அரசியல் அலசல்

உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் 

2 weeks 4 days ago

உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் 

ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பலம் வாய்ந்த ஒரு தமிழர் கூட்டுத் தெரிவும் மிக அவசியமானதாகும்.

எவ்வளவு தான் எம் தமிழர்களிடையே பிரிவுகள் இருந்தாலும் எதிர் காலம் எப்படியோ நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையோடு தமிழர்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு கூடிய தமிழ் கட்சிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளுக்கோ அல்லது அவர்களோடு சேர்ந்து போட்டி போடும் கட்சிகளுக்கோ வாக்களிக்கலாமா என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர் வாக்குகளை பிரித்து உங்கள் பலத்தை சிதறடிக்காமல் எதிர்கால உங்கள் இருப்பு நலனை வேண்டி சரியாக சிந்தித்து வாக்களியுங்கள். அனுபவமும் ஆற்றலும் இராஜதந்திரமும் மொழி அறிவும் முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும். நாலு சுவருக்குள் நாம் பேசிக் கொண்டிருக்காமல் வெளி உலகத்துக்கும் நாம் பேசுவது தெரிய வேண்டும். 

தமிழர் பலமான கூட்டோடு ஒரு அணியை படித்த இளம் சமுதாயத்திடம் இருந்தும் அனுபவம் ஆற்றல் தலைமைப் பண்பு கொண்டவர்களில் இருந்தும் எதிர் காலத்தில் கட்டும் வரையிலாவது எவ்வளவு பிரச்சினை இருப்பினும் இன்று நாம் வீடு, சங்கு, சயிக்கிள், ஜனநாயக போராளிகள் எதுகும் வேண்டாம் என்றால் வேறு என்ன தெரிவு எமக்கு, பின் யாருக்கு வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பி வைக்கப் போகிறோம். புதிதாக அடிக்கும் அலைகளோடு நாமும் சேர்ந்து போனால் நமது நலன்களும் எங்கள் தியாகங்களும் அர்பணிப்புக்களும் பாதுகாக்காப்படுமா என்று நாம் சிந்திக்க வேண்டும். எத்தனை உயிர்களை எத்தனை தியாகங்கள் எத்தனை இரத்தங்களை இந்த மண்ணோடு மண்ணாய் விதைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எமது விடுதலைக்காய் நாம் கொடுத்த விலை அதிகம் என்பதை சிந்தியுங்கள். உங்கள் நேசத்திற்கும் பாசதிற்கும் உரிய பிள்ளைகள் இந்த மண்ணில் தான் புதைந்து கிடக்கிறார்கள். உயிர்களையே தந்து சென்றார்கள் உங்கள் உன்னதமான விடுதலைக்கே. 

ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட பல தேசிய இனங்கள் தம் அடையாளம் தொலையாமல் இருந்து போரடியதனால் தான் இன்று விடுதலை அடைந்த வரலாற்றை உலகம் கற்றுத் தந்திருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை முன் வைத்தால் எந்தப் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடனும் அனைவரினதும் அரசியல் பொருளாதார நலன் கருதி நாம் இணைந்த அரசியல் செய்ய முடியும் அது வரை நாம் நாமாகவே பலமாக இருந்து நமக்காக போராட வேண்டும். நாங்களும் நீங்களும் ஒன்று எனக் கூறுவது சரியான சமத்துவம் ஆகாது இந்தக் கூற்றானது எங்களோடு அதாவது பெரும் பான்மை இனத்தோடு சேர்ந்து வாருங்கள் என்று கூறிக் கொள்வதன் மூலம் இத்தனை காலமும் எந்த உரிமை கேட்டு தமிழர்கள் போராடினார்களோ அவற்றை எல்லாம் அடியோடு நிராகரிற்பதற்கு சமமாகும் இதை தமிழர் தேசம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எமது அடையாளம், எமது மொழி, எமது பாரம்பரிய பிரதேசம், அத்தோடு நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும் நாம் நாங்களாக இருக்க வேண்டும் எங்கள் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று மறந்து விடாமல் இவை அழிந்து விடாமல் ஒரே சக்தியாக பயணியுங்கள்.

பெளத்தர்களின் அடையாளம் ஆக்கப்பட்டு இந்த நாடு பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் ஏனைய இனங்கள் இரண்டாம் தர பிரஜைகள் போல் ஒரே நாடு ஒரே தேசம் ஒரு நாடு ஒரு சட்டம் என்று இன்னும் ஒரு இனத்தின் உரிமையும் விடுதலையும் மறுக்கப்பட்டு அவர்கள் விருப்புகள் ஏற்றுக் கொள்ளாமையினால் தான் இத்தனை மானிடப் பேரழிவுகளை இலங்கை சந்தித்தது. மாற்றம் என்பது ஏழைகளுக்கு உணவு கொடுப்பதில் இருந்தும் விழுந்து கிடப்பவனை தூக்கி விடுவதில் இருந்து ஆரம்பிப்பதே மானிடம் இதுவே சமத்தும் இதுவே மாற்றம். மாக்ஸ் சொன்ன மகத்தான தத்துவம் இதுதான். நாம் மாற்றத்தை நாடினால், அரசியல் விவகாரங்களை பற்றி மதத் தலைவர்களுடன் எப்போதும் சந்தித்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும். மதத்தை தனிப்பட்ட வாழ்க்கையாக வாழ அனுமதித்து, தனி மனித உரிமையாக அரசியலில் இருந்து விடுதலையாகி இருக்க வேண்டும். 

அதே போல் பெரும் துன்பமும் துயரமும் நிறைந்து சிறுபான்மை மக்களின் தீர்வுகளையும் வெளிப்படையாக பேச வேண்டும். லெனினின் தன்னாட்சி கொள்கையில் கூறும் ஜனநாயகம் என்பது எந்த மக்களும் தங்கள் எதிர்காலத்தை பெரும்பாலான வாக்குகளின் மூலம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து நிலைத்துவிட்டது. லெனினின் தன்னாட்சி குறித்த சிந்தனைகள் மார்க்சியம்தான், மேலும் இவை போல்ஷெவிக் சிந்தனையாகவும் விளங்கின. ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் சுய நிர்ணய விடுதலையை முழுமையயாக அங்கீகரிக்காத வரை அவர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்று அங்கீகரிக்காத வரை எவன் பேசும் சமத்துவமும் சமத்துவம் இல்லை இதில் சமூக நீதியும் இல்லை என்பதை உண்மையான சோஷலிசவாதிகளுக்கு மட்டுமே இது தெரிந்திருக்கும். இதை விடுத்து சிவப்பாக தெரிவது எல்லாம் சோசலிசம் என்றும் கொம்யூனிசம் என்றும் யானை பார்த்த குருடர்கள் போல இருக்கக் கூடாது.

பா.உதயன்✍️ 
 

விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன்.

2 weeks 4 days ago

விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். spacer.png
 

மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி  அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச்  செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது  அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட்பட தமிழ் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் அப்படிப்பட்ட உயர்தர விருந்தகங்களில்தான் உணவு அருந்துகிறார்கள். தமது ஆதரவாளர்களையும் அங்கே அழைத்துச் செல்கிறார்கள். இது முதலாவது சம்பவம்.

இரண்டாவது சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு விருந்தினர் விடுதியில் தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது. தேர்தல் திணைக்களத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவது குறித்தும் தேர்தல்கள் தொடர்பில், மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளதுபோல நிரந்தரமான ஒரு நேர அட்டவணை அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கருத்துக்களைத் திரட்டுவதற்கான ஒரு கருத்தமர்வு அது.

இதில் கலந்து கொண்ட வளவாளர்கள் மற்றும் பயனாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பணம் வழங்கப்பட்டது. பொதுவாக அரசு சார்பற்ற நிறுவனங்களின் கருத்தரங்குகளில் அப்படித்தான், பெரும்பாலும் விருந்தினர் விடுதிகளில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது; வருகை பதிவை எடுப்பது; முதலில் சிற்றுண்டியும் பின்னர் மதிய உணவும் கொடுத்து முடிவில் பயணச் செலவு என்று சொல்லி ஒரு தொகையை கொடுப்பது. இதுபோன்ற பெரும்பாலான கருத்தரங்குகள் “ஏசி” வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில்தான் நடக்கும். மின்விசிறிகளைக் கொண்ட, ஜன்னல்கள் திறந்து விடப்படும் சாதாரண மண்டபங்களில் நடப்பது குறைவு.

பவ்ரல் எனப்படுவது நேர்மையான, முறைகேடுகளற்ற ஒரு தேர்தல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகச்  செயற்படும் ஒரு சிவில் அமைப்பு. அது தனது கூட்டத்தை வளிபதன வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில் நடத்துவதோடு பயனாளிகளுக்கு பணமும் கொடுக்கின்றது. அதாவது நேர்மையான தேர்தலைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு வருபவர்களை ஊக்குவிப்பதற்கு காசு கொடுக்க வேண்டியிருக்கிறதா? இதுபோன்ற கருத்தரங்குகளை ஏன் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பொதுவான வாய்ப்பாட்டுக்கு வெளியே போய் சாதாரண மண்டபங்களில் நடத்தக்கூடாது?

பவ்ரல் போன்ற அமைப்புக்கள் அப்படிச் செய்யலாமென்றால், கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, அதில் வருபவர்களுக்கு சாப்பாடும் சிற்றுண்டியும் குடிபானமும் காசும் கொடுத்து அழைத்துக் கொண்டு வருவதில் என்ன தவறு?

தமிழ்ப் பகுதிகளில் சில கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு அல்லது சிற்றுண்டி, குடிபானம் என்பவற்றோடு காசும் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 2500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. தேர்தல் நாளன்று தூர இடங்களில் இருக்கும் வாக்காளர்களை வாகனம் விட்டு ஏற்றி இறக்குவதற்கும் அதாவது வாக்களிப்பதற்கும் காசு கொடுக்கப்படுகிறது. அல்லது மது கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் உண்டு.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களையும் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? வேட்பாளர்களில் ஒரு தொகுதியினர் உயர்தர விருந்தகங்களில் உணவருந்துகிறார்கள். அங்கே தமது ஆதரவாளர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நோக்கத்தோடு நடாத்தப்படும் கருத்தரங்குகளும் அப்படிப்பட்ட விருந்தகங்களில்தான் நடக்கின்றன. அங்கேயும் பயனாளிகளுக்கு அந்த விருந்தினர் விடுதியின் தரத்துக்கு ஏற்ப உணவு கொடுக்கப்படுகிறது. சராசரி வாக்காளர்கள் அண்ணாந்து பார்க்கும் விருந்தகங்களில் வேட்பாளர்கள் சாப்பிடுகிறார்கள். நேர்மையான தேர்தலை குறித்து வகுப்பெடுப்பவர்களும் சாப்பிடுகிறார்கள். ஆனால் சராசரி வாக்காளர்கள் எங்கே சாப்பிடுகிறார்கள்?

நட்சத்திர அந்தஸ்த்துள்ள விருந்தகங்களில் உணவருந்தும் வசதி வாய்ப்புகளைக் கொண்டிராத சராசரி வாக்காளர்கள் “மந்தை மனோநிலை”யோடு வாக்களிக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்த தமிழ்  அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார். லண்டனில் வசிக்கும் அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர். ஜனாதிபதி தேர்தலின் போது  தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களைக் குறித்து முகநூலில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.. ”பொதுகட்டமைப்பு என்ற தற்காலிக அமைப்பு (ad hoc committee) முன்வைத்த கோசங்களுக்காக மக்கள் வாக்களித்தார்களா? அல்லது ஒரு மந்தை மனப்பாங்கில் (herding mentality) தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தார்களா? முதலாவது எனில் அரசியல் விழிப்புணர்வுமிக்க இரண்டு லட்சம் பேரை திரட்டிவிட்டீர்கள் என்று கூறுவீர்களா?”  இங்கு அவர் மந்தை மனப்பாங்கு என்று குறிப்பிட்டிருப்பது தமிழ்மக்கள் இன உணர்வின்  அடிப்படையில் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததைத்தான். அதாவது ஒரு தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக  வாக்களித்த  சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் மக்களும் மந்தை மந்தை மனப்பாங்கோடு வாக்களித்ததாக அவர் கூறுகிறார்.

சுமந்திரன், யாழ்ப்பாணத்தில், சஜித் பிரேமதாசாவின் மேடையில் வைத்து கூறினார்,பொது வேட்பாளருக்குப் போடும் வாக்குகள் வீணாகப் போகும் வாக்குகள் என்று. அதாவது, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழுந்த இரண்டு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் குறையாத வாக்குகள் வீணாய்ப்போன, மந்தைத்தனமான வாக்குகளா?

spacer.png

ஆயின்,தமிழ் வாக்காளர்களை, விமர்சன பூர்வமாக சிந்திக்கும்(Critical thinking), “அரசியல் விழிப்புணர்வுமிக்க” வாக்காளர்களாக வளத்தெடுப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமாவது ஏதாவது ஒரு பொறிமுறை உண்டா? இல்லையே? எல்லாக் கட்சித் தலைவர்களும்  குருட்டு விசுவாசிகளைத்தானே அருகில் வைத்திருக்கிறார்கள்? விழிப்படைந்த தொண்டர்களை ஏன் அருகில் வைத்திருப்பதில்லை ? குருட்டு விசுவாசிகளை, விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த வாக்காளர்களாக மாற்றுவதற்கு கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் தரிசனங்களோ கட்டமைப்புகளோ இல்லை. கட்சித் தலைவர்களிடமும் அதற்குரிய கொள்ளளவு இல்லை.

இந்நிலையில்,தேர்தலை புத்திபூர்வமாக அணுக முற்றப்படும் பவ்ரல் போன்ற அமைப்புகள் தமது  விழிப்பூட்டும் கருத்தரங்குகளை ஏசி வசதிகளைக் கொண்ட விருந்தகங்களில் நடத்துவதை விடவும் கிராமங்களை நோக்கிச் சென்றால் என்ன? தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தேர்தல் காலத்தில் மட்டும் ஊர்களை நோக்கிச் செல்லாமல்,தொடர்ச்சியாகத் தமது ஆதரவாளர்களுக்கு விழிப்பூட்டும் கூட்டங்களை நடத்தினால் என்ன?

தமிழ்க் கட்சிகள் பெரும்பாலானவை விசுவாசிகளைத்தான் கட்சி உறுப்பினர்களாக வைத்திருக்கின்றன. விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த அரசியல் செயற்பாட்டாளர்களை அல்ல. விசுவாசிகள் முகநூலில் ஒருவர் மற்றவரைத் துரோகி என்பார்கள். நேற்று நண்பனாக இருந்தவர் இன்று கட்சி மாறிவிட்டால் அவர் துரோகியாகி விடுகிறார். தமது கட்சித் தொண்டர்களுக்கு விழிப்பூட்டி அவர்களை அரசியல் மயப்படுத்தும் வேலை திட்டங்கள் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. இந்த லட்சணத்தில் ஒரு கட்சியின் ஆதரவாளர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களை மந்தைகள் என்று கூறுகிறார்.

ஆனால் தமிழ் வாக்காளர்களை மந்தைகளாக வைத்திருக்கத்தான் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இனமான மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டி அதன்மூலம் தங்களைத் தியாகிகளாகக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; சாராயப் போத்தலுக்கு வாக்களிக்கும் மந்தைகள்; காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏற்றுக் கொண்டு வரப்படும் மந்தைகள் ; முகநூலில் நேரலையில் தோன்றும் மருத்துவரை நம்பிக் காசை விசுக்கும் மந்தைகள்; போன்ற எல்லா எல்லாவகை மந்தைகளையும் குருட்டு விசுவாசிகளையும் மேய்க்கத்தான் எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன.வாக்காளர்களை மந்தை மனோநிலையில் இருந்து விடுவித்து அரசியல் விளக்கமுடைய விழிப்படைந்த வாக்காளராக மாற்றுவதற்கு எந்தக் கட்சியாவது தயாரா? அல்லது எந்த என்.ஜி.யோவாவது தயாரா?

 

https://www.nillanthan.com/6954/

அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும்

2 weeks 4 days ago

அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும்

ஒஸ்ரின் பெர்னாண்டோ

(முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்)

ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்னர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்கவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடினேன். அப்போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கணிப்பிடப்பட்ட அவரது குறைந்தளவில்  முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறையின் விளைவுகள், வடக்கு மற்றும் கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தன. அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தற்போது அவர் 2 கோடி 0 இலட்சம் இலங்கையர்களின் ஜனாதிபதியாக இருப்பதால் வடக்கு மற்றும் கிழக்கின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வழிகாட்டியாக கருத வேண்டும். அநேகமாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஏற்கனவே அவருக்கு அதை நினைவூட்டியிருக்கலாம்.

மாற்றமடையும் இலங்கை அரசியல்வாதிகளின் மனநிலை

அதிகாரப் பகிர்வு தொடர்பான இலங்கை அரசியல்வாதிகளின் கொள்கைகள் முரண்பாடுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் 13 வது திருத்தச் சட்டத்தை (13ஏ) அமுல்படுத்துவதாக இந்தியர்களுக்கு உறுதியளித்தனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வை நாமல் ராஜபக்ச நிராகரித்த போதிலும்,அவை உட்பட  “13+” ஐ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். டில்லியில், ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ச  “பெரும்பான்மை (சிங்கள) சமூகத்தின் விருப்பம் மற்றும் உணர்வுகளுக்கு எதிராக 13ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த முடியாது” என்றார். ஆனால், 13ஆவது திருத்தம் ஒருங்கிணைந்த பகுதியாகவிருக்கும் அரசியலமைப்பை நிலைநிறுத்தி பாதுகாப்பாரென ஆணித்தரமாக அறிவித்திருந்தார்! இங்கு அதிகாரப்பகிர்வு குறித்த இந்திய அரசியல் தலைவர்களின் கொள்கை நிலையானதாகவே உள்ளது.

05 டிசம்பர் 2002 இல் ஒஸ்லோ சமாதானப் பேச்சுக்களின் போது, ஜி.எல். பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளும், அன்டன் பாலசிங்கம் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின்  வரலாற்றுபூர்வ வாழ்விடப்  பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வை ஆராய ஒப்புக்கொண்டதை நாங்கள் வசதியாக மறந்துவிட்டோம். .”

“சமஷ்டி ,” “வரலாற்றுபூர்வ  வாழ்விடப் பகுதிகள்” மற்றும் “உள்ளக  சுயநிர்ணய உரிமை”என்பன தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு வெறுப்பாக இருந்ததுடன், வெறுப்பு மற்றும் பொதுமக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. இன்று ரணில் விக்கிரமசிங்கவும் பீரிஸும் ஒஸ்லோ பிரகடனத்தில் இருந்து நிச்சயமாக விலகியிருப்பார்கள் .

13 ஆவது திருத்தம் மற்றும் துணைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த விக்கிரமசிங்க  பிரதமராக இருந்தார்.

ஒஸ்லோ பிரகடனம் செய்யப்பட்டபோது பிரதமராக இருந்தார்.ஆனால் இப்போது அவர் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க விரும்பவில்லை. கோத்தாபய ராஜபக்ச இந்தியர்களுக்கு “13ஆவது திருத்தத்தின்   பலவீனங்களையும் பலங்களையும் பார்க்க வேண்டியது அவசியம்” என்று அறிவித்தார். 2019 இல் அனுபவமற்ற ஜனாதிபதியாக அவர் அவ்வாறு கூறியிருந்தால், அது பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.ஆனால் அவர் 22 மாதங்கள் பதவியில் இருந்த பிறகு அவ்வாறு கூறினார். இது அவரது பங்கில் உள்ள நிர்வாக முறைமைகள்  பற்றிய அறிவின் பற்றாக்குறையை அல்லது அவர் இரகசிய  திட்டங்களை வைத்திருந்ததை பிரதிபலிக்கிறது.

13ஆவது திருத்தத்தின் பரிணாமம்

இந்தப் பின்னணியில், 13 ஆவது திருத்தத்தின் பரிணாமத்தைப் பிரதிபலிப்பது, அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் கோரப்பட்டதற்கு எதிராக மதிப்பிடுவது பொருத்தமானது.

கறுப்பு ஜூலை (1983) மற்றும் ஆயுதப் போரின் ஆரம்பத்தை தொடர்ந்து இலங்கையானது அதிகாரத்தைப் பகிர்வதற்கான அழுத்தத்திற்கு உள்ளானது. அதிகாரப்பகிர்வு மூலம் இலங்கையைப் பிரிக்க இந்தியர்கள் விரும்பினார்கள் என்ற வாதம் உண்மையல்ல. மிசோரம், நாகலாந்து போன்றவற்றில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக இந்தியா எப்போதும் எமது இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்து வருகிறது.

01 மார்ச் 1985 அன்று, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியாவில் இருந்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கையர்களின் நடமாட்டத்தை தடுக்க இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலையீட்டை தனிப்பட்ட முறையில் கோரினார். 01 டிசம்பர் 1985 அன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி  (ரி.யூ.எல்.எவ் ) அதிகாரப் பகிர்வு தொடர்பாக  இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் அதிகாரப் பகிர்வுக்கான தனது யோசனைகளை காந்தியிடம் முன்வைத்தது.

அந்த யோசனைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

• இலங்கை—”இலங்கை” என்பது மாநிலங்களின் ஒன்றியம்,

• வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, ஒரு ‘தமிழ் மொழிவாரி மாநிலம்’, அவர்களின் அனுமதியின்றி அதனை  மாற்ற முடியாது.

• பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், பதவிகள் / தொலைத்தொடர்பு, குடிவரவு/குடியேற்றம், வெளிநாட்டு வர்த்தகம்/வணிகம், இரயில் போக்குவரத்து  விமான நிலையங்கள்/விமானப் போக்குவரத்து, ஒளிபரப்பு/தொலைக்காட்சி, சுங்கம், தேர்தல்கள்  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய விவகாரங்களுக்கு “பட்டியல 1″” இன் கீழ் இன விகிதாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
• பட்டியல் 2”, சட்டம் மற்றும் ஒழுங்கு, நிலம் போன்றவற்றை உள்ளடக்கிய ஏனைய அனைத்துப் விடயதானங்களையும்  கொண்டிருந்தது, மாநில சபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன,

•  1981 நவம்பர் 1, இல்இலங்கையில் வசிக்கும் எந்தவொரு நபரும்  ஒரு வெளிநாட்டவராக இருக்கக்கூடாது  இலங்கை  குடிமகனாக இருக்கவேண்டும் , • எந்தவொரு “தேசியத்தையும்” பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் அல்லது சட்டமூலமும் அந்த “தேசியத்தின்” உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படக்கூடாது (‘தேசியம்’ என்ற சொல் தவறாக வழிநடத்தப்படுகிறது.)

• வரிகள், தீர்வை /கட்டணம், மற்றும் கடன்கள்/மானியங்களைத் திரட்ட மாநில சட்டசபைக்கு  அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

• இந்திய தமிழர்களுக்கான விசேட ஏற்பாடுகள்,

• தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேம்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்,

• நீதித்துறை முறைமையை  மேம்படுத்துதல், உதாரணமாக  மேன் முறையீட்டு நீதிமன்றம்  மாகாண மேல் நீதிமன்றம், மற்றும்,

• முஸ்லிம் உரிமைகள் கவனிக்கப்பட வேண்டும்.

ஜெயவர்த்தன அரசாங்கம் பிரேரணையை நிராகரித்தது.தமிழர் விடுதலை கூட்டணி  மீண்டும் காந்திக்கு எழுதியது (17-1-1986), ‘பாரம்பரிய தாயகம்,’ குடிப்பரம்பல் ஏற்றத்தாழ்வு போன்ற மிகவும் முக்கியமான பிரச்சினைகள் அதில்   உள்ளடக்கப்பட்டிருந்தது. ஜெயவர்த்தன உறுதியுடன் இராணுவத் தீர்வை ஆதரித்தார் போரை “இனப்படுகொலை” என்று முன்னாள் இந்திய அமைச்சர் பி.ஆர். பகத் மற்றும் பல மக்களவை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். பிந்தையவர்கள், ‘இலங்கையை 24 மணி நேரத்தில் நசுக்குவது” போன்ற தலையீடுகளை கோரினர்  (ஸ்ரீ குழந்தைவேலு 29-4-1985), மற்றும் ஸ்ரீ கோபாலசுவாமி 13-5-1985 போன்றவர்கள்  இந்தியாவை “இராணுவத் தலையீடுகள் உட்பட சாத்தியமான எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

09 ஜூலை 1986 இல் இலங்கை அரசியலமைப்பு அடிப்படைகளுக்கு  பொருத்தமான விதத்தில் அமைச்சர் ப.சிதம்பரத்துடன் கலந்தாலோசித்த பின்னர் தயாரிக்கப்பட்ட இலங்கை முன்மொழிவுகளில் காந்தி திருப்தி அடைந்திருப்பார். மாகாண சபைகள், சட்டம் ஒழுங்கு, மற்றும் மகாவலி திட்டத்தின் கீழ் காணி அபகரிப்பு உள்ளிட்ட காணி குடியேற்றங்கள் குறித்த முன்மொழிவுகளில் ‘குறிப்புகள்’ இணைக்கப்பட்டு, இன அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 1986,செப்டம்பர் 30 அன்று,

தமிழர் விடுதலை கூட்டணியானது அரசாங்கத்தின் முன்மொழிவுகள்  குறித்து விரிவாக இந்தியாவிற்கு பதிலளித்தது, மேலும் முன்மொழிவுகளைச் சேர்த்திருந்தது .

மக்களவையின் [லோகசபை]  கோரிக்கைகளை காந்தி கவனத்தில் கொண்டார். மக்களவையிலும் வெளிநாட்டிலும் (உதாரணமாக ஹராரேயில் ) விரக்தியை வெளிப்படுத்தினார். அவரையும் இந்தியாவையும் பலவீனமாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் அவரைக் கோபப்படுத்தியது மற்றும் அவரை கடினமாக்கியது. 02 ஜூன் 1987 இல், அவர் ‘மனிதாபிமான உதவியுடன்’  கப்பல்களை   அனுப்புவதாக அச்சுறுத்தினார், மேலும் 04 ஜூன் 1987 அன்று இந்திய விமானம் இலங்கையின் வான்வெளியை மீறி வடக்கில் உதவிவழங்கும்நடவடிக்கைகளை  மேற்கொண்டது. இந்த அப்பட்டமான அத்துமீறலில் எந்த வல்லரசும் எங்களுடன் நிற்கவில்லை. ஜெயவர்த்தன  ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட ஒப்புக்கொண்டார் மற்றும் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியதில் ஆச்சரியமில்லை.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்திய அமைதி காக்கும் படை (ஐ பி கே எவ் ) இலங்கையில் நிறுத்தப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட், நிதின் கோக்லேவுக்கு அளித்த பேட்டியில், இந்திய ராணுவத்தை இங்கு நிறுத்தியது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஜெய்சங்கர் (ஐ பி கேஎவ்  – 1988-1990-ன் ஒரு முறை அரசியல் ஆலோசகர்), இது ஒரு ‘தவறான செயல்’ என்று கூறியுள்ளார்.மேலும் பல, கல்கட் மற்றும் ஜெய்சங்கருக்கு நன்கு தெரியும். முக்கியமாக ஐ பி கே எவ்  செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக தமிழ் மக்களின் மனதில் சாத்தியமான தீர்வைத் தேடும் நிலையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் விளக்கியபடி, ஜெயவர்த்தன  காந்தியை 1986 நவம்பர் நடுப்பகுதியில் பெங்களூரில் சந்தித்தார், அமைச்சர்கள் நட்வர் சிங், சிதம்பரம் மற்றும் தானும், ஜெயவர்த்தனவும் காந்தியிடம் அரசாங்கம் வீழ்வதை தடுக்க இந்திய இராணுவத்தை அனுப்புமாறு ‘மன்றாடி வேண்டுகோள் விடுத்ததாக ‘ கூறப்படுகிறது. தெற்கில் ஜே.வி.பி மற்றும் வடக்கில் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக அவரது அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் தடுக்கவே படைகளை அனுப்புமாறு கோரியதாக கூறப்படுகிறது. அவரது கடும்  விரக்தியே ஜெயவர்த்தனவை உடன்படிக்கை மற்றும் 13 ஆவது திருத்தத்தை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. இந்தக் சந்திப்பிற்கு பிறகு காந்தி சிதம்பரத்தையும், நட்வர் சிங்கையும் கொழும்புக்கு அனுப்பினார்.

1986 டிசம்பர் 19, அன்று, அவர்கள் “வெளிவந்த” முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். முக்கிய விடயங்கள்  வருமாறு:

*  சிங்கள பெரும்பான்மை அம்பாறைத் தொகுதியை நீக்கியதாக கிழக்கு மாகாணம் மீள எல்லை வகுக்கப்படவேண்டும் .

* புதிய கிழக்கு மாகாணத்திற்கு ஒரு மாகாணசபை நிறுவப்பட இருந்தது.

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிறுவன ரீதியான இணைப்புகள் குறித்து முன்னதாக விவாதிக்கப்பட்டது.

இரண்டாவது கட்ட அரசியலமைப்பு மேம்பாட்டின் பின்னர்  கீழ் பின்னர் ஒன்றிணைக்க எண்ணம் இருந்திருக்கும்.

* குறிப்பிட்ட காலத்திற்கு துணை ஜனாதிபதி பதவியை உருவாக்க இலங்கை தயாராக இருந்தது.

* பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவிற்கு அழைக்கப்படலாம்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, தமிழர்களின் நலன்களை இந்தியா எவ்வாறு பொருத்த முயற்சித்தது என்பதைக் காட்டுகிறது.இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தியாவைத் தூண்டிக்கொண்டே இருந்தன. கொழும்பு அரசியல் தீர்வைத் முன்னெடுக்காவிட்டால், அதன் தலையீட்டுக்கான  வகிபாகத்தை கைவிடுவதாக அது 09 பெப்ரவரி 1987 அன்று அச்சுறுத்தியது. ஜெயவர்த்தன 1987 பெப்ரவரி 12 இல் பதிலளித்தார். இராணுவ நடவடிக்கைகளை அமைதிப்படுத்தவும், பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாகத்தை ஊக்குவித்தல் மற்றும் காவலில் உள்ளவர்களை விடுவிக்க வழிவகை செய்வதாக  பதிலளித்திருந்தார் . இவ்வாறுதான் தவறாக   இந்தியாவுக்கு  விசனமூட்டப்பட்டபொது அது பிரதிபலிப்பை  வெளிப்படுத்தியிருந்தது  .

அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ், அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டதால் மாகாண சபைகள்  பலவீனமடைந்தன மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தன. இது ஜெய்சங்கரை ஜனாதிபதி திசாநாயக்கவிடம் பேசுவதற்கு வழிவகுத்திருக்கலாம், அவருடைய கட்சி 13 ஆவது  திருத்தத்துக்கு எதிரானதென கருதப்படுகிறது. அண்மையில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் தலையீட்டைக் கோரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து இதுவாகும். அதிகாரப்பகிர்வில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்படாது என்ற தேசிய மக்கள் சக்தியின் பகிரங்க அறிக்கையின் மூலம் மாகாண சபைகள்  மீதான இத்தகைய வெறுப்பை வெற்றி கொள்வது கடினம். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற ஜெய்சங்கரின் கோரிக்கை இதற்கு  மிகவும் நெருக்கமாக உள்ளது.

1986 நினைவு  மீட்பு

பாரதீய ஜனதா கட்சியின்  பிரமுகர், ஜஸ்வந்த் சிங், 13 மே 1986 அன்று, இலங்கை நிலைவரத்தின் அடிப்படையில் மக்களவையில் ஏழு கேள்விகளை முன்வைத்தார். அவை இன்றும் பொருத்தமானவை.

* அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதத்தில் இந்திய நிலைப்பாடு என்ன?

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பில் இந்தியாவும் இலங்கையும் எங்கே நிற்கின்றன?

*  நிலப் பயன்பாடு குறித்த இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழ் குழுக்களின் நிலைப்பாடு என்ன?

* மொழியின் அந்தஸ்து  என்ன?

* சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த நிலைப்பாடு என்ன?

* தீர்வை எட்டுவதற்கான கால வரையறை  என்ன?

* இலங்கைப் பிரச்சினைகளின் பின்னணியில் வெளிவரும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

ஜஸ்வந்த் சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் முக்கியமான மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து கொள்வார் அல்லது ஒப்பந்தம் ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி மற்றும் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்புவார். ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கு ஜெய்சங்கரின் நினைவூட்டல் பின்வரும் விடயங்களிலிருந்தான அவரது விரக்தியின் காரணமாக இருந்திருக்கும்:

*  பகுதியளவு அமுலாக்கம் மற்றும் தாமதமான தேர்தல்களா 13ஆவது திருத்தம் “முடங்கி” உள்ளது.

* வடக்கு மற்றும் கிழக்கு  சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டமை

* காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் தாமதம்

* அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தும் மொழிப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை

* 2009ல் புலிகளை நசுக்கிய பிறகும், தீர்வுக்கான காலவரையறை இல்லாதது, மற்றும்,

* இந்தியாவுக்கு, குறிப்பாக சீனாவிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்.

இதற்கு சமாந்தரமாக கள நிலவரங்கள் மாறிவிட்டன. இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் கவனம் மோதலில் இருந்து மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அக்கறைகள், திரும்பும் அகதிகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2015 இல் முறையே மகிந்த ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரால் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் இணைக்கப்பட்டதன் காரணமாக 13ஆவது திருத்தம்  சர்வதேசமயமாக்கப்பட்டது. புலம்பெயர் குழுக்களின் தீவிர பரப்புரைகளும் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன. இவை ஜனாதிபதி திஸாநாயக்கவின் முன் உள்ள அச்சுறுத்தும் சவால்களாகும். 13ஆவது திருத்தம் அவற்றில் ஒன்று மட்டுமே.

என்ன நடைபெறும்  ?

மேலே பார்த்தபடி, 13 ஆவது திருத்தம்  உள்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கடினமான பாதையைத் தாண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகள் இதற்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர் மற்றும் வன்முறையை அனுபவித்தனர். நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். எனினும், அதிகாரப்பகிர்வு நிலைத்து நிற்கிறது மேலும் இது ஒரு ‘இந்தியாவின்  தயாரிப்பு ’ தீர்வாக பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பகிர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க தயாராக இருக்க வேண்டும்.எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பான இந்தியாவின் அனுபவத்தை ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில், இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் விதிகளை மாற்றியமைத்தது, அபிவிருத்தி/முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்தியர்களுக்கு நிலங்களை விடுவிப்பதற்கு மத்திய அரசு அனுமதித்தது என்பதை திஸாநாயக்க குறிப்பிடலாம். ஜம்மு காஷ்மீரில் குடியுரிமை பெறாதவர்கள் கூட அசையாச் சொத்துக்களை வைத்திருக்கவும் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றவும் அவர்கள் அனுமதித்தனர். மாற்றங்களை இந்தியா தனது “உள் விவகாரங்கள்” என்று கருதியது, 13ஆவது திருத்தத்தில்  நாம் அவ்வாறு கூறினால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!

அபிவிருத்தியை  இழந்த அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பை இது போன்ற ரத்து ஏற்படுத்தியது என்றும், ஊழலை ஒழிக்க உதவியது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவர் விரும்பினால், அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது வாதங்களை வலுப்படுத்த ஜனாதிபதி திஸாநாயக்கவும் இதேபோன்ற காரணத்தை முன்வைக்கலாம்.

ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்தியர்களும் சமச்சீரற்ற நிர்வாகத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு அதைப் பயன்படுத்துவதில்லை, அதை நாமும் நகலெடுக்கலாம். இருப்பினும், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு மிகவும் சிக்கலானது மற்றும் தீவிர சட்டப்பூர்வமான  கவனம் தேவை.

இது இப்போது ஜனாதிபதி திஸாநாயக்கவின் சட்ட மற்றும் நிர்வாக நிபுணர்கள்  எவ்வாறு முன்மொழிய வேண்டும் என்பதை பொறுத்ததாகும்.

உத்தேச புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு தொடர்பான முன்மொழிவுகளை இணைத்தல். அதிகாரப் பகிர்வில் இந்தியா சமரசம் செய்து கொண்டு பொருளாதார மற்றும் மனிதாபிமான உரிமைகள் தலையீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம். இத்தகைய அணுகுமுறை மாற்றம் காலத்தின் தேவை.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கசானில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்கால் அங்கீகரிக்கப்பட்ட, மரியாதைக்குரிய பேச்சுவார்த்தையாளர்/மூலோபாய நிபுணர், தமிழ் அரசியல்வாதிகள் வெற்றிபெறக்கூடிய வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரது புத்திசாலித்தனமான ஆலோசனையை சில தமிழ் அரசியல்வாதிகள் செவிசாய்க்கவில்லை, அவர்கள் 13 ஆவது திருத்தத்தை  நிராகரிக்கும் அதே வேளையில், தமிழர்களுக்கு சுயநிர்ணய அதிகாரம் கொண்ட சமஷ்டி  முறையைக் கோரினர், இது வெற்றிபெறுவதற்கான வாய்ப்பற்றது. தோவலின் விஜயத்தின் பின்னர் 13 ஆவது திருத்த   சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு நினைவூட்டியதன் மூலம், புதுடில்லி இலங்கை தொடர்பாக ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: அது சுயநிர்ணயம் அல்லது சமஷ்டி முறையை தீர்வாகக் கருதவில்லை.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கூறிய செய்தியின் வெளிச்சத்தில் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜஸ்வந்த் சிங்கின் கேள்விகள் மற்றும் தற்போதைய அரசியல் போக்குகளின் அடிப்படையில், தமிழ் குழுக்கள் 13ஆவது திருத்தத்தை நிராகரித்தால், சமஷ்டி  இல்லாத புதிய அதிகாரப் பகிர்வு பொறிமுறையை முன்மொழிய வேண்டும். ஒருவேளை, திசாநாயக்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு, சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை மற்றும் உள்ளடக்கிய தன்மையுடன் கூடிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு மாற்றீட்டை அரசியல் முன்னெடுப்புகள் மூலம் வழங்கலாம். அவையே தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கை.

அதிகாரப் பகிர்வுக்கான சர்வதேச நியமங்கள் மற்றும் துணைக் கொள்கைக்கு முரணாக உள்ளூராட்சி அதிகார சபைகள் மூலம் அதிகாரப் பகிர்வை அடைய முடியும் என சிலர் நம்புகின்றனர். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் யோசிக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆயினும்கூட, எந்தவொரு பொறிமுறையின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த ஒருமித்த முடிவெடுப்பது அவசியம்.

இதுகுறித்து தி இந்து பத்திரிகையில்  மீரா ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

2009ல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்ச நிர்வாகத்திற்கு இந்தியாவின் ஆதரவு இருந்த போதிலும், இலங்கையின் தென்பகுதி மக்களிடையே உள்ள பகுதியினர் இந்தியா மீது சந்தேகம் கொண்டவர்களாகவும், இலங்கையின் இன மோதலில் ‘தலையிட்ட’ ‘தமிழர்களுக்கு ஆதரவான’ பெரும் அண்டை நாடு குறித்து எச்சரிக்கையாகவும் உள்ளனர். . அதிகாரப் பகிர்வு அல்லது மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றிய இந்தியாவின் கருத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் மற்றும் தேசிய சொத்துக்களை மேம்படுத்துவதில் இந்தியப் பங்கை எதிர்க்கிறார்கள்.

இந்தியாவும் தமிழ் அரசியல் தரப்பும்  இந்த சிங்கள மனநிலையை  அனுசரித்து போகக்கூடும் . எதிர்வரும்பாரா ளுமன்றத் தேர்தலில் என் பி பி  ஆட்சி அமைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், அரசாங்கத்தின் அரசியல் விசுவாசம் வேறு எங்கும் திசைதிருப்பப்படாமல், கதைகளை மாற்றுவது சரியான நேரத்தில் இருக்கும். இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரந்த ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் மாற்றம் அடையப்பட வேண்டும்.

பண்டாரி முதல் விக்ரம் மிஸ்திரி வரை, மற்றும் ராஜீவ் காந்தி முதல் நரேந்திர மோடி வரை, இங்குள்ள தேசியப் பிரச்சினையை நிர்வகிப்பதில் இந்தியர்களும் தங்கள் இலங்கை சகாக்களைப் போலவே செயற்பட்டுள்ளனர். 37 ஆண்டுகளாக இலங்கை 13ஆவது  திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தத் தவறியது மற்றும் இந்தியாவும்  இலங்கையை நம்பத் தவறியது. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண 13 ஆவது திருத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இலங்கைக்கு உள்ளது.

முன்னோடிகளில் இருந்து வேறுபட்ட இலங்கைத் தலைவரை இன்று இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது. தேசியப் பிரச்சினைக்கான தீர்வை ஆராய்வதற்கான உண்மையான பாதையில் செல்ல ஜெய்சங்கரும் மற்றவர்களும் அவரை வற்புறுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

 அமைச்சர்களான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் விஜித ஹேரத், செயலாளர்கள் விக்ரம் மிஸ்திரி மற்றும் அருணி விஜேவர்தன, மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சந்தோஷ் ஜா மற்றும் க்ஷேனுகா செனி விரட்ண ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்!

– ஐலண்ட்-
 

https://thinakkural.lk/article/311477

தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன்.

2 weeks 4 days ago
தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன். தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன்.

மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் பகுதிகளில் அனுர அலை தணியத் தொடங்கி விட்டதா? அண்மை வாரங்களில் இடம்பெற்று வரும் சில விடயங்கள் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் மத்தியில் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன.

முதலாவதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள்.

இரண்டாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நிலைப்பாடு.

மூன்றாவது,முட்டை விலை ஏறி இறங்குவது;தேங்காய் விலை அதிகரித்திருப்பது.

நாலாவது,தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேவிபி வேட்பாளர்களுக்கு வெகுசனக் கவர்ச்சி குறைவு என்பது.

தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரை அனுர ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒரு மாற்றம்தான். அதில் சந்தேகம் இல்லை. அந்த மாற்றம் ஒரு வெற்றி அலையாக தமிழ் பகுதிகளுக்கும் பரவியது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள படித்தவர்கள்,விவரம் தெரிந்தவர்கள் மத்தியில் ஜேவிபி குறித்த ஓர் எதிர்பார்ப்பும் காணப்பட்டது.குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பு, அக்கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படாமை, அக்கட்சிகள் உதிரிகளாக நின்று வாக்கு கேட்பது, சுயேச்சைகளின் அதிகரிப்பு… போன்ற பல விடயங்கள் காரணமாகத் தமிழ் தேசிய கட்சிகளின் மீது மக்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வரும் ஒரு பின்னணியில், ஒரு பகுதி படித்தவர்கள், அரசியலை அறிவுபூர்வமாக அணுகுபவர்கள், ஜேவிபியை ஒரு மாற்றாக பார்க்க தொடங்கிய ஒரு நிலைமை சில வாரங்களுக்கு முன்பு வரை காணப்பட்டது.

ஆனால் கடந்த சில வாரங்களுக்குள் அந்த எதிர்பார்ப்புக குறையத் தொடங்கி விட்டது.

குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் ஜேவிபியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் பெருமளவுக்கு மக்கள் அபிமானத்தை வென்றெடுத்தவர்கள் அல்ல. அவர்கள் பொதுவெளியில் ஆற்றும் உரைகளும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தருபவைகளாக காணப்படுகின்றன. திருகோணமலையில் ஜேவிபி நிறுத்தியிருக்கும் ஒரு வேட்பாளர் ஒப்பீட்டளவில் மூன்று இனங்களின் மத்தியிலும் தன் கவர்ச்சியை ஓரளவுக்குக் கட்டி எழுப்பி வைத்துள்ளார்.ஆனால் ஏனைய தமிழ்ப் பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்று தெரிகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக, வடக்கில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிபோல காட்சி தருவது தொடர்பிலும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.அரச வைபவங்களில் அவர் அதிகம் துருத்திக்கொண்டு தெரிகிறார்.அதுவும் அனுர கொண்டுவந்த மாற்றம் எது என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது.

மேலும் அனுர ஆட்சிக்கு வந்ததும் முட்டை விலை குறைந்தது.ஆனால் அது தற்காலிகமானது என்பதைத்தான் சந்தை நிலவரங்கள் பின்னர் வெளிப்படுத்தின. அப்படித்தான் தேங்காயின் விலையும். மாரி காலங்களில் தேங்காய் உற்பத்தி குறைவதனால் தேங்காய் ஏற்றுமதியைத் தடுக்கும் அரச தீர்மானம் ஒன்று அமுலில் உள்ளது. ஆனால் அதை மீறி தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகிறார்கள். முட்டையைப் போலவே தேங்காயும் எல்லா வீடுகளின் சமையலறைகளிலும் அத்தியாவசியமான ஒரு பொருள். அதன் விலை அதிகரிப்பானது ஜேவிபி கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றம் தொடர்பான ஏமாற்றங்களை அதிகப்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியாது என்பது அரசியலை ஓர் அறிவியலாக பயில்பவர்களுக்கு விளங்கும்.ஆனால் சாதாரண வாக்காளர்களுக்கு அது விளங்காது. தேங்காயும் முட்டையும் அனுர மீதான எதிர்பார்ப்பைக் குறைக்க கூடும்.

அடுத்தது, பிரதான விடயங்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள், ஜேவிபியிடம் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை நிரூபித்தன. எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறி வரும் விடயம் அதுதான். அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே அவரை நோக்கி அது தொடர்பான கேள்விகளை நான் பகிரங்கமாக எனது கட்டுரைகளில் எழுப்பியிருந்தேன்.

அக்கேள்விகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் என்னை விமர்சித்து பதில் எழுதியிருந்தார். அவர் இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவராக தன்னை காட்டிக் கொள்ளும் ஒருவர். அவர் எனக்கு எழுதிய பதில்களை இப்பொழுது காலம் தோற்கடித்து விட்டது.

இனப்பிரச்சினையை ஜேவிபி ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகத்தான் விளங்கி வைத்திருக்கிறது. அதை இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்புக் கூடாக விளங்கி வைத்திருக்கவில்லை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக் கொள்ளாமைதான் இனப்பெருச்சினைக்கு மூல காரணம். இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்,தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்காத வரையிலும் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால் இந்த விடயத்தில் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் ஜேவிபியிடம் அடிப்படை விளக்கம் இல்லை என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தன.

அடுத்தது பயங்கரவாத தடைச் சட்டம்.அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் ஒரு தரப்பாக இருக்கும் பொழுது ஜேவிபி பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் போன்றவர்களோடு சேர்ந்து போராடியது. ஆனால் இப்பொழுது அது அதன் வார்த்தைகளிலிருந்து வழுக்கத் தொடங்கிவிட்டது என்று சுமந்திரன் குற்றம் சாட்டுகிறார்.அது உண்மை.இனப் பிரச்சினை தொடர்பாக சரியான விளக்கம் இல்லை என்றால், அதோடு தொடர்புடைய ஏனைய விடயங்களிலும் அப்படித்தான் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

சிங்கள பௌத்த பெருந்தேசிய வாத நோக்கு நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பயங்கரவாதமாகத்தான் தெரியும்.

ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வந்து தமிழ்ப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று விழித்தார். ஆனால் ஜேவிபினர் அவர்களுடைய இரண்டாவது போராட்டத்தை தொடங்கியபொழுது அவர் அவர்களை பயங்கரவாதிகள் என்று விழிக்கவில்லை. நாசகார சக்திகள் என்றுதான் விழித்தார். வார்த்தைத் தெரிவில்கூட ஜெயவர்த்தனவிடம் இனவாதம் இருந்தது. ஆயுதமேந்திய தமிழ் மக்களை அவர் பயங்கரவாதிகள் என்று அழைத்தார். ஆனால் சிங்கள மக்களை நாசகார சக்திகள் என்று அழைத்தார்.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் இயக்கங்களைப் போலவே ஜேவிபியும் மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு ஆறுகளில் வீசப்பட்டார்கள். இன்னொரு பகுதியினர் குற்றுயிராக டயர்களோடு போட்டுக் கொளுத்தப்பட்டார்கள். அபகீர்த்தி மிக்க ஒரு போலீஸ் உயரதிகாரி- அவர் சித்திரவதைகளுக்குப் பேர்போனவர்.தன்னிடம் அகப்பட்ட ஜேவிபிக் காரர்களை எப்படிச் சித்திரவதை செய்வார் என்பது தொடர்பாக ஒரு கதை அப்பொழுது வெளிவந்தது. இரண்டு குமிழ்முனைப் பேனாக்களை அவர் கைதிகளின் இரண்டு காதுகளுக்குள்ளும் செருகுவார்.கைதி உண்மையைக் கூறாவிட்டால் அவர் தன் இரண்டு கைகளாலும் அந்த இரண்டு குமிழ் முனை பேனாக்களையும் பலமாக அறைவார். குமிழ்முனைப் பேனா காதைக் கிழித்துக்கொண்டு கபாலத்தைத் துளைக்கும். இப்படிப்பட்ட கொடுமையான அனுபவங்களுடாக வந்த ஒரு இயக்கம், இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்தை நியாயப்படுத்துகின்றதா?

அது மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திலும் ஜேவிபி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில்,கலாநிதி
விஜய ஜெயலத் உரையாற்றும் பொழுது இலங்கைத் தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறந்துவிடும் ஒரு குரூரமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது என்ற பொருள்பட உரையாற்றினார்.அவர் அவ்வாறு கூறியது, கடத்தப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஜிவிபி உறுப்பினர்களின் அல்லது ஆதரவாளர்களின் கதையைத்தான். ஆயிரக்கணக்கான ஜேவிபியினர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதொடர்பான சரியான புள்ளி விபரம் கூடக் கையில் இல்லை. ஆனால் அதுதொடர்பாக ஜேவிபி எப்பொழுதாவது திறந்த, நீதியான விசாரணையைக் கோ? இல்லை. ஏன்? ஏனென்றால், அவ்வாறு விசாரணைகள் நடந்தால் படைத்தரப்பே குற்றம் சாட்டப்படும். யுத்த வெற்றிக்கு பின் எந்தப் படைத்தரப்பை ஜேவிபி தலையில் வைத்துக் கொண்டாடியதோ, இப்பொழுது அனுரவுக்கு எந்த படைதரப்பு அதிகம் வாக்களித்ததோ, அதே படைத்தரப்பை விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டியிருக்கும். ஜேவிபி அதை விரும்பவில்லை. அதாவது அங்கேயும் இனத்தின் வெற்றியை தான் ஜேவிபி பாதுகாக்க முற்பட்டது. தனது சொந்த தோழர்களுக்கான நீதியை அல்ல.

மேலும் கடந்த வாரம், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த சமூகச் செயற்பாட்டாளர் ஆகிய செல்வினை பனம்பொருள் அபிவிருத்தி சபை பணிப்பாளர் பதவிக்கு நியமித்த ஜேவிபி அமைச்சர்,சில நாட்களில் அந்த முடிவை மாற்றி அப்பதவிக்கு வேறொருவரை நியமித்திருக்கிறார்.என்ன காரணத்துக்காக செல்வின் நீக்கப்பட்டார்? செல்வினுக்கு அப்பதவி வழங்கப்பட்ட பொழுது அதை ஒரு பெரிய மாற்றமாகக் காட்டி சில தமிழ் இடதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். அரசியல் நோக்கு நிலை வேறுபாடுகளுக்கும் அப்பால் ஜேவிபி ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது என்ற பொருள்படவும் எழுதினார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைதான் செல்வின் விவகாரம் தமிழ் மக்களுக்கு உணர்த்தியது.

நிறைவேற்று அதிகாரம் கிடைத்ததும் ஜேவிபி அதே சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் கைதியாக மாறிவிட்டதா? அனுர அலை அதன் மினுக்கத்தை இழந்து வருகிறதா?

அனுர,ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு நான் அவரிடம் பகிரங்கமாக சில கேள்விகளைக் கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கேள்விகளுக்கு பதில் கூற முற்பட்ட தமிழ் ஜேவிபியர்கள் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின் இனவாதம் பின்வாங்கி விட்டது என்பதுதான். அது ஆனால் அது பின்வாங்கவில்லை.அது தற்காலிகமாக தன்னை தற்காத்துக் கொண்டது; அல்லது பதுங்கிக் கொண்டது அல்லது உரு மறைப்புச் செய்துகொண்டது என்பதுதான் சரியா? கடந்த சில வார கால அனுர ஆட்சி தமிழ் மக்களுக்கு உணர்த்துவது அதைத்தானா?

https://athavannews.com/2024/1406897

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் - அதிர்ச்சியில் அறுகம் குடா - கார்டியன்

2 weeks 4 days ago

image

அறுகம்குடாவின் பொன்நிற மணல்கள் பொதுவாக ஆபத்தற்றவை விடுமுறையில்  இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் நீச்சலிற்காகவும் கடல் சாகச விளையாட்டுகளிற்காகவும் கடற்கரையோரத்தில் ஓய்வாக நேரத்தை செலவிடுவதற்காகவும் அங்கு செல்வார்கள்.

arugam_bay112.jpg

ஆனால் கடந்தவாரம் அறுகம்குடாவின் மெதுவான தாளத்திற்கு ஒரு அதிர்ச்சியேற்பட்டது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும், அதன் பின்னர் இலங்கை பொலிஸாரும், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையும் அந்த பகுதியில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக எசசரிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த தாக்குதலின் இலக்காக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர் என அதிகாரிகள் கருதினர். இதன் காரணமாக அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோளை விடுத்தனர்.

இதன் பின்னர் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் அந்த சிறிய நகரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கு தற்போது ரோந்துநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், வீதி தடைகளை அமைத்துள்ளனர்.

இலங்கை பொலிஸாரும் அமைச்சர்களும் அறுகம்குடாவில் காணப்படும் அச்சுறுத்தல் குறித்து தெளிவான விடயங்களை வழங்காத போதிலும் அது காசா மற்றும் லெபனானில் இடம்பெறும் யுத்தங்களுடன் தொடர்புடைய விடயம் என்பது தெளிவான விடயம்.

இஸ்ரேல் மத்திய கிழக்கில் மேற்கொண்ட தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் திட்டம் ஈரானிலேயே உருவானது என விசாரைணைகள் குறித்து நன்கறிந்த தங்கள் பெயர்களை குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

arugam_bay111.jpg

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஈராக்கில் வசித்த இலங்கை  பிரஜையும் ஒருவர்.

கடந்த ஒக்டோபர் முதல் பல தரப்புகள் மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ளன என செய்தியாளர் மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அது தற்போது உலகின் ஏனைய பகுதிகளிற்கும் பரவிவிட்டது என அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தங்கள் அமைதியான கரையோரத்தில் எதிரொலித்துள்ளமை குறித்து அறுகம்குடாவில் ஆச்சரியம் காணப்படுகின்றது.

அந்த பகுதி இஸ்ரேலின் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தங்களின் கட்டாய இராணுவசேவையின் பின்னர் பலர் இங்கு வருகின்றனர். இவ்வாறு அருகம்குடாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது.

சிலர் நீச்சல் போன்வற்றில் ஈடுபடுவதுடன் சுற்றுலாப்பயணிகளாக காணப்படுகின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட நீண்டகால விசாக்களை பயன்படுத்தி உணவுவிடுதிகளை மதுபானசாலைகளை ஏனைய இஸ்ரேலியர்களிற்கு சேவை வழங்கும்  சுற்றுலா நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். நகரின் பல பகுதிகளில் ஹீப்ரு மொழியில் இவற்றின் பெயர் பலகைகள் காணப்படுகின்றன.

குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் காணப்படுவார்கள் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யூதவழிபாட்டு நிலையமான சபாட் ஹவுசே இலக்குகளில் ஒன்று என இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்தார்.

அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் முஸ்லீம்களிற்கு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜூல்பி பைசர் ( 39) என்ற சுற்றுலாப் பயணிகளிற்ககான வழிகாட்டி தெரிவித்தார்.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு டொலர்கள் கிடைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பெருமளவு முஸ்லீம்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அவர்களிற்கு இஸ்ரேலியர்கள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, நாங்கள் அவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவோம், உண்மையான இஸ்லாமியர்கள் அவர்களிற்கு எதிரானவர்கள் இல்லை என அவர் தெரிவித்தார்.

யூத சமூக நிலையத்தை ஏற்படுத்தியது எந்த பிரச்சினையையும் உருவாக்கவில்லை, முஸ்லீம்கள் மக்கள் எந்த வித தயக்கமும் இன்றி இஸ்ரேலியர்களுடன் பழகுவார்கள், எனினும் இஸ்ரேலியர்கள் உள்ளுர் மக்களை ஏமாற்றிவிட்டு இந்த பகுதியில் நிலங்களை கொள்வனவு செய்ய முயன்றதால் சிறிய முறுகல் நிலை காணப்பட்டது என  அவர் மேலும் தெரிவித்தார்.

arugam_bay2.jpg

இஸ்ரேலியர்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றனர் என உள்ளுர் அரசியல்வாதி ரெகான் ஜெயவிக்கிரம கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஆடை அணிவது குறித்து  இஸ்ரேலியர்களின் கலாச்சார நெறிமுறைகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்ந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை தடை செய்யவேண்டும் என கருதும் உள்ளுர் மக்களில் தானும் ஒருவன் என்கின்றார் பைசர்.

இந்த வருடம் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளில் 1.5 வீதமானவர்களே இஸ்ரேலியர்கள்.

"அவர்கள் இலங்கைக்கு நல்லவிடயங்களிற்காக வந்தால்  அது எங்களிற்கு நல்ல விடயம், ஆனால் தற்போது பிரச்சினை காணப்படுகின்றது" என தெரிவிக்கும் அவர் "தாக்குதல் இடம்பெற்றால் எங்கள் மக்களும் உயிரிழப்பார்கள"; என்கின்றார்.

https://www.virakesari.lk/article/197489

படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்

2 weeks 5 days ago

image

எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா 

ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முறையாக சேர்க்கப்பட்டன.

உச்சிமாநாட்டின் போது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், நைஜீரியா, உகாண்டா, கியூபா மற்றும் பொலிவியா உட்பட மேலும் 13 நாடுகள் பங்குதாரர் உறுப்பினர்களாக ஆகின.

இந்த ஆண்டு, பிரிக்ஸில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்த உலகளாவிய தெற்கில் இருந்தான வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைகிறது. கசான் உச்சிமாநாட்டிற்கு சென்ற இலங்கை தூதுக்குழுவினருக்கு வெளியுறவு செயலாளரான அருணி விஜேவர்தன தலைமை தாங்கினார்.

அதேநேரத்தில், வெளிவிவகார அமைச்சரான விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து கொள்வதற்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை நிகழ்வு, உக்ரேனில் நேட்டோ தலைமையிலான பினாமி யுத்தம் மற்றும் சீனா மீதான அமெரிக்கா தலைமையிலான புதிய பனிப்போர் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்ற, அதிகரித்து வரும் பதட்டமான உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் கசான் உச்சிமாநாடு நிகழ்கின்றது.

உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உரை, ஓர் உலகானது ‘சீர்குலைவு மற்றும் குழப்பத்தின் படுகுழியில்’ இறங்குவதை விவரிக்கிறது. ரஷ்ய நாவலான என்ன செய்ய வேண்டும்? இனை குறிப்பிட்டு (அத்துடன் விளாடிமிர் லெனின் ஒரு முக்கிய உரையின் தலைப்பு), ஜி பிரிக்ஸின் உணர்வை சுருக்கமாகக் கூறினார்:

“நம் காலம் எவ்வளவு கொந்தளிப்பாக மாறுகிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் முன்னரங்கில் உறுதியாக நிற்க வேண்டியதுடன், விடாமுயற்சியை வெளிப்படுத்த வேண்டும், முன்னோடியாக இருப்பதற்கான துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும், மாற்றியமைப்பதற்கான புத்திக்கூர்மையை வெளிப்படுத்த வேண்டும்.

உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஓர் முதன்மையான வழிமுறையாக பிரிக்ஸினை உருவாக்குவதற்கும், உலகளாவிய ஆளுகை சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கான முன்னணிப் படையாகவும் உருவாக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.”

செய்தி தெளிவாக உள்ளது. பிரிக்ஸ் என்பது அமெரிக்கா தலைமையிலான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கை வகைப்படுத்திய அரசியல் ஆதிக்கம் மற்றும் ஒருதலைப்பட்சவாதத்திற்கு எதிரான அமைதியான அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கின்றது.

உலகம் குழப்பத்தில் முரண்பாடாக, பிரிக்ஸ் என்ற சுருக்கமானது 2001 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாக்ஸ் ஆவணத்தின் அறிக்கையிலிருந்து உருவானதுடன், அது பொருளாதார சக்தியின் மாற்றத்தையும் அதற்கு G7 உலகளாவிய தெற்கில் இருந்து அதிகமான உறுப்பினர்களை உள்ளடக்க வேண்டும் என்றும் முன்னறிவித்தது.

 எவ்வாறாயினும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகள் மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்று சுழற்சியின் விளைவாக பிரிக்ஸ் அமைப்பிற்கு ஓர் சம்பவம் உள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் விழிப்புணர்விலிருந்து அரபு கிளர்ச்சி, இந்திய சுதந்திர இயக்கம், ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட அலைகள் மற்றும் அணிசேரா இயக்கம் வரை தற்போதைய பல்முனை யுக்தி வரை ஒரு கோடு வரையப்படலாம். பிரிக்ஸ் என்பது இந்த நீண்ட வரலாற்றின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமேயாகும்.

ஆயினும்கூட, இந்த அமைப்பு முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்தியா QUAD இன் உறுப்பினராகவும், அமெரிக்கா தலைமையிலான இந்திய-பசிபிக் வியூகத்தின் முக்கிய முடிச்சாகவும் உள்ளது. நிறவெறிக்குப் பிந்தைய தென்னாப்பிரிக்கா நவதாராளவாதத்தால் முற்றிலும் செயற்பாடற்றதாகும். குழுவில் இணைவதற்கான வெனிசுலாவின் விண்ணப்பத்தை பிரேசில் தடுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்க நிதியியல் மற்றும் இராணுவக் கட்டமைப்பில் ஆழமாகப் பொதிந்துள்ளதுடன், இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை நிறுவிய முதல் அரபு நாடாகும். சீனாவும் ரஷ்யாவும் குழுவின் போர்க்குணமிக்க மையமாக உள்ளதுடன் உலகளாவிய ஒழுங்கை மீள்வடிவமைக்க அதிகமான வளங்கள் மற்றும் சக்தி கொண்ட நாடுகளாக உள்ளன.

ஆயினும் பலதரப்பட்ட மற்றும் சில சமயங்களில் முரண்பாடான அரசியல் செயற்திட்டங்களைக் கொண்ட நாடுகளை ஒத்துழைப்பிற்கான பொதுவான தளத்தில் ஒன்றிணைக்க கட்டாயப்படுத்தும் புறநிலை பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் காரணிகள் உள்ளன.

அமெரிக்கா பாதுகாப்புவாதம், மேம்பட்ட போர்களை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துதல், உலகளாவிய நிதியியல் அமைப்பின் மீதான அதன் கட்டுப்பாட்டை ஆயுதமாக்குதல் மற்றும் உலகின் இருப்பு நாணயத்தை அச்சிடுவதில் அதனது ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக அதிகரித்த முறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், பெரும்பான்மையான உலக நாடுகள் இன்னும் போர், வறுமை மற்றும் அபிவிருத்தி குறைவு ஆகியவற்றுடன் போராடுகின்றது. இந்த உலகளாவிய பெரும்பான்மையினரின் சமானத்திற்கான கோரிக்கை, உற்பத்தித்திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கான நிதியுதவி ஆகியவைதான் பிரிக்ஸ் அமைப்பிற்கான அடிப்படையாகும்.

BRICS மற்றும் இலங்கையின் கைத்தொழில்மயமாக்கலின் எதிர்காலம்

சர்வதேச ஒழுங்கின் சீர்குலைவு மற்றும் குழப்பத்திற்கு இலங்கை ஒரு உதாரணமாக இருக்கலாம். பல வழிகளில், நாட்டின் உள்ளக உறுதியற்ற தன்மைகள் வெளிப்புற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, உக்ரைனில் நடந்த போரைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை பணவீக்கம் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியன ஏற்கனவே கொவிட்-19 மற்றும் சுற்றுலா மற்றும் பணம் அனுப்புகையின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு நாட்டைத் தாக்கியது.

மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் பிராந்திய மோதலைத் தூண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், நீண்டுள்ள பொருட்களின் விலைப் பணவீக்கமானது இலங்கைப் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையானது உலகளாவிய நிதியியல் கட்டமைப்பு மற்றும் பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களின் மோசடியான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. உபரிகளை மீள்சுழற்சி செய்வதற்கும், உற்பத்தி உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறைக்கு சலுகை நிதி வழங்குவதற்குமான உலகளாவிய அமைப்பு இல்லாமை இலங்கை போன்ற நாடுகளால் வலுவாக உணரப்படுகிறது.

IMF மற்றும் உலக வங்கியால் விதிக்கப்பட்ட பணவழங்கல் குறைப்புக் கொள்கைகள் கைத்தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவையாகும்.

நாடு பற்றிய அதன் முதல் அறிக்கையிலிருந்து, உலக வங்கியானது உள்ளூர் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை பெரிய அளவிலான கைத்தொழிற்துறையிலிருந்து விலக்கி, விவசாயிகள் காலனித்துவம், சேவைகள் மற்றும் நுண்தொழில் முயற்சியாண்மை உள்ளிட்ட பல்வேறு ஒரு வழிப்பாதைகளை நோக்கித் திருப்ப முயன்றது. இந்த வழியில் எந்தவொரு நாடும் அபிவிருத்தியடைய முடிந்தது போலாகும்.

இதற்கு நேர்மாறாக, விருத்தியடைந்து வரும் புதிய அபிவிருத்தி வங்கி டொலரைத் தவிர மற்ற நாணயங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவிக்கான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. பெரிய அளவிலான தொழிற்துறையின் அடித்தளத்தில் மட்டுமே இறையாண்மை கட்டமைக்கப்பட முடியும் என்பதை ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

பிரிக்ஸ் மூலமாக, புதிய நிதியளிப்பு பொறிமுறைகள் மற்றும் உலகளாவிய தெற்கில் இருந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இலங்கையில் கைத்தொழில்மயமாக்கலை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கைத்தொழிற்துறை புரட்சிக்கான பிரிக்ஸ் பங்காண்மை (PartNIR) உட்பட இலங்கை நன்மை பெறக்கூடிய பல தொழிற்துறை முன்முயற்சிகளை பிரிக்ஸ் கொண்டுள்ளது. PartNIR ஆலோசனைக் குழுவானது இரசாயனங்கள், சுரங்கம் மற்றும் உலோகங்கள், மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளது என்று கசான் பிரகடனம் தெரிவிக்கிறது. இவை அனைத்தும் 21 ஆம் நூற்றாண்டில் கைத்தொழில்மயமாக்கலை நோக்கிய உந்துதலில் இலங்கை கருத வேண்டிய பெறுமதி சேர்க்கப்பட்ட தொழிற்துறைகளாகும். 

இறுதியாக, கசானில் ஜனாதிபதி ஜியின் உரையானது, பசுமை தொழிற்துறை சங்கிலிகளில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. சீனா தற்போது பசுமை ஆற்றல் துறையில் ஆதிக்கம் செலுத்துவதுடன், இதில் அரிய பூமி கனிமங்கள் மற்றும் மின்கலங்கள் மற்றும் சூரியப்படல்களின் உற்பத்தி ஆகியவை உள்ளடங்கும்.

பிரிக்ஸின் ஓர் உறுப்பினராக, இலங்கையானது கிரப்பீன் போன்ற உள்நாட்டு வளங்களின் பெறுமதி சேர்ப்பை மேம்படுத்துவதற்கும் பசுமை எரிசக்தி தொழிற்துறை சங்கிலியில் இணைவதற்கும் இந்தத் துறையில் சீன நிபுணத்துவத்தைப் பயன்படுத்த முடியும்.

BRICS முன்னேற்றம் தொடர்பில் இன்னும் அதிகமாக பணியாற்றவேண்டியுள்ளது. அதன் விளைவானது கல்லில் எழுதப்படவில்லை. பாண்டுங்கின் உணர்வில், பிரிக்ஸின் விளைவினை வடிவமைப்பதிலும், உலக வரலாற்றில் அதன் சரியான இடத்தைப் பெறுவதிலும் இலங்கை முனைப்பான வகிபங்கினை வகிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/197361

தமிழ்த் தேசிய அரசியலை மக்கள்தான் காக்க வேண்டும்!

3 weeks ago

(புருஜோத்தமன் தங்கமயில்)

tamil%20pa.jpg


வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார். இந்தப் புரட்சி மாற்ற அலைக்குள் தமிழ் மக்களும் அள்ளுண்டுவிடுவார்கள் என்கிற பயம், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் பங்காளியாக இயங்கிய ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படக் கூடியது. 

ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொண்டமைதான், அதியுச்ச தேர்தல் வெற்றியாகும். அது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அங்கு, கூட்டமைப்பின் தலைவர்களோ, பங்காளிக் கட்சிகளோ வெற்றிக்கான உரித்தாளர்கள் அல்ல. அவர்கள், புலிகளினால் மக்களிடம் முன்மொழியப்பட்டு, வெற்றியைச் சுவைத்தவர்கள். அத்தோடு, அப்படியான தமிழர் வாக்கு ஒருங்கிணைவு, தற்போதுள்ள தேர்தல் நடைமுறைக்குள் சாத்தியம் இல்லாதது. அன்றைய திகதியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 9 பாராளுமன்ற ஆசனங்கள். இன்று அது, 6 ஆக சுருங்கிவிட்டது. ஆக, 22 என்கிற பாராளுமன்ற ஆசனத்தை 19 எண்ணிக்கை அடிப்படையில் வைத்துக் கொண்டுதான், தமிழ்த் தேசிய வாக்குகளின் ஒருங்கிணைவின் அடைவு தொடர்பில் பேச வேண்டி ஏற்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பினர் 10 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றன. அப்படிப் பார்த்தாலும் 6 ஆசனங்களின் இழப்பு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக வாதம் முன்வைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் 2 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்தன. அவற்றை பிள்ளையானும், வியாழேந்திரனும் வென்றனர். அம்பாறையில் வெற்றி கொள்ளப்பட வேண்டிய ஒற்றை ஆசனமும் கருணா அம்மானின் வாக்குப் பிரிப்பினால், இல்லாமற்போனது. யாழ்ப்பாணத்தில், அங்கஜன் ஒரு ஆசனத்தை வென்றார். வன்னியில் ஈபிடிபிக்கு உதிரி வாக்குகளினால் ஒரு ஆசனம் கிடைத்தது. நேரடியாக தமிழ் வாக்குகளின் மூலம், 4 ஆசனங்களை தமிழ்த் தேசியம் பேசாத ராஜபக்ஷக்களின் ஆதரவுக் கட்சிகள் வென்றன. ஒரு ஆசனம் அம்பாறையில் நேரடியாக இழக்கப்பட்டது. இந்த ஆசனங்களுக்கான வாக்குகளை தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கித் திருப்பினாலே, நேரடியாக 5 ஆசனங்கள் மற்றும் இன்னொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கான வாக்கின் திரட்சி அளவு என்பவற்றைக் கணக்கில் எடுத்தால், தமிழ்த் தேசியக் கட்சிகள் 19 ஆசனங்களை வெற்றி கொள்ள முடியும். இதில், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசனம் உள்ளடக்கப்படவில்லை. ஏனெனில், அவர் புலிகளின் அலைக்குள்ளாலும் தப்பி, 2004 தேர்தலில் வென்றவர். ஆக, 22 என்கிற அதியுச்ச வெற்றிக் கணக்கினை தற்போது ஒப்பிட்டால், அது 19 என்று கொள்ளப்பட வேண்டும். அவற்றை மீளவும் வெற்றிகொள்வது என்பது மிகப்பெரிய சாதனை. கிட்டத்தட்ட அந்த இலக்கை தமிழ்த் தேசியக் கட்சிகள் அடைந்தால், அது 2004 பொதுத் தேர்தல் வெற்றியைவிட பெரிய வெற்றியென்று கொள்ளப்பட வேண்டியது. அதற்கான காரணங்களை, வெளிப்படையாக பேச வேண்டியதில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்திருக்கின்ற ஐந்து ஆறு ஆசனங்களை மீண்டும் கைப்பற்றுவதன் மூலம், தமிழ் மக்களை தமிழ்த் தேசிய வாக்குத் திரட்சிக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பது ஒரு வகையிலான தேர்தல் கணக்கு ஒப்பீடு. ஆனால், அது சாத்தியமாக என்றால், நிச்சயமாக இல்லை. ஏனெனில், கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கும், அவர்களை தங்களின் கருவிகளாக கையாள்வதற்கும் விடுதலைப் புலிகள் போன்ற ஆளுமையுள்ள தரப்பொன்று தமிழ்ச் சூழலில் இல்லை. அத்தோடு, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழுத்தங்களை வழங்கி வழிப்படுத்துவதற்கான சிவில் சமூக அமைப்புக்களும் இயங்கு நிலையில் இல்லை. அப்படியான வாய்ப்புக்களை தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பெயர்களில் எழுந்து அடங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். இதனால், தேர்தல் மைய அரசியல் கட்சிகளை ஓரணிக்குள் கொண்டு வருவதும், அதன் மூலம் தமிழ்த் தேசிய வாக்குகளை திரட்டி பெரிய வெற்றியைப் பெறுவதும் சாத்தியமில்லாதது. தற்போது ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்த வெற்றி தொடர்பில்தான் அக்கறையோடு இருக்கின்றன. யார் அதிக ஆசனங்களை வெற்றி கொள்கிறார்களோ, அவர்கள்தான், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைக் கட்சி என்கிற நிலையில் இருப்பார்கள். அப்படியான நிலையில், அந்த இடத்தைத் தக்க வைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியும், அந்த இடத்தை அடைவது தொடர்பில் ஏனைய கட்சிகளும் இயங்கும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற 10 ஆசனங்களில், 4 ஆசனங்களை ரெலோவும், புளொட்டும் வென்றிருந்தன. அதனைக் கொண்டே தங்களை அதிகளவில் அலைக்கழித்துவிட்டார்கள் என்று தமிழரசுக் கட்சியினர் எரிச்சலோடு இருந்தார்கள். தங்களின் வீட்டுச் சின்னத்தில் நின்று வெற்றியைப் பெற்றுவிட்டு, தங்களுக்கே பிரச்சினைகளைக் கொடுக்கிறார்கள் என்ற கோபத்தில்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தார்கள். அது, இந்தப் பொதுத் தேர்தல் வரையில் வந்து நிற்கின்றது. அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய ஒருங்கிணைவு என்பது பற்றிப் பேசினாலும், அது தன்னடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அங்கு, தங்களைக் கேள்விக்குட்படுத்தாதவர்களாக பங்காளிக் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரதானமாக தொக்கி நிற்கின்றது. 

ஒரு பேச்சுக்கு தமிழரசின் தலைமையின் கீழ், ஏனைய கட்சிகள் இணைந்தாலும் முன்னணி அடையாளத்துக்குள் இருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைவதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. அந்தக் கட்சி, அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டுதான், அரசியலே செய்கின்றது. அத்தோடு, அதற்கு வடக்குக் கிழக்குப் பூராவும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ, வெற்றிபெற வேண்டும் என்பதோ நோக்கமும் இல்லை. அதிகபட்சம் யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்களை வென்று, பெரிதாக பொறுப்புக் கூறாத நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் போதும் என்பதுதான் அந்தக் கட்சியின் நிலைப்பாடு. அதற்கு, அந்தக் கட்சி தொடர்ச்சியாக ஒரு குடும்பத்தின் கீழ் இருப்பதும் காரணமாகும். கட்சியை வடக்குக் கிழக்குப் பூராவும் கட்டமைப்புக்களை பலப்படுத்தி வளர்த்து, அதிக வெற்றியைப் பெற்றால், அதுவே எதிர்காலத்தில் கட்சி மீதான கட்டுப்பாட்டினை பொன்னம்பலம் குடும்பத்திடம் இருந்து பறித்துக் கொண்டுவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களோடு தொடர்ந்து வருகின்றது. அதனால், அவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிக் கொண்டுவிட்டார்கள். கட்சியை உண்மையிலேயே வளர்க்கும் நோக்கம் இருக்குமானால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கிழக்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்த காங்கிரஸ், தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால் அதனை கிழக்கிற்கு வழங்குவோம் என்று அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக, யாழ்ப்பாணத்துக்குள் அதனை வைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு அவர்கள் வடக்கு கிழக்குப் பூராவும் போட்டியிட்டாலும், அதன் நோக்கம் நேரடியாக வெற்றிபெறுவது அல்ல. மாறாக, தேசியப் பட்டியலுக்கான வாக்குத் திரட்டுதலாகும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களுக்கு இடையில் சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு குழிபறிக்கும் வேலைகள் இடம்பெற்றன. அது, கூட்டமைப்பின் தோல்விகளுக்கான பிரதான காரணமாக மாறியது. அதுபோலவே, ஓரிரு ஆசனங்களை வெற்றிபெறும் களம் தங்களுக்கு வாய்த்திருக்கின்றது என்பதை உணர்ந்த காங்கிரஸ்காரர்களுக்குள்ளும் விருப்பு வாக்குப் போட்டியும் குழிபறிப்புக்களும் அரங்கேறின. மணிவண்ணன் அதிக வாக்குகளைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் கஜன்களும், கஜன்களைத் தாண்டி அதிக வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மணிவண்ணனும் குறியாக இருந்தார்கள். இரு தரப்பும், மற்றத்தரப்புக்கு வாக்குப்போட வேண்டாம் என்ற பிரச்சாரத்தை வெளிப்படையாகவே செய்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் மணிவண்ணனை முன்னணியில் இருந்து விரட்டினார்கள். 

இன்றைக்கு வடக்குக் கிழக்கு பூராவும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதான கட்சியாக களம் காண்கிறது. யாழ்ப்பாணத்தில் ஓரிரு ஆசனங்களுக்காக காங்கிரஸும் போட்டியில் இருக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரான சங்குக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் ஒன்று, வன்னியில் ஒன்று என்ற ஆசன இலக்குகளோடு களம் கண்டிருக்கின்றது. அவர்களினால் ஏனைய மாவட்டங்களில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. வேணுமென்றால், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான வாக்குத் திரட்சியை அவர்கள் குறி வைக்கலாம். அதன்மூலம், அதிக பட்சம் சங்குக் கூட்டணி, மூன்று ஆசனக் கணக்கோடு இருக்கின்றது. ஒப்பிடுகையில், கடந்த தேர்தலில் நான்கு ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். இப்போது, அவற்றில் ஒன்று தமிழரசுக் கட்சியிடம் இழக்கப்படும் வாய்ப்புண்டு. தமிழரசுக் கட்சியினர் அலங்கரித்து அழகுபார்த்து விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சர் பதவியில் இருந்தினார்கள். அவரோ, தன்னுடைய தனிப்பட்ட ஓட்டத்துக்காக பேரவையைக் கொண்டு தனிக் கட்சி ஆரம்பித்து, கடந்த தேர்தலில் வென்று பதவியை அனுபவித்தும் விட்டார். இறுதியில் அவர், சாராயக்கடை அனுமதிப்பத்திரத்தை வாங்கிக் கொடுத்து, தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவு முகங்களின் ஒன்றாக மாறினார். இப்போது, அவரின் கட்சியில் மணிவண்ணன் அணியினர் போட்டியிடுகிறார்கள். அவர்களோடு, தமிழரசுக் கட்சியில் ஆசனம் கோரி, மறுக்கப்பட்ட இருவர் இணைந்திருக்கிறார்கள். இந்தக் குழுவினரால், தேர்தல் வெற்றியை நோக்கி பெரிதாக ஓட முடியாது. ஏனெனில், அவர்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில், விக்னேஸ்வரன் சாராயக்கடை முகவராக செயற்பட்ட அவதூறுக்கு பதில் சொல்வதிலேயே காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது. இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து சுயேட்சையாக மாங்காய் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அவர்களினால் சில ஆயிரம் வாக்குகளை பெறுவதே பெரிய காரியமாக இருக்கும். அப்படியான நிலையில், ஆசனங்களை வெற்றிகொள்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான், அவர்கள் ஊடகங்களில் செவ்விகளின் வழியாக மாத்திரம் அரசியல் செய்கிறார்கள். அதிலும், சுமந்திரனை தாக்குவது மாத்திரம்தான் தமிழ்த் தேசிய அரசியல் என்றும் நினைத்துக் கொண்டு இயங்குகிறார்கள். 

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் குழறுபடி நிலைக்குள் நின்றுகொண்டு, சில ஆசனங்களை வென்றுவிட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி குறியாக இருக்கின்றது. அத்தோடு, கிழக்கில் அந்தக் கட்சி திருகோணமலை, அம்பாறையில் பெரிய வெற்றியையும் பெறும். அங்கு, அதற்கான வாய்ப்புக்களை சிங்கள, முஸ்லிம் மக்கள் வழங்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அப்படியான நிலையில், அந்த மாவட்டத்து தமிழ் மக்கள் புரட்சி மாற்றத்துக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது, அந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கப்பண்ணுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். குறித்த இரு மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் நின்று, விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவது என்பது குதிரைக் கொம்பு போன்றது. அப்படியான சூழலில், களத்தினையும் தேவையையும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். 

வடக்கில், தேசிய மக்கள் சக்தியினால் ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அந்தக் கட்சியிடம் அது தொடர்பிலான எதிர்பார்ப்பு அவசரமாக இருப்பது மாதிரியும் தெரியவில்லை. ஏனெனில், அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவுகளே அதனை வெளிப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளராக வேண்டும் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பிரபலமான கல்வியாளர்கள் தொடங்கி பலரும் முண்டியடித்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்ட ஒப்பீட்டளவில் வெற்றிக்கான முகமாக அடையாளம்பெற முடியாதவர்களை அந்தக் கட்சி தெரிவு செய்திருக்கின்றது. அது, தனித்த ஆளுமைகளினால் அல்லாமல், கட்சி அடையாளத்தோடு வெற்றிபெற வேண்டும் என்பதும், அதுதான் எதிர்கால கட்சி வளர்ச்சிக்கு அவசியம் என்றும் அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழு நினைக்கின்றது. அதனை நோக்கிய தெரிவுதான் வடக்கில் அந்தக் கட்சி செய்திருப்பது. கிட்டத்தட்ட அதனைத்தான் மட்டக்களப்பிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. எங்கெல்லாம் தமிழ் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று தோன்றிய இடங்களில், அதனை ஒரு நிலைப்பாடாகவே அந்தக் கட்சி கடைப்பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு விழும் வாக்குகள், இன்றைய வெற்றிகளுக்கானது அல்ல. எதிர்கால நிலைத்த வெற்றிகளுக்கான அடித்தளம். அதனை, புரட்சி மாற்ற அலைக்குள் அல்லாட நினைக்கும் தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி என்பது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தலுக்கான புதிய முகம். அந்த முகத்துக்குப் பின்னால், இருப்பது கடும்தேசியவாதமும், தமிழர் விரோதமும் கட்டவிழ்த்துவிட்ட கடந்த காலங்களும். அதனைத் தாண்டிய புதிய புரட்சிகளை, வரலாற்றை, அதிகாரப் பகிர்வினை அந்தக் கட்சி செய்துவிடும் என்ற நம்பிக்கை கொள்வது தேவையில்லாதது. ஆக, தமிழ் மக்கள், தங்களின் அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி திரள்வதுதான் இருப்பதில் புத்திசாலித்தனமான தெரிவு. தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்பற்றுச் செயற்பட்டாலும், தமிழ்த் தேசிய அரசியலை விடுதலைக்கான மூச்சாக கொண்டு சுமப்பதற்கான பொறுப்புணர்வின் அடிப்படையைக் கருதி, தமிழ் மக்கள் அந்த முடிவின் பக்கம் நிற்க வேண்டும். 

-காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 27, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_27.html

பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்

3 weeks 1 day ago

பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்
பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்

— கருணாகரன் —

“தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும்.  மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று திருவாய் மலர்ந்திருளியிருக்கின்றனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்படியொரு அறிவிப்பை விடக் கூடுமென்றால் நாங்கள் மட்டுமென்ன குறைந்தவர்களா, என்று கிளம்பிய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (மட்டக்களப்பு) கலைத்துறை  மாணவர்கள், இதே தொனியில் இன்னொரு அறிவிப்பை விட்டுள்ளனர். 

இந்த அறிவிப்போடு இரண்டு தரப்பினரும் தங்களுடைய தேசியக் கடமையையும் இனப் பொறுப்பையும் நிறைவேற்றிக் கொண்டனர். இனி இன்னொரு தேர்தலோ அல்லது வேறொரு நிகழ்ச்சியோ வரும்போது ஊடக நிலையத்துக்கு வந்து இன்னொரு அறிக்கையை விட்டு வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிக் கொள்வார்கள். வரலாற்றுச் சாதனைக்கு இதை விட வேறு என்ன செய்ய வேண்டும்?

இது இந்த மாணவர்களின் அரசியல் சாதனையென்றால், இந்த ஊடக அறிக்கை ஏதோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற எண்ணத்தில் – நம்பிக்கையில் – இதை வலு கவனமாகக் காவிக் கொண்டு வந்து, தங்களுடைய ஊடகங்களிலும் இணையப்பக்கங்களிலும் நிரப்பிக் கொண்டனர் ஊடகவியலாளர்கள். 

இதொன்றும் புதிய சங்கதியே இல்லை. வழமையாகத் தேர்தலின்போது நடக்கின்ற திருவிளையாடல்தான். முன்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இப்பொழுது அப்படிச் சொல்ல முடியாது. கூட்டமைப்புக் காணாமற்போய் விட்டது. பதிலாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பத்துப் பன்னிரண்டு மஞ்சள் –  சிவப்புக் கட்சிகளும் குழுக்களும் களத்தில் நிற்கின்றன. இப்படிப் பத்துப் பன்னிரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றால் அதில் எதைத் தேர்வு செய்வது? எந்தத் தரப்புக்கு ஆதரவளிப்பது? என்று முடிவெடுக்க முடியாது. 

அதனால் “தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும்.  மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று மிகச் சாதுரியமாக,  ஒரு அறிவிப்பை விடுத்திருக்கின்றனர், இந்த மாணவர் தலைவர்கள். 

இப்படிப் பொத்தாம் பொதுவாக அறிவிப்பைச் செய்தால் யாரோடும் – எந்தத் தரப்போடும் நேரடியாகப் பகைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை இனப்பற்றோடும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டோடும் தாம் உள்ளதாகவும் காட்டிக் கொள்ளலாம். அப்பப்பா, எவ்வளவு சாதுரியமான செயலிது? எப்படித் திறமையான ராசதந்திரம்? 

உண்மையில் இது மிகத் தவறான – ஏற்றுக் கொள்ளவே முடியாத – செயலாகும். 

ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பாடற்ற – அறிக்கை விடுநர்களாகவே உள்ளனர். (‘இதை விட வேறு எப்படித்தான் அவர்களால் செயற்பட முடியும்? ஏனென்றால், இந்த மாணவர்களின் வியப்புக்குரிய தலைவர்களாக இருப்போரும் அறிக்கைப் புலிகளாகத்தானே உள்ளனர்! எனவே தலைவர்கள் எப்படியோ அப்படியே மாணவர்களும்‘ என்கிறார் நண்பர் ஒருவர்.) அப்படி விடப்படுகின்ற அறிக்கைகள் கூட யதார்த்தம், நடைமுறை, சமூக நிலவரம், அரசியற் சூழல் என எதைப்பற்றிய புரிதலுமற்றனவாகவே இருக்கின்றன. 

நீண்டதொரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி, அதில்  வெற்றியடைய முடியாமற்போன – பாதிப்புகளோடும் இழப்புகளோடுமிருக்கும் ஒரு சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக  மாணவர்களின் பங்கு பெரியது. பொறுப்புமிக்கது. 

அதன்படி போராடிய மக்களை ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளில் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். அவர்களுடைய துயரங்களை ஆற்றுப்படுத்தியிருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பணிகளில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். அவர்களுடைய பிரதேசங்களை மீள்நிலைப்படுத்தும் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்குத் தாராளமாக உதவியிருக்க வேண்டும். பொதுவாகச் சமூக, பொருளாதார, பண்பாட்டு மீள்நிலைக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளித்திருக்க வேண்டும். ஆக, இவற்றுக்காகக்  களப்பணிகளை ஆற்றியிருப்பது அவசியமாகும். 

பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, பட்டம்பெற்று வெளியேறிய பிறகும் கூட இதைத் தொடர்ந்திருக்க முடியும். 

மட்டுமல்ல, ‘உளவியல் ரீதியாக உங்களோடு நிற்கிறோம்‘ என ஆதரவு நிலையைக் காண்பித்திருக்கலாம். போரிலே பாதிக்கப்பட்டோரில் மிகக்கூடிய தாக்கத்துக்குள்ளாகியோர் உளப்பாதிப்புக்கு (Trauma) உள்ளானோரே. ஆகவே இவர்களை ஆற்றுப்படுத்தும் பணியில் நிச்சயமாக இந்த மாணவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். தங்களுடைய கல்வித்துறையின் மூலமாக சமூக, பொருளாதார, பண்பாட்டு, மருத்துவ, அரசியல் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாலே அது பெரியதொரு வரலாற்றுப் பணியாக இருந்திருக்கும். அதில் பெற்ற புள்ளி விவரங்கள், உண்மையான நிலவரங்களை உள்ளடக்கிய தகவல்கள் – தரவுகளின் மூலமாகத் தமிழ்ச் சமூகத்தைப் புதிய தளமொன்றுக்கு நகர்த்தியிருக்க முடியும். கூடவே இவற்றின் மூலம் சர்வதேச ரீதியாக அரசியலிலும் மனித உரிமைகள், மனிதாபிமானப் பணிகளிலும் பெரும் செல்வாக்கையும் பேராதரவையும் பெற்றிருக்க முடியும். 

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதில் எந்த மாணவர் ஒன்றியத்தினரும் கரிசனை கொள்ளவில்லை. ஆகச் செய்ததெல்லாம் நினைவு கூரல்களில் பங்கெடுத்ததும் தேர்தல்களுக்கு அறிக்கை விடுத்ததும்தான். அதாவது நோகாமல் போராட்டப் பங்களிப்பைச் செய்வதாகக் காண்பித்ததேயாகும். 

பட்டம்பெற்று வெளியேறிய பிறகு, ‘மாணவர் ஒன்றியமும் கத்தரிக்காயும்’ என்று அந்த லேபிளைத் தூக்கியெறிந்து விட்டு, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்து அரசசார்பு அரசியல்வாதிகளின் காலடியில் நின்ற – நிற்கின்ற வரலாறே மாணவர்கள் தலைவர்களுடையது. சிலர் இப்பொழுது தாங்களும் வேட்பாளர்களாக அரசியலில் குதித்துள்ளனர். 

ஆனால், தெற்கிலே, சிங்களத்தரப்பின் நிலைமை வேறு. அவர்கள் அங்கே மாணவப் பருவத்தைப் புரட்சிகர சமூக உருவாக்கத்துக்காகவே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராகப் போராடுகிறார்கள். முக்கியமாக அறிவுபூர்வமாகச் செயற்படுகிறார்கள். இதற்கொரு பெரிய பாரம்பரியமே அவர்களுக்குண்டு. அங்கே மாணவர்களுடைய சிற்றுண்டிச் சாலைக்கோ விடுதிக்கோ சென்றால் தெரியும், அவர்களுடைய உள நிலையையும் போராட்டத் தன்மையையும் சமூக அக்கறையையும். அதனுடைய ஒரு வெளிப்பாடே அரகலய. அதன் தொடர்ச்சியே தற்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றத்துக்கான அரசியல் (Politics of change or systemchange).

இப்பொழுது மட்டுமல்ல, தெற்கின் (சிங்கள) மாணவர்களுடைய பாரம்பரியம் என்பது எப்போதும் புரட்சிகரமானதாக – யதார்த்தத்தை நோக்கியதாகவே இருந்திருக்கிறது. என்பதால்தான் அவர்கள் தொடர்ந்தும் அரசியல் மாற்றங்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். அல்லது அதற்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அந்த மாற்றங்கள் முழுமையடையாதிருக்கலாம். ஆனால், ஒரே கட்சியோ, ஒரே தலைமையோ தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை.  அதற்கு அவர்கள் அனுமதித்ததும் இல்லை. 

இங்கே எழுபது, எண்பது ஆண்டுகளாக ஒன்றுக்கும் உதவாத கட்சிகள்தானிருக்கின்றன. அவை சிதைந்தாலும் பழைய குப்பைகள், ஓட்டை ஒடிசல்கள் என்ற நிலையை எட்டினாலும் தமிழர்களுக்கு அவை தூண்டாமணி விளக்குகள் என்பதேயாகும். மாற்றத்தையோ புதிதையோ எளிதில் ஏற்காத, அங்கீகரிக்காத, நம்பத் தயாரில்லாத ஒரு சமூகாகவே இருக்கிறது. மக்கள் அப்படியிருந்தால் பரவாயில்லை. மாணவர்கள், இளைய தலைமுறையினர், எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய அறிவியற் தரப்பினர் அப்படி வாழாதிருக்க முடியுமா? 

மாணவர்கள்தான் பெரும்போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களே புதிய வழிகளைக் காணும் திறனுடையோர். என்பதால் அவர்கள் போராட்டக்களத்தில் முன்னணியினராக எப்போதும் இருக்கின்றனர். 

உலகெங்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. பாதிப்புகளிலிருந்து மீட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி அந்த மக்களை வழிநடத்துவதில் மாணவர்களே முன்னின்றனர், முன்னிற்கின்றனர். 

சமகாலத்தில் களத்தில் நிற்கும் அரசியற் கட்சிகளின் வினைத்திறனற்ற தன்மைகளையும் தலைமைகளின் ஆற்றற்குறைபாட்டையும் கண்டு அவற்றைச் சீராக்க வேண்டிய பொறுப்பும் மாணவர்களுக்கே உண்டு. அதற்குக்  குறித்த தலைமைகளும் கட்சிகளும் செவி கொடுக்கவில்லை என்றால், அவற்றை நிராகரிப்புச் செய்ய வேண்டியது மாணவர்களுக்கு – மாணவர் அமைப்புகளுக்குரிய பணியாகும் – பொறுப்பாகும். செவி கொடுத்தால், அவற்றைத் தம்முடன் இணைத்து வேலை செய்ய முடியும். முடியாதென்று அடம்பிடித்தால் அதை – அவற்றை சமூக விலக்கம் செய்ய வேணும். 

2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வரலாற்றுக் கடமைகளிலிருந்து தவறியது. அது சறுக்கிச் சறுக்கி இன்றைய சிதறிய நிலைக்கு வந்திருக்கிறது. இறுதியில் அணிகள், குழுக்கள் எனச் சிதறிய நண்டுக்குஞ்சுகள் போலாகி விட்டது.

ஆனால், இந்தப் பதினைந்து ஆண்டு காலத்திலும் மாணவர் அமைப்பு என்ன சொன்னது? உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். ஒன்றுபட்டு நின்று தமிழ்ப்பலத்தை உணர்த்த வேண்டும் என்றுதானே! அதற்காக மக்களெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அல்லவா!

அப்படி ஒற்றுமைக்காக மக்களைத் திரளச் செய்த மாணவர் அமைப்பு, கூட்டமைப்பை உடையாமல், சிதறாமல் பாதுகாத்ததா? உடைந்தும் பிரிந்தும் சிதறிச் சென்ற கட்சிகளையும் தலைமைகளையும் அழைத்துப் பேசி, முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு முயற்சித்ததா? மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, தமது நலனையே முதன்மைப்படுத்திய கட்சிகளைக் கண்டித்ததா? அவற்றை ஒதுக்கியதா? அவற்றை மக்களிடம் இனங்காட்டியதா? எதுவும் செய்யப்படவில்லையே! 

அப்படியென்றால், மாணவர் ஒன்றியத்திற்கு என்ன தகுதி இருக்கிறது, இன்னும் அரசியல் தலையீடுகளைச் செய்வதற்கு? தேர்தல் குறித்துப் பேசுவதற்கு? மக்களுக்கு ஆணையிடுவதற்கு? 

முதலில் சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும். அதற்குச் சம்மதிக்காத கட்சிகளையும் தலைவர்களையும் இனங்காட்டி மக்களிடமிருந்து விலக்க வேண்டும். அதை இப்போதே  செய்யலாம். செய்ய வேண்டும். அதுவும் ஒரு மக்கள் பணி, வரலாற்றுப் பணிதான். 

இந்தத் தேர்தலின்போதே அரசியற் கட்சிகளை அழைத்துப் பேசி அவற்றுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தலாம். அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு இணக்கத்தை எட்ட முடியும். அந்த இணக்கத்தின்படி பிராந்திய ரீதியாக எந்தத் தரப்பை முன்னிலைப்படுத்துவது? யாருக்கு வாய்ப்பளிப்பது? எனத் தீர்மானிக்க முடியும். அப்படிச்  செய்தாலாவது பரவாயில்லை. 

அதையெல்லாம் விட்டு விட்டுப் பொத்தாம் பொதுவாக, தமிழர்களெல்லாம் தமிழ்த் தரப்புகளுக்கே வாக்களிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளையோ தென்பகுதித் தரப்புகளையோ ஆதரிக்கக் கூடாது என்று சொல்வது தவறு. இன்றைய நிலையில் தமிழ்க் கட்சிகளை விடவும் தென்பகுதித் தரப்புகள் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துள்ளன. அவை இனவாதத்தைச் சொல்வதிலிருந்து விலகியுள்ளன. ஒப்பீட்டளவில் மாற்றத்தை நோக்கிப் பயணிக்க ஆர்வமாக உள்ளன. பல சமூகத்தினருக்குமான இடத்தை அளித்து, பல்லினத் தன்மையைப் பேண முற்படுகின்றன. 

ஆனால், தமிழ்க்கட்சிகள் பிற இனங்களை விலக்குவதும் பின சமூகங்களிலிருந்து விலகியிருப்பதும் மட்டுமல்ல, தமக்குள்ளும் பிரிவுகளையும் பிளவுகளையுமே கொண்டுள்ளன. மிகப் பின்தங்கிய சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ளன. 

இது விடுதலைக்காகப் போராடும் இனத்தின் அரசியல் விடுதலைக்கும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கும் பொருத்தமா? நியாயமா? சரியாக இருக்குமா? நிச்சயமாகப் பொருந்தாது. 

உண்மையில் இந்த மாணவர் அமைப்புகள் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளையும் அணிகளையும் குழுக்களையும் இந்தத் தேர்தலின்போது ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அந்தக்கடப்பாடு, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்கு (தமிழ்த்தேசியத்துக்கு) ஆதரவளித்ததன் மூலம் மாணவர் அமைப்பினருக்குண்டு. அதைச் சொல்லி அணிகளையும் கட்சிகளையும் வற்புறுத்தியிருக்க வேண்டும். இப்பொழுது கூட அதைச் செய்யலாம். அது முடியவில்லை என்றால், மக்கள் பணியைச் சரியாகச் செய்யக் கூடிய, மக்களோடுள்ள, மக்கள் மீது மெய்யான கரிசனையைக்  கொண்ட சக்திகளை இனங்கண்டு ஆதரிக்க வேண்டும். அந்த ஆதரவு பரிபூரணமாக – மக்கள் நலனின் அடிப்படையில் இருக்க வேண்டும். இதற்கான பொறுப்புக் கூறலைச் செய்ய வைப்பது அவசியமாகும். 

ஏனென்றால், இதே காலப்பகுதியில் அல்லது இதற்கு முன்பிருந்து தென்பகுதிப் பல்கலைக்கழகங்களின் (சிங்கள) மாணவர்கள் மேற்கொள்கின்ற அரசியற் செய்பாடுகள் முழு இலங்கைத் தீவையும் மறுமலர்ச்சிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு எங்களுடைய மாணவர்கள் தயாராக வேண்டும். அல்லது மாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் மாற்றுச் சக்திகளைக் கட்டியெழுப்ப வேண்டும். 

இதொன்றும் புதியதல்ல. செய்ய முடியாததும் அல்ல. முக்கியமாக, வரலாற்றுக் கடமையைச் செய்யும்போது ஏற்படும் பொறுப்பை ஏற்று மன்னிப்புக் கேட்பது மாண்பு. அதொரு வளர்ச்சியான செயற்பாடாகும். 

கடந்த சில நாட்களின் முன், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திச் செயற்பட்ட நிலாந்தன் (பொதுச்சபைப் பிரதிநிதி) பகிரங்க வெளியில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதொரு முக்கியமான முன்னுதாரணச் செயற்பாடாகும். அறிவென்பது, துணிவு. மன்னிப்புக் கேட்பது மாண்பிலும் மாண்பு. 

தாம் பொதுவெளியில் முன்வைத்த கருத்துகள் செயல் வடிவம் பெறுவதற்கான சூழல் கனிய முன் சில முதிரா நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவாகப் பேசியுள்ளார். இத்தகைய தகுதி யாரிடம் உண்டு? மாணவர் அமைப்புகள் இதை மனதிற் கொள்ள வேண்டும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1970 களில் கிழக்கிலே ஏற்பட்ட சூறாவளிச் சேதங்களை மீள் நிலைப்படுத்தியதும் 1980 களில் தேசிய விடுதலைப்போராட்டத்தில் பங்களித்ததும் நினைவில் எழுகின்றன. 

 

https://arangamnews.com/?p=11378

ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது?

3 weeks 1 day ago

 

ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது?

 

👆🏿

ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார்.

 

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

 

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓர் சரியான தலைமை இல்லாமல், இருந்த கட்சிகள் எல்லாம் குழிபறிப்பு வேலைகளைச் செய்து தமக்குள்ளேயே மோதிச் சிதறிச் சின்னாபின்னமாகி பல்வேறு கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குச்சீட்டில் உள்ள சின்னங்களைப் பார்த்தே குழம்பி என்ன செய்வது என்று தெரியாமல் தமக்குப் பரிச்சயமான அல்லது பரிச்சயமற்ற சின்னங்களில் ஒன்றுக்கு வாக்களிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதால் எவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக்கூடும் என்பதைக் கணிப்பதே மிகவும் கடினமாக உள்ளது.

 

இத்தகைய அரசியல் சூழலில் தெற்குப் பகுதியில் சிங்கள மக்களினால் உண்டாக்கப்பட்ட அநுர அலை வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள்மீதும், மலையகத் தமிழ் மக்கள் மீதும் அடித்து, மக்கள் அலையில் அள்ளுண்டுபோகச் சாத்தியம் உள்ளது. எனினும் தமிழ் மக்கள் வாக்கைச் செலுத்தும் முன்னர் நிதானமாகச் சிந்தித்து தமது ஜனநாயகக் கடைமையைச் செய்யவேண்டும்.

 

அநுர திசநாயக்கா ஜனாதிபதித் தேர்தலில் வென்றபின்னர் தினமும் அரசியல் ஆய்வாளர்களாலும், சமூகவலை ஊடகங்களில் கருத்துரைப்போர்களாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகவும், எதிராகவும், சந்தேகத்துடனும், குழப்பமாகவும் கருத்துக்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.  அறகலயப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கோத்தபாயவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கியிருந்தும், பொதுமன பெரமுனவின் கைப்பொம்மையாக ரணில் ஜனாதிபதியாக வந்ததை தடுக்கமுடியவில்லை. போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பலமான அரசியல் கட்டமைப்பு நாடெங்கிலும் இல்லாதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் சிங்களப் பகுதி முழுவதிலும் பலமான அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தேசிய மக்கள் சக்தியினுள் இணைந்து அறகலயப் போராட்டத்தின் விளைச்சலை அறுவடை செய்துள்ளனர். ஊழல் நிறைந்த ராஜபக்‌ஷர்களையும், மேற்தட்டு உயர்குழாமின் நலன்களைக் காக்கும் ரணிலையும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது உறுதியான முடிவுகளை எடுத்து தலைமைதாங்காத சஜித்தையும் சிங்கள மக்கள் பின்னே தள்ளி, சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அநுரவை தமது தெரிவாக்கி ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

 

அநுரவின் தேசிய மக்கள் சக்தி, அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் தக்கவைக்க காத்திரமான வேலைத் திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்தி, அதன் பலாபலன்களை அவருக்கு வாக்களித்த கீழ்த்தட்டு, மத்தியவர்க்க மக்கள் அனுபவிக்க மிகவும் கடினமாக வேலை செய்யவேண்டிய நிலை உள்ளது. அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைத் திட்டங்கள் இடதுசாய்வாக இருந்தாலும், திறந்த பொருளாதாரக் கொள்கையினுள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நாட்டை, உலக நாணய நிதியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து தலைக்கு மேல் கடன்பெற்ற நாட்டை நிமிர்த்துவதும், பிற சிங்கள கட்சிகளை தலையெடுக்காமல் பார்ப்பதும் சவால் மிக்க செயல்கள். 

 

எனவே, தேசிய மக்கள் சக்தியானது ஈசலைப் போல குறுகிய ஆயுள் இல்லாமல் நீண்டகாலம் அரசை நடாத்த பல சமரசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுடனும் செய்யவேண்டிய யதார்த்த நிலையை உணர்ந்தே செயற்படுவர். இதனால் அவர்களது “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் வாக்குறுதிகளிலும், கொள்கைகளிலும் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள தேவையானதை மட்டுமே முன்னெடுப்பார்கள். சிங்கள மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றப்பாட்டை உடனடியாகக் கொடுக்கக் கூடிய செயற்திட்டங்களும், பிற அரசியல் கட்சிகளை  முடக்க அவர்கள் மீதான ஊழல் வழக்குகளையும், குற்றங்களையும் விசாரிப்பதும், இந்தியா, சீனாவோடு சீரான உறவுகளைப் பேணுவதும், உலக நாணய நிதியத்துடன் இணைந்து அவர்கள் நிபந்தனைகளுக்கமைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் முக்கியத்துவம் பெறும் செயற்பாடுகளாக இருக்கும்.

 

ஶ்ரீலங்கா முழுமையாகவே சிங்களவர்களின் தீவு என்ற தம்மதீபக் கொள்கை மகாவம்ச துட்டகைமுனு காலத்தில் இருந்து சிங்கள மக்கள்மீது படியவைக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்த சிங்கள பெருந்தேசிய உணர்வும், விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட மிதப்பும் சிங்களவர்களிடமிருந்து அகலும் என்று எதிர்பார்க்கக்கூடாது. “நாம் எல்லோரும் ஶ்ரீலங்கன்” என்ற கொள்கை சிங்களவர்களைச் சிங்களவர்களாகவே வைத்திருக்கவும், சிறுபான்மை இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், பறங்கியர் தமது தனித்துவங்களை இழந்து, இன அடையாளங்களைத் துறந்து “ஶ்ரீலங்கன்” என்று சிங்களவர்களுடன் கலந்துகொள்ளவே வழிசமைக்கும்.

 

தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் தீர்வு என்பது முதலில் இனப்பிரச்சினை உள்ளது என்பதை ஒத்துக்கொள்வதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால் தேசிய மக்கள் சக்தி, தமிழர்களின் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினை எனக் குறுக்கி, தீர்வை புதிய யாப்பை உருவாக்குவது மூலம் கொடுக்கப்படும் அதிகாரப் பரவலாக்கம் மூலம், அதிக பட்சம் மாகாணசபைகள் மட்டத்தில், தீர்க்கவே முயலும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தையும், கட்டளை வழங்கிய அதிகாரிகளையும் பாதுகாக்கவே செய்யும். இதனை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் எண்ணம் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 

இலங்கையில் தமிழர்களின் அரசியல் திக்கற்ற கடற்பயணமாகியுள்ளது. தமிழ் அரசியலில் 2009 க்குப் பின்னர் விரிசல்கள் காணப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுடன் அது சுக்குநூறாகத் துண்டு துண்டாக உடைந்துவிட்டது. தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்கும் நீண்ட பாரம்பரியத்தை உடைத்து, தமிழ் வாக்குகள் முழுமையாகப் பிளவுபட்டுள்ளன. இது தமிழர்களின் அடிப்படையான இனப்பிரச்சினை  மற்றும் அதிகாரத்தை பகிரும் அபிலாஷைகள் மீதான பேரம் பேசும் நிலைகளைத் தடுக்கிறது.

 

பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அதிகபட்சம் 16-17 தமிழ் உறுப்பினர்களே தெரிவு செய்ய்யப்படும் நிலை உள்ளது.  பல்வேறு கட்சிகளும், சுயேட்சைக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தேர்தலின் பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று அகதி விண்ணப்பங்களில் தேர்தலில் போட்டியிட்டமையால் தமக்கு நெருக்கடி உள்ளது என்று காரணம் காட்டவும் சிலர் போட்டியிடுகின்றனராம்!

 

இப்படித் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப் பிரியும்போது அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்படவும், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இது வடக்கு-கிழக்கில் 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படக்கூடிய நிலையை உருவாக்கலாம். அதிலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறியுள்ளமையால், அவர்கள் மீதான வெறுப்பு பிற தமிழ்க் கட்சிகளுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் வாய்ப்புக்களைக் கொடுக்கவும் கூடும்.  ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டமுனைந்த பொதுக்கட்டமைப்பு, பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களுக்கு வழிகாட்டமுடியாத அளவுக்கு மூக்குடைபட்டுள்ளது. இது தமிழர் சிவில் சமூகக் கட்டமைப்பின் பாரிய தோல்வியாக உள்ளது.

 

எனவே, மக்கள் தங்களது ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் உணர்ந்து, தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்களை குப்பையில் குன்றிமணியைப் போல அடையாளம் கண்டு வாக்கைச் செலுத்தவேண்டும். 

 

 

இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள்

3 weeks 2 days ago

இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள்
JVP-MAY-DAY-9i.jpg

இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர்.

இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு புரட்சிகரமாக இல்லை. மக்களைத் திரட்டவும் அரசியல் படுத்தவும் அவர்கள் முயலவில்லை என்று கருதிய ரோஹன விஜயவீரா என்ற இளைஞரும் அவரது தோழர்களும் 1965 வாக்கில் மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனாவை உருவாக்கினர். 1971 ஆம் ஆண்டு இந்த புதிய கட்சி தன்னை ஒரு அரசியல் கட்சியாக அறிவித்துக் கொண்டது. இதன் வளர்ச்சி இலங்கை அரசுக்கும் பழைய பாணி இடதுசாரி கட்சிகளுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்தப் புதிய அமைப்பின் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன.

1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் கடும் அடக்குமுறைகளை ஆயுத எழுச்சி கொண்டு எதிர்கொள்ள ஜேவிபி முடிவு செய்தது. போதுமான ஆயுதங்களும் பயிற்சியும் இல்லாமலிருந்தும் ஜேவிபியினர் தென்னிலங்கையின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டு வார போராட்டத்துக்குப் பிறகு இந்தியாவின் ராணுவ உதவியுடன் இலங்கை அரசு கிளர்சியை ஒடுக்கியது. 20,000 ஜேவிபியினர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பின்பு ஜேவிபிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்தக் கட்சி தேர்தலில் நின்றாலும் பெரிய வெற்றியோ வாக்குகளோ பெறவில்லை. இருந்த போதிலும் ஜேவிபி மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறிய முடிகிறது. சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் நாட்டின் கூடலூர், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு வந்த இலங்கை மலையகத் தமிழர்களில் சிலர் ஜேவிபி ஆதரவாளர்களாக இருந்ததைப் பார்த்து தமிழ் நாட்டு தொழிற்சங்கவாதிகள் வியப்படைந்தனர்.

2024-06-14-Sri-Lanka-IMF-300x200.jpg

1983 ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகளுக்கும் கலவரங்களுக்கும் பிறகு யாழ்ப்பாணத்தில் நிறுத்தப் பட்ட சிங்கள ராணுவ வீரர்களில் இளநிலை அதிகாரிகள் பலர் ஜேவிபி ஆதரவாளர்களாக இருந்தனர். செ. கணேசலிங்கனின் நாவல்களிலும் இதைக் காண முடியும்.

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதையடுத்து, இந்திய  விரிவாதிக்கத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த ஜேவிபி பெரும் வளர்ச்சி கண்டது. வட இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வந்த நேரத்தில் தென்னிலங்கையில் ஜேவிபிக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே உக்கிரமான மோதல்கள் நடந்து வந்தன. ஜேவிபி பெரும்பாலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் போன்றவர்களை தனிநபர் அழித்தொழிப்பு செய்தது. போலீஸ், ராணுவத்தினர் மீது தாக்குதகள் நடத்தியது. பதிலுக்கு ராணுவம் பல்லாயிரம் ஜேவிபியினரை எரித்தும் சுட்டும் கொன்றது. சுமார் 60000 பேர் கொல்லப்பட்டதாக கணக்குகள் கூறுகின்றன. இந்த எழுச்சியில் மலையகத்தில் தலைமறைவாகவிருந்த ரோஹன விஜயவீர உள்ளிட்ட ஜேவிபியின் எல்லா தலைவர்களும் பிடிக்கப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். தப்பிய சோமவன்சா அமரசிங்கே என்ற தலைவர் இலங்கை அரசின் வேட்டையால் பலநாடுகளில் சுற்றியலைந்து இறுதியில் பிரிட்டனில் தங்கி  ஜனதா விமுக்தி பெரமுனாவை மீளக் கட்டியமைத்தார். இவர் 1990 லிருந்து 2014 வரை தலைவராக இருந்தார்.  1994 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார்.

இந்தக் காலகட்டத்தில் ஜேவிபி ஆயுதப் போராட்டத்தை முற்றிலும் கைவிட்டது. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இலங்கை தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டது. சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாகவிருந்த சுதந்திரா கட்சி அரசில் ஜேவிபி பங்கு கொண்டது. அப்போது இப்போதைய ஜனாதிபதியான அனுரா குமார திசனாயகே விவசாய அமைச்சராக இருந்தார். அப்போதுதான் விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் என்ற பெயரில் அடுத்தடுத்து நடத்திய பெரும் தாக்குதல்களில் வட இலங்கையில் முல்லைத்தீவு, ஆனையிறவு, பரந்தன், போன்ற மிகப் பெரிய ராணுவ முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டன. திரிகோணமலை தவிர தமிழ் ஈழம் என்றழைக்க்கப்பட்ட பகுதியில் 90 சதவீதம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டின் கீழ் வந்தது.

ராணுவம் பலத்த பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து  சந்திரிகா விடுதலைப் புலிகளுடன்  பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். சுனாமி வந்த போது நிதியை புலிகளுடன் பகிர்ந்து கொள்வது பற்றிப்  பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுரா குமார திசநாயகே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

2014 ஆம் ஆண்டு  ஜேவிபியின் தலைவரான சோமவன்சா அமரசிங்கே கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் பதவிவிலகி தனிக்கட்சி உருவாக்கினார். அதற்குப் பின்பு அனுரா குமார திசநாயகே தலைவரானார். அவர் தலைவரானதுமே முன்பு நடந்த எழுச்சிகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இன்னொருமுறை இப்படியொரு எழுச்சி நடக்காது என்று இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கு உறுதியளித்தார். ஜேவிபி தன்னை இலங்கையை ஆண்டு வரும் இரண்டு மூன்று குடும்பங்களுக்கு வெளியாள் என்று கூறிக் கொண்டாலும் மேலும் மேலும் இலங்கையின் ஆளும் நிறுவனங்களுக்குள் ஐய்க்கியப் பட்டது.

அனுரா குமாரா திசநாயககே மேலும் மேலும் ரோஹன விஜயவீராவின் புரட்சிகர மார்க்சீய அரசியலில் இருந்து விலகிச் சென்றார். அந்த ஆண்டுகள் சிங்கள தேசியவாதமும், புத்தமத அரசியலும் உச்சத்திலிருந்த ஆண்டுகள். ஜேவிபியின் இடத்தை புத்த மத அரசியல் பிடித்துக் கொண்டது. ஜேவிபி பல இடதுசாரி கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், என் ஜி ஓக்களைக் கொண்டு தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினார். 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் நின்ற திசநாயகே பெற்றது வெறும் 3 சதவீத வாக்குகள் தான்.

2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் திவாலானது. கொரொனா முழு அடைப்புகளை ஒட்டி இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த பொரு ளாதாரம் மேலும் நொறுங்கியது. அதனால் உலக வங்கி போன்றவர்களிடமிருந்து வாங்கிய கடன்களைத் திருப்பித் தர முடியவில்லை. எனவே உணவு, பெட்ரோல், மருந்துகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. கடும் உணவுத் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டதையடுத்து அரகலயா என்ற பேரெழுச்சி ஏற்பட்டது. மிகவும் வலிமை வாய்ந்த ராகபக்‌ஷே குடும்பம் அரசியலில் வீழ்ச்சியடைந்தது.  அதற்கு முன்பிருந்தே சுதந்திரா கட்சியும், ஐய்கிய தேசிய கட்சியும் அதிலிருந்து உடைந்த பிரிவுகளும் மேலும் மேலும் உடைந்து இலங்கை அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தின.

image_b869b33332-300x234.jpg

 

இலங்கையை காலங்காலமாக ஆண்டு வந்த ஜெயவர்த்தனே, பண்டாரநா்யகா குடும்பங்களின் மேலுள்ள வெறுப்பு, திசநாயகாவின் ஏழைகளுக்கு ஆதரவான பேச்சுக்கள், 2022 இல் ஏற்பட்ட வீழ்ச்சி எல்லாம் சேர்ந்து ஒரு மார்க்சீயவாதியை ஜனாதிபதியாக உட்கார வைத்துள்ளன. ஏழை மக்களின் விருப்பமே இலங்கையில் வெற்றி பெற்றுள்ளது.  இனி எல்லாம் நலமே நடக்கும் என்று முடிப்பது கட்டுரைக்கு நல்ல முடிவாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி முடிக்க முடியாத வண்ணம் சில சிக்கல்கள் உள்ளன.

——————————————-

எழுத்தாளர் சுஜாதாவின் கதை ஒன்று உண்டு. ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும். ஒரு அம்ப்பையர் மிகவும் நேர்மையானவர். அவரிடம் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் வந்து ஒரு முக்கியமான பேட்ஸ்மேனுக்கு தவறாக அவுட் கொடுக்க கோடிக் கணகில் பேரம் பேசுவார்கள். அம்ப்பையர் மறுத்துவிடுவார். பின்பு போட்டியில் அந்த பேட்ஸ்மேன் இரண்டே ரன்னில் தானாகவே அவுட் ஆகிவிடுவார். அம்ப்பையர் சூதாட்டக்காரணை ஒரு விடுதியில் பார்ப்பார். பேட்ஸ்மேன் தானாகவே அவுட் ஆகிவிட்டாரே உங்கள் பணம் மிச்சம் என்பார்.

சூதாட்டக்காரன் சிரித்துக் கொண்டே எங்கே மிச்சம். உங்களுக்கு பேசிய தொகையை விட இரண்டு மடங்கு நேரடியாக அந்த பேட்ஸ்மேனுக்கே கொடுத்து விட்டேன் என்பான். பேட்ஸ்மேன் அபத்தமாக அவுட் ஆன ரகசியம் அம்ப்பையருக்கு புரியும்.

————————————-

2022 ஆம் ஆண்டு கோத்தபய ராஜபக்‌ஷே அரசு திவாலாகி, கோத்தபய நாட்டை விட்டு ஓடியதும் இலங்கை முன்னால் இரண்டு வழிகள் இருந்தன.

  1. நாட்டை சூறையாடி வந்த ஆளும் வர்க்கங்களின் சொத்துக்களை அரசுடமை ஆக்கி, அன்னிய நிறுவனங்களை வெளியேற்றி, அநீதியான வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து பொருளாதாரத்தை மீட்பது.
  2. ஐ எம் எஃப் இடம் பெரும் கடன் வாங்கி நெருக்கடியில் இருந்து மீள்வது. அதற்கு பதிலாக நாட்டின் செல்வ வளங்களை தனியார்மயமாக்குவது, மக்கள் சேவைக்கு ஒதுக்கப்படும் பணத்தை ரத்து செய்வது ஆகியவையே இந்த இரண்டு வழிகள்.

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரனில் விக்ரமசிங்கேவை அதிபர் ஆக்கியது. இலங்கை சட்டப்படி அதிபர் தேரதலில் நின்று வெற்றி பெற வேண்டும். ஆனால் ரனில் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் விருப்பமான தேர்வு ரனில் என்று பேசப்பட்டது. ரனில் ஆட்சியில் ஐ எம் எஃப் இடம் கடன் வாங்கி இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. மேலும் மேலும் நாசமாகி வந்தது. 2022 ஐ போன்ற இன்னொரு எழுச்சி ஏற்படும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது என்பதை இலங்கை ஆளும் வர்க்கங்களும், அமெரிக்காவும் அறிந்திருந்தன.

மார்க்சிய கட்சி என்று கருதப்பட்ட ஜேவிபியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரனில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறார் என்று தனது கைத்தடிகள் மூலம் பிரச்சாரம் செய்தது. ஆனால் ஒரு நல்ல அம்ப்பையரைப் போல மக்கள் மயங்கவில்லை. அவர்கள் மேலும் மேலும் மார்க்சீயம், ஏழைகளின் நலன் என்று பேசிய ஜேவிபி பக்கம் சாய்ந்து வந்தனர்.  எனவே சிறந்த கிரிக்கெட் சூதாடியைப் போல அமெரிக்கா பேட்ஸ்மேனான ஜேவிபியையே அணுகி காரியத்தை சாதித்து விட்டது.

ஜேவிபி வென்று அனுரா குமார திசநாயகே அதிபர் ஆனார். ஆனால் ஒரு தூய மார்க்சீயவாதியாக ஐ எம் எஃப் ஐ நாட்டை விட்டு துரத்தாமல் அதனோடு பேச்சு வார்த்தை நடத்தி நிபந்தனைகளின் கடுமையை குறைக்கும் படி கேட்டுக் கொள்வேன் என்று கூறினார். அன்னிய முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்று உறுதியளித்தார். இந்தியா மற்றும் சீனாவின் உறவு மதிக்க்ப்படும் என்றார்.

சோஷலிச லட்சியங்கள் பற்றிப் பேசாமல் எல்லா முதலாளித்துவ அரசியல்வாதிகளையும் போல ஊழல் ஒழிப்பு, தூய ஆட்சி பற்றியே பேசினார். பேட்ஸ்மேன் கிளீன் போல்ட் ஆனார்
———————

புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்று சொல்லப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

திசநாயகேவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்று JVP/NPP leader elected as new president of sri lanka- Saman gunadasa Jayasekera – World socialist web site கட்டுரை கூறுகிறது. பொருளாதார நெருக்கடி அது ஏற்படுத்திய சமூக பிரச்சினைகள் ஆகியவை ஒரு காரணம்.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி ஜேவிபியை ஆதரித்தது என்பது இன்னொரு காரணம். 2022 இல் நடந்த எழுச்சி திரும்பவும் நடக்கமல் தடுக்கவே ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவு ஜே வி பியை ஆதரித்தது என்கிறது மேற்சொன்ன கட்டுரை. ஜேவிபி ஆட்சிக்கு வருவது என்பது சோஷலிசம் நிலைநாட்டப்பட்டு விட்டது. எழுச்சி முடிவடைந்து விட்டது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதே இலங்கையின் ஆளும் வர்க்கங்கள், மற்றும் அமெரிக்காவின் கருத்தாகும்.

திசநாயக பொருளாதாரத்தை மீளக் கட்டியமைத்து, ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, ஊழலையும், பணம் படைத்த வர்க்கங்களின் சலுக்கைகளையும் ஒழிப்பதாக சொல்லி ஓட்டுக் கேட்டார். p02bp03l-300x169.jpg

அதே நேரம் அவர் ஐ எம் எஃப் சொல்லும் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யப் போவதாகவும் உறுதியுமளித்தார். அதற்கு பதிலாக அமெரிக்கா  3 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கும். இதற்காக அரசு நிறுவனங்களை விற்பனை செய்தல், பொதுத்துறை வேலைகளை இல்லாமல் செய்தல், சுகாதாரம், கல்வி போன்றவற்றில்

தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். இதுபற்றி திசநாயகே எதுவும் பேசவில்லை. கடன் வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாது என்றும் சொல்லவில்லை.

திசநாயக தான் ஐ எம் எஃப் உடன் கடனுக்கான நிபந்தனைகளின் கடுமையைக் குறைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக கூறியுள்ளார். ஆனால் ஐ எம் எஃப் அதற்கு இடமே இல்லை என்று கூறிவிட்டது.

செப்டம்பர் 4 ஆம் தேதி தொழிலதிபர்கள், பெருவணிகர்களுக்கான மாநாட்டில் பேசிய திசநாயகா அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும், அன்னிய முதலீட்டாளர்களை ஆதரிப்பதகவும் உறுதியளித்தார். The wizaedry of Anura Kumara Dissanayake, sri lanks’s new president – R.K. Radhakrishnan, Frontline, the hindu.com

அனுரா குமார திசனாயகே குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு மாயாஜாலம் என்கிறது மேற்கண்ட கட்டுரை. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான இலங்கை மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். திசனாயகே தன்னை இவர்களது குரலாக முன்னிலைப் படுத்திக் கொண்டார். 2022 முதல் 2024 வரை திசனாய்கே தான் இலங்கை ஆளும் வட்டங்களை சேர்ந்த ஆள் அல்ல. சாதாரணன் வெளியாள் என்று மக்களை நம்ப வைத்ததில் வெற்றி பெற்றார்.

பலவிதங்களில் இவரது அணுகுமுறை மோடியைப் போலிருக்கிறது என்கிறது பிரண்ட்லைன் கட்டுரை. திசனாயகேவின் தாயார் வாக்களிக்க இலங்கையில் டக் டக் என்று அழைக்கப்படும் ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்தார். ஆனால் திசநாயகே ஆடம்பரமான சொகுசு காரில் வந்தார். விக்ரமசிங்கே இது ஒரு நாடகம் என்று எக்ஸ் தளத்தில் கிண்டல் செய்தார்.

உண்மையில் திசநாயகே ஆளும் வர்க்கங்களுக்கு வெளியாள் அல்ல.  2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 லிருந்து 2005 வரை விவசாய அமைச்சராக இருந்தார். அது சந்திரிகா குமாரதுங்காவின் அப்பட்டமான முதலாளித்துவ அரசு. அதில் விவசாய அமைச்சராக இருந்த போதும் திசநாயகே விவசாயிகளின் நலனுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அது முழுவதும் சந்திரிகா அரசாகவே இருந்தது. எனவே அரசு நிர்வாகம், ஆளும் வர்க்க தொடர்புகள், பதவிகள் எல்லாம் ஜேவிபிக்கு பழக்கம் தான். பிடிவாதமாக தனது கொள்கைகளில் நிற்காமல் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும் திசநாயகேவின் ஜேவிபிக்கு வழக்கம் தான். இதில் இறுதி ஆணியை அடித்தது அமெரிக்கா.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று அமெரிக்க தூதர் ஜூலி சுங் ஜெவிபியின் தலைமை அலுவலகம் வந்து திசநாயகேவை சந்தித்தார்.

விமல் வீரவன்சா என்ற சிங்கள தேசியவாத பாரளுமன்ற உறுப்பினர் ஒரு விவாத மேடையில் இலங்கை அரசியலில் அமெரிக்கா தலையிடுகிறது. அமெரிக்கா ரனில் விக்ரமசிங்கேவை அதிபர் ஆக்க விரும்புகிறது. முடியாத நிலையில் அனுரா குமார திசநாயகேவை அதிபர் ஆக்க உறுதி கொண்டிருக்கிறது என்றார். அந்த வீடியோ மர்மமாக இணையத்தில் இருந்து மறைந்து விட்டது என்கிறது Tamil Guardian – Weerawansa caims US ambassador is interfering in Sri. Lankan elections  என்ற கட்டுரையில்.

ஜூலி சுங் பலமுறை  தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு வந்துள்ளார். யுஎஸ் எய்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் சம்ந்தா பவர்,  ஹரிணி அமரசூர்யவை சந்தித்தார் என்கிறார் விமல். ஜூலி சுங் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்தும் இலங்கையில் இருந்து இந்த வேலைகள் செய்து வருகிறார். இதில் அதிர்ச்சிகரமாக 2022 போராட்டங்களிலும் ஜூலி சுங் பங்கு வகித்தார் என்கிறார் விமல். அதாவது திவாலான கோத்தபய அரசை கவிழ்ப்பதிலும் அமெரிக்கா பங்கு வகித்தது என்கிறார் விமல். வங்கதேசத்தில் ஷேக் அஸீனாவின் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமான அமெரிக்காவே அவரது அரசைக் கவிழ்த்தது நினைவிருக்கும்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு அனுரா அமெரிக்கா சுற்று பயணம் மேற்கோண்டார்.  இதற்கான செலவுகளை அமெரிக்க தூதரகம் செய்தது என்ற வதந்தி பரவலாக இருந்தது. அதை அமெரிக்க மறுத்தது. அதன் பின்பு  அனுரா முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், உலகமயம் தாராளமயம் பற்றியெல்லாம் பேசுவதே இல்லை.

Rajpakche_b_14-300x205.jpg

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரும்படி அனுராவுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்தது.  அனுரா திசநாயகே இந்தியா வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போன்றோரை சந்தித்தார். பின்பு இலங்கை திரும்பிச் சென்ற அனுரா அமுல் குழுமத்தின் வெற்றியை இலங்கையிலும் செயல்படுத்தப் போவதாகக் கூறினார். இந்திய விரிவாதிக்கத்துக்கு எதிரான அரசியலை முழுமையாகக் கைவிட்டு இலங்கை இந்திய உறவுகளைப் பேணுவதைப் பற்றிப் பேசினார். இந்தியாவுடனான உறவை மேலும் வலிமைப்படுத்த உறுதி கொண்டிருப்பதாகவும் கூறினார்.

எனவே அமெரிக்கா, இந்தியா, ஐ எம் எஃப், இலங்கையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அனுரா குமார திசநாயகே இலங்கையின் அதிபர் ஆவது உறுதி செய்யப்பட்டது. ஜே வி பி தன்னிடம் மிச்சம் மீதியிருந்த சோஷலிச லட்சியங்களை முழுதாகக் கைவிட்டுவிட்டு இலங்கையின் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே வந்த பின்பே அனுர குமார திசநாயகே அதிபர் ஆக மேற்சொன்ன நாடுகளும், அதிகார மையங்களும் ஒப்புதலளித்தன.

அதாவது எதுவுமே மாறாது என்பதை இந்த நாடுகளும் நிறுவனங்களும் உறுதிப் படுத்திக் கொண்ட பின்பே இந்த மாற்றத்தை ஏற்படுத்தின.

இலங்கை சிவந்தது. இலங்கையின் உழைக்கும் மக்கள் தங்கள் அரசை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுவதை அமெரிக்க, இந்திய, இலங்கை ஆளும் வர்க்கங்கள் கைதட்டி ஆமோதிக்கின்றன. இப்போது இருப்பது உங்கள் அரசு என்று இவர்கள் உழைக்கும் மக்களிடம் சொல்கின்றனர். இன்னொரு நாடகம் அரங்கேறுகிறது.
 

 

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-ra-murugavel-article-02/

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை

3 weeks 3 days ago

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் 2024 பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களினதும் அவர்களுடைய செயற்பாடுகளும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியுமா? என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்திருக்கிறது.

மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா.. 

அந்த அளவிற்கு தமிழர் தாயக பரப்பெங்கும் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு சின்னா பின்னப்பட்டு தமிழர்கள் தமிழர்களாக வாழாது பதவி வெறி பிடித்த அரசியல் மிருகங்களாக மாறும் அளவிற்கு தமிழ அரசியல் பரப்பு தற்போது ஒரு துயரகரமான பக்கத்தை நோக்கிச் செல்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1947 இல் ஆகஸ்ட் , செப்டெம்பர் ஆகிய இரண்டு மாதங்களிலும் 13 நாட்கள் தேர்தல்கள் நடைபெற்றன.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

 

அன்றைய காலத்தில் இருந்த வசதி வாய்ப்புகள் இவ்வாறு தேர்தலை நடத்த பல நாட்கள் தேவையாக இருந்தது என்பதையும் நினைத்துக் கொள்க. 

சுதந்திரம் அடைந்தபோது இருந்த நாடாளுமன்ற ஆசனங்கள் 101 அதில் ஆறு பேர் நியமன உறுப்பினர்கள். ஆகவே 95 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் சில நுாறு வேட்பாளர்களே போட்டியிட்டனர்.

ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் பிரகாரம் இன்றைய நாடாளுமன்றத்தில் 225 ஆசனங்கள் இருக்கின்ற போதிலும் 195 ஆசனங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்த அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக திணைக்களம் அறிவித்திருக்கிறது. 

இலங்கையின் அரசியல் செல்போக்கில் தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆயினும் இந்த தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்த விரும்புவர்கள் கடந்த காலத்தில் மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா என்று தேடினால் அது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

அப்படியாயின் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பம் எவ்வாறு தோன்றுகிறது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். அது மிக நுணுக்கமாகவும் சமூகவியலுடனும், உளவியல், மெய்யியல் சார்ந்தும் நோக்கப்பட வேண்டிய விடயம் என்பதனால் அதனை இப்போது விட்டுவிட்டு நடைமுறையில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம். 

முள்ளிவாய்க்கால் பேரவலம்

ஒப்பிட்டு ரீதியில் இலங்கை தீவின் அதிகூடிய சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடும் பகுதியாக தமிழர் தாயகம் மாறி இருக்கிறது. சிங்கள தேசத்தையும்விட பன்மடங்கு அதிகமான வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் போட்டியிடுவதை அவதானிக்க முடிகிறது.

இதற்கான முதற்காரணமாக அரசியலுக்கு வந்தால் எதையும் சாதிக்கலாம், பணம் பண்ண இலகுவான தொழில் என எண்ணும் மனநிலையே பொதுவாக எல்லோரிடமும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இத்தகைய ஒரு மனநிலை தமிழர் தாயகத்தில் தோன்றுவதற்கான காரணங்கள் பல. ஆயினும் அதற்கான அடிப்படை காரணமும் அதற்கான சூழலையும் தோற்றுவித்தது முள்ளிவாய்க்கால் பேரவலம்தான் என்பதை யாரும் மறுத்துவிட. முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகுதியான தலைமைத்துவங்கள் முன்வரவில்லை.

அதேநேரத்தில் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை இன்னும் யாரும் இனங்காணவும் முடியவில்லை. ஆனால் ஓடுகாலி தலைமைகள் பலவும் முளைத்து எழும்பத் தொடங்கிவிட்டது என்பது இன்னொரு பக்க துரதிஷ்டம். 

முள்ளிவாய்க்காலுக்கு பின்னான கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் வெளியில் தலைமைத்துவம் அற்றதாகவும், அல்லது அவ்வாறு காட்டப்படும் தலைமைத்துவங்கள் செயலற்றவையாகவும், எதிரிக்கு சேவகம் செய்வனவாகவும், அல்லது எதிரிகளோடு ஒத்தோடுபவையாகவும் மக்களால் இனங்காணப்பட்டு இருக்கிறன.

இந்நிலையில் புதிய தலைமைத்துவங்கள் வருவதை சந்தேகக் கண்கொண்டு மக்கள் பார்க்கும் நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இங்கே யார் உண்மையானவர்? யார் நேர்மையானவர்? யார் தேசியவாதி? என இனம் காணுவது தமிழர் தாயகத்தில் மிக கடினமானதொரு முயற்சியாகவே இன்று எம்முன்னே எழுந்து நிற்கிறது. 

ஆயுத மௌனிப்புக்கு பின்னான அரசியல் முன்னெடுப்பு

கடந்த 15 ஆண்டு கால தமிழர் அரசியலை வழி நடத்தியவர்களும், அரசியலில் பங்கு கொண்டவர்களும் தமிழ் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை என்பது மாத்திரமல்ல தமிழ் மக்கள் செல்வதற்கான வழியையும், திசையையும் காட்டத் தவறிவிட்டனர்.

இன்று தமிழ் மக்கள் ஒரு அரசியல் அனாதைகளாக, மேய்ப்பான் இல்லாத மந்தைகளாக அலைகிறார்கள்.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்புக்கு பின்னான அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தமிழ் மக்கள் நம்பக்கூடிய தமிழ்த் தேசியத்தை கட்டமைக்கக்கூடிய எந்த தலைவர்களையும் இந்த நிமிடம் வரையும் தமிழ் மக்கள் இனங்காணவில்லை அல்லது இனங்காட்டப்படவில்லை என்பது ஒரு தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு பெருத்த பின்னடைவும் அவமானமும்தான். 

ஆயினும் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான அறிவியல் வளர்ச்சி தமிழ் மக்களிடம் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது தமிழ் மக்கள் தமது அறிவியல் வளத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றிடத்தை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் உள்ளது என்று சொல்வதே பொருந்தும்.

 தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான தலைவர்களோ முன்னுதாரணமான தலைவர்களோ இல்லாதவிடத்து தமிழ் மக்கள் சாத்தானின் கையில் விடப்பட்டவர்கள் போல பல திசைகளிலும் பயணிக்க தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்தக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இறுதியாக விட்டுத்தான் சென்றது.

ஆயினும் அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை சம்பந்தனோ, மாவை சேனாதிராஜாவோ அல்லது அவர்களுக்கு பின்னே இருக்கின்ற யாராயினும் சரியாக வழி நடத்த தவறிவிட்டனர்.

அவர்கள் வழிதவற விட்டதன் விளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இணைந்த அனைத்துக் கட்சியினரும் வெளியேறிவிட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் மூன்று அணியினராக இப்போது களத்தில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த மூன்று அணியிலும் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்னும் பல அணிகளாக தோற்றம் பெற்று இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளில் இருந்து அவர்களுடைய செயல்பாடுகளின் நம்பிக்கை இழந்து, கட்சிகளுடைய தான்தோன்றித்தனங்களிலிருந்து தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இலட்சியத்துக்குமான பாதையில் யாரும் செல்லவில்லை என்ற மனவிரக்தி, கோபம் பல சமூக செயற்பாட்டாளர்களையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும், தன்முனைப்பாளர்களையும் தம்மாலே எல்லாம் முடியும் என்ற பேராசையுடன் தகுதி இல்லாமல் தகுதியற்ற இடத்தில் இருந்து தகுதியான மக்களை ஆளலாம் என்ற நப்பாசையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசம்

அதேநேரத்தில் தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் செல்வாக்கு உள்ள தனிநபர்கள் பலரும் இந்த தேர்தலிலே சுயேட்சை போட்டியாளர்களாக போட்டியிட களத்துக்கு வந்துவிட்டனர். திரும்பும் திசையெங்கும் வேட்பாளராகவே தாயகத்தில் தென்படுகிறது. 

அதேநேரத்தில் வேட்பாளர்கள் உடைய வகைப்படுத்தல்கள் எவ்வாறு அமைகின்றது என்று பார்த்தால் சட்டத்தரணிகள், முன்னாள் ஆசிரியர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் என்ற வகைக்குள்ளேயே பெரும்பாலான வேட்பாளர்கள் அடங்குகின்றனர்.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இந்த வேட்பாளர்கள் சட்டம் படிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்கள் அல்லது அவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறிதான். 

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோஷத்துக்கு இந்த அரசியல்வாதிகள் செய்த வேலை யாதும் அறியா பாலகர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தியதுதான்.

அதுவும் ஒரு கட்சி அவரை கொண்டு வருவதென பேசி ஒப்பந்தமிட்டுவர இன்னும் ஒரு கட்சி அவருக்கு இன்னொரு ஆசை வார்த்தை கூறி தம்பக்கம் எடுத்து வந்து தேர்தலில் நிறுத்த வைத்தார்கள்.

ஒரு நாளிலேயே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் மனநிலை என்னவென்று சொல்ல! அதே நேரத்தில் சிறுவர்களை இப்படி அரசியலில் கொண்டுவந்து நிறுத்தும் ஒரு தவறான முன்னுதாரணமாகவும் இது சொல்லப்பட வேண்டும். 

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர், இன்னொரு கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளரை அவர் போட்டியிடுகிறார் என்று அறியாமலே தற்செயலாக சந்தித்தபோது "எனக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக்காக வேலை செய்ய வேண்டும்" என அந்த இளைய மாணவ வேட்பாளர் போராளி வேட்பாளரின் கையைப் பிடித்து கேட்ட. சம்பவம் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்தின் முன்னால் நடந்தது என்பதிலிருந்து நிலைமையைப் புரிந்துகொள்க. 

தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல

அவ்வாறே தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த பிற்பாடு தான் போட்டியிடுகின்ற தொகுதிக்குள் உள்ளடங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளை தெரிந்து கொண்ட பல வேட்பாளர்கள் உள்ளார்கள்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறை பற்றி எதுவுமே தெரியாத பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய தகுதி, தராதரம் பற்றி எடை போட்டுக் கொள்க. 

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இது இந்த நிலை என்றால் தமிழ் மக்களிடம், அதிகம் பாமர மக்களிடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலையே இப்போது தென்படுகிறது. தாம் யாரை நம்புவது, யாரின் பின்னே செல்வது, யாருக்கு வாக்களிப்பது என்பது ஒரு குழப்பகரமான நிலையிலே மக்கள் உள்ளனர்.

இந்த குழப்பகரமான நிலை தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. தமிழ் அறிவியலாளர்களும், நேர்மையான அறிவார்ந்த ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களை வழிப்படுத்துவதற்கான கருத்தாளர்களை மிக வேகமாக தமிழர் தாயகத்தில் செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. 

தமிழர் தாயகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி களத்திலே இறங்கி இருக்கும் வேட்பாளர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற, தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்ற, தமிழ் மக்களின் இருப்பையும் தாயகத்தின் இருப்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகின்ற செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் சிங்கள தேசிய கட்சிகளுடனும் சிங்கள இடதுசாரி அரசியலுக்குள்ளும் தாமும் அமர்ந்து போய் தமிழ் மக்களையும் அழித்துவிடும் அபாயகரமான ஒரு செல்நெறி தாயகத்தில் தற்போது நிலவுகிறது. 

தேர்தலுக்கான பிரசாரக் களம் 

பாமர மக்களுக்கு இந்த அரசியல் பித்தலாட்டங்கள் புரியவில்லை என்று எடுத்துக் கொண்டாலுங்கூட கல்வி கற்றிருக்கும் குறிப்பாக அரச ஊழியர்களுக்கு இன்றைய அநுரா அரசியல் சுனாமியை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழர் தாயகத்தின் ஊழல் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு சிங்கள இடதுசாரி சாத்தான்களுடன் கூட்டுச் சேரவும் அவர்களுக்கு வாக்களிக்கவும் தமிழர்களின் கல்வி கற்ற ஒரு வர்க்கம் தயாராக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்க. 

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இவ்வாறு தேர்தலில் பலதரப்பட்ட வகையறாக்களும் போட்டியிடுகின்ற போதும் இன்றைய நிலவரம் என்னவெனில் இந்த தேர்தலுக்கான பிரசாரக் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை.

புயலுக்கு முந்திய அமைதியாகவே தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் அமைந்திருப்பது போல தோன்றுகிறது.

நகரங்களின் சுவர்களில் பெரியளவு தேர்தல் சுவரொட்டிகளை காணமுடியவில்லை. கிராமப்புறங்களில் மந்தமான ஒரு சூழல் தென்படுகிறது.

ஆயினும் அடுத்த வாரங்களில் தமிழர் தாயகத்தின் சுற்று மதல்கள், தூண்கள், சுவர்கள் என அனைத்திலும் பலவர்ண சுரட்டிகள் ஒட்டப்பட்டு பொதுஜனங்களின் சுவர்கள் அலங்ககோலப்படுத்தப்படும் அறிகுறிகள் மட்டும் தற்போது தென்படுகிறது.  

தேர்தல் சட்ட ஒழுங்குகள் 

தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேர்தல் சட்ட காவல்துறை ஒழுங்குகள் இவற்றை ஓரளவு கட்டுப்படுத்தினாலுமங்கூட தேர்தலின் இறுதி வாரங்களில் இவை சூடுபிடிப்பது தவிர்க்க முடியாது.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

ஒவ்வொரு வேட்பாளரும் தனக்குரிய பிரசாரப் பணிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்ட ஊழியர்களையே பயன்படுத்துகின்றனர்.

இங்கு என்ன விந்தை எனில் ஒரே நபர் இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டவும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்படுகிறார் என்பதிலிருந்து தமிழர் தாயக அரசியல் எங்கு செல்கின்றது என்பதை புரிந்துகொள்க.

அதே நேரத்தில் இந்திய அரசியல் போன்று தேர்தலுக்கான மதுசார விருதுகள் அரங்கேறி விரிவடைந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

https://tamilwin.com/article/tamil-election-field-one-poster-both-rival-parties-1730103410

அறுகம் குடா விவகாரத்தில் அநுரவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!

3 weeks 3 days ago

அண்மையில் அறுகம் குடா பகு­தியில் இஸ்ரேலிய சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக உளவுத்தக­வல் ஒன்று கிடைக்கப்பெற்­றது.

இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது.

நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இதன் விளைவுகளை கருத்திற் கொண்டு அதெனை மறைத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் முக்கிய தகவல்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,

https://tamilwin.com/article/arugam-bay-issue-udaruppu-lankasri-1730045113

கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!

3 weeks 3 days ago

கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!
கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!(வெளிச்சம்:018)

    — அழகு குணசீலன் —

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள்.

இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு.

அரசியல் கூட்டுக்களில் வெளியில் என்ன படம் காட்சிப்படுத்தப்பட்டாலும், பிரதான வகிபாகம் பலமான ஒரு கட்சியிடமே இருக்கிறது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜனபெரமுன, உள்ளிட்ட பல கூட்டுக்களை  குறிப்பிட முடியும்.  இந்த விதிக்கு ஜே.வி.பி. பிராதான பாத்திரம் வகிக்கின்ற என்.பி.பி. என்ற தேசிய மக்கள் சக்தியும் விலக்கல்ல . காரணம் இவை எல்லாம் கதிரை அதிகாரத்தை முதன்மையாகக் கொண்ட கூட்டுக்கள். கதிரைக்கு இடது, வலது என்ற வேறுபாடு இல்லை. 

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் பெற்ற வாக்குகள் 1,97,689. இதில்  திகாமடுல்ல, திருகோணமலையில் பெற்ற வாக்குகளில்( 1,08,971 + 49, 886 ) சிங்கள மக்களின் வாக்குகள் அதிகமானவை. அதே போன்று மட்டக்களப்பில் ஜனாதிபதி பெற்ற வாக்குகளிலும்(38,832)  தமிழர் வாக்குகுகளுடன் ஒப்பிடுகையில் சோனகர்களின் வாக்குகள் அதிகமானவை. ஏனெனில் சஜீத்பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ்,சோனக கட்சிகளின் ஆதரவுடன் பெற்ற வாக்குகளில் தமிழர், சோனகர் வாக்குகள் அதிகபங்கை வகித்துள்ளன.

இது ஜனாதிபதி தேர்தல் நிலவரம். மக்கள் தங்களுக்கு நேரடியாக தொடர்பற்ற, சமூக, பொருளாதார, அரசியல் உறவற்ற கொழும்பு தலைமைக்கு அளிக்கும் வாக்கு. இது பாராளுமன்ற பொதுத்தேர்தல் களத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலைப்பாடு.  இதனால்தான் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு புள்ளி விபரங்களை கொண்டு  பல்லின பிரதிநிதித்துவ கிழக்கு மாகாண பாராளுமன்ற தேர்தலை எதிர்வு கூற முடியாது. இது  தபால் மூல வாக்களிப்பிலும் பிரதிபலிக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடிப்படையிலான மதிப்பீடு வடக்கு கிழக்கு மாகாணங்களை விடவும் அதிகம்  செல்வாக்கு செலுத்த  வாய்ப்புண்டு.

ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார மந்தம், ஊழல் ஒழிப்பு, ஜனநாயக அரசியல் செயற்பாட்டு மறுப்பு, மனிதவுரிமைகள் மீறல்  போன்ற தேசிய ரீதியிலான நீதி, நிர்வாக சீர்திருத்தங்கள்  முக்கிய பேசுபொருளாக இருந்தன. இனப்பிரச்சினை மேற்குறிப்பிட்ட அனைத்து தேசிய பிரச்சினைகளோடும் தொடர்பு பட்டதாக இருந்த போதும் மற்றைய வேட்பார்களைப் போன்றே அநுரகுமாரவும் அதைப்பொருட்படுத்தவோ, உறுதியான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கவோ இல்லை. எனினும் ஒரு இடதுசாரி கட்சி (?) என்ற நம்பிக்கையில், வழக்கத்திற்கு மாறான ஒரு மாற்றாக தமிழர்களும், சோனகர்களும் கணிசமான அளவு வாக்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கியுள்ளனர். இதில் பொதுவான தேசிய சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கான ஆதரவு முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நம்பிக்கை சிறுபான்மை மக்களிடம் படிப்படியாக இழக்கப்பட்டு வருகிறது. இதுவே  வடக்கு, கிழக்கில் பாராளுமன்ற தேர்தல்  முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய போக்காக அமையும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற போது  ‘இலங்கை அரசு’ சுதேசிகளால் கட்டமைக்கப்பட்டது. அதனூடாக ஒரு ‘இலங்கைத் தேசியம்’ உருவானது. ஆனால் ‘இலங்கையர்’ என்ற ஒரு பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பை அது உருவாக்கவில்லை. இந்த மூன்று வார்த்தை பிரயோகங்களும் சிங்கள மேலாண்மையை குறித்து நிற்கின்ற வார்த்தைகளாகவே இன்றும் அடையாளப்படுத்துகின்றன. ஒட்டு மொத்தத்தில் இந்த வார்த்தைகள் சிங்கள பௌத்த மேலாண்மையின் பிரதிபலிப்பாக, அடையாளமாக உள்ளன. இதன் மிகப்பிந்திய வெளிப்பாடே இனப்பிரச்சினையை  பொருளாதாரப்பிரச்சினை என்பதும், அது அதிகாரப்பகிர்வை கோரவில்லை வெறுமனே அபிவிருத்தியை கோருகிறது என்ற ஆளுங்கட்சியான ஜே.வி.பி. யின் அதிஉயர் அந்தஸ்த்தையும், அதிகாரத்தையும் கொண்ட செயலாளர் ரில்வின் சில்வாவின் கூற்றாகும். இதற்கான பதிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்கள் தங்கள் வாக்குகளால் வழங்குவதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில் விட்ட அரசியல் தவறை ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின்  ஊடாக திருத்திக்கொள்ள முடியும்.

ஜே.வி.பி.செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவிப்பு ஜனாதிபதி அநுரகுமாரவினால் அல்லது கட்சியின் வேறேந்த முக்கியஸ்தர்களாலும் வாரங்கள் கடந்தும் இதுவரை மறுதலிக்கப்படவில்லை. வடக்கும், கிழக்கும் அங்கு பரம்பரையாக வாழ்கின்ற தமிழர்களினதும், சோனகர்களினதும் பாரம்பரிய தாயகம் என்பதையும், பன்மைத்துவ இனத்துவத்தையும், அடையாளங்களையும் மறுதலித்துக்கொண்டு அரசியல் செய்தால் சிவப்பு சாயம் மிக விரைவாக வெளிறிப்போகும். ஒரு இடதுசாரி அரசியல் இயக்கத்தில் இது ஒரு அடிப்படையான முரண்பாடு. சுமந்திரன்  அமைச்சர் பதவிக்காக போட்டுள்ள டீலின்  இரு கோரிக்கைகளும் காலத்தால் கரைந்து விடும்.

வடக்கும், கிழக்கும் பாரம்பரிய தாயகம் என அங்கீகரிப்பதனால் அது சமஷ்டியை வழங்குவதாகவோ, அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதாகவோ கருதப்படவேண்டியதில்லை. அந்த மண்ணில் வாழ்கின்ற மக்களின் தனித்துவ அடையாளங்களையும், பிரதேசத்தையும், சமூக பன்மைத்துவத்தையும் அங்கீகரிப்பதாகும். இது இடம்பெறாமல் இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகத்தைக் கொண்டது என்பது மேலாதிக்க பொய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதல்ல இது. இது அந்த சட்ட நோக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இன, மத, கலாச்சார, மொழி வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் சமூகநீதியை மறுதலித்து கொண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஒருவகையில் அடக்கு முறையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது  ஒரு வழக்கில் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற வேறுபாடின்றி ஒரே குற்றத்திற்காக ஒரே தண்டனையை வழங்குவது. 

 ஆனால் பல்லின பன்மைத்துவ சமூகத்தில்  தனித்துவமான வழக்குகளும், மரபுகளும், நடைமுறைகளும் முக்கியமானவை. கொரோனா கால ஜனாஷா எரிப்பு  எல்லோருக்கும் ஒரே நியதி என்று கூறி தனித்துவங்களை நிராகரித்த செயல். இதனால்தான் இந்த “இலங்கையர்” என்ற வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. . சகல  இனத்துவ தனித்துவமான அடையாளங்களை, வாழ்வியல் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பது என்றால் சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும், அவை சார்ந்த கலாச்சார விழுமியங்களுக்கும் தனியான முன்னுரிமையும், பாதுகாப்பும் எதற்கு?. இதில்  சுதந்திர இலங்கையின் எந்த அரசாங்கமும் அநுரகுமார அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் விலக்கல்ல. ஒரு இடதுசாரி கட்சியாக ஜே.வி.பி.க்கு ஒரு இளம் பிக்குகள் சங்கம் ஒன்று எதற்கு? தேவை தொழிலாளர் சங்கங்கள் அல்லவா?

தமிழர்கள் ஜனாதிபதிக்கு அளித்த வாக்கை இந்த இலக்கில் மறுபரிசீலனை செய்யும் நிலையில், கிழக்கு சோனகர்கள் மத்தியில் ஜே.வி.பி. வடக்கு, கிழக்கை பிரித்து தந்திருக்கிறது,  அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற ஒரு பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகிறது. மறுபக்கத்தில்  சோனகர்கள் ஜே.வி.பி.க்கு ஆதரவளித்து வடக்கு, கிழக்கு இணைப்பை தடுக்கப்போகிறார்கள் என்று இணைப்புக்கு ஆதரவான தமிழ்த்தேசிய தரப்புக்களின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. மேலும்  ஜே.வி.பி . உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளின் சோனக வேட்பாளர்கள் தமிழர் வாக்குகளாலும், தமிழர் வேட்பாளர்கள் சோனகர் வாக்குகளாலும் வெல்லப்போகிறார்கள் என்ற பிரச்சாரங்கள் வேறு. தேர்தல் நெருங்க,நெருங்க எல்லாப்பூதங்களும் “அறுகம்பை பூதம்” போல் இன்னும் வெளிவரத்தான் போகின்றன. 

இங்கு  முக்கியமாக  சோனக சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு  துளியும் வாய்ப்பில்லை. அதை தமிழர்களில் ஒரு பகுதியினரும், சிங்களவர்கள் முழுமையாகவும் எதிர்க்கிறார்கள். இதை ஆதரித்து ஜனாதிபதி கூட பேசப்போவதில்லை. மாறாக   இரு சமூகங்களும் இனத்துவ அடையாளங்களையும்,வடக்கு , கிழக்கு பிரதேசங்களையும், அங்கீகரிக்க கோருகின்றன. இந்த அங்கீகாரம் தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்,சோனக மக்களுக்கும், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் ஒரு பன்மைத்துவ அங்கீகாரத்தை வழங்குவதாக அமையும், அமையவேண்டும். இந்த அச்சங்களும், முரண்பாடுகளும் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் ஜே.வி.பி அலையின் வேகத்தை குறைத்திருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த சோனகர் சமூகத்தில் இஸ்ரேல் -பாலஸ்தீன போரில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடும் கிழக்கில் பேசுபொருளாகி இருக்கிறது. புதிய அரசாங்கம் இதுவரை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிங்கள-தமிழ் கிறிஸ்தவ வாக்காளர்களின் வாக்குகளை குறிவைத்து இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பேராயர் மெல்ல, மெல்ல அநுர அரசின் பேச்சாளராக மாறி வருகிறார். இந்த பின்னணி கிழக்கு சோனகர் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ சமூகத்தில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழு அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாததும், அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களுக்கு பதவிகளை வழங்கியிருப்பதும்.  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதியை இழுத்தடிக்கும் செயல் என மக்கள் கருதுகின்றனர். ஆகக்குறைந்தது அறிக்கையில் பெயர்குறிபிடப்பட்ட இருவரையும் இடைநிறுத்தி புதியவர்களை நியமித்து விசாரணையை மீள மேற்கொள்ள ஜனாதிபதி பணித்திருக்க வாய்ப்பு இருந்தது. அதை அவர் பயன்படுத்தவில்லை என்ற விசனம் ஜே.வி.பி.குறித்த சந்தேகத்தை கிழக்கு கிறித்தவ வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அறுகம்பை குறித்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் சோனக சமூகத்தை அச்சுறுத்துவதற்கான கோத்தபாய பாணியிலான ஒரு தந்திரோபாயமா?   என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பயங்கரவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு கருவியாக ஜே.ஆர். ஜயவர்தன முதல் கோத்தபாய வரையுமான பல தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஜனாதிபதி அநுகுமாரவும் அந்த வழி அமைப்பு ஒன்றின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். ஈஸ்டர் தாக்குதல் பாணியிலேயே தகவல்கள் வெளியாகின்றன. 

ஒக்டோபர் 7ம்திகதி இந்திய புலனாய்வு துறையினால் இலங்கைக்கு தகவல் பரிமாறப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் , எடுத்திருந்தால் தூதரகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து மேற்கு நாடுகளின் உல்லாசப் பிரயாணத்தடையை தடுத்திருக்கலாம் என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.  இதன் மூலம்  பாரிய அந்நியச் செலாவணி இழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அமைச்சர் விஜயகேரத் இந்திய புலனாய்வு துறை தகவல் வழங்கவில்லை என்று மறுத்துள்ளார். 

அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்படுகின்ற மற்றொரு விடயம் ஜே.வி.பி.யின் தேசிய பட்டியல்.  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில்  2வது இடத்தில் இம்தியாஷ் பார்க்கீர் மார்க்கார், 4வது இடத்தில் சாகரன் விஜயேந்திரன், 5வது இடத்தில் நிசாம் காரியப்பர் இடம் பிடித்துள்ளனர். மேலும் 23, 24, 25 ம் இடங்களில் மூன்று தமிழர்களும், 27, 28 ம் இடங்களில் இரு சோனகர்களும் உள்ளனர். 

ரணில் விக்கிரமசிங்க ஆதரவுடனான புதிய ஜனநாயக முன்னணியில் 3வது இடத்தில் மொகமட் பைசர் முஸ்த்தபா, 7வது இடத்தில் செந்தில் தொண்டமான், 8வது இடத்தில் சுரேன் ராகவன் உள்ளனர். பொதுஜன பெரமுனவில் 10வது இடத்தில் பளீல் மர்ஷான் அஸ்மி உள்ளார். இதில் தமிழர் எவரும் இல்லை.  ஆனால் இலங்கை தேசியம், இலங்கையர் வார்த்தைகளை உரத்து உச்சரிக்கின்ற ஜே.வி.பி/என்.பி.பி. பட்டியலில்  10 வது இடத்திலேயே இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் 20 வது இடத்தில் அப்துல் ஃபதா முகமது இக்ராம் உள்ளார். 29 பேரைக்கொண்ட தேசிய பட்டியலில் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் மட்டும் அல்ல முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. 

ஆக, கிழக்கிலங்கையில் ஜே.வி.பி.க்கு காற்று வளம் செப்டம்பரில் போன்று நவம்பரில் அடிக்காது போல்தான் உள்ளது.? அரசியல் காலநிலை மாறுவதும் ஒரு மாற்றம் தானே ! இல்லையா?.
 

 

https://arangamnews.com/?p=11370

தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்?

3 weeks 4 days ago

தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்? – நிலாந்தன்.
spacer.png
 

மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். அர்ஜுனா அந்த வேட்பாளர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தால் தன் வாயைத் துடைக்கிறார். அதையும் நேரலையில் விடுகிறார்.

ஒரு சக வேட்பாளரை அந்த மருத்துவர் எப்படி நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அரசியல் நாகரீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் சாவகச்சேரியில் ஒரு கலகக்காரனாக எழுச்சி பெற்றார். தனக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் மிகவும் திட்டமிட்டு கட்டமைத்தார். யூ டியூப்பர்களின் காலத்தில் அது அவருக்கு மிகவும் இலகுவாக இருந்தது.  தனக்கு கிடைத்த பிரபல்யத்தை இப்பொழுது அவர் அரசியலில் எதிர்பார்ப்போடு முதலீடு செய்கிறார். அவருடைய தேர்தல் சின்னம் ஊசி. சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பலூன் அவர்.  அவருடைய ஊசியே அவரைக் குத்தி வெடிக்கச் செய்துவிடும் என்பதைத்தான் அந்த விருந்தகத்தில் மான் கட்சியின் பெண் வேட்பாளரை அவர் கையாண்ட விதம் நமக்கு உணர்த்துகின்றதா?

அவருக்கு கிடைத்த பிரபல்யத்துக்குக் காரணம் என்ன? சாமானியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சமூக வலைத்தளங்களா? அல்லது, மருத்துவத் துறைக்குள் காணப்படும் விமர்சனத்திற்குரிய அம்சங்களா? அல்லது அந்த விவகாரங்களை அந்த துறை சார்ந்த ஒருவரே வெளியே கொண்டு வந்ததுதான் காரணமா?

இல்லை. இவற்றைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. தமிழ்மக்கள் தங்களுக்காக, தங்களுக்குரிய நீதிக்காகப் போராட யாராவது வரமாட்டார்களா? தங்களுக்காக தன்னைத் தியாகம் செய்ய யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் அதற்குரிய முக்கிய காரணம். அதாவது அதைச் சுருக்கமாகச் சொன்னால், தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று காணப்படுகிறது என்று பொருள்.

அர்ச்சுனாவின் பின்னால் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்புகள், கட்டமைப்புக்கள் போன்றவற்றை நோக்கி அதிகரித்த எதிர்பார்ப்போடு அவற்றின் பின் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தலைமைத்துவம் அல்லது எதிர்பார்த்த தொடர்ச்சியான காட்சி மாற்றங்கள் நடக்கவில்லை.

தமிழ்மக்கள் பேரவை தோன்றிய பொழுது தமிழ்மக்கள் அதிகம் எதிர்பார்ப்போடு அதை நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு எழுக தமிழ்களிலும் கலந்துகொண்ட அனைவருமே தாமாக வந்தவர்கள்தான். யாரும் வாகனம் விட்டு அழைத்து வரவில்லை.

விக்னேஸ்வரன் மாகாண சபையில் சுமந்திரன் அணியினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது அவருக்கு கிடைத்த ஆதரவு தன்னியல்பானது. யாரும் திட்டமிட்டு ஒழுங்கமைக்காதது. ஆனால் விக்னேஸ்வரன் தனக்கு கிடைத்த ஆதரவையும் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து தக்கவைக்க முடியாதவராகத் தன்னை நிரூபித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இயங்கா நிலைக்கு அவரும் ஒரு காரணம்.

மாகாண சபையின் காலம் முடிந்த பொழுது சமூக செயற்பாட்டாளராகிய திரு செல்வின் என்னிடம் கேட்டார்… “விக்கி இப்பொழுது என்ன முடிவை எடுக்க வேண்டும்? ஒரு கட்சியை தொடங்கி கட்சி அரசியலை முன்னெடுப்பதா? அல்லது தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்து அதற்கு தலைமை தாங்குவாரா?” என்று. நான் சொன்னேன்…”அவர் மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கத் தேவையான வாழ்க்கை ஒழுக்கத்தையோ அல்லது அரசியல் தரிசனத்தையோ கொண்டவர் அல்ல. அநேகமாக அவர் கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடும்” என்று.

விக்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். ஆனால் அவர் மாகாண சபைக்குள் சுமந்திரன் அணியினால் சுத்திவளைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த கவர்ச்சியும் ஜனவசியமும் இப்பொழுது இல்லை.

தமிழ் மக்கள் பேரவை ஓய்வுக்கு வந்து சில ஆண்டுகளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி இடம் பெற்றது. அங்கேயும் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். தாமாகத் திரண்டார்கள். அது ஒரு பெரிய எழுச்சி. தூதரகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த எழுச்சி. படைத் தரப்பை முகாம்களுக்குள் முடக்க வைத்த ஒரு எழுச்சி. ஆனால் அது பின்னர் பலூன் ஆகியது. அந்த பேரெழுச்சியின் பெயரால் உருவாக்கப்பட்ட அமைப்பு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகவில்லை. அந்த அமைப்பின் இணைத் தலைவர்கள் ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் காணப்படுகிறார்கள். ஆனாலும் அது ஒரு பேரியக்கமாக வளர்ச்சி பெறவில்லை.

அப்படித்தான் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி 2 லட்சத்து 26 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற, கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்த ஒரு ஹைபிரிட் கட்டமைப்பை நோக்கி தமிழ்மக்கள் அதிகரித்த எதிர்பார்ப்போடு காணப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பு போட்டியிடவில்லை. பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து வரும் எல்லா தேர்தல்களிலும் கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்கள். இப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். திருக்கோணமலையில் சங்கையும் வீட்டையும் இணைத்தது பொதுச் சபையின் மதத் தலைவர்களில் ஒருவராகிய திருமலை ஆயர்தான்.

எனவே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முயற்சித்து இருந்திருந்தால் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம், அதன்மூலம் வாக்குச் சிதறலைத் தடுத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. தமிழ்த்  தேசியப்  பொதுக்கட்டமைப்பு முன்கையெடுத்திருந்தால் அரங்கில் இப்பொழுது தோன்றியிருக்கும் பெரும்பாலான சுயேச்சைகள் அந்த கட்டமைப்புக்குள் வந்திருக்கும் என்பது உண்மை. கட்சிகளுக்குள் உடைந்து வெளியே வருபவர்கள் பொதுக் கட்டமைப்பை நோக்கி வந்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பொதுக் கட்டமைப்பு இப்பொழுது நடைமுறையில் இல்லை. பொதுக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மக்கள் அமைப்பு நாடாளுமன்றத்  தேர்தலைக் கையாள்வதில்லை என்று முடிவெடுத்தது. இதனால் சங்குக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

 

spacer.png

இப்படியாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு அமைப்புகளின் மீதும் நபர்களின் மீதும் தங்கள் நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு பார்க்கின்றார்கள். யாராவது வந்து மீட்க மாட்டார்களா?  எந்தக் கட்டமைப்பாவது ஒரு காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாதா? என்று எதிர்பார்ப்போடு அந்த அமைப்பின் பின் அல்லது நபர்களின் பின் செல்கிறார்கள். முடிவில் உற்சாகமெல்லாம் வடிந்து போய்ச் சலித்து அரசியலில் ஆர்வமற்று ஒதுங்கி விடுகிறார்கள்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறு தமிழ் மக்கள் சலிப்போடு ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றக்கூடும் என்ற பயம் பரவலாக உண்டு. சில கிழமைகளுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில், தேசமாகத் திரள்வோம் என்று நின்ற மக்கள், இப்பொழுது விருப்பு வாக்கு கேட்டுத் தமிழர்களை வாக்காளர்களாகக் கூறுபோடும் கட்சிகளையும் சுயேச்சைகளையும் சலிப்போடும் ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விரக்தி சிலசமயம் அனுர அலையின் பின் மக்களை உந்தித் தள்ளிவிடுமா என்ற பயம் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் உண்டு. இதே நிலைமை திருக்கோணமலையிலோ அம்பாறையிலோ ஏற்பட்டால் என்ன நடக்கும்? புலம்பெயர்ந்து வாழும் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார், திருகோணமலையில் எவ்வளவுதான் வாக்குகள் சிதறினாலும் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக இனமாகச் சிந்தித்து வாக்களிக்கும் ஒரு பாரம்பரியம் அங்குண்டு. அது இனியும் தொடரும் என்று. தொடர்ந்தால் நல்லது.அம்பாறையிலும் அப்படி நடந்தால் நல்லது. வடக்கில்,மீன் கரைந்தாலும் சட்டிக்குள்தான் இருக்கும் என்று நம்புவோமாக.

https://www.nillanthan.com/6943/
 

அனுதாப வாக்குகளுக்காக அன்றி, ஆக்கபூர்வமான அரசியலுக்காக பெண்களை உள்வாங்க வேண்டும்!

3 weeks 4 days ago

(புருஜோத்தமன் தங்கமயில்)

kittu.jpg

இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால்  நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது.  அதன் பிரதிபலிப்புக்களை, தமிழ்த் தேசிய அரசியல் களமும் ஓரளவு உள்வாங்கியிருக்கின்றது. 

பெண்களுக்கான அரசியல் – தேர்தல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில், தமிழ்த் தேசியக் கட்சிகளோ அமைப்புக்களோ போதிய அக்கறையை வெளிப்படுத்துவதில்லை. அண்மையில் கூடிக் கலைக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் கூட, பெண்களுக்கான பிரதிநித்துவம் என்பது பூச்சியமாக காணப்பட்டது. கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பதின்நான்கு பேரும் ஆண்கள். அதிலும், மூத்தவர்கள். ஒரு பெண்ணைக் கூட இணைக்கவில்லையே என்கிற எந்தவித ஆதங்கமோ அங்கலாய்ப்போ கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஒருவித ஆணாதிக்க மனநிலையோடு நின்று விடயங்களை அணுகி, கீழே போட்டுடைத்து ஓய்ந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போதும், ஒப்புக்காகவே பெண்களை இணைத்துக் கொள்ளும் நிலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் காணப்பட்டது. வெற்றிபெறக் கூடிய, பாராளுமன்ற அரசியலில் பங்களிக்கக் கூடிய பெண்களை உள்வாங்கி, அவர்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பது சார்ந்து தமிழ்க் கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பெண்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கவில்லை என்றால், விமர்சனங்கள் எழும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிக்கு அண்மையில் வரமுடியாத பெண்களை உள்வாங்குவதில் குறியாக நின்றிருக்கின்றன. இது, தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் பொருந்தும். 

இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளில் பெண்களில் அரசியல் வருகை என்பது, பெரும்பாலும் அனுதாப அலையை வாக்குகளாக மாற்றுவதற்காகவே நிகழ்ந்திருக்கின்றன. உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்க தொடங்கி, அவரின் மகள் சந்திரிக்கா குமாரதுங்க உட்பட, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கடந்த காலங்களில் அழைத்து வரப்பட்ட சசிகலா ரவிராஜ், அனந்தி சசிதரன் வரையில் அதுதான் வரலாறாக இருந்திருக்கிறது. இந்தப் பெண்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அரசியல் ரீதியாக படுகொலை செய்யப்பட்டிருப்பார்; காணாமல் ஆக்கப்பட்டிருப்பார் அல்லது பதவியில் இருக்கும் போது உயிரிழந்திருப்பார். அப்படியான சூழலில், இந்தப் பெண்களைக் காட்டி அனுதாப வாக்குகளைத் திரட்டுவதுதான் இந்தக் கட்சிகளின் பிரதான வேலையாக இருந்திருக்கின்றன. இந்தியாவின் இரும்பு மனுசியாக பார்க்கப்படும் இந்திரா காந்தியே, அப்படியான அரசியல் வாரிசுதான். இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மட்டுமே, அவரின் அரசியல் குருவான எம்.ஜி.ஆரையே கட்சிக்குள் எதிர்த்து நின்று தனித்துவமாக எழுந்து ஆட்சி  அதிகாரம் பெற்றவர். அவர் மீது அனுதாப அலைக்கான அடையாளத்தை ஒட்ட வேண்டியதில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2015 பொதுத் தேர்தல் காலத்தில் சசிகலாவை தேர்தல் அரசியலுக்கு அழைத்துவர முயன்றது. குறிப்பாக, மறைந்த இரா.சம்பந்தனின் யோசனையில் அதற்கான வேலைகளில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டார். அது, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக கொண்ட அழைப்பல்ல, மாறாக படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மீதான அனுதாபத்தினை வாக்குகளாக மாற்றும் உத்தி சார்ந்தது. அடிப்படையில், அப்படியான நிலை என்பது அபத்தமானது. அதனால், ஒருபோதும் பெண்களுக்கான பிரதிநிதித்துவப் பங்களிப்பு காக்கப்படுவதில்லை. அதில், பெரும்பாலானவை, வெற்றுக்கனவுகளாவே முடிந்து போயிருக்கின்றன. அனுதாப அலைக்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட ஒருசில பெண்கள், தேர்தல் அரசியலுக்குள் வென்று, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஆட்டுவிக்கும் கருவிகளாக அந்தப் பெண்கள் இருந்தார்களா என்றால், அதன் பதில் எதிர்மறையானது. பெண்களின் அரசியல் பங்களிப்பு, அதனூடான பிரதிநித்துவம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை தடுக்காது, அனுமதிப்பதுதான் கட்சிகள் செய்ய வேண்டிய முதல் வேலை.

இம்முறை தேர்தல் களத்தில், தேசிய மக்கள் சக்தியில்தான் கிட்டத்தட்ட 20 வீதமான வேட்பாளர்கள் பெண்கள். அவர்களினால்கூட குறைந்தது 35 வீதத்தைத் தாண்டிய வேட்பாளர் நியமனத்தை பெண்களுக்கு வழங்க முடியவில்லை. ஏனைய கட்சிகளை நோக்கினால், 10 வீதமளவில்தான், ஒப்புக்காக பெண்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுவின் சார்பில் பேசிய சுமந்திரன், தகுதியுள்ள பெண் வேட்பாளர்களைத் தேடுவதில் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தமை ஒரு மோசமான முன்னுதாரணம். ஏனெனில், அடுத்த நாளே, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் போது, அதில் உள்ளடக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்பட்டது. அது, தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பட்டியல் வெளியானதும் அதிகமாகவே பிரதிபலித்தது. குறிப்பாக, வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட கிருஷ்ணவேணி ஶ்ரீதரன் (கிட்டு) மற்றும் சுரேக்கா சசீந்திரன் தொடர்பில் எதிர்மறைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

கிட்டு என்கிற கிருஷ்ணவேணியின் கள அரசியல் பங்களிப்பு என்பது திடீரென ஒருநாளில், சுமந்திரன் வேட்பாளர் பட்டியலை வாசித்ததும் உருவானதல்ல. அவருக்கான கடந்த கால அரசியல் வரலாறு கனதியானது. தமிழ்த் தேசிய அரசியலில், 2004 பொதுத் தேர்தலிலேயே, பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒருவராக அவர் இருந்தார். அதனை, அன்றைக்கு கூட்டமைப்பின் பிதாமகர்களாக இருந்து, அரசியலை இயக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளே செய்யத் தலைப்பாட்டார்கள் என்பதுதான் உண்மை. கிட்டு தமிழ்த் தேசிய கள அரசியலுக்குள் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக வந்தவர். கெடுபிடியான 2000களின் ஆரம்பத்தில், சிதம்பரநாதனின் அரங்கச் செயற்பாட்டுக்குழுவில், முக்கிய இளைஞியாக நின்று கவனம் பெற்றவர். அவர்களின் அரங்கச் செயற்பாடுகளும் சேர்ந்துதான் ‘பொங்கு தமிழ்’ என்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிக்கு வித்திட்டது. அதிலும், களச் செயற்பாட்டாளராக கிட்டுவின் பங்களிப்பு அதிகம். அன்றிலிருந்து, புலிகளின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் கூறுகளில் பங்களித்து, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கியவர். அவர், 2004 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக உள்வாங்கப்பட்ட போது, தன்னுடைய இளைய வயதினைக் காட்டி ஒதுங்கினார். அந்த இடத்தில்தான், பத்மினி சிதம்பரநாதன் வேட்பாளராக பிரதியிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான காலத்திலும் அவரை, தேர்தல் அரசியலுக்குள் அழைத்து வருவது சார்ந்து கூட்டமைப்பு, குறிப்பாக தமிழரசுக் கட்சி அக்கறை காட்டியது. 2015 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலுக்குள் கிட்டுவை உள்வாங்குவதற்கான பேச்சுக்களில் சுமந்திரன் ஈடுபட்டார். 2020 பொதுத் தேர்தல் காலத்திலும் அது தொடர்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் மறுத்துரைத்த கிட்டு, தற்போது தேர்தல் களம் வந்திருக்கிறார். அப்படியான நிலையில், ‘தகுதியான பெண் வேட்பாளர்கள் இல்லை என்று ஊடகங்களில் நேற்று அறிவித்தோம், இன்று கிடைத்திருக்கிறார்கள்..’ என்று சுமந்திரன் கூறியமை அவசியமில்லாத ஒன்று. அவர், வேட்பாளர் பட்டியலில் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களுக்காக கிட்டுவை, உள்வாங்கப் பேச்சுக்களை நடத்திய ஒருவர். அதனை, வெளிப்படையாக அறிவித்திருந்தால், எதிர்மறை விமர்சனங்கள் குறைந்திருக்கும். 

சசிகலாவின் தொலைக்காட்சிப் பேட்டியொன்று கடந்த வாரம் ஒளிபரப்பானது. அதில், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பிலான சசிகலாவின் பார்வை எவ்வளவு குறுகியது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்தப் பேட்டி முழுவதும், தமிழரசுக் கட்சிக்காரர்கள், அனுதாப வாக்குகளுக்காக அன்றி, வேறெந்த தேவைக்காகவும் சசிகலாவை அரசியலுக்கு அழைக்கவில்லை என்பது புரிந்தது. அவரிடம் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் தொடர்பில் எந்தவித புரிதலும் இல்லை. அரசியலை, பதவிகளுக்கான கட்டமாகவே பார்க்கும் தன்மை வெளிப்பட்டது. தான் பிரதிநிதித்துவம் செய்யப்போவதாக கூறும், தென்மராட்சியின் தேவைகள், அத்தியாவசியங்கள் தொடர்பிலேயே விளக்கமற்று இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பின்னரான அரசியல் செயற்பாட்டுக் களத்தில் எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ரணிலுடனான சந்திப்பு, பெண்களுக்காக வேட்பாளர் நியமனம் உறுதிப்படுத்தலுக்கான சந்திப்பு என்று ஒருசில நிகழ்வுகளில் பங்களித்தமையைத் தாண்டி, அவருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் அற்றே இருந்திருக்கிறார். அப்படியான நிலையில், கிட்டு போன்றவர்களின் கடந்த கால கள அரசியல் பங்களிப்பை, வெளிப்படையாக அறிவித்து, இந்தத் தேர்தல் அரசியலுக்கு அழைத்துவரப் பட்டமைக்கான காரணங்களை தமிழரசுக் கட்சி விளக்கியிருக்க வேண்டும். ஏனெனில், கிட்டு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படும் போதே, அவர் சுமந்திரனின் வெற்றிக்காக களமிறக்கப்பட்டவர் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டமையானது அவசியமற்றது. தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், கிட்டுவின் உரை அதனைப் பிரதிபலித்தது. 

இன்னொரு பக்கத்தில், சுரேக்காவின்  வேட்பாளர் நியமனம் பற்றி சமூக ஊடகங்கள் மிகமோசமான கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகின. இரண்டாந்தர சிந்தனைகள் தொடங்கி, சாதிய அடையாளம் பூசி அவதூறுகளைப் பரப்பியமை வரையில் நடந்தன. அதுவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகக் காட்டிக் கொள்ளும் தரப்பினர், அவற்றைச் செய்தார்கள் என்பதுதான், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சுரேக்காவின் அரசியல் அணுகுமுறை - கல்வித் தகைமைகள் தொடர்பில் ஆராயப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், அவரின் சாதியப் பின்னணி, ஆராயப்பட்டு அதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுவதனை ஒருபோதும் அரசியல் விமர்சனமாக கருத முடியாது. விடுதலைக்காக போராடும் சமூகம், தன்னுள் காணப்படும் சாதிய, பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நின்று போராட வேண்டும். மாறாக, தடித்த சாதிய, ஆணாதிக்கத் தனத்தில் நின்று அரசியலை அணுகுதல், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலை அணுகுதல் என்பது, எமக்காக போராடி மாண்ட ஆயிரமாயிரம் உறவுகளை கேலிப்படுத்துவது போன்றது. 

தமிழரசுக் கட்சி ஜனநாயகப் பாராம்பரியத்துக்குள்ளால் வந்து நிற்கும் கட்சி. ஏனைய முன்னாள் ஆயுத இயக்கங்கள் போன்றதல்ல. அந்த இயக்கங்களில் இருந்த பெண்கள், அந்த இயக்கங்கள் அரச ஆதரவுக் குழுக்களாக இயங்க ஆரம்பித்த தருணத்திலேயே, விலகிக் கொண்டு விட்டார்கள். அந்த இயக்கங்கள் முழுவதுமாக ஆண்களினால் ஆட்சி செலுத்தப்படுவது. ஆனால், தமிழரசுக் கட்சி ஓர் ஆயுத இயக்கமல்ல. அதனை, 2004களில் மீட்டெடுத்துக் கொடுத்த புலிகள், பெண்களுக்கான பிரதிநித்துவம் தொடர்பில் அக்கறையோடு இயங்கிய போராட்ட இயக்கம். அப்படியான நிலையில், பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பதற்கான முயற்சிகளில் ஆக்கபூர்வமாக இயங்க வேண்டியது, தமிழரசுக் கட்சியின் கடமை. அதனை, அந்தக் கட்சி இதுவரையும் செய்யவே இல்லை. தேர்தல்கள் வந்தால் மாத்திரம், ஒப்புக்காக பெண் வேட்பாளர்களைத் தேடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சிக் கட்டமைப்புக்குள் முதலில் குறைந்தது 30 வீதமான அளவு, பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அப்படியான அங்கீகாரம், பெண்களை கட்சி – கள அரசியலுக்குள் அழைத்து வருவதற்கான உந்துதலை வழங்கும். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின் வழியாக, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களில் பிரதிநிதித்துவம் ஓரளவு காக்கப்பட்டது. அதனால், சில பெண்களுக்கான களம் திறந்தது. குறிப்பாக, ஒரு உள்ளூராட்சி மன்றதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் முப்பது வீதமளவில் பெண்கள் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால், வட்டாரங்களில் நேரடியாக பெண்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், விகிதாரச முறையில் ஆசனங்களை வென்ற கட்சிகள் பெண்களுக்கு அவற்றை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால், நேரடியாக வட்டாரங்களை வெல்ல முடியாத கட்சிகள், பெண்களை நியமிக்க வேண்டி வந்தது. அதுவும், விரும்பி நிகழ்ந்தது அல்ல. மாறாக, சட்டம் போட்டுச் செய்யப்பட்டது. அந்தச் சூழல், சில பெண்களை அரசியலுக்குள் அழைத்து வந்தது. ஆனாலும், அவர்களில் எத்தனை பேரை, கள அரசியல் எடுத்துக் கொண்டது அல்லது உள்வாங்கியது என்ற கேள்வி முக்கியமானது. 

அர்த்தமுள்ள அரசியல் என்பது, அனைத்துக் கட்டங்களிலும் திறக்க வேண்டும். அதனை, தொடர்ச்சியாக போராடும் சமூகக் கூட்டமான தமிழர்கள், அர்ப்பணிப்போடு ஏற்றுச் சுமக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றுக் கட்டங்கள் உருவாகும். அதனை, கானல் வெளி நிரப்பும். அப்போது, மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் மீது நம்பிக்கையிழப்பார்கள். பெண்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவோ, அனுதாப அலைக்கான கருவிகளாகவோ மாத்திரம் பார்க்காமல், அரசியலின் பெருங்கூறாக உள்வாங்க வேண்டும். அதுதான், பெண்களுக்கான அரசியல் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உண்மையாக உறுதி செய்யும்.

-காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 20, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_20.html

"இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இனம்  மாறிய சிங்களவர்கள் காரணமா?" / "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?"

3 weeks 5 days ago

"இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இனம்  மாறிய சிங்களவர்கள் காரணமா?" / "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?"

 

தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகள் என பல தென்னிந்தியர்களும் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சிங்களவர்களுடன் இணைந்தனர். உதாரணமாக, கோட்டே இராச்சியத்தை நிறுவி, தமிழ் யாழ்ப்பாண இராச்சியத்தை எதிர்த்துப் போரிட்ட அழகக்கோனார்கள் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் சிங்களவர்களுடன் இணைந்திருந்தனர். 

கண்டி இராச்சியத்தின் கடைசி பல மன்னர்கள் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தமிழ் பேசும் நாயக்கர்கள். வெளிப்படையாக அவர்களின் நீதிமன்ற மொழி தமிழ். 

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில் முதல் முதல் இனக்கலவரத்தைத் தொடங்கியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆகும். 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை  பலவந்தமாக திணித்து இனக்கலவரத்தை ஆரம்பித்தார் என்பது வரலாறு. தெலுங்கு வம்சாவளியை விட, அவரது மூதாதையர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் செட்டி (ஒரு வணிக சாதி) என்பது குறிப்பிடத் தக்கது. 

எஸ்.டபிள்யூ.ஆர் டயஸ் பண்டாரநாயக்காவின் வம்சாவளியினர், 16 ஆம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்து கண்டி மன்னர்களின் கீழ் பணியாற்றிய, நீல- பெருமாள் என்ற பெயரைக் கொண்ட இந்தியச் செட்டி சமூகத்தின் வழித்தோன்றலாகும்.  இந்த நீலப்பெருமாள் பாண்டாரம், சமன் என்ற ஒரு கடவுளின் ஆலயம் ஒன்றின் பூசகராகப், அதன் தலைமைக் குருவாக நியமிக்கப் பட்டார். 

சமன் (சுமண சமன் தேவன் / சுமண சமன் கடவுள்] என்பது இலங்கையின் உள்ளூர் மற்றும் பூர்வீக நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கு உட்பட்ட ஒரு தெய்வம் ஆகும். சமன் என்ற பெயருக்கு "நல்ல மனம்" என்று பொருள். இவர்  கிரீடம் மற்றும் நகைகளால் மூடி  அணிந்து, வலது அல்லது இடது கையில் தாமரை மலரைப் பிடித்தபடி, ஒரு வெள்ளை யானையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

அதேவேளை 'சமன்' கடவுளின் கோவிலின், தலைமைப் பதிவாளர் என்ற கருத்தில், 1454 இல் 'நாயக்க பண்டாரம்' [‘Nayaka Pandaram’] என்ற பெயரை அவர்கள் எடுத்துக் கொண்டனர். பின்  நாளடைவில், "பயன்பாட்டின் வசதிக்காக, 'பண்டார நாயகே' [‘Pandara Nayake’] ஆகி, பின் காலப்போக்கில், P ஆனது உள்ளூர் உச்சரிப்பான சிங்கள வடிவில் B உடன் மாற்றப்பட்டு, இதனால் 'பண்டார நாயகே [‘BandaraNayake’] ஆகி, பின்னர் பண்டாரநாயக்கா [Bandaranaike] வாக மாற்றம் அடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் அல்லது தமிழில் பண்டாரங்கள் என்போர் பிராமணர்கள் மற்றும் நீதிமன்றம் மற்றும் குடும்ப பதிவுகளை பராமரிப்பவர்கள் ஆகும். 

பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டதுடன் அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் தமது பணியை தொடர்ந்தனர்.

'பெருமாள்' என்பது விஷ்ணுவின் தமிழ் பெயர். அதேபோல, கண்டிய பிரபுக்களால் பயன்படுத்தப்பட்ட 'பண்டார' என்ற தலைப்பு தமிழ் வார்த்தையான பண்டாரம் என்பதிலிருந்து வந்தது, இது அகராதி வரையறையின்படி தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள சூத்திரர் சாதி [Shudra caste] பூசாரிகளின் சமூகத்தைக் குறிக்கிறது. 

கணநாத் ஒபேசேகரேவின் [Gananath Obeyesekere] கூற்றுப்படி, பண்டாரங்கள் பொதுவாக வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு இரண்டு அலைகளில் இடம்பெயர்ந்து சிங்களவர்களுடன் இணைந்த சிவன் மற்றும் ஸ்கந்த [முருகன்] பக்தர்கள் ஆகும்.

பண்டாரநாயக்காவின் செல்வந்த மூதாதையர்கள் ஒரு சந்தர்ப்பவாதிகளாகவே தொடர்ந்து இருந்துள்ளார்கள். அவர்கள் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு தங்கள் தனிப்பட்ட நன்மைக்காக மாற என்றும் தயாராகவே இருந்துள்ளார்கள். முதலில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும், பௌத்த மதத்திற்கும் வெவ்வேறு ஆளும் சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக மாறினார்கள் என்பது வரலாறு ஆகும்.  

பண்டாரநாயக்கா அவர்களே ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி ஆகும், அவர் கிறித்துவத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறி சிங்களம் மட்டுமே இயக்கத்தை முன்னின்று சிங்கள-பௌத்த தேசியவாதத்தைத் தூண்டித்தான் தன் வாக்குகளைப்பெற்று அரசு அமைத்தார். இருப்பினும் அவர் ஆங்கிலத்தில் படித்த ஒரு உயரடுக்காகும் [ஒரு குழு அல்லது சமூகம் தனது குணங்களின் அடிப்படையில் உயர்ந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவாக தோற்றம் அளிக்கும் ஒன்று / elite]. அதே நேரம் அவருக்கு சிங்களத்தில் எளிதாகவும் தெளிவாகவும் அல்லது சரளமாக பேசும் திறன் [fluent] அற்றவராகவே இருந்தார். 

1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டு தமிழர் விரோதப் படுகொலைகள், யாழ் பொது நூலகம் எரிப்பு மற்றும் உள்நாட்டுக் கலகம் அல்லது போர்  போன்றவற்றினை ஆரம்பிப்பதற்கும் தொடர்வதற்கும் காரணகர்த்தாவாக இருந்து தமிழர்களின் அவலங்களை மோசமாக்குவதற்கு முதன்மையாக இருந்தவர் தான் மற்றொரு சிங்கள அரசியல்வாதியான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா ஆகும்.


அவருக்கும் தென்னிந்தியர், குறிப்பாக தமிழ் வம்சாவளியினர் இருந்ததாக தெளிவாகத் தெரிகிறது. ஜெயவர்த்தனாவின் தாத்தா 'தம்பி முதலியார்' [Tambi Mudaliyar] என்று அழைக்கப்பட்டார். தம்பி என்பது இளைய சகோதரனுக்கான தமிழ் வார்த்தை (பிரபாகரனின் புனைப்பெயரும் கூட) மேலும் இது சில தமிழ் முஸ்லிம்களாலும் பயன்படுத்தப்படுகிறது. முதலியார் என்பது ஒரு தமிழ் சாதிப் பட்டமாகும், இது சில சிங்கள உயரடுக்கினருக்கும் பயன்படுத்தப்பட்டது.

தம்பி முதலியார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக டச்சுக்காரர்களுக்கு ஒற்றராகவும், பின்னர் டச்சுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்காகவும் காலனித்துவவாதிகளின் விருப்பமுள்ள அவர்களுக்கு பணிவான ஊழியராக இருந்தார். பின்னர் அவர் கண்டி சிங்கள இராச்சியத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்தார் மற்றும் கண்டியை கைப்பற்ற தனது வெள்ளை எஜமானர்களுக்கு உதவினார் என்பதும் குறிப்பிடத் தக்கது, அதிலிருந்து அவர் பெரும் செல்வத்தை குவித்து இலங்கையில் மிகவும் செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக மாறினார்.

அவரது துரோகத்திற்காக சில சிங்களவர்கள் அவரை ஒரு துரோகி என்று கண்டனம் செய்தனர், அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் அவரது விசுவாசத்திற்காக அவரைப் பாராட்டி அஞ்சலி செலுத்தினர், இது 15 மே 1830 அன்று பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் [official Gazette of the British colonial government on 15 May 1830] இருந்து தெரிய வருகிறது. இந்த வர்த்தமானி தம்பி முதலியாரின்  தமிழ் வம்சாவளியையும் வெளிப்படுத்துகிறது. தம்பி முதலியார் (டான் அட்ரியன் விஜேசிங்க ஜயவர்தன / Don Adrian Wijesinghe Jayewardene  என்றும் அழைக்கப்படுகிறார்). 

மேலும் கே.எம். டி சில்வா மற்றும் வில்லியம் ஹோவர்ட் ரிக்கின்ஸ் [K. M. De Silva and William Howard Wriggins] ஆகியோரால் சுருக்கமாக: 

"He was descended from the Chetty community, a community of traders, which had emigrated from the Coromandel coast in India in the early years of the Dutch rule in the mid-17th century and settled in the vicinity of Colombo. Two or three generations before the birth of Don Adrian a male of his family had married a Sinhalese by the name of Jayewardene from the village of Welgama near Hanvalla some 20 miles from Colombo and from that time took on the name of Jayewardene. Immigration from India to the south-west coastal regions of Sri Lanka had gone on for several centuries before the Dutch arrived and the process continued under their rule. To locate an ancestor with these antecedents is, of course, unusual; it is a distinction the Jayewardenes share with the Bandaranaikes whose first known ancestor also hailed from South India, but in the early 16th century. Don Adrian, then, had one ancestor of recent Indian origin, but by the time he himself appears on the stage of Sri Lanka's history at the tail-end of the 18th century the process of ‘Sinhalisation’ of his family had been completed."

என்று தமது J.R. Jayewardene of Sri Lanka: 1906-1956, By K. M. De Silva, William Howard Wriggins என்ற புத்தகத்தில் குறிக்கப்படும் உள்ளது. அதாவது  

அவர் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டச்சு ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையிலிருந்து குடிபெயர்ந்து கொழும்புக்கு அருகாமையில் குடியேறிய வணிகர்களின் சமூகமான செட்டி சமூகத்திலிருந்து வந்தவர் ஆகும். இங்கு கோரமண்டல் கரை என்பது, இந்தியக் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்துக்கு வழங்கப்பட்டுவரும் ஒரு பெயராகும்.வரலாற்று அடிப்படையில் கோரமண்டல் கரை, காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் குறித்தது. தற்காலத்தில் கோரமண்டல் கரை, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதியான பாண்டிச்சேரியிலும் உள்ளது.

டொன் அட்ரியன் பிறப்பதற்கு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண், கொழும்பில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள ஹன்வல்லைக்கு அருகில் உள்ள வெல்கம என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயவர்த்தனே என்ற சிங்களவரைத் திருமணம் செய்து, அன்றிலிருந்து ஜெயவர்த்தன என்ற பெயரைப் அந்த குடும்பத்தனர் பெற்றனர். இந்தியாவில் இருந்து இலங்கையின் தென்மேற்கு கரையோரப் பகுதிகளுக்கு டச்சுக்காரர்கள் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ்வாறான குடியேற்றம் நடந்து வந்தது. எனவே, இந்த முன்னோடிகளுடன் ஒரு மூதாதையரைக் கண்டறிவது, நிச்சயமாக, அசாதாரணமானது; இதுவே  பண்டாரநாயக்காக்களுடனும் ஜெயவர்த்தனாக்களுடனும் காணப்படும் ஒரு வித்தியாசமாகும், என்றாலும் அவருடைய முதல் அறியப்பட்ட மூதாதையர் தென்னிந்தியாவிலிருந்து வந்தவரே ஆகும். ஆனால் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில். டான் அட்ரியனுக்கு, சமீபத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மூதாதையர் இருந்தார், ஆனால் அவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் வரலாற்றின் மேடையில் தோன்றிய நேரத்தில் அவரது குடும்பத்தினர் எல்லோரும் ‘சிங்களமயமாக்கல்’  செய்யப்பட்டுவிட்டனர். 

இப்போது கொழும்பு பகுதியில் குவிந்துள்ள இலங்கையின் செட்டி சமூகம் பெரும்பாலும் தமிழ் பேசும் சமூகமாக, திருநெல்வேலியில் இருந்து இலங்கைத் தீவில், காலனித்துவ போர்த்துகீசிய ஆட்சியின் போது குடியேறி பின் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. எனவே முதலில்  தமிழ் இனமாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இன்று அவர்கள் ஒரு தனி அடையாளத்தை கோருகின்றனர் அல்லது சிங்களவர்களுடன் இணைகிறார்கள். இந்த சமூகத்தின் ஒரு முக்கிய உறுப்பினர் சைமன் கேசி செட்டி, ஒரு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் சட்ட சபையில் தீவின் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதியும் ஆவார். 

ஆனால் இதற்கு நேர்மாறாக, அதே பரம்பரையில் உதித்து, ‘சிங்களமயமாக்கப்பட்ட'  21ஆம் நூற்றாண்டின் செட்டி அரசியல்வாதியான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, 2007ல் கொழும்பில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தியத்துடன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளரை பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுவது போன்ற தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஹெட்டியராச்சிகே (‘செட்டிகளின் தலைவர்’ என்று பொருள்) என்ற தனிப்பட்ட பெயர்களைக் கொண்ட சிங்களவர்கள் உண்மையில் முன்னைய தமிழ்ச் செட்டிகள் ஆகும். 

சமீபகாலமாக சிங்களமயமாக்கப்பட்ட தென்னிந்தியர்கள் பலர் இந்த நாட்களில் தமிழ் விரோதிகளாக மாறி, சிங்களவர்களுடன் கலந்துவிட்டார்கள், இன்று இந்த மக்கள் சிங்களவர்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார்கள், ஒருவேளை அவர்களின் திராவிட வம்சாவளியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம், எனவே இன்றைய பிரச்சினைகளுக்கு அவர்களின் முன்னோர்களின் முன்னோர்களை பலிகடாவாக நாம் கருத முடியாது. 

சிங்கள மன்னருக்கும் மதுரே நாயக்க இளவரசிக்கும் இடையேயான திருமணத்தின் விளைவாக கண்டியின் மதுரை நாயக்கர்கள் தோன்றினார்கள், கடைசி சிங்கள மன்னர் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சின்ஹா [Sri veera parakrama Narendra Sinha] 1739 இல் தனது ராணியிடமிருந்து சந்ததி இல்லாமல் இறந்தார். இவரது அரசி மதுரை நாயக்க இளவரசி ஆகும். எனவே மதுரை நாயக்க இளவரசியான அவரின் மனைவி, தன் சகோதரரை அரசனாக்கினார். மேலும் அவர் ஸ்ரீ விஜய ராஜ சின்ஹா [Sri Vijaya Raja Sinha] என்ற பட்டத்தின் கீழ் முடிசூட்டப்பட்டார். இவ்வாறு, ஸ்ரீ விஜய இராஜசிங்க அரியணைக்கு பிறகு கண்டி நாயக்கர் வரிசையை நிறுவினர் என்பதும் வரலாறு ஆகும் 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?"

Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese. The Alagakkonaras, for example, who founded the Kingdom of Kotte and fought the Tamil Jaffna Kingdom were of Malayali origin but were assimilated with the Sinhalese. The last several kings of the Kingdom of Kandy were the Tamil-speaking Nayaks from Madurai who were of Telugu origin. Apparently the language of their court was Tamil. 

The man who started the ethnic conflict in the post- independent Sri Lanka was S.W.R.D. Bandaranaike with his imposition of Sinhala Only Act in 1956. Rather than being of Telugu origin, it seems his forefather was a Tamil Chetti (a trading caste) from Tamil Nadu.

The ancestry of the Dias Bandaranaikes describe how an Indian officer ‘of high standing’ -a descendant of an Indian Chetty community, who migrated in the 16th century, serving under the Kings of Kandy and bearing the name Neela- Perumal, was made high priest of the Temple of God Saman and commanded to take the name of ‘Nayaka Pandaram’ in 1454, meaning chief record- keeper.

Saman (also called Sumana, Sumana Saman, Sinhala: සුමන සමන් දෙවි) is a deity, subject to local and indigenous belief and worship in Sri Lanka. The name Saman means "good minded". His character is of historical significance for the Sinhalese people and veneration especially to all the Buddhists. Maha Sumana Saman Deviraja (Greater Lord of Gods Sumana Saman) is depicted crowned and bejeweled, holding a lotus flower in his right or left hand and accompanied by a white elephant.

 “For convenience in usage, it became ‘Pandara Nayake’, with time, the P was substituted with the locally palatable B; thus ‘BandaraNayake’, later evolved as Bandaranayake. The Pandarams of India are Brahmins and keepers of Court and family records.”

Perumal is a Tamil name of Vishnu. The title Bandara used by the Kandyan nobility comes from the Tamil word pandaram, which according to the dictionary definition refers to a community of Sudra caste priests in South India and Sri Lanka. 

According to Gananath Obeyesekere, the Pandarams were generally of Vellalar caste origin and were devotees of Siva and Skanda who migrated to Sri Lanka from South India in two waves in 13th and 14th century and assimilated with the Sinhalese.
 


Bandaranaike’s wealthy forefathers were opportunists who jumped from one religion to another, from Hinduism to Buddhism to various sects of Christianity, in order to curry favours with the different ruling powers. Bandaranaike himself was a political opportunist who converted to Buddhism from Christianity and whipped up Sinhalese-Buddhist nationalism by spearheading the Sinhala Only Movement, although as an English educated elite he wasn’t fluent in Sinhala himself.

J.R. Jayewardene, also a Christian convert to Buddhism, was another Sinhalese politician who was responsible for aggravating Tamil grievances as his rule saw the anti-Tamil pogroms of 1977, 1981 and 1983, the burning of the Jaffna public Library and the start of the civil war. 

It appears he too had a South Indian, more specifically Tamil ancestry. Jayewardene’s great-grandfather was called Tambi Mudaliyar. Tambi or Thambi is a Tamil word for younger brother (also Prabhakaran’s nickname) and it’s also used as names by some Tamil Muslims. Mudaliyar is a Tamil caste title which was also applied to some Sinhalese elite. 

Tambi Mudaliyar was a willing servant of the colonialists, working as a spy for the Dutch against the British and then for the British against the Dutch. He then became spy for the British against the Sinhalese Kingdom of Kandy and assisted his white masters in their conquest of the Kandy, from which he amassed a great fortune and established one of the most wealthiest and influential families in Ceylon. 

For his treachery some Sinhalese denounce him as a traitor while the British eulogised him for his loyalty, which appeared in a tribute after his death in the official Gazette of the British colonial government on 15 May 1830. This Gazette also reveals the Tamil ancestry of Tambi Mudaliyar (also known as Don Adrian Wijesinghe Jayewardene), 

as summarised by K. M. De Silva and William Howard Wriggins:

"He was descended from the Chetty community, a community of traders, which had emigrated from the Coromandel coast in India in the early years of the Dutch rule in the mid-17th century and settled in the vicinity of Colombo. Two or three generations before the birth of Don Adrian a male of his family had married a Sinhalese by the name of Jayewardene from the village of Welgama near Hanvalla some 20 miles from Colombo and from that time took on the name of Jayewardene. Immigration from India to the south-west coastal regions of Sri Lanka had gone on for several centuries before the Dutch arrived and the process continued under their rule. To locate an ancestor with these antecedents is, of course, unusual; it is a distinction the Jayewardenes share with the Bandaranaikes whose first known ancestor also hailed from South India, but in the early 16th century. Don Adrian, then, had one ancestor of recent Indian origin, but by the time he himself appears on the stage of Sri Lanka's history at the tail-end of the 18th century the process of ‘Sinhalisation’ of his family had been completed."

It’s interesting to note that not too long ago the Chetti community of Sri Lanka, now concentrated in Colombo area, were for the most part a Tamil-speaking community who were identified as a Tamil caste as their ancestors had settled in the island from Tirunelveli in Tamil Nadu during the colonial Portuguese rule and converted to Christianity; but today they claim a separate identity or are assimilated with the Sinhalese. A prominent member of this community was Simon Casie Chetty, a distinguished Tamil scholar and a politician who represented the island’s Tamils at the Legislative Council of Ceylon in the 19th century. In contrast, 21st century Chetti politician Jeyaraj Fernandopulle took an anti-Tamil position, such as justifying the forced eviction of Tamils from Colombo in 2007 and accusing the United Nation’s Under-Secretary-General for Humanitarian Affairs of being a terrorist . Sinhalese with personal names Hettiarachige (meaning ‘chief of the Chettis’) are assimilated Tamil Chettis.

Many recently Sinhalized South Indians have become so anti-Tamil these days and claim a fake 2000+ years old Aryan ancestry. They had mixed with the Sinhalese and today these people identify as Sinhalese only, possibly with no awareness of their Dravidian origins, hence it’s wrong to scapegoat the ancestries of their forefathers for today’s problems.

The Madurai nayaks of kandy is a result of marriage between sinhalese king and madurei nayak princess, Last sinhalese king sri veera parakrama Narendra Sinha, died in 1739 without an offspring from his queen. His queen was a Madurai Nayak princess. Narendra Sinha's had nominated a brother of his Madura queen to succeed him. And he was crowned under the assumed title of Sri Vijaya Raja Sinha. Thus, Sri Vijaya Rajasinha succeeded the throne and established the Kandy Nayak line.

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

464781476_10226725697991350_7667630391722507067_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Lf560VopJdcQ7kNvgFjYl22&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ADgBGpGsIkwL9x4RICS0d19&oh=00_AYCn209uFLz2xmJ81rvxDI4g3nFDPfhDMv89EE-T3kcTAw&oe=67228099  464622714_10226725698191355_2762547895936505350_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=DKWCsFYl5XsQ7kNvgGuz7Zf&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ADgBGpGsIkwL9x4RICS0d19&oh=00_AYAIFw2hcN9JX0rkOakdtlwvhrIuV-wzoZkD_P_HceU2ew&oe=67225BFA

 

 

இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?

3 weeks 5 days ago

இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?
இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?

– கருணாகரன் –

பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்? என்ற கேள்வியும் விவாதமும் தமிழ் மக்களிடத்திலே வழமையை விடக் கூடுதலாகக் காணப்படுகிறது. சனங்கள் சற்றுச் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். மாற்றங்களை விரும்புகிறார்கள்.  பழைய தலைகளை விலக்க வேண்டும் என்ற விருப்பம் சற்றுக் கூடுதலாகத் தெரிகிறது. 

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மெய்யாகவே மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்காகச் செயற்படக் கூடியவர்களையும் நேர்மையானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று பலரும்  எண்ணுகிறார்கள். இதனால் இந்தத் தேர்தற் களம் முற்றிலும் வேறாகக் காட்சியளிக்கிறது. 

இதுவரையிலும் தமிழ் மக்களிடம் ஒரு சூத்திரமிருந்தது. பெருந்திரளானோர் எந்தக் கேள்வியுமில்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அதாவது வீட்டுச் சின்னத்துக்கு  வாக்களிப்பார்கள். இவர்கள் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்திச் சிந்திப்போராகும். அல்லது அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டோர் எனலாம். இன்னொரு விதமாகச் சொன்னால் இவர்கள், தமிழரசுக் கட்சியின், விடுதலைப் புலிகளின் அரசியலைப் பின்தொடர்கின்றவர்களாக இருந்தனர்.

இதனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, தமக்குரிய சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருந்தனர்.  என்பதால்தான்,‘நாம் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதற்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பர்‘ என்று கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. சம்மந்தன் திமிரோடு (மக்களை மலினப்படுத்தி)  சொல்லக்கூடியதாக இருந்தது. உண்மையும் அதுதான். அதனால்தான் எந்தக் கேள்வியுமில்லாமல் பெருந்திரளான தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு – வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து வந்தனர். 

மறு  தொகுதியினர் வடக்கில் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன், விஜயகலா போன்றோருக்கு ஆதரவளிப்பவர்கள். கிழக்கில் சந்திரகாந்தன், வியாழேந்திரன் போன்றோரை ஆதரிப்பர். இவர்கள் அபிவிருத்தி, முன்னேற்றம் போன்றவற்றை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கும் தரப்பினராகும். அதற்காக இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள்  மீதான ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்களோ, தமிழ் மக்களுக்கான உரிமையை மறுப்பவர்களோ இல்லை. 

ஆனால் இவர்களும் தமது ஆதரவின் பெறுமானத்தைக் குறித்தும் நியாயத்தைக் குறித்தும் சிந்திப்பதில்லை.  அதை மீள்பரிசீலனை செய்வதில்லை. 

இந்த அரசியலின் விளைவுகள், பெறுமானங்கள், முறைமைகளைக் குறித்து பேசுவதோ விவாதிப்பதோ கிடையாது. அப்படி விவாதிக்க முற்பட்டால், தமிழ்த்தேசியத் தரப்பினரைப்போல, அதை ஏற்றுக் கொள்ளாமல், விமர்சனங்களை முன்வைப்போரை அவமதித்து, நிராகரித்து வந்தனர். பதிலாக ஏதோ நடக்கிறது. கிடைப்பது லாபம் என்ற அளவில் தமது அரசியலை மேற்கொண்டு வந்தனர். தம்மைச் சற்று நிதானப்படுத்திச் சிந்தித்திருந்தால், இந்த அரசியலுக்கான அடித்தளத்தையும் முறைமை ஒன்றையும் உருவாக்கியிருக்க முடியும். அதைக் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை. 

ஆக இரண்டு தரப்புகளும் தமக்குரிய (தாம் உருவாக்கிய அல்லது அப்படி அமைந்த) Formula வின்படி தமது அரசியலைச் செய்து வந்தனர். அதற்கேற்ற வகையில் வாக்காளர்களும்  பிரிந்திருந்ததால் அரச  எதிர்ப்புத் தரப்புக்கும் இடமிருந்தது. அரச ஆதரவுத் தரப்புக்கும் வாய்ப்பிருந்தது. அவரவர் தத்தமது தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டுமிருந்தனர். இதற்குத் தோதாக ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய அரசியலுக்கு நிறமூட்டிக் கொண்டிருந்தனர். ஒரு தரப்பு தமிழ்த்தேசியம் என. மறுதரப்பு அபிவிருத்தி அரசியல் என்று.

இப்படி இரண்டு பிரிகோடுகளில் தமிழ் அரசியல் பயணித்துக் கொண்டிருந்ததால் இரண்டு வகையான அரசியலாளர்களும் தமக்குரிய இடம் எப்படியோ உறுதியாக உண்டு என்ற நம்பிக்கையுடனிருந்தனர். சிலவேளை இதில் சிறிய அளவிலான அசைவுகள் நடக்கும். அப்படி நடக்கும்போது டக்களஸ் தேவானந்தா ஒன்றோ இரண்டோ கூடுதலான ஆசனங்களைப் பெறுவார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்று இரண்டு ஆசனங்களை இழக்க நேரிடும். இன்னொரு வகையில் சொல்வதென்றால், அரச ஆதரவுத் தரப்பு ஒன்றிரண்டு ஆசனங்களைக் கூடுதலாகப் பெறும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றிரண்டு ஆசனங்களை இழக்கும். ஆனால், பெரிய மாற்றங்கள் ஏற்படாது. 

இந்தத் தடவை இந்தச் சூத்திரத்துக்கு அடி விழுந்துள்ளது. இப்போதுள்ள களநிலவரத்தின்படி வடக்கிலும் கிழக்கிலும் வழமைக்கு மாறான வகையிலான தேர்தல் முடிவுகளே வரப்போகின்றன. ஏனென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உடைந்து நொறுங்கி இல்லாமற்போய் விட்டது. பதிலாக ‘தமிழ்த்தேசியம்‘ என்ற அடையாளத்தோடு (மஞ்சள் – சிவப்பு நிறத்தில்) பல கட்சிகளும் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. இவற்றின் பெயரையெல்லாம் மனதில் வைத்திருப்பதற்குக் கடவுளாலும் முடியாது. சாத்தானாலும் இயலாது. எல்லாவற்றுக்கும் ஒரு அடைமொழியைப்போல முன்னொட்டில் ‘தமிழ்த்தேசியம்‘ என்ற சொல் மட்டும் உள்ளது. அந்தச் சொல்லையும் மஞ்சள் சிவப்பு நிறத்தையும் இணைத்துக் கொண்டால், தமிழ் மக்களுடைய அரசியல் சரியாகி விடும் என்று இவை நம்புகின்றன. தமிழ்ச்சனங்களை அந்தளவுக்கு மலினமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளன. இந்தக் குறைபாடு, தும்புத்தடியை நிறுத்தினாலும் தமிழ்மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொன்ன மூத்த தலைவரான சம்மந்தனிலிருந்து இன்றைய இளைய தலைமுறை உறுப்பினர்கள் வரையில் தொடர்கிறது. 

இதில் எந்தத் தரப்பும் மாறுதலைக் கொள்ளவில்லை என்பதால்  எந்தத் தரப்பை ஆதரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், எல்லாமே தமிழ்த்தேசியம் எனவும் மஞ்சள் – சிவப்பு நிறத்திலும்தான் வந்து முன்னிற்கின்றனவே தவிர, தாம் எந்த அடிப்படையில் ஏனையவற்றிலிருந்து வேறுபடுகிறோம்? தம்முடைய தனித்துவம் என்ன? எதிர்கால அரசியலை எந்த அடிப்படையில் முன்னெடுப்போம்? அதற்கான பொறிமுறைகளும் வழிமுறையும் என்ன? கடந்த காலத் தவறுகளுக்கும் பின்னடைவுகளுக்குமான காரணங்களும் பாத்திரவாளிகளும் யார்? அதற்கான பொறுப்பை ஏற்பது எவர்? கடந்த காலத் தோல்விகளிலிருந்து மீள்வது எப்படி? புதிய அரசியலுக்கான உத்தரவாதம் என்ன? அதைச் செயற்படுத்தும் கால அட்டவணை எப்படியானது? என  எதைப்பற்றியும் எந்தக் கட்சியும் எந்தக் குழுவும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. 

தமிழ்த்தேசியக் கட்சிகளில் அல்லது மஞ்சள் – சிவப்புக் குழுக்களில் பெரியளவில் இருப்பவை நான்காகும். ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி. இது வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறது. அடுத்தது, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA). இது சங்குச் சின்னத்தில் நிற்கிறது. அடுத்தது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ். இது காங்கிஸின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. (பேசாமல் காங்கிரஸின் பேரிலேயே நிற்கலாம். இடையில் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அது அப்படித்தான்… ‘சும்மா ஒரு இதுக்குத்தான்‘ அப்படிச் சொல்வது. அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து படியுங்கள்). அடுத்தது, தமிழரசுக் கட்சியிலிருந்து தேர்தலுக்காகப் பிரிந்தவர்கள், ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தோடு கூட்டிணைந்து நிற்கிறார்கள். இவர்கள் கையில் ஏந்தியிருப்பது மாம்பழமாகும். ஐந்தாவதாகவும் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் பின்னாளில் சாராயத் தவறணை விடயத்தில் சிக்கியிருப்பவருமான விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி. இதனுடைய சின்னம்,மான். 

இப்படிப் பல அணிகளாகச் சிதறியிருக்கும் தமிழ்த்தேசியத் தரப்புகளின் வாக்குகளை எப்படி ஒன்று திரட்டுவது? என்ற கேள்வியும் கவலையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது. இந்தக் கவலைக்கு அவர்களும் பொறுப்பாளிகளே!  ஏனென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்மோதல்களைக் கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருந்ததன் விளைவுகளையே இப்போது நேரில் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. இதனால் முன்னர் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுச் சின்னத்துக்குக் கீறிய நிலைபோய், இப்போது எந்தச் சின்னத்தைத் தேர்வது? யாரை ஆதரிப்பது? எதை நம்புவது என்று தெருவில் நின்று யோசிக்க வேண்டி நிலை வந்துள்ளது.  

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தமக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என ஒவ்வொரு தரப்பும் மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றன. சங்குக் கூட்டணி சொல்கிறது, தாம் எப்படியும் 10 இடங்களைக் கைப்பற்றுவோம் என. தமிழரசுக் கட்சி பிரகடனப்படுத்துகிறது தனக்கு எப்படியும் 12 இடங்கள் கிடைக்கும் என. சைக்கள் கம்பனி சொல்கிறது, தாமே கூடுதலான இடங்களைக் கைப்பற்றுவோம் என. அப்படிப் பார்தால், அவர்களுக்கு எப்படியும் 14 இடங்களுக்கு மேல் கிடைக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா என்று உங்கள் உள்மனது கேட்கிறது. ஏன், வாய்விட்டே நீங்கள் சிரிக்கிறீர்கள் என்பதும் தெரியும். ஆனால் இவர்கள் இப்படிக் கணக்குப் பார்த்தும் கணக்கு விட்டும் வந்ததன் பழக்கமே இப்போதும் இப்படிச் சொல்வதற்குக் காரணமாகும். 

அதனால்தான் சனங்களை மடையர்களாக்கியோ என்னவோ எப்படியாவது தமக்கான வாக்குகளைக் கவர்ந்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றன, அனைத்துக் கட்சிகளும். இதற்காகச் சில கட்சிகள், தனிநபர்களை (சுமந்திரன் போன்றோரை) குறி  வைத்துத் தாக்குகின்றன. பொதுவாக அனைத்துத் தரப்பும் தம்மை மாற்றுக்குறையாத தங்கம் எனவும் மற்றவர்கள் போலி என்றும் காட்ட முற்படுகின்றன.

இது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவுகளைச் சமூகவலைத்தளங்கள் தொடக்கம் மக்களின் பொது உரையாடல்வெளிகளில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. தமிழ்த்தேசியத் தலைமைகளையும் கட்சிகளையும் வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளப் பதிவுகளே அதிகமாகப் பொது வெளியில் காணப்படுகின்றன. 

இந்தச் சூழலில், தமது அடுத்த தெரிவு என்ன? எந்தத் தரப்பை அல்லது யாரை ஆதரிக்கலாம் என்ற கேள்வியோடு மக்கள் நிற்கிறார்கள். 

இந்தக் கேள்வியே அவர்களை விவாதத்துக்குத் தூண்டியிருக்கிறது. அவர்கள் இரண்டு வகையில் பிரதானமாகச் சிந்திக்கின்றனர். 

1.    தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த உடைவையும் சிதைவையும் பார்த்துச் சினமடைந்திருக்கின்றனர், கவலை கொண்டுள்ளனர். இதனால்  ‘தமிழ் மக்கள் ஒன்றாக நிற்க வேண்டும். தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும். தேசமாகத் திரள வேண்டும். தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும்‘ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, அதற்கு மாறாகச் செயற்படும் (நாடகமாடும்) கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். இவர்களுடைய வாக்குகள் வழமைக்கு மாறாக எதிர்த்தரப்புகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. அதற்காக டள்ளஸ் தேவானந்தா, பிள்ளையார் போன்றோருக்கு அவை கிடைக்காது. மாறாக அனுரவின் NPP க்கும், சஜித்தின் SJB பிக்கும் பிரியப்போகின்றன. 

இதற்கொரு காரணமும் உண்டு. இதில் ஒரு சாரார் யோசிக்கின்றனர்,  இப்போதுள்ள சூழலில் NPP க்கு ஆதரவளித்தால், அது ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என. 

ஆனால், இன்னொரு சாரார் இதை மறுத்து, பேராதரவுடன் NPP அதிகாரத்தைக் கைப்பற்றினால், அது நாட்டுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரானதாகவே மாறும். ஆகவே, ஒரு வலுவான எதிர்த்தரப்பு – எதிர்க்கூட்டணி அல்லது கூட்டரசாங்கம் ஒன்று அமையக் கூடியவகையில் தம்முடைய ஆதரவு இருக்க வேண்டும். ஜனநாயக வெளி பாதுகாக்கப்பட வேண்டும் என. இவர்கள் சஜித்தின் SJB ஐ ஆதரிப்பதற்கு முற்படுவர். இப்போதுள்ள சூழலும் அப்படித்தான் உள்ளது. 

2.     அரச தரப்பை அனுசரித்து நிற்கும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோருக்கான ஆதரவுத் தளம் சற்று வீழ்ச்சியடைகிறது. இவர்களை NPP ஏற்றுக் கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் இந்தச் சரிவு எனலாம்.  

ஆகவே இவற்றின் விளைவுகள் நிச்சயமாகத் தேர்தல் முடிவுகளில் நிச்சயமாகப் பிரதிபலிக்கும்.  இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளன, இதை அறிந்து கொள்வதற்கு.

 

https://arangamnews.com/?p=11365

தேசிய மக்கள் சக்தியின் புலம்பெயர் தோழர்களுடன் சந்திப்பு -Oct 27

3 weeks 5 days ago

*நிகழ்ச்சி நிரல்*

6.30 ஆரம்பம்,அறிமுகம் (9am Toronto 2 pm London UK)

6.35 கனடா அமைப்பாளர் உரை

6.45 கருத்து பகிர்வு *Dr.அருள்கோகிலன்* தேசியபுத்திஜீவிகள் அமைப்பு வடமாகாணம்

7.30 கேள்விபதில்கள்   

8.30 நிறைவுரை.

Topic: புலம்பெயர் தோழர்களுடன் விசேட கூட்டம்

Time: Oct 27, 2024 06:00 PM Colombo

Join Zoom Meeting

https://gurus-club.zoom.us/j/81920505564?pwd=8Q3PB3qGPqPpqnqGOPq9CvzWJ4B6br.1

Meeting ID: 819 2050 5564

Passcode: 271786

Checked
Thu, 11/21/2024 - 13:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed