புதிய பதிவுகள்2

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்!

3 months 2 weeks ago
வெளிநாடுகளிட்ட கையேந்தி பிச்சையெடுத்தும் ரோசமானமில்லாமல் தங்கவேலி கட்டிக்கொண்டு திரிகின்றார்கள். நாடு இருக்கும் நிலமையில் விகாரைகள் கட்டி தங்க வேலிகளால் அடைக்க வேண்டிய அவசியமென்னவாம்? 🤣

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
நான் அப்படி கேட்கவில்லை அண்ணா நீங்களே சொல்கிறீர்கள். நாம் தேர்ந்து எடுத்த நாடுகளை விட நாம் விரும்பாத அல்லது தாண்டி வந்த நாடுகள் நல்ல வாழ்க்கை மற்றும் ஜனநாயக பண்புகளை கொண்டவை என்று. ஆனால் நான் சிறீலங்கா எப்படி என்னை ஏற்கவில்லையோ அடித்து கலைத்ததோ அதேபோல் தான் இந்த நாடுகளையும் நான் பார்க்கிறேன். அடித்து கலைத்தவன் எந்த வகையிலும் அரவணைத்தவன் பக்கத்தில் வரவே முடியாது.

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பம்! 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் நாளைய முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மதீஷ பத்திரன விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. உபாதையில் இருந்து மதீஷ பத்திரன இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால், அவர் நாளைய போட்டியில் இடம்பெறமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/296585

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்ப இஸ்ரேல் சதி: ஹமாஸ் தலைவர் Published By: SETHU 20 MAR, 2024 | 11:13 AM காஸா பிராந்தியத்தின் மிகப் பெரிய வைத்தியசாலையை இஸ்ரேல் முற்றுகையிட்டதையடுத்து, காஸா போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை குழப்புவற்கு இஸ்ரேல் சதி செய்கிறது என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே குற்றம் சுமத்தியுள்ளார். ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களை தான் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை காஸாவின் அல் ஷிபா வைத்தியசாலை முற்றுகையின்போது, ஹமாஸின் டசின் கணக்கான தலைவர்கள் கொல்லப்பட்டனர் எனவும், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கட்டாரை தளமாகக்கொண்ட, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே இது தொடர்பாக கூறுகையில், 'அல் ஷிபா மருத்துவ வளாகத்தில் ஸியோனிஸ படைகளின் நடவடிக்கையானது, காஸாவில் வாழ்க்கை சூழல் மீளத் திரும்புவதை தடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பொலிஸ் அதிகாரிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் வேண்டுமேன்றே இலக்கு வைப்பதானது குழப்பங்களையும் எமது மக்களிடையே வன்முறைகளையும் ஏற்படுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. டோஹாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை குழப்பும் முயற்சியையும் இது வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179197

உயிரணுக்களிலிருந்து எச்.ஐ.வி.யை அகற்ற முடியும் – விஞ்ஞானிகள்

3 months 2 weeks ago
நோபல் பரிசு பெற்ற Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து HIV ஐ வெற்றிகரமாக அகற்ற முடியும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உடலிலிருந்து முழுவதுமாக வைரஸை அகற்ற முடியும், இருப்பினும் இது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை சரிபார்க்க இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள எச்.ஐ.வி மருந்துகள் வைரஸை கட்டுப்படுத்தலாம் ஆனால் அதை அகற்ற முடியாது. நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்-செல் மற்றும் மரபணு சிகிச்சை தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியரான டாக்டர் ஜேம்ஸ் டிக்சன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் : “எதிர்கால சிகிச்சைக்காக முழு உடலிலும் இந்த செல் மதிப்பீடுகளின் முடிவுகளை நிரூபிக்க அதிக ஆய்வுகள் தேவைப்படும்,” என்று கூறியுள்ளார்.. https://thinakkural.lk/article/296495

காத்தான்குடி கோடீஸ்வர வர்த்தகரின் 3,000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!

3 months 2 weeks ago
21 MAR, 2024 | 01:18 PM புறக்கோட்டை , செட்டியார் தெரு பகுதியில் நகை விற்பனை நிலையமொன்றை நடத்திச்செல்லும் வர்த்தகர் ஒருவரின் 3,000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் நேற்று (20) தெரிவித்துள்ளனர். கொழும்பு செட்டியார் தெரு , மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் நகை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்லும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அஹமது முஹய்தீன் உமர் ஹசீம் என்ற வர்த்தகர் ஒருவரின் நகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் நகை விற்பனை நிலையமொன்றில் பணிபுரியும் இருவரே திருடியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179317

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்!

3 months 2 weeks ago
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை நேற்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். 2022 ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, சர்வதேச நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இலங்கைக்கு கடன் வழங்குவதை நிறுத்தின. அதனால் முதலில் அந்த தடையை நீக்கிக்கொள்ள, நாம் கடனை மீளச் செலுத்தும் வல்லமையுள்ள நாடு என்பதை உறுதி செய்ய வேண்டும். பொருளாதார நெருக்கடியிருந்து நாட்டை மீட்பதற்காக ஒரு வருடத்திற்குள் தீர்மானமிக்க பணிகளை ஆற்றியுள்ளோம். இதேநிலை தொடரும் பட்சத்தில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இது கடுமையான பணி என்ற போதிலும், மிகக் குறுகிய காலத்தில் அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். அதற்குரிய பேச்சுவார்த்தைகளை இந்த வாரத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். அதேபோல் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பணிக்குழு, சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவுடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளது. அதேபோல் சீனாவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். மேலும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறோம். நிதி அமைச்சின் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் மீண்டும் ஐரோப்பாவிற்குச் சென்று மேற்படி குழுவினருடன் கலந்துரையாடவுள்ளனர். அதன்படி வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணை பேச்சுவார்த்தையொன்றை ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கவுள்ளோம். அதன் பின்னர் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவடையும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் உலக அரங்கில் கடனை மீளச் செலுத்தக்கூடிய நாடு என்ற உறுதியைப் பெற்றுக்கொள்வோம். இதுவரைக் காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும். தற்போதும், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து வருகின்றன. மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவு செய்யும் பட்டசத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மீளக் கிடைக்கும். அதனால் எமது நாணயக் கையிருப்பும் அதிகரிக்கும். நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளோம். இந்த நிலையில் இருந்து வெளிவர பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஓரளவு நிவாரணம் வழங்கக்கூடிய நிலையை அடைந்துள்ளோம். இந்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும். அத்துடன் அஸ்வெசம வேலைத்திட்டத்தின் மூலம் சமுர்தித் திட்டத்தைப் போன்று மூன்று மடங்கு நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்தில் இருந்து இருபத்தி நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். இப்படிப் பார்க்கும் போது, சிறந்த பொருளாதார நிலை இருந்தபோது கொடுத்த நிவாரணத்தை விட,வங்குரோத்தடைந்த நாடாக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம், மூன்று மடங்கு அதிகம் என்பது தெளிவாகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளின் இறுதி நன்மை நாட்டின் பொருளாதாரத்திற்கே கிடைக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை. இப்போது நாம் அந்தத் தொகையையும் வழங்கியுள்ளதோடு அதுவும் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சேரும். எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு நாம் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதால் மட்டும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. ஏனெனில் இன்று நாம் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக மாறியுள்ளோம். நம் நாட்டில் இறக்குமதியை விட ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க வெளிநாடுகளிடம் கடன்களைப் பெறுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்நிலைமையைத் தவிர்க்க உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றுடன் கலந்துரையாடி நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம். அதன் ஆரம்ப நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அது வெற்றியடைய இன்னும் 06, 07 வருடங்கள் செல்லும். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கையை சட்டத்தின் ஊடாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளதுடன், இந்தப் புதிய சட்டங்களின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடியும். கடந்த பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். அப்படியானால், வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். https://thinakkural.lk/article/296556

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட 'A', 'B' வலயங்களில் துரித அபிவிருத்தி! - மறைந்த காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

3 months 2 weeks ago
21 MAR, 2024 | 12:53 PM நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின்போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ, பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். இந்நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காதெனவும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை பெற முடியாமல் போயிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டிருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திசாநாயக்கவின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது. காமினி திசாநாயக்கவின் கடந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்னாரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும் என்றும் கூறினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காமினி திசாநாயக்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சர்வமத வழிபாடுகளின் பின்னர் ஜனன தின நிகழ்வுகள் ஆரம்பமானதுடன், மல்வத்து பீடத்தின் களுத்துறை மாவட்ட பிரதம சங்க நாயக்கர், வாதுவ மொல்லிகொட தேகம்பத மகா விகாரை விகாராதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் தலைவருமான போபிட்டிய தம்மிஸ்ஸர நாயக்க தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த இராணுவ வீரர்கள், 1994 ஒக்டோபர் 23ஆம் திகதி காமினி திசாநாயக்கவுடன் தொடலங்க குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் தேசிய வீரர்கள், காமினி திசாநாயக்க மன்றத்தின் ஸ்தாபகர் மறைந்த சட்டத்தரணி ஸ்ரீமா திசாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் காமினி திசாநாயக்க மன்றத்தின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க வரவேற்புரை ஆற்றினார். இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காமினி திஸாநாயக்கவின் பாத்திரம் ஒரு அரசியல் முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார். மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் தான் அவர் பிரபலமடைந்ததாக சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய, அவரின் சரியான முகாமைத்துவம் இலங்கையை துரிதமாக அபிவிருத்தி செய்ய உதவியது என்றும் குறிப்பிட்டார். சப்ரகமுவ மாகாண ஆளுநரும் காமினி திஸாநாயக்க மன்றத்தின் தலைவருமான நவின் திஸாநாயக்க உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார முறை நாட்டுக்கு ஏற்றது என தனது தந்தை எப்போதும் கூறி வந்ததாக தெரிவித்தார். எதிர்காலத்திலும் நடுநிலையான வலதுசாரி இயக்கம் உருவாகும் என நம்புவதாக தெரிவித்த அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, வடிவேல் சுரேஷ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாச, ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் காமினி திசாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179312

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
யாழில் தொடரும் மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்; ஒருவரது நிலை கவலைக்கிடம் Published By: DIGITAL DESK 3 21 MAR, 2024 | 12:26 PM இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை (21) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு மீனவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. குறித்த மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ் தையிட்டி அன்னை வேளாங்கணி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இதேநேரம் நடைமுறைச் சாத்தியமற்றதென தெரிந்தும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் போராட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வகிபாகத்தை அழைப்பு விடுக்காமலும் தானாக ஒட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளும் செய்திகளும் விடுப்பவர்கள் எமது இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது வேதனையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179307

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

3 months 2 weeks ago
இலங்கை நாணயத் தாள்களை சேதப்படுத்தினால் சிறைத்தண்டனை இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது. https://thinakkural.lk/article/296536

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் விருப்பு மனு தாக்கல்! அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது மேலும் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதாகத் கூறப்படுகின்றது. https://athavannews.com/2024/1374105

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும்! - வேலு குமார்

3 months 2 weeks ago
21 MAR, 2024 | 11:24 AM மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இலங்கை பாராளுமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், குழு அறை 8இல் நடைபெற்றது. அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இக்கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி பேசப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர். இந்த கலந்துரையாடலின்போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது; அதனை நிவர்த்தி செய்ய அவசியமான துறை சார்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளிலிருந்து இருந்து மீள்வதற்கு புதியதொரு திட்டத்தை வகுக்கவேண்டிய தேவையுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்திய அரசாங்கத்துக்கு ஆசிரியர் தேவை பற்றிய திட்டமொன்று தயார் செய்து முன்வைப்பதோடு அவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது முழுமையான வசதிகளை கொண்ட ஒரு தேசிய பாடசாலையாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியது மட்டுமன்றி, மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையொன்று இல்லாமை பாரபட்சமானது என்பதையும் அவ்வேளை எடுத்துக்காட்டினார். https://www.virakesari.lk/article/179303

யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!

3 months 2 weeks ago
யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது! கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை அவரிடம் கையளித்துள்ளமையை அடுத்து அவரை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. https://athavannews.com/2024/1374202

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் மீட்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 20 மார்ச் 2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். அப்படி நடந்தால் அதனைத் திரும்பப் பெறுவதற்கான விழிமுறைகள் என்ன? அதேவேளையில் மக்கள் கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கத்தை ரூ.50,000-இல் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுவது என்ன? என்னென்ன விதிகள் அமலில் உள்ளன? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்றுவது, சுவொட்டிகள், சுவர் ஓவியங்களை வண்ணம் பூசி மறைப்பது, தலைவர்களின் சிலைகளை மறைப்பது போன்ற பணிகளை மாநிலத் தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அரசு அலுவலர்களை வைத்து செயல்படுத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள். படக்குறிப்பு, இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யப்படும் 'தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில் பாதிப்பு' இந்நிலையில் இந்தக் குழுக்கள் பெரும்பாலும் சிறு, குறு வியாபாரிகள் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் செல்லும் பணத்தையே பறிமுதல் செய்கின்றனர் எனவும், இதனால் வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழத் துவங்கி இருக்கின்றன. தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் சரக்குகளை சோதனை செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாலும் சிறு, குறு வியாபாரிகள் அவர்களது தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை் தேர்தல் விதி மீறல், ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணம் எனச் சொல்லி பறிமுதல் செய்கின்றனர், என்றார். “பெரிய முதலாளிகள் மட்டுமே வங்கிக் கணக்கின் வழியாக பணப் பரிவர்த்தனைகள் செய்வார்கள். ஆனால், சிறு வணிகர்கள் நேரடியாக பணத்தை கொண்டு சென்றால்தான் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும். அதற்கு எப்படி அவர்கள் ஆவணத்தை காண்பிக்க முடியும்,” என அவர் கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு, வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல் 'தெளிவான அறிவிப்பு இல்லாததால் குழப்பம்' தொடர்ந்து பேசிய அவர் “எது ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் என்பது குறித்த சரியான தகவல் தேர்தல் ஆணையத்திடமிருந்து அதிகாரிகளுக்குச் சென்று சேரவில்லை. அவர்கள் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பத்தை தடுக்கும் பணியை செய்யாமல் வியாபாரிகளின் பணத்தை பிடித்து வருகின்றனர்,” என்றார். மேலும், “நாங்கள் எங்களது லெட்டர் பேடில் இவ்வளவு தொகையை கொண்டுச் செல்கிறோம் என டைப் செய்து எடுத்துச் செல்கிறோம். அதனை சில தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் அனைத்து ஆவணமும் இருந்தாலும் பிடித்துச் சென்று பின்னர் ஆவணத்தை வந்து காண்பித்து பெற்றுச் செல்லச் சொல்கிறார்கள்,” என்றார். தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மேலும் இது குறித்து பேசிய ரத்னவேல், “இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் எங்களது சங்கத்தின் சார்பில், வணிகர்கள் பொருட்களை வாங்குவதற்கான கூடுதல் பணத்தை எடுத்துச் செல்ல வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆவணமின்றி ரொக்கத்தை கையில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை முன் வைத்திருக்கிறோம்,” என்றார். “தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்குப் பிறகாவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் எல்லைகளில் தேர்தலுக்கான நடத்தைகளை பின்பற்றலாம்,” என்றார். படக்குறிப்பு, மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம் ‘தேர்தல் சமயத்தில் தங்கம் வியாபாரம் 10% குறையும்’ இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்து வர முடியாததால் தங்க வியாபாரம் பாதிப்பு அடையும். முன்பு 30% வியாபாரம் நடைபெற்றால் இனி தேர்தல் சமயத்தில் அது 10% குறைந்து விடும், என்றார். தங்க நகைக்கடை வியாபாரத்தில் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு உரிய ஆவணங்களை வைத்துதான் நகைகளை எடுத்துச் செல்வார்கள். அப்படித்தான் மார்ச் 17-க்குள் கொரியர் வழியாக மதுரைக்கு தங்கம் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உரிய ஆவணம் இல்லை என அதிகாரிகள் கூறி பிடித்ததாக கூறுகின்றனர். தங்க நகை வைத்திருப்பவர்கள் அதற்கான அடையாள அட்டையை காண்பித்தால் அதிகாரிகள் ஆவணம் இருக்கும் பட்சத்தில் அதனை அனுப்பி வைக்க வேண்டும் என்றவர், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். “இதற்கு ஒரு முறையான வழிமுறையை தேர்தல் ஆணையம் கூற வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக தொழில் முடங்கும் சூழல் ஏற்படும்,” என்றார். படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயன் எந்தெந்த ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெறலாம்? தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதனை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்த கேள்வியை பிபிசி தமிழ் திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயனிடம் முன்வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணமோ பொருளோ ரூ.10 லட்சத்திற்குள் மதிப்பிடப்பட்டால் அவை மாவட்டக் கருவூலத்தில் வைக்கப்படும், என்றார். “அதற்கு மேல் மதிப்புள்ள பணம் அல்லது பொருட்கள் பிடிபட்டால் அதனை தேர்தல் அதிகாரிகள் வருமான வரிதுறையினரிடம் சமர்ப்பித்து விடுவார்கள்,” என்றார். “சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் அதற்கான உரிய ஆவணங்களை வருமான வரி துறையினரிடம் காண்பித்து தங்களுடைய பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்," என்றார். விவசாயிகள் வியாபாரிகள் என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து பேசிய அவர் "ஒரு விவசாயி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல் மூட்டைகளை விற்று ரொக்கமாக வைத்திருந்து பிடிபட்டால் அவரிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்ததற்கான ரசீது இருக்கும். அதனை காண்பிக்கலாம் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்பு தொகை மீண்டும் வழங்கப்பட்டும்,” என்றார். “அதேபோல், மக்கள் ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லும் போது பிடிபட்டால் அவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை காண்பித்து பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்,” என்றார். மேலும் பேசிய அவர், வியாபாரிகள் தேர்தல் சமயத்தில் கூடுமானவரை ரூ.50,000-க்கு குறைவான பணத்தை எடுத்துச் செல்லலாம், அல்லது வங்கிப் பண பரிவர்த்தனைகள் மூலமாக தங்களது தொழிலை மேற்கொள்வது நல்லது, என்றார். “தேர்தல் விதி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனை பின்பற்ற வேண்டும்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cd187gnnn7qo

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி! அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் ஆரம்பமானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது. அதன்படி, தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பிரசாரமொன்றை திருச்சியில் ஆரம்பிக்கவுள்ளார். இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374196

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

3 months 2 weeks ago
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296581
Checked
Mon, 07/08/2024 - 12:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed