புதிய பதிவுகள்2

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

1 month 1 week ago
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்! கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் 4 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் பணியகம் கைது செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கையகப்படுத்திய ஹெராயின் சுமார் 10.84 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என்றும், ஐஸ் போதைப்பொருள் சுமார் 12.16 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1437485

ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்!

1 month 1 week ago
ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்! 28 Jun 2025, 8:54 PM ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹா வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைவரை நியமிப்பதற்கு ஆலோசித்து வந்த மத்திய அரசு பராக் ஜெயினை புதிய தலைவராக அறிவித்துள்ளது. ஜெயின் 1989 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை எளிதாக்கும் உளவு தகவல்களை வழங்கியதன் மூலம், ஆபரேஷன் சிந்தூரில் ARC முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது. அந்தவகையில் பராக் ஜெயின் ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்துக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். பஞ்சாபில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது அவரது பணி குறிப்பிடத்தக்க வகையில் இருந்துள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்எஸ்பி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். “பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார். கனடாவில் தனது பதவிக் காலத்தில், அங்கிருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை அவர் கண்காணித்ததார்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. https://minnambalam.com/parag-jain-appointed-as-raw-intelligence-agency/

விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது!

1 month 1 week ago
விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது! மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இதேவேளை, இந்த அணில் குரங்கு, அரியவகை விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437473

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

1 month 1 week ago
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் Photo, WORLD VISION இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள். பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர். சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது. அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது. சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும். இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.” முழுமையாக அறிக்கை – https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf https://maatram.org/articles/12147

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

1 month 1 week ago
சில வாரங்களுக்கு முன் இந்த வீதியால் பயணிக்கும் போது... பல இடங்களில் குப்பையை எரிக்கும் தீ ஆங்காங்கே எரிந்து கொண்டு இருந்தது. அந்தக் குப்பைகளில் உள்ள கழிவுகளை உண்ண ஏராளமான கட்டாக்காலி நாய்களும்... குறுக்க, மறுக்க ஓடி வாகன விபத்துக்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்தது.

தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் - திஸ்ஸ விதாரண வலியுறுத்தல்

1 month 1 week ago
28 JUN, 2025 | 06:47 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்றுதாக குறிப்பிடுவது முறையற்றது. நாட்டு மக்களுக்கு சிங்கள மொழியில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, சர்வதேசத்துக்கு ஆங்கில மொழியில் பிறிதொன்றை குறிப்பிட்டு காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இரத்துச் செய்வதற்கு வெளிப்படையான தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்துக்கு பாரியதொரு பின்னடைவை எதிர்க்கொண்டுள்ளது. இவ்வாறான பின்னணியின் மாகாண சபைத் தேர்தலை இந்த அரசாங்கம் விரைவாக நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தியது. மாகாண சபை முறைமைக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது. பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாகாண சபை முறைமை குறித்து தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டு மக்களுக்கு சிங்கள மொழியில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, சர்வதேசத்துக்கு ஆங்கில மொழியில் பிறிதொன்றை குறிப்பிட்டு காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218714

பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை

1 month 1 week ago
சில ஆட்கள்... முகத்தை ரசிப்பார்கள், சிலர் இடுப்பை ரசிப்பார்கள், சிலர் கூந்தலை ரசிப்பார்கள்... இவர் காலை ரசித்திருக்கின்றார். 😂 பாவம்... பிளைச்சுப் போகட்டும் என்று விட்டிருக்கலாம். 🤣 இதுக்கு... கோட்டு, கேசு, தண்டனை என்று அமர்க்களப் படுத்தி விட்டார்கள். 🤪

கோடையில் சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்குமா? நிபுணர் விளக்கம்

1 month 1 week ago
2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடைக்காலத்தில் சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும் என்ற பொதுவான எச்சரிக்கை நம் வீடுகளில் பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,உணவு உண்ட பிறகு உடலில் நடக்கும் வெப்ப விளைவு தொடர்பாகக் கடந்த 2013ஆம் ஆண்டில், எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் சாப்பிடும்போது வெப்பநிலை ஓரளவுக்கு அதிகரிப்பது உணரப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rped1v8gjo

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

1 month 1 week ago
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம் June 29, 2025 10:33 am வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்று இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது. கல்லுண்டாய்வெளியில் அவ்வப்போது தீ ஏற்படுவது இயல்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், நேற்று இரவு ஏற்பட்ட தீ இதுவரை பதிவான சம்பவங்களில் மிகப்பெரியது என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல மணிநேரம்வரை தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கல்லுண்டாய்வெளியில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்துவரும் பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகள் சகிதம் இரவிரவாக வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், தமது உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர். சுவாசப் பிரச்சினைகள் உடையவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்வகையில் புகையின் தாக்கம் நிலவியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. கல்லுண்டாய்வெளி திண்மக் கழிவகற்றல் நிலையம் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது என்றும், அங்கு அடிக்கடி தீவிபத்து இடம்பெறுவதாலும் வலிகாமம் மேற்கு பிரதேசசபையில் அண்மையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் இந்த விடயம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுக்கவும் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/the-kallunthaiveliya-garbage-dump-is-on-fire-great-tension-throughout-the-night/

நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்

1 month 1 week ago
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை கொண்ட குழுக்களின் தேவையின்படி அறிக்கையை தயாரித்து அதன்மூலம் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கும் நோக்கத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்வாறான மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கை வருகின்றார் என்றால் அது இலங்கை தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானங்களை எடுக்க முன்னரானதாகவே இருக்கும். எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நியாயத்தை காட்டுவதற்காகவே வருகை தருக்கின்றனர். நாங்கள் இலங்கை சென்றோம், அங்குள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினோம் அதன்படி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்று கூறும் வகையிலேயே வருகின்றனர். இவ்வாறுதான் 2013ஆம் ஆண்டில் நவநீதம்பிள்ளை வருகை தந்தார். அவர் பிரிவினைவாத நிலைப்பாடுகளை கொண்டவர்களை மட்டுமே சந்தித்தார். பின்னர் செயிட் அல் ஹுசேன் இலங்கை வந்தார். அவரும் சகல தரப்பினருடனும் பேசவில்லை. இனவாத பிரிவினைவாத குழுவினரை சந்தித்து இறுதியில் அவர்களுக்கு தேவையானவாறே அறிக்கையை தயாரித்தார். அதேபோன்ற சம்பிரதாயத்தை பின்பற்றியே வோல்கர் டேர்க் வந்துள்ளார். அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்படியென்றால் இவர் எப்படி நடுநிலையானவராக இருந்திருக்க முடியும். வடக்கில் இறந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உடல்கள் இல்லையா? அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் இல்லையா? அவர் செம்மணியில் உள்ள புதைகுழியென்று கூறப்படும் இடத்திற்கு சென்றிருந்தார். அங்கே விடுதலைப் புலிகளின் கொடிகளுடனேயே அங்கிருந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்விடத்திற்கு சென்று ஆணையாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மத நிகழ்விலும் கலந்துகொண்டார். மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்த போது அவரை சந்திப்பதற்காக பல்வேறு தரப்பினரும் அனுமதி கோரினர். முன்னாள் இராணுவ பிரதானியொருவரும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தார். வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த இராணுவ பிரதானி அவரை சந்திக்க கோரியிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று சில சட்டத்தரணிகள் குழுவும் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் தேசிய அமைப்புகள் சிலவும் அவரை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தின் நிலைப்பாட்டுடன் இப்போதும் செயற்படும் தரப்பினருடன் மட்டுமே சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்படி ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவையின்படி தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதற்காகவே இலங்கை வருகை தந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. அதேபோன்று ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வாவையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதன்படி விடுதலைப் புலி ஆதரவு குழுக்களுக்கு மேலதிகமாக ஜே.வி.பி செயலாளரை சந்தித்துள்ளார். அங்கே என்ன பேசியுள்ளார் என்று தெரியவில்லை. இதேவேளை செம்மணி புதைக்குழியில் உள்ள மனித எலும்புகூடுகள் யாருடையது என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. சிலவேளை அவை விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாகவோ, இராணுவத்தினருடையதோ, யுத்தத்தில் இறந்த விடுதலைப்புலிகளினதோ அல்லது பொலிஸாரினதோ எலும்புகூடுகளாக இருக்கலாம். அவை யாருடையது என்று உறுதிப்படுத்தப்படாதிருக்கையில் அது தமிழ் மக்களுடையது என்றும், இது மனித உரிமை குற்றம் என்றும் கூறி அது தொடர்பான பரிந்துரைகளுக்கு முயற்சிக்கப்படுகின்றது. அதேபோன்று உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் கூறப்படுகின்றது. ஆனால் தெற்கு ஆபிரிகா ஆணைக்குழு போன்றது அல்ல. யுத்தத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை சிக்க வைப்பதற்கான ஆணைக்குழுவாகவே இருக்கும். அத்துடன் சுயாதீன குற்றப்பத்திரிகை அலுவலகமும் அவ்வாறே இருக்கப் போகின்றது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை இதனை அடிப்படையாக கொண்டதாகவே இருந்துள்ளது. அவர் நடுநிலைதாரிகளை சந்திக்காது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களையே சந்தித்துள்ளார். இதன்படி அறிக்கைகள் தயாரிக்கப்படும். இங்கு வந்து அவருக்கு உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான கடமை கிடையாது. அதனை இந்த அரசாங்கத்தால் தடுக்க முடியாது போயுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக இங்கே செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அவரின் விஜயம் தொடர்பிலோ, அவர் கூறிய விடயங்கள் தொடர்பிலோ அரசாங்கம் எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என்றும் புரியவில்லை என்றார். https://akkinikkunchu.com/?p=330752

காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

1 month 1 week ago
மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை 29 JUN, 2025 | 09:39 AM (நா.தனுஜா) காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட 2430 இலக்க வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் வெள்ளிக்கிழமை (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 27.06.2025 ஆம் திகதியிடப்பட்ட 2443 இலக்க வர்த்தமானியில், 'இவ்வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக 28.03.2025 ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேசரியிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டார். மேலும் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/218699

செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந்

1 month 1 week ago
செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 29 JUN, 2025 | 11:25 AM கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்றும் அதன் அகழ்வு பணிகள். உங்களிற்கு தெரியும் 1996ம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி என்கின்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அவரது குடும்பத்தவர்கள் அயல்வீட்டுக்காரர் என பலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச நேரடியாக சாட்சியம் வழங்கினார். இந்த கொலைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இந்த கொலையுடன் தொடர்புபட்ட அந்த குற்றவாளி,நேரடியாக இராணுவதரப்பை நோக்கி குற்றம் சுமத்துகின்றார். இதேபோல 500 முதல் 600 வரையிலான நபர்களை நாங்கள் இங்கே கொன்று புதை;திருக்கின்றோம் , இதனை செய்யுமாறு எங்களிற்கு அன்று கூறியவர்கள் அன்று அந்த இடத்திலிருந்த உயர் அதிகாரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இவர்களின் கைதுகளின் பின்னர் அந்த உயரதிகாரிகள் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.அன்று அங்கு கடமையாற்றியவர்கள் இருந்தவர்கள் எல்லாம் இன்றும் இராணுவத்தில் இருக்கின்றார்கள். சிலர் இராணுவத்தின் பெரிய பதவிகளை பெற்றிருக்கின்றார்கள் அவ்வேளை பொறுப்பதிகாரிகள் தரத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கின்றனர். அன்று இலங்கையின் முப்படை தளபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்க இன்றும் இங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். எனவே இவற்றிற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மேல் உடனடியாக தீவிரமான விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். https://www.virakesari.lk/article/218748

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

1 month 1 week ago
பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து 29 JUN, 2025 | 10:48 AM பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர் இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார். சில கருத்துக்கள் "ஆழ்ந்த புண்படுத்தும் வகையில்" இருப்பதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் மேலும் "மிகவும் வலுவான மற்றும் பாரபட்சமான மொழி" குறித்து திரையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொகுப்பு பிபிசி ஐபிளேயரில் மீண்டும் பார்க்க கிடைக்காதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய தூதரகம் "ஆழ்ந்த எரிச்சலூட்டும் மற்றும் வெறுப்பூட்டும் சொல்லாட்சிகளால் மிகவும் வருத்தமடைந்ததாக" பதிவிட்டுள்ளது.: "கிளாஸ்டன்பரி விழா அதன் கலைஞர்களிடமிருந்து வெறுப்பூட்டும் பேச்சு அல்லது வன்முறையைத் தூண்டுவதை மன்னிக்காது."என குறிப்பிட்டுள்ளது. பாப் வைலனின் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கலாச்சாரச் செயலாளர் லிசா நந்தி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் அவசர விளக்கம் கோருவதாகக் கூறினார். பிபிசி ஐபிளேயரில் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யாத முடிவை வரவேற்பதாக அரசாங்கம் மேலும் கூறியது பாப் வைலன் மற்றும் நீகேப்பின் தொகுப்புகளைத் தொடர்ந்து வெஸ்ட் ஹோல்ட்ஸ் மேடையில் செயல்களால் கூறப்பட்ட கருத்துகளின் காட்சிகளை மதிப்பாய்வு செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "குற்றவியல் விசாரணை தேவைப்படும் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளால் காட்சிகள் மதிப்பிடப்படும்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218740

காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து

1 month 1 week ago
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து 29 June 2025 வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது. இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/408704/gazette-notification-regarding-land-acquisition-cancelled

வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

1 month 1 week ago
அரசியல் அலசல் பகுதியில் இணைப்பதுதான் சரியென்று நினைக்கின்றேன். ஆனால் அதிகம் இணைத்தால் பார்வையாளர்கள் சுருங்கிவிடுகின்றார்கள்! இனிமேல் கவனம் எடுக்கின்றேன்😊

செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது

1 month 1 week ago
முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில், அடுத்த டக்கிளஸ் அருண் சித்தாத், தனது பெண் கூட்டாளியுடன் சென்று, அந்தப் பெண்ணின் தந்தையுடன் நாலாயிரம் பேரை புலிகள் அங்கு தடுத்து வைத்து கொலை செய்து அங்கு புதைத்ததாகவும் அதை தேடி அகழப்போவதாக ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தியுள்ளார். ம் இத்தனை ஆண்டுகள் இவர்களை தேட, புதைகுழியை அடையாளம் காட்ட, முறைப்பாடு செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று சொன்னவர் இவரின் கடவுள் மஹிந்தா. அவரிடம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? விகாரைக்கு வக்காலத்து வாங்குவது, மஹிந்தவின் எதிரணியை குழப்ப புகுந்து அடிவாங்குவது, இப்போ, எஜமானரை காக்க புது நாடகத்துடன் வந்துள்ளார். அந்தப்பெண் கேக்கிறாள் செம்மணி புதைகுழி தோண்டலாம் இது தோண்டக்கூடாதோ என்கிறாள். ஆனால் நாடகத்திற்கான பயிற்சி போதாது, நடிக்கத்தெரியவில்லை. ஒரு பெண், அருண் சித்தாத் கமராக்காரனாம் (மீடியாக்காரன். காமராவோ வேறு எதுவுமோ அவரிடம் காணப்படவில்லை)என்று மூவர் புதை குழி தோண்ட வந்தனராம். குழி தோண்ட வந்தாரோ அல்லது பெண்ணை கடத்திவந்து அகப்பட்டுக்கொண்டாரோ தெரியவில்லை. தகப்பனையும் நாலாயிரம்பேரையும் புலிகள் கடத்தும்போது இவளுக்கு ஆறு வயதாம். தொண்ணூறாம் ஆண்டு நடந்ததாம். சுண்ணாகத்தில் புலிகள் அலுவலகத்தில் போய் விசாரித்தனராம். அப்போ எதிரில் நின்றவர் கேட்டார், நீங்கள் சொல்லும் காலப்பகுதியில் இந்தியன் இராணுவந்தான் இங்கிருந்தது, புலிகளுக்கு எங்கும் அலுவலகம் திறந்து காரியமாற்றும் சூழ்நிலை இருக்கவில்லை. உங்களுக்கு யார் சொன்னது இங்கு புலிகள் அவர்களை தடுத்து வைத்து கொலை செய்து புதைத்ததாக என்று கேட்க, யாரோ சொன்னார்களாம். அந்த யாரையோ கூட்டி வாருங்கள் அல்லது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டபோது, தொலைபேசி இலக்கம் தெரியாதாம், அவர்கள் வந்து சாட்சி சொல்ல அவர்களுக்கு பயமாம். யாருக்கு பயம், ஏன் பயம்? இப்படி இழிதொழில் செய்து பிழைக்கும் கூட்டத்தை விட, இவர் சொல்லும் தொழிலேதும் குறைவானதல்ல. இவரது செயலே, இந்த இழிதொழிலே இவரை ஒதுக்குவதற்கு போதுமானது. சந்திரகாந்தனுக்கு வக்காலத்து வாங்கபோய் கம்மன்பில அவரை மீள முடியா விசாரணைக்கு வழிவகுத்து பல கொலை கொள்ளை வெளிவர காரணமானார். அதுபோல் இவரும் முன்வந்துள்ளார். இவருக்கு, தன்னை சமுதாயத்தில் அடக்கி வைத்தார்களாம் அதற்கு பழிவாங்க இனத்தை அழிக்க இவர் எடுத்த வழிமுறை இது. வடிவாக இவரின் முகத்தைப்பாருங்கள், டக்கிலஸின் சாயல் அடிக்கிறது. இன்னொரு கோசத்தோடு சிங்கள பிக்கு கூட்டம் வெகு விரைவில் இவர் காட்டிய இடத்திற்குவந்திறங்குமென்று எதிர்பார்க்கலாம்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05

1 month 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 05 / 'அசோகன் என்பவன் யார்? மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது, பேரரசரின் பிரதிநிதியாக அசோகன் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். அவள் வணிகர் சாதியைச் சேர்ந்தவள். மகிந்த என்ற மகனையும் சங்கமித்தா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அசோகன், தீபவம்சம் 6 - 22 இன் படி தனது நூறு சகோதரர்களையும், மகாவம்சம் 5 - 20 இன் படி தொண்ணூற்றொன்பது சகோதரர்களையும் அரியணை ஏறுவதற்கான போரில் கொன்றார். என்றாலும் பல வரலாற்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். ஒரு சில கொலைகள் ஒருவேளை நடந்து இருக்கலாம்?, ஆனால் நூறு ஆக முடியாது என்கின்றனர். மன்னன் அசோகர் முடிசூடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது; தீபவம்சம் 6-18 பார்க்கவும். இது அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு 13 உடன் நேரடியாக முரண்படுகிறது. அந்த ஆணையில் : 'தேவர்களின் பிரியமான பியாதாசி [பியதசி / Piyadasi.], முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்தை வென்றார் என்று வரலாற்று குறிப்பு பதியப்பட்டுள்ளது. [It reads, in part: “Beloved-of-the-Gods, King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. One hundred and fifty thousand were deported, one hundred thousand were killed and many more died (from other causes)]. கலிங்கத்தை வெற்றி பெற்ற பிறகு, கடவுளுக்குப் பிரியமான அசோகன், தம்மத்தின் [தம்மம் என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கும் ஒரு பௌத்தக் கோட்பாடு] மீது வலுவான விருப்பத்தை உணர்ந்தார். முடிசூட்டப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான், தம்மத்தை நோக்கி உணர ஆரம்பித்ததாக அசோகன், தானே கூறுகிறார். இருப்பினும், தீபவம்சம், 6-18, முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்று, அசோகனின் கூற்றுக்கு மாறாக, கூறுகிறது? அவருடைய பிள்ளைகளான மகிந்தவும் சங்கமித்தமும் கூட கற்பனையான பாத்திரங்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். மொகாலிபுத்த தீசர் கூட ஒரு கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும்?; பிரம்மாவின் உலகத்தில் இருந்து எவரும் வந்திருக்க முடியாது, அப்படி ஏதாவது ஒரு உலகம் இருந்தால் தானே! மகிந்த மற்றும் சங்கமித்தா, அவர்களின் தாய் தேவி மற்றும் மொகாலிபுத்த தீசர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ள இந்திய ஆதாரங்களில், இதுவரை ஒன்றுமே இல்லை. அசோக மன்னன் பாறைகள் மற்றும் தூண்கள் மீதான தனது ஆணைகளுக்கு மிகவும் பிரபலமானவர், ஆனால் இந்த மூன்று நூல்களிலும் இந்த ஆணைகள் குறித்து ஒன்றுமே இல்லை. கலிங்கப் போரின் கொலைகளும் பயங்கரமான விளைவுகளும் அவரது வாழ்விலும் ஆட்சியிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கலிங்கர்கள் அவருடைய இரத்த உறவுகள் இல்லாத போதிலும், அவரது மன வருத்தம் பதின்மூன்றாவது பாறை ஆணையில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அசோகன் தனது நூறு சகோதரர்களைக் கொன்றதற்கு கட்டாயம் அவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டாரா? என்று உங்களை கேட்கத் தோன்றுகிறது. Part: 05 / 'Who is Asoka?' The Emperor Asoka married a woman of no royal blood, Devi, when he was in Ujjain as sub king; she belonged to merchant caste. She gave birth to a son Mahinda and a daughter Sanghamitta. Asoka, as per the chronicles, murdered his one hundred brothers, as per the Dipavamsa 6 – 22, and ninety-nine brothers as per the Mahavamsa 5 - 20, to ascend the throne. Many scholars dispute this. A few killings would have taken place, but could not be hundred. It is claimed that the King Asoka converted to Buddhism three years after his coronation; see Dipavamsa 6-18. This is in direct conflict with the Asoka’s Major Rock Edict 13. It is stated in that Edict: ‘Beloved of the Gods King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. After the Kalingas had been conquered, Beloved of the Gods came to feel strong inclination towards the Dhamma. Asoka says that he started feeling towards Dhamma eight years after his coronation, however, the Dipavamsa, 6-18, states that it was three years after the coronation. Many scholars believe that his children Mahinda and Sanghamitta are fictitious characters. Even Moggaliputta Tissa too must be an invented character; no one could have descended from Brahma’s world, if at all there is any such world! There are no references to Mahinda and Sanghamitta, their mother Devi and Moggaliputta Tissa in the Indian sources in their birthplace. The king Asoka is very famous for his edicts on rocks and pillars, but all the three chronicles are silent on these edicts. The killings and the terrible consequence of the Kalinga war is a watershed event in his life and reign. The Kalingas were not his blood relations. His remorse is etched on the Thirteenth Rock Edict, which is still being heard by many. Would not Asoka have expressed remorse of his previous killing of his one hundred brothers? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 06 தொடரும் / Will Follow
Checked
Fri, 08/08/2025 - 09:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed