Search the Community
Showing results for tags 'தகரி'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. →காலம் :(2006-2009). விடுதலைப்புலிகளிடன் கவசப்படையின் பெயர் சூரன் கவச அணி என்பதாகும். இக்கவச அணியின் முதல் தகரியானது 1993ஆம் ஆண்டு பூநகரி தவளை பாய்ச்சல் நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது ஆகும். இது கைப்பற்றப்பட்ட பின்னர் இதனை இயக்குவதற்கு லெப் கேணல் தனம் உட்பட்ட சில போராளிகள் முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் இயலாமல் போக அப்போது அவ்விடத்திற்கு வந்த சுசீலன் என்ற போராளி (பின்னாளில் மாத்தையாவோடு சேர்ந்து இந்திய உளவாளியாகச் செயற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டமையால் இவர் உட்பட சிலருக்கு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டது) எந்தவொரு முப்பட்டறிவும் இல்லதிருந்தபோதும் கடும் முயற்சியின் பின் அதை இயக்கி கிளிநொச்சி வரை ஓட்டி வந்தார். கிளிநொச்சி கொணரப்பட்ட தகரியானது தொடக்கத்தில் படைத்துறை செயலகத்தின் பராமரிப்பிலேயே விடப்பட்டிருந்தது. அப்போதுதான் இக்கவச அணிக்கான அடித்தளம் போட்டப்பட்டது. இத்தகரியைக் கொண்டே புதிய கவச அணிப் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது படைத்துறை செயலகத்திலிருந்த கனவகை ஆயுத சிறந்த சூட்டாளனான 'சோ' என்பவர் (பின்னாளில் காதல் சிக்கலில் கோவில் ஒன்றிற்குள் காதலியோடு குண்டணைத்து சாவடைந்தார் என அறிகிறேன். இவர் சாவடைந்த போது 'லெப் கேணல்' தரநிலையில் இருந்தார்.) அதற்கான பயிற்சிகளை வழங்கினார். அந்த பயிற்சிகளின் பின் மேலும் புலிகளிடமிருந்த பஃவல் கவசவூர்திகளையும் இதனோடு ஒன்றிணைத்து, அன்னாரின் தலைமையிலேயே இக்கவச அணி தலைவரால் உருவாக்கப்பட்டது. ஒரேயொரு தகரியே புலிகளிடத்தில் (1999<) இருந்தாலும் அதை வைத்து பல சிறப்பான தாக்குதல்களை சிங்களப் படையின் மேல் நிகழ்த்தியதோடு அவர்களிற்கு கணிசமான ஆளணி படைக்கல இழப்புகளை கடலிலும் தரையிலும் ஏற்படுத்தியிருந்தனர். பின்னர் 1999 நவம்பர் மாதத்தில் இவ்வணிக்கு புதிய கவசவூர்திகள் சேர்ந்த போது புத்துருவாக்கம் பெற்று மீளமைக்கப்பட்டது. சோ அவர்களிற்குப் பின் 13-08-2006 வரை லெப் கேணல் பார்த்தீபன் அவர்கள் கட்டளையாளராய் இருந்தார். இவருக்குப்பின் லெப் கேணல் தரநிலையுடைய மணியரசன் அவர்கள் கட்டளையாளராய் செயல்ப்பட்டார். இக்கவச அணியானது இம்ரான்-பாண்டியன் படையணி என்னும் கூட்டுப் படையணியின் கீழ்ச் செயல்பட்ட ஓர் பிரிவாகும். இதுதவிர புலிகளிடம் 'வாகனப் பிரிவு' என்னும் ஒரு பிரிவும் இருந்தது நினைவில் கொள்ளத்தக்கது. அஃது ஊர்திகளைக் கையாண்ட பிரிவாகும். இக்கவசவூர்திகளில் 'பஃவல்' வகையையொத்த கவசவூர்திகள் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணியின் 'சூட்டி தரைத்தாக்குதல் அணி'யினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தரப்பில் சிங்களப் படைகளிடம் இருந்தது போன்று பெரியளவில் கவசப்படையெதுவும் இருக்கவில்லை. ஆனால் கவசப்படைக்கு மாற்றாக கவச எதிர்ப்புப் படையினை வைத்திருந்தனர் - விக்டர் கவச எதிர்ப்புப் படையணி. அதாவது ஓர் இகல்படையினைக்(Counter force) கைக்கொண்டிருந்தனர். இவர்கள் களத்தில் வலுவெதிர்ப்பு(defence) & வலிதாக்குதல்களின்(offence) போது பகைக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததுடன் 75 க்கும் மேற்பட்ட எதிரிகளின் கவசவூர்திகளை அழித்திருந்தனர். அதில் பெரும்பான்மையானவை தகரிகள் ஆகும். இவர்களின் முதன்மை ஆய்தம் 'உந்துகணை செலுத்தி' ஆகும். அத்தோடு தானுந்தும் சுடுகலன்கள், பின்னுதைப்பற்ற சுடுகலன்கள், குறுந்தொலைவு பன்னோக்கு தாக்குதல் ஆய்தமான எஃவ்.ஜி.எம்.-172, கம்பி-வழிகாட்டப்பட்ட காண்பு கோடுவரை கைமுறை கட்டளை கொண்ட ஆய்தமான 9கே11 மல்யுக்தா (9k11 Malyukta) உட்பட பன்வகையான தகரி எதிர்ப்பு படைக்கலன்களையும் கைக்கொண்டிருந்தனர். சரி, இனி புலிகளிடம் இருந்த கவசவூர்திகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைக்குள் செல்வோம்….. முதன்மை சமர்த் தகரி (Main battle tank) 1) வகை-55 ஏ.எம் 2 (T-55 AM2) இத்தகரியானது சிறிலங்கா படைத்துறையுடனான சமரில் பெப். 2009இல் அழிந்துபோனது. தாக்குதல் ஒன்றின் போது: https://eelam.tv/watch/ச-ரன-கவச-அண-ப-ல-கள-ன-வக-55-ஏஎம-2-தகர-ltte-t-55-am2-main-battle-tank_mO26FvpGuhQgDn5.html பக்கவாட்டுத் தோற்றம் 'படிமப்புரவு: யூடியூப்' முன்பக்கத் தோற்றம்: மூலைப் பார்வை: 'படிமப்புரவு : யூடியூப்' இதன் அலங்கம்(turret): 'படிமப்புரவு : யூடியூப்' புதுக்குடியிருப்பில் அழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது: ஆதாரம் 'படிமப்புரவு: army.lk | பெப், 2009' 2) வகை-55 ஏ (T-55A) இது தவளைப் பாச்சலின் போது கைப்பற்றப்பட்டது ஆகும். இத்தகரியானது சிறிலங்கா படைத்துறையால் பின்னாட்களில் கைப்பற்றப்பட்டுவிட்டது. → இதன் ஓட்டுநரின் பெயர் : லெப் கேணல் சிந்து (மாவீரர்) புலிகளிடம்: சிறிலங்காப் படைகளிடம்: இந்த தகரி பற்றி தமிழீழ விடுதலைப் போராட்ட போராளி திரு புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) அவர்கள் கூறுகையில், "T-55 யுத்த டாங்கி 1993ல் பூநகரி தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் டாங்கி. இதனை மீண்டும் இறுதிப்போர் காலத்தில் இராணுவம் தாக்கி அழிக்கவில்லை, ஏற்கனவே அந்த டாங்கியின் இயங்கு பொறிமுறையில் அடிக்கடி பழுது இருந்தது, இன்னும் தெளிவாக சொல்வதானால் சிலசமயம் பக்கவாட்டில் திருப்புவதற்கான இயங்கு பொறி செயற்படாமல் போய்விடும் நிலையில் இருந்தது. யுத்தத்தின்போது அவ்வாறானதொரு சூழ்நிலையில் அந்த டாங்கியை கைவிட்டுவிட்டு வந்தபின்னரே இராணுவம் அழித்தது. இலங்கை இராணுவத்தில் நகரும் ஊர்தியை தாக்கி அழிக்கவல்ல RPG மற்றும் SPG-9 போன்ற உந்துகணை செலுத்திகளை தனி ஒரு வீரனாக செயல்படுத்தி வெற்றிகாணும் அளவு திறம் வாய்தவர்கள் அவ்வளவாக இருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் நிலையான காவலரண்களை தாக்கவே இராணுவம் அவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்தியது. எனினும் அநேக யுத்த வாகனங்களை இராணும் மேற்குறிப்பிட்டது போன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கைவிட்ட பின்னரே அழித்தது. மிக சிறந்த விடுதலை போராளிகள் பலர் இராணுவத்தின் நகரும் யுத்த வாகனங்களை மிக துல்லியமாக மின்னல்வேகத்தில் RPG உந்துகணை மூலம் அழித்தார்கள்." 1)இலகு ஒருங்குசேர் தகரி (Light Composite tank) இதன் அலங்கமானது அல்விசு சலாதீனில்(alvis Saladin) இருந்து எடுக்கப்பட்டு வகை 63 (YW531) கவச சண்டை ஊர்தியின் உடலுடன் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்பீடத்தை(hull) தாழ்த்துவதன் மூலம் ஒரு பழைய கவச சண்டை ஊர்தியை எப்படி புலிகளால் ஒரு இலகு ஒருங்குசேர் தகரியாக (light composite tank) மாற்ற முடிந்தது என்பது வியப்பானதாகும். அலங்கத்திற்கு வலிமையைக் கொண்டுவருவதற்கான மறுசீரமைப்பு பணிகள் விரிவாக இருக்க வேண்டும். ஏற்கனவே மெள்ளமான இக்கவச சண்டை ஊர்தியானது அலங்கத்தின் கூடுதல் எடையால் மேலும் மெள்ளமாகும். அத்துடன் இதில் கவசமும் இல்லை. ஆனால் சமர்க்களத்தில் இருக்கும் போது உடனடியா எது தேவையோ எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவை செய்தே ஆகவேண்டும். புலிகளும் அதையே செய்துள்ளனர். இதை உருவாக்கிய புலிகளின் பொறியியலாளர்கள் உண்மையில் மேதைகளே! ஆய்தங்கள்: முதன்மைச் சுடுகலன்: 76மிமீ எல்5ஏ1 தெறுவேயம்(cannon) இரண்டாந்தரச் சுடுகலன்: எம்1919ஏ4 (விஃவ்ரி கலிபர்) அலங்கச் சுடுகலன்: DShkM வெட்டொளி(flash) அடக்கியுடன் | நன்றி: Gavin Calkins பக்கவாட்டுத் தோற்றம்: இக்கவசவூர்தியின் பின்பகுதி: தரைப்படையணி சண்டை ஊர்திகள் (infantry fighting vehicle) 1) BMP-1 இக்கவசவூர்தியானது 'வெற்றியுறுதி'(!?) என்ற ஜெயசிக்குறு இகல்-சமரங்களில்(Counter battle) ஒன்றான புளியங்குளம்-பழையவாடி ஊர்களில் 1997-08 - 19,20 ஆகிய திகதிகள் நடைபெற்ற முறியடிப்புச் சமரில் கைப்பற்றப்பட்டது ஆகும். கைப்பற்றப்பட்ட போது எடுத்த நிழற்படம்: 13-1-2009 முறியடிப்புச் சமரில்…. பக்கவாட்டுத் தோற்றம்: பின்பக்கத் தோற்றம்: 2 ( ! ) சிறிலங்கா படைத்துறையால் அழிக்கப்பட்ட புலிகளின் ஓர் கவசவூர்தி... இதற்குள் ஓர் இரட்டைக் குழல் கொண்ட வானூர்தி எதிர்புச் சுடுகலன் (zpu - 2 AAA) பூட்டப்பட்டிருக்கிறது… இக்கவசவூர்தியனது மேலே உள்ள BMP-1 ஊர்தி போன்றது. இரண்டும் ஒன்றுபோலுள்ளது! 'zpu - 2 பூட்டப்பட்டிருக்கிறது' அல்விசு சலாதீன் கவச சகடம்(Alvis Saladin Armoured car) எண்ணிக்கை: 2 இவ்விரண்டும் கனகராயன்குள படைத்தளத்தில் (ஓ.ஆ.-3 கட்டம்-1, 06-11-1999) சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்டவையாகும். 1) 2) சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென் (FV 603 Alvis Saracen): எண்ணிக்கை: 5 இந்நான்கும் ஓ.அ-3 இல் (06-11-1999) கனகராயன்குள படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்டவையாகும். பார்வைக்கு இவை நான்கும் நல்ல நிலையிலேயே உள்ளதாகவே தென்படுகிறது. ஆனால் உள்ளே எப்படி இருந்தது என்பதை அறியமுடியவில்லை. இங்கிருந்து எடுக்கப்பட்டதைத் தவிர வேறு எங்கோ இருந்தும் புலிகள் ஒன்றினைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் அது எங்கிருந்து எங்கிருந்து என்பதை என்னால் அறிய முடியவில்லை (5வது படிமம்). 1) இது விடுதலைப் புலிகளால் மேம்படுத்தப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேற்கண்ட கவசவூர்தியின் உட்பக்கம் 2) இது விடுதலைப் புலிகளால் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3) இக்கவசவூர்தியானது செம்மைப்படுத்தி முடிக்கப்படாத நிலையில் சிறீலங்கா தரைப்படைகளால் புலிகளின் கவசவூர்தி பண்ணுறுத்தகத்தில் (Garage) வைத்து கைப்பற்றப்பட்டது. இது சமரில் சேதமடைந்ததபடியால்தான் இந்நிலைக்கு ஆளானதா என்பது பற்றித் தெரியவில்லை. 4) இக்கவசவூர்தியானது செம்மைப்படுத்தி முடிக்கப்படாத நிலையில் சிறீலங்கா தரைப்படைகளால் புலிகளின் கவசவூர்தி பண்ணுறுத்தகத்தில் (Garage) வைத்து கைப்பற்றப்பட்டது. இது சமரில் சேதமடைந்ததபடியால்தான் இந்நிலைக்கு ஆளானதா என்பது பற்றித் தெரியவில்லை. 5) இது செம்மைப்படுத்தி முடிக்காத நிலையில் சிறீலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது. இது சமரில் சேதமடைந்ததபடியால்தான் இந்நிலைக்கு ஆளானதா என்பது பற்றித் தெரியவில்லை. 'முன் பக்கம்' 'பின் பக்கம்' குறிப்பு: நான் கீழே மொத்தம் மூன்று வகையான பஃவல்கள் (தென்னாபிரிக்க பஃவல், சிங்களவனின் இயுனிகோன் மற்றும் இயுனிபஃவல்) பற்றிய தகவல் தந்திருக்கிறேன். ஆனால் அவையாவும் எனக்கு படிமங்கள் கிடைத்தபடியால் தரப்பட்டவை; படிமம் கிடைக்காமல் அழிந்து போனவை எத்தனை என்று நானறியேன். இவ்வாறாக புலிகளிடம் இருந்த இவ்விதங்களைச் சேர்ந்த கவசவூர்திகள் மொத்தம் 16 ஆகும். கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி (Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) - தென்னாபிரிக்க பஃவல் விதம்-1 (SA Buffel Mk-1) எண்ணிக்கை: 4 புலிகளிடம் தென்னாபிரிக்க பஃவல் விதம்-1ஐ சேர்ந்த நான்கு கவசவூர்திகள் இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற படிமங்கள் & தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் அவர்கள் மொத்தம் ஐந்தினை சிறிலங்காப் படையினரிடமிருந்து கைப்பற்றியிருந்தனர். 21-06-1990ஆம் ஆண்டு கொண்டக்கச்சி முகாம் பரம்பலின்போது ஒன்றும், 1996இல் ஓயாத அலைகள் ஒன்றின்போது இரண்டும் (இங்கு மேலுமொரு இயுனிக்கோன் விதம்- 5/6 உம் கைப்பற்றப்பட்டது), 1998இல் ஜெயசிக்குறுவின் போது ஒன்றும், ஓயாத அலைகள் இரண்டின் போது ஒன்றும் ஆக மொத்தம் 5 பஃவல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது. இவற்றுள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற கிளிநொச்சி ஊடுருவித் தாக்குதலின் போது ஒரு பஃவல் கவசவூர்தி கரும்புலித் தாக்குதலிற்காக சக்கையூர்தியாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. இந்த ஒன்று போக எஞ்சிய 4ம் புலிகளால் சமரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட வேறும் அவர்களிடம் இருந்ததா என்பது பற்றி என்னால் அறிய இயலவில்லை. கைப்பற்றப்பட்ட 5னது படிமங்களும் கீழே அடுத்தடுத்துள்ள மறுமொழிப்பெட்டிகளுள் கொடுக்கப்பட்டுள்ளன. 1) இது மே 18 அன்று சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. மேலேயுள்ள பஃவெல் மேல் பொருத்தப்பட்டிருக்கும் 25மிமீ 2எம்3(25mm 2M3) கடற் சுடுகலன்: இது இரட்டைச் சுடுகுழலில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு சுடுகுழலாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (இக் கடற் சுடுகலனானது ஓயாத அலைகள்- 3 கட்டம் - 3இல் சிறீலங்காப் படைகளின் புல்லாவெளி கடற்றளத்தில் வைத்து புலிகளால் கைப்பற்றப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.) 2) இது மே 12, 2009 அன்று சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. 3) மற்றொரு பஃவெல் mk-1 ஆனது 2009, மே மாதம் முதலாம் திகதி அழிக்கப்பட்டது. அதன் நிழற்படம் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. 4) இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட நிலையிலான நிழற்படங்கள் கிடைக்கப்பெறவில்லை. கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி (Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) - இயுனிக்கோன் விதம்-2,3 (Unicorn Mk- 2,3) எண்ணிக்கை: 4 புலிகளிடம் இயுனிக்கோன் விதம் - 2,3 ஆகியவற்றைச் சேர்ந்த 4 கவசவூர்திகள் இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இந்த நான்கில் இரண்டினது கைப்பற்றப்பட்ட இடங்கள் பற்றிய தகவல் மட்டுமே நானனறிந்தது. ஏனைய இரண்டும் எங்கு கைப்பற்றப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. அந்த இரண்டும் சிறீலங்கா படையினரிடமிருந்து 2000ஆம் ஆண்டு ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் போது இத்தாவில் பெட்டியினுள் வைத்து கைப்பற்றப்பட்டிருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது. இவற்றைவிட வேறும் அவர்களிடம் இருந்ததா என்பது பற்றி என்னால் அறிய இயலவில்லை. கைப்பற்றப்பட்டவற்றுள் 2 இயுனிக்கோன்களினது படிமங்களும் கீழே அடுத்தடுத்துள்ள மறுமொழிப்பெட்டிகளுள் கொடுக்கப்பட்டுள்ளன. 1) ஒரு இயுனிக்கோன் ஆனது 2009, மே மாதம் முதலாம் திகதி அழிக்கப்பட்டது. அதன் நிழற்படம் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. 2) மூலைப் பார்வை(cornered view ) கவசவூர்தியினுள் இருந்த அலங்கம்: கவசவூர்தியின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் படைக்கலம் வைப்பதற்கான ஓர் ஏந்தி: 3) 7 ஏப்பிரல் 2009 அன்று அழிந்த நிலையில் ஆனந்தபுரத்தில் சிங்களவரால் கைப்பற்றப்பட்ட போது. 4) இது புலிகளால் எங்கு கைப்பற்றப்பட்டது என்பது தெரியவில்லை. இது மே 12, 2009 அன்று சிங்களவரால் புலிகளிடம் இருந்து சேதமடைந்த நிலையில் கைப்பற்றப்பட்டது ஆகும். இது சிங்களவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பிறகு புலிகளால் செம்மைப்படுத்தப்பட்டிருக்கிறது, பக்கக் கவசங்களை பார்க்குக. அவை தனியாக புடைத்துக்கொண்டு நிற்பதை கவனிக்குக. ஆனால் பின்பக்கம் பவல்களுக்கு சாதாரணமாக இருப்பதைப் போன்றுதான் உள்ளது. பக்கக் கவசங்கள் அகலப்படுத்தப்பட்டாலும் பின்பக்கம் எந்தவொரு மாறுதலுக்கும் உள்ளாகவில்லை (பின்பகுதியில் மீண்டும் உள்நோக்கி சாய்ந்தது). கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி ( Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) இயுனிகோன் விதம்-5 & 6 (Unicorn Mk-5 & 6) எண்ணிக்கை: 6 விடுதலைப்புலிகள் 1996இல் ஓயாத அலைகள் ஒன்றின்போது ஒன்றும் (இங்கு மேலுமொரு பஃவல் விதம்- 1 உம் கைப்பற்றப்பட்டது), 1997இல் ஜெயசிக்குறுவின் போது இரண்டும், 1997/ 1998(ஓயாத அலைகள் இரண்டிற்கு முன்பாகவே) பக்கக் கவசத் தகடுகளை இழந்துவிட்ட இயுனிகோன் ஒன்றும், பின்னர் கடைசியாக 1999இல் ஓயாத அலைகள் மூன்றின் போது ஒட்டுசுட்டானில் ஒன்றும் கனகராயன்குளத்தில் ஒன்றுமாக மொத்தம் இரண்டும் என ஆக மொத்தம் 6 இயுனிக்கோன் விதம்-5/6 களைக் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் ஆகக்குறைந்தது (கிடைக்கப்பெற்ற படங்களில் இருந்து) 3 ஆவது இயுனிக்கோன் விதம் 6ஐச் சேர்ந்தவை என்பது அறியக்கூடியதாக உள்ளது. கைப்பற்றப்பட்ட 6 இயுனிக்கோன்களினது படிமங்களும் கீழே அடுத்தடுத்துள்ள மறுமொழிப்பெட்டிகளுள் கொடுக்கப்பட்டுள்ளன. 1) மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் முகப்புக் பக்கம்: 2) இவ்வூர்தி கைப்பற்றப்பட்டபோது சேதமடைந்து இருந்ததால் புலிகள் இதன் பின்பகுதிக்கு புதிய இரும்புத்தகடுகளை பொருத்தியுள்ளனர். மூட்டப்பட்டிருப்பது (mounted) M1939 (61-K) 37 மிமீ வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன். மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின்(armoured vehicle) உட்பக்கம்: 3) இவ்வூர்தி சிங்களவரிடமிருந்து கைப்பற்றப்பட்டபோது சேதமடைந்து இருந்ததால் புலிகள் இதன் பின்பகுதிக்கு புதிய இரும்புத்தகடுகளை பொருத்தியுள்ளனர்.. எப்படிக் கூறுகிறேன் என்றால் இதன் பக்கவாட்டுக் கவசங்களை உத்துப்பாருங்கள்... பஃவெலின் கவசம் போன்றில்லாமல் ஏதோ ஒரு தகரத்தை நிமிர்த்தி ஒட்டியிருக்கிறார்கள். மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: ... அருகில் தெரிவது பஃவெல் mk-1 ஆகும். மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: (இந்நிழற்படம் புலிகளால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஓர் படைத்துறைக் கண்காட்சியில் எடுக்கப்பட்டது ஆகும்.) 4) 'படிமப்புரவு: தமிழீழ விடுதலைப் புலிகளின் ''விடுதலை மூச்சு'' திரைப்படத்திலிருந்து. இதில் சிங்கள தரைப்படை சீருடையில் உள்ளவர்கள் தவிபு போராளிகள் ஆவர்' 5) & 6) இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட நிலையிலான நிழற்படங்கள் கிடைக்கப்பெறவில்லை. கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி (Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) இயூனிபஃவல் விதம்-2 (Unibuffel Mk-2) எண்ணிக்கை: 2 1) கீழே நீங்கள் பார்க்கப்போகும் கவசவூர்தியானது விடுதலைப்புலிகளால் சிறீலங்கா தரைப்படையினரிடமிருந்து 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கைப்பற்றப்பட்டது . இது பின்னர் புலிகளால் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது இதன் ஒரு பக்கம் மட்டும் AAA பொருத்துவதற்காக அலங்கம் அமைப்பதற்கு ஏற்றவாறு வட்ட வடிவில் மாற்றியமைக்கப்பட்டது.. முகப்புத் தோற்றம்: மாற்றி அமைக்கப்படாத பக்கம்: மாற்றி அமைக்கப்பட்ட பக்கம்: பின்பக்கம்: 2) உள்நாட்டு கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட ஊர்தி (Indigenous Mine-Resistant, Ambush-Protected vehicle). எண்ணிக்கை : 1 1) புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட இவ்வூர்தியானது பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றம் கொண்டுள்ளது. இதன் வடிவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது கண்ணிவெடிகள் மற்றும் எறிபொருள்களுக்கு(projectile) எதிர்ப்பாக அவர்கள் ஒரு முக்கோண அடிப்பகுதியையும் சாய்வான கவசத்தையும் கொண்ட உடலினை இதற்கு வடிவமைத்துள்ளனர். இதன் உடலமைப்பை முக்கோணமாக அமைத்ததால் இதனை மேலும் விரிவாக்க முடியாமல் போனாலும் ஒண்ணத் தக்கவாறு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெளிப்புறத்தில் உள்ள நீண்ட புறம்போக்கி குழாய் அழகியலைத் தருவதோடு சங்கிலி பாவாடை போன்ற அமைப்பு மிகையாகும். (அதன் பயன்பாடு என்னவென்று தெரியவில்லை) இதன் முகப்பில் உள்ள அந்த முக்கோண வடிவம் முழுவதும் இரும்பால் ஆனதால் எந்தவொறு தடங்கல்களையும் இடித்தழிக்கும் வல்லமை பெற்றுள்ளது. அத்துடன் இதன் நடுவில் அலங்கத்திற்க்கு ஏற்ப வட்டமான இடைவெளியும் விட்டும் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் மிகவும் நேர்த்தியாக நுட்பத்தில் மிகவும் முன்னேறியதாக, குறிப்பாக அவர்களின் 2009 ஆம் ஆண்டு காலத்திற்கு, கட்டப்பட்டுள்ளது. இதன் முடிவாக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது. ஓட்டுநர் இருக்கை: மேற்கண்ட ஊர்தியின் உட்பகுதி: உள்நாட்டுக் கவசச் சண்டை ஊர்தி (Indigenous Armoured Fighting Vehicle) எண்ணிக்கை : 1 இவ்வூர்தியானது இறுதிச் சண்டையில் ஆடி பிரண்டுள்ளது. இதன் கூரையாஅந்து லொறியின் கூரையோடு ஒத்துப்போகிறது. ஆடிகள் யாவும் கவச ஆடிகளாகவே தெரிகிறது. ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையின் கூரைப்பகுதி திறந்து மூடும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பக்கத்தில் படைக்கலம் வைப்பதற்கான ஓர் ஏந்தியும் பொருத்தப்பட்டுள்ளது. 1) செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised Personnel Carrier) எண்ணிக்கை: 5 இவற்றினை பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் செய்யப்பட்டது போல மிகவும் சிறப்பான முடிவாக்கத்தைக் கொண்டிருந்தன. அவ்வளவு நேர்த்தியாக உட்புறம் வடிவமைப்பட்டிருந்தது.. இதற்கு கண்டிப்பாக ஒரு 'வகைப்பெயர்' இருந்திருக்க வேண்டும். யாருக்கேனும் தெரிந்தால் தெரிவியுங்கள்../\.. இவற்றின் கவசத் தகடுகள் எல்லாம் 1/4 அளவுடையன ஆகும். பின்பக்க பெட்டியின் கவசத்தகடுகள் இரட்டை அடுக்குடையன. அவற்றின் முதலாவது கவசத்தகட்டுக்கும் இரண்டாவது கவசத்தகட்டுக்கும் இடையில் அரையடி இடைவெளி உள்ளது. அந்த இடைவெளிக்குள் மணல் நிரப்பப்பட்டுள்ளது, வெடிப்பிலிருந்து ஓரளவு காப்பு வழங்க. 1) மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின்(armoured vehicle) உட்பக்கம்: மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் பின்பக்கம்: மூலை & பக்கவாட்டு தோற்றம்: மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் முகப்புக் கதவுப் பக்கம்: ஓட்டுநர் இருக்கும் உட்பக்கம்: பின்பக்க படிக்கட்டுகள்: பின் பகுதியில் உள்ள உள்ளிருந்து சுடுவதற்கான புழைகள்: 2) மேற்கண்டதைப் போன்ற மற்றொரு கவசவூர்தி 3)மேற்கண்டதைப்போன்ற அழிக்கப்பட்ட மற்றொரு கவசவூர்தி: இக்கவசவூர்தியானது புலிகளால் மேற்கோள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலிற்கு எதிராக சிறீலங்கா தரைப்படையினர் மேற்கோண்ட தகரி தாக்குதலினால் எரிந்து அழிந்தது. இத்தாக்குதலின்போது கவசவூர்தியில் செலவான(travel) ஓட்டுநர் உட்பட்ட 6 கரும்புலிகளும் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். (கவசவூர்தியில் தெரியும் பெரிய ஓட்டையானது தகரியால் ஏற்படுத்தப்பட்டதாகும். நேரான மறுபக்கம் அப்படியே சிதைந்து விட்டது. கவசவூர்தியின் பின்பகுதியில் கோப்பி நிறத்தில் தெரிவது கரும்புலிகளுன் வித்துடல்கள்) மேற்கண்ட கவசவூர்தியில் தாக்குதல் நடத்தச்சென்ற கரும்புலிகளின் வித்துடல்கள்: 4) இது கட்டத் தொடங்கும் போதே கைப்பற்றப்பட்டு விட்டது. 5) செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (Improvised Fighting Vehicle) எண்ணிக்கை : 3 இதன் ஓட்டுநர் இருக்கையின் பக்கவாட்டுச் சாளரங்கள் முற்றாக கவசம்போடப்பட்டிருந்தன. முன்பக்கச் சாளரங்களில் ஓட்டுநர் பார்வைக்கு சிறு இடமொன்று, நீள்சதுர வடிவில், விடப்பட்டு அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஏனை இடங்கள் முற்றாக கவசம் போடபப்ட்டிருந்தன. பின் பக்கத்தில் வெளிய்ல் சுடுவதற்கு ஏற்ப ஒவ்வொரு பக்கத்திலும் 7 சூட்டுப்புழைகள் இருந்தன, சுவரின் மேற்பக்கத்தில். மேற்புறக் கூரையின்வழியே வெளியில் எழும்பிச் சுடுவதற்கு ஏற்ப அதில் சாளரங்கள் உள்ளதைக் கவனிக்குக (அந்த சூரிய ஒளி வரும்பகுதி). இவ்வாறாக கூரையில் இரு சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலுள்ள படத்தில் அதை நீங்கள் தெளிவாகக் காணலாம். பின் பக்கத்தில் முக்கால்வாசிக்கு கதவுகள் இருந்தன. அதன் மேற்பக்கம் திறந்ததாகவே இருந்தது. 1) உட்புறம்: சாளரம்: 2) இது கைப்பற்றப்படும்போது எரிந்த நிலையில் அதன் சுடுபுழைகளும் மேற்கூரையில் இருந்த சாளரங்களுமாக முற்றாக தகரத்தால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. முகப்புத்தோற்றம் கதவு: பின்பகுதி: 3) 18–05–2009 அன்று சிங்கள வல்வளைப்புப் படைகளால் சிதைந்த நிலையில் கைப்பற்றப்பட்டது ஆகும். செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised Personnel Carrier) எண்ணிக்கை : 1 1) செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised Personnel Carrier) எண்ணிக்கை : 1 1)இதற்கு மேற்கூரை உண்டு. அதுவும் கவசத்தால் ஆனது ஆகும். செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised Personnel Carrier) எண்ணிக்கை : 2 ஓட்டியிடத்தில் சாளரத்திற்கு மட்டும் கவசம் போடப்பட்டுள்ளது. பின்பகுதி முற்றாக கவசப்படுத்தப்பட்டுள்ளது. 1) 2) ஓட்டியிடத்தில் சாளரத்திற்கு மட்டும் கவசம் போடப்பட்டுள்ளது. செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised personnel carriers) எண்ணிக்கை : 1 1) முன்பக்கத் தோற்றம்: கறுப்பு ஆடி உள்ள இடமெல்லாம் கவசம் போடப்பட்டிருந்தது. பகக்ச் சாளரங்கள் முற்றாக கவசம் போடப்பட்டு கறுப்புக் ஆடியால் மறைக்கப்பட்டிருந்தன. ஆந்த ஆடியை ஏற்றியிறக்கலாம். அந்த ஆடியின் கவசம் போடப்பட்டிருந்த உட்பகுதியின் மேற்பக்கத்தில் சிறு புழை போன்று ஒன்று இருந்தது, உள்ளிருந்து வெளியில் பார்ப்பதற்கு. உட்புறம்: இதன் உட்பகுதியை நன்கு உத்துப் பாருங்கள்.. அந்தக் கோடியில் தெரியும் கதிரைக்குப் பின்னால் ஓர் படுக்கை உள்ளது.. அதில் படுத்து ஓய்வெடுக்கலாம்.. மேலும் கதிரைக்கு இருபுறமும் சுவரோடு நீள் இருக்கை உள்ளது. சுவர் முற்றாக கவசம் போடப்பட்டுள்ளது. கதவு: கதவின் கீழ்ப்பகுதி: செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers) எண்ணிக்கை : 1 1) 'முன் அம்புக்குறி இக்கவசவூர்தியையும், அப்பால் உள்ள அம்புக்குறி கீழுள்ள கவசவூர்தியையும் காட்டி நிற்கின்றன' உடனே செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Instantly improvised personnel carrier) எண்ணிக்கை : 2 'உடனே செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி' என்பது கையில் கிடைத்தவற்றை மட்டும் கொண்டு செம்மைப்படுத்தப்பட்ட கவசவூர்திகளாகும். கீழே உள்ள கவசவூர்திகளானவை ஒரு விதமான இரும்பால் ஆன அலுமாரிகளை(அந்த நிறத்தில் உள்ளவை) தம் பக்கவாட்டின் கவசங்களாக கொண்டவையாகும். இவற்றின் ஓட்டுநர் இருக்கும் முன்பகுதியானது எந்தவொரு கவசங்களும் இல்லாததாகும். 1) 2) 'வலது முதலாவது அம்புக்குறி மேலுள்ள கவச ஊர்தியையும் காட்டி நிற்கின்றது' படைத்துறைப் பாரவூர்தி (Military truck) எண்ணிக்கை : 5–10 கிளிநொச்சி படைத்தளத்திலும் ஆனையிறவிலும் இதுபோல பல பாரவூர்திகள் புலிகளால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1) 2) 3)புதுமாத்தளன் ஏப்பிரல் 24 | படிமப்புரவு: David gray 4) 5) இசுராலியன் வகை பாரவூர்தி (Stallion type army truck) எண்ணிக்கை - 4 ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஒன்றில் கனகராயன்குளப் படைத்தளத்திலிருந்து இதே போன்று ஒன்று படைக்கலன்கள் நிரப்பப்பட்டு தாக்குதலில் பிரண்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கில் 29 ஆம் திகதி இத்தவினுள் வைத்து ஒன்று கைப்பற்றப்பட்டது; இரண்டு ஆனையிறவு சமரின் முடிவில் கைப்பற்றப்பட்டது. (ஆதாரம்: https://eelam.tv/watch/க-ட-ரப-ப-தர-ய-றக-கம-ஓய-த-அல-கள-3-கட-டம-4-kudarappu-landing-ஆன-ய-றவ-ம-ட-ப-ச-சமர_mslZYeVtH66ksnM.html இதில் கடைசி 44:30 நிமிடத்தில்). 1) கைப்பற்றப்பட்டவற்றுள் ஒன்று பின்னாளில், 2007 தைப்பொங்கலில், பயன்பாட்டில் இருந்தபோது: நாடோடியம்(Gypsy) எண்ணிக்கை : 2–4 1) 2) 25-3-2009 படைத்துறைப் பொநோவகம்(military jeep) எண்ணிக்கை : 3–5 1) 2) ஆனையிறவில் ஜெயந்தன் படையணியினர் செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (Improvised fighting vehicle) எண்ணிக்கை : 13–30 இரட்டை இருக்கை கொண்ட சாகாடு(pickup) 1) ஆய்தம் : இடது - 20மி.மீ. – ஜி.ஐ.ஏ.ரி. எம்693 2) ஆய்தம் : வலது - 14.5மி.மீ. – வகை 58 (சிபியு-2 ) 3) ஆய்தம் : 12.7மி.மீ. – வகை 54 சுடுகலன் மார்ச் 2009 அன்று சிறிலங்காப் கைப்பற்றப்பட்டது. முன்பகுதி முழுவதும் கவசம் போடப்பட்டிருந்தது. இதே போன்று அன்று மேலும் ஒன்று கைப்பற்றப்பட்து. அதிலும் 12.7மி.மீ. சுடுகலன் பூட்டப்பட்டிருந்தது 4) ஓட்டுநர் உட்பகுதி... கவசம் போட்டப்பட்டுள்ளது: 5) 6) 7) 8 ) 9) இது இரணப்பாலையில் கைப்பற்றப்பட்டது 10) இது நிலத்தினுள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்டு தரிபெற்றிருந்தது. இதன் முன்பகுதி முழுவதும் கவசம் போடப்பட்டுள்ளது: மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: 11), 12) & 13)→ இவை ஆனந்தபுரத்தில் கைப்பற்றப்பட்டன. அன்று இதே போன்று இரட்டை இருக்கைகொண்ட மொத்தம் மூன்று சாகாடுகள்(pickup) கைப்பற்றப்பட்டன. மூன்றிலுமே 12.5 மி.மீ. சுடுகலன்கள் பொருத்தப்பட்டிருந்தன. 14) 2007 ஆம் ஆண்டைச் சேர்ந்த படம் 'PK இந்திரச் சுடுகலன் பொருத்திய ஊர்தியில் அமர்ந்திருக்கும் புலிவீரன்' செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised personnel carrier) எண்ணிக்கை : 10+ crew cab 1) கீழ்கண்ட ஊர்தியில் புலிகளின் உருமறைப்பு(camouflage) பூசப்பட்டுள்ளது 2) செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised personnel carriers) எண்ணிக்கை : 14–30 நான்கு இருக்கை கொண்ட சாகாடு(pickup) இதே போன்ற உருமறைப்பு கொண்ட 9 ஊர்திகள் தொடரணியாய் செல்வதை புலிகளால் வெளியிடப்பட்ட ஓர் நிகழ்படமொன்றில் (video) கண்டுள்ளேன்.. கீழ்க்கண்டதுதான் நான் சொன்ன அந்த ஊர்தி தொடரணி.. இது ஒரு 5 நொடி ஓடக்கூடிய நிழற்படம்(video ) 2) காவல்துறை 3) காவல்துறை 4. மேலும் இதே போன்ற கறுப்புநிற சாகாடு ஒன்று கிளிநொச்சி மாவட்ட வருவாய்த்துறையினரிடம் பயன்பாட்டில் இருந்தது. 5) செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Improvised personnel carriers) எண்ணிக்கை : 15–30 பஜெரோ (pajeros) இவ்வூர்திகள் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளவாய்களால் பயன்படுத்தபட்டன. இவற்றில் ஒரு சில உருமறைப்புகளையும் ஒருசிலது நிறுவன நிறங்களையும் (company colour) கொண்டிருந்தன. இவற்றில் பெருமளவானவை இறுதி நேரத்தில் சிங்கள படைத்துறையால் எடுக்கப்பட்டு அவர்களின் சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. 1) & 2) & 3) 4.) 5. கவசம் போட்டப்பட்டுள்ளது: 6. Limousine pajero -கவசம் போட்டப்பட்டுள்ளது செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி வையம் (improvised personnel carrier van) 1)Dolphin toyota எண்ணிக்கை : இவ்வாறு மேம்படுத்தப்பட்டது மட்டும் புலிகளிடம் ஒன்று அ இரண்டு இருந்திருக்கலாம் என்று நம்புகீறேன். உள்ளே 3 இருக்கைகள் பூட்டப்பட்டுள்ளன. 2) கயெசு வையம் (kayas van) எண்ணிக்கை : 20+ இவை ஆளணி காவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. செம்மைப்படுத்தப்பட்ட சண்டை இழுபொறி(Improvised Fighting Tractor) எண்ணிக்கை : 1/2 1) இது முற்று முழுதாக கவசம் போடப்பட்ட ஒரு இழுபொறியாகும். கீழுள்ள இழுபொறிபோன்றல்லாமல் இதன் பின்பெட்டியானது ஒரு குவியறை போன்று ஆக்கப்பட்டுள்ளது... அதனினுள் ஆட்கள் இருக்கும் அளவிற்கு பெரிதாக உள்ளது. முன் ஓட்டுநர் இருப்பிடத்தில் முன் மற்றும் இரு பக்கவாடு ஆகியவற்றில் சிறு சாளரம் உள்ளது. இதன்மூலம் வெளியில் நடப்பவற்றை ஓட்டுநர் கவனிக்கலாம். பின் பக்கத்தில் ஒரு பெட்டகம் உள்ளது. பயன் தெரியவில்லை. செம்மைப்படுத்தப்பட்ட வழங்கல் இழுபொறி (Improvised Suppyly Tractor) எண்ணிக்கை : 7–10 புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு இறுதிப்போரில் வழங்கலுக்கு பயன்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட இழுபொறிகள் 1) 'பக்கவாட்டுத் தோற்றம்' 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்பக்கம்' 3) 4) 'மேற்கண்ட இழுபொறியின் பின்பக்கம்' 'மேற்கண்ட இழுபொறியின் பின்பக்கம்' 4) 5) 6) 7) 8 ) இஃவெரெட்டு கவச சகடம் (Ferret armoured car) சிறீலங்காத் தரைப்படைகளால் இறுதிப்போரில் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட இடம்: புலிகளின் கவசவூர்தி அணியமாக்கல் தொழிற்சாலை 1) உள்நாட்டு கவச சண்டை ஊர்தி (Indigenous armored fighting vehicle) இவ்வூர்தி முக்கால்வாசி கட்டுமானம் முடிந்தநிலையில் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். இதன் பெரிய சக்கரங்கள் இதனை கரடுமுரடான பாதைகளிலும் இலகுவாக செல்லக்கூடியதாக ஆக்கியிருக்கும். மேலும் அந்த வைர வடிவ உடலமைப்பு இதனை கண்ணிவெடி-எதிர்ப்பாக மாற்றியிருக்கிறது. ஆனால் இதன் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படாததால் இதனைப் பற்றி முழுமையாக அறிய முடியவில்லை சக்கரத்துடன் கூடிய பகுதி: முன்பக்கம்: பிற்சேர்க்கை (10-17-2020) → கவச உழுபொறி (Armoured Tractor) → எண்ணிக்கை: 2 இவ்வூர்தியின் வகைப் பெயரோ விதப்பெயரோ எனக்குத் தெரியவில்லை. இறுதிப்போரில் இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது ஜயசிக்குறுயி எதிர்ச்சமரக் காலத்தில் பரந்தன் - கிளிநொச்சி படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் ஊடுருவித் தாக்குதலில் நடுவீதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டதாகும். இத புறங்களில் எப்படைப் பிரிவுக்குச் சொந்தமானது என்று எழுதப்பட்டிருந்தது. 'கைப்பற்றப்பட்ட போது' இதன் மேற்பகுதியில் ஒற்றைச் சுடுகலன் கொண்ட அலங்கம் உள்ளது. மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: இதன் பக்கத்தில் இக்கவசவூர்தியின் பெயர் எழுதப்பட்டுள்ளதை கவனிக்குக. '*-* ON MK III' கிட்டத்தட்ட இதே போன்ற ஒன்று 95 க்கு முன்னர் புலிகள் வைத்திருந்தனர். அது தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். அதன் நிழற்படம் வாசகர் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன். இதன் மேற்புறத்தில் இரட்டை சுடுகலன் கொண்ட அலங்கம் உள்ளது. அதில் உள்ள சுடுகலமானது பெரும்பாலும் .50 கலிபர் பிரவுனிங்ஙாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இதன் சக்கரங்களை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு கவசம் பூட்டப்பட்ட உழுபொறி(Tractor) என்பது புலப்படுகிறது. இதற்கு பவள் கவசவூர்தியில் பொருத்தப்பட்டிருக்கும் சன்னத் தகை ஆடிகள்(Bullet resistant glass) போன்ற ஆடிகள் பூட்டப்பட்டிருக்கிறது. இதன் கவசத்தில் உள்ள நீக்கல்களை வைத்துப் பார்க்கும்போது இதன் தகடுகள் மிகவும் மொத்தமாக உள்ளதாக தெரியவருகிறது. (95 இற்குப் பின்னர் இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை..) கீழ்ப்படத்தையும் மேற்படத்தையும் ஒப்புநோக்குகையில் இரண்டும் வெவ்வேறு தோற்றத்திலான ஆனால் ஒரே விதத்தைச் சேர்ந்தையாக(இரண்டுமே கவச உழுபொறிகள்தாம்) இருக்கின்றன. ஆகையால் இரண்டும் உள்நாட்டு விளைவிப்புக்கள் என்னும் முடிவிற்கு வருகிறேன். பிற்சேர்க்கை (10-17-2020) → நிலத் தோரணம் (Land rover) → எண்ணிக்கை: 6–10 இது 2008 வவுனியாவில் நடைபெற்ற சமர் ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். 2) 3) தென் தமிழீழத்தில் 4) கட்டம் போட்ட சட்டை போட்டிருப்பவர் தான் லெப்.கேணல். சிந்து.. இந்தக் குழுவினர் வைத்திருப்பது SPG 9 என்னும் ஆய்தம். 5) 6) கூடுதல் செய்திகள் புலன கிட்டிப்பு: சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சொல்லாடல்: களநிலை ஊர்தி "களநிலை ஊர்திகள் என்பது விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்த சொல். அதாவது யுத்தகளத்தில் நிலையாக யுத்தத்தேவைகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கவசக் காப்புக்கொண்ட ஊர்திகளை அப்படி அழைத்தோம். அவ்வாறான ஊர்திகள் காயப்பட்ட வீர்ர்களை காக்கவும், சில யுத்த பின்கள பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது." உசாத்துணை: https://weaponsystems.net/system/744-DShK army.lk Alvis Saladin (and associated) Ideas and Inspiration Torched LTTE Bullet-Proof Limousine, Four more Cars & Air-Conditioned Bungalow Uncovered https://www.army.lk/news/sea-tiger-base-empty-ltte-boats ஓயாத அலைகள் - 3 | ஓ.ஆ.-3 /watch?v=oecqssSmMKE ஜெயசிக்குறுய் ஓராண்டு வெற்றிச்சமர்க் காணொளி படிமப்புரவு (image courtesy) YouTube Amantha Perera kumaran satha rupabahini Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள் Tigers seize SLA arms storage in PTK ellaalan Krishan kumar Log In or Sign Up http://slsecurityforces.blogspot.com/2009/02/armour-plated-van-used-by-ltte-to.html Wikimedia Commons http://Quora.com Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips Indian Defence Review A new way to view Flickr photos and more... aruchuna http://jvpnews.com http://www.ilankainet.com/2009/03/blog-post_4126.html ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 43 replies
-
- 3
-
- புலிகளின் கவச ஊர்திகள்
- புலிகளின் கவசங்கள்
-
(and 22 more)
Tagged with:
- புலிகளின் கவச ஊர்திகள்
- புலிகளின் கவசங்கள்
- கவச ஊர்திகள்
- புலிகளின் டாங்கிகள்
- தகரிகள்
- தகரி
- பவல் கவச ஊர்தி
- ltte indigenous armoured vehicles
- கவச வாகனங்கள்
- ltte armoured vehicles
- ltte armour
- tamil eelam armoured vehicles
- tamil armoured vehicles
- suuran armoured team
- eelam armoured vehicles
- tamil armoured fighting vehicles
- ltte armoured corps
- ltte tank
- tamils tanks
- tamileelam armoured cops
- sri lankan armoured vehicles
- விடுதலைப் புலிகளால் போரில் பயன்படுத்தப்பட்ட கவச ஊர்திகள்
- வாகனங்கள்
- தமிழரின் கவச ஊர்திகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
பிரெஞ்சு வீரர்களும் இலெக்லேர்கு(Leclerc) தகரியும்.jpg
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: தகரிகள்
-
From the album: தகரிகள்
-
யேர்மனிய மனை வலுவெதிர்ப்பு படையின் M 48 தகரி (1985).jpg
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: தகரிகள்