Jump to content

Search the Community

Showing results for tags 'மாவீரர்கள்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இளம் பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.} "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் (தமிழீழத் தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1983 - 20 பெப்ரவரி 2009 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = அண்ணளவாக 24,000 (தவிபு அலுவல்சார் எண்ணிக்கை) 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 50,000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய ஒருதலைப் பக்கமான அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2002 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 2) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 3) கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். இருந்தவிடம்: இராசவீதி, கோப்பாய் முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 1991 இலிருந்து 1996 இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம், கல்லறைகள் & நினைவுக்கற்கள்: 4) முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 'பின்னால் மங்கலாக ஒலிமுகமும் தெரிகிறது' 5)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 6)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'தரவை ஒலிமுகமும் உள்வீதியும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 'ஒலிமுகம்' 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு மூ விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' நான் மேலே கொடுத்துள்ள படிமங்களில், இடது பக்கம் இருக்கின்ற கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியனவே வலது பக்கம் இருக்கின்ற இரு கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களாக மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது என்னுடைய கருதுகோளே அன்றி அறுதிப்படுத்தப்பட்டதன்று. ஒலிமுகம் (பழையது): ஒலிமுகம் (புதியது): எப்போது பழையதை இடித்துவிட்டு புதியதை கட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழீழ தேசியப் பதக்கம் பெற்ற ஓவியர் புகழேந்தி அவர்கள் நிற்பதை வைத்து (அவர் வந்து சென்ற காலத்தை வைத்துப் பார்த்தால்) இது 2005இற்குப் பின்னரே இடித்துப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அறியலாம். 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 'ஒலிமுகம்' 2004 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு மூன்று வித தோற்றங்கொண்ட கல்லறைகள் இருந்தன. அறியில்லா குறிப்பிட்ட ஆண்டு வரை இங்கிருந்த மொத்த, கல்லறைகள் - 74 நினைவுக்கற்கள் - 73 நினைவுக்கல்: 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! விதம் 1: விதம் 2: 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதம் தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான கல்லறையும் ஒரு விதமான நினைவுக்கல்லுமே இருந்தது. இது விசுவமடுவில் அமைந்திருந்தது. ஒலிமுகம்: "வித்துடல்: லெப். கேணல் அர்ச்சுனனினது ஆகும்" 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' 21) உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கிருந்த கல்லறைகளும் நினைவுக்கற்களும் (தனியான படிமம் சேர்த்துள்ளேன்) தரவை மாவீரர் துயிலுமில்லததில் இருந்தவற்றைப் போன்றே இருந்துள்ளன என்பதை கீழக்கண்ட படிமத்தில் புலப்படுபவற்றை வைத்து அடையாளம் காணக்கூடியவாறு உள்ளது. ஒலிமுகம்: 22) ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் அறியில்லா வடிவிலான கல்லறையும் இருந்தது. இதுவரையிலும் கிடைத்த படிமம் கல்லறை கல்லால் கட்டப்படும் முன் எடுக்கப்பட்டதாக உள்ளதால கல்லறையின் வடிவத்தை அறியமுடியவில்லை. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கோட்டத்தில் இருந்த ஆலங்குளம் என்ற ஊரில் அமைந்திருந்தது. இதை தலைநகரின் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம் கல்லறைகள்: நினைவுக்கற்கள்: 23)உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் ஒரு கல்லறையும் இருந்தது. இதனது ஒலிமுக வடிவம் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தினதைப் போலவே கட்டப்பட்டிருந்தது, ஆனால் மஞ்சள் நிறத்தில் (கனகபுரத்தினதை ஒத்த நிறம்) . கல்லறை & நினைவுக்கல்: ஏனைய 5 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்: இறுதிப்போர் காலத்தில் கிளிநொச்சி மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: --> தர்மபுரம் (காலம் அறியில்லை) இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: 2002ல் மாவீரர் நாள் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) ஆராச்சிகள் மூலம் தேடியெடுத்து எழுதியவை ஈழநாதம்: 28/11/2004 படிமப்புரவு Vimeo sea tigers 85% screenshots only ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~26,500 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.) எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும். (இதை நான் செய்வதற்கான முக்கிய காரணம், வயிற்றுப் பிழைப்பிற்காக மாவீரர் எண்ணிக்கையினை நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனக் கூவித் திரிவோர் கொஞ்சமேனும் திருந்தட்டும் என்பதற்காகவே ஆகும். ) 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38) 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது' 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:- "2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்" 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.) 'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' (மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்) இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள் சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள் ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள் --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள் 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள் | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் மொத்தம் - 651 போராளிகள் | ஆதாரம்: மாவீரர் பட்டியல் மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம். இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அலுவல்சார் வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே. நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். 2009 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:- சரி இனி நாம் கணக்கெடுப்போம். சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால், (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு) - (புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை) 5953-2,239 = 3,714 2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714 22,390+3,7149 = 26,104 சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக, 26,104+358 = 26,462 ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்.. (சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.) இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம். அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம். இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி: இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும். இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும். இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம். மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது, முன்னிருந்து பின்னாக... முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160 (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை) இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276 மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது. ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கின் அடிப்படையில் கணக்கப்போட்டுப் பார்த்தால், மார்ச் 8 இலிருந்து ஏப்ரல் 20 வரை இதே அளவானோர் வீரச்சாவடைந்திருப்பராயின் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இதே அளவில் போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் - நவம்பர் 20 முதல் மார்ச் 8 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 2,009- 2,260 ஆகும். இதே அளவில் ஏப்ரல் 20 இலிருந்து மே 16 வரை வீரச்சாவடைந்திருப்பர் என்ற நம்பிக்கையில் 484 - 544 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். இந்த ஐந்து தோராய மதிப்பீட்டினை கூட்டிப் பார்த்தால் மொத்தமாக 3,293 - 3704 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர், நவம்பர் 20 முதல் மே 16 வரை. எனது இந்தத் தோராயக் கணக்கிற்கு வலுச்சேர்க்கும் விதமாக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆகுதியான வான்கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் வன்னிவாழ் மக்களிற்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்த ஒரு வரியினை ஆதாரமாக எடுத்தாள்கிறேன். வரி பின்வருமாறு: ".................. அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். ......" எனது தோராயகக் கணக்கான 43 நாட்களில் வீரச்சாவடைந்தோர் 800- 900 பேர் என்பதைக் கொண்டு நவம்பர் 20 முதல் பெப்ரவரி 18 வரையான 92 நாட்களில் வீரச்சாவடைந்தோர் தொகை 1712. கிட்டத்தட்ட இதே அளவான தொகையையே இவ்வான்கரும்புலியும் (22,390- 24,000 = 1610) குறித்துள்ளார். நவம்பர் 20 முதல் இவர் இக்கடிதத்தை எழுதிய திகதியாக நான் கருதும் பெப் 18ம் திகதிக்கு முன்னர் வரைக்கும் ஏறக்குறைய 24,000 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் எனக் கருதும் பட்சத்தில், எனது தோராயக் கணக்கும் இதே அளவான போராளிகள் இறந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மே 17 காலை ரட்ணம் மாஸ்டர் அவர்களுடன் சென்ற 250 வரையான போராளிகளில் "தோராயமாக" 80- 100 வரையானோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் என்றும் அச்சமரில் பங்குபற்றிய போராளிகளின் வாக்குமூலம் அறிகிறேன். அத்துடன் கட்டாங்கடைசியில் (17 மாலை - 18 காலை) 200 - 250 வரையான போராளிகள் தாம் கொண்ட கொள்கையின் உறுதிப்பாட்டால் இறுதிவரை நின்று களமாடி வீரச்சாவடைந்தனர் என்று இறுதிவரை களமாடி தப்பிய புலிவீரர்களின் வாக்குமூலம் அறிகிறேன். தமிழர் தரப்பு மூலம் அறியப்பட்ட உச்ச எண்ணிக்கையினைக் கொண்டு மொத்த மாவீரர் தொகையினை கணக்கிட்டால், 22,390 + 3,704 + 250 + 100 = 26,444 இதை நாம் முழு எண்ணாக எடுக்கும் போது வருவது 26,500. இவ்வெண்ணிக்கையானது சிங்களவரின் கணக்கின் முழு எண்ணோடு பொருந்தி வருவதைக் காண்க. இதையே தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே. இதனுள் ஆயுதங்கள் மௌனித்து சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். "எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி - தமிழ் ஈழம் மீட்பது உறுதி 😢" - மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று உசாத்துணை: Tamilnet.com https://anyflip.com/zmfgt/pzff https://www.deseret.com/2000/6/6/19560902/censors-stifling-reports-on-war-in-sri-lanka https://www.defence.lk/index.php/Article/view_article/862 https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf https://tamilnation.org/ ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  4. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் "செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா! சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!" த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்" 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  5. செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் On Feb 4, 2020 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன். சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்) வீரச்சாவுத்திகதி: 04.02.2009 வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில். விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்புக்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன. யாழ் குடாநாட்டின் வளம்மிகுந்த வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் கடலலைகள் தழுவுகின்ற மருதங்கேணி எனும் அழகிய கிராமத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதியினருக்கு 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது மகனாகப்பிறந்தவர்தான் சுதரதன் எனும் இயற் பெயரைக் கொண்ட லெப் கேணல் விநாயகம் அவர்கள். இவரை வீட்டில் ஏல்லோரும் சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது இளமைக் காலக் கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். சுதன் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதோடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான காத்தவராயன கூத்து மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் சுதனும் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவ்வாறு அவரது இளமைக்காலம் இனிதாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் அமைதி என்ற போர்வையில் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்த இந்தியப் படையினர் அதற்கு முற்றிலும்மாறாக ஆக்கிரமிப்புப்போரையும் தமிழ்மக்கள் மீதான அடாவடித் தனங்களையும் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தாயகத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைப் பலிகொண்டதுவும் இந்தியப் படையினர் நாளாந்தம் தமிழ்மக்கள் மீது தொடரும் கெடுபிடிகளும் அதன் விளைவாக தமிழ்மக்கள் அனுபவித்துவரும் அவல வாழ்க்கையும் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதை மிகவும் ஆழமாகப்பாதித்தது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் ஆதரவுடன் தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம். லெப். கேணல் மறவன் மாஸ்ரரின் உதவியுடன் சுதனும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் பல இளைஞர்களும் தம்மை முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அமைப்பில் இணைந்து கொண்ட சுதனும் மற்றய இளைஞர்களும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம் ஊடாக மணலாற்றுக் காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற சுதன் அங்குதான் இயக்கப் பெயராக விநாயகம் எனும் பெயரைப் பெறுகின்றார். அங்கு வியட்னாம் பயிற்சிப் பாசறையில் இரண்டாவது பயிற்சி அணியில் விநாயகமும் இணைக்கப்பட்டு ஒரு போர்வீரன் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து படைத்துறைப் பயிற்சிகளிலும் கொமாண்டஸ் பயிற்சிகளிலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று சிறந்த போராளியாக பயிற்சிப் பாசறையிலிருந்து விநாயகம் அவர்கள் வெளிவருகின்றார். தொடர்ந்து இந்தியப் படையினருக்கெதிரான தாக்குதல்கள் தேசவிரோதக் கும்பல்களுக்கெதிரான தாக்குதல்கள் என அவரின் போர்ப் பயணம் தொடர்ந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதையடுத்து அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மீண்டும் போர் வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் யாழ். கோட்டை படைமுகாம்மீது விடுதலைப்புலிகள் முற்றுகைப்போரை மேற்கொண்டிருந்தபோது விநாயகம்அவர்களும் அந்த தாக்குதல்அணியில் பங்கெடுத்து அந்தச்சமரில் தனது போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவ்வவ்போது குடாநாட்டில் தான் சந்தித்த களமுனைகளிலும் களப்பணிச் செயற்பாடுகளிலும் தனது நேர்மைத்திறனையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் வெளிக்காட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெற்றிருந்தார். இதேகாலப்பகுதியில் அப்போதய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமாகிய மாத்தையா அவர்களின் அணியில் விநாயகம் அவர்களும் இணைக்கப்பட்டு அவரது மெய்ப்பாதுகாப்பு அணியில் விநாயகம்அவர்களின் பணி தொடர்ந்தது. 1991ம் ஆண்டு ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சமரிலும் விநாயகம் அவர்கள் பங்கெடுத்திருந்தார். 1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்தையாவின் அணி கலைக்கப்பட்டபோது அதில் குறிப்பிட்ட போராளிகள் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்படபோது விநாயகம்அவர்களும் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி நாகதேவன்துறை படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தவளை நடவடிக்கையின்போது கடற்புலிகளின் தாக்குதலணியில் விநாயகமும் அங்கம் வகித்திருந்தார். வரலாற்று முக்கியத்துவம்பெற்ற அந்தச் சமரில் அபாரமான துணிச்சலுடன் களமாடிய விநாயகம் அவர்கள் நாகதேவன்துறைப் படைத்தளத்தின் வெற்றிக்கு முன்நின்று உழைத்ததோடு அந்த வெற்றிச்சமரில் வீரவடு ஏந்தியதன் விளைவாக ஒரு கண்பார்வையை இழந்திருந்தார். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக விநாயகம்அவர்கள் பொறுப்பு வகித்திருந்தார். இவர் மன்னார் மாவட்டத்தில் அரசியல்த்துறைப் பொறுப்பை பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் மக்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்தது. பொதுமக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வதும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான நிர்வாகக்கட்டமைப்புக்களுக்கு புத்துயிரூட்டி புதுப்பொலிவுடன் அவை செயற்பட வழிசமைத்ததுடன் அவைகளுக்கு ஊடாக கடற்புலிகளின் படைக்க ட்டமைப்பை மன்னார் மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்கு முதன்மையாக உழைத்தவர். இதன் பிற்பாடு குடாநாட்டில் அரசியல்ப்பணியும் குறிப்பிட்டகாலம் புலனாய்வுக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சிபெற்று அதுசார்ந்த பணிகளும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் படைத்துறை ரீதியான செயற்பாடுகளுமென விநாயகம் அவர்களின் போராட்டப்பயணம் தொடர்ந்தது. 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ். குடாநாடு முழுமையாக அரசபடையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது ஐந்து லட்சம் மக்களுடன் விடுதலைப்புலிகளின் அனைத்து படைக் கட்டமைப்புக்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக்கொண்டு செயற்பட்டபோது விநாயகம் அவர்களின் போரியல் செயற்பாடுகள் வன்னியில் தொடர்ந்தது. இந்தக் காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பிரரதான மெய்ப் பாதுகாவலராகவும் சில காலம் விநாயகம் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அத்துடன் சூசை அவர்களின் மெய்ப் பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற போராளிகளுக்கு பாதுகாப்புப்பயிற்சி வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் அவர்கள் செயற்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 01 வெற்றிச் சமரிலும் விநாயகம்அவர்கள் பங்கெடுத்து தீரமுடன் களமாடி முல்லைத்தீவு படைத்தளத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்ததோடு அந்த வெற்றிச் சமரில் தலைப்பகுதியில் விழுப்புண்ணடைந்தார். மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஊடாக விழுப்புண் தேறிய நிலையில் விநாயகத்தின் போர்ப்பணி மீண்டும் தொடர்ந்தது. ஆனாலும் தலைப்பகுதியில் புதைந்திருந்த சன்னம் இறுதிக்காலம் வரையிலும் அவரை உபாதைக்கு உட்படுத்தியிருந்தது. தொடர்ந்து செம்மலையில் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் கிழக்கு மாகாண விநியோக அணியில் விநாயகம்அவர்களும் இடம்பெற்றிருந்தார். கடற்புலிகளின் சண்டைப்படகில் இரண்டாம் நிலை கட்டளைஅதிகாரியாக செயற்பட்டு பல சவால்களுக்கு மத்தியில் கிழக்குமாகாண விநியோக நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு அயராது உழைத்தார். அத்துடன் செம்மலையில் அமையப் பெற்றிருந்த கிழக்குமாகாண விநியோக அணிக்கான முகாம் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து போராளிகளின் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தி குறித்த முகாம் செயற்பாடுகள் திறம்படசெயற்படுமளவிற்கு மிக நேர்த்தியாக தனது கடமையினை ஆற்றியிருந்தார். 1999ம் ஆண்டு காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறிப்பிட்ட காலமாக மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறையின் செயற்பாடுகள் விநாயகம் அவர்களின் அரசியல் பிரவேசத்துடன் புதுப்பொலிவுடன் முழுவீச்சுப்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அத்துடன் வர்த்தகர் சங்கங்கள் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் போரெழுச்சிக் குழுக்கள் என சமூகக் கட்டமைப்புக்களை தொடராக சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் இன்றியமையாத பங்களிப்பை வலியுறுத்தி கருத்துக்களை எடுத்துக்குறி அதற்கு ஊடாக மக்களை போராட்டத்தின்பால் அணிதிரட்டி எல்லைக் காப்புப் படையணிகள் கிராமியப் படையணிகள் ஆகிய கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்து 1999ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி படைத்தளங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியதுடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் மேலும் சிலபகுதிகளை மீட்டெடுத்தவாறு விடுதலைப்புலிகளின் படையணிகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது முல்லை மாவட்டத்தில் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த எல்லைக் காப்புப்படையணிகளை விநாயகம் அவர்களே தலைமையேற்று கூட்டிச்சென்று களமுனையின் பின் களப் பணிகளையும் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லைக் காப்புப் படையணிகளை பாதுகாப்பு நிலைகளில் நிலைப் படுத்துவதையும் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானமக்கள் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்கிளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தார்கள். இந்த மக்களுக்கும் விநாயகம் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் நெருக்கமான உறவுப்பிணைப்பு இருந்து வந்தது. இந்த உறவுப்பாலம் தான் அவர் எல்லைக்காப்புப் படையணிக் கட்டமைப்புக்களை நேர்த்தியாக நெறிப்படுத்துவதற்கு உந்துசக்தியாக விளங்கியது. இவ்வாறாக கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை மிகவும் சீரிய முறையில் நெறிப்படுத்திவந்த விநாயகம் அவர்கள் 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையில் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்குவந்த காலப்பகுதியில் குறிப்பாக யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்தார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீளவும் முல்லை நகரத்தில் செயற்படுவதற்கு முதன் நிலைக் காரணகர்த்தாவாகவும் விளங்கினார். அரச நிர்வாகக் கட்டமைப்புக்களை துரிதகதியில் முல்லைத்தீவுக்கு நகர்த்தியதற்கு ஊடாகவே இடம்பெயர்ந்திருந்த முல்லைத்தீவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுநிலையாக அமைந்திருந்தது. இந்த முயற்சிகளில் விநாயகம் அவர்கள் முழுமூச்சாக நின்று உழைத்ததன் பயனாகவே குறுகியகாலத்தில் முல்லைத்தீவு நகரம் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது. 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் விநாயகம் அவர்களின் திருமணத்திற்கு சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான ஏறபாடுகள் நடைபெறறன. தனது நீண்டநாள் காதலியான இதயாவை 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாளன்று விநாயகம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துக்கொண்டார். இல்லறம் எனும் நல்லற வாழ்க்கையில் அலைக்குமரன் ஐங்கரன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்ததொரு அப்பாவாகவும் திகழ்ந்தார். இவ்வாறாக அவரின் இல்லறவாழ்க்கையும் போரியல் வாழ்வும் ஒரே பாதையான தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமாதான காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் மீள்கட்டுமானம் செய்யும் நோக்குடனும் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் விநாயகம் அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக நியமித்திருந்தார். அத்துடன் மற்றுமொரு பொறுப்பையும் சூசைஅவர்கள் விநாயகத்திடம் ஒப்படைத்திருந்தார். அதாவது கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையங்கள் அனைத்திற்குமான மேலாளராகவும் நியமித்திருந்தார். குறித்த இந்த இரண்டு பொறுப்புக்களையும் விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் செயலாற்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் மத்தியிலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மத்தியிலும் நனமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த அரசியல்ப் பேச்சாளர். அவரது பேச்சாற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்த சூசைஅவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் கொள்கைப் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குழுவில் விநாயகம்அவர்களையும் சிபார்சு செய்திருந்தார். விநாயகம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அந்த அரசியல் பரப்புரைக் குழுவை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்து அரசியல்ப் பரப்புரைகள் தொடர்பாக விளக்கமளித்து ஆசிகூறி வழியனுப்பி வைத்திருந்தார். 2004ம் ஆண்டு ஒக்டோபர்மாதம் தாயகத்திலிருந்து புறப்பட்ட விநாயகம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சுவிச்சர்லாந்து உள்ளிட்ட இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் தமது கொள்கைப் பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். குறிப்பாக விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம தொடர்பாகவும் அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறிய கருத்துக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்களை பெரிதும் கவர்ந்தன. விநாயகம்அ வர்கள் வெளிநாட்டில் நின்ற நாட்களிலேயே சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இலங்கை உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் தாக்கியது. யுத்த காலத்தில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த வடக்கு கிழக்கு தாயகத்து மக்கள் மீண்டும் இயற்கையின் சீற்றத்தினால் குறுகிய நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டு பல கோடி பெறுமதியான சொத்தழிவுகளைச் சந்தித்து பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்தபோது எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோள்நின்று உழைத்த மக்கள் ஆழிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார். விநாயகம் அவர்களின் சாணக்கியமான அரசியல்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்குவதற்கும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமாக பெருந் தொகையான நிதியை மனமுவந்து தந்தனர். மூன்று மாத காலமாக தமது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விநாயகம்அவர்களும் மற்றயவர்களும் தாயகம் திரும்பியிருந்தனர். தாயகம் வந்த விநாயகம்அவர்கள் சிறப்புத் தளபதி சூசைஅவர்களால் பணிக்கப்படுகின்ற பிரத்தியேகமான பணிகளை முன்னெடுத்ததுடன் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக் கட்டுமானத்திலும் அயராது உழைத்தார். அத்துடன் மக்கள் படைக் கட்டுமானத்தைக்கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களின் கரையோரமாக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிலைகளுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றும் வாகனம் ஒன்றும் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டின் முற்பகுதிகளில் போராட்டத்திற்கு புதிதாக இணைகின்ற புதிய போராளிகளில் கடற்புலிகளுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்து கடற்புலிகளுக்கு உள்வாங்குகின்ற பொறுப்பையும் சிறப்புத் தளபதி அவர்கள் விநாயகத்திடமே ஒப்படைத்திருந்தார். அந்தப்பணியை சிரமேற்கொண்டு கடற்புலிகளுக்கென பிரத்தியேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை படயப்பயிற்சிக்க ல்லூரியின் பண்டிதர் றஞ்சன் லாலா அப்பையா லிங்கம் ஆகிய பயிற்சி அணிகளுக்கு ஆற்றல் மிகுந்த திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து குறித்த பயிற்சி அணிகள் சிறப்பாக தமது பயிற்சிகளை நிறைவு செய்து பின்நாளில் அவர்கள் சிறந்த போராளிகளாகவும் அணித் தலைவர்களாகவும் கடற்புலிகள் படையணியை அலங்கரித்திருந்தார்கள். இந்த செயற்திட்டத்தில் விநாயகம் அவர்களின் உழைப்பு மிகவும் அளப்பரியது. அத்துடன் குறிப்பிட்ட காலம் கடற்புலிகளின் படைய அரசியல்ப் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து ராஜன் கல்விப்பிரிவினருடன் இணைந்து போராளிகளுக்கான கல்விச்செயற்பாடுகளிலும் போராளிகளுக்கான அரசியல் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் முதலான சிறப்புத் தளபதி சூசை அவர்கள் பணிக்கின்ற அரசியல் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளையும் சிறப்புத் தளபதியின் எண்ணத்திறகு ஏற்றவாறு செயல்வடிவம் கொடுத்திருந்தார். 2007ம் ஆண்டு யூலை மாதம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்குள்ளாகி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தபோது அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற பலதரப்பினரதும் அபிப்பிராயக் கருத்துக்களுக்கு அமைவாக விநாயகம் அவர்கள் சூசை அவர்களின் பிரதான மெய்ப்பாதுகாப்பு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் அந்தப் பொறுப்பையேற்று இரவு பகல் பாராது கண்துஞ்சாது பாதுகாப்புக் கடமையை மிகவும் செவ்வனே செய்திருந்தார். 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட விநாயகம் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் மருத்துவப்பகுதி அரசியல்த்துறை புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் செயற்பட சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் கடற்புலிகளில் அங்கம் வகித்த போராளிகள் அனைவரின் நலன்களிலும் கூடியகவனம் செலுத்தி அவர்கள் முகம்கொடுக்கின்ற தனிப்பட்டதும் பொதுவானதுமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து அவர்களும் தங்களது கடமைகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 2008ம் ஆண்டு பிற்பகுதியில் மணலாற்றுக்கள முனையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்றதையடுத்து முல்லைத்தீவில் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய மக்கள்படைக் கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி நாளாந்தம் நூறு பேர்வரையில் மணலாற்றுக் களமுனைக்கு அனுப்புகின்ற செயற்திட்டத்தை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக தானே பொறுப்பேற்று மணலாற்றுக் களமுனையை அண்டியதான அளம்பிலை தளமாக வைத்துக்கொண்டு மிநேர்த்தியாக நெறிப்படுத்தினார். இவரால் அனுப்பப்பட்ட மக்கள்படை களமுனையில் போராளிகளுக்கு தோள் கொடுத்ததுடன் துணிகரத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிக் கிழக்கின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம், நல்லதண்ணீர்த் தொடுவாயவரையிலும் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே யாழ். மாவட்டத்தின் கரையோரத்தினதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தினதும் மையத்தில் அமையப்பெற்ற பேப்பாரைப்பிட்டி எனும் பகுதியில் பலமான காவல் நிலைகளை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தார்கள். அதாவது பேப்பாரைப்பிட்டியை அடுத்துள்ள சாலைப்பகுதியையும் கடந்தால் அடுத்துவருவது மாத்தளன் ஆகும் அப்போது மாத்தளன் மற்றும் பொக்கணையில் இடம்பெயர்ந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள குடியிருந்தார்கள். எனவே பேப்பாரைப்பிட்டி காவல்நிலைகளை அரசபடையினர் கைப்பற்ற விடுவதில்லை என்ற மனவுறுதியுடனேயே விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தன. அதில் விநாயகம்அவர்கள் பகுதிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார். 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் நாளன்று நல்லதண்ணீர்த் தொடுவாயில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதாக யுத்த டாங்கிகள் பல்குழல் எறிகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முன்னேற்றநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். எதிரியின் முன்னேற்றத்தை துணிகரமாக எதிர்த்து களமாடிய கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் அந்த வழிமறிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவருடன் கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளான லெப். கேணல் குகன் (காதர்) லெப். கேணல் பகலவன் உட்பட மேலும் பல போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இரண்டு தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் தளராத உறுதியுடன் வீறுநடை போட்ட உத்தமத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் பேப்பாரைப்பிட்டி மண்ணை முத்தமிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். அவரது இழப்பு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியிருந்தாலும் அவரது வித்துடலை எமது தோளகளில் சுமந்து விதைகுழிக்கு ஒருபிடி மண் எடுத்துப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கேனும் மனம் ஆறியிருப்போம். ஆனாலும் அதற்குக்கூட அவரது வித்துடல் எமக்கு கிடைக்கவில்லை. எனவே கடற்புலிகளில் தனக்கென தனித்துவமான அத்தியாயத்தை பதிவாக்கிவிட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தில் அவரையும் அவருடன் வீரச்சாடைந்த மாவீரர்களையும் எமது இதயத்தில் பூசித்து தமிழீழ விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோடுவோமாக……… “கடலிலே காவியம் படைப்போம்” நினைவுப்பகிர்வு:- செங்கோ “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/111954
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.