4 days 19 hours ago
ஐயோ, நோபல் பரிசு கனவு போய்ச்சா? "ஆடாதடா ஆடாதடா மனிதா, ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவாய் முழுசா."
4 days 19 hours ago
அண்மைக் காலமாக அமெரிக்கா எதை வைத்து சண்டித்தனம் காட்டிச்சோ.......அதன் அடி மடியிலேயே கை வைக்கிறான் சீனாக்காரன்......சாரி ஈரான்காரன் 😂
4 days 19 hours ago
அப்போ, இந்தப்போர் முடிய வாய்ப்பேயில்லை எண்டுறியள். தெரியாத்தனமாக காலை விட்டு அதை எப்படி வெளியே எடுப்பது என்று தத்தளிக்கிறார்கள் அவர்கள். உங்களை சேதப்படுத்தி, நிம்மதியாக இருக்கலாமென கனவு கண்டவர்களுக்கு அதி சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவர்களிடம் ஆயுதமே முடிந்து விட்டதாம், இப்போ பதவியும் அந்தரத்தில், எங்கிருந்து யார் இழப்பீடு வழங்குவது? யாரை யார் தண்டிப்பது? அப்படி ஒரு நிலைப்பாடு இருந்திருந்தால்; இப்படி தான்தோன்றித்தனமாக எந்த ஆலோசனையும் அறிவுறுத்தலுமில்லாமல் போரை தொடங்கியிருப்பார்களா என்ன? அவர்கள் உங்களுக்கு எதை செய்ய நினைத்தார்களோ, அதை அவர்களுக்கு செய்து அந்த வலியை, இழப்பை அவர்கள் உள்ளளவும் மறக்காதபடி நினைத்து வருந்த செய்யுங்கள். மற்றபடி அவர்களது மக்களும் நீதித்துறையும் வரலாறும் அவர்களை தண்டிக்கும். தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நாடுகளை மிரட்டியதும் அக்கிரமித்ததும் தனக்கு நோபல் பரிசு தரவேண்டுமென்று அடம் பிடித்ததும் இப்படியான அழிவிற்குத்தான்.
4 days 19 hours ago
இந்திய,தமிழ்நாட்டு அரசியலில் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். இருந்தாலும் சீமானை மட்டும் தேர்ந்தெடுத்து அரசியல் வக்கிரம் செய்யும் கருத்தாளர் நீங்கள். தமிழ் நாட்டை பொறுத்தவரை ஈழ அரசியலையும் ஊறுகாய் போல் தொட்டு சுவைக்காத கட்சி ஏதும் இருக்கின்றதா என பார்த்தால் எந்த கட்சியுமே சிக்கவில்லை.
4 days 19 hours ago
டொனால்ட் ரம்ப் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஈரான் மீதான தாக்குதலும், நேட்டோ அமைப்பில் இருந்து விலகுதலும் இருந்துள்ளது என நினைக்கின்றேன்.பல தடவைகள் நேட்டோ செலவீனம் தொடர்பாக ஜேர்மனியுடன் முரண்பட்டுள்ளார். என்னைப்பொறுத்த வரைக்கும் நேட்டோ அமைப்பு அழிவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த நற்செயல்களும் கடுகளவிற்கும் இல்லை. நிற்க..... பல ஊடகங்களில் அமெரிக்க வரலாற்றில் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்கு முன் உலகில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருந்தது போல் எழுதி பினாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.ஏதோ ரம்ப் வந்த பின்னர்தான் உலக அழிவு நடக்கின்றது போல் பதறி கதறுகின்றார்கள். அடியே! அமெரிக்க வரலாற்றில் மற்ற நாடுகள் மீது அதிகாரம் செலுத்தியும்,ஆக்கிரமிப்பு செய்தும்,அழிவுகளை செய்தும்,கடக கணக்கில் குண்டுகளை போட்டதுதானே வரலாறு.👈 அதை பார்த்து போகத்திற்கு போகம் திட்டுவதுதானே நம்மவர் வழக்கமான செயல்.😎
4 days 20 hours ago
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ரியூசனில் ஆங்கிலம் படிப்பித்த கந்தையா மாஸ்ரர் அழகு சுப்பிரமணியத்தை சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது கதைகள் இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை! ஆங்கிலத்தில் ஒரு தமிழர் சிறப்பாக எழுதுவது பெருமையாக இருந்ததால் அழகு சுப்பிரமணியத்தின் பெயர் மறக்காமல் மனதில் ஒட்டிவிட்டது. கந்தையா மாஸ்ரர் ஆங்கிலம் படிப்பிப்பதை விட அதிகம் சுவாரசியமான “கதைகள்” சொல்லிக்கொண்டிருப்பார். அவர் சொன்ன கதையில் ஒன்று. ஒருவர் தனது நண்பரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். உணவு உண்டபின் தனது பிரமாண்டமான படிப்பறையைப் பெருமையாகக் காண்பித்தாராம். அங்கு பல அரிய நூல்கள் நிரம்பியிருந்தன. நண்பர் நூல்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு வந்தபோது அவர் கனகாலமாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம் ஒன்றைக் கண்டு, அதை இரவலாக படிக்க எடுத்துப்போகலாமா என்று கேட்டாராம். ஆனால் மற்றவரோ, அதை மறுத்து படிப்பறையில் இருக்கும் நூல்கள் எல்லாம் இரவல் வாங்கிச் சேர்த்தவையே என்றும் அதனால் அவர் நூல்கள் எதையும் பிறருக்கு இரவல் கொடுப்பதில்லை என்றும் சொன்னாராம்! நானும் எனது புத்தகங்களை (இரவல் வாங்கிச் சேர்த்தவை அல்ல, பணம்கொடுத்து வாங்கியவை!) பிறருக்கு இரவலாகக் கொடுக்க விரும்புவதில்லை. தவிர்க்கமுடியாமல் கொடுக்கவேண்டி வந்தாலும் ஒரு புத்தகம் மட்டும் கொடுப்பேன். அது திரும்ப வந்தபின்னர்தான் அடுத்ததைக் கொடுப்பேன்😇 குறிப்பு: தமிழாக்கம் செய்த எழுத்துக்கினியவனின் பெயர் அசோகன். அவரும் நானும் ஒரு காலத்தில் Nokia Research Center (NRC) இல் வேலை செய்திருக்கின்றோம். ஆனால் வேறு வேறு “ஆராய்ச்சிகள்” என்பதால் அவரை நான் நேரே சந்தித்திருக்கவில்லை. எனினும் தமிழருக்கு ஏன் தனிப்பெயர் என்ற அவருடைய குறிப்பை Nokia Bulletin Board இல் படித்திருந்தேன். https://asokan.org/asokan/name.php நானும் யாழில் எமது பெயர் வைக்கும்முறைகளைப் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன்!
4 days 20 hours ago
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம் தமிழில்: எழுத்துக்கினியவன் 1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம். தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/). இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான். இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள். “வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள். ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின. இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே இருந்ததில்லை. ஆனால் ஒரு நாள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த ஒரு சந்தைத் திடலில் நடந்த திறந்த வெளிக் கூட்டத்துக்குப் பிறகு கந்தல் உடையிலிருந்த ஒரு சிறு பையன் கேட்ட சாதுரியமான கேள்விகளால் பிரமித்துப் போன மிஷன் பாடசாலை முகாமையாளர், அந்தப் பையனுக்குப் புலமைப் பரிசிலோடு பாடசாலை அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்தப் பையன்தான் ரங்கு. அந்தச் செய்தியைக் கேட்டதும் அவனுடைய பெற்றோருக்கு நல்ல மகிழ்ச்சி. இந்தக் கொல்லர் பட்டறையிலே மாய்வதை விட அவன் நன்றாக ஆங்கிலம் கற்றால் எப்போதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். விரைவிலேயே ரங்குவுக்குப் படிப்பில் ஆர்வம் பிறந்ததும் வேகமாக முன்னேறினான். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முதல் ரங்கு கொல்லர் பட்டறையில் எடுபிடி வேலைகள் செய்தபடியால் அவனது உடல் திடகாத்திரமாகத் திரண்டு வளர்ந்திருந்தது. அது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு மிகவும் உதவியது. இந்தப் புதிய மாணவன் வெகு விரைவில் வகுப்பாசிரியருக்கும் விளையாட்டு ஆசிரியருக்கும் மிகவும் பிடித்தமான மாணவன் ஆகி விட்டான். வகுப்பாசிரியர் தானே மதமாற்றம் செய்து கொண்டவர். அவரை மதமாற்றம் செய்தவர்களை விடத் தீவிரமான மதப்பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். ரங்குவில் ஒரு வருங்கால மதமாற்ற வாய்ப்பை இனங்கண்டு கொண்டார். பாடசாலையில் முதலாவது பாடம், “சமய அறிவு.” மாணவர்களுக்கு முதலில் பழைய ஏற்பாட்டு விவிலிய நூலும் அதற்குப் பிறகு சுவிசேஷங்களும் புகட்டப்பட்டன. ரங்கு இவற்றை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கற்றுக் கொண்டான். இதைக் கண்டு மகிழ்ந்த மறைப்பணியாளர்கள் ரங்குவுக்குச் சிறுவருக்கேற்ற மொழியில் எழுதப்பட்ட அழகான மதக் கதைப் புத்தகங்களை அன்போடு கொடுத்தார்கள். பலவண்ணச் சால்வைகளையும் வெள்ளை வேட்டிகளையும் அன்பளித்தார்கள். ரங்கு தன் ஆசிரியரின் வழிகாட்டலில் செழித்து வளர்ந்தான். எட்டாம் வகுப்பை அடைந்தபோது அவனுக்குப் பொதுவான பாடங்களின் அடிப்படை அறிவு நன்றாக இருந்தது மட்டுமல்லாது, விவிலிய நூலில் உள்ள வார்த்தைகளை மனப்பாடமாக்கி ஓதுவதற்கும் முடிந்தது. பாடசாலையின் வருடாந்தரப் பரிசளிப்பு விழாவில் சமய அறிவுக்கான பரிசு அவனுக்கே கிடைத்தது. கிறீத்தவனல்லாத ஒரு மாணவன் இந்தப் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது என்று பாராட்டிய பாடசாலை அதிபர் ஆசிரியர்களைத் தங்கள் வேலையைச் சீராகச் செய்ததற்கும் ரங்குவை அவன் கெட்டித்தனத்திற்கும் மெச்சினார். தனக்கிருந்த இந்த அறிவைப் பற்றி ரங்குவுக்கு மிகுந்த பெருமை. தனது அறிவைத் தன் பெற்றோருக்கும் முக்கியமாகச் சகோதரர், மைத்துனர்களுக்கும் காட்டிக் கொள்ள விரும்பினான். அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாததால் அவர்களோடு கணிதத்தைப் பற்றியோ சரித்திரத்தைப் பற்றியோ அளவளாவ முடியாது. ஆகவே, படிப்பறிவு இல்லாதவர்களுக்குக் கூட கதை கேட்பது சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்து அவர்களுக்கு விவிலியக் கதைகளைச் சொல்ல விழைந்தான். ஆனால் அந்த நடவடிக்கை அவனது உறவினர்களுக்குச் சந்தேகத்தையே கிளப்பியது. தங்களுடைய அன்பு மகன் பிழையான வழியில் போய் ஒரு நாள் கிறீத்தவ மதத்துக்கு மாறியே விடுவான் என்று பயந்தார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவன் ஓரளவு படித்தால் ஏதாவது மதிப்புக்குரிய வேலை கிடைக்கும் என்பது மட்டும்தான். அவனது ஆசிரியர்களின் மதத்தை உதாசீனம் செய்யும்படி உறவினர்கள் அடிக்கடி அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள். இப்போது ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டான் எனப் பயந்தார்கள். ஒரு நல்ல மாதச் சம்பளம் தரும் வேலையில் உள்ள கிறீத்தவனாக இருப்பதை விடப் படியாதவனாகக் கொல்லர் பட்டறையில் மாய்வது நன்று என்று நினைத்தார்கள். ஒரு நாள் தான் பாதிரிமாருடன் தேவாலயத்துக்குச் சென்றதாக ரங்கு சொன்ன போது அவனது அப்பா “விசுவாசமில்லாத முட்டாள்!” என்று ஏசினார். “மதம் மாறிப் போடாதையடா,” என்று அவனது அம்மா கெஞ்சினார். “இந்தப் பறங்கிப் பாதிரியளை நம்பாத. அவங்கள் உன்னை எங்களிட்டையிருந்து பிரிச்சுக் கொண்டு போகப் பாக்கினம். ஐயோ! நீ என்னை விட்டுட்டுப் போனா நான் என்ன செய்வனோ?” என்று புலம்பினார். “நான் ஒரு நாளுமே உங்களை விட்டுட்டுப் போக மாட்டன், அம்மா,” என்றான் ரங்கு, “நான் மதம் மாறினாலும் எப்பவுமே உங்கடை சொந்த மகனாத் தானே இருப்பன்.” “ஐயோ, மோனை, மதம் மாறப் போறன் எண்டு சொல்லாத. உன்ர சொந்த பந்தங்களின்ர மதத்தை, முக்கியமா உன்ர அம்மான்ர மதத்தை விட்டு மாறுவியா? ரங்கு, என்ர மூத்த பிள்ளை, நான் சாகேக்க எனக்கு என்ன நடக்கப் போகுதோ?” “என்னம்மா சொல்லுறீங்கள்?” “ஆர் எனக்குக் கொள்ளி வைக்கப் போகினம், பிள்ளை? கொள்ளி வைக்கிறது மூத்த மகனின்ர கடமை. இந்தத் தொந்தி வச்ச ஐயர்மார் ஒரு வேதக் காரனை அந்தப் புனித வேலையைச் செய்ய ஒரு நாளுமே விட மாட்டாங்கள்.” “அம்மா! சாவைப் பற்றிக் கதையாதையணை. நீ என்னைப் பயப்பிடுத்துறாய்.” “நீ மதம் மாற மாட்டன் எண்டு சத்தியம் பண்ணித் தந்தால் நான் உன்னைப் பயப்பிடுத்தேல்லை.” அம்மாவின் சொற்கள் ரங்குவின் மனத்தைத் தொட்டன. அவன் ஆணிவைத்து அடித்தாற் போல இருந்த இடத்திலேயே அசைய முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றான். “சரி ரங்கு,” என்று தொடர்ந்தாள் அம்மா, “நீ போய்ப் படி. அடுத்த கிழமை உனக்குப் பள்ளிக்கூடச் சோதினை இருக்கு.” ரங்கு பாடசாலைப் பரீட்சையில் வெற்றிகரமாகச் சித்தியடைந்தான். எட்டாம் வகுப்பு என்பதால் அவனுக்கு ஆங்கிலப் பள்ளி விடுகைச் சான்றிதழ் கிடைத்தது. ஒரு அடித்தர வேலை எடுக்க அது போதுமானது. அவனது இலட்சியங்கள் குறைவாகவே இருந்ததால் அவன் மேற்கொண்டு படிப்பதை விரும்பவில்லை. அந்த நாளிலிருந்து அவன் பழைய மாணவனாகவும் கீழ்மட்ட ஊழியர்களின் நண்பனாகவும் பாடசாலைக்குப் போய்வந்தான். இடைக்கிடை யாராவது ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு வர முடியவில்லை என்றால் அவர்களது வகுப்புகளுக்குப் போய் பிரதி ஆசிரியராகவும் பள்ளிக்கூட நிர்வாக வேலைகளுக்கு உதவியாளனாகவும் பணி செய்தான். கரடுமுரனான பாறை போல இருந்த படிப்பறிவில்லாத ஒரு கொல்லனைத் தாங்கள் செம்மை செய்து ஒரு சீரான சிற்பம் போலச் செதுக்கியதையிட்டுப் பள்ளிக்கூட நிர்வாகிகள் மிகவும் பெருமிதம் அடைந்தார்கள். பள்ளிக்கூடத்தின் எழுதுவினைஞர் குழாமில் ஒரு வெற்றிடம் வந்தபோது ரங்குவை உதவி எழுதுவினைஞனாக நியமனம் செய்தார்கள். ரங்குவுக்கோ நிரந்தரமான ஆசிரியனாக வருவதுதான் இலக்கு. ரங்கு அதுவரைச் செய்தது உண்மையாகவே ஒரு அற்புதமான சாதனை. அவனது நியமனத்துக்கு முன் ஒரு கொல்லன் எழுதுவினைஞனாக வருவான் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத எட்டாக் கனியாக இருந்தது. படிப்பறிவில்லாதவர்கள் அவனை ஒரு மரியாதையுடன் பார்த்தார்கள். ஆனால் அவன் ஒரு ஆசிரியனாகினால் அதற்குக் கிடைக்கக்கூடிய மரியாதை இன்னும் பல மடங்கு அதிகம். அவர்கள் அறிவைத் தலைதாழ்த்தி வணங்கி மதிப்பவர்கள். அவன் ஆசிரியனானால் மரியாதையுடன், ‘பண்டிதர்’ என்று அழைப்பார்கள். ஒருநாள் ரங்கு மதம் மாறுவது என்ற முடிவைச் சடுதியாக எடுத்தான். உடனே அவனுக்கு ஞானஸ்நானம் செய்து தேவாலயத்தின் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள். அவனது அப்பாவின் கோபம் அனல் தெறித்துப் பறந்தது. அவனது அம்மா கவலையால் மனமுடைந்து போனாள். அவனது எதிரிகள் அவனை, “பாதிரிகளின் அடிமை,” என்று இகழ்ந்தார்கள். அவன் ஏன் மதம் மாறினான் என்பதற்குப் பலதும் பத்துமாகப் பல்வேறு கதைகள் உலாவின. “அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்க வேணுமெண்ட பேராசை. ஆனவடியா பாதிரிகளுக்கு வால் பிடிக்கப் பாக்கிறான். மதம் மாறாமலே பதவி உயர்வு எடுத்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அலுவலக வேலை எடுத்திருக்கலாம். உதவாக்கரைப் பயல்!” என்று சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள். “அவன் தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்தவன். அப்படியானவன் எப்பவும் தன்ர குணத்தைக் காட்டுவான். அவன் ஒரு கொல்லன் தானே. அவனுக்கு அடிமையா இருக்கிறதுதான் விருப்பம்,” என்றனர் வேறு சிலர். “அவன் நேர்மையானவன். உண்மையான கடவுளைச் சேர வேணுமெண்ட உந்துதல் அவனுக்கு வந்திருக்கு,” என்றனர் பள்ளிக்கூடத்திலுள்ள அவனது சக ஊழியர்கள். அவனது எதிரிகள் பொறாமையால் வாடினர். அவனையும் அவனது வெற்றிகளையும் வெறுத்தனர். பள்ளிக்கூடத்தில் அவனது பதவியைப் பற்றியோ அவனுக்குள்ள மரியாதையைப் பற்றியோ கேள்விப்படும் போதெல்லாம் கத்தியால் குத்தினது போல அவர்களின் பொறாமை அவர்களை வாட்டி வருத்தியது. ஒரு மாலை நேரம் அவர்கள் எல்லோரும் எப்படி ரங்குவை வீழ்த்துவது என்று சதித்திட்டம் போடுவதற்காக ஒன்று கூடினார்கள். ரங்குவை அறவே வெறுக்கும் ஒருவன் முதலில் பேசினான். ரங்கு ஒரு நேர்மையற்ற நயவஞ்சகன் என்றும் அவன் உண்மையிலேயே இந்துவாக இன்னும் இருந்து கொண்டாலும் கிறீத்தவன் போலத் தன் எசமானர்களுக்குக் காட்டிக் கொள்கிறான் என்றும் ஒரு முறைப்பாட்டைப் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தான். இதற்கு அத்தாட்சியாக ரங்குவின் வாழ்க்கையின் பல சம்பவங்களை அவர்கள் இலகுவில் முன் வைக்கலாம். “இதை வலு கவனமாச் செய்ய வேணும்,” என்று இன்னொருவன் எச்சரித்தான், “இப்பிடி முறையீடு அனுப்பினால் அதால பெரிய விளைவொண்டும் வராமல் விடலாம். ரங்கு மதம் மாற முதலே அவனைக் கிளாக்கரா நியமிச்சவை எண்டதை மறந்திடாதேங்கோ. நாங்க நினைக்கிற மாதிரி அவன் மதம் மாறினது அவ்வளவு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ தம்பிமார், எங்கட சமயத்தவரைப் பற்றி யோசிச்சுப் பாருங்கோ. பள்ளிக்கூடத்தில அவையள் கொஞ்சப் பேர் தான் இருந்தாலும் நல்ல பதவியளில இருக்கினம். ஆனபடியா அந்தரப் பட்டு மொக்குத் தனமா ஒண்டும் செய்யாமல் கவனமா யோசிச்சுச் செய்வம்.” “நீங்கள் ரெண்டு பேரும் சொல்லுறது சரிதான்,” என்றான் இன்னுமொருவன், “இப்ப ரங்கு வேதக்காரன் ஆகிவிட்ட படியா, ‘அவன் உண்மையான வேதக்காரன் இல்லை, அவன் ஒரு கள்ளன், நயவஞ்சகன்,’ எண்டு சொல்லி ஒரு முறைப்பாடு அனுப்பினால், அது கட்டாயம் வேலை செய்யும். நயவஞ்சகம், நடிப்பு, பொய், இதுகளெல்லாம் வேதக்காரருக்குக் கொஞ்சமும் பிடியாத விஷயங்கள் எண்டதை மறந்துடாதேங்கோ. முறைப்பாடு கட்டாயம் வேலை செய்யும். அந்தக் கேடுகெட்ட படவான்ர வேலை பறிபோகும் எண்டதுக்கு நான் என்ன பந்தயமும் வைக்கத் தயார். சிவசிவா! அவன்ர வேலை பறிபோகும்!” “சரியாச் சொன்னீங்கள் அண்ணை, சரியாச் சொன்னீங்கள்,” என்று இரண்டாவதாகப் பேசியவனைத் தவிர மற்ற எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதித்தார்கள். முறையீடு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். முறையீட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக அடுத்த முறை கூடுவதற்கு நாளும் குறித்தார்கள். அவர்கள் கலையத் தொடங்கும் போது ஒருவன், “முறைப்பாட்டுக் கடிதத்தில கையெழுத்து வைக்கக் கூடாது. மொட்டைக் கடிதமாத்தான் அனுப்ப வேணும்,” என்றான். “ஓமோம்!” என்று மற்றவர்கள் ஆமோதித்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு இனங்கண்டு கொள்ள முடியாத பீதி படர்ந்தது. பாடசாலை அதிபர் முதலில் அந்த முறையீட்டுக் கடிதத்தை உதாசீனம் செய்தார். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது அது ஒரு மொட்டைக் கடிதம். அவர் எப்போதுமே மொட்டைக் கடிதங்களைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பவர். இரண்டாவது, அந்தக் கடிதத்திலிருந்த குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. யார் மேலும் அப்படியான குற்றச்சாட்டுகள் திணிக்கப் படலாம். அவற்றை நிரூபித்துத் தண்டனை வழங்குவது முடியாத காரியம். இவையெல்லாம் தனித்தனி ஆட்களின் நேர்மைக்கே என்று விடப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் மொட்டைக்கடிதங்கள் இடைவிடாது வந்த வண்ணமே இருந்தன. ஒரு நாள் அலுப்புத் தாங்க முடியாமல் உதவி எழுதுவினைஞனைத் தன்னைச் சந்திக்க வருமாறு பணித்தார். ரங்கு எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தான். அடுத்த ஞாயிறு தேவாலயத்தில் திருப்பலி பூசை முடிந்ததும் சபையிலிருந்த ஒரு தேவாலய உறுப்பினர் யாரையாவது பிரார்த்தனை செய்யும்படி பாதிரியார் வரவழைத்த போது ரங்குவே தன்னார்வத்துடன் எழும்பிப் போய்ப் பிரார்த்தனை செய்தான். கொஞ்ச நாள் பள்ளிக்கூடத்தில் எல்லாம் சுமுகமாக நடந்தது. ரங்குவின் எதிரிகள் இன்னுமொரு முறை அவனைக் குற்றம் சாட்ட முனைந்தார்கள். அவன் அடிக்கடி ‘சிவசிவா’ என்று சொல்கிறான் என்று முறையிட்டார்கள். “அவன் உதடுகளில் எப்பொழுதும் இருப்பது சிவபெருமானின் பெயர்தான், யேசுநாதரின் பெயரல்ல.” மீண்டும் அதிபரின் அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதங்கள் சரமாரியாகப் பொழியத் தொடங்கின. இந்தப் பிரச்சனை ஏதோ விதமாக மறைந்து போய் விட்டது என்று நினைத்திருந்த அதிபருக்கு இது மிகவும் எரிச்சல் ஊட்டியது. அவர் மொட்டைக் கடிதங்களைக் கவனமாகப் படிக்காமல் மேலோட்டமாகத் தான் பார்த்தார். பாடசாலைத் தலைவர் என்பதால் அவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. ஒரு சனிக்கிழமை ஒரு மொட்டைக் கடிதம் அவரது கையைப் போய்ச் சேர்ந்தது. சனிக்கிழமைகள் தமிழ் இலக்கியத்துக்காக என்று அவர் ஒதுக்கிய நாட்கள். அந்த நாட்களில் அவர் திருக்குறளைத்தான் படிக்க விரும்பினார், மொட்டைக் கடிதம் எழுதுபவர்களின் கிறுக்கலான கையெழுத்துகளையல்ல! அவர் உதவி அதிபரை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். உதவி அதிபவர் இந்த நாட்டுக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. ரங்குவின் மேற் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என்றுதான் அவருக்குப் பட்டது. இதை உடனேயே விசாரித்தறிய வேண்டும் என்று தீர்மானித்தார். அடுத்த நாள் அவர் ரங்குவின் வீட்டுக்குப் போனார். “வணக்கம், சேர்,” என்றான் ரங்கு. “வணக்கம், ரங்கு.” “கொஞ்சம் நிண்டு கொள்ளுங்கோ சேர், நான் ஒரு கதிரை கொண்டு வாறன்,” என்ற ரங்கு தன் குடிசைக்குள் போய் ஒரு நாற்காலியைக் கொண்டு வருவதற்காகத் திரும்பினான். “கதிரையை விடு. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இங்க ஒரு முக்கியமான விஷயம் இருக்குது,” என்றபடி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை உப அதிபர் எடுத்து அதை ரங்குவின் கையில் கொடுத்து விட்டு, “இது உண்மையா?” என்று கேட்டார். ரங்கு கலக்கத்துடன் கடிதத்தை வாங்கிப் படிக்கும் போது அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. “இது முழுப் பொய் சேர்! முழுப் பொய்!” “பொய் எண்டா ஏன் இப்பிடி எழுதிறாங்கள்?” என்று உறுமினார் உப அதிபர். “அவங்களுக்கு என்னில பொறாமை சேர். நான் இங்கை நல்ல வேலையில இருக்கிறதால என்னை வெறுக்கிறாங்கள். எனக்கு வேலை தந்ததுக்காக அதிபர் ஐயாவிலையும் அவங்களுக்குக் கோவம். சேர், தயவு செய்து அவங்களை நம்பாதேங்கோ. அவங்கள் நான் கொல்லன் பட்டறையில மட்டும்தான் வேலை செய்யலாம் எண்டு நினைக்கிறாங்கள்,” ரங்கு கொஞ்சம் மௌனமாக இருந்து விட்டுத் திரும்பவும் அழுதான். “இவங்கள் கெட்ட மனசுள்ள மனிசர், சேர். இந்த ராஸ்கல்களை ஒரு நாளும் நம்பாதேங்கோ.” கையை முட்டியாக்கிக் குலுக்கியபடி, “எனக்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைச்சா… அவங்களுக்கு நல்ல பாடம் படிப்பிச்சுத் தருவன்,” என்றான். பிறகு கைகள் இரண்டையும் மேலே தூக்கி, “சிவசிவா, நான் எப்பிடி யேசுநாதரை மறக்க முடியும்!” என்றான். இதைக் கேட்டதும் உப அதிபருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரது முகம் உடனே நெருப்பாகச் சிவந்தது. ரங்கு மேற்கொண்டும் விளக்க எத்தனிக்க, “இவ்வளவும் போதும். நான் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு.” என்று சொல்லிவிட்டுக் கொல்லன் பட்டறையை விட்டு வெளியேறி நடந்தார். ரங்கு உப அதிபருக்குப் பின்னால் ஓடிப் போய் அவரது கையைப் பற்றி இரந்தான், “கோவிக்காதேங்கோ சேர். நான் என்னவோ பிழையாச் சொல்லீட்டனா? திருப்பிப் பட்டறைக்கு வாங்கோ, நான் எல்லாம் விளங்கப் படுத்திறன்.” “எனக்கு உன்னட்டை இருந்து இதுக்கு மேல எதையும் கேக்கிற தேவை இல்லை,” என்று உப அதிபர் கத்தினார். பிறகு தன் கையைப் பலவந்தமாக விடுவித்துக் கொண்டு நடந்து போய் விட்டார். ரங்கு குழப்பத்துடன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். பிறகு, கைகளைப் பிசைந்தபடி, “சிவசிவா, நான் அழிஞ்சன்!” என்ற சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உப அதிபர் நேரடியாக அதிபரிடம் சென்று என்ன நடந்தது என்பதை விவரித்தார். ஆனால் அதிபர் ரங்குவின் நடத்தையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அது உப அதிபரை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏன் அதிபர் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்ட மாதிரி இப்படி வாய்விட்டுச் சிரித்தார் என்பது அவருக்குப் புரியவேயில்லை. “உமக்கு இந்த இடம் புதுசு,” என்றார் அதிபர், “நான் சிரிச்சதைத் தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம். உமக்குக் காலம் போகப் போக ஏன் சிரிச்சன் எண்டு விளங்கும். இப்ப உமக்குக் களைப்பா இருக்கும். போய் ஓய்வு எடும்.” ரங்கு அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து, அடுத்த நாள் விடிகாலையிலேயே வேலைக்குப் போய்க் கடுமையாக வேலை செய்தான். தன் வருங்காலத்தைப் பற்றி அவனுக்குப் பெருத்த யோசனையாக இருந்தது. ஏதோ தவறு செய்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு மங்கலாக இருந்தாலும், அது என்ன தவறு என்பதை அவனால் இனங்கண்டு கொள்ளவே முடியவில்லை. அதிபரும் உப அதிபரும் வழமை போல் சரியாக நேரத்துக்கு வேலைக்கு வந்தார்கள். ரங்குவின் கை நடுங்கத் தொடங்க அவன் கையெழுத்துக் கோணிப் போனது. அதிபர் தனது இருக்கையிலிருந்தபடி இதைக் கவனித்தார். பிறகு அவர் எழும்பி உதவி எழுதுவினைஞன் இருந்த இடத்துக்குப் போய் ஒரு கடிதத்தை அவனிடம் கையளித்தார். ரங்கு அதிர்ந்து போனான். இப்படி இதற்கு முன் ஒரு போதும் நடந்ததில்லை. நடுங்கும் கைகளால் கடிதத்தைத் திறந்து படித்தான். கண்களை ஒரு முறை மூடித் திறந்து விட்டு, இன்னொரு முறை கடிதத்தைத் படித்தான். அது உண்மைதான்! அவன் கடிதத்தில் படித்தது உண்மைதான். அவன் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆசிரியராகப் பதவி உயர்த்தப் பட்டிருக்கிறான். அவன் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. “ஓ! இப்பேர்ப்பட்ட நல்ல சேதி,” என்றான் அவன், “நன்றி சேர், மிக்க நன்றி.” கைகளைத் தூக்கிக் கடிதத்தைத் தலைக்கு மேல் உயர்த்தி, உரத்த குரலில், “சிவசிவா. நான் ஒருநாளுமே யேசுநாதரை மறக்க மாட்டேன்!” என்று கத்தினான். உப அதிபர் தன் காதுகளை நம்ப முடியாமல் அவனை வெறித்துப் பார்த்தார். பிறகு அதிபரைத் திரும்பிப் பார்த்தார். அதிபர் தன் மகிழ்ச்சியை மறைப்பதற்காகத் தலையைத் திருப்பிக் கொண்டார். அழகு சுப்பிரமணியம் — ஒரு வாழ்க்கைக் குறிப்பு பிரேமிளா துரைரட்ணம் (தமிழாக்கம்: எழுத்துக்கினியவன்) 1947ஆம் ஆண்டு 37 வயதில் இலங்கை திரும்பிய போது எடுத்த படம். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அழகு சுப்பிரமணியம் (1910-1971) வழக்கறிஞராகவும் (barrister-at-law), சிறுகதை, வானொலி நாடக எழுத்தாளராகவும், நாடகக் கதாசிரியராகவும் திகழ்ந்தார். அவரது தந்தையார் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவரது பாட்டனார் ஒரு இலக்கிய கர்த்தா. இந்த இரண்டு தொழில்முறைகளையும் வெற்றிகரமாக ஒருமிக்க வைத்த அழகு சுப்பிரமணியம், தலை சிறந்த வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். 1933 ஆம் ஆண்டில் 23 வயதிலேயே இங்கிலாந்தின் லிங்கன் நீதிமன்ற அகத்தின் கௌரவக் கழகத்தில் (Honourable Society of Lincoln’s Inn) அனுமதிக்கப்பட்டார். 1941இல் இங்கிலாந்தில் வழக்கறிஞராகத் தொழில் புரியும் அனுமதி பெற்றார் (called to the bar). இலண்டன் மாநகரின் ப்ளூம்ஸ்பெரி இலக்கிய வட்டங்களில் ஏற்கெனவே நன்றாக அறியப்பட்டிருந்தவர், இலண்டன் எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் ஒன்றுகூடல்களில் ஒரு பெரிய ஆளுமையாக வரவேற்கப்பட்டார். Indian Writing என்ற இலக்கியச் சஞ்சிகையை நிறுவிய பத்திரிகாசிரியர்களில் ஒருவராக அழகு சுப்பிரமணியம் கடமையாற்றினார். இந்தச் சஞ்சிகையில் இரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. விரைவிலேயே இந்தச் சஞ்சிகை இலண்டனில் இருந்த தெற்காசியாவைச் சேர்ந்த தீவிரமான காலனித்துவ எதிர்ப்புவாதிகளின் இயங்கு தளமாக உருவெடுத்தது. இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலண்டன் கிளையின் செயலாளர் என்ற முறையில் அழகு சுப்பிரமணியம் இலண்டனைச் சேர்ந்த உள்ளாட்சி இல்லம் (Swaraj House) என்ற காலனித்துவ எதிர்ப்பு அமைப்பில் ஈடுபட்டிருந்தார். 1935ஆம் ஆண்டின் பனிக்கால மாதங்களில் Bibliophile என்ற புத்தகக் கடையைத் திறந்த சசதர் சின்ஹாவின் உதவியாளராகவும் பணியாற்றினார். 1947இல், இலங்கை சுதந்திரமடைவதற்குச் சற்று முன்னர், இலங்கை திரும்பினார். அழகு சுப்பிரமணியத்தின் கதைகள் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசியின் உள்ளக மற்றும் வெளிநாட்டுச் சேவைகளில் ஒலிபரப்பப் பட்டன. அவரது ஆக்கங்கள் தமிழுக்கும் மற்றும் ரஷ்ய, போலிய, இடாய்ச்சு (யேர்மன்), கன்னட மொழிகளுக்கும் மொழியாக்கப் பட்டன. நகைச்சுவை ததும்பும் ‘The Mathematician’ என்ற சிறுகதை உலகளாவிய ஆளுமையான அன்டன் செகோவின் எழுத்துக்கு நிகரானது எனக் கருதப்படுகிறது. இதன் இடாய்ச்சு மொழியாக்கம், ஹைடல்பேர்க் நகரத்தில் வெளியிடப்பட்ட Briefly Told: The Finest Stories, in World Literature என்ற தொகுப்பில் உள்ளடக்கப் பட்டது. ‘Lovely Day’ என்ற கதை Best Indian Short Stories என்ற தொகுப்பில் இடம்பெற்றது. இன்றும் இவரது ஆக்கங்கள் இலங்கையில் ஆங்கில இலக்கிய மாணவர்கள் பலரை, பல்கலைக்கழக இளமானி மாணவர்கள் உட்பட, உவக்க வைக்கின்றன. அழகு சுப்பிரமணியத்தின் சில சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு “நீதிபதியின் மகன்” என்ற தலைப்புள்ள சிறுகதைத் தொகுப்பாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. இவை கொழும்பில் இலங்கை தேசிய நூலகத்திலும் இலண்டனில் பிரித்தானிய நூலகத்திலும் உள்ளன. இதுவரை தமிழாக்கப்படாத சிறுகதைகளை எழுத்துக்கினியவனும் அனுஜா பிரகாஷும் தமிழாக்கி வருகிறார்கள். இந்த இதழில் வெளியாகும் “மதமாறி” என்பது அப்படியான ஒரு கதையே. Art : Слава எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-convert-shorts-story/ அழகு சுப்பிரமணியம்- https://thuppahis.com/2022/03/07/the-extraordinary-alagu-subramaniam/
4 days 22 hours ago
மனித இனத்தில் தப்பிப் பிறந்த மிருகங்களின் செயல்.
4 days 22 hours ago
திமுகவினரே உள்ளவர்களில் மிகப் பெரும் கொள்ளையர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதை நான் மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன். திமுகவின் குடும்ப ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். ஆனால் மாற்றீடாக முன்னிறுத்தப்படுபவர்கள் சமூகத்தை ஒரு சிறு அளவேனும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இருப்பதை விட இன்னும் கீழ் நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு நிகழ்வாக புதிய வரவு அமையக் கூடாது. விஜய்க்கு முன்னேயே கமல் இன்றைய திமுகவை எதிர்க்க வந்தார். ஒழுங்காக வரி கட்டவில்லை என்னும் குற்றம் கூட அவரிடம் காணமுடியாது. தனிப்பட்ட ரீதியில் தனக்கு திருமண பந்தத்தில், இந்த குடும்ப அமைப்பில் நம்பிக்கை கிடையாது என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை ஒரு சர்ச்சையாகவோ அல்லது விளம்பரமாகவோ ஆக்கவில்லை. அது ஒரு பேசுபொருளாகவே ஆகவில்லை. ஓரளவுக்கு மக்களிடையே பயணிக்க முற்பட்டார். ஆனால் அவருக்கு சுயநினைவு இருக்கும் வரை அறிவுஜீவி என்னும் முகமூடியை அவர் கழட்டப் போவதில்லை. அவர் ஒரு துறையில் மிகவும் சிறந்தவர், வல்லுனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில், அவர் எந்த வகையிலும் ஒரு அறிவுஜீவி கிடையாது என்பதும் உறுதி. அர்னாப் வழி நடத்திய கமல் - ஸ்மிருதி இரானி இடையேயான விவாதத்தை பார்த்தீர்கள் என்றால் நான் சொல்வது புரியும். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்ட அவரால் மக்களுடன் இறங்கி வரவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பிரச்சனைகளைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லை. நான் கதையாக எழுதிய என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் பற்றிய நிகழ்வு கமலின் அரைகுறை புரிதலுக்கு, அதனால் வரும் ஆபத்துக்கு நல்லதொரு உதாரணம். கமலின் அரசியல் முயற்சி பற்றி இன்னும் பலதை எழுதலாம். ஆதலால், நான் ஆரம்பத்தில் இருந்தே கமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், இன்னும் சில அழியாப் படங்களை அவரால் கொடுக்க முடியும், கமலின் அரசியல் ஒரு ஆக்கபூர்வமான அரசியலே அல்ல என்று எழுதியிருக்கின்றேன். கமலை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ரஜனிக்கும் அதிகம் தான். அஜித்துக்கும் அதிகமே. தமிழ்நாட்டு ரசிகர்களின் பின்புலங்களை ஆராய்ந்தால், கமல் - ரஜனி - விஜய் - அஜித் ரசிகர்களின் இடையே ஒரு தெளிவான கோடு இருப்பது தெரியும். ரஜனியினதும் விஜய்யினதும் பெரும்பாலான ரசிகர்கள் ஒரு வகையினராகவும், கமலினதும் அஜித்தினதும் பெரும்பாலான ரசிகர்கள் இன்னொரு வகையினராகவும் இருக்கின்றார்கள். தங்கள் குரல்கள் கேட்கப்படவில்லை, தாங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றோம் என்னும் ஒரு சாரார் எங்கும், என்றும் இருக்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கின்றார்கள் - அதிபர் ட்ரம்ப் பின்னால் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள் - அர்ச்சுனாவின் பின் சென்றார்கள். வட இந்தியாவில் இருக்கின்றார்கள் - பாஜகவின் பின் செல்கின்றார்கள். இனவாதம், மதவாதம், ஒரு தற்காலிக கவர்ச்சி என்று ஒன்றைப் பற்றிக் கொள்ளுகின்றார்கள். அதை ஒரு புரட்சி என்று நினைத்தும் கொள்ளுகின்றார்கள். விஜய்யின் பெரும்பாலான ரசிகர்களும் இந்த வகையினரே. இவர்கள் பொதுவான இளைஞர்கள் கிடையாது, இவர்களின் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமே. 'சங்கீதா போகட்டும்.............. நானே மனைவியாக வருகின்றேன்.....................' என்று பொதுவெளியில் முழக்கம் இடுபவர்கள். இதற்கு விஜய் அவருடைய ரசிகர்களுக்கு சொல்லிய பதில் என்ன.................... திமுகவின் குடும்ப ஆட்சியை ஒழிக்க இவர்களையா தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மேடையில் விஜய் தோன்றி மறைவதும், ஒரு பொருள் விற்பனைக்கான சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும் ஒரு நடிகரின் தொலைக்காட்சி விளம்பரத்துக்கும் ஒரு வித்தியாசமும் இதுவரை தெரியவில்லை. இதில் என்ன தமிழ்நாட்டு நலன் சார்ந்த அரசியல் இருக்கின்றது? விஜய் இதுவரை எங்கு மக்களுடன் மக்களாக போய் இருந்திருக்கின்றார்? எந்த பிரச்சனையில் முன் நின்று போராடியிருக்கின்றார்? எவருடன் உரையாடியிருக்கின்றார்? கூட்டம் அடங்காமல் போய் விடும் என்று சொல்லுவார்கள். அது அடங்கவே கூடாது என்பது போலவே தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றீர்கள். அடங்காத இந்தக் கூட்டத்துடன் அவரது ரசிகர்களைத் தவிர வேறு எவரும் இணையப் போவதில்லை. விஜய் திருச்சி கிழக்கில் ஏன் நிற்கின்றார்? கிறிஸ்தவர் என்பதால் தானே............... தாரளமாக அங்கே அவர் நிற்கட்டும். திராவிடக் கட்சிகளும் இதையே தானே செய்கின்றன. இதில் இவர் என்ன மாற்று? விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு தப்பும் தவறும் ஆகவே தெரிகின்றது. இவரால் ஒரு மாற்று அரசியலை கொடுக்க முடியும் என்றோ, இவர் பின்னால் போகும் இளைஞர்களை இவர் சரியான பாதையில் வழிநடத்துவார் என்றோ, இவரால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றோ நான் நினைப்பதற்கு எந்த விதமான செயல்களும் விஜய்யாலோ அல்லது தவெக கட்சியினராலோ இதுவரை நடக்கவில்லை. மாறாக, விஜய்க்கு பின் த்ரிஷா என்னும் இன்னொரு வாரிசு அரசியல் தான் என் கண்களுக்குத் தெரிகின்றது. விஜய்யின் மாற்று அரசியல் தோற்று விட்டால், விஜய் காணாமல் போய் விடுவார். விஜய்க்கு வெறுமனே அதிகாரமும், விளம்பரமும் இல்லாமல் அடுத்த ஐந்து வருடங்கள் அரசியலில் இருந்து, அவரது கட்சியை வளர்க்கும் பக்குவம் கிடையாது. அவரது ரசிகர்களுக்கும் கிடையாது. அதன் பின் திமுகவை அசைப்பதற்கு திமுக சரி பாதியாக உடைவது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தெரிவாக இருக்கப் போகின்றது. நல்ல அரசியல்வாதிகளும், சில இயக்கங்களும் இன்னும் இருக்கின்றன. நல்லகண்ணு ஐயா போய்விட்டார். ஆனால் அவரின் இடத்தை சு . வெங்கடேசன் பல வருடங்களாகவே நிரப்பிக் கொண்டிருக்கின்றார். சைக்கிளில் தான் மதுரை எங்கும் போய் வருகின்றார். மக்களுக்காக, மண்ணுக்காக வாழ்கின்றார். தொல். திருமாவும், விடுதலைச் சிறுத்தைகளும் பட்டியலின மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அரசியல் பணம், புகழ் தேடும் அரசியல் இல்லை.
4 days 22 hours ago
இதுதான் சிரிலங்காவின் ..அனுரவின் ..நேர்மையான பொலிஸ் கட்டமைப்பு ...இது தமிழரிற்கு நேர் மறை... எல்லாம் விதி
4 days 23 hours ago
காதற் கலைஞன் டென்னிசன் - சுப.சோமசுந்தரம் ஆங்கிலக் கவிஞரான (British Poet) ஆல்ஃப்ரெட் லார்ட் டென்னிசன் (1809 - 1892) பற்றி நினைக்க நேர்கையில் நம்மில் பெரும்பாலானோருக்கு, பள்ளி அல்லது கல்லூரியில் வாசித்த அவரது 'The Brook' கவிதையின் "For men may come and men may go But I go on forever" என்ற பிரபலமான வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது. நீரோடையானது, "பிறப்பதும் இறப்பதும் மானிடர்க்கு வகுக்கப்பட்டது; ஆனால் என்றும் இருப்பது (ஓடிக்கொண்டே இருப்பது) எனக்கான இயல்பு" என்று தன்னுரையாய் (monologue or soliloquy) மொழிவதுவே இவ்வரிகள். மனிதனின் நிலையாமையுடன் ஒப்பிடுகையில் இயற்கையின் நிலைத்தன்மை சற்று வலிமையானது என்பது செய்தி. டென்னிசனிடம் உறையும் காதற் கலைஞனை (the Romanticist in Tennyson), அவரை அறியாதார்க்கு நம்மால் இயன்றவரை இனங் கட்டுவதே இவ்வெழுத்தின் நோக்கம். அவர் காதலாய்ச் சுட்டுவது பரந்துபட்ட பொருளினது. எந்த இடத்தில் தலைவன் - தலைவி காதலைக் குறிப்பது, எந்த இடத்தில் அம்மேதகு உறவினையும் கடந்து நிற்பது என்பதெல்லாம் அந்தந்த இடத்தால் விளங்கி நிற்பது. 1833 ல் டென்னிசனின் நண்பரான ஆர்தர் ஹென்றி ஹேலம் (Arthur Henry Hallum) அவர்களின் மறைவு டென்னிசனை மனதளவில் மிகவும் பாதித்த நிகழ்வு. ஒரு கவிஞனின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு - மகிழ்ச்சி, துயரம், சினம், ஆதங்கம் எதுவானாலும் - கவிதையாகத்தானே முடியும் ! அவ்வாறே ஹேலமின் மறைவுத் துயரானது சுமார் பதினேழு வருடங்கள் கனன்ற நெருப்பாகி 1850 ல் 'In Memoriam' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பானது. அத்தொகுப்பில் 'Lost love' என்று தலைப்பிட்ட கவிதையின் பின்வரும் வரிகள் முழுத் தொகுப்பிலுமே பிரபலமானவை : "I hold it true, whate’er befall, I feel it, when I sorrow most; ‘Tis better to have loved and lost Than never to have loved at all" "என்னவாயினும் இதுவே உண்மை என்று அறுதியிட்டுச் சொல்வேன் - குறிப்பாக, நான் துயரத்தில் மூழ்கும் போது இதனை உணர்கிறேன் : காதல் (அல்லது அன்பு) கொள்ளாமலேயே வாழ்ந்து முடிவதை காட்டிலும், காதல் (அன்பு) கொண்டு அதனை இழப்பது (கூட) மேலானது". காதல் கொள்ளாத வாழ்வில் அதனை இழக்கும் வலியும் இல்லை என்பது பொதுப்புத்தி. அதில் டென்னிசன் மாறுபடுகிறார். இழப்பின் வலியானது, கொண்ட காதலின் திறம் கூறுவதால் அந்த வலியை ஓர் இன்ப வேதனையாய்க் கொள்கிறார் டென்னிசன். இழந்த காதலை நேர்மறையான பார்வையுடன் அணுகும் டென்னிசன், இயன்றவரை இழக்காது இருப்பதின் மேன்மையையும் அக்கவிதைத் தொகுப்பிலேயே உணர்த்துகிறார். "Love is too precious to be lost A little grain shall not be spilt" பொருள் : காதல் அல்லது அன்பு எனும் தகைமை இழப்பதற்கு மலிவான பொருளில்லை. அதன் ஒவ்வொரு குன்றுமணியையும் (துளியையும்) சிந்தாமல் சிதறாமல் கொள்வதே நலம் பயப்பது. காதலை இழந்தும் இருத்தலைப் பாடியவர் இழந்து இறத்தலையும் போற்றுகிறார். "Sweet is true love tho' giv'n in vain, in vain And sweet is death that puts an end to pain I know not which is sweeter, no, not I". மேற்குறிப்பிட்ட வரிகள் டென்னிசனின் "Idylls of the King" எனும் பெருங்கவிதையின் 'Lancelet and Elaine' எனும் பகுதியில் உள்ளவை. லேன்ஸ்லெட் மீது எலைன் கொண்ட காதல் தோல்வியுற்றதால் எலைன் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வரிகளின் பொதுத்தன்மையே நமக்கான பேசுபொருள். "எதிர்பார்ப்பு இல்லாத காதல் வீணாய்ப் போனாலும் (தோல்வியுற்றாலும்) அக்காதல் இனிமையானதே. தோல்வியுற்ற காதல் தரும் வலியினைப் போக்கும் மரணமும் இனிமையானதே. இரண்டிலும் எது கூடுதல் இனிமை என்பது எனக்குத் தெரியாது" என்பதே பாடலின் பொருள். தோல்வியுற்றாலும் கைம்மாறு கருதாக் காதல், கொண்டாரை உணர்வுபூர்வமாய்ப் பரவசப்படுத்துவதால் அது இனிமையானது என்க. அவரது 'Idylls of the King's ல் 'Merlin and Vivien' என்ற பகுதியில், "As love, if love be perfect, casts out fear" என்கிறார். நிறைவான காதல் அச்சம் கொள்ளாது என்பதே பொருள். ஆசை வெட்கமறியாது என்று நாம் கூறுவதைப் போன்றது. நிறைவான காதல் வீரம் செறிந்த காதல் என்கிறார். அகத்திணையைப் புறத்திணையில் கொண்டு நிறுத்துகிறார். தற்காலத்தில் ஆணவக் கொலைகள் எத்தனை நிகழ்ந்தாலும் சாதி மறுப்புக் காதல் மீண்டும் மீண்டும் களத்தில் வந்து நிற்கத்தானே செய்கிறது ! தமது 'The Day dream' என்ற கவிதையின் பகுதியான 'The Departure' ல் தலைவியான இளவரசி தன் தலைவனாகிய வேற்றுநாட்டு இளவரசனுடன் தன் அரண்மனையை விட்டுச் செல்கிறாள். "And on her lover's arm she leant, And round her waist she felt it fold, And far across the hills they went In that new world which is the old" எனத் தொடங்குகிறார் டென்னிசன். அஃதாவது தலைவனின் தோளில் இவள் சாய்ந்தவாறு, அவனது கரம் இவளது இடையைச் சுற்றி ஆதரவாய் அணைத்தவாறு சென்றனர் என்று படம் பிடிக்கிறார் டென்னிசன். தொலைவில் உள்ள மலைகளையும் குன்றுகளையும் கடந்து (ஏனையோர்க்கு) பழைய உலகமான (தங்களுக்கு) புதுமையான உலகை நோக்கிச் சென்றனராம். பாடலை இவ்வாறு நிறைவு செய்கிறார் : "Beyond the night, across the day, Thro' all the world she followed him". பொருள் : இரவு பகலாக அவன் செல்லும் வழியெல்லாம் அவன் அடியொற்றிச் சென்றாள். இவ்வரி ("முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும்) திருத்தாண்டகப் பாடலின் இறுதி வரியினைப் போலவே உள்ளதைக் காணலாம் : "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" தலைவன்-தலைவி தங்கள் புதுவாழ்வு நோக்கி ஒரே மாதிரியாகத்தானே செல்ல முடியும் - ஆங்கிலக் கவிதையானாலும் நம் சங்க கால, பக்தி இலக்கியங்களானாலும் ! நாம் மேற்குறிப்பிட்ட தமிழ்ப் பாடலுக்கும் டென்னிசனின் 'The Departure' கவிதைக்கும் காட்சியமைப்பில் பெரிய வேறுபாடு உண்டு. தமிழில் தலைவன்-தலைவி உடன்போக்கு எனும் அகத்திணை தழுவிச் செல்கின்றனர். மேற்கத்திய உலகில் அதற்கான தேவையே இல்லை. அங்கே தலைவன்-தலைவி போக்கு என்பதே உடன்போக்குதானே ! உற்றார் உறவினர்க்கு மறுப்போ வருத்தமோ ஏதுமில்லை. ஆனாலும் இந்த இரண்டு பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே தலைவன்-தலைவி புது வாழ்வு நோக்கிச் செல்வது குறியீட்டு இயலே (symbolism ) ! 'The Departure' ல் மனிதன் கற்பனையான மாய உலகிலிருந்து நிஜ வாழ்விற்கும், வெகுளித்தனத்திலிருந்து பக்குவத்திற்கும் (Innocence to Maturity) பயணப்படுவதைக் குறிப்பது; அப்பயணத்தில் இயற்கையை ரசிப்பது என்பது வாழ்வை ரசிப்பது. திருத்தாண்டகத்தில் பக்தனாகிய தலைவி இறை என்னும் தலைவனைச் சென்றடைவதைக் குறிப்பது. டென்னிசனின் பொன்மொழிகளிலும் ஆங்காங்கே காதற் கனி ரசம் பருகக் கிடைப்பது : "If I had a flower for every time I thought of you, I could walk in my garden forever" பொருள் : உன்னை நினைக்கும் போதெல்லாம் என் தோட்டத்தில் ஒரு பூ மலரும் என்றால், (அவற்றைக் காண அல்லது பறிக்க) நான் தோட்டத்தில் நடந்து கொண்டே இருப்பேன். இத்தகைய ரசனையெல்லாம் நாம் மேற்கத்திய இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் கண்டவைதாமே என்று நினைக்கலாம். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகள் டென்னிசன் போன்றோர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழர் என்ற முறையில் சங்க காலத்திலேயே நாம் கண்டவை என்பது வேறு. காதலும் மற்றும் யாதொரு அழகியலும் காலம் காலமாய் மாறாதவையெனினும் காலத்திற்கேற்ப, சொல்பவரின் சொல் திறத்திற்கேற்ப புதுமையுடன் மிளிர்வதை ரசிப்பதுதானே நமக்கான பேறு ! முத்தாய்ப்பாக, தலைப்பிற்கு முழுமையாகத் தொடர்பில்லாத, என் கவனத்தை ஈர்த்த ஒன்றைச் சொல்லி முடிக்க எண்ணம். டென்னிசனின் Becket என்னும் நாடகத்தின் அங்கம் lV, காட்சி l ல் (Act lV, Scene l) 'Love is the only Gold' என்ற வாசகம் வருகிறது. "இவ்வுலகில் அன்பு ஒன்றே பொன்னானது" என்பதே பொருள். காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும் என்பது போல, நான் மேற் சொன்ன வாசகத்தை 'Love is the only God' என்று முதலில் வாசித்து விட்டேன். அவர் அவ்வாறு சொல்ல வாய்ப்பில்லையே என்று கண நேரத்தில் சுதாரித்துக் கொண்டேன். அவரது 'Crossing the Bar' என்ற கவிதையை வாசித்திருந்ததால், இறையிலும் மரணத்தின் பின்னரான பெரு வாழ்விலும் நம்பிக்கை உள்ளவர் டென்னிசன் என்பது என் மனதில் பதிந்திருந்ததே எனது சுதாரிப்பிற்குக் காரணம். அக்கவிதையின் நிறைவுப் பகுதியைப் பேசி இக்கட்டுரையை நிறைவு செய்வது டென்னிசனின் இன்னொரு முகத்திற்கான அறிமுகமாக அமையலாம். "For tho' from out our bourne of Time and Place The flood may bear me far I hope to see my Pilot face to face When I have crost the bar" கடற்கரையிலுள்ள நிலப்பரப்பிற்கும் துறைமுகத்திற்கும் இடையே உள்ள மலர்ப்பாங்கான இடமே Bar (Sand bar) என்று இக்கவிதையில் சுட்டப் பெறுகிறது. வாழ்வு எனும் நிலத்திலிருந்து மரணம் எனும் துறைமுகத்திற்குச் செல்வதே Crossing the Bar என்று உருவகிக்கப்படுகிறது. இனி மேற்குறித்த கவிதை வரிகளின் பொருள் காண்போம் : "காலம், இடம் என்னும் எல்லைக்குட்பட்ட வாழ்வைக் கடந்து செல்லும்போது கடல் என்னைத் தொலைவாக இழுத்துச் செல்லும் (எனக்கு மரணப் பெருவாழ்வு கிட்டும்). (அதற்கு முன்) மணற்பரப்பைக் கடந்த பின் (கப்பலைச் செலுத்தும்) என் மாலுமியை (இறைவனை) நான் நேர்கொள்ளும் வாய்ப்பு அமையும் என நம்புகிறேன்". இதுகாறும் டென்னிசனின் ஒரு பானைச் சோற்றில் நாம் கண்டது ஒரு சோறு பதம்.
5 days ago
ஈரானுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை போர் தொடரும் - ஈரான் Published By: Vishnu 01 Apr, 2026 | 09:40 PM ஈரான் எந்தவொரு போர் நிறுத்த முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈரானின் 'IRIB' செய்தி நிறுவனம் தெரிவித்தபடி, ஈரான் ஐந்து அம்ச போர் நிறுத்தத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது என்ற செய்தி வெறும் ஊடக யூகமே என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், "ஆக்கிரமிப்பாளர் தண்டிக்கப்படும் வரையிலும், ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும் வரையிலும்" போர் தொடரும் என்று மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/242513
5 days ago
மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் வீழ்ச்சி 01 Apr, 2026 | 04:59 PM 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், குறிப்பாக மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்றே குறைவடைந்துள்ளது. 2026 மார்ச் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மட்டும் மொத்தமாக 175,661 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி (277,327) மற்றும் பெப்ரவரி (279,328) மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. எனினும், மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கையில் சற்றே வீழ்ச்சி காணப்படுகிறது. மார்ச் மாதத்தில் தினசரி சராசரி வருகை 6,057ஆகப் பதிவாகியுள்ளது. மார்ச் 14ஆம் திகதி அதிகபட்சமாக, ஒரே நாளில் 7,318 பயணிகள் வந்துள்ளனர். அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 45,650 பயணிகள் (26%) வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பயணிகள், ரஷ்யாவிலிருந்து 15,579 பயணிகள், சீனாவிலிருந்து 13,449 பயணிகள், ஜெர்மனியிலிருந்து 12,603 பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பயணிகள், பிரான்ஸிலிருந்து 8,015 பயணிகள், அமெரிக்காவிலிருந்து 5,150 பயணிகள், ஜப்பானிலிருந்து 4,338 பயணிகள், பங்களாதேஷிலிருந்து 4,192 பயணிகள் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து மொத்தமாக 39,436 பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மார்ச் 29 வரை மொத்தம் 732,316 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். https://www.virakesari.lk/article/242504
5 days ago
ஆர்டெமிஸ் 2: நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் மலம் கழிப்பது எப்படி? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 1 ஏப்ரல் 2026, 14:45 GMT புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் நீங்கள் ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் இருக்கும்போது, எவ்வாறு கழிப்பறையைப் பயன்படுத்துவீர்கள்? அதைப் புரிந்து கொண்டு சரியான முறையை உருவாக்க நாசா விஞ்ஞானிகள் 23 மில்லியன் டாலருக்கும் மேல் செலவு செய்துள்ளனர். இந்திய நேரப்படி ஏப்ரல் 2 அதிகாலை நடைபெறவுள்ள ஆர்டெமிஸ் 2 விண்வெளி பயணத்திற்காக இதனை உருவாக்கியுள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஆர்டெமிஸ் 2 மூலம் நாசா மேற்கொள்கிறது. இது சுமார் 10 நாட்கள் நீடிக்கும். இந்த பயணத்தில் செல்லும் விண்வெளி வீரர்களுக்காக 'பொதுவான கழிவு மேலாண்மை அமைப்பு' என்று அழைக்கப்படும் ஒரு முறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது மலம் மற்றும் சிறுநீர் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், கழிவுகளைக் கையாளும் விதம் பூமியில் இருப்பதை விட முற்றிலும் மாறுபட்டது. பட மூலாதாரம்,NASA தனி பயிற்சி கழிவுகளை வெளியேற்ற அங்கு காற்று உறிஞ்சும் விசை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் ஒரு குழாய் வழியாக உறிஞ்சப்பட்டு சேகரிக்கப்படுகிறது. திடமான கழிவுக்கு வலுவான இழுவைத் திறனுடன் ஒரு சிறப்பு இருக்கை உள்ளது. அது திடக்கழிவை இழுத்து ஒரு தனி கொள்கலனில் சேகரிக்கிறது. கழிப்பறையை வீரர்கள் பயன்படுத்தும் போது நகராமல் இருக்கும் வகையில் அவர்களை பிணைத்துக்கொள்ள சாதனங்கள் உள்ளன. கழிவறையைப் பயன்படுத்தும் முறைக்குத் தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் கழிப்பறையை பயன்படுத்தும்போது அவர்களுக்கு தனிமை கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறிய அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் தங்கும் அறைக்கு அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் மனிதர்கள் இல்லாத 'ஆர்டெமிஸ் I' பயணத்தைத் தொடர்ந்து, நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்குச் செல்வதற்கான பயணங்களுக்கு தயாராகி வருகிறது. இதன் இறுதி இலக்கு 2030-களில் செவ்வாய் கிரகத்தை அடைவதாகும். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn085e84xleo
5 days ago
தற்போதைய அரசாங்கம் வைத்தியர்களை கட்டாயப்படுத்தி சேவைகளைப் பெற முயற்சிக்கிறது - GMOA குற்றச்சாட்டு 01 Apr, 2026 | 05:51 PM சுகாதார அமைச்சராக நளிந்த ஜயதிஸ்ஸ அங்கம் வகிக்கும் தற்போதைய அரசாங்கம், வைத்தியர்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக பணியாற்றுவதற்கு கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது. புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய, குறித்த சங்கத்துடன் இணைந்த 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இவ்வாறான கட்டாயத்தின் கீழ் பணியாற்றத் தயாராக இல்லை எனத் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆண்டுதோறும் நடைபெறும் வைத்தியர்களுக்கான இடமாற்றச் செயற்பாடுகளை நியாயப்படுத்தினார். பெப்ரவரி தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடமாற்ற செயற்பாட்டுப் பணிகள், மே 10ஆம் திகதிக்குள் சுமார் 6,000 இடமாற்றங்கள் நிறைவு செய்யப்படும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக ஒரு முறையான இடமாற்ற முறைமை திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை, சிலர் 13 முதல் 17 ஆண்டுகள் வரை ஒரே பதவியில் நீடித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான முறைகேடுகளை நீக்கி, முன்னர் பாதிக்கப்பட்ட வைத்தியர்களுக்கு நீதியை உறுதி செய்வதே இந்தப் புதிய இடமாற்ற முறைமையின் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அவரை பொறுத்தவரை, கடந்தகால முறைகேடான நடைமுறைகளால் பயனடைந்த தனிநபர்களிடமிருந்தே இந்த இடமாற்ற செயல்முறைக்கு எதிர்ப்பு வெளிக்கிளம்பியிருக்கிறது என கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்துரைத்த ஹன்சமால் வீரசூரிய, அமைச்சர் தவறான தகவல்களை கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், "2019ஆம் ஆண்டில் இடமாற்ற செயல்முறைகளை எமது சங்கமே 98 சதவீதம் வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. 2026ஆம் ஆண்டின் இடமாற்றங்கள் பெப்ரவரியில் தொடங்கப்பட்ட போதிலும் திட்டமிடப்பட்ட 6000 இடமாற்றங்களில் 5இல் ஒரு பங்குக்கும் குறைவானவர்களையே கடந்த இரண்டு மாதங்களில் இடமாற்ற முடிந்துள்ளது என குறிப்பிட்டார். இந்த இடமாற்றத் திட்டத்தை செயற்படுத்துவதில் சுகாதார அமைச்சின் செயல்திறனையும் இதன்போது அவர் விமர்சித்தார். மருத்துவர்கள் அரசியல் அதிகாரத்துக்கு அடிபணிந்தவர்கள் அல்லர். அவர்கள் யாருக்கும் கடன்பட்டவர்கள் அல்லர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அழுத்தத்தின் கீழ் பணியாற்ற ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/242505
5 days ago
'துயரத்தின் வாசல்' - ஹோர்மூஸ் நீரிணைக்கு அடுத்து செங்கடல் முக்கிய பாதையை இரான் மூடப்போகிறதா? பட மூலாதாரம்,Gallo Images via Getty படக்குறிப்பு,பாப் அல்-மண்டேப் நீரிணை சுமார் 36 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் முக்கியமான செங்கடல் கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள், உலகளாவிய வர்த்தகத்தில் மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை எழுப்பியுள்ளன. இரான் ஏற்கெனவே ஹோர்மூஸ் நீரிணையைத் திறம்பட மூடியுள்ளது, இதனால் பாரசீக வளைகுடாவில் கடல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில், ஏடன் வளைகுடாவுக்கும் செங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள மற்றும் சூயஸ் கால்வாய்க்கு இட்டுச்செல்லும் பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தைத் தடுக்கப்போவதாக இரான் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கப் படைகள் தரைவழியாக இறக்கப்பட்டால், போரில் ஓர் 'இரண்டாவது முன்னணியை' திறக்கக்கூடும் என்று இரான் கூறியுள்ளது. "பாப் அல்-மண்டேப் நீரிணை உலகின் மூலோபாய நீரிணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதை அச்சுறுத்துவதற்கு இரானுக்கு யோசனை மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்ட திறனும் உள்ளது," என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் இரானிய ராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இரானின் கார்க் தீவைத் தாக்கினால், இந்த நீரிணையைத் தடுக்கப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது. பாப் அல்-மண்டேப் ஏன் இவ்வளவு முக்கியமானது? பாப்-எல்-மண்டேப் நீரிணை, செங்கடலின் அரேபியப் பகுதியில் உள்ள ஏமனுக்கும், ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவிற்கும் இடையே அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்கள், சூயஸ் கால்வாயை அடைய இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். 115 கிலோமீட்டர் நீளமும் 36 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த நீரிணை, 1869-இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே குறுகிய தொலைவிலான கடல் வழியை வழங்கி, உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய இணைப்பாக மாறியது. இந்தச் செங்கடல் பாதை தற்போது உலகின் பரபரப்பான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாக உள்ளது. இது உலகின் மொத்த கடல்சார் போக்குவரத்தில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கையாளுகிறது. உலகின் 20 சதவீத எண்ணெயைக் கொண்டுசெல்லும் ஹோர்மூஸ் நீரிணை, போர் காரணமாக தற்போது இரானால் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. பாப் அல்-மண்டேப் நீரிணையும் மூடப்பட்டால், அது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் 12 சதவீதத்தைப் பாதிக்கும். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு சுமார் 5 மில்லியன் பேரல் எண்ணெய் நாள்தோறும் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கிறது. மேலும், உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதமும் இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இது உலகின் எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு முக்கிய பாதையாக அமைகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதிலிருந்து உலக வர்த்தகத்தில் செங்கடலின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,Suez Canal Authority via European Pressphoto Agency படக்குறிப்பு,இந்த நீரிணை மூடப்பட்டால், அதன் தாக்கம் 2021-ல் பனாமா கொடியுடன் கூடிய 'எவர் கிவன்' சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிய நிகழ்வைப் போலவே இருக்கும். கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமின்றி, பாப் அல்-மண்டேப் நீரிணை, கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக இணைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. இதன் வழியாக நாள்தோறும் டஜன் கணக்கான சரக்குக் கப்பல்கள் கடந்து செல்கின்றன. இந்த நீரிணை மூடப்பட்டால், அதன் தாக்கம் 2021-இல் 'எவர் கிவன்' சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிய நிகழ்வைப் போலவே இருக்கும். இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தி எண்ணெய் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியதுடன், விநியோகங்களையும் தாமதப்படுத்தியது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் பங்கு பாப் அல்-மண்டேப் நீரிணை மீதான எந்தவொரு தாக்குதலும், ஏமனில் உள்ள இரானின் ஆதரவு பெற்ற அரசியல் மற்றும் ஆயுதக் குழுவான ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட வாய்ப்புள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத ஹூத்தி தலைவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இரானுக்கு ஆதரவாக பாப் அல்-மண்டேப் நீரிணையை இலக்கு வைக்கத் தங்கள் குழு தயாராக இருப்பதாகக் கூறினார். ஹூத்திகள் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரான் உடனான தற்போதைய அமெரிக்க-இஸ்ரேலிய போரில் இது அவர்களின் முதல் தலையீடாகும். ஏமனில் இருந்து வந்த இரண்டு ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்தக் குழு ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், காஸா போரின் போது பாப் அல்-மண்டேப் நீரிணையில் செல்லும் கப்பல்களை குறிவைத்தது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஹூத்திக்கள் தாக்கினர். இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன மற்றும் நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,Houthi Military Media via Reuters இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாங்கள் இலக்கு வைப்பதாக ஹூத்திகள் கூறினாலும், தாக்குதலில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள் தாக்கப்பட்டன என்றே விவரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய கப்பல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அந்தப் பகுதி வழியாகத் தங்கள் கப்பல்கள் செல்வதை நிறுத்தின. ஹூத்திகள் சரணடைந்துவிட்டதாக அமெரிக்கா கூறியதற்கும், அமெரிக்கா பின்வாங்குவதாக ஹூத்திகள் பதில் கூறியதற்கும் மத்தியில், தாக்குதல்கள் இறுதியில் குறைந்தன. ஆனால் அவை மீண்டும் தொடங்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகின்றனர். "போர் நீடித்தால், ஏமனின் ஹூத்திகள் இதில் ஈடுபடுவார்கள் என்பது எப்போதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்," என்கிறார் பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டூசெட். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "வடமேற்கு ஏமனில் ஹூத்திகளுக்கு ஆழமான செல்வாக்கு உள்ளது. பாப் அல்-மண்டேப் வழியாகப் போக்குவரத்தைத் தடுக்கும் தங்களின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை அவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை." என்றார். பட மூலாதாரம்,Getty Images நெருக்கடியில் உள்ள உலகளாவிய கப்பல் போக்குவரத்து அரபு மொழியில் பாப் அல்-மண்டேப் என்றால் "கண்ணீரின் வாசல்" அல்லது "துயரத்தின் வாசல்" என்று பொருள். இந்த பெயர், வலுவான நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத காற்று முதல் கடற்கொள்ளை மற்றும் மோதல்கள் வரை அங்கு நிலவும் ஆபத்துகளைப் பிரதிபலிக்கிறது. 2008 மற்றும் 2012-க்கு இடையில், பாப் அல்-மண்டேப் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஏராளமான கடற்கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இவை பெரும்பாலும் சோமாலிய குழுக்களால் நிகழ்த்தப்பட்டன, அவர்கள் கப்பல் ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்று பணயத்தொகை கேட்டனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, சர்வதேச சமூகமும் கப்பல் நிறுவனங்களும் இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தின. இந்த வழித்தடம் மூடப்பட்டால், ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் சூழலால் ஏற்கெனவே அழுத்தத்தில் இருக்கும் எரிசக்தி சந்தையின் நெருக்கடியை இது மேலும் ஆழமாக்கும். வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து இடையூறுகள், இந்த நெருக்கடிக்கு முன்பு ஒரு பேரல் சுமார் 70 டாலராக இருந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையை 115 டாலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளன. நுகர்வோர் பொருட்கள் முதல் விவசாய பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களின் உலகளாவிய வர்த்தகமும் இதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை உணர்கிறது. மற்றொரு கடல் வழியில் ஏற்படும் புதிய இடையூறுகள், விலைகளை மேலும் உயர்த்தக்கூடும் மற்றும் இரானுடனான மோதலின் பொருளாதாரத் தாக்கத்தை ஆழமாக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz673yvyqxqo
5 days 1 hour ago
உண்மையிலேயே போப் லியோவுக்கு அமெரிக்காவின் தலைமைகள் முன்னெடுக்கும் போர் பற்றி அக்கறை இருந்தால் அடுத்த முறை எங்கள் "புண்ணாக்குத் தலை"யும் மனைவியும் private audience கேட்கும் போது அதை வழங்காமல் விட வேண்டும்! செய்வாரா? புண்ணாக்குத் தலை: அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் - ஒரு தீவிர கத்தோலிக்கர்.
5 days 1 hour ago
நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் 2026 ஏப்ரல் 1 நிலவரப்படி, ஆர்டெமிஸ் II விண்ணேவு வாகனம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில், எல்சி-39பி ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டும், அதில் எரிபொருள் நிரப்பப்பட்டும் தயாராக நிற்கிறது. அதே ஏவுதளம் தான் ஒருகாலத்தில் நில் ஆர்ம்ஸ்ட்ராங்கை வரலாற்றுப் பயணத்துக்கு அனுப்பியது. இந்தப் பயணத்தில் செல்லவிருக்கும் நான்கு குழு உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 2026 பிப்ரவரியில் திட்டமிட்டிருந்த ஏவுதலைத் தள்ளிவைக்கச் செய்த தொழில்நுட்பச் சிக்கல்கள் இப்போது தீர்ந்துள்ளன என்று தெரிகிறது. வானிலை ஒத்துழைத்தால், 2026 ஏப்ரல் 2 இந்திய நேரப்படி அதிகாலை 3:54 மணிக்கு ஏவுதல் நடைபெறலாம். இது வெற்றி பெற்றால், 53 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் தாழ் விண்வெளி பாதையைத் தாண்டிச் செல்லும் முதல் பயணமாக அமையும். பூமிக்குப் மிக அருகிலுள்ள அண்டை உலகத்துக்குத் திரும்பும் முயற்சிக்கு இது புதிய தொடக்கமாக இருக்கும். 2026 மார்ச் 31 வரை, சுமார் 650 மனிதர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே சந்திரப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அந்த 24 பேரில் 12 பேர் சந்திரனில் தரையிறங்கி கால் பதித்தவர்கள்; மற்ற 12 பேர் சந்திரனைச் சுற்றி வந்தவர்கள். மீதமுள்ள பெரும்பாலானவர்கள் பூமிக்கு அருகே தாழ் விண்வெளிப்பாதையில் தான் பயணம் செய்துள்ளனர். சுமார் நூறு முதல் இரண்டாயிரம் கிமீ உயரம் வரை பூமியை சுற்றியுள்ள பகுதி தான் தாழ் விண்வெளி பகுதி. 1972 டிசம்பரில் அபோல்லோ 17 நிலவிலிருந்து திரும்பிய பிறகு மனிதர்கள் யாரும் தாழ் விண்வெளியை தாண்டிச் செல்லவில்லை. ஆர்டெமிஸ் II கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதன் முறையாக மனிதர்களை ஏந்தி அந்த எல்லையைக் கடந்து செல்லும். நாசாவின் புதிய, மிக வலிமையான ஏவூர்தி அமைப்பான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் (Space Launch System) நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும். ஏவூர்தி மேலே எழும் தருணம், உந்தி (booster) பிரியும் தருணம், பின்னர் ஓரியன் (Orion) விண்கலம் மேல்நிலையிலிருந்து விடுபடும் தருணம் என ஒவ்வொரு கட்டத்திலும் உலகம் மூச்சை அடக்கி கவனிக்கும். இந்தப் பயணத்தின் இன்னொரு சிறப்பு, அது பல்வேறு பின்னணியுள்ள விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய குழுவை கொண்டுள்ளது ஆகும். இதில் சந்திரப் பயணத்துக்குச் செல்லும் முதல் கருப்பின விண்வெளி வீரர், முதல் பெண் விண்வெளி வீரர், மேலும் ஆழ்விண்வெளிக்குச் செல்லும் முதல் கனடியர் ஆகியோர் உள்ளனர். நிலவில் தரையிறங்காது பட மூலாதாரம்,Getty Images ஆனால் ஒரு விஷயம் தெளிவு: இந்தப் பயணம் சந்திரனில் தரையிறங்குவதற்கல்ல. சந்திரனைச் சுற்றி பலமுறை வலம் வரவும் இல்லை. இது சந்திரனின் மறுபுறம் சென்று, மீண்டும் பூமிக்குத் திரும்பும் பத்து நாள் "ஆற்றல் தேவையற்ற திருப்பு" (free-return) பயணம். இதன் பொருள் எளிது. விண்கலம் சந்திரனருகே சென்றாலும் தரையிறங்காது; அதைச் சுற்றி வளைந்து திரும்பும். "ஆற்றல் தேவையற்ற திருப்பு" என்றால், சந்திரனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலத்தின் பாதையை மாற்றுவது. பூமிக்கு நேராக செலுத்துவது. அதாவது பூமியிலிருந்து நிலவுக்குச் செல்ல ஏவூர்தியை இயக்கி ஆற்றலைச் செலவிடும்; ஆனால் திருப்பு பயணத்தில் ஆற்றல் தேவையில்லை. பெருமளவு எரிபொருள் செலவிட வேண்டியதில்லை. கயிற்றில் கட்டிய பந்தை சுழற்றிவிட்டு கையை விடும்போது அது புதிய திசையில் பாய்வது போல, சந்திரனின் ஈர்ப்பு விசை விண்கலத்தைப் பிடித்து சுழற்றி பூமி நோக்கித் திருப்பி வீசும். பட மூலாதாரம்,Getty Images குழுவினர் யார் யார்? குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன். அவர் கேப்டன். இறுதி முடிவுகளை எடுப்பார். குழுவை ஒருங்கிணைப்பார். பாதுகாப்பை கவனிப்பார். விக்டர் க்ளோவர் பைலட். விண்கலத்தை இயக்கம் பொறுப்பு அவருடையது. குறிப்பாக, பூமியின் பாதையிலிருந்து சந்திர நோக்கி தள்ளும் முக்கிய ஏவூர்தி இயக்கம் அவரால் கையாளப்படும். சில சோதனைகளில் அவர் ஓரியான் விண்கலத்தை தானே ஒட்டி சோதனை செய்வார். கிறிஸ்டினா கோக் மிஷன் சிறப்புப் பணியாளர். அவர் உடல்நலச் சோதனைகள், உயிர் ஆதரவு அமைப்புகளின் கண்காணிப்பு, சந்திரனின் புகைப்படங்கள், மேற்பரப்புக் குறிப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவார். நீண்டகால விண்வெளிப் பயண அனுபவம் அவருக்கு உதவும். ஜெரமி ஹான்சன் மற்றொரு சிறப்புப் பணியாளர். ஏவுதலுக்குப் பிறகு தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு, அவசர உபகரணங்கள், விண்கல கருவிகளின் செயல்பாடு குறித்த பரிசோதனைகள் ஆகியவற்றில் பங்கெடுப்பார். அவர் கனடிய விண்வெளித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மாற்றுக் குழுவினரும் தயாராகவே இருப்பார்கள். ஆண்ட்ரே டக்ளஸ், மூன்று நாசா வீரர்களில் யாருக்கேனும் பதிலாகப் பணியாற்றத் தயாராக இருப்பார். ஜெனிஃபர் சைடி-கிபன்ஸ், கனடிய உறுப்பினருக்கான மாற்றாக இருப்பார். ஏவுதலுக்கு முன் இறுதிக் கட்டத்தில் டக்ளஸ் முதன்மைக் குழுவினரை இருக்கைகளில் பாதுகாப்பாக அமர்த்த உதவுவார். விண்கலத்தின் கதவை மூடி தாழ் செய்யும் பொறுப்பும் அவருக்கே. சைடி-கிபன்ஸ் விண்கலத்தின் உள்ளே உள்ள அமைப்பு கருவி போன்றவற்றை சரிசெய்வார். விண்கலம் ஏவப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தில் உள்ள போது அவர் மிஷன் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து குழுவுடன் நேரடியாகப் பேசுவார். மாற்றுக் குழுவின் பணி, அவசர நேரத்தில் உடனே களமிறங்கத் தயாராக இருப்பதுதான். விண்கலத்துக்குள் வாழ்வு பட மூலாதாரம்,Getty Images ஓரியன் விண்கலம் சிறியது. ஒரு மாருதி ஆம்னி வேன் அளவு மட்டுமே. வேனில் உள்ள இருக்கைகளை எல்லாம் அகற்றிவிட்டு உள்ள இடத்தை கற்பனை செய்யுங்கள்- அதுதான் விண்கலத்தில் உள்ள வாழிடம். அந்த இடத்தில் தான் நெருக்கி முட்டியடித்து நான்கு பேரும் பத்து நாட்கள் உறங்கவும், சாப்பிடவும், வேலை செய்யவும், கழிவறையைப் பயன்படுத்தவும் வேண்டும். அதற்கு உள்ள வாழ்விட இடம் சுமார் 330 சதுரஅடி மட்டுமே. சுவற்றில் பொருத்தப்பட்ட படுக்கை பைகளில் புகுதந்து தூங்க வேண்டும். மேலும் இந்த விண்கல வாழ்விடத்தில் ஆறு ஜன்னல்கள், மேலும் கதிர்வீச்சு ஆபத்து வந்தால் பாதுகாப்பாக ஒளிந்துகொள்ளும் இடம் ஆகியவை உள்ளன. இது சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போல வசதியானதல்ல. ஆனால் பயணம் குறுகிய காலம் என்பதால் சமாளிக்க முடியும். குழுவினர் பூமியின் எந்த நேரமண்டலத்தையும் பின்பற்றமாட்டார்கள். ஜி.எம்.டி, ஐ.எஸ்.டி. ஈ.டீ.டி (GMT, IST, EDT) எதுவும் இல்லை. அவர்கள் மிஷன் எலாப்ஸ்டு டைம் (Mission Elapsed Time) என்ற முறையைப் பயன்படுத்துவார்கள். ஏவுதல் நடந்த அந்தக் கணம் டி-பிளஸ்-பூச்சியம். அதிலிருந்து நாட்கள், மணிநேரங்கள், நிமிடங்கள் என்று அனைத்தும் கணக்கிடப்படும். மிஷன் கட்டுப்பாட்டு மையமும் இதே முறையைப் பின்பற்றும். தினசரி நடைமுறை திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். காலையில் கண்விழித்ததும் எல்லா வாழிட அமைப்புகளும் சரியாக செயல்படுகிறதா என சோதனை செய்யவேண்டும். பிறகு விண்கலம் செல்லும் திசையை சரிநோக்கி ஏதேனும் பிழை திருத்த செயல்கள் தேவை என்றால் அவற்றை மேற்கொள்ள வேண்டும். மருத்துவக் கண்காணிப்பு பரிசோதனைகள், அவசர நிலை பயிற்சிகள் போன்றவையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் காற்று சுத்திகரிப்பு , தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவறை அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம். ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் எதிர்ப்பு பயிற்சி செய்வார்கள். ரோயிங், ஸ்குவாட், டெட்லிஃப்ட் போன்ற பயிற்சிகள் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை எதிர்க்க உதவும். பயணத்தில் ஒரு நாள் முழுமையான ஓய்வுக்கு ஒதுக்கப்படும். மற்ற நாட்களில் உணவு, சுகாதாரம், இடமாற்றம், எடை இல்லாத நிலையில் நடமாடும் பயிற்சி, ஊடகத் தொடர்பு ஆகியவை இடம் பெறும். பட மூலாதாரம்,Getty Images விண்கலத்தில் உணவு அனைத்தும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டவை. புதிய உணவுப்பொருட்கள் இல்லை; குளிர்சாதனமும் இல்லை; முழு சமையலறையும் இல்லை. உணவுத் துகள் நொறுக்குகள் விழாதபடி கெட்டியாக உள்ள உணவு தான் கொண்டு செல்வார்கள். குறைந்த தண்ணீரில் பயன்படுத்தும்படி, பத்து நாட்களுக்கு கெடாதபடி பதப்படுத்தப்பட்டுள்ளது. மாக்கரோனி சீஸ், காய்கறி க்விச், பார்பிக்யூ மாட்டிறைச்சி, டோர்டில்லா, குக்கீ, கேக் போன்ற 189 விதவிதமான உணவுகளையும் காப்பி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பானங்களையும் இந்த பயணத்துக்காக நாசா தெரிவு செய்துள்ளது. வீரர்களின் விருப்பம் மற்றும் ஊட்டச்சத்து தேவையை வைத்து தேர்ந்தெடுத்துள்ளது. உணவு தயாரிப்பும் எளிது. பாக்கெட்டில் நீரை சேர்த்து சூடாக்கினால் போதும். உணவு தயார். ஒவ்வொருவருக்கும் திட்டமிட்ட காலை, மதியம், இரவு உணவு மற்றும் தினமும் இரண்டு சுவையூட்டப்பட்ட பானங்கள் மட்டுமே ரேஷன் போல வழங்கப்படும். உடல் தூய்மையும் சுகாதாரமும் அடிப்படையாக அமையும். பத்து நாட்களும் குளியல் இல்லை. ஈரத் துணிகள், உடல் துடைப்புத் துணிகள், கழுவ வேண்டாத ஷாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். கழிவறை கழிவுகளை மூடிய பையில் சேகரித்து விண்வெளியில் வீசி எரிந்து விடுவார்கள். உடை மாற்றமும் குறைவாகவே இருக்கும்; எடை வரம்புகள் காரணமாக மிக சில உடைகள் மட்டுமே எடுத்து செல்வார்கள். பத்து நாள் பயணம் ஏவுதலுக்குப் பிறகு 15 முதல் 20 நிமிடங்களில் விண்கலம் விண்வெளியை அடைந்துவிடும். பாதையை அடைந்ததும், குழுவினர் முதன்முறையாக ஓரியான் விண்கலத்தை தாமே சுயமாக இயக்கி சோதனை செய்வார்கள். இது புவி அருகாமை சோதனை (proximity operations demonstration). இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், விண்கலம் திரும்ப முடியும். பைலட் விக்டர் க்ளோவர் கட்டுப்பாட்டை எடுத்துச் செயல் திறனைச் சோதிப்பார். இதே கட்டத்தில் கழிவறை, தண்ணீர் அமைப்பு, உயிர் ஆதரவு ஆகியவையும் இயக்கப்பட்டு, ஆழ்விண்வெளி வாழ்வின் முதல் உண்மையான சோதனை தொடங்கும். இரண்டாம் நாளில், விண்கலத்தில் உள்ள ஏவூர்தி இயக்கப்படும். இதில் கிடைக்கும் ஆற்றல் ஓரியனை நிலவை நோக்கித் தள்ளும். இதை trans-lunar injection burn என்பார்கள். இது நடந்துவிட்டால், மீண்டும் பூமிக்கு திரும்பிப் போக முடியாது. நிலவை வட்டமிட்டு தான் பூமிக்கு திரும்ப முடியும். மிஷன் கட்டுப்பாட்டு மையம் ஒவ்வொரு அளவையும் நுட்பமாகக் கண்காணிக்கும். விண்கலம் எந்த பாதையில் செல்கிறது என கணிக்கும். பட மூலாதாரம்,Getty Images மனித வரலாற்றில் இதுவரை சென்ற மிகத் தொலைவு என்னும் புதிய சாதனையை எட்டும் தருணம் பயணத்தின் ஐந்தாம் அல்லது ஆறாம் நாட்களில் நிகழும். அபோல்லோ 13 தான் இதுவரை மனிதனை ஏற்றி அதிக தொலைவு சென்ற விண்கலம். பூமியிலிருந்து 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவு சென்று சாதனை படைத்தது. இந்த பயணம் இந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்கிறார்கள். ஆறாம் நாள் பயணத்தின் முக்கிய தருணம். ஓரியன் விண்கலம் சந்திரனின் மறுபுறம் வளைந்து செல்லும். அப்போது அது சந்திர மேற்பரப்பிலிருந்து சுமார் 6,400 முதல் 9,600 கிலோமீட்டர் தூரத்துக்குள் வரும். ஒரு ரூபாய் நாணயத்தை நீட்டிய கையில் வைத்தால் தெரியும் அளவு தான் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் காணும் அளவு. நிலவை நெருங்கும் நேரத்தில் பயண குழுவினருக்கு கால்பந்து அளவில் நிலவு தென்படும். பூமியிலிருந்து சந்திரனின் மறுபுறம் பார்க்க முடியாததால், மறைத்த முகத்தைப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு. சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை குழுவினர் புகைப்படங்கள், வீடியோக்கள், குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வார்கள். அந்த நேரத்தில் பூமியுடன் வானொலி தொடர்பு 30 முதல் 50 நிமிடங்கள் துண்டிக்கப்படும். இது பதட்டமான, அமைதியான இடைவெளியாக இருக்கும். குழுவினர் முழுவதும் தங்களின் திறமையையே நம்ப வேண்டிய நிலை. அடுத்த நான்கு நாட்களில் விண்கலம் மீண்டும் பூமியை நோக்கி வரும். வேகம் தொடர்ந்து அதிகரிக்கும். இறுதி நாளில் ஓரியன் விண்கலம் வினாடிக்கு சுமார் 11 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும். வெப்பமும் அழுத்தமும் கடுமையாக இருக்கும். பின்னர் பராசூட்டுகள் திறக்கும். விண்கலம் கலிபோர்னியா அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இறங்கும். மீட்பு குழுக்கள் விண்வெளி வீரர்களையும் விண்கலத்தையும் மீட்டெடுப்பார்கள். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form ஆபத்துகளும் சவால்களும் இந்தப் பத்து நாள் பயணத்தில் நான்கு பேர் மிகக் குறுகிய இடத்தில் வாழ வேண்டும். உறக்கம், உணவு, உடற்பயிற்சி, வேலை, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். இதற்கு பொறுமையும் மன வலிமையும் வேண்டும். பூமியின் பாதுகாப்பு வளையத்துக்கு அப்பால் கதிர்வீச்சு ஒரு முக்கிய ஆபத்து. சூரியத்தில் ஏதேனும் அசாதாரணச் செயற்பாடு ஏற்பட்டால், சூரிய வானியலாளர்கள் அதை கவனித்து அறிவிப்பார்கள். சூரியக் காற்று, கொரோனல் மாஸ் ஈஜெக்ஷன் போன்றவற்றையும் கண்காணிப்பார்கள். கடுமையான சூரிய நிகழ்வுகள் ஏற்பட்டால், குழுவினர் பொருள் சேமிப்புப் பைகளைப் பயன்படுத்தி தற்காலிகப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். விண்கலத்தின் உயிர் ஆதரவு அமைப்புகள் புதிதாக வடிவமைக்கப்பட்டவை. காற்றைச் சுத்தப்படுத்தும் அமைப்பு, நீர் மீள்சுழற்சி அமைப்பு, கழிவுகளை மூடி வெளியேற்றும் கழிவறை இவை அனைத்தும் பிழையின்றி செயல்படவேண்டும். இந்த கருவிகளை இதுவரை மனிதர்களுடன், பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் சோதனை செய்வது இதுதான் முதன் முறை. சிறிய பழுதும் பெரிய சிக்கலாக மாறலாம். சந்திரனைச் சுற்றும்போது விண்கலம் பூமியின் பார்வைக்குப் அப்பால் சென்று விடும். அப்போது வானொலி தொடர்பு இயலாது. திரும்பும்போதும், வளிமண்டலத்தில் அதிக வெப்பம் உருவாகும் நேரத்தில் பிளாஸ்மா அடுக்கு காரணமாக வானொலி தொடர்பு மீண்டும் துண்டிக்கப்படும். அதன் பின்னர் பராசூட்டுகள் திறந்து நீரில் இறங்கும். செய்தி தொடர்பு துண்டிக்கப்பட்ட இந்த தருணங்கள் திக் திக் தருணங்கள். இவை விண்வெளிப் பயணத்தில் புதிதல்ல. ஆனால் இவ்வளவு தொலைவில், அனைத்தையும் ஒருசேரச் சந்திப்பது இது தான் முதன்முறையாக இருக்கும். நிலவுடன் மனிதனின் இரண்டாம் தேன்நிலவின் தொடக்கமே இந்தப் பயணம். (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vlg0dvvvlo
5 days 1 hour ago
ஈரான் போரை நிறுத்துமாறு ட்ரம்ப்புக்கு பாப்பரசர் லியோ வேண்டுகோள் Published By: Digital Desk 3 01 Apr, 2026 | 11:51 AM ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சரியான வழியை கண்டறியுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாப்பரசர் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முதல் பாப்பரசரான லியோ, ரோமிற்கு அருகிலுள்ள காஸ்டெல் காண்டோல்போவில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், "ஜனாதிபதி ட்ரம்ப் போரை நிறுத்த விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். வன்முறையைக் குறைப்பதற்கான வழியை அவர் கண்டறிவார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில், போரை ஆரம்பிப்பவர்களின் கைகள் "இரத்தத்தால் படிந்துள்ளன" எனவும், அவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்பதில்லை எனவும் பாப்பரசர் மிகவும் காட்டமாகத் தெரிவித்திருந்தார். எதிர்வரும் 05 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என அவர் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். "அப்பாவிச் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுடன் ஆரம்பித்த இந்தப் போர், தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பலிவாங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/242469
5 days 1 hour ago
"ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் டிரம்புக்கு அல்ல" - இரான் எம்பி பேசியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஸிஸி (கோப்புப் படம்) ஹோர்மூஸ் நீரிணையை திறப்பது பற்றி இரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஸிஸி பேசியுள்ளார். "ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் அவருக்கு (டிரம்ப்) அல்ல." என்றார். இரானிய நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவரான இப்ராஹிம் அஸிஸி, "இரானின் புதிய சட்டங்களைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஹோர்மூஸ் நீரிணை திறக்கும்." எனத் தெரிவித்தார். "47 ஆண்டுகால விருந்தோம்பல் நிரந்தரமாக முடிந்துவிட்டது," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 1979-இல் இரானிய புரட்சி நிகழ்ந்ததில் இருந்து தற்போது வரையிலான காலக்கோட்டை குறித்து இதை அவர் தெரிவித்தார். டிரம்ப் தனது 'ஆட்சி மாற்றம்' என்கிற கனவை அடைந்துவிட்டதாகக் குறிப்பிடும் அவர், "ஆனால் அந்த மாற்றம் இந்தப் பிராந்தியத்தின் கடல்சார் விதிகளிலே நிகழ்ந்துள்ளது." என்றார். ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு இரானின் தேசிய பாதுகாப்பு குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. "ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் டிரம்புக்கு அல்ல" - இரான் எம்பி பேசியது என்ன?
Checked
Mon, 04/06/2026 - 16:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed