Search the Community
Showing results for tags 'மாவீரர்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இளம் பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.} "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 220 replies
-
- 2
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
-
(and 26 more)
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்… தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்… தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்… கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு…, கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன், கரும்புலி லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். நீளும் நினைவுகளாகி…. தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
- 6 replies
-
- 1
-
- வான்புலி
- கரும்புலிகள்
-
(and 5 more)
Tagged with:
-
லெப். கேணல் கதிர்வாணன் கடற்புலிகளின் சேரன் ஈரூடக படையணி தளபதி’ லெப். கேணல் கதிர்வாணன். 2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் (தீவக கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர்) அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன். தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான். அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான். இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப். கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான். இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான். அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான். அத்தோடு தென்தமிழீழ விநியோக நடவடிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான். அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான். தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத் தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான். தரைத் தாக்குதலுக்கேற்ற மாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு, எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான். அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான். கடற்புலிகளின் தரைத் தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத் தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத்தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான். சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத் தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன். 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். நினைவுகளுடன் கடற்புலி போராளிகள். https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-kathirvanan/
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும். இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள் சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை அந்த மறம் போல அகிலம் முழுவதிலும் எந்த இனப் பெண்ணிடமும் இருக்கவில்லை நெஞ்சிலுரம் என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும் பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம் வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும் ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர் சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம். தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை ஆட்டிப்படைக்கும் அயலார்கள் வாய்மூட வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும் எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில் எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும் அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட சொந்தங்காள் உம்மைக்கை தூக்கி வணங்குதற்காய் ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம் இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும் என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள் என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன் நன்றே நடக்கும் நமக்கு.
-
எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேணிப் பாதுகாக்கும். தேசியத்தவைரும் இதற்கு விதிவிலக்கல்ல அந்த வகையில் அவரும் அவரது குடும்பமும் அவர்கள் தஞ்சமடைந்த நாட்டின் குடியுரிமை விதிகளுக்குட்பட்டுத் தற்போதுதான் வெளிப்பட முடிந்திருக்கின்றது. தாமதத்திற்கான முக்கிய காரணிகளில் இது மிகப்பிரதானமானதாகும். அதைக் கருத்திலெடுத்து நோக்கும் போது இந்தத் தாமதம் நியாயமானதாகவே படுகின்றது. இதுபற்றிய விளக்கங்கள் இன்னும் சில நாட்களில் முழுதாகத் தெரியவரலாம் அதுவரை மக்கள் அதீத அவசரம் காட்டாது இவ்விடயத்தில் பொறுமையோடிருப்பதே சிறந்தது.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~26,500 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.) எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும். (இதை நான் செய்வதற்கான முக்கிய காரணம், வயிற்றுப் பிழைப்பிற்காக மாவீரர் எண்ணிக்கையினை நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனக் கூவித் திரிவோர் கொஞ்சமேனும் திருந்தட்டும் என்பதற்காகவே ஆகும். ) 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38) 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது' 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:- "2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்" 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.) 'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' (மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்) இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள் சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள் ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள் --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள் 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள் | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் மொத்தம் - 651 போராளிகள் | ஆதாரம்: மாவீரர் பட்டியல் மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம். இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அலுவல்சார் வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே. நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். 2009 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:- சரி இனி நாம் கணக்கெடுப்போம். சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால், (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு) - (புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை) 5953-2,239 = 3,714 2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714 22,390+3,7149 = 26,104 சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக, 26,104+358 = 26,462 ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்.. (சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.) இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம். அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம். இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி: இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும். இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும். இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம். மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது, முன்னிருந்து பின்னாக... முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160 (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை) இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276 மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது. ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கின் அடிப்படையில் கணக்கப்போட்டுப் பார்த்தால், மார்ச் 8 இலிருந்து ஏப்ரல் 20 வரை இதே அளவானோர் வீரச்சாவடைந்திருப்பராயின் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இதே அளவில் போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் - நவம்பர் 20 முதல் மார்ச் 8 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 2,009- 2,260 ஆகும். இதே அளவில் ஏப்ரல் 20 இலிருந்து மே 16 வரை வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் 484 - 544 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். இந்த ஐந்து தோராய மதிப்பீட்டினை கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 3,293 - 3704 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர், நவம்பர் 20 முதல் மே 16 வரை. எனது இந்தத் தோராயக் கணக்கிற்கு வலுச்சேர்க்கும் விதமாக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆகுதியான வான்கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் வன்னிவாழ் மக்களிற்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்த ஒரு வரியினை ஆதாரமாக எடுத்தாள்கிறேன். வரி பின்வருமாறு: ".................. அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். ......" எனது தோராயகக் கணக்கான 43 நாட்களில் வீரச்சாவடைந்தோர் 800- 900 பேர் என்பதைக் கொண்டு நவம்பர் 20 முதல் பெப்ரவரி 18 வரையான 92 நாட்களில் வீரச்சாவடைந்தோர் தொகை 1712. கிட்டத்தட்ட இதே அளவான தொகையையே இவ்வான்கரும்புலியும் (22,390- 24,000 = 1610) குறித்துள்ளார். நவம்பர் 20 முதல் இவர் இக்கடிதத்தை எழுதிய திகதியாக நான் கருதும் பெப் 18ம் திகதிக்கு முன்னர் வரைக்கும் ஏறக்குறைய 24,000 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் எனக் கருதும் பட்சத்தில், எனது தோராயக் கணக்கும் இதே அளவான போராளிகள் இறந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மே 17 காலை ரட்ணம் மாஸ்டர் அவர்களுடன் சென்ற 250 வரையான போராளிகளில் "தோராயமாக" 80- 100 வரையானோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் என்றும் அச்சமரில் பங்குபற்றிய போராளிகளின் வாக்குமூலம் அறிகிறேன். அத்துடன் கட்டாங்கடைசியில் (17 மாலை - 18 காலை) 200 - 250 வரையான போராளிகள் தாம் கொண்ட கொள்கையின் உறுதிப்பாட்டால் இறுதிவரை நின்று களமாடி வீரச்சாவடைந்தனர் என்று இறுதிவரை களமாடி தப்பிய புலிவீரர்களின் வாக்குமூலம் அறிகிறேன். தமிழர் தரப்பு மூலம் அறியப்பட்ட உச்ச எண்ணிக்கையினைக் கொண்டு மொத்த மாவீரர் தொகையினை கணக்கிட்டால், 22,390 + 3,704 + 250 + 100 = 26,444 இதை நாம் முழு எண்ணாக எடுக்கும் போது வருவது 26,500. இவ்வெண்ணிக்கையானது சிங்களவரின் கணக்கின் முழு எண்ணோடு பொருந்தி வருவதைக் காண்க. இதையே தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே. இதனுள் ஆயுதங்கள் மௌனித்து சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். "எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி - தமிழ் ஈழம் மீட்பது உறுதி 😢" - மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று உசாத்துணை: Tamilnet.com https://anyflip.com/zmfgt/pzff https://www.deseret.com/2000/6/6/19560902/censors-stifling-reports-on-war-in-sri-lanka https://www.defence.lk/index.php/Article/view_article/862 https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf https://tamilnation.org/ ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 6 replies
-
- 5
-
- வீரச்சாவடைந்தோர்
- மாவீரர் நாள்
- (and 9 more)
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் "செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா! சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!" த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்" 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
- 10 replies
-
- 5
-
- முஸ்லீம் மாவீரர்கள்
- இஸ்லாமிய மாவீரர்கள்
- (and 4 more)
-
லெப். கேணல் நிரோஜன் கடலில் அவனது காவியம்: கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக் கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும் போது அந்த நீருக்குள்ளும் இந்த நிறோஜனின் கதை இருக்கும். 1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் ஆரம்பிக்கின்றது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்த தமிழீழ கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்து கொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்ட கால அனுபவமுள்ளவனைப் போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்திருந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டுவந்த அந்தத் தாக்குதல் நடைபெற்றது. அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிறோஜனின் கடல்வழி விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிறோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இருளின் நடுவில் சடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்னசெய்வதென்றே புரியாத போதிலும் நிறோஜன் நிதானமாகப் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டோறாப் படகின் ஆயுதபலமும் நிறோஜனின் அந்தச் சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது. ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில சிங்களப் படையை கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரை சேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு ஆரம்பமாய் இருந்தது அந்தத் தாக்குதல்தான். அதன் பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்நித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை. 1996ம் ஆண்டு ஒக்டோபரில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது. சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகளும்இ கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும்இ சிறிலங்காவின் தரைஇ கடற்படைகளுக்குமிடையே சண்டை மூண்டது. அந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல. சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிறோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரி மீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடி வரும் அளவிற்கு சிங்களம் துணிந்தமை அவனுக்கச் சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். சிங்களம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடி வந்தது. இப்போது சிங்களத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிறோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக்கொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாகப் படகுகளும்இ கரும்புலிப் படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருனோணமலைத் துறைமுகத்தின் வாசல்; அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமைத்துக்கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது. நிறோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றிமாற்றிச் சண்டை பிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தப் கரும்புலிப்படகை டோறா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல்நீரின் மேல் செயலற்று நின்றது. நிறோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும் நிறோஜன் அந்த டோறாவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சுடுகலனான 20 மி. மீ கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான் நிறோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது. நிறோஜனுக்கு அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாத போதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றி விட வேகமாக இயங்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறிவைக்க நிறோஜனின் கட்டளைப்படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்கஇ நிறோஜன் அந்தக் கனமாக சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதைக் கைவிடாது நீந்திப் படகேறினான் சிங்கத்தை அதன் குகையில் சந்நித்துத் தாக்கிய திருப்தியுடன் புலி தளம் திரும்பிக்கொண்டிருந்தது. இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத்தளபதி அவன். அந்தப் பணியை பொறுப்பேற்றதிலிருந்தே தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும்இ கடல் மூலமான விநியோகப் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள் தான் அதன் பின் அதிகமாக இருந்தது. கடலில் விநியோகப்பணியை மேற்கொள்ளும் போது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்து வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிறோஜன். இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் விநியோகப் பணிகளை மேற்கொண்ட படகுடன் சிங்களக் கடற்படையின் படகுகள்; தாக்குதலிற்குள்ளான போது 50 கடல்மைல்களிலிருந்து நிறோஜனின் இரு படகுகள் அந்தக் கடற்கலத்தை நோக்கி விரைகின்றன. இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிறோஜன் அந்தக் கடற் சூழலுக்கேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகிறான். ‘மயூரன்’ படகு நான்கு டோறாக்களை எதிர்கொள்ளத் ‘தேன்மொழி’ படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது. அங்கே அந்தச் சிறிய படகுகள் இரண்டும் அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி முன்னேறிக்கொண்டிருந்தன. இறுதியாக அந்த விநியோகப் படகுகளை மீட்டுக் கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள். இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவான போதும் நிறோஜனின் நிதானமானதும்இ சாதுரியமானதும்இ உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறடிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது. இந்த நாட்களில் தான் சிறிலங்காவின் அமைச்சரொருவர் “யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான விநியோகமே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிறோஜனின் காதுகளுக்கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கப்பற் கொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற் தொகுதி முல்லைக் கடற்பரப்பை தாண்டிக் கொண்டிருக்கும் போது நிறோஜனின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின. மூன்று சண்டைப் படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பற் தொகுதியை மேவி வந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளின் பலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்களும்இ நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும்இ பபதாக்கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்றுகொண்டிருந்தது. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுத பலமும்இ கடற்கலங்களின் பலமும் இருந்தபோதும் அசாத்தியமான துணிச்சலும்இ சண்டையை வழிநடத்தலும் தளபதியின் திட்மிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது. இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்குவைத்து பின் தொடர்ந்தன கடற்புலிப்படகுகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்த போதும் அவை சண்டை பிடிக்கப் பயந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தன. நிறோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கிப் படகுகள் நெருங்கிச் சௌ;றன. எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற் தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடக்கி வைத்தனர். அவை அப்போதும் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும்இ எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள் பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்ட தூரம் சென்று விட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்படஇ களத்தில் நின்ற படியே சண்டையை வழிநடத்தினான் நிறோஜன். உயர்ந்து எழுந்து விழும் அலைகளுக்குள் நிதானமாக நிற்க முடியாத படகிற்குள் நின்று கொண்டும்இ சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தும்இ நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றுள் நின்றான் நிறோஜன். அன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்புக் கலங்களை ஊடறுத்து ‘பபதா’ கப்பல் மீதும்இ ‘வலம்புரி’ கப்பல் மீதும் கரும்புலிப் படகுகள் மோதி வெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள். இந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள். அந்தப் படகுகளை வழிமறித்து டோறாப் படகுகள் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்த படகுடன் விரைந்தான் நிறோஜன். “பிரச்சினையில்லை நான் கிட்ட வந்திட்டன்இ நீங்கள் வடிவாச் சண்டை பிடியுங்கோ” தொலைத் தொடர்புக் கருவியில் நிறோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்களத்தில் சமர் புரிந்து கொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினர். நிறோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றகைக்குள் இருந்தன எமது படகுகள். இப்போது நிறோஜனின் முற்றகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள். நேரம் கடந்துகொண்டிருக்க சண்டை நிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிறோஜனுடன் சேர்ந்து கடல் நடுவே உரக்கக் கூச்சலிட்டனர். ஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித்தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிறோஜன் அந்த டோறாவைக் கடலில் கைவிடவில்லை. ஏனைய டோறாப் படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிறந்த டோறாவைக் எங்களது படகில் கட்டி இழுத்து வந்தான். அது இடையில் தானாவே கடலில் மூழ்க ஆரம்பிக்க அதிலிருந்த இராணுவ உபகரணங்கள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமைகள் மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது. நிறோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும்இ நுட்பமான திட்டங்களாலும்இ நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன். கடலில் சண்டை மூழும் போது கரையில் நின்ற கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீது கொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதல்கள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்து கொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெஐப்பாகச் சீறும் அந்த நிறோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதும் அல்ல. அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகில் இருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போது எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவனை ஒரு கடற்படைத்தளபதியாகப் பார்க்க முடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருப்பதை விட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம். அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும் போது சாதாரண போராளிக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமிற்குச் சென்றால் நிச்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது. விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைப் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது. தொடர்ச்சியாக இரவுபகலாக பணிகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவன் அந்தப் போட்டிகளின் போது நீச்சல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான். அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல. ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளனாகஇ ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்டவன். ஆனாலும் இந்த இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத்தளபதி ஒருவனை விட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்கி தனது நுட்பமான திட்டமிட்ட தாக்குதலினால் மட்டுமே அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது. அன்றைய தினம் 07.01.1999 அன்றும் விநியோகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிகளின் இருபடகுகள். அவற்றில் ஒன்றில் நிறோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றகையிடுகின்றன. சண்டை மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தது. மாலை மங்கிய பொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்த போதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன்படகுகளைப் பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்து போக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரிபொருளில் பாதியை அந்தப் படகுக்கு வழங்கிச் சேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி கரை சேர்ப்பித்தான். அதனால் தான் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடும் போது “எந்தச் சிக்கலான சண்டையெண்டாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவன். ஏனெண்டா என்னை விட அவன் சிக்கலான சண்டையள்ள கூட தானும் பதட்டப்படாமல் போராளினளையும் பதட்டமடையாமல் வைச்சு சண்டைபிடிச்சு வெற்றி கொள்ளிறதில திறமையானவன். இதில அவனுக்கு நிகர் அவனே தான்” என்றார். இந்தத் திறமையான தளபதி தான் 07.10.1999 அன்றும் விநியோகப் பணியல் ஈடுபட்டுக் கொண்டிருந்த விநியோகப் படகுகளை நடுக்கடலில் டோறாப் படகுகள் வழிமறித்த போது கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்துக் கொண்டு கடற்களத்தில் இறங்கினான். இன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடும் இருள் கடல்வெளியினையே மறைத்துக் கொண்டிருந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக் குழப்பத்தால் தங்களது பணியைச் செய்ய மறுத்துக் கொண்டிருந்தன. நிறோஜன் தன் நீண்டகால கடல் அனுபவத்தினை மட்டுமே வைத்துப் படகினை நகர்த்தினான். விநியோகப் படகிற்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற உறுதியடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப் படகுகள் இரண்டும் இயந்திரக் கோளாறினால் மெதுமெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப் படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவும் சண்டை பிடிக்கவேண்டியதாயிருந்தது. அவன் எங்களின் விநியோகப் படகுகளை நெருங்குகின்றான். அங்கே எங்களது ஒரு படகைக் காணவில்லை. அது டோறாவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்குச் சேதமில்லை. அவை பத்தரமாக ஒரு படகில் இருந்தன. அவன் அந்தத் திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான். கடல் இப்போதும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் டோறாவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. விநியோகப்படகு பத்திரமாய் கரைதிரும்பிக் கொண்டிருந்தது. இப்போது நிறோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்று கொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்கள் மௌனமாய்க் கிடந்தன. எப்போதும் எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்றுமட்டும் “என்ர படகுக்குச் சேதம் முடிஞ்சா உதவி செய்யுங்கோ இல்லாட்டி பிரச்சினையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத்தொடர்புக் கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டுமே தங்களால் இயன்ற மட்டும் முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிறோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்த நீரரும்புகள் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டைபிடித்து தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்து கொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான். நினைவுப்பகிர்வு: மாரீசமைந்தன் நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை 2002). https://thesakkatru.com/deputy-commander-of-sea-tigers-lt-col-nirojan/
-
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் On Feb 4, 2020 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன். சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்) வீரச்சாவுத்திகதி: 04.02.2009 வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில். விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்புக்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன. யாழ் குடாநாட்டின் வளம்மிகுந்த வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் கடலலைகள் தழுவுகின்ற மருதங்கேணி எனும் அழகிய கிராமத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதியினருக்கு 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது மகனாகப்பிறந்தவர்தான் சுதரதன் எனும் இயற் பெயரைக் கொண்ட லெப் கேணல் விநாயகம் அவர்கள். இவரை வீட்டில் ஏல்லோரும் சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது இளமைக் காலக் கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். சுதன் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதோடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான காத்தவராயன கூத்து மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் சுதனும் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவ்வாறு அவரது இளமைக்காலம் இனிதாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் அமைதி என்ற போர்வையில் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்த இந்தியப் படையினர் அதற்கு முற்றிலும்மாறாக ஆக்கிரமிப்புப்போரையும் தமிழ்மக்கள் மீதான அடாவடித் தனங்களையும் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தாயகத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைப் பலிகொண்டதுவும் இந்தியப் படையினர் நாளாந்தம் தமிழ்மக்கள் மீது தொடரும் கெடுபிடிகளும் அதன் விளைவாக தமிழ்மக்கள் அனுபவித்துவரும் அவல வாழ்க்கையும் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதை மிகவும் ஆழமாகப்பாதித்தது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் ஆதரவுடன் தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம். லெப். கேணல் மறவன் மாஸ்ரரின் உதவியுடன் சுதனும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் பல இளைஞர்களும் தம்மை முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அமைப்பில் இணைந்து கொண்ட சுதனும் மற்றய இளைஞர்களும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம் ஊடாக மணலாற்றுக் காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற சுதன் அங்குதான் இயக்கப் பெயராக விநாயகம் எனும் பெயரைப் பெறுகின்றார். அங்கு வியட்னாம் பயிற்சிப் பாசறையில் இரண்டாவது பயிற்சி அணியில் விநாயகமும் இணைக்கப்பட்டு ஒரு போர்வீரன் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து படைத்துறைப் பயிற்சிகளிலும் கொமாண்டஸ் பயிற்சிகளிலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று சிறந்த போராளியாக பயிற்சிப் பாசறையிலிருந்து விநாயகம் அவர்கள் வெளிவருகின்றார். தொடர்ந்து இந்தியப் படையினருக்கெதிரான தாக்குதல்கள் தேசவிரோதக் கும்பல்களுக்கெதிரான தாக்குதல்கள் என அவரின் போர்ப் பயணம் தொடர்ந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதையடுத்து அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மீண்டும் போர் வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் யாழ். கோட்டை படைமுகாம்மீது விடுதலைப்புலிகள் முற்றுகைப்போரை மேற்கொண்டிருந்தபோது விநாயகம்அவர்களும் அந்த தாக்குதல்அணியில் பங்கெடுத்து அந்தச்சமரில் தனது போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவ்வவ்போது குடாநாட்டில் தான் சந்தித்த களமுனைகளிலும் களப்பணிச் செயற்பாடுகளிலும் தனது நேர்மைத்திறனையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் வெளிக்காட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெற்றிருந்தார். இதேகாலப்பகுதியில் அப்போதய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமாகிய மாத்தையா அவர்களின் அணியில் விநாயகம் அவர்களும் இணைக்கப்பட்டு அவரது மெய்ப்பாதுகாப்பு அணியில் விநாயகம்அவர்களின் பணி தொடர்ந்தது. 1991ம் ஆண்டு ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சமரிலும் விநாயகம் அவர்கள் பங்கெடுத்திருந்தார். 1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்தையாவின் அணி கலைக்கப்பட்டபோது அதில் குறிப்பிட்ட போராளிகள் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்படபோது விநாயகம்அவர்களும் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி நாகதேவன்துறை படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தவளை நடவடிக்கையின்போது கடற்புலிகளின் தாக்குதலணியில் விநாயகமும் அங்கம் வகித்திருந்தார். வரலாற்று முக்கியத்துவம்பெற்ற அந்தச் சமரில் அபாரமான துணிச்சலுடன் களமாடிய விநாயகம் அவர்கள் நாகதேவன்துறைப் படைத்தளத்தின் வெற்றிக்கு முன்நின்று உழைத்ததோடு அந்த வெற்றிச்சமரில் வீரவடு ஏந்தியதன் விளைவாக ஒரு கண்பார்வையை இழந்திருந்தார். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக விநாயகம்அவர்கள் பொறுப்பு வகித்திருந்தார். இவர் மன்னார் மாவட்டத்தில் அரசியல்த்துறைப் பொறுப்பை பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் மக்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்தது. பொதுமக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வதும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான நிர்வாகக்கட்டமைப்புக்களுக்கு புத்துயிரூட்டி புதுப்பொலிவுடன் அவை செயற்பட வழிசமைத்ததுடன் அவைகளுக்கு ஊடாக கடற்புலிகளின் படைக்க ட்டமைப்பை மன்னார் மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்கு முதன்மையாக உழைத்தவர். இதன் பிற்பாடு குடாநாட்டில் அரசியல்ப்பணியும் குறிப்பிட்டகாலம் புலனாய்வுக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சிபெற்று அதுசார்ந்த பணிகளும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் படைத்துறை ரீதியான செயற்பாடுகளுமென விநாயகம் அவர்களின் போராட்டப்பயணம் தொடர்ந்தது. 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ். குடாநாடு முழுமையாக அரசபடையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது ஐந்து லட்சம் மக்களுடன் விடுதலைப்புலிகளின் அனைத்து படைக் கட்டமைப்புக்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக்கொண்டு செயற்பட்டபோது விநாயகம் அவர்களின் போரியல் செயற்பாடுகள் வன்னியில் தொடர்ந்தது. இந்தக் காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பிரரதான மெய்ப் பாதுகாவலராகவும் சில காலம் விநாயகம் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அத்துடன் சூசை அவர்களின் மெய்ப் பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற போராளிகளுக்கு பாதுகாப்புப்பயிற்சி வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் அவர்கள் செயற்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 01 வெற்றிச் சமரிலும் விநாயகம்அவர்கள் பங்கெடுத்து தீரமுடன் களமாடி முல்லைத்தீவு படைத்தளத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்ததோடு அந்த வெற்றிச் சமரில் தலைப்பகுதியில் விழுப்புண்ணடைந்தார். மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஊடாக விழுப்புண் தேறிய நிலையில் விநாயகத்தின் போர்ப்பணி மீண்டும் தொடர்ந்தது. ஆனாலும் தலைப்பகுதியில் புதைந்திருந்த சன்னம் இறுதிக்காலம் வரையிலும் அவரை உபாதைக்கு உட்படுத்தியிருந்தது. தொடர்ந்து செம்மலையில் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் கிழக்கு மாகாண விநியோக அணியில் விநாயகம்அவர்களும் இடம்பெற்றிருந்தார். கடற்புலிகளின் சண்டைப்படகில் இரண்டாம் நிலை கட்டளைஅதிகாரியாக செயற்பட்டு பல சவால்களுக்கு மத்தியில் கிழக்குமாகாண விநியோக நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு அயராது உழைத்தார். அத்துடன் செம்மலையில் அமையப் பெற்றிருந்த கிழக்குமாகாண விநியோக அணிக்கான முகாம் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து போராளிகளின் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தி குறித்த முகாம் செயற்பாடுகள் திறம்படசெயற்படுமளவிற்கு மிக நேர்த்தியாக தனது கடமையினை ஆற்றியிருந்தார். 1999ம் ஆண்டு காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறிப்பிட்ட காலமாக மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறையின் செயற்பாடுகள் விநாயகம் அவர்களின் அரசியல் பிரவேசத்துடன் புதுப்பொலிவுடன் முழுவீச்சுப்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அத்துடன் வர்த்தகர் சங்கங்கள் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் போரெழுச்சிக் குழுக்கள் என சமூகக் கட்டமைப்புக்களை தொடராக சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் இன்றியமையாத பங்களிப்பை வலியுறுத்தி கருத்துக்களை எடுத்துக்குறி அதற்கு ஊடாக மக்களை போராட்டத்தின்பால் அணிதிரட்டி எல்லைக் காப்புப் படையணிகள் கிராமியப் படையணிகள் ஆகிய கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்து 1999ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி படைத்தளங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியதுடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் மேலும் சிலபகுதிகளை மீட்டெடுத்தவாறு விடுதலைப்புலிகளின் படையணிகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது முல்லை மாவட்டத்தில் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த எல்லைக் காப்புப்படையணிகளை விநாயகம் அவர்களே தலைமையேற்று கூட்டிச்சென்று களமுனையின் பின் களப் பணிகளையும் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லைக் காப்புப் படையணிகளை பாதுகாப்பு நிலைகளில் நிலைப் படுத்துவதையும் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானமக்கள் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்கிளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தார்கள். இந்த மக்களுக்கும் விநாயகம் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் நெருக்கமான உறவுப்பிணைப்பு இருந்து வந்தது. இந்த உறவுப்பாலம் தான் அவர் எல்லைக்காப்புப் படையணிக் கட்டமைப்புக்களை நேர்த்தியாக நெறிப்படுத்துவதற்கு உந்துசக்தியாக விளங்கியது. இவ்வாறாக கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை மிகவும் சீரிய முறையில் நெறிப்படுத்திவந்த விநாயகம் அவர்கள் 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையில் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்குவந்த காலப்பகுதியில் குறிப்பாக யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்தார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீளவும் முல்லை நகரத்தில் செயற்படுவதற்கு முதன் நிலைக் காரணகர்த்தாவாகவும் விளங்கினார். அரச நிர்வாகக் கட்டமைப்புக்களை துரிதகதியில் முல்லைத்தீவுக்கு நகர்த்தியதற்கு ஊடாகவே இடம்பெயர்ந்திருந்த முல்லைத்தீவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுநிலையாக அமைந்திருந்தது. இந்த முயற்சிகளில் விநாயகம் அவர்கள் முழுமூச்சாக நின்று உழைத்ததன் பயனாகவே குறுகியகாலத்தில் முல்லைத்தீவு நகரம் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது. 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் விநாயகம் அவர்களின் திருமணத்திற்கு சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான ஏறபாடுகள் நடைபெறறன. தனது நீண்டநாள் காதலியான இதயாவை 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாளன்று விநாயகம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துக்கொண்டார். இல்லறம் எனும் நல்லற வாழ்க்கையில் அலைக்குமரன் ஐங்கரன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்ததொரு அப்பாவாகவும் திகழ்ந்தார். இவ்வாறாக அவரின் இல்லறவாழ்க்கையும் போரியல் வாழ்வும் ஒரே பாதையான தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமாதான காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் மீள்கட்டுமானம் செய்யும் நோக்குடனும் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் விநாயகம் அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக நியமித்திருந்தார். அத்துடன் மற்றுமொரு பொறுப்பையும் சூசைஅவர்கள் விநாயகத்திடம் ஒப்படைத்திருந்தார். அதாவது கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையங்கள் அனைத்திற்குமான மேலாளராகவும் நியமித்திருந்தார். குறித்த இந்த இரண்டு பொறுப்புக்களையும் விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் செயலாற்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் மத்தியிலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மத்தியிலும் நனமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த அரசியல்ப் பேச்சாளர். அவரது பேச்சாற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்த சூசைஅவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் கொள்கைப் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குழுவில் விநாயகம்அவர்களையும் சிபார்சு செய்திருந்தார். விநாயகம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அந்த அரசியல் பரப்புரைக் குழுவை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்து அரசியல்ப் பரப்புரைகள் தொடர்பாக விளக்கமளித்து ஆசிகூறி வழியனுப்பி வைத்திருந்தார். 2004ம் ஆண்டு ஒக்டோபர்மாதம் தாயகத்திலிருந்து புறப்பட்ட விநாயகம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சுவிச்சர்லாந்து உள்ளிட்ட இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் தமது கொள்கைப் பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். குறிப்பாக விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம தொடர்பாகவும் அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறிய கருத்துக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்களை பெரிதும் கவர்ந்தன. விநாயகம்அ வர்கள் வெளிநாட்டில் நின்ற நாட்களிலேயே சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இலங்கை உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் தாக்கியது. யுத்த காலத்தில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த வடக்கு கிழக்கு தாயகத்து மக்கள் மீண்டும் இயற்கையின் சீற்றத்தினால் குறுகிய நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டு பல கோடி பெறுமதியான சொத்தழிவுகளைச் சந்தித்து பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்தபோது எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோள்நின்று உழைத்த மக்கள் ஆழிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார். விநாயகம் அவர்களின் சாணக்கியமான அரசியல்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்குவதற்கும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமாக பெருந் தொகையான நிதியை மனமுவந்து தந்தனர். மூன்று மாத காலமாக தமது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விநாயகம்அவர்களும் மற்றயவர்களும் தாயகம் திரும்பியிருந்தனர். தாயகம் வந்த விநாயகம்அவர்கள் சிறப்புத் தளபதி சூசைஅவர்களால் பணிக்கப்படுகின்ற பிரத்தியேகமான பணிகளை முன்னெடுத்ததுடன் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக் கட்டுமானத்திலும் அயராது உழைத்தார். அத்துடன் மக்கள் படைக் கட்டுமானத்தைக்கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களின் கரையோரமாக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிலைகளுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றும் வாகனம் ஒன்றும் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டின் முற்பகுதிகளில் போராட்டத்திற்கு புதிதாக இணைகின்ற புதிய போராளிகளில் கடற்புலிகளுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்து கடற்புலிகளுக்கு உள்வாங்குகின்ற பொறுப்பையும் சிறப்புத் தளபதி அவர்கள் விநாயகத்திடமே ஒப்படைத்திருந்தார். அந்தப்பணியை சிரமேற்கொண்டு கடற்புலிகளுக்கென பிரத்தியேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை படயப்பயிற்சிக்க ல்லூரியின் பண்டிதர் றஞ்சன் லாலா அப்பையா லிங்கம் ஆகிய பயிற்சி அணிகளுக்கு ஆற்றல் மிகுந்த திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து குறித்த பயிற்சி அணிகள் சிறப்பாக தமது பயிற்சிகளை நிறைவு செய்து பின்நாளில் அவர்கள் சிறந்த போராளிகளாகவும் அணித் தலைவர்களாகவும் கடற்புலிகள் படையணியை அலங்கரித்திருந்தார்கள். இந்த செயற்திட்டத்தில் விநாயகம் அவர்களின் உழைப்பு மிகவும் அளப்பரியது. அத்துடன் குறிப்பிட்ட காலம் கடற்புலிகளின் படைய அரசியல்ப் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து ராஜன் கல்விப்பிரிவினருடன் இணைந்து போராளிகளுக்கான கல்விச்செயற்பாடுகளிலும் போராளிகளுக்கான அரசியல் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் முதலான சிறப்புத் தளபதி சூசை அவர்கள் பணிக்கின்ற அரசியல் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளையும் சிறப்புத் தளபதியின் எண்ணத்திறகு ஏற்றவாறு செயல்வடிவம் கொடுத்திருந்தார். 2007ம் ஆண்டு யூலை மாதம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்குள்ளாகி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தபோது அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற பலதரப்பினரதும் அபிப்பிராயக் கருத்துக்களுக்கு அமைவாக விநாயகம் அவர்கள் சூசை அவர்களின் பிரதான மெய்ப்பாதுகாப்பு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் அந்தப் பொறுப்பையேற்று இரவு பகல் பாராது கண்துஞ்சாது பாதுகாப்புக் கடமையை மிகவும் செவ்வனே செய்திருந்தார். 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட விநாயகம் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் மருத்துவப்பகுதி அரசியல்த்துறை புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் செயற்பட சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் கடற்புலிகளில் அங்கம் வகித்த போராளிகள் அனைவரின் நலன்களிலும் கூடியகவனம் செலுத்தி அவர்கள் முகம்கொடுக்கின்ற தனிப்பட்டதும் பொதுவானதுமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து அவர்களும் தங்களது கடமைகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 2008ம் ஆண்டு பிற்பகுதியில் மணலாற்றுக்கள முனையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்றதையடுத்து முல்லைத்தீவில் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய மக்கள்படைக் கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி நாளாந்தம் நூறு பேர்வரையில் மணலாற்றுக் களமுனைக்கு அனுப்புகின்ற செயற்திட்டத்தை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக தானே பொறுப்பேற்று மணலாற்றுக் களமுனையை அண்டியதான அளம்பிலை தளமாக வைத்துக்கொண்டு மிநேர்த்தியாக நெறிப்படுத்தினார். இவரால் அனுப்பப்பட்ட மக்கள்படை களமுனையில் போராளிகளுக்கு தோள் கொடுத்ததுடன் துணிகரத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிக் கிழக்கின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம், நல்லதண்ணீர்த் தொடுவாயவரையிலும் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே யாழ். மாவட்டத்தின் கரையோரத்தினதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தினதும் மையத்தில் அமையப்பெற்ற பேப்பாரைப்பிட்டி எனும் பகுதியில் பலமான காவல் நிலைகளை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தார்கள். அதாவது பேப்பாரைப்பிட்டியை அடுத்துள்ள சாலைப்பகுதியையும் கடந்தால் அடுத்துவருவது மாத்தளன் ஆகும் அப்போது மாத்தளன் மற்றும் பொக்கணையில் இடம்பெயர்ந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள குடியிருந்தார்கள். எனவே பேப்பாரைப்பிட்டி காவல்நிலைகளை அரசபடையினர் கைப்பற்ற விடுவதில்லை என்ற மனவுறுதியுடனேயே விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தன. அதில் விநாயகம்அவர்கள் பகுதிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார். 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் நாளன்று நல்லதண்ணீர்த் தொடுவாயில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதாக யுத்த டாங்கிகள் பல்குழல் எறிகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முன்னேற்றநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். எதிரியின் முன்னேற்றத்தை துணிகரமாக எதிர்த்து களமாடிய கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் அந்த வழிமறிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவருடன் கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளான லெப். கேணல் குகன் (காதர்) லெப். கேணல் பகலவன் உட்பட மேலும் பல போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இரண்டு தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் தளராத உறுதியுடன் வீறுநடை போட்ட உத்தமத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் பேப்பாரைப்பிட்டி மண்ணை முத்தமிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். அவரது இழப்பு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியிருந்தாலும் அவரது வித்துடலை எமது தோளகளில் சுமந்து விதைகுழிக்கு ஒருபிடி மண் எடுத்துப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கேனும் மனம் ஆறியிருப்போம். ஆனாலும் அதற்குக்கூட அவரது வித்துடல் எமக்கு கிடைக்கவில்லை. எனவே கடற்புலிகளில் தனக்கென தனித்துவமான அத்தியாயத்தை பதிவாக்கிவிட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தில் அவரையும் அவருடன் வீரச்சாடைந்த மாவீரர்களையும் எமது இதயத்தில் பூசித்து தமிழீழ விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோடுவோமாக……… “கடலிலே காவியம் படைப்போம்” நினைவுப்பகிர்வு:- செங்கோ “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/111954
-
மாவீரர் துயிலுமில்லங்கள்
நன்னிச் சோழன் posted a blog entry in ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
இதனுள் துயிலுமில்லப் படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்
- (and 2 more)
-
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் காலவிதை: கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகின்றான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீரூற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடிந்தபடி விளக்கையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் குட்டான் மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளும் வாசலுக்கு வந்தனர். அந்த வயது முதிர்ந்த அம்மா விளக்கை உயர்த்தி எல்லோர் முகங்களையும் பார்த்தாள். இல்லை…… அவள் தேடி வந்த செங்கதிர்வாணன் இல்லை. வந்தவர்களின் முகத்தில் எழுதாத கவிதையொன்று எதையோ உணர்த்தியது. அம்மாவால் முகங்களைப் பார்க்க முடிந்தது படிக்க முடியவில்லை. “இவ்வளவு நாட்களும் ஏன் மோனை வரேல்லை” அம்மாவிற்கு அவன் வந்திருப்பான் என்பதில் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அவனை எதிர்பார்த்து எத்தனை வாசல்கள். எல்லோருடனும் சிரித்துப் பழகுவான். அவனுள் எரியும் நெருப்பு வெளியில் தெரியாது. கண்களுக்குத் தெரிவது சிரிப்பு. உள்ளே கனன்றுகொண்டிருப்பது நெருப்பு. அவனை எரிமலையாக்கும் முதற்பொதி கலவரங்களினால் விழுந்தது… “காலம் கெட்டுக்கிடக்கின்ற நேரத்தில எங்கை மோனை திரியிற… அவங்கள் மனிசரின்ர உயிரை எடுக்கிறதெண்டே றோட்டுவழிய நிக்கிறாங்கள்.” அம்மா பெற்ற வயிற்றில் நெருப்புப்பற்ற பதறுவாள். அப்போதெல்லாம் அவளின் கைகள் அவனின் தலையிலோ கன்னத்திலோ உலாவிக் கொண்டிருக்கும். அவன் அவளின் பாசத்தைப் புரிந்து கொண்டாலும் கரைந்துபோக மாட்டான். கைகளை விலக்கி விட்டுக் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்பான். பின் வீராவேசமாக வசனம் பேசுவான். “அவங்களைப் போலத்தான் நாங்களும். ஏன் பயந்து சாகிறியள்.” அவன் சொல்லிக்கொண்டே தனது சைக்கிள் பாருக்குள் மறைத்து வைத்திருந்த பழைய சைக்கிள் செயினை எடுத்துக் காட்டினான். “ஆரும் அடிக்க வந்தாங்களென்டால், இனி அடிப்பன்” அவனின் கண்கள் கோபத்தாற் சிவந்தன. அம்மா முன்னரிலும் பார்க்க கூடுதலாகப் பதறினாள். “என்ன இழவடா இது…… நான் என்ன செய்ய……” அம்மா அழுதாள். அவளின் அழுகைக்கு காரணம் இருந்தது. அது 1983 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு இனவாத நெருப்பில் ஆவேசமாக எரிந்து கொண்டிருந்த நாட்கள். வீதிகளில், வீடுகளில் எங்கு என்ற வேறுபாடு இல்லாது கொலை நடந்துகொண்டிருந்த நேரம். தெருவெல்லாம் பிணங்கள். சொந்தத் தெருக்களிலேயே உலாவ முடியாத வேதனை. அதுவும் இவர்கள் திருகோணமலையில் சிவபுரியில் சிங்கள ஊர்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள். கொழும்பிலும் வேறிடங்களிலும் கலவரம் நடப்பதை இலங்கை வானொலி அறிவித்துக் கொண்டிருந்தன. இவர்களிற்கு அடுத்த வீடு, எதிர்வீடு தெருவெல்லாம் காடையர்கள் பெரிதாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. இவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு வேலைக்கு வரும் சிங்களக் கிழவியை வீட்டில் விட்டு விட்டுப் பற்றைக்குள் மறைந்தனர். அப்பாவும், மரத்தில் ஏறுமளவுக்கு வளர்ந்த அண்ணாக்களும் மரத்தில் ஏறி ஒளிந்திருந்தனர். அப்பா பதட்டத்தில் விழப்பார்த்து கைகால் எல்லாம் உரஞ்சலோடு மீண்டும் கொப்புக்களை கெட்டியாய் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டார். எல்லோரும் ஊரில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர். அம்மாவின் இறுகிய அணைப்பில் நின்று சினமும் வெறுப்பும் கண்களில் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான், கடைக்குட்டி. வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. எங்கும் தீ பரவி புகை மூடியிருந்தது. ஊரவர்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்தனர். காடைகள், அவர்களை அடித்து வீழ்த்துவதும் வெட்டுவதுமாக தாண்டவம் ஆடின. இவர்களின் வீட்டை நோக்கி வேகமாய் ஓடிவந்தன. முற்றத்தில் நின்று சிங்களத்தில் கத்தின. வேலைக்கு வந்த சிங்களக்கிழவி வீட்டிற்குள் இருந்தபடியே சிங்களத்தில் ஏதோ கத்தினாள். அதுகள் போயிவிட்டன. ஊரே வெறிச்சோடிப்போனது. அது நடந்ததிலிருந்து அணுகுண்டு விழுந்த நகரம் போல அந்த இடம் ஆளரவமற்றுப் போனது. இரவில் தனியே யாரும் உலாவித்திரிய அஞ்சும் நாட்களில் அவளின் ஆசைமகன் திரிவதை எப்படிப் பார்த்திருப்பாள். அவனுக்கு இப்பதானே பதினாறு வயது. அம்மா கெஞ்சலான குரலில் மன்றாடினாள்இ அவன் கேட்கவே இல்லை. வீட்டை விட்டு வெளியே போவான். இனக்கலவரத்தால் ஊரில் கொதிப்புற்றுப்போயிருந்த இளைஞர்களோடு சேர்ந்து ஆங்காங்கே அவனும் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பெரியவர்கள் செய்யம் ஒவ்வொன்றிலும் ஒருவித துடிப்போடு அவனும் ஓடித்திரிந்து ஈடுபட்டான். அவன் இயக்கத்தோடு சேர்ந்து கொள்ள முடியாமல் அவனது வயதும் இருந்தது. ஏற்கனவே அவனது அண்ணன் ஒருவன் போராளியாக இருந்தான். இவர்களின் நடவடிக்கைகளை எப்படியோ சிறிலங்கா இராணுவமும் பொலிசும் அறிந்திருக்க வேண்டும். வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. துடியாட்டமான கடைக்குட்டி ஒவ்வொருமுறையும் தப்பிவிடுவான். அவனது அண்ணன் ஒருவனைக் கைதுசெய்து கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். அண்ணா சிறைக்குப் போனதும் வீட்டில் சோகம் சூழத்தொடங்கியது. அம்மா பொலிவிழந்து போனாள். இவன் கொஞ்ச நாள் வீட்டிலேயே நின்றான். அம்மாவிற்குத் தெரியும்படி எங்கேயும் போவதில்லை என முடிவெடுத்தான். பிள்ளை இனிப் போக மாட்டான் என்று அம்மா நினைத்து இருப்பாள். ஆனால் அவன் இரகசியமாய்ப் போய் வந்து கொண்டிருந்தான். பாடசாலையில் சுற்றுலா போக ஆயத்தமாகினால் அங்கே முண்டியடித்துக் கொண்டு ஓடித்திரியும் துடியாட்டமான சிறுவன், பாடசாலையில் திருத்த வேலை, பாடசாலை வளவில் தோட்டம் வைப்பது அங்கும் அதே ஆள். வகுப்பில் அவன் ஓர் எடுத்துக்காட்டு. எங்கேயும் சின்னப்பிரச்சினை வந்துவிட்டதென்றால் அதை தீர்த்து வைப்பதில் அவனும் ஓர் ஆள். ஒழுக்கக்கேடாக யாரும் நடந்துவிட்டாள் உடனே தண்டனை கொடுக்கப்படும். அங்கேயும் தண்டனை வழங்குபவனாக நிற்பான். பாடசாலை முழுவதும் அவன் பெயர் பரவியிருந்தது. பள்ளியில் வகுப்பாசிரியரிடம் நல்ல மதிப்பைப் பெறுவதே பெரும்பாடு, அப்படியிருக்க அவன் அதிபரின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவனாக இருந்தான். வீட்டின் வறுமை இடையிடையே வயிற்றைக் கடிக்கும். நாட்டின் நிலைமையும் குழப்பமாக இருந்தது. இந்திய இராணுவக் காலம் அது. தேடுதல் வேட்டைக்குள் அகப்படாது முயலோட்டம் ஓடித்திரிந்த நாட்கள். இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் நாளேடொன்றில் தலைவரின் படத்தைக் கண்டவுடன் உடனே தன் எண்ணத்தில் வந்ததின்படி செய்து விட்டான். படத்தை அளவாக வெட்டித் தடித்த மட்டை ஒன்றில் ஒட்டினான். கீழே தலைவர் வே.பிரபாகரன் என்று தன் கைப்பட எழுதி ஊர் கூடும் இடம் ஒன்றில் எல்லோரும் காணும்படியாக ஒட்டினான். அப்போது அவன் எந்த பின்விளைவைப் பற்றியும் கவலைப்படவில்லை. எதையும் எதிர்கொள்வது என்ற துணிவோடு இருந்தான். இரகசியப் பொலிசார் நோட்டமிட்டபடியே திரியும் அந்த இடங்களில் அவன் ஒட்டிய படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் யார் இதைச் செய்திருப்பார். அவர்களோடு சேர்ந்து அவனும் ஆச்சரியப்படுவதாய்ப் பாவனை செய்தான். இந்த அதிர்வலை அடங்க முன் யமாலியாவில் தேசத் துரோகிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வரும்போது படகு விபத்தில் வீரச்சாவடைந்திருந்த மாவீரர்களின் படங்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தையும் எடுத்து வீட்டில் கூட யாருக்கும் தெரியாமல் பசை கிண்டிக்கொண்டு போய் கோட்டை முகப்பில் ஒட்டி விட்டான். அது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவனின் செயல் ஒவ்வொன்றிலும் தீவிரம் கூடக்கூட சொந்த ஊரில் வாழ்வதற்கே முடியாமல் போனது. நாளுக்குநாள் அவனுக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்தில் அண்ணன் ஒருவருடன் யாழ்ப்பாணம் வந்து அவருடனே வாழ்ந்து கொண்டிருந்தவன், காலத்தின் தேவையறிந்து தன்னைப் போராட்டித்தில் இணைத்துக் கொண்டான். பகைவனின் குகைக்குள்ளேயே கூடுகட்டி அவனையே வேவு பார்க்கும் வேவுப்பணிதான் அவனுக்கு வழங்கப்பட்டது. அராலி, ஊர்காவற்துறை இன்னும் அந்தக் கரையோரத்து இராணுவ முகாம்கள் எல்லாவற்றிற்குள்ளேயும் நிற்கும் பற்றைகள் பேசுமானால் மட்டுமே அவனைப்பற்றி முழுமையாக அறியலாம். எவ்வளவோ கடினங்களும் துயரங்களும் அந்தப் பற்றைகளோடும், மரங்களோடும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது. ஆட்கள் இல்லாத சூனியப் பிரதேசத்துக் கட்டடங்களும் தண்ணீரில் நனைந்து கொண்டேயிருக்கும் கரையோரத்துப் பற்றைகளுந்தான் அவனின் தங்கிடங்கள். பல நாட்களாய் அங்கேயிருந்து ஊர்காவற்துறை முகாம் வேவிற்காக அலைந்து கொண்டிருந்தான். ஒருநாள், தன் அணியோடு வேவிற்காக உள்ளுக்கு வந்தவன் இடையில் இராணுவத்தை சந்தித்துக் கொள்ளவேண்டியிருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் சண்டையிட்டார்கள். முன்னனி அரணைத் தாண்டிவெளியே போகவே முடியாது என்று புரிந்துகொண்டான். அவர்களோடு வந்தவர்களில் ஒருவன் காலில் சூடுபட்டு விழுந்து விட்டான். முன்னனி நிலைகளை இராணுவம் பலமாகவும் விழிப்பாகவும் இனி வைத்திருக்கும் என்று புரிந்தமையால் காயப்பட்டவனையும் தோளில் சுமந்து கொண்டு இராணுவப்பகுதிக்குள்ளேயே சென்றார்கள். இடையிடையே இராணுவகாவலரண்கள் மற்ற இடங்கள் எல்லாம் பற்றைகள். அவர்களது நடைத்தூரம் அதிகமாக அதிகமாக நா வரண்டு போனது. ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லை. பசிவாட்டம் தாங்க இயலாது. உடல் சோர்ந்துவிட்டது. காயப்பட்டவனின் புண்ணுக்குச் சுற்றிய சீலைத்துணியை துளைத்துவிடும் முயற்சியில் இளையான்களும் கொசுக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன. “சீ…. இதுகளே காட்டிக்கொடுக்கும் போல” மடியில் வைத்திருந்தவன் கொசுக்களை விரட்டிக் கொண்டிருந்தான். காயப்பட்டவன் வேதனையோடு முனகிக் கொண்டு கிடந்தான். இந்த வேளையில் எல்லோரும் சோர்ந்த பின்னும் செங்கதிர்வாணன் இன்னுமொருவனை அழைத்துக் கொண்டு தண்ணீர் தேடினான். இப்போது அவர்கள் இயலாமையினால் அழுதால் கூட கண்ணீர் வராது. அவ்வளவுக்கு உடலில் நீர்த் தன்மையில்லை. தண்ணீர் தேடி அலைந்தவர்களின் கண்ணில் கிணறு ஒன்று தென்பட்டது அது ஆழக்கிணறு. யாரும் பாவிப்பதில்லையென்பதால் கிணற்றில் வாளிகூட இல்லை. அவன் கிணற்றில் இறங்கித் தண்ணீர் எடுப்பது என்ற முடிவோடு உடற் தளர்வைப் பொருட்படுத்தாது கிணற்றினுள் இறங்கினான். ஒவ்வொரு படியும் குறையக்குறைய நெஞ்செல்லாம் புதுப்பரவசமோடியது. தண்ணீர்…… தொடும் தூரத்தில் கையால் அள்ளி முதலில் உதடுகளை நனைப்போம் என்று முயன்றான். சீ… சரியான உப்புத்தண்ணி. ஏமாற்றம். இயலாமை என்றாலும் சோர்ந்து விடாது மீண்டும் மேலேறிவந்து தண்ணீர் தேடி அலைந்தான். தனக்கு இல்லாவிட்டாலும் தன் காயப்பட்ட தோழனுக்கும் ஏனைய தோழர்களுக்கும் கொடுத்துவிட வேண்டுமே எனத் துடித்தான். அவனுக்கு இது பெரும் கஸ்ரமாகவோ சுமையாகவோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட வேளையிலெல்லாம் அவனின் மனதில் வந்துபோபவை அவன் நேரில் கண்ட மக்களின் அவலமும் தன் தேசத்தை மீட்கத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் அவலங்களுமே அதிகரிக்குமே என்ற எண்ணங்கள் தான். அவன் முயற்சிகளை கைவிடாது நடந்தான். அவனது கண்ணில் ஒரு வீடு தென்பட்டது. அவர்களை அழைத்து தண்ணீர் கேட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவிரும்பவில்லை. அவர்கள் முற்றத்தில் ஏதோ சுவையாகக் கதைத்துக்கொண்டிருக்க பின்புறம் வந்து குடத்துத் தண்ணீரை அவன் கொண்டுவந்த கலன்களில் நிரப்பிக் கொண்டு தோழர்களை நோக்கி விரைந்தான். இடையில் ஓரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய்நெய்யும் எடுத்துக்கொண்டுபோய் காயப்பட்ட போராளிக்கு கை மருத்துவம் செய்து விட்டு உதவி அணி வரும் வரை காத்திருந்தான். உதவி அணி வந்து சேர முடியாது அல்லற்பட்டது. இவர்களும் வெளியில் செல்ல மீண்டும் மீண்டும் முயன்றனர். முடியவில்லை. உதவியணி ஒருவாறு இவர்களை வந்தடைந்தது. இரவுபகல் அலைந்தமையால் எத்தனை நாட்கள் எங்கே அலைந்து திரிந்தார்கள் என்று சரியாகத் தெரியாது. உதவியணியில் வந்தவர்களிலும் சிலர் காயமடைந்தார்கள். அவர்களையும் தூக்கிக்கொண்டு சேற்றுக்குள்ளால் நடந்து வெளியேறி வந்து சேர்ந்தார்கள். ஆனால் பெறப்பட்ட தகவல்கள் நெஞ்சின் ஆழத்திற் கவனமாக இருந்தன. ‘நொடி மாஸ்ரர்’ அவனை அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். பயிற்சி முடித்து கிடைக்கும் தேநீர் இடைவேளையிலோ ஓய்வான வேளைகளிலோ அவன் நிற்கும் இடத்தைச் சிரிப்பூட்டிக் கொண்டிருப்பான். ஏதாவது நொடி சொல்லி மற்றவர்களை மடக்கிவிடுவான். அவனின் அகன்ற உடம்பும் நடக்கும் போதும் நிற்கும் போதும் பின்புறம் வளையும் கால்களும் குத்திநிற்கும் மீசையும் எடுப்பில்லாத சாதாரண தோற்றமும் நினைவுக்கு வரும் ஒவ்வொரு கணமும் அவன் கேட்டு விடை காணமுடியாது போன புதிர்களே நினைவுக்கு வரும். ‘நொடி மாஸ்ரர்’ அது அவனுக்கு ஏற்றதாய்த்தான் இருந்தது. அவன் உண்மையில் ஆசிரியன் தான். அராலித்துறைச்சண்டைக்கு செல்லும் அணிகளில் ஒன்றிற்கு இவனே வழிகாட்டி. இவன் வழிகாட்டி அழைத்துச் சென்ற அணிக்கு இவன்தான் பயிற்சி கொடுத்தான். அதன் பின் வெடிமருந்து பற்றிப்பிடித்தான். புதிதாய் வேவு அணியில் இணைபவர்களுக்கு அவனே வெடிமருந்துப் பாடமும் கற்பித்தான். வெடிமருந்து சம்பந்தமான பயிற்சிகளும் கொடுத்தான். மெதுவாகவும் பொருள் விளங்கும் படியும் கற்பிக்கும் திறமையால் அவன் கற்பிப்பதைப் போராளிகள் விரும்பினர். வேவு பணியில் நின்று வெடிமருந்து பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையில் எதிரி வைத்த பொறி வெடிகளையும் வெடிக்காமல் போன எறிகணைகளையும் செயலிழக்கச் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. வெடிமருந்துக் கல்வி முழுமையாக நிறைவுறாத போதும் அவன் தனது முயற்சியால் ஒவ்வொரு வெடிப்பொருளையும் செயலிழக்கச் செய்யும் முறையை அறிந்து வேகமாகச் செயற்பட்டான். அவன் இயக்கத்தில் இணைய முன்பே யாழ்ப்பாணத்திற் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப அறிவு பெரிதும் பயன்பட்டது. அவன் சூரியக்கதிர் சண்டையில் அணி ஒன்றிற்கு பொறுப்பாக நின்ற போது கரும்புலி அணிக்குச் செல்வதற்கான அனுமதி வந்தது. அவன் வேவில் நிற்கும் போதே தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தான். பதில் வந்தபோது குள்ளிக் குதித்தான். மனசை வலிக்கவைக்கும் எத்தனை நிகழ்வு. வளர்த்த நாய் சாப்பிடாது விட்டால் தானும் சாப்பிடாமலே பசியிருக்கும் அவனது நேசம் எல்லோர் மீதும் எல்லாவற்றின் மீதும் வியாபித்திருந்தது. மனதுக்குள் எழுகின்ற வலிகள் எல்லாம் வலிமையாகியிருந்தன. இலக்கிற்காக காத்திருப்பது, பயிற்சி எடுப்பது, நகருவது, சண்டை ஆரம்பிக்கலாம் என்ற கடைசிக் கணங்களில் சந்தோசப்படும் வேளை ஏதாவதொரு காரணம் இலக்கை அழிக்கமுடியாமைக்கு வழிவகுக்கும். வாடிய முகம், தளர்ந்த நடை, மறுபடி தளம் திரும்புவான். மறுபடியும் மறுபடியும்…… அவனின் காத்திருப்பு, பயிற்சி எடுப்பு, எல்லாம் தொடரும். மூன்று வருடங்களாக கழிந்த ஒவ்வொரு கணத்திலும் அவனது காத்திருப்பும் சேர்ந்தே கழிந்திருந்தது. சோர்வில்லாது எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி எல்லாக் காரியங்களிலும் ஈடுபடும் செங்கதிர்வாணனின் பாதங்கள் கடைசியாக மணலாற்றுக் காட்டுக்குள் இரத்தம் கசியக் கசிய நடந்தன. அந்தப் பாதங்கள் பல இடங்களில் பதிந்திருக்கின்றன. அநேகமாக சண்டைகளிற்கு முன் வேவுப் பணிக்காக எதிரியின் மையப் பிரதேசம் வரையும் சுவடு பதிந்திருக்கிறது. கரும்புலியாக வெடி சுமந்தும் ஏராளமான களங்கள். சிலவற்றை இப்போதுகூட வெளிக்காட்ட முடியாது. ‘எங்கேனும் ஒழிந்திருப்பான்’ அவளின் மனம் அங்கலாய்த்தது. சற்றுத் தள்ளி விளக்கை உயர்த்தினாள். வாகனத்திலிருந்து வித்துடற் பேழை இறங்குவது தெரிந்தது. அவளால் நம்ப முடியவில்லை. இனி நம்பித்தான் ஆக வேண்டும். மணலாற்றில் கரும்புலித்தாக்குதல் ஒன்றின் இறுதி வேவிற்காக சென்ற போது அவன் வீரச்சாவடைந்தான். ‘ஆட்டி உடைக்க வேணும்’ என்று இரவுபகலாய் விழித்திருந்த அந்த வழிகள் 29.10.1999 அன்று உறங்கி விட்டன. ‘குட்டான் மாமா குட்டான் மாமா’ என்று சிறுமிகள் குரலெடுத்து அழுவது மனங்களை உருக்கியது. நாளை…… இந்தச் சின்னமனங்களுக்கு வளமான எதிர்காலமும் நிலையான தேசமும் வேண்டித் தானே குட்டான்மாமா போலப் பலபேர் போகிறார்கள். சிறுமிகளுக்கு இப்போது புரியாவிட்டாலும் காலம் ஒருநாள் உணர்த்தும். நினைவுப்பகிர்வு: துளசிச்செல்வன். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 2004). https://thesakkatru.com/black-tiger-mejor-sengathirvanan/
-
லெப். கேணல் சந்தோசம் லெப். கேணல் சந்தோசம்: ஒரு முன்னுதாரணமான போராளி. இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்கப்பட்டான். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் திருமலை மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கினான். விடுதலைப்புலிகளின் வரலாற்றில் முதன்முதல் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலான நெல்லியடி பொலிஸ் ஜீப் மீதான தாக்குதல், சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், மட்டக்களப்புக் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதல், யாழ்ப்பாணம் பொன்னாலையில் கடற்படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதல், வன்னி உமையாள்புரம் கண்ணிவெடித் தாக்குதல் என்பனவற்றோடு வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதலிலும் முக்கிய பங்கு கொண்டு தலைவருக்கு உறுதுணையாக விளங்கினான், அது போலவே திருமலையின் வரலாற்றிலும் சந்தோசத்தின் பெயர் அழியா இடம் பெற்றது. “மாஸ்ரர்” இவ்வாறுதான் 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தோசம் திருமலை மகளுக்கு அறிமுகமானவன். பாராளுமன்ற உறுப்பினர் பதவி நகரசபை நிர்வாகம் போன்றன பெயருக்குத்தான் தமிழரிடம், ஆனால் பேருந்து நிலையம் உட்பட நகரின் பல பகுதிகளையும் நிர்வாகித்து வந்தவர்கள் குடியேறிய சிங்களவரே. அதேவேளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விஷக் காய்ச்சல் போல சிங்களக்குடியேற்றம் பரவிக்கொண்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான் சந்தோசம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக “மாஸ்ரர்” என்னும் போர்வையில் இயங்கிக் கொண்டிருந்தான். உறுதியான கட்டடத்திற்கு எவ்வாறு ஒவ்வொரு நல்ல கல்லாக தேர்ந்தெடுப்பார்களோ அது போலச் சந்தோசம் ஒழுக்கமான கட்டுபாடான இளைஞர்களை ஒவ்வொருவராகத் தேர்ந்தெடுத்தான். அத்துடன் சந்தோசம் அவர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கியவன். காட்டிலே அவர்களுள் ஒருவனாக வாழ்ந்து காட்டியவன். சந்தோசம் திருமலை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்குமே சொந்தமானவன். தென்னைமரவடியிலிருந்து வெருகல் வரைக்குமான எல்லாக் கிராமங்களிலுமே இவனது காலடி பதிந்துள்ளது எனலாம். எல்லாக் கிராமத்தவர்களையுமே இவனுக்குத் தெரியும் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது இவனுக்குத் தெரியும் மொத்தத்திலே திருமலையை கரைத்துக்குடித்தவன் என்று சொல்லலாம். மேலும் இயக்கத்தின் அரசியல் வேலைகளின் விஸ்தரிப்பிலும் சந்தோசத்தின் பங்கு மிகப்பெரிது எனலாம் “உணர்வு” என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக இருந்தது முதல் ஆரம்பகாலத்தில் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் தயாரிப்பதிலும் பெரும் பங்குவகித்து அதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தான். இதேவேளைதான் தான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்னும் நிலையைப் பயன்படுத்தி போராளிகளுக்குத் தேவையான வீடுகள் அறைகள் என்பவற்றை வாடகைக்கு எடுத்து அவற்றில் அவர்களைத் தங்கவைப்பதற்கே பயன்படுத்தினான். இவ்வாறு சகல வேலைகளிலும் சந்தோசத்தின் பங்கு அதிமாக இருந்தது. ஒருமுறை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பகுதியில் தொடர்சியாக சில நாட்கள் தங்கவேண்டியேற்ப்பட்டது. அந்த நாட்களில் பல்கலைக்கழகத்தில் பரிட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சந்தோசத்திற்கு “இறுதி ஆண்டுப் பரிட்சையில் பங்கு பற்றச்செல்” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது ஆனால் அவன் மனம் அப்பொழுது பரிட்சையில் நாட்டங்கொள்ளவில்லை. தாக்குதல் முடியும் வரை போகமாட்டேன் என்று கூறிவிட்டான் முதலில் போராட்டம் அதன் பின்னர்தான் மர்ரவஎல்லாம் என்பதே இவனது நிலை. இந்தச் செய்தியைத் தான் அவன் இன்றைய தலைமுறைக்கு விட்டுச் சென்றான். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்ப்பட்டு நீறு பூத்த நெருப்பாக போராட்டம் இருந்தபொழுது திருமலை மக்களின் மீள்குடியேற்றம் அவர்களின் புனர்வாழ்வு என்பனவற்றில் கூடிய கவனம் செலுத்தினான் அத்துடன் இந்திய இராணுவம் பற்றியும் எச்சரித்தான். “இந்தியப்படை இங்கு அமைதி காக்க வரவில்லை எம்மை அழிக்கத்தான் வந்திருகிறது, நாம் அஞ்சக்கூடாது. திருப்பித் தாக்க வேண்டும். எங்களுடைய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க விடக்கூடாது” என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அது போலவே செயலிலும் காட்டினான். அது வரை சிறீலங்கா இராணுவத்தினால் உணரப்பட்ட இவனது ஆற்றலை இந்தியப்படைப் படையினர் பின்னர் உணர்ந்து கொண்டனர். இரண்டாயிரம் சாரம் கட்டிய பையன்களின் சக்தி என்ன என்பதை இந்தியப்படையினருக்கு இவன் உணர்த்தினான். சொல்லில் நிதானமும், செயலில் வேகமும் கொண்ட சந்தோசம் இந்தியப்படையினருடனான போரில் அவர்களுக்கெதிராகப் பன்னிரண்டு நாள் போரிட்டு இறுதிநாள் தீபாவளி தினத்தன்று கோண்டாவிலில் அவர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்களது இரண்டு தாங்கிகளை அழித்தபின் ஆற்றாது பின்வாங்கிய அவர்களால் ஏவப்பட்ட ஏறிகனைக்கு இலக்காகி வீரமரணத்தை தழுவிக்கொண்டான். இந்தியப் படையுடனான மோதலில் வீரமரணமடைந்த முதல் லெப். கேணல் ஆனான். எமது போராட்டத்தில் பெரும்பாலான அத்தியாயங்களில் முதலாவது என்று குறிப்பிடும் பொது சந்தோஷத்தின் பெயர் எவ்வாறு குறிபிடப்படுகின்றதோ. அது போலவே இந்திய இராணுவத்துடனான போரில் வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் லெப். கேணல் என்று இவனை வரலாறு கூறுகின்றது. நன்றி: ஈழநாதம், சூரியப் புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/thirikonamalai-district-special-commander-lieutenant-colonel-santhosam/
-
லெப். கேணல் விக்ரர் வீரத்தளபதி விக்ரர். மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழினம் மறக்காது. விடுதலைப் பயிரானது ஆதிக்க பாதங்களினால் மிதிபட்டுப் போய்விடுமோ, பேரினவாதிகளின் பெருமூச்சினில் கருகிவிடுமோ என்ற ஏக்கம் நிறைந்த காலங்களிலெல்லாம் தலைவருக்குப் பக்க பலமகா நின்று விடுதலைப் பயிரை உரமிட்டுப் பாதுகாத்துத் தந்த மூத்த தளபதிகளை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும். விடுதலைப்புலிகள் இராணுவ அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவோ அல்லது அரசியல் அழுத்தங்களுக்கு விளைபோகக்கூடியவர்களோ அல்லர் என்பதை மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றினூடாக சர்வதேச சமூகத்துக்கு சத்தியம் செய்து கொடுத்த சாதனையாளன் தளபதி விக்ரர். 12,10.1986 அன்று மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதி சூற்றிவளைக்க வந்த நூற்றுக்கணக்கான சிங்களப்படையினரை எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைக் கொண்டு முற்றிலும் பாதகமான சூழ்நிலையிலும்…. அதிகலை வேளையிலும் “இரண்டில் ஒன்று, ஒன்று அவன் அல்லது நாங்கள்” என்ற துணிவு மிகுந்த வார்த்தைகளை எங்கள் தொலைத்தொடர்பு சாதனங்களூடாக வழங்கிவிட்டு களத்திலே நேரில் இறங்கி வியூகம் அமைத்து, ஊடறுத்து, சிதைத்து, சடலங்கள் ஆயுதங்களை அள்ளி, சிறைபிடித்து என்றவாறு தாக்குதலை நகர்த்தி ” ஓட விடாதே”, “பார்த்துப் பார்த்து விழுத்து”, “ஹெலியை இறக்கவிடாதே”, இறங்கிய ஹெலியை பறக்கவிடாதே” என்றெல்லாம் தனது சுடுவிரல் அசைவினால் நெறிப்படுத்தி நின்ற வெற்றிகரமான சூழ்நிலையின் இறுதிக் கணத்தில் தளபதி விக்டரின் தொடர்பை இழந்து நின்ற அன்றைய சோகம் நிறைந்த நினைவுகளை பகிர்வதில் மனம் நிறைவடைய மறுக்கிறது. நாட்டுக்கு நாடு நடைபெற்ற யுத்தம்போன்று சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக படையினரின் சடலங்களை ஒப்படித்தும், சிறைக் கைதிகளை பரிமாற்றம் செய்தமையும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்றுவரை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்துவரும் நடைமுறையினை சிறிலங்கா அரசும், சர்வதேசமும் புரிந்துகொண்டிருக்கும். சிறிலங்காப் படையினரை சிறைப்பிடித்தும், படையினரின் சடலங்களை மீட்பதும் தமிழ்மக்கள் மத்தியில் மெல்லமெல்ல துளிர்விட்ட விடுதலைப் போராட்டம் மீதான நம்பிக்கையினை மேலும் பலபடிகள் பாய்ந்து செல்லவைத்த அற்புத நிகழ்வாகவே தளபதி விக்ரர் தலைமையிலான அன்றைய தாக்குதல் சம்பவம் அமைந்திருந்தது. 1983ம் ஆண்டு யாழ் திருநெல்வேலியில் சிங்களப் படையினருக்கு எதிரான கண்ணிவெடித் தாக்குதலில் முக்கிய பாத்திரம் வகித்த தளபதி விக்ரர் அவர்கள் தமிழீழப் பகுதியில் தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிலும் பங்குபற்றியவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத் தகர்ப்பின் பொது பாதகமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது எமது அணியினை நகர்த்தி இடையில் ஒன்று கூட்டி ஒழுங்குபடுத்தி மீண்டும் வேகமாய் நிதானமாய் நகர்த்தி “ராதா ஸ்ராட்”, “குமரன் ஸ்ராட்” (லெப். கேணல் குமரப்பா) என்று ஆரம்பக் கட்டளைகளை அணித்தளைவர்களுக்கு வழங்கி குறுகிய நேரத்தில் போலிஸ் நிலையத்தை வெற்றி கொண்டு ஒரே ஒரு போராளியின் வீரச்சாவுடன் ஏனையோரை கடல் கடந்து பத்திரமாக கரைசெர்ப்பது வரையில் தளபதியின் வழிகாட்டல் என்பது மறக்கமுடியாத நினைவாகி நிற்கிறது. அன்றைய வெற்றிகரத் தாக்குதலை பி.பி.சி செய்தியாளர் தெரிவிக்கும் போது விடுதலைப்புலிகளின் மதிநுட்பமும், துணிவும் நிறைந்த வெற்றிகரத் தாக்குதல் என வர்ணித்தார். மன்னார் மக்கள் அன்றைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தளபதி விக்ரருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து கெளரவித்தனர். பெரும் மகிழ்வுடன் மக்களை வரவேற்கும் பண்பு. மிமிர்ந்து உயர்ந்த அழகிய தோற்றம், அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய அன்றைய நாட்கள் மறக்க முடியாதவை. எமது விடுதலை இயக்கம் பிரசவித்த அக்கினி குஞ்சு என்பது மகளிர் படையணியின் வளர்ச்சி பற்றி எமது தலைவரின் வாக்கிற்கு உயிர் கொடுத்த தளபதியாக விக்டர் அன்று செயல்ப்பட்டார் எமது பெண் போராளிகளுக்கு முதன் முதல் களம் கற்றுக்கொடுத்து இன்று வியக்க வைக்கும் வளர்ச்சியை பெற்று நிற்கும் எமது விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் மூத்த சகோதரனாகவே திகழ்ந்தார். தனது சிறந்த நிறைவான குரல்வளத்தால், பாடும் திறமையால் போராளிகளின் மனதை மற்றுமொரு கோணத்தில் இடம்பிடித்தும் தளபதி விக்டருக்கு இருக்கும் இன்னும் ஒரு சிறப்பு அம்சம். கைத்துப்பாக்கியை அழகாக கழற்றி குறிதவறாது சுட்டுக்காட்டி, கமராவை கையாள்வதும், கலையை ரசிப்பதும் இயற்கையிலேயே அழகுணர்ச்சியுடன் பழகிவந்த தளபதி அவர்கள் எமது தலைவரால் வளர்க்கப்பட்டவர் என்பதில் நாம் பெருமையடைகிறோம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது ஆயிரம் படையினரை ஒரே நாளில் களத்திலிருந்து அப்புறப்படுத்திய வரலாற்று வளர்ச்சியை பெற்று நிற்பதை உற்று நோக்கும் போது மிகுந்த பக்குவத்துடன் எமது தாயக விடுதலைப்பயணம் நகர்ந்து செல்வதை இலகுவில் இனங்கண்டு கொள்ளமுடிகிறது. இன்றும் அன்றும் எமது தலைவர் அவர்களின் நேர்த்தியான வழிகாட்டலினால் மிக மிக உன்னத நிலையை எமது போராட்டம் சந்தித்து நிற்கிறது என்பது தெளிவாகின்றது. என்றுமில்லாதவாறு எழுட்சி கொண்டு எமது மக்கள் நிற்கும் இவ்வேளையில் தாயகப்பற்றுணர்வுடன் ஆயிரம் ஆயிரம் விக்ரர்கள் புதிது துதிதாக எழுந்து வரவேண்டும் இதுவே இன்றுள்ள வரலாற்றுத் தேவையாகும். நன்றி: சூரியப் புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/mannar-district-special-commander-lieutenant-colonel-victor/
-
முதல் வித்து 2ம் லெப். மாலதி 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி. அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். அவர் சொன்னபடியே ஆயுதம் பத்திரமாக கொண்டுவரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் தயாரானது. இயல்விலே புத்துணர்வும் துடிப்பும் நிறைந்த மாலதி சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப்போனவர். அதனால் ஒவ்வொரு ஆயுதங்களின் பெறுமதியையும், வெற்றி நோக்கிய நகர்விலே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அதேபோல தாய் மண்ணிலே ஆழ்ந்த பற்றுக்கொண்டு உழைத்த மாலதியின் நினைவோடு இலட்சியத்தைச் சுமந்து நடக்கிறான போரணிகள். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி வழிகாட்டிச்சென்ற பாதையில் அதே நேசிப்போடு எமது பயணம் தொடர்கிறது. அவர் தம் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்த தேசமும் அவரின் இந்த வரலாற்றைச் சுமந்திருக்க, மன்னார் மகளின் நாமத்தைத் தாங்கியே படையணியாய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 2ம் லெப். மாலதி படையணி தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். நன்றி: விழுதாகி வேருமாகி.
-
லெப். கேணல் அக்பர் விடுதலை வீரியம்: லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர் / வழுதி. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டு மல்லவா? அவன் எங்கே போய்விட்டான்? அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய படைகள் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் துயரப்படுத்தின. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். வண்டியில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை கொடுமைப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது. பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறிய சிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண் டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான். அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது ஓயாத அலைகள் – 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் அமர்த்தப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத் தளத்தை இழக்க விரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்து தரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கே நடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்த போது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான். முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக ‘சத்ஜெய’ என்ற பெயரில் கிளிநொச்சியை வல்வளைப்பு படை நடவடிக்கையை தொடங்கியது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலி வீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகளுடன் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த அக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான். உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்து கணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தன. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான். ஏ – 9 சாலையைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில வல்வளைப்பிற்கு அப்போதைய சிறிலங்காவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ‘ஜயசிக்குறு’ படை நடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாமெனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப் படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும் பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான். போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடினபயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப் போராளிகளையும் ஊக்கப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித் தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான். பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக் கொள்வான். ஒருமுறை நண்பகல்வேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக் காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது கவனமின்றிச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எந்தவேளையிலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறைகூறவுமில்லை. தங்ககத்திற்குப்போய் விளக்குமாறினை எடுத்துக் கொண்டுவந்து தானே கிணற்றடியைச் தூமைப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக் கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் தூய்மைப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு இசையவில்லை. அன்றைய நாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே தூய்மைப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒரு போதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வு காணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது. நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு மே திங்கள் 13ம் நாள். புத்தபிரான் முன் சூளுரை எடுத்துக்கொண்டு வன்னி மீது ‘ஜயசிக்குறு’ என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடை போட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தான். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய் சந்தித்தது. எதிரி ஒவ்வொரு அடி நிலத்தையும் வல்வளைப்புச் செய்ய அதிகவிலை கொடுத்தான். 25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கி நின்று சண்டை பிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை அன்பாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்த போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரி மீதான அவனின் சினம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை மேலாளரான அக்பர் களத்திலே தான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாள்ளி வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் கவனத்திற்கொள்ளாது டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். இறம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு படைக்காவியையும் அழித்து இரு டாங்கி களைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப் படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான். இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் நேர்த்தியான செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக் கொடுத்தான். 10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை கடுமையாய் நடந்தது. எதிரியை நெருங்கி மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் நாட்டின்மீது மேற்கொள்ளும் வல்வளைப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச் சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு படைக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்த பின்னரே அக்பர் தளம் திரும்பினான். அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் வாய்ப்புக் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள். 19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மூலப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு விழித்துக்கொண்ட எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழி நடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித் தலைவர்களும் போராளிகளும் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலை நிறுத்தினர். இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப் படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலை நடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான். ஓயாத அலைகள் – 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல் வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித் தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல் தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர். அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ – 9 பிரதான சாலையை அண்மித்திருந்தான். முன்னேறிய டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப். கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலிகொண்ட சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது. இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்த நிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக விடுதலைக்காய் கொடுத்து ஆறு டாங்கி களை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப் படையின் பலத்தை விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது. இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் ‘அல்பா – 1’. களத்திலே ‘அல்பா – 1’ வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் ‘அல்பா – 1’ இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவேளையிலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளி களின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்த இடத்திற்கு நெருங்கிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகர விடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும் வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான். ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது. விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு ‘தீச்சுவாலை’ என்ற பாரிய இராணுவ நடவடிக் ஷகையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. ‘ஜயசிக்குறு’ களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் படைக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டு மொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை இல்லாநிலைக்கு கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படி எண்ணி இந்த விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிழை இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியை வைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப் போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான். அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல புதுமையான ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் சிறப்புப் பணிப்பின் பேரில் சென்று பணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒரு தளபதியாய் இருந்தபோதும் ஒரு இயல்பான போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான சொற்களைப் பயன்டுத்தி உரையாடுவதும், புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள். இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத் தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத் துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான். இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத் தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான். அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த தூயவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எந்த வேளையிலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்து முடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்ல மாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் படையச் சொத்து. இத்தனை செயற்திறன் மிக்க வீரன் எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னேற்பாட்டுபோது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளை நொருக்கினார்கள். ”தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து” அக்பர் இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான். கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, ”அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடை சேர்ந்து எல்லாரும் உழைத்தால் விரைவில் விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே” என்று கூறி விட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும். நினைவுபகிர்வு: ச.புரட்சிமாறன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2006). https://thesakkatru.com/lt-col-victor-anti-tank-regiment-special-commander-lieutenant-colonel-akbar/
-
லெப். கேணல் விசு வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன்: புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு / அருமை கனகராசா குலேந்திரன் மல்லாகம், யாழ்ப்பாணம். 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம்இ இந்தியப்படை வருகை என பல வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு. இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல். சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்க வேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை மறுபகுதியாகவும் உள்ளடக்கிய புதிய வரவு அற்ற அம்மக்களின் வாழ்க்கைக்கான ‘ஆதாரம்’ நிறைந்த அந்தக் கிராமங்கள். புலிகளின் வரவினால் புளங்காகிதம் அடைந்தன. புலிகளை “எங்கட பொடியள்” என ஒருபகுதி மக்களும், “பெரிசு” என இன்னொரு பகுதி மக்களும் உரிமையுடன் அழைத்தனர். விசுவுக்கு அந்த ஊர் மக்கள் வைத்த பெயர் ‘சின்ன விசு’. புலிகளின் அசைவுகளை எப்படியோ இந்தியப் படையினர் மோப்பம் பிடித்துவிடுவர். இருப்பினும் இந்தியப் படையினருக்கு ‘தண்ணி காட்டிவிட்டு’ காட்டுக்குள் உள்ள தமது அணிகளுக்கு உணவுப் பொருட்களையும், வேறு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்லும் ஒருசில போராளிகளுள் விசுவும் ஒருவன். ஒரு தொகுதிப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமெனில் இந்தியப்படையினருடன் பல சண்டைகள் பிடித்தே செல்ல வேண்டியிருக்கும். சிலவேளை பல சண்டைகளுக்குப் பிறகு அப்பொருட்களை இழக்க வேண்டியும் இருக்கும். அதற்கும் மேலாக பல உயிர்களை விலையாகக் கொடுக்கவும் நேரிடும். இப்படித்தான் ஒருநாள் நெத்தலியாற்றுக் கரையிலிருந்து அறுபதுபேர் கொண்ட பெண்கள் அணி ஒன்றிற்கு உணவுப் பொருட்கள் தீரும் நிலையில் உள்ளது என விசுவுக்குத் தகவல் வந்தது. இராமநாதபுரத்திலுள்ள ஆதரவாளர் ஒருவரின் மாட்டு வண்டியைப் பெற்றுக் கொண்டு ஜேம்சுடனும் இன்னொரு போராளியுடனும் சேர்ந்து உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றிக் காட்டுவழியே நீண்ட தூரம் பயணித்து, பெண் போராளிகளின் தளத்தை அண்மித்த போது, இந்தியப் படையினர் அம்முகாமைத் தாக்க காட்டுக்குள் இறங்கிவிட்டனர் என அறிந்த பெண் போராளிகள் தமது தளத்தினை கைவிட்டுச் சென்றிருந்தனர். அத்தளத்தினுள் பிரவேசித்தவர்களுக்கு விடயம் விளங்கிவிட்டது. கிணற்றடிவரை சென்ற விசுவுக்கு, மரம் செடிகளின் முறிவு ஒலியும், குரங்குகளின் கத்தல் ஒலியும் நிகழப்போகின்ற அனர்த்தத்தை உணர்த்தி நின்றன. நிலைமையை விளங்கிக் கொண்டு சுதாகரித்துக் கொண்ட விசு “ஜேம்ஸ் வாற ஜூனியஸ் பொடியள் பசியோட வருவாங்கள். உடன் எடுத்துவந்த பொருட்களை இறக்கி சமைக்கத் தொடங்குங்கோ”. விசுவின் பேச்சிலிருந்த மறைபொருளைத் தெளிவாக விளங்கிக் கொண்ட ஜேம்ஸ் வண்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின் மூவரும் வண்டிலை வந்தடைந்தனர். இவர்களின் நகர்வினைக் கண்காணித்துக் கொண்டிருந்த இந்தியப் படையினர் வண்டிலுக்குப் பின்னால் பின்தொடரத் தொடங்கினர். இதனை மூவரும் நன்கறிந்தனர். பல துன்பங்களுக்கு மத்தியில் எடுத்து வந்த இவ் உணவுப் பொருட்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பு அவர்களுக்கு; “எங்களைப் பின்தொடருறாங்கள் மச்சான், கடைசிவரைக்கும் இப்ப எங்களைச் சுடமாட்டாங்கள். எங்கட தளத்தை அறிவதுதான் அவங்களின்ரை நோக்கம்” விசு கூறியபோது, “வண்டிலை விட்டிட்டு இறங்கித் தப்பி ஓடுவம்” ஜேம்ஸ் கூறினான். மற்றப் போராளியும் அதற்கு ஆமோதிக்க வண்டில் நிறுத்தப்பட்டது. இந்தியப் படையினரின் துப்பாக்கிகள் ‘சடசட’க்கத் தொடங்கின. துப்பாக்கியால் சுட்டபடியே அவர்கள் மூவரும் இறங்கி ஒரு பக்கமாக ஓடினர். இடையில் விசு காட்டுக்குள் பாதை மாறிவிட்டான். ஜேம்சும் மற்றப்போராளியும் தொட்டியடியில் ஏறியபோது விசுவைக் காணவில்லை. இரண்டு நாட்களின் பின்னர் முல்லைத்தீவுக் காட்டுப்புறத்தில் உள்ள சிறு ஊர் ஒன்றில் தனியாக விசு ஏறினான். பின் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது “உங்களை நம்ப ஏலாது மச்சான். என்ர G – 3 துப்பாக்கியைத்தான் நம்பவேணும்” எனத் தனது துப்பாக்கியை முத்தமிட்டபடியே கூறினான் விசு. “சும்மா இரு மச்சான் மாடுகளை அவிட்டுவிட்டவங்கள் மாடு போற திசையை நோக்கிப் பின்னாலேயே போய் எங்களுக்கு மாடும் வண்டிலும் தந்தவங்களைப் பிடிச்சிட்டாங்களாம். இனி சனம் என்னத்தைத் தந்தாலும் மாடுகளை மட்டும் தராது” ஜேம்ஸ் கூறினான். “அதுக்கென்ன மணிகளுக்குப் பதிலாக இனி சயனைட்டைக் கட்டிவிடுவம்” விசு கூறியபோது அந்த இடம் சிரிப்பொலியால் நிறைந்திருந்தது. இன்னும் ஒரு நாள், 1988ம் ஆண்டு வைகாசி மாதம் பழைய கண்டி வீதியினை இணைக்கும் கொக்காவில் சந்தியில் இந்தியப் படையினர் பதுங்கித் தாக்கியதில் புலிவீரன் ஒருவனுக்கு கால் முறிந்துவிட்டது. வீதிவழியே ‘அம்புலன்ஸ்’ வண்டியில் எடுத்துச் செல்ல முடியுமா என்ன? இல்லையே. காட்டுவழியேதான் பாதை முறிக்க வேண்டும். கால் முறிந்தவனுக்கு உடனடிச் சிகிச்சையளிப்பதாயின் வட்டக்கச்சி செல்ல வேண்டும். போகும் வழியில் இன்னொருவனுக்குக்கூட இன்னொரு இடத்தில் ‘கால் முறியலாம்’. எப்படியும் போய்ச் சேர்ந்தாலும் மருத்துவரை அழைத்து வருவதென்பது கடினமான காரியம். ஒவ்வொரு உள்ளூர் மருத்துவரையும் இந்தியப்படையினர் தமது கண்காணிப்பில் வைத்திருந்தனர். தோள் கொடுத்தவனை, சிலவேளை உயிர் தந்தவனை, தப்பியோட வழியிருந்தும் நண்பனுக்காகச் சண்டையிட்டவனை, உணவு தனக்குக் கிடைக்கும் வேளை நண்பனுக்காக ஒருபிடி சோற்றை காற்சட்டைப் பையினுள் வைத்து எடுத்து வருபவனை, அந்தப் புலிவீரனை விட்டுச் செல்ல முடியுமா என்ன? “மச்சான் இவனுடன் நான் நிக்கிறன். நீங்கள் போய் ‘டொக்ரர்’ யாரையாவது கூட்டிக்கொண்டு வாங்கோ” என விசு கூறியபோது அவனின் G – 3 துப்பாக்கியையும், அவனையும் நம்பி காயப்பட்ட போராளியை அவனுடன் விட்டுவிட்டுச் சக தோழர்கள் காட்டுவழியே நகர்ந்தனர். யாரோ பாதகன் எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிட்டான். அன்று அந்த ஊர் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது… விசுவும், காயப்பட்ட போராளியும் சிறு பற்றையொன்றினுள் சருகுகளால் தம்மை உருமறைத்த படியே அன்று முழுவதும் கிடந்தனர். இந்தியப் படையினரின் ‘அந்த மணம்’ மூக்கை அரித்தது. ‘பீடிப்புகை’ உணவு, நீர் இன்றியிருந்த வயிற்றைக் குமட்டியது. “அண்ணை என்னாலை இனியும் வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்க ஏலாமல் கிடக்கு”. விசுவின் காதோரம் காயப்பட்ட போராளி கூறியபோது, விசு அவனின் ‘சயனைட்’ குப்பியை வேண்டித் தன்னுடன் வைத்துக் கொண்டான். “என்ர G -3 யில இருக்கிற ரவைகள் முடிஞ்சபிறகு நீ வேணுமெண்டா குப்பியைக் கடி”. விசு கூறினான். இந்தியப் படையின் கண்களில் அவர்கள் அகப்படாமல் போகவே தமது சுற்றிவளைப்பைக் கைவிட்டு இரவே இந்தியப் படையினர் தளம் திரும்பிவிட்டனர். இரவானதால் நிலமை அறிவதில் சிக்கல்கள் எழவே, காலையானதும் மருத்துவருடன் வந்த சகபோராளிகளுக்கு முழுநாளும் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்களின் கண்கள் சொல்லி நின்றன. இக்காலப்பகுதியில் விசுவுடன் தளத்தில் நின்ற ஜேம்ஸ் அவர்கள் நினைவு கூறுகையில், “கடலில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு படகு எமக்கு அருகால் வந்துகொண்டிருக்குமானால் எமக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வு ஏற்படுமோ அப்படியோர் உணர்வு, விசு எம்முடன் கூடவந்தால் ஏற்படும்… நாங்கள் எல்லோரும் நல்லாச் சண்டை பிடிப்பம். ஆனால் எங்களுக்கு எப்ப வாய்க்குள் சயனைட் குப்பியை வைக்கலாம் என்ற எண்ணம்தான் அலைகளாய் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் விவேகத்துடனும், கூடுதலான சகிப்புத் தன்மையுடனும் தன்னையும் துப்பாக்கியையும் நம்பி, ‘வெல்வதற்காகவே சண்டையிடுகின்றோம்’ என்ற உணர்வுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார் விசு” என்றார் மெல்லிய சிரிப்புடன். அந்த ஊர்களில் புலிகள் அணியின் வரவு என்பதும், நடவடிக்கைகள் என்பவையும் புதியவர்கள் பலரை போராளிகளாகப் புலிகள் அமைப்பில் இணைத்தன. ஓர் இடத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் இருந்தாலே இந்தியப்படைகள் மோப்பம் பிடித்துவிடுவர். இருந்தும் முப்பது புதியவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் கொடுத்துப் போராளிகளாக்கும் பொறுப்பு விசுவிடம் வழங்கப்பட்டது. ஆயுதப்பயிற்சி, அரசியல் கல்வி, அடிப்படைத்தேவைகள் எல்லாமே விசுவின் கைகளில்தான். புதியவர்களுக்கு பயிற்சி முடியும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. “காட்டுக்குள்ள மீண்டும் இந்தியப் படைகள் இறங்கப் போறாங்களாம்” விரைவாகச் செய்தி ஒன்று கிடைத்தது. “ஒரு தளத்தினை அமைப்பதென்பது அவ்வளவு இலகுவான பணியா? இல்லையே. கிணற்றில் இருந்து மண்சுமந்த நோவே முள்ளந்தண்டிலிருந்து இன்னமும் போகவில்லை. காட்டுக்குள் பொருட்களைச் சுமந்தெடுத்த சுமைகள் சுகமானதல்ல… எப்படியும் எதிரியின் நகர்வைத் தடுக்க வேண்டும். அல்லது எதிரி எம்மை அண்மிப்பதையாவது தெரிந்துகொள்ள வேண்டும்…” சிந்தித்த விசுவுக்கு மணலாற்றுக் காட்டிலிருந்து வந்த ‘ஜொனி’ மிதிவெடிகள் நினைவுக்குவர 1988 ஆவணி 26 அன்று புதிய போராளிகள் சிலரை அழைத்து, “மிதிவெடிகளை எடுத்துக் கொண்டு வாங்கோ” என்று கூறியவன் தன் புதிய போராளி அணியுடன் ‘எதிரி வரலாம்’ என எதிர்பார்த்த காட்டின் பாதைகளினூடே குறிப்பிட்ட தூரம்வரை நடந்திருந்தான். “உங்களுக்குப் பயிற்சியாகவும் இருக்கட்டும். அதேநேரம் எதிரிக்கு நீங்கள் வைக்கின்ற முதற் பொறியாகவும் இருக்கட்டும்” என புதிய போராளிகளிடம் கூறிய விசு, மிதிவெடி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தவனை அருகில் நின்று அவதானித்துக் கொண்டிருந்தான். மிதிவெடி ஒன்றினைப் புதைத்த சிவம் அதனை உருமறைத்துவிட்டு எழுந்தபோது மரவேர் ஒன்றில் கால் இடறுப்பட தான் மறைத்து வைத்த மிதிவெடியின் மேலேயே தவறுதலாக விழ… “நான் ஓர் ஆபத்தான நண்பன்” என்பதை மிதிவெடி சொல்லியது. மிதிவெடியின் மேல் சிவம் விழப்போகிறான் எனத் தெரிந்தும் சிவத்தைப் பிடிக்கப்போன விசுவின் வலக்கை முழங்கைக்குச் சற்றுக்கீழ் துண்டாடப்பட்டது. இடக்கையில் விரல்கள் அனைத்தும் சிதறின. உடல் முழுவதும் காயங்கள். சிவம் சாவுடன் போராடிக்கொண்டிருக்க காயமின்றித் தப்பிய ஒருவன் தளத்துக்கு ஓடிச்சென்று தோழர்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்த போது தன் தோழர்களைப் பார்த்து ‘கைகளிரண்டும் இல்லை மச்சான்’, கைகளிரண்டும் இல்லை மச்சான்’, என அரை மயக்கத்துடன் கூறத் தொடங்கினான். முகத்தில் வேதனையைக் காட்டிக் கொள்ளவில்லை. மனதில் வேதனைகள் இல்லாதிருக்குமா என்ன? நாற்பது கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் வடமராட்சிக் கரையோர எல்லையை நோக்கி காயப்பட்ட தம் சகதோழர்களுடன் கல்மடுவிலிருந்து புலிகள் அணி ஒன்று புறப்பட்டது. மெல்லிய உடற்கட்டையுடைய விசுவைச் சுமந்தவாறே போராளி ஒருவன் வேகமாக முன்னே நடந்து கொண்டிருந்தான். ‘தமிழ்நாடு’… அறுவைச் சிகிச்சைகள் முடிவடைந்து கைகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுக்களை அவிழ்க்கும் நாளும் வந்தது. விரல்கள் இல்லாத இடக்கையின் பெருவிரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையே காணப்படும் பகுதியை வெட்டி விரல்போன்ற ஒன்றை மருத்துவர் உருவாக்கியிருந்தார். “டொக்ரர் எனக்கொரு விரல் எப்படியும் உருவாக்கித்தர வேண்டும்” என அவன் மருத்துவரிடம் கேட்டது வீண் போகவில்லை. 1989 இன் நடுப்பகுதியில் அந்தப் பனை மரத்தின் ஓலைகள் மீண்டும் அவனுக்குத் தெரிந்தன. பிரிந்து சென்ற அனைத்தோடும் மீண்டும் சேரும் நாள் “நான் எவ்வளவோ நாட்டுக்காகச் செய்ய வேண்டிக்கிடக்கு” தனக்கென உருவாக்கிய விரலை மீண்டுமொரு தடவை பார்க்கிறான். அந்தப் பனை மரங்கள் முழுமையாகத் தெரிந்தன. கரைசேர்ந்த படகிலிருந்து “தூக்கவா விசு அண்ணை” போராளி ஒருவன் கேட்க “என்னால் முடியும் மச்சான்” என்று கூறிவிட்டுக் கரையேறினான். அந்தப் பனைமரமும், ஓயாத அந்தக் கடலின் அலைகளும் தங்களுடன் அவனையும் தொடர்படுத்திப் பார்த்திருக்கும். மீண்டும் வன்னியில் விசு 3.7 எனும் குறியீட்டுப் பெயருடைய தளத்தில் போராளி அணி ஒன்றிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். இங்கு அவன் துப்பாக்கி எடுத்துக் குறிபார்த்து தன் இலக்கை வீழ்த்தியபோது மருத்துவருக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறியிருப்பான். 1990 இல் போராட்டத்தின் பட்டறிவு புலிகளின் புலனாய்வுச் செயற்பாட்டை நிறுவனப்படுத்த வேண்டிய தேவையினை தலைவர் அவர்களுக்கு ஏற்படுத்தியபோது அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட அணியில் விசுவும் இருந்தான். 1990 யூன், இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் யாழ் – வன்னிக்கான தரைத்தொடர்பை சிங்களப்படையினர் ஆனையிறவில் துண்டித்தனர். கொம்படிப் பாதையே வன்னிக்கான தொடர்பானபோது, புலனாய்வுத்துறைப் போராளிகளின் போக்குவரத்து வேலைகளினையும், பொருள் மாற்றும் வேலையினையும் விசுவே பொறுபெடுத்திருந்தான். இக்காலப்பகுதியில் புலனாய்வு வேலை ஒன்றினை பொறுப்பெடுக்கும்படி புலனாய்வுப் பொறுப்பாளர் அவர்கள் கேட்டபோது, “நான் சண்டைக்கெண்டாப் போறன் அம்மான். எனக்குப் புலனாய்வு வேலை சரிவருதில்லை”. விசுவின் இம்மனநிலை பற்றி புலனாய்வுப் பொறுப்பாளர் கூறியபோது, “விசுவுக்கு புலனாய்வு அறிவு என்பது இயற்கையாகவே இருந்தது. தன்நம்பிக்கை என்பது அதைவிடப் பெரிதாக இருந்தது. ஆனால், அவன் ஏன் புலனாய்வு வேலைகளில் அதிக நாட்டம் கொள்ளவில்லை? இது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. எமது விடுதலைப் போரை நாம் வெல்ல வேண்டும் என்றால் புலனாய்வுச் செயற்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் சண்டைக்கான துறையில் அவன் இருந்ததால் அவன் முடிவு சரியானதுதான்”. ஏன்றார். விசுவின் மனநிலையறிந்த பொறுப்பாளர் விசுவுக்கு சண்டைக் களத்துடன் தொடர்புடைய பணியைக் கொடுக்கத் தொடங்கினார். 1993 நவம்பர் 11 இல் பூநகரி தரைப்படை மற்றும் கடற்படைக் கூட்டுத்தளங்கள் மீது ‘தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கையைப் புலிகள் மேற்கொள்ளத் தீர்மானித்த போது வழங்கல் பணியை மேற்கொள்ளும் நடவடிக்கைப் பகுதி ஒன்றிற்கு விசு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். அன்று நீரேரியைக் கிழித்தவாறே அவனின் படகு விரைந்து வந்துகொண்டிருந்தது… திடீரென வானில் தோன்றிய எதிரியின் ‘புக்காரா’ வானூர்தி ஒன்று படகை நோக்கி வேகமாய்க் குத்திப் பதிந்தது. “டேய் அடிக்கப் போறான்ரா” எல்லோரும் நீருள் பாய்ந்து நீந்தத் தொடங்கினர். படகு நீருள் அமிழ்ந்து கொண்டிருந்தது. இல்லாத கைகளுடன் விசு கரையேறுவதற்காய் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தான். அவனின் ‘கோல் கொமாண்டோ’ நீரினுள் அவனை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தது. கப்டன் வண்ணன் நீரோட்டத்துடன் போராடித் தோற்றுக் கொண்டிருந்தான். விசு வருவானா? என்பதைவிட ‘அட விசுவுக்கு நீந்தக் கைகள் இல்லையே’ என ஏங்கிய உள்ளங்களே அதிகம். “இதயம் வெடித்து மீன்களே அக்கடலேரியில் மிதந்து கொண்டிருந்த போதும், அந்திசாயும் நேரம் அவன் வந்து கரையேறினான். பின் இன்னுமோர் புதிய பணி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. “வணிகம்” ஐம்பது வீதம் பணம் இலாபம், ஐம்பது வீதம் புலனாய்வு இலாபம். அவன் தன் போராட்ட வாழ்வில் கண்டிராத புதிய பணி. சாரம், அரைக்கைசேட், அரும்பிய தாடி அவனை வணிகனாகக் காட்டிக் கொண்டிருக்க, ஒட்டிய உடலும், வெட்டிய கைகளும் அவனைப் போராளியாகவே காட்டிக் கொண்டிருந்தன. இக்காலப்பகுதியில் விசுவுடன் பணியாற்றிய பணியாளர் ஒருவர் நினைவு கூறுகையில், “இந்த மனிசனிட்ட ஒரு குணமிருக்கு, அவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக எந்த உதவியை நாம் செய்து கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஒருநாள் நான் மலசலகூடத்துக்கு தண்ணீர் அள்ளிவைத்தேன். அத்தண்ணீரைக் கீழே உற்றிய அவர் சற்றுக் கோபத்துடன், “உங்களுக்குத் தருகிற ஊதியத்துக்கு இயக்கத்துக்கு வேலை செய்யுங்கோ, எனக்குக் கைகள் இருக்கின்றன. நீங்கள்தான் கைகள் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறியள்” அதுக்குப்பிறகு நான் எந்தப் பணிகளும் செய்து கொடுக்கிறதில்லை. அப்படி ஏதாவது செய்யத் தொடங்கினாலே ‘பாணி’ ஒட்டப்போகுது என அறுக்கவும் தொடங்கிவிடுவார்” என்றார். இக்காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் தன் ஆயுதமான ‘கோல்கொமாண்டோ’வை இழந்த துயர் விசுவை வாட்டிக் கொண்டிருக்க போகுமிடங்கள் எல்லாம் கோல்கொமாண்டோ ஒன்றினைப் பொருத்தி எடுப்பதற்காக அதன் உதிரிப்பாகங்களைத் தேடிப்பெற்றுக் கொண்டான். “அண்ணை, உங்களுக்குக் கைகளும் இல்லை பிறகேன் ஆயுதம்” கேட்கக்கூடாத கேள்வியை போராளி ஒருவன் கேட்டுவிட்டான். “டேய் என்னதான் இருந்தாலும் சண்டையிட்டுத்தான் நாங்கள் நாட்டைப் பிடிக்க வேண்டும்… நாட்டைப் பிடித்த பிறகும் துவக்குத் தேவைப்படும்”. ‘வலிமையே வாழும்’ என்ற பொதுவிதி விசுவின் உணர்வுகளுடன் பிரதிபலித்தது. யூன் 05 விளக்குவைத்தகுளம் நோக்கிய சிங்களப்படைகளின் ஜெயசிக்குறு தாக்குதலில் மேஜர் குட்டி வீரச்சாவு அடைய, பின்கள வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசுவுக்கு புலனாய்வுப் பொறுப்பாளரிடமிருந்து செய்தி வந்திருந்தது. “புலனாய்வுத்துறைப் படையணியைப் பொறுப்பெடுக்கவும்”. அணிப் பொறுப்பினை எடுக்கும் போது விசுவின் முன்னே எதிரியின் பாரிய நகர்வினைத் தடுக்கும் பொறுப்புடன் இன்னுமொரு பாரிய பொறுப்புமிருந்தது. புலனாய்வை மட்டுமே பட்டறிவாகக் கொண்ட போராளிகள். ‘துணிவு’ மட்டுமே அவர்களுக்கான தகுதியாய் இருந்தது. ஏனைய அணிகள் தொடர்ச்சியாக சண்டைக் களங்களில் நின்றமையால் கூடுதலான சண்டை அனுபவம் கொண்ட போராளிகளைக் கொண்டிருந்தன. எனவே, தன் அணிக்கும் உறுதியான ஓர் அடித்தளத்தை இட்டு சண்டைக்களங்களில் காத்திரமான பங்கைக் கொடுக்கவேண்டிய மற்றுமோர் முக்கிய பொறுப்பினையும் அவன் நன்கு விளங்கியிருந்தான். சிறந்த படையணிக்கு அடித்தளமிடுவதற்கான ஒவ்வொரு சிறு விடயங்களையும் தலைவர் அவர்கள் கூறுவதுபோல் தன்னிலிருந்தே ஆரம்பித்தான். விசுவின் கைகளுக்கிடையேயும் ஒரு மண்வெட்டி இருக்கும். அந்த மண்வெட்டியும் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும். ஒரு இரவு. வேவுக்காரன் பின்னால் வந்து அடிக்க எத்தனித்தபோது முதலில் தன் துப்பாக்கியை இயக்கிச் சண்டையிட்ட அந்தப் போராளி, “தம்பி உன்ர கோல்சரை கட்டிக்கொண்டு படு”. அடிக்கடி விசு கூறுவதை நினைவுபடுத்திக் கொள்கிறான். “அண்ணா, எங்களுக்கு ஒரு சண்டையும் கொழுவுது இல்லை”. காவலரணில் நிற்கும் போராளி ஒருவன் கேட்டான். “ஆமி என்ன வேவு பார்க்காமலேயே சண்டைக்கு வாறான்? நீங்கள் பலமாக இருந்தால் அவன் எப்படி வருவான்”. தனக்குள்ளும் அந்தக் கேள்வி இருப்பதை மறைத்தபடியே இயல்பாகக் கூறுவான். “டேய் விசுவண்ணைக்கு காய்ச்சல்” காவலரணுக்குப் பொறுப்பான போராளி கூறுவான். “தம்பி இரண்டு பேரையும் பின்னுக்கு அனுப்பிவிட்டு அதை டம்மிப் பொயின்ற் ஆக்கு”. “அதால ஆமி உடைச்சா?” “டேய், ஆமி உடச்சா நாங்கள் மூடி அடிப்பமடா” விசு கூறுவான். “அண்ணை இவன் மாறி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில சேர்ந்திட்டான்”. ஒரு போராளி குத்தலாய்ச் சொல்ல, “மச்சான் சின்னச் சத்தம் கேட்டாலும் என்ன என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கோ” கூறியவாறே விசு மறுகாவலரணுக்குச் செல்வான். “கனகாலத்துக்குப்பிறகு ஊருக்குள்ள வந்திருக்கிறம்”. பின்னால் இருந்த அறிவிடம் விசு கூறினான். வீதியில் கண்ட தெரிந்தவர் அவனை மறித்து, “என்ன விசு கண்கள் எல்லாம் உள்ள போயிட்டுது” “எங்கட கண்கள் உள்ள போனதால்தான் ஆமியும் உள்ளவராமல் இருக்கிறான்” அதில் நிறைந்திருந்த ஆயிரம் கருத்துக்களை அந்தப் பொதுமகனால் அந்தக் கணத்தில் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஊருக்குள்ள வந்த அவன் அன்று மாலையே தன் வாழ்விடத்திற்குத் திரும்பி விடுவான். தன் பிள்ளைகளுக்கென கச்சான் கூட வாங்கிச் செல்ல அவன் கையில் பணம் இருக்காது. அன்று அந்தப் பழைய உந்துருளிக்குக் காற்றுப் போனது. ரியூப்புக்கு ஒட்டுப் போட பணம் வேண்டும் என்ன செய்வது? அவன் தோற்றத்தைப் பார்த்தே அவன் யார் என விளங்கிக்கொண்ட அந்த ஒட்டுவேலை ஐயா அவனிடம் பணம் கேட்கவுமில்லை. “விசு அண்ணை வந்திட்டார்” தொலைத்தொடர்பு சாதனங்களினூடாக போராளிகள் கதைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் இனம்புரியாத தெம்பு ஏற்படும். 1997 டிசம்பர் 03 மன்னகுளப் பகுதியினூடாக எதிரி நகர்வதற்கான சாத்தியத்தை அடுத்து விசுவின் அணிகள் மன்னகுளப் பகுதிக்கு மாற்றப்பட்டன. வீதியின் வலது பக்கத்திலிருந்து குளத்தின் அணைக்கட்டை ஒரு பக்கம் பாதுகாப்பு வேலியாக்கி அதில் ஓர் அணியையும், வீதியின் இடப்பக்கமாக (கனகராயன்குளப் பகுதி) இன்னொரு அணியையும் விசு பிரித்து விட்டிருந்தான். வீதிக்குக் குறுக்காக மாலதி படையணி நிலை கொண்டிருந்தது. அடுத்த நாள் 1997 டிசம்பர் 04, சூரியன் மேலெழுந்து கொண்டிருந்த நேரம் மன்னகுள வீதியை ஊடறுத்த சிங்களத்தின் அதி சிறப்பு கொமாண்டோ அணியினர் வீதிக்கு அருகாக ஒரு கிலோமீற்றர்வரை முன்னேறி இருந்தனர். “எங்களுடைய முதற்கட்டப் பணி முடிவடைந்துவிட்டது. கண்டி வீதியில் ஏறப்போகின்றோம்” சிங்களத் தளபதி ஒருவன் தன் கட்டளைப் பீடத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தான். எதிரி ஊடுருவிய பிரதேசத்தினுள் ஒரு காவலரண் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அக்காவலரணில் இருந்த மேஜர் நீலாம்பரி தனியாக நின்று எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். “சாண்டிலியன், நான் விசு கதைக்கிறன். உடைத்த காவலரண்களை மீண்டும் பிடித்து மற்ற அணிகளோட லிங் பண்ணுங்கோ…” “ஒரு காவலரண் ஆமியிட்ட பிடிபடாமல் இருக்கு. அதில எங்கட பிள்ளை ஒன்று தனியாக நின்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கு. ரவையைப் பார்த்து அடியுங்கடா” முன்னே சென்று கொண்டிருந்த அணிகளுக்கு விசு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். “மறுபுறத்தில், ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் வந்த இடம் சொல்லவே வழிதெரியாதிருந்த சிங்களத்தின் 53ஆவது படையணி கொமாண்டோக்களுக்கு அமெரிக்காவின் “கிரீன்பரே” படையணி கொடுத்த பயிற்சிகள் புலிகளின் தாக்குதலின் முன்னே கைகொடுக்கவில்லை. ஒரு கல் வீட்டின் உள்ளேயே சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டிருந்த கொமாண்டோக்களுக்கு அந்தக் கல்வீடே கல்லறையானது. “உதவிக்கு படைகள் அனுப்புகிறோம்” என சிங்களத் தளபதிகளிடமிருந்து பதில் வந்ததே தவிர படைகள் வரவேயில்லை. எங்கிருந்தோ வந்த குண்டின் சிதறல்கள் விசுவின் தோள்மூட்டிலும் காலிலும் காயத்தை ஏற்படுத்தின. உதவித் தளபதி அறிவின் குரல் வோக்கியில் கேட்கத் தொடங்கியது. உதவிக்கு வந்த சக அணிகளுடன் இணைந்து எதிரியால் பிடிக்கப்பட்ட காவலரண்கள் அனைத்தும் மீளவும் கைப்பற்றப்பட்டன. ஒன்பது மணிநேர சண்டையின் முடிவில் தனது நாநூறு அதிசிறப்புக் கொமாண்டோக்களை சிங்களத்தின் 53ஆவது படையணி இழந்திருந்தது. அந்த நாள் சிங்களத் தளபதி சிறிலால் வீரசூரியாவுக்கு மட்டுமல்ல, சிங்களத்தின் புகழ்பூத்த 53ஆவது படையணிக்கு என்றுமே மறக்கமுடியாத நாள். “அறிவண்ணை விளக்குவைத்தகுளத்தில் G.P.M.Gயை எதிரியிடம் பறிகொடுத்த அவமானத்தை எங்கட இரத்தத்தால் கழுவியிருக்கிறம்”. மருத்துவமனையில் வைத்து அறிவிடம் விசு இப்படித்தான் கூறினான். மீண்டும் படைவேலி வாழ்க்கை. மழையும் தன்வீச்சைக் கடுமையாக்கி இருந்தது. “பதுங்குகுழி வெட்டினா நனையத்தான் வேண்டும். அது வியர்வையாலா? மழையாலா? என்பதைக் காலநிலைதான் தீர்மானிக்க வேண்டும்” தெப்பலாய்த் தோய்ந்திருந்த போராளி ஒருவன் கூறிக்கொண்டிருந்தான். சின்ன வயதில் தலைக்கு பௌடர் போட்டு அதற்கும் ஈரம் காய்ந்திருக்காது என எண்ணி சாம்பிராணிப் புகை போடும் எங்கள் அம்மாக்களின் அந்தப் பிள்ளைகள் தலைதுடைக்க சிறு துண்டுகூட இல்லாமல் தாய்நாட்டிற்காக நனைந்து கொண்டிருந்தார்கள். விசுவும் காய்வான், நனைவான். தலை துடைக்க சிறு துண்டல்ல கைகள் இன்றியும் சிரமப்படுவான். தொடர்ச்சியாகக் கஞ்சி அல்லது கத்தரிக்காயும் சோறும் தான் உணவாக வந்து கொண்டிருக்கும். “மச்சான், எலும்பெல்லாம் தெரியுது. காயப்பட்டாலும் எக்ஸ்ரே எடுக்க செலவு மிச்சம்தான்” என்றவாறே, “ஏதாவது அயிற்றம் போடுவம்” விசு கூறுவான். ஏதாவது மிருகங்களை வேட்டையாடுவதற்காக இருவர் புறப்படுவார்கள். சிலநேரம் மான் வரும் சிலநேரம் “அண்ணை, சுட்டம் ஓடிற்றுது” என்ற பதில் வரும். “டேய் அது மானடா, அதுக்கு நாலுகாலடா, சுட்டுப் படாட்டா அது ஓடும் தானடா”. எங்கும் சிரிப்பொலி எழும். கொம்பனி மேலாளர் என்ற நிலையிலிருந்து மாங்குளப் பகுதிக்கான முழுமையான பொறுப்பாளராகக் கட்டளைப் பீடத்தினால் அவன் நியமிக்கப்பட்டான். ஒருசில மறிப்பு வேலியை மட்டும் பாதுகாக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தவனுக்கு பல கிலோ மீற்றர்கள் மறிப்பு வேலியை எதிரி உடைக்காமல் பாதுகாக்கக் கட்டளையிட வேண்டிய முக்கிய பொறுப்பு…… அவன் ஒரு பொதுவான பொறுப்பாளனாக மாறியிருந்தான். 1998 யூன் 05, அன்றிரவு ‘எல்’ வடிவில் ஒலுமடுப் பக்கமாகத் திரும்பும் புலனாய்வுத்துறைப் படையணி பாதுகாத்த மறிப்பு வேலியில் அமைக்கப்பட்டிருந்த போலிக் காவலரணின் உள்ளே (டம்மிப் பொயின்ற்) எதிரிப்படையின் வேவுகாரர் வந்து சென்ற தடயங்கள் தெரிந்தன. விடயம் உடனடியாக விசுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. “கவனமாக இருங்கோ, அதுக்குள்ளால எப்படியும் நுழையப் பார்ப்பான்” 1998 யூன் 06; பட்டப்பகல் பொழுதில்… அலட்சியமாக இருக்கும் அந்த ஒரு நிமிடமே எதிரி உன்னைத் தேடிவரும் நேரமாக இருக்கலாம். தலைவர் அவர்கள் கூறியதை பட்டறிவில் அன்று புரிந்துகொண்டார்கள். வளைவாகச் சென்ற நகர்வு அகழிக்கு மையத்தில் அந்தப் போலிக் காவலரண் அமைந்திருந்தது. எதிரிக்கு வாய்ப்பாக போய்விட்டது. குறிப்பிட்ட தூரம் வரை சென்று வளைவுப் பகுதியில் நின்று துப்பாக்கியை நீட்டினால் எதிரியின் துப்பாக்கி சடசடக்கத் தொடங்கிவிடும். எதிரி கடுமையாக நின்று போரிட்டுக் கொண்டிருந்தான். அறிவுக்கு விசுவிடம் இருந்து கட்டளைகள் வந்து கொண்டிருந்தன. களநிலைமை போராளிகளுக்குச் சாதகமாக மாறியது. பகல் பொழுதில் புலிகளின் துப்பாக்கிக் குறியில் இருந்து தப்பியோடுவதே எதிரிக்குக் கடினமான பணியாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் வரலாற்றில் அந்த முப்பது நிமிடச் சண்டையும் முக்கிய இடத்தைப் பெற்றது. ஜெயசிக்குறுப் படைகள் 1998 பெப்ரவரி 04க்குள் கண்டிவீதியைப் பிடித்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப் படைகளுக்கான விநியோகத்தை ஏற்படுத்திவிடுவர் என்ற பதில் பாதுகாப்பு அமைச்சரின் காலக்கெடுவை ஏழு மாதங்கள் கடந்திருந்தன. மாங்குள நகரினைக்கூட கைப்பற்ற முடியாமல் சிங்களப் படைகள் திணறிக் கொண்டிருந்தன. சிங்களப் படைகள் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சி நகரினை மீண்டும் கைப்பற்ற நாள் குறித்தபோது, அதற்கான பயிற்சிகளில் விசுவின் அணியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிளிநொச்சிப் படைத்தளம் ஏறக்குறைய 20 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினைக் கொண்டிருந்தது. கண்டி வீதியைத் தன்னகத்தே உள்ளடக்கி முப்பது மீற்றருக்கு ஒரு காவலரண், நகர்வு அகழிகள், முட்கம்பி வேலிகள், பதுங்கு குழிகள் எனப் பதினாறுக்கும் மேற்பட்ட மினிமுகாம்களையும் தன்னகத்தே கொண்டு சிங்களத்தின் புகழ்பூத்த 54அவது படையணியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பெரும் படைத்தளமாக அது விளங்கியது. இந்தப் படைத்தளத்தை அழிக்க வேண்டுமாயின் படைத்தளத்தின் விநியோக வழியை அடைக்க வேண்டும். விநியோக வழியை அடைக்க வேண்டுமாயின் பரந்தன் பகுதியில் கண்டி வீதியைத் துண்டாட வேண்டும். கண்டி வீதியைத் துண்டாடும் பணியை பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தலைமையிலான அணிகள் பொறுப்பெடுத்திருந்தன. அவரின் அணிகளைக் கண்டி வீதிக்கு அனுப்ப பாதை உடைத்துக் கொடுக்க வேண்டும். பாதை உடைத்தெடுத்து அகட்டிக் கொடுக்கும் பணி விசு தலைமையிலான புலனாய்வுத்துறைப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. ‘ஓயாத அலைகள் – 02’ 1998 செப்ரெம்பர் 27, அதிகாலை 1.20, டோபிடோ வெடிக்க, முட்கம்பி வேலி துண்டாடப்படுகிறது. முட்கம்பி வேலிகளை அகற்றி உள்ளே புகுந்த அணிகளில் ஒரு அணி விசு தலைமையில் வலப்பக்கமாகவும் (டிப்போ வீதிப்பக்கம்) இன்னுமோர் அணி அறிவு தலைமையில் இடப்பக்கமாகவும் (பரந்தன் பகுதி) பிரிந்து சென்று பத்தே நிமிடங்களில் தடைகள் உடைக்கப்பட்டு பின் இடம் வலமாக ஒரு கிலோமீற்றர் தூரமான படைவேலிகள் உடைக்கப்பட்டுப் பாதை கொடுக்கப்பட கண்டி வீதியைத் துண்டாடும் அணி தனது வேலையைச் சரிவரச் செய்தது. நாலு திசைகளிலிருந்தும் புலி அணிகளின் பாச்சலாலும், எறிகணை வீச்சாலும் படைத்தளம் சிதைந்து கொண்டிருந்தது. வெட்டையான இடங்களினூடாக முன்னேறிய விசுவின் அணி உருத்திரபுர வீதியின் அருகே இருந்த அந்த மாடிவீட்டின் பக்கத்து காவலரணையும் கைப்பற்றி இருந்தது. நேரம் பகல் 1.30 மணி. முதல் நாள் இரவு முழுவதும் விழித்திருந்து சண்டையிட்டகளைப்பு ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தெரிந்தது. விசு காவலரண் ஒன்றிற்குள் இருந்தான். எதிரியின் துப்பாக்கி ரவைகள் காவலரணில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. காவலரணின் ஓட்டையினூடே, உள்ளே ரவை ஒன்று பட்டுத் தெறித்து விசுவின் மார்பினைத் துளைத்து நின்றது. அந்த நிமிடம் நடக்கப்போவதை விசு உணர்ந்தான். தன் கோல்கொமாண்டோ துப்பாக்கியை அருகில் நின்ற போராளியிடம் கொடுத்தான். “தம்பி பிடிச்ச இடங்கள திருப்பி அவன் பிடிக்க விடாதீங்கோ, நிலைமையை அறிவுக்குத் தெரியப்படுத்துங்கோ” அவன் கூறிக்கொண்டிருந்த போதே மெல்லமெல்ல அவன் உடல் இயக்கம் அந்தப் படைத்தள அழிப்பின் வெற்றிச் செய்தியை கேட்காமலேயே நின்று விட்டது. என்ன திடீர் முடிவு என நினைக்கிறீர்களா? என்ன செய்வது, அவன் வாழ்விலும் தொடரிசைக் குறிக்குப் பதிலாய் முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. விளக்குவைத்த குளத்தில் அணியைப் பொறுப்பெடுத்த போது தன் முன்னே இருந்த இரண்டு பொறுப்புக்களையும் செய்துமுடித்த நிறைவு அவன் முகத்தில் தெரிந்தது. பதினைந்து வருடங்கள் விடுதலைக்காக உழைத்த அந்தத் தீக்குச்சி வெளிச்சத்தை ஏற்றிவிட்டு மறைந்துவிட்டது. அவன் பெயரால் அவன் போன்றவர்களுக்கு புலனாய்வுத்துறையில் ஓர் அறிவுக்கூடம் எழுந்து நிற்கின்றது. வன்னி மண்ணில் ஆலங்குளம் துயிலுமில்லம் பிள்ளையென அவனைச் சுமந்து நிற்கின்றது. உங்கள் சுவாசக் காற்றையே இனிவரும் சந்ததியும் சுவாசிக்கப் போவதால் கால நதியில் உங்கள் வரலாறே தமிழன் வரலாறாய் என்றும் நிலைக்கும். “தோழனே சாவுக்குள் நின்று உழைப்பவர்களுக்கு சாவின் பின்னும் நிச்சயமாவது இலக்கின் வெற்றி மட்டுமே”. நினைவுப்பகிர்வு – சி.மாதுளா விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை, 2002). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-visu-arumai/
-
லெப். கேணல் சந்திரன் வன்னியின் முழுநிலவு” வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன். சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழுங்கிய கடலலைகளைப் போலவே குமுறிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், நீ முல்லைத்தீவுக்கு வரும்பொழுது ஒரு சின்னப்போராளி. நீ கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பாய். கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் உனது கண்களில் அன்பும், கனிவும் இருக்கும் சில நேரங்களில் கோபமும் தெறிக்கும். சந்திரன் நீ அடிக்கடி சொல்வாய்: “நான் ஏழைக்குடும்பத்தில்தான் பிறந்தனான். வயலில் கூலிவேலை செய்துதான் நாங்கள் வாழ்ந்தனாங்கள்.” உண்மைதான். அதனால்தான் ஏழைகளை நேசிக்கும் இதயத்தைப் பெற்றுக்கொண்டாய். அதனால்தான் எப்பொழுதுமே ஏழை மக்களுடன் ஒன்றிக் கலந்துவிடுவாய். ஒருமுறை, புதரிகுடா என்ற கிராமத்திற்கு நாங்கள் போயிருந்தோம். வயற்கரை ஓரங்களில் சிறு கொட்டகைகளைக் கட்டி அங்கு சில குடும்பங்கள் இருந்தன. கூரைகள் பிய்ந்துபோயிருந்தன. மழையிலும் வெயிலிலும் அவர்கள் நனைந்துகொண்டுதான் இருந்தார்கள். விழிகளில் ஏக்கத்துடன், வெறும் மேனியுடன், நோயினால் வீங்கிய வயிறுகளுடன் இந்த மண்ணின் குழந்தைகள் எங்கள் முன்பு நின்றார்கள். நீ தவித்தாய்… அவர்கள், பல நாட்களாகக் குளிக்கவில்லை என்றார்கள். தண்ணீர் அள்ளவேண்டாம் என்று பக்கத்து வளவுக்காரன் தடுத்துவிட்டானாம். குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை என்றார்கள். அதைக்கேட்டு நீ பட்ட தவிப்பும், உன்னிடம் தோன்றிய கோபமும் எங்களுக்கு நன்றாகவே தெரிந்தன. அந்த ஏழை மக்கள் இந்த மண்ணில் மனிதர்களாக வாழவேண்டும். அவர்களுக்கென்று இந்த மண்ணில் சொந்த நிலம், தொழில், மகிழ்ச்சிக்குரிய வாழ்வு எல்லாமே தோற்றுவிக்கப்பட வேண்டும் என, நீ தீர்மானித்துக் கொண்டாய். உண்மையில் நீ கேலியாகச் சொல்வது மாதிரி ‘அதுவும் ஒரு போர்முனை’ தான். நீண்ட காலமாகக் கவனிக்கப்படாமல் ஊருக்குள் காடாய் இருந்த உடையார் ஒருவரின் பெரும் நிலம், அவர்களுக்குச் சிறிய பகுதிகளாகச் சொந்த நிலமானது. புதிய அழகான மண் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானது. அந்தக் கிராமத்திற்கென்று பாலர் பாடசாலையை ஆரம்பித்தபோது, உன்னுடன் நாங்களும் அங்கே நின்றோம். நீ அவர்களுக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்திருந்தாய். ஆறு வயது தொடக்கம் பத்துப் பன்னிரண்டு வயதுவரை, எல்லாக் குழந்தைகளும் பாலர் வகுப்பில் படிப்பதற்கு வந்திருந்தார்கள். அது ஒரு மகிழ்ச்சிக்குரிய நாள். இனி அந்தக் கிராமம் தனக்கென்றொரு வாழ்வைக் காணும் என்பது அன்று வெளிப்பட்டது. சில நாட்கள் சென்றன. அந்தக் கிராமத்தவர்களுக்குப் புதரிகுடா என்ற பெயர் பிடிக்கவில்லையாம். அதனைச் சந்திரபுரம் என மாற்றிவ்ட்டார்கள். அதனைக்கேட்ட எங்களுக்குச் சிரிப்பாக இருந்தது. உனக்குக் கோபமாக இருந்தது. நீ எசினாய். இனி அப்படிச் சொல்லக்கூடாது என்றே. ஆனால் சந்திரன், நீ உயிரோடு இருக்கும் பொழுதும் உன் மரணத்தின் பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை. நீ அதற்குப் பின் எவ்வளவோ பெரிய பெரிய பொறுப்புக்களில் எல்லாம் இருந்திருப்பாய். ஆனால் நீ தடம்பதித்துச் சென்றது இங்குதான். உன் நினைவுகள் ஆழமாக வேரூன்றிப் போனதும் இங்குதான். சந்தின், உன் நினைவுகளைச் சொன்னபடி சந்திரபுரம் மட்டும்தான் இருக்கிறதென்றில்லை. நீ உருவாக்கிய இன்னொரு கிராமமான பொன்னகர், நாவற்காடு, உன்னைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட முள்ளியவளை, தண்ணீருற்று, முல்லைத்தீவு, பாண்டியன்குளம், பனங்காமம்… ஏன் வன்னி முழுவதுமே உன் நினைவுகளைச் சொன்னபடி நிற்கின்றன. சந்திரன், உனது உள்ளம் சிலவேளைகளில் தாயன்பைத் தேடி அழுவதுண்டு. நீ உந்து அம்மாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தாய் என்பது, எங்களுக்குத் தெரியும். உன்னுடைய சோகம் நிறைந்த இளமைக் காலத்தை நீ, வேலைகளினூடே சொல்வதுண்டு. அந்தக் காலங்களில் எங்கள் முன் கடுமையான வேலைகள் நின்றன. நீ முறிந்து, கஷ்டப்பட்டு வேலை செய்வாய். நாங்கள் வியந்து நிற்போம். “நான் சின்ன வயசிலேயே வயலுக்கை நிண்டனான்” என்பாய் நீ. உன் விழிகளில் ஏதோ ஒரு ஏக்கம் தெரியும். “அண்ணன்மாருக்கும் எனக்கும் சேர்த்து அம்மா பழஞ்சோறு உருட்டித்தருவா” என்பாய் நீ. உன் விழிகளை நாங்கள் பார்ப்போம். நீ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பாய். சந்திரன், நீ கிளிநொச்சியில்தான் பிறந்தாய். ஆனால் உனது அம்மாவும், அப்பாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். உனது அப்பா சாகும்பொழுது உனக்கு இரண்டு வயதாம். உனது இரண்டு அண்ணன்மாரும் சின்னப்பிள்ளைகள். உங்கள் மூன்று போரையும் வைத்துக்கொண்டு உனது அம்மா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாள். இப்போதெல்லாம் உன்னுடைய அம்மா உனது படத்தை வைத்துக்கொண்டு விம்மிக் கொண்டிருக்கிறாளாம். சந்திரன், நீ முள்ளியவளையில் அரசியல் வேலை செய்யும்பொழுது, சில நேரங்களில்…… இரவில் உன்னைத் தேடி நாங்கள் வருவதுண்டு. இரவில் சோகமான பாடல் கேட்கும். வீட்டில் உன்னை நாங்கள் காணுவோம். நீ விழித்திருப்பாய். “இந்த விடயம் ஆமிக்காரனுக்குத் தெரிந்தால் பாட்டுக்கேட்கிற வீட்டில் வந்து உன்னைப் பிடிக்கப்போறாங்கள்” என்று, நாம் எசுவோம். நீ வீடு வீடாக வேலிகளுக்கு மேலாகப் பழைய சோறு தேடித் திரிவாய். அதற்காக நீ வெட்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அங்கிருக்கிற எல்லா வீட்டிற்கும் நீ பிள்ளை மாதிரித்தான். உனக்குச் சாப்பாடு தரவேண்டும் என்பதற்காகவே, அவர்கள் இரவில் சோற்றை மிச்சம் வைப்பதுண்டு. சந்திரன், இன்றைக்கு அந்தச் சனத்தினுடைய இதயத்தில் நீ இருக்கிறாயடா! சந்திரன், நீ அரசியல் பேசுவதை நாங்கள் கேட்பதில்லை. சில நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஏதாவதொரு வீட்டின் முற்றத்தில், ஒரு கல்லின்மேல் நீயிருப்பாய். தங்கள் வீட்டுக் கதைகளைச் சொல்லிக்கொண்டே அந்த வீட்டுகாரரும் முன்னாலிருப்பார்கள். அப்போதுதான் நீயும் இந்த மண்ணின் நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருப்பாய். அவர்கள் எவருக்குமே தெரியாது, அவர்களுக்கு நீ அரசியல் படிப்பிக்கிறாய் என்று. கதைத்து முடிந்த பின்பு, “இந்த மண்ணின் விடுதலைக்காக எல்லோரும் போராடத்தான் வேண்டும்” என்பார்கள். முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசத்திற்கு நீ அரசியல் வேலை செய்வதற்கு வந்து, இரண்டு வருடங்கள் சென்றன. இந்தக் கால இடைவெளியில் உன்னிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. எதற்கெடுத்தாலும் கோபப்படும் உனது இயல்பும் மாறி இருந்தது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. உனதும் உனது தோழர்களதும் கடுமையான உழைப்பு, தேசவிரோத சத்திகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தன. தங்கள் மண்ணின் விடுதலையைப் பற்றி மக்களைச் சிந்திக்க வைத்தது. அந்த விடுதலைக்காக மக்களைப் போராடத் தூண்டியது. சந்திரன், உனக்குத் தெரியும்; அந்த நேரங்களில்த்தான், இந்தியப்படை எம் தேசத்தின் மீது ஒரு யுத்தத்தை நடாத்தியது. நாங்கள் தெருக்களில் நடக்க முடியாமலும், கிராமங்களில் நிற்க முடியாமலும், இருந்த நேரமது. இரவு நேரங்களில் காடுகளிற்குள்ளும், காட்டுக் கரையோரங்களிலும்தான் நாங்கள் படுப்போம். ஆபத்தை எதிர்பார்த்தபடியே இரவின் அச்சத்தில், பசித்த வயிற்ருடன் இருக்கும் எங்களை, நீதான் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாய். நாட்கள் செல்ல செல்ல ஆபத்து நிறைந்த அந்த இரவுகளே இனிமையான இரவுகளாக எங்களுக்கு மாறிவிட்டன. சந்திரன், எங்களின் எல்லாத் தோழர்களும் சொல்வார்கள் “கஸ்டமான அந்த நாட்களும் அந்த நினைவுகளும்தான், இன்னும் எங்களின் மனங்களில் பசுமையாய் படிந்து கிடக்கின்றது” என்று. சந்திரன் நீ அரசியல் வேளைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், தாக்குதற் களங்களுக்குச் செல்வதற்கும் தவறுவதில்லை. உன் கைகள் எதிரிக்கு எதிராகப் பலமுறை துப்பாக்கிகளை இயக்கியிருக்கும். இந்தியப் படைகளுடன் நெடுங்கேணியில் நடந்த சண்டை ஒன்றில் நீ, கழுத்திலும் கையிலும் காயமடைந்திருந்தாய். களத்தில் ஆயுதங்களைக் கைப்பற்ற முன்னேறியபோது நீ காயமடைந்ததாக, உன் தோழர்கள் சொன்னார்கள். நீ எமது முகாமில் சாய்மனைக் கட்டிலில் சாய்ந்திருத்தாய். உன் கழுத்தில் சிக்கிய துப்பாக்கி ரவை, உன்னை வேதனைப்படுத்தியது. நீ அதைவிட அதிகமாக பாவனை, நடிப்புச் செய்தாய். உன் பாவனைகளை எத்தனை தோழர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு தோழன் உன்னை அழைப்பான். நீ கழுத்தைத் திருப்ப முடியாமல் உடல் முழுவதையும் திருப்பி அவனைப் பார்ப்பாய். எங்கள் முகாம் முழுவதும் உன்னைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும். இந்தியப் படைகள் எங்களைச் சுற்றி ஒரு வலயத்தை அமைத்து எங்களை நெருங்கிய பொழுதும், நாங்கள் காடுகளிற்குள் மகிழ்ச்சியாக இருந்தோம். போராட்டத்தில் நம்பிக்கையோடு இருந்தோம் என்பது, இந்தியர்களுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது. உனது காயம் சுகமாகியது. அந்த நேரத்தில் முல்லைத்தீவு பிரதேசத்து மக்கள் இந்தியப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு, காடுகளிலும் வயல்களிலும் தஞ்சமடைந்து வாழ்ந்தனர். நீயும் அவர்களுடன் கலந்து நின்றாய். நீயும் உனது தோழர்களும் அந்த மக்களுக்குப் போராட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினீர்கள். போராட்டத்தின் தேவையைப்பற்றி, இந்த மண்ணின் விடுதலையைப்பற்றி, இந்திய ஆக்கிரமிப்பின் நோக்கத்தைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினீர்கள். அந்த நிலையை விளங்கிக்கொண்டு, மக்கள் எங்களை அரவணைத்ததால்தான், ஆக்கிரமிப்பாளனுக்கு இந்த மண் அடிபணியாது தலை நிமிர்ந்துகொண்டது. அந்த நாட்களில்தான், நீ கிளிநொச்சிக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிகப்பட்டாய். முல்லைத்தீவு மாவட்டத்து மக்களின் கண்கள் உன் பிரிவைத் தாங்காது தவித்தன. ஆனால் உன்முன் இருந்ததோ பெரும் கடமை. நீ கிளிநொச்சிக்குச் சென்ற பின்பு, அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி விஸ்தரித்திருந்தாய். உனது திறமையான செயற்பாடுகள் அந்த மாவட்டத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்த நேரங்களில் இரண்டு மூன்று தடவைகள், இந்தியப் படைகளின் சுற்றிவளைப்புக்களிலிருந்தும் நீ தப்பிக்கொண்டாய். வன்னி மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த மாறன் அண்ணாவின் இழப்பின் பின்பு, நீ வன்னி மாவட்ட அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாய். அந்த நேரத்தில்தான் இந்தியப் படை இந்த மண்ணை விட்டு வெளியேறியது. நீ வன்னி முழுவதும் அரசியல்த்துறைப் பிரிவை ஒழுங்குபடுத்தி, வேலைத் திட்டங்களை வகுத்துக்கொண்டே. புதிதாய்ப் பிறப்பெடுத்த எமது கட்சி அமைப்பும் அந்த நேரங்களில் பலப்பட்டுக்கொண்டது. அந்த நேரங்களில் நாங்கள் நடாத்திய பேரணிகளில், கூட்டங்களில், உனது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பார்கள். உன்னால் எப்படி இவ்வளவு இலகுவாக, தெளிவாக எல்லா மக்களையும் கவரக்கூடியமாதிரிப் பேசமுடிகிறது என்பது, எங்களுக்கு வியப்பாகவே இருக்கும். சிறிலங்கா இராணுவத்தினருடனான சண்டை மீண்டும் தொடங்கியபோது, நீ எங்கேயோவொரு தாக்குதற் களத்தில்த்தான் நிற்பாய் என்பது, எலோருக்குமே தெரியும். அப்படித்தான் நீயும் நின்றாய். கொக்காவில் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் நீ கலந்துகொண்டாய். அந்த முகாமை நாங்கள் வெற்றிகொண்டோம். ஆனால், அங்குதான் உனது அடிவயிற்றில் துப்பாக்கிக் குண்டு தாக்கியது. சந்திரன், நீ எங்கள் வைத்தியசாலை ஒன்றில் கிடந்தாய். உன் விழிகள் நீ தப்பிக் கொள்வாய் என்ற நம்பிக்கையைத் தரவில்லை. உன் உறுதியான கறுத்தத் தேகம் வாடிப்போய்க் கிடந்தது; கலங்கிய விழிகளுடன் நாங்கள் காத்திருந்தோம். சில வாரங்கள் சென்றன. நீ கண் விழித்தாய். ஆனால், உன் கால்கள் இனி இயங்காது என்றார்கள். கால்கள் இல்லாத சந்திரனை எங்களால் கற்பனை கூடச் செய்யமுடியாது சந்திரன்! ஆடாமல், பாடாமல், ஓடாமல் நீ இருக்கவே மாட்டாய். நாங்கள் தவித்தோம். கலங்கி நின்றோம். ஆனால் நீ கலகலப்பாக இருந்தாய். உனது நிலை உனக்குத் தெரிந்த பின்பும் உற்சாகமாக இருந்தாய். சந்திரன், நீ வைத்தியசாலைக் கட்டிலிருந்துகொண்டெ “நான் இங்கையும் அரசியல் வேலை செய்யிறன். இங்கு வருகிற தாதிகளுக்கும், வைத்தியர்களுக்கும், ஏன் என்னை இந்தக் கதவுகளால் எட்டிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் ஒரு போராட்டம் ஏன் நடக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றாய். உண்மைதான்; நீயிருந்த – சோகம்பாடும் அந்த, வைத்தியசாலைகூட கலகலப்பாக மாறிப்போனது. சந்திரன் நடக்கத் தேவையில்லை, அவன் இருந்தாலே போதும் போராடுவான், போராட்டத்திற்குப் பங்களிப்பான் என எங்கள் மனங்கள் எண்ணிக்கொண்டன. அதன் பின்பு; நீயும் உனது தோழர்களும் வைத்திய வசதியைத் தேடிக் கடலில் பயணம் போனதாகக் கேள்விப்பட்டோம். உண்மையில் உங்களுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. கடலிற்குள் தோன்றிய சிங்கள மிருகங்கள் உங்களைக் கவிட்டிருக்கும். உனக்கு நீந்தத்தெரியும். நீ கைகளால் நீந்த முயன்றிருப்பாய். இயலாத உனது கால் உன்னைக் கீழே கீழே இழுத்திருக்கும். கடல் உன்னை மூட ஒரு கணம் தயங்கியிருக்கும். மூடிய பின்பும் ஏற்றுக்கொள்ள முடியாமல் குமுறி இருக்கும். வன்னி மக்களின் மனங்கள் கொந்தளித்ததைப் போலவே, கடலும் உன்னை அணைத்த பின்பு வேதனை தாளாது கொந்தளித்திருக்கும். நினைவுகளுடன் தோழர்கள். நன்றிகள்: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி 1991), களத்தில் இதழ் (09.10.1996). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-santhiran/
-
லெப்டினன்ட் ராஜா தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு நகர் மண்ணின் முதல் மாவீரன்! 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். 1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது. சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன. ஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார். ஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில் விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும். இவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாற்றில் என் எழுதுகோலை ஊன்றுகின்றேன். தமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது. பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது. 1984.09.22ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது. மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன. விடுதலைப் போராளிகளை பெருமையாக மக்கள் மதித்த காலப்பகுதியில் இரகசியமாக இத் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்ட போதும் அர்ப்பணிப்போடு அமைந்ததாக சிலரின் உதவியையும் பெற்று தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகினர். தாக்குதலுக்கான இடமும், காலமும் குறிக்கப்பட்ட நிலையில் போராளிகளும் குழுவாகக் பிரிக்கப்பட்டனர். மூன்று குழுக்களாகப் பிரிந்த போராளிகள் சந்திக்கும் இடமாக கிரான்குளம் ஊர் தெரிவு செய்யப்பட்டது. 1984 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் நாள் இரவு குழுக்கள் மூன்றும் பிரிந்து தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் தீர்மானித்தனர். ஒரு குழு தோணி ஒன்றில் மட்டக்களப்பு வாவியில் பயணித்து ஆயுதங்களுடன் கிரான் குளத்திற்கு வந்து சேர்ந்தனர். இரண்டாவது குழு, மூன்றாவது குழு மிதி வண்டியில் வேறு வேறு பாதைகள் ஊடக பயணித்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அன்று இரவு ஒரு ஆதரவாளரின் தென்னந்தோட்டத்தில் தங்கினர். 22 ம் நாள் பகல் உணவு எடுத்துக்கொண்ட பின் மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கமைய பி. பகல் 3 மணிக்கும் 4 மணிக்குமிடைப்பட்ட வேளையில் கிரான் குளத்திற்கும், குருக்கள் மடத்திற்குமிடையில் அம்பிளாந்துறை சந்திக்கு அருகாமையில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தாக்குதலுக்கு செல்லும் பயணத்தை ஆரம்பித்தனர். கல்முனை நெடுஞ்சாலையில் மட்டு நகரிலிருந்து 20 வது மைல்லில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடியில் நிலைகொண்டிருந்த சிங்களக் காவல் துறையின் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அவசர மருத்துவ ஊர்தி உட்பட இரண்டு ஊர்திகள் வழிமறிக்கப்பட்டு அந்த ஊர்திகளில் போராளிகள் அனைவரும் தாக்குதலுக்காகச் சென்றனர். இத் தாக்குதலில் அனுபவமிக்க திருமலைத் மாவட்ட தளபதி லெப். கேணல் சந்தோசம், மூதூர்த் தளபதி மேஜர் கணேஷ், ஆகியோரும் இடம் பெற்றது மேலும் சிறப்பான நிலையில் தாக்குதல் அணி இருந்ததைக் குறிப்பிட முடிகின்றது. மாவட்டத்தில் தங்கியிருந்து செயல்பட்ட அனைத்து விடுதலைப் புலிப்போரளிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். சரியாக பிற்பகல் 5:30 மணியளவில் காவல் நிலையத்தினுள் பாய்ந்த விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தபோது, எதிர் பார்த்ததற்கு மாறாக காவல் துறையினரின் விடுதியிலிருந்து போராளிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதனால் களநிலைமை மாறியிருந்தது. ஏனெனில் போராளிகளுக்கு கிடைத்த தகவலின்படி மாலை 6 மணிக்கு பின்னர்தான் காவல்துறையினர் விடுதிகளுக்குள் திரும்புவார்கள் என்றும் அது வரையில் காவல் நிலையத்தினுள் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் என்பதால் பணி ஒய்வு பெறும் நேரத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆயுதங்களையுப் பெற்று வெற்றியுடன் திரும்பமுடியும் என்பது போராளிகளின் நிலைப்பாடாகும். ஆனால் சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த இச்சண்டையில் லெப்.ராஜா, வீரவேங்கை ரவி அவர்களின் வீரச்சாவுடன் சில போராளிகள் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆயுதம் மாத்திரம் கைப்பற்றப்பட்டு போராளிகள் பின்வாங்கினர். இத் தாக்குதலில் எமக்கு ஏற்பட்ட இழப்பு வரலாற்றில் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்து போனது. போராட்ட வரலாற்றில் பிற்பட்ட காலங்களின் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது அறியக் கூடியதாகயிருக்கின்றது. மண்ணின் விடுதலைக்காக மட்டக்களப்பில் எழுந்த தமிழ் தேசிய உணர்வின் அடையாளமான பரமதேவா தாய் மண்ணில் தாக்குதலில் வீழ்ந்தது தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக இருந்தது. வீரவேங்கை ரவி மகிழடித்தீவு ஊரைச் சேர்ந்தவர். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவனாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அரசியல் வேலையில் உற்சாகமாக செயல்பட்டவர். குடும்பத்தில் மூத்த மகனான வாமதேவன் என்ற ரவிக்கு ஆறு தங்கைகள் சகோதரிகளாக இருந்தனர். இவரின் இழப்பு குடும்பத்திற்கு மாத்திரமில்லாமல் ஊரக உணர்வுள்ள மக்களுக்கும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அன்று இளம் அரசியல் விடுதலைப் போராளி ஒருவரையும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்திருந்தது. இவர்கள் இருவரின் வீரச்சாவு செய்தியறிந்த மக்கள் எல்லோரும் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த தவிப்போடு துயரம் நிறைந்தவர்களாக காணப்பட்டனர். தமிழர்களுடைய வரலாற்றில் மட்டக்களப்பில் பள்ளிக்கூட பருவத்திலிருந்து விடுதலைக்காக எழுந்த ஓர் உயர்வான போராளியான பரமதேவாவை ,ழந்து தாய் மண் தவித்தது. மட்டக்களப்பின் முதல் விடுதலைப் போராளியாக களமிறங்கிய வரலாற்று நாயகனின் சிந்தனைகள், செயல்பாடுகள் விடுதலைப் போராளிகளுக்குப் பாடமாக அமையப்பெற்றிருந்தன. ஒவ்வொரு தமிழரும் வாழும்வரை போராளியாக வாழ்வதென்பது வரலாற்றில் எமது விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். இந்த உறுதிதான் எமக்குத் தேவையாகும். இதைவிடுத்து விவேகமற்ற விமர்சனத்தை முன் வைப்பவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து பின்வாங்கி தம்மை அர்பணித்து தாய் மண்ணில் வீழ்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவேண்டும். பணத்தாசை பிடித்து, ஆக்கிரமிப்பு வாதிகளின் பண உதவியுடன், பித்தலாட்டம் போட்டு, இணையதளம் நடத்துபவர்கள், போராளிகளை போற்றா விட்டாலும், தூற்றாமல் விலகிக் கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும். போற்றுவதற்கும், தூற்றுவதற்குமான தகுதியை இழந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய விரோதிகள் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை அரங்கிலிருந்து வெளியேறி, ஒதுங்கி வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் தமிழ் உணர்வாளர்கள் இருக்கின்றனர். பரமதேவாவின் தமிழ் உணர்வு, விடுதலை பெற்றவர்களாக தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற நிலையில் உயர்ந்து நின்றபோது இளவயதில் மாணவ பருவத்தில் இன விடுதலை வீரனாக மட்டக்களப்பில் பரமதேவாவைக் காணமுடிந்தது. விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி, எழுச்சியில் வரலாறு தேட முற்படுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் ஆயுதப் போராட்டம் மட்டக்களப்பின் விடுதலைப் புரட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டு எழுத வேண்டிய நிலையுமுள்ளது. போராளியின் புனிதப் பயணம் என்பது இலட்சியத்தின் எல்லையில்தான் முடிவடையும். தடைகளையும் தன்னல மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு தடம் புரண்டு திரும்புவது போராளி என்ற நிலையிலிருந்து மாறிவிடும். இலட்சியத்தை நோக்கிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சிங்களப் பாராளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடும் நிலையில் போராட்டம் மாறியிருக்கின்ற இவ்வேளையில் புரட்சிவாதிகளையும், புனிதப் போராளிகளையும் எமது மக்களுக்கு இனங்காட்டி வருகிறோம். மாணவனாக போராட்டத்தில் பரமதேவா. பரமதேவா, 1975 ம் ஆண்டுகளில் அனைத்துத் தமிழ்மக்களாலும் அறியப்பட்ட பெயராகும். இந்தப் பெயரின் பின்னால் இருந்தபலம் தமிழ் இளையோர்களை தாயக விடுதலை நோக்கிய உறுதியான பயணத்தில் இணைய வைத்திருந்தன. 1972 ம் ஆண்டு சிங்கள அரசின் புதிய அரசியலமைப்பு சட்டங்களின் உருவாக்கத்தில் மே 22 குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன. சிறுபான்மை இனங்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழ்த் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்புக்கு இருந்த சட்டவிதியும் அகற்றப்பட்டதாக அரசியலமைப்பை உருவாக்கியிருந்தனர். இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர் அப்போதைய அமைச்சரும் லங்கா சம சமாஜக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி .சில்வா அவர்களாகும். சமத்துவம் பேசுகின்றவர்கள் எல்லாம் பதவிக்கு வந்தவுடன் பேரினவாதத்திற்குள் ,ருந்து அரசியல் செய்வதையே சிறிலங்காவில் அன்று கண்டதுபோல் இன்றும் கண்டுகொண்டுடிருக்கின்றோம். 1972 ல் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க வரிகள் தமிழ் இளையோர்களைத் தட்டியெழுப்பியது மாத்திரமில்லாது அவரையும் சிங்களக் சிறைக்குள் தள்ளியது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் விடுதலை வேட்கை வீறுகொண்டு எழுந்ததனால் ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை? என்ற பாவலரின் வரிகளுக்கு அர்த்தத்தை உண்டுபண்ணும் விதமாக தமிழ் இளையோரின் எழுச்சியும் அமைந்திருந்தன. மே 22 கரி நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அரசு அறிவித்திருந்த குடியரசு நாள் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழர் வாழ் நிலங்கள் எங்கும் எதிர்ப்பு முழக்கங்கள், எதிர்ப்பு பதாகைகள், கறுப்புக் கொடிகள் என்று சிங்கள அரசுக்கு புரியவைக்கும் நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மேற்கொண்டனர். இவற்றில் தமிழ் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்திருந்தன. தமிழ் மாணவர் பேரவை என்ற எழுச்சிமிகு அமைப்பின் உருவாக்கத்திற்கும் சிங்கள பேரினவாதத்தின் போக்கு காரணமாக இருந்தன. இவ்வாறான எழுச்சியின் அடையாளமாக, அத்திவாரமாக, விடுதலைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமாக மட்டக்களப்பில் பரமதேவாவின் உணர்வு மிக்க எழுச்சி மாவட்டமெங்கும் தமிழ் மாணவர்களை தட்டி யெழுப்பியது. எழுச்சி கொண்ட இனமாக தமிழினம் மாறி விடுதலையில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவதற்கு பரமதேவா என்ற மாணவனின் போராட்டங்களும் தூங்கிக் கிடந்த தமிழர்களை நிமிர்ந்து நியாயம் கேட்கவைத்தது. அற வழியின் கொள்கையில் அரசியலாக இருந்த தமிழ்த் தேசிய ,னத்தின் விடுதலையை அச்சமின்றி, உயிரை துச்சமாக எண்ணிப் பயணிக்கும் இளையோர்களின் கரங்களில் மாறுவதற்கு பரமதேவா போன்றவர்களின் விடுதலைப்பற்று தூண்டு கோலாகயிருந்தன. பரமதேவா, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஆயுதப் போராட்ட எழுச்சிக்கு முதல் தொடக்கம் என்பதிலிருந்து எழுகின்ற விடுதலை இயக்கங்களின் தோற்றங்களுக்கு மத்தியிலும் தனித்துவமாக, தலை நிமிர்ந்து களம்காணப் புறப்பட்டவர். மேடையில் விடுதலைப் புரட்சிவாதம் பேசிய தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் வீட்டில் குடும்ப வளர்ச்சியில் அரசியல் செய்த வேளையில் பரமதேவா போன்றவர்களின் புரட்சிவாத எண்ணங்கள் தங்கள் வழியை தீர்மானிக்க தமிழ் இளையோர்களை ஒருமுகப்படுத்தியதையும் காணமுடிந்தது. இன்று இந்துக் கல்லுரியாக எம்முன் உயர்ந்து நிற்கின்ற மட். கோட்டமுனை மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவனாக பரமதேவா, தமிழரின் பண்பாட்டு உடையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவனாகக் காணப்பட்டார். இவரின் ஆற்றலும், அறிவும், தமிழ் இனத்தின் மீது கொண்டபற்றும், பார்த்தவுடன் தெரிந்து கொள்ளுமளவுக்கு முகத்தில் மலர்ந்திருந்தது. ஓர் இளம் விடுதலை வீரனை மட்டக்களப்பு மக்கள் இனங்காணும் அளவுக்கு உயர்ந்த எண்ணங்களும் உறுதியும் பரமதேவாவிடம் நிறைந்து காணப்பட்டிருந்தன. மாணவ பருவத்தில் பள்ளிக் கூடத்தில் பரமதேவா ஏற்படுத்திய புரட்சி, தமிழ், மாணவர்களை தட்டியெழுப்பியது மாத்திரமல்லாது,சிங்கள அரசு இயந்திரத்தையும் அச்சமடைய வைத்தது. மாணவனான பரமதேவாவின் உணர்வை முளையிலே கிள்ளியெறிய எண்ணியதின் விளைவில் ராஜன் செல்வநாயகத்தின் பங்கு அன்றிருந்தது. இதனால் பள்ளிக் கூடத்தினுள் கலகம் விளைவிக்கும் மாணவன் என்று பரமதேவாவை எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கமுடியாதவாறு அதிபரை வைத்து வெளியேற்றினார். ஆனால் நிலைமைமாறி மாவட்டமெங்கும் மாணவர்கள் புறக்கணிப்பின் மூலம் எதிர்ப்பை தெரிவித்தனர். இப் போராட்டம் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள அதிகாரிகளை அதிர வைத்தது. சந்திப்புக்கள், பேச்சு வார்த்தைகள் என்று அதிகாரிகள் செயல்பட்டு மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவை அறிவித்தபோது அதிபர் திரு. வைத்தியநாதன் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். இம் முடிவு பரமதேவாவை சங்கடத்துக்குள்ளாக்கியது. ஏனென்றால் திறமைமிக்க அறிவியலாளரான திரு. வைத்தியநாதன் அவர்களின் இடமாற்றம் சக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதால் தான் வெளியேறி வேறு பள்ளிக்கூடத்தில் பயில்வதற்கு பரமதேவா முடிவு எடுத்துச் செயல்பட்டார். பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் உணர்வு மிக்க எழுச்சி மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புரட்சி மேலும் வளர்வதற்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. 33 ஆண்டு காலவிடுதலைப் புரட்சியின் 28 ஆண்டுகளுக்கு முன் விடுதலைக்காய் வீழ்ந்த விடுதலை வீரனைப் பற்றிய நினைவுகளில் மட்டக்களப்பில் கருவான புரட்சி வாதத்தின் விடுதலைப் புலிகளின் வித்தாக தாய் மண்ணில் வீழ்ந்த தமிழ் மறவனின் வரலாறு விடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பில் எழுதப்படும்போது எண்ணற்ற எழுச்சிமிகு இளையோர்கள் பற்றியும் எழுதவேண்டிய நிலையுள்ளது. 1972 ம் ஆண்டு தமிழ் மக்களின் விடுதலை வரலாற்றில் முக்கியமான ஆண்டாகவும் எடுத்துக்கொள்ள முடிகின்றது. ஏனெனில் இக்காலத்தில் இளையோர்களின் தீவிர எழுச்சியினால் அடிமைப்பட்ட தமிழர்களின் சார்பாக சிங்கள அரசுக்கு அடங்காப்பற்றுடன் கூடிய எதிர்ப்புகளும் காணப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் தமிழ் இளையோர்கள் விடுதலைப் புரட்சி வாதிகளாக மாறத்தொடங்கியதும் சிறைக்குள் தள்ளப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் விடுதலைப் போராளிகளுக்கான ஆதரவு மேலும் அதிகரித்துக்காணப்பட்டன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இளையோர்களிடையே ஏற்பட்ட விடுதலை உணர்வு, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தன. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் முதல் தலைவராக திரு. அன்ரன் என்பவர் பணியிலிருந்தபோது. திரு.பொன்.வேணுதாஸ், திரு.மோகனச்சந்திரன், பாசி, துரைராசசிங்கம் போன்றவர்களின் செயல்பாடும் இணைந்ததாக காணப்பட்டன. இக்காலத்தில் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையில் தெரிவாகி பின்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து மாவட்ட அரசியல் அதிகாரியாகச் செயல்பட்ட இராஜன் செல்வநாயகம் அவரின் தமிழ் விரோதப் போக்கு தமிழ் இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியதனால், விடுதலை உணர்வுள்ள இளைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்த சிங்கள காவல்துறையின் விசேட பிரிவினர் இவ்வாறான இளைஞர்களை கைது செய்யும் நோக்குடன் வீடுகளில் தேடுதலை நடத்தி பெற்றோருக்கு பெரும் இடையூறுகளை கொடுத்தனர். இந் நடவடிக்கைகளுக்கு பின்னால் இராஜன் செல்வநாயகத்தின் பங்கு பெரும் அளவில் ,ருந்ததை குறிப்பிடமுடிகின்றது. தமிழர்களுடைய வரலாறறில் காட்டிக்கொடுக்கும் தேசிய விரோதிகள் வரலாறும் ,ணைந்தே ,ருந்து வந்துள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை என எல்லா இடங்களிலும் தொடர்ந்திருந்தன. இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தன்னலமற்றவர்கள் மத்தியில் தன்னலமுள்ளவர்களின் செயல்பாடு அழிக்க, அழிக்க முளைப்பதுபோல் தொடர்வது விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவியாக அமைந்தன. இது எமது இனத்தின் சாபக்கேடு என்றே குறிப்பிடமுடிகின்றது. விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தும், விடுதலையை வைத்து அரசியல் நடத்திய தன்னல வாதிகளின் போக்கும், விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தன. இவ்வாறான நிலையில் மட்டக்களப்பில் பரமதேவா போன்ற தமிழ் இளைஞர்களின் பற்று பாரிய தாக்கத்தை சிங்கள அரச இயந்திரத்தில் ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிட முடிகின்றது. முள்ளிவாய்க்கால் ஊரில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் வரலாறு தேடும் பலருடைய செயல்பாடுகளுக்கு மத்தியில், பரமதேவா பற்றிய போராட்டப் பதிவை தமிழர் வரலாற்றில் வைப்பதற்கு முனைகின்ற வேளையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புரட்சி வாதிகளாக போர்க்கருவி ஏந்திய நிலையில் புறப்பட்ட முதல் விடுதலை வீரனாக பரமதேவா அவர்களையே குறிப்பிடமுடிகின்றது. 1977 ம் ஆண்டுத் தேர்தலில் பரமதேவா தமிழீழ நாட்டின் மக்கள் ஆணைக்கான தேர்தலாக 1977 ம் ஆண்டுத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அதிகமாகவே காணப்பட்டது. மட்டக்களப்புத் தொகுதியில் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, மட்டக்களப்புத் தொகுதி தமிழ் இளைஞர்களின் அதிகப்படியான ஆதரவு கிடைக்கப்பெற்றிருந்தன. மாணவனான பரமதேவா தொகுதியெங்கும் தேர்தல் கூட்டங்களில் உணர்வு பொங்க பேசியது தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு முழக்கமாக வெளிப்பட்டது. இக் காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பல தமிழ் இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு பெற்றுக்கொடுக்கும் வகையில் மேடைகளிலும், வெளியிலும் பரப்புரையை மேற்கொண்டிருந்தனர். கொள்கை, இலட்சியம் என்பதில் பரமதேவா உட்பட்டவர்களின் நிலை நேரிய பாதையில் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பில் பொன்.வேணுதாஸ், மோகனச்சந்திரன், அன்ரன், வாசுதேவா, சிவஜெயம், தயாளன், குணாளன், சின்னாச்சி, யோகபதி, பூபாலபிள்ளை (பீ.டி), ஆரையம்பதி தவராஜா, செல்வேந்திரன் போன்றவர்களும். கல்குடாவில் பா.சின்னத்துரை, கி.துரைராசசிங்கம், வாகரை பிரான்சிஸ், வாழைச்சேனை யோகராஜா, நிமலன் சௌந்தரராஜன், ராஜ்மோகன் ஆகியோரும். பட்டிருப்பில், நடேசானந்தம், மண்டூர் மகேந்திரன்,சரவணபவான், அரசன், தம்பிராசா, பரமேஸ்வரன், பிரேம், இன்பராசா, தவம், உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் விடுதலையை பெறுவது என்ற குறிக்கோளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்பட்டதனால் மாவட்டம் எங்கும் வேல்முருகு, தமிழ்நேசன், பன்னிர்செல்வம், ரஞ்சன், நாகராஜா ஆகிய இளைஞர்களின் உணர்வுமிக்க செயல்பாடுகள் தமிழ் மக்களை தெளிவுபடுத்தியிருந்தன. மாணவப்பருவத்திலிருந்து தனது இறுதிக்காலம் வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக களத்தில் பயணித்த பரமதேவா போன்றவர்களின் போராட்ட வரலாறு இன்றைய எதிர்கால இளைய சந்ததிக்கு பாடமாக அமைய வேண்டுமென்பது இக் கட்டுரையின் நோக்கமாகும், பிறப்பின் பயனை அடைந்துவிட்ட இந்தப் புனிதப் போராளிகள் விட்ட பணி தொடரவேண்டும். தாய் மண்ணில் பிறந்ததன்பின் தொடர்ந்த மாணவ, வாலிபப் பருவங்களை, தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த பரமதேவா போன்ற இளையோர்கள் எக்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தால் மறக்கப்படமுடியாத மாமனிதர்கள் என்பதை தமிழர் வரலாறு உணர்த்திக் கொண்டேயிருக்கும். மட்டடக்களப்பில் பரமதேவா தமிழ்த் தேசிய எழுச்சியின் ஆரம்ப வடிவம் என்பது அழியாத வரலாற்று பதிவாகும். தனித்து ஒரு குழு அமைத்து, களமாடப் புறப்பட்ட பரமதேவா, 1977 ம்ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலையை பெறுவதற்கு உகந்தவழியை தெரிவு செய்யும் நிலையில், பரமதேவா எடுத்தமுடிவு ஆயுதங்களைப் பெறுவதற்காக அரச நிறுவனங்களிலிருந்து காசு பெறும் நடவடிக்கையாகும். இதற்காக பொத்துவில் ரஞ்சன், விஜி, வாமதேவன் ஆகியோர் குழுவாக இணைந்தனர். 1978 ம் ஆண்டு செங்கலடி ப .நோ .கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கியிலிருந்து காசை பறித்துக்கொள்ளும் நடவடிக்கை தாக்குதல் இலக்காகும். ,க் காசு மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான போர்கருவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் பரமதேவாவின் மனதில் பதிந்திருந்தது. எவ்வித எதிர்கால வாழ்வு நோக்கமும் அற்ற ஒரு விடுதலைப் போராளியை பெற்றுக்கொண்ட தமிழ் மக்கள் குறுகிய காலத்தில் இழந்தது உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தடைகளில் ஒன்றாகவே கருத முடிந்தது. தனித்துச் சிந்தித்து களமிறங்கிய பரமதேவா அவர்களின் திட்டத்தில் முதல் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு மண்ணில் நிறைவேற்றப்பட இருக்கின்ற நிலையில் செங்கலடியைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது மட்டக்களப்பு – திருகோணமலை நெடுஞ்சாலையில் 10வது மைல் கல்லில் செங்கலடி அமைந்திருக்கின்றது. செங்கலடி கிராமிய வங்கிக்கு முன்பாக நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் சாந்தி சாராய விடுதியும், அதற்கு அருகாமையில் சாரதா படமாளிகையும், அதனை அண்டியதாக எல்லை வீதியும் அமைந்திருக்கின்றன. ஓரளவு சனநடமாட்டம் உள்ள இவ்விடத்தில் ஒரு நடவடிக்கையை பரமதேவா குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பயன்படுத்திய மகளூர்ந்து ஓட்டுனராக வாமதேவன் இருந்தார். குறிப்பிட்டபடி நடவடிக்கை அந்தபோதும், எதிர்பாராத சம்பவம் ஒன்று இவர்கள் பிடிபடுவதற்கு காரணமாகவிருந்தன. மட்டக்களப்பு – பதுளை நெடுஞ்சாலையில் பரமதேவா குழுவினரின் மகளுர்ந்து, பறித்தெடுத்த காசுடன் பயணித்த வேளையில் சாந்தி சாராய விடுதியில் சந்தர்ப்ப வசமாக தங்கியிருந்த சிங்களக் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் செங்கலடி கிராமிய வங்கியில் தென்பட்ட பதட்டத்தை விளங்கிக்கொண்டபின் பரமதேவா குழுவினரின் மகளூர்ந்தை தொடர்ந்து சென்று மகளூர்ந்தை நெருங்கிய வேளையில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர். இதனால் பரமதேவா குழுவினரும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் இத் தாக்குதலைத் தொடர்ந்து பரமதேவா விழுப்புண் அடைய மகளூர்ந்து நிறுத்தப்பட்டு இறங்கி ஓட முற்படும்போது ஓட்டுனர் வாமதேவன் மாத்திரம் தப்பிச்செல்ல பரமதேவா, விஜயசுந்தரம், ரஞ்சன் ஆகியோர் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இக்காலங்களில் மக்களால் பேசப்பட்ட கதாநாயகன் பரமதேவா, காலத்தால் அழியாத வரலாற்றுப் பதிவு ஒன்றை ஆரம்பித்து வைத்து, உணர்வுள்ள இளையோர்களை தமிழர் உரிமைக்காக தட்டியெழுப்பிய தன்னலமற்ற வீரன். இவனுடைய எழுச்சி, எண்ணற்ற இளையோர்களை களமாடத் தூண்டியது. இந்த வரிசையில் மட்டக்களப்பில் மறத்தமிழ் வீரனாக, தன்மானத்துடன் எழுந்து, சிங்களப் படைகளுக்கு கெதிரான குண்டுத் தாக்குதலுக்கு சென்ற வேளையில் கைகளுக்குள்ளே குண்டுவெடித்ததால் விழுப்புண் அடைந்த நிலையில், இந்த அடையாளம் தன்னைக் காட்டிக்கொடுக்குமென்பதால் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற கல்லடிப்பால அடியில் ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து முழ்கி தன்னை இழந்து தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு ஆரம்பத்தில் அத்தியாயம் ஒன்றைப் படைத்திட்ட செந்தமிழ் வீரன் பெஞ்சமின் உட்பட்டவர்களை எண்ணிக்கொள்வதிலும், அதனை எழுத்தாக வடிப்பதிலும், பரமதேவா வரலாற்றோடு பதிவை ஒன்றிணைத்து தொடர்கின்றேன். சிங்களச் சிறையில் பரமதேவா 1978 ம் ஆண்டு பரமதேவா, ரஞ்சன், (லெப்.சைமன்) விஜயசுந்தரம், ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளையோர்கள் சிங்கள புலனாய்வுப் படையால் பிடித்து, சித்திரவதை செய்யப்பட்டு சிறைகளை எல்லாம் தமிழர்களின் அடக்குமுறைக் கூடங்களாக மாற்றிக்கொண்டிருந்தனர். விடுதலைக்காக போராளிகள் உருவாவதும், சிறைகளில் சித்திரவதை செயப்பட்டு, இருண்ட வாழ்க்கையில் மக்களுக்காக வாழ்வதும் தொடர்ந்த வண்ணம் தமிழர் தாயகமெங்கும் விடுதலை அலை எழுந்து கொண்டிருந்தன. மட்டக்களப்பு மண்ணில் உணர்வுடன் எழுந்த, உணர்ச்சி பாவலர் தனது பாட்டு வரிகளால் ஊட்டிய பற்று இளையோர்களை விடுதலைப் பற்றாளர்களாக மாற்றியிருந்தது. ஒவ்வொரு அடக்கு முறையையும் சிங்களம் திணிக்கும்போது திரண்டெழும் மக்கள் சக்தி மலைபோல் எதிர் கொண்டது. அரச சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அன்றைய ஜனாதிபதி து.சு.ஜெயவர்த்தன அவர்களின் பேரினவாத அரசியல் தமிழ் ,ளைஞர்களுக்கெதிராக அடக்கு முறைச்சட்டங்களை உருவாக்குவதற்கும், சிங்களச் சிறைகளில் விசாரணைகளின்றி, காலவரையற்ற சிறைவாசத்திற்குட்படுத்துவதும் தமிழின அடக்கு முறையை மேலும் வலுவாக்கியது. இதனால் எண்ணற்ற இளையோர்கள் சிங்கள சிறைகளில் குவிந்திருந்தனர். ,வர்களில் ஒருவராக பரமதேவாவும் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தாயகமெங்கும் ஏற்பட்ட எழுச்சி, சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை, மேலும் இளையோர் கூட்டங்களை அணியணியாக விடுதலை ஒன்றையே நோக்காகக் கொண்டு பயணிக்கவைத்தன. புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரங்கொண்ட அடக்குமுறை ஆட்சியமைப்பு எல்லாம் இணைந்ததாக தமிழ்மக்களை குறி வைத்த சட்டங்கள், தன்னாட்சி உரிமைக் கோட்பாட்டுக்கு விலங்கு போட்டு தமிழ் மக்களை அடக்கி ஆளப்புறப்பட்டதெல்லாம் தாயகமெங்கும் தமிழின எழுச்சியின் உச்சத்திற்கு இளைஞர்களை அழைத்துச்சென்றிருந்தன. தொடர்ந்து அடக்குமுறைக்கும், தமிழின அழிப்புக்கும் உச்சமாகமைந்த 1983 யூலை இன வன்முறையும், படுகொலைகளும் சிங்களப் பேரினவாதஅரசியலின் பௌத்த மேலாதிக்க கொள்கையை வெளிப்படுத்தன. உலகிலே ஆச்சரியப்பட்ட விடயமாக சிங்களவர்கள் பௌத்தமதத்தைப் பின்பற்றிய நிகழ்வாக இருப்பதைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. வக்கிரமும், வன்முறையும் கலந்து ஏனைய இனத்தவரையும், மதத்தவரையும் அழிக்கும் செயலானது பௌத்தத்திற்கு பெரிய இழுக்கை இலங்கைத் தீவில் ஏற்படுத்தியிருந்தது. சிறைக்குள் அடைக்கப்படிருந்த தமிழ் அரசியல் போராளிகளை படுகொலை செய்யும் செயலானது உலகத்திலேயே மனிதாபிமானத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எடுத்துக்கொண்டு, உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அமைந்த சம்பவமான சிறைப்படுகொலை உலக நாகரீகத்தைக் குழி தோண்டிப் புதைத்த நிலையிலிருந்தன. மூத்த போராளிகளான தங்கத்துரை, குட்டிமணி,போன்ற 52 தமிழ்ப் போராளிகளின் படுகொலையும், தப்பிய கைதிகள் மட்டக்களப்பு சிறைக்குள் மாற்றப்பட்டதான நிலையில் பரமதேவா போன்றோரின் சிறைவாசமும் தொடர்ந்திருந்தன. 1983.09.23 ம் நாள் மட்டக்களப்பு தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தகர்க்கப்பட்ட சிறையிலிருந்து தமிழ்ப் போராளிகள் வெளியேறிய போது பரமதேவா உட்பட சிலர் தாயக மண்ணில், பரந்த வெளிச்சத்தில், விடுதலை வானில் மறைக்கப்படாத ஒளியைத் தேடிய நிலையில் தமிழர் எழுச்சியின் புரட்சி விடுதலை வடிவமான மேதகு வே .பிரபாகரன் அவர்களின் உறுதிமிக்க விடுதலைப்பாதை அவர்களை பின்தொடரவைத்தன. சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரன் அவர்களின் வீரம், தன்மானம் என்பன தமிழரைத் தலை நிமிர்ந்து வாழவைக்கும் என்ற எண்ணம், பரமதேவா அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ,ணைய வைத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ,ந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெறுவதற்கு பயணிக்கவைத்தன. விடுதலைப் புலிகளின் பாசறையில் பரமதேவா இலங்கைத் தீவில் மாபெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்திய அரசின் அழைப்பில் தமிழ் இளையோர்கள் அணிகள் படைத்துறை பயிற்சி பெறுவதற்காக படகின் மூலம் சென்று கொண்டிருந்தனர். இப் பயிற்சியை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறையில் பரமதேவாவும் இணைந்திருந்தார். 1972ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பாசி, மோகனச்சந்திரன், ஆகியோருடன் பொன். வேணுதாஸ் சரவணபவான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர். 1975ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்து ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பரமதேவா, ரஞ்சன், தயாளன்,யோகபதி ஆகியோர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் உறுப்பினரான பாசி.யோகன் அவர்களுடன் இணைந்ததாக போராளிகள் புறப்பட்டிருந்தனர். மட்டக்களப்பின் முன்னணி வீரன் பரமதேவாவின் விடுதலை உணர்வு, எழுச்சிமிகு செயல்பாடுகள் என்பவற்றை அறிந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பரமதேவா விடுதலைப் புலிகளோடு இணைந்தது தனது உறுதியான விடுதலைப் பயணத்தில் கிழக்கிலிருந்து சாள்ஸ் அன்ரனியைத் தொடர்ந்த பலமாகவே எண்ணிப்பெருமிதம் கொண்டிருந்தார். தலைவரின் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியிருந்த கிழக்கு போராளிகளில் பரமதேவா ஒருவர் என்பதை தலைவர் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. தாய் மண்ணில் விடுதலைப் புலிப் போராளியாகப் களத்தில் பரமதேவா சாதாரண படகுப் பயணமூலம் தாய்த் தமிழகத்திலிருந்து தமிழீழத் தாய்மண்ணுக்கு வந்திருந்த பரமதேவா தனது பிறந்த ஊர் பயணத்தில் நடைப்பயணம் ஒன்றுக்காக காத்திருந்தார். ஆரம்ப காலங்களில் சாதாரண மீன் பிடிப் படகுகள் மூலமும்,கால் நடை மூலமும் மாவட்டங்களுக்கிடையிலான போக்கு வரவைப் போராளிகள் மேற்கொண்டிருந்தனர். யாழ்.மாவட்டத்திலிருந்து வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு சிலகாலம் தங்கியிருந்த பாமதேவா முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் முன்னணி வீரனாக களமிறங்கினார். விடுதலைப் புலிகளின் போராளிகளால் 05.08.1984 ம் ஆண்டு அன்று தாக்கியழிக்கப்பட்ட ஓட்டுச்சுட்டான் சிங்கள காவல் நிலையத்தில் சுமார் 30 விசேட பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர் உட்பட்ட 50 சிங்கள காவல் துறையினர் பணியிலிருந்தனர். முல்லைத்தீவின் முச்சந்தியில் அமைந்துள்ள ஓட்டுச்சுட்டான் பழமையான வரலாற்றை எமக்கு உணர்த்தும் பாரம்பரிய தாயகத்தின் புனித பூமியாகும். தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இவ்வூரிலிருந்து முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு, முத்தையன்கட்டு, நெடுங்கேணி போன்ற தமிழரின் ஊர்களுக்குள்ளும் செல்ல முடியும், இந்த ஊரின் அருகாமையில் பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னனின் கல்லறை கற்சிலை மடுவில் அமைந்துள்ளதையும் குறிப்பிடமுடியும். வீறுகொண்டெழுந்த வேங்கைகளின் பாய்ச்சலில் கிலிகொண்ட சிங்களப்படையினர் அழிக்கப்பட்ட படையினரை விட்டு நாலா புறமும் ஓடியபோது விடுதலைப் புலிகள் உள் நுழைந்து எராளமான நவீன போர்க்கருவிகளை அள்ளியெடுத்து வெளியேறினர். சிங்கள காவல் ஆய்வாளர் கணேமுல்ல உட்பட்ட 6 பேர் இத் தாக்குதலில் அழிக்கப்பட்டனர். விழுப்புண் அடைந்த சில போராளிகளுக்கு பரமதேவா முதல் உதவிப் பணிகளைத் செய்திருந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளுடன் பரமதேவா என்ற மட்டக்களப்பு மாவீரனும் இணைந்திருந்தார். தாக்குதலுக்கும், மருத்துவத்திற்குமாக கடமை உணர்த்தப்பட்ட பரமதேவா தனது பணியை செம்மையாக செய்திருந்தார். அள்ளப்பட்ட ஆயுதங்களில் சிலவற்றுடன் முல்லைத்தீவு மண்ணிலிருந்து நடைப்பயணமாகவும், கடல் பயணமாகவும் சில போராளிகளுடன் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டார். முல்லைத்தீவு, மணலாறு, தென்னமரவாடி, வெருகல் ஊர்களுடாக அவருடைய பயணம் அமைந்திருந்தது. அக்காலத்தில் விருப்புடன், புனிதப் பயணத்தில் இலட்சியத்திற்காக, உறுதியான கொள்கையில் பயணிக்கும் ஒவ்வொரு போராளிக்கும், தமிழீழ மெங்கும் தமிழ் ஊர்களைத் தாவிச்செல்வதும், அங்கு வாழும் மக்களை தரிசிப்பதும் புதிய அனுபவமாகும். ஒரு போராளியின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வின் வெளிப்பாடகவும் இருந்ததனால் இப் பயணத்தை தமிழர் நிலங்களில் கால் பதித்துச் செல்லும் பாக்கியமாகவே கருதியிருந்தனர். ஒரு போராளியின் வாழ்க்கையில் தான் சார்ந்த இனத்தின் விடுதலையை தாங்கிச்செல்லும்போது. முழு இனத்தின் உறவோடு பயணிப்பதில் அவனின் இலட்சியப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன உண்மையின் வெளிப்பாடாகவே அமைந்துவிடுகின்றன. இவ்வாறு எமது மண்ணில் புனிதப் போராளியாகப் பயணித்தவர்களில் பரமதேவாவும் தமிழர் வரலாற்றில் விடுதலை வீரனாக, கண்முன்னே நிழலாக காட்சிதந்து கொண்டிருக்கின்றார். ஒரு தமிழன்னைக்கு, தாய் மண்ணில் பிறந்த பரமதேவா பாலகப்பருவம் தாண்டிய பள்ளிப் பருவத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தோள்மீது சுமந்து பயணித்து தமிழீழ அன்னையின் வீரப் புதல்வர்களில் ஒருவரானார். மட்டக்களப்பில் இராஜதுரை, அம்பாறையில் கனகரெட்ணம் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தை சிதைத்து தமிழர் அரசியலிலிருந்து மாறியபோது, கனகரெட்ணம் அவர்களின் மகனையும் அழைத்துக்கொண்டு களமாடப் புறப்பட்ட பரமதேவா மட்டக்களப்பு அரசியலில் பாரிய தாக்கத்தையும், உறுதியான விடுதலை சார்பாக ஏற்படுத்தியிருந்தார். அன்று அவருக்கு தோள் கொடுத்தவர்களாக காசி ஆனந்தன், பொன்.வேணுதாஸ், வணசிங்கா ஆசிரியர், சௌந்தரராஜன் ஆசிரியர், பத்திரிகையாளர் நித்தியானந்தன், வணபிதா சந்திரா பெர்னாண்டோ போன்றவர்களைத்தான் எம்மால் இனங்காணமுடிகிறது. தமிழர் அரசியலில் வேறுபலரும் தொடர்ந்திருந்தபோதும் உறுதியான விடுதலை, அரசியல் பயணத்தில் விலகாமல் சென்றவர்களாக பிற்காலத்தில் அரசியலில் மிளிர்ந்தவர்களை உயர்ந்தவர்களாக சொல்ல முடியவில்லை. தமிழரின் அரசியல் பயணம், விடுதலைப் பயணமாக மாறிய வேளையில் மட்டக்களப்பில் உறுதியான அரசியல் எழுச்சியில் குளிர் காய்ந்து பதவியைப் பிடித்தவர்களும், அதைக்தக்கவைக்க தடம் புரண்டு அரசியல் நடத்தியவர்களையும், அவதானிக்க முடிந்தது. பரமதேவா (லெப்டினன்ட் ராஜா) என்ற மாவீரனின் வரலாற்றுப் பதிவில் சாதாரண சம்பவங்களாக அரசியலைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் எழுச்சி அரசியல் தொடங்கிய வேளையில் இவருடைய விடுதலை எழுச்சியும் மக்கள் மத்தியில், ஒரு புரட்சித் தீயை மூட்டியதால், வரலாறும் அரசியலோடு இணைந்ததாக பதியப் படவேண்டிய நிலையில் இருக்கின்றது. இன்றைய தமிழ் இளையோர்களுக்கெல்லாம் முன் மாதிரியான, எழுச்சி வீரனாக கூறக்கூடிய பரமதேவா (லெப்டினன்ட் ராஜா) என்ற தன்மானமிக்க, தமிழ் புரட்சியாளனின் வரலாறு, புதிய எழுச்சியை, புதிய அரசியலை, விடுதலைக் களத்தில் நிட்சயம் தோற்றுவிக்கும். மங்காது, மறையாது, புரட்சியாளர்களின் வரலாறு என்பதற்கமைய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) போன்றவர்களின் வரலாறும், காலம் காலமாக எமது மக்களின் சந்ததியோடு தொடர்ந்து செல்லும். விடுதலை அடையமட்டுமல்ல, விடுதலை பெற்ற பின்பும் இது தொடரும். மாசற்ற மறவனை பெற்றெடுத்த மட்டக்களப்பு மண் கண்ட வீரர்கள்பலர், இம் மண்ணில் களமாடி வீழ்ந்த 8000 க்கு மேற்பட்ட மாவீரர்களின் வரலாற்றின் ஆரம்பந்தான் பரமதேவா என்ற புரட்சி வீரனின் புதிய விடுதலை அத்தியாயம். எழுதப்படுகின்ற எமது போர்க்காவியத்தின் படைப்புகளில் மட்டக்களப்பின் தொடக்கத்தின் முதல் பக்கமாக பரமதேவா என்ற விடுதலைப் போராளியின் வரலாறு அமைந்திருக்கும். நினைவுப்பகிர்வு:- எழுகதிர். https://thesakkatru.com/commander-lieutenant-raja/
-
கப்டன் திலகா சிட்டுக்குருவி கப்டன் திலகா குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அதோ, அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா, உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள், எப்படி இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துருதுருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சி பெற்ற பெண் புலிகள் “திலகாக்கா மாத்திரம் எப்படி சோர்வேயில்லாமல் இப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார்?” என்று ஆச்சரியப்படுவார்கள். “பயிற்சிப் பாசறையில் நாம் பயிற்சி எடுக்கிறோமா அல்லது திலகாக்கா பயிற்சி எடுக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் அவர் எந்நேரமும் ஓடித்திரிந்து கொண்டே இருப்பார்” என்று அவர்கள் சொல்வார்கள். களத்தில் கூட அவளது உற்சாகம் சிறிதும் குறையவில்லை. 1989ம் ஆண்டின் நடுப்பகுதியில் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்ட திலகா இதுவரை காலமும் பயிற்சி கொடுத்து படையணிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் களம் செல்லும் சர்ந்தப்பம் அவளுக்கு கிடைக்கவில்லை. ஆனையிறவு மோதலே அவளது அவாவை நிறைவேற்றியது. வழமை போல் படு உற்சாகமாகவே தன் குழுவை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு மோதலின் கடைசிக் கட்டம், திலகா தனது அணியுடன் களம் புகுந்தாள். அகிலன் வெட்டையில் நின்ற இராணுவம் ஆனையிறவை நோக்கி முன்னேறத் தொடங்கியது. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேற முயன்றது, இராணுவத்தினரின் நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் திலகா தனது அணியின் வியூகங்களை மாற்றி – மாற்றியமைத்து போரிட்டுக் கொண்டிருந்தாள். இராணுவத் தரப்பில் பலரை நாம் விழ்த்திய போதும் எம் பக்கமும் இழப்புகள் அதிகமாகவே இருந்தது. களத்தில் நிற்கும் எம்மவர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் இராணுவத்தினது நகர்வு தடுக்கப்பட வேண்டும். திலகா உடனேயே தொலைத் தொடர்பு சாதனம் முலம் தனது குழுவின் அணித்தலைவர்களை அழைத்தாள். “முன்னுக்குப் போங்கோ. சளைக்காமல் அடிபடுங்கோ. வீரமரணமடைந்த ஒவ்வொரு போராளியையும் மனதில நினைத்துக்கொண்டு போங்கோ – போய் அடிபடுங்கோ.” என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன் குழுவை உற்சாகப்படுத்திக் கொண்டு சண்டைக்குத் தலைமை தாங்கினாள். சண்டையும் தீவிரமடைந்தது. இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்றிலிருந்து புறப்பட்ட ரவை திலகாவை துளைத்துச் சென்றது. தரையில் படாமல் பறப்பது போல் ஓடுகின்ற திருமலை மண் பெற்ற அந்தத் தவப்புதல்வி அந்தப் பெருமணல் வெளியிலே சாய்ந்தாள். அரை மயக்கத்திலிருந்த போதும் அவள் வாய், “செத்த ஒவ்வொரு, போராளிகளையும் நினையுங்கோ. போய் அடியுங்கோ” என்றே கட்டளையிட்டுக் கொண்டிருந்தது. வைத்தியசாலைக்கு அவள் கொண்டு வரப்படும் வழியிலும் எதோ சொல்ல விரும்புவது போல் அவள் வாய் திறந்து, திறந்து முடியது. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. வைத்தியசாலைக்கு அவள் கொண்டுவரப்பட்ட பின்னர் உயிர் பிரியும் இறுதி நேரத்தில் கூட அவள் வாய் எதையோ முணுமுணுத்தது. நான் நினைக்கின்றேன் கடைசி நேரத்தில் கூட “செத்த ஒவ்வொரு போராளிகளையும் நினைத்துக் கொண்டு அடிபடுங்கோ. ” என்று சொல்லத்தான் அவள் விரும்பியிருப்பாள். நினைவுப்பகிர்வு: மலைமகள். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி 1991). https://thesakkatru.com/captain-thilaga/
-
லெப். கேணல் தட்சாயினி நெஞ்சை விட்டகலா நினைவுகளில் நீங்கள் என்றும்… கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால் தாட்சாயினியின் தோழி ஒருத்தி சற்றுப் பெருமையாக, உண்மைதான். தாட்சாயினியின் உடலிலுள்ள வீரத்தழும்புகளை நின்று நிதானமாக எண்ணினால் அறுபத்துநான்குக்கும் அதிகமாகவே இருக்கும். தட்சாயினி! அந்த வயதுக்கேயுரிய முதிர்ச்சி. களங்களில் அவள் காட்டிய உக்கிரம், தன்னோடு நிற்கும் போராளிகளில் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, அவளது வளர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தவறு விடுகின்ற கணங்களில் அவளது தண்டிப்பு எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து இவளை எங்களுள் ஆளுமையுடையவளாக நிலைநிறுத்தியது. விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெரும்பாலான சண்டைக் களங்களில் கம்பீரமாக ஒலித்த கட்டளைக் குரலுக்குரியவளை 1997.08.04 அன்று காலையின் பின் நெருப்பள்ளிவீசும் களம் இழந்திருந்தது. பல் சண்டைக்களங்களில் உடல் நிறையக் காயங்களைப் பெற்றுவந்து, தப்பிப்பிழைத்து, இனிக் காயப்படுவதற்கே இடமில்லை என்ற நிலையில் கூட களத்தைவிட்டு போகமாட்டேன் என்று அடம்பிடிப்பவள். பலாலி காவல் நிலைகள், மணலாறுகளம், மண்டைதீவு, சூரியக்கதிர், பூநகரி, தொண்டைமானாறு ஒட்டகப்புலம் வரையான காவலரண் அழிப்பு என்ற நீண்ட பட்டியல் அவளுக்குரியது. திறமையான சண்டைக்காரி. பூநகரிச் சண்டையின் அவளுக்கு இடுப்பிலும் தோள்மூட்டிலும் பெரிய காயம். “இந்தக்காயங்க்களோடு உங்களாலை தொடர்ந்தும் பயிற்சி எடுத்து சண்டைபிடிக்க ஏலாது: வெளி நிர்வாக வேலைகளைச் செய்யுங்கோ” என்று கூறப்பட்டும் கேளாமல், ‘தன்னால் முடியும், தான் தொடர்ந்து சண்டையிலே நிற்பேன்’ என்று விடாப்பிடியாய் நின்று செய்து காட்டியவள். மணலாறு மின்னல் சண்டையின்போது அவளுக்கு வயிற்றில் பெரிய காயம் ஏற்பட்டு, வெளிவந்து விழுந்த குடலை எடுத்து உள்ளே வைத்துப் பொத்தியபடி, இரத்தம் இழுக்க ஒருவரின் உதவியுமின்றி அரை மணித்தியாலம் நடந்தே மருத்துவ ஒழுங்குசெய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளது மனுருதியைக்காட்ட இதைப்போல் இன்னும் எத்தனையோ சம்பவங்கள்……….. ஓரளவு பதட்டமில்லாத காவல்நிலைப் பகுதிகளில் அவள் நிற்கும்போது அவள் அங்கு நடத்துகின்ற தடபுடலுக்குக் கணக்கில்லை. அதுவும் கடற்கரையோரக் காவல்நிலைப் பகுதியாயின் தாட்சாயினி நண்டு பிடித்து, வாய்க்கு ருசியாய் சமைத்துக் கொடுப்பாள். தனது குழுவிலுள்ள வயதில் சின்னப் போராளிகளுக்கு தானே உணவு குழைத்துக் கொடுப்பாள். ஒரு அம்மாவுக்குரிய பொறுமையும் பண்பும் கண்டிப்பும் அவளிடம் உண்டு. ஆள் சரியான தேத்தண்ணிச்சாமி, விடாக்குடியன், மொடாக்குடியன் மாதிரி காலம் நேரமில்லாமல் தேநீர் தயாரித்து, தானும் குடித்து எல்லோருக்கும் கொடுப்பாள்.தேனீயைப் போலவே அவளும் சரியான சுறுசுறுப்புத்தான். சூரியக்கதிர் 01ல் அவளுக்குப் பெரிய காயம். எறிகணை அவளின் காதோடு சேர்த்து கன்னத்தசைகளையும் பிய்த்துச் சென்றதோடு, மார்பிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை அவளது குழு ஒரு காவற்பகுதியில் நின்றது. அப்போது அவள் குழுவிலுள்ள ஒரு போராளிக்குக் காய்ச்சல், ஆறியும் ஆராமலும் இருந்த வயிற்ருக்காயத்தைப் பொருட்படுத்தாது தானே மரத்தில் ஏறி இளநீர் பிடுங்கிக் கொடுத்துவிட்டு, வயிற்றுநோவேடுக்க, ஒருவருமறியாது தனியாகப் போயிருந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதாள். எப்போதும் இயக்கத்தின் நலன், கட்டுக்கோப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக எமது தலைவர் என்று தீவிரமான பற்றுவைத்த போராளி. மிகத் திறமையான சண்டைக்காரி. அவளோடு நின்ற நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராளிக்கும் உயிர்த்துடிப்பானவை. நெஞ்சை விட்டு அகலாதவை. நன்றி – களத்தில் இதழ் (17 மார்கழி 1997). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-thadsayini/
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
- ltte cemetry
- ltte heroes day
- (and 5 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
- ltte cemetry
- ltte heroes day
- (and 5 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
- ltte cemetry
- ltte heroes day
- (and 5 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
- ltte cemetry
- ltte heroes day
- (and 5 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
- ltte cemetry
- ltte heroes day
- (and 5 more)