Search the Community
Showing results for tags 'வான்புலிகள்'.
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்… தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்… தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்… கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு…, கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன், கரும்புலி லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். நீளும் நினைவுகளாகி…. தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
- 6 replies
-
- 1
-
- வான்புலி
- கரும்புலிகள்
-
(and 5 more)
Tagged with:
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீரற்ற அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' 'மணலாலான 5- 6 அடி உயரமுள்ள மண்ணரணை அம்புக்குறி சுட்டுகிறது' 'எதிரெதிர் திசையில் அமைந்திருந்த குறுக்காப் போகும் கீல் கல்வீதிப்பாவு. இது மிகவும் சிறியதாக உள்ளதைக் காண்க' 'ஓடுபாதை மணலால் உருமறைக்கப்பட்டுள்ளதை கவனிக்குக' 2) நிவில் பகுதி வான்பொல்லம் B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான வெள்ளை மணலாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீருள்ள அகழி இருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். வெளிப்புறத்தில் ஆங்காங்கே பனங்கூடல்களும் வயல்வெளிகளும் இருந்தன. 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' 'வெள்ளை மணலாலான மண்ணரண் கீல் கல்வீதிப்பாவு 3) அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m 4) கேப்பாப்புலவு வான்பொல்லம் முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. மொத்த நீளம்: 2.5km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன. பறவாடி: பறவாடி உட்புறம்: பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்: படிமப்புரவு: dossier on ltte weapons. pdf மேலுள்ள 4 வான்பொல்லங்கள் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. 5) அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. மொத்த நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு. ஆனால் தொடர் சிங்கள வான்படையின் குண்டுவீச்சால் இது புதுபிக்கப்பட்டுக்கொண்டே வரப்பட்டது. இது சிங்களவரை ஏமாற்றுவதற்காக கட்டப்பட்டதாகும். "2003-2004 ஆண்டு கால செய்மதிப் படம்" "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." 6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m 7) பிரபந்தனாறு வான்பொல்லம் மொத்த நீளம்: 2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இது நாற்சதுர வடிவிலான மண்ணாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அம்மண்ணரணில் ஆங்காங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். ஓடுபாதையிலிருந்து மண்ணரண் வரை புற்றரையும் அதற்கு வெளியே சூழ்ந்ததுவாக அடவியும் இருந்தது. மேலுள்ள எஞ்சிய 3 வான்பொல்லங்களும் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. பிற்சேர்க்கை (08/12/2020): மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன.. 8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது. கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m 9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம் இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன. --> முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர் "வானூர்திகள்... ஓட்டி வந்த வீரர்களைப் பார்த்துப் பார்த்து... விசிலடித்து... ஆடுகிறோம்... மாலைகளைக் கழுத்தில் போட்டு" --குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து. --------------------------------------------- உசாத்துணை: YouTube Sri Lanka troops seize rebel airstrip, refugees flee Troops capture LTTE's last airstrip in Mullaitivu Iranamadu Airport - Wikipedia https://idsa.in/TWIR/9_5_2008_SriLanka Strip ( படிமப்புரவு(Image courtesy) YouTube நிகழ்படம்(video) YouTube eelam.tv ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 3 replies
-
- 9
-
- தமிழீழ வானூர்தி நிலையம்
- வான்புலிகள்
-
(and 20 more)
Tagged with:
- தமிழீழ வானூர்தி நிலையம்
- வான்புலிகள்
- வான்புலிகளின் வானுர்தி நிலையம்
- வான்புலிகளின் வான்பொல்லங்கள்
- வான்புலி
- air tigers ltte
- வான்பொல்லங்கள்
- eelam airports
- tamil tigers airstripe
- air tigers
- ltte air stripe
- tamil tigers airport
- ltte airport
- விடுதலைக்கு முன்னான தமிழீழ ஓடுபாதைகள்
- tamil eelam airports
- வானூர்தி நிலையம்
- ஓடுபாதை
- தமிழீழ ஓடுபாதை
- வான்புலி ஓடுபாதை
- வான்பொல்லம்
- ltte airstripe
- ltte airstrips
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" வான்புலிகளின் இலச்சினை | LTTE Sky Tigers logo:- 'படிமப்புரவு(Image courtessy): eelamview' இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 56 replies
-
- 1
-
- sky tigers
- தமிழ் வான்படை
-
(and 68 more)
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
எழுத்தாளர்: அறியில்லை வான்கரும்புலிகளான ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை உலகத்துக்கு தெரியப்படுத்திய பாரிய கடமை & பொறுப்பு கடற்கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா மற்றும் கௌரியையே சாரும். மூருவருடனும் நீண்ட நாட்கள் பழகி இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கவலை அதிகம் தான். இதில் கௌரி என் நண்பனும் கூட. இப்போதும் இந்த கதாபாத்திரத்தின் நாயகன் இருக்கிறான். 10.03.2003 அன்று கடற்புலிகளின் கப்பல் முல்லைதீவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த தகவல் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு கொடுத்த சாயுரா என்ற பாரிய கப்பலை புலிகளின் கப்பல் நோக்கி செலுத்தப்படுகிறது. புலிகளின் ராடாரில் படவில்லை. ஒரு மீன்பிடி வள்ளத்தில் கௌரி எமது கப்பலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான் கௌரி. கடற்புலிகளின் கப்பல் கெளரியை எதிர்பார்த்து நின்ற போது அங்கே வந்தது, சாயுரா. புலிகளின் கப்பலை வழி மறித்தது. இதை தெரிவிக்க ரஞ்சன் அண்ணா கெளரியை தொடர்பு கொண்ட போது, கௌரி எமது கப்பலை நோக்கி வர இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று முடிவெடுக்க, அனைத்தையும் உணர்ந்த ரஞ்சன் அண்ணா உடனே கௌரி வள்ளத்தை நோக்கி கப்பலை செலுத்துகிறார். சாயுரா பின்தொடர்ந்து செல்கிறது. சாயுரா கடற்புலிகளின் கப்பலை தாக்கவில்லை. ஆனால் சாயுராவின் கண்ணில் கௌரியின் மீன்பிடி வள்ளம் தெரியவில்லை. ரஞ்சன் அண்ணா உடனடியாக வான்கரும்புலி ரூபன்-சிரித்திரன் ஆகியோரை கெளரியின் வள்ளத்தில் இறக்கி விடுகிறார். உடனே கப்பலை திருப்புகிறார் ரஞ்சன் அண்ணா. கப்பலும் மீன்பிடி வள்ளமும் நிக்காமல் ஓடியபடி அணைத்து தான் ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை ஏற்றினார்கள். கடினமான பணி. கௌரி திருகோணமலை சல்லி நோக்கி மீன்பிடி வள்ளத்தை செலுத்துகிறான். கப்பலை குறி வைத்து தாக்குகிறது சாயுரா. சூசை அண்ணா கண்காணிப்பு குழுவை தொடர்பு கொண்டு எமது வணிக கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட விபரத்தை அறிவிக்கிறார். கண்ணாணிப்புக் குழு சொன்னது, கடற்படையிடம் போகும் படியும் அவர்கள் பரிசோதனை செய்து விட்டு விடுவார்கள் என்றும். அதிர்ந்த சூசை அண்ணா ரஞ்சன் அண்ணாவை தொடர்பு கொண்டு சொன்ன போது ரஞ்சன் அண்ணா சிரித்தார். சாயுராவின் தாக்குதல் அதிகரிக்கின்றது. கப்பல் முழுவதும் எரிபொருள் ஊற்றப்படுகிறது. வெடிமருந்தை வெடிக்க வைக்கப்படுகிறது. கப்பல் கடலில் மூழ்கின்றது. கடலினில் காவியம் நடைபெறுகிறது. மாண்டு போன அத்தனை பெரும் என் ஆருயிர் நண்பர்கள்! ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் திருகோணமலை சல்லி கடற்கரைக்கு வந்து சேருகிறார்கள். அங்கு இருந்து வன்னிக்கு வந்தார்கள். ரூபன்-சிரித்திரன் அண்ணாவை பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்த அத்தனை பேரும் காவியமாகி விட்டார்கள். கௌரி மட்டுமே சாட்சியாக உள்ளான். அதன் பின் ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் வான்கரும்புலியாக வெடிக்கிறார்கள். வீரவணக்கம் ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள். இருவருடனும் இரண்டு மாதங்கள் நன்கு பழகியவன் நான். இந்து மாகடலில் இருந்து செங்கடல் சென்று வந்துள்ளோம். கப்பலில் மாண்டு போன அனைவரும் என் ஆருயிர் நண்பர்கள். இவர்களை நெஞ்சில் நிறுத்த இதயம் கனக்கிறது. வீரவணக்கம் இவர்களை விட்டு கரைக்கு வந்து 3 நாட்களின் பின் என்னையே கௌரி தான் கொண்டு வந்தான். நன்றி கௌரி
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன் முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத் திரட்டி காலக்கோட்டின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன். முதன் முதலாக சிறிலங்கா வான்படையின் அனுமதியின்றி சமர்ப் பரப்பில் அடையாளம் தெரியாத கன்னைக்குச் சொந்தமான ஓர் மரும வானூர்தி பறந்தது பதிவாகியிருப்பது 1994ம் ஆண்டிலே ஆகும். பலாலி கூட்டுப்படைத்தளத்திற்கு மேலாக வடக்கு நோக்கி சிறிலங்கா படைத்துறையின் அனுமதியின்றி ஒரு மரும வானூர்தி பறந்து சென்றதாகவும் அந்த வானூர்தியை பலாலி வான்கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிங்கள அதிகாரிகள் தொடர்புகொள்வதற்காக குறிகைகள் (ஸிக்னல்) அனுப்பி முயற்சித்த போது வானூர்தியிலிருந்து பகர குறிகைகள் எதுவும் அனுப்பாததால் அவ் வானூர்தி குறித்து உசாவல் செய்யுமாறு வான்படை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாக 'திவயின' என்ற சிங்கள இனவாத நாளேடு செய்தி வெளியிட்டிருந்ததாக 'உதயன்' நாளேடு 19/09/1994 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உசாவலின் முடிவுகள் எதுவும் வெளியிடப்பட்டதாக என்னால் அறியமுடியவில்லை. ஈழத்தீவை விட்டு 'இந்திய அமைதி காக்கும் படை' என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர், ஈழப்போர் வரலாற்றில், சிங்கள அரசின் அனுமதியின்றி சிங்கள வான்படை தவிர்ந்த வானூர்தி ஒன்று சமர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பரப்பின் மேல் பறந்து சென்ற முதன் நிகழ்வு இதுவேயாகும். இது இவ்வாறு இருக்க, இச்செய்தி வெளியாகி சில மாதங்களுக்குப் பின்னர், அதாவது 1994 நவம்பர் 21ம் திகதி, உதயன் நாளேடு பூரிப்புச் செய்தியொன்றை தமிழீழ மக்களுக்கு வெளியிட்டது. வான்புலிகள் என்ற படைத்துறைக் கிளையை தொடங்கப் புலிகள் ஆயத்தமாகிவிட்டனர் என்றும் சுமார் 20 வானோடிகள் மேற்கத்திய நாடுகளில் அடிபாட்டு வானூர்திகளை ஓட்டப் பயிற்சி எடுத்துவிட்டதோடு புலிகள் ஐந்து வானூர்திகளை தருவித்துள்ளனர் அல்லது அது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளது என்று சிங்களச் சார்பு நாளேடான 'சன்டே ஐலண்ட்' செய்தி வெளியிட்டிருக்கிறது என்பதுவே அதுவாகும். இதுவே முதன் முதலாக பெரும்பாலான தமிழீழ மக்கள் "வான்புலிகள்" என்ற பிடாரச்சொல்லைக் கேள்விப்பட்ட தருணம். இதிலிருந்து நான் ஊகிப்பது என்னவெனில், "வான்புலிகள்" என்ற கிளையானது புலிப் போராளிகள் சிலரது நடுவணில் தவிபு ஆல் அலுவல்சாராக நவம்பர் மாத மட்டில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொதுமக்கள் நடுவணிலன்று, என்பதாகும். அடுத்தடுத்த இரு மறுமொழிப்பெட்டிகளுக்கும் புலிகளின் அலுவல்சாரல்லாத வான்பறப்புகள் தொடர்பான காலக்கோட்டினைக் காணலாம். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் *****
- 2 replies
-
- வான்புலிகள்
- வானூர்திகள்
- (and 9 more)
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே. இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே! . புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (உறுதிப்படுத்தப்பட்டவை): 11 கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2 தற்சுழல் பறனை(Gyroplane) - 2 சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 → செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 2 . புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (பூதியல் சான்றுகளோடு உறுதிப்படுத்தப்பட்டவை): 7 கொச்சு இலகு கீழிதைகள் (Micro light gliders) - 1 தற்சுழல் பறனை(Gyroplane) - 2 செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (Radio controlled model aircraft)- 2 . கடலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கருதப்படும் புலிகளின் வகை அறியில்லா வானூர்திகள் - 3 நான்காம் ஈழப்போரில், 7 ஒக்டோபர் 2007 அன்று சிங்கள சிறீலங்காக் கடற்படையால் தாட்டப்பட்ட(sunk) விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான படையேற்பாடு(logistics) கப்பலான எம்.வி.மற்சுசிமா இல் இலகு வானூர்திகள் இருந்த உளவுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படையின் முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவை எதற்கும் பூதியல்(Physical) ஆதாரங்கள் இல்லை. அனைத்தும் வாய்மொழியே! →ஆதாரம்:Rohan_Gunarathne.pd (கப்பலுக்குள் இருந்ததோ இல்லையோ... எது எப்படி பார்த்தாலும் வான்கரும்புலி வானூர்தியாக போனவற்றைத் தவிர மேலும் மூன்று இருந்துள்ளது.) புலிகளால் வானூர்திக்கென ஆக்கப்பட்ட மாதிரி விதமறியா கொச்சு இலகு வானூர்தி மாதிரி (unknown type micro light aircraft's model )- 1 87 களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்திகள் - 2 புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை: 87 இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்.. 1) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி உருவாக்கியவர்: லெப். கேணல் அப்பையா இருப்பு எண்ணிகை - 2 → புலிகளின் முதல் விமானம் -(இக்கட்டுரையானது புலிகள் காலத்தில் எழுதப்பட்டமையால் நம்பத் தகுந்தது . எனவே வாசித்துப் பாருங்கள்.. ) இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தி. இதே போன்று மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'படிமப்புரவு: ஈழ ஆதரவு வலைத்தளம் ஒன்றில் இருந்து' இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி போன்றுள்ளது. இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும் (indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.. இது கொழுவியின் தகவல்களை உறுதிப்படுத்துவதுடன் இரண்டும் ஒன்றிசைவாகிறதல்லவா. இது என் துணிபு! கொச்சு இலகு கீழிதை (micro light glider) : →கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்) இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இருப்பு எண்ணிகை - 2 → கீழிதை - 1 'இடது புறத்தில் நிற்பவர் கேணல் சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர் என அறியப்படுபவர் ஆவார்..' 'கீழிதையின் உடல்' 'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி' 'கீழிதையின் பக்கவாடு. ' → கீழிதை - 2 இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane) இருப்பு எண்ணிகை - 2 1) பக்கப்பக்க இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை 'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்' 'மூலைப் பார்வை' 'முன்பக்க பார்வை' 'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.' மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப்.கேணல் முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும். அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தற்சுழல் பறனையின் வால்பகுதி' 'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி' முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை 'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்' 'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்' புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine) 'பின்பக்கத் தோற்றம்' 'பக்க வாட்டுத் தோற்றம்' சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் மூன்றும் இருந்தன. இந்த ஐந்து வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. ஆனால் புலத்தில் இருந்த மூன்றிற்குமான பூதியல் ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்' 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்' (விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run) 'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)' (மானுறுத்தம் - manufacture) 'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை' இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது. குண்டின் நீளம் : 114cm-127cm குண்டின் விட்டம்: 10-12" குண்டின் மொத்த எடை : 66 கி.கி. வெடிபொருள் நிறை : 55 கி.கி, வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் . 'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய் | தீக்குடுக்கையின் முன்பகுதி ' 'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்' 'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.' 'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் ஆற்றப்படாத குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.' 'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்' "வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது" → கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி லெப்.கேணல் சிரித்திரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார். → அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும். மூன்றாவது வானூர்தியிற்கான பாகங்கள் தமிழீழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் சிறீலங்கா படையினரால் சிலினிற்கான உதிரிப்பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும். இதோ உங்களின் பார்வைக்காக… 'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது' 'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது' இந்த பிலிறுந்தி உதிரிப் பாகமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் உதிரிப் பாகமாகவும் இருந்திருக்கலாம். 'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட முன்பக்க ஒற்றைச் சில்லு' வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft ) இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு. → (1) இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக) அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller) செசுனா N739RF (Cessna N739RF) இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும். உடல் பகுதிகள் உதிரிகளாக: அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):- அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு: மாதிரி கொச்சு இலகுவானூர்தி (Model micro light aircraft) இவ்வானூர்தி மாதிரி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன. 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் மையப்பகுதி' 'வானூர்தி மாதிரிப்படம்' 'வானூர்தி மாதிரிப்படம்' மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம். புலிகளின் வான்படை அணியங்கள்(accessories) தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):- 'பயிற்சி பாவனையாக்கி (training simulator)' 'பறப்பு பாவனையாக்கி (flying simulator)' 'ஓடுதள மின்சூழ்கள்' 'நீல நிறத்தில் தெரிவது சிறிலங்கா படைத்துறையால் செய்து வைக்கப்பட்ட போலி பறனை உடுப்பு ஆகும். இது புலிகளினது அல்ல.' 'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்' 'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.' சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்: 2 முதன்மைச் சில்லுகள்: உசாத்துணை: Air Tigers of LTTE Full Documentary with Video (Air Tigers of LTTE Full Documentary with Video) Dossier on ltte- pdf (read airforce section) YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12 http://dailymotion.om (http://dailymotion.om) (/video/x6x8v3z) Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna Sri Lanka rebels say suicide air raids successful) Zlín Z-143 – Wikipedia (Zlín Z-143 – Wikipedia) (Navy Recovered a remote controlled air craft from Sea Tiger Boat (Update)) (Partially burnt 2 LTTE aircraft found in Puthukkudiyirippu- Mullaittivu) Hamilton, Dwight. "Terror Threat: International and Homegrown terrorists and their threat to Canada", 2007 ARF, PNP, RTF, RTR - What Does It All Mean? Seagull Cessna - Kits Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf http://eelabarathi.blogspot.com/2006/07/blog-post_115435098311053391.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-zlin-z-143-propeller-aircraft-tires-flight-simulat_nNjn4vd8q28u2rJ.html படிமப்புரவு: Double vie de Prabhakaran Album n°5 EelamView Dossier on ltte- pdf ruupabaahini TV YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12) http://dailymotion.om (/video/x6x8v3z) Sri Lanka Guardian eelamtv.com தொகுப்பு & வெளியீடு நன்னிச்சோழன்
- 12 replies
-
- 3
-
- புலிகளின் விமானங்கள்
- தமிழர்
-
(and 53 more)
Tagged with:
- புலிகளின் விமானங்கள்
- தமிழர்
- வான்புலிகள் செசுனா - 152
- வான்படை
- srilankan airunit
- வான்பிரிவு
- tamileelam airforce
- ltte helicopters
- புலிகளின் வான்படை
- வான்புலிகள் தாக்குதல்
- ltte light aircrafts
- ltte planes
- சீறிலங்கா
- புலிகளின் விமானப்படை
- விமானம்
- rebel airforce
- tamil eelam airforce
- tamil airforce
- தமிழீழ செசுனா
- வான்புலிகள் செசுனா - 172
- ltte cessna
- rebel airunit
- சிறீலங்கா வானேபடை
- செசுனா
- ஈழ வான்படை
- tamil tiger airwing
- ltte improvised bombers
- தமிழர் வானூர்திகள்
- eelam airforce
- ltte gyroplane
- ltte zlin143
- rebel airwing
- தமிழரின் வான்படை
- eelam cessna
- குண்டுதாரி
- ltte aircrafts
- விமானங்கள்
- ltte cessna 172
- தமிழரின் விமானங்கள்
- தமிழ் வான்படை
- புலிகளின் வான்பிரிவு
- வான்புலி ஆய்வுக் கட்டுரை
- தமிழீழ விமானப்படை
- தமிழீழ வான்படை
- ltte cessna 152
- வான்புலிகள்
- ltte choppers
- சிலின் 143
- வானூர்திகள்
- ஈழ விமானப்படை
- tamil sky army
- சிறிலங்கா வான்படை
- eelam aircrafts
- tami lairforce
- தமிழரின் வானுர்திகள்
-
வான்புலிகளின் வான்கலங்கள்
நன்னிச் சோழன் posted a blog entry in ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான வானூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.-
- 1
-
- வான்புலிகளின் வானூர்திகள்
- வான்புலி வான்கலன்
-
(and 2 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- வான்புலிகள்
- sky tigers
-
(and 1 more)
Tagged with: