Search the Community
Showing results for tags 'rocket'.
-
https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ மூன்று தண்டவாளக் கம்பிகளை இணைத்து ஒரு ஆயுதத்தை உருவாக்கினார்கள். அதன் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆராய முகமாலைப் பகுதியின் ஒரு வெளியில் தெருநாய்களைப் பிடித்து கட்டிவிட்டு அந்த ஆயுதத்தை இயக்கி அதன் சக்தியினை மதிப்பீடு செய்தார்கள் . ஆம் அது மெதுவாக தண்டவாளத்தில் ஓடி ஆசைந்தபடி தன் இலக்கை நோக்கி நகர்ந்து சென்று வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் ஆறேழு கிலோமீற்றர்களுக்கு அதிர்ந்தது. 800 மீற்றர் சுற்றுவட்டத்தை அழித்திருந்தது அங்கு விடப்பட்ட தெருநாய்கள் காணாமல் போயிருந்தன. அந்தக் கண்டுபிடிப்பிற்கு சண்டியன் எனப் பெயரிட்டனர். ஆம் அந்தச் சண்டியன்தான் முகமாலைப் பகுதியில் முன்னேறிய இராணுவங்களைக் கொன்றுகுவித்துக்கொண்டிருந்தது. இருந்தும் தலைவரின் பணிப்பிற்கு அமைய அவ் ஆயுதத்தைப் பாவிக்காமல் விட்டிருந்தனர். அதற்குக் காரணம் அவ் ஆயுதம் பாரிய உயிர்ச்சேதங்களையும் அழிவுகளையும் உண்டுபண்ணியதனாலயே அதைத் தடைசெய்தார்கள். எங்கள் போராட்டத்தை சரியான முறையில்த்தான் செய்திருந்தோம் என்பதற்கு இவ்வாயுதம் கைவிடப்பட்டதே பெரும் சான்று. ஒரு ஆயுதத்தையல்ல, இதுபோல பல ஆயுதங்களை உற்பத்தி செய்தனர் எங்கள் வீரர்கள். எதுவித வளங்களும் இல்லாதபோதும் எதிரி ஏவிய குண்டுகளை குடைந்து அதன் மருந்தில் உற்பத்தி செய்த ஆயுதங்கள்தான் எத்தனை எத்தனையோ அந்தக் கண்டுபிடிப்புக்களுக்காக நூற்றுக்கணக்கான மாவீரர்களைத் தியாகம் செய்திருந்தது இந்த மண் அந்த மண்ணில்தான் நாம் இப்போ சோம்பறிகளாக குந்தியிருக்கின்றோம் எங்கள் நிலங்கள் தரிசுநிலமாக மாறிக்கொண்டிருக்கின்றது … --------------- கூடுதல் படங்களும் மேலதிக படிமங்களும் இதற்குள் உள்ளன.
-
- 1