Search the Community
Showing results for tags 'கருத்துக்களம்'.
-
கருத்து எழுதும் பகுதிக்கு கீழே Attachments என்று ஒரு பகுதி உள்ளது. அதில் Browse என்பதில் அழுத்தி தரவேற்ற விரும்பும் படங்களை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள். தரவேற்றியதும் படங்கள் அமைய வேண்டிய இடத்தில் mouse இனால் அழுத்திய பின் இணைத்த படங்களில் + என்னும் அடையாளத்தில் அழுத்துவதன் மூலம் படங்களை இணைத்துக் கொள்ள முடியும். (உதாரணத்திற்கு கீழுள்ள படத்தினைப்பார்க்க) மேற்குறிப்பிட்ட தரவேற்றும் முறை Flash animation வடிவில் http://www.yarl.com/help/forum/upload_imag...oad_images.html அல்லது படங்களைத் தரவேற்றி, இணைக்கக்கூடிய இன்னொரு வழிமுறை http://www.yarl.com/help/forum/upload_imag...ad_images2.html
-
நிபந்தனைகள் 1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும். 5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும். 6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எமக்கு அது பற்றித் தெரிவிக்கலாம். 8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
-
களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள் தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது. பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும். ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும். இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm Flash animation வடிவில்: http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html
- 13 comments
-
- கருத்துக்களம்
- கருத்துக்களம்
- (and 10 more)
-
விரைவான பதில்க்கருத்து வழங்க இன்னொரு பக்கம் ஒன்றினைத் திறந்து அதில் பதில் கருத்து எழுத விரும்பாதவர்கள், எமது முன்னை களத்தில் Quick reply என ஒரு வசதி இருந்தததைப்போல் இங்கும் விரைவாக பதில் கருத்தினை எழுத, களத்தின் இறுதிப்பகுதியில் என்று ஒரு செயற்பாடு உண்டு. அதில் அழுத்துவதன் மூலம் இதே பகுதியிலேயே பதில் கருத்தினை வைக்க முடியும். என்பதில் அழுத்தும்போது தோன்றுவது இங்கே converter (Bamini type or English type) பாவிப்பவர்கள் கீழுள்ள பெட்டியில் எழுத வேண்டிய விடயத்தினை எழுத வேண்டும். மேற்கோளுடன் பதில்க்கருத்து ஒவ்வொரு கருத்தின் கீழும் என்று உள்ளதில் அழுத்துவதன் மூலம் பதில்க்கருத்தினை வைக்க முடியும். இங்கு இணைக்கப்பட்டுள்ள converter களினைப் பாவிப்பவர்கள் மேற்கோளுடன் இணைக்கவிரும்பினால் கருத்தினை கீழுள்ள பெட்டியில் எழுதத் தொடங்க முன்னர் மேலுள்ள கருத்தினை copy செய்து கொள்ள வேண்டும். கீழுள்ள பெட்டியில் கருத்தினை எழுதி முடித்தபின்னர் மேலுள்ள பெட்டியில் copy செய்ததை past செய்து கருத்தினை அனுப்பலாம். குறிப்பு: copy செய்வதற்கு கருத்தினை தெரிவு செய்துவிட்டு Ctrl+C என்பதையும் past செய்ய Ctrl+V என்பதையும் பாவிக்கலாம். மேற்கோள் எதுவும் இல்லாது பதில் எழுத களத்தின் இறுதிப்பகுதியில் காணப்படும் என்பதில் அழுத்தி கருத்தினை பதிவு செய்து கொள்ள முடியும்.