம்பான போர்வையின் கீழ் பயணித்த போது கடற்புலிகளால் குறிவைக்கப்பட்ட மற்றும் அதனால் அழிபட்ட சில கப்பல்களையும் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டவற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன். ஆவணத்தை வாசகர் வாசிக்கத் தொடங்கு முன்னர் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஈழப்போர்க் காலத்தில் பாதுகாப்புச் சிக்கலாலும் தமது ஆளணி எண்ணிக்கையினை பகைவர் எடைபோடக்கூடும் என்பதாலும் தவிபு எந்தவொரு சமரிலும் தம் தரப்பில் காயப்பட்டோரின் எண்ணிக்கையினை அறிவித்ததில்லை. ஆகையால் கடற்சமர்களிலும் கடற்புலிகள் தரப்பில் காயப்பட்ட போராளிகளின் விரிப்பானது அறியப்பெறவில்லை. இதே போன்று கடற்சமர்களில் கடற்புலிகளின் படகுகள் (வழங்கல் வண்டிகளாயினும் சரி, சண்டைவண்டிகளாயினும் சரி) ஏதேனும் மூழ்கடிக்கப்பட்டால் அது தொடர்பான தமிழர் தரப்பின் தகவல்கள் எங்கேனும் பெறக்கூடியவாறு உள்ளது. அவ்வாறு 1995 ஆம் ஆண்டின் இறுதிவரை மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் படகுகள் பற்றிய தகவல் முற்றாக எடுத்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிந்தைய காலத்தியவையில் சிலதே கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் தமிழரின் கட்டளையாளர்களோ அல்லது முக்கியமானவர்களோ வீரச்சாவடைந்திருந்தால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வீரச்சாவுகள் நிகழாமல் மூழ்கடிக்கப்பட்ட எந்தவிதமான படகுகள் பற்றிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. சிறு குறிப்புக்கூட இல்லை. கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்பட்ட கடற்சமர்களின் போது கடற்புலிகளின் வண்டிகள் (கடற்புலிகளின் படகுகள் வண்டிகள் என்றே அழைக்கப்படும்) ஏதேனும் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல் ‘உயிராயுதம்’ நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது; அதாவது கடற்புலிகளே தம் இழப்பினை அறிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறான கடற்சமர்களின் போதுகூட சேதப்பட்ட படகுகளின் விரிப்பு அங்குகூட அறிவிக்கப்பட்டதில்லை. தமிழர் தரப்பில் சேதப்பட்ட அ மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கையை சிங்களப் படைத்தரப்புச் செய்திகள் யாவும் நம்பவியலாத அளவிற்கு அள்ளுகொள்ளையாக ஏற்றிக் காட்டியுள்ளன, குறிப்பாக 2006ம் ஆண்டில் பல தடவைகள்; 14 படகுகளை தாம் ஒரே கடற்சமரில் மூழ்கடித்ததாக சிறிலங்கா தேசிய ஊடகமொன்று 10/11/2006 (உதயன் வழியாக) அன்று செய்திவெளியிட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதுபோன்ற சிங்களப் படைத்துறையின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவலைப் பற்றி பரவலறியான சிங்களச் சார்புக் கொழும்புப் படையப் பகுப்பாய்வாளர் திரு. இக்பால் அத்தாஸ் அவர்கள் பம்பலாகப் பின்வருமாறு கூறியிருந்தார். "கடந்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் அதிகமான பகை இழப்புகளை வெளியிட்டதாக அறியப்படுகிறது. இந்தப் புள்ளி விரிப்புகளைச் சேர்த்தால், பிரிவினைவாதப் போரின் முழுக் காலத்திலுமானதை, அது புலிகளின் ஆளணி வலுவை விட அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியையும் கொண்டிருக்கும் என்ற கருத்துக்குறிப்புகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தது." - சன்டே ரைம்ஸ், மார்ச் 30, 1997 (Navy's moment of glory in Mullaitivu seas) ஆகவே சிங்களக் கடற்படைக்கு இழப்புக்கள் ஏற்பட்ட கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் வண்டிகள் பற்றிய தகவலை - என்னால் உறுதிப்படுத்தப்பட்டவை - மட்டுமே இவ்வாவணத்தில் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் கிடக்குமாயின் இவ்வாவணத்தில் இற்றைப்படுத்துகிறேன் (update). இல்லையேல் அதை தனியான ஒரு ஆவணமாக வெளியிட முயற்சிக்கிறேன். ******
  5. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை (warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்…/\… தோழர்களே! கடந்த 15 நாட்களாய் வலைத்தளங்கள் முழுவதும் துளாவியாய்ந்து ஒருவழியாய் இந்த ஆய்வு விடையினை முடித்து விட்டேன்.. வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலம் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..இதில் நாம் ஈழத்தீவில் வாழும் தமிழர்களுக்கென்று தனிநாடு (தமிழீழம்) கேட்டுப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் (தமிழீழக் கடற்படை என்று அவர்களால் குறிக்கப்பட்டது) போரில் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.. கடற்புலிகளின் மொத்த எண்ணிக்கை: 500 - 1000 2003/10 ஆம் அண்டு வரை வீரச்சாவடைந்தோர் - 1066 பேர் இவர்களால் கடற்சமர்களின் போது ஆடப் பயன்படுத்தப்பட்ட முக்கிய கடற்கலங்கள்: வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகு - 25 குமுதன் வகுப்புப் படகு - 2 வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டைப் படகு - 4 (இங்கிலாந்தில் கட்டப்பட்டது) குருவி, சுப்பர் சொனிக் வகுப்புச் சண்டைப் படகு - 5-10/ஒவ்வொன்றும் திரிக்கா, சகடை வகுப்பு வழங்கல் படகு - 3-5 வெள்ளை, மிராஜ் வகுப்பு வழங்கல் படகு - 5-10/ஒவ்வொன்றும் வின்னர், சூடை வகுப்புச் சண்டைப் படகு - 5-10/ஒவ்வொன்றும் பயனுடைமை தரையிறக்கக் கலம் (சிறியது) - 1 (ஆகக் குறைந்தது) பாலக் கலம் (பெரியது) - 8 (ஆகக் குறைந்தது) சேணேவிகளை (Artillery) கொண்டுவந்து இறக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கலம் - 1 (ஆகக் குறைந்தது) தாங்கி வகைக் கலம் - 2-4 உப்பயானம் (Inflatable boat) - 10+ கட்டைப்படகு (Dinghy) - 50+ தொலையியக்கி கட்டுப்படுத்தி படகு (Remote control boat) - 1 (படம் கிடைக்கப்பெறவில்லை) K-71 வகுப்பு படகு - 1 அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகை சண்டைப் படகு - 1 தாரைச்-சறுக்கு (Jetski) - 2 Water Scooter - 2 புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோராக்களைப் (mk-III) போல அதிவேகமாக கடலில் ஓடின... ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன.. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC , Garmin & Ray Marine ஆகிய கதுவீகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களைச் சூட்டியிருந்தனர்.. அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன.. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, தாழ் தோற்றுவக் கலம்(LPV) வகை: ஊடுருவி- 200G-01 அரை நீர்மூழ்கி வகை: சதீஸ், கோகுலன்-2, கோகுலன்-24, கோகுலன்-45 தாங்கி வகை: பழனி மிராஜ் வகுப்புப் படகு: ராகினி, சித்திரா, இலங்கேஸ்வரன், ###ரசி, செங்கொடி வெள்ளை வகுப்புப் படகு கொலின்ஸ், வினோத், தீபன், டீசல், மகேஸ்வரி குருவி வகுப்புப் படகு (சண்டைப்படகு): ஜீவன் 006, 004 நளன், ஜெயந்தன் சுப்பர் சொனி வகுப்புப் படகு: ஜெயந்தன், சிதம்பரம் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு: (இங்கிலாந்தில் கட்டப்பட்டது) நீ-004, பாமா சூடை வகுப்புப் படகு: சுதர்சன், மது, கருவிழி, ரகுவப்பா, மயூரன், தேன்மொழி, கதிரொளி சகடை வகுப்புப் படகு: செங்கண்ணன், நெடுமாறன் வின்னர் வகுப்புப் படகு: அன்புமாறன், ஓவியா வகுப்புப் பெயர் அறியா கலத்தின் பெயர் : பரணி இந்தப் பாடல் கடற்புலிகள் படகு தள்ளும் போது பாடும் 'ஏலேலோ' மாதிரியான ஓர் பாடல்.. இப்பாடல் அவர்களின் ஓர் திரைப்படத்தில்(கடலோரக் காற்று) இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதை திரைப்படத்திற்காகப் பாடினார்களா இல்லை உண்மையிலே பாடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் கொடுக்கிறேன்.. இது உறுதிப்படுத்தப்படாத செய்தி! (கவிப்படகு வழிமறிக்க டோரா சுக்குநூறு….) கடற்புலி டோரா கரும்புலி வெடிக்கும் ..... (கவிப்) கடற்புலி மோத கரும்புலி வெடிக்கும் .... (கவிப்) கடற்புலி மோத இந்தா ஒண்டு, இந்தா ரண்டு, இந்தா மூண்டு.... ஏஏஏ… மேலும் வாசிக்க: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை புலிகள் இதனைச் சோதனைப் பதிப்பாக உருவாக்கியிருக்கிறார்கள் கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக 2)சரக்குக் காவிகளாக கலவர் = தேவைக்கேற்ப இங்கே மூன்று கடற்கலங்கள் நிற்பதைக் கவனிக்கவும். — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை மேலே நீங்கள் கண்ட கடற்கலங்களின் சிறிய வகை போல உள்ளது இக்கடற்கலம். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = பச்சை மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை எதற்காக பாவிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு வகைக் (dinghi class craft) கலம் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக, காவிகளாக, இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 50+ நீளம் = ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு அளவிலிருந்தன அகலம் = ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு அளவிலிருந்தன உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP / சில வேளைகளில் 1x40 HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts தாக்குதல் கலங்களாக…. ஆய்தம் = 1x ZPU -1/ 1x 7.62 GPMG கலவர் = 3/4 தொலைத்தொடர்பு = VHF 1) மேற்கண்ட கலத்தினில் இருப்பவர் கடற்புலி அல்ல.. இவர் சிறீலங்காக் கடற்படையின் கலவர். 2) 'கலத்தினில் கடற்புலிகள் ' 3) &4) 'கலங்களில் கடற்புலிகள் ' 5) 'மேலே தெரியும் ஆறு கலங்களும் சண்டைக் கலங்களே.. ஆறிலும் சுடுகலன் பூட்டுவதற்கான தலா ஒரு தண்டு இருந்தது. இவை சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவை ஆகும்.' 'இதில் சுடுகலன் பூட்டுவதற்கான இரண்டு தண்டுகள் இருந்தன. இது சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.' காவிகளாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் 1)ஆட்காவி 2)சரக்குகாவி 2) 'கடற்புலிகளின் நாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறீலங்கா தரைப்படையால் கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகள்' — மிராஜ் வகுப்புக் கலம் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. ஒரே சமயத்தில் நாற்பது பேரை அவர்களுக்கான படைக்கலன்களுடன் ஏற்றவல்லது. மொத்தம் 4000 கிலோகிராம் வரை இதில் பொருட்கள் ஏற்றலாம். நீளம் = அறியில்லை. ஏறக்குறைய வேவ் ரைடரின் நீளமே. அகலம்= அறியில்லை உயரம் = ~5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 30-35 kts ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் 1) 2) 3) 4) கலப்பெயர்: இலங்கேஸ்வரன் 'ஓயாத அலைகள் மூன்றின் போது' வகுப்பு II மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. ஆனால் இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. எனவே, இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட படகாகும். இதே போல இருந்த மற்றொரு படகு இடியனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு உள்ளிணைப்பு மின்னோடிகள்(IBM) இருந்தது அறியப்பட்டுள்ளது. கலப்பெயர்: ###ரசி வகுப்பு III பார்ப்பதற்கு மிராஜ் வகையைச் சேர்ந்ததாக தோன்றினாலும் இதன் கடையால் தோற்றத்தால் அதனினின்று வேறுபடுகிறது. மிராஜைவிட பெரிதாக நல்ல உயரமாக உள்ளது. கடையாலில் இரு சுடுகலன்கள் பூட்டுவதற்கேற்ப இரு தண்டுகள் உள்ளன. கடையால் பக்கமாக மிராஜின் கடையாலைக் காட்டிலும் நீளம் குறைவாக மிகவும் கட்டையாக உள்ளது. இதன் மேற்பரப்பில் கோபுரம் போன்று ஏதோ பொருத்தப்பட்டுள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. வட்டு வரைக்குமான உயரம்: 5.6' - 5.8 மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது 'மேலே உள்ள கலத்தின் மேல் உள்ள கோபுரம் போன்றதுதான் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது' 'மேற்கண்ட கலத்தின் உட்புறத்தோற்றம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை அதிவேக தாக்குதல் கலங்களாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு (கறுப்பு& மஞ்சள்) ஆய்தம் = 14.5 mm ZPU-1, 1x 7.62mm GPMG கலவர் = 6 1) இக்கலத்தின் கலப்பெயர் பரணி ஆகும் 'அணியம், பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால்' 2) — வின்னர் வகுப்புப் படகு (Winner class boat) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவை நான்காம் ஈழப்போரில் தவிபுவினரால் கட்டப்பட்டன. போராளிகளின் இழப்பைக் கடலில் சந்திப்பதைக் குறைப்பதற்கும், வடுப்படத்தக்கத் தன்மையை குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட படகு ஆகும். நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி= 2 x 200 நிறம் = உருமறைப்பு கலவர் = 07 வேகம் = 30–35kts தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் உயரம் = ~3.4' ஆய்தம் = 01 x M2 Browning/ ZU-23 (முன்); 01 x 12.7mm (பின் ); 01 x RPG ; 01 x PK(பின்) 1) 2) 3) இக்கலத்தின் பெயர்: அன்புமாறன் ''அன்புமாறன்' கலத்தின் அடிப்பகுதி' 4) இக்கலத்தின் பெயர்: ஓவியா 'கலத்தின் கடையால்' 'கலத்தில் பின்னிருந்து முன்னோக்கிய தோற்றம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். 1) 2) — குமுதன் வகுப்புக் கலம் (Kumuthan Class craft) இது ஒரு விதமான வழங்கல் படகாகும். இதன் படம் எதுவென்று எனக்குத் தெரியவில்லை. — சூடை வகுப்புக் கலம் (Sudai Class craft) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவை புலிகளிடம் 5-10 ஆவது இருந்திருக்கலாம் என்று கணிக்கிறேன். இவற்றில் ஆகக்குறைந்தது ஒரு படகு இடியனாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. நீளம் = 35.8' அகலம் = 8.9' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு கலவர் = 6-8 வேகம் = 30-35 kts எடை = 10-kilo tonne கதுவீ =வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = ZPU-1 / 20mm ஒலிகன் (முன்), 1x GPMG(பின்), 1x12.7mm(பின்), 1xRPG 1) கலப்பெயர்: சுதர்சன் 2) 3)கலப்பெயர்: அறியில்லை 4) 5) கலப்பெயர்: மது 'கலத்தின் தோற்றம்' 6) கலப்பெயர்: ???? 'கலத்தின் கடையால்' 7) கலப்பெயர்: கருவிழி இவற்றின் ஒருசிலவற்றின் மீகாமன் இருப்பிடத்திற்கு கூடும் போடப்பட்டிருந்தது. கீழுள்ள இரு படிமங்களும் ஒரே படகினையே காட்டுகின்றன. 8 ) & 9) கலப்பெயர்கள்: அறியில்லை — சகடை வகுப்புக் கலம் (Sahadai Class craft) இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். ஆய்தம் = 1x pk (பின்), 1x 12.7/20mm(முன்) கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP/ 4 x (~100) HP 1) கலப்பெயர்: செங்கண்ணன் 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' உருமறைப்பு நிறம் பூசப்படும் முன்னர் எடுக்கப்பட்ட படம்: 2) மற்றொரு கலத்தின் பெயர் நெடுமாறன் என்பதாகும். வேவ் ரைடர் மற்றும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள்: — வோட்டர் ஜெட் சுற்றுக்காவல் படகுகள் (Water Jet patrol boat) இவை சிறீலங்காக் கடற்படையிடம் இருந்து விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். நீளம் = 13.5m அகலம் = 3m உயரம் = 1m வேகம் = 40 kts நிறம் = உருமறைப்பு தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் =1x 12.7mm(பின்), 1x 12.7/20mm(முன்) கலவர் = 8–12 கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200 HP 1)இங்கே நீங்கள் கீழே பார்க்கும் கலத்தின் பெயர் : {ச _(இது ஒரு மெய்யெழுத்து) _ _ } ஆக மொத்தம் நான்கு எழுத்துக்கள் உள்ளன. 2) கலத்தின் பெயர் நீ-004/ பாமா 3) இக்கலத்தின் பெயர் தெரியவில்லை 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' 4) இதன் முன்புறத்தில் முதன்மைச் சுடுகலம் தவிர இருபக்கவாட்டிற்கும் இரு இயந்திரச் சுடுகலன்கள்(7.62 மி.மீ) பொருத்தப்பட்டிருந்தன. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது பயனுடைமை தரையிறக்கக் கலங்கள் (LCU) ஆகும். இவ்வகைக் கலங்கள் சரக்குக்காவிக் கலங்கள் ஆகும். இக்கலங்கள் பெரிய கப்பல்களில் இருந்து ஊர்திகள் உள்ளிட்ட சரக்குகளைக் கரைக்குக் கொண்டுவரப் பயன்பட்டன நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு, பச்சை வேகம் = ??? தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = சிறியளவிலான ஆய்தங்கள் — குருவி வகுப்புக் கலம் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் ஆட்காவி அ சுற்றுக்காவல் கலங்களாகும். நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 25-30 kts கலவர் = சுற்றுக்காவல் - 3/4 ஆட்காவி - பணியைப் பொறுத்து ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk 1) 2) 3)&4) 5)இது இரட்டை வெளியிணைப்புப் பொறி கொண்ட படகாகும் 6) இப்படகிற்கு மீகாமன் இருக்குமிடத்திற்கு சாளரம் போல ஆடி(glass) பூட்டப்பட்டுள்ளது. — திரிக்கா வகுப்புப் படகு (Thirikka class craft): நீளம் = ??? அகலம்= ??? வெளியிணைப்பு மின்னோடி = 4 x 150 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 3 தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 32 kts ஆய்தம் = .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் இதுவும் கடற்புலிகளின் ஒருவகையான படையேற்பாட்டுக் கலம்தான். இதால் 15-20 பேர் வரை அவர்களுக்கான படையப்பொருட்களுடன் ஏற்றிச்செல்ல முடியும். 1) 'வலப்பக்கத்தில் உள்ள கடற்கலம் தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வகையைச் சேர்ந்தது ' 2) 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 5-7 ஆய்தம் = 1x.50cal (முன்) & 1xRPG(தனியாள்) வெளியிணைப்பு மின்னோடி = 2x150 HP 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 3 ஆய்தம் = 1x.50cal வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP 1) 'கடையால் பார்வை' — சுப்பர் சொனிக் வகுப்புப் படகுகள் (Super Sonic class boats) இவை புலிகளின் தாக்குதல் கலங்களாகவும் சுற்றுக்காவல் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்ட படகுகளாகும். இவற்றில் புலிகளிடம் இரு விதம் இருந்தது. நீளம்: 23 அடி(ஒரு சில படகுகளில் கதுவீ(RADAR) இருந்தது) ஆய்தம்: .50 mm (முன்) கலவர்: 3 வேகம்: 30–35kts வெளியிணைப்பு மின்னோடி: 1 x 200 HP/ 2 x 200 HP தொலைத்தொடர்பு = VHF நிறம் = உருமறைப்பு, பச்சை, நீலம், கறுப்பு இப்படகின் வரலாறு மிகவும் சுவையானது.. தன்துரையை அழிக்க தானே துணைபோன பெருமை இப்படகினைச் சேரும். அதாவது ஈழக் கடற்போரியல் வரலாற்றில் கடற்புலிகள்தான் முதற் தடவையாக 16 அடி நீளக் கலன்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். பின்னர், அதனை கைப்பற்றி கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது அதன் வலுவைப் பயன்படுத்தி புலிகளுடனான கடற்போரில் பெரும் திருப்பங்களை விளைவித்தது எனலாம்… ஆனால் இன்று சிங்கள அரசாங்கமானதோ அதனைத் தானே முதன்முதலில் புதுப்புனைந்ததாக(invent) உலகரங்கில் கூசாமல் பறைகிறது... சரி அப்படியென்றால் இது எப்படி சிங்களப் படைகளின் கைகளுக்குப் போனது? .. சுருக்கமாகப் பார்த்து விடுவோம், வாருங்கள்… https://globalecco.org/ctx-v1n1/lashkar-e-taiba?p_p_auth=KcgCT0Hx&p_p_id=101&p_p_lifecycle=0&p_p_state=maximized&p_p_mode=view&_101_struts_action=%2Fasset_publisher%2Fview_content&_101_assetEntryId=611601&_101_type=content&_101_urlTitle=learning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers&redirect=https%3A%2F%2Fglobalecco.org%2Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers%3Fp_p_id%3D3%26p_p_lifecycle%3D0%26p_p_state%3Dmaximized%26p_p_mode%3Dview%26_3_keywords%3Dsea%2Btigers%26_3_struts_action%3D%252Fsearch%252Fsearch%26_3_redirect%3D%252Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers அது ஆழிப்பேரலை வந்து முடிந்த முதலாம் ஆண்டு. சிறிலங்காப் படைகளின் சிறப்பு படகு சதளம் (special boat squadron) என்னும் சிறப்புப் பிரிவு 2006 ஆம் ஆண்டு முடியன்செலகே பந்துள திஸ்ஸநாயக்கே என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் படகு கட்டுமானத்தளம் இருந்த காட்டு இடத்துக்குள் ஆழஊடுருவி அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 16-அடி நீள படகினை தோண்டி திருகோணமலைக்கு எடுத்துச் சென்றனர்.. பின்னர் அதை மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் மீளுருவாக்கம் செய்து தற்போதைய அம்புப்படகுகள் என்னும் அதே 16 அடி நீளப் படகுகளாக வடிவமைத்தனர். https://nps.edu/documents/110773463/120130624/CTX+Vol+2+No+2.pdf/7e23b091-6c64-0081-b3b9-45e1a0f25072?t=1589935699254 இதில் இப்போது 18 அடி, 23 அடி என்று மேலும் இரண்டு புதிய விதங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இதன் இப்போதைய பெயர் செட்ரிக் சுற்றுக்காவல் கலம் ஆகும் (பழைய அதிகாரியின் பெயரால்…) ஆக மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், இங்கு யார் புதுபுனைவர்கள் என்று! சொந்தமாக உருவாக்கியதாகவே கூசாமல் பரப்புமை...!.. ம்.. மக்களே, போரில் இரிபுநாட்டின் செல்வத்தையெல்லாம் வாகைநாடு சூறையாடுவது பரவலானது.. ஆனால் இதுகால் வரை சொந்தமாக ஒன்றினையும் உருவாக்காமல் தோற்றவனிடம் இருந்து ஊரறிந்த ஒன்றினை எடுத்துவிட்டு அதைப் புதுப்னைந்தவனே நான்தான் என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் வாகைநாட்டை என்னவென்று விளிப்பது? ஆதாரங்கள் பின்வருமாறு: எனக்குக் கிடைத்த புலனங்கள் அடிப்படையில் இவையெல்லாம் 2006 ஆம் காலப்பகுதிக்கு முன்பாக எடுக்கப்பட்ட நிழற்படங்கள் என்று உறுதியளிக்கிறேன்… 1) 'கடற்புலிகளின் 23 அடி நீளக் கலம் | தவளை நடவடிக்கையின் போது' 2) 'சம்பூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படகு' 3) 'கடற்புலிகளின் 23 அடி நீளக் கலங்கள்' 4) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே கடற்புலிகளின் கலத்தினைப் பாருங்கள். கீழ்கண்டது கடற்புலிகளின் 23 அடி நீளக் கலமாகும். இக்கலம் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெருகல் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகும். படம் மட்டக்களப்பில் எடுக்கப்பட்டதாகும். 'இக்கலத்தினை நன்கு உத்துப் பாருங்கள். முன்னால் பின்னால் சுடுகலன்கள் பூட்டுவதற்கு ஏற்ற தண்டுகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன' 5) கீழ்கண்டது கடற்புலிகளின் 23 அடி நீளக் கலமாகும். இக்கலத்தின் பெயர் அதன் கூட்டில்(hul) எழுதப்பட்டுள்ளது.. ஆனால் கட்புலனாகவில்லை. இது 2000 ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும். 6) 7) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே சிங்களத்தின் படகினைப் பாருங்கள். படியெடுக்கும் இயந்திரத்தில் (photocopy machine) போட்டு எடுத்தது என்று மட்டும் நினைக்க வேண்டாம் …./\… 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு' | படிமப்புரவு : Sri Lanka "Arrow" RAB it was designed... - The Boats of Warboats ..., Facebook அடுத்து சிங்களவரின் 23 அடி நீளக் கலங்களையும் காண்போம். இந்த 16 அடி அம்புப் படகுகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 23 அடிக் அம்புக் கலங்களாகும். 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு | படிமப்புரவு: RP Defense - Overblog' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இதுவும் கடற்புலிகளிடம் இருந்த ஒரு வகைக் கலம். நீளம்: 17.3 அடி அகலம் : 3 அடி கலவர் : 1–2 வேகம்: 25–30 kts வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகையைச் சேர்ந்த கடற்புலிகளின் கலமாகும். இவ்வகையிற்குப் புலிகள் பெயர் சூட்டினார்களா என்பது தெரியவில்லை. இதன் கலக்கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. இதனால் கடலில் நல்ல வேகமாக உருவோட முடியும்.. வெளியிணைப்பு மின்னோடி = 3 x X 1. 'அணியம்' 'கடையால்' 2. இதன் கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. வெளியிணைப்பு மின்னோடி = 1 x X 'கடையால் மூலைப் பார்வை' 'அணியத்தோற்றம், இழுவையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது' 'அணியத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால் தோற்றம்' இஃது இரட்டை கூடு கொண்ட ஓர் கடற்கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X மேலே உள்ளது தான் கீழே உள்ளது:- 'பின்பகுதி' 'அணியம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது ஒற்றை இருக்கை கொண்ட , முக்கூட்டினை உடைய ஒரு சரக்குக் காவிக் கலனாகும். இதுவும் முக்கூட்டினை(tri hull) உடைய படகாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250HP வேகம் = ??? kts கலவர் = பணியைப் பொறுத்து 'பின்னிருந்த பார்வை' பக்கவாட்டுப் பார்வை — ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடற்புலிகள் பொதுமக்களின் நலன் கருதி பெரிய கடற்கலங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து மிகக்குறைந்த விலையில் மீனவர்கள் ஊடாக பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினர் . அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுததிய கடற்கலங்கள்தான் இவையாகும். மேலும் இவை வழங்கலுக்கும் பயன்படுத்தப்பட்டன. வகை: படகு 1) 2) கலப்பெயர்: அன்னை வேளாங்கண்ணி 3) 4) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'வெளிப்புறம்' 'உட்புறம்' 'வெளிப்புறம்' வகை: வள்ளம் 1)கலப்பெயர்: அந்தோணி. வகை: ??? நீளம்: 30அடி இவ்வகைக் கலங்கள் புலிகளிடம் 5 இருந்தது. 1) & 2) 3) & 4) 5) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'இக்கலத்தில் சிறீலங்கா தரைப்படை வீரன் ஒருவர் ஏறி நிற்கிறார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது சிறிலங்காக் கடற்படையிடமிருந்து கடற்சிறுத்தைகளால் 1999/02/18 கைப்பற்றப்பட்டது ஆகும். இவ்வகுப்புக் கலங்களின் வகுப்புப் பெயர் K-71 என்று சிங்கள படைத்துறை கூறுகிறது. இதன் படிமங்களை கீழே இணைத்துள்ளேன். இதன் கலப்பெயராக புலிகள் "நிமல்" என்ற பெயரினைச் சூட்டினர் இதன் அணியம் கூர் அணியமாகும். இதற்கு காப்பு அடுக்கு போடப்படவில்லை. மாறாக, இதன் தளப்பகுதியானது உட்புறமாக குடையப்பட்டது போன்று தாழ்வாக இருந்தது. குடையப்பட்ட தாழ்வுயரம் எவ்வளவு என்று அறியமுடியவில்லை. இதன் கலக்கூடு கூட வேறு வடிவுடையதாக உள்ளது. அதாவது அதன் கடைக்கால்(stern) கலக்கூட்டில் ஒரு முக்கோண வடிவ புடைப்பம் ஒன்று உள்ளது. இதன் மீகாமன் அறை வேவ் ரைடர் கலங்களின் போன்று உள்ளது. மேலும் இக்கலத்தின் இரும்புக் கம்பி வேலியானது கடைக்காலிற்கு போடப்படவில்லை. இந்த இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். இதன் முற்பகுதியில் இரண்டு DSHK(12.7 mm) பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமே இதில் தரிக்கப்பட்ட ஆய்தம் ஆகும். இதைத் கவிர வேறு ஏதேனும் சிறிய வகை வேட்டெஃகங்கள்(firearms) இருந்தனவா என்று என்னால் அறிய முடியவில்லை. நீளம்: 13.5 மீ அகலம்: 3.18 மீ வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP வேகம் : 35-40 kts கலவர் = 5–7 கதுவீ = வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 2 x 12.7 mm வகை-54 (முதன்மை) ''கடற்கரும்புலி கப்டன் வெற்றி சிங்கள வழங்கல் தொடரணி மீது மோதியிடித்த அன்று ஆனையிறவுக் களப்பில் நடந்த கடற்சமரில் அடிபடும் போது'' 'அணியத்தில் கடற்புலிகள்' 'கலத்தின் அணியம் | பின்னிருந்து முன்னோக்கிய பார்வை | கடற்கலத்தில் நின்று தாக்குதல் நடத்துபவர்கள் கடற்புலிகள். திரைப்படத்திற்காய் சிங்கள உடை அணிந்துள்ளர்கள் (உப்பில் உறைந்த உதிரங்கள் )' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். நீளம்: 80+ அடி 'மேற்கண்ட படம் என்னால் உருவாக்கப்பட்ட படம் ஆகும்' 'உட்பகுதி' படகினில் ஓர் சிறீலங்கா தரைப்படை வீரன் ஏறி நிற்கிறார்.. அவரை வைத்து கடற்கலத்தின் நீள அகலத்தினை எடை போட்டுக்கொளுங்கள், எவ்வளவு பெரியது என்று! 'வெளிப்புறம்' கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன். 'வெளிப்புறம் | கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன் ஆவார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'பின்பக்க மூலையில் இருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய சத்தார் பார்வை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை பார்ப்பதற்கு ஆட்காவிக் கடற்கலம் போன்று உள்ளது... இதே போன்று 2 கடற்கலங்கள் சிறீலங்காத் தரைப்படைகளால் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலத்தினைப் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை படகு வகையைச் சேர்ந்த புலிகளின் ஓர் கடற்கலம். கதுவீ = வட்டு வடிவம் ஆய்தம் = 2x 7.62 mm 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை... படத்தின் முன்னே தண்டு போல நிமிர்ந்து நிற்பது சுடுகலன் தாங்கி.. பின்னால் தெரிவது கதுவீ' ' 'முதலில் தெரிவது சுடுகலன் தாங்கி.. அதற்குப் பின்னால் தெரிவது கதுவீ'' 'படகில் இருந்த இரும்புச் சட்டகத்தில் மேலே உள்ளது போன்ற இரும்பு உருளைகள் பொருத்தப்பட்டிருந்தன.. பயன் தெரியவில்லை' இது ஒரு வலிப்பு படகு(rowing boat). இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல். நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women diver) உள்ளனர். — உப்பயானம் (Inflatable boat) / இறப்பர் படகு (Rubber boat) இக்கலங்களுக்கு புலிகள் எப்பெயரும் சூட்டவில்லை. இது ஆட்காவுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நீளம் : 15'- 17' கலவர் : தேவையைப் பொறுத்து வெளியிணைப்பு மின்னோடி = 1 x <150 HP நிறம் = சிவப்பு, நீலம், சாம்பல் — மிதவைகள் (floaters) இந்த உப்பயானத்தில் அமர்ந்திருப்பவர்கள் கடற்சிறுத்தைகள் (sea leopard commandos) ஆவர். இவர்களின் கையில் இருப்பது ஒரு மிதவை ஆகும். இதனுள் ஆய்தங்கள் வைக்கப்பட்டிருக்கும்.. மேலும் இதைப் பயன்படுத்தி நீரினிலும் மிதந்து நகர்வார்கள். 1) 2) கீழே நீங்கள் பச்சை நிறத்தில் பார்ப்பது ஒரு காற்று நிரப்பப்பட்ட ஒரு வகையான மிதவை.. அருகில் நின்று ஆர்.பீ.ஜி -ஆல் அடிப்பவர் ஒரு கடற்சிறுத்தை வீரர் ஆவர். இந்த காற்று நிரப்பப்பட்ட பையானது நீள்சதுர வடிவிலானது ஆகும். 3) கலத்தின் மீகாமன் அறையில் செம்மஞ்சள் நிறத்தில் தொங்கிகொண்டிருப்பது இன்னொரு வகையான மிதவையே — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் மட்டக் கடற்கல (Low planing Vessel) வகையினைச் சேர்ந்த கலங்களாகும். இவற்றின் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது இவை ஊடுருவல் கலங்களாக(infiltration crafts) இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கலங்களில் இருக்கை போன்று ஒன்று நடுவில் உள்ளது. கலவர் = 1–2 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP ஆய்தம் = GPMG 7.62mm (முன்) 1. 2. பின்பக்கத் தோற்றம்: 'அடிப்புறம்' 3. 'சத்தார் பக்க வாட்டுத் தோற்றம்' தாரைச்-சறுக்கு (Jetski): 1) 2) இது எறிகணை வீச்சில் சிதைந்துவிட்டது. water scooter: 1) 2) பாதை வகைக் கலம்:- இது வெறுமையான பெற்ரோல் கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். விடுதலைப் புலிகள் தமது ஊர்திகள் மற்றும் பாரமான பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்திய பாலக் கலம் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி புலிகளிடத்தில் 8 இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் 250 குதிரை வலுக்கொண்ட எட்டு வெளியிணைப்பு மின்னோடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை கரையிலிருந்து ஒன்றரை மணிநேர ஓட்டத்தில் ஆழ்கடலிற்குச் சென்று அங்கு வந்து தரித்து நிற்கும் போர்த்தளவாட வறைக்கூடக் (warehouse) கப்பல்களிலிருந்து இறக்கப்படும் போர்த்தளவாடங்களைக் கரைக்கு ஏற்றிவரப் பயன்பட்டன. இவற்றில் 14-18 வரையான கடற்புலிப் போராளிகள் நிற்பர். கடற்புலிகளின் கலம் சோதனை இடம். நீளம்: 100 அடி உயரம்: 10 அடி கலையரசன் நீரடி நீச்சல் பயிற்சித் தடாகம் இது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு போராளிகளை கடலில் பயிற்சி எடுப்பிப்பதற்கு முன்னர் பயிற்றுவிக்கும் இடமாகும். இது 83 அடி நீளமும் 23 அடி ஆழமும் கொண்டதாகும். இது 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று சிறிலங்கா படைத்துறை கூறியுள்ளது. இதன் மேலுள்ள அந்த கம்பிகளில் பிணைக்கப்பட்டிருக்கும் உருமறைப்புகள் (தரப்பாள், மற்றும் இன்னபிறவன) வானிலிருந்து வேவெடுக்கும் போது இதை உருமறைக்கும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பற்றிய ஒரு நிகழ்படம்(video) கீழ்கண்ட இந்த இழுவைகளில்தான்(trailer) புலிகள் தங்களின் படகுகளை ஏற்றி வைப்பார்கள்.. தேவை வரும்போது இவற்றினை உழவு இயந்திரங்களில் கட்டி கரைக்கு இழுத்துச் செல்வார்கள். பின்னர் அங்கு உள்ள ஓர் ஊர்தி ஒன்றின் மூலம் கரையில் உள்ள மண்ணை தோண்டி அதன் மூலம் கலத்தினைக் கடலினுள் இறக்கிவிடுவார்கள்.. அந்த இறக்கும் ஊபின்புறத்தில் ஓர் கயிறு கட்டி அக்கயிற்றினை பினால் ஓர் ஊர்திக்கு கட்டிவிடுவார்காள். இதன் மூலம் அந்த தள்ளி இறக்கும் ஊர்தி கடலினுட் விழுந்தாலும் அதை கரையில் பிணைக்கப்பட்டுள்ள ஊர்தியைப் பயன்படுத்தி அதை உள்ளிழுத்து விடலாம் 'கடலினுட் கலத்தினை இறக்கும் அந்த ஊர்தி' 'அந்த ஊர்தி' அருகில் அமர்ந்திருப்பவர் சிங்கள ஊடகவியலாளர். 'படகுகாவிகள் எ இழுவைகள்' 'படகுகாவி எ இழுவை' இதுவும் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊர்தியே. இதன் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை! இறுதியாக…………….. 'கடல் தன்னில் அலைமீது கவிபாடி விளையாடி புவியாளச் சென்றவரே! - உங்கள் உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு எமை ஏங்க வைத்தவரே!' — கடற்புலிகளின் இறுவெட்டிலிருந்து… நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத் தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: https://eelam.tv/ - ஈழத்தமிழர்களின் யூடியுப் போன்றதொன்று Commentary #77) Sundayobserver.lk - Sri Lanka கடலோரக்காற்று - திரைப்படம் உப்பில் உறைந்த உதிரங்கள் - திரைப்படம் EelamView (EelamView) Sea Tigers of the LTTE | Richard Pendavingh) The Island (The Island) (Learning from Our Enemies: Sri Lankan Naval Special Warfare against the Sea Tigers) http://boatswainslocker.com/customer/boloin/customerpages/jetbriefs/HJ_JB427_Sri_Lankan_Patrol_Fleet.pdf Lost Victory (Lost Victory) http://www.fak.dk/en/news/magazine/Documents/ISSUE%2002,%20VOLUME%2002/Whither_the_Hybrid_Threat.pdf புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…! (https://eelavarkural.wordpress.com/2017/06/03/sea-tigers/) LTTE Suicide Boat Found (LTTE Suicide Boat Found) https://www.researchgate.net/figure/Text-accompanying-the-swimming-pool-Source-Author-photo-2013_fig4_276886367) புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள் (https://www.vivasaayi.com/2016/08/real-sea-battalion.html?m=0) தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு (http://www.velichaveedu.com/28219-5-a/) புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா? (புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா?) IDA71 - Wikipedia (IDA71 - Wikipedia) Stealth boats, mini subs of the LTTE(with janes video) (Stealth boats, mini subs of the LTTE(with janes video)) The last ‘Ad­mi­ral’ from http://H.M.Cy.S. Coastal Forces (The last ‘Ad­mi­ral’ from H.M.Cy.S. Coastal Forces) Dossier on weapons of ltte- pdf புலிகளின் மக்கள் சேவைப்படகு போர் காயங்களுடன் அனாதரவாக கிடக்கின்றது!. கடற்படையினரின் கட்டுப்பாட்டு வளாகத்தில் விடுதலைப் புலிகளின் தோணிகள் Sea Tigers – Wikipedia கடற்சிறுத்தை பெண்புலி நாதினி. | ஒருபேப்பர் https://noolaham.net/project/481/48098/48098.pdf கருணா குழுவின் துரோகத்தால் கொல்லப்பட்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன் படிமப்புரவு (image courtesy) பெருமளவான படிமங்கள் YouTube இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும் Galledialogue 2019 http://eelamaravar.com Mapio.net IDA71 - Wikipedia தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு TripAdvisor JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Richard Pendavingh ResearchGate Getty Images Wikimedia Commons H I Sutton - Covert Shores YouTube SBS and RABS breaking new grounds Thuppahi's Blog - WordPress.com: Create aFree Website or Blog (http://WordPress.com) Photography Unit of Liberation Tigers (http://aruchuna.com) Eelam Archives on Twitter https://twitter.com/EelamArchives/status/1254396048505798661/photo/1) Getty Images Home (https://www.uyirpu.com/) Steemit (http://steemit.com) LankaWeb News Eela Malar Pulikalin Kural - Pulikalin Kural (http://pulikalinkural.com) https://www.army.lk/ (https://www.army.lk/) http://tiger.javon.us (http://tiger.javon.us) Web Page Under Construction (http://TamilNation.com) EelamView (EelamView) Aruchuna (Photography Unit of Liberation Tigers) Enjoy free comfortable tools to publish, exchange, and share any kind of ocuments online! Explore Sri Lanka (Emerging Out Of The Shadows) Lakdasun Trip Reports Archive Navy Museum - Trincomalee (Navy Museum - Trincomalee) Al Jazeera http://HISutton.com (http://HISutton.com) Sri Lanka: Sea battle (Sri Lanka: Sea battle) Two more LTTE Suicide Boats &amp; Three Vehicles Found (http://WikimediaCommons.com) (no title) Sri Lanka Navy Museum - Captured LTTE Boats) (https://puliveeram.wordpress.com/2018/12/12/ltte-made-weapons/#jp-carousel-37657) http://Flickr.com (http://Flickr.com) EagleSpeak (EagleSpeak) http://www.shunya.net/Pictures/SriLanka/Vanni-East/Vanni-East.htm)) This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. H I Sutton - Covert Shores) Log In or Sign Up LTTE smuggling of diesel and cement foiled in Pesalai கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு. http://www.வேர்கள்.com தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் http://flickr.com - kumaran satha ரூபபாகிணி தொலைக்காட்சி - சிங்களம் TamilNet ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  6. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். இவ்வகைப் படகுகளிற்கு இடியன், கவிப்படகு, கரும்புலிப்படகு, குண்டுப்படகு, வெடிப்படகு மற்றும் சக்கை வண்டி என்று 6 பெயர்கள் உண்டு. இவ்வாறு இக்கரும்புலிப் படகுகளில் செல்வோர் 'இடியர்' என அழைக்கப்பட்டனர். இக் கடற் தற்கொடைப்படையில் ஆண்களிற்கும் பெண்களிற்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன. செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. அங்கிருந்து சிறிது தொலைவுவரை இவர்களோடு வேறுசில கடற்புலி போராளிகள் அல்லது கடல்வேவுப்புலிகள் நீந்திச் செல்வதுமுண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதிவரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்படலாயிற்று. ) கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதி வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000 கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்.. இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை - சிங்களவரால் கைப்பற்றப்பட்டவற்றை வைத்து கணிப்பிடப்பட்டவை: கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு/ இடியன் என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink). இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை. இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்: கட்டைப் படகு வகை: தியாகன் மாந்த ஏவரி (Human Torpedo): MS-380 கவிர் வகுப்புப் படகு: ஸ்ரெல்த் 16' : தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்) ஸ்ரெல்த் 23' : (அறியில்லை) குட்டி மிராஜ் வகுப்புப் படகு: செம்பிறை, வீமன் வெள்ளை வகுப்புப் படகு: வாமன், தர்சன் மிராஜ் வகுப்புப் படகு: முத்துமணி, தீக்கதிர் குருவி வகுப்புப் படகு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: அமுதன் வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: இசைமாறன் வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: வரதன் மற்றும் மதன் சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும். முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong — கவிர் வகுப்புக் கலன் (Kfir class craft) நீளம் = 16' அகலம்= 10' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1998 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இதில் 2 விதம் உண்டு. இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள். இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை … இந்த வகைக் கலங்கள் அகச்சிவப்புத் திரையில் இப்படித்தான் தெரியும். முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது. ' கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை' → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது. விதம் 1: வெடிப்படகாகச் செல்லும் போது இதில் இருவர் பயணம் செய்தனர்; ஒரு ஓட்டியும் ஒரு தொலைத்தொடர்பாளரும். இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன. 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'மூலைப்பார்வை' விதம் 2 : இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வார், இடியனாகச் செல்லும் போது. விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான கவிர் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம். இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்! கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 நீளம் = 23' அகலம்= 10' 'நீரினில் பாயும் கடற்கலம்' 'கடையால்' — குட்டி மிராஜ் வகுப்புக் கலன் (Kutti Miraj class craft) இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது. நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி: "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → லெப் கேணல் நிசாந்தன், → லெப் கேணல் எழிற்கண்ணன். → லெப் கேணல் பழனி, → லெப் கேணல் தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர்." பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 1) 'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது, 2009' 'இதன் இரு கவர்கள்' 2) 'பயிற்சியின் போது' 3) மேற்கண்ட Pink போன்று பச்சை கறுப்பிலும் ஒன்று இருந்தது. 4) அதே போன்று கபில (Brown) நிறத்திலும் ஒன்று இருந்தது — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு. உயரம் = 2.0 (விதம் 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1 வேகம் = ??? ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1: 1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது. மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை: விதம் 2: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இவை எரிபொருள் காவிகளாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1. மேற்கண்ட கலத்தின் கடையால் : 2) 3) மேற்கண்ட கலத்தின் பின் பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1) 'ஓட்டியிருக்கை' 'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)' 'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)' அணியம்(பக்கவாட்டுப் பார்வை) 'கடையால்' 'கடையால்' 2) அணியம்' 'ஓட்டியிருக்கை' 'கடையார்' 'அடிப்பக்கம்' — வகுப்புப் பெயர் அறியாக் கலன் (Class name unknown Craft) இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும் நீளம் = ?? அகலம்= ?? வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = ??? கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG 'பக்கவாட்டுத் தோற்றம்' 'சத்தார் தோற்றம்' 'கடையால், கழுகு சத்தார் பார்வை' 'கடையால்' — ??? வகுப்புக் கலங்கள்: நீளம் = ??? அகலம் = ??? உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1) 'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)' 'பக்கவாட்டுத் தோற்றம்' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1) 2) — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts) வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் வேவ் ரைடர் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன. 1996 ஆம் ஆண்டு முடியும் மட்டில் வரை சண்டைப்படகாகவும் அதற்குப் பின்னர் தேவைக்கேற்ப குண்டுப்படகாகவும் குறித்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் வழங்கல் படகாகவும் பயன்படுத்தப்பட்டன நீளம் = ??? அகலம்= ?? வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 3/4 வேகம் = ??? தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன. வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:- இதன் உட்புறம் இப்படி இருக்கும்:- இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:- 1) 'சிறீலங்காப் படைகளால் கைப்பற்றப்பட்ட கரும்புலிக் கலம் 2) 3) 'பக்கவாட்டுக் காட்சி' 'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)' 'கலத்தின் கடையால்' 'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி' இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன: நெடுமாறன், டீசல் இவற்றின் இன்னொரு விருத்து நான்காம் ஈழப்போரில் தாக்குதல் கலமாக பாவிக்கப்பட்டது. அவற்றிற்கு வெள்ளை போன்றே கத்தேட்றல் கலக்கூடும் அணியமும் இருந்தாலும் வெள்ளையின் முதன்மை விருத்து போன்று நடுப்பகுதி மற்றும் கடையார் இருக்கவில்லை. எனினும் வெள்ளை போன்றே தளத்தில் ஒரு திறந்து மூடத்தக்க பெட்டி இருந்தது. தளப் பகுதியானது தட்டையாகவும் பக்கவோரத்திற்கு (gunwale) கம்பிவேலியும் இருந்தது. தளத்தில் ஒரு கனவகை தெறுவேயம் முதன்மையாக பூட்டத்தக்கவாறு சுடுகலத் தண்டும் அதற்கு முன்னால் ஒரு நடுத்தர சுடுகலன் பூட்டத்தக்கதாக ஒரு சுடுகலத் தண்டும் இருந்தது. கடையாரில் இயந்திரப் பகுதியின் பக்கவோரத்தின் மேல் இரு சிறிய வகை (இலகு இயந்திர சுடுகலன்) பூட்டத்தக்கதாக இரு சுடுகலத் தண்டுகள் இருந்தன. இதன் மின்னோடிகள் வெளியிணைப்பு மின்னோடிகளே. மொத்தம் இரண்டு பூட்டலாம். அணியம் கடையாரிலிருந்து அணியம் நோக்கிய பார்வை கடையார். . கடையாரின் பக்கவோரத்தில் சுடுகலத் தண்டு ஒன்று பூட்டப்பட்டிருப்பதைக் காண்க — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இவை 300 கிகி வெடிமருந்தை ஏற்றிச்செல்ல வல்லவை ஆகும். நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும். கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP 'ஓட்டியிருக்கை' 'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content). 'பின்பகுதி' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வகுப்பைச் சேர்ந்த இரு கலங்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை வரதன் மற்றும் மதன் என்பதாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். 2 & 3) 'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2 மேற்கண்ட கலத்தின் அணியம்:- 2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1) 2) இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும். 3) 4) 'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்' 5) — மிராஜ் வகுப்புக் கலன் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. நீளம் =??? அகலம்= ??? உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 35-40 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன. உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக… 'சக்கை வைக்கும் உட்பகுதி' 'உ.மி. வைக்கும் பின்புறம்' 'பொறி உள்ள பின் பகுதி' 'ஓட்டியின் இருக்கை' 'மிராஜ் வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் ' கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன. புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்… சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே! மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 1) வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி ' 'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி' 2) இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது. வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1 3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும். 'பக்கவாட்டுப் பார்வை' 'மேலிருந்து சத்தார்ப்பார்வை' மேற்கண்ட கலத்தின் பின்பகுதி: 4) — மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம். 'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க வலு மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன' 1. 2. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 3. 4. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்' 5. 'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை' நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel) 'சுக்கான் (மேலிருந்த பார்வை)' 2) கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவுகளான கங்கையமரன் & அங்கயற்கண்ணி பிரிவுகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர். 'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி' 'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி' 'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி' 3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள் சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders) இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம். 'IDA71 மீளுயிர்ப்பி' 'IDA71 மீளுயிர்ப்பி' மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters . மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது) 'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்' 'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்' 'தூவிகள் (fins)' 'IDA-71 முகமூடி' 'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்' 'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)' 'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)' 'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)' மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது. 'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது' இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்... நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று முழங்கி, அதன் பின்னர் "கடலிலே காவியம் படைப்போம்" என்று முழங்கி மோதி வெடிப்பார்கள். நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: Facebook https://www.morebooks.de/store/gb/book/asymmetric-warfare-at-sea/isbn/978-3-659-86575-6 http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் ஈழநாதம்: 27.08.1993 படிமப்புரவு: - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன் ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன். '2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 3 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.' இவை 1993 இல் இருந்து 2009 ஐந்தாம் மாதம் வரை கடலில் ஓடின. பின்னாளில் சிங்களக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு 'Wave Rider' என்னும் அதே பெயரிலே மீண்டும் கடலில் ஓடுகின்றன. இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன. கடற்புலிகளிடம் இவை 10–20 வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின. ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன. கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் கட்டப்பட்ட ஒரு இவ்வகுப்பான சண்டைப் படகுகளானவை 50 நோட்ஸ் வேகத்தில் ஓடியவை ஆகும். அதன் படம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அந்த சண்டைக் கலத்தின் வெள்ளோட்டத்தின் போது தான் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் நேர்ச்சியாகக் காயப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) இக்கலங்கள் யாவும் தரித்து நிற்க துறைமுகங்கள் இல்லையாதலால் இவை படகுகாவிகளில்(dock) ஏற்றி அவர்கட்கு தேவையான இடங்களில் உருமறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின் கடற்சமர் வரும்போது உழுபொறியின்(tractor) உதவியுடன் கரைக்கு இழுத்துவரப்பட்டு அங்கு நிற்கு ஒருவகை இடிவாருவகத்தின்(Bulldozer) உதவியுடன் கடலினுள்ளே இறக்கப்படும். இறக்கும் போது கரையோர மணல் சாய்வாக தோண்டப்பட்டே இறக்கப்படும். இறக்கிய பின்னர் படகுகாவிகள் எல்லாம் அருகில் உருமறைக்கக் கூடிய இடங்களில் தரிபெறும். பின்னர், கடற்சமர் முடித்து கரைக்கு திரும்பிவரும் படகுகள் யாவும் படகுகாவிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்படும். தொடர்தடம் (Continuous track) உடைய இடிவாருவகங்கள் மட்டும் கடற்புலிகளிடம் ஆகக் குறைஉந்தது 6 இருந்தன. இவை யாவும் ஓயாத அலைகள் - 2 இன் போது சிறிலங்கா படைத்துறையிடமிருந்து விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். 'பலவகை படகுகாவிகள்' 'மணலைத் தோண்ட வரும் அந்த இடிவாருவகம்(bulldozer) | கவனி: இவ்வூர்தியினை ஓட்டுபவர் ஒரு பெண் போராளியாவார்' 'மணலைத் தோண்டும் இடிவாருவகம்' 'தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் வேவ் ரைடர் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்' கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை (கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன. இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சில கலங்களின் கலக்கூட்டில் அவற்றின் கலப் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, வேவ் ரைடர்(Wave Rider) வகுப்புக் கடற்கலன்: இங்கு 25 கடற்கலங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன். கூர் அணிய வேவ் ரைடர்கள்:- பரந்தாமன், மாதவி, இசையரசி, உதயச்செல்வி, மதன், மருதன், ஆதிமான்(ஒஸ்கார்), பாரதிதாசன், அகச்செழியன், இளநிலா, கடலரசன், இந்துமதி, சுகி, அருணா, கேசவன், றோசா Rosa கரண்டி அணிய கத்தேட்றல் கலக்கூட்டு வேவ் ரைடர்கள்:- பசீலன், எரிமலை, வேங்கை, போர்க், வெண்ணிலா, பிரசாந்த், ராஜ்மோகன், சேரன் கரண்டி அணிய பிளானிங் கலக்கூட்டு வேவ் ரைடர்கள் ஆகக்குறைந்தது ஒரு படகு 'வர்மன்' என்னும் கலப்பெயரைக் கொண்ட இக்கலத்தின் வகுப்பு, வகை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. சரி, இனி ஒவ்வொரு வகையினைப் பற்றியும் காண்போம். — வேவ் ரைடர் வகைப் படகு (Wave Rider Type boat) முதலில் வேவ் ரைடர் வகைப் படகுகள் பற்றி காண்போம். இவை வேவ் ரைடர்(Wave Rider) என்றும் புலிகளால் அழைக்கப்பட்டன. இப்பெயரானது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றில் கடற்புலிகளிடம் 3 விதமான படகுகள் இருந்ததன. அவை ஆவன; கூர் அணியப் படகு (Pointed bow boats) - Planing Hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Cathedral hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Planing hull இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி சீறும் கணையோடு கடலில் விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்றாவது விதமான வேவ் ரைடரின் பக்கவோரத்தின் கம்பிவேலி அதன் அணியத்தின் நுனி வரை நீண்டுள்ளது. இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். சில படகுகளின் கலக்கூட்டில் கடற்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க(நங்கூரமிட) உதவுகிறது. அத்துடன் கலக்கூட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாரின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாரில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன. இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் வளைவாக இரு கம்பிகள் சமாந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பிகள் பக்கவாட்டுச் சாளரத்திற்குச் சமாந்தராமக இருக்கும். இவற்றின் மேல் தொலைதொடர்பு வட்டு, கதுவீ போன்றன பொருத்தப்பட்டிக்கும். தேவைப்படின் கொடிக்கம்பங்களும் இதில் கட்டப்பட்டிருக்கும். (பட விளக்கத்திற்கு கரண்டி அணிய விதம் மூன்றில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க) அடுத்து இவற்றின் கலக்குழு (crew) பற்றிப் பார்ப்போம். குழுவினர்: 13–15 முதன்மைச் சுடுகலனின் முதன்மைச் சூட்டாளர் - 1 கடையாரில் இன்னொரு கனவகை சுடுகலன் பூட்டப்பட்டிருப்பின் அதற்கும் ஒரு முதன்மைச் சூட்டாளர் அமர்த்தப்பட்டிருப்பார். முதன்மைச் சுடுகலனின் உதவியாளர்மார் - 2/3 பொறியியலாளர் & உதவியாளர் - 1+1 பக்கவாட்டில் உள்ள 5/6 சுடுகலன்களிற்குமான சூட்டாளர்மார் - 5/6 தொலைத்தொடர்பாளர் (படகு கட்டளை அதிகாரி) - 1 உந்துகணை சூட்டாளர் - 1 மீகாமன் - 1 இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:- குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலன்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல வேவ் ரைடர் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படுவோர் "கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images" என்ற என்னால் ஆக்கப்பட்ட படிம கப்பகத்தினுள் இருந்து எடுத்துக்கொள்ளவும். கூர் அணியம் கொண்ட சண்டைப்படகு - இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இவ்விதக் கடற்கலங்கள் பிளானிங் வகை கலக்கூட்டினை உடையவை ஆகும். இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 6 & 7 சுடுகலங்கள் (உதயச்செல்வி(8) தவிர) இருந்தன. இவற்றில் நான்கு விதம் உண்டு. 'கலக்கூடு(hull)' 'மூன்று விதமான இவ்வகை சண்டைப் படகுகள் (வலது படிமம்) | இவற்றில் வலது படிமத்தில் உள்ள படகுகளில் இடது பக்கத்தில் இருக்கும் படகின் இடது பக்கவாட்டுப் பார்வையானது, இடது பக்கத்தில் தனியாக உள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளது' நீளம் = 55' அகலம் = 18' வேகம் : 35–40 kts தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = வட்டு வடிவம் வெளியிணைப்பு மின்னோடி= 4/5 x 250 HP புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ ZU-23 (ஒற்றை & இரட்டை)/ 20mm GIMAT / 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/ W85/ T-85 ]/ M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம்(portable) -01 x RPG/Carl Gustav, AKS துமுக்கிகள்(rifle) விதம் - 1 இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது. இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன. 'தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக' விதம் - 2: இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது. 'இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி' இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் 'உதயச்செல்வி' ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை. இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை இனியில்லை என்ற வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும். 'மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க' விதம் - 3: கலப்பெயர்: றோசா Rosa இதனுடைய கலப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனது கலக்கூட்டில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் பொறிகள் ( 3 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்) அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. கரண்டி அணிய வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கத்தேட்றல் கலக்கூடுகளை(cathedral hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ 20mm GIMAT/ 2M-3 25மி.மீ (ஒற்றைக்குழல்)/ 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/W85/ T-85] / M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) விதம்-1: இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 7 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒன்றே ஒன்றினைத் தவிர ஏனை அனைத்துக் கலங்களிற்கும் மீகாமன் அறை ஒரே மாதிரி இருந்தது. 1) 2) இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் சாளரங்கள் வேறுபடுவதோடு அவை சாய்ந்தாரமாக(slopy) இல்லை. முன்பக்க சாளரங்கள் எல்லாக் கலங்களிற்கும் பிரிந்திருப்பது(இடத்திற்கு ஒன்று வலத்திற்கு ஒன்று) போன்று இல்லாமல் இரண்டும் இணைந்து செவ்வக வடிவில் உள்ளன. இதன் மீகாமன் அறை: 'இதன் முகப்புச் சாளரம் பிரிபடாமல் உள்ளதைக் காண்க' விதம்-2: இவை கல்லப்பட்டவில்லை. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது. இவை வெளியிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இதன் கலப்பெயர்: போர்க் விதம்-3: இது, விதம் 2 போன்றே தோற்றத்தில் இருந்தாலும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவை கல்லப்பட்டவில்லை. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும் காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும். இவை 3 உள்ளிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP 'உள்ளிணைப்பு மின்னோடி' கரண்டி அணிய பிளானிங் கலக்கூடு வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் பிளானிங் கலக்கூடுகளை (Planning hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {2M-3 25மி.மீ இரட்டைக்குழல் / 25mm ஓர்லிகோன்} கடையார்: 1x ZPU-2 பக்கவாடு: 1/2 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2] /.30mm M1919, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) அணியத்தின் ஆக முன்பகுதியில் (கீழ்க்கண்ட படத்தில் கம்பிவேலி குத்தென்று விழுமிடத்திற்கு முன்னால்) இதைக் கட்டி வைப்பதற்கான கட்டை உள்ளது. 'புலிகளின் குமுதனின் அணிய கலக்கூடு' 'அணியம்' மேலும் இதன் மீகாமன் அறையின் முகப்புத் தோற்றமும் சால்டாக்கைப் (Shaldaq - 2) போன்று உள்ளது (அதாவது சாளரங்களில் நடுவில் ஒன்று நேராகவும், அதன் இரு பக்கங்களிலும் இரு சாளரங்கள் சற்று சத்தாராகவும், மூலையும் பக்காவடும் தொடங்கும் இடத்தில் முக்கோண வடிவில் இரு பக்கத்திற்கும் ஒவ்வொன்றென இரண்டும் போடப்பட்டுள்ளது). மீகாமன் அறை முற்றிலும் வேறுபாடாக உள்ளது. சிறு மறைப்போடு பெரும்பகுதி திறந்த வெளியாகவே உள்ளது . மீகாமன் அறைக்கு மேலே வட்டுவடிவ கதுவீ பொருத்தப்பட்டுள்ளது. 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'அணியச் சுடுகலத் தொகுதி' 'அணியச் சுடுகலன்கள்' உள்ளிணைப்பு மின்னோடிப் பெட்டியுனுள் கடையாரிலிருந்து ஏறுவதற்கு பின்பக்கமாக நிரந்தர ஏணி பொருத்தப்பட்டிருக்கிறது. 'புலிகளின் டோறாவின் கடையால்' இதற்கு வெளியிணைப்பு மின்னோடி(OBM) இல்லை. பெட்டியின் பின்புறத்தின் அடியில் 6 சிறு துவாரங்கள் உள்ளன. இதன் கடையாலின் அடிப்புறத்தை உத்துப் பார்க்கும் போது இதற்கு 3/4 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது . 2) புலிகளிடம் இருந்த இரண்டாவது கடற்கலன்: இது இவ்வகுப்பைச் சேர்ந்த இரண்டாவது படகா அல்லது ஒரே படகின் அணியச் சுடுகலன் மட்டும் மாற்றப்பட்டதாலான படகா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இதில் முதன்மைச் சுடுகலனாக வகை - 61 ஐச் சேர்ந்த 25 மி.மீ சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இச்சுடுகலனானது ஓ.அ- 3 இன் மூன்றாங் கட்டமான ஆனையிறவுச் சமர்க்களத்தில் கைப்பற்றப்பட்டதாகும். இதன் கடையாலில் சிபியு 2 பூட்டப்பட்டுள்ளது. கனவகைச் சுடுகலனுக்குப் பின்னால், பக்கவாட்டில், மேலும் இரு சுடுகலன்கள் பூட்டப்பட்டுள்ளன. இக்கடற்கலத்தில் வேறேதும் சுடுகலன் பூட்டப் பட்டிருக்கிறதா என்பதை என்னால் அறியமுடியவில்லை! வேவ் ரைடர் வகுப்புக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்: வேவ் ரைடர்கள் மொத்தம் மூன்று வரை மீகாமன் அறை வடிவத்தினைக் கொண்டிருந்தன. அனைத்து கூர் அணிய வடிவங்களும் ஒரே மாதிரியான அறையினைக் கொண்டிருந்தன (இவற்றின் முகப்பில் இரு சாளரங்கள் இருந்தன). இதனை நீங்கள் மேலே காணலாம், கூர் அணிய வடிவில். கரண்டி அணிய வடிவங்களானவை கூர் அணிய வடிவங்களின் அறையோடு இன்னும் இரு (ஒன்றினது முகப்புச் சாளரம் பிரிபடாமல் ஒரே சாளராமகவும் வேறு இரண்டில் இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவமும் காணப்பட்டன) வடிவங்களையும் கொண்டிருந்தன. 'வேவ் ரைடர் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்' 'மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி' 'மீகாமன் அறையினுள் ஒரு மீகாமனும் படகு கட்டளை அதிகாரியும் (வோக்கியுடன்) நிற்கின்றனர்' மேற்கண்ட படத்தில் மீகாமன் அறையின் சாளரத்தை நோக்குக. இம்மீகாமன் அறையின் கூரையில் ஒரு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இது பிடித்துக்கொண்டு நிற்பதற்காகும். முகப்புச் சாளரத்தின் மேலே முச்சக்கரவண்டிகளுக்கு இருப்பது போன்று நீர் உள்ளே வராமல் தடுப்பதற்கான திரை (தரப்பாள் போன்ற பொருண்மத்தால் ஆனது) மடித்துக் கட்டப்பட்டுள்ளது. 'இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவம்' சுடுகலத் தண்டு: வேவ் ரைடர் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மைத் தண்டு - முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும் நடுத்தரத் தண்டு - 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும் மெல்லிய தண்டு - 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும் ' குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்' 'வேவ் ரைடர் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் தானியங்கி கைக்குண்டு செலுத்தி (GL)' இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு - ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடியே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும். பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):- இவ்வகைகலங்களில் (வேவ் ரைடர்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது. 'பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை' மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும். 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.' 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக' நங்கூரம் - இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும் 'மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்' கலப் பெயர்: வர்மன் உயரம்: 6' - 6.3' — புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் தெரியவில்லை இது ஒரு வேறுபட்ட வகுப்பிலான படகாகும். இதன் வடிவம் வேவ் ரைடர் வகையை ஒத்திருப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இது கூர் அணியத்தைக்(pointed bow) கொண்டிருந்தது. இதன் கலக்கூடானது ஏனைய கலங்களின் கலக்கூட்டில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. (மேலே & கீழே உள்ள படத்தைக் கண்டு தெளிக). 'கலக்கூடு(hull)' 'அணியம்' ' அணியத்தின் தளம் கல்லப்பட்டுள்ளதைக் காண்க' இதற்கு அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையார் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாரிற்குச் செல்வது போல! ' 'Battle field' என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க' 'பக்கவாட்டுத் தளம் கல்லப்படாததைக் காண்க' இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர வேவ் ரைடருக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாரில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு - என்னால் சரியாக எண்ண முடியவில்லை!). 'இதுதான் மீகாமன் அறை' 'கடையாரும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாரில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் ' இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்! நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: youtube - virusinic http://boatswainslocker.com/ https://www.maritimemanual.com/types-of-bow-designs/)ations Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka, SLN Admiral Jayanath Colombage ஏனைய அனைத்தும் சொந்தமாக எழுதியவையே! லெப். கேணல் நிரோஜன் வாழ்க்கை வரலாறு படிமப்புரவு YouTube Photography Unit of Liberation Tigers Google EelamView Log In or Sign Up Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips நீல அச்சுப்படிகள் ரொகான் குணரத்னேவால் எழுதப்பட்ட "Maritime Terrorism: Technologies, Tactics, and Techniques" இருந்து எடுத்து நான் திருத்தியவை ஆகும் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  8. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது… நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலங்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலங்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை! சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலங்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம். 1) &2) கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலங்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும். 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் ' 'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்' 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்' 3) இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும். அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5 'மேற்கண்டதின் பின் புறம்' 4) புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று. இது ஓராள் பயணிக்கக் கூடிய நீர்மூழ்கியாகும். இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது. (இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை) 'உயர் பின்பக்க பார்வை' 5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன். 'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்.. தலைப்பகுதி தலைப்பகுதி தலைப்பகுதி 'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்' பின்பக்கம் பின்பக்கம் 'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி' 'சுழலி' 'சுக்கான் உடன் கூடிய சுழலி' 6) கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது. இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7) மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி 8 ) கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள். சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள். தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலங்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு கலக்கூடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது. மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலங்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே. இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1) ஊடுருவி 2006-01 'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது' 'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்' 'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி' 'கலத்தின் பின்பகுதி' மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: 2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். 3) மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்! இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது! படிமப்புரவு :H I Sutton மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்: 'பின்பகுதி' 4) 27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். (கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் ) 'கலத்தின் முழுத் தோற்றம்' 'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக' 'அணியம்' தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1) 2) நீளம்: 30 அடி அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலங்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும். கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை 1) நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது 'ஓட்டியிருக்கை' 2) கோகுகலன்-45 2008 கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி அகலம்: 8 அடி உயரம் : 7 அடி வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2- இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும். பொறியின் ஆற்றல்: 400–800 HP 'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை' 'மேற்புறத் தோற்றம்' 'முன்புறத் தோற்றம்' 'உட்புறத் தோற்றங்கள்' 'ஓட்டியிடம் & steering wheel' எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்' 'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.' 'சுழலி ' 3) கோகுகல்ன்-24 2008 இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது. நீளம்: 5.4 m அகலம்: 1.5 m 4) நீளம் : 8m உயரம் : 4.2' 'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை' 5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று: இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை 6) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel). 'உட்புறத் தோற்றம்' 7) கோகுலன்-2 நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது' 8 ) சதீஸ் கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்படுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 'முன்னிருந்து சத்தார் பார்வை' 'மேலிருந்த பார்வை' 'பின்னிருந்து சத்தார் பார்வை' 'பக்கவாட்டுப் பார்வை' 'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை' 'பின்பகுதிப் பார்வை' 9) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி 'மேற்கண்டதின் பின் புறம்' 'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)' அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலங்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும். இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம். 'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை' 'உட்பகுதி' 2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் 'பின்பகுதி' 2) MS 380 இதில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம் படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி. 3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும். மேலுள்ள மாதிரியின் முழுக் கலம் கூடுதல் செய்திகள்: உசாத்துணை : H I Sutton - சில தகவல்களை இங்கிருந்து தழுவியே எழுதியுள்ளேன். Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644 ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.