புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
போட்டிகளை பார்க்கவேண்டும் என நினைப்பதுண்டு (அமேசன் பிரைமில் இங்கு ஒளிபரப்புகிறார்கள்), ஆனால் ஏதோவொரு காரணத்தினால் போட்டிகளை பார்க்க முடியவில்லை, உண்மையினை கூறினால் பெரிதாக ஆர்வம் காட்டமுடியவில்லை என கருதுகிறேன், போட்டி இறுதி நிலையில் பார்ப்பேன் என கருதுகிறேன்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month ago
கரூரில் விஜய்யை பார்க்க போய் இறந்தவர்களுக்கு ஆளுக்கு 34 லட்சம் இந்திய ரூபா கிடைக்கின்றது. ஒரு கோடியே 15 இலட்சம் இலங்கை ரூபா.

அமெரிக்காவில் பதற்றம்.. களமிறக்கப்பட்ட ஆயுதப்படையினர் - ட்ரம்ப் மீது கடும் அதிருப்தி!

1 month ago
அமெரிக்காவின் ஒரேகான் மாநில ஆயுதப்படையினரை போர்ட்லாந்துக்கு அனுப்புவதை நீதிமன்றம் தடை செய்ததால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், கலிபோர்னிய ஆயுதப்படையினர் 300 பேரை அங்கு அனுப்பியுள்ளது. போர்ட்லாந்துக்கு ஆயுதப்படையினரை அனுப்புவதற்கு எதிரான குறித்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் 60 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. போர்ட்லாந்தில் குடிவரவு மற்றும் சுங்க கட்டிடத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு ஆயுதப்படையினர் தேவை என ட்ரம்ப் கூறிய பின்னரும் இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார். ட்ரம்ப் மீது விமர்சனங்கள் இந்நிலையில், கலிபோர்னிய ஆயுதப்படையினரை ட்ரம்ப் நிர்வாகம் அங்கு அனுப்பியுள்ளது. இவ்வாறிருக்க, இராணுவத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ட்ரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கலிபோர்னியா இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் என ஆளுநர் குறித்த மாநில ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
அதற்காக மனித பலிகளை கண்டும் காணாமலும் செல்லும் அரசியல்வாதிகளை வெள்ளோட்டம் என நினைத்து பேசாமல் இருக்க முடியாது.இன்று வரை நடிகர் யோசப்பு விஜய் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாரா?பாதிக்கப்பட்ட மக்களை போய் சந்தித்தாரா? ஆறுதல் சொன்னாரா? என்னவொரு ஜென்மம்?

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
விஜை இப்போதான் முதல் தடவை, ஒரு சூழ்நிலை கைதியாகி கொள்கை தவறை விடுகிறார். அல்லது விட ஆயத்தம் ஆகிறார். அதற்கு முன்பே மூக்கு சாத்திரம் பார்த்து அவரின் வரவை எதிர்த்து சரி என நான் இப்போதும் எண்ணவில்லை. விஜை, சீமான், சுமன் இன்னும் அரசியலுக்கு வரும் எவரையும் முந்தங்கிய-பக்க சார்பாக எதிர்க்க கூடாது. அதே சமயம் அவர்கள் வழுவும் போது முரட்டு முட்டு கொடுக்கவும் கூடாது.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியளே? 😂 கொஞ்ச நாளைக்கு எதுக்கெடுத்தாலும் பெயின்ற் வாளியை தூக்கி வெள்ளையடிக்கிற வேலை பாக்காமல் கள நிலவரத்தை பார்த்து வெளுத்து வாங்குங்கோ...🤣

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

1 month ago
சுத்துமாத்து சுமந்திரன் தானாக பதவி விலக மாட்டார். விலக்கி வைக்கப் பட வேண்டும். மயிலே… மயிலே… இறகு போடு என்றால் போடாது. புடுங்கி எடுக்க வேண்டும். 😂 வருகின்ற வட மாகாண சபைத் தேர்தலில்… ஆபிரஹாம் சுமந்திரனுக்கு போட்டியிடுகிற எண்ணம் இருக்கின்றது போலுள்ளது. ஏற்கெனவே சுமந்திரனுக்கு தமிழரசு கட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள்… இவர் தேவையில்லாத ஆணி என்று தோல்வியை பரிசாக கொடுத்தவர்கள். அதற்குப் பிறகும் வெட்கம், மானம், ரோசம் எதுவும் இல்லாமல்… தானும் ஒரு ஆள் என்று, பல்லை காட்டிக் கொண்டு சூடு, சுரணை இல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு திரிகிறார். ஆபிரஹாம் சுமந்திரன் இனியும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால்….? சுமந்திரனை தோல்வியுறச் செய்ய தமிழரசு கட்சியில் இருக்கும் அதிர்ப்தி வாக்குகள் அனுரா கட்சிக்கே சென்று… முதல் முறையாக சிங்கள கட்சி ஒன்று வட மாகாண சபை முதல்வராக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சுத்துமாத்து சுமந்திரன்…. தனக்கு தமிழ் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு…. இனி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. அதனையும் மீறி, போட்டியிட்டால்…. தமிழ் மக்கள் தமது வாக்குகளால் கொடுக்கும் செருப்பு அடியில்… “சுமந்திரன், பின்னங்கால் பிடரியில் பட கொழும்புக்கு ஓட வேண்டி வரும்” என்று ஊரில் பரவலாக சொல்கிறார்கள்.

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

1 month ago
பெரும் மக்கள் கூட்டத்தையும் பெரும் கல்விசமூகத்தையும் கொண்டிருக்ககூடிய வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தெரிவு அல்லத அதில் உள்வாங்கியவர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக மாறியதாக கருதப்படுகின்றது. இந்தநிலையில் தமிழர் பகுதிகளில தமிழ் கட்சிகள் வென்றிருந்தால் ஐ.நா ஆணையாளரின் வருகை கூட மாறியிருக்கும் என்று பிரித்தானிய தமிழர்பேரவையின் மனிதஉரிமைகள் இணைப்பாளர் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நாவில் தமிழ் மக்களுக்கான பின்னடைவிற்கான முழுபொறுப்பையும் தமிழரசுக்கட்சி ஏற்க வேண்டும். தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தன் பல விடயங்களை கட்டுப்படுத்தியிருந்தால் தமிழினத்திற்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருக்காது என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பிலும், சுமந்திரனின் நிலைபாடு தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு... https://tamilwin.com/

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month ago
அவுஸ்ரேலியா சிமி பின‌லில் தோத்து வெளிய‌ போனால் இந்தியா ம‌ற்ற‌ அணிக‌ள் எதுவாயினும் வென்று விடுவின‌ம்.........................அவுஸ்ரேலியா பின‌லுக்கு வ‌ந்தாலும் க‌ட‌ந்த‌ கால‌ பிழைக‌ளை இந்தியா ச‌ரி செய்து கோப்பைய‌ வெல்ல‌னும்.................இதுவ‌ரை ஒரு உல‌க‌ கோப்பைய‌ கூட‌ இந்தியா வென்ற‌து கிடையாது.................இப்போது இருக்கும் அணி கோப்பை வெல்ல‌ த‌குதியான‌ அணி........................

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

1 month ago
2017ம் ஆண்டு இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் பின‌லில் இந்தியா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து கிட்ட‌ த‌ட்ட‌ வெற்றிக்கு அருகில் வ‌ந்து விட்டின‌ம் , இங்லாந் மக‌ளிர் க‌ட‌சி சில‌ ஓவ‌ர்க‌ளில் சிற‌ப்பாக‌ ப‌ந்து வீசி வென்று விட்டின‌ம் இந்த‌ முறை ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு வெல்ல‌🙏👍.........................

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

1 month ago
ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017) கட்டுரை தகவல் தினேஷ்குமார் பிபிசி தமிழுக்காக 4 அக்டோபர் 2025 நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன. கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது. அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது. சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன். 1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது. ஆண்களின் குறுகிய உலகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது. கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது. அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான். இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர். ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை. 70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji). குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்) ஒப்பீடு என்னும் இழிவு மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது. மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன். மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும். ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் WPL என்னும் கேம் சேஞ்சர் ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். "முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம். மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார். முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை "2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர். 2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது. நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார். சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார். "நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்? மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். "கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார். அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார். "70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார். நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
நாளைக்கு பெரும்பாலும் என‌க்கு முட்டை😁 தென் ஆபிரிக்காவை நியுசிலாந் வெல்ல‌ அதிக‌ வாய்பு இருக்கு நியுசிலாந் அணி அவுஸ்ரேலியா வெல்லா விட்டாலும் நியுசிலாந் அணி ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி விளையாடின‌வை.........................................

விசேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் “நம்பிக்கை” நிலையம் அயத்தி

1 month ago
Published By: Digital Desk 3 05 Oct, 2025 | 12:06 PM “வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்! (சரண்யா பிரதாப்) இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது. அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள் இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள் அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார். ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார். ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார். இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன. பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk தொடர்புகளுக்கு ; +94 11 7878501 https://www.virakesari.lk/article/226933

கேரளாவில் 9 மாதங்களில் 21 உயிர்களைப் பறித்த மூளையைத் தின்னும் அமீபா: பிபிசி தமிழ் களஆய்வு!

1 month ago
படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று பாதிப்புக்கு 39 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் இறந்தநிலையில், இந்த ஆண்டில் 9 மாதங்களுக்குள் (செப்டெம்பர் 30 வரை) 80 பேர் பாதிப்புக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் உருவாகும் இந்த ஒற்றை அணு உயிரியான அமீபா, அசுத்தமான நீரைப்பயன்படுத்தும்போது மூக்கின் வழியாக உடலில் நுழைந்து, மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். இதுதொடர்பாக கேரளாவில் பிபிசி களஆய்வு செய்ததில், இந்த தொற்று பாதித்ததை உடனடியாக அறியாத காரணத்தால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. படக்குறிப்பு, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொற்று பாதிப்பைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வேகப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை சுமார் 400 வகையான அமீபாக்களை கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி மற்றும் எகாந்தாமீபா என்கிற இரண்டும் மூளைத்தொற்றை உண்டாக்கக் கூடியவை என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். மூளையை தின்னும் நேக்ளீரியா ஃபவ்லெரி அமீபா –ஒரு விளக்கம்! படக்குறிப்பு, நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை உலகளவில் 1962 முதல் இன்று வரை 488 நபர்களுக்கு மட்டுமே மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சயின்ஸ் டிரைக்ட் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. அதிலும் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்தான் அதிகபட்சமாக இதில் 95 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, நேக்ளீரியா ஃபவ்லெரி (Naegleria fowleri), எகாந்தாமீபா (Acanthamoeba), சாப்பினியா (Sappinia), பாலமுத்தியா (Balamuthia), வெர்மீபா (Vermeeba) என 5 வகையான அமீபா பாதிப்புகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி எனப்படும் அமீபாதான், உயிரிழப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் கேரளாவில் 39 பேருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 9 பேர் இறந்தனர். உயிரிழப்பு விகிதம் 23 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் செப்டம்பர் 30 வரை, 80 பேர் இந்த தொற்று பாதிப்புக்குள்ளானதில் 21 பேர் இறந்துள்ளதாக பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை தகவல் தந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 25 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பினும், நீர்நிலைகள் சார்ந்த இந்த அமீபா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் மரணங்களும் உலகளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு எகாந்தாமீபா பாதிப்பு தான் அதிகமாக உள்ள நிலையில் நேக்ளீரியா ஃபவ்லெரி தொற்று ஏற்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன? படக்குறிப்பு, மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா இந்நிலையில் கேரளாவில் இந்த தொற்று நோயின் பாதிப்பு குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இந்த தொற்று காரணமாக இறந்தவர்கள் மற்றும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியது. கேரளாவில் 14 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 17 பேர் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா தெரிவித்தார். அவர்களில் ஒருவர்தான் மலப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வேங்கரா என்ற பகுதியைச் சேர்ந்த ரம்லா (வயது 52). பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் மகள் ரெஹானத், ''அம்மாவுக்கு தலைவலி, ஜலதோஷம் அதிகமாக இருந்தது. காய்ச்சலும் வந்தது. முதலில் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமும், அதன்பின் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். ஜலதோஷம் குறையாததால் கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனர்.'' என்றார். படக்குறிப்பு, ரம்லாவின் மகள் ரெஹானத் ''ஆகஸ்ட் 5 அன்று அங்கு சேர்த்தோம். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என பல பரிசோதனைகள் எடுத்தனர். ஆனால் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்த பின்பே இது உறுதி செய்யப்பட்டது. தொற்று நீக்க மருந்தை உட்கொண்டதும் அவருக்கு வாந்தி, நடுக்கம் ஏற்பட்டதால் மருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்து, மருந்தைத் தொடர்ந்தனர். ஆனால் கடைசி பாட்டில் மருந்து ஏறும்போதே இதயத்துடிப்பு அதிகமாகி, ஆகஸ்ட் 30 அன்று இரவு உயிரிழந்து விட்டார்.'' என்றார். ரம்லாவுக்கு லேசான இதய பாதிப்பு இருந்ததையும், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு வந்ததையும் அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர். காப்பில் குளம் என்ற அந்த குளத்தை பிபிசி தமிழ் நேரில் பார்த்தபோது, அங்கு கண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில், ''மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமீபா இக்குளத்தில் இருப்பதாக சுகாதாரக்குழு கண்டறிந்துள்ளது. அதனால் இங்கே குளிப்பது, முகம் கழுவுவது, மீன் பிடிப்பது, வாகனம் கழுவுவது, கால்நடைகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உடலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கநிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்.'' என்று கூறப்பட்டுள்ளது. ''அச்சமும் வேண்டாம்; அஜாக்கிரதையும் வேண்டாம்!'' படக்குறிப்பு, ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர் அச்சம் வேண்டாமென்றும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் மக்களுக்கு அந்த அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது. ரம்லாவுக்கு மூளை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பே, அந்த எச்சரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்த கிராமத்தினர், அதற்கு முன்பு வரையிலும் அதில்தான் எல்லோரும் குளித்து, துவைத்து வந்ததையும் வீடியோக்களுடன் பகிர்ந்தனர். பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர், ''நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் காலத்திலிருந்து இந்த குளத்து நீரைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தோம். இரவு வரையிலும் அங்கே குழந்தைகள் குளிப்பார்கள். எனது மனைவி அந்த குளத்திலும், குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலிலும் துணி துவைப்பார். அவருக்கு மட்டும் இந்த அமீபா தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதை எங்களால் அறியமுடியவில்லை.'' என்றார். இந்த உயிரிழப்புகளால் கேரளா முழுவதும் நீர்நிலைகள் மீதான அரசின் கவனம் திரும்பியுள்ளது. அரபிக்கடலும், மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னிப் பிணைந்துள்ள அழகான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ள கேரளாவிலுள்ள குளங்களும், கிணறுகளும் பெரும்பான்மையான கேரள மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள கேரளாவில் 55 ஆயிரம் குளங்களும், 55 லட்சம் கிணறுகளும் இருக்கின்றன. குளிப்பது, துவைப்பது, மீன் பிடிப்பது என லட்சக்கணக்கான மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் பல இடங்களில் உள்ள நீர்நிலைகள் மாசடைந்திருப்பதால் இத்தகைய அமீபாக்கள் தோன்றுவதாகக் கூறப்பட்டாலும் இவையனைத்தையும் 'ஆபத்தான நீர்நிலைகள்' என்று தடை செய்வது சாத்தியமில்லை என்றனர் பிபிசியிடம் பேசிய கேரள உள்ளாட்சிப் பிரதிநிதிகள். படக்குறிப்பு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவு இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் 27 லட்சம் கிணறுகள் குளோரின் மூலமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தின்படி நீச்சல் குளங்கள், வாட்டர் தீம் பார்க் மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகளை குளோரினேஷன் செய்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குளங்களில் மீன்கள் இருப்பதால் குளோரினேஷன் தவிர்க்கப்படுகிறது. கேரளாவில் 5 வகையான அமீபாக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்ணிலும் இருக்கும் எகாந்தாமீபா தொற்று பாதிப்பே அதிகமிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ''தேங்கிய அசுத்தமான தண்ணீரில்தான் இந்த அமீபா உற்பத்தியாகிறது. அதில் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் இந்த அமீபா மூக்கின் வழியே மூளைக்குள் சென்று உயிருடன் இருந்து மூளையிலுள்ள திசுக்களை அழிக்கிறது. கிணற்றில் குளித்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிலருக்கு முகத்தில் வேகமாகத் தண்ணீரை அடித்துக்கழுவும் பழக்கம் உள்ளது. அதேபோன்று மாற்று மருத்துவமுறையில் மூக்கின் ஒருபுறத்தில் உப்புத்தண்ணீரை ஊற்றி மறுபுறத்தில் வெளியேற்றி சுத்தம் செய்வதும் வழக்கமாகவுள்ளது. இவையிரண்டுமே ஆபத்தானவை.'' என்றார் மாவட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா. மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகள்! படக்குறிப்பு, கேரள நீர் நிலைகள் பிபிசி தமிழிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள் பலரும், இதுவரை காதின் வழியாக இத்தகைய அமீபா உடலுக்குள் சென்றதாக எந்தத் தகவலும் இல்லை என்றனர். அதேபோன்று இந்த அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகளையும் அவர்கள் விளக்கினர். இந்த தொற்று பாதித்த 5லிருந்து 10 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் ஏற்படுமென்கின்றனர். கடுமையான தலைவலி ஏற்படும்; கழுத்தைத் திருப்பவே முடியாது. வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. வாந்தி, காய்ச்சல் வரும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். வலிப்பு, நடுக்கம் சிலருக்கு ஏற்படும். இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளால் சாப்பிடவே இயலாது. குளம், கிணறுகளில் மட்டுமின்றி அசுத்தமான நீர் எங்கிருந்தாலும் அது அமீபா ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார் தொற்றுநோய் நிபுணர் அனீஷ். மலப்புரம் மாவட்டம், சேலேம்பரா புள்ளிப்பரம்பாவைச் சேர்ந்த ஷாஜி (48) என்ற கூலித் தொழிலாளியும் இதே அமீபா தொற்று பாதிப்பால் கடந்த செப்டம்பர் 10 அன்று மரணமடைந்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய ஷாஜியின் மனைவி பிந்து, ''ஆகஸ்ட் 9 அன்று அவருக்கு வலிப்பு வந்தது. ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரே நடந்து சென்று ஏறினார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த பின் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் சிஎஸ்எஃப் டெஸ்ட்டில் அமீபா தொற்று உறுதியானது. நினைவிழந்த நிலையில் ஆகஸ்ட் 14 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு இறுதிவரை நினைவு திரும்பவேயில்லை.'' என்றார். ஷாஜியின் தாயார் விஜயகுமாரி, தன் மகனுக்கு இந்த தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதே தெரியவில்லை என்கிறார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள் அதிகமிருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அங்கு அமீபா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டு (எண்:43) செயல்படுவதை பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது. அந்த வார்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஷாஜியின் தாயார் விஜயகுமாரி அமீபா தொற்று பாதிப்பை கண்டறியும் சிஎஸ்எஃப் பரிசோதனை! மூளையை தின்னும் அமீபாவான நேக்ளீரியா ஃபவ்லெரியைக் கண்டறிவதற்கு, சிஎஸ்ஃஎப் எனப்படும் பரிசோதனை முறை ((CSF-Cerebrospinal fluid) கையாளப்படுகிறது. இதில் தண்டுவடத்திலுள்ள நீரை மாதிரியாக எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. திரூரில் உள்ள ஷிகாப்தங்கள் கூட்டுறவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அவசர மருந்துகள் பிரிவின் தலைவர் அல்தாப் கன்னத், இதைப்பற்றி பிபிசியிடம் விளக்கினார். ''தண்டுவடத்திலுள்ள நீர் மாதிரியை எடுத்து அதிலிருந்து பல்வேறு உடற்கூறு பாதிப்புகளை அறியமுடியும். இந்த தொற்று பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். குளுக்கோஸ் அளவு குறையும். சிலருக்கு புரோட்டீன் அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு வந்ததும் 5 நாட்களுக்குள் வந்து விட்டால் சிகிச்சையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.'' என்றும் மேலும் விளக்கினார் மருத்துவர் அல்தாப் கன்னத். ''இந்த அமீபா, கேரளாவில் அதிகமாகவுள்ள குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற இடங்களில் வெப்பம் நிறைந்த தேங்கிய நீரில்தான் உற்பத்தியாகிறது. குறிப்பாக குழந்தைகளையும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்று பாதித்தால் 97 சதவீதம் மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளதால் வருமுன் இதைத்தடுப்பதே சிறந்தது. தொற்று பாதிப்பில் 3 கட்டங்கள் உள்ளன. அதில் முதற்கட்டத்தில் கண்டறிந்து விட்டால் சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும்.'' என்றார் மருத்துவர் அல்தாப். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த 28 வயது சிவில் இன்ஜினியர் ஸ்ரீஹரிக்கு, இந்த தொற்று பாதிப்பு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிஎஸ்எஃப் பரிசோதனையில் உடனே கண்டறியப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு உடனே இதற்கான சிகிச்சையைத் துவக்கியதால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். படக்குறிப்பு, ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், ''எனது தம்பிக்கு ஒரு நாள் கடுமையான தலைவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை சாப்பிட்டதும் வலி குறைந்தது. மறுநாளும் தலைவலித்தது. மறுநாளும் அதே மருந்து எடுக்கப்பட்டது. மூன்றாவது நாளில் தலைவலியுடன் வாந்தியும் வந்தது. உடனே வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே இந்த அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் கோழிக்கோடு மருத்துவமனையில் உடனே சேர்த்து சிகிச்சை அளித்ததில் அவர் தற்போது நலமாக இருக்கிறார்.'' என்றார் கோபாலகிருஷ்ணன். இதுவரை இந்த தொற்று பாதிப்பால் 21 பேர் இறந்திருந்தாலும், கேரளா மக்களிடம் பரவலாக இதுகுறித்த அச்சமும், விழிப்புணர்வும் இல்லை என்பது, பல்வேறு பகுதி மக்களிடமும் பேசியதில் தெரியவந்தது. கோழிக்கோடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மக்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிவதுமில்லை, அச்சமும் இல்லை என்றனர். திரூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரியாஸ், ''டிவி செய்திகளில் பார்த்தே மக்கள் இதைப்பற்றித் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு எதுவுமில்லை.'' என்றார். அமீபா தொற்று பாதிப்பும் கேரள அமைச்சரின் பதிலும்! மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பைக் கண்டறியும் வழிமுறை, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சை நெறிமுறைகள், விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிவதில் உள்ள சவால்கள், அமீபா உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் சில கேள்விகளை பிபிசி முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், ''கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் 115 பேருக்கு அமீபா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டதில் 11 பேருக்கு மட்டுமே நேக்ளீரியா ஃபவ்லேரி அமீபா காரணமாக இருந்தது. மற்றவர்களுக்கு எக்காந்தாமீபாவே காரணமாயிருந்தது. நேக்ளீரீயா ஃபவ்லெரி ஊடுருவும் காலம் (incubation) 7லிருந்து 14 நாட்களுக்குள் என்பதால் இந்த பாதிப்பை விரைவாகக் கண்டறியமுடியும்.'' என்றார். ''கடந்த 2024 ஜூலை மாதம் கேரள அரசு வெளியிட்ட அமீபிக் மென்னிங்கோஎன்செப்லைடிஸ் (Amoebic meningoencephalitis) நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வழிகாட்டுதலின் அடிப்படையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிந்து உடனே சிகிச்சையைத் துவங்குவதே இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய அம்சமாகவுள்ளது.'' என்றும் அவர் மேலும் விளக்கினார். கடந்த ஆண்டில் அரசுக்குக் கிடைத்த தரவுகளின்படி, அனைத்து அமீபா தொற்று நோயாளிகளுக்கும் குளம் போன்ற நீர்நிலைகளில் நீந்திய அனுபவமில்லை என்று தெரியவந்ததால், வழக்கமான ஆபத்து அறிகுறிகள் இல்லாவிடினும் அமீபா தொற்று பாதிப்பு சந்தேகத்துக்கிடமாகவுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் அமீபா பரிசோதனை கட்டாயமாக்கும் முறையில் மாநில வழிகாட்டுதல் நெறிமுறைகள் திருத்தப்பட்டதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மாநிலத்திலுள்ள சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சிகிச்சைக் கண்காணிப்பு முறை (active surveillance) சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ''சிஎஸ்எஃப் பரிசோதனையில் மூளைச்சுரப்பியில் உயிருடன் ஒற்றை உயிரணு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், மூலக்கூறு பரிசோதனைகள் (molecular methods) மூலம் அதன் வகைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை திட்டம் மாற்றப்படுகிறது.'' என்றார். கோவிட், நிஃபா, பறவைக்காய்ச்சல், அமீபா என அடுத்தடுத்து தாக்குதலுக்குள்ளாகும் கேரளா இவற்றை எப்படி எதிர்கொள்கிறது என்ற கேள்விக்கு, ''கேரளாவின் பலம், சுகாதாரத்துறையின் செயல்திட்டங்களில் உள்ள கண்காணிப்பும் (proactive surveillance) புதிய தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் திறனும் சுகாதாரக் கட்டமைப்பும்தான்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkjp6n6lk6o

சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

1 month ago
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்! Published By: Vishnu 05 Oct, 2025 | 06:40 PM யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226977
Checked
Thu, 11/06/2025 - 05:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed