Search the Community
Showing results for tags 'பிரபாசெழியன்'.
-
பிரபாசெழியன் முதன்முதலாக தாக்குதல் அணியொன்றிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்று. திருகோணமலை மாவட்டத்தில் சிறியதொரு ராணுவ முகாம் ஒன்றினை தாக்கியழிக்கும் கடமை எனக்கு தலைவரால் தரப்பட்டது. தலைவர் இட்ட கட்டளையை எனது தலைமையிலான தாக்குதலணி வெற்றிகரமாக செய்து முடித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தாக்குதலின்போது சில அப்பாவி சிங்கள மக்கள் பலியாகிவிட்டனர். தலைவர் இந்த செய்தியறிந்ததும் என்னை வன்னிக்கு வரச்சொன்னார் போனேன். கிழி விழபோகுது எண்டு தெர்ந்துதான் போனேன். தலைவர், "வாரும் வாரும் உம்மைதான் எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் உம்மிடம் நான் ஆமிகாரனெ அடிக்க சொன்னேனா இல்ல சிங்கள சனத்தை அடிக்க சொன்னேனா" என்று சற்று கடுமையான தொனியில்கேட்டார். தவறுதலாக நடத்திட்டண்ணை என்றேன். "நீர் செய்தது பிழை இனி இப்படியான அலுவல்கள் நடக்ககூடாது நீங்கள் தாக்குதலை தொடுக்கும்போது அப்பாவி சனம் பாதிக்கப்படும் எண்டு அறிந்தால் தாக்குதலை கைவிட்டிட்டு திரும்பி வாங்கோ அப்பாவி மக்களை கொன்றுவிட்டு வெற்றிவிழா கொண்டாட ஏலாது" என அறிவுறுத்தி சொன்னார். இனி இப்படி நடக்காதன்னை எண்டேன். மறுகணமே "சாப்பிட்டியளா? முன்பைவிட மெலிந்திட்டியள்! உடம்பை பாருங்கோ" எண்டார். இதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு தாயுமானவர். சிங்கள பேரினவாதம் அப்பாவிதமிழ் மக்கள்மீது ஈவிரக்கமின்றி காட்டிய கொடுரத்தை அண்ணையும் அப்பாவி சிங்கள மக்கள்மீது காட்டியிருந்தால் ராஜபக்க்ஷே கோத்தபாயவை போல் அண்ணையும் நினைத்திருந்தால் முள்ளிவாய்கலுக்கு முன்னரே கொழும்பு எரிந்திருக்கும் தென்னிலங்கையில் அணைக்கட்டுகள், பாலங்கள், குடியிருப்புகள் அனைத்தும் தகர்ந்திருக்கும். ரயில் நிலைய்ங்கள் புத்த விகாரைகள் எல்லாம் சிதைந்து சின்னா பின்னமாயிருக்கும் சிங்கள மக்கள்தொகை பாதிக்கு கீழ் குறைந்திருக்கும். அப்படி செய்ய அவன் பாமரன் இல்லை, பிரபாகரன்! எந்தன் உயிரே! உணர்வே! ஆசானே! அன்னையே! தந்தையே! அறம் சார்ந்து நியாய வழி நடந்து நீ நடத்திய தர்மயுத்தம்தான் பழம்பெருமை கொண்ட தமிழித்தின் கடைசி வரலாறு. நீ தான் கடைசி வீரன். இனியொருவன் உன்னைப்போல தமிழினத்தில் பிறக்கபோவதில்லை. பிரபாசெழியன்