Jump to content

Search the Community

Showing results for tags 'வருணகுலத்தான்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. 1974இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பிபிரபாகரன் சந்தித்துக்கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்தி ருந்தார். அரசஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனிஅரசு வேண்டும் என்பதற் காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலை மையில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டியபொழுதிலும் இவர் எப்பொ ழுதும் போராட்டக் குணத்துடன் தீவிரவாதியாகவே இயங்கிவந்துள்ளதை வரலாற் றில் நாம்காணலாம். 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு. ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துடன் 1961 மார்ச் 4இல் சிங்கள ஸ்ரீக்கு எதிராக திருகோணமலை கச்சேரிவாயிலில் மறியல்செய்த சத்தியாக்கிரகிகள்மீது பொலிசார் தடியடிநடத்தினர். இத்தாக்குதலில் காயம டைந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23 மார்ச் 1961 காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு மிகவும் உணர்ச்சி கொந்தளிப்புடன் நடந்தேறியது. இதனைத்தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் அகிம்சாவழி தமிழர்கட்கு விமோ சனத்தை ஈட்டித்தராது என இதில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலரால் வன்முறைக்கு வன்முறையே வழியென்ற முடிபில் புலிப்படை எனும் அமைப் பொன்று கோபாவேசத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி தீவிரவாதஅமைப்பில் ஏறத்தாள இருபதுபேர்வரை இணைந்திருந்ததாக மூத்தபத்திரிகையாளரான சபாரத்தினம் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கோணேஸ்வரத்தில் உறுதியெடுத் தவர்களில் இராசரத்தினமும் ஒருவராவார். இவருடன் உறுதியெடுத்த புலிப்படையின் ஏனைய உறுப்பினர்களாக வட்டுக்கோட்டை பாராளுமன்றஉறுப்பினர் அமிர்தலிங்கம் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் . நவரத்தினம் தமிழ்எழுது வினைஞர் சங்கத்தலைவராயிருந்த வல்வெட்டித்துறை சிவானந்தசுந்தரம் மற்றும் வவுனியாவின் முன்னால் அரசஅதிபரான இராசதுரை என்போர் பெயர் குறிப்பிடத்தக்கவர்கள்.(Tigers Of Lanka N.R.NaRayan swamy Page24) குறிப்பிட்ட புலிப்படையில் இணைந்த சிலஇளைஞர்கள் கண்டிக்குசென்று துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் மேற்கொண்டனர். அத்துடன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்பாதுகாப்பு பயிற்சிகளையும் இவர்கள் தொடர்ந்து வந்தனர். எனினும் 1965 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் குறிப்பிட்ட புலிப்படை தனது கனவினை இழந்துபோனது. புலிப்படையில் தீவிரவாதம்காட்டிய அமிர்தலிங்கம் நவரத்தினம் என்போர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்த கூட்டாச்சியில் சிங்களஅரசுடன் சோரம்போயினர். எனினும் இராசதுரை சிவானந்த சுந்தரம் இராசரெத்தினம் என்போர் இறுதிவரை தனித்தமிழரசு என்ற நோக்கத் துடன் வாழ்ந்துவந்ததே வரலாறு. ஈழத்தமிழர்கள் தனித்துவமாக வாழ்வதற்கு அவர்களின் நிலமும் பொருளாதாரமும் காப்பாற்றப்பட வேண்டுமென் பதில் இராசதுரையும் சிவானந்தசுந்தரமும் இராசரெத்தினமும் என்றும்முனைப்புடன் செயற்பட்டனர். இவர்களில் சிவானந்தசுந்தரம் இராசரெத்தினம் என்போர் பின் நாட்களில் தமிழீழத்தின் மாமனிதர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் பெரு மைப்படுத்தப்பட்டனர். 1990இல் இராசரெத்தினத்தின்; தொகுதியான சாவகச் சேரியில் நடந்த முத்தமிழ்விழாவில் தேசியத்தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவர்களுக்கு இவ்உயரிய கௌரவம் வழங்கப்பட்டது. இவர்களில் மாமனிதராக கௌரவிக்கப்பட் சிவானந்தசுந்தரம் வல்வெட்டித் துறையை சேர்ந்தவராவார். தமிழில் பெரும் பாண்டித்தியம்மிக்க கனகசுந்தரத்தின் மகனாவார். தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் அதன் காரியதரசியாக முதலில் விளங்கிய பெருமைக்குரியவர். அதற்கேற்ப சிங்களம்மட்டும் சட்டத்தை எதிர்த்து தனது அரசபதவியை இவர் துறந்திருந்தார். இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்க ஸ்தாபகராகவும் அதன் ஆரம்பசெயலா ளராகவும் விளங்கியவர். பின்னாட்களின் தமிழரசுக்கட்சியின் போலித்தனமான செயற்பாட்டில் வெறுப்புற்று விலகிய காவலூர் நவரத்தினத்தின் தமிழர் சுயாட்சி கழகத்தின் தூணாக செயற்பட்டார். தலைவர் பிரபாகரனது தலைமையையும் விடுதலைப்புலிகளின் பாதையையும் மானசீகமாக கொண்டுசெயற்பட்டிருந்தார். 29.07.1987 இல் ஈழத்தமிழர்மீது திணிக்கப்பட்ட இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை எதித்து இவர்புரிந்த பிரச்சாரமும் இந்தியஇராணுவத்தின் அடாவடித்தனங்களை நேர்சென்று எதிர்த்த இவரின் துணிவும் இவரை இந்தியஅரசின் எதிரியாக்கியது. இதன்காரணமாக 21.10.1988 இல் இந்தியப்படை முகாமிற்கு அண்மையில் அவர்களின் கைக்கூலிகளாக விளங்கிய EPRLF சங்கரினால் இவர் படுகொலை செய்யப்பட்டார். இங்கு குறிப்பிடக்கூடிய மூன்றாமவரும் புலிப்படையின் காரியவாதியாகவும் திகழ்ந்தவர் T.இராசதுரை ஆவார். ஏனோ இவரின் பங்களிப்பு நேரிடையாக பேசப் படாமலே இன்றுவரை இருந்து வந்துள்ளது. 1958 தமிழ் இனப்படுப்கொலையை தொடர் ந்து வவுனியா அரசஅதிபராக கடமையாற்றிய இராசதுரை பலதமிழர்களுக்கும் அரச காணிகளை பகிர்ந்தளித்தார். தனதுஅதிகாரத்தை பயன்படுத்தி இவர் மேற்கொண்ட இம்முயற்சியால் சீற்றம்கொண்ட சிங்களஅரசினால் இவர் அரசஅதிபர் பதவியில் இருந்து புகையிரத திணைக்களத்திற்கு பந்தாடப்பட்டார். இவருடைய காணி வழங்கல் இடைநிறுத்தப்பட்டு அன்றைய பாராளுமன்றத்திலும் இது பிரஸ்தாபிக்கப்பட்டது. அரசஅதிகாரத்தை இழந்தபோதும் மனம்தளராமல் தமிழர்களின் சுயபொருளாதார முயற்சியாக இவர் ஆரம்பித்த Rose Brand Sweet’s தொழிற்சாலை மற்றும் Ceylon Trawlers Limited என்பன என்றும் குறிப்பிடத்தக்கன. இவரால் 1970 இன் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ரொபி ஒன்றின் பெயர் ரைகர் பிராண்ட் ரொபி என்பதாகும். இந்தரொபி மஞ்சளும் கறுப்புநிறமும் இணைந்ததாளினால் சுற்றப்பட்டிருந்தது. மஞ்சள்நிற பின்ணணியில் கறுப்புநிறத்தில் புலியின் தலையும் Tiger Brand என்ற எழுத்தும் இதில் அச்சிடப்பட்டிருந்தன. இதுதவிர இவர்தலைமையில் 271 Sea Street Colombo 11 ஐ அலு வலகமாக கொண்டியங்கிய Ceylon Trawlers Limited நிறுவனமும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஸ்கால கடற்படை அதிகாரி யான E.Sanmugaratnam என்பவரின் ஆலோசனையுடன் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிறுவனத்திற்கு பொறுப்பான முகாமையாளராக சிவானந்தசுந்தரம் கடமையாற்றினார். இவர் களுடைய முதலாவது கடற்கலத்தின் பெயர் Boston Spitfire ஆகும். இது 1965 இல் இலண்டனில் கொள்வனவு செய்யப்பட்டு இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது. ஆரம்பத்தில் மீன்பிடிறோலராகவும் பின்னர் கொழும்பு தூத்துக் குடி பயணிகள் கப்பலாகவும் 1973 ஆண்டுவரை இது சேவையில் ஈடுபட்டது. 1965இல்இதில் பயிற்சியாளராக இணைந்தவரே 1984 இல் தலைவர் பிரபாகரனின் விருப்பத்திற்குஏற்ப விடுதலைப்புலிகளின் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராவார். குறிப்பிட்ட புலிப்படைபற்றி பிரபலபத்திகையாளராக திகழ்ந்த த.சபாரத்தினம் தனது ஓயாதஅலைகள் தொடரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘1965இல் தமிழரசுக்கட்சி டட்லிசெனநாயக்காவின் தேசிய அரசாங் கத்தில் சேர்ந்ததுமே புலிப்படை தானாகவே சிதைந்துவிட்டது. அதில் தீவிர பங்கு வகித்தவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கினர். அவர்களில் ஒருவரான இராசரத்தினம் சென்னைக்குப்போய் ஏழ்மையில் உழன்று காலமானார். மற் றொருவரான சிவானந்தசுந்தரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிரஆதரவா ளரானார். 1988 இல் ஈபிஆர்எல்எவ் குழு அவரை சுட்டுக்கொன்றது. மற்றவர்கள் கனடாவிற்கும் பிரிட்டனிற்கும் பிரான்சிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் புலம்பெயர்ந்தனர். கப்பல் கம்பனியொன்றை ஆரம்பித்தமை புலிப்படையினர் எடுத்த மூன்றாவது நடவடிக்கை. 1960ம் ஆண்டுகளில் கடற்றொழில் அமைச்சு மீன்பிடித்தலை ஊக்குவித்தது. புலிப்படையினரில் சிலர் சிவில்சேவை அதிகாரியின் தலைமையில் டிரோலர் ஒன்றைவாங்கினர். ஆயுதங்களை கடத்துவதே அதன் பிரதானநோக்கம் கப்பல்கம்பனி சிலகாலத்தில் தரை தட்டிவிட்டது’ சபாரத்தினம்குறிப்பிடும் சிவில்சேவை அதிகாரியே முன்சொன்ன T.இராசதுரை யாவார். புலிப்படையில் அங்கம்வகித்திருந்த மற்றவர் திரு.இராசரத்தினம் 1965 இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தின் இணைப்பொதுச் செயலா ளராக கடமையாற்றினார். தமிழரசுக்கட்சியின் தீவிரம்போதாது என கொள்கை ரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ.நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப் போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார். 1972 பெப்ரவரியில் தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றைய தலைவரான செல்வநாயகம் தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயணஏற்பாட்டிற்கு ஆவணபுரிந்த செயல் வீரர் இவராவர். 1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சி யை தொடர்ந்து தமிழ்மாணவர் பேரவையின் தலைவர் சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப் பொருளை மாணவர்பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைதுசெய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தொடர்ந்து தங்க நேர்ந்தது. தான்சார்ந்த தமிழரசுக்கட்சியினரால் கைவிடப்பட்டு குறிப்பாக தான்சார்ந்த சாவகச்சேரிதொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புலிப்படை யில் தன்னுடன் சத்தியப்பிரமாணம் எடுத்த சகஉறுப்பினரான நவரத்தினத்தின் துரோகத்தனத்தினாலும் பாராமுகத்தினாலும் இவர் மிகவும் மனம் வருந்தியிருந் தார். ஆஸ்துமா நோயினால் வருந்தியநிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்து வந்தார். ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 காலப் பகுதிகளில் சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் பெரியசோதி தங்கத்துரை நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்;து சென்னைக்கு வந்த தலைவர்பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார். தமிழ்இனம் என்ற ஒரேநோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பலரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும் மூத்த இராசரெத்தி னம் மிகுந்த வேதனைப்பட்டார். இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன்நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற் கொண்டுவந்தார். தமிழரின்படைக்கு தனியான நிறம் உடை கொண்டதான ஒரு இராணுவக்கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி போராட்டஇளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட பல இனவிடுதலை சம்பந்தமான நூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர் களிடம் கூறிவந்தார். இக்காலத்தில் குறிப்பாக 1974 ஆகஸ்டில் வேதாரணியத் திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் பெரியவர் இராசரத்தினத் துடன் பழக ஆரம்பித்தார். ஈழத்தமிழர்களின் உரிமைகள் அல்லது விடுதலை என்பதுபற்றிய தூயசிந்னையுடன் கருத்தொற்றுமை கொண்ட இருவரும் விரைவிலேயே அந்நியோன்னியமாகினர். இதனால் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தைமகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல்நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர். இக்காலத்தில் The History of Thamiraparni எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இராசரத்தினம் எழுதிவந்தார். (இவரது மறை வின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது) இந்நூலின் மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந் திகதி தான் வாசித் ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும் Notices of South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பலஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக் கண்டு தான்மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு Magesthens(மொகஸ்தனிஸ்) என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர். கிரேக்கமொழியில் இவர் எழுதிய அக்கால குறிப்பு களில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார். இதனையே பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் முதலாவது இலக்கிய(தமிழ்) சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலில் காணப்படுகின்றது. மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத்தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ.இராச ரத்தினம் எடுத்துக்கொண்டார் எனலாம். அத்துடன் 1961இல் திருகோணமலையில் ஆவேசத்துடன் தாம் உருவாக்கிய புலிப்படை என்ற அமைப்பிலிருந்த ‘புலி’ யினையும் இணைத்து தான் உருவாக்கிய புதியஅமைப்பிற்கு தாமிரபரணி புதியபுலிகள் என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார். புலிஎன்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப்பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார். மாமனிதர் இராசரத்தினத்தின் நாட்குறிப்பு இவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார் த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால்; அழைக்கப்பட்ட போராட்ட முன்னோ டியான ‘தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபர்ணி புதியபுலிகள் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்க குறியீடு TNT என்பதேயாகும். ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு இந்தியவரலாறு இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இராசரத்தினமும் தம்பி என்றழைக்கப்பட்ட தலைவர் பிரபாகரனும் வரலாற்றிலிருந்தே தமக்கான மாற்று(இயக்க)ப் பெயர் களையும் இக்காலத்தில் தேடிக்கொண்டனர். தலைவர் தனதுபெயராக சோழ மன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் எல்லாளன் (ஈழா ளன்) என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக்கொண்டனர். இவ்வாறு இராசரத்தினத்தின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்றபெயர் விருப்பத்திற் குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் வுNவுஎன்பதாகும். மேற்படி இரண்டுபெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி TNT எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப்பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதஇயக்கத்தை 1975இல் உருவாக்கினார். தாமிரபரணி என்னும் தாயகப்பிரதேசத்தின் பெயரால் தியாகி இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரின் ஆங்கில குறியீட்டினை அவர்மனம் கோணாமல் ஆங்கிலத்திலவரும் TNT என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான்உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக் கிக்கொண்டார். TNTஎன்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். என்பதை அறிந்து மகிழ்வடைந்தநிலையில் 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார். சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்;றவேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள் சந்திக்கமறுத்திருந்தனர். எனினும் தியாக வாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’ எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர். மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழஙகிய இராசரத்தினத்தை 1991 யூன்மாதத்தில் அவருடைய சொந்தஇடமான சாவகச் சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ்ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’என பட்டமளித்து தலைவர்பிரபாகரன் பெருமைப்படுத்தினார். சென்னை வைத்தியசாலையில் அநாதையாக மரணித்த ஈழத்தின் முதலாவது மாமனிதர் ஆ.இராசரெத்தினம். மேற்படி இராசரெத்தினத்தின் மகளே 1991மே21 இல் நடைபெற்ற இராஜீவ் காந்தி கொலைவழக்கில் தற்கொலை குண்டுதாரியாக குற்றம் சாட்டப்பெற்ற தனு என நம்பப்படுகின்றது.) (தமிழ்ஈழம்:– 1923 இல் ‘தமிழர்அகம்’ என சேர்.பொன்.அருணாசலத்தால் முன்மொழி யப்பட்ட தமிழ்ஈழத்தை 1958இல் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து முதலில் முன் னெடுத்தவர் அடங்காத்தமிழர் சுந்தரலிங்கமாவார். ‘தமிழ்ஈழம் எங்கள் தேசம்’ என்ற இவரது தனிஆவர்த்தனம் சமஸ்டி கோரிய தமிழரசுக்கட்சியினரால் எள்ளிநகையாடப்பட்டு 1960 பொதுத்தேர்தலுடன் இல்லாதொழிக்கப்பட்டது. தேர்தல்காலங்களில் தமிழ்ஈழம் கோரி வீச்சாகஎழும் இவரது ஈழத்தமிழர்முண்ணணி 1970 பொதுத்தேர்தலில் காங்கேசன்துறையில் 5788 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. எனினும் 1970 களில் மாணவர்பேரவை நிறுவனரான சத்தியசீலனால் மீண்டும் தமிழ்ஈழம் உச்சரிக்கப்பட்டபோதும் அன்றுயாராலும் தமிழீழம் கண்டு கொள்ளப்படவில்லை. 1972மே22இல் இலங்கை சிங்கள பௌத்த குடியரசானதை தொடர்ந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்களைக் கடந்து சமஸ்டி கோரிய செல்வநாயகத்தால் தூசிதட்டப்பட்ட இத்தமிழீழகோசம் 1975 பெப்ரவரி 06 இல் நடந்த காங்கேசன்துறை இடைத்தேர்தலிற்காக பயன்படுத்தப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கைக்குடியரசு முகவரான வி.பொன்னம்பலத்திற்கு எதிரான அத்தேர்தலில் சுந்தரலிங் கத்தால் முன்பு எடுத்தாளப்பட்ட அதேதமிழீழம் மீண்டும் பாரியஅளவில் வெட்கம்கெட்ட தமிழரசுக்கட்சி உள்ளடங்கிய தமிழர்கூட்டணியினரால் முன்னெடுக்கப்பட்டது. அவ்இடைத் தேர்தலில் தமிழீழத்திற்கு கிடைத்த பாரியவெற்றியினை மக்களின் கருத்துக்கணிப்பாக கொண்டு 1976மே5இல் புதியதமிழ்ப்புலிகள் தமதுபெயரை தமிழீழ விடுதலைப்புலிகள் என மாற்றிக்கொண்டு அதற்காக உளமார போராடத்தொடங்கினர். 1976மே14இல் ஈழத்மிழர்களின் விடுதலைக்கு என்றபெயருடன் வட்டுக்கோட்டை தீர்மானமாக இது பண்ணாகத்தில் சந்தர்ப்ப வாதிகளால் மீண்டும் உருவாக்கப்பட்டது. 1977யூலை பொதுத்தேர்தலின் பெருவெற்றிவரை தமிழர்விடுதலைக் கூட்டணியினரால் பாராளுமன்ற கதிரைகளின் பின்னிருந்த பதவிசுகத்தினை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட இப்புனிதமான தமிழீழப்பரணி 1978இல் சிறிலங்காவின் புதிய பாராளுமன்ற திறப்புவிழாவின்பின்; அதேகூட்டணினரால் குப்பையில் தூக்கி வீசப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது) வருணகுலத்தான் 05.05.2016
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.