அரசியல் அலசல்

'விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதளஉலககுழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன"- முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா

2 months ago

Published By: Rajeeban

04 Mar, 2025 | 12:01 PM

image

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் தளபதி  மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்

டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

கேள்வி- யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையை நாங்கள் கருத்தில் கொள்வோம்இயுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்தோம் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.

தற்போது சிறிய ரக ஆயுதங்களை பலர் பயன்படுத்துவது போல உள்ளது?

பதில்: யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என நினைத்தோம், ஆனால் எனது பதில் இல்லை என்பதே.

யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான அடிப்படை காரணங்களை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வடக்குகிழக்கில் சில பிரச்சினைகள் உள்ளன, அவை அனைத்து அரசியல் விவகாரங்கள். ஆனால் அவற்றிற்கான பதில் இராணுவரீதியானது.

ஆனால் பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது அதற்கு தீர்வை காணவேண்டும்.

சுமார் 30,000 பயங்கரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் பலர் கொல்லப்பட்டனர், பலர் சரணடைந்தனர் ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது?

அவர்களிடம் ஆர்பிஜிக்கள் இருந்தன, விமானங்களை நோக்கி ஏவுகணைகளை அவர்கள் ஏவியுள்ளனர்.

அவர்களிடம் 30,000 சிறிய ஆயுதங்கள் இருந்தன.

LTTE-arms.jpg

இரண்டு குழுக்கள் இருந்தன, கருணா குழுவிடம் கூட ஆயுதங்கள் இருந்தது.

ஆனால் இந்த ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்கவில்லை. அந்த ஆயுதங்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் எந்த அமைப்பும் அந்த ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன? எத்தனை ஆயுதங்களை ஒப்படைத்தனர்? என்ற விபரங்கள் இல்லை.

இது குறித்து எந்த ஆராய்ச்சியும் இல்லை! இவ்வாறான  ஆராய்ச்சிகளில் நாங்கள் பலவீனமானவர்களாக உள்ளோம்.

இதன் காரணமாக இந்த ஆயுதங்கள் எங்கும் உள்ளன, எல்லா இடங்களிலும் இவற்றை பயன்படுத்துகின்றனர்.

கொலை செய்வதற்கு ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர், பிஸ்டல்களும் உள்ளன. இந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு எந்த உரிய திட்டங்களையும் அரசாங்கங்கள் முன்னெடுக்கவில்லை.

ஆகவே இங்கு பாக்கிஸ்தானின் பெசாவர், ஆப்கானிஸ்தான் போன்ற  நிலை காணப்படுகின்றது.

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் என்றால் பிரச்சினையில்லை, ஆனால் அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்  ஏற்படலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவ்வாறான ஒன்று இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

எங்கள் தேசியபுலனாய்வு பிரிவுகள் பலவீனமானவையாக உள்ளன.

அமெரிக்கா, நியுசிலாந்தில் அல்லது மத்திய கிழக்கில் சம்பவம் ஒன்று இடம்பெற்றால் அதனால் எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா என நாங்கள் ஆராயவேண்டும்.

நியுசிலாந்து தேவாலய தாக்குதல் குறித்து எங்கள் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்திருக்கவேண்டும்.

கேள்வி - தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் உடையவை, இராணுவத்தினருடையவை இல்லை என நீங்கள் எவ்வளவு உறுதியாக தெரிவிக்கின்றீர்கள்?

பதில்- இராணுவத்தினரிடமிருந்து சில ஆயுதங்களை கொண்டு சென்றனர். ஆனால் அது குறித்து என்னிடம் போதிய விபரங்கள் இல்லை.

விடுதலைப்புலிகள் இந்த ஆயுதங்களை பயன்படுத்தப்போவதில்லை இது உறுதியான விடயம்.

இலங்கை ஒரு சிறிய நாடு எவராலும் தெற்கு வடக்கு கிழக்கிற்கு இடையில் 8 மணித்தியாலங்களிற்குள் பயணம் செய்ய முடியும். விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களிற்கு கரங்களை சென்றடைந்துள்ளன.

இவை அனைத்தையும் பணத்திற்காக செய்துள்ளனர்.

கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்கள் தேசிய பாதுகாப்பின் மீது விழுந்த பெரிய அடியாகும்.ஆனால் இந்த தாக்குதலிற்கு முன்னர்  எங்களிற்கு இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல்களும் அறிக்கைகளும் கிடைத்துள்ளன. எவரும் இதனை கருத்திலெடுத்து செயற்படவில்லை. அரச புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் குறித்த உங்களின் அவதானிப்புகள் என்ன?

பதில் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளி அந்தவேளை ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் இல்லை.

ஏனென்றால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதால் அவர் முப்படைகளின் தளபதியாக பதவிவகித்தார், பாதுகாப்பு அமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் தேசிய பாதுகாப்பு பேரவையின் தலைவர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்தார்.

அரசமைப்பின்படி அவரே நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பு.

இதன் காரணமாக எனக்கு தெரியாது என தெரிவித்துவிட்டு அவரால் தப்ப முடியாது.

ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறும்போது அவருக்கு ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை இல்லாமல் போய்விடும்.

அவர் என்ன செய்திருக்கின்றார் என்றால் கொல்லப்பட்ட அந்தமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அவர் குற்றவாளி என தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் நஸ்ட ஈட்டை மாத்திரம் வழங்க உத்தரவிட்டது.

ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக காணப்படவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை அவர் சிங்கப்பூரிலிருந்தார், 22 மில்லியன் மக்களின் உயிருக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர் உடனடியாக நாடு திரும்பவில்லை.

விமானப்பயணங்களை தாமதமாக்கிவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். இது அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

https://www.virakesari.lk/article/208221

உக்ரைன் யுத்தம் - சமாதான தேவதையும் பிசாசுகளும்!

2 months ago

சமாதான தேவதையும் பிசாசுகளும்!

sudumanal

கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு.

இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளிலும் காலங்காலமாக தொடர்கிற ஒன்று. இந்த இரட்டைத்தன்மை வாய்ந்த இராஜதந்திர வடிவத்தின் சம்பிரதாய மீறலானது வெளிப்படையில் செலன்ஸ்கியை அவமானப்படுத்தியதாக எம்மை வந்தடைகிறது. கணவன் மனைவி சண்டையை வீதிக்கு கொண்டுவருவது போன்ற செயல்தான் அன்று நடந்தது. இது திட்டமிடப்பட்டு ட்றம்ப் குழுவால் நிகழ்த்தப்பட்டதாகவே எனக்குப் படுகிறது.

இந்தக் கள்ளத்தனமான செயற்பாட்டை செலன்ஸ்கி ஓர் இராஜதந்திரியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் தவிர்த்திருக்க முடியும். அதே பாசாங்கை அவர் செய்திருக்கலாம். ஆனால் அவர் நேரடித்தன்மை அல்லது வெளிப்படைத்தன்மை வாய்ந்தவராக இருந்தார். போரில் நலிந்துபோய் செய்வதறியாது பரிதவிக்கும் ஒரு நாட்டுத் தலைவரின் உளவியல் அழுத்தத்தை நாம் புரிந்துகொண்டால், அவர் அவ்வாறு பேசத் தலைப்பட்டதையும் புரிந்துகொள்ளலாம். இந்த உளவியலை ஒரு கருவியாக ட்றம்ப் குழு பாவித்து உணர்ச்சிமயமான சூழலுக்குள் தள்ளினார்கள். அவரது உடை குறித்தும்கூட அங்கு நின்ற செய்தியாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) பிரஸ்தாபித்து, அது அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றது என்று முட்டாள்தனமாக சொல்லவும் செய்தார். இந்த ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்குள் செலன்ஸ்கி வீழ்ந்தார். ட்றம்ப் “உன்னிடம் துருப்புச் சீட்டு இல்லை. அது என்னிடமே இருக்கிறது” என சொன்னபோது, செலன்ஸ்கி அதை தனது நிலையில் நின்று புரிந்து, “இது துருப்புச் சீட்டு விளையாட்டல்ல. நான் சீரியஸாக பேசுகிறேன்” என அர்த்தப் பிறழ்வோடு சொல்ல நேர்ந்தது. அதை நாம் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.

ஐரோப்பாவில் நின்று வீரம் பேசிய பிரான்சின் மக்ரோனும் பிரித்தானியாவின் ஸரார்மரும் தனித்தனியாக ட்றம்பை சந்தித்தபோது சம்பிரதாய நடிப்பை செவ்வனே செய்துவிட்டுத்தான் வந்தார்கள். அடிக்கடி ஒவ்வொரு கோணத்தில் கையைப் பிடிப்பது, தோளில் தட்டுவது, தடவுவது, துடையில் தொட்டு கதை சொல்வது, வெகுளித்தனமாக இளிப்பது என அவர்கள் காட்டிய உடல்மொழி கேவலமாக இருந்தது. இது செலன்ஸ்கிக்கு வாய்க்கப் பெறவில்லை.

ஓவல் அலுவலக சந்திப்பிலிருந்து கோபத்தோடு வெளியேறிய செலன்ஸ்கியை அந்த சூடான வார்த்தைப் பரிமாறல்களின் ஈரம் காயுமுன்னர், பிரித்தானிய பிரதமர் ஸ்ராமர் அழைத்து கட்டியணைத்து வரவேற்றார். ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் கனடா தலைவர் ஆகியோருடனான ஒரு திடீர் சந்திப்பை இலண்டனில் நிகழ்த்திக் காட்டினார். “இந்தா பார் நீ உதாசீனப்படுத்திய செலன்ஸ்கியை நாங்கள் கௌரவித்துக் காட்டுகிறோம்” என ஒரு வீம்புச் செய்தியை ட்றம்ப் க்கு காட்ட வேண்டும் என்பது போல் அது இருந்தது.

அதைத் தாண்டிய பிரச்சினை என்னவென்றால் இந்த சுடுதண்ணிச் செயற்பாடானது செலன்ஸ்கியை இன்னொரு பொறியுள் விழ வைத்திருக்கிறது. ஒரு கையால் இராணுவ உதவிகளை கொடுத்தபடி, இன்னொரு கையால் சமாதான முயற்சி செய்யும் விநோதமான அணுகுமுறை ஸ்ராமரினதும் மக்ரோன் இனதும் திட்டமாக இருப்பது ஒரு முரண்நிலை செயற்பாடாகும். அத்தோடு சமாதானப் படை என்ற பெயரில் ஸ்ராமரும் மக்ரோனும் உக்ரைனுக்கு படை அனுப்ப துடியாய்த் துடிக்கிறார்கள். ஒரு நிழல் போரை நடத்தி உக்ரைனை இந்தப் பேரழிவுக்குள் விட்டுவிட்டவர்கள் அவர்கள்!. உக்ரைனுக்கு படையனுப்பி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்நிபந்தனையாக சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு ஐநா என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. இவர்கள் நினைப்பதுதான் சர்வதேச விதிகள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். ஐநா அனுப்பிய அப்படியான படைகள் பிரச்சினைக்குள் சிக்கிய ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு செக்குமாடாய் செயற்பட்டது இன்னொரு வரலாறு. உருப்படியாக எதுவும் நடந்ததில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அவற்றால் பண்பாட்டு ரீதியில் பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது.

அத்தோடு சமாதானப்படை அனுப்பும் முயற்சியை ரசியா நேற்றோவின் விஸ்தரிப்புவாதமாக எடுத்துக் கொள்ளவே செய்யும். இது சமாதானத்தை கேள்விக் குறியில் நிறுத்திவிடும். சமாதானம் என்பது இப் பிரச்சினையின் மூலவேர்களை கண்டறிந்து அதை களைவதில்தான் நிலைத்து நிற்கும். ஐரோப்பாவின் செயற்பாடு இதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சமாதானம் அல்ல முக்கியம். “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்ற தமது இலக்கை முடிந்தவரை உக்ரைன் மக்களின் சாம்பலிலிருந்தாவது உயிர்ப்பித்து அடையத் துடிப்பதுதான்.

“ரசியா சோவியத் யூனிய சாம்ராச்சியத்தை மீண்டும் நிறுவத் துடிக்கிறது. அது ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அழித்தொழிக்கக் கூடியது. உக்ரைனின் போராட்டமானது எங்களுக்கும் (ஐரோப்பாவுக்கும்) சேர்த்த போராட்டம்தான்” என அவர்கள் மக்களின் மூளைக்குள் கட்டியெழுப்பத் துடிக்கும் கதையாடலில் உண்மையில்லை என்பது இந்தத் தலைவர்களுக்குத் தெரியும். இதற்கு புட்டின் போர் ஆரம்பித்தபோதே பதில் கூறியிருந்தார். “சோவியத் இன் அழிவு குறித்து கவலைப்படாதவருக்கு இதயம் இல்லை. சோவியத் மீண்டும் உருவாகும் என சொல்பவர்களுக்கு மூளை இல்லை” என்றார். சோவியத் இன் அழிவு 1990 இலிருந்து அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை நிறுவியது. எதிர்க் கடை இல்லாத வியாபாரமாய் அடுத்தடுத்து அமெரிக்கா போர்களை உற்பத்திசெய்து விற்றது. இவைதான் இந்தக் காலப் பகுதியில் நடந்த துயர நிகழ்வுகள்.

இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இறைத்த இராணுவ உதவிகளானது போரில் ரசியாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனபோதும் கூட, இப்போ அமெரிக்கா இல்லாத இந்த கூட்டணியால் என்னத்தை பிடுங்கிவிட முடியும். அது அவர்களுக்குத் தெரியாததல்ல. இது செலன்ஸ்கிக்கு தெரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. அன்றைய இலண்டன் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அரைவாசி நாடுகளுக்கு மேல் பங்குபற்றவில்லை. அநேகமும் அந்த நாடுகள் ஏழை கிழக்கு ஐரோப்பிய நாடுகள். ஹங்கேரியின் பிரதமர் விக்ரன் ஓவன் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் “போர் வெறியர்கள்” என பேட்டியொன்றில் மிக அண்மையில் சொல்லியிருக்கிறார். இத்தாலி பிரதமர் மெலோனி அவர்கள் ட்றம்ப் க்கு ஆதரவாக இருக்கிறார். ஜேர்மனி சமாதானப் படை அனுப்ப தயங்குகிறது.

இவ்வாறாக, பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் பெரியண்ணன் இல்லாத நேற்றோவானது பலத்தை இழக்க நேர்ந்துள்ளது. (அது சிலவேளை ட்றம்ப் ஆட்சிக் காலத்தின் பின் மீண்டும் தடத்தில் ஓடலாம்). இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய நிதி 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைவிட அதிகமானதாகும்.

சுயத்தை அமெரிக்காவிடம் அடகுவைத்திருக்கும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதம் அரைவாசியும் அமெரிக்காவில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவுக்கென சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்ளை கூட இல்லை என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள். இந்த சீத்துவத்துள் தோல்வியடைந்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு (பிரித்தானியா உட்பட்ட) ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதாக செலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். தலைவர்கள் தேர்தலில் முளைத்து தேர்தலில் மறைபவர்கள். அவர்கள் வருவர், போவர். உக்ரைன் போரால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு. அந்த நாட்டின் இராணுவம் உட்பட மக்களின் உயிர்கள் திரும்ப முளைக்கப் போவதில்லை.

எல்லாமே சுரண்டல்தான். எரியிற நெருப்பில் எஞ்சியதை பிடுங்கிற எத்தனம். பெரும் கனிம வளங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிற உக்ரைனின் வளங்களை கொள்ளையிடும் நுட்பம் தெரிந்தவர்கள் அவர்கள். உதவியளிக்கிறோம் என சொல்லி உக்ரைனுக்குள் ஆயுதங்களை இறைத்துவிட்டு, இப்போ தாம் வழங்கிய உதவிக்கு உக்ரைனின் வளங்களை பிய்ச்சுப் பிடுங்கிற போட்டியில் இறங்கியிருக்கிறார்கள், அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும்!. இனி ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கிளம்பலாம். போரில் அழிவுண்ட ஒரு நாடு தன்னை கட்டியெழுப்ப அதன் கனிமவளங்கள் உதவும் என்ற ஓர் அறம்கூட இந்த நாடுகளிடம் கிடையாது. காலனிய காலத்திலிருந்து அவர்களின் மூளையைத் தொடரும் களவு மனநிலையும் அதிகாரத்துவ உளவியலும் நீங்கப் போவதில்லை என்பதை இது காட்டுகிறது.

பிரித்தானியா இப்போ பார்த்திருக்கும் வேலை இன்னமும் உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற வேலை. ரசியா மீதான பொருளாதாரத் தடை மூலமாக உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசிய சொத்துகளிலிருந்து (சர்வதேச விதிமுறைகளை மீறி) 2.84 பில்லியன் பவுண்ட்ஸ் இனை எடுத்து உக்ரைனுக்கு கடனாக வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. இது புதிய சிக்கல்களை உருவாக்க வல்லது. சமாதானப் பாதைக்கு குறுக்கே போடப்படுகிற பாறாங் கற்கள் இவை.

மக்ரோன் ட்றம்ப் இனை சந்தித்தபோதும் ரசியாவின் உறைநிலை சொத்துக் குறித்து தடுமாற்றத்துடனும் வெகுளித்தனமான அவரது உடல்மொழியுடனும் ஒன்றைச் சொன்னார். தாம் உறைநிலையில் வைத்திருக்கும் ரசியாவின் சொத்துக்களை தாம் எடுப்பது சர்வதேச விதிமுறைக்கு முரணானதுதான் என்றாலும், தாம் உக்ரைனுக்கு அளித்த உதவிக்காகவும் உக்ரைனை ரசியா அழித்ததற்காகவும் அதை தமக்கு விட்டுக் கொடுத்தால் super என சொன்னார். அதன்போதுதான் ட்றம் “ஓம் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கடை பணத்தை திருப்பி எடுக்கப் பார்க்கினம்.. எடுப்பினம்” என நையாண்டி செய்யும் உடல் மொழியில் சொன்னார். உடனே மக்ரோன் “இல்லையில்லை. நாம் உக்ரைனுக்கு கடனாகவும் அன்பளிப்பாகவும் உதவியாகவும் அதாகவும் இதாகவும்..” என சொற்களை தடுமாறவிட்டுக் கொண்டிருந்தார்.

உக்ரைனின் கனிமவள பேரத்தில் (அமெரிக்காவுடன்) பிரித்தானியாவும் பிரான்சும் பங்கெடுக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து ஐரோப்பா சார்பாக சமாதான வரைவு ஒன்றை தயாரித்து அதை நேரில் ட்றம்ப் உடன் கலந்தாலோசிக்க உள்ளோம் என்கிறார்கள். உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை தந்தால், தான் கையெழுத்திடுகிறேன் என செலன்ஸ்கி சொல்லியிருந்தார். ட்றம்ப் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.கனிமவள உடன்படிக்கையில் செலன்ஸ்கி கையெழுத்திடாமல் அமெரிக்காவிடமிருந்து தப்புவது கடினம். அதேபோல் அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு செலன்ஸ்கி பச்சைக் கொடி காட்டாவிட்டால் அவரின் பதவி கைமாறப்பட்டு செய்துமுடிக்கப்பட அமெரிக்க உளவுத்துறைக்கு நேரம் ஆகாது. அதனால் செலன்ஸ்கி “மீண்டும் வருகிறேன்” என ட்றம்புக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.

தலையை முந்நூற்றி அறுபது பாகையில் திருப்பித் திருப்பி பார்த்தாலும் இதற்குள் ஒளிந்திருக்கும் இரத்தப் பிசாசை கண்டறிய முடியாமல் இருக்கிறது. திரைமறைவில் என்னவெல்லாம் அரங்கேறுகிறதோ தெரியவில்லை.

இன்று இறைமை என்பது களவாடப்பட்டு அழகாக உச்சரிக்கப்படுகிற வார்த்தையாக உருமாறியிருக்கிறது. வலிமையற்ற நாடுகளுக்கு இறைமை என்பது சொல் அலங்காரம் மட்டுமே. ஐரோப்பாவே அமெரிக்காவை விட்டு இறைமையுள்ளதாக மாற வேண்டும் என குரல் எழுப்புகிறபோது, வலிமையற்ற நாடுகளுக்கு இது எம்மாத்திரம். வலிமையுள்ளவர்களை சார்ந்திருப்பதே வலிமையற்றவர்களின் இறைமை என்பதுதான் ஓரவஞ்சனையான அரசியல் நியதியாக உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் காப்பாற்ற உக்ரைனுக்குள் -அதாவது ரசிய எல்லைவரை- படையனுப்பத் துடிப்பவர்கள், ரசியா தனது பாதுகாப்பு உத்தரவாதம் கருதி உக்ரைன் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருக்கக் கோருவதை எந்த தர்க்கம் கொண்டு நிராகரிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு பிரான்ஸின் எல்லையோரம் ஏதாவதொரு நாட்டில் ரசியாவோ சீனாவோ படைத்தளம் அமைத்து ஏவுகணையை அல்லது அணுவாயுதத்தை நிற்பாட்டினால், பிரான்ஸ் அமைதியாக இருந்துவிடவா போகிறது. ஆக, போரற்ற உலகில்தான் சமாதானம் உயிர்வாழும். மனிதகுலம் மேம்படும். இது யதார்த்ததில் சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது. வலியவர்களின் உலகம் இது. அவர்களுக்கொரு நீதி. மற்றவர்க்கொரு நீதி. எனவே இதற்குள் இராஜதந்திரம் என்ற வெட்டியோடல்தான் ஜனநாயக மேக் அப். “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என எந்த நாடோ விடுதலை இயக்கமோ பயணிக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. உக்ரைனுக்கும் இது விதிவிலக்கல்ல. எதிர்கால உக்ரைனாக மாறும் அபாயமுள்ள தாய்வானுக்கும் இது விதிவிலக்கல்ல.

சோவியத் அழிவோடு வார்சோ ஒப்பந்த நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டபோதே “நேற்றோ” மரணப் படுக்கைக்குப் போயிருக்க வேண்டும். அதை உயிர்ப்பிக்க நேற்றோ விஸ்தரிப்பு தேவைப்பட்டது. கம்யூனிச பூச்சாண்டி கலைந்தபின் மற்றைய நாடுகள் மேல் அதிகாரம் செலுத்த அவர்கள் தொடர்ந்து காப்பாற்றிய இராணுவ அரக்கன்தான் நேற்றோ அமைப்பு. 1990 க்குப் பின்னான எல்லாப் போர்களையும் இந்த அரக்கனையும் அதன் சாரதியான அமெரிக்காவையும் தவிர்த்து வியாக்கியானப் படுத்தவே முடியாது.

எனவே இந்த மேற்குலகிடமிருந்து விடுபட்டு ரசியாவும் உக்ரைனும் -இருவரும் உடன்படக்கூடிய- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பிரச்சினையின் மூல வேர்களைக் களைந்து சமாதானத்தை நோக்கி இயன்றவரை முயற்சிப்பதுதான் சிறந்த வழி!

https://sudumanal.com/2025/03/04/சமாதான-தேவதையும்-போர்ப்/

அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?

2 months ago

அதிபர் டிரம்ப் - யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் ஊடகங்கள் முன்னிலையில் சூடான விவாதம் நடத்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்

  • பதவி, பிபிசி நிருபர்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஸெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் சரியாக நடத்தினார் என்று ரூபியோ சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அதிபர் டிரம்ப் மட்டுமல்ல, பைடனும் ஸெலன்ஸ்கி மீது வருத்தமடைந்ததாகவும், மக்கள் அதை மறந்துவிடக் கூடாது என்றும் ரூபியோ கூறினார்.

அக்டோபர் 2022 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான என்பிசி செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசும் போது கோபமடைந்தார் என்று கூறப்பட்டது.

தொலைபேசி உரையாடலின் போது அதிபர் பைடன், ஸெலென்ஸ்கிக்கு 1 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குவதாக கூறினார்.

ஆனால், யுக்ரேன் அதிபர் "இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை" என்று புகார் கூறத் தொடங்கியதால், பைடன் கோபமடைந்ததாகவும் அச்செய்தியில் கூறப்படுகிறது.

இதேபோல், ஜூலை 2023-ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், "யுக்ரேன் தனது சர்வதேச கூட்டாளிகள் அமேசான் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை" என்று எச்சரித்தார். "யுக்ரேன் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

அப்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்தார்.

டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு, வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த ஆறாவது வெளிநாட்டு விருந்தினராக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி இருந்தார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இந்த சுற்றுப்பயணங்கள் அனைத்தையும் ஸெலன்ஸ்கி சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், உலக ஊடகங்களின் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் அவருக்கு என்ன நடந்ததோ அதை அவர் தவிர்த்திருக்கலாம்.

ஆக்ரோஷமான ஸெலன்ஸ்கி

ஸெலென்ஸ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸெலன்ஸ்கி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியிலேயே கைவிட வேண்டியிருந்தது.

டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, யுக்ரேன் தொடர்பாக தனது நிலைப்பாடு பைடனின் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்ற செய்தியையும் வழங்கியிருந்தார்.

இஸ்ரேல் குறித்து அவர் கொடுத்த செய்தியும், அவர் எடுத்த நிலைப்பாடும் ஒன்றே.

ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியா தொடர்பாகவும் டிரம்ப் மிகத் தீவிரமாக இருந்தார். ஆனால் வெள்ளை மாளிகையில் ஸெலன்ஸ்கி எதிர்கொண்டது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட இந்த நாட்டுத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை.

டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் இந்தியாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக இருந்தார். ஆனால் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு முன்பு பிரதமர் மோதி முழுத் தயாரிப்புகளை செய்திருந்தார்.

பொது பட்ஜெட்டில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைத்திருந்தது. எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாகவும் இந்தியா அறிவித்திருந்தது.

மோதி வாஷிங்டனை அடைந்தவுடன் டிரம்பும் பரஸ்பர வரியை அறிவித்தார். ஆனால் டிரம்பின் எந்த அறிவிப்பையும் இந்தியா விமர்சிக்கவில்லை. டிரம்பின் ஆக்ரோஷத்திற்கு இந்தியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இது டிரம்பை கையாள்வதற்கான ஒரு தயாரிப்பு மற்றும் உத்தியாகக் கருதப்பட்டது.

"ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் ஒரு கேலிப்பொருளாக மாறினார். ஏனெனில் அவர் தயாரிப்பின்றி அங்கு சென்றார். ரஷ்ய அதிபர் புதினுடன் நல்ல உறவைக் கொண்ட அதிபரை சந்திக்க ஸெலன்ஸ்கி எந்த தயாரிப்பும் இல்லாமல் சென்றார். ஸெலன்ஸ்கி , புதினுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு பதிலாக பாதுகாப்பு உத்தரவாதங்களை கேட்டார். ஆனால் பிரதமர் மோதி, டிரம்பின் எந்த கோரிக்கையையும் மறுப்பதில்லை" என்று வெளியுறவு நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான நிருபமா சுப்பிரமணியன் பதிவிட்டார்.

"சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் அந்தஸ்தை பலவீனமடையச் செய்ய முயற்சிப்பதாக பிரிக்ஸ் அமைப்புகளை டிரம்ப் தாக்கிய போது, டாலருக்கு மாற்று நாணயத்தை ஆதரிக்கவில்லை என்று இந்தியா கூறியது.

வரிகள் தொடர்பாக டிரம்ப் இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். ஆனால் மோதி அவருடன் வாக்குவாதம் செய்யவில்லை. மூடிய கதவுகளுக்குப் பின்னால் இவற்றைக் கூறுவது சிறந்தது என்று இந்தியா நினைத்தது.

இந்தியாவுக்கான சேதி என்ன?

பைடனைப் போல தைவான் மீது தனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேன் - ரஷ்யா போருக்குப் பிறகு, சீனா மற்றும் ரஷ்யா இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இது இந்தியாவிற்கும் ஒரு தெளிவான செய்தியாகும்.

கடந்த வாரம், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சீனா தைவானை வலுக்கட்டாயமாக இணைக்க முயன்றால் அமெரிக்கா அதை ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டது.

இதுகுறித்து டிரம்ப், "இந்த சர்ச்சையில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாததால், இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

பைடன் போல தைவான் மீது தனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமெரிக்கா யாருக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை இலவசமாக வழங்கப் போவதில்லை என்று கூறி வருகிறார்.

தைவானின் சிப் தொழில்நுட்பம் அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கிறது என்று அவர் குற்றம் சுமத்தினார்.

ஸெலன்ஸ்கியுடன் டிரம்ப் இவ்வாறு நடந்து கொண்ட பிறகு, சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கா உதவுமா இல்லையா என்ற கவலை தீவிரமாகியுள்ளது.

அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரப் பேராசிரியர் முனைவர் கான் கூறுகையில், "ஸெலன்ஸ்கி தனது தவறுக்கு விலை கொடுப்பார். ஒரு வல்லரசுக்கு எதிராக இன்னொரு வல்லரசை சார்ந்து போரிட முடியாது. யுக்ரேனுக்கு ரஷ்யா ஒரு வல்லரசாகவே உள்ளது. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பாவோ போரில் உங்களுக்கு உதவுகின்றன என்றால், அவர்களுக்கும் சொந்த நலன்கள் உள்ளன. அவர்களின் நலன்களை நிறைவேற்ற நீங்கள் போராடினால், நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் கான், "அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற டிரம்பின் கொள்கை இந்தியாவிற்கு ஒரு பாடம். அமெரிக்காவின் கட்டளைப்படி நீங்கள் சீனாவுடன் போருக்குச் செல்ல முடியாது. அமெரிக்க வெள்ளையர்களின் மரபணு ஐரோப்பாவிலிருந்து வந்தது. டிரம்ப் ஐரோப்பாவையே விட்டு விட்டால், இந்தியாவின் ஆதரவாளராக எப்படி இருப்பார்? டிரம்பால் கனடாவையே மண்டியிட வைக்க முடியும் போது, அவருக்கு ஏன் இந்தியா மீது அனுதாபம் இருக்க வேண்டும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் சேதி என்னவென்றால், ஒருவரின் ஆதரவை நம்பி, போரின் ஒரு பகுதியாக நீங்கள் மாறக்கூடாது என்பது தான்" என்றார்.

மோதியின் அமெரிக்க வருகைக்கு முன்பு, டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைப் பாராட்டியிருந்தார்.

மோதியுடனான செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப், சீனா உலகில் ஒரு முக்கியமான நாடு என்று கூறியிருந்தார்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்தார். ஆனால் இந்தியா எந்த மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தையும் தெளிவாக மறுத்துவிட்டது.

குறைவான நண்பர்கள்

அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்கியுள்ள அமைதி ஒப்பந்தத்தால் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் ஆதாயங்கள் மட்டுமே உள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதினுக்கும் டிரம்பிற்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் உலக ஒழுங்கை மாற்றும் என்று கூறப்படுகிறது.

"டிரம்ப் வழங்கிய ஒரே சலுகையாக இது இருக்கலாம், இந்தியா பகிரங்கமாக அதனை ஏற்க மறுத்துவிட்டது" என்று நிருபமா சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

"அமெரிக்கா யுக்ரேனுக்கு பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தால் அதற்கு இழக்க எதுவும் இல்லை, ஆதாயங்கள் மட்டுமே உள்ளன. பாதிக்கப்பட்டவர் தன்னைத் தாக்கியவரிடம் சரணடைய வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார். இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. நாம் அனைவரும் இப்போது ஸெலன்ஸ்கி தான்."

"பழைய நட்புகளும் கூட்டணிகளும் எதிர்காலத்தில் பலனளிக்காமல் போகலாம் என்ற யதார்த்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். புதினும் டிரம்பும் இப்போது ஒரே முகாமில் இருப்பதால் இந்தியாவும் ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது. சீனா பாகிஸ்தானுடன் நெருங்கி வருகிறது. பூகோளத்தின் தென் பாதியில் முக்கிய சக்திகளான பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவும் இந்தியாவை விட சீனாவுடன் நெருக்கமாக உள்ளன." என்றார் நிருபமா சுப்பிரமணியன்.

பேராசிரியர் கான் கூறுகையில், "டிரம்ப் தனது பதவியேற்பு விழாவிற்கு ஜின்பிங்கை அழைத்திருந்தார். ஆனால் இந்திய பிரதமர் மோதியை அழைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் ஆதரவில் நீங்கள் எந்தப் போரையும் நடத்த முடியாது, அதுவும் எந்த வல்லரசுக்கும் எதிராகப் போரிட முடியாது என்ற தெளிவான செய்தி இந்தியாவிற்கு உள்ளது.

இன்று ஐரோப்பியத் தலைவர்கள் யுக்ரேனுடன் நிற்பதைக் வெளிக்காட்டுகிறார்கள், ஆனால் ஐரோப்பாவிலிருந்து எவ்வளவு உதவி வருகிறது? ஐரோப்பா பணம் கொடுத்தாலும், அது ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து தான் கொடுக்கிறது.

2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லையை, யுக்ரேன் மீண்டும் அடைய முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் தெளிவாகக் கூறிவிட்டது.

யுக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக முடியாது என்பதுடன், அமெரிக்கா யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்காது என்றும் டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஈடாக யுக்ரேன் என்ன பெற்றது என்ற கேள்வி எழுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c7vz7qv1ql3o

அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? - கருணாகரன்

2 months ago

அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா?

March 1, 2025

அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா?

 —  கருணாகரன் —

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல்  மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. 

ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்றன எதிர்க்கட்சிகள்.

“வரவு செலவுதிட்டத்தில் வடக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அரசாங்கம், கிழக்கிற்கு வழங்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்.

“வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் செலவழிக்கப்படாமல், வன்னிக்கும் பகிரப்பட வேண்டும். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கின்றனர்  வன்னித் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் அமைப்பினரும். 

“தேசிய பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாக இருந்தால் அல்லது அதை நோக்கி முயற்சிப்பதாக இருந்தால் அதற்குரிய  வகையில் தேசியப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதைச் செய்யாமல் இந்த மாதிரியான சிறு சீரமைப்பு முயற்சிகள், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனையான உலகத்தையே உருவாக்கும். அது மக்களுக்கோ நாட்டுக்கோ பெரிய நன்மைகளைத் தராது” என்கிறார்கள் பொருளாதாரத் துறையினர். 

“ஒப்பீட்டளவில் முன்னேற்றமான பாதீடாக இருந்தாலும் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட செலவீனம் நாடு, பொருளாதாரத் துறையில் முன்னோக்கிச் செல்வதைப் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்கவில்லை என்பதைக்காட்டுகின்றது.  இந்த அரசாங்கத்துக்கும் தடுமாற்றங்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறது” என்று கூறுகிறார்கள் இன்னொரு தரப்பினர். 

இப்படிப் பல விதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பாதீட்டு விவாதத்தின்போது நாம் சில விடயங்களைக் கவனப்படுத்த வேண்டும். 

வரவு செலவுத்திட்டத்தில் இப்போதே துண்டுவிழும் தொகையாக 2,200 பில்லியன் உள்ளது. எதிர்பார்க்கப்படும் வருமானத்தின் மதிப்பீடு, 4,990 பில்லியன் ரூபாய். செலவு 7,190 பில்லியன் ரூபாய். என்றால் வரவுக்கு மீறிய செலவே. ஆக வரவைக் கூட்டுவதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். அதாவது அதற்கான ஏற்பாடுகளை. 

இதற்கு கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை 3 – 4 வீதமாக அதிகரிக்க முடியும் – வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் 1400 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த அடிப்படையிலான எண்ணக் கருவைப் பகிரவும் திட்டமிடவும் மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுடன் உரையாடலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

ஆனால், ஜனாதிபதியோ அரசாங்கமோ எதிர்பார்க்கின்றபடி – நம்புகின்றபடி – இதில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்பது கேள்வியே! ஏனென்றால், கடந்த காலத்தில் அரச நிர்வாகம் மிகப் பலவீனமானமுறையிலேயே செயற்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்களின் திட்டமிடலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பெருங்குறைபாடாகவே இருந்தது. குறைந்த பட்சம் தமது திட்டங்களின் பெறுபேறு என்ன? அவை உருவாக்கிய சமூக விளைவுகள் என்ன என்பதைக் கூட அவை திரும்பிப் பார்த்ததும் இல்லை. மதிப்பீடு செய்ததும் இல்லை. வேண்டுமானால், இதைக்குறித்து மாவட்டச் செயலாளர்களிடத்திலும் திட்டமிடற் பணிப்பாளர்களிடத்திலும் ஜனாதிபதி விளக்கம் கேட்கலாம். அப்படிக் கேட்டால் அதற்குக் கதை சொல்லக் கூடிய (கதை விடக்கூடிய) அளவுக்கு நிபுணத்துவத்திறனைக் கொண்டிருக்கிறார்கள் அத்தனை அதிகாரிகளும். 

பதிலாக குறைபாடுகளை நிவர்த்தி செய்வதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இதில் அபூர்வமாக ஒரு சிலர் விலக்காக இருக்கலாம். மற்றும்படி பலருடைய நிலை இதுதான். 

இதற்குக் காரணம், கடந்த ஆட்சிகளில் நடந்த தவறுகளும் பழக்கங்களும்தான். போதாக்குறைக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித்திட்டங்கள். கருத்திட்டங்கள், பயிலரங்குகள், பயிற்சித்திட்டங்கள், உதவிகள், கலந்துரையாடல்கள், கள ஆய்வுகள் என்றெல்லாம் பெரும் செலவிலும் பெரும் எடுப்பிலும் மேற்கொள்ளப்பட்ட பல  திட்டங்களும் பல நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததே வரலாறு. 

இதை மறுத்தால், ‘அவை எத்தகைய பெறுபேறுகளை உருவாக்கின?‘ என்ற புள்ளி விவரத்தைச் சான்றாதாரங்களுடன் எந்த மாவட்டச் செயலகமாவது வெளியிடத் தயாரா?  

எனவேதான் மாவட்டச் செயலக அதிகாரிகளை நம்பி அரசாங்கம் கிராமியப் பொருளாதார அபிவிருத்தியைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதல்ல. ஆனால், அவர்களைக் கொண்டுதான் இதைச் செயற்படுத்தவும் வேண்டும். அவர்கள் மாவட்டத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள். அவர்கள்தான் அரசின் நேரடிப் பணிப்புக்கும் செயலாக்கத்துக்கும் பொறுப்பானவர்கள். 

ஆகவே என்னதானிருந்தாலும் அவர்களுக்கூடாகத்தான் எதையும் செய்ய முடியும். அப்படியென்றால், அவர்களை குணமாற்றம் செய்ய வேண்டும். பொறிமுறைகளை முற்றாக மாற்றியமைக்க வேண்டும். திட்டமிடற் செயலகங்களின் மூளையையும் மனதையும் புதிதாக்க வேண்டும். முழுமொத்தமாக புத்தாக்கத்துக்குரிய வகையில் நிர்வாகத்தையும் அதை இயக்கும் தரப்பினரையும் மாற்றியமைக்க வேண்டும்.

இதனால்தான் முறைமை மாற்றம் (Systrm change) வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதை அரசாங்கமும் ஏற்றுள்ளது. ஆனால், அதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டப்படுகிறது? இது  ஏன்?

நாட்டுக்குத் தேவையாக இருப்பது அறுவைச் சிகிச்சையே. அதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். என்பதால்தான் வழமைகளுக்கு மாறாக அவர்கள் NPP யை ஆதரித்தனர். அநுர குமார திசநாயக்கவை – விரும்பினர் – நம்பினர், நம்பிக் கொண்டிருக்கின்றனர். 

பதிலாக பழைய புண்ணுக்கு மேலே களிம்பைப் பூசுவதால் பயனில்லை. இதொன்றும் கடினமான விமர்சனமல்ல. அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதற்கான சொற்களேயாகும். கடந்த ஆட்சிகளின்போது நடந்த தவறுகளைப் பட்டியலிடுவது, அதற்கான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துவது எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இவையெல்லாம் தேர்தல்கால நிகழ்ச்சிகளைப்போலவே உள்ளன. ஒரு சிறிய மாற்றம் என்றால், தேர்தல் மேடைகளுக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் அவை பட்டியற்படுத்தப்படுகின்றன – வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆகவே  அவை காற்றில் கரைந்து விடாமல் வரலாற்றில் இறக்கம் செய்யப்படுகின்றன. என்பதால் அடுத்த கட்டமாக அவை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன என உணரலாம். இதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். சட்டத்தின் முன் குற்றவாளிகள், தவறானவர்கள், நாட்டைக் கெடுத்தவர்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முன் அவர்களை நிர்வாணப்படுத்துவது நல்லதே. 

அதேவேளை வரவு செலவுத்திட்டத்தில் மக்களைக் குறித்து, உற்பத்திப் பொருளாதாரம் குறித்து மேலும் சிந்திக்கலாம். உதாரணமாக, அரசாங்கம் வாகனங்களுக்கான வரியை உச்சமாக்கியிருக்கிறது. இதில் ஒரு சிறிய நெகிழ்ச்சியை பொருளாதார வளர்ச்சி கருதி ஏற்படுத்த வேண்டும். விவசாயம்,மீன்பிடி மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமைகாவி வாகனங்களுக்கும் உழவு மற்றும் அறுவடை, பதனிடல் அல்லது இறுதிசெய் இயந்திரங்களுக்கும் வரிக் குறைப்புச் செய்யப்படுவது அவசியமாகும். இங்கே வரி விலக்குக் கேட்கப்படவில்லை. வரிக்குறைப்பே கோரப்படுகிறது. 

அப்படி அமையும்போதுதான் உற்பத்திசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அது உற்சாகத்தையும் சிரமக்குறைவையும் ஏற்படுத்தும். 

இதைப்போல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவும் முச்சக்கர வண்டிகள், 150  CC க்கு உட்பட்ட மோட்டார்ச் சைக்கிள்கள் போன்றவற்றுக்கும் வரிக்குறைப்புச் செய்ய வேண்டும். இவை நாளாதாந்த உழைப்பு, வருவாயீட்டல், பணிக்குச் செல்லுதல்  போன்றவற்றுக்கு ஏற்புடையதாக இருக்கும். மட்டுமல்ல, இவையெல்லாம் சாதாரண மக்களுக்குரியவை.

ஆகவே மக்கள் நலன் அரசு – ஆட்சி என்ற வகையில் இவ்வாறான விடயங்களைக் குறித்துப் பொருத்தமாகச் சிந்திப்பது அவசியமாகும். கூடவே இளையோருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியமானது.அதற்கு முதலீடுகள் அவசியம். 

முதலீட்டாளர்கள் பலரும் அதைச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். உள்நாட்டிலும் உள்ளனர். புலம்பெயர்ந்தோரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுடைய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நடைமுறைப் பிரச்சினைகள், நிர்வாக இழுபறிகள், அரசியற் பேரங்கள் எல்லாம் தடையாக உள்ளன. இவற்றைச் சீராக்கம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்கினால் புதிய தொழிற்துறைகள் பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இதற்காக சிறப்பு அலகு ஒன்று (A special Unit) உருவாக்கப்படுவது கட்டாயமானது. 

முதலீட்டாளர் ஒருவர் அல்லது ஒரு கொம்பனி அதற்கான கோவையைச் சமர்ப்பித்தால், அதைப் பொறுப்பேற்று, பரிசீலித்தபின் தேவையான  திணைக்களங்களோடு தொடர்பு கொண்டு உரிய அனுமதிகளை விரைவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அந்தப் பிரிவு. இப்போதுள்ள நிலைமை அப்படியானதல்ல. ஏராளமான இழுபறிகள்,தாமதப்படுத்தல்கள், தட்டிக் கழிப்புகள் நிர்வாக ரீதியாக உள்ளது. இதை மாற்றியமைக்க வேண்டும். 

இப்படிப் பல விடயங்களில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தும்போதுதான் பொருளாதார வளர்ச்சியும் மீட்சியும் ஏற்படும். அடுத்த ஆண்டுப் பாதீட்டுக்கு முன் அரசாங்கம் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையில் (Restructuring action) னில் ஈடுபட வேண்டும்.அது கட்டாயமானது. 

அரசாங்கத்திற்குள்ள பொறுப்புகள் அதிகம். கடந்த 75 ஆண்டு காலக் குப்பையை அகற்றுவதென்பது எளிதல்ல. ஆனாலும் அதைச் செய்வதாகவே அது தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. உறுதியின் முன்னே நிறுத்தியிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்  அதன் மீதே கட்டப்பட்டுள்ளது.

கடந்த (ரணில்) அரசாங்கம் வரியிறுக்கம், தொழிலின்மை, புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் சிரத்தின்மை போன்றவற்றினால் அழுத்தங்களை உருவாக்கியது.இதனால் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். அப்படி வெளியேறுவதையே ரணிலும் விரும்பினார். இது மிகப் பெரிய தவறாகும். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளம். அதிலும் உழைப்பாளர்கள், இளையோர், திறனாளர்கள், துறைசார் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும் மிகத் தவறானது. பாதகமானது.

ஆனால், அதையே அன்றைய அரசாங்கம் ஊக்குவித்தது. கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒருவரை வளர்த்து, ஆளாக்கி, துறைசார் – தொழில்சார் வல்லுநராக உருவாக்கியபின்  அவரை வெளியே விடுவதும் அவர் இன்னொரு நாட்டில் சென்று அந்த நாட்டுக்காக உழைப்பதும் எவ்வளவு இழப்பாகும். அதேவேளை எந்தச் செலவுமே இல்லாமல் பிற நாடுகள் அந்தத் திறனாளரை – உழைப்பாளரை தமக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. 

இதை புதிய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். இந்த நாட்டை விட்டுச் சென்றவர்களும் இந்த மண்ணுக்கு வரும் வகையில் ஆட்சியை – பொருளாதாரத்தை – வாழும் சூழலை மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையானது பாதீடாகும். அந்தப் பாதீட்டை விவாதித்து, வளப்படுத்துவதே ஆயிரமாயிரம் வாசல்களைத் திறக்கும். ஆம், சரியான ஒரு பாதீடு, நாட்டின் நெருக்கடியைத் திறக்கும் சிறப்பானதொரு திறவு கோலாகும். 

அநுர குமாரவின் (NPP) யின் கைகளில் அந்தத் திறவுகோலை வரலாறு ஒப்படைத்துள்ளது. அந்தத் திறவுகோலை திறப்பதற்குப் பயன்படுத்துவதா இல்லை பூட்டுவதற்கு உபயோகிப்பதா என்பதை  அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.வரலாறு அந்தப் பொறுப்பை அவர்களுக்கு அளித்துள்ளது. வரலாற்றுக்கு அவர்கள், தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்.

https://arangamnews.com/?p=11856

புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன்

2 months ago

புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன்

25-67bf0a00e0642-cccc.jpg

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவது உள்ளூர் உணர்வுகளை அவற்றின் அசமத்துவங்களை நீக்கி தேசியக் கூட்டுணர்வாகத் திரட்ட வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி.

அந்த அடிப்படையில் பார்த்தால்,உள்ளூர்த் தலைமைகளை எப்படித் தமிழ் தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்தெடுப்பது என்பதற்கான ஒரு பயில் களம்தான் உள்ளூராட்சி மன்றங்கள். ஆனால் தமிழ்க்கட்சிகளிடம் அது தொடர்பாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து ஆழமான நீண்டகால நோக்கிலான விளக்கங்களும் பார்வைகளும் உண்டா ?

கடந்த வாரம் ஜனநாயகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட கூட்டு எனப்படுவது தேர்தல்கூட்டு அல்ல என்று கூறப்பட்டாலும் அது நடைமுறையில் ஒரு தேர்தல் கூட்டாகத்தான் காணப்படுகின்றது. அக்கூட்டுக்குள் முதலில் காணப்பட்ட இரண்டு கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வெளியேறக்கூடிய ஆபத்துக்களை இக்கட்டுரை எழுதப்படுகையில் உணரக்கூடியதாக இருந்தது.

தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கிலான கூட்டு அது என்று எடுத்துக்கொண்டால்,தமிழ்த்தேசிய வாக்குகளைத் திரட்டுவதற்கான ஒரு கூட்டு என்றும் அதை வியாக்கியானப்படுத்தலாம். ஆயின் அக்கூட்டானது தமிழ்த்தேசிய வாக்குகளை கொத்தாகத் திரட்டும் சக்தி மிக்கதா ?

தமிழ்த் தேசியப் பரப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இரண்டு விதமான ஒருங்கிணைப்பு முயற்சிகள் உண்டு. ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படுகின்ற யாப்புருவாக்க முயற்சிகளை நோக்கிய  ஒருங்கிணைவு. அதில்  சிறீதரன் முன்னணியோடு இணக்கமாகக் காணப்படுகின்றார். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியும் அந்த அணியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மத்திய குழுவும் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிராக இருக்கின்றன. இந்த விடயத்தில் சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான தலைமைத்துவப் போட்டி முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது ஏறக்குறைய பொது வேட்பாளரின்போது காணப்பட்ட ஒரு நிலை. அங்கேயும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்பகையானது பொது வேட்பாளர் தொடர்பான நிலைப்பாடுகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த இரண்டு விடயங்களிலும் சிறிதரன் தேசத்திரட்சிக்கு ஆதரவாக நின்றார்; நிற்கின்றார். அவரைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது. கட்சிக்குள் அவருடைய நிலையை பலப்படுத்துவதற்கு அவருக்கு வெளிக்கூட்டுகள் அவசியம்.

சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகை கஜேந்திரகுமாரின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவதைப் போலத்தான் சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை, புதிய கூட்டு முயற்சிகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். அப்படித்தான் மணிவண்ணனுக்கும் கஜேந்திரக்குமாருக்கும் இடையிலான பகையுணர்வும், தவறாசாவுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகையுணர்வும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை எனப்படுவது பொது எதிரிக்கு எதிரான பகையுணர்வை விடவும் ஆழமானதாகவும் கூர்மையானதாகவும் வளர்ந்துவருகிறது. அதுபோலவே சிறீதரனுக்கும் சந்திரகுமாருக்கும் இடையிலான பகை என்பது பெருமளவுக்கு மாவட்டமட்டப் பண்பை கொண்டது. அதிகம் உள்ளூர் நிலைமைகளால் தீர்மானிக்கப்படுவது.

புதியகூட்டை அறிவிக்கும் முதலாவது சந்திப்பின்போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இக்கூட்டுக்குள் சந்திரகுமார் இருக்கும்வரை சிறீதரனைக் கொண்டு வருவது கடினம் என்று சுட்டிக்காட்டப்பட்ட பொழுது, சந்திரகுமார் கூறியிருக்கிறார், பிரச்சினையில்லை சிறீதரன் இந்த அணிக்குள் வருவார் என்றால் நாங்கள் தமிழரசுக் கட்சியோடு போகிறோம் என்று. கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகையும் சிரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகையும் அங்கே புதிய சேர்க்கைகளைத் தீர்மானிக்கின்றன. சுமந்திரனுக்கு ஆதரவான அணி அங்கு சந்திரகுமாருக்கு நெருக்கமாகக் காணப்படுகின்றது

அப்படித்தான் மணிவண்ணனின் விடயத்திலும்.மணிவண்ணன் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மக்கள் கூட்டணியும், ஐங்கரநேசனும் புதிய கூட்டுக்குள் சந்திரகுமார் இணைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய தவறாசா அணியும் அக்கூட்டுக்குள் முரண்படுவதாகத் தெரிகிறது. அதற்காக இவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஏதும் புதிய உடன்படிக்கைக்கு போகக்கூடுமா? தவராசா அணிக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான இடைவெளியும்; மணிவண்ணனுக்கும் முன்னணிக்கும் இடையிலான பகையும் இக்கூட்டுக்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகும்.

மணிவண்ணன், ஐங்கரநேசன், தவறாசா அணி போன்றவற்றைச் சுதாகரிப்பதற்காக புதியகூட்டானது சந்திரகுமாரை வெளியே விடுமா? இல்லை. அதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்குக் குறைவு. ஏனென்றால் புதிய கூட்டை உருவாக்கும் முன்முயற்சிகளை எடுத்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு சினேக சக்தியாக கருதவில்லை. தவிர ஏற்கனவே யாப்புருவாக்க முயற்சிகளுக்காக செல்வம் அடைக்கலநாதனை கஜேந்திரக்குமார் சந்தித்திருக்கும் ஒரு பின்னணியில்தான் மேற்படி கூட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக மணிவண்ணனும் கலந்து கொண்டார். விக்னேஸ்வரனின் கட்சிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான இடைவெளியை தீர்மானிக்கும் அம்சங்களில் மணிவண்ணனும் ஒருவர். எனவே கூட்டிக்கழித்து பார்த்தால் புதிய கூட்டுக்குள் பழைய பகைமைகள் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

25-67bbdcda81acb.jpg

தமிழ்மக்கள் உருகிப் பிணைந்த ஒரு தேசத் திரட்சியாக இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பில் எத்தனை துருவ நிலைகள்? ஆயுதப் போராட்டத்தில் இயக்கங்களுக்குள் ஏற்பட்ட பகைமையின் தொடர்ச்சியாகக் காணப்படும் தியாகி-துரோகி என்ற பகைநிலை. கட்சிகளுக்கு இடையிலான பகை;கட்சிகளுக்குள் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான பகை;கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களுக்கும் தாய்க்கட்சிக்கும் இடையிலான பகை… என்றிவ்வாறாக  பல்வேறு பகைநிலைகள் உண்டு. இந்தப் பகைமைகள் அனைத்தும் பழையவை. இவை புதிய கூட்டுக்களை எவ்வாறு தீர்மானிக்கப் போகின்றன?

இப்பொழுது தமிழ்த்தேசியப் பரப்பில் நான்கு தரப்புக்கள் துலக்கமாக தெரிகின்றன. முதலாவது தமிழரசுக் கட்சி. இரண்டாவது முன்னணி. மூன்றாவது புதிய கூட்டணி. நாலாவது இவற்றுக்குள் வராத சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும்.

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தேர்தலை தனியாகவே எதிர்கொள்ளப் போவதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் தாமே உள்ளதில் பெரிய கட்சி,பிரதான கட்சி, தலைமைதாங்கும் கட்சி என்ற பொருள்பட சுமந்திரன் கருத்துக்கூறி வருகிறார். தேர்தலுக்கு முன் கூட்டுக்களை உருவாக்காமல் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டுக்களை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் சிந்திப்பதாகத் தெரிகிறது.

இது தாங்களே பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் வகுத்துள்ள தந்திரம்.தேர்தலுக்குப் பின் கூட்டுக்களை வைக்கும்பொழுது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஏனைய கட்சிகளின் உயரம் எதுவென்று தெரிந்துவிடும். அந்த அடிப்படையில்தான் அவர்கள் பேரம்பேச முடியும். மாறாக தேர்தலுக்கு முன் கூட்டை வைத்தால்,கட்சிகளின் உயரம் இதுவென்று தெரியாமல் அவற்றின் தகுதிக்கு மீறி இடங்கொடுக்க வேண்டிவரும். இது தாமே தீர்மானிக்கும் கட்சி என்ற அடிப்படையில் கட்சி நோக்குநிலையில் இருந்து எடுத்த முடிவு. நிச்சயமாக தேசத்திரட்சி என்ற நோக்குநிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு இறந்த காலத்திலிருந்து எதையும் படித்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. உள்ளதில் பெரிய கட்சி;தலைமை தாங்கும் கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு கட்சியானது தேசியவாத அரசியலுக்குத் தலைமை தாங்கும் கட்சி தாங்கள்தான் என்ற பொறுப்பை உணர்ந்து முடிவெடுக்கவில்லை. தேசத் திரட்சியை நோக்கித்தான் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தலை நோக்கி அல்ல. அது மிக முக்கியம். அந்த ஒருங்கிணைப்பு 2009க்கு பின்னரான புதிய பண்புருமாற்ற அரசியலாகவும் இருக்க வேண்டும். அது மிக முக்கியம். மாறாக அவரவர் பலத்தின் அடிப்படையில் கூட்டுக்களை வைத்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்க தேர்தல் நோக்கு நிலையிலானது. சில சமயங்களில் தேர்தல் நோக்கு நிலையானது தேசத் திரட்சிக்கு எதிராக இருக்க முடியும்.

தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசியக் கூட்டுணர்வின் அடிப்படையில் பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தன்னைத் தலைமை தாங்கும் சக்தியாகக் கருதும் தமிழரசுக் கட்சி அதற்குத் தேவையான வழி வரைபடத்தைக் கொண்டிருக்கின்றதா?இல்லை. முதலில் அவர்கள் தங்களை ஒரு உருகிப்பிணைந்த அமைப்பாகக் கட்டியெழுப்ப வேண்டும். தன்னை ஒரு கட்டிறுக்கமான கட்சியாகத் திரட்டமுடியாத ஒரு கட்சியானது எப்படி அரசற்ற, நாடற்ற ஒரு மக்களைத் தேசமாகக் கட்டியெழுப்ப முடியும்? இதுதானே கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது?

தமிழரசுக் கட்சி,முன்னணி,புதிய கூட்டணி தவிர ஆங்காங்கே சுயேச்சைகளும் களமிறங்கும் வாய்ப்புக்கள் தெரிகின்றன. நாடாளுமன்றத் தேர்தலைப் போலன்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேச்சைகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். தென்மாராட்சியில் ஒரு சுயேச்சைக் குழு அவ்வாறு களமிறங்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. வலிகாமத்திலும் சுயேச்சைக் குழுக்கள் இறங்க முடியும். இதில் சுயேச்சையாக நிற்கக்கூடிய சில அரசியல்வாதிகளோடு  சுமந்திரன் உரையாட முற்படுவதாக ஊர்ஜிதமற்ற ஒரு தகவல் உண்டு.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நோக்கி உருவாகிவரும் புதிய கூட்டுக்கள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அதைக் கட்சிகள் செய்ய முடியாது என்பதுதான் தமிழ்த்தேசிய அரசியலில் உள்ள கொடுமையான யதார்த்தம். ஏனென்றால் தமிழ்மக்களை வாக்காளர்களாக;விசுவாசிகளாக; பகைக் குழுக்களாக;துரோகிகளாக தியாகிகளாக;ஆயுதக் குழுக்களாக; மிதவாதிகளாக;இன்னபிறவாகப் பிரித்து வைத்திருப்பதே கட்சிகள் தான். தாங்களே சிதறடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தாங்களே திரட்டுவது எப்படி?வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது ஒரு தேசமாகத் திரண்டு முடிவெடுக்காத கட்சிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எப்படித் தமிழ் வாக்குகளைத் திரட்டப் போகின்றன?

அவர்கள் ஒன்றாக நின்று தேர்தலை எதிர்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. ஆகக்குறைந்தபட்சம் அந்தந்த உள்ளூராட்சிப் பிரதேசங்களில் பகை தவிர்ப்பு அல்லது போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை எதற்காவது போவார்களா? அதாவது ஒரு உள்ளூராட்சிப் பிரதேசத்தில் வெல்லக்கூடிய வேட்பாளருக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த் தேசியக் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் விடுவதன்மூலம் ஒரு தமிழ்த் தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவது.செய்வார்களா? அதாவது கட்சி கடந்து தேசமாகச் சிந்திப்பார்களா?

https://www.nillanthan.com/7195/

மாற்றமின்மையே மாறாதது ? நிலாந்தன்.

2 months ago

No-Change.jpg?resize=750%2C375&ssl=1

மாற்றமின்மையே மாறாதது ? நிலாந்தன்.

ஒரு புறம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்புக் களுக்காக உழைக்கும் கட்சிகள், சுயேட்சைகள். இன்னொருபுறம் ஐநாவின் 58 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளிலும் ஐநாவின் மீதான கவனக்குவிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஐநாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது.

இம்முறை ஐநா கூட்டத் தொடருக்கு இரண்டு முக்கிய புதிய பரிமாணங்கள் உண்டு. முதலாவது பரிமாணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனக்குத் தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்றும் கூறத் தொடங்கிவிட்டது. அவ்வாறு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கும் ஓர் அரசாங்கம், தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில்,இன நல்லிணக்கம் தொடர்பில் தமிழ் மக்களோடு இணைந்து செயற்படுவதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்று வெளி உலகத்திற்கு காட்ட முற்படுகின்றது.இது உள்நாட்டு நிலவரம்.

மற்றது,பிராந்திய மற்றும் உலகளாவிய நிலவரம். இலங்கையில் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஆனால் நடைமுறையில் வலது பக்கம் சாய்கின்ற ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.சீனா இந்த அரசாங்கத்தை இலகுவாகக் கையாளப்படத்தக்க ஒன்றாகக் கருதுகிறது. அது இப்பிராந்தியத்தில் இந்திய-சீன; அமெரிக்க – சீன நலன்கள் தொடர்பான ஒரு புதிய போட்டிக் களத்தைத் திறக்கப் போகின்றதா ?

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது.அதேசமயம், புதிய அமெரிக்க அதிபராகிய ட்ரம்பின் வழமைக்கு மாறான அணுகுமுறையும் அனைத்துலக அரசியலில் புதிய தெரிவுகளையும் புதிய ரத்தச் சுற்றோட்டங்களையும் உருவாக்கக்கூடியது.

இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலில் ஐநாவின் ஐம்பத்தி எட்டாவது கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது.

ஆனால் மேற்சொன்ன அத்தனை புதிய நிலைமைகளும் இருக்கத்தக்கதாக அல்லது, புதிய திருப்பங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் இருக்கத்தக்கதாக, இலங்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஐநாவுக்குச் சென்ற அமைச்சர் விஜித ஹேரத் அங்கே ஆற்றிய உரைகளைத் தொகுத்து பார்த்தால் என்ன தெரிகிறது?

எதுவுமே மாறவில்லை.
முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே விதமான அணுகுமுறைகளைத்தான் தேசிய மக்கள் சக்தியும் கையாளப் போகிறது என்று கருதத்தக்க விதமாக அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை காணப்படுகின்றது.

அமைச்சர் தனது உரையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து உள்நாட்டுப் பொறி முறைகளை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையைப் பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டத்துக்கு ஆதரவாக அவர் எதையும் கூறவில்லை. அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான பொறி முறைக்கு ஆதரவாக அவர் எதையும் தெரிவித்திருக்கவில்லை.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மற்றொரு அமைச்சரான லால் காந்த அண்மையில் கூறியிருப்பதுபோல “அரசாங்கம்தான் மாறியிருக்கிறது. அரசு மாறவில்லை என்பது உண்மைதான். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு அப்படியே இருக்கின்றது. அக் கட்டமைப்பின் ஒரு பகுதியான அரசாங்கம் தேர்தல் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது. மாறாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் ஏனைய அடிப்படை மூலக்கூறுகளான மகா சங்கம்,படைக் கட்டமைப்பு, நீதி பரிபாலனக் கட்டமைப்பு ஆகிய ஏனைய மூன்று கட்டமைப்புகளிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் நான்கு அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்று மட்டும் மாறியிருக்கிறது. அந்த மாற்றமும்கூட தமிழ் நோக்கு நிலையில் மாற்றம் அல்ல.

எனவே இந்த அரசாங்கம் அரசுக் கொள்கையில், அரசுக் கட்டமைப்பில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தலாம்? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கொள்ளளவு புதிய அரசாங்கத்துக்கு உண்டா? அல்லது சிங்கள பவுத்த அரசுக் கட்டமைப்பு அவ்வாறான மாற்றங்களை அனுமதிக்குமா ?

இல்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரே ஐநா தொடர்பான அதன் அணுகு முறைகளை ஓரளவுக்குத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. அனுர ஜனாதிபதி வேட்பாளராக இருந்த காலகட்டத்தில் அசோசியேற்றற் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள் என்று. இங்கு உண்மை என்பது என்ன? யார் குற்றம் இழைத்தார்கள் என்று கண்டுபிடிப்பது. குற்றவாளிகளை ஏன் கண்டு பிடிக்க வேண்டும்? அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக அவர்களை தண்டிப்பதற்கா? அல்லது மன்னிப்பதற்கா? அக்குற்றங்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கு அதாவது “மீள நிகழாமைக்கு” குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமா? மன்னிக்கப்பட வேண்டுமா? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பில் குற்றங்களைத் தண்டிக்கும் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தேவையான “பொலிட்டிக்கல் வில்”லை -அரசியல் திட சித்தத்தைக்- கொண்டிருக்கின்றதா? இல்லை.

அல்லது குறைந்தபட்சம் கடந்த சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மன்னிப்புக் கேட்குமா? அதிலாவது ஒரு குறைந்தபட்ச மாற்றத்தைக் காட்டுமா?

இல்லை. அவர்கள் காட்ட மாட்டார்கள். சரியோ பிழையோ ரணில் விக்கிரமசிங்க யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் தந்திரங்கள் இருக்கலாம். ஆனால் ரணில் மன்னிப்புக் கேட்டார் என்பது ஒரு சரியான முன்னுதாரணம். அதே சமயம், தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு இழைத்த எல்லாக் குற்றங்களுக்கும் அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு மன்னிப்புக் கேட்டால் குற்றங்கள் நடந்திருப்பதை அவர் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதற்கு ரணில் தயாராக இருக்கவில்லை. இப்பொழுது தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை.லால் கந்த கூறியது போல அரசாங்கம்தான் மாறியிருக்கிறது.

இனப்பிரச்சினை தொடர்பான சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. தமிழ் கட்சிகளின் செயலின்மையால் ஐக்கியமின்மையால் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். அது சிங்கள பொது அரசு கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக் கொடுத்த வாக்குகள் அல்ல.

அரகலிய போராட்டங்கள் ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.ஆனால் வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை, என்று ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் கூறியிருக்கிறார்.அது மிகச் சரி. அரசியலறிவு வளர்ந்திருக்கலாம். ஆனால் வரலாற்று அறிவு அல்லது வரலாற்று உணர்வு வளரும் போதுதான் இறந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்ச்சி ஏற்படும். அப்பொழுதுதான் மன்னிப்புக் கேட்கலாம். மன்னிப்பு கேட்டால்தான் அடுத்த கட்டமாக குற்றங்களுக்குப் பரிகாரம் காணலாம். குற்றங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கலாம். ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் அதாவது நிலைமாறு கால நீதியின் சொற்றொடர்களில் சொன்னால் “மீள நிகழாமை”- Non recurrence.

இப்பொழுது,மீண்டும் ஐநா கூட்டத்தொடருக்கு வருவோம்.அமைச்சர் விஜித ஹேரத் ஐநாவில் ஆற்றிய உரையின்படி அவர்கள் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்தின் (30\1) அடிப்படையில் சில கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிகிறது. அல்லது சில கட்டமைப்புகளோடு அனுசரித்துப் போக முற்படுவதாகத் தெரிகிறது. ஆனால் அக்கட்டமைப்புகள் யாவும் எவை என்று பார்த்தால், உள்ளூரில் இயங்குபவை. அனைத்துலகப் பரிமாணம் குறைந்தவை. அதைவிட முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளால் நிராகரிக்கப்பட்டவை. அதாவது அமைச்சர் விஜித ஹேரத்தின் வார்த்தைகளிலேயே சொன்னால், அரசாங்கம் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை எதற்கும் தயாரில்லை. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றைத்தான் கேட்கின்றது. அதைத்தானே மகிந்தவும் கேட்டார்? அதைத்தானே ரணிலும் கேட்டார்? இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி என்ன மாற்றத்தைக் காட்டியிருக்கிறது?

புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார்.ஆனால் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியலில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மாற்றமின்மைதான் மாறாத ஒன்றா?

https://athavannews.com/2025/1423718

தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா?

2 months 1 week ago

தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா?

Sivarasa Karunakaran

475697971_1203419204487640_3240449016334

Photo, Anura Kumara Dissanayake fb official page

தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு. ஏன் மலையகக் கட்சிகளும் இதை எதிர்கொள்ள வேண்டிய சவாலாக – நெருக்கடியாக – இந்தச் சூழல் உருவாகியுள்ளது. நேரடியாகச் சொன்னால், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சூழல். மறுவளமாகப் பார்த்தால் பிராந்திய அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் சமூகம்சார் பிராந்திய அரசியல் (Socio Regional Politics) என்பது தேசிய அரசியலின் போதாமையினால் (Inadequacy of National Politics) உருவாகியதே.

ஆனால், சிலர் இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், இதை வேறுவிதமாக வியாக்கியானப்படுத்த முற்படுகிறார்கள். இதில் ஒரு தரப்பினரின் அபிப்பிராயம், NPP க்குச் சாதமாக உள்ளது. அவர்கள் சொல்கிறார்கள், “NPP ஒரு மாற்றுச் சக்தியாக இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்துள்ளது. அது தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உரிய வேலைகளைச் செய்வதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், அவசரப்பட்டு, எல்லாவற்றையும் குழப்பக் கூடாது” என்று.

இதற்கு அவர்கள் சொல்கின்ற நியாயம், “ஏற்கனவே ஒடுக்குமுறையைச் செய்து வந்த ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் தாராளமாகச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. இருந்தும் அந்தத் தரப்புகள் தமிழ் பேசும் சமூகங்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே உருவாக்கின. இறுதியில் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், பொருளாதார நெருக்கடி என நாட்டையே படுகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளன. இதையெல்லாம் ஒழித்துக் கட்டி, மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக, ஒரு மாற்றுச் சக்தியாக NPP வந்திருக்கிறது. அதுவும் இலங்கையின் வரலாற்றில் புதிய சக்தியாக. அதற்கொரு சந்தர்ப்பத்தை வழங்காமல், அவசரப்பட்டு நெருக்கடிகளைக் கொடுப்பது ஏற்கனவே இருந்த தீய சக்திகளை (UNP, SLFP, NPP போன்றவற்றை) மீளக் கொண்டு வருவதற்கே வழிவகுக்கும். இது வழமையைப்போல மக்களுக்கு விரோதமான அதிகாரத் தரப்புகளின் இரகசியக் கூட்டாகும். இதற்கு இடமளிக்க முடியாது” என.

மட்டுமல்ல, “NPP யின் எழுச்சியும் அதற்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதும் அறுதிப் பெரும்பான்மையோடு அது ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதும் புதிய அரசியல் ஒன்றுக்கான முழு மக்களின் அங்கீகாரமாகும். அதை எப்படி மறுதலிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இவர்கள் NPP ஐ முற்று முழுதாக நம்புகிறார்கள். அதனால் கேள்விக்கிடமில்லாமல் அதை ஆதரிக்கிறார்கள். அது தவறு செய்தால் அல்லது அது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வது? என்பதற்கு இவர்களிடம் பதிலே இல்லை. மாறாக “அதற்கு வாய்ப்பொன்றைக் கொடுத்தால் கெட்டா போய் விடுவோம்?” என்று மட்டும் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள்.

அரசியலில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதான். நம்பிக்கையில்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற கருத்தையும் மறுதலிக்க முடியாது. ஆனால், எந்த நம்பிக்கையையும் ஒன்றுக்குப் பல தடவை சந்தேகிக்க வேண்டும். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றுக்கு பத்துத் தடவை கேள்வி எழுப்புங்கள் என்பதும் அரசியல் மந்திரமே.

நம்பிக்கையில் முதலீடு செய்யப்பட்ட போராட்டங்களுக்கும் அரசியலுக்கும் நடந்த கதையெல்லாம் தெரிந்தவர்கள் நாம். நம்முடைய வரலாறே நம்பிக்கைத் தோல்வியின் கசப்புகள் நிரம்பியதுதான். ஆகவே, கண்களை மூடிக்கொண்டு நம்பிக்கையின் கயிற்றைப் பிடித்துப் பின்தொடர முடியாது. அந்தளவுக்குப் பொறுத்திருக்கக் கூடிய நிலையில் தமிழ் பேசும் சமூகத்தினர் இல்லை. அதாவது, ஒடுக்கப்பட்ட –  பாதிக்கப்பட்ட – மக்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் அளவுக்கு மிஞ்சிய காத்திருப்பையும் பொறுமையையும் யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. அதைக் கோரவும் கூடாது. அது நீதியற்றது.

இன்னொரு தரப்பினரோ “இந்தப் பிராந்திய அரசியலின் காலம் முடிந்து விட்டது. அதாவது, இனத்துவ அடையாளத்தை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியலுக்கு (Ethnic Politics) இனி இடமேயில்லை. எப்படியென்றாலும் அது இனவாதத்தில்தான் போய் முடியும். அதைத் தொட்டாலும் சரி, தொடர்ந்தாலும் சரி, எதிர்த்தரப்புகள் தமது இனவாதத்துக்கு அதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். ஏதோ வகையில் இப்பொழுது மக்களும் அதை நிராகரித்து விட்டனர். மட்டுமல்ல, அவ்வாறான அரசியலினால் மக்களுக்குக் கிடைத்த நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். அந்த அரசியல் பெற்ற வெற்றிகளை விட அடைந்த தோல்விகளே கூடுதல். ஆகவே, அந்த அரசியலை இனியும் முன்னெடுப்பதால் பயனில்லை. அதற்கான காலச் சூழலும் இனி இருக்காது. சர்வதேச நிலவரங்களும் பிராந்தியச் சூழலும் உள்நாட்டின் நிலவரங்களும் மக்களின் உளநிலையும் அதைக் கடந்ததாகவே உள்ளது. இதை மக்கள் புரிந்து கொண்டபடியாற்தான் அவர்கள் NPP க்கு ஆதரவளித்துள்ளனர். இனி இந்த நிலைதான் தொடரும்” என வாதிடுகின்றனர். இதற்கு இவர்கள் சொல்கின்ற காரணங்களில் ஒன்று, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியற் சக்திகளை மக்கள் ஓரங்கட்டி, NPP க்கு ஆதரவு அளித்ததை.

இவர்களும் ஏதோ ஒரு வகையில் NPP க்குச் சார்பாகவே உள்ளனர். NPP க்குச் சார்பாக இருப்பது தவறில்லை. அது அவர்களுடைய அரசியல் விருப்பாகவும் உரிமையாகவும் இருக்கலாம். ஆனால், இங்கே உள்ள கேள்வியும் தவிர்த்துச் செல்ல முடியாத பிரச்சினையாகவும் இருப்பது, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? அதாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கு, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்குத் தீர்வு என்ன? அதை NPP எப்படி, எப்போது வழங்கப்போகிறது? அதற்கான உத்தரவாதம் என்ன? என்பதாகும்.

அந்தப் பதில் எத்தகைய அழகான – புனிதப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கும் அப்பால், நடைமுறைச் செயல்களாக இருக்க வேண்டும். அதுவே NPP யும் அதை ஆதரிப்போரும் கூறிவரும் “நம்பிக்கைக் கொள்ளுங்கள். நன்மை நடக்கும்” என்பதை உறுதிப்படுத்தும். அதன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஆனால், NPP யும் சரி, அதனை ஆதரிப்போரும் சரி இதில் கவனம் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் பிரச்சினையைப் பொதுமைப்படுத்தப் பார்க்கின்றனர். இலங்கையில் அடிப்படையாக இருப்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையே. அதுவே முதன்மையானது. அதனோடு இணைந்ததாகவே (வேலை வாய்ப்புப் பிரச்சினை, அபிவிருத்திச் சிக்கல்கள், சமநிலைக்குறைவு, முரண்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் என) ஏனைய பிரச்சினைகள் (இனப்பிரச்சினை உட்பட) எனக் கருதுகிறார்கள்.

75 ஆண்டுகளுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை அவ்வாறு பொதுமைப்படுத்துவது, இந்தச் சமூகத்தினருக்கு மாறானது மட்டுமல்ல, இன்றைய உலகின் நடைமுறைகளுக்கும் போக்கிற்கும் கூட எதிரானது. அப்படிப் பார்க்க முற்பட்டதன் விளைவுகளே, இலங்கையில் அதிகாரத்துக்கு வெளியே உள்ள சிங்களரல்லாத மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினர் ஒடுக்குதலுக்குள்ளாக வேண்டியிருப்பதாகும்.

இது பின்நவீனத்துவ யுகம் (Postmodern Era). இந்த யுகம் அதாவது பின்நவீனத்துவக் காலம் மையநோக்கை ஏற்பதில்லை. மையம், அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது. யதார்த்தமும் உண்மையும் கோருவது, மையத்தைச் சிதைத்து அல்லது உடைத்து அதிகாரத்தைப் பகிருமாறும் பரவலாக்கம் செய்யுமாறுமே. இலங்கையில் உள்ள பிரச்சினையும் இதுவரையும் நடந்த போராட்டங்களும் இப்போதுள்ள சிக்கலும் கூட அதிகாரத்தைப் பகிர்வதிலும் பரவலாக்கம் செய்வதிலும் உள்ள தயக்கத்தினாலும் மறுப்பினாலும் உருவாகியவையே. ஆகவே, இவற்றையெல்லாம் புரிந்துகொண்டே NPP யும் அதனை ஆதரிப்போரும் பேச வேண்டும்.

சில காரணங்களால் சில சந்தர்ப்பங்களில் மக்கள், சில அலைகளின் பின்னால் செல்வதுண்டு. அது தற்காலிகமானது. 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டபோதும் அதையொட்டி இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வடக்குக் கிழக்கிற்கு வந்தபோதும் அதைத் தமிழ் மக்கள் வரவேற்றனர். உச்சக்கட்டமாக இந்திய அமைதிப்படைக்கு மாலை அணிவித்து வரவேற்ற நிகழ்ச்சிகளும் உண்டு. 1994 இல் சந்திரிகா குமாரதுங்க அதிகாரத்துக்கு வந்து சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்தபோதும் ஒரு நம்பிக்கை அலை அடித்தது. “தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத்துக்காக – சிங்கள மேலாதிக்கத்துக்காக – வெட்கப்படுகிறேன்; வருந்துகிறேன். அவர்களுடைய பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று கூறி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்தபோது,  சமாதானத் தேவதையாகச் சித்தரிக்கப்பட்டார். மட்டுமல்ல, சந்திரிகா சீப்பு, சந்திரிகா Bag, சந்திரிகா செருப்பு என்று அன்றாடப் பாவனைப் பொருட்களுக்குப் பெயர் சூட்டி மகிழும் அளவுக்கு சந்திரிகா குமாரதுங்க மீதான விருப்பு அலை அடித்தது. ஆனால், பின்னர் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த விருப்பு அலை, வெறுப்பு அரசியலாக மாறியது.

ஆகவே, இங்கே கவனிக்க வேண்டியிருப்பது, இனப்பிரச்சினையை அல்லது தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினையை அதனுடைய அடிப்படைகளிலிருந்தும் ஆழத்திலிருந்தும் புரிந்துகொண்டு, தீர்வைக் காண வேண்டும் என்பதேயாகும். மேலோட்டமாக அவற்றை வியாக்கியானம் செய்ய முற்படுவதோ, அதை வேறு விதமாக மடைமாற்றம் செய்வதோ அல்ல.

தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் பேசும் சமூகத்தினர் வழங்கிய ஆதரவு என்பது, தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை அளித்திருப்பதாகவே கருத வேண்டும். உண்மையும் அதுதான். இதை விட்டு, தமிழ் பேசும் மக்கள் சமூகப் பிராந்திய அரசியலில் அல்லது இனத்துவ அரசியலில் சலிப்புற்று, தேசிய அரசியலில் கரைந்துள்ளனர். இனி இனத்துவ அரசியலின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். தொடர்ந்தும் தேசிய அரசியலுக்கே அவர்கள் ஆதரிவளிப்பர் என்று அர்த்தப்படுத்தினால், அது மிகப் பெரிய தவறாகவே அமையும். அது NPP மீதான நம்பிக்கையிழப்பாக மட்டுமன்றி, அதன் மீதான வரலாற்றுக் கறையாகவும் மாறும். நாட்டை மீண்டும் இருண்ட யுகமொன்றுக்குள் தள்ளும்.

ஏனென்றால், பிரச்சினை தீர்க்கப்படாத வரையில் முரண்பாடுகள் நீடிக்கும். முரண்பாடுகள் நீடிக்கும் வரையும் பகையுணர்ச்சி தீராது. பகையுணர்ச்சி நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்கும் எதிரானது. ஒருமைப்பாடின்மையும் அமைதியின்மையும் நீடிக்குமாக இருந்தால் நாடு பின்னோக்கியே செல்லும்.

NPP யின் தற்போதைய உளநிலையில் இனப்பிரச்சினையைப் பற்றிய அதனுடைய புரிதல் மேலோட்டமானதாகவே உள்ளது. இல்லையென்றால், அதற்குக் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பைக் கொண்டு, அரசியமைப்பை மாற்றி அமைக்க முற்பட்டிருக்கும். அதற்கே முன்னுரிமை அளித்திருக்கும். அதைத் தாமதிக்க முற்படாது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அது பின்னடைவை நோக்கியே செல்கிறது என்று அர்த்தமாகும்.

இந்தச் சூழலில்தான் சமூகப் பிராந்திய அரசியலை அல்லது இனத்துவ அரசியலை முன்னெடுக்கும் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் சக்திகள் தம்மை மீளெழுச்சிக்குள்ளாக்குவதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அந்த மீளெழுச்சி என்பது மேலோட்டமானதாக – மறுபடியும் அதே பலவீனமான வழிகளில் அமையக்கூடாது. எவ்வாறான தந்திரோபயங்களைப் பயன்படுத்தி, NPP யிடமிருந்து தமிழ் பேசும் மக்களைப் பிரித்தெடுக்க வேண்டும்? என்று சிந்திப்பதற்கு அப்பால், தாம் எத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டும்? அதை எப்படி முன்னெடுப்பது? அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது – வெற்றியடைய வைப்பது? என்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். முக்கியமாக தோற்றுப்போன அரசியற் பிரகடனங்களையும் வழிமுறைகளையும் தயக்கமின்றி விலக்க வேண்டும்.

தற்போதைய அவதானிப்பில், ‘இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு  முரண்பாடுகள் – வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்ச் சக்திகள் அனைத்தும் ஒருமுகப்பட்டு, ஒன்றிணைந்து நிற்பது அவசியம்’ என்ற கருத்து மேலெழுந்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, தமிழ் அரசியற் கட்சிகள் மட்டுமன்றி, தமிழ்ச் சக்திகள் என்ற வகையில் அனைத்துச் சக்திகளும் ஒருமுகப்பட்டு நிற்பது என. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. இது ஒரு வகையில் தேவையானதுதான். ஆனால், இது மட்டும்போதாது. மட்டுமல்ல, இந்த ஒருங்கிணைவும் ஒரு முகப்படுதலும் நீடித்து நிற்கக் கூடியதல்ல. அதுவும் தேர்தல் அரசியலில்.

ஆகவே, அதற்கு அப்பாலும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளை, இந்த ஒரு முகப்படுதலையும் ஒருங்கிணைவையும் தமிழ் இனவாதத்தின் திரட்சி (Accumulation of Tamil Racism) என்று NPP யும் ஏனைய சிங்களத் தரப்பும் வெளியுலகும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் உண்டு. மட்டுமல்ல, அப்படி ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி, NPP அரசாங்கம் தன்னுடைய வரலாற்றுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும் வேறு விதமாக இனப்பிரச்சினையைக் கையாள்வதற்கும் காரணமாகி விடும். ஆகவே, இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது.

மாறாக, அதற்கேற்ற வகையில் இதை மிகப் புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டும். அதில் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, NPP அரசாங்கத்தை முற்று முழுதாக எதிர்ப்பதாகக் காட்டாமல், அதனுடைய சரிகளுக்கு ஆதரவாகவும் தவறானவைகளுக்கு எதிராகவும் நிற்கிறோம் என வெளிப்படுத்துவது. அடுத்தது, நிரற்படுத்த வேண்டிய வேலைப்பட்டியலைப் பரிந்துரைப்பது –  பகிரங்கப்படுத்துவது. அதை மேற்கொள்ளும் வகையில் அழுத்தங்களை சினேகபூர்வமாகவும் அதற்கப்பாலும் அழுத்துவது. இவ்வாறு செய்யும்போது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அடிப்படையான உண்மைகள் தெளிவாகும். தவறான புரிதலுக்கு இடமிருக்காது.

இன்னொன்று, சமூகப் பிராந்திய அரசியலின் முக்கியத்துவத்தை (Importance of Socio-Regional Politics) வழமையான வாய்பாட்டு அறிதல்களுக்கு அப்பால், உணர்த்துவது. அதாவது, இனரீதியான அல்லது சமூக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இன்னும் இருப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும். அதனுடைய நியாயத்தைத் தெளிவாக்குவது அவசியம். இது மிக மிக அவசியமானது. இதில்தான் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இனவாதமாகச் சுருக்கவும் திரிவுபடுத்தவும் கூடிய அபாயமுள்ள இந்த விடயத்தை (அப்படித்தான் அதை மடைமாற்றம் செய்து வந்துள்ளனர்) பக்குவமாக – புத்திபூர்வமாகக் கையாள வேண்டும்.

கூடவே தனியே தமிழ் மக்கள் மட்டுமென்றில்லாமல், தமிழ் பேசும் சமூகத்தினர் என்ற அடிப்படையில் NPP ஐ எதிர்கொள்ள வேண்டியிருப்பதைப் பற்றிச் சிந்திப்பதும் நல்லது. குறைந்தபட்சம் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களோடாவது ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

வரவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பிராந்திய அரசியலை (Socio-Regional Politics) நெருக்கடிக்குள்ளாக்குவதற்கே NPP முயற்சிக்கும். ஆளும் தரப்பு அப்படி முயற்சிக்கும். அதற்காக அது கடுமையாகப் பாடுபடும். தேர்தல் அரசியலில் இது வழமையே. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததால் தமது ஒட்டுமொத்த அரசியலும் பின்னடைந்து விட்டதாகவோ, அதற்கு இனிமேல் இடமில்லை என்றோ யாரும் கருத வேண்டியதில்லை. அப்படியென்றால், பெரும்பாலான காலமும் தோல்வியின் தளத்திலேயே நின்ற – பயணித்த ஜே.வி.பி. எப்போதோ இல்லாதொழிந்து போயிருக்க  வேண்டும். அப்படி நிகழவில்லையே. அது தன்னுடைய அரசியலைப் புத்தாக்கம் செய்வதாக, தன்னுடைய அணுமுறைகளையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்வதாகவே கொண்டிருந்தது. அதன் விளைவே NPP யும் அதனுடைய வெற்றியுமாகும்.

தமிழ்த் தரப்பும் தன்னை முன்னிலைப்படுத்துவதற்குத் தகுதியாக்கம் செய்ய வேண்டும். அது வெறுமனே தேர்தற் கூட்டுக்கான ஒருங்கிணைவாக இல்லாமல், சமூகப் பிராந்திய அரசியலுக்கான (Socio-Regional Politics) அந்த அரசியலின் வெற்றிக்கான ஒருமுகப்படுதலாக இருக்க வேண்டும். அதுவே அதனுடைய நெருக்கடிகளிலிருந்து அதை விடுவிக்கும். அந்த மக்களையும்தான். இதற்கு அதனுடைய வரலாற்றுப் படிப்பினைகள் உதவும்.

Karunakaran-e1717046995835.jpg?resize=11கருணாகரன்

https://maatram.org/articles/11989

வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? — கருணாகரன் —

2 months 1 week ago

வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா?

February 26, 2025

வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா?

— கருணாகரன் —

யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க  வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே  ஏகப்பட்ட பிரச்சினைகள்.

புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும் செய்ய முயற்சிக்கிறது. என்பதால், வடக்கின் நிலைமைகளிலும் நியானமான – அவசியமான – மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதைச்  செய்ய வேண்டிய கடப்பாடு, மாற்றங்களை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கு உண்டு. அதை ஓரளவு உணர்ந்திருக்கிறபடியால்தான் வடக்கின் அபிவிருத்திக்கென 5000 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. வட பிராந்தியத்திற் சில சிறப்புத் திட்டங்களை விருத்தி செய்வதற்கும் முயற்சிக்கிறது.

வடக்கின் அபிவிருத்தியில் முக்கியமான ஒன்று, சுற்றுலாத்துறையை வளர்ப்பதாகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்வதன் மூலமாக பிரதேச அபிவிருத்தியைச் செய்ய முடியும். பொருளாதார ரீதியிலும் வளர்ச்சியை உருவாக்கலாம். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இது உதுவும். ஒரே கல்லில் மூன்று காய்கள். பொதுவாகச் சுற்றுலாத்துறையில் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் வளர்ச்சி ஏற்படுவதுண்டு. மக்களுக்கான தொழில் வாய்ப்புகளும் பெருகும். ஆகவே அரசாங்கம் வடக்கில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதைப்பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அதற்கான வளங்களும் வாய்ப்புகளும் வடக்கிற் தாராளமாகவே உண்டு.

1.      இயற்றை வளங்களோடு இணைந்திருக்கும் சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு, அவற்றை வளப்படுத்தி, சுற்றுலாவுக்கேற்ற மாதிரி வடிவமைப்பது. இதற்கு பூநகரி – கௌதாரிமுனை மணல்மேடுகள், கௌதாரிமுனைக் கடற்கரை (Beach), வேலணைக் கடற்கரை, நெடுந்தீவு, இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரி பறவைகள் சரணாலயம் (Nature Park), மன்னார் கடற்கரைகள், முல்லைத்தீவு – நாயாற்றுக் கடற்கரை, இரணைமடுக்குளம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், காரைநகர்க் கடற்கரை (Casuarina Beach) போன்றவை உண்டு. இதை விட வேறு மையங்களையும் அடையாளம் காண முடியும். இவை ஏறக்குறைய மாலைதீவு, கியூபா போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாவுக்கு நிகரானவையாக இருக்கும். இயற்கையோடிணைந்த உணவு முறைகளையும் இங்கே சேர்த்துக் கொள்வதாக இருக்கும்.

2.      பண்பாட்டுச் சுற்றுலா (Cultural tourism) வுக்குரிய இடங்களை விருத்தி செய்வது.  இது குறித்த பிராந்தியத்தின் பண்பாட்டு அடையாளங்கள், சொத்துகளின் மீது கவனத்தைக் குவிக்கும் வகையிலானது. இதற்கு நல்லூர், சந்நிதி, நயினாதீவு, கீரிமலை, மாவிட்டபுரம், மடு, திருக்கேதீஸ்வரம், புல்லாவெளி, பொன்னாலை, கந்தரோடை போன்ற இடங்களிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பௌத்த சின்னங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி அமைப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். கூடவே இதற்குத் தோதாக வடக்கின் கலை வெளிப்பாடுகளைக் (கூத்து, நாடகம், நடனம், ஓவியக் கூடம்) காணக் கூடியவாறு செய்ய வேண்டும். கேரளாவின் கதகளி, கண்டிய நடனம் போன்றவை உதாரணம். இந்தச் சுற்றுலாவில் பண்பாட்டைத் தேடி அறிய விரும்புவோரும் ஆன்மீக யாத்திரிகர்களும் அதையொட்டிய சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வரக்கூடும்.

3.      காலனிய கட்டிடங்கள் மற்றும் அதையொட்டிய மரபுரிமைகளை மையப்படுத்திய சுற்றுலா. (Colonial architectural heritage tourism). இதற்கு ஏற்கனவே உள்ள யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கோட்டை, மன்னார்க் கோட்டை, நெடுந்தீவில் உள்ள புராத கட்டிடங்கள், யாழ்ப்பாணம் பழைய கச்சேரி, சங்கானைத் தேவாலயம் மற்றும் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, மன்னார் அரிப்பு அல்லிராணி மாளிகை போன்ற புராதன சின்னங்களை மையப்படுத்த வேண்டும். அவற்றின் சூழலைச் சுற்றுலாவுக்குரியவாறு மாற்றியமைக்க வேண்டும். மேலும் பூநகரி,  இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை  போன்ற இடங்களில் உள்ள காலனித்துவ காலக் கோட்டைகள், வெளிச்ச வீடுகள்  யுத்தத்தினால் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றையும்  மீளமைப்புச் செய்தால், அவையும் இந்த வகைச் சுற்றுலாவுக்கு பெரிதும் உதவும். இதற்கு ஹொலண்ட் அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அல்லது அந்த நாட்டின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

4.      இதற்கு அப்பால் புதிதாக சுற்றுலா மையங்களை உருவாக்குவது. உதாரணமாக, வடமராட்சியில் முள்ளிக்குளம் மருதங்கேணிக்கும் இடையிலுள்ள களப்பை அகழ்ந்து படகுச் சவாரிகளை உருவாக்குவது. இதற்காக வெளிநாட்டுக் கடனைப் பெற்றாலும் அது பயனுடையதே. ஏனென்றால் அது செலவீனத்தை விடப் பன்மடங்கு வருவாயை ஈட்டித் தரக் கூடியது. அந்தக் களப்பு இயற்கை வளம் நிறைந்த அழகான சூழலில் அமைந்துள்ளது. பசுமைச் சுற்றுலாவாக இதை உருவாக்கலாம்.  அருகே வங்காள விரிகுடாவுடன் இணைந்த இந்து சமுத்திரமுண்டு. அதனுடைய கரை அழகான கடற்கரையகும். இங்கே கடலுணவும் கடற்கரைக் காட்சியும் மேலதிக வாய்ப்பாக உள்ளன. இதைப்போல இன்னோரிடம், நெடுந்தீவு உட்பட அனலைதீவு, எழுவை தீவு, கௌதாரிமுனை போன்ற இடங்களுக்கான படகுச் சவாரிகளை உருவாக்குவது. இந்த இடங்கள் மிக அழகானவை. அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளையும் கலை மற்றும் விற்பனைப் பொருட்களையும் உருவாக்கினால் போதும். அந்த இடங்களும் அபிவிருத்தியடையும்.

5.      வடக்கின் பிரத்தியேகமான அறிவுத்துறை, தொழிற்துறை சார்ந்த இடங்களை விருத்தி செய்தல். இவையும் ஒரு தொகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியவையே.

இவ்வாறு வடக்கின் சுற்றுலாவை பல வகையில் விருத்தி செய்யலாம் –  செய்ய வேண்டும். இலங்கையின் பிரதான வருவாயில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். அதற்கு வடக்கு மாகாணமும் தாராளமாகப் பங்களிக்க முடியும். சம நேரத்தில் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும்.

ஆனால், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கின் சுற்றுலாத்துறைக்கென சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது குறித்த சிரத்தையைக் காணவும் முடியவில்லை. இது புதிய அரசாங்கத்தின் முதலாவது பாதீடு என்பதால், அடுத்த ஆண்டுகளில் இதைக் குறித்த அக்கறைகள் மேலெழக் கூடும். அதைக்குறித்த சிந்தனை இருக்குமானால், எதிர்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்.

வடக்கு மாகாணசபையில்  சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பாக இருப்போருக்கு இதைப்பற்றிய புரிதலோ கற்பனையோ போதாது.  அவர்கள் வழமையான – பாரம்பரியமான சில இடங்களை (மையங்களை) யே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். அந்த இடங்கள் பலரும் பார்த்துப் பழகியவை என்பதை விட அனைவரையும் கவரக் கூடியவையும் அல்ல. புதிய இடங்களைத் தேடிக் காணும் முயற்சியோ, அவற்றைச் சுற்றுலாத்துறைக்கு ஏற்றமாதிரி மேம்படுத்தக் கூடிய அக்கறையோ இல்லை. கேட்டால், தமக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று ஒற்றை வரியில் தமது பொறுப்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த விமர்சனம் அவர்களைக் குற்றம் சாட்டுவதற்கானதல்ல. பதிலாக அவர்களுடைய பொறுப்பை உணர வைப்பதற்கும் அவர்களை முயற்சிக்குமாறு தூண்டுவதற்குமானதாகும்.

சுற்றுலாத்துறையின் அடிப்படைகளில் ஒன்று, கொண்டாட்டத்தையும் அறிவூட்டலையும் வியப்பையும் சமனிலையில் அளிப்பதாகும். அதுவே தீராத கவர்ச்சியையும் தாகத்தையும்  உண்டாக்குவது. பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுவதாக இருத்தல். எண்ணும்தோறும் வியப்பூட்டுவது. பார்க்க முன்பும் பார்த்த பின்பும் தேடலுக்கு உரியதாக இருத்தல். இவை இருந்தால்தான் பலரையும் கவர முடியும். இவையில்லாத  சுற்றுலா மையங்கள் விரைவில் சலிப்படைய வைத்து விடும்.

ஆகவே சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் சுற்றுலா மையங்களின் சூழலையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் புத்துணர்வாக்கம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். புதிய மையங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் பளபளப்பாக இருக்கக் கூடியவாறு நாம் சில பொருட்களையோ பாத்திரங்களையோ மினுக்கி, நேர்த்தியாக அடுக்கி வைப்பதில்லையா? அதைப்போல இந்தச் சுற்றுலா மையங்களை மினுக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

உலகம் விந்தைகளால் நிரம்பியுள்ளது. இயற்கையாகவும் செயற்கையாகவும் இந்த விந்தை உள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் என்று மக்கள் பெருந்தொகை பணத்தைச் செலவழித்துப் பயணம் செய்கிறார்கள். கூடவே தங்களுடைய நேரத்தையும் செலவிடுகிறார்கள். அப்படிச் செல்வோரை நாமும் கவர்ந்திழுக்க வேண்டும் என்றால் அதற்கான ஈர்ப்பை உண்டாக்கக் கூடிய சுற்றுலாப்புள்ளிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். மட்டுமல்ல, இதொரு உலகளாவிய போட்டி என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல நாடுகள் சுற்றுலாப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக்  கொண்டுள்ளன. அவற்றுடன் நாம் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே இதற்கமைய எங்களையும் எங்களுடைய சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கில் சில சுற்றுலா மையங்கள் இயல்பாக, இயற்கையாக இருக்கின்றன. அவற்றை மேலும் விரிவாக்கிப் புதுக்குவது அவசியம். குறிப்பாக பூநகரி கௌதாரிமுனையில் உள்ள Beach  சும் இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் Nature Park க்கும். போக்குவரத்துக்கு வாய்ப்பாக வீதிகளைப் புனரமைத்து, தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளோடு இவற்றை சற்று வளமாக்கினால், மிகச் சிறப்பான சுற்றுலா மையங்களாக மிளிரும்.

கௌதாரிமுனை Beach ஆழம் குறைந்த கடலைக் கொண்டது. மிக நீண்ட Beach. சுற்றயல், மணல் மேடுகளும் தாழம் புதர்களும் நிறைந்த அழகான இயற்கை அரண். நீராடுவதற்கும் நீந்திக் களிப்பதற்கும் அருமையான இடம். இதை இப்பொழுது படையினரே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதை மாற்றிச் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வழங்க வேண்டும். அத்துடன் இந்த Beach க்குச் செல்லக் கூடிய போக்குவரத்துப் பாதையைச் சீராக்கி, போக்குவரத்தையும் குறைவான செலவில் உருவாக்கலாம். இந்த Beach க்கு அண்மித்ததாக மண்ணித்தலையில் சோழர் காலச் சிவன் கோயில் ஒன்றுள்ளது. அதனுடைய சிதைவுகளே எஞ்சியுள்ளன. ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதிரி வரலாற்று எச்சங்கள்தான் ஈர்ப்புக்குரியவை. அங்கிருந்து 15 நிமிடத்தில் யாழ்ப்பாணத்துக்குப் படகில் செல்ல முடியும். அதற்கான இறங்குதுறை ஒன்றை அமைத்தால், உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக இந்த Beach இல் நிறைவர்.

இதைப்போல இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியோடிருக்கும் Nature Park கும் பறவைகள் சரணாலயமும் (Bird sanctuary) சற்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். சரணாலயத்தை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் பறவைகளே விரிவாக்க வேண்டும். ஆனால், அந்தச் சூழலை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அதைப் பார்க்கச் செல்லும் வழிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும். அங்கே 136 பறவை இனங்கள் உண்டு. 187 தாவரங்கள் இருப்பதாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் பறவைகள் தங்குவதற்கான வில்லுகளும் (குளங்களும்) நீண்ட வெளியும் உண்டு. ஓரம் நீளத்துக்கும் களப்புக் கடலும் கண்டற்காடுகளும். மறுபக்கத்தில் அலைமோதிக் கொண்டிருக்கும் இந்து சமுத்திரம்.

நமது பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர  வேண்டுமாக இருந்தால், அதற்குரிய சிறப்பம்சங்கள் அங்கங்கே இருக்க வேண்டும். அல்லது அவற்றை உருவாக்க வேண்டும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் என்ற வணிகக் கட்டிடம்  இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதைப்போல எல்லா இடங்களிலும் கட்ட முடியாது. அதற்கு மக்களிடமுள்ள தாங்குதிறன் இடமளிக்காது. ஆனால், வெவ்வேறு பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்தியங்களின் வளங்கள், வாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொன்றையும் உருவாக்கலாம். அது அந்தந்தப் பிராந்தியங்களின் அடையாளங்களைக் கொண்டிருந்தால் சிறப்பு.

யுத்தம் முடிந்த பிறகு, மிக அதிகமானோர் வடக்கு நோக்கி வந்தனர். நீண்டகாலமாக யுத்தம் நடந்த ஒரு பிரதேசத்தை, யுத்த்ததினால் அழிந்த பகுதிகளை, யுத்த காலத்தில் முழுதாகவே மூடப்பட்டுத் தடை செய்யப்பட்டு, இருண்டிருந்த ஒரு பிராந்தியத்தைப் பார்ப்பதற்கு விரும்பினார்கள். யுத்தத்தின் எச்சங்களையும் வடுக்களையும் கண்டு திரும்பினார்கள்.

இது யுத்தம் முடிந்த பிறகான சூழல். இனியொரு புதிய யுகத்தைக் காண்பதற்கான காலம். அதற்கான அக – புற விழிகளை நிறைக்கும் வகையில் இன்றைய – நாளைய சுற்றுலா அமைய வேண்டும். சுற்றுலா மட்டுமல்ல, இன்றைய நாளை நாட்களும் சூழலும் அமைவது அவசியம். அதற்கான வாசல்கள் திறக்கப்படட்டும்.

https://arangamnews.com/?p=11848

யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்

2 months 1 week ago

யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்

February 25, 2025

யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது  எதிர்பார்க்கப்பட்டதே.  ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே  அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில் இருந்து விலகுவதே அவரது வெளியுறவுக் கொள்கையின் தீர்க்கமான அம்சமாக இருக்கிறது என்பதை மீணடும்  தெளிவாக  நிரூபித்து நிற்கின்றன.

உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும்  காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கும் ட்ரம்ப் நிருவாகம் தீர்மானித்தது. 

 அமெரிக்காவின் உலகளாவிய உதவிக்கான ஒரு  கட்டமைப்பாக ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக செயற்பட்டு வந்திருக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் ‘யூ.எஸ். எயிட்’  (United States Agency for International Development – USAID)  செயற்திறன் அற்றதாகவும் கோட்பாட்டு முரண்பாடுகளை கொண்டிருப்பதாகவும் ஒரு காரணத்தைக் கூறி ட்ரம்ப் நிருவாகம் வெளிநாட்டு உதவிகளை  90 நாட்களுக்கு முடக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தை மூடி இராஜாங்கத் திணைக்களத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்க அரசாங்கத்தின்  நிறுவனங்கள்  அமெரிக்காவின் உலக மேலாதிக்க மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற போதிலும், உலகம் பூராவும் வாஷிங்டனின் மென் அதிகாரத்தை  (Soft Power) மேம்படுத்தும் ஒரு முக்கிய கருவி என்று வர்ணிக்கப்பட்டுவந்த  யூ.எஸ். எயிட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டொலர்கள் உதவிகளை நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும்  வழங்கிவருகிறது. வெளிநாட்டு உதவிகளை முடக்கும் ட்ரம்ப் நிருவாகத்தின் தீர்மானத்தின் விளைவாக உயிர் வாழ்வுக்காக அமெரிக்க உதவியில் தங்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படப் போகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் செயற்திறன் திணைக்களத்தின்  (Department of  Government Efficiency)  தலைவரான உலகின் பெரிய  தனவந்தர் இலன் மஸ்க் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமெரிக்கவை வெறுக்கும் தீவிரவாத இடது – மார்க்சியவாதிகளினதும் நம்பமுடியாத பயங்கரமான கும்பல்களினதும் கூடாரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். 

எந்தவிதமான சான்றையும் முன்வைக்காமல் யூ.எஸ். எயிட்டை ‘கிறிமினல்  அமைப்பு ‘ என்று வர்ணித்த மஸ்க் ‘அந்த நிறுவனம் சாவதற்கான நேரம் வந்து விட்டது’ என்றும் கூறினார். அதேவேளை,  ஜனாதிபதி ட்ரம்ப் யூ.எஸ்.எயிட் தீவிரவாத கிறுக்கர்கள் கும்பல் ஒன்றினால் நிருவகிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்களை தாங்கள் வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும்  ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார். 

வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இதுகாலரை அமெரிக்க நிருவாகங்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் கொள்கைகளும் நடைமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் நலன்களுக்கும் விழுமியங்களுக்கும் முரணானவையாக அமைந்திருப்பதாக கருதும் ட்ரம்ப் “அந்த உதவிகள் வெளிநாடுகளின் சிந்தனைகளை மேம்படுத்துவதற்கும் நாடுகளுக்குள்ளும் நாடுகள் மத்தியிலும் இணக்கப்போக்கான, உறுதிவாய்ந்த உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்திருப்பதாக” கூறுகிறார்.

ட்ரம்ப் நிருவாகத்தின் இந்த தீர்மானங்களை  உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் கடுமையாக கண்டனம் செய்துவருகின்ற அதேவேளை, இலங்கையில் இரு அரசியல்வாதிகள் ஆதரித்து விசித்திரமான  கருத்துக்களை வெளியிட்டு ட்ரம்பின் விசிறிகள்  போன்று நடந்து கொண்டிருப்பதைக்  காணக்கூடியதாக இருக்கிறது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவுமே அவர்கள். 

இலங்கையில் யூ.எஸ். எயிட்டின் நிதியுதவிகள் குறித்து விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை  விடுத்த  நாமல் ராஜபக்ச “மற்றைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாத” ட்ரம்பின் கொள்கையை பாராட்டியிருப்பதுடன் அமெரிக்க வரியிறுப்பாளர்களின் நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

வெளிநாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளுக்கு யூ.எஸ். எயிட்டின் நிதி பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருப்பது  நாமல் ராஜபக்சவை கவர்ந்திருக்கிறது போன்று தெரிகிறது. தங்களது ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருந்ததாக கூறும் ராஜபக்சாக்களுக்கு உலகம் வெறுக்கின்ற  ட்ரம்ப்  ஒரு ‘சிறந்த அரசியல்ஞானியாக’ தெரிவது விசித்திரம்.

அதேவேளை, அமெரிக்காவை வெறித்தனமாக தாக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்ட விமல் வீரவன்சவும் யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் ‘தவறான செயல்களை’ ஜனாதிபதி ட்ரம்ப் அம்பலப்படுத்துவதாகக்  கூறி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அவர்  எக்ஸ் சமூக ஊடகத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் ” அமெரிக்க தனவந்தர் ஜோர்ஜ் சோரோஸ் ஊடாக  வழங்கப்படும் யூ.எஸ். எயிட் நிதியுதவி இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தோற்றுவித்த  நெருக்கடிகளை அம்பலப்படுத்துகின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி.  குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிக்கின்ற தூதுவர்களையும் அம்பலப்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்பை வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையீடுகளைச் செய்யாத வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பவராக ராஜபக்சவும் வீரவன்சவும் ‘கண்டு பிடித்திருப்பது’ தான் இங்கு விசித்திரமான ஒரு விடயமாகும்.  டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போவதாகவும்  கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவதற்கு விரும்புவதாகவும் ட்ரம்ப்  கூறியதை அறிந்த பின்னரும் கூட  இந்த இரு இலங்கை அரசியல்வாதிகளும் ட்ரம்பை  ‘தலையீடு செய்யாத கொள்கைக்காக’  பாராட்டுகிறார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது? 

ராஜபக்சவும் வீரவன்சவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீதான தங்களது வெறுப்பின் காரணமாகவே யூ.எஸ். எயிட் மீதான ட்ரம்ப் நிருவாகத்தின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சியை வீழ்த்திய மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் செயற்பட்டதாக இவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள். பல தொண்டர் நிறுவனங்களுக்கும் சிந்தனைக் குழாம்களுக்கும் (Think Tanks) எதிரான தங்களது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு  யூ.எஸ். எயிட்டுக்கு எதிராக ட்ரம்ப் நிருவாகம்  நடவடிக்கையில் இறங்கியிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வீரவன்சவை பொறுத்தவரை, உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் செய்த மனிதாபிமான  உதவிகளைக் கூட பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும்  வழங்கப்படும் ஆதரவு என்று விமர்சித்தவர். இராணுவ ரீதியாக அன்றி அரசியல் ரீதியாக தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வைக் காணவேண்டும் என்று குரல் கொடுத்த தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான விசமத்தனமான பிரசாரங்களின் முன்னரங்கத்தில் வீரவன்ச போன்றவர்கள் நின்றார்கள்.  

அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள்   நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள். 

அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ச தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இவர்களுக்கும் ட்ரம்புக்கும் இடையே உணர்வுகள் ஒத்துப் போவதற்கு காரணம் ‘மற்றவர்கள்’ மீதான வெறுப்பேயாகும். குறுகிய மனப்பான்மை என்பது பெரும்பாலும் வெறுப்புணர்வில் இருந்தே வெளிக் கிளம்புகிறது. அமெரிக்காவில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும்  குடியேற்றவாசிகளுக்கும்  எதிரான வெறித்தனமான உணர்வைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப்பை,  தங்களது அரசியல் மீட்சிக்கு இனவாதத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருக்கும்  இவர்கள் கோட்பாட்டு அடிப்படையிலான தங்களது நேசசக்தியாக வரித்துக் கொள்வதில் காட்டும் நாட்டம் ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் சகலதுமே வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் செயற்படுகின்றன என்று கூறமுடியவிட்டாலும், உண்மையில் சமூகங்களின்  நலன்களுக்காக பயனுறுதியுடைய செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.  

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளரான கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த வாரம் ‘முற்றுகைக்குள்ளாகியிருக்கும்  யூ.எஸ். எயிட்டும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ‘  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பட்டினிக் கொடுமை மற்றும் போர்ச் சூழல்களில் மக்களின் இடர்பாடுகளைத் தணிப்பதில் அமெரிக்க உதவி முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கும் உலகின் பிராந்தியங்களில் பெரும் எண்ணிக்கையான மக்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்கின்ற அதேவேளை, யூ.எஸ். எயிட் உதவி  நிறுத்தம் இலங்கையில் முற்றிலும் வேறுபட்ட காரணத்துக்காக செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையிலும் உலகம் பூராவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.  இந்த நிறுவனங்களுக்கு இதுகாலவரையில் மிகவும்  பெரியளவில்  நிதியுதவியைச் செய்த நிறுவனமாக யூ.எஸ். எயிட் விளங்கி வந்திருக்கும் நிலையில்,  நிதியுதவி இடைநிறுத்தம் பல தொண்டர் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைப்புச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மாத்திரமல்ல, சில தொண்டர் நிறுவனங்கள் ஏற்கெனவே மூடப்பட்டும் விட்டன என்றும் ஜெகான் பெரேரா கூறியிருக்கிறார். 

முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகள் ஊழல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களே மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக  யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும்  எதிராக பிரசாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். தங்களது வீழ்ச்சிக்கு தவறான ஆட்சிமுறையும் ஊழல் முறைகேடுகளுமே  உண்மையில் காரணம் என்பதை இந்த அரசியல்வாதிகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. யூ.எஸ். எயிட்டின் நிதியுதவியைப் பெற்றுவந்த அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் சதி வேலைகள் காரணமாகவே தாங்கள் இடைநடுவில் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்றும் ஜெகான் பெரேரா எழுதியிருக்கிறார்.

யூ.எஸ். எயிட் உதவி திடீரென்று இடை நிறுத்தப்பட்டதனால் இலங்கை உதவிகளைப் பெறுவதற்கு ‘மாற்றுவழிகளை நாடவேண்டியிருக்கும்’ என்று அரசாங்க பேச்சாளரான சுகாதார, தகவல்துறை அமைச்சர் நாளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். யூ.எஸ். எயிட்  ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அந்த நிறுவனம் இலங்கைக்கு 200 கோடி டொலர்களை  (சுமார்  72 ஆயிரம் கோடி ரூபா) உதவியாக வழங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

 கெடுபிடியுத்தம் (Cold War) உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் உலக நாடுகளில்  சோவியத் யூனியனின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான ஒரு அங்கமான வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜனநாயக கட்சி ஜனாதிபதியான ஜோன்  எவ். கென்னடியினால் 1961 ஆம் ஆண்டில் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

https://arangamnews.com/?p=11836

கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

24 FEB, 2025 | 09:56 AM

image

டி.பி.எஸ்.ஜெயராஜ் 

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொலையின் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விளைவேயாகும். அவர் செய்ததாக அல்லது சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு குற்றச்செயல்கள் ஊடகங்களின் பல்வேறு பிரிவுகளினாலும் சமூக ஊடகங்களினாலும் வெளியிடப்பட்டதேயாகும்.  அந்த குற்றச்செயல்களில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக  அல்லது திரிபுபடுத்தப்பட்டவையாக தோன்றுகின்றன.  அவ்வாறு இருந்தாலும், கணேமுல்ல சஞ்சீவவின் கடந்த காலத்தின் எதிர்மறையான அம்சங்கள் தற்போதைய பின்புலத்தில் ஊடகங்களினால் குறைத்து மதிப்பிடக்கூடியவையோ அல்லது கவனிக்காமல் விடப்படக்கூடியவையோ அல்ல. 

இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியமான ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்வதற்கு முன்னர்  மேற்கொள்ப்பட்ட  ஒரு  சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவ சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரசியல்வாதி வேறு யாருமல்ல, யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனேயாவார்.

கொழும்பில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு சஞ்சீவ உட்பட கொழும்பு பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் உதவியை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில பிரிவினர் உதவியை நாடினார்கள் என்ற அடிப்படையில் பொலிசார் அன்று விசாரணைகளை முன்னெடுத்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக்காவலில் இருந்த பிறகு கணேமுல்ல சஞ்சீவவும் மற்றையவர்களும் அவர்களுக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சுமந்திரன் தொடர்பான விவகாரத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. சுமந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஊடகப் பிரசாரம் ஒன்றே கணேமுல்ல சஞ்சீவ -- சுமந்திரன் கதையின் மீது கவனம் மீண்டும் திரும்பியதற்கான ஒரு முக்கிய காரணமாகும். நடந்தது இதுதான். 2010 ஆம் ஆண்டு தொடக்கம்  15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 2024 தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.

குறைக்கப்பட்ட பாதுகாப்பு

ஜனாதிபதி அநூரா குமார திசாநாயக்கவும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அமைச்சர்களுக்கும் ஏனைய அதிமுக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்தது என்பது எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட  பாதுகாப்புக்கும்  அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்து இரு பாதுகாப்பு அதிகாரிகளை வழங்கும் நடைமுறையும் நிறுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது. ஆனால், பொதுப் பாதுகாப்பு அமைச்சு சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் மதிப்பீடு ஒன்றைச் செய்து அதன் பிரகாரம் அவர்கள் ஒவ்வொருக்கும் இரு பொலிஸ் மெய்க்காவலர்களை அனுமதித்தது. முன்னாள் அமைச்சர்கள் ரிறான் அலஸ், டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர். முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் பாதுகாப்புக்கும் இரு அதிகாரிகள் வழங்கப்பட்டனர்.

தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினான சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சாணக்கியன் விடயத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடொன்றை தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சே தீர்மானத்தை எடுத்தது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரான சிறீதரன் தனக்கு பாதுகாப்பைக் கோரியதையடுத்தும் ஜனாதிபதி திசாநாயக்கவுடனான  நேரடிச் சந்திப்புக்கு பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனக்கு வளங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவில் இருந்து தன்னுடன் நீணடகாலமாக பணியாற்றிய பொலிஸ் மெய்க்காவலர் நீக்கப்பட்டதை சிறிதரன் ஆட்சேபித்ததாக கூறப்படடது.

இலங்கையின் தற்போதைய தமிழ் அரசியல் சுமந்திரனைச் சுற்றிச் சுழல்வதாகவே இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் அரசியல் சுமந்திரனை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ஒரு விவகாரமாக இருப்பதாக இலங்கை விவகாரங்களை நீண்டகாலமாக அவதானித்துவரும் இந்திய அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார். அத்தகைய ஒரு பின்புலத்தில், சுமந்திரனுக்கு எதிரான சக்திகள்  அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து பிரச்சினை கிளப்பியிருக்கின்றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை அலட்சியம் செய்யும் இந்த சக்திகள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுடன் சுமந்திரனுக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் காரணமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று விசமத்தனமான பிரசாரம் ஒன்றை செய்து வருகின்றன. 

இந்த பிரசாரத்தை எதிர்க்கும் சுமந்திரனின் விசுவாசிகளும்  ஆதரவாளர்களும் அரசாங்கம்  பாதூகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சுயாதீனமான மதிப்பீடு ஒன்றைச் செய்த பின்னரே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாறு இருப்பதையும் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். கணேமுல்ல சஞ்சீவவின் கொலை அவரின் கடந்தகால செயற்பாடுகள் அல்லது தவறான நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதனால், சுமந்திரனை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில்  கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு குறித்து பெருமளவு ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல வாசகர்கள் என்னிடம் விசாரித்தார்கள். இந்த விவகாரம் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் சஞ்சீவவை நீதிமன்றம் விடுதலை செய்தபோது நான் அது பற்றி அந்த நேரத்தில் விரிவாக எழுதினேன். அதனால் அன்று என்ன நடந்தது என்பதை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் மீட்டுப்பார்க்க விரும்புகிறேன்.

இரகசியப் பொலிஸ் விசாரணை 

கொழும்பு பாதாள உலக உறுப்பினர்களும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் சம்பந்தப்பட்ட மோசடி ஒன்று தொடர்பாக பொலிஸ் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் ஆயுதக்கிடங்குகளை தோண்டி துப்பாக்கிகளையும் வெடிபொருட்களையும் களைமோர் கண்ணி வெடிகளையும் எடுத்து கொழும்பில் உள்ள வன்முறைக் குய்பல்களுக்கு அவற்றை விற்பனை செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டது. விடுதலை புலிகளுடனான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்த நிலையில் குற்றவியல் புலனாய்வு பிரிவு பயங்கரவாத விசாரணைப் பிரிவையும் விசாரணைகளுக்குள் சேர்த்துக் கொண்டது.

வத்தளையில் இருந்த விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமை இந்த விசாரணைகளில் ஒரு  ஆரம்பக்கட்ட முன்னேற்றமாக அமைந்தது. அவரின் பெயர் கணபதி கதிரவேலு. அவர் மீதான தீவிர விசாரணையின் விளைவாக புதிய துப்புக்கள் கிடைத்தன. தமிழரசு கட்சியான  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  சுமந்திரனை கொழும்பில் வைத்து கொலை செய்வதற்கு  சதித்திட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சில விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தீட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது. இதற்காக அவர்களன் பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்த சிலரை அணுகினார்கள். உயர்ந்த மாடிக்கட்டிடம் ஒன்றின் பல்கணியில் இருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் சுமந்திரனைக் கொலை செய்வதே நோக்கம்.

அப்போதுதான் அந்த சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவராக கணேமுல்ல சஞ்சீவவின் பெயரும் வெளியில் வந்தது. முன்னாள் விடுதலை புலிகளுடனும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அந்த இயக்க உறுப்பினர்களுடனும் ஆயுத வியாபாரத்தில் சஞ்சீவ ஈடுபட்டிருந்தார் என்பது அம்பலத்துக்கு வந்தது. முன்னதாக சஞ்சீவ கொந்தராத்துக் கொலைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் மிரடடிப் பணம் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட போதிலும்,  அரசியல் கொலைகளில் அவர் சம்பந்தப்பட்டதாக அறிய வரவில்லை. இந்த தகவல் வெளியானபோது கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின்  பேரில் சஞ்சீவ விளக்கமறியலில் இருந்தார்.

கணேமுல்ல சஞ்சீவவை கைதுசெய்த குற்றவியல் புலனாய்வு பொலிசார் சுமந்திரனை கொலை செய்வதற்கு சதிசெய்ததாக சந்தேகத்திலும் ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்பனையில் ஈடுபட்டமைக்காகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யத் தொடங்கினர். சஞ்சீவ மீதான விசாரணையின் விளைவாக மேலும் பல பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

2018 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பன்னிரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 பேரும் கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் லங்கா ஜெயரத்ன ( B/ 6284/ 01/ 19)  முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் இருந்த பெயர்களின் பிரகாரம் 11 பேர் சிங்களம் பேசுபவர்கள், 4 பேர் தமிழ் பேசுபவர்கள்.

15 பேர் 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட 15 பேரினதும் பெயர்கள் வருமாறு ;  1)  இராசலிங்கம் சிவராஜ், 2)  கல்யாணகுமார சசிகுமார, 3) ஜி.பி.எம்.பி. கவிந்த பத்திரன, 4) கே.கே.எம்.டி. விஜய சிறிவர்தன, 5) கே.பி.ஐ.ஆர். கருணாநாயக்க பத்திரன, 6) எம்.டி. நிமால் ஹர்ஷன, 7)  எம்.கே பிரதீப் தேசப்பிரிய, 8) ஏ. பிரபாகர் விக்கிரமசிக்க, 9) எவ்.எஸ். ஜொனாதன் டட்லிலி, 10) டபிள்யூ. ஜூட்  நிரோஷன், 11) டபிள்யூ. சலான் குமார, 12) கணபதி கதிரவேலு, 13) கே. உதேசித்த விதுரங்க, 14) ஆர்.ஏ. அமில நுவான், 15) கணேமுல்ல சஞ்சீவ அல்லது மாலிங்கமுவ சஞ்சீவ என்ற சஞ்சீவ சமரரத்ன.

' பிலாவ ' சித்திரைப் புத்தாண்டுக்கு இரு நாட்கள்  முன்னதாக கொழும்பு பிரதம மாஜஸ்திரேட் ஸ்ரீ ராகல (2019 ஆம் ஆண்டின் முற்பகுதிரில்  இருந்து) இரு வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த பதினொரு சந்தேக நபர்களையும் விடுதலை செய்தார். அவர்களில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல  சஞ்சீவவும் அடங்குவார். சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்துக்காகவும் வேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறு பத்துப் பேரும  விடுதலை செய்யப்பட்டனர்.

சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்துடன் சேர்த்து, வடக்கில் விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் கண்ணிவெடிகள், ரி -- 56 ரைபிள்களை தோண்டியெடுத்து அவற்றை கொழும்புக்கும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் கடத்திவந்து பாதாள உலகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்தது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்த 15 சந்தேகநபர்களில் 11 பேருக்கு எதிராக விசாரணைகளைத் தொடருவதற்கு  போதிய சான்றுகள் இல்லை என்று சட்டமா அதிபர் தெரியப்படுத்தியிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து அவர்களை கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் புத்திக்க ஸ்ரீ ராகல விடுதலை செய்தார். பதினொரு பேருக்கும் எதிராக வழக்குத் தொடுப்பதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று அன்றைய சட்டமா அதிமர் தப்புல டி லிவேரா  பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார். மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் எதிராக அண்மைய எதிர்காலத்தில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆனால், மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்ல. அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால், நான் கூறுவது சரியான தகவல் இல்லை என்றால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கணேமுல்ல சஞ்சீவவை பொறுத்தவரை, சுமந்திரனுடன் தொடர்பில்லாத வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. 

கணேமுல்ல சஞ்சீவவும் ஏனைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்ட போதிலும், சமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் தனியான விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவு தொடர்ந்து நடத்தியது என்பது கவனிக்கத்தக்கது. தனியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்தன.  ஆனால்,  சஞ்சீவ  அந்த விசாரணைகளின்  அல்லது வழக்கின் ஒரு அங்கமாக இருக்கவில்லை.

சதிமுயற்சி கண்டுபிடிப்பு

சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட மேற்குறிப்பிட்ட சதித்திட்டத்தின் விபரங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிசாரே. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அன்றைய பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சல்வா தானே அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்து தனது அதிகாரிகளை வழிநடத்தினார்.  தீவிர விசாரணைக்குப் பிறகு 2016 டிசம்பர் 23 ஆம் திகதி சுமந்திரனுக்கு எதிரான சதி தொடர்பிலான உறுதியான சான்றுகள் பயங்கரவாத விரசாரணைப் பிரிவுக்கு கிடைத்தன. விசாரணைகள் தொடர்ந்தன. கைதுகளும் இடம்பெற்றன.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கண்டறியப்பட்ட தகவலின் பிரகாரம் சுமந்திரனை இலக்கு வைத்து மூன்று தடவைகள்  கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் விளைவாக அவர்களின் கொலை முயற்சிகள் தோல்விகண்டன. மூன்று சந்தர்ப்பங்களிலுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பி -- 402 சொரணப்பற்று -- தாளையடி வீதியில் சுமந்திரன் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வெடிகருவிகளைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்வதற்கே முயற்சிக்கப்பட்டது. மருதங்கேணிக்கு அவர் போய்வந்து கொண்டிருந்தார். சந்தேகநபர்கள் கைது செய்யப்டும்வரை தனக்கு எதிரான மூன்று கொலை முயற்சிகள் பற்றியும் சுமந்திரனுக்கு எதுவும் தெரியாது.

கொழும்பு மேல் நீதிமன்றம் 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மருதங்கேணி பகுதியில்  வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட சதிமுயற்சி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதல் தடவையாக 2017 ஜனவரியில் விசேட அதிரடிப்படை யின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த சதித்திட்டம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரமான புலிகள் இயக்க பிரகிருதிகளினால் தீட்டப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேருக்கு (ஒருவர் இல்லாமலேயே) எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ( HC/ 242/ 2018 ) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மருதங்கேணி சதிமுயற்சி என்று கூறப்பட்ட அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரின் பெயர்கள் வருமாறு ; 1) சோலை குமரன்  அல்லது மாஸ்டர் என்ற காராளசிங்கம் குலேந்திரன், 2) கடலன் அல்லது ஜனா என்ற மரியநாயகம் அஜந்தன், 3) வேந்தன் என்ற முருகையா தேவேந்திரன், 4) மதன் அல்லது பரதன் என்ற முருகையா தேவேந்திரன். 

காந்தன் அல்லது வெற்றி என்ற மகாத்மாஜி அனோஜன் என்பவரே ஐந்தாவது பிரதிவாதி. அவுஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை  இடம்பெற்றது. கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஒரு கணிசமான காலமாக வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சுமந்திரன் சாட்சியமளித்தார். ஒரு சில அவுஸ்திரேலிய வாசிகளும் சாட்சியம் அளித்தனர். விசாரணை மந்தகதியில் நடைபெற்று வருகின்ற போதிலும், வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம்.

மருதங்கேணி சதிமுயற்சி 

சுமந்திரனை கொலை செய்வதற்கான இந்த மருதங்கேணி சதி முயற்சிககு புறம்பாக, வேறுபட்ட நேரங்களில் அவரை இலக்கு வைத்து வேறுபல சதி முயற்சிகளையும் பொலிசார் கண்டு பிடித்திருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் வன்முறை நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் விடுதலை புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியுமே ஒரு இலக்காக சுமந்தி ரனை " "சம்பந்தப்படுத்துவதாகவே " இருந்திருக்கின்றது.

முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கொலைச்சதி முயற்சிகளில், இலக்குகளாக டக்ளஸ் தேவானந்தா அல்லது 'கேணல்' கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனே இலக்குகள் என்று தவறாக  கருதப்பட்டது. ஆனால்,  உண்மையான இலக்கு சுமந்திரனே என்று தெரிந்துகொண்டபோது விசாரணையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

வெளிநாடுகளால் வாழும்  புலிகளும்  அவர்களின் ஆதரவாளர்களும் (அவர்களில் பலர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பெருமளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள்) இலங்கையில் பணக்கஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளுக்கு  நிதியுதவியைச் செய்வதன் மூலமாக சுமந்திரனை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இது தொடர்பில் பல வருடங்களாக சந்தேகத்தில் பலர் கைதுசெய்யப்பட்டு புலனாய்வாளர்களினால்  விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். 

சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்புக்கு புறம்பாக, சுமந்திரனின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களும் வழங்கப்பட்டிருந்தார்கள்.  அவரைக் கொலை செய்வதற்கான சதிமுயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே அவ்வாறு செய்யப்படடது. பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சுமந்திரனுக்கு நம்பகமான உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால், கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் விவகாரத்தை மெத்தனமான முறையில் நோக்கினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு 

சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு  முதல் தடவையாக 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தான் வழங்கப்பட்டது. 52 நாள் அரசியலயைப்புச் சதியின்போது 2018 நவம்பரில் அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்ட்டது. மீண்டும் அவருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு 2019 மார்ச்சில் வழங்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பிறகு 2019 நவம்பரில் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. 2020  ஜனவரியில் மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2020 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது அந்த பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. மீண்டும் 2021 பெப்ரவரியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவின் இந்த நடவடிக்கை பலரின் கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால், மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

எந்தவொரு கட்டத்திலுமே தனக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் தானாக வேண்டுகோள் விடுத்ததில்லை. அவருக்கு பயங்கரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று இருந்ததன் காரணத்தால் சிறிசேன -- விக்கிரமசிங்க அரசாங்கமும் கோட்டாபய  -- மகிந்த அரசாங்கமுமே விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்கின. அவருக்கு விசேட அதிரடிப்படை ப்துகாப்பை வழங்குவதும் பிறகு விலக்கிக் கொளாவதும் எப்போதுமே முற்றிலும் அரசாங்கத்தின் தீர்மானமாகவே இருந்து வந்திருக்கிறது.

சரத் வீரசேகர

2021 ஜனவரியில் கோட்டாபய அரசாங்கத்தின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் சுமந்திரனைச் சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தியை அவருக்கு அனுப்பினார். இருவரும் சந்தித்தபோது அண்மைய அச்சுறுத்தல் மதிப்பீடு பற்றியும் சுமந்திரனின் பாதுகாப்புக்கு கூடுதல் அச்சுறுத்தல் பற்றியும் விரசேகர அறிவித்தார். சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்படவேண்டும் என்று சிலர் ஆர்வப்படுகின்ற ஆர்வப்பட்ட போதிலும் கூட அது அகற்றப்படமாட்டாது என்று அமைச்சர் அவருக்கு உறுதியளித்தார். ஆனால், ஒரு மாதம் கழித்து 2021 பெப்ரவரி முற்பகுதியில்  சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை முன்னறிவித்தல் எதுவுமின்றி அதே வீரசேகர நீக்கினார்.

மேலும், சுமந்திரனுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்ற போதிலும் அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.  சுமந்திரன் முக்கிய பங்கு வகித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட " பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை "  பாதயாத்திரை கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆத்திரமடைய வைத்திருக்கிறது போன்றே தோன்றியது.

அந்த பாதயாத்திரை முடிவடைந்த பிறகு, சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படை பிரிவின் தலைமை அதிகாரி அவரை அணுகி  அந்த பாதுகாப்பை மேலும் வழக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்ட காரணத்தால் திரும்பி வருமாறு தனது உயரதிகாரிகள் தனக்கு உத்தரவிட்டிருப்பதாக  கூறினார்.  இந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம் குறித்து சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரைப் பற்றி விளக்கமளித்து  அது அமைதியாக நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டிய சுமந்திரன்,"  இந்த பாதயாத்திரை முடிவடைந்ததும் எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு அகற்றப்பட்டிருக்கிறது" என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்குவது பற்றி தானாக எவரிடமும் முறையிட்டதில்லை என்றும் தனக்கு அச்சுறுத்தில் இருப்பதாகக் கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது என்றும் பாராளுமன்றத்தில் சுமந்திரன் கூறினார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எதற்காக நடத்தப்பட்டது என்பதைப் பற்றி விளக்கிக் கூடிய சுமந்திரன் அது மிகவும் அமைதியான முறையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்." எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரை முடிவடைந்த உடனடியாக நீக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குவது பற்றி நானாக எவரிடமும் முறையிட்டதில்லை. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது" என்று அவர் பாராளுமன்றத்தில்  கூறினார்.

மூன்று அவதானங்கள் 

விபரங்கள் அடங்கிய கோவை ஒன்றை காட்டிப் பேசிய சுமந்திரன் தனக்கு எதிரான முயற்சிகள் குறித்து கொழும்பு மேல்நீதிமன்றத்திலும் பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான விபரங்கள் அதில் இருப்பதாகவும்  சிங்கள பாதாள உலக கும்பலின் உறுப்பினர்கள் உட்பட முப்பதுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும் கூறினார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கம் அறிவித்ததே என்று குறிப்பிட்ட சுமந்திரன் தனக்கு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது என்றால் எதற்காக அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பை விலக்கிக்கொணடது என்று கேள்வியெழுப்பினார். மூன்று அவதானிப்புகளையும் அவர் முன்வைத்தார்.

முதலாவதாக, தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதற்கு மத்தியிலும் விசேட பாதுகாப்பை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்றால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பாதயாத்திரையில் தான் பங்கேற்றுக் கொண்டதால்  அது ஆத்திரம் அடைந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இரண்டாவதாக, உண்மையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், அரசாங்கம் முப்பதுக்கும் அதிகமான அப்பாவி நபர்களை கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிடடார்.

மூன்றாவதாக, விசேட பாதுகாப்பை  நீக்கிய செயல்  தனக்கு ஆபத்தை விவைிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சமிக்ஞயைக் காண்பிக்கும் கெடுதியான நோக்கத்தைக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கூறினார். இறுதியாக அவர், " என்க்கு இடர்பாடான எதுவும் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று அவர் சபையில் கூறினார்.

இதைத் தொடர்ந்து  பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர, சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு  தனது உத்தரவின் பேரிலேயே நிக்கப்பட்டதாக 'ஹிரு' தொலைக்காட்சிக்கு கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக்கொண்ட போதிலும், சமந்திரன் போராட்டம் ஒன்றில்  பங்கேற்ற நிலையில், அவருக்கான விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது நீக்கப்பட்டது என்றும் வீரசேகர கூறினார்.

" சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால்  அவர் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருக்கக் கூடாது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் பொலிஸ் பாதகாப்புக்கு சுமந்திரனும் உரித்துடையவர் என்பதால் அது அவருக்கு தொடர்ந்து வழங்கப்படும் " என்று சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

சுலபமான இலக்கு 

2024 பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி கண்டதையடுத்து அவருக்கான பொலிஸ் பாதுகாப்பும் முடிவுக்கு வந்தது. ஆனால், முன்னர்  குறிப்பிட்டதைப் போன்று,  புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான அச்சுறுத்தல் மதிப்பீடு ஒன்றையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா  ரிறான் அலஸ், பிள்ளையான் போன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சுமந்திரனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்த பிரசாரம் சுமந்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை இலாலாமல் செய்து அவரை கொலையாளிகளின் இலகுவான இலக்காக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கொடிய திட்டமாகவும் கூட இருக்கலாம்.

இத்தகைய பின்புலத்திலேயே, கடந்த காலத்தில் சுமந்திரனை கொலை செய்வதற்கான ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு தொடர்பில் தற்போது ஆர்வம் காண்பிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/207486

முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்!

2 months 1 week ago

rejectletter.png?resize=750%2C375&ssl=1

முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்புக்கு தமிழரசுக் கட்சி பதில் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கான அழைப்பை தமிழரசுக் கட்சி நிராகரித்து விட்டது என்று கூடச் சொல்லலாம். “உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம்” என்ற பதில் எதைக் குறிக்கிறது? இது அதற்குரிய நேரம் இல்லை என்றுதானே பொருள்?

கட்சித் தலைமையின் நிலைப்பாடு இதுவென்றால் கட்சிக்குள் சிறீதரனின் நிலைப்பாடு என்ன? கஜேந்திரக்குமாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டவர் அவர். கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை மீறி அவர் தனிப்பட்ட முறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கப் போகிறாரா இல்லையா?

இதே போல ஒரு நிலை கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அவருக்கு ஏற்பட்டது.ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் ஒரு பகுதி பொது வேட்பாளரை ஆதரித்தது. ஒரு பகுதி பொது வேட்பாளரை மூர்க்கமாக எதிர்த்தது.எதிர்த்த தரப்புக்கு சுமந்திரன் தலைமை தாங்கினார். ஆதரித்த தரப்புக்கு சிறீதரன் தலைமை தாங்கினார்.அதாவது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிக்குள்ளும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.

சிறீதரன் சுமந்திரனின் எதிர்ப்பை மீறி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றார்.அவருடைய அந்த நிலைப்பாடு குறித்து இரண்டு விதமான வியாக்கியானங்கள் இருந்தன.ஒன்று அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்கிறார்.எனவே அதற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து கட்சியின் மத்திய குழு அதை எதிர்த்த போதிலும் வெளிப்படையாக அதற்கு ஆதரவாக இயங்கினார். கிளிநொச்சியில் நடந்த பொது வேட்பாளருக்கு ஆதரவான கூட்டங்களில் அவர் பகிரங்கமாகக் காணப்பட்டார். குறிப்பாக அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் காணப்பட்டார்.இது ஒரு வியாக்கியானம்.

இன்னும் ஒரு வியாக்கியானம் உண்டு. அது என்னவென்றால், கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப் போட்டிக்குள் அவர் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றார் என்பது.அதாவது கட்சிக்குள் தனது பேரம்பேசும் சக்தியை பலப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு ஒரு முடிவை எடுத்தார் என்பது.அதாவது அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்தார் என்பதை விடவும் தனது உட்கட்சிப் போட்டியாளராகிய சுமந்திரனுக்கு எதிரான ஒரு அணியை பலப்படுத்த விரும்பினார் என்பதே சரி என்ற வியாக்கியானம்.

எதுவாயினும் பொது வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் சிறிதரன் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு நெருக்கமாக நின்றார். கட்சிக்குள் இருந்த பலமான ஒரு அணியின் எதிர்ப்பை மீறி அவர் துணிச்சலாக முடிவெடுத்தார்.பொது வேட்பாளரை எதிர்த்ததன் மூலம் சுமந்திரன் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றார்.

இப்பொழுதும் சுமந்திரன் தேசத் திரட்சிக்கு எதிராகத்தான் இருக்கிறார்.தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது தமிழ் மக்களை ஆகப்பெரிய திரளாகத் திரட்டுவது. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு தமிழ் மக்களை ஒரு திரட்சியாகக் கூட்டிக் கட்டுவதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைத்தான் சுமந்திரன் எடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்ததில் அவருக்குப் பெரிய பங்கு உண்டு. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஆகப்பெரிய கூட்டை உடைத்தார்.

ஆயுதப் போராட்டத்தின் ஒரு கட்ட வளர்ச்சிக்குப் பின் அதில் ஏற்பட்ட பண்புரு மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகம் சாம்பல்தன்மை மிக்க ஒரு கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு காலம் தன்னால் அரங்கில் இருந்து அகற்றப்பட்ட கட்சிகளையும் அமைப்புகளையும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்ததில் சுமந்திரனுக்குப் பெரிய பங்கு உண்டு. அதன் விளைவாக தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாகிவிட்டது. அதற்கும் சுமந்திரன் பொறுப்பு. தனது சொந்தக் கட்சிக்குள் ஒரு திரட்சியை ஏற்படுத்த முடியாத ஒரு தலைவர் எப்படித் தேசத் திரட்சியை ஏற்படுத்தலாம்? எனவே சுமந்திரன் செய்வது தமிழ்த் தேசிய அரசியல் அல்ல.

பொது வேட்பாளரில் அவர் எடுத்த நிலைப்பாடும் அதுதான். நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுத்த நிலைப்பாடும் அதுதான். கடந்த வாரம் கஜேந்திரக் குமாருக்கு சிவஞானம் அனுப்பிய பதிலும் தேசத் திரட்சிக்கு ஆதரவானது அல்ல.

தேசத் திரட்சியைப் பாதுகாக்க விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாடம். நாடாளுமன்றத் தேர்தல் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் மட்டுமல்ல சுமந்திரனுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பாடம் கிடைத்தது.தமிழ் மக்கள் அவரை நிராகரித்தார்கள்.

கடந்த ஆண்டில் சுமத்திரனுக்கு இரண்டு கசப்பான பாடங்கள் கிடைத்தன.ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய கட்சியாட்களே அவரை நிராகரித்தார்கள்.ஆண்டின் முடிவில் தமிழ் மக்கள் அவரை நிராகரித்தார்கள்.இந்த இரண்டு தோல்விகளிலிருந்தும் அவர் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தோல்விகளை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர் கட்சியைத் தொடர்ந்தும் எப்படித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறார்.

இப்பொழுது கட்சி படிப்படியாக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.சிறீதரனின் நிலை மேலும் கேள்விக்குள்ளாகியுள்ளது.ஆனால் சிறீதரன் தானாக கட்சியை விட்டு நீங்க மாட்டார் என்று தெரிகிறது.அப்படி என்றால் அவரை கட்சியை விட்டு நீக்குவது தான் சுமந்திரன் அணியின் அடுத்த நகர்வாக இருக்கலாம்.

ஏற்கனவே அரியநேத்திரனை நீக்கி விட்டார்கள்.தமிழரசியல் வரலாற்றிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஓர் அரசியல்வாதி அவர். பொது வேட்பாளராக அவருக்கு மூன்று மகத்துவங்கள் உண்டு. முதலாவது தமிழ் அரசியல் வரலாற்றில் அதிகம் வாக்குகளைப் பெற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி அவர். இரண்டாவது கிழக்கில் இருந்து வந்த ஒரு தமிழ் வேட்பாளருக்கு வடக்கே கிடைத்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள். அவை தாயக ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள்.

தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய கருத்துருவாக்கிகளில் ஒருவர் ஓர் ஊடக முதலாளியைச் சந்தித்து உரையாடிய பொழுது அவர் கேட்டார்,கிழக்கில் இருந்து வரும் ஒரு வேட்பாளருக்கு பத்தாயிரம் வாக்குகளாவது கிடைக்குமா? என்று. தமிழ் பொது வேட்பாளருக்கு அதிகம் உதவிய அந்த ஊடக முதலாளி பின்னர் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளைக் கண்டு வியந்தார். அவை தாயக ஒருமைப்பாட்டுக்கும் தேசத் திரட்சிக்கும் கிடைத்த வாக்குகள்.

அந்த வாக்குகளுக்கு மற்றொரு முக்கியத்துவம் உண்டு.கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில், கொழும்பின் நகர்வுகளுக்குப் பதில் வினையாற்றும் ஒரு போக்கில் இருந்து மாற்றி தமிழ் மக்கள் அதனை செயல்முனைப்போடு அணுகலாம் என்ற முன்னுதாரணம் அது. அதாவது “ப்ரோ ஆக்டிவாக” அணுகலாம் என்ற முன்னுதாரணம் அது.

அத்தகைய முன்னுதாரணத்தின் வேட்பாளர் ஆகிய அரிய நேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியமை என்பது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தேசத் திரட்சிக்கு எதிராகத் திரும்பி விட்டது என்பதைத்தான் காட்டுகிறதா?அதற்குள் சிறீதரனைப் போன்றவர்கள் தொடர்ந்தும் இருந்து என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. கட்சிக்குள் தொடர்ந்தும் நிலைத்திருப்பதன் மூலம் சுமந்திரனை அகற்றலாம் என்று சிறிதரன் திட்டமிடுகிறாரோ தெரியவில்லை.

ஆனால் சுமந்திரனுக்கு எதிரான அணிகளோடு அவர் சேர்க்கைகளை வைத்துக் கொள்வதன் மூலம் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்த விளைகிறார் என்பது உண்மை.பொது வேட்பாளரின் விடயத்திலும் அவர் அதைச் செய்தார். முன்னணியின் ஒன்றிணைப்பு முயற்சிகளிலும் அவர் அதைத்தான் செய்கிறார். இப்பொழுது அந்த விடயத்திலும் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக அவர் செயற்பட வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது. சிதறிக்கொண்டு போகும் கட்சிக்குள் தனது ஸ்தானத்தைப் பாதுகாப்பதா? அல்லது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதா?

https://athavannews.com/2025/1422686

சமாதானம் உருவாகுமா? - மாறிவரும் பூகோள அரசியல்

2 months 1 week ago

சமாதானம் உருவாகுமா?

sudumanal

மாறிவரும் பூகோள அரசியல்

ukraine-jpg.jpg?w=810

THanks for image: Aljazeera

தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலென உருவாக்கப்பட்ட புனைவுக் கதையாடலைக் கொண்டு போருக்கான சூழலை உருவாக்கி ரசிய ஆக்கிரமிப்பை சாதித்ததுதான் நடந்தது.

வரலாற்று ரீதியில் தன்னை ஐரோப்பாவாகவே உணர்ந்து செயற்பட்ட ரசியா 2000 ஆண்டளவில் நேற்றோவில் சேர விண்ணப்பித்திருந்தது. அது நேற்றோவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்கான பௌதீகக் காரணம் ரசியா மிகப் பெரும் பிரதேச அளவைக் கொண்டது என்பது ஆகும். அதேநேரம் அவர்களது மனக்கட்டமைப்பானது ரசியா மீது வரலாற்று ரீதியிலான அச்சம் கொண்டிருக்கிறது. ரசியா கம்யூனிச நாடு இல்லை என்றபோதும் சோவியத் வழி உருவாகிய கம்யூனிச வெறுப்பு மனநிலையின் தொடர்ச்சியும் ஐரோப்பாவை விட்டு அகலவில்லை.. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளை தோற்கடித்து மொஸ்கோவுக்கு வெறித்தனமாக முன்னேறிய கிட்லரின் படைகளை சோவியத் யூனியன் எதிர்கொண்டு, 27 மில்லியன் மக்களின் உயிர் அர்ப்பணிப்பை பெரும் விலையாகக் கொடுத்து தோற்கடித்திருந்தது. அந்த சாகசம் ஐரோப்பியர்களின் மனக்கட்டமைப்பில் சோவியத் இன் மையமாக செயற்பட்ட ரசியா மீதான கள்ளப் பயம் ஒன்றினையும் ஏற்படுத்தியிருந்தது. ரசியாவை பலவீனப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பிரமை அவர்களை தொற்றிக் கொண்டது. அதனால்தான் 1989 இல் கொர்பச்சேவ் க்கு நேற்றோ கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஓர் அங்குலம்கூட நேற்றோ ஜேர்மனை விட்டு ரசியா நோக்கி நகராது என கொர்பச்சேவ் நம்பினார். இந்த பேச்சில் மிக முக்கியமாக அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜேம்ஸ் பெக்கர் அவர்களும் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.

கம்யூனிசத்தை எதிர்கொள்ளவென 1949 இல் உருவாக்கப்பட்ட (அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய கூட்டான) நேற்றோ கூட்டமைப்புக்கு எதிர்நிலையாக, (சோவியத் யூனியன்- கிழக்கு ஐரோப்பிய கூட்டணியான) வார்சோ கூட்டமைப்பு 1955 இல் உருவாக்கப்பட்டது. 1989 இல் வார்சோவை கலைத்துவிட கொர்பச்சேவ் முடிவுசெய்தபோதுகூட நேற்றோவைக் கலைத்துவிட அவர் கோரவில்லை. சோவியத் இன் வீழ்ச்சி, அதாவது முதலாளித்துவம் காட்டி வெருட்டிய ‘கம்யூனிச’ கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்தபோது நேற்றோவுக்கான தேவை இல்லாமலாகியது. அது வாழ்வா சாவா என்ற நிலையில் கிடந்தபோது அதை உயிர்ப்பூட்டி வளர்க்க புதிய எதிரிகள் தேவைப்பட்டார்கள். அது ரசியாவாக இருந்தது. எனவே ‘நேற்றோ விரிவாக்கம்’ அதை உயிர்ப்பித்தது. அதற்கெதிராக ரசியா பலமுறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அதையெல்லாம் தனக்கான ரொனிக்காக எடுத்துக் கொண்டு நேற்றோ விரிவாக்கத்தை ரசிய எல்லைவரை கொண்டுபோய் சீண்டுவதன் மூலம் ரசியா எதிரியின் இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. சோவியத் வீழ்ச்சிவரை இருதுருவ முகாமாக இருந்த உலகம் அமெரிக்காவின் கையில் ஒருதுருவ உலகமாக மாறியது.

2010 களில் உருவான அரபுவசந்த நிறப் புரட்சியை ரசியாவுக்குள் காண மேற்குலகம் ஆசைப்பட்டது. அல்லது அது நடக்கும் என நம்பியது. இதன் அங்கமாக 2014 இல் ஒறேஞ்ச் புரட்சி என அழைக்கப்பட்ட ‘மைடான்’ கிளர்ச்சியை உருவாக்கி, ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை உக்ரைனில் அமெரிக்கா நிறைவேற்றியது. உக்ரைனும் ரசியாவும் சகோதர நாடுகளாக இருந்ததால் நிறப்புரட்சி ரசியாவுக்குள் இலகுவில் சாத்தியமாகும் என அவர்கள் நம்பி ஏமாந்தனர். அந்த ஆட்சிக் கவிழ்ப்பில் வந்தவர்தான் பெற்றோ புறொசெங்கோ என்பவர். உசாரடைந்த ரசியா மூன்று நாள் போர் தொடுத்து கிரைமியாவை தமதாக்கியது.

கிரைமியா செங்கடலால் சூழப்பட்ட ஒரு குடாநாடு. சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த -கடற்படைத்தளமாக இருந்த- இக் குடாவை சோவியத் சிதைவின்போது, ரசியா-உக்ரைன் இடையிலான பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில் உக்ரைனுக்கு வழங்க ரசியா ஒப்புக் கொண்டது. எதிர்பாராத விதமாக 2014 ஆட்சிக்கவிழ்ப்புடன் அமெரிக்க சார்பு அரசு உருவாகியதால், தமக்கிடையேயான உடன்படிக்கையை மீறி கிரைமியா அமெரிக்காவின் அல்லது நேற்றோவின் கைக்கு போய்விடலாம் அல்லது அவர்களின் இராணுத் தளமாக மாற்றப்படலாம் என ரசியா அச்சமடைந்தது. போர்தொடுத்து கைப்பற்றியது. புறொசெங்கோவின் அரசு டொன்பாஸ் உள்ளடங்கிய கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த ரசிய மொழிபேசும் சிறுபான்மையினரை பயங்கரமாக ஒடுக்கியது. சுமார் 14000 பேர் அவரது ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டனர். எல்லாமே அமெரிக்காவினதும் நேற்றோவினதும் நிகழ்ச்சிநிரலுடன் நடத்தப்பட்டது. இதற்கெதிரான ரசிய சிறுபான்மையினப் போராட்டக் குழுக்களுக்கு ரசியா உதவிசெய்தது.

2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் ஜோர்ஜ் புஸ் யூனியர் உக்ரைனை நேற்றோவோடு இணைக்கும் திட்டத்தை முன்மொழிந்தபோது, அதை வன்மையாக எதிர்த்தவர்கள் ஜேர்மன் சான்சலர் அங்லா மேர்க்கல் உம் பிரான்சின் சாக்கோசியும் ஆவர். இது ரசியாவுடனான மோதலில் கொண்டு போய் நிறுத்தும் என அவர்கள் அன்றே எச்சரித்திருந்தார்கள். அதுவே இறுதியில் நடந்தது. உக்ரேன் நேற்றோவினது ஆடுகளமாக மாறியது. நேற்றோவின் விரிவாக்கத்தை ஆரம்பத்திலிருந்து எச்சரித்து வந்தது ரசியா. அது வரைந்த சிவப்புக் கோட்டுக்குள் நேற்றோ உக்ரைனின் முதுகில் பிடித்து தள்ளி போருக்குள் மாட்டிவிட்டது.

ட்றம்பின் வருகைக்குப் பின் ஏற்படுகிற மாற்றங்கள் யாரும் இலகுவில் எதிர்வுகூற முடியாத அதிரடிகளாக வெளிப்படுகிறது. அது அவரின் தனிப்பட்ட குணாம்சமாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், சீனாவினதும் பிரிக்ஸ் அமைப்பினதும் எழுச்சி உலக ஒழுங்கையும் ஒருதுருவ உலகையும் அசைத்துப் பார்க்கும் நிலைக்கு வருவதை கவனத்தில் எடுத்து அமெரிக்கா தன்னை தகவமைத்து தனது உலகாதிக்க நிலையை (ஒருதுருவ ஒழுங்கை) பேண சில அசைவுகளை செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே MAGA (Make America Great Again) என்ற கோசமாகும். அதை அவர் பொருளாதாரப் போராகவே அறிவிக்கிறார். எனவே இதுவரை அரசியல் போராக இருந்த நிலையை மாற்றி போருளாதாரப் போர் என்ற நிலைக்குள் வருகிறபோது, அரசியல் நண்பர்களாகவும் அமெரிக்காவின் இழுவை வண்டிகளாகவும் இருந்த கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் இடம் ஆட்டம்காணத் தொடங்கியிருக்கிறது. இது மீண்டும் தடத்தில் ஓடுமா இல்லையா என்பதை எதிர்வுகூற முடியாதுள்ளது.

மூன்று பெரும் ஆதிக்கசக்திகளாக அமெரிக்கா சீனா ரசியா உள்ளன. தன்னை ஐரோப்பா என அடையாளப்படுத்தி உள்ளமைந்திருந்த ரசியாவை ஆசியா நோக்கி தள்ளியதோடல்லாமல் சீனாவின் நண்பனாகவும் ஆக்கியது, நேட்டோவினதும் மேற்குலகத்தினதும் அணுகுமுறை!. இதை ட்றம்ப் சரியாகவே கணித்திருக்கிறார். அவர் ரசியாவை தன் பக்கம் இழுக்க முடியாவிட்டாலும்கூட, ஒருவேளை சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டி ஏற்பட்டால், ரசியாவை அதில் ஈடுபடாமல் பிரித்து வைத்திருக்கவாவது சில தந்திரோபாயங்களை செய்தாக வேண்டி இருக்கிறது. நிக்சன் காலத்தில் அவர் அப்போதைய சோவியத் யூனியனுடன் சீனா உறவு கொண்டுவிடாதபடி சீனாவுடனான உறவைப் பேணிய தந்திரோபாயத்தை செய்தார். அதையொற்றிய வழிமுறையை ட்றம்ப் இப்போ சீனாவின் பக்கமாக ரசியாவை தள்ளாதிருக்க முயற்சி எடுக்கிறார்.

அது எந்தளவு சாத்தியமாகும் எனத் தெரியாது. ஏனெனில் அமெரிக்கா மீதான அபிப்பிராயத்தை புட்டின் அவளவு இலகுவாக மாற்றிக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. இது இப்படியிருக்க, ட்றம்ப் இன்னொரு படி மேலே போய் G-7 பணக்கார நாடுகளின் கூட்டமைப்பில் ரசியாவையும் உள்ளடக்கி G-8 அமைப்பாக மாற்றவேண்டும் என ஒரு முன்மொழிவை வைக்கிறார். ரசியாவின் எல்லைவரை நேற்றோவை கொண்டு போனது பிழை என்கிறார். ரசியா அதுகுறித்து பாதுகாப்பு அச்சம் கொண்டதை புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். என்னவிதமான குத்துக்கரணம் இது. இவைகளெல்லாம் ட்றம்பின் ஒரு தந்திரோபாய அணுகுமுறை. எனவே உக்ரைனை கைவிட ட்றம்ப் முடிவு செய்திருக்கிறார். உக்ரைன் போரில் அமெரிக்க ஆதிக்கம் அற்ற நேட்டோவை வைத்து ஐரோப்பா என்ன செய்யப் போகிறது என்ற மிகப் பெரும் கேள்வி எழுகிறது.

புரூசல்ஸில் 12.2.25 அன்று நடந்த நேற்றோ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Pete Hegseth அவர்கள் மிகத் தெளிவான செய்தியொன்றை ஐரோப்பாவுக்கு தெரிவித்துள்ளார். “நாம் நேற்றோவை பலப்படுத்த வேண்டும். அதற்கான பங்களிப்பு ஐரோப்பாவிடமிருந்து அதிகரிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்திய அதேவேளை, உக்ரைன்-ரசிய போர் சமாதான வழியில் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 2014 இல் இருந்த உக்ரைன் எல்லையை திரும்ப பெறுவது சாத்தியமில்லை எனவும், கிரைமியாவை உக்ரைன் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை எனவும், உக்ரைன் நேற்றோவில் சேர்வது என்பது நடைபெறாத காாரியம் எனவும் அவர் சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐரோப்பாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், “நாம் (அமெரிக்கா) அதில் பங்கேடுக்க மாட்டோம்” என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை உக்ரைனில் சமாதானப் படையை நிறுத்தும் நிலை உருவானால், அது ஐரோப்பிய, ஐரோப்பியரல்லாத படைகளாக இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘நேற்றோ’ என்ற லேபலின் கீழ் அது இருக்கக் கூடாது என்றார்.

இதேநேரம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance அவர்கள் ஐரோப்பாவுக்கு (வெளிப்பாட்டுச் சுதந்திரம் உட்பட) ஜனநாயகம் பற்றி காட்டமாக வகுப்பெடுத்திருக்கிறார். என்னவிதமான கோமாளித்தனமும் அதிகாரத்துவமும் இது!. ஐரோப்பாவை இது அதிரவைத்திருக்கிறது. ஐரோப்பிய-அமெரிக்க உறவை பாதிக்க வைக்கக்கூடியளவு இந்த உரை அமைந்திருக்கிறது

பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும், பெரியண்ணன் உறவிலும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஐரோப்பா இந்த அதிரடி கூற்றுகளில் ஆடிப் போயிருக்கிறது. அமெரிக்காவின் இச் செய்தியானது ரசியாவிடம் தாம் தோற்றுப் போய்விட்டதை, அதன் யதார்த்தத்தை- வெளிப்படுத்துவதாக அமைகிறது எனவும், தற்போதைய “ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு” தகரத் தொடங்கியிருக்கிறது எனவும் அரசியல் விஞ்ஞானி மியர்ஸைமர் அவர்கள் கூறுகிறார். அமெரிக்காவின் மீது தொங்குநிலையில் ஐரோப்பா நிற்பதிலுள்ள ஆபத்தை ஏற்கனவே மக்ரோன் உணர்ந்திருந்ததால், ஐரோப்பாவுக்கான தனி இராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னர் முன்வைத்திருந்தார். அமெரிக்காவில் பாதுகாப்புக்கும்கூட தங்கியிருந்த ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா இருக்கிறது. அமெரிக்கா கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் இழுபட்டு போர்க்களம் ஏவியவர்கள் ‘நேற்றோ’வினர். அதாவது ஐரோப்பிய நாடுகளும் கனடாவும். இந்தவகை தொங்குநிலைதான் கனடாவையும் 51 வது மாநிலமாக ட்றம்ப் முன்மொழியும் திட்டமாகும் என்பது வேறு கதை.

“ரசியாவை பலவீனப்படுத்துவது” என்பது ஐரோப்பிய நலனிலிருந்து எழுந்ததால், அதை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றவாறான அணுகுமுறையோடு அமெரிக்கா தன்னை அதற்குள்ளிருந்து வெளியே இழுத்துக்கொண்டுவிட்டது. அது தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது. எதிர்காலத்தில் தன்னை உலக அதிகார சக்தியாக பேண வேண்டிய அரசியல் வியூகங்களை அது முதன்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதனால்தான் அது ஐரோப்பாவோடு குடும்பச் சண்டையில் ஈடுபட்டாலும், நேற்றோவை உறுதியாக மேலும் கட்டமைக்கும் உறுதியுடனேயே இருக்கிறது.

சமாதானத்தை விட்டுக் கொடுப்புகளுடன் உக்ரைன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை ஐரோப்பா ஏற்றுக் கொண்டால் “ரசியாவைப் பலவீனப்படுத்த வேண்டும்” என்ற ஐரோப்பிய நோக்கத்தை நடுவழியில் விட்ட அவமானம் ஏற்பட்டுவிடும். ட்றம்ப் சொல்வதை ஏற்க மறுத்தால், அமெரிக்கா ஐரேப்பாவின் பாதுகாப்பை நடுவழியில் விடவைத்த தவறை ஐரோப்பா செய்ததாகிவிடும்.

அதேநேரம் அமெரிக்காவை ஐரோப்பா ட்றம்பின் கண்களுக்கு உள்ளால் பார்க்கவில்லை. “ஒரு ஆழ் அரசின் (deep-state) கட்டுமானத்தை பலவீனப்படுத்தி, அரசு (state) வடிவத்துள் நிறுத்த முனையும் ட்றம்ப் இன் முயற்சி இன்னும் நான்கு வருடங்களுக்குள் காலாவதியாகிவிடும்; மீண்டும் பழைய அமெரிக்க-ஐரோப்பிய தேன்நிலவு நடக்கும்” என ஐரோப்பிய ஒன்றியம் கருத இடமுண்டு. ட்றம்பின் காஸா குறித்த, கனடா குறித்த, கிறீன்லாண்ட் குறித்த, பனாமா கால்வாய் குறித்த அதிரடிகளை அமெரிக்க மக்கள்கூட ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆழ் அரசின் (deep state) தலைமைக் காவலரான சிஐஏ அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளையும் போருக்குள் தள்ளுகிற வரலாறு கொண்டது. எனவே ‘ஆழ் அரசு’ (deep-state) வடிவத்தின் அழிவை அல்லது அரசு (state) வடிவ உருமாற்றத்தை அது ஏற்றுக்கொள்ளும் என நம்ப இடமில்லை.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கிறபோது சமாதான இலக்கை ட்றம்ப் சாதிப்பது என்பது ஐரோப்பாவின் (பலவீனப்பட்ட) கைகளில் வந்து நிற்கிறது. இந்த யுத்தத்தை அமெரிக்காவானது நேற்றோ சகிதம் வழிநடத்திக் கொணர்ந்து, இப்போ ஐரோப்பாவையும் பலிக்கடாவான உக்ரைனையும் கைவிட யோசிப்பது ஒரு அவலச்சுவையாக மேடையேறியிருக்கிறது. போர் தொடங்கி சில மாதங்களிலேயே இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை குழப்பி செலன்ஸ்கியை வெளியேறவைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான். அப்போது தாம் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருப்போம் என செலன்ஸ்கி உடன்பாட்டுக்கு வர தயாராக இருந்தார். டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிர்வை முன்வைத்து வரையப்பட்ட முனிச் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ரசியா முன்வைத்திருந்தது. செலன்ஸ்கி அதையும் ஒப்புக்கொண்டிருக்கவோ அல்லது மாற்று தீர்வுகளை நோக்கியோ போக இந்த பேச்சுவார்த்தை வழியாட்டியிருக்கவும் கூடும். இவைகள் நடந்திருந்தால், உக்ரைனில் இவளவு அழிவுகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படாமல் செலன்ஸ்கியால் தவிர்த்திருக்க முடியும். மேற்குலகின் பலிக்கடாவாகப் போய், வந்தடைந்திருக்கும் ஒரு துயர வரலாறை எழுத வேண்டி வந்திராது.

ஐரோப்பாவுக்குள்கூட சுவிஸ் உம் ஆஸ்திரியாவும் நேற்றோவில் இணையாமல் நடுநிலையாக இருக்கின்றன. ரசியாவின் சகோதர நாடாக இருந்த உக்ரைனுக்கு ஏன் முடியாமல் போனது. அது ஐரோப்பாவினதும் நேற்றோவினதும் சூழ்ச்சியால் நிகழ்ந்தது. அந்த சூழ்ச்சி 2014 இல் அரங்கேறி அதன் தொடர்விளைவுகள் 2022 போரில் கொணர்ந்து நிறுத்தியது. உக்ரைன் அதிபர் இந்த சூழ்ச்சி வலைக்குள் மாட்டுப்பட்டு தனது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றார். இன்று இருபது வீத நிலப் பிரதேசங்களை ரசியாவிடம் பறிகொடுத்து, நேற்றோ அங்கத்துவமும் இல்லாமல் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கிற அவலம் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் உக்ரைன் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் செலன்ஸ்கியை நிறுத்தியிருக்கிறது. ட்றம்பின் தீர்வை அவர் ஏற்றுக்கொள்வும் முடியாத நிலையில் மேற்குலகம் அவரை சூழ்நிலையின் கைதியாக மாற்றியுள்ளது. மறுகரையில் ரசியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்த வகைதொகையின்றி போட்ட பொருளாதாரத் தடை ‘பூமராங்க்’ ஆக மாறி ஐரோப்பாவை தாக்கியுள்ளது. மிக முக்கியமாக தொழில்நுட்ப ரீதியில் பலமாக தன்னை நிலைநிறுத்தி வைத்திருந்த ஜேர்மனி பலத்த அடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ட்றம்பின் சமதானத் திட்டத்தை செலன்ஸ்கி ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்து, 2014 இல் நிகழ்த்தியதுபோல் இன்னொரு ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா நிகழ்த்தி தனது பெரியண்ணன் பாத்திரத்தை நிரூபிக்கவும் இடமுண்டு. அதன் அறிகுறியாக அண்மையில் உக்ரைன் பாராளுமன்றத்தில் -2014 இன் அமெரிக்க சதிநாயகன்- புறொசெங்கோவின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்ததையும், செலன்ஸ்கிக்கு எதிராக கோசம் எழுப்பியதையும் கண்டோம்.

இவ்வாறான நிலைமைகளை பார்க்கும்போது, உக்ரைனுக்கு சமாதானம் அவளவு எளிதில் கைகூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உக்ரைனின் இறைமையை ரசியா அங்கீகரிக்கும் விதத்திலும், ரசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உக்ரைன் நேற்றோவின் களமாக அமையாத உத்தரவாதத்துடனும், டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினர் குறித்த உடன்பாடுகளுடனும் இருபக்க விட்டுக் கொடுப்புகளுடன் சமாதானம் உருவாகுமா?

  • ravindran.pa

  • சுடுமணல்
    No image previewசமாதானம் உருவாகுமா?
    மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது…

தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை - நிலாந்தன்

2 months 1 week ago

தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை - நிலாந்தன்

அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும் இரவில் இருளின் பின்னணியில் மின்னொளியில் முழிப்பாகத் தெரியப்போவதும்  விகாரையாகத்தான் இருக்கும்.எனவே பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒரு விமானப் பயணிக்கு யாழ்ப்பாணத்தின் தரை தோற்றத்தில் முதலில் முழிப்பாகத் தெரியபோவது தையிட்டித்  தாதுகோபமா ?

தையிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதகல் சம்பில் துறை ஏற்கனவே ஜம்புகோளப் பட்டினமாக பெயர் மாற்றப்பட்டு சிங்கள பவுத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி உண்டு. அது யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாவிகளாக வரும் சிங்கள பௌத்த பயணிகளைக் கவரும் நோக்கிலானது.அதையும் படைத்தரப்பே பரிபாலித்து வருகிறது.அங்கேயும் தனியார் காணிகள் பறிக்கப்பட்டிருப்பதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு. இப்படிப்பட்டதோர் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்த மயமாக்கற் பின்னணியில் தையிட்டி விகாரையை விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ?

480406539_1040119178148572_9200342692417

அண்மையில் உயிர் நீத்த ஊடகவியலாளராகிய பாரதியின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்,”தையிட்டி விகாரையின் மையப் பகுதி அதாவது தாதுகோபம் அமைந்திருக்கும் காணி ஒரு மலேசிய ஓய்வூதியருக்குரியது, அவருடைய உறவினராகிய ஒரு பெண் மலேசியாவில் வசிக்கிறார்,அவர் சில ஆண்டுகளுக்கு முன் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரைச் சந்தித்து அது தொடர்பாக உரையாடியிருக்கிறார்.அதன் பின் அவர் அப்போதிருந்த தளபதி சவேந்திர சில்வாவையும் சந்தித்ததாகத் தகவல் உண்டு” என்று.

இந்த விடயத்தை நான்,அண்மையில் யாழ்.திண்ணை விடுதியில் நடந்த ஐநாவின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சுமந்திரனைக் கண்ட பொழுது கேட்டேன்.அவர் அத்தகவல்கள் உண்மையானவை என்று சொன்னார்.அந்தப் பெண் கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்தவர் என்று கூறப்படுகிறது.அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்கள் சுமந்திரனுக்குத் தெரியவில்லை.

ஆனால்,காணி உரிமையாளர் வெளிநாட்டில் என்பது உண்மையான தகவல் அல்ல என்று சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சசீவன் கூறுகிறார்.அப்போதிருந்த தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர் இது தொடர்பில் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றும், விகாரை கட்டப்பட்டதற்கு அவரும் பொறுப்பு என்று சசீவன் குற்றஞ்  சாட்டுகிறார்.

காணி உரிமையாளர் மலேசியாவில் என்று கூறப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் வேறுவிதமாகப் பார்க்கின்றன. தையிட்டிப் போராட்டத்தின் எழுச்சியை திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்ட தகவல்கள் இவை என்று அவர்கள் கருதக்கூடும். அவர்கள் தையிட்டி விகாரையை ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் அதை சட்டரீதியாக மட்டும் அணுகக்கூடாது. அதை ஏன் தனிய சட்ட ரீதியாக மட்டும் அணுகக்கூடாது? ஏனென்றால் சட்டவிரோதமானது பிழையானது என்றால் சட்ட ரீதியானது சரியானது என்பதே தர்க்கம். சட்ட ரீதியானது சரியானது என்றால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்பலாமா?

இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் கருவிகளில் சட்டமும் ஒன்று. அண்மையில் அரசியல் பேசும் இளையோர் என்ற அமைப்பின் மெய்நிகர் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல,திருகோணமலையில் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட இரண்டு புத்தர் சிலைகளுக்கு  எதிராக நீதிமன்றம் வழங்கிய கட்டளை உண்டு.அனால் சிலைகள் அகற்றப்படவில்லை.கிழக்கில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றக் கட்டளை உண்டு.முல்லைத்தீவில், நீராவியடியில்,நீதிமன்றத் கட்டளையை மீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில்  ஒரு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.அதுபோல பல இடங்களில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி சிங்கள பௌத்த மயமாக்கலும் நில ஆக்கிரமிப்பும் நடந்திருக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.எனவே இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைத் தரும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியாது.

Screenshot-2025-02-15-220251cc.png

மாறாக தையிட்டி விகாரை விடயத்தை நிலப்பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்; அணுக வேண்டும்; அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

கடந்த பௌர்ணமி நாளன்று நடந்த போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு பௌர்ணமி நாளில் மட்டும் போராட்டலாமென்றால் அது மிகப் பலவீனமானது.ஏனென்றால் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் பௌர்ணமிகளுக்காக காத்திருப்பதில்லை.அவை மிகவும் நிறுவனமயப்பட்ட நடவடிக்கைகள்.இக்கட்டுரை எழுதப்படுகையில்கூட எங்காவது ஒரு சிறு குன்றில் ஏதாவது ஒரு விகாரைக்கு ஒரு செங்கல் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

எனவே ஒவ்வொரு போயா தினத்தன்றும் போராடி தையிட்டியை மீட்க முடியாது. நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான போராட்டம் மாதத்தில் ஒரு தடவை மட்டும் நடத்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் நில அபகரிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தொடர் நடவடிக்கைகள்.பல தசாப்தகால தொடர்ச்சியான நடவடிக்கைகள்.மிகவும் நிறுவனமயப்பட்ட, அதிக வளம் பொருந்திய அரசு உபகரணங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள்.

அதாவது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள்-அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்-தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக 2009க்குப் பின்னரும் அது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் தமிழ் எதிர்ப்புத்தான் குறைந்து போய்விட்டது.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தமிழ்த் தரப்புக்கு உண்டு.அடுத்த பௌர்ணமிவரை இன்னுமொரு எழுச்சிக்காகக் காத்திருப்பது பலமானது அல்ல.

தமிழ் மக்களுடைய போராட்டத்தின் அளவுதான் இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவையும் தீர்மானிக்கும். ஏனென்றால் இது ஒரு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்வதா? அல்லது தமிழ் மக்களுடைய பயங்களை நீக்குவதா? என்று பார்த்தால், அரசாங்கம் சிங்கள பௌத்த வாக்காளர்களின் கூட்டு உணர்வை பாதுகாக்கவே முன் நிற்கும்.

தையிட்டிப் போராட்டத்தின் பின்னணியில் அரசுத் தலைவர் வல்வெட்டித் துறைக்கு வருகிறார். பிரதமர் வலிகாமத்தின் பல பகுதிகளுக்கும் வருகிறார். மானிப்பாயில் வைத்து பிரதமர் கூறுகிறார், இது தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்று.

அதேசமயம் அமைச்சர் சந்திரசேகரன் மீனவக் கிராமங்கள் தோறும் தீயாக வேலை செய்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் ஒருவித இந்திய எதிர்ப்பை லோக்கலாக வெளிப்படுத்துகின்றது. இந்திய மீனவர்களுக்கு எதிராகத் திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுப்பதன்மூலம் தமிழ் கடல் தொழிலாளர் சங்கங்களைக் கவர்வது அவர்களுடைய உள்நோக்கம்.

480573491_1079469414194511_2103972254837

அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையும் தமிழ் மக்களைக் கவரும் நோக்கிலானது. ரணில் விக்கிரமசிங்க எரித்த நூலகத்தை நாங்கள் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பொருள்பட சந்திரசேகரன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். நூலக எரிப்புக்கு ரணில் எப்பொழுதோ மன்னிப்புக் கேட்டு விட்டார்.ஆனால் வடக்குக் கிழக்கை பிரித்தமைக்கு; சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் மனிதநேயக் கட்டமைப்பை எதிர்த்தமைக்கு; இறுதிக்கட்டப் போரில் மகிந்தவைப் பலப்படுத்தியதற்கு  ஜேவிபி இன்றுவரை மன்னிப்புக் கேட்கவே இல்லை.நூலகத்துக்கு நிதி ஒதுக்கியதன்மூலம் படித்த தமிழ் நடுத்தர வர்க்கத்தைக் தவறலாமா என்று அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதாவது விரைவில் வரக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,பின்னர் வரக்கூடிய மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தமிழ் வாக்குகளைக் கவரும் நோக்கத்தோடு அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் இறங்கி வேலை செய்கின்றது.

ஆனால் பிரதமர் ஹரிணி கூறுவது போல இந்த அரசாங்கம் தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்டது என்றால்,தையிட்டி விகாரை விடயத்தில் தமிழ் மக்களின் பயத்தையா அல்லது சிங்களபௌத்த கூட்டு உளவியலையா அதிகமாக மதிக்கும்?

வரவுசெலவுத் திட்ட அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய அனுர  பின்வருமாறு கூறுகிறார்…”எங்களில் யாரும் லஞ்சம் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவேன்.லஞ்சம் வாங்கப் பயப்படும் நாட்டை உருவாக்குவேன்.அப்படிப்பட்ட ஆட்சியால் மட்டும்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.”

அவர் கூறுவது சிங்கள மக்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ் மக்களுக்குப் பொருந்தாது.தமிழ் மக்கள் ஊழலுக்கு எதிராகவோ அரசு நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவோ போராடவில்லை. நமது தேசிய இருப்பை அழிக்க முற்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள். எனவே தமிழ் மக்கள் கேட்பது தமது தேசிய இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான்.

ஊழலற்ற ஆட்சியால்தான் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறுவது தவறு. இனவாதமற்ற,இன அழிப்புக்கு பரிகாரம் தரத் தயாராக உள்ள,அதாவது, இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான அரசியல் திடசித்தத்தை- “பொலிட்டிக்கல் வில்லைக்”-கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால்  மட்டுந்தான் இச்சிறிய தீவைக் கட்டியெழுப்ப முடியும்.

https://www.nillanthan.com/7186/

கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன - எங்களுக்கு என்ன பாதுகாப்புள்ளது?

2 months 1 week ago

Published By: RAJEEBAN

20 FEB, 2025 | 11:51 AM

image

துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்  அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்

daily mirror

இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6 வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர்.

ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன், பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ ஆகியோர் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை என்ற இந்த அதிகரித்துவரும் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 14 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட குற்;றச்செயல்களி;ல் ஈடுபடும் கும்பல்களை சேர்ந்தவர்களின் நடவடிக்கையே இது என பலர் கருதுகின்றனர்.

சமீபத்தைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மிதேனியவிலும் கொழும்பிலும் இடம்பெற்றுள்ளன மிதேனியாவில் 39 வயது நபரும் அவரது மகளும் மகனும் இனந்தெரியாத நபர் ஒருவர் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் உயிரிழந்தனர்.

கடவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனும் சிறுமியும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என தெரிவித்துள்ள பொலிஸார் இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் பாதள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று காலை துணிச்சலான விதத்தில் இந்த கொலை இடம்பெற்றது. சட்டத்தரணிபோன்று வேடமணிந்த ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

thumb_hkhk.jpg

இந்த சம்பவங்கள் பலவற்றிற்கு போதைப்பொருள் வர்த்தகமே காரணம் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். குற்றச்செயல்கள் அதிகரிப்பினால் திணறிக்கொண்டிருக்கும் பல நாடுகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன என தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி  இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.

அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மறைமுக புலனாய்வாளர்களை பயன்படுத்துதல் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்த அவர் ஒரு குழுவால் மாத்திரம் இதற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டார்.

இந்த குற்றகும்பல்களிற்கு எதிரான போராட்டத்திற்கு சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்ட அவர் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் குற்றவாளிகள் தொடர்ந்து செயற்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை இலக்குவைத்து முன்னைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றியளித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டு சம்பவங்களிற்காக தேடப்பட்ட பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து சம்பவங்களும் ஒரே பாணியிலேயே இடம்பெறுகின்றன. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது தொடரும் என தெரிவித்த அந்த அதிகாரி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை தடுத்துவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் அவசியம். அவ்வாறான பொறிமுறை இல்லாவிட்டால் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விடுதலையாவார்கள் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் குற்றவாளிகளை இலக்குவைத்து பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை வன்முறை மிக்க மோதல்கள் இடம்பெற்றன சந்தேகநபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இதற்கு சில குழுக்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டன.

யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்திருந்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கடும் பலத்தை பயன்படுத்துவதை நியாயப்படுத்தியிருந்தார். குற்றவாளிகளை கொலை செய்வதுஒரு பாவமல்ல என தெரிவித்திருந்த அவர் நாட்டின் பாதுகாப்பிற்காக செயற்படுவதற்கு அதிகாரிகள் தயங்ககூடாது என குறிப்பிட்டிருந்தார்.

போதைப்பொருள் குழுக்கள் மற்றும் பாதளஉலக குழுக்களை ஒழிப்பதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட படையணிகள் தேவை என்பது தெளிவாகியுள்ளது.

பாரம்பரிய கலாச்சார கூறுகளை கருத்தில் கொள்ளும்போது இந்த வகையான குற்றங்களை கையாள்வது மிகவும் கடினமான விடயம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகரித்துவரும் குற்றங்களை கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் எதிர்கால நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பி;ன் ஆறு பொலிஸ் நிலையங்களில் விசேட அதிரடிப்படையினரை நிறுத்திவைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட குற்றங்கள் போதைப்பொருள் குற்றங்களை கையாள்வதற்கு உலகின்பல நாடுகளில் விசேட படையணிகள் உள்ள போதிலும், இலங்கையில் அவ்வாறான படைப்பிரிவொன்று இல்லாதமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/207171

வடக்கிற்கு ஹீரோவான அநுர - கருணாகரன்

2 months 2 weeks ago

வடக்கிற்கு ஹீரோவான அநுர

Sivarasa Karunakaran

on February 21, 2025

Gimf_0hbYAAiaV--e1740118273563.jpeg?resi

Photo, @anuradisanayake

உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார்.

இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்டனர். சனங்களுக்கு இப்பொழுது அநுரதான் ஹீரோ. இதனுடைய உச்சக்கட்டமாக அநுரவின் வருகையையொட்டி பிரபாகரனுடைய ஊரான வல்வெட்டித்துறையில் கொடி பறக்கும் நிகழ்ச்சி (பட்டமேற்றும் நிகழ்வு) ஒன்றும் மக்கள் சந்திப்பும் சிறப்பாக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

அரசியல் அர்த்தத்தில் ‘காலமாற்றத்தை உணருங்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் குறியீட்டு நிகழ்ச்சியே இதுவாகும். அதாவது சூழல் மாற்றம், காலமாற்றம், நிலைமாற்றம் ஆகிய மூன்றையும் இது பிரதிபலிக்கிறது எனலாம்.

இதைப்பற்றிப் பேசியபோது உணர்ச்சி மேலிட “விடுதலைப் புலிகள் புகழோடிருந்த காலத்தில் கூட வல்வெட்டித்துறையில் பிரபாகரன் இப்படி வெளிப்படையாக மக்கள் மத்தியில் வந்ததில்லை” என்றார் அந்த ஊர்வாசி ஒருவர்.

இப்பொழுது அதே விளையாட்டைக் காட்டுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசிங்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்றிருக்கிறார். யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹரிணி, போகாத இடமில்லை. சந்திக்காத ஆட்களில்லை என்ற அளவுக்குப் பல இடங்களுக்கும் சென்று திரும்பியிருக்கிறார். போகுமிடங்களில் குழந்தைகள், முதியோர், பெண்கள் என  எல்லோரோடும்  மிகச் சாதாரணமாக (casually) பழகியிருக்கிறார் பிரதமர். பெரும்பாலான பெண்களுக்கு ஹரிணி, ஹீரோயினி ஆகிவிட்டார்.

இதற்கு முன்பு வடக்கிற்கு வந்த ஏனைய சிங்களத் தலைவர்களுடன் இந்தளவுக்கு தமிழ்ச்சனங்கள் நெருக்கத்தைக் காட்டியதில்லை. அவர்களும் தமிழ்ச்சனங்களோடு நெருங்கிக் கொண்டதில்லை. அவர்கள்  யாழ்ப்பாணத்துக்கு வந்தால், ஜெட் விங்கில் அல்லது ரில்கோ போன்ற உல்லாச விடுதிகளில் தங்குவார்கள். நல்லூர் முருகன் கோயிலுக்குச் செல்வார்கள். அதற்கப்பால் எனில் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்துக்குப் போவதுண்டு. அல்லது சரவணபன் வீட்டுக்குக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மாவட்ட நிர்வாகச் சந்திப்புகளை நடத்துவதாக இருந்தால், U.S உல்லாச விடுதியில் (அரச கணக்கில்) செய்வார்கள்.

எல்லாமே சனங்கள் நெருங்க முடியாத அளவுக்கு உயர்நிலையில் இருக்கும். அரசியற் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஒரு சில உயர் வர்க்கத்தினரைத் தவிர, வேறு யாரும் நெருங்கவே முடியாத அளவுக்குத்தான் அந்தத் தலைவர்கள் நடந்து கொண்டனர்.

அநுரவும் ஹரிணியும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அமைச்சர்களும் இதையெல்லாம் உடைத்தெறிந்தனர். சாதாரண உடையில், சாதாரணமான நிலையில் தங்களை மாற்றிக் கொண்டு மக்களுடன் கலக்கின்றனர். மாவட்டச் செயலர், பிரதேச செயலர், துறைசார் அதிகாரிகளைக் கூட உத்தியோகத்தர்களும் மக்களும் எட்ட நின்றே சந்திக்க வேண்டியிருக்கின்ற சூழலில் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் சாதாரண மக்களுடன் எளிமையாக – எளிதில் – சந்திப்பதும் பழகுவதும் சனங்களுக்கு இன்ப அதிர்ச்சியே. மறுவளமாக யாழ்ப்பாணத்தின் தமிழ் மேட்டிமைத்தனச் சிந்தனையாளர்களுக்கும் அந்த வழியிலான அரசியலாளர்களுக்கும் இதுவொரு அரசியற் கலாச்சார அதிர்ச்சியை அளித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளும் அணுகுமுறையும் நேரடியாகச் சனங்களிடம் நெருக்கத்தையும் செல்வாக்கையும் உண்டாக்கும் முயற்சிகளாகும் – தந்திரோபாயங்களேயாகும். அதற்கு ஓரளவுக்குப் பயனும் கிடைத்துள்ளது போலவே தெரிகிறது.

இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காட்டும் நெருக்கத்தை விட, அவர்களுக்குக் கொடுக்கின்ற வரவேற்பை விட அநுர, ஹரிணி போன்றோருக்கு மக்கள் காட்டுகின்ற வரவேற்பும் நெருக்கமும் கூடுதலாகவே உள்ளது.

அநுரவும் ஹரிணியும் தங்களுடைய ஆதர்சத் தலைவர்கள் என்று நம்புகின்றனர் மக்கள்.

ஜனாதிபதியும் பிரதமரும் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமாரகே, காணி, நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த போன்றோரும் வடக்குக்கு வந்து சென்றிருக்கிறார்கள். இதைப்போல இன்னொரு அணி கிழக்கிற்கும் சென்றிருக்கிறது.

இதற்கு அடுத்த கட்டமாக இப்பொழுது வரவு செலவுத் திட்டத்திலும் வடக்குக் கிழக்கிற்கு விசேட கவனத்தைக் கொடுத்துள்ளது NPP. காங்கேசன்துறை, மாங்குளம் ஆகிய இடங்களில் கைத்தொழில் பூங்காக்கள். பரந்தனில் இராயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்தல். யாழ்ப்பாண பொது நூலகத்தை விரிவாக்கம் செய்தல். முல்லைத்தீவு வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பாலத்தை நிர்மாணித்தல். தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்குதல். மீள் குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணம் உட்பட வடக்குக் கிழக்குக்கு வரவு செலவுத்திட்டத்தில் 5000 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு, பல்கலைக் கழக மாணவர்களுக்கான மகாபொல கொடுப்பனவு, முதியோருக்கான உதவித்தொகை அதிகரிப்பு, உடகவியலாளர்கள் – கலைஞர்களுக்கான வசதிகள், புத்தாண்டுக்கான பொதி வழங்கும் திட்டம், கோதுமை மாவின் விலைக்குறைப்பு என வேறு சில பல கவர்ச்சிகரமான அம்சங்களையும் வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் (அநுர) அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் சில விடயங்களை நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி.

  1. நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மாகாண மக்கள், தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததற்கான நன்றிக்கடனை நிறைவேற்றுதல்.

  2. வடக்குக் கிழக்கிலுள்ள அதிலும் குறிப்பாக வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான சூழலை உருவாக்குதல். மக்களின் ஆதரவைப் பெருக்குதல்.

  3. உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி கிட்டினால், உடனடியாகவே அது மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கும். அதிலும் வெற்றி கிடைக்குமானால், அரசியலமைப்பை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இலகுவாகக் கிடைக்கும்.

  4. பிராந்திய அரசியலை ((Regional Politics) முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய அரசியலை (National Politics) நிலைப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

  5. இதெல்லாம் இதுவரையிலும் ஆட்சியதிகாரத்திலிருந்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றவை சாதிக்க முடியாததை, தேசிய மக்கள் சக்தி சாதித்ததாக ஒரு வரலாற்றைப் படைப்பதாக இருக்கும்.

ஆகவே, முதற் குறியாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில்  வெற்றியைப் பெறுவதற்கு NPP முயற்சிக்கிறது. அத்துடன், வடக்குக் கிழக்கில் உள்ள ப.நோ. கூ. சங்கங்கள், தெங்கு பனை அபிவிருத்திச் சங்கங்கள், கடற்தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் அல்லது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இயங்குகிறது.

இதற்காக தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களும் அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சேர்ப்பு, அணி சேர்ப்பு, ஆதரவு திரட்டல் எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய போர்க்கால நடவடிக்கையைப்போல அதிதீவிரச் செயற்களமொன்று  திறக்கப்பட்டுள்ளது.

ஊர்களில் யாரெல்லாம் பிரமுகர்களாக – செல்வாக்குள்ளவர்களாக  இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் வளைத்துப் பிடிக்கும் (வலை வீசிப் பிடிக்கும்) நடவடிக்கை துரிதமாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியோடு எப்படித் தொடர்பை ஏற்படுத்துவது? எவ்வாறு நெருக்கத்தை உண்டாக்குவது? எனத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது தேடித்திரிந்த தெய்வத்தை நேரில் சந்தித்ததைப்போல ஆகியுள்ளது. இதனால் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளது.

கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து நிலைகளிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. இது 2008 க்கு முன், விடுதலைப்புலிகள் செயற்பட்டதற்கு ஒத்ததாகும். தமக்குக் கீழ் அனைத்தையும் கொண்டு வருதல். ஆயுதம் தாங்கிய இயக்கங்களிடம் இத்தகைய குணாம்சம் இருப்பதுண்டு. தேசிய மக்கள் சக்தியின் பிரதான மையமான ஜே.வி.பி என்ற ஆயுதம் தாங்கிய வரலாற்றைக் கொண்ட இயக்கம் – அமைப்பு – இருக்கின்ற காரணத்தினால், அதனிடமும் இத்தகைய பண்பு மேலோங்கியுள்ளது.

மட்டுமல்ல, மக்களுடன் நெருக்கமாகி வேலை செய்யும் ஒரு நீண்ட அனுபவம் ஜே.வி.பி (NPP) க்கு உண்டு. அதனுடைய அரை நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றில் அது மக்களுடனான அரசியலையே செய்து வந்துள்ளது. அதிகாரத்துக்கு இப்பொழுதுதான் முதற்தடவையாக வந்திருக்கிறது. ஆகவே, அதிகாரத்துக்கு எதிராக, மக்களுடன் இணைந்திருந்த அனுபவத்தை இப்பொழுது ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது சேர்த்துக் கொண்டு புதிய பயணத்தைத் தொடருவதற்கு அது முயற்சிக்கிறது.

இதெல்லாம் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பினரைக் கலங்கடிக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்புகளில் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்க வரலாற்றைக் கொண்டவையும் உண்டு. அதற்கு மறுதலையான தேர்தல் மைய அரசியலை வழிமுறையாகக் கொண்டவையும் உண்டு. இரண்டும் நீண்டகாலமாக (1990 க்குப்பின்) முற்று முழுதாகவே தேர்தல் மைய அரசியலையே தொடர்ந்து வந்தன. குறிப்பாக கொழும்பு மையத்தை தேர்தல் அரசியலின் மூலம் எதிர்ப்பதாகவே தம்மைக் கட்டமைத்திருந்தன.

இந்த அரசியல் தமிழ்ச் சமூகத்தின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவையே எதிர்கொள்ள நேரிட்டது. இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியாமல் குழப்பமடைந்திருந்த சூழலில்தான் தேசிய மக்கள் சக்தியின் அலை தமிழ் மக்களை அள்ளியெடுத்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத் தரப்புகள் தோற்றுப் பின்னடைந்ததற்குப் பிரதான காரணம், அவற்றிடம் செயலூக்கமும் இல்லை, புத்தாக்கத்திறனும் இல்லை (No action, No innovation) என்பதேயாகும்.

ஆக, தேசிய மக்கள் சக்தி உருவாக்கியிருக்கும் அரசியல் நெருக்கடி, வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ்த் தேசிய அரசியற் தரப்பினரை மட்டுமல்ல, பிராந்திய அரசியலில் (Regional Politics) தம்மைப் பிணைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் தரப்பினரையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

மட்டுமல்ல, இதுவரையும் அரசாங்கத்துடன் அல்லது தென்னிலங்கை அதிகாரத் தரப்புகளுடன் கூட்டு அரசியலைச் செய்துவந்த டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன் போன்றோருக்கும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. விஜயகலா மகேஸ்வரன், உமாச்சந்திரா பிரகாஸ் போன்றோரை அரங்கிற் காணவே இல்லை.

எல்லாத் தரப்புகளையும் அடித்துப் புரட்டிக் கொண்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி என்ற சுனாமிப் பேரலை. இதை எதிர்த்து முறியடிக்கக் கூடிய அரசியல் வியூகமொன்றை வடக்குக் கிழக்கு, மலையக அரசியற் சக்திகள் வகுக்க வேண்டும். அது இலகுவானதல்ல. அதற்கு முற்றிலும் மாறான – வெற்றியளிக்கக் கூடிய புத்தாக்கத்திறனும் செயலூக்கமும் நிறைந்த அரசியல் முன்னெடுப்புகள் அவசியம். அதைச் செய்வதற்கான கால அவகாசம் மிகக் குறைவு. ஏனென்றால், இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல், 2025) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. அது முடிய மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படலாம்.

பிற தரப்புகள் தம்மைச் சுதாகரித்து எழுவதற்கு முன் அதிரடியாக தாக்குதலை நடத்துவதற்கே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. வரலாற்று வாய்ப்பை யார்தான் தவற விடுவார்கள்?

எனவே, தற்போதைய சூழலில் – நிலையில் – தனிக்காட்டு ராஜாவாகவே NPP வெற்றிவாகை சூடவுள்ளது என்றே தெரிகிறது.


https://maatram.org/articles/11972

‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

2 months 2 weeks ago

‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர்  நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின் விசனத்திற்கும் கிண்டலுக்கும் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ஆளாகி வருகின்றார்கள்.

 ‘மாற்றம்’ என்ற கோஷத்தினால்  மக்களைச் சூடாக்கி, மூளைச்சலவை செய்து, நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றிய திசைக்காட்டியினர், இன்று செய்து வரும் அரசியல்  உண்மையில் ‘மாற்றம்’ நிறைந்ததுதான். ஆனால், அது என்ன மாற்றம்?,எதில் மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்? என்று சற்று அலசி ஆராய்ந்தால் திசைக்காட்டியினரின் மூளையில் தான் ‘’மாற்றம்’’ஏற்பட்டுள்ளது என்பதனை நாட்டு மக்கள் நன்கறிய முடியும்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பினாமியான தேசிய மக்கள்  சக்தி (என்.பி.பி.) யின் பலமே அவர்களின் பேச்சாற்றால் தான். தமது ஆவேச உரைகள் மூலம் மக்களை உசுப்பேற்றுவதில் இவர்களை விஞ்ச ஆள் கிடையாது. இதனால்தான் இவர்களிடம் பேச்சு மட்டுமே இருக்கும்  செயல் இருக்காது என அரசியலில், “பழம் தின்று கொட்டை போட்டவர்கள்” பலர் கூறியபோதும்,  ஜே.வி.பி-என்.பி.பி. காரர்களின் ஆவேச பிரசார உரைகள், நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளில் மூழ்கிப்போன  மக்கள் நாட்டில் பெரும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் இவர்களுக்கு வாக்களித்து ஆட்சி பீடம் ஏற்றினார்கள்.

 இவ்வாறு மக்களின் ‘நம்பிக்கை’யினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள், இன்று செய்து வரும் அனுபவமற்ற அரசியலாலும்  ‘அனுர அலை’யினால் எம்.பியானவர்களும் அமைச்சர்களானவர்களும் வெளியிட்டு  வரும் கோமாளிக் கருத்துக்களினாலும் நடவடிக்கைகளினாலும், முழு நாடும் சிரிப்பாய்  சிரிப்பதுடன், “பஞ்சு மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற கருத்துபோல, இவர்கள் எதிர்க்கட்சியாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்துக்களும்  வலுப்பெற்று வருகின்றன. இதனால்தான் ‘திசைகாட்டி’ செயலிழக்க முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தி ஓரளவுக்கேனும் வெறியைத் தக்க வைக்க வேண்டுமென்பதில்  ‘அனுரகுமார  சகோதரர்கள்’ தீவிரமாக  இறங்கியுள்ளார்கள்.
‘திசைகாட்டி’ மூலம் ‘மாற்றம்’ செய்கின்றோம் என நினைத்து, இவர்கள் செய்யும் ஒவ்வொரு மாற்றமும்  “பிள்ளையார்  பிடிக்கப்போய் குரங்கான கதை’’யாகவே முடிந்து வருகின்றது. அந்த வகையில், இவர்கள் நாட்டில் இதுவரையில் என்ன மாற்றம்  செய்துள்ளார்கள்  என்பதனை  சற்று ஆராய்வோம்.

 உண்மை, நேர்மை என முழங்கியதுடன், ஊழல், மோசடிகள், போலி. பித்தலாட்டங்களை ஒழிப்போம் என முழங்கியவர், தமது அரசின் முதல் தெரிவாகத் தெரிவு செய்த சபாநாயகரே ‘போலி கலாநிதி’பட்ட சான்றிதழ் சர்ச்சையில் சிக்கி உண்மையை நிரூபிக்க முடியாது, பதவியேற்ற சில தினங்களிலேயே சபாநாயகர்  பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை ‘குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவுடனேயே  பதவி விலகி முன்மாதிரியாகச் செயற்பட்ட  சபாநாயகர்.இதுதான் எமது ஆட்சியின் மாற்றம்’’என விழுந்தும் மீசையில்  மண்படாத கதையை  திசைக்காட்டியினர் கூறி மக்களைத் திசை திருப்பினர்.
இந்நிலையில், நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அது தொடர்பிலான சர்ச்சைகள் வெளிக் கிளம்பிய நிலையில், ‘கடந்த அரசு 20 கிலோ சிவப்பு அரிசியை எடுத்து, வெள்ளை அரிசியைச் சாப்பிடுபவர்களுக்குக் கொடுத்து, அதையும் சாப்பிடச் சொன்னதாலும் அரிசியைக் கோழிகள்  அதிகமாக உண்பதனாலும்தான்  தற்போது நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு  ஒரு கையொப்பத்தில்   தீர்வு காண முடியும் என  முன்னர் ஒரு பேச்சுக்கே கூறியிருந்தேன். எனினும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவால் மிக்கது’ என  கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்  சுனில் ஹந்துன்னெத்தியும் முன்னெப்போதும் ஒருவரும் கூறாத மாற்றான காரணத்தைக்கூறி மக்களைச்  சிரிக்க வைத்தனர்.

 இதன் தொடர்ச்சியாக  நாட்டில் தேங்காய்க்கான  தட்டுப்பாடு ஏற்பட்டு அது தொடர்பிலான சர்ச்சைகள் வெளிக்கிளம்பிய நிலையில்,  மக்கள் “வீடுகளில் தேங்காய்ப் பால் பிழிவதும் பால் சொதி வைப்பதும், தேங்காய் சம்பல் செய்வதும் தான் தேங்காய் தட்டுப்பாட்டுக்குக் காரணம்” என  கைத்தொழில் பிரதி அமைச்ச   சதுரங்க அபேசிங்கவும் “தேங்காய்களைக் குரங்குகள் களவாடுவதனாலும் சேதப்படுத்துவதனாலுமே தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு” என   கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவும் கூறி மக்களை விசனப்பட வைத்தனர்.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் ஒன்றரை மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்வெட்டு சில தினங்கள் அமுல்படுத்தப்பட்ட   நிலையில் மின் நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை  முன்வைத்தபோது பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக  மின்சக்தி சக்தி அமைச்சர்  குமார ஜெயக்கொடி  மின்வெட்டுக்கான பழியைக் குரங்கு மீது சுமத்தினார். இவ்வாறு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தி எதிர்பாராத ‘மாற்றமாக’  குற்றவாளியான குரங்கு சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது.

நாட்டில் ஏதாவது நெருக்கடிகள், பொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டால், குற்றங்கள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றால் முன்னைய அரசுகளின் காலத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீதும் அரசுகள் எதிர்க்கட்சிகள் மீதும் பழி போடுவதுதான் அரசியல் கலாசாரம். ஆனால், இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ சொன்னது போலவே ஒரு ‘மாற்றம்’ ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பழி போடாமல்,குற்றம்சாட்டாமல் தேங்காய் தட்டுப்பாடு, மின் வெட்டுகளுக்கான பழியை, குற்றச்சாட்டை மறுக்க முடியாத, எதிர்த்துப்பேச முடியாத குரங்குகள் மீது போட்டு நாட்டில் முன்னெப்போதுமில்லாத ‘மாற்றம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, தேங்காய்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமையை  அரசுக்கு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யவும் இலங்கையில் குரங்குகளைப் பிடித்து ஒரு தனித் தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு  பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குரங்குகளைப் பிடிக்கும் பொறுப்பு   ஜகத் மனுவரண எம்.பியிடமும்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவும் முன்னைய எந்தவொரு அரசும் செய்திராத ‘மாற்றம்’ஆகவே உள்ளது.

 தமது அரசைப் பாதுகாத்துக்கொள்ள எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்ட முடியாத நிலையில், குரங்குகளைக் குற்றவாளிகளாக்கி, ‘மாற்றம்’ செய்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ திசைக்காட்டிச் செயலிழக்க முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதிலும் ‘மாற்றம்’ ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது கடந்த அரசுகள் பாராளுமன்றத்தைக்  கூட்டி   ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டு  சில மணி நேரங்களில் ஒத்திவைத்தால் வீணாகப் பாராளுமன்றத்தைக்கூட்டி மக்களின் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி நீலிக்கண்ணீர் வடித்த  ‘அனுரகுமார சகோதரர்கள்’ கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூல திருத்தம் தொடர்பான   நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை அறிவிப்பதற்காகப் பாராளுமன்றத்தை ‘25 நிமிடங்கள்’ மட்டும் கூட்டி மக்கள் பணத்தை வீணடித்தார்கள்.

அத்துடன், ஒரு வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமானவரோ அல்லது நிதி அமைச்சரோ சமர்ப்பித்து உரையாற்றுவதற்காகப் பாராளுமன்றம் கூட்டப்பட்டு அன்று வரவு-செலவுத் திட்ட உரை  மட்டுமே நிகழ்த்தப்படுவதுதான் பாராளுமன்ற சம்பிரதாயம். வரலாறு. ஆனால், கடந்த 17ஆம் திகதி 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுரகுமார திசநாயக்க சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர்,  உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூல திருத்தம் தொடர்பான விவாதத்தை நடத்தி பாராளுமன்ற சம்பிரதாயத்தில் வரலாற்றில்  ‘அனுரகுமார சகோதரர்கள்’  ‘மாற்றம்’ செய்துள்ளனர்.

 இவ்வாறாக ‘மாற்றம்’ என்ற பெயரில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ செய்யும் அனுபவமற்ற, கோமாளித்தன அரசியல் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களினால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மரியாதை செலுத்தப்பட்ட ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத், சுனில் கந்துன் நெத்தி  போன்ற அரசியல் தலைவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேசிய மக்கள்  சக்தி அரசின் மீது நம்பிக்கை இழக்க வைப்பதுமாகவே உள்ளது. இவ்வாறான அனுபவமற்ற, கோமாளித்தனமான அரசியலை  ‘அனுரகுமார சகோதரர்கள்’ 

தொடர்ந்தால்  நாட்டில் மீண்டும் ஒரு ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

image_e356f1fc00.jpg

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றம்-ஏற்பட்டாலும்-ஆச்சரியப்படுவதற்கில்லை/91-352329

இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்?

2 months 2 weeks ago

Elon_Musk_Royal_Society_crop-e1739916921

Columnsசிவதாசன்

இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்?

சிவதாசன்

இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி?

இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையாரும் அப்படியான ஒருவரே. தனது நியூ யோர்க் தொடர்மாடிக் குடியிருப்புகளில் கறுப்பர்களுக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவர் மூத்த ட்றம்ப். ஓரளவு மனிதாபிமானம் கொண்ட இரண்டாவது மகனுக்கு சொத்துக்களைக் கொடுக்காமல் டொணால்டை மட்டும் தனது வாரிசாகக் கொண்ட தந்தையின் குணம் தான் மகனின் வியாபார வெற்றிக்குக் காரணமானது. அது குறுக்கு வழியாயினும் அதையே அவர் பின்பற்றுவார்.

இலான் மஸ்க் ட்றம்பை விட மோசமான இனத் துவேஷி. தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கானர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கான பழி வாங்கலே அவரது தற்போதைய நடவடிக்கைகள். ட்றம்பைப் போலவே இவரும் வெள்ளையரல்லாதோரை இழிவாகப் பார்ப்பவர். இருவரும் தமக்குத் தேவையான போது எவரையும் பாவித்து விட்டுத் தூக்கி எறிபவர்கள். எதிரிகளை வஞ்சம் வைத்துப் பழி தீர்ப்பவர்கள். விவேக் ராமசாமி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இலான் மஸ்க்கின் ரெஸ்லா பங்குச் சந்தையில் முதலிட்டு பணக்காரர்களாகியவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இப்பணத்தில் எவ்வளவு இரத்தம் குழைந்திருக்கிறது என்பது பற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்கவோ அல்லது அக்கறையிருக்குமோ தெரியாது.

கலிபோர்ணியாவிலுள்ள ரெஸ்லா ஆலையில் கறுப்பின மற்றும் லத்தீனோ மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பெருமூடகங்கள் வெளியே சொல்வதில்லை. ருவிட்டரில் அவருக்கு எதிரான தகவல்கள் வெளியாகின என்பதற்காகவே அதை அதிக விலை கொடுத்து ($40 பில்லியன்?) வாங்கியவர். ரெஸ்லா நிறுவனத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் ஆதரவானதும், புகழ் பாடுவதுமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கென ‘இன்ஃபுளுவென்ஸர்ஸ்’ எனப்படும் ‘தனிப்பட்டவர்களுக்கு’ அவர்களது வாகனப் பராமரிப்பிற்கென விசேட சலுகைகளைக் கொடுத்து விலைக்கு வாங்கி வைத்திருப்பவர்.

இலான் மஸ்கின் கலிபோர்ணியா ரெஸ்லா ஆலையில் இனத்துவேஷம் எல்லை மீறிப் போனதன் காரணமாகப் பதியப்பட்ட ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையிலிருக்கின்றன. அங்கு பணி புரியும் 6,000 கறுப்பினப் பணியாளர்களினால் அங்கு நடைமுறையிலிருக்கும் இனப் பாரபட்சம் பற்றியும் பணி ஒதுக்கீடுகள் பற்றியும் வழக்கு ஒன்று நிலுவையிலிருக்கிறது. தென்னாபிரிக்காவில் இருந்ததைப் போல பணியிடத்தில் வெள்ளையருக்கும் ஏனையோருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடுகள் வைத்திருப்பதற்கு எதிராக கலிபோர்ணியா அரசு வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறது. அங்கு இனத்துவேஷம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராக மத்திய அரசின் திணைக்களமொன்றும் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. ரெஸ்லா வாகனத்தின் ஆட்டோ பைலொட் தொழில்நுட்பத்தால் 8 பேர் இறந்த / காயப்பட்ட காரணங்களுக்காக இன்னுமொரு வழக்கு பதியப்பட்டு நிலுவையில் இருக்கிறது. இவற்றில் சில வழக்குகள் பணம் மூலம் இரகசியமாக மீளப்பெறப்பட்டுள்ளன. மீதியானவை ட்றம்பின் ஆட்சியில் தூக்கியெறியப்பட வாய்ப்புகளுண்டு.

இலான் மஸ்க் ஒரு பரந்த உள்நோக்கத்தோடு (mission) தான் வெள்ளை மாளிகை முகாமுக்குள் நுழைந்திருக்கிறார். அது ஹிட்லரின் தோற்றுப்போன கனவை நனவாக்குவது. இதுவரை அவரது நடவடிக்கைகளை உற்று நோக்கினால் இதற்கான தடயங்களை அவர் தொடர்ச்சியாக விட்டு வந்திருக்கிறார். தென்னாபிரிக்காவில் அவரது குடும்பம் மிக வசதியாக இருந்தது. ஆபிரிக்கானர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அவர் அமெரிக்காவிற்கு வந்து கடும் உழைப்பால் இந்த நிலையை எட்டியிருக்கிறார். இதே வேளை இவரது தந்தையார் எறோல் மஸ்க்கும் மகனது கனவுக்கு எண்ணை ஊற்றித் தூபம் போட்டு வளர்த்தவர். பீட்டர் தீல் எனப்படும் இன்னுமொரு தனவந்தர் (எரோலின் நண்பர்). ஆதிக்கம் செலுத்தும் (இக்குழுமத்தை ‘பே பால் மாஃபியா என்றழைப்பர்) குழுமத்தில் இலான் மஸ்க்கும் அவரது தந்தையும் உள்ளார்கள். ஃபுளோறிடாவிலுள்ள ட்றம்பின் பிரத்தியேக குடியிருப்பான மார்-எல்-லாகோ வில் இந்த மாஃபியா ‘குடி கொண்டிருக்கிறது’. இக்குழுமத்தின் ஆலோசனையையே ட்றம்பின் காதுகளை எட்டும். ஒரு காலத்தில் ட்றம்பைக் காரசாரமாகத் தாக்கிய, தற்போதைய உதவி ஜனாதிபதியாக இருக்கும், ஜே.டி. வான்ஸை உதவி ஜனாதிபதியாக்கும் அளவிற்கு இந்த மாஃபியாவிற்கு ட்றம்பின் மீது ஆதிக்கமுண்டு.

இலான் மஸ்க் குழுமம் ஹிட்லரை மீளப் புதுப்பிக்க முயல்கிறார்கள் என்றால் யூதர்களது மாஃபியா அவரைச் சும்மா விட்டிருக்குமென நினைக்கிறீர்களா? என உங்களில் சிலர் கேட்கலாம். தேர்தலுக்கு முன் இஸ்ரேல் மாஃபியா கமலா ஹரிஸுக்கே முழு ஆதரவாகச் செயற்பட்டது. இருப்பினும் ட்றம்பின் மீதான பிடியையும் அவர்கள் தளர்த்தவில்லை. பிளான் ‘பி’ யுடன் அவர்கள் தயாராகவே இருந்தார்கள். யூதரான ட்றம்பின் மருமகன் அதற்குப் பொறுப்பு. ஆனாலும் உறவுகள் என்று வரும்போதும் ட்றம்ப் தன் சுயநலத்தை மட்டுமே கவனிப்பவர் என்பது அவரது சகோதரர் விடயத்தில் காட்டப்பட்டது. இதனால் ட்றம்ப் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தவே அவர் மீதான கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது ஒரு சூசகமான தகவல்.

உலக ஆதிக்கத்தை முன்வைத்தே அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டமைக்கப்பட்டது. வர்த்தகம் அதன் முதல் கருவி. இதுவரை காலமும் ஜனநாயக, குடியரசு கட்சிகள் இவ்விடயத்தில் இலக்கை விட்டு மாறவில்லை. ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ எனச் சூசகமாகக் குறிக்கப்படும் ஆளும் வர்க்கம் இதைத் திறம்பட நிர்வகித்து வந்தது. இந்த விடயத்தில் ட்றம்ப் ஒரு வெளிவட்டக்காரர் (outlier). இந்த எஸ்ராபிளிஷ்மெண்டிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவதே அவரது நோக்கம். இந்த எஸ்ராபிளிஷ்மெண்டில் இஸ்ரேல் லொபி போன்றவையும் அடக்கம். இதனால் அமெரிக்க கொள்கை வகுப்பு, பாதுகாப்பு, உலக ஆதிக்கம் போன்றவற்றை இக்கூட்டு வெற்றிகரமாக செயற்படுத்தி வரமுடிந்தது. இதனிடமிருந்து அமெரிக்காவை வெளியே எடுத்து ‘அமெரிக்கா முதலில் அமெரிக்கர்களுக்கே’ என்ற சுலோகத்தோடு ட்றம்ப் முதல் ஆட்சியைத் தொடங்கினார். அப்போது அவரது திறமைகள், தகமைகள் அதிகம் அறியப்படாதவை. அப்போது இவரை முன்தள்ளியது ஸ்டீவ் பனன், கொச் சகோதரர்கள் போன்ற அமெரிக்க-முதல்வாதக் கொள்கை வகுப்பாளர்கள் / தனவந்தர்கள். இவர்களும் வெள்ளை-முதல் வாதக் குழுவாக இருந்தாலும் இலான் மஸ்க் போன்று ஹிட்லர் மோகிகளல்ல. முதலாவது ஆட்சியில் ட்றம்பின் பலம் / பலவீனங்களை அவதானித்த ‘பே பால் மாஃபியா’ அவரது இரண்டாவது வருகையைத் திட்டமிட்டது. ருவிட்டர் கொள்முதல் தொடக்கம் ட்றம்பின் தேர்தல் செலவுகளைப் பொறுப்பேற்றது வரை ($300 மில்லியன்) இலான் மஸ்க்கின் திட்டம் எனக் கூறப்படுகிறது. இப்போது ட்றம்ப்பின் பிரத்தியேக வாஸஸ்தலத்தில் உணவுண்பது தொடக்கம் வெள்ளை மாளிகையில் மகனைக் கொண்டுவந்து (இன்னும் சில பத்து வருடங்களில் அவனே ஜனாதிபதி!) படம் காட்டுவது வரை மஸ்க்கும் ட்றம்பும் இணைபிரியா நண்பர்கள்.

இலான் மஸ்க்கின் / குழுமத்தின் முதல் நோக்கம் அமெரிக்காவை இஸ்ரேலின் பிடியிலிருந்து விடுவிப்பது எனவே நான் நம்புகிறேன். இதில் ட்றம்ப் ஓரளவு இணங்கிப் போவதாகவே தெரிகிறது. ட்றம்பின் கொலை முயற்சியின் பின்னால் இஸ்ரேல் இருப்பது குறித்த சந்தேகம் ட்றம்பிற்கு இருப்பதனால் தான் அவர் இலான் மஸ்க்குடன் நெருக்கமாகியிருக்கிறார் போலத் தெரிகிறது. ட்றம்பின் ஜனாதிபதி பதவியேற்பின்போது இலான் மஸ்க் தனது நாஜி சல்யூட் மூலம் தனது ஹிட்லர் விசுவாசத்தைப் பகிரங்கமாகவே காட்டியிருப்பது இஸ்ரேல் லொபிக்கு பயங்கர கடுப்பாகியிருக்கும். எனவே அவர்கள் இலான் மஸ்க் மீதான பரப்புரைகளை, மறைமுகமாக, ஏவ ஆரபித்திருப்பது தெரிகிறது. ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ இல் இஸ்ரேல் லொபி நீண்டகாலமாக ஊடுருவி இருப்பதால் பெண்டகன், எஃப்.டி.ஏ, டி.ஓ.ஜே. (நீதித் துறை) போன்ற திணைக்களங்கள் இலான் மஸ்க்கின் இறகுகளைக் கத்தரிக்க முயற்சிகளை மேற்கொள்கின்றன. இவை நடைபெறும் என்று எதிர்பார்த்துத் தான் பட்டேல், கிப்பார்ட், ஆர்.எஃப்.கே போன்ற விசுவாசிகளை மஸ்க் குழுமம் உள்ளே அனுப்பியிருக்கிறது. இவர்களும் காரியங்கள் நிறைவேறியதும் விவேக் ராமசாமியைப் போல விரைவில் விரக்தியுடன் வெளியேறத் தள்ளப்படலாம்.

ஏற்கெனவே நடைமுறையிருந்தும் அமுக்கி வாசிக்கப்பட்ட இன்னுமொரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலிருந்து ஆபிரிக்கான வெள்ளையர்களை அமெரிக்காவிற்கு குடியேற வைக்கும் முயற்சி. தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெறுவதாகப் பெரிதாகப் பரப்புரை செய்யப்படும் (X / ருவிட்டரில்) ஒரு விடயம் அங்கு வெள்ளை விவசாயிகள் கறுப்பின மக்களால் ‘கொலை செய்யப்படுவது’ பற்றியது. அமெரிக்காவிலிருந்து வெள்ளையரல்லாதோரை நாடு கடத்திவிட்டு வெள்ளையரை மட்டும் குடியேற்றும் இத்திட்டம் ‘பே பால் மாஃபியா’வினுடையது. அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பலவந்தமாக விலங்குகளிடப்பட்டு மந்தைகள் போல இழிவான முறையில் மூன்று விமானங்களில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக இந்திய அரசு கூட மெளனம் சாதிக்கிறது. இது காளிஸ்தான் போராட்டத்தை மையமாகக் கொண்ட எதிர்வினையாகவும் இருக்கலாம். இருப்பினும் இப்பரப்புரை ட்றம்பின் ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. லத்தீன் அமெரிக்க குடிவரவினர் விடயத்தில் இந்தளவு துவேஷமோ, இழிவான செயல்முறைகளோ காட்டப்படாமைக்குக் காரணம் அமெரிக்க வெள்ளையர்களுக்குத் தேவையான, அவர்களது தோட்டங்களில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்யக்கூடிய நவீன அடிமைகள் இங்கிருந்துதான் வருகிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு அவர்கள் இப்போதும் அவசியமானவர்கள். இந்தியர்கள் அப்படியானவர்களில்லை.

சமீபத்தில் இலான் மஸ்க்கின் தந்தையார் எரோல் மஸ்க் கொடுத்த ஒரு நேர்காணல் மகனது X தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் அவர் ஒரு அதிர்ச்சி தரும் பொய்யொன்றைக் கூறுகிறார். அதாவது, பராக் ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவரது மனைவி ஒரு ஆண் என்றும் கூறுகிறார். இது வேண்டுமென்றே வெளியிடப்பட்ட ஒரு காணொளி. இதற்கு எதிராக எந்தவித எதிர்வினைகளும் காட்டப்படவில்லை. காணொளிக்கு பல இலட்சம் விருப்புக்குறிகள் இடப்பட்டிருந்தன.

வெள்ளைத் தேசியம் உலகம் முழுவதும் மீழெழுச்சி பெற்று வருவது இப்போதல்ல. பராக் ஒபாமாவின் தெரிவிலிருந்து ஆரம்பமாகியது இது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் மேற்கு மேற்கொண்ட ஆட்சிக் கலைப்புகள் உருவாக்கிய அகதிகள் மேற்கு நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததன் நேரடி எதிர்வினையே வெள்ளைத் தேசியத்தின் மீழெழுச்சி. பிரான்ஸின் லூ பென், இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, தற்போதைய ஜேர்மனியின் எதிர்க்கட்சியான ஏ.எஃப்.டி. தலைமை ஆகியவர்களின் வரவு தற்செயலானதல்ல. அவர்களும் ஒருவகையில் தமது இனத் தனித்துவத்தைக் காப்பாற்ற முயல்வதாக இருந்தாலும் மஸ்க் போன்றோரின் திட்டம் வெள்ளை இனத்தின் பெருக்கமும் ஆதிக்கமுமே.

அமெரிக்காவில் சுத்தமான வெள்ளை இனத்தின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது. மாறாக இதர இனங்களின் எண்ணிக்கை அதி வேகமாக அதிகரித்து வருகின்றது. இதை மனதில் கொண்டுதான் மஸ்க் போன்றவர்கள் வெள்ளையினத்தவர் கருத்தடை செய்யக்கூடாது, அதிக குழந்தைகளைப் பெறவேண்டுமென போதித்து வருகிறார்கள். மஸ்க் வெவ்வேறு பெண்கள் மூலம் 13 குழந்தைகளைப் பெற்றதும், ஓரினச் சேர்க்கையை வெறுப்பதும், கருத்தடையைத் தடைசெய்ததும் இப்பின்னணியில் பார்க்கப்படவேண்டியவை. இஸ்ரேல் மாஃபியாவோ வெள்ளையினம் உட்பட இதர இனங்களின் பலம் குறையவேண்டுமென்பதில் குறியாகவிருக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் ஓரினக் கல்யாணம், கருத்தடை போன்ற நடைமுறைகளையும் தீவிர ‘முற்போக்குக் கொள்கைகளையும்’ ஊக்குவிக்கிறார்கள் எனவும் இதற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் அமெரிக்கர்களின் வரிப்பணம் போன்றவற்றைச் செலவு செய்கின்றது எனவும் மஸ்க் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

அரச வினைத்திறனுக்கான ஆணையம் (டோஜ்) என்ற திணைக்களத்தை மஸ்க் கைப்பற்றியது மேலே குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரச மானியங்களை நிறுத்துவதற்கே. இதில் ‘யூ.எஸ்.எயிட்’ நிறுவனம் மீது மஸ்க்கிற்கு ஒரு தீராத பகையுண்டு. ட்றம்ப் ஆட்சியேறியதும் அவரைக் கொண்டு மஸ்க் முதல் கைவைத்தது ‘யூ.எஸ்.எயிட்’. இதன் பின்னால் ஒரு வரலாறு உண்டு.

ஜனாதிபதி கென்னெடியின் பதவிக் காலத்தில் ‘கிறீன் பெரே’ என்றொரு இராணுவ பிரிவை அவர் உருவாக்கினார். அதன் பொதுமக்கள் பிரிவாக (சிவிலியன்) உருவாக்கப்பட்டதே ‘யூ.எஸ்.எயிட்’. அப்போது நிலவிய சோவியத் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த உலக நாடுகளுக்குச் சென்று மக்களுடன் ஊடாடி மக்கள் அமைப்புகளுக்கு நிதிகளை வழங்கி அவர்கள் சோவியத் பிரச்சாரங்களுக்கு எடுபடாமல் செய்வதற்காகவே இந்த ‘யூ.எஸ்.எயிட்’ என்ற இராணுவ / மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க கண்டத்தில் இந்த சோவியத் விரிவாக்க முயற்சிகள் அப்போது வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போதைய றொடீசியா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மொசாம்பிக் எனப் பல நாடுகளும் அமைப்புக்களும் இலகுவாக சோவியத் சார்பு நிலையை எடுத்தபோது தென்னாபிரிக்காவைத் தமது பக்கம் வைத்திருக்க கென்னெடி எடுத்த முயற்சிகளிலொன்றுதான் இந்த யூ.எஸ்.எயிட்டின் ஆரம்பம். தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி சுதேச மக்களிடம் கொடுத்ததன் மூலம் கென்னெடியின் கனவு ஓரளவு வெற்றி பெற்றது. 1988 இல் வெள்ளையர்களின் ஆட்சி பறி போனதும் தனது பெரும் சொத்துக்களை அள்ளிக்கொண்டு சடுதியாக அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாகக் குடியேறியது தான் மஸ்க் குடும்பம். இதைச் சாத்தியமாக்கியது ‘யூ.எஸ்.எயிட்’ என்ற காரணத்தல் அதில் வெஞ்சினம் கொண்டிருந்த மஸ்க் அதிகார பலம் கிடைத்ததும் ‘யூ.எஸ்.எயிட்’ மீது பாய்ந்ததற்கு இப்பழிவாங்கலே நோக்கம். என்கிறார் டேவி ஒட்டன்ஹைமெர் என்ற வரலாற்றாசிரியர்.

எனது அனுமானம் இப்போது சரியெனப் படுகிறது. இந்த வரலாற்றாசிரியர் ஒரு யூதர். வெள்ளை தேசியத்தின் எழுச்சியால் பாதிக்கப்படப் போவது இஸ்ரேல் / யூதரின் அமெரிக்க ஆதிக்கம். அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளைத் தேசிய சக்திகளினால் இஸ்ரேல் லொபியின் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்க ஆட்சி பிடுங்கப்பட்டிருக்கிறது. இதை இஸ்ரேல் மாஃபியா சும்மா பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்ரேல் லொபி மஸ்கின் ஆதிக்கத்தைக் குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முனைப்புக் காட்டும். மஸ்கிற்கு எதிரான பரப்புரைகளும் சிலவேளைகளில் வன்முறைகளும் இனி வரும் காலங்களில் எதிர்ப்பர்க்கப்படலாம். அவரது நிறுவனங்கள், பண்டங்கள் மீது பல பொய்கள், திரிபு படுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்படலாம். மஸ்கிற்கு இப்போதுள்ள பலம் அவரது பணம் மட்டுமே. அதே வேளை, விரைவில் அவரது ‘வெள்ளைச் சேனை’ தனது கட்டமைப்பைப் பலப்படுத்துவதுடன் தனது ஆயுதக் கிடங்குகளையும் விஸ்தரிக்க முற்படலாம்.

இக்காலத்தில் ஏன் ட்றம்ப் தனது கூட்டாளிகளும் அயலவர்களுமான கனடா, மெக்சிக்கோவுடன் பொருதுகிறார் என நீங்கள் கேட்கலாம். அமெரிக்காவைப் பலவீனப்படுத்துவதில் முன்னணியாகச் செயற்படும் இஸ்ரேலின் ஒரு நோக்கம் அங்குள்ள வெள்ளை இனத்தைப் பலவீனப்படுத்துவதே. கனடாவிலிருந்தும், மெக்சிக்கோவிலிருந்தும் வரும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை நகர்த்துவதில் மொஸாட் ஏஜெண்டுகளுக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் மொஸாட் தனது சிறு படைகளை வைத்திருக்கிறது. அங்குள்ள போதை வஸ்துக் கும்பல்கள் பாவிக்கும் நவீன ஆயுதங்கள் அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குரியது. இக்கும்பல்களுக்கும், பிரிவினைவாதக் குழுக்களுக்கும் ஆயுதங்களையும், பயிற்சிகளையும் கொடுப்பது மொஸாட் என்பது பரவலாத் தெரிந்த செய்தி. அமெரிக்காவின் எதிரிகளான லத்தீன் அமெரிக்க நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதும், சதிகளால் ஆட்ட்சிகளைப் புரட்டுவதும் இந்த மொசாட் கும்பல்களின் வேலைதான். சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு உதவிகளைச் செய்வதன் மூலம் அதிக இலாபமடைவது இந்த போதைவஸ்துக்க் கும்பல்கள் (கார்ட்டல்கள்). இதை ‘எஸ்ராபிளிஷ்மெண்ட்’ அரசுகள் அறியாமலில்லை.

பைடன் அரசு, “இச்சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் எல்லைகளைக் கடந்ததும் அவர்களை பஸ்களில் ஏற்றி அவர்களுக்கு மானியங்களைக் கொடுக்கிறது” என இப்போதும் குற்றஞ்சாட்டுபவர் ட்றம்ப். பைடன் அரசு ஏறத்தாழ ஒரு இஸ்ரேலிய அரசு எனப் பலரும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுமளவுக்கு விடயங்கள் நடைபெற்று வந்தன. எனவே கனடிய, மெக்சிக்க எல்லைகளைக் கண்காணிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஆயுதமே ட்றம்பின் ‘எல்லை வரி’. கொலம்பியாவுடன் இதே விளையாட்டை விளையாடி அதில் வெற்றிகண்டுவிட்டார் ட்றம்ப். கனடாவுக்கு வந்த 20,000 இந்திய மாணவர்களைக் காணவில்லை என்பதைக் கனடிய அரசே ஒத்துக்கொள்ளும்போது ட்றம்பின் கொக்கரிப்பில் உண்மை இருக்கிறது என்பது புரிந்துவிடும்.

அடுத்தடுத்த வருடங்களில் ஐரோப்பாவில் ஏற்படவிருக்கும் பல ஆட்சி மாற்றஙக்ள் மஸ்கிற்குச் சாதகமாக அமையப் போகின்றன. ட்றம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ‘ஐரோப்பா சிவில் யுத்தம் ஒன்றிற்குத் தயாராக வேண்டும்’ என மஸ்க் அறைகூவல் விடுத்திருந்தது பிரித்தானிய பிரதமரால் (இவரும் பிறப்பால் ஒரு யூதர்) பலமாகக் கண்டிக்கப்பட்டது. யூக்கிரெய்னை மண்டியிடச் செய்வதன் மூலம் ரஸ்யாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதன் பின்னணியில் இந்த யூத எதிர்ப்பு இருக்கிறதோ தெரியாது. செலென்ஸ்கியும் ஒரு யூதர். இன்று / நாளை சவூதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் யூக்கிரெய்ன் பற்றிய அமெரிக்க – ரஸ்ய பேச்சுவார்த்தையில் வேண்டுமென்றே செலென்ஸ்கி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு வேறு காரணம் எதுவாக இருக்க முடியும்? இதே வேளை யூக்ரெயினைக் காரணம் காட்டி ரஸ்ய எல்லையில் நேட்டோவை நிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியை இலான் மஸ்க் தவிடுபொடியாக்கி விட்டார். போரின் ஆரம்ப காலத்திலிருந்தே அவர் யூக்கிரெய்னை விட ரஸ்யாவுக்கே அதிக விசுவாசமாக இருந்தவர். ஐரோப்பாவில் சிவில் யுத்தம் நடக்கவேண்டுமென அவர் கோரியது காரணதோடு தான்.

எனவே, நடைபெறப்போகும் இந்த மஸ்க் – இஸ்ரேல் பனிப்போரில் உலகிற்கு நல்லதும் கெட்டதும் நடக்கலாம். அமெரிக்கா மீதான இஸ்ரேலின் ஆதிக்கம் குறைக்கப்படுவது உலகிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லது தான். ஆனால் இதன் மூலம் மஸ்கின் பலம் அதிகரிக்குமானால் போத்தலுக்குள் இருக்கும் ஹிட்லரின் ஆவியை வெளியே விட்டதற்குச் சரி. நான் ஏற்கெனெவே பல கட்டுரைகளில் கூறியது போல அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறப் போகும் இந்த இரண்டு தரப்பினரதும் பலப்பரீட்சை எஞ்சிய உலகிற்கு ஒரு இடைவேளையை வாங்கித் தரப் போகிறது. இப்பனிப்போரில் இரண்டு தரப்பும் தோற்றுப்போனால் அது உலகிற்கு வெற்றி. அதே வேளை இலான் மஸ்க் அமெரிக்காவை ஒரு தென்னாபிரிக்கா ஆக்கி விடுவாரேயானால் அது எல்லோருக்கும் தோல்வி. (Image Courtesy: Royal Society / Wikipedia)

|
No image previewஇலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? |
சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனத...

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

2 months 2 weeks ago

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

February 16, 2025

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

— கருணாகரன் —

தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன்,  சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்ற அளவுக்குச் சற்றுப் பெரிய வட்டமொன்றாக விரிந்துள்ளது.

ஆனாலும் இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா? இது புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்குமா? இந்தப் போராட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி எப்படிக் கையாளப்போகிறது? வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இது உதவுமா? இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தரப்பின் முழுமையான ஆதரவு கிட்டுமா? மத விவகாரத்துடன் இந்த விடயம்  இணைந்துள்ளதால், தேசிய ஒருமைப்பாட்டை இது நெருக்கடிக்குள்ளாக்குமா? அந்த வகையில் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளை உண்டாக்குமா? என்று பல கேள்விகளை இது எழுப்புகிறது. 

முதலில் இதொரு சட்டப்பிரச்சினையாகும். எப்படியென்றால் –  

1.     இந்த விகாரை அமைந்துள்ள காணி தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. அதாவது மக்களுடைய வாழிடமாகும். ஆகவே அவர்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியைக் கோராமல் விகாரையை அமைத்தது தவறு. பௌத்த அடையாளங்கள், தொன்மையான எச்சங்கள் அங்கே இருப்பதாக விகாரையை அமைக்கும் தரப்பு வாதிட்டால், ஏற்கனவே அதற்குரிய   ஆதாரங்களை முன்வைத்து, வர்த்தமானி அறிவித்தலைச் செய்து, காணி உரிமையாளர்களிடமிருந்து காணியை அரசாங்கத்தின் மூலமாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதற்குப் பின் உரிய முறைப்படி அரசாங்கம் காணியை விகாரை அமைக்கின்ற தரப்புக்கு விதிமுறைப்படி வழங்கியிருக்க வேண்டும். இதெல்லாம் விதிமுறைகளின்படி நடந்திருந்தால்தான் சட்டத்துக்குட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால்,இவை எதுவுமே நடக்கவில்லை. 

2.     அப்படித்தான் அரசாங்கம் முறைப்படி நடந்து விகாரையை அமைப்பதற்கான அனுமதியைக் கொடுத்திருந்தாலும் அதற்குப் பின், விகாரையை அமைப்பதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்துக்குரிய பிரதேச சபையிடமோ, நகரசபையிடமோ குறித்த தரப்புப் பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. 

3.     இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் நல்லாட்சிக் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின்படி குறித்த விகாரையைக் கட்டும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறியே விகாரையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, இங்கும் அரசாங்கத்தின் நடைமுறை விதிகள் மதிக்கப்படாமல் மீறப்பட்டுள்ளன. அதாவது, ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை நாட்டின் உயர் பீடத்தினர் மதிக்காமல் மீறி நடப்பதென்பது, அதனுடைய இயங்கு திறனையும் அடிப்படையையும் செயலிழக்க வைப்பதாகும். இது  தற்போதைய ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு முரணான – மீறிய – செயல்கள் தொடர்ந்தும் நடப்பதற்கான முன்மாதிரியை இது  உருவாக்குவதாகவே அமையும். 

ஆக மொத்தத்தில் மூன்று இடங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. என்பதால், இதற்கான பொறுப்பை அரசாங்கமும் விகாரையை அமைத்த தரப்பினரும் ஏற்க வேண்டும். பொறுப்பை ஏற்றுக் கொள்வதென்பது, அதற்கான நிவாரணத்தை அளித்தலாக இருக்க வேண்டும். அத்துடன், தமது தவறுக்காக தண்டனையைப் பெற வேண்டும். 

ஏனென்றால், அரசாங்கமானது எப்போதும் சட்டத்தையும் அதன் விதிகளையும் மதித்து நடந்து தன்னை முன்னுதாரணமாக்க வேண்டும். அப்போதுதான் மக்களும் அதைப் பின்தொடர்வர். அரசாங்கமே அதை மீறினால் மக்களும் அதை மீறவே முயற்சிப்பர். 

அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி. 

இங்கே அடிப்படைப் பிரச்சினைகளாக இருப்பது –

1.     யுத்தகாலத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான (மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்கான ) காணிகள், யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்களிடம் மீளளிக்கப்படவில்லை. இன்னும் அவை படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு வலயங்களாகவே உள்ளன. இந்த நிலை வடக்குக் கிழக்கு முழுவதிலும் உண்டு. 

2.     பாதுகாப்பு வலயங்களாக இருப்பதால்தான் அவற்றில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகின்றன. வடக்குக் கிழக்கில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. யுத்தம் முடிந்து, விடுதலைப் புலிகள் முற்றாகவே அழித்தொழிக்கப்பட்ட பின்னர், எதற்காகப் படையினர் தனியார் காணிகளில் நிலை கொண்டிருக்க வேண்டும்? எதற்காக படைவலயங்கள் இன்னும் இருக்கின்றன? பாதுகாப்புத் தரப்பினருக்கு இன்னமும் அச்சமும் சந்தேகமும் பதட்டமும் நீங்கவில்லை என்றால், அவர்கள் தனியார் காணிகளை விட்டு நீங்கி, அரச காணிகளில் நிலை கொள்ளலாம். அதுதான் இயல்பு நிலையை உருவாக்குவதற்கு வாய்ப்பாகும். அரசாங்கத்தின் கொள்கையும் நடவடிக்கையிலும் ஒன்று யுத்த காலத்திலிருந்து மக்களை அமைதிக்காலத்துக்கு, நம்பிக்கையான சூழலுக்கு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதலாகும். அப்படியிருக்கும்போது, அதற்கு மாறாக மக்களின் காணிகளில் படைவலயங்கள் தொடருமாக இருந்தால் அமைதியும் சந்தேகமும் நம்பிக்கையீனமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கும். அதுவே இங்கே நிகழ்கிறது. அதனுடைய அடையாளமே இந்தப் போராட்டமும் இப்போது உருவாகியுள்ள நெருக்கடிச் சூழலுமாகும். இதைக் கவனப்படுத்த வேண்டிய பொறுப்பு சமாதான விரும்பிகள் அனைவருக்கும் உரியது. கூடவே தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அனைத்துக்கும் அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் உண்டு. 

3.     யுத்தத்திற்குப் பிறகு மகிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சி என 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இப்பொழுது அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலம். எல்லா ஆட்சிக்காலத்திலும் அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு,  சமாதானம் பற்றிப் பேசப்படுகிறது. ஆயிரம் வார்த்தைகளை விட, நூறு பிரகடனங்களை விட, ஒரு செயல் போதும் நம்பிக்கையை உருவாக்குவதற்கு. அதையே அரசாங்கம் செய்ய வேண்டும். ஆம், அநுரவின் (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கம் செய்ய வேண்டும். இது மாற்று அரசாங்கம். மக்களுடைய ஆட்சி. மக்களுக்கான ஆளும்தரப்பு என்பதால், அதற்கமைய துணிகரமாக – மாற்று நடவடிக்கையாக  – அமைதிக்கான, இயல்புச் சூழலின் உருவாக்கத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், முந்திய ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் இடையில் என்ன வேறுபாடு? என்ற கேள்வியே மக்களிடம் எழும். 

4.     ஆகவே அரசாங்கத்தின் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக விஞ்ஞான பூர்வமான நிலைப்பாடு இங்கே முக்கியமாகிறது. இது தனியே பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமாக மட்டும் அமையாது. அரசியற் தரப்புடன் இணைந்த தீர்மானமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நெருக்கடிகளே (அரசியற் தவறுகளே) பாதுகாப்பு நெருக்கடிகளை – பாதுகாப்புப் பிரச்சினைகளை – பாதுகாப்பு அச்சுறுத்தல்களை  உருவாக்கியது. ஆகவே அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும்போது, அதற்கான சூழலை உருவாக்கும்போது, அரசியற் தவறுகளைச் சீராக்கும்போது பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லாதொழிந்து விடும். எனவே இதைக் குறித்து அரசாங்கம் (ஜனாதிபதி) ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சரியாகச் சிந்தித்துச் செயற்பட்டால், தேவையற்ற பாதுகாப்புச் செலவீனமும் குறையும் இந்த மாதிரிப் போராட்டங்களும் அரசியல் நெருக்கடிகளும் உருவாகாது. 

5.     வடக்குக் கிழக்கில் படைகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதும் படைவலயங்கள் தொடர்ந்தும் இருப்பதும் வடக்குக் கிழக்கு வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகிறது. இன்னும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்ற உணர்வே சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்படுகிறது. அது அரசாங்கத்தின் தோல்வியையே குறிக்கிறது.அதாவது இலங்கை இன்னும் முழுமையான அமைதிக்குத் திரும்பவில்லை என்பதோடு, போரில் இன்னும் அரசுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. பாதி வெற்றியையே படைத்தரப்பு பெற்றுள்ளது. இன்னமும் அது தன்னுடைய அச்ச நிலையிலிருந்து மீளவில்லை. அதனால்தான் இந்தப் பாதுகாப்பு வலயங்களும் படைக்குவிப்புமாகும் என்பதாக.

6.     யுத்தம் முடிந்த பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அபகரித்து வைத்திருப்பது, மக்களுக்கு அரசாங்கம் இழைக்கின்ற அநீதி என்பதோடு, மீள் குடியேற்ற விதிகளுக்கு முரணானதுமாகும். கூடவே அந்த மக்களை மீள் நிலைக்குத் திரும்ப விடாது, அவர்களுடைய கிராமங்களை மீளுயிர்ப்புச் செய்ய விடாது அரசே தடுப்பது, அரசியற் தவறாகும். அத்துடன், மக்களுடைய உரிமையை மறுதலிக்கும் ஒரு செயற்பாடுமாகும். 

இவ்வாறு பல விதமான அரசியற் தவறுகளின் கூட்டு விளைவாகவே தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளது. தையிட்டிப் பிரச்சினை மட்டுமல்ல, அதைப்போலுள்ள ஏனைய பல பிரச்சினைகளும் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறையே சரியானது. அரசியல் உபாயங்கள் பெருமளவுக்குக் கை கொடுக்காது. ஏன் அரசியல் உபாயங்கள் கைகொடுக்காது என்றால், எதன்பொருட்டும் அரசாங்கம் மக்களுடன் சூதாட முடியாது. சூதாடக் கூடாது. 

இப்போதுள்ள சூழலில், இந்தப் பிரச்சினைக்கும் இது போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குச் சில வழிமுறைகளே உண்டு. 

இங்கே அரசாங்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.  

1.     கடந்த காலத் தவறுகளைச் சீராக்கும் நடவடிக்கையின் ஓரம்சமாக இந்த விடயங்களைச் சட்ட விதிமுறைகளின்படி அணுகுவது, தீர்வு காண்பது. இதற்குத் தயக்கம் இருந்தால் அரசாங்கம் எதையுமே செய்ய முடியாது. தவறுகள்,தவறுகள்தான். 

2.     இணக்கமான முறையில்  சம்மந்தப்பட்ட தரப்புகளோடு (பாதிக்கப்பட்ட மக்களோடு) பேசி உடன்பாடு காண்பது.இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளிக்க வேண்டும்.அதற்கான சட்ட உத்தரவாதத்தை அளிப்பது அவசியமாகும். 

3.     அல்லது, நாட்டிலே பாரபட்சமும் பிரிவினையும் நிச்சயமாக உண்டு. படைத்தரப்பின் மூலமாக ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது. வடக்குக் கிழக்கு மக்களின் அனைத்து உரிமைகளையும் வாழ்வையும் தீர்மானிக்கும் பொறுப்புப் படைத்தரப்புக்கும் பௌத்த மேலாதிக்க சக்திகளுக்குமே உண்டு என வெளிப்படையாகச் சொல்லி விடுவது. அப்படிச் சொல்லி விட்டால், பிரச்சினையே இல்லை.  அதற்குப் பிறகு அங்குள்ள மக்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பார்கள். இப்படிச் சமாதானத்தைப் பேசிக் கொண்டு, ஏமாற்றப்படும் சமாதானத்துக்குப் பின்னால் நிற்க வேண்டிய அவசியமிருக்காது. 

தேசிய மக்கள் சக்திக்கு இதொரு சவாலான விடயமே. யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கில் வரலாற்று வெற்றியைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, உள்ளுராட்சி மன்றத்திலும் அந்த வெற்றியைப் பெறுவதற்கு வியூகங்களை வகுக்கிறது. அதற்கு இந்தப் போராட்டங்களும் இந்தப் பிரச்சினைகளும் நெருக்கடியைக் கொடுக்கின்றன. இன்னொரு பெரிய பிரச்சினை, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதாகும். இவை இரண்டையும் அது எப்படிக் கையாளப்போகிறது?

தையிட்டிப்  போராட்டத்தை நீடிக்க விடும் உபாயத்தைப் பின்பற்றினால், காணாலாக்கப்பட்டோரின் போராட்டத்தைப்போல, நாட்கள் நீளுமே தவிர, தீர்வு கிட்டாத – தீர்வு காணப்படாத ஒரு நிலையை ஏற்படுத்தலாம். அது போராடும் மக்களின் தீவிரத்தைக் குறைவாக்கி, அவர்களைக் களைப்படைய வைக்கும்.அரசியற் கட்சிகள் ஓய்ந்து ஓரமாகி விடும் என அரசாங்கம் உபாயமாக யோசிக்கக் கூடும்.  

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூன்று வகையில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்குச் சமகாலத்தில் முயற்சிக்கிறார். 

1.     அரசியல் பேச்சுவார்த்தைகளில் தன்னுடைய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வது. இதற்காகவே அவர் ஏனைய கட்சிகளைக் கூட்டுச் சேர்ப்பதாகும்.

2.     தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுப்பதன் வழியாக மக்களுக்காகப் போராடும் தரப்பாகத் தன்னை மக்களிடம் காட்டிக் கொள்வது. இதிலும் தன்னையே தலைமைச் சக்தியாக நிரூபித்துக் கொள்வது. 

3.     தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் வலுத்திருக்கும் ஆதரவுத் தளத்தை நிர்மூலமாக்குவது. குறிப்பாக உள்ளுராட்சி மன்றுகளுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை – செல்வாக்கை மட்டுப்படுத்துவது அல்லது இல்லாதொழிப்பது.

4.     இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தீர்வு காணும்  தேசிய மக்கள் சக்தியின் முயற்சியையும் நிகழ்ச்சி நிரலையும் நெருக்கடிக்குள்ளாக்குவது.

5.     தேசிய மக்கள் சக்தியின் வினைத்திறனைப் பரிசோதனைக்குள்ளாக்குவது. 

6.     மெய்யான அர்த்தத்தில் மீள் குடியேற்றம், படை விலகல், படை ஆதிக்கத்தைக் குறைப்பு, அரசியல் தீர்வைக் குறித்த ஆர்வத்தைத் தூண்டுதல் போன்றவற்றை உந்தித் தள்ளுவது. 

7.     பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்துதல். 

8.     வடக்கில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் நெருக்கடியை உருவாக்குதல்.  அல்லது அவர்களைப் பொறுப்புக் கூற வைத்தல்.

எப்படியோ இந்த வாரங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே முன்னிலை பெறும் அரசியல் அடையாளமாக வடக்கில் உள்ளார். அதைக் கடந்து செல்வது தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் முன்னுள்ள சவாலாகியுள்ளது. 

கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் அநுரவுக்காக – அரசாங்கத்துக்கு ஆதரவாகத் திரண்டனர் மக்கள். இந்த மாதம் அதை அண்மித்த மயிலிட்டிக் கடற்கரையில் கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக – அரசாங்கத்துக்கு எதிராகத் திரள்கின்றனர் மக்கள். தமிழ் மக்கள் பிரித்தாளப்படுகிறார்களா? பிரிந்துள்ளனரா? 

https://arangamnews.com/?p=11809

விகாரை அரசியல் – நிலாந்தன்.

2 months 2 weeks ago

Thaiyiddi-Viharai-750x375.jpg

விகாரை அரசியல் – நிலாந்தன்.

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.”
இவ்வாறு கூறியிருப்பவர் பிரதமர் ஹரினி.

கடந்த ஒன்பதாம் திகதி,காலை, மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“உள்ளத்தில் உள்ள அழுக்குகளையும் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளையும் அகற்ற ” வேண்டும் என்று ஹரிணி கூறுகிறார். அப்படியென்றால் இலங்கைத் தீவின் நீண்டகால அழுக்கு எது? இனவாதம் தான். அதை அகற்ற வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியுமா ?

முடியும் என்று நம்பத்தக்கவிதமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. கடைசியாக நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுரவின் முகபாவனையிலும் அது தெரியவில்லை.

அதைவிட முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வடக்கிலும் கிழக்கிலும் பிரதான சாலைகளில் அமைந்திருந்த சில சோதனைச் சாவடிகளும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களுக்குள் நுழையும் வாசல் பகுதியில் அமைந்திருந்த சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டன. ஆனால் தேர்தல் முடிந்த பின் அவை மீண்டும் முளைத்து விட்டன. இந்த விடயம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐநா உயர் அதிகாரிகள் குழுவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.ராணுவ மயநீக்கம் என்பது எவ்வளவு கடினமானது என்பதனை விளங்கிக்கொள்ள இது உதவும்.

இப்படித்தான் இருக்கிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாற்றங்கள்.இவ்வாறான ஏமாற்றகரமான ஒரு பின்னணியில்,தையிட்டி விகாரையில் கையை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்குமா?

இலங்கைத் தீவின் இன யதார்த்தம் அதுதான். தமிழ்ப் பகுதிகளில் எதிர்ப்புக் கூடும் பொழுது அதைக்காட்டி சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டலாம்.தமிழ் எதிர்ப்பைத் தணிப்பதற்காகத் தமிழ் மக்களுக்கு விட்டுக் கொடுத்தால்,சிங்களபௌத்த வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும்.சில மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பின்னர் மாகாண சபைத் தேர்தலும் வைக்கப்பட வேண்டும்.எனவே இது ஒரு தேர்தல் ஆண்டு. இத்தேர்தல் ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களை இழப்பதா அல்லது தையிட்டியைக் கிளீன் பண்ணுவதா என்று அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும்.

அந்த விகாரையை படையினரிடமிருந்து பொறுப்பெடுத்து புத்தசாசன அமைச்சு நிர்வகிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படைப் பரிமாணத்தைக் குறைத்து சிவில் பரிமாணத்தைக் கூட்டுவதன்மூலம் தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தணிக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு நடந்தால் படைத்தரப்பு அந்த பகுதியில் இருந்து விலகி ஒதுங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கலாம்.ஆனால் புத்தசாசன அமைச்சையும் படைத்தரப்பையும் பிரித்துப்பார்க்க முடியாது.சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் வெவ்வேறு பகுதிகள் அவை.எனவே புத்த சாசன அமைச்சு அதனை நிர்வகித்தாலும் படையினரின் நிழலில்தான் அது தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

உதாரணமாக, தையட்டியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் மாதகல் கடற்கரையில் சம்பில் துறைமுகம் காணப்படுகிறது. இது புராதன இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு புராதன துறைமுகம் ஆகும். ஆனால் இப்பொழுது அந்தப் பகுதி முழுவதுமாக சிங்களபௌத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அதற்குச் சிங்கள இலக்கியங்களில் கூறப்படும் ஜம்புகோளப் பட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் சிங்கள பௌத்தக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய சிங்கள மக்களைக் கவர்வதற்கு அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது. சம்பில்துறை ஜம்பு கோளப் ப்பட்டினமாக மாறிவிட்டது.

அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து அங்கு வாழும் இந்துக்கள் ஒரு பெரிய சிவன் சிலையை அங்கே நிறுவியிருக்கிறார்கள். ஆனால் அந்த பகுதிக்குப் போய் வந்தால் தெரியும், சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட அந்தப் பகுதிக்குள் பரம சிவன் அனாதை போல நிற்கிறார்.

சம்பில்துறையைப் போலவே தையிட்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் உண்டு.ஏற்கனவே அங்கு ஆதி பௌத்த விகாரை ஒன்று காணப்பட்டது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.அதை வைத்து சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது அந்தப் பகுதியை சிங்கள பௌத்த மயப்படுத்தி வருகின்றது. அந்த ஆதி பௌத்த விகாரையானது அநேகமாக தமிழ் விகாரையாகவும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தமிழர்கள் மத்தியில் பௌத்தம் பயிலப்படும் மதமாக இல்லை. எனவே அதைத் தமிழ் பௌத்த விகாரையாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை.

அந்த ஆதி விகாரை இருந்த இடம் அப்படியே இருக்கிறது.இப்பொழுது கட்டப்படும் விகாரையானது ஒரு புதிய இடத்தில் கட்டப்படுகிறது. மிகக்குறிப்பாக அது ஒரு சிங்கள பௌத்த விகாரையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் அடையாளம் கிடையாது.

அதைவிட முக்கியமாக, அது ஒரு தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது.அந்தக் காணியின் உரிமையாளர் ஒரு ஓய்வு பெற்ற நில அளவையாளரான மலேசியன் பெஞ்சனியர் என்று கூறப்படுகிறது.அவருடைய பெண் வாரிசு ஒன்று மலேசியாவில் இருந்து வந்து அந்த விகாரைக் காணி தொடர்பாக ஒரு தமிழ் அரசியல்வாதியோடு உரையாடியதாகவும் தகவல் உண்டு.பின்னர் படைத்தரப்பினரை அவர் சந்தித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.அவர் ஒரு முதிய பெண் என்றும் இப்பொழுது எங்கே இருக்கிறார். இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்களும் தெரியாது என்று மேற்சொன்ன அரசியல்வாதி எனக்குச் சொன்னார்.

இப்பொழுது பிரச்சினை அந்தக் காணி தனியாருடையதா அரசாங்கத்துடையதா என்பது அல்ல.அது யாருடையதாகவும் இருக்கட்டும். அங்கே கட்டப்பட்ட விகாரை தமிழ் மக்களுக்காக கட்டப்படவில்லை என்பது மட்டும் உண்மை. அது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் அங்கே கட்டப்பட்டுள்ளது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

தமிழ்ப் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் காணிகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். குறிப்பாக சில இடங்களில் போலீஸ் நிலையம் அமைப்பதற்கு போலீஸ் திணைக்களம் அவ்வாறு தமிழ் மக்களிடம் காணிகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகின்கிறது. எனவே அரசாங்கம் காணியை வாங்குவது இங்கு பிரச்சினை அல்ல. அரசாங்க கட்டுமானங்கள் அமைக்கப்படும் காணியின் உரிமையாளர் யார் என்பதும் இங்கு பிரச்சனை அல்ல. அதாவது இதை வெறும் சட்டப் பிரச்சினையாக மட்டும் கருத முடியாது. மாறாக இங்கே பிரச்சனை அந்த விகாரை எதற்காகக் கட்டப்படுகிறது என்பது தான்.

சந்தேகத்துக்கிடமின்றி அது தமிழ் மக்களுக்காக கட்டப்படவில்லை.அது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் கட்டப்படுகிறது. தையிட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பில் துறைமுகத்தை எப்படி சிங்களமயப்படுத்தியிருக்கிறார்களோ அப்படித்தான் இதுவும்.

இரண்டுமே 2009க்கு பின்னர் கட்டப்பட்டவை.எனவே இங்கு தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டிய விடயம் அது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு குறியீடு என்பதுதான்.எனவே பிரச்சனையை அந்தக் கோணத்தில் இருந்துதான் அணுக வேண்டும். அந்தக் கோணத்தில் இருந்துதான் தீர்க்கவும் வேண்டும்.

அதை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகி சட்டத் தீர்வை எதிர்பார்ப்பது என்பது இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள சட்டத்தை தமிழ் மக்கள் நம்புகிறார்கள், எதிர்பார்ப்போடு பார்க்கிறார்கள் என்று பொருள்படும். இல்லை. நாட்டின் சட்டம் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு குறுந்தூர் மலை, வெடுக்கு நாரிமலை கிழக்கில் மேய்ச்சல் தரை போன்ற உதாரணங்கள் உண்டு. பயங்கரவாத தடைச் சட்டத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதும் வளைக்கப்படுவதுண்டு. அதே சட்டக்கட்டமைப்பிடம் தையட்டி விவகாரத்தில் தீர்வை எதிர்பார்க்கலாமா?

எனவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் பிரதமர் ஹரிணி கூறுவதன் அடிப்படையில்,கிளீன் சிறீலங்காவை தையிட்டியில் இருந்து தொடங்கலாமே?

https://athavannews.com/2025/1421578

கிளீன் தையிட்டி - நிலாந்தன்

2 months 2 weeks ago
கிளீன் தையிட்டி - நிலாந்தன்

GjqXHuhWkAA1TxT-1024x654.jpgகடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான ஐநா அலுவலகம் ஓர் விருந்துபசாரத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.இலங்கையில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இந்த 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உட்பட ஐநாவின் கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளும் அந்த அலுவலகங்களில் வேலை செய்யும் உள்ளூர் அலுவலர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மேலும்  கட்சித் தலைவர்கள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குடிமக்கள்சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரிகள் என்று பலவகைப்பட்டவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த நிகழ்வில் பேசிய இலங்கைக்கான ஐநாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்,சிவில் சமூகங்களை அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் எதிர் நிலையில் வைத்து பார்க்கக்கூடாது என்று பேசினார்.

இலங்கைத் தீவில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகள்.ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை 70ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.தமிழ் மக்கள் ஐநாவுடன் நெருக்கமாக வேலை செய்ய தொடங்கியது 2009க்குப் பின்னிருந்து.அதாவது 15 ஆண்டுகள்.அதிலும் குறிப்பாக இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தோடு நிலைமாறு கால நீதியை இலங்கை தீவில் ஸ்தாபிப்பதற்காக உழைத்தது கடந்த 9ஆண்டுகள்.இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவில் ஐநாவின் 70ஆண்டுகால பிரசன்னத்தால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை.குறிப்பாக 2009க்குப் பின்னரான கடந்த 15ஆண்டு காலத் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் ஐநா மைய அரசியலாகவே இருந்துவருகிறது.அதிலும் குறிப்பாக 2015,செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்குப் பின்னிருந்து தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதியும் சிவில் சமூகங்களும் மனித உரிமைக் காவலர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் நிலை மாறுகால நீதிக்காக அதாவது போரில் ஈடுபட்ட தரப்புகளை பொறுப்புக்கூற வைப்பதற்காக உழைத்து வருகின்றன. ஆனால் அவ்வாறு உழைத்ததன் விளைவாக தமிழ் மக்கள் பெற்றவை என்ன?

கடந்த 2021ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக சிவில் சமூகங்கள் கட்சிகளை ஒருங்கிணைத்தன. அதற்குரிய இரண்டாவது சந்திப்பு வவுனியாவில் இடம் பெற்றது. இச்சந்தப்பின்போது அதில் பங்குபற்றிய சுமந்திரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையைச் செய்தோம்,அதில் தோல்வியடைந்து விட்டோம்.” ஆறாண்டு காலப் பரிசோதனை என்பது என்ன?அதுதான் 2015ஆம் ஆண்டிலிருந்து நிலைமாறு கால நீதிக்காக உழைத்தமை. நிலைமாறு கால நீதியைப் பொறுத்தவரை கூட்டமைப்பு அதன் பங்காளியாகச் செயல் பட்டது.புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் உள்ள அமைப்புகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிலைமாறு கால நீதி வேண்டாம், இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதிதான் வேண்டும் என்று கோரிய ஒர் அரசியல் சூழலில், கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியின் பக்கம் நின்றது.ஆனால் அந்தப் பரிசோதனையில் தாங்கள் தோல்வியடைந்து விட்டதாக சுமந்திரன்-அவர்தான் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பின் பிரதான பங்காளி-அவ்வாறு கூறினார்.நிலை மாறுகால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் எதிர்மறை விளைவுகளைத்தான் தந்தன.ஆங்கிலத்தில் அதனை “கவுண்டர்  ப்ரொடக்டிவ்”என்று கூறுவார்கள்.

GjW9zJsWUAANusd-1024x683.jpg

அதாவது நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் தோல்வியடைந்து விட்டன.அதற்குப் பின்னரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.ஐநாவை நோக்கிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.2021 ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகள் ஐநாவுக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில் ஒரு சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையைக் கேட்டிருந்தார்கள்.குறிப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது அந்தப் பொறிமுறையானது குறுகிய காலத்துக்குள் சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அந்தக் கடிதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஐநாவின் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறையானது மிகப் பலவீனமானதாகவே அமைந்தது.அது ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக சுருக்கப்பட்டுவிட்டது.இதுதான் கடந்த 15 ஆண்டுகால ஐநா மையத் தமிழ் அரசியலின் தொகுக்கப்பட்ட விளைவு.

இப்படிப்பட்டதோர் பூகோள அரசியற் சூழலில்,திண்ணையில் நடந்த விருந்துபசாரத்துக்கு முதல் நாள் மாலை அதே திண்ணையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐநாவின் வெவ்வேறு அலகுகளுக்குப்  பொறுப்பான அதிகாரிகளும் கலந்து கொண்ட மேற்படி சந்திப்பில்,தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.சந்திப்பில் நிலைமாறு கால நீதியின் தோல்வி குறித்து ஆழமாகப் பேசப்பட்டது.அந்தச் சந்திப்பின் முடிவில் இலங்கைக்குரிய ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளரான மார்க் அன்ட்ரே ஃபிரான்ச்சே  எல்லாவற்றையும் தொகுத்துப் பதில் சொன்னார்.

அவர் பழக இனிமையானவர்;எளிமையானவர்;வெளிப்படையான ஒரு ராஜதந்திரி. கதைப்போக்கில் சில விடயங்களை நறுக்கென்று சொல்லிவிட்டு போகக் கூடியவர்.அவர் தனது தொகுப்புரையில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகப் போவதாகத் தெரிகிறது.இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானங்களில் அமெரிக்கா பிரதான உந்துசக்தியாக இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் இனி வரக்கூடிய ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கமும் ஐநாவும் இணைந்து நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.மேலும் இப்பொழுது நடைமுறையில் உள்ள சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் செயற்பாடுகளையும் அது பாதிக்கக்கூடும் என்ற பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவரது உரை அமைந்திருந்தது.

அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக நேர்ந்தாலும் சுவிட்சர்லாந்து அந்தப் பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

காசா, உக்ரைன் அழிவுகளின் பின்னணியில், பொதுவாகவே இலங்கை மீதான அதாவது தமிழர் விவகாரத்தின் மீதான ஐநாவின் கவனக்குவிப்பு குறையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இவை மட்டுமல்ல உலகத்தின் கவனத்தையும் ஐநாவின் கவனத்தையும் ஏன் கொழும்பின் கவனத்தையும்கூட ஈர்க்கக்கூடிய விதத்தில் தமிழ் அரசியல் தொடர்ச்சியாக நொதிக்கும் ஒன்றதாக, கொந்தளிப்பானதாக இல்லை என்பதும் ஒரு காரணந்தான்.இதை இன்னும் கூரான வார்த்தைகளில் சொன்னால்,தமது அரசியலை கொந்தளிப்பானதாக உலகத்தின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாக கொதிநிலையில் வைத்திருக்கத் தமிழ் மக்களால் முடியவில்லை.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,கடந்த புதன்கிழமை தையிட்டியில் நடந்த போராட்டம் ஒப்பீட்டளவில் எழுச்சிகரமானது.தையிட்டியை மையமாகக் கொண்டு இப்பொழுது தமிழ் அரசியல் நொதிக்கத் தொடங்கியுள்ளது. சிறீலங்காவை கிளீன் செய்யப்போவதாகச் செல்லும் ஓர் அரசாங்கத்தை நோக்கி “கிளீன் தையிட்டி” என்று தமிழ்மக்கள் கேட்கிறார்கள்.facebook_1739346117447_72953463777942052நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அரசியல் தொடர்ந்து நொதிக்குமா? கொழும்பின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் தன்னைநோக்கி ஈர்த்து வைத்திருக்க முடியுமா?

முடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடம் இல்லை.அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும்.நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராகவும் தமிழ்மக்கள் தமது அரசியலில் நொதிக்கச் செய்ய வேண்டும்.உலகமும் கொழும்பும் திரும்பிப் பார்க்கத்தக்க எழுச்சிகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

தையிடியில் புதன்கிழமை திரண்ட மக்கள் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல.அதில் முன்பு அரசாங்கத்தின் பக்கம் நின்ற கட்சிகள்,நிலைமாறு கால நீதியை ஆதரித்த கட்சிகள் என்று எல்லா வகைப்பட்ட கட்சிகளும் நின்றன.அது ஒரு திரட்சி.வரலாற்றில் எல்லாத் தேசத் திரட்சிகளும் அப்படிப்பட்டவைதான்.”நீ முன்பு அரசாங்கத்தோடு நின்றாய்”,”மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அரசாங்கம் காணியை அபகரித்த பொழுது உடந்தையாக நின்றாய்”,”நிலைமாறு கால நீதியின் பக்கம் நின்றாய்”… என்றெல்லாம் பழைய தோம்பை இழுத்துக் கொண்டிருந்தால் தேசத்தைத் திரட்ட முடியாது.தேசத் திரட்சிக்குள் எல்லாமும் அடங்கும்.அதற்குத் தலைமை தாங்கும் கட்டமைப்பு உறுதியானதாக கொள்கைப் பிடிப்புள்ளதாக இருந்தால் போதும்.

புதன்கிழமை ஏற்பட்ட திரட்சி எல்லா கட்சிகளுக்கும் ஒரு செய்தியை மீண்டும் உணர்த்துகிறது.அது புதிய செய்தி அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக கற்கத் தவறிய செய்தி.முள்ளிவாய்க்காலில் இருந்து கற்றுக்கொள்ளாத செய்தி.அது ஒரு தேர்தல் தோல்வியிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தியல்ல.

20230504_Point-Pedro_Protesting-removal-

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட எல்லாப் பெரிய எழுச்சிகளும் ஒரு கட்சிக்குரியவை அல்ல.அதில் பல கட்சிகள் இருந்தன.குடிமக்கள் சமூகங்கள்,மக்கள் அமைப்புக்கள் இணைந்தன.எனவே இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.தையிட்டி விவகாரத்தைத் தொடர்ந்து கவனக் குவிப்பில் வைத்திருந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான்.சுமார் 20 மாதங்களுக்கு மேலாக அந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த அக்கட்சியால் முடியவில்லை.ஆனால் நடந்து முடிந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் விளைவாக அது சூடுபிடித்திருக்கிறது.விரைவில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கியும் கட்சிகள் உழைக்கின்றன என்பது உண்மை.கட்சிகள் அப்படித்தான் சிந்திக்கும்.ஆனால் யார் எதற்காக உழைக்கிறார்கள் என்பது இங்கு பிரச்சனையில்லை.ஒரு ஆக்கிரமிப்புக்கு எதிராக தேசமாகத் திரள முடிந்தால் அது வெற்றியே.கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த “ஏழுக தமிழ்கள்” “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி” வரையிலுமான எழுச்சி, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நோக்கிக் குவிந்த வாக்குகள்… எல்லாமும் பல கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சேர்ந்து திரட்டியவைதான்.அவை யாவும் கூட்டுச் செயற்பாடுகள்தான்.எனவே தையிட்டிப் போராட்டம் தமிழ் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தியிருப்பது அதனைத்தான்.கட்சிகளைக் கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்துவது என்றால்,அதற்கு பல கட்சிகள் சம்பந்தப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட திரட்சிகள்தான் ஒப்பீட்டளவில் ஐநாவையும் உலகத்தையும் கொழும்பையும் தமிழ் மக்களை நோக்கித் திருப்பும். தமிழர்கள் தமது அரசியலை நொதிக்கச் செய்ய வேண்டும்.கொதிக்கச் செய்ய வேண்டும். கொந்தளிக்கச் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் தேசத் திரட்சியைப் பலப்படுத்தலாம்.தமிழ்த்தேசிய வாக்குகள் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே சிந்தப்படுவதையும் தடுக்கலாம்.

https://www.nillanthan.com/7176/#google_vignette

Checked
Thu, 05/08/2025 - 02:39
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed