புதிய பதிவுகள்2

யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!

1 month ago
மாணவி தவறான முடிவு எடுத்துள்ளார். அவருக்கு தகுந்த அறிவுரை, அத்துடன், தேவையான ஆதரவு, உதவி கொடுக்க வேண்டும். சாதி, சமூக பிரச்சனைகளை இதற்குள் இழுக்கத்தேவை இல்லையே? பழிவாங்கும் மனநிலையும் மாடியில் இருந்து குதிக்க காரணமாக அமையலாம் அல்லவா?

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

1 month ago
அய்யோ பிரியன் சார்...இந்த மிகச்சிறிய பொறுப்பை எம் தலைமீது சுமத்தி ...எங்களை தரம் குறைத்து விட்டீர்கள் அய்யனே... பள்ளிக்கூடங்களுக்கு கொடுத்த வண்டிகளே கராச்சில் கல்லில் ஏறி நிக்குது...இந்த அழகிலை ...

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

1 month ago
@ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம். வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!

1 month ago
மனிதன் நீண்ட கால கூர்ப்பினை கடந்து வந்திருந்தாலும் கற்கால மனிதனின் இயற்கையான பாதுகாப்பு பொறிமுறையான கூட்ட மனப்பாண்மையினை கடந்து வரமுடியவில்லை, கல்வி விஞ்ஞானம் என எவ்வளவு முன்னேறினாலும் மக்களை இவ்வாறு ஒரு முனைப்பார்வையாளர்களாக்க இந்த ஊடகங்களால் முடிகின்ற நிலை காணப்படுகிறது, தற்போதய முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒரு பக்க சார்பற்ற ஊடக நிலைப்பாடு உலகில் உருவாக வேண்டும் அது தேவையற்ற அழிவைத்தரும் போலிகளை இனங்காண உதவுவதாக இருக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, ​​"இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார்.

1 month ago
ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, "இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார். Oleh Pavliuk, STANISLAV POHORILOV — 3 அக்டோபர், 17:55 விக்டர் ஓர்பன். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 4861 - ஐரோப்பிய ஒன்றியம் "போரில் மூழ்கி வருகிறது" என்ற தனது கருத்தை அதிகரித்து வரும் நாடுகள் பகிர்ந்து கொள்வதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியுள்ளார். ஆபத்து அதிகரித்து வருவதாகவும், ஹங்கேரியர்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். மூலம்: ஹங்கேரிய வானொலி நிலையமான கொசுத் வானொலியில் ஓர்பன், ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: போரிடும் கட்சிகளுக்கு இடையே போர் நிறுத்தம், அமைதி மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நாடுவதே ஹங்கேரியின் நிலைப்பாடு என்று ஓர்பன் கூறினார். ஐரோப்பா போருக்குள் தள்ளப்படும் என்றும், "விரைவில் அல்லது பின்னர் இறந்த, வீழ்ந்த இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்றும் ஹங்கேரியைப் போலவே மேலும் மேலும் நாடுகள் உணருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு தேசமும் மற்றொரு தேசத்துடன் கூட்டணியில் இருக்க விரும்புகிறதா என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் உரிமையைப் பற்றியும் ஓர்பன் பேசினார். ஹங்கேரியர்கள், மற்ற 26 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று அவர் கூறினார்: "நாம் நமது சொந்தக் கருத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், ஹங்கேரியர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்." ஹங்கேரியர்கள் தங்கள் தலைவிதியைப் பகிர்ந்து கொள்ள விரும்பாததால், உக்ரேனியர்களைப் போலவே அதே ஒன்றியத்தில் இருக்க விரும்பவில்லை என்று ஓர்பன் மீண்டும் வலியுறுத்தினார் - மேலும் அவரைப் பொறுத்தவரை, உக்ரேனியர்கள் ரஷ்யாவுடன் வாழ விதிக்கப்பட்டவர்கள். https://www.pravda.com.ua/eng/news/2025/10/03/8001111/

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!

1 month ago
இன்று ஐரோப்பா ஒரு இரஸ்சியாவுடனான ஒரு போருக்கு தயாராகி வருகிறது, அதற்காக மக்களை தயாராக்க முனைகிறது, அதற்காக ஊடகங்களை பயன்படுத்துகிறது. இரஸ்சியா 3 நாளில் உக்கிரேனை ஆக்கிரமித்து விடும் என இரஸ்சியா கூறியதாக (இங்கு யாழிலும் அதனையே இப்போதும் கூறிவருகிறார்கள்) ஒரு கருத்தினை உருவாக்கி ஊடகங்களில் வெளியிட்டார்கள், அதற்கான ஆதாரம் என எதுவும் இணையத்தில் இருந்திருக்கவில்லை. ஒரு புறம் இரஸ்சியாவினால் உக்கிரேனை கூட எதிர்க்க முடியாத காகித புலி என கூறிக்கொண்டு மறுபுறம் இரஸ்சியாவினால் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் ஆபத்து எனும் கருத்தையும் விதைக்கிறார்கள் (மக்கள் எந்த கூற்றை நம்புவது?). ஐரோப்பாவில் என்றுமில்லாதவாறு அதிகரிக்கும் இரஸ்சிய ட்ரோனினது ஊடுறுவல் என கூறுவதற்கு அப்பாவி மக்களின் சிந்தனை திறனையினை கேள்விக்குள்ளாக்கும் எவ்வாறு ஒரு இந்த விலை குறைந்த ட்ரோனினால் ஐரோப்பாவிற்கு பயணிக்க முடிகிறது எனும் ஆச்சரியத்திற்கு புதிது புதிதாக கதை விடுகிறார்கள். இவ்வளவும் எதற்காக? மக்கள் ஆதரவற்ற, சில தலைவர்கள் தங்கள் சுய நலத்திற்க்காக பல உயிர்களை பணயம் வைக்கிறார்கள், இந்த நிலையினை மக்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு ஊடகங்களை தம்வசமாக வைத்துள்ளார்கள் ஆனால் இதே ஊடகங்கள் முன்னுக்கு முரணாக கருத்துகளை தெரிவிக்கும் போதாவது மக்கள் புரிந்து கொள்ளமுடியாதவாறு ஒற்றை பார்வை கொண்ட ஒரு சமூகமாக மாறினால் அதற்காக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தினை பணயம் வைக்கும் சமூகமாக உருவாகும் நிலைக்கு எம்மை நாமே வலிந்து தள்ளுகின்றோம். போரினால் நேரடியாக பாதிப்படைவது சாதாரண மக்களே, அரசியல் வாதிகள் அல்ல.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
https://www.facebook.com/share/19qr18tmmk/?mibextid=wwXIfrZoho ஆப்பிற்கு தமிழ் பெயரா? நல்லாவே இல்லை மாத்துங்க.. ஸ்ரீதர் வேம்புவிற்கு வடஇந்தியர்கள் நெருக்கடி! #Arattai #Zoho #SridharVembu #Whatsapp #NewsUpdate #Oneindia #OITamil

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month ago
குமாரசாமி, இதுக்கெல்லாம் கேலிச்சித்திரம் வரைவதோ AIஇல் கேட்டு வாங்கிப் போடுவதோ நன்றாக இருக்காது. நாகரீகமாகவும் இருக்காது. உதாரணத்துக்கு சென்ற வருடம் கள்ளக்குறிச்சியில் (விசச்)சாரயம் குடித்து 67 பேர் இறந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இறந்த குடும்பங்களும் தலா பத்து இலட்சம் கொடுத்ததுக்குமே நான் ஒன்றுமே வரையவில்லையே.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 month ago
காசேதான் கடவுளடா படத்தில் இந்தப் பாடலை சுசிலா பாடியிருந்தார், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. இசையில், பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அப்போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியில் இந்தப் பாடலை கேட்கும் போது, சில வரிகளுக்குள் மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களுக்கான காரணம் தணிக்கையாகும். படம் தணிக்கைக்கு செல்லும் முன்னரே இசைத்தட்டு வெளியிடப்படுவது பொதுவாக இருந்தது. வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும்போது, “எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம் அங்கங்கே தொட வேண்டும் கை பதமாக..." எனப் பாடல் வரிகள் இருக்கும். ஆனால், திரைப்படத்தில் "எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக..." என்று இருக்கும்

கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்

1 month ago
காலத்துக்கு ஏற்ற கவிதை. அருமை ரசோதரன். கர்ணன் படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலில் இப்படி எழுதியிருப்பார் புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

1 month ago
குமாரசாமி, இந்த விடயத்துக்கு எதுக்கு ‘புலம்ஸ்’ஸை கேட்டுக்கொண்டு? பேசாமல் அமைச்சர் ஐயா இராமலிங்கம் சந்திரசேகரருக்கு ஒரு போன் போட்டு சொன்னால், அவர் கவனிச்சுக் கொள்வார்😛

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month ago
ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்? மனோஜ் முத்தரசுலெ. ராம்சங்கர் 6 Min Read ‘மக்களிடம் செல்... மக்களுடன் வாழ்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுக்குச் சேவையாற்று’ என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்களை மைக்கில் வாசித்தால் மட்டும் போதாது விஜய். செயலிலும் அது பிரதிபலிக்க வேண்டும். Published:Today at 1 AMUpdated:Today at 1 AM விஜய் Join Our Channel 238Comments Share ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்? Listen to Vikatan stories on our AI-assisted audio player வணக்கம் விஜய். நீங்கள் `தமிழக வெற்றிக் கழகம்’ எனும் கட்சியைத் தொடங்கிய நாளிலிருந்து உங்களையும், உங்கள் கட்சிச் செயல்பாடுகளையும் தொடர்ந்து மிகக் கூர்மையாக கவனித்து வருகிறோம். நீங்கள் நடத்திய மாநாடுகள், சுற்றுப்பயணக் கூட்டங்கள் என அத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்று அவதானித்திருக்கிறோம். அவ்வளவு ஏன், 41 அப்பாவிகள் இறந்துபோன உங்களின் கரூர் பிரசாரக் கூட்டத்திலும், உங்களின் ரசிகர்களுக்கு நடுவே தள்ளு முள்ளுகளுக்குள் நசுங்கியபடியே நாங்கள் செய்தி சேகரித்தோம். அங்கு நடந்த சம்பவத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் நேரடியாக அனுபவித்தவர்கள்; பதிவுசெய்தவர்கள் என்கிற அடிப்படையில், ‘உங்களைக் குறித்து, உங்களின் கட்சிச் செயல்பாடுகள் குறித்து’ உங்களிடம் கேட்க, சில கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன விஜய்! விஜய் எதையும் பொருட்படுத்தாமல், ‘உங்களை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்’ என்கிற ஒரே ஆசையோடு, கரூரில் கூடியிருந்த அப்பாவிகளில் 41 பேர் கூட்ட நெரிசலில் உடல் நசுங்கி, மூச்சுத்திணறி இறந்துபோயிருக்கிறார்கள். கரூரே மரண ஓலத்தில் அதிர்ந்துபோன அந்த இரவில், உங்களால் மட்டும் எப்படி அவசர அவசரமாக சென்னைக்கு ஓடிப்போக முடிந்தது விஜய்? உங்களின் மீதான நம்பகத்தன்மை மொத்தமாக உடைந்தது அந்த நள்ளிரவில்தான். நீங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரெல்லாம் எத்தகைய போராட்டக் களத்தில்; எவ்வளவு ஆபத்துகளுக்கு மத்தியில்; உயிரைத் துச்சமாக நினைத்து மக்களுடன் நின்றவர்கள் தெரியுமா விஜய்? தலைவர்களைப் பூத்தூவி வழிபடுவது வேறு, நெஞ்சாரப் பின்தொடர்வது வேறு! துயரம் நடந்த இடத்துக்கும் செல்லவில்லை... மருத்துவமனைக்கும் செல்லவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் செல்லவில்லை... ஏர்போர்ட்டில்கூட செய்தியாளர்களிடம் நடந்தது குறித்து விளக்கமோ, துக்கமோ தெரிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி முதல்... கடைசிக் குடிமகன் வரை இரங்கல் தெரிவித்த பின்பு, கடைசி ஆளாகக் கடமைக்கு ஒரு ட்வீட் போட்டீர்கள். புதைக்கப்பட்டவர்களின் மேட்டில் புல் முளைக்கத் தொடங்கிவிட்ட மூன்றாவது நாளில், கிட்டத்தட்ட 68 மணி நேரத்துக்குப் பிறகு, நான்கு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிலும் அரசியல் செய்திருக்கிறீர்கள். இவ்வளவுதானா உங்கள் அரசியல்... இதைச் செய்யத்தான் சினிமாவைவிட்டு வந்தீர்களா விஜய்! விஜய் கட்சி தொடங்கியது முதல் கரூர் வரை... சொதப்பல்களும் அலட்சியமும்! கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நீங்கள் வெளியிட்ட அந்தக் குறு வீடியோவில் ‘கிட்டத்தட்ட ஐந்து மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கல. ஆனா, கரூர் மாவட்டத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு நடந்தது எதுவும் தெரியாதா... அல்லது மறந்துவிட்டீர்களா விஜய்? சரி, உங்களுக்காக ஒரு ரீவைண்ட்! உங்களின் முதல் மாநாடான விக்கிரவாண்டி மாநாட்டுக்கு, உங்களைக் காண வந்தவர்களில் மாநாட்டுத் திடலில் ஒருவரும், விபத்தில் ஐந்து பேரும் பலியானார்கள். அந்த மாநாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 42 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள் விஜய். இரண்டாவதாக நடந்த மதுரை மாநாட்டில் இரண்டு பேரும், விருதுநகரில் பேனர் வைத்த ஒரு இளைஞர் மின்சாரம் தாக்கியும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கிட்டத்தட்ட 14 பேருக்குப் படுகாயம். மதுரை மாநாட்டுக் கொடிக்கம்ப விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். அந்த ராட்சசக் கொடிக்கம்பம் மாநாடு நடக்கும்போது சரிந்து விழுந்திருந்தால்... ஐயோ, நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது. மாநாடுகள் முடிந்து, பிரசாரச் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் வீக் எண்ட் ட்ரிப் ஒன்றைத் திட்டமிட்டீர்கள். அது திருச்சியில் ஆரம்பித்தது. விமான நிலையத்துக்கு வந்த உங்களை வரவேற்க, ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள். நீங்கள் நடத்திய அந்த ரோடு ஷோவில், அன்று உங்களின் வாகனத்தைப் பின்தொடர்ந்த ரசிகர்கள் எத்தனை பேர் உங்கள் வண்டியில் மோதி விபத்தில் சிக்கினார்கள் தெரியுமா..? மயக்கமடைந்தது மட்டும் 12 பேர்! அன்றைய தினம் நீங்கள் அரியலூரில் பேசும்போதே 6 பேர் மயக்கமடைந்தார்கள். அடுத்த வாரம் திருவாரூரில் 17 பேர், நாகப்பட்டினத்தில் 5 பேர் என விபத்துக்கும் மயக்கத்துக்கும் உள்ளானார்கள். எனவே, நீங்கள் சொல்வதுபோல் கரூரில் மட்டும் முதன்முறையாக எதுவும் நடக்கவில்லை விஜய்! திருவாரூரில்... இப்படியாக, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் எவ்வளவு பாதிப்பு தெரியுமா? சொன்ன நேரத்துக்கு நீங்கள் வராததால், எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை, சமூக வலைதளங்களில் தேடிப்பாருங்கள் விஜய். ‘காவல்துறை கடுமையாக நிபந்தனை போடுகிறார்கள்’ என்று உங்கள் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் போட்ட வழக்கில், ‘தலைவராக இருக்கும் நீங்கள்தான் உங்களுக்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் குட்டுவைத்ததே... அதுவாவது ஞாபகம் இருக்கிறதா? அதோடு, ‘அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும்விதமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில்’ விதிமுறைகளை வகுக்கச் சொன்னார்கள். இது போன்ற மோசமான நிலைக்கு, உங்கள் கட்சியும் நிர்வாகிகளும்தான் காரணம். இதெல்லாம் உங்கள் கவனத்துக்கே வரவில்லையா... அல்லது அறிந்தும் நீங்கள் பொருட்படுத்தவில்லையா? அப்படி இல்லையென்றால், ‘கரூர்போல வேறு எங்குமே இப்படி நடக்கவில்லை’ என்று முழுப் பூசணிக்காயை நான்கு நிமிட வீடியோவில் மறைக்கப் பார்ப்பீர்களா? எப்போதாவது எதிர்பாராமல் திடீரென நடப்பதுதான் விபத்து. ஆனால், உங்களின் எல்லா நிகழ்வுகளிலுமே அது நடந்திருக்கிறது என்றால் அதற்குப் பெயர் விபத்து அல்ல விஜய்... அலட்சியம்! பயணத் திட்டத்தில் மாற்றம்... ஈகோ அரசியலா விஜய்? உங்கள் சுற்றுப்பயண அறிவிப்பில், 27-09-2025 சனிக்கிழமையில் திருவள்ளூர், வடசென்னைப் பகுதிகளில்தான் பயணம் செய்வதாக இருந்தீர்கள். 13-12-2025 சனிக்கிழமைதான் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்குச் செல்வதாகத் திட்டமிட்டீர்கள். ஆனால், திடீரென திருவள்ளூர், வடசென்னை சனிக்கிழமைப் பயணத் திட்டத்தை கேன்சல் செய்துவிட்டு, 14-வது சனிக்கிழமை செல்வதாக இருந்த நாமக்கல், கரூருக்கு ஏன், எதற்காக அவ்வளவு அவசரமாக மாற்றினீர்கள்..? செப்டம்பர் 17-ம் தேதி கரூரில் முப்பெரும் விழாவை நடத்திய தி.மு.க-வுக்காகவா? `கரூரில் தி.மு.க கூட்டத்தைக் காட்டிவிட்டது... அதைவிடப் பெரிதாக ஒரு கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டலாம்’ என்கிற ஈகோதானே? அதனால்தான், அவசர அவசரமாக கரூருக்குச் சென்றீர்களா விஜய்? ‘சுற்றுப்பயணத்துல எனக்காக வருகிற மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கணும் என்கிற எண்ணம், என் மனசுல எப்பவும் இருக்கும்’ என்று வீடியோவில் சொல்லியிருக்கிறீர்களே... வேலுச்சாமிபுரம் சரியான இடமில்லை என்று தெரிந்தும், ஏன் அங்கு செல்ல ஒப்புக்கொண்டீர்கள்? ‘மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்’ என்கிற எண்ணம், மனசுல இருந்து என்ன பிரயோஜனம்... அது செயல்பாட்டில் இல்லையே? உண்மையிலேயே உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நாமக்கல்லில் 8:45 மணிக்குக் கூட்டமென்று அறிவித்துவிட்டு, காலை 8:45 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்புவீர்களா..? மக்களைக் காக்கவைத்து, ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, மெல்ல மெல்ல உயரமான பீடத்தில் வந்து தேவதூதன்போல நிற்பதெல்லாம் மன்னராட்சிக்கால அரசியல் கோட்பாடு விஜய்! நீங்கள் நினைத்திருந்தால், கரூர் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம். முதலில் நீங்கள் தாமதமாக வந்ததால், நாமக்கல்லிலேயே 35 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். கரூருக்கு வரும் வழியில் இரண்டு பேர் உங்கள் பிரசார வாகன டயருக்கு அருகில் விழுந்து உயிர் தப்பித்தார்கள். கரூரில் உங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 250 மி.லி கொண்ட 12,000 வாட்டர் பாட்டில்களே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதாவது வெறும் 3,000 லிட்டர் தண்ணீர்தான். உங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இதைவிட 10 மடங்கு அதிகமாகத் தண்ணீர் விநியோகிப்பீர்கள்தானே? சம்பவம் நடந்த அன்று ஆயிரக்கணக்கான உங்களின் `நண்பா, நண்பிகள்’ தண்ணீரின்றி தவித்துத் துடித்திருக்கிறார்கள். மற்றொரு புறம் இயற்கை உபாதைகளைக் கழிக்க வழியின்றி அவஸ்தையில் நெளிந்திருக்கிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு, கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், நேர நிர்வாகம், கட்சியினருக்குள் தகவல் பரிமாற்றம் என அத்தனை வகையிலும் சொதப்பியிருக்கிறது உங்கள் கட்சி நிர்வாகம். உங்கள் கட்சியின் ஒரே முகமான நீங்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்? கரூர் செல்லும் வழியில்... வந்தால் ராஜ பவனி மட்டும்தானா விஜய்..? உங்களின் பிரசார வாகனம் வேலுச்சாமிபுரத்தை நெருங்கியபோதே மரண ஓலங்களையும், ஆம்புலன்ஸ் சத்தத்தையும் உங்கள் கட்சி நிர்வாகிகளும் நீங்களும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் அவசரப்படாமல், பாயின்ட்டில் பேருந்தை நிறுத்திவிட்டு, 10 நிமிட ஓய்வுக்குப் பிறகுதானே நீங்கள் வெளியே வந்தீர்கள்... அப்போதே 10-15 பேர் மயக்கமாகி ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் எல்லாரையும்விட உங்களால் மட்டும்தான், அந்தக் கூட்டத்தையும் அங்கு நடப்பதையும் நன்றாகப் பார்க்க முடிந்திருக்கும். ஏனென்றால், அங்கு அவ்வளவு உயரத்தில் நீங்கள்தான் நின்றிருந்தீர்கள். ஆனாலும் அங்கு எதுவுமே நடக்காததுபோல இயல்பாகப் பேசினீர்கள். சரியாக ஏழாவது நிமிடத்தில் ‘Sir, Crowd Burst Hogaya’ என்று பாதுகாப்பு அதிகாரி உங்களை எச்சரித்தார். ஆனாலும் நீங்கள் ஸ்கிரிப்ட்டில் இருந்த பாட்டைப் பாடிவிட்டுத்தான் பேச்சை முடித்தீர்கள். அந்தச் சமயத்திலேயே பலர் மூச்சின்றி சரியத் தொடங்கிவிட்டார்கள். உயிரிழப்புச் சம்பவங்கள் குறித்து உங்களுக்கு முழுச் செய்தி கிடைத்த பிறகும், உங்கள் மீதான அன்பில் வந்தவர்களைக் கைவிட்டு, உங்களின் வியூக வகுப்பாளர்களின் பேச்சைக் கேட்டு சென்னைக்கு ஓடினீர்கள். எந்திரன்’ படத்தில் சிட்டி அந்த டி.வி-யைப் போடு...’ எனச் சொன்னதும் டி.வி-யைக் கீழே போட்டு உடைக்கும் ரோபோவுக்கும் சுய முடிவெடுக்காத உங்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது விஜய்? இதன் நீட்சியாகவே, உங்களின் இரங்கல் வீடியோவும் இருந்தது விஜய். ‘உண்மை விரைவில் வெளியே வரும். சி.எம் சார் உங்களுக்குப் பழிவாங்க வேண்டும் எனில் என்னைப் பழிவாங்குங்கள்’ என சினிமாத்தனமாக வீடியோ வெளியிட்டிருக்கிறீர்களே... 41 உயிர்களின் மீதுதான் உங்களின் தி.மு.க Vs த.வெ.க என்ற அரசியலை எழுதப் பார்க்கிறீர்களா? இந்தச் சூழ்நிலையிலும் உங்கள் மேல் கோபப்படாமல் தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள் கரூர் மக்கள். அவர்களுக்கு இருக்கிற அந்தப் பெருந்தன்மையில் துளிக்கூட உங்களுக்கு இல்லாமல் போச்சே ஏன் விஜய்? மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், லட்சக்கணக்கான பேர் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி ‘உயிர் வணக்கங்கள்... உயிர் வணக்கங்கள்...’ எனக் கத்தினீர்களே... ஆனால், இறுதி மூச்சுவரை ‘த.வெ.க... த.வெ.க...’ என முழங்கியபடி, கரூரில் உயிரிழந்த ஒருவருக்குக்கூட நீங்களோ, உங்களின் கட்சி நிர்வாகிகளோ இறுதி அஞ்சலி செலுத்தக்கூட வரவில்லையே... நீங்கள் வி.வி.ஐ.பி., நீங்கள் வந்தால் கூட்டம் கூடும் என்பீர்கள். ஏன், உங்களின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்கூட அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை? தலைவன் எவ்வழியோ... தொண்டர்களும் அவ்வழி. பிரச்னை என்றால், `பேக்அப்’ சொல்லிவிட்டு வீட்டுக்குப் போவதற்கு இது ஒன்றும் சினிமா அல்ல விஜய். இது அரசியல்! பஸ்ஸில் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடும் விஜய்... பஸ்ஸில் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடும் விஜய்... சரி, இவ்வளவு நடந்தும், இன்னும் ஏன் நீங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறீர்கள் விஜய்? இன்னும் எத்தனை நாள் உள்ளேயே இருக்கப்போகிறீர்கள்? வந்தால் ராஜ பவனி மட்டும்தான் வருவீர்களா? சரி, உங்கள் நிர்வாகிகள் எங்கே? அவர்களும் ஏன் ஓடி ஒளிகிறார்கள்... உங்கள்மீது தப்பே இல்லை என்றால் ஏன் இந்த ஓட்டம்... த.வெ.க-வுக்கு என்று ஒரு கருத்தோ, தரப்பு நியாயமோ இருக்கிறதா இல்லையா... அதை நீங்கள் ஏன் பேசவில்லை... அதைச் சொல்ல உங்கள் கட்சியில் யாருமே இல்லையா? உங்கள்மீது தவறே இல்லை எனில், செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிப்பதில் உங்களுக்கு என்ன பயம்? யார் உங்களைத் தடுக்கிறார்கள்... இறந்தவர்கள் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட இன்னும் நீங்கள் கதவைத் திறக்கவில்லையே. எப்போதுதான் வெளியே வருவீர்கள்? உங்கள் பிரசார வாகனத்துக்குள் அமர்ந்தபடி, லைட்டை ஆன் ஆஃப் செய்து நீங்கள் விளையாடும் காட்சி ஒன்று கண்களில் இக்கணம் வந்து போகிறது. நீங்களும், உங்கள் ரசிகர்களும் அரசியல்மயப்பட வேண்டிய அவசியம் குறித்து, அச்சமும் அக்கறையும் ஒருசேரக் கொள்கிறோம். டிரோன் ஷாட் மோக அரசியலிலிருந்து இறங்கி வாருங்கள் விஜய். ‘மக்களிடம் செல்... மக்களுடன் வாழ்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுக்குச் சேவையாற்று’ என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்களை மைக்கில் வாசித்தால் மட்டும் போதாது விஜய். செயலிலும் அது பிரதிபலிக்க வேண்டும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு, எதற்கெடுத்தாலும் வீட்டுக்குள் ஓடி ஓடி ஒளிந்துகொள்வது ஏன் விஜய்? உண்மையைக் கண்டு, கள அரசியலைக் கண்டு பயமா? நீங்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, ‘வாழ்த்துகள் விஜய்’ என்று எழுதினோம். இப்போது ‘கொஞ்சம் நின்று நிதானித்து, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் விஜய்’ என்று சொல்கிறோம். ‘நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்’ என்கிற வள்ளுவன் வாக்கை, பொருளோடு திரும்பத் திரும்பப் படியுங்கள் விஜய்!https://www.vikatan.com/government-and-politics/special-story-tvk-leader-vijay-political-activities-about-karur-stampede-death TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன? ந.பொன்குமரகுருபரன் 3 Min Read வரக்கூடிய தேர்தலில், ஜெயித்தாலும் தோற்றாலும், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் விஜய். அதனால்தான்...! Published:Today at 4 PMUpdated:Today at 4 PM விஜய் Join Our Channel 22Comments Share தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ.க...” என்று பலவாறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சபாநாயகரான அப்பாவுகூட, “திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுபோல, அரசியலில் நடிப்பதற்கு அமித் ஷாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கட்சி தொடங்கியிருக்கிறார் விஜய்...” என்று காட்டமாகவே விமர்சித்திருக்கிறார். இப்படி, நாலாபுறமும் விஜய்யையும் பா.ஜ.க-வையும் இணைத்து வைத்து பேச்சுகள் எழுந்துள்ள சூழலில், த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகளிடமிருந்து அக்கருத்துக்கு மறுப்போ, ஆதரவோ இதுவரையில் வெளிவரவில்லை. என்னதான் நடக்கிறது இவ்விவகாரத்தில்... டெல்லியின் பல்ஸ் என்ன..? பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “கரூரில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தில் 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் அளிக்கவும், சம்பவ இடத்தை ஆய்வு செய்து தனிப்பட்ட முறையில் ரிப்போர்ட் அளிக்கவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை கரூருக்கு அனுப்பிவைத்தது பிரதமர் அலுவலகம். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கரூருக்கு வந்த அவர்கள் இருவரும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். 41 உயிர்களைப் பலிவாங்கிய வேலுசாமிப்புரம் சாலையிலும் ஆய்வு செய்தனர். ‘இவ்வளவு பேர் கூடியிருந்தபோது, சாலையின் இருபுறமும் ஏன் போலீஸார் தடுப்புகளைப் போட்டார்கள்... விஜய்யின் வாகனம் எங்கே நின்றது, எப்படி வெளியேறியது... கரன்ட் கட் ஏன் ஆனது...’ என்று பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்ட நிர்மலா சீதாராமன், அவர்கள் சொன்ன பதிலை உள்வாங்கிக் கொண்டார். நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரித்து தகவல்களைச் சேகரித்தார். அடுத்தநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிர்மலா சீதாராமான், கரூரில் நடந்த நிகழ்வு குறித்து விவரித்திருக்கிறார். ‘இறந்தவர்களில் 15 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்றுமறியாத குழந்தைகளும் பெண்களும் இறந்திருக்கிறார்கள். காவல்துறைக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது...' என்று நிர்மலா சீதாராமன் சொல்லவும்தான், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு எட்டு பேர்கொண்ட பா.ஜ.க எம்.பி-க்கள் குழுவையும், தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவரையும் அனுப்ப முடிவானது. அமித் ஷா தி.மு.க வட்டாரங்களெல்லாம், கரூர் சம்பவத்தின் முழு பொறுப்பையும் விஜய் தலையின் மீது ஏற்றிவிட்டார்கள். அரசியல்ரீதியாக தனிமைப்பட்டு போனார் விஜய். 'இந்தச்சூழலில் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டினால், உங்கள் பக்கம் அவர் சாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பதால், நீங்கள் பேசி தைரியம் சொன்னால்தான் சரியாக இருக்கும்...’ என்று அமித் ஷாவுக்கு ஆலோசனை சொன்னது, கிண்டிக்காரர்தான். அதைத்தொடர்ந்தே, விஜய்யுடன் பேசுவதற்கான முன்னெடுப்பை எடுத்தது அமித்ஷா அலுவலகம். பேசுவதற்கு விஜய் சம்மதிக்கவும், தன் நம்பிக்கைக்குரிய சிலரை நீலாங்கரையிலுள்ள விஜய்யின் வீட்டுக்கு அனுப்பி, அவர்களின் போனில் விஜய்யுடன் பேசினார் அமித் ஷா. கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமித் ஷா, ‘நடந்தது பெரும் துயரம். இக்கட்டான இந்தத் தருணத்தில், உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். அரசியல்ரீதியிலான தாக்குதல்களைப் பார்த்து கவலைப்படாதீர்கள்...’ என்று ஆறுதல் சொல்லவும், நடந்த சம்பவம் குறித்து விஜய்யும் சில விவரங்களை அமித் ஷாவிடம் சொல்லியுள்ளாராம். தான் சி.பி.ஐ விசாரணை கோரியிருப்பதையும் கூறியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்த டெலிபோன் பேச்சின் முடிவில், விஜய்க்கு நம்பிக்கைத் தரும் வார்த்தைகளும் அமித் ஷாவிடமிருந்து வெளிவந்துள்ளன. இவர்களின் உரையாடல் கசிந்ததைத் தொடர்ந்தே, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணையப்போகிறார்' என்ற தகவல் றெக்கைக்கட்டிப் பறக்கிறது. எடப்பாடி பழனிசாமி! பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் விஜய் இணைவது எங்களுக்கு பலம்தான். ஆனால், 'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவர் கூட்டணிக்கு வருவாரா... வந்தால், எவ்வளவு சீட்டுகளை எதிர்பார்ப்பார்...’ என்பதெல்லாம் கேள்விக்குறி. விஜய்யை வளைப்பதற்கு, ஆறுதல் அஸ்திரத்தைக் கையில் எடுத்து வலையை விரித்திருக்கிறது டெல்லி. அரசியல் தாக்குதல்களால் தனிமைப்பட்டுப் போயிருக்கும் விஜய்க்கு, டெல்லியின் அனுசரணையான வார்த்தைகள் ஆறுதலைத் தந்திருக்கின்றன. கூட்டணியில் இணைவது குறித்தெல்லாம் அவர்தான் முடிவெடுக்க முடியும்...” என்றனர் விரிவாக. நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தன்னுடைய கட்சியின் கொள்கைகளை பிரகடனப்படுத்தியபோதே, ‘என்னுடைய கொள்கை எதிரி பா.ஜ.க; அரசியல் எதிரி தி.மு.க' என்பதை அழுத்தமாகவே சொல்லியிருந்தார் விஜய். இந்தச் சூழலில், கரூர் துயரத்தில் விஜய் தனிமைப்பட்டுப் போயிருப்பதை உணர்ந்து, அவருக்கு பாசக்கரம் நீட்டியிருக்கிறது பா.ஜ.க. அ.தி.மு.க-வும்கூட, ஆறுதலான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. விஜய்யின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து, மத்திய உள்துறையில் விவாதமெல்லாம் நடைபெறுகிறது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் அரசியலை விஜய் புரிந்துகொள்ளாமல் இல்லை. விஜய் கடந்தமாதம் நடந்த த.வெ.க-வின் செயற்குழுவிலேயே, ‘முதல்வர் வேட்பாளர் விஜய்தான்' என்பதை தீர்மானமாகவே போட்டிருக்கிறார்கள். இந்தச்சூழலில், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு பலம்கொடுக்க விஜய் தயாராக இல்லை. தவிர, தி.மு.க-விடம் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிரான சிறுபான்மையினர் வாக்குகளில்தான் விஜய் பெருமளவு பதம் பார்க்கிறார். இப்படியான சூழலில், பா.ஜ.க-வுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால், விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ள சிறுபான்மை சமூக வாக்குகள்கூட கிடைக்காது. வரக்கூடிய தேர்தலில், ஜெயித்தாலும் தோற்றாலும், தனக்கென ஒரு வாக்குவங்கியை உருவாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் விஜய். அதனால்தான், தனக்கு ஆறுதல் சொன்ன அமித்ஷாவுக்கு, தன் வீடியோ பதிவில் நன்றிகூட சொல்லவில்லை விஜய். அவருக்கு வயதும் இருக்கிறது காலமும் இருக்கிறது. ஆகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் இணைவது என்பது, சாத்தியமில்லாத விஷயம்தான்" என்றனர். தனக்குள்ள வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் விஜய் செல்லமாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், அவரை எப்படியாவது வளைத்து கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரமாகவே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டது டெல்லி. விஜய் மனதில் கொளுந்துவிட்டு எரியும், ‘தி.மு.க எதிர்ப்பு' நெருப்பின்மீது நெய்யை ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது, விரைவிலேயே தெரிந்துவிடும்.

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!

1 month ago
புரட்சி செய்வதற்கும் போராட்டங்கள் நடத்துவதிலும் தேர்ச்சி பெற்ற அதிக மக்களைக் கொண்ட நாடு பிரான்ஸ் நாடு.🤪
Checked
Thu, 11/06/2025 - 02:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed