Jump to content

Search the Community

Showing results for tags 'தயாளன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. 2020 எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் கற்பனைகளை வரலாறாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இரவலாக அல்லது கடனாகப் பெற்ற பெயரே. உண்மையான ரெலோவின் தலைவரின் பெயர் தம்பித்துரை முத்துக்குமாரசாமி. இவர் , திருநெல்வேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் தற்போது இவர் உயிருடன்தான் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறார் . ஆயுதப் போராட்டம் என்றால் அதன் வரலாறு கிழக்கு மாகாணத்தில் இருந்தே வெளிப்பட்டது. 1958 இல் குடியேற்றவாசிகளான சிங்களவர்களுக்குச் சார்பாக தமிழர் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினர் வந்தனர். இவர்களை ஷொட்கன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியதுடன் அவர்கள் வந்த ஜீப்பையும் எரித்தனர் துறைநீலாவனை இன உணர்வாளர்கள். இவ்வாறு விரட்டியேரில் ஒருவரான கனகசூரியம் என்பவரும் அவரது துணைவியாரும் பின்னர் கல்முனை பட்டின சபையாக விளங்கியபோது அதன் உறுப்பினர்களாக விளங்கினர். இவர்களது மகன்தான் அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி. எம்.ஜீ.ஆரை மட்டந்தட்ட கருணாநிதி பயன்படுத்துவது அவர் மலையாளி என்று. அதனால்தான் பாதிக்கப்படும் தமிழர் தொடர்பாக எம்.ஜீ.ஆர். அக்கறை காட்டுவதில்லை என்ற சாரப்படப் பேசி வந்தார். பொறுமை இழந்த எம்.ஜீ.ஆர். ஒரு கட்டத்தில் ‘குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்தானே கருணாநிதி”, என்றார். இந்தப் பீரங்கித் தாக்குதலில் நிலைகுலைந்து விட்டார் கருணாநிதி. எப்படியோ ஓடித் திரிந்து குட்டிமணி குழுவில் எஞ்சியோரில் சிறீசபாரத்தினத்தைத் தொடர்பு கொண்டனர் தி.மு.கவினர். ‘குட்டிமணி தீவிரவாதி என்ற விடயம் கருணாநிதிக்குத் தெரியாது. வேறு வழக்கு விடயமாகக் கைதாகியிருந்தவர் என்ற அடிப்படையில்தான் இலங்கையிடம் அவரை ஒப்படைத்தார் அப்போதைய முதல்வர்” என்று ஓர் அறிக்கை விடுத்தார். அப்போதுதான் தன்னை செயலதிபர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறீசபாரத்தினம். அந்த அறிக்கையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் வெளியுலகுக்குத் தெரிந்தது. இந்த அறிக்கைக்கு முன்னதாக பந்தண்ணா என்றழைக்கப்படும் ராசப்பிள்ளையே இதனை வழிநடத்தி வந்தார். இதற்கு முன்னதாக இக்குழு இயங்கிய விதம் குறித்து ஐயர் தனது புத்தகத்தின்33,34 ஆம் பக்கங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கதுரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அவர்கள் அப்போது ரெலோ (TELO) என்ற அமைப்பை உருவாக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர். பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பில் இருந்த எவருமே அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாக கடத்தல் தொழிலையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவும் மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல் நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கினோம்.” இதே பெருந்தன்மை குட்டிமணி அண்ணா, தங்கண்ணா ஆகியோரிடமும் இருந்தது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரி இலச்சினையுடனான அறிக்கையை ஊடகங்களுக்கு (வீரகேசரி உட்பட) வெளியிட்டனர் புலிகள். இதில் மொத்தம் 11 பேரின் மீதான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ஆறாவது பெயரான தங்கராசா (முன்னாள் எம்.பி. அருளம்பலத்தின் செயலாளர்) மீதான நடவடிக்கையை குட்டிமணி குழுவினரே மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு ஒரு அறிக்கையை தாங்கள் வெளியிடப் போவதாகவும் எனவே தங்கராஜாவின் சம்பவம் குறித்து என்ன செய்வது என குட்டிமணி, தங்கத்துரையிடம் கேட்டபோது,’ நாங்கள் உங்களைப் போல கட்டுப்பாடாக இருப்பது சிரமம். எங்களின் தொழிலுடன் (கடத்தல்) உணர்வு ரீதியாக செய்யக்கூடியவற்றையே செய்யப் போகிறோம். எனவே அதனையும் புலிகளின் பேரிலேயே உரிமை கோருங்கள்”, எனக் குறிப்பிட்டதாக ஒரு சந்திப்பில் இளங்குமரன் தெரிவித்தார். இதனையே ஐயரும் தனது நூலில், ‘தங்கராஜா கொலை முயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட குட்டிமணி, தங்கதுரை சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபரத்தை மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகள் பெயரிலேயே உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராசாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.” (பக். 117) எனக் குறிப்பிடுகிறார். http://www.ilakku.org/wp-content/uploads/2020/02/WhatsApp-Image-2020-02-22-at-08.57.07.jpeg புலிகள் – குட்டிமணி குழு ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட’துரோகத்துக்குப் பரிசு” (சுந்தரம் மீதான சாவொறுப்புக் காரணங்கள்)நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு (கிருஷ்ணா வைகுந்தவாசனின் 1982 தைப்பொங்கலன்று தமிழீழப் பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாடு) என்ற தலைப்பிலான பிரசுரங்களும் புலிகளின் இலச்சினையுடனேயே வெளியிடப்பட்டன. சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் விளைவால் இனி தனித்தனியாக இயங்குவோம் எனப் பிரபாகரன் முடிவெடுத்தபோது இரு பகுதியினரும் இணைந்து மேற்கொண்ட நீர்வேலி மக்கள் வங்கி வாகனத் தொடரணியை மறித்துக் கையகப்படுத்திய பணத்தின் மீதியையும், வாங்கிய ஆயுதங்களையும் இவர்களிடம் ஒப்படைத்தார். இம்முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த சீலனிடம்,’எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இதைப் போல பல விடயங்களை உங்களால் செய்ய முடியும். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா இல்லாத நிலையில் அவர்களால் இது போன்ற ஒன்றைச் செய்வது சாத்தியமற்றது”, எனக் கூறினார். ஏற்கெனவே தங்கண்ணா, குட்டிமணி அண்ணா முதலானோரை தற்கொலைத் தாக்குதல் மூலமேனும் விடுவிப்போம் என்று தான் சொன்ன கருத்துத் தொடர்பாக மௌனமாக இருந்தவர்களிடம் ‘நாங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக நீங்கள் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்குவோம்”, எனத் தெரிவித்திருந்தார் பிரபாகரன். இதெல்லாம் நடந்தது இந்தியாவில். அப்போது செல்வம் இலங்கையில் இருந்தார். (அன்று அக்குழுவில் இருந்தவர்களில் இவர் மட்டுமே நாட்டில் எஞ்சியிருக்கிறார்.) 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் உருவானது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாகக் காரணமானது. தரப்படுத்தல் சட்டம் மாணவர்களுக்கு பாதகமாகக் கொண்டு வரப்பட்டபோது இந்தக் கருத்து வலுவானது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் ‘எண்ணிக்கை தெரியாத குற்றம்”, என்றொரு வசனத்தை சிவாஜி பேசுவார். அதுதான் செல்வத்தின் நிலையும். 1969 இல் ரெலோ உருவானதாக சொல்கிறார். பொதுவாழ்வில் ஈடுபடுவது என்பது சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. இதன் அடுத்த கட்டம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்த பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. வரலாற்றைத் தவறாகப் பதியக்கூடாது. ஒரு சட்டவிரோத கடத்தல் தொழில் செய்பவர்களுக்கும் பொலிஸ_க்கும் இடையே முரண்பாடு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனை விடுதலைப் போராட்ட நடவடிக்கை என நிறுவ முற்படுவது வரலாற்றுத் தவறு. அடுத்த தேர்தலிலும் தனது எம்.பி. பதவியை உறுதிப்படுத்தவே 50 வருடக் கதை விடுகிறார் செல்வம். அப்போது இவருக்கு என்ன வயதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தெரிவாவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கட்சியில் முதலாவது எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வம் அந்த நிலையை இழந்து விட்டார். எம்.பி. பதவியையேனும் தக்கவைக்கவே இந்த வரலாற்றுப் புரட்டு. மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழரின் எதிர்ப்பு ஆயுத முனையில் முதலில் புரிய வைக்கப்பட்டது துறைநீலாவணையில். பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டமாக ஆயுதவழியில் ஆரம்பித்தது 1972 இல். அது சரி மாவைக்குமா வரலாறு தெரியாது? காசி ஆனந்தனின் ‘அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்” என்ற பாடல் ஒலிக்கும்போது யார் யாருக்கு பிரபாகரன் சுட்டுக் காட்டினார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமா? ஐயரின் நூலில் 56 ஆம் பக்கத்தில் ‘சேனாதிராசா, காசி ஆனந்தன், பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மெரீனா பீச்சில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கும்போது ரெலோவின் பொன்விழகுறித்த அழைப்பு விடுக்கும்போது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாக இருந்தது ஏன்? சுதுமலை முற்றுகையின்போது கிட்டு உட்பட புலிகளுக்கு இழப்பு நேராமல் முற்றுகையை முறியடித்தது தானே என்று (இச்சமரில் மேஜர் அல்பேட் வீரச்சாவு) கதை விட்ட ஜனா இப்போதும் 50 வருடக் கதை சொல்கிறார். உண்மை இப்படி இருக்கப் புதிய வரலாற்றுப் புனை கதைகளைக் கூற செல்வம், ஜனா, போன்றோர் முற்படுகின்றனர்.வரலாற்றை மறந்தவர்களுக்கு வரலாற்றில் இடமில்லாமல் போகலாம். வல்வெட்டித்துறைக்கெனத் தனியான வரலாறு உண்டு. பெருமைக்குரிய விடயங்களில் தலையானது பிரபாகரன் பிறந்த மண் என்பது. அன்னபூரணி என்ற பாய்மரக் கப்பலினை அமெரிக்காவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே ஓட்டிச் சென்ற கடலோடிகளைக் கொண்டது. இராட்சதப் புகைக்கூண்டுகளை இலங்கை மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தக் கடலோடிகள், பர்மாவுக்கான வணிகப் பயணத்தின்போது பறந்து சென்ற புகைக்கூண்டு ஒன்று இந்தப் பாய் மரக் கப்பலுக்கு அகே வந்தபோது அதனை எட்டிப் பிடித்து அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து இலங்கை மண்ணில் இதனை உருவாக்கினர். பட்டத் திருவிழா வல்வையின் தனித்துவம், யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற இராசலட்சுமி என்ற துணிச்சல்காரி பிறந்த மண். புலிக்குப் பிறந்தது பூனையாகாது எனக் களமுனையில் நிரூபித்தவர் இவரது மகன் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார். முன்னுக்குப் போ என்ற வார்த்தையை விட எனக்குப் பின்னே வா என்றே போராளிகளை வழிநடத்திய தளபதி இவர். போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரது படை நடத்தும் ஆற்றலையும் துணிச்சலையும் வான் வழியாக சுதுமலையில் களமிறங்கிய சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரின் முற்றுகையை முறியடித்த விதத்தை நேரடியாகக் கண்டு வியப்புற்றனர். இதன் பின்னர் சுதுமலை முகாமை விட்டுப் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, ‘போராளிகளே உங்களது ஆற்றலை, அர்ப்பணிப்பை, வீரத்தை நேரடியாகப் பார்த்தோம். தயவு செய்து எங்கள் ஊரை விட்டுப் போய்விடாதீர்கள்”, எனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இத்தகைய வரலாறு தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் உதித்த 36 இயக்கங்களுள் வேறு எவற்றுக்கும் இல்லை. அத்தகைய தளபதி தனது சாவின் போதும் சரித்திரம் படைத்தான். இத்தகைய பெருமைகள் கொண்ட வல்வெட்டித்துறையின் சாதனைப் பட்டியல் மிக நீண்டது. உபசரிப்பிலும் இந்த மக்கள் தனித்துவமானவர்கள். போராளிகளோ மற்ற எவரோ சாப்பாட்டுக்காகக் காத்திருக்கையில் பார்சலிலோ, கிண்ணத்திலோ கறி வரும். இங்கோ தூக்கு வாளியில் கொண்டு வந்து தமது அன்பை வெளிப்படுத்துவர். இத்தகைய ஊருக்குப் பலம் சேர்க்கிறோம் என்றெண்ணி கற்பனைகளை வரலாறாக்கவோ, அதற்குத் துணை போகவோ தேவையில்லை. இன்று ச.ச.முத்து என்பவர் மூத்தபோராளி என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் சக்கைப் போடுபோட்டு வருகிறார். 1980 இற்குப் பின் இயக்கத்துடன் தொடர்பு வைத்த – இணைந்து கொண்ட எவருக்குமே இந்த முகம் பரிச்சயமற்றது. தான் மட்டுமே தலைவர் மீது விசுவாசம் கொண்டவராக நடிக்கும் நடிப்புக்கு சிவாஜி, கமல் போன்றோரெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ‘ஒரு விளக்குக் கொழுத்த ஆசைப்படுகிறார்கள்”, என்று தலைவரின் இழப்பை ஒத்துக்கொள்வோரைச் சாடுகிறார். 1979 இல் சுமார் இரு வார காலம் வீரவாகு என்ற பெயரில் விபத்தாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்தான் இந்த ச.ச.முத்து. இவர் குறித்து ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்” என்ற தலைப்பில் கணேசன் (ஐயர்) எழுதிய நூலில் பின்வருமாறு காணப்படுகின்றது. "சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கற்றுக் கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இது தெரிய வரவே குமரப்பா, மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்பு கொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கோருகின்றனர். வீரவாகும் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர் பொலிஸில் சரணடைந்து விடுகிறார்.” இத்தகைய வரலாற்றைக் கொண்ட ச.ச.முத்து பிரான்ஸில் இருந்து வெளிவரும் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார். எங்கள் மண்ணின் வரலாற்றை நா.யோகேந்திரநாதன், சாந்திநேசக்கரம் போன்றோர் தத்ரூபமாக எழுதினாலும் இவர்கள் என்றும் போராளிகளாக இருந்ததில்லை. போராளி என்று பொதுவெளியில் சொல்லிக் கொண்டதுமில்லை. அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்கவும் அனுமதித்ததில்லை. 2016 மாவீரர் நாளன்று பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக வெளிவந்த குறிப்பில் ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும் – சமர்களப் போராளியும் – பெருந் தளபதிகளின் நண்பரும் – தேசியத் தலைவருடன் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்டவரும் – வரலாற்று ஆய்வாளருமான ச.ச. முத்து அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினவு கூர்ந்ததுடன் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டு நூல் வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐயரின் குறிப்பை வாசித்தபின் சமர்க்களப் போராளி என்று குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரளி என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடம் ஒரு பத்திரிகையாளர், இயக்கத்தில் வல்வெட்டித்துறையின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டார். அதற்குக் கிட்டு, ‘புலிகள் ஒரு தலைமறைவு இயக்கம். இதற்கு இரகசியம் பேணப்பட வேண்டும். அதனைத் தலைவர் ஆரம்பிக்கும்போது தனது பாடசாலை சகாக்கள், நண்பர்கள் போல நம்பிக்கைக்குரியவர்களை இணைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில்தான் மாத்தையா, குமரப்பா, ரகு, பண்டிதர், சங்கர் போன்றோர் படிப்படியாக அவருடன் இணைந்து கொண்டோம். இன்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் உருவாகி வருகின்றனர். உதாரணத்திற்கு மன்னாரில் விக்ரர், இனி மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களைச் சேர்ந்தோர் பொறுப்பெடுப்பர். வன்னியிலும் மாத்தையா இனங்காணப்பட்டவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.” எனக் கூறினார். இதுதான் யதார்த்தம். கிட்டு குறிப்பிட்டவாறே வரலாறும் நடந்தது. இந்த விடயத்தில் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட வேண்டும். 1983 ஏப்ரல் 07 அன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் நிகழ்ந்த தாக்குதலில் முதன்முறையாக ரி-56 ஆயுதம் கைப்பற்றப்பட்டது. கொக்குவிலில் புலிகள் இருந்த அறையொன்றுக்குள் இது கொண்டுவரப்பட்டது. பொன்னம்மான் அதனை தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு சில நிமிடம் நடனமாடினார். அடுத்தடுத்த நாட்களில் இன்னொரு தாக்குதலை விரைவாக நடத்த வேண்டும் என தலைவரிடம் வலியுறுத்தினர் சில போராளிகள், ‘நான் இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இந்தப் போராட்டத்தில் எத்தனையோ பேர் வந்து போய்விட்டார்கள். எனக்கு மிஞ்சி இருப்பது இந்த 30 பேரும்தான். ஆகவே அவசரப்படாமல் நிதானமாக நாங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். வந்து போனவர்களின் முகங்களில் எது எது அவரது ஞாபகத்துக்கு வந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. 1983 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட வேண்டும். பல்வேறு தொடர்புகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள லொட்ஜ்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் இரு இளைஞர்களுக்கிடையே சிறு முரண்பாடு. அதில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் மற்றவரிடம், ‘றெயினிங் முடிச்சு வல்வெட்டித்துறைக்குள்ளாலதானை போவாய். அப்ப பார்த்துக் கொள்ளுறன்”, என்றார் மற்றவரிடம். இந்த விடயம் தலைவருக்குத் தெரிய வந்ததும் ‘அவரை அடுத்த வண்டியிலேயே (படகு) ஊருக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறான சிந்தனையுள்ளவர்கள் இயக்கத்துக்குச் சரிவர மாட்டார்கள்”, என உத்தரவிட்டார். இவ்வாறு சொன்ன இளைஞனுக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கலாம், அவன் செய்த தவறுக்காக மட்டுமல்ல ; இயக்கத்தில் இனி எவருக்குமே இந்த மாதிரிச் சிந்தனைகள் வரக்கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ’30 பேர் கொண்ட இயக்கமாக இருந்த புலிகள் இயக்கம் சீலன், ஆனந்த், செல்லக்கிளி அம்மான், என மூவரை இழந்து நிற்கிறது. இந்திய அரசு 200 பேருக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளது. ஆனால், 250 பேரளவில் இப்போது வந்துவிட்டார்கள். திடீரெனப் பருத்து விட்டோம். இனித்தான் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதில் சவாலை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே காலகட்டத்தவர் என்றவகையில் இந்தச் சவால் சாமானியமானதல்ல” என்று பண்டிதரும் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது விடயம் புலேந்திரன் – குமரப்பா தொடர்பானது. 1983 என்றொரு எல்லையை (திருநெல்வேலித் தாக்குதல்) தலைவர் கணிப்பிட்டிருந்தார். உண்மையில் குமரப்பா இயக்கத்தில் பிரிவு ஏற்படுவதற்கு முன்னரே அங்கம் வகித்திருந்தார். (அதிலும், புலேந்திரன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னரே.) இருவருமே மாவட்டத் தளபதிகளாக விளங்கியவர்கள். எனினும் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டபோது குமரப்பா, காந்தன், சாள்ஸ் போன்றோர் விலகியிருந்தனர். இவர்கள் திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். செல்லக்கிளி அம்மான், யோகன் பாதர் போன்றோர் திருநெல்வேலித் தாக்குதலுக்கு முன்பாகவே மீண்டும் இணைந்து கொண்டனர். புலேந்திரன் மத்தியகுழு உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டாலும் குமரப்பாவுக்கு இந்த நிலை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த இனத்தின் தலைவனாகத்தான் பிரபாகரன் நடந்து கொண்டார். தான் வகுத்த விதியை அவர் மீறவில்லை. இந்த விடயத்தைத் தேவர் அண்ணா போன்றோர் புரிந்து கொள்ளாமல் ச.ச. முத்து தொடர்பான விடயங்களில் நெகிழ்ச்சிப் போக்கினால் வரலாற்றைத் திரிக்க முயல்வது கவலைக்குரியது. தேங்காய், மாங்காய் வியாபாரிகள் என்ற சாக்கில் வீடெடுத்தார்கள் அப்பையா அண்ணன், சீலன் என்று கதை விடுவதும் ச.ச.முத்துவின் அழகான கற்பனை. திருநெல்வேலி தாக்குதலுக்கு முன்பாக தலைவர் சொன்னதாகவே சில விடயங்களைக் குறிப்பிட்டு தான் அந்தக் காலத்தில் இருந்ததாக நிறுவ முயல்வதும் மோசடியானது. இவற்றுக்கெல்லாம் 800 – 900 என்று Like வேறு. வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு பரவலாக்கப்படுகின்றது என்று தெரிந்தும் ஊரவன் என்ற ஒன்றுக்காக மோசடிக்கு துணைபோவது சரியானதல்ல. தேசத்தின் பாலம்”, என்ற அமைப்பு போராட்டத்தின் பங்காளர்களாக விளங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வருகிறது. குறிப்பாக மூதூர் மற்றும் வாகரைப் பகுதிகளில் கல்வியைத் தொடரச் சிரமப்படும் பொருளாதார நெருக்கடியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டக்களப்பு நகர் போன்ற இடங்களிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தல், தேவையான குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதனை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துபவர் முன்னாள் போராளியான லூக்காஸ் அம்மான். அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பா.நடேசனின் சகோதரர் இவர். தான் பிறந்த வல்வை மண்ணுக்கும் உதவத் தவறுவதில்லை இவர். 2002 இல் தலைவரைச் சந்தித்தபோது போராட்டத்திலிருந்து விலகிய உங்களைப் போன்றோர் பொருளாதார ரீதியில் நலிவுற்றோருக்கு இம்மாதிரி உதவலாமே என அறிவுறுத்தியதுடன் உதவி தேவைப்படுவோர் பட்டியலையும் இவரிடம் வழங்கியுள்ளார். வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் லூக்காஸ் அம்மானைப் பின்பற்றி உருப்படியாக பணியாற்றுவதுதானே வல்வை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். நன்றி – ஈழநாடு https://www.ilakku.org/வரலாற்றை-திரிபுபடுத்துவ/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.