புதிய பதிவுகள்2

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

3 months 2 weeks ago
அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்

வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

3 months 2 weeks ago
தமிழர்களும் ஒரு காலத்தில் பௌதர்களே என்பதால் இந்தப் பிரச்சனையை சிண்டு முடியாமல் ஆளை ஆள் உசுப்பேத்தாமல் முடித்துக் கொள்வது சிறப்பு.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
இந்திய ஊடகவியலாளர் ஒருவர் முன்னேற்பாடாக இப்போதே தனது விருப்பத்துக்குரியவர் தேர்தலில் தோற்றாலும் என்று சொல்லிவிட்டார் தேர்தல் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ வாய்ப்பு இருக்கின்றது 🤣 தனது விருப்பத்துக்குரியவர் வெற்றி பெற்றால் தேர்தல் மிசின் குள‌று ப‌டிக‌ள் ஒன்றும் இல்லை, மக்கள் பேராதரவுடன் தனக்கு பிடித்தமானவர் வெற்றி பெற்று கொண்டார்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
உண்மையா தான் அண்ணா சொன்னேன். நம்பிக்கையானவர்கள் சொன்னது. ரஷ்யா தனது விமானத்தில் இலவசமாக ஐரோப்பா வுக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும் இப்படி சொல்ல முடியாதே இப்படியும் சொல்வார்களா பிரசாரம் செய்வார்களா என்று தான் முதலில் தோன்றியது. இப்போது எல்லாம் இல்லை. ------------------------------------------ வேறு இனத்தை சேர்ந்த தோழி சொன்னார், அவரது மதத்தை சேர்ந்த மதவாதிகள் சொன்னார்களாம் தங்கள் கடவுளால் கொடுக்கபட்ட பொருளாதார கொள்கைகளை ஐரோப்பியர்கள் களவு எடுத்து செயற்படுத்தி இன்று நல்லநிலையில் வாழ்கின்றார்கள். கடவுள் சொன்னதை சரியாக பின்பற்றாத தாங்கள் ஏழைகளாக துன்பபடுகின்றவர்களாக உள்ளோம் என்று.

மயிலம்மா.

3 months 2 weeks ago
அப்பாடா ஒருவாறு வாசித்து முடிச்சிட்டன். சிறு பிள்ளையள் வந்து போற இடத்தில உப்பிடியே எழுதிறது. எப்பிடித்தான் இவ்வளவையும் எழுதினீர்களோ தெரியவில்லை அண்ணா. தொடருங்கள் நன்றாகப் போகிறது.

வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

3 months 2 weeks ago
வெடுக்குநாறிமாலையில் இரவு 08 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னரே 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும். இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். யாழின் நல்லிணக்க வாதிகள்...ஓழிந்து கொள்ளாமல் முன்வந்து உங்கள் ஆதரவைத்தரவும்..

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

3 months 2 weeks ago
வாருங்கோ வந்து பாருங்கோ...பிடிச்சால் இருங்கோ...பிடிக்காட்டில் போங்கோ...இப்ப கனடாவுக்கு ..இலகுவாக வரவழி பிறந்திருக்கு...அதை யே...பாவியுங்கோ என்றேன்...நாலு நாட்டுக்காரர் வந்து அட்டூழியம் புரியும் நாட்டில் இருப்பதைவிட...இடம்பெயர்ந்து நன்றாக இருக்கட்டுமே...

அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!

3 months 2 weeks ago
இலங்கையையும். இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து விடுங்கள்” இல்லை என்றால் இலங்கை முழுவதும் சீனா வசமாகும். அதாவது சீனா ஆகி விடும் இலங்கை மக்களும் தமிழர்கள் சிங்களவர்கள். வேறுபாடுகளின்றி ஆதரிக்கக்கூடும். எனவே… காலதாமதமின்றி செயல் படவும். 😀

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்

3 months 2 weeks ago
ர‌ன் மிசின் கோலிய‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவு செய்ய‌ மாட்டோம் என்று தேர்வுக் குழுவின‌ர் அட‌ம் பிடிக்கின‌ம்.............ந‌ட‌ந்து முடிந்த‌ 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை ம‌ற்றும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் கோலி ந‌ல்லா விளையாடி அணிக்கு ப‌ல‌ம் சேர்த்தார்...........கோலி அடிச்சு ஆட‌ வில்லை என்று பொய் குற்ற‌ சாட்டு சொல்லுவ‌து ஏற்க்க‌ முடியாது..............ரோகித் ச‌ர்மா த‌ல‌மையில் இந்தியா இர‌ண்டு வ‌கையான‌ உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை..............டோனி க‌ப்ட‌னாய் இருந்த‌ போது எல்லா கோப்பையும் இந்தியா தூக்கி விட்ட‌து..........ம‌ற்ற‌ க‌ப்ட‌ன் மாருக்கும் கோப்பைக்கும் ராசி இல்லை............ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் முக்கிய‌மான‌ ம‌ச்சின் கோட்ட‌ விடுகின‌ம்...............இந்திய‌ர்க‌ளுக்கு தேசிய‌ விளையாட்டை விட‌ ஜ‌பிஎல் தான் அவைக்கு முக்கிய‌ம் ஹா ஹா..............

அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!

3 months 2 weeks ago
அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா! அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வந்தது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அருணாச்சலுக்கு சென்றபோது, சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம். அப்பிராந்தியத்தின் மீது உரிமைகோரும் நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நடைபெறும் ஆக்கிரமிப்பு, இராணுவம், பொதுமக்கள் ஊடுருவல் போன்ற முன்னெடுப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பகுதிக்கு “ஜங்னான்” என பெயரிட்டுள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு செல்லும் இந்தியத் தலைவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374245

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
இந்த‌ தேர்த‌ல் ஓட‌ அண்ணாம‌லை காணாம‌ல் போவ‌து உறுதி........... ஆனால் இவ‌ங்க‌ள் ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ வாய்ப்பு இருக்கு இதை ஒரு ஊடகவியலாளர் தொட‌ர்ந்து சொல்லிட்டே இருக்கிறார்.............தேர்த‌ல் நேர்மையான முறையில் ந‌ட‌க்குமா😁..............

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
முக்கி முக்கித் தேடியதில் மேற்கில் இருந்து ஈரானுக்கு போன ஒரு கப்பலை ஹௌதிகள் அடித்ததைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்😂 (ஈரான் மைண்ட் வொய்ஸ்: இந்த ஹௌதிகள் நல்லவங்களா, கெட்டவங்களா?) இனிக் கீழே உள்ள இணைப்பை அழுத்தி, இது வரை தாக்கப் பட்ட சரக்குக் காவிக் கப்பல்களின் படங்கள் பாருங்கள்! (றொய்ட்டர் காரன் பொய் சொல்லுவான், கவனம்😎!) https://www.reuters.com/graphics/ISRAEL-PALESTINIANS/SHIPPING-ARMS/lgvdnngeyvo/

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
ServiceOntario employees colluded with auto theft ring again, police say Civil servants were allegedly trafficking driver and vehicle data from the Ministry of Transportation database, including hundreds of addresses. https://nationalpost.com/news/canada/service-ontario-employees-auto-theft-ring/wcm/091f41aa-0f87-4477-ab02-50abaa821120/amp/ இதில் எங்கள் சிரி லங்கன்ஸ்ஸும் அடக்கம். ☹️

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
US claims ship hit by Houthis was headed to Iran A Houthi military spokesman reiterated the threat that attacks from Yemen will persist until Israel halts its war in Gaza. Houthi supporters attending weekly demonstrations against Israel's war on Gaza and the US-UK attacks on Yemen have signalled that they remain defiant [AP Photo] Published On 12 Feb 202412 Feb 2024 | Updated: 13 Feb 2024 07:54 AM (GMT) The United States has claimed that a cargo ship hit by missiles fired by Houthi fighters in Yemen was headed to Iran. US Central Command (CENTCOM) said early on Tuesday that the MV Star Iris was transiting through the Red Sea to reach the port city of Bandar Imam Khomeini in southern Iran. https://www.aljazeera.com/news/2024/2/12/yemens-houthis-target-us-linked-ship-with-missiles#:~:text=The United States has claimed,Imam Khomeini in southern Iran.

பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன - சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன - சர்வதேச நாணயநிதியம்

3 months 2 weeks ago
அதிசயம் ஆனால் உண்மையோ?இந்தியாவுக்கு இது பொறுக்காதே..இந்தியாவின் பணத்தில் இந்த பணவீக்கம் குறைந்திருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட 'A', 'B' வலயங்களில் துரித அபிவிருத்தி! - மறைந்த காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

3 months 2 weeks ago
ஐக்கிய தேசிய கட்சிக்கு செலைன் ஏத்தி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி சார்பாக நிற்க மான்புமிகு அரசியல் சாணக்கியர் ரணில் முயல்கின்றார்.... வெற்றி பெற்றால் இவரின் திட்டம் அமுல்படுத்த படும் இல்லை என்றால் மகிந்தா அம்பாந்தொட்டை மகாவலியை திருப்பி விடுவார்...

ஒரு பொய்

3 months 2 weeks ago
(குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
Checked
Mon, 07/08/2024 - 15:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed