Search the Community
Showing results for tags 'விடுதலைப்புலிகள்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 1141 replies
-
- 7
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
-
(and 50 more)
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கரந்தடிப் போர்முறைக் கால (1990 மார்ச் வரை) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) என அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். -------------------------------- "காகங்களே! காகங்களே! காட்டுக்குப் போவீங்களா? காட்டுப் போயெங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்களா? - இதை காதில் உரைப்பீர்களா?" -------------------------------- "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 365 replies
-
- ltte
- guerrilla
-
(and 73 more)
Tagged with:
- ltte
- guerrilla
- guerrillas
- ltte guerrilla
- ltte guerrillas
- eelam guerrillas
- tamil guerrillas
- tamil tiger rebels
- tamil rebels
- eelam rebels
- ltt
- tamil eelam images
- liberation tigers of tamil eelam
- tamil ltte
- eelam tamils
- tamil eelam liberation struggle
- ltte pirabhakaran
- guerrilla warefare eelam
- guerrilla warefare
- eelam war
- tamil eelam liberation
- eelam guerrilla
- eelam images
- ltte images
- tamil
- tamils
- tamil eelam tamils
- eelam history
- tamil eelam history
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் கெரிலா
- கெரிலாக்காள்
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- ஈழ கெரில்லாக்கள்
- ஈழ கெரில்லா
- tamil guerilla
- tamil eelam
- tamil liberation army
- sri lankan guerillas
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
- புலிகள்
- தமிழ் போராளிகள்
- போராளிகள்
- போராளி
- புலிவீரர்கள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழ்ப் புலிகள்
- தமிழ் புலிகள்
- புலி
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரில்லாப்படை
- கெரில்லாப் படை
- கெரில்லாக்கள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடி போராளிகள்
- tamil tigers images
- tamil images
- tamils army
- tamil eelam army
- tamil warriors
- sri lankan army
- tamil military
- tamil eelam military
- eelam military
- tamils military
- liberation tigers of tamileelam
- tamil tigers
- tamil new tigers
- விடுதலைப்புலிகள்
-
நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை. புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade வரலாற்றில் மறைபட்டது! எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற ஒரு திரைப்பிடிப்பும் தெளிவாகத் தெரியாத அதேநேரம் சிதைந்த நிலையிலான படிமத்தையே நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 'இதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 50 replies
-
- tamil eelam artillery
- ஆட்லறி
-
(and 42 more)
Tagged with:
- tamil eelam artillery
- ஆட்லறி
- விடுதலைப்புலிகள்
- புலிகள் ஆட்லறி
- புலிகளின் சேணேவிகள்
- புலிகளின் தெறோச்சி
- தெறோச்சி
- விடுதலைப் புலிகளின்
- eelam artillery
- tamil eelam howitzer
- கௌவிட்சர்
- sri lanka artillery
- tamil tigers
- புலிகளின் கௌவிட்சர்
- ltte howitzer
- புலிகளின் ஆட்டிலறி
- ltte
- தமிழீழம்
- புலிகளின் சேணேவி
- புலிகளின் ஆட்லெறி
- புலிகளின் ஆட்டிலெறி
- நீண்ட தூர வீச்சு
- புலிகளின் ஆட்லறிகள்
- விடுதலைப் புலிகளின் சேணேவிகள்
- ஆட்லறிகள்
- புலிகளின் ஆட்லறி
- ltte artillery
- srilankan artillery
- long range weapons ltte
- விடுதலைப் புலிகள்
- புலிகள்
- ஆட்டிலறிகள்
- ஆட்டிலறி
- kittu artillery brigade
- johnson artillery brigade
- tamil artillery
- liberation tigers of tamil eelam
- tamil tigers images
- ltte images
- tamil eelam army
- tamil howitzer
- eelam howitzer
- சேணேவிகள்
- சேணேவி
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "இதுவரை ஈழத்தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது! நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது! இனிமேல் அழுதிட விழியில்லை - படும் இழிவுகள் சொல்லிட மொழியில்லை! தனியே பிரிந்திட விடவில்லை - அட தமிழருக் கானதைத் தரவில்லை!" --> "விடுதலை எவரும் தருவதுமில்லை" பாடலிலிருந்து... "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 649 replies
-
- 1
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
-
(and 27 more)
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இளம் பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.} "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 220 replies
-
- 2
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
-
(and 26 more)
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்புத் தரையிறக்கம் 'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் வீரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்கள். இப்படிமமானது ஈழத்தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க படிமமாகும்.' முன்னுரை "குடாரப்பு புல்லாவெளி கரைகளிலே சென்று குதித்த புலிகளின் கதைகேளும்!" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் 'ஆனையிறவுத் தளம்' என்ற போரிலக்கியப் பாடலிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகவும், ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காத்திரமான அடித்தளம் அமைத்துக்கொடுத்த ஒரு தரையிறக்கமாகவும் திகழ்ந்தது தான் குடாரப்புத் தரையிறக்கம் ஆகும். இதுதான் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் தொடக்கம் ஆகும். இந்நிகழ்வானது வட தமிழீழத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு எ மருதங்கேணிப் பகுதியின் நாகர்கோவில் தெற்கு ஊர்நிலதாரி பிரிவிற்குட்பட்ட 'குடாரப்பு' சிற்றூரின் தெற்கிலும், செம்பியன்பற்று வடக்கு ஊர்நிலதாரிப் பிரிவிற்குட்பட்ட 'மாமுனை' சிற்றூரின் வடக்கிலுமாக இரண்டு சிற்றூர்களின் கடற்கரையிலும் 26/3/2000 ஆம் ஆண்டு இரவு 8:45 மணிக்கு முதலாவது தரையிறக்கம் நடந்தேறியது. இவையே மேற்கொண்டு நடைபெறப்போகும் தாக்குதல்களின் உவர்க்கத்தலையாக பயன்படுத்தப்பட்டன. புலிகளின் போரியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் (மண்டைதீவில், புல்லாவெளியில், கிழக்கரியாலையில்-அறுகுவெளியில்) பின்னருமாக (அல்லைப்பிட்டியில், எருக்கலம்பிட்டியில், சிறுத்தீவில், நெடுந்தீவில், அளம்பிலில், சாளையில், வட்டுவாகலில்) பல்வேறு தரையிறக்கங்களை அவர்கள் செய்திருந்தாலும் அனைத்தைக் காட்டிலும் பெரியதானதும் சிறப்புடையதானதுமாக விளங்குவது இதுவேயாகும். இத்தரையிறக்கத்தினை தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் 1200 தரைப்புலிகளை 11கிமீ காவிச் சென்று சிங்களப் பகைவனின் காவலரண்களுக்குப் பின்னால் இருந்த குடாரப்பு-மாமுனை சிற்றூரில் தரையிறக்கினர். பின்னால் வரப்போகும் போராளிகளின் வெற்றிக்கு வித்திடும் விதமாக முன்சென்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணியினர் 26 ஆம் திகதி இரவு 7 மணி சொச்சத்திற்குத் தரையிறக்கப்பட்டனர். பின்னர் மேற்கொண்டு ஏனைய போராளிகளும் இரவு 8:45 முதற்கொண்டு தரையிறக்கப்பட்டனர். இத்தரையிறக்கமானது அடுத்த நாள் காலை 10மணிவரை நீடித்தது. இப்பேர்பட்ட வரலாற்று மாட்சிமைமிக்க இத்தரையிறக்கமானது ஈழத்து வரலாற்று ஆசிரியர்களால் இரண்டாம் உலகப்போரின்போது செருமனியின் நோர்மண்டியில் நேசநாட்டுக் கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதாகும். முதற் தரையிறக்கத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 14 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். அப்புலிவீரர்களது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலேயே விதைக்கப்பட்டதோடு பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் பரம்பப்பட்டு கைப்பற்றப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் இத்தரையிறக்கம் தொடர்பான நினைவுக்கல்லொன்று இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் (நோய்ச்சாவிற்குப் பின் பிரிகேடியராக தரநிலை உயர்த்தப்பட்டார்) அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது. அந்நினைவுக்கல்லானது பின்னாளில் சிங்கள வல்வளைப்புப் படைகளால் இடித்தழிக்கப்பட்டது. குடாரப்புத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சிக் கிழக்கிற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதாவது அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தில் இச்செம்பியன்பற்றுப் பகுதியில் சோழப் பேரரசின் படைகள் தரையிறங்கியதாக குறிப்புகள் உள்ளதாக கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில்தான் மீண்டும் தமிழர் சேனை மற்றுமொரு தரையிறக்கத்தினை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாவணக்கட்டில் இத்தரையிறக்கம் தொடர்பான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். அதாவது இத்தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தரையிறங்கியோருக்கான தரைவழி வழங்கல் பாதை திறக்கப்பட்ட 29/3/2000 வரையிலான 4 நாட்களில்(26,27,28,29) வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடந்தவை தொடர்பான தகவல்கள் மட்டுமே இதனுள் உள்ளது. இத்தாவில் பெட்டிச்சமர் முதல் ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழ்ந்தது வரையிலான ஆனையிறவுச் சமர் தொடர்பான ஏனைய அனைத்துத் தகவல்களும் பிறிதொரு ஆவணக் கட்டில் விரிவாக வழங்கப்படும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன். மேலும், இவ்வாவணக்கட்டானது எதிர்வரப்போகும் ஒரு ஆவணக்கட்டின் ஓர் உறுப்பு என்பதையும் முன்கூட்டியே அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக பாதுகாக்கும் பொருட்டு இதனுள் நான் எழுதப் போகும் தகவல்கள் யாவும் - படைத்துறையின் படைக்கலன்கள் - எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். Artillery - சேணேவி Howitzer - தெறோச்சி Mortar - கணையெக்கி Tank - தகரி Garrison - தானைவைப்பு ******
- 24 replies
-
- unceasing waves - 3 landing
- kudaarappu landing
-
(and 38 more)
Tagged with:
- unceasing waves - 3 landing
- kudaarappu landing
- புலிகள் தரையிறக்கம்
- ltte landing
- kudarapu landing
- unceasing waves three
- battle in 2000
- தமிழர் தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- ஆனையிறவு
- ஆனையிறவு தரையிறக்கம்
- ஈழத் தரையிறக்கம்
- ooyaatha alaikal - 3
- குடாரப்பு தரையிறக்கம்
- elephantpass landing
- ஓயாத அலைகள் மூன்று
- குடாரப்பு
- eelam landing
- kudaarapu landing
- tamil tigers landing
- aanaiyiravu battle
- eelam battle
- kudarappu landing
- தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- அலைகள்
- அலைகள் 3
- ஓயாத அலைகள்
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephant pass ltte
- போர்
- சமர்
- மோதல்
- ஈழப்போர்
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- தமிழீழம்
- புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை (warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்…/\… தோழர்களே! கடந்த 15 நாட்களாய் வலைத்தளங்கள் முழுவதும் துளாவியாய்ந்து ஒருவழியாய் இந்த ஆய்வு விடையினை முடித்து விட்டேன்.. வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலம் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..இதில் நாம் ஈழத்தீவில் வாழும் தமிழர்களுக்கென்று தனிநாடு (தமிழீழம்) கேட்டுப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் (தமிழீழக் கடற்படை என்று அவர்களால் குறிக்கப்பட்டது) போரில் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.. கடற்புலிகளின் மொத்த எண்ணிக்கை: 500 - 1000 2003/10 ஆம் அண்டு வரை வீரச்சாவடைந்தோர் - 1066 பேர் இவர்களால் கடற்சமர்களின் போது ஆடப் பயன்படுத்தப்பட்ட முக்கிய கடற்கலங்கள்: வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகு - 25 குமுதன் வகுப்புப் படகு - 2 வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டைப் படகு - 4 (இங்கிலாந்தில் கட்டப்பட்டது) குருவி, சுப்பர் சொனிக் வகுப்புச் சண்டைப் படகு - 5-10/ஒவ்வொன்றும் திரிக்கா, சகடை வகுப்பு வழங்கல் படகு - 3-5 வெள்ளை, மிராஜ் வகுப்பு வழங்கல் படகு - 5-10/ஒவ்வொன்றும் வின்னர், சூடை வகுப்புச் சண்டைப் படகு - 5-10/ஒவ்வொன்றும் பயனுடைமை தரையிறக்கக் கலம் (சிறியது) - 1 (ஆகக் குறைந்தது) பாலக் கலம் (பெரியது) - 8 (ஆகக் குறைந்தது) சேணேவிகளை (Artillery) கொண்டுவந்து இறக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கலம் - 1 (ஆகக் குறைந்தது) தாங்கி வகைக் கலம் - 2-4 உப்பயானம் (Inflatable boat) - 10+ கட்டைப்படகு (Dinghy) - 50+ தொலையியக்கி கட்டுப்படுத்தி படகு (Remote control boat) - 1 (படம் கிடைக்கப்பெறவில்லை) K-71 வகுப்பு படகு - 1 அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகை சண்டைப் படகு - 1 தாரைச்-சறுக்கு (Jetski) - 2 Water Scooter - 2 புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோராக்களைப் (mk-III) போல அதிவேகமாக கடலில் ஓடின... ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன.. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC , Garmin & Ray Marine ஆகிய கதுவீகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களைச் சூட்டியிருந்தனர்.. அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன.. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, தாழ் தோற்றுவக் கலம்(LPV) வகை: ஊடுருவி- 200G-01 அரை நீர்மூழ்கி வகை: சதீஸ், கோகுலன்-2, கோகுலன்-24, கோகுலன்-45 தாங்கி வகை: பழனி மிராஜ் வகுப்புப் படகு: ராகினி, சித்திரா, இலங்கேஸ்வரன், ###ரசி, செங்கொடி வெள்ளை வகுப்புப் படகு கொலின்ஸ், வினோத், தீபன், டீசல், மகேஸ்வரி குருவி வகுப்புப் படகு (சண்டைப்படகு): ஜீவன் 006, 004 நளன், ஜெயந்தன் சுப்பர் சொனி வகுப்புப் படகு: ஜெயந்தன், சிதம்பரம் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு: (இங்கிலாந்தில் கட்டப்பட்டது) நீ-004, பாமா சூடை வகுப்புப் படகு: சுதர்சன், மது, கருவிழி, ரகுவப்பா, மயூரன், தேன்மொழி, கதிரொளி சகடை வகுப்புப் படகு: செங்கண்ணன், நெடுமாறன் வின்னர் வகுப்புப் படகு: அன்புமாறன், ஓவியா வகுப்புப் பெயர் அறியா கலத்தின் பெயர் : பரணி இந்தப் பாடல் கடற்புலிகள் படகு தள்ளும் போது பாடும் 'ஏலேலோ' மாதிரியான ஓர் பாடல்.. இப்பாடல் அவர்களின் ஓர் திரைப்படத்தில்(கடலோரக் காற்று) இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதை திரைப்படத்திற்காகப் பாடினார்களா இல்லை உண்மையிலே பாடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் கொடுக்கிறேன்.. இது உறுதிப்படுத்தப்படாத செய்தி! (கவிப்படகு வழிமறிக்க டோரா சுக்குநூறு….) கடற்புலி டோரா கரும்புலி வெடிக்கும் ..... (கவிப்) கடற்புலி மோத கரும்புலி வெடிக்கும் .... (கவிப்) கடற்புலி மோத இந்தா ஒண்டு, இந்தா ரண்டு, இந்தா மூண்டு.... ஏஏஏ… மேலும் வாசிக்க: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை புலிகள் இதனைச் சோதனைப் பதிப்பாக உருவாக்கியிருக்கிறார்கள் கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக 2)சரக்குக் காவிகளாக கலவர் = தேவைக்கேற்ப இங்கே மூன்று கடற்கலங்கள் நிற்பதைக் கவனிக்கவும். — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை மேலே நீங்கள் கண்ட கடற்கலங்களின் சிறிய வகை போல உள்ளது இக்கடற்கலம். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = பச்சை மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை எதற்காக பாவிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு வகைக் (dinghi class craft) கலம் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக, காவிகளாக, இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 50+ நீளம் = ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு அளவிலிருந்தன அகலம் = ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு அளவிலிருந்தன உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP / சில வேளைகளில் 1x40 HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts தாக்குதல் கலங்களாக…. ஆய்தம் = 1x ZPU -1/ 1x 7.62 GPMG கலவர் = 3/4 தொலைத்தொடர்பு = VHF 1) மேற்கண்ட கலத்தினில் இருப்பவர் கடற்புலி அல்ல.. இவர் சிறீலங்காக் கடற்படையின் கலவர். 2) 'கலத்தினில் கடற்புலிகள் ' 3) &4) 'கலங்களில் கடற்புலிகள் ' 5) 'மேலே தெரியும் ஆறு கலங்களும் சண்டைக் கலங்களே.. ஆறிலும் சுடுகலன் பூட்டுவதற்கான தலா ஒரு தண்டு இருந்தது. இவை சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவை ஆகும்.' 'இதில் சுடுகலன் பூட்டுவதற்கான இரண்டு தண்டுகள் இருந்தன. இது சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.' காவிகளாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் 1)ஆட்காவி 2)சரக்குகாவி 2) 'கடற்புலிகளின் நாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறீலங்கா தரைப்படையால் கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகள்' — மிராஜ் வகுப்புக் கலம் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. ஒரே சமயத்தில் நாற்பது பேரை அவர்களுக்கான படைக்கலன்களுடன் ஏற்றவல்லது. மொத்தம் 4000 கிலோகிராம் வரை இதில் பொருட்கள் ஏற்றலாம். நீளம் = அறியில்லை. ஏறக்குறைய வேவ் ரைடரின் நீளமே. அகலம்= அறியில்லை உயரம் = ~5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 30-35 kts ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் 1) 2) 3) 4) கலப்பெயர்: இலங்கேஸ்வரன் 'ஓயாத அலைகள் மூன்றின் போது' வகுப்பு II மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. ஆனால் இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. எனவே, இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட படகாகும். இதே போல இருந்த மற்றொரு படகு இடியனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு உள்ளிணைப்பு மின்னோடிகள்(IBM) இருந்தது அறியப்பட்டுள்ளது. கலப்பெயர்: ###ரசி வகுப்பு III பார்ப்பதற்கு மிராஜ் வகையைச் சேர்ந்ததாக தோன்றினாலும் இதன் கடையால் தோற்றத்தால் அதனினின்று வேறுபடுகிறது. மிராஜைவிட பெரிதாக நல்ல உயரமாக உள்ளது. கடையாலில் இரு சுடுகலன்கள் பூட்டுவதற்கேற்ப இரு தண்டுகள் உள்ளன. கடையால் பக்கமாக மிராஜின் கடையாலைக் காட்டிலும் நீளம் குறைவாக மிகவும் கட்டையாக உள்ளது. இதன் மேற்பரப்பில் கோபுரம் போன்று ஏதோ பொருத்தப்பட்டுள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. வட்டு வரைக்குமான உயரம்: 5.6' - 5.8 மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது 'மேலே உள்ள கலத்தின் மேல் உள்ள கோபுரம் போன்றதுதான் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது' 'மேற்கண்ட கலத்தின் உட்புறத்தோற்றம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை அதிவேக தாக்குதல் கலங்களாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு (கறுப்பு& மஞ்சள்) ஆய்தம் = 14.5 mm ZPU-1, 1x 7.62mm GPMG கலவர் = 6 1) இக்கலத்தின் கலப்பெயர் பரணி ஆகும் 'அணியம், பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால்' 2) — வின்னர் வகுப்புப் படகு (Winner class boat) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவை நான்காம் ஈழப்போரில் தவிபுவினரால் கட்டப்பட்டன. போராளிகளின் இழப்பைக் கடலில் சந்திப்பதைக் குறைப்பதற்கும், வடுப்படத்தக்கத் தன்மையை குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட படகு ஆகும். நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி= 2 x 200 நிறம் = உருமறைப்பு கலவர் = 07 வேகம் = 30–35kts தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் உயரம் = ~3.4' ஆய்தம் = 01 x M2 Browning/ ZU-23 (முன்); 01 x 12.7mm (பின் ); 01 x RPG ; 01 x PK(பின்) 1) 2) 3) இக்கலத்தின் பெயர்: அன்புமாறன் ''அன்புமாறன்' கலத்தின் அடிப்பகுதி' 4) இக்கலத்தின் பெயர்: ஓவியா 'கலத்தின் கடையால்' 'கலத்தில் பின்னிருந்து முன்னோக்கிய தோற்றம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். 1) 2) — குமுதன் வகுப்புக் கலம் (Kumuthan Class craft) இது ஒரு விதமான வழங்கல் படகாகும். இதன் படம் எதுவென்று எனக்குத் தெரியவில்லை. — சூடை வகுப்புக் கலம் (Sudai Class craft) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவை புலிகளிடம் 5-10 ஆவது இருந்திருக்கலாம் என்று கணிக்கிறேன். இவற்றில் ஆகக்குறைந்தது ஒரு படகு இடியனாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. நீளம் = 35.8' அகலம் = 8.9' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு கலவர் = 6-8 வேகம் = 30-35 kts எடை = 10-kilo tonne கதுவீ =வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = ZPU-1 / 20mm ஒலிகன் (முன்), 1x GPMG(பின்), 1x12.7mm(பின்), 1xRPG 1) கலப்பெயர்: சுதர்சன் 2) 3)கலப்பெயர்: அறியில்லை 4) 5) கலப்பெயர்: மது 'கலத்தின் தோற்றம்' 6) கலப்பெயர்: ???? 'கலத்தின் கடையால்' 7) கலப்பெயர்: கருவிழி இவற்றின் ஒருசிலவற்றின் மீகாமன் இருப்பிடத்திற்கு கூடும் போடப்பட்டிருந்தது. கீழுள்ள இரு படிமங்களும் ஒரே படகினையே காட்டுகின்றன. 8 ) & 9) கலப்பெயர்கள்: அறியில்லை — சகடை வகுப்புக் கலம் (Sahadai Class craft) இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். ஆய்தம் = 1x pk (பின்), 1x 12.7/20mm(முன்) கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP/ 4 x (~100) HP 1) கலப்பெயர்: செங்கண்ணன் 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' உருமறைப்பு நிறம் பூசப்படும் முன்னர் எடுக்கப்பட்ட படம்: 2) மற்றொரு கலத்தின் பெயர் நெடுமாறன் என்பதாகும். வேவ் ரைடர் மற்றும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள்: — வோட்டர் ஜெட் சுற்றுக்காவல் படகுகள் (Water Jet patrol boat) இவை சிறீலங்காக் கடற்படையிடம் இருந்து விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். நீளம் = 13.5m அகலம் = 3m உயரம் = 1m வேகம் = 40 kts நிறம் = உருமறைப்பு தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் =1x 12.7mm(பின்), 1x 12.7/20mm(முன்) கலவர் = 8–12 கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200 HP 1)இங்கே நீங்கள் கீழே பார்க்கும் கலத்தின் பெயர் : {ச _(இது ஒரு மெய்யெழுத்து) _ _ } ஆக மொத்தம் நான்கு எழுத்துக்கள் உள்ளன. 2) கலத்தின் பெயர் நீ-004/ பாமா 3) இக்கலத்தின் பெயர் தெரியவில்லை 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' 4) இதன் முன்புறத்தில் முதன்மைச் சுடுகலம் தவிர இருபக்கவாட்டிற்கும் இரு இயந்திரச் சுடுகலன்கள்(7.62 மி.மீ) பொருத்தப்பட்டிருந்தன. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது பயனுடைமை தரையிறக்கக் கலங்கள் (LCU) ஆகும். இவ்வகைக் கலங்கள் சரக்குக்காவிக் கலங்கள் ஆகும். இக்கலங்கள் பெரிய கப்பல்களில் இருந்து ஊர்திகள் உள்ளிட்ட சரக்குகளைக் கரைக்குக் கொண்டுவரப் பயன்பட்டன நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு, பச்சை வேகம் = ??? தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = சிறியளவிலான ஆய்தங்கள் — குருவி வகுப்புக் கலம் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் ஆட்காவி அ சுற்றுக்காவல் கலங்களாகும். நீளம் = அறியில்லை அகலம்= அறியில்லை வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 25-30 kts கலவர் = சுற்றுக்காவல் - 3/4 ஆட்காவி - பணியைப் பொறுத்து ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk 1) 2) 3)&4) 5)இது இரட்டை வெளியிணைப்புப் பொறி கொண்ட படகாகும் 6) இப்படகிற்கு மீகாமன் இருக்குமிடத்திற்கு சாளரம் போல ஆடி(glass) பூட்டப்பட்டுள்ளது. — திரிக்கா வகுப்புப் படகு (Thirikka class craft): நீளம் = ??? அகலம்= ??? வெளியிணைப்பு மின்னோடி = 4 x 150 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 3 தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 32 kts ஆய்தம் = .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் இதுவும் கடற்புலிகளின் ஒருவகையான படையேற்பாட்டுக் கலம்தான். இதால் 15-20 பேர் வரை அவர்களுக்கான படையப்பொருட்களுடன் ஏற்றிச்செல்ல முடியும். 1) 'வலப்பக்கத்தில் உள்ள கடற்கலம் தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வகையைச் சேர்ந்தது ' 2) 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 5-7 ஆய்தம் = 1x.50cal (முன்) & 1xRPG(தனியாள்) வெளியிணைப்பு மின்னோடி = 2x150 HP 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 3 ஆய்தம் = 1x.50cal வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP 1) 'கடையால் பார்வை' — சுப்பர் சொனிக் வகுப்புப் படகுகள் (Super Sonic class boats) இவை புலிகளின் தாக்குதல் கலங்களாகவும் சுற்றுக்காவல் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்ட படகுகளாகும். இவற்றில் புலிகளிடம் இரு விதம் இருந்தது. நீளம்: 23 அடி(ஒரு சில படகுகளில் கதுவீ(RADAR) இருந்தது) ஆய்தம்: .50 mm (முன்) கலவர்: 3 வேகம்: 30–35kts வெளியிணைப்பு மின்னோடி: 1 x 200 HP/ 2 x 200 HP தொலைத்தொடர்பு = VHF நிறம் = உருமறைப்பு, பச்சை, நீலம், கறுப்பு இப்படகின் வரலாறு மிகவும் சுவையானது.. தன்துரையை அழிக்க தானே துணைபோன பெருமை இப்படகினைச் சேரும். அதாவது ஈழக் கடற்போரியல் வரலாற்றில் கடற்புலிகள்தான் முதற் தடவையாக 16 அடி நீளக் கலன்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். பின்னர், அதனை கைப்பற்றி கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது அதன் வலுவைப் பயன்படுத்தி புலிகளுடனான கடற்போரில் பெரும் திருப்பங்களை விளைவித்தது எனலாம்… ஆனால் இன்று சிங்கள அரசாங்கமானதோ அதனைத் தானே முதன்முதலில் புதுப்புனைந்ததாக(invent) உலகரங்கில் கூசாமல் பறைகிறது... சரி அப்படியென்றால் இது எப்படி சிங்களப் படைகளின் கைகளுக்குப் போனது? .. சுருக்கமாகப் பார்த்து விடுவோம், வாருங்கள்… https://globalecco.org/ctx-v1n1/lashkar-e-taiba?p_p_auth=KcgCT0Hx&p_p_id=101&p_p_lifecycle=0&p_p_state=maximized&p_p_mode=view&_101_struts_action=%2Fasset_publisher%2Fview_content&_101_assetEntryId=611601&_101_type=content&_101_urlTitle=learning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers&redirect=https%3A%2F%2Fglobalecco.org%2Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers%3Fp_p_id%3D3%26p_p_lifecycle%3D0%26p_p_state%3Dmaximized%26p_p_mode%3Dview%26_3_keywords%3Dsea%2Btigers%26_3_struts_action%3D%252Fsearch%252Fsearch%26_3_redirect%3D%252Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers அது ஆழிப்பேரலை வந்து முடிந்த முதலாம் ஆண்டு. சிறிலங்காப் படைகளின் சிறப்பு படகு சதளம் (special boat squadron) என்னும் சிறப்புப் பிரிவு 2006 ஆம் ஆண்டு முடியன்செலகே பந்துள திஸ்ஸநாயக்கே என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் படகு கட்டுமானத்தளம் இருந்த காட்டு இடத்துக்குள் ஆழஊடுருவி அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 16-அடி நீள படகினை தோண்டி திருகோணமலைக்கு எடுத்துச் சென்றனர்.. பின்னர் அதை மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் மீளுருவாக்கம் செய்து தற்போதைய அம்புப்படகுகள் என்னும் அதே 16 அடி நீளப் படகுகளாக வடிவமைத்தனர். https://nps.edu/documents/110773463/120130624/CTX+Vol+2+No+2.pdf/7e23b091-6c64-0081-b3b9-45e1a0f25072?t=1589935699254 இதில் இப்போது 18 அடி, 23 அடி என்று மேலும் இரண்டு புதிய விதங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இதன் இப்போதைய பெயர் செட்ரிக் சுற்றுக்காவல் கலம் ஆகும் (பழைய அதிகாரியின் பெயரால்…) ஆக மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், இங்கு யார் புதுபுனைவர்கள் என்று! சொந்தமாக உருவாக்கியதாகவே கூசாமல் பரப்புமை...!.. ம்.. மக்களே, போரில் இரிபுநாட்டின் செல்வத்தையெல்லாம் வாகைநாடு சூறையாடுவது பரவலானது.. ஆனால் இதுகால் வரை சொந்தமாக ஒன்றினையும் உருவாக்காமல் தோற்றவனிடம் இருந்து ஊரறிந்த ஒன்றினை எடுத்துவிட்டு அதைப் புதுப்னைந்தவனே நான்தான் என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் வாகைநாட்டை என்னவென்று விளிப்பது? ஆதாரங்கள் பின்வருமாறு: எனக்குக் கிடைத்த புலனங்கள் அடிப்படையில் இவையெல்லாம் 2006 ஆம் காலப்பகுதிக்கு முன்பாக எடுக்கப்பட்ட நிழற்படங்கள் என்று உறுதியளிக்கிறேன்… 1) 'கடற்புலிகளின் 23 அடி நீளக் கலம் | தவளை நடவடிக்கையின் போது' 2) 'சம்பூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படகு' 3) 'கடற்புலிகளின் 23 அடி நீளக் கலங்கள்' 4) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே கடற்புலிகளின் கலத்தினைப் பாருங்கள். கீழ்கண்டது கடற்புலிகளின் 23 அடி நீளக் கலமாகும். இக்கலம் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெருகல் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகும். படம் மட்டக்களப்பில் எடுக்கப்பட்டதாகும். 'இக்கலத்தினை நன்கு உத்துப் பாருங்கள். முன்னால் பின்னால் சுடுகலன்கள் பூட்டுவதற்கு ஏற்ற தண்டுகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன' 5) கீழ்கண்டது கடற்புலிகளின் 23 அடி நீளக் கலமாகும். இக்கலத்தின் பெயர் அதன் கூட்டில்(hul) எழுதப்பட்டுள்ளது.. ஆனால் கட்புலனாகவில்லை. இது 2000 ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும். 6) 7) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே சிங்களத்தின் படகினைப் பாருங்கள். படியெடுக்கும் இயந்திரத்தில் (photocopy machine) போட்டு எடுத்தது என்று மட்டும் நினைக்க வேண்டாம் …./\… 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு' | படிமப்புரவு : Sri Lanka "Arrow" RAB it was designed... - The Boats of Warboats ..., Facebook அடுத்து சிங்களவரின் 23 அடி நீளக் கலங்களையும் காண்போம். இந்த 16 அடி அம்புப் படகுகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 23 அடிக் அம்புக் கலங்களாகும். 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு | படிமப்புரவு: RP Defense - Overblog' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இதுவும் கடற்புலிகளிடம் இருந்த ஒரு வகைக் கலம். நீளம்: 17.3 அடி அகலம் : 3 அடி கலவர் : 1–2 வேகம்: 25–30 kts வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகையைச் சேர்ந்த கடற்புலிகளின் கலமாகும். இவ்வகையிற்குப் புலிகள் பெயர் சூட்டினார்களா என்பது தெரியவில்லை. இதன் கலக்கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. இதனால் கடலில் நல்ல வேகமாக உருவோட முடியும்.. வெளியிணைப்பு மின்னோடி = 3 x X 1. 'அணியம்' 'கடையால்' 2. இதன் கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. வெளியிணைப்பு மின்னோடி = 1 x X 'கடையால் மூலைப் பார்வை' 'அணியத்தோற்றம், இழுவையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது' 'அணியத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால் தோற்றம்' இஃது இரட்டை கூடு கொண்ட ஓர் கடற்கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X மேலே உள்ளது தான் கீழே உள்ளது:- 'பின்பகுதி' 'அணியம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது ஒற்றை இருக்கை கொண்ட , முக்கூட்டினை உடைய ஒரு சரக்குக் காவிக் கலனாகும். இதுவும் முக்கூட்டினை(tri hull) உடைய படகாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250HP வேகம் = ??? kts கலவர் = பணியைப் பொறுத்து 'பின்னிருந்த பார்வை' பக்கவாட்டுப் பார்வை — ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடற்புலிகள் பொதுமக்களின் நலன் கருதி பெரிய கடற்கலங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து மிகக்குறைந்த விலையில் மீனவர்கள் ஊடாக பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினர் . அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுததிய கடற்கலங்கள்தான் இவையாகும். மேலும் இவை வழங்கலுக்கும் பயன்படுத்தப்பட்டன. வகை: படகு 1) 2) கலப்பெயர்: அன்னை வேளாங்கண்ணி 3) 4) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'வெளிப்புறம்' 'உட்புறம்' 'வெளிப்புறம்' வகை: வள்ளம் 1)கலப்பெயர்: அந்தோணி. வகை: ??? நீளம்: 30அடி இவ்வகைக் கலங்கள் புலிகளிடம் 5 இருந்தது. 1) & 2) 3) & 4) 5) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'இக்கலத்தில் சிறீலங்கா தரைப்படை வீரன் ஒருவர் ஏறி நிற்கிறார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது சிறிலங்காக் கடற்படையிடமிருந்து கடற்சிறுத்தைகளால் 1999/02/18 கைப்பற்றப்பட்டது ஆகும். இவ்வகுப்புக் கலங்களின் வகுப்புப் பெயர் K-71 என்று சிங்கள படைத்துறை கூறுகிறது. இதன் படிமங்களை கீழே இணைத்துள்ளேன். இதன் கலப்பெயராக புலிகள் "நிமல்" என்ற பெயரினைச் சூட்டினர் இதன் அணியம் கூர் அணியமாகும். இதற்கு காப்பு அடுக்கு போடப்படவில்லை. மாறாக, இதன் தளப்பகுதியானது உட்புறமாக குடையப்பட்டது போன்று தாழ்வாக இருந்தது. குடையப்பட்ட தாழ்வுயரம் எவ்வளவு என்று அறியமுடியவில்லை. இதன் கலக்கூடு கூட வேறு வடிவுடையதாக உள்ளது. அதாவது அதன் கடைக்கால்(stern) கலக்கூட்டில் ஒரு முக்கோண வடிவ புடைப்பம் ஒன்று உள்ளது. இதன் மீகாமன் அறை வேவ் ரைடர் கலங்களின் போன்று உள்ளது. மேலும் இக்கலத்தின் இரும்புக் கம்பி வேலியானது கடைக்காலிற்கு போடப்படவில்லை. இந்த இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். இதன் முற்பகுதியில் இரண்டு DSHK(12.7 mm) பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமே இதில் தரிக்கப்பட்ட ஆய்தம் ஆகும். இதைத் கவிர வேறு ஏதேனும் சிறிய வகை வேட்டெஃகங்கள்(firearms) இருந்தனவா என்று என்னால் அறிய முடியவில்லை. நீளம்: 13.5 மீ அகலம்: 3.18 மீ வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP வேகம் : 35-40 kts கலவர் = 5–7 கதுவீ = வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 2 x 12.7 mm வகை-54 (முதன்மை) ''கடற்கரும்புலி கப்டன் வெற்றி சிங்கள வழங்கல் தொடரணி மீது மோதியிடித்த அன்று ஆனையிறவுக் களப்பில் நடந்த கடற்சமரில் அடிபடும் போது'' 'அணியத்தில் கடற்புலிகள்' 'கலத்தின் அணியம் | பின்னிருந்து முன்னோக்கிய பார்வை | கடற்கலத்தில் நின்று தாக்குதல் நடத்துபவர்கள் கடற்புலிகள். திரைப்படத்திற்காய் சிங்கள உடை அணிந்துள்ளர்கள் (உப்பில் உறைந்த உதிரங்கள் )' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். நீளம்: 80+ அடி 'மேற்கண்ட படம் என்னால் உருவாக்கப்பட்ட படம் ஆகும்' 'உட்பகுதி' படகினில் ஓர் சிறீலங்கா தரைப்படை வீரன் ஏறி நிற்கிறார்.. அவரை வைத்து கடற்கலத்தின் நீள அகலத்தினை எடை போட்டுக்கொளுங்கள், எவ்வளவு பெரியது என்று! 'வெளிப்புறம்' கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன். 'வெளிப்புறம் | கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன் ஆவார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'பின்பக்க மூலையில் இருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய சத்தார் பார்வை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை பார்ப்பதற்கு ஆட்காவிக் கடற்கலம் போன்று உள்ளது... இதே போன்று 2 கடற்கலங்கள் சிறீலங்காத் தரைப்படைகளால் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலத்தினைப் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை படகு வகையைச் சேர்ந்த புலிகளின் ஓர் கடற்கலம். கதுவீ = வட்டு வடிவம் ஆய்தம் = 2x 7.62 mm 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை... படத்தின் முன்னே தண்டு போல நிமிர்ந்து நிற்பது சுடுகலன் தாங்கி.. பின்னால் தெரிவது கதுவீ' ' 'முதலில் தெரிவது சுடுகலன் தாங்கி.. அதற்குப் பின்னால் தெரிவது கதுவீ'' 'படகில் இருந்த இரும்புச் சட்டகத்தில் மேலே உள்ளது போன்ற இரும்பு உருளைகள் பொருத்தப்பட்டிருந்தன.. பயன் தெரியவில்லை' இது ஒரு வலிப்பு படகு(rowing boat). இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல். நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women diver) உள்ளனர். — உப்பயானம் (Inflatable boat) / இறப்பர் படகு (Rubber boat) இக்கலங்களுக்கு புலிகள் எப்பெயரும் சூட்டவில்லை. இது ஆட்காவுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நீளம் : 15'- 17' கலவர் : தேவையைப் பொறுத்து வெளியிணைப்பு மின்னோடி = 1 x <150 HP நிறம் = சிவப்பு, நீலம், சாம்பல் — மிதவைகள் (floaters) இந்த உப்பயானத்தில் அமர்ந்திருப்பவர்கள் கடற்சிறுத்தைகள் (sea leopard commandos) ஆவர். இவர்களின் கையில் இருப்பது ஒரு மிதவை ஆகும். இதனுள் ஆய்தங்கள் வைக்கப்பட்டிருக்கும்.. மேலும் இதைப் பயன்படுத்தி நீரினிலும் மிதந்து நகர்வார்கள். 1) 2) கீழே நீங்கள் பச்சை நிறத்தில் பார்ப்பது ஒரு காற்று நிரப்பப்பட்ட ஒரு வகையான மிதவை.. அருகில் நின்று ஆர்.பீ.ஜி -ஆல் அடிப்பவர் ஒரு கடற்சிறுத்தை வீரர் ஆவர். இந்த காற்று நிரப்பப்பட்ட பையானது நீள்சதுர வடிவிலானது ஆகும். 3) கலத்தின் மீகாமன் அறையில் செம்மஞ்சள் நிறத்தில் தொங்கிகொண்டிருப்பது இன்னொரு வகையான மிதவையே — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் மட்டக் கடற்கல (Low planing Vessel) வகையினைச் சேர்ந்த கலங்களாகும். இவற்றின் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது இவை ஊடுருவல் கலங்களாக(infiltration crafts) இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கலங்களில் இருக்கை போன்று ஒன்று நடுவில் உள்ளது. கலவர் = 1–2 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP ஆய்தம் = GPMG 7.62mm (முன்) 1. 2. பின்பக்கத் தோற்றம்: 'அடிப்புறம்' 3. 'சத்தார் பக்க வாட்டுத் தோற்றம்' தாரைச்-சறுக்கு (Jetski): 1) 2) இது எறிகணை வீச்சில் சிதைந்துவிட்டது. water scooter: 1) 2) பாதை வகைக் கலம்:- இது வெறுமையான பெற்ரோல் கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். விடுதலைப் புலிகள் தமது ஊர்திகள் மற்றும் பாரமான பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்திய பாலக் கலம் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி புலிகளிடத்தில் 8 இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் 250 குதிரை வலுக்கொண்ட எட்டு வெளியிணைப்பு மின்னோடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை கரையிலிருந்து ஒன்றரை மணிநேர ஓட்டத்தில் ஆழ்கடலிற்குச் சென்று அங்கு வந்து தரித்து நிற்கும் போர்த்தளவாட வறைக்கூடக் (warehouse) கப்பல்களிலிருந்து இறக்கப்படும் போர்த்தளவாடங்களைக் கரைக்கு ஏற்றிவரப் பயன்பட்டன. இவற்றில் 14-18 வரையான கடற்புலிப் போராளிகள் நிற்பர். கடற்புலிகளின் கலம் சோதனை இடம். நீளம்: 100 அடி உயரம்: 10 அடி கலையரசன் நீரடி நீச்சல் பயிற்சித் தடாகம் இது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு போராளிகளை கடலில் பயிற்சி எடுப்பிப்பதற்கு முன்னர் பயிற்றுவிக்கும் இடமாகும். இது 83 அடி நீளமும் 23 அடி ஆழமும் கொண்டதாகும். இது 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று சிறிலங்கா படைத்துறை கூறியுள்ளது. இதன் மேலுள்ள அந்த கம்பிகளில் பிணைக்கப்பட்டிருக்கும் உருமறைப்புகள் (தரப்பாள், மற்றும் இன்னபிறவன) வானிலிருந்து வேவெடுக்கும் போது இதை உருமறைக்கும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பற்றிய ஒரு நிகழ்படம்(video) கீழ்கண்ட இந்த இழுவைகளில்தான்(trailer) புலிகள் தங்களின் படகுகளை ஏற்றி வைப்பார்கள்.. தேவை வரும்போது இவற்றினை உழவு இயந்திரங்களில் கட்டி கரைக்கு இழுத்துச் செல்வார்கள். பின்னர் அங்கு உள்ள ஓர் ஊர்தி ஒன்றின் மூலம் கரையில் உள்ள மண்ணை தோண்டி அதன் மூலம் கலத்தினைக் கடலினுள் இறக்கிவிடுவார்கள்.. அந்த இறக்கும் ஊபின்புறத்தில் ஓர் கயிறு கட்டி அக்கயிற்றினை பினால் ஓர் ஊர்திக்கு கட்டிவிடுவார்காள். இதன் மூலம் அந்த தள்ளி இறக்கும் ஊர்தி கடலினுட் விழுந்தாலும் அதை கரையில் பிணைக்கப்பட்டுள்ள ஊர்தியைப் பயன்படுத்தி அதை உள்ளிழுத்து விடலாம் 'கடலினுட் கலத்தினை இறக்கும் அந்த ஊர்தி' 'அந்த ஊர்தி' அருகில் அமர்ந்திருப்பவர் சிங்கள ஊடகவியலாளர். 'படகுகாவிகள் எ இழுவைகள்' 'படகுகாவி எ இழுவை' இதுவும் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊர்தியே. இதன் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை! இறுதியாக…………….. 'கடல் தன்னில் அலைமீது கவிபாடி விளையாடி புவியாளச் சென்றவரே! - உங்கள் உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு எமை ஏங்க வைத்தவரே!' — கடற்புலிகளின் இறுவெட்டிலிருந்து… நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத் தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: https://eelam.tv/ - ஈழத்தமிழர்களின் யூடியுப் போன்றதொன்று Commentary #77) Sundayobserver.lk - Sri Lanka கடலோரக்காற்று - திரைப்படம் உப்பில் உறைந்த உதிரங்கள் - திரைப்படம் EelamView (EelamView) Sea Tigers of the LTTE | Richard Pendavingh) The Island (The Island) (Learning from Our Enemies: Sri Lankan Naval Special Warfare against the Sea Tigers) http://boatswainslocker.com/customer/boloin/customerpages/jetbriefs/HJ_JB427_Sri_Lankan_Patrol_Fleet.pdf Lost Victory (Lost Victory) http://www.fak.dk/en/news/magazine/Documents/ISSUE%2002,%20VOLUME%2002/Whither_the_Hybrid_Threat.pdf புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…! (https://eelavarkural.wordpress.com/2017/06/03/sea-tigers/) LTTE Suicide Boat Found (LTTE Suicide Boat Found) https://www.researchgate.net/figure/Text-accompanying-the-swimming-pool-Source-Author-photo-2013_fig4_276886367) புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள் (https://www.vivasaayi.com/2016/08/real-sea-battalion.html?m=0) தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு (http://www.velichaveedu.com/28219-5-a/) புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா? (புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா?) IDA71 - Wikipedia (IDA71 - Wikipedia) Stealth boats, mini subs of the LTTE(with janes video) (Stealth boats, mini subs of the LTTE(with janes video)) The last ‘Admiral’ from http://H.M.Cy.S. Coastal Forces (The last ‘Admiral’ from H.M.Cy.S. Coastal Forces) Dossier on weapons of ltte- pdf புலிகளின் மக்கள் சேவைப்படகு போர் காயங்களுடன் அனாதரவாக கிடக்கின்றது!. கடற்படையினரின் கட்டுப்பாட்டு வளாகத்தில் விடுதலைப் புலிகளின் தோணிகள் Sea Tigers – Wikipedia கடற்சிறுத்தை பெண்புலி நாதினி. | ஒருபேப்பர் https://noolaham.net/project/481/48098/48098.pdf கருணா குழுவின் துரோகத்தால் கொல்லப்பட்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன் படிமப்புரவு (image courtesy) பெருமளவான படிமங்கள் YouTube இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும் Galledialogue 2019 http://eelamaravar.com Mapio.net IDA71 - Wikipedia தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு TripAdvisor JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Richard Pendavingh ResearchGate Getty Images Wikimedia Commons H I Sutton - Covert Shores YouTube SBS and RABS breaking new grounds Thuppahi's Blog - WordPress.com: Create aFree Website or Blog (http://WordPress.com) Photography Unit of Liberation Tigers (http://aruchuna.com) Eelam Archives on Twitter https://twitter.com/EelamArchives/status/1254396048505798661/photo/1) Getty Images Home (https://www.uyirpu.com/) Steemit (http://steemit.com) LankaWeb News Eela Malar Pulikalin Kural - Pulikalin Kural (http://pulikalinkural.com) https://www.army.lk/ (https://www.army.lk/) http://tiger.javon.us (http://tiger.javon.us) Web Page Under Construction (http://TamilNation.com) EelamView (EelamView) Aruchuna (Photography Unit of Liberation Tigers) Enjoy free comfortable tools to publish, exchange, and share any kind of ocuments online! Explore Sri Lanka (Emerging Out Of The Shadows) Lakdasun Trip Reports Archive Navy Museum - Trincomalee (Navy Museum - Trincomalee) Al Jazeera http://HISutton.com (http://HISutton.com) Sri Lanka: Sea battle (Sri Lanka: Sea battle) Two more LTTE Suicide Boats & Three Vehicles Found (http://WikimediaCommons.com) (no title) Sri Lanka Navy Museum - Captured LTTE Boats) (https://puliveeram.wordpress.com/2018/12/12/ltte-made-weapons/#jp-carousel-37657) http://Flickr.com (http://Flickr.com) EagleSpeak (EagleSpeak) http://www.shunya.net/Pictures/SriLanka/Vanni-East/Vanni-East.htm)) This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. H I Sutton - Covert Shores) Log In or Sign Up LTTE smuggling of diesel and cement foiled in Pesalai கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு. http://www.வேர்கள்.com தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் http://flickr.com - kumaran satha ரூபபாகிணி தொலைக்காட்சி - சிங்களம் TamilNet ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 8 replies
-
- 1
-
- tamil rebels navy
- மிராஜ்
-
(and 29 more)
Tagged with:
- tamil rebels navy
- மிராஜ்
- தல்ராஜ்
- rebel navy
- tamil tigers navy
- விடுதலைப் புலிகள்
- ஈழப் புலிகள்
- tamil new tigers
- tamil tigers
- eelam rebel navy
- புலிகள்
- sri lankan navy
- கடற்புலி
- asian rebels navy
- eelam tigers
- sea tigers
- கடற்புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- naval wing of ltte
- விடுதலைப்புலிகள்
- naval wing of tamil tigers
- ltte navy
- eelam navy
- tamil navy
- ltte sea tigers
- eelam tamil navy
- maritime armed wing of ltte
- ltte miraj class boat
- கடற்கலன்
- தமிழீழக் கடற்கலங்கள்
- தமிழரின் கடற்கலங்கள்
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் படைதுறைக் கிளையானது உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர். அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில். இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும். அவை மொத்தமாக, தரைப்புலிகள் வான்புலிகள் கடற்புலிகள் கரும்புலிகள் இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நடைமுறையரசாக(de-facto) செயற்பட்டதால் 'படைவீரர்கள்' எனாமல் போராளிகள் எனப்பட்டனர். எண்ணிக்கை: 2008 திசம்பர்: 14 ஆ சொச்சம் (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம் 2009 மே முதற்கிழமை: 10 ஆ சொச்சம் (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம் வீரச்சாவு = ~26,500 (2009 மே-18 வரை களமாடி மடிந்தோர்… ) காயமடைந்தோர்: 2009 சனவரி - மே முதற்கிழமை: ~4000 ஆ (மக்கள்படை நீங்கலாக) - சிறப்பு அறிக்கைப்பகுதி போராளியின் வாக்குமூலம் ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்த தவிபு உறுப்பினர்கள் : 11,644 இவ்வியக்கத்தினரின், பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களால் முன்மொழியப்பட்ட ஆலோசனையான "தாமிரபரணி புதிய புலிகள்" என்ற பெயரிலிருந்து எடுக்கப்பட்டு சூட்டப்பட்டது) புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து) புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலரால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர். பட்டப்பெயர்கள்: இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும். கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. சிங்களப் படையினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத்துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புலிப்படை - வீரத்தின் பெயரால் ஒட்டுமொத்த தமிழர் சேனையையும் குறிக்க அமைந்த பெயர். பயத்தால் பட்டப்பெயர்: பீரங்கி - இது 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்) செல்லப்பெயர்: பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று. உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி: Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும். சரி இனி ஒவ்வொரு கிளையிலுமிருந்த பிரிவுகளைப் பார்ப்போம். இப்புலனங்களை சில கட்டுரைகள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணைகொண்டும் தேடியெடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து அறிந்து கொள்ளவும்… நிரந்தரப்படை (ஆ & பெ): தரைப்புலிகள் (தரைப்படை):- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் வட தமிழீழத்தைச் சேர்ந்த போராளிகள் இடம்பெற்றிருந்தனர் | உருவாக்கப்பட்டது: 1991.04.10 | தரிப்பிடம்: வட தமிழீழம். தேவைக்கேற்ப சில கொம்பனிகள் தென் தமிழீழத்தை நோக்கியும் நகர்த்தப்பட்டது| எண்ணிக்கை: 1000–2000 (2008) வான்காப்பு அணி கனவகை ஆயுதப்பிரிவு சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு சாள்ஸ் அன்ரனி வேவு அணி பாலா மோட்டார் அணி இராகசீலம் இசைக்குழு ஜெயந்தன் படையணி (இதில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் போராளிகள் இடம்பெற்றிருந்தனர்.) | உருவாக்கப்பட்டது: 1993.05.03 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில கொம்பனிகள் வட தமிழீழத்திற்கும் அனுப்பப்படும். | எண்ணிக்கை: 500-1000 (2008) கனவகை ஆயுதப் பிரிவு பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி (இது இயந்திர சுடுகலன்களுக்கான அணியாகும். எல்லாப் படையணிகள் கீழும் இது இயங்கியது) விசாலகன் சிறப்புப் படையணி | உருவாக்கப்பட்டது: 1991-1994 | தரிப்பிடம்: வாகரைக் கோட்டம் வினோதன் படையணி | உருவாக்கப்பட்டது: ~1996 | தரிப்பிடம்: குடும்பிமலைக் கோட்டம் மாலதி படையணி | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது. கனவகை ஆயுதப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு ஸப்தமி கலைக்கூடம் (ஒலிப்பதிவுக் கூடம்) அன்பரசி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். அன்பரசி படையணியானது அதற்கு முன்னர் மட்டு-அம்பாறை மகளிர் படையணி என்னும் பெயரில் செயற்பட்டு வந்தது. வான்காப்பு அணி கனவகை ஆயுதப்பிரிவு சோதியா படையணி | உருவாக்கப்பட்டது : 14.07.1996 | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 750 கனவகை ஆயுதப்பிரிவு மதனா படையணி | உருவாக்கப்பட்டது: 1997 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 கனவகை ஆயுதப்பிரிவு திலகா படையணி | தரிப்பிடம்: திருகோணமலை இளங்கோ படையணி | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் கட்டளையாளர் 'விமல்' என்பவர் ஆவார். பூநகரி படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ) சிறப்பு அதிரடிப்படை வேவு அணி கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995 முன்னிலை நோக்குநர் அணி ஜோன்சன் மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை முன்னிலை நோக்குநர் அணி குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம் முன்னிலை நோக்குநர் அணி பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு) மாருதியன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை இப்படையணியின் போராளிகள், இதன் கட்டளையாளரும் 2004இல் வஞ்சகனாய் மாறியவனுமான 'றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு. கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி. இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை! வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை 4.1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது) 2.3 படையணி 1.9 படையணி சந்தோசம் படையணி (மூன்றாம் ஈழப்போரில் மட்டுமே இயங்கியது) ராதா வான்காப்புப் படையணி | (2000/11 ஆம் ஆண்டு வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா விமான எதிர்ப்பு அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். 2002 இல் தனிப் படையணியாக உதயம் கண்டது. இதன் கீழ் 18 பிரிவுகள் செயற்பட்டன) ஜேசுதாஸ் தாக்குதல் அணி (தலைவரின் மெய்க்காவலர்கள். இதன் கீழ் பல்வேறு தேவைகளுக்கென பல நிர்வாகப் பிரிவுகள் இருந்தன. யேசு அணி என்றும் அழைக்கப்படுவதுண்டு) ராதா புலனாய்வு அணி கௌதமன் புலனாய்வு அணி சிறப்பு அணி (கனவகை படைக்கலன் இயக்குனர்கள்) வான் எதிர்ப்பு ஏவுகணை அணி வான் கண்காணிப்பு அணி உள்ளகப் படப்பிடிப்பு படைக்கல பாதுகாப்பு அணி இம்ரான்-பாண்டியன் படையணி (1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் அலுவல்சாராக அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் 9 பிரிவுகள் செயற்பட்டன. படையணியாகத் தொடங்கப்படு முன் சைவர் {0} பிரிவு என்ற பெயரில் இயங்கியது. ) சூரன் கவச அணி பதுங்கித் தாக்குதல் அணிகள் சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி படைக்காவலர் அணி செம்பியன் வேவு அணி சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: 150> அதிவேக உந்துருளி சிறப்பு அணி குறிசூட்டுப்பிரிவு (ஆ&பெ) மயூரன் குறிசூட்டுப்பிரிவு செண்பகம் குறிசூட்டுப்பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டுத் துமுக்கியைப் பயன்படுத்துவோர்) விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி (1997 இன் முற்பாதியில் உருவாக்கப்பட்டது. இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது. இப்படையணியின் வீரர்கள் 1997 இற்கு முன்னர் ராங்கி எதிர்ப்பு அணி என்ற 04- 1992 இல் உருவாக்கப்பட்ட அணியில் பணியாற்றியோர் ஆவர்.) (ஆ&பெ) பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு (பெ) | 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு நீலன் துணைப்படை(ஆ) தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ) | இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராமப் பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். உந்துகணை செலுத்தி பிரிவு பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி என தரைப்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் மிடுக்குடன் நடந்தன. இவற்றில் 1-9, 4.1, 2.3 ஆகிய படையணிகள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டு அதன் பின் கலைக்கப்பட்டவையாகும். இவற்றோடு மகளிர் படையணிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு 'மகளிர் பேரவை' என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பெண் போராளிகளின் பரிணமிப்பு: 1984ல் "சுதந்திரப் பறவைகள்" பின் "மகளிர் அமைப்பு" பின் 1990ல் "மகளிர் படையணி & மட்டு-அம்பாறை மகளிர் படையணி" பேந்து 'சூரியகதிர்' ஒன்றின் முடிவில் "மாலதி படையணி" மற்றும் "அன்பரசி படையணி" களாக பரிணமித்து பின் பற்பல சண்டை உருவாக்கங்களாகி வீறுநடை போட்டனர். மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது: அத்தாக்குதலணிகள் ஆவன, அரசியல்துறை தாக்குதலணி புலனாய்வுத்துறை தாக்குதலணி நிதித்துறை தாக்குதலணி காவல்துறை தாக்குதலணி சிறுத்தைப்படை (அதிரடிப்படை):- 1992 நடுப்பகுதியில் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகால பயிற்சியை முடித்து 1994இல் முதல் பாட்டம் (batch) வெளியேறியது. இப்படை 2005 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, பெண் போராளிகள் மாலதி படையணி, சோதியா படையணி மற்றும் மருத்துவப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதேவேளையில் ஆண் போராளிகள் இம்ரான்-பாண்டியன் படையணியுடன் இணைக்கப்பட்டார்கள். 2006இல் மீண்டும் இம்ரான்-பாண்டியன் படையணியின் கீழ் உருவாக்கப்பட்ட்டு தொழிற்பட்டது. தரைச்சிறுத்தை அணி (ஆ&பெ) காட்டுச்சிறுத்தை அணி (ஆ&பெ) கடற்சிறுத்தை அணி (ஆ&பெ) வேவுப்புலிகள் (வேவுப் பிரிவு):- இவ்வேவுப் பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. இது படையப் புலனாய்வுப் பிரிவின் கீழ் தொழிற்பட்டது. முகிலன் நீண்டதூர விசேட வேவு அணி (LRRP) வரைபடப்பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி) விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் :- “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய-தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடற்பரப்புகளின் பாதுகாப்புக்காகவும் அவற்றில் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு மரபுவழிப் படைத்துறைக் கிளைகளில் ஒன்றான கடற்படையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது. இக்கிளையை 2005 முதல் "தமிழீழக் கடற்படை" என்றும் அழைக்கத் தொடங்கினர்.| எண்ணிக்கை: 750 - 1500 ஆசிர் சிறப்புத் தாக்குதலணி (இதுதான் முதலாவது சிறப்புக் கடற்றாக்குதல் அணி ஆகும். இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.) சாள்ஸ் சிறப்புக் கடற்தாக்குதல் அணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993. நடவடிக்கை அணி தாக்குதலணி (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்) நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி(பெ) நடவடிக்கை அணி தாக்குதலணி (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்) பாக்கியன் ஆழ்கடல் தாக்குதல் அணி (ஆ & பெ) வசந்தன் படையணி (உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்) சங்கர் படையணி நரேஸ் படையணி (2000 ஆம் ஆண்டு வரை) மாதவி படையணி டேவிட் படையணி எழிற்கண்ணன் படையணி கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி புனிதா தரைத்தாக்குதல் அணி(பெ) சுகன்யா தரைத்தாக்குதல் அணி(பெ) சூட்டி தரைத்தாக்குதல் அணி(ஆ) (1995 மண்டைத்தீவுத் தாக்குதலிற்குப் பின்னர் "அருச்சுனா படையணி"யின் பெயர் சூட்டி தரைத்தாக்குதல் அணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) | உருவாக்கப்பட்டது: 5.7.1995 சிறப்புப் படையணி கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது) சிறப்புப் பணிப்பிரிவு நீரடி நீச்சல் பிரிவு கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) (ஆ) (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ), சிறப்பு சுற்றுக்காவல் அணி கடல் வேவு அணி வானூர்தி எதிர்ப்பு அணி கடற் கண்காணிப்புப்பிரிவு (radar monitoring) சதீஸ் இயந்திரவியல் பிரிவு உள்ளிணைப்பு இயந்திரப்பிரிவு வெளியிணைப்பு இயந்திரப்பிரிவு டீசல் இயந்திரப்பிரிவு வழங்கல் பிரிவு படகுக் கட்டுமானப் பகுதி மங்கை படகுக் கட்டுமானப்பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப்பிரிவு ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard ) மாதிரி கட்டுத்துறை(Model yard) வரைபடப்பிரிவு மலரவன் வெடிமருந்துப் பிரிவு தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):- தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:- மறவன் துணைப்படை திருவடி துணைப்படை நவரசன் துணைப்படை ஜோன்சன் துணைப்படை ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்புத் துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும் கனவகை கடற்றாக்குதல் ஆய்தங்கள் தேவைப்படும் இடங்களில் கடற்புலிகளின் கடற்படையணிகளும் தாக்குதலணிகளும் களமிறக்கப்பட்டிருந்தன. மேலும் கடற்புலிகளின் ஆளுகை வசதிக்காக, நிருவாகச் செயலகம் அரசியல்துறை (1991 இல் தொட.) புலனாய்வுத்துறை பொறியியல்துறை மருத்துவப்பகுதி என்பனவும் உருவாக்கப்பட்டிருந்தன. ஈரூடகப்படை (Marines)- இது கடற்புலிகளின் கீழ் இயங்கியது. சேரன் ஈரூடகத் தாக்குதலணி விடுதலைப்புலிகளின் வான்புலிகள்:- இக்கிளையை 2007 முதல் "தமிழீழ வான்படை" என்றும் அழைக்கத் தொடங்கினர். வானூர்தி தாக்குதலணி வானோடிகள் அணி வானூர்தி தொழில்நுட்பப்பிரிவு வானூர்தி ஓடுதளப் பாதுகாப்புப்பிரிவு வான் கண்காணிப்புப்பிரிவு சிறப்புத் தாக்குதலணி கரும்புலிகள் (சிறப்புப்படை & தற்கொடைப்படை) கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர். மறைமுகக் கரும்புலிகள் (புலனாய்வுத்துறையின் விசேட செயற்பாட்டுப் பிரிவின் கீழ் இயங்கியது) தரைக்கரும்புலிகள் (இவர்கள் தேசத்தின் புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்; இ.பா. படையணியின் கீழ் இயங்கியது.) வான்கரும்புலிகள் (வான்புலிகளின் கீழ் இயங்கியது) கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்; கடற்புலிகளின் கீழ் இயங்கியது.) நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் (இவர்கள் 'இடியர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கடற்கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்.) செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (இது முதலில் "சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு" என்ற பெயரால் அழைக்கப்பட்டு 2008இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. உருவாக்கப்பட்டது: 1994) (ஆ) அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ம் மாதத்திற்கு பின்னர்) (பெ) என சண்டை உருவாக்கங்கள் நிமிர்ந்து நின்றன. புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை) → 1990களுக்கு முன்னர் இதன் பெயர்: புலி இயக்கப் பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS புலனாய்வுத்துறை தாக்குதலணி பன்னாட்டுப் புலனாய்வு அணி தேசிய புலனாய்வுப்பிரிவு தகவல் சேகரிப்புப்பிரிவு ஆய்வு மற்றும் வெளியீட்டுப்பிரிவு பயிற்சி மற்றும் தொழில்நுட்பப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு விசேட செயற்பாட்டுப் பிரிவு படையப் புலனாய்வுப்பிரிவு தரைப்படை தகவல் சேகரிப்புப்பிரிவு கடற்படை தகவல் சேகரிப்புப்பிரிவு வான்படை தகவல் சேகரிப்புப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு உள்ளகப் புலனாய்வுப்பிரிவு வெளியகப் புலனாய்வுப்பிரிவு நிருவாகப் புலனாய்வுப்பிரிவு நிதிப் புலனாய்வுப்பிரிவு உளவியல் செயற்பாட்டுப்பிரிவு முகவர்கள் மறைமுக உறுப்பினர்கள் இரகசிய நடவடிக்கை அணிகள் கபிற்றல் ஹீரோஸ் - கொழும்பு (1990 களின் தொடக்கம்) எல்லாளன் படை - தென்னிலங்கை (ஈழப்போர் முடியும் மட்டும்) சங்கிலியன் படை - யாழ்ப்பாணம் (1996 - 2001) சீறும் படை - மட்டு-அம்பாறை (2008) பொங்கி எழும் மக்கள் படை - யாழ்ப்பாணம் & மட்டு - அம்பாறை (2005 - 2007) குளக்கோட்டன் படை - திருகோணமலை (2001) பண்டாரவன்னியன் படை - வவுனியா & மன்னார் (2000 & 2001) புதிய வன்னியன் படை - வவுனியா (சமாதான காலத்தில்) தேசிய மண் மீட்புப் படை - மட்டக்களப்பு (2006) ஊடுருவல் முறியடிப்புப்பிரிவு புலனாய்வு பயிற்சி மையம் கல்விக்குழு தமிழீழப் போக்குவரவுக் கண்காணிப்புப்பிரிவு நுழைவிசைவு வழங்கும் பகுதி நிரந்தரப்படை தவிர்த்து மக்களுக்கும் படைத்துறைப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி என பல்வகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றோர் அனைவரும் மக்கள் படையென நிமிர்ந்தனர். அம்மக்கள் படையானது மக்கள்படை:- எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள் ' எனவும் அழைக்கப்பட்டனர் | இவர்கள் கடற்புலிகளுக்கும் தரைப்புலிகளுக்கும் இருந்தனர், 1999ம் ஆண்டு முதல். சிறப்பு எல்லைப்படை (ஆ&பெ) (1998-2009) ஊரகத் தொண்டர் படை(ஆ) பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி உந்துகணை செலுத்திப் பிரிவு ஆசிரியர் தொண்டர் படை போருதவிப்படை(ஆ) கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் கிராமிய விசேட படையணி உள்ளகப் பாதுகாப்புப் படை (ஆ&பெ) நிஸ்மியா உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ) தமிழ்ப்பாண்டி உள்ளகப் பாதுகாப்பு அணி சங்கர் அணி அன்பு அணி மாணவர் படை தமிழீழத் தேசிய இராணுவம் என மக்கள்படைக் கட்டமைப்புகளாக செயலுருப்பெற்றன. மேற்கண்ட மக்கள்படைக் கட்டமைப்பை 'தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை' ஆளுவப்படுத்தியது. இவ் படையப் பிரிவுகளின் வழங்கல்களுக்காகவும் ஆளுகைக்காகவும் கீழ்க்கண்டவை உருவாக்கப்பட்டிருந்தன. தலைமைச் செயலகம் காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) தலைவருக்கான தனிச்செயலகம் நிர்வாகச் செயலகம் மணாளன் தலைமைச் செயலகப் பாதுகாப்பு அணி போராளிகள் தொடர்புப்பகுதி மக்கள் தொடர்பகம் வெடிபொருள் களஞ்சியம் வெடிபொருள் விநியோகம் ஆயுத களஞ்சியம் ஆயுத பராமரிப்பு ஆயுத விநியோகம் சிறப்பு ஆளணி அறிக்கைப்பகுதி அறிக்கைப்பகுதி ஆளணி அறிக்கைப்பகுதி ஆயுத அறிக்கைப்பகுதி தேசிய உட்கட்டுமானப் பாதுகாப்புப்பிரிவு முரண்பாடு ஆய்வு நிறுவகம் ஒற்றாடல் பிரிவு (பல்வித படைத்துறை நகர்வுகளை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு விழிப்புவிக்கும் பிரிவு) நளன் வானொலி தொலைத்தொடர்புப் பிரிவு போர்க்கருவி தொழிலகம் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு மலரவன் வெடிமருந்து பிரிவு சமராய்வு மையம் செய்தித் தகவல் மையம் களமுனை ஆய்வுப்பிரிவு கள விசாரணைப்பகுதி வழங்கல் பிரிவு படையத் தொழிநுட்பப்பிரிவு சமர் நூலாக்கப் பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள். வாகனப்பகுதி கண்ணிவெடி உற்பத்தித் தொழிற்சாலை கைக்குண்டு உற்பத்தித் தொழிற்சாலை மிதிவெடி உற்பத்தித் தொழிற்சாலை எறிகணை உற்பத்தித் தொழிற்சாலை கடற்புலிகளின் படகு வடிவமைப்புத் தொழிற்சாலை பல பயிற்சிப் பாசறைகள் சுஜி கணினிப் பிரிவு (மட்-அம்) ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம் (கணினிப் பிரிவு) மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு வன்தொழினுட்பப் பிரிவு மென்தொழினுட்பப் பிரிவு- தாரக மந்திரம்: "கூடி முயல்வோம், வெற்றி பெறுவோம்" படைய தொழினுட்பவியல் கல்லூரி மென்பொருள் கட்டுமானப்பகுதி தொழில்நுட்பக் கல்லூரிகள் கொள்வனவுப்பகுதி சிறப்புத் தாக்குதலணி திட்டமியல் செயலகம் கடற்புலிகள் இவற்றோடு தங்களின் படைத்துறை போராளிகளுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்கி நெறிப்படுத்துவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன, தமிழீழ படைத்துறைப்பள்ளி (ஆ&பெ) படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி அன்னக்கிளி பயிற்சிக்கல்லூரி (குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொழிற்பட்டது) சிறப்புப் பயிற்சிக்கல்லூரி திலீபன் அரசியல் கல்லூரி போர்ப்பயிற்சி ஆசிரியர் கல்லூரி G 10 போர் பயிற்சிக்கல்லூரி பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி- (மட்டு) பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அப்பையா வெடிபொருள் பயிற்சிக்கல்லூரி ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி ராஜன் படைத்துறை பயிற்சிக்கல்லூரி புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக்கல்லூரி -->சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது) -->ராயன் அறிவுக்கூடம் (சிறப்புப்படைக்கானது) சதீஸ் இயந்திரவியல் கல்லூரி மகளீர் அடிப்படை பயிற்சிக்கல்லூரி மகளீர் படைத்துறை பயிற்சிக்கல்லூரி றோய் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி கடற்புலிகளின் கடற்படை படைத்துறைப்பள்ளி நிரோயன் ஆரம்பக் கடற்படை பயிற்சிக்கல்லூரி ஆசிர் கடற்படை பயிற்சிக்கல்லூரி (1992 இல் ) நரேஸ் தொழினுட்பக் கல்லூரி பெத்தா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி கப்பல் கல்லூரி (பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆழ்கடலோடிகளுக்கு) கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப்பள்ளி மொழியாக்கப்பிரிவு படப்பிடிப்புகளுக்கு மூன்றாம் ஈழப்போர் வரை நிதர்சனத்தின் களப்படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நான்காம் ஈழப்போரில் நடராசன் ஒளிப்பதிவுப்பிரிவு உள்ளகப் படப்பிடிப்பு களப் படப்பிடிப்பு அடிபாட்டாளர்களின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இதன் கட்டமைப்பு பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. கிடைத்த பற்றியத்தை ஏலுமானவரை கோர்வையாக்கியுள்ளேன். அதில் ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திற்குமென தனித்தனி மருத்துவப்பிரிவுகளும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு: தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள் தள மருத்துவமனை (படைய மருத்துவமனைகள்) அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (மட்டக்களப்பு) முல்லை மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) மற்றும் பல அலகுகள் ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா? உசாத்துணை : முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு பார்த்து தெரிவிப்பார்கள்.) (இவையெல்லாம் தமிழில் எழுதப்பட்ட உசாத்துணைகள்தான். ஆதலால் ஒரு சரிபார்ப்பாகவாவது இவற்றைக் கொள்ளவும்.) ஈழநாதம்(29.4.2003) எரிமலை-1992 உதயன்: 09/08/1995 களத்தில் - 27.6.1995 விடுதலைப்புலிகள் - ஐப்பசி-கார்த்திகை 1998 பழ நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகம் (பசீலன் மோட்டர் பிரிவுப் பெயர் இங்கிருந்து கொள்ளப்பட்டது) தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…? - இ.இ. கவிமகன் EelamView நிர்வாக முடக்கலுக்கு மண்மீட்கும் படை அழைப்பு. https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm விடுதலைப்புலிகள் மார்கழி-தை 2001 லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது https://eelamaravar.wordpress.com/2019/05/15/brigadier-sornam-4/ https://eelamheros.wordpress.com/2019/05/15/ltte-medical-team-kanavi/ https://www.eelamview.com/2016/04/18/ex-ltte-medical-unit/ https://yarl.com/forum3/topic/277039-பன்முகத்-திறன்கள்-கொண்ட-லெப்-சாள்ஸ்-அன்ரனி-சிறப்புப்-படையணி-தாக்குதல்-தளபதி-லெப்-கேணல்-நாகதேவன்/ http://eelamalar.com/கடலிலே-காவியம்-படைப்போம-4/ https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/ சூட்டி படையணியிற்கு பெயர் சூட்டக் காரணமான சூட்டி https://vayavan.com/?p=11902 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
- 8 replies
-
- 1
-
- divisions of ltte
- brigades of lttes
-
(and 36 more)
Tagged with:
- divisions of ltte
- brigades of lttes
- தமிழீழ படையம்
- tamil tiger military divisions
- புலிகளின் படைப் பிரிவுகள் விபரம்
- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு
- விடுதலைப்புலிகள்
- புலிகளின் படைப்பிரிவுகள்
- தமிழீழ படையணிகள்
- தமிழீழ இராணுவ படையணிகள்
- tamil tigers division
- படையணி விபரம்
- ltte divisions
- புலிகளின் படையணிகள்
- regiments of ltte
- ltte rebel wings
- புலிகளின் படையணிகள் விபரம்
- படையணிகள் விபரம்
- தமிழீழ இராணுவம்
- தமிழ் புலிகளின் படையணிகள்
- விடுதலைப் புலிகளின் படையணிகள்
- தமிழ் ஈழ படைப்பிரிவுகள்
- புலிகளின் படைப்பிரிவுகள் விபரம்
- ltte regiments
- புலிகள் இராணுவக் கட்டமைப்புகள்
- புலிகள் கட்டமைப்புகள்
- இராணுவக் கட்டமைப்புகள்
- புலிகள் ராணுவக் கட்டமைப்புகள்
- ராணுவக் கட்டமைப்புகள்
- புலிகளின் கட்டமைப்புகள்
- ltte fighting formations list
- tamil tigers army
- tamil tigers navy
- tamil tigers airforce
- tamil tigers units
- தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவுகள்
- தமிழீழப் படைத்துறை
- விடுதலைப் புலிகளின் படைகள்
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)