புதிய பதிவுகள்2

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month ago
பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு; கைகுலுக்க மறுத்த கேப்டன்கள் - பெண்கள் உலகக் கோப்பையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை!

1 month ago
பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப் படைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளார். பாக்கு நீரிணை பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மபிரியா தம்பதியினரின் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனான புவி ஆற்றல், 2022 ஆண்டு சென்னை, செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு ஊனம் தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை-தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரினையை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (3) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னாரில் இருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கு சென்றனர். இவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். அரிச்சல்முனை வந்தடைந்த சிறுவன் புவி ஆற்றல், அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், இந்திய மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.facebook.com/Deranatamil/posts/1362504709212139?ref=embed_post -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgdg74x300ubo29nl1il8lkg

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி! Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கல் விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம். விஜய் முடிவு என்ன? 2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம். விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது. ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம். https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

1 month ago
📌👉யாழ்ப்பாணம் ஏழாலையில் சோகம்: வாய்த்தகராறு கத்திக்குத்தாக மாறியதில் கடை உரிமையாளர் பலி‼️‼️‼️ யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிவடைந்ததில், கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (அக்டோபர் 04) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த விபரம் ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையத்திற்கு, மதுபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் (உணவுப் பண்டம்) கேட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர், மிக்சருக்கான பணத்தை முதலில் தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக மிக்சர் வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், இளைஞர்கள் கடை உரிமையாளர் மீது கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த கடை உரிமையாளர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிங்காராவேல் தானவன் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
இதில் நான் இந்திய தயாரிப்புகளை தவிர்ப்பது இட்டு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை. ஆனால் சங்கி, இதில் security, data ரிஸ்க் உள்ளது என்பது உபதேசம்தான். மக்களே, உங்கள் உரையாடல்கள் அனைத்தையும், இதை தரவிறக்குவதன் மூலம் உங்கள் phone இன் ஏனைய security settings இற்கும் ஒரு back door access ஐ இந்திய புலனாய்வுக்கு அமைத்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியாயின் தாரளமாக அரட்டை அடியுங்கள். உபயம் - புலவர் 🤣

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
இல்லை. உங்கள் தரவழியள் போல் “புறக்கணி சிறிலங்கா” எண்டு போட்டு ஹொலிடே போகும் ஆளில்லை நான். 1987 இல் இருந்து என் வாழ்வில் இந்திய தயாரிப்புகளை தவிர்த்தே வருகிறேன். ஆனால் தவிர்க்க முடியாதவற்றை (எடுத்து காட்டு : உறவினர் மருத்துவம்) தவிர்க்க முடிவதில்லை.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
மீண்டும் சொல்கிறேன் - அபத்தமாக கதைக்க கூடாது. வேம்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதே ஆர் எஸ் எஸ் வேலைதிட்டத்தை தமிழ் நாட்டில் முன்னெடுக்கவே. இதன் ஒரு அங்கம்தாம் இந்த அரட்டை. அதனால் பிராமணர் என்பதால் அவரை நான் எதிர்க்கவில்லை. வேம்புவை பற்றி - அவரின் முன்னைய பேட்டிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருந்தால் - வேம்பு பிராமணர் என்பதால் மட்டும் அவரை சங்கி என்கிறேன் என்ற அரைவேக்காட்டு புரிதல் ஏற்பட்டிராது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
முடிந்தளவு என்றால்யாழ்களத்தில் எழுதுவதற்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே!அப்படியா?ஒருகருத்தை எதிர்பதாயின் அந்தக்கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் அதன்பின் அதன்குறைநிறைகளை விமர்சிக்க வேண்டும்'.அதை விடுத்து பிராமனன் என்றால் இப்படித்தான் என்று சங்கி பட்டம் கட்டி விட்டு ஒதுக்கக் கூடாது. கமலும் பிராமணர்தான் ஆனால் கடவுள்நம்பிக்கை அற்றவர்.ஆனால் எடுக்கும் படங்கள் எல்லாவற்றிலும் கடவுள்பற்றிய காட்சிகளை வைத்து விடுவார்.இவர்பற்றி மவண்ணன் ஒரு உரை ஆற்றி இருக்கின்றார் கேட்டுப்பாருங்கள். https://www.youtube.com/watch?v=YkyXQ8tNzZw

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
@vasee வ‌சி இந்த‌ திரி ப‌க்க‌மும் வ‌ந்து போங்கோ ர‌சோத‌ர‌ன் அண்ணா சொன்ன‌ மாதிரி , நீங்க‌ள் தான் மைதான‌ பிச்சுக‌ள் ப‌ற்றி அதிக‌ம் எழுதுவ‌து.................................

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month ago
வணக்கம் வாத்தியார் ......! பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. பூத்தது யாரத பாத்தது…… ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்…. ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம் கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது……. பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாருமில்ல தூது சொல்ல ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துறேன்……..! --- பூஜைக்கேத்த பூவிது ---

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month ago
இன்றையான் விளையாட்டிலும் ம‌ழை.............ம‌ழை உட‌ன‌ விட்டால் ந‌ல்ல‌ம் , இல்லையேன் ஓவ‌ர் குறைக்க‌ப் ப‌டும்.............இந்தியா ம‌க‌ளிரின் அதிர‌டி தொட‌க்க‌ம் சூப்ப‌ர் இடையில் 4விக்கேட்ட‌ இழ‌ந்து விட்டின‌ம் , 50 ஓவ‌ர் விளையாடின் 250 அல்ல‌து 280 அடிக்க‌ கூடும்.........................

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago
#முடிந்தளவு அதே சமயம் சங்கிகளது என கண்டால் - படம், பாடல்களையும் எதையும் அடியோடு ஒதுக்கி விடுவேன். புட்டுகுழல் உட்பட 🤣

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு!

1 month ago
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு! Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 02:22 PM அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா? இல்லையா? என்று ஒரு ஆய்வு செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. நாங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள். எங்களுக்கு கடல் மீதும் எங்களது சுற்றுச்சூழல் மீதும் உள்ள அக்கறையின் வெளிப்பாடாகத்தான் இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு; வலியுறுத்தி வந்தோம். ஆனால் கடந்த மாதம் கடற்றொழில்சார் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும், கடல் அட்டையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடல் வளங்கள் அழிகின்றதென நாங்கள் கூறும் போதும் மௌனம் காத்த யாழ் பல்கலைக்கழகம் இப்போது அந்த கடல் அட்டையை காப்பாற்ற வேண்டும் என கூட்டம் போடுகிறது. இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து வடக்கு கடல் தொழிலாளர்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முயற்சிக்கிறதா? என நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்த்து கேட்கின்றோம். இந்தக் கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட சிறு மீனவர்களையும், பாதிக்கப்பட்ட எவரையும் அழைக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்திலே 62 சதவீதத்திற்கு மேற்பட்ட கடற்பரப்பு தமிழர்களின் கைகளில் இருக்கின்றது. தமிழர்களுடைய கையில் இருக்கின்ற கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற, ஆட்சிசெய்த, ஆளுகின்ற அரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயப்படுகின்றதா? என்று கேள்வியும் ஐயமும் எமக்கு எழுகின்றது. எதிர்கால சந்ததிக்காக கடலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அந்தப் பொறுப்பு குறித்தும் நீங்கள் கரிசினை கொள்ள வேண்டும். எதையும் அழிப்பதற்காக நாங்கள் எதிர்த்து கருத்துக்கு கூறவில்லை. எங்களுடைய சூழலும் வளமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் தங்களது கதிரைகளை காப்பாற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று அரசாங்கத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டு, அந்த அறிக்கையினூடாக கடற்றொழிலாளர்களுடைய கருவை அழிக்கின்றீர்கள் என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226947

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

1 month ago
05 Oct, 2025 | 04:38 PM தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (05) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/226960

2026 கால்பந்து உலகக் கிண்ணம் : வெளியிடப்பட்டது புதிய பந்து 'ட்ரையோண்டா'

1 month ago
03 Oct, 2025 | 02:38 PM கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள் அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1. பெயரின் பின்னணி: 'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது. 2. வடிவமைப்பு மற்றும் நிறங்கள்: பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்கள் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் வர்ண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. மேலும், கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு, அமெரிக்காவின் நட்சத்திரம் போன்ற ஒவ்வொரு நாட்டின் சின்னங்களும் வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் குறிக்கும் வகையில் தங்க நிற அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. 3. முன்னோடித் தொழில்நுட்பம் (Connected Ball Technology): ட்ரையோண்டா பந்தின் உள்ளே அதிநவீன 500Hz மோஷன் சென்சார் சிப் (Motion Sensor Chip) பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சிப் பந்தின் அசைவுகள் குறித்த துல்லியமான தகவல்களை வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு நிகழ்நேரத்தில் அனுப்பும். இதன் மூலம் ஓப்சைட் மற்றும் பந்து கையால் அடிக்கப்பட்டதா போன்ற முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க முடியும். 4. மேம்படுத்தப்பட்ட செயல்பாடு: இந்தப் பந்து நான்கு பேனல் (Four-panel) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் செல்லும்போது நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆழமான தையல் கோடுகளைக் (deep seams) கொண்டுள்ளது.ஈரமான அல்லது பனிமூட்டம் நிறைந்த சூழலில் பந்தை உதைக்கும்போது பிடியை (Grip) அதிகரிக்க, அதன் மேற்பரப்பில் நுண்ணிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த வெளியீட்டின் போது, "2026 உலகக்கிண்ணத்தின் அதிகாரப்பூர்வ பந்து இங்கே உள்ளது, அது ஒரு அழகு! இந்தப் பந்தின் வடிவமைப்பு போட்டியை நடத்தும் நாடுகளின் ஒற்றுமையையும் ஆர்வத்தையும் உள்ளடக்கியது" என்று பெருமிதமாக தெரிவித்தார். 48 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/226788
Checked
Thu, 11/06/2025 - 05:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed