புதிய பதிவுகள்2

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

5 days 23 hours ago
இஸ்ரேலின் கொட்டம் என்பது அது அந்த நாடு உருவாகியதிலிருந்து அதன் கொட்டம் பலமாக இருக்கின்றது.அதனாலேயே அந்த நாடு உருவாகியதிலிருந்து மத்திய கிழக்கு கலவர பூமியாக இருக்கின்றது. இஸ்ரேலின் கொட்டம் இன்று நேற்றிலிருந்து உருவாகியதில்லை. ஆனால் அது பல தடவைகள் பல சமாதான பேச்சுக்களையும் நரி வேலைகளை செய்துள்ளது. நெதென்யாகுவின் இன்றைய நிலை இஸ்ரேலுக்கு எதிரி நாடுகள் இருக்கக்கூடாது எனும் நிலை. இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறிய ஈரானின் நிலை பற்றிய உங்கள் கருத்தையும் இங்கே சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

5 days 23 hours ago
சீமான் கடந்த வருடம் 25.45 ஏக்கர் காணி வாங்கியதாக சொத்து விபரத்தில் தெரிவித்துள்ளார். அதன் தற்போதைய பெறுமதி 51 இலட்சம் என்று சொல்லியுள்ளார் உண்மையில் அது பலகோடி இந்தியன் ரூபா பெறுமதி உள்ளதாம். இது தவிர சீமானின் Hyundai கார் 12 இலட்சம் மனைவியின் இரண்டு கார் Toyota 25 இலட்சம் Hyundai 4 இலட்சம். சீமானிடம் உள்ள தங்கம் 19 இலட்சம் மனைவியிடம் உள்ள தங்கம் 2 கோடி 8 இலட்சம் ரூபா பெறுமதி என்று சொத்து மதிப்பு விவரத்தில் தெரிவித்துள்ளார் . விஜய் கோடிகளில் சம்பளம் பெற்று கொள்ளும் ஒரு நடிகர் ஆனால் சீமானுக்கு எப்படி இவ்வளவு வருமானம் வந்தது ? இவர் தான் நல்லாட்சி கொடுக்க போகிள்றார் யாரும் கேள்விகள் கேட்க முடியாத ஊழல் சொத்து குவிப்பு செய்வதற்காக தான் தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை விரும்புகின்றார்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

5 days 23 hours ago
விஜை தந்தை, தாய், மனைவி, பிள்ளைகளுக்கு கடன் கொடுத்ததை கூட எழுதி வைத்துள்ளார் என நாதக தம்பிகள் சிரிக்கிறார்கள். ஆனால் இப்படி பண விடயத்தில் கறாரக இருப்பது பெரியார், காமராஜர் போன்ற ஊழல் இல்லாத தலைவர்களில் கூட இருந்த பண்பு. நான் கூட நண்பர்கள், சகோதரர்களுக்கு கொடுத்ததெல்லாம் கணக்கில் வைத்துள்ளேன். மகனுக்கு கூட அவரின் ஒவ்வொரு வாய்ப்பும் என்ன விலை, நான் எதை ஒறுத்து அதை அவருக்கு கொடுக்கிறேன் என்பதை சொல்லியே வளர்க்கிறேன். எதையும் மீள கேட்க போவதில்லை. தரப்போவதும் இல்லை, தந்தாலும் வாங்க போவதும் இல்லை. ஆனால்…. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு… பழமொழி அர்த்தம் மிக்கதே. பிகு திரள்நிதியில் பிள்ளைகளை ஆங்கில தனியார் பாடசாலைக்கு பீஸ் கட்டி அனுப்பும் சீமானை கேட்க நாதியில்லாத நாம் தமிழர் தம்பிகளுக்கு இதை நக்கல் அடிக்க அருகதை இல்லை என்பது என் அபிப்பராயம். விஜையிடம் தலைமை பண்பு அறவே இல்லை. ஆனால் இது அப்படி அல்ல.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

5 days 23 hours ago
Please list top ten countries which supplied Arms, Ammunitions & Military support to Sri Lanka from 1985 to 2009. Please also mention in your answer which countries supplied cluster bombs to Sri Lanka in that period. Answer by Meta AI Here are the top countries that supplied arms, ammunition, and military support to Sri Lanka from 1985 to 2009: 1. China: Provided significant military aid, including fighter jets, tanks, and artillery, worth over $1 billion. 2. Russia: Supplied military equipment, including MiG-27 jets and cluster bombs. 3. United States: Provided military aid, including training and equipment, worth over $500 million. 4. India: Supplied military equipment, including fighter jets and artillery, and provided training to Sri Lankan forces. 5. Israel: Provided military equipment, including Kfir jets and drones, and offered strategic military advice. 6. Pakistan: Supplied military equipment, including Al-Khalid tanks and artillery. 7. United Kingdom: Provided military training and equipment, including small arms and ammunition. 8. Iran: Supplied military equipment, including rockets and rocket launchers, worth over $140 million. 9. Czech Republic: Provided military equipment, including RM-70 rocket launchers. 10. Ukraine: Supplied MiG-27 jets worth €7.2 million. As for cluster bombs, Russia is reported to have supplied cluster bombs to Sri Lanka during this period ¹ ² ³.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

5 days 23 hours ago
இதே கேள்வியை நாதக வின் இடும்பாவனம் கார்த்தி கேட்க, த வெ க வினர் இப்படி பதில் போடுகிறார்கள். பிற்குறிப்பு இதுவரை வாழ்நாளில் இடும்பாவனம் கார்த்தி தொழில் என ஒன்றை செய்தாதாக தெரியவில்லை. ஆனாலும், சாப்பிடுறார், டவுசர் போடுறார், கேள்வியும் கேட்கிறார்😂

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

6 days 1 hour ago
Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலையாக 92,76,03,409 ரூபாய் உள்ளதாகவும் 5 கார்கள் மற்றும் 1 TVS XL வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தவிர, விஜய் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறார் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி N. ஆனந்திற்கு 3 கோடி கொடுத்திருப்பதாகவும், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு 3 கோடியும், அவரது தாய் சோபா சந்திரசேகருக்கு 8 லட்ச ரூபாயும் கடன் கொடுத்திருப்பதாக விஜய் வேட்மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் கொடுத்த கடன் விவரங்கள் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் Tvk Vijay: தந்தைக்கு 3 கோடி; தாய்க்கு 8 லட்சம் - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் | 3 crore to his father, 8 lakh to his mother – Loan details declared by Vijay - Vikatan டிஸ்கி: இந்திய வரலாற்றிலேயே அப்பா அம்மாவுக்கு கொடுத்த பணத்தை கடன் என்று லிஸ்டிய பாசமான பிள்ளை விஜய்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026

6 days 1 hour ago
T20 formatக்கு spin bowlers கூடுதலா இருக்கனும். முதல் மேட்ச்லயே Karthikஐ சேர்த்தது தப்பு. ரெண்டு மேட்ச் பார்க்க விடனும். சுரேஷ் ரெய்னா ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி, சஞ்சுவை ஓப்பனிங் இறக்கவே கூடாது. சஞ்சுவுக்கு ஒன் டவுன்தான் கரெக்ட். சின்னப்பையன் Ayush பவர்ப்ளேயில் சுலபமா சுத்தி அடிச்சி விளையாடி 30-40 ரன்கள் எடுக்கலாம். அதன்பிறகு வர்ற சஞ்சு எந்த ஓவரிலும் சிக்ஸ் அடிக்கக்கூடிய அளவிற்கு வலுவான பேட்ஸ்மேன். Brevis இல்லாதப்போ, Matt Shortஐ எடுத்தது தவறு, Brevis இடத்துக்கு காட்டடி மன்னன் Urvilதான் கரெக்ட். Pace bowlers... 1. Khaleel 2. Henry 3. Jamie Overton 4. Anshul Kamboj போதாதற்கு 2 ஓவர்ஸ் அளவிற்கு வீசக்கூடிய Dubeவும் மிதவேக பந்து வீச்சாளர்தான். இத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையா??!! ஆனா spin bowler Noor மட்டும்தான். CSK நிர்வாகம் திருந்தவே திருந்தாது. என்ன ஐடியாவில் ப்ளேயிங்11 தேர்ந்தெடுத்தானுங்கன்னே தெரியல. Anshul Kamboj இடத்துக்கு Rahul Chahar or Hosein or Prashant Veer இருக்கனும். பேட்டிங் லைன்-அப் மாத்தனும். முதல் மேட்ச்சே தோற்கலாம், தப்பில்ல. ஆனா அதுக்காக இப்டியா கேவலமா...!!! ( பிரதி ...முகநூலில் இருந்து) என்னைப்போல ஒரு சி.எஸ்.கே ....விசிறி போல கிடக்கு ..உண்மையை சொல்லியிருக்கார் // இன்று காலையில் இருந்தே ...மனசு வெறுமையாகிட்டுது

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

6 days 1 hour ago
அமைச்சர் என்னமோ...வெள்ளையும் சொள்ளையுமாக மட்டைக்கட்டு கட்டுகிறார்....அங்கு நடப்பதோ வேறு.. CCDயில் இஷாரா செவ்வந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

6 days 3 hours ago
தேயிலை - எண்ணெய் விற்பனை அடிப்படையில், இரான் கடன் கொடுகாதாக ஆயுதம் வாங்க. இது சாத்தியம். (ஆனல், ஈரான் cluster குண்டு கொடுத்தது இதுவே எல்லாவறையும் குழப்புவது) அதனால் தான் சொல்லுவது , ai ஓ அல்லது வேறு எங்கும் அறிந்தாலும், சாதரண அடிப்படை அலசலுக்கு அறிந்தவை ஒத்து வரவேண்டும் சிறிலங்கா இரானிடம் கான் பெற்று இரானிடம் இல்லாத ஆயுத தொழில் நுட்பத்தை (தரகு கூலியும் கொடுத்து) ஏன் வாங்க வேண்டும்? ai, இணையத்தில் இருக்கும் தகல்வல்கள் மேற்கால் வேண்டும் என்று பரப்ப பட்டவையும் கூட.

வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

6 days 3 hours ago
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு adminMarch 30, 2026 அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதேசங்களில் அண்மையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் வெளிவருகின்ற செய்திகள் எல்லாம் அச்சம் ஊட்டுபவையாக காணப்படுகின்றன. அப்பாவி பெண்கள் மயக்கமுறச் செய்து அவர்களிடம் இருக்கின்ற நகைகளை கொள்ளையிட்டுவிட்டு கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்யபடுகின்றனர். தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுகின்றவர்கள் தடுக்கச் செல்கின்ற காவல்துறையினரை இடித்துக் கொலை செய்கின்றனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கணக்கில் எடுக்காமல் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளநிலை பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவையெல்லாம், சட்டவிரோதச் செயற்பாடுகளும் போதைப் பொருள் பாவனையும் எமது பிரசேதங்களில் அதிகரித்துச் செல்கின்றன. இவை எமது பிரதேசங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன. எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.போதைப் பொருள் இல்லாமல் செய்யப்படும். சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்டும் என்ற நம்பிக்கையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருந்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய கருத்துக்கள் மீது நம்பிகை வைத்து எமது மக்கள் வாக்களித்த போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வினைத்திறன் இல்லாதவர்களாகவும், உணர்வு ரீதியான புரிதல் இல்லாதவர்களாகவும் இருப்பதே, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றது. அண்மையிலே காவல்துறைஅதிகாரி உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றினை நடத்திய அமைச்சர் சந்திரசேகரர், மணல் மாபியாக்கள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார். மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டியது யார்? உரிய நியமங்களை பின்பற்றி மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் சட்டரீதியாக அகழப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறாது, காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்த காலத்தில், மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக உரிய நியமங்களை பின்பற்றி நியாயமான விலையில் தேவையானளவு மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இன்மையே மணல் மாபியா உருவாக காரணமாகவுள்ளது. இதுபோன்றே யாழ் மலசலகூட விவகாரமும் அமைந்துள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த காலத்தில் யாழ் நகரில் மலசலக்கூட கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் மாநகர சபைக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதற்கும் சரியான தலைமை இன்மையே காரணமாக இருக்கின்றது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231269/

அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்

6 days 3 hours ago
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல் Published By: Vishnu 30 Mar, 2026 | 10:33 PM (நா.தனுஜா) படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். அதேபோன்று 'இந்த ஆவணத்திரைப்படம் தமிழ் சட்டத்தரணியும், அரசியல்வாதியுமான எனது நண்பர் நீலன் திருச்செல்வத்தைப் பற்றியதாகும். அவர் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியவராவார். நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும், போரை நிறுத்துவதற்கும் ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அவர் அயராது உழைத்தார். உலகளாவிய அமைதித் தூதுவராகவும், மனித உரிமை ஆர்வலராகவும் திகழ்ந்த அவர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த மனிதராவார்' என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 'துரதிஷ்டவசமாக 1999 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் விளைவாக, இந்தக் கொடூர மோதலினால் பலியான பலரில் அவரும் ஒருவராக மாறினார். பின்னாளில் சமாதானத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திப் பணியாற்றிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்ரன் பாலசிங்கம், இதுவரை முன்வைக்கப்பட்டவற்றில் நீலனின் அரசியலமைப்பு முன்மொழிவுகளே மிகச்சிறந்தவை எனக் குறிப்பிட்டார்' என்றும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையின் மையமாகத் திகழும் அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆவணத்திரைப்படம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/242345

இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!

6 days 3 hours ago
CCDயில் இஷாரா செவ்வந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா Mar 30, 2026 - 10:20 PM கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரின் பிறந்ததினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எட்டப்பட்ட நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குள்ளேயே கேக் வெட்டிக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவிற்கு தனிப்பட்ட ஒற்றர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. புலனாய்வுப் பிரிவினர் மூலம் இத்தகவலை உறுதிப்படுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், உடனடியாக பிராந்திய பொறுப்பதிகாரியைத் தொடர்புகொண்டு குறித்த செயற்பாட்டைத் தடுக்குமாறு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்கவை அங்கு அனுப்பி வைத்ததுடன், தாமும் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது, சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் சகோதரர் கேக் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதும், அவரது பெரியம்மா மற்றும் மகன் ஆகியோர் அங்கு வருகை தந்திருப்பதும் தெரியவந்தது. சந்தேகநபரை சிறைக்கூண்டிலிருந்து வெளியே அழைத்து வந்து, அங்குள்ள ஓரிடத்தில் கேக் வெட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. இதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், "கேக் வெட்டும்போது புகைப்படம் எடுக்க வேண்டாம், பின்னர் அவை இணையத்தில் வெளியாகிவிடும்" என அவர் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரின் உறவினர்கள் மற்றும் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 15 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பொறுப்பதிகாரியின் இத்தகைய செயற்பாடு குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். விசாரணைகளின்படி, சந்தேகநபரின் சகோதரருடன் குறித்த பொறுப்பதிகாரி நீண்டகாலமாகத் தொலைபேசியில் உரையாடி வந்துள்ளமையும், அவரே இந்தப் பிறந்தநாள் விழாவிற்குத் திட்டமிட்டு வாய்ப்பளித்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, குறித்த பொறுப்பதிகாரியின் சேவை விரைவில் இடைநிறுத்தப்படலாம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmndfbkxc000a356p3gen4pog

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன - வடக்கு மாகாண ஆளுநர்

6 days 4 hours ago
வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன - வடக்கு மாகாண ஆளுநர் 30 Mar, 2026 | 04:18 PM வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்த மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் அவற்றினை நிச்சயம் வலுவூட்டும். இந்தத் திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொத்துக்களை அதிகரித்து வருமானத்தைக் கூட்டிக்கொள்ள முடியும். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அது தொடர்பான விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன. இந்த நிதியைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்மொழிந்துள்ளமையின் ஊடாக அவற்றின் வருமானங்கள் நிச்சயம் அதிகரிக்கும்.எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தச் செயற்றிட்டங்களை நிறைவுறுத்துவதற்குத் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள 22 பிரதேச சபைகளால் 54 திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கு ஒவ்வொரு திட்டம் என்ற அடிப்படையில் 22 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பிரதி அமைச்சர் ருவன் செனரத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/242326

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

6 days 4 hours ago
யாழில் உழவு இயந்திரத்தால் பொலிசாரை மோதி கொலை செய்த சம்பவம் - இருவர் கைது Mar 30, 2026 - 09:36 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர், பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்லும் நோக்கில் வேகத்தை அதிகரித்து அவர்கள் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 50 வயதுடைய ஹெட்டியாராச்சி அல்பேர்ட் எனும் பொலிஸ் சார்ஜன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றைய உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்று (29) கைது செய்தனர். அவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ தினத்தன்று சாரதிக்கு உதவியாளராகச் சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று(30) பாலாவி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உழவு இயந்திரத்தைச் செலுத்திய பிரதான சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnddr87r0009356p3bbw8ta0

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

6 days 4 hours ago
அந்த நேரத்தில் - நாடுகளுக்கு இடையேயான ஆயுத விநியோகத்தில் - இரான் un தடைகளுக்கு இருந்த்தது. சிறிலங்கா விடயத்தில் இரான் இரகசியமாக செய்ய முடியாது. (ஹிஸ்புல்லாஹ், ஹூத்தி போன்றவைக்கு கொடுப்பது அனாமதேயம். ஏனெனில் அவை அரசு சாரா அமைப்புகள்) ருசியாவுக்கு கொடுக்கும் போது இரானுக்கு UN தடைகள் இல்லை. மேற்கு முறித்த jcpoa மூலம் தடைகள் விலக்கப்பட்டு இருந்தது ஆனால். மேற்றுகின் தடை இருந்தது, மேற்கின் தடை UN கடை அல்ல. இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம். இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம். கொத்தாக தோற்றம் அப்பதால் அவை cluster குண்டு அல்ல. (cluster ) குண்டு போடப்பட்ட பின் திசை, குறிவவைக்கப்பட்ட இலக்கை மாற்ற முடியாது. இந்த ஏவுகணை 1 பெரியஅளவு, மற்றும் பிரியும் ஏவுகணைகள் சிறியவை, இறுதியான terminal phase இல் கூட திசை, இலக்கை மாற்றலாம் (maneuverable). சிலவற்றில் ஒவ்வொரு சிறிய கணையையும் manoeuvre பண்ண முடியும். எது ஆயினும், நான் சொல்லியவை hardfacts. எனவே சொன்ன கருத்தை மாற்றாது. அனால், இரான், சிறிலங்கா உறவு அந்த நேர வசதிக்காக. தேயிலை - எண்ணெய் வியாபாரத்தை வசதிப்படுதியது அமெரிக்கா பின் இருந்து. வசதி. தேவை அற்றுப்போக உறவும் இல்லை இஸ்ரேல் - சிறிலங்கா உறவே தத்துவத்தின் அடிப்படையில் - மகாவம்ச, விவிலிய கால வேறுபாட்டை தவிர்த்து ஒரே தன்மை அடிப்படையில் - நிரந்தரமானது. மற்றது அவற்றின் பாதுகாப்பு வகிபாகம் - சிங்களதத்துக்கு எப்போதும் தமிழரால் அச்சுறுத்தல், இஸ்ரேல் அரபு (முஸ்லிம்களால்) அச்சுறுத்தல் (அதன் நிகழ் கால மாற்றம் - கிந்தியா சிங்களத்துக்கு ஆதரவு, தமிழர் எதிர். அரபிகள் இஸ்ரேலுக்கு உள்ளால் மிகவம் நெருக்கம் (காரணம் இருக்கிறது), இரான் (பெர்சியன்) இஸ்ரேல் க்கு எதிர்.) அனால், ஈடுபாடு அவ்வப்போது கூடும், குறையும்.
Checked
Sun, 04/05/2026 - 18:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed