Search the Community
Showing results for tags 'கரும்புலிகள்'.
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்… தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்… தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்… கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு…, கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன், கரும்புலி லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். நீளும் நினைவுகளாகி…. தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
- 6 replies
-
- 1
-
- வான்புலி
- கரும்புலிகள்
-
(and 5 more)
Tagged with:
-
"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை!" சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை கொலை செய்வதன் மூலம் அச்ச உணர்வினை ஏற்படுத்தி இம்மண்ணையும் பறித்து, பண்பாட்டையும் பறித்துவிட முடிவு செய்தது. சிங்கள பேரினவாதத்தின் இந்த முடிவின் விளைவுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை (28,29,30-01-1987 – மூன்று நாட்களில் 233 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்), சத்துருக்கொண்டான் படுகொலை (09-09-1990 – 42 சிறுவர்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 150க்கும் மேல் கொல்லப்பட்டனர்) , வந்தாறுமூலைப்படுகொலை (05-09-1990 – 158 தமிழ் இளைஞர்கள் வெட்டியும், சுட்டும், தீயிட்டு கொழுத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்), புல்லுமலைப்படுகொலை, உடும்பன்குளப் படுகொலை, தோணிதாண்டான்மடுப் படுகொலை என நீண்டுசெல்கின்றது. இத்தனை படுகொலைகளிற்கும் மூலமாக செயற்பட்ட சூத்திரதாரி அவன் வேறு யாரும் அல்ல .மேஜர் ஆக இருந்து இறப்பின் பின் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற லறி விஜேரட்ன ( Uttama Seva Padakkama, Sri Lanka Armed Services Long Service Medal, North and East Operations Medal, Purna Bhumi Padakkama, Operation Wadamarachchi Medal, Riviresa Campaign Services Medal, and 50th Independence Anniversary Commemoration Medal for his service during the course of his military career) அவன் மனைவியும் ஒரு இராணுவ அதிகாரியே பிரிகேடியர் இந்திரா விஜேரட்னா(.Brigadier Indira Wijeratne of the Sri Lanka Army Legal Branch) பல படுகொலைகளுக்கு திட்டமிடலினை நிகழ்த்தி ,நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்ட சிங்கள தீவிரவாத அதிகாரியான மேஜர் லறி விஜேரட்னவை எம் மண்ணிலே கணக்கு தீர்ப்பதென புலனாய்வு போராளிகள் கங்கணம் கட்டி தீவிரமான புலனாய்வு தகவல் சேகரிப்புகளை மேற்கொண்ட வேளை தான் மாற்றலாகி வடமராட்சி மண்ணில் வந்திறங்கினான் லறி விஜேரட்ன. மக்களுடனான தொடர்பாடல்களில் லறி விஜேரட்ன வித்தியாசமானவன் மக்களின் வீட்டு விசேஷங்கள் ,உட்பட மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதாக வெளிவேஷம் போட்டு அம்மக்களிடத்திலேயே புலனாய்வு தகவல்களை சேகரிப்பதில் வல்லவனாகினான் . மக்களோடு மக்களாக வாழ்ந்த எம் போராளிகளை இனம் காண்பதற்கு பல பொது மக்கள் கட்டமைப்புகளை லறி விஜேரட்ன ஏற்படுத்தி இருந்தான் .பிரஜைகள் குழுக்கள், விழிப்பு குழுக்கள் என்பனவற்றுள் தனக்கு தகவல் தரும் முகவர்களை ஊடுருவ செய்து மறைமுக இயக்க உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பெற முயற்சி செய்தான். அதன் விளைவாக வடமராட்சி புலனாய்வு துறைக்கு பொறுப்பாக இருந்த இளஞ்செழியன் இனம் காணப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு நடந்த மோதலில் மேஜர் இளஞ்செழியனாக இம் மண்ணை முத்தமிட்டான் . அதனை தொடர்ந்து வதிரி பகுதியில் எம் தாக்குதல் படையணி தளபதிகளான லெப் கேணல் அர்ச்சுனா ,மேஜர் செல்வம் உட்பட ஏழு போராளிகளின் தங்குமிட பதுங்கு குழியின் தகவல்களை பெற்று சுற்றிவளைப்பு தாக்குதல் மூலம் அப் பதுங்கு குழியினை தகர்த்து நேரடி சமரின் மூலம் அவ் ஏழு போராளிகளும் வடமராட்சி வதிரி மண்ணில் விதையாகி போகினர். வடமராட்சி மண்ணில் நின்ற புலனாய்வு போராளிகள் பலருக்கு மிகச் சவாலான காலகட்டமாக மாறிய தருணங்கள் அந்த கொடியவனை வழி அனுப்ப வேண்டிய கால கட்டமான வேளை அது. மறைமுக போராளிகள் தமது புலனாய்வு தகவல்களை திரட்டிய வண்ணம் வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைமைக்கு தெரிவித்து வந்தனர். அதன் பிரகாரம் ஒரு மாதத்திற்கு முன்னராகவே உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்றால் , கயவன் மீது மறைமுக கரும்புலி தாக்குதல் ஒன்றின் மூலம் தாக்குதல் நடத்துவதென முடிவாகின. அதன் பிரகாரம் கடற்புலிகள் அமைப்பில் செயற்பட்ட போராளி “எமர்சன் ” என்பவர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின .அதனை மேற்பார்வை செய்வதற்கும் , நெறிப்படுத்துவதற்கும் , புலனாய்வுத் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான ” சோழன்” நியமிக்கப்படுகிறான். இச் சோழனே லறி விஜேரட்ன மீதான தகவல் சேகரிப்புகளை மேற்கொண்டு துல்லியமான தகவல்களை பெற்ற தள பொறுப்பாளர் ஆவார். இருவருக்குமான பயிற்சிகள் முல்லைத்தீவில் அமைந்த புலனாய்வுத்துறையின் பயிற்சி முகாம் ஒன்றின் நடந்தேறின. துடியாட்டமும் ,எந்நேரமும் நகைசுவை உணர்வும் நிறைந்த எமர்சன் எம் எல்லோராலும் செல்லமாக சீனி மாமா என்றே அழைக்கப்பட்டான் அதே வேளை அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரன் சோழன் மிக நேர்த்தியான உயர்ந்த மெல்லிய உருவம் .போராளிகளை மிக அமைதியான செயலாக்கத்திற்கும், வழி நடத்தலிற்கும் நன் வழிபடுத்தலுக்கும் ஏதுவானவன். அவனின் அமைதியான சுபாவமே எம்மால் நகைச்சுவைக்கு ஆள்பட்டது. அவரோ அதை பெரிது படுத்தாமல் எம்முடன் இணைந்து தானும் அந்த இடங்களை கலகல படுத்தும் மனப்பாங்கு. எமர்சனின் தாக்குதல் வியூகங்களை நெறிப்படுத்திய தள பொறுப்பாளர் சோழன் மற்றும் அவர்களிற்கான பாதுகாப்பு புலனாய்வு அணி என்பன புறப்பட தயாரானது . 1998ம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வுத்துறையின் யாழ்ப்பாணத்திற்கான நகர்வு பாதை யாழ் கடல் நீரேரி பகுதியாகவே இருந்தது. மிகவும் நெருக்கடியான இராணுவ பாதுகாப்பு அரண்கள் அமைந்த யாழ்ப்பாணத்தின் கிழக்கு அரியாலை பகுதியை ஊடறுத்து வடமராட்சி பகுதியை அடைவதே அணியின் நோக்கயிருந்தது. அதன்படி அணி நகர்வுகளை யாழ் மாவட்ட புலனாய்வுத்துறையின் அப்போதைய பொறுப்பாளர் திரு. ஞானவேல் மற்றும் உதவி பொறுப்பாளர் திரு. பிரதீப் ஆகியோரின் வழி நடத்தலின் பேரில் தாக்குதல் அணி நகர்வை ஆரம்பித்தது. யாழ் கடல் நீரேரியூடாக கிழக்கு அரியாலை பகுதியை சென்றடைந்து மட்டுவில் ஊடாக வரணி பகுதியில் தாக்குதலாளி எமர்சனை நிலைப்படுத்திய பின் பருத்தித்துறை நோக்கி தள பொறுப்பாளர் சோழனுடன் நகர்வு ஆரம்பித்தது .வெற்றிகரமான பயணத்தில் தள பொறுப்பாளர் சோழன் பருத்தித்துறை பகுதியில் நிலை படுத்த படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எமர்சன் வரணி பகுதியில் நிலை நிறுத்தபட்டார். நகர்வு அணியின் பணிகள் திறம்பட நிறைவுற்ற பின் பாதுகாப்பு அணி வன்னி திரும்பியிருந்தது. முன்னர் குறிப்பிட்டது போன்று லறி விஜேரட்ன தொடர்பான முக்கிய தகவல் தான் என்ன? தாக்குதல் திட்டம் தான் என்ன ? என்பதை இப்போது பார்க்கலாம். வடமராட்சி மண்ணின் மக்களை தனது புலனாய்வு தந்திரத்தால் கவர்ந்திழுத்து வைத்திருந்த லறி விஜேரட்ன பதவி உயர்வு பெற்று கொத்தலவெல இராணுவ கல்லூரி பணிப்பாளராக நியமிக்கப்பட்டதும், மாற்றலாகி செல்லும் அன்றைய தினமே யாழ் பருத்தித்துறை வர்த்தக சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிந்துபசார (பிரியாவிடை) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வரவுள்ளார் என்பதே ஆகும். ஆம் அன்றையதினம் மே 14 ,1998 தாக்குதல் திட்டமிட்டதை தள பொறுப்பாளர் உறுதி தகவல்களுடன் தளத்தில் நேரடியாக உறுதி செய்ததுடன் தாக்குதல் நடத்தவென வரணி பகுதியில் நிலைப்படுத்திய கரும்புலி போராளி எமர்சனை பருத்தித்துறை பகுதிக்கு அழைப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டார். எனினும் எமர்சன் பருத்தித்துறை பகுதிக்கு வர முடியாதவாறு அன்றைய தினம் இராணுவத்தால் வரணி பகுதி தேடுதல் நடவடிக்கை ஒன்றிற்க்காக சுற்றிவளைக்க பட்டிருந்தது. எமர்சன் தனது மறைமுக இருப்பிடத்தில் மறைந்து கொண்டார். தள பொறுப்பாளர் சோழனிற்கு மேற்படி எமர்சனின் நகர்வு தடையான விடயம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை புரிந்து கொண்ட சோழன் உடனடியாக தானே கரும்புலியாக வெடிமருந்து கந்தக பொதியை சுமந்து செல்ல தயாரானான். தலைமையுடனான பல உரையாடல்களின் பின் சோழன் செல்ல வேண்டாமெனவும், இலக்கு பின்னர் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம் எனவும் ,பொறுப்பாளர்களினால் பல தாக்குதல்கள் நிகழ்த்த முடியும், பல இலக்குகளை அழிக்க முடியும் ஆகவே தாக்குதலினை பிற்போடுமாறும் ,பல வேண்டுகைகள் சோழனிற்கு விடப்பட்ட போதும் சோழனினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தாக்குதலை தானே செய்ய போவதாகவும் பயிற்சி ஒத்திகையின் போது தானும் தாக்குதல் நடவடிக்கையினை ஒத்திகை பார்த்ததாகவும், தாக்குதல் நடவடிக்கை இலகுவாகவும், வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் எனவும், இலக்கை தவறவிட்டால் குறித்த இலக்கினால் பல இழப்புகளை எம்மவர்கள் சந்திக்க வேண்டும் எனவும் தானே வெடிமருந்துடன் செல்கிறேன் என உறுதியாக கூறி தனது தொலைத் தொடர்பை துண்டித்து கொண்டான். பருத்தித்தித்துறை பஸ் நிலைய பகுதியில் அமைந்த அந்த கட்டிடம் விடை பெறும் இராணுவ அதிகாரியை வரவேற்க வர்த்தக சங்க உறுப்பினர்கள் மாலையுடன் காத்திருந்து வரவேற்கும் நிகழ்வினை சோழன் பொறுமையாகவும் ,அவதானிப்புடனும் பருத்தித்துறை முதலாவது குச்சொழுங்கை பகுதியில் நின்று பார்த்துக்கொண்டு இலக்கிற்காய் காத்திருக்கிறான். தடல்புரளான நிகழ்வு கவிதை புகழாரங்கள், மாலை சூடலுடன் தங்க சங்கிலி ஒன்றும் பரிசளிப்பு, அப்பாவி எம் மக்களின் மனங்களை மாற்றி, பல இன்னல்களை கொடுத்து, காணாமல் ஆக்கப்பட்ட எம் இளைஞர்களை மனதில் சுமந்து காத்திருக்கிறான் சோழன். நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது மதியம் 1.45 லாண்ட் ரோவர் வாகனத்தில் பாதுகாப்பு அணியினால் சூழப்பட்டு வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தான் கட்டியிருந்த கந்தக வெடி மருந்து அங்கியுடன் மோதுகிறான் சோழன், சிங்களம் சிதறியது எங்கும் புகை நெடி ,சிதறுண்ட வாகனத்தின் நடுவே லறி விஜேரட்ன உட்பட நான்கு இராணுவத்தினர் சிதறினர். ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் முதல் சந்திரிக்கா பண்டாரனாயக்க காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க தீவிரமாக 15 ஆண்டுகள் சேவையாற்றியமையை கெளரவித்தே (இதில் இரண்டரை வருடங்கள் வடமராட்சியில் 514 ஆவது பிரிகேட் கொமாண்டராக பணியாற்றியிருந்தார்) மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று கொத்தலாவள இராணுவ பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று இடம் மாறி செல்லும் முன்னரே அக் கொடியவனான லறி விஜேரட்ண மீதான தாக்குதல் தமிழர் தாயக்த்திலேயே இடம்பெற்று அவன் அழிக்கப்பட்டான். காத்திருந்து பகையின் கதை முடித்த எங்கள் சோழன் “லெப் கேணல் சோழனாக “கரும்புலி மனம் கொண்ட முதல் மறைமுக கரும்புலியாய் வரலாறாகி போனான். போராளியாய் ,பொறுப்பாளனாய் ,தாக்குதலை வழிநடத்துபவனாய் ,செயற்பட்ட சோழன் சூழல் அறிந்து கரும்புலியாய் உருமாறி வீரகாவியமான வரலாறு இவனையே சாரும். நீங்கா நினைவுகளுடன்… -அபிராமி-
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "உயிரின் திரியில் தீமூண்டிட பகையே முடியும் ! உயரும் மலையே கரும்புலிகளின் வெடியில் தகரும் ! பகையின் திமிரும் வெடியதிர்வுடன் முழுதாய் அழியும் ! தலைவன் விழியும் கரும்புலிகளின் கதையில் கசியும் !" --> 'விடியும் திசையில்' பாடல், 'புயல் புகுந்த பூக்கள்' திரைப்படத்திலிருந்து தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Ground Black Tigers Logo. 1996 - end of LTTE era:- கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1996 - 1998:- தரைக்கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1998 - end of LTTE era:- மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Wored only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Wored from 2001- end of LTTE era. "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 272 replies
-
- 3
-
- sri lankan army
- ltte commandos
-
(and 77 more)
Tagged with:
- sri lankan army
- ltte commandos
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா கொமாண்டோ
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- புலிகளின் அதிரடிப்படை
- விடுதலை அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- eelam special force
- sri lanka commandos
- சிறப்பு படை
- கரும்புலி
- தமிழ் சிறப்புப் படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
- ltte black tigers
- உயிராயுதங்கள்
- தடைநீக்கிகள்
- மீளா அதிரடிப்படை
- tamil commandos
- தேசப்புயல்கள்
- non returnable mission commandos
- tamil eelam commando
- eelam tamil commando
- tamil commond
- ltte air commandos
- ltte commando
- தமிழ் அதிரடிப்படை
- ltte naval commandos
- sri lankan rebel commandos
- தமிழீழ அதிரடிப்படை
- srilankan rebel commandos
- tamil eelam commandos
- tamil eelam army
- வான் கரும்புலிகள்
- ltte special commandos
- சிறப்புப்படை
- சிறப்பு அதிரடிப்படை
- srilanka special force
- கொமாண்டோ
- இலங்கை அதிரடிப்படை
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- கடற்கரும்புலிகள்
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ltte self benefaction force
- சிறீலங்கா அதிரடிப்படை
- அதிரடிப்படை
- sri lanka special force
- தமிழீழ கொமாண்டோ
- tamil naval commandos
- balck tigers
- கரும்புலிகள்
- ltte special force
- மறைமுகக் கரும்புலிகள்
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- tamil army
- சிங்கள கொமண்டோ
- சிறப்புப் படை
- self-benefaction force
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam
- eelam images
- ltte images
- eelam commando
- tamil commando
- tamil eelam special force
- ltte black tigers images
- கொமாண்டோக்கள்
- liberation tigers of tamileelam
- ltte
- tamil tigers
- ltte special forces
- tamil special forces
- ground black tigers
- tamil ground commandos
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். இவ்வகைப் படகுகளிற்கு இடியன், கவிப்படகு, கரும்புலிப்படகு, குண்டுப்படகு, வெடிப்படகு மற்றும் சக்கை வண்டி என்று 6 பெயர்கள் உண்டு. இவ்வாறு இக்கரும்புலிப் படகுகளில் செல்வோர் 'இடியர்' என அழைக்கப்பட்டனர். இக் கடற் தற்கொடைப்படையில் ஆண்களிற்கும் பெண்களிற்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன. செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. அங்கிருந்து சிறிது தொலைவுவரை இவர்களோடு வேறுசில கடற்புலி போராளிகள் அல்லது கடல்வேவுப்புலிகள் நீந்திச் செல்வதுமுண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதிவரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்படலாயிற்று. ) கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதி வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000 கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்.. இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை - சிங்களவரால் கைப்பற்றப்பட்டவற்றை வைத்து கணிப்பிடப்பட்டவை: கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு/ இடியன் என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink). இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை. இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்: கட்டைப் படகு வகை: தியாகன் மாந்த ஏவரி (Human Torpedo): MS-380 கவிர் வகுப்புப் படகு: ஸ்ரெல்த் 16' : தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்) ஸ்ரெல்த் 23' : (அறியில்லை) குட்டி மிராஜ் வகுப்புப் படகு: செம்பிறை, வீமன் வெள்ளை வகுப்புப் படகு: வாமன், தர்சன் மிராஜ் வகுப்புப் படகு: முத்துமணி, தீக்கதிர் குருவி வகுப்புப் படகு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: அமுதன் வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: இசைமாறன் வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: வரதன் மற்றும் மதன் சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும். முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong — கவிர் வகுப்புக் கலன் (Kfir class craft) நீளம் = 16' அகலம்= 10' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1998 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இதில் 2 விதம் உண்டு. இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள். இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை … இந்த வகைக் கலங்கள் அகச்சிவப்புத் திரையில் இப்படித்தான் தெரியும். முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது. ' கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை' → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது. விதம் 1: வெடிப்படகாகச் செல்லும் போது இதில் இருவர் பயணம் செய்தனர்; ஒரு ஓட்டியும் ஒரு தொலைத்தொடர்பாளரும். இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன. 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'மூலைப்பார்வை' விதம் 2 : இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வார், இடியனாகச் செல்லும் போது. விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான கவிர் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம். இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்! கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 நீளம் = 23' அகலம்= 10' 'நீரினில் பாயும் கடற்கலம்' 'கடையால்' — குட்டி மிராஜ் வகுப்புக் கலன் (Kutti Miraj class craft) இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது. நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி: "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → லெப் கேணல் நிசாந்தன், → லெப் கேணல் எழிற்கண்ணன். → லெப் கேணல் பழனி, → லெப் கேணல் தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர்." பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 1) 'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது, 2009' 'இதன் இரு கவர்கள்' 2) 'பயிற்சியின் போது' 3) மேற்கண்ட Pink போன்று பச்சை கறுப்பிலும் ஒன்று இருந்தது. 4) அதே போன்று கபில (Brown) நிறத்திலும் ஒன்று இருந்தது — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு. உயரம் = 2.0 (விதம் 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1 வேகம் = ??? ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1: 1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது. மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை: விதம் 2: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இவை எரிபொருள் காவிகளாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1. மேற்கண்ட கலத்தின் கடையால் : 2) 3) மேற்கண்ட கலத்தின் பின் பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1) 'ஓட்டியிருக்கை' 'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)' 'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)' அணியம்(பக்கவாட்டுப் பார்வை) 'கடையால்' 'கடையால்' 2) அணியம்' 'ஓட்டியிருக்கை' 'கடையார்' 'அடிப்பக்கம்' — வகுப்புப் பெயர் அறியாக் கலன் (Class name unknown Craft) இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும் நீளம் = ?? அகலம்= ?? வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = ??? கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG 'பக்கவாட்டுத் தோற்றம்' 'சத்தார் தோற்றம்' 'கடையால், கழுகு சத்தார் பார்வை' 'கடையால்' — ??? வகுப்புக் கலங்கள்: நீளம் = ??? அகலம் = ??? உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1) 'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)' 'பக்கவாட்டுத் தோற்றம்' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1) 2) — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts) வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் வேவ் ரைடர் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன. 1996 ஆம் ஆண்டு முடியும் மட்டில் வரை சண்டைப்படகாகவும் அதற்குப் பின்னர் தேவைக்கேற்ப குண்டுப்படகாகவும் குறித்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் வழங்கல் படகாகவும் பயன்படுத்தப்பட்டன நீளம் = ??? அகலம்= ?? வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 3/4 வேகம் = ??? தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன. வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:- இதன் உட்புறம் இப்படி இருக்கும்:- இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:- 1) 'சிறீலங்காப் படைகளால் கைப்பற்றப்பட்ட கரும்புலிக் கலம் 2) 3) 'பக்கவாட்டுக் காட்சி' 'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)' 'கலத்தின் கடையால்' 'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி' இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன: நெடுமாறன், டீசல் இவற்றின் இன்னொரு விருத்து நான்காம் ஈழப்போரில் தாக்குதல் கலமாக பாவிக்கப்பட்டது. அவற்றிற்கு வெள்ளை போன்றே கத்தேட்றல் கலக்கூடும் அணியமும் இருந்தாலும் வெள்ளையின் முதன்மை விருத்து போன்று நடுப்பகுதி மற்றும் கடையார் இருக்கவில்லை. எனினும் வெள்ளை போன்றே தளத்தில் ஒரு திறந்து மூடத்தக்க பெட்டி இருந்தது. தளப் பகுதியானது தட்டையாகவும் பக்கவோரத்திற்கு (gunwale) கம்பிவேலியும் இருந்தது. தளத்தில் ஒரு கனவகை தெறுவேயம் முதன்மையாக பூட்டத்தக்கவாறு சுடுகலத் தண்டும் அதற்கு முன்னால் ஒரு நடுத்தர சுடுகலன் பூட்டத்தக்கதாக ஒரு சுடுகலத் தண்டும் இருந்தது. கடையாரில் இயந்திரப் பகுதியின் பக்கவோரத்தின் மேல் இரு சிறிய வகை (இலகு இயந்திர சுடுகலன்) பூட்டத்தக்கதாக இரு சுடுகலத் தண்டுகள் இருந்தன. இதன் மின்னோடிகள் வெளியிணைப்பு மின்னோடிகளே. மொத்தம் இரண்டு பூட்டலாம். அணியம் கடையாரிலிருந்து அணியம் நோக்கிய பார்வை கடையார். . கடையாரின் பக்கவோரத்தில் சுடுகலத் தண்டு ஒன்று பூட்டப்பட்டிருப்பதைக் காண்க — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இவை 300 கிகி வெடிமருந்தை ஏற்றிச்செல்ல வல்லவை ஆகும். நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும். கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP 'ஓட்டியிருக்கை' 'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content). 'பின்பகுதி' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வகுப்பைச் சேர்ந்த இரு கலங்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை வரதன் மற்றும் மதன் என்பதாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். 2 & 3) 'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2 மேற்கண்ட கலத்தின் அணியம்:- 2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1) 2) இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும். 3) 4) 'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்' 5) — மிராஜ் வகுப்புக் கலன் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. நீளம் =??? அகலம்= ??? உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 35-40 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன. உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக… 'சக்கை வைக்கும் உட்பகுதி' 'உ.மி. வைக்கும் பின்புறம்' 'பொறி உள்ள பின் பகுதி' 'ஓட்டியின் இருக்கை' 'மிராஜ் வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் ' கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன. புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்… சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே! மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 1) வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி ' 'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி' 2) இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது. வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1 3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும். 'பக்கவாட்டுப் பார்வை' 'மேலிருந்து சத்தார்ப்பார்வை' மேற்கண்ட கலத்தின் பின்பகுதி: 4) — மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம். 'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க வலு மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன' 1. 2. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 3. 4. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்' 5. 'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை' நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel) 'சுக்கான் (மேலிருந்த பார்வை)' 2) கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவுகளான கங்கையமரன் & அங்கயற்கண்ணி பிரிவுகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர். 'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி' 'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி' 'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி' 3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள் சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders) இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம். 'IDA71 மீளுயிர்ப்பி' 'IDA71 மீளுயிர்ப்பி' மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters . மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது) 'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்' 'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்' 'தூவிகள் (fins)' 'IDA-71 முகமூடி' 'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்' 'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)' 'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)' 'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)' மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது. 'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது' இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்... நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று முழங்கி, அதன் பின்னர் "கடலிலே காவியம் படைப்போம்" என்று முழங்கி மோதி வெடிப்பார்கள். நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: Facebook https://www.morebooks.de/store/gb/book/asymmetric-warfare-at-sea/isbn/978-3-659-86575-6 http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் ஈழநாதம்: 27.08.1993 படிமப்புரவு: - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன் ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
- 8 replies
-
- விடுதலைப் புலிகள்
- கடற்புலி
- (and 13 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 5 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)
-
From the album: அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை சிறப்புக் கரும்புலிகள்
-
- அநுராதப்புரக் கரும்புலிகள்
- கரும்புலிகள்
- (and 4 more)